Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

உன் காதலில் நானும் கரைவேனா? - Tamil Novel  

Page 12 / 14

Janu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 98
 

உன் காதலில் நானும் கரைவேனா? 75

 

அதிகாலை நேரம் மெல்ல சூரியன் தன் ஒளியை பூமியில் பரவவிட்டு கொண்டிருந்தான். மீராவிற்கு லேசாக முழிப்பு தட்டியது. மீரா மெதுவாக கண்களை திறக்க ஜெய்யின் முகம் அவளுக்கு வெகு அருகில், திடுக்கிட்டு பார்த்தாள். முதலில் ஒன்றுமே புரியவில்லை.

பின் சில நொடிகள் கழித்து தான் தனக்கு ஜெய்யுடன் திருமணம் ஆனது நினைவில் வந்தது. ஜெய் இதழில் உறைந்த புன்னகையுடன் உறங்கிக் கொண்டிருந்தான். ஒரு நொடி அவனது முகத்தை பார்த்தவள் வேகமாக கட்டிலில் இருந்து இறங்கினாள். ஜெய் அவனிடத்தில், தான் இரவில் பார்த்தவாரே உறங்கி
கொண்டிருந்தான். மீரா தான் உருண்டு அவன் அருகில் சென்று இருக்கிறாள்.

'இனிமே கவனமா படுக்கனும் மீரா..' என தன்னை தானே கடிந்து கொண்டாள்.  மீரா குளித்து முடித்து வெளியே வந்தாள். அவள் குளித்து முடித்து வந்த பிறகும் ஜெய் உறங்கிக் கொண்டுதான் இருந்தான்.

மீரா சரி அவனாக எழுந்து வரட்டும் என நினைத்து வெளியே சென்றாள். மேகலா, "மீரா, இந்தா காபி குடி.." என்றார்.

மீரா, "தேங்க்ஸ் மா..." என கூறி புன்னகை தவழ் சோபாவில் அமர்ந்து காபி குடிக்க தொடங்கினாள்.

நித்யாவும், "அம்மா, காபி..." என கேட்டுக் கொண்டே வந்து மீராவின் அருகில் அமர்ந்தாள். க்ரிஷூம் அவள் பின்னோடு வர, அவர்களுக்கு காபி கொடுத்த மேகலா மீராவிடம், "மீரா, மாப்பிள்ளை எழுந்துட்டாரா?" என்றார்.

மீரா காபி குடித்துக்கொண்டே, "எந்த மாப்பிள்ளை?" எனக் கேட்டாள். அவள் பதிலில் மூவரும் அதிர்ச்சியாக பார்க்க, மீரா, 'எதுக்கு இவங்க இவ்வளவு ஷாக்காகுறாங்க?' என நினைத்தவளுக்கு, அப்போதுதான் தனக்கு திருமணமாகிவிட்டது என்ற உண்மை உரைத்தது.

மேகலா அவளை முறைக்க, மீரா மைண்ட் வாய்ஸில், 'எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்றதை ஃபஸ்ட் மைண்ட்ல செட் பண்ணனும்...' என நினைத்தவள், மேகலாவை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.

மேகலா முறைத்துக் கொண்டே, "இந்த காபியௌ உன் வீட்டுக்காரர் கிட்ட கொடுத்துட்டு வா..." என்றவர், வீட்டுக்காரர் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தார்.

மீரா காபியை வாங்கிக் கொண்டு தனது அறைக்கு சென்றாள். ஜெய் குளித்துவிட்டு வெளியே வந்தவன் கண்டது குளித்து முடித்து தனக்காக காபி எடுத்துக் கொண்டு அழகாக நடந்துவரும் மீராவை தான். ஜெய்க்கு அந்த நிமிடம் சொல்ல முடியாத மகிழ்ச்சி. அவன் கற்பனை செய்து வைத்திருந்த அழகான தருணங்கள்.  காலை எழுந்ததும் புன்னகை ததும்பும் முகத்துடன் மீரா காபியை கொண்டு தன்னிடம் கொடுக்குமாறு அவன் பல நாள் கனவு கண்டுருக்கிறான். அந்த கனவு பலிக்கும் போது நிலை கொள்ள முடியாத சந்தோஷம். காற்றில் பறப்பது போன்ற உணர்வு அவனுக்கு.

மீரா, "காலையிலிருந்து இப்படி மொக்கை வாங்குறீயேடி... ஒழுங்கா நடந்துக்கோ... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு..." எனத் தனக்குத் தானே பேசிக் கொண்டு வந்தவள், ஜெய்யை பார்த்து அமைதியாகி விட்டாள்.

ஜெய் மீராவைப் பார்த்து புன்னகையுடன், "குட் மார்னிங் மீரா..." என்றான்.

மீராவும் பதிலுக்கு தயக்கத்துடன், "குட் மார்னிங்..." என்று கூறி காபி ட்ரேயை நீட்டினாள்.

ஜெய், "தேங்க்ஸ்...." என்று கூறி எடுத்துக்கொண்டான். மீரா பதிலுக்கு ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு வெளியே சென்றாள்.

எல்லோரும் அமர்ந்து காலை உணவை முடித்து விட்டு பேசிக் கொண்டிருந்தனர். நித்யா ஒரு பெரிய டிராலி பேக்குடன் இறங்கி வந்தாள். அவள் பின்னே க்ரிஷூம் ட்ராலியை உருட்டிக் கொண்டு வந்தான்.

இருவரும் எங்கோ வெளியே செல்வது போல கிளம்பி இருந்தனர். எல்லோரும் கேள்வியாக பார்க்க, க்ரிஷ், "நாங்க ஸ்விஸ்க்கு ஒரு மாசம் ஹனிமூன் போறோம்..." என்றான். இதைக்கேட்டு எல்லோருக்கும் மகிழ்ச்சி!

க்ரிஷ், "அப்பா, இந்த ஒரு மாசத்துக்கு நீங்கதான் ஆபிஸ பார்த்துக்கனும்..." என்க,

ராஜன், "அதுக்கு என்னபா... நானே பார்த்துக்குறேன்.." என்றார் புன்னகையுடன்.

ஜெய் க்ரிஷின் காதருகில் சென்று, யாருக்கும் கேட்காத வண்ணம், "ஏன்டா அண்ணா, இது உனக்கே நியாயமா இருக்கா? நேத்து கல்யாணம் ஆனா நாங்க கூட ஹனிமூன் போகலை. பல மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ண நீங்க ஹனிமூன் போறீங்களா?" என்றான்.

க்ரிஷ், "டேய்! நானே கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் கழிச்சுதான் ஹனிமூன் போறேன்.  உனக்கு என்னடா பொறாமை? வேணும்னா நீயும் உன் பொண்டாட்டி கூட ஹனிமூன் போயிட்டு வாடா..." என்றான்.

ஜெய், "ஹனிமூனுக்கு... நான்? ஏண்டா நீ வேற வயித்தெரிச்சல கிளப்பிக்கிட்டு... அவ பேசுறதுக்கே காசு கேக்குறா...  அவ பேசி, நான் ஏன் லவ் அவளுக்கு புரிய வச்சு, அப்புறம் ஹனிமூன் போக..." என்று கூறி பெருமூச்சு விட்டவன், மீராவைப் பார்த்தான்.

மீரா நித்யாவிடம் பேசிக்கொண்டிருந்தாள். க்ரிஷ், "கவலைப்படாதடா... எல்லாமே சீக்கிரம் சரியாகும். அதுவரைக்கும் அதோ இருக்கான் பாரு சுரேந்தர்..." என்றவன் சுரேந்தரை  கைகாட்டி, "அவன் எல்லாம் இன்னும் கல்யாணமே ஆகமா சுத்தீட்டு இருக்கான். அவனை பார்த்து மனசை தேத்திக்கோ..."  என்றான்.

இருவரும் சுரேந்தரை பார்க்க, அவன் நித்யாவுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தான். அதை பார்த்த இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

க்ரிஷ் சுரேந்தரிடம், "மச்சான் இவ சொல்றதை நம்பாதன்னு அப்பவே சொன்னேன். பாரு... உன்ன அனிதாவோட சேர்த்து வைக்கிறேன்னு சொல்லிட்டு, என் கூட ஜாலியா ஹனிமூன் கிளம்பிட்ட பாரு..." என அவளை கொடுத்துவிட்டவன் நித்யாவை பார்த்து கேலியாக சிரித்தான்.

நித்யா 'இதெல்லாம் ஒரு மேட்டரா? இப்ப பாரு எப்படி சமாளிக்கிறேன்னு..' என்று ஒரு பார்வை பார்த்தவள், "அண்ணா! எனக்கு இந்த ஹனிமூன் போறதில்ல எல்லாம் சுத்தமா விருப்பமில்லை. இங்கே இருந்தால் என்னால ஃப்ரீயா யோசிக்க முடியாது. அதான் அங்க போய் அந்த அழகான சிச்சுவேஷன்ல  ஒரு மாசம் உக்காந்து யோசிச்சா கண்டிப்பா ஒரு நல்ல ஐடியா கிடைக்கும். வரும்போது ஐடியாவோட தான் வருவேன். இல்லனா..." என்க,

க்ரிஷ் இடையில் புகுந்து, "இல்லனா.. இன்னும் ஒரு மாசம் சேர்த்து தங்கியிருந்துட்டு வருவோம்..." என்றான்.

நித்யா அவனை முறைத்துவிட்டு, "பேசாம இருங்க..." என்றவள் சுரேந்தரிடம், "அண்ணா, நீங்க என்னை நம்புகிறீர்களா?" என கேட்க,

சுரேந்தர், "உன்னை நம்பாம இருப்பேனா? ஹினிமூன் போறப்ப கூட எனக்காக யோசிக்கிற..." என்று பேசிக் கொண்டிருக்க,

க்ரிஷ் மைண்ட் வாய்ஸில், 'இவனையும் திருத்த முடியாது! இவ்வளவு திருத்த முடியாது!' என நினைத்துக்கொண்டு, "யப்பா சாமி! போதும் நீங்க படத்தை ஓட்ட ஆரம்பிக்காதீங்க... பிளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு..." என்றவன் அனைவரிடுமும் கூறிக்கொண்டு நித்யாவுடன் புறப்பட்டான்.

பத்மாவதி திருமணம் முடிந்த பிறகாவது ஜெய்யை தங்களுடன் சென்னையில் இருக்கவேண்டும் என கூறிவிட்டார். ஜெய்யும் சென்னையில் செட்டில் ஆகும் ஐடியாவில் இருந்ததால், மருத்துவமனையை தனது நண்பரிடம் ஒப்படைத்து விட்டு சென்னைக்கு செல்ல முடிவெடுத்தான்.

பெரியவர்கள் எல்லோரும் ஊருக்கு கிளம்பி விட, ஜெய் மருத்துவமனை வேலையை முடித்துக் கொண்ட ஒரு வாரம் கழித்து மீராவுடன் கிளம்புவது என முடிவு செய்யப்பட்டது.

வரதராஜன், "ஜெய், ஒரு வாரம் நீங்க அங்க நம்ம வீட்ல தங்கிக்கோங்க..." என்றார்.

மீராவிற்கு ஜெய்யுடன் அந்த வீட்டில் தனியே செல்ல சற்று தயக்கமாக இருந்தது. என்ன தான் தாலி கட்டிய கணவன் என்றாலும், அவள் மனம் சிறிது தயக்கத்தை காட்டியது. ஆனால் அவளால் வாய்திறந்து கூட முடியவில்லை. ஜெய் என்ன சொல்லுவான்? என அவன் முகத்தை பார்த்தாள்.

ஜெய், "இல்லபா... இன்னும் கொஞ்சநாள்ல  நாங்களே அங்க வந்திடுவோம். அதுவரைக்கும் மீரா இங்கேயே அத்தை மாமாவோட இருக்கட்டும்..." என்றான்.

ராஜனும், "அதுவும் சரிதான்பா. இங்கேயே இருந்துக்கோங்க..." என்றார்

மீராவிற்கு இது பெரிய ஆச்சரியமே! தான் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டாரே! இவ்வளவு தூரம் என்னை புரிந்து வைத்திருக்கிறாரா? என நினைக்க மனதில் சொல்ல முடியாத மகிழ்ச்சி பரவியது. அது அவள் முகத்தில் பிரதிபலித்தது. மீராவை பார்த்த ஜெய் மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்.

ஜெய்யின் வேலை முடிய ஒரு வாரத்திற்கு மேல் ஆனது. ஜெய் மீராவுடன் சகஜமாகவே பேசினான். மீரா முடிந்த அளவு சகஜமாகப் பேச முயற்சித்தாள். திருமணத்திற்கு முன்பு பேசியது போல பேச முடியவில்லை. இருவரும் வேலை முடிந்து பத்து நாள் கழித்து கிளம்பினர்.

                               கரைவாள்...

 


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 98
 

உன் காதலில் நானும் கரைவேனா? 76

 

நாட்கள் தெளிந்த நீரோடை போல சென்றுகொண்டிருந்தது. மீராவும் ஜெய்யும் பெங்களூரில் இருந்து வந்து சில மாதங்கள் கடந்திருந்தது. க்ரிஷும் நித்யாவும் கூட தேனிலவுக்கு சென்று திரும்பி இருந்தனர்.

ஜெய் சென்னையிலேயே ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்தான். பத்மாவதியும் வரதராஜனும் மீராவை நன்றாகவே பார்த்துக்கொண்டனர். முதலில் புது இடம், புது ஆட்கள் என மீராவுக்கு தயக்கமாக இருந்தபோதிலும், அவர்கள் தன்னிடம் சகஜமாக பழகுவதை பார்த்து தானும் சகஜமாக பழக முயற்சித்து, ஓரளவு வெற்றி கண்டாள்.

ஜெய் மீராவை மிகவும் அன்புடன் பார்த்துக் கொண்டான். அவள் உணராத காதலை உணர வைக்க முயற்சித்தான். சிறு சிறு விஷயங்களிலும் அவளது விருப்பத்தை கேட்டு அறிந்து செயல்பட்டான். மீராவிற்கு முதலில் புதிதாக இருந்தாலும், அவளுக்கு அது மகிழ்ச்சியையே அளித்தது.

மீரா சிறுவயதிலிருந்து எதற்கும் ஆசைப்பட மாட்டாள். நித்யா  அவளுக்கு பார்த்து பார்த்து செய்தாலும், அவள் வாயை திறந்து தனக்கு இது வேண்டுமென கேட்க மாட்டாள். ஆனால் இப்பொழுது ஜெய்யிடம் வாயை திறந்து கேட்கிறாள். அது உரிமையாலா? இல்லை உணர்விலா என்று கேட்டால், அவளிடம் பதிலில்லை.

ஜெய்யிடம் முன்பு போல பேச தொடங்கி இருந்தாள். அவன் பேச வைத்திருந்தான் ஏராளமான முயற்சியை எடுத்து. ஜெய் சிறு சிறு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்தான். அவளின் கருத்தை கேட்டு செய்தான். தன் அபரிதமான காதலை அவளுக்கு உணர்த்த முயற்சித்தான். தன்னில் பொங்கி வழியும் அவளுக்கான ஒட்டுமொத்த அன்பையும் அவளுக்கு உணர்த்த முயற்சித்தான்.

அவர்கள் வாழ்விற்கு அவன் ஒருவனின் காதலே போதும் என்பதை போல அவளை காதலித்தான். தன் ஒவ்வொரு செயல் மூலம் அவளுக்கு தனது காதலை, அக்கறையை, அன்பை, உணர்த்த முயற்சி செய்தான்.

அப்போதுதான் அவனும் முழுமையாக அவள் மீது தனக்குள்ள காதலை உணர்ந்தான். உணர்ந்தவன் தன்னைத்தானே நினைத்து, மலைத்துப் போனான். அவள் இல்லை என்றால் தான் என்னவாகி இருப்பேன்? கடைசி வரை காதல் கைகூடாத துர்பாக்கியசாலிகளில்  நானும் ஒருவனாகி இருப்பேன் என எண்ணிக்கொண்டான்.

அவளுக்கு உணர்த்தும் வேலையில் அவனும் உணர்ந்தான். நொடிக்கு நொடி அவள் மேல் பெருகி வரும் மீளா காதலை! ஒவ்வொரு நிமிடமும் அவளை உணர்ந்தான் அவளுக்கும் உணர்த்தினான்.

உரிமையான பார்வை அவளிடம் இல்லை. சிறு தொடுகையும் இல்லை. காமம் இல்லாத காதலை காட்டினான். அவளது சிறு செய்கையிலும் உணர்ந்தான். அவள் அருகில் இருப்பதை நிம்மதி என நினைத்தான். வார்த்தைகளால் விவரிக்க முடியாத காதலை, எழுத்துக்களால் கோர்க்க முடியாத காதலை, செயலால் காட்ட விழைந்தான்.

அவள் உணர்ந்தாள்! அவனது அக்கறையும் அபரிமிதமாக பொங்கிவரும் அன்பையும். அவனது அன்பு மழையில் நனைந்தாள். திகைத்தாள்! இனம்புரியாத அவனது அன்பை இனம் கண்டறிய முயன்றாள் பேதை! ஆம்!  பேதை தான் அவனது காதலை உணராத பேதமை கொண்ட பேதை! 

அவ்வப்போது அவனது கண்களில் தெரியும் உணர்வு, அது தனக்கானது என அவள் கண்டு கொண்டாள். ஆனால் அதை உணர்ந்தவளாய் இனம் கண்டறிய முடியவில்லை. அவனது காதல் கடலில் தத்தளித்தாள். கரை சேர வழி அவன் தான் என தெரியாமல் தேடிக் கொண்டிருந்தாள்.
இதுநாள் வரையும் தேடிக் கொண்டிருக்கிறாள்.

நித்யா மற்றும் க்ரிஷ் வாழ்க்கை மிகவும் இனிமையாகவும் காதலுடனும் சென்றது. மீராவும் நித்யாவும் வீட்டிலேயே இருந்தனர். ஜெய் மீராவிற்கு விருப்பமிருந்தால் வேலைக்கு செல்லலாம் என கூறிவிட்டான். நித்யா தான் சிறு மாதங்கள் கழித்து, மீராவுடன் தொழில் தொடங்கும் முயற்சி இருப்பதாக கூறி வீட்டிலேயே இருக்க வைத்து விட்டாள்.

மீராவும் சிறிது நாட்கள் கழித்து வேலைக்கு செல்லலாம் என முடிவெடுத்து வைத்திருந்தாள். நித்யாவின் குறும்புகளாலும் சேட்டைகளாலும் வீடு எப்போதும் கலகலப்பாக இருந்தது
நித்யா செய்யும் சேட்டைகளை, மீரா தான் எப்பொழுதும் சரி செய்தாள்.

அவர்களின் புரிதலை பார்த்து, வீட்டில் உள்ள அனைவருக்கும் வியப்பே! மீராவின் பொறுமையான குணத்தால், அவள் வீட்டில் உள்ள அனைவரின் மனதிலும் உயர்ந்திருந்தாள்.

அன்று வழக்கம் போல இரவு சமையல் வேலையை முடித்துவிட்டு மீரா, நித்யா, பத்மாவதி மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நித்யா தனது சிறுவயது சாகசங்களை சுவாரஸ்யமாக கூறிக்கொண்டிருக்க, பத்மா புதிதாக கேட்பதால் ஆர்வமாக கேட்க, மீராவும் நித்யாவிற்காக கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஜெய் அன்று சீக்கிரமாகவே மருத்துவமனையில் இருந்து வந்து விட்டிருந்தான். ஜெய் வந்தது கூட தெரியாமல் மூவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஜெய் நுழைந்ததுமே கண்டது மீராவை தான்.  நித்யா கூறுவதை கன்னத்தில் கைவைத்தவாறு கேட்டுக் கொண்டிருந்தாள்.  அவ்வப்போது அவளது காற்றில் அசைந்தாடும் முடியை தன் விரல்களால் ஒதுக்கி விட்டுக்கொண்டு முகத்தில் தவழும் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

ஜெய்க்கு மீராவைப் பார்க்க பார்க்க காதல் கூடுவது போல ஒரு உணர்வு. இமைக்க மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான். எங்கு இமைக்கும் நொடி அவளை தன் கண்ணுக்குள் சிறை எடுப்பது தவறி விடுமோ? என நினைத்து, இமைக்கவும் மறந்து அவளை பார்த்தான்.

எதேச்சையாக பேசிக் கொண்டே திரும்பிய நித்யா ஜெய்யை பார்த்து விட்டாள். அவன் கண்களில் வழியும் காதலை கவனித்தவள், 'க்கும்... இவளுக்கும் புரியாது. அவனும் வாயை திறந்து சொல்ல மாட்டான். இதுங்க எனக்கு சேர்றது..?' என நினைத்து பெருமூச்சு விட்டவள்,"என்ன ஜெய், இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட.." எனக் கேட்டாள். மற்ற இருவரும் அப்போதுதான் ஜெய்யை கவனித்தனர்.

பத்மா, "என்ன ஜெய், இன்னைக்கு வேலை சீக்கிரமா முடிஞ்சுதா?" என கேட்க, "ஆமாம்மா.." எனக் கூறிக்கொண்டே அவன்‌ உள்ளே  வர, மீரா எழுந்து சென்று அவனது பையை வாங்கி உள்ளே வைத்து விட்டு, அவனுக்கு காபி போடச் சென்றாள்.

ஜெய் ப்ரெஷ்ஷாகிவிட்டு வந்து அமர, நித்யா அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில், "ஏன்டா... இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே பார்த்துட்டு இருக்க போற..? சட்டுபுட்டுன்னு காதலை சொல்லி வாழ்க்கையை வாழுற வழியை பாரு..." என்றவள், "வேணும்னா உனக்காக நான் மீரா கிட்ட பேசவா?" என கேட்டாள்.

ஜெய் பதறிக்கொண்டு, "அப்படியெல்லாம் எதுவும் அவசர குடுக்கத்தனமா பண்ணி என் வாழ்க்கையில் விளையாடிடாத தாயே!" என்றான். நித்யா ஏன் என்று கேள்வியாக பார்க்க,

ஜெய், "நித்யா, காதல் என்பது ஒரு உணர்வு.  நான் உன்னை காதலிக்கிறேன் அப்படின்னு நம்ம வார்த்தையால சொல்லி அதை அவங்க உணரக் கூடாது. சொல்லாத காதலை நம்ம செயல் மூலமாக, நாம் சொல்லாமலே அவங்க உணரனும்..." என்றான்.

நித்யா, "வாழ்க்கையில  நான் உன்னை விட சீனியர்..." என்க,

ஜெய் புன்னகையுடன், "எவ்வளவு நாளா லவ் பண்றோம்ன்றது முக்கியமில்லை. எவ்வளவு தூரம் லவ் பண்றோம்னு தான் முக்கியம்..." என்றான்.

நித்யா, "அட போடா இவனே! காதல சொல்லுனா உணரனும் ஊறுகாய் போடணும் கதை சொல்லிகிட்டு இருக்கான்..." என அங்கலாய்த்துக் கொள்ள, மீரா காபியுடன் வந்தாள்.

ஜெய் புன்னகையுடன், "தேங்க்ஸ்.." எனக்கூறி காபியை எடுத்துக்கொண்டான்.  சிறிது நேரத்தில் க்ரிஷூம் வந்து விட, எல்லோரும் பேசி சிரித்துக்கொண்டு இரவு உணவை உண்டனர்.

ஜெய், "அப்பா, நானும் மீராவும் அத்தையும் மாமாவையும் பார்த்துட்டு வரலாம்னு இருக்கோம்..." என்றான்.

வரதராஜன், "நல்ல விஷயம் தான்பா.. எப்போ போறீங்க?  நானே உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். மீரா இங்க வந்து ரொம்ப நாளாச்சு..." என்றார்.

ஜெய், "நாளைக்கு போறோம்பா.." என்றான். மீராவிற்கு இந்த விஷயம் புதிது. எல்லாவற்றையும் அவளிடம் கேட்டு செய்பவன், இந்த விஷயத்தை அவளிடம் கூற கூட இல்லை. அதற்கு கண்டிப்பாக ஏதோ ஒரு காரணம் இருக்கும் என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். 

நித்யா மீரா காதில், "என்னடி அவுட்டிங்கா? என்கிட்ட கூட சொல்லவே இல்லை.." என்று குறை பட, மீரா மனதிற்குள், 'எனக்கே இப்பதான் தெரியும்...' என நினைத்தவள், அதை வெளியே கூறாமல், அவளை பார்த்து புன்னகைத்தான்.

நித்யா மனதுக்குள், 'புருஷனும் பொண்டாட்டியும் இதை ஒன்னை தெரிஞ்சு வச்சிருக்காங்க... எதைக்கேட்டாலும் சிரிச்சி மழுப்பிட்றது...' என நினைத்தவள், ஜெய்யிடம் விளையாடிப் பார்க்கும் எண்ணம் தோன்ற, "ஜெய், ஊருக்கு போறியா? என்னையும் கூட்டிட்டு போ.. நானும் உங்களோட வரேன்... எனக்கு அம்மா அப்பாவைப் பார்க்கணும் ஆசையா இருக்கு.." என்றாள்.

க்ரிஷ், 'இப்பதான் அவனே முதல் தடவை வாயை திறந்து கேட்டு இருக்கான். அது தெரியாம இவ வேற நந்தி மாதிரி நடுவுல போறாளே' என நினைத்து நித்யாவிடம் கண்ணை காட்ட, நித்யா க்ரிஷைப் பார்த்து கண்ணடித்துவிட்டு ஜெய்யிடம், "என்ன ஜெய், கூட்டிட்டு போறியா? உங்க அண்ணன் எப்ப பார்த்தாலும் ஆபீஸ் வேலையில் பிசியாக இருக்கிறாரு..." என்று கூறி ஜெய்யின் முகத்தை பார்த்தாள்.

க்ரிஷ் 'இவ ஏதோ வம்பிழுக்க பிளான் பண்ணிட்டா போல!' என நினைத்துக் அமைதியாகினான்.

ஜெய், 'சமயம் பார்த்து இவ வேற  பழி வாங்குகிறாளே!' என நினைத்தவன், என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க,

மீரா முந்திக்கொண்டு, "நல்ல ஐடியா! நீயும் எங்களோட வா.. நாம மூணு பேரும் சேர்ந்து போகலாம்..." என்றாள்.

ஜெய், 'விளங்கும்! இவளை வச்சிக்கிட்டு நான் காதலிக்க எல்லாம் முடியாது. காசிக்கு தான் போக முடியும்' என நினைத்தவன், நித்யாவை பாவமாக பார்த்தான்.

நித்யா, 'என்னடா லவ்வை ஃபீல் பண்ண வைக்கலையா நீ?' என்ற ரீதியில் ஜெய்யை பார்க்க, ஜெய் கப்பல் கவிழ்ந்து போனது போல அவளைப் பார்த்தான்.

நித்யா, 'பாவம், விட்டா அழுதுடுவான் போல..' என நினைத்தவள், "மறந்தே போயிட்டேன் பாரு.. நாளைக்கு நந்தினியைப் பார்க்க வரேன்னு சொல்லி இருந்தேன். நீங்க மட்டும் போயிட்டு வாங்க. நான் இன்னொரு நாள் போய்க்கிறேன்.." என்றாள்.

மீரா, "அவகிட்ட சொல்லிடேன் இன்னொரு நாள் அவளை பார்க்க வரேன்னு.. இப்போ எங்க கூட வா.." என்றாள்.

ஜெய் மீராவை முறைக்க முடியாமல், நித்யாவை முறைத்தான்.

நித்யா, 'நான் ஒன்னும் பண்ணலைப்பா. உன் பொண்டாட்டி தான் என்னை விடமாட்றா..' என்று ஜெய்யை பார்க்க, 'நீதானே இதை ஆரம்பிச்சு வச்ச..' என்ற ரீதியில் அவளைப் பார்த்தான்.

நித்யா, "இல்லடி... அது சரிவராது. நீங்களே போயிட்டு வாங்க.." என முடித்துக் கொண்டாள். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றனர்.

ஜெய் அறைக்குள் வந்ததும், "மீரா, உன் கிட்ட கேட்காம முடிவெடுத்துட்டேன்.." என ஆரம்பிக்க,

மீரா, "நீங்க எந்த விளக்கம் சொல்லத் தேவையில்லை. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. நீங்க எது செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்.." என்று கூறி படுத்துவிட்டாள்.

ஜெய் தான் அவள் பதில் இன்ப அதிர்ச்சி அடைந்தான். என்னோட மீராவுக்கு என்கிட்ட இவ்வளவு நம்பிக்கையா? இவ்வளவு புரிதலா? என்று சந்தோஷத்தில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன், வெகு நேரம் கழித்தே உறங்கினான்.

மறுநாள் காலையில் ஜெய்யும் மீராவும் பெங்களூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். மீரா இரண்டு நாட்களுக்கு தேவையான துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

வெகு நாட்கள் பிறகு பெற்றோரை சந்திக்க செல்வதால் மீரா மிகவும் சந்தோஷமாக இருந்தாள். அவளது அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலிக்க, அவள் இன்னும் பேரழகியாக தெரிந்தாள்.

ஜெய்யும் புன்னகையுடன் அவளை பார்த்தும் பார்க்காத வண்ணம் இருந்தான். இருவரும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானார்கள். சரியாக அதே நேரம் ஜெய்யின் மொபைல் ஒலித்தது.

"மீரா, நீ கீழ போ. நான் கால் பேசிட்டு வரேன்..." என்க, மீரா கீழே சென்றாள். போனை எடுத்து பேசிய ஜெய்யின் முகம் மாறியது.

             
                                            கரைவாள்...

 


ReplyQuoteJanu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 98
 

உன் காதலில் நானும் கரைவேனா? 77

 

ஜெய் காலை அட்டெண்ட் செய்து, "ஹலோ..." என்க, மறு முனையில் ஒரு பெண் குரல் கேட்டது.

"ஹலோ டாக்டர், நான் நர்ஸ் நர்மதா பேசுறேன். இங்கே ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்து இருக்கு டாக்டர். நீங்க உடனே வர முடியுமா?" என்றாள்.

ஜெய், "ஏன் சீப் டாக்டர் இல்லையா?" என்றான் பதட்டத்துடன்.

நர்மதா, "இல்ல டாக்டர், சீப் டாக்டர் இன்னைக்கு தான் மெடிக்கல் கான்ஃபரன்ஸ்க்காக யு எஸ் கிளம்பினாரு..." என்றாள்.

ஜெய்க்கு அப்போதுதான் அது ஞாபகம் வந்தது. இப்போ என்ன பண்றது? என யோசிக்க, நர்ஸ், "டாக்டர், வேற எந்த டாக்டரும் அவைலபிலா இல்ல. அதான் உங்களுக்கு கால் பண்ணேன்..." என்றாள்.

ஜெய் தன் கடமை தான் பெரிது என நினைத்தவன், "சரி அங்க ஒரு பதினைஞ்சு நிமிஷத்தில் இருப்பேன். நீங்க பார்ஸ் எஸ்டை ஸ்டார்ட் பண்ணுங்க..." என்று காலை கட் செய்தவன், 'இப்போது மீராவிடம் என்ன சொல்வது? அவ பெற்றோரைப் பார்க்க போகிறோம் என நினைத்து அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாளே!

இத்தனைக்கும் அவளாக வந்து கேட்கவில்லை! நான் தான் அழைத்துச் செல்கிறேன் என்றேன். இப்போது என்னால் வரமுடியாது, அவசரமான வேலை இருக்கிறது. நாளை செல்லலாம் என்று கூறினால், அவள் என்ன நினைப்பாள்? கண்டிப்பாக வருத்தப்படுவாள். அவளின் சிறு மூக சுணத்தையும் கூட என்னால் தாங்கிக்க முடியாது. இப்போது அவளிடம் நான் என்ன கூறுவேன்? நிச்சயம் அவள் என் நிலைமையை புரிந்து கொள்வாள். ஆனால் அவள்  நிச்சியம் வருந்துவாள்' என பலவாறாக மனதிற்குள் குழம்பியவன் அறையில் இருந்து வெளியேறாமல் அங்கேயே நின்றிருந்தான்.

வெளியே நித்தியா, "மீரா, என்ன இன்னும் ஜெய்ய காணும். பிளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு..." என்று கேட்க,

மீரா, "போன் பேசிட்டு வரேன் சொன்னாரு. நான் போய் பார்க்குறேன்..." என்று அவர்கள் அறைக்கு சென்றாள்.

ஜெய் இன்னும் அதே இடத்தில்தான் நின்றிருந்தான். மீரா, "என்னாச்சுங்க? ஏன் இன்னும் வராம இங்கே நிக்கறீங்க?" என்றவள், அப்போதுதான் ஜெய்யின் முகத்தை கவனித்தாள். ஜெய் பதில் பேசாமல் அவளையே பார்க்க,

மீரா, "என்ன ஆச்சு ஜெய் ? எதுவும் பிரச்சனையா? உங்க முகமே சரி இல்லையே!" என்றாள் கேள்வியாக. ஜெய் பதில் சொல்லத் தயங்க,

மீரா, "ஜெய், என்னன்னு சொன்னா தான் தெரியும் என்க,

ஜெய், "மீரா, ஹாஸ்பிடல்ல இருந்து கால் வந்தது. ஏதோ எமர்ஜென்சி கேஸ்..." என்று அவன் சொல்லி கூட முடிக்கவில்லை.

அடுத்த நொடியே மீரா பதறிக் கொண்டே, "வேகமாக கிளம்புங்க! அவசரம் சொல்லிட்டு இப்படி நின்னுட்டு இருக்கீங்க..." என்றாள்.

ஜெய், "மீரா, ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு.." என்று இழுக்க,

மீரா, "ஐயோ! இப்போ ஊருக்கு போறதா முக்கியம்? அம்மா அப்பாவை இன்னொரு நாள் கூட பார்க்கலாம். எனக்கு எந்த வருத்தமும் இல்ல. அங்க ஒரு உயிர் போராடிட்டு இருக்கு. போய் உங்க கடமைய செய்யுங்க...." என்றாள்.

ஜெய்யிக்கு இது ஏற்கனவே தெரியும். மீரா இப்படி தான் சொல்லுவாள் என்று. அவளுக்கு ஏதாவது வருத்தம் இருக்கிறதா என அவள் முகத்தை ஆராய, அவள் முகத்தில் பதட்டம் மட்டுமே இருந்தது.

அந்த நொடியில் சொல்ல முடியாத ஆனந்தம் அவன் மனதில். மீராவின் புரிதல் அவனுக்கு சொல்ல முடியாத உணர்வை தந்தது. வேறு யாரும் மீராவின் இடத்தில் இருந்தால், கண்டிப்பாக சிறு வருத்தம் கூட இல்லாமல் இப்படிக் கூறி இருப்பார்கள் என்றால், நிச்சயம் கிடையாது! மீரா தன் வாழ்வில் வந்த தேவதையாக தோன்றினாள் அவனுக்கு.

அந்த நொடியில் அவன் காதல் ஊற்றாக  பொங்கியது. அதீத காதல் பெருகியது. அவளை அணைக்க பெரும் ஆவல் எழுந்தது. நேற்று அவள் கூறிய பதிலில் அவள் மேல் உள்ள காதல் பன்மடங்காக  பெருகியது. முயற்சி செய்து தன்னை கட்டுப் படுத்தினான். ஆனால் இன்று முடியவில்லை. காதல் வெள்ளம் அணையை உடைத்து விட்டது.

மீரா என நினைப்பாள் என்றும்  அதன் பின்விளைவுகளை அவன் யோசிக்கவில்லை! அந்த நிமிடமே விரைந்து ஓடி அவளை அணைத்துக் கொண்டான். மீரா அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். எல்லாம் ஒரே நிமிடம்தான்.

அணைத்த வேகத்தில் அவளை விட்டு விலகியவன், "நான் போயிட்டு வரேன்..." என்றான். அவன் முகத்திலிருந்த இனம் புரியாத சந்தோஷம் அவளை வேறு எதுவும் யோசிக்க விடவில்லை. அவள் தலை தானாக ஆடியது.

ஜெய் முகத்தில் சந்தோஷத்துடன் வேகமாக வெளியேறினான். மற்றவர்கள் அவனை கேள்வியாக பார்க்க, "ஒரு எமர்ஜென்சி கேஸ், வந்து சொல்றேன்..." என்றவன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டான்.

மீரா இவ்வளவு நேரமாகியும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்த அணைப்பை சத்தியமாக அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் அணைத்த போது ஒரு இனம் புரியாத உணர்வு அவளை ஆட்கொண்டது. அளவில்லா பாதுகாப்பை உணர்ந்தாள். குழப்பத்தில் இருந்த அவள் அவனின் அணைப்பை கண்டு மேலும் குழம்பி கொண்டவள், அப்படியே நின்றிருந்தாள்

நித்யா வந்து, "மீரா.." என உலுக்கவுமே சுயநினைவை அடைந்தவள் பேவென முழித்தாள்.

நித்யா, "என்ன மீரா, வருத்தப் படுறீயா? அவன் கூட்டிட்டு போறேன்னு சொல்லிவிட்டு கடைசி நேரத்தில இப்படி பண்ணிட்டான்னு?" என்க,

மீரா கணநேரத்தில் சன் தன்னை சமாளித்துக் கொண்டு, "அதெல்லாம் இல்ல, எனக்கு ஒரு வருத்தமும் இல்ல. இன்னைக்கு ஊருக்கு போகலைன்னா என்ன? நாளைக்கு ஊருக்கு போகலாம். ஆனா ஹாஸ்பிடல் அப்படி இல்லையே! ஒரு உயிர் போராடிட்டு இருக்கு. ஒரு டாக்டரா அவரவர் கடமையைச் செய்றாரு. அதுதான் சரியும் கூட...

அவர் ஹாஸ்பிடலுக்கு வராமல் என்கூட வந்து இருந்தா தான் நான் ரொம்ப வருத்தப்பட்டு இருப்பேன். நல்ல வேலை அவர் அப்படி செய்யலை. அவர் என்னை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இருந்தே அவர் டாக்டர் தான். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால, அவர்  கடமையை செய்யாமல் இருக்க முடியுமா? அவர் எனக்கு ஒரு நல்ல கணவனா இருக்குறதுக்கு முன்னாடி, மனித நேயமுள்ள மனிஷனா இருக்கணும். இப்போ நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? அவர் என்ன ஊருக்கு கூட்டிட்டு போய் இருந்தா கூட நான் இவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்க மாட்டேன்.." என்று நீளமாக பேசி முடிக்க,

நித்யா, "மீரா, எப்படி டி இப்படி எல்லாம் பேசுற... நானும் உன்கூட தான் இருக்கேன் எங்க இருந்து இதெல்லாம் பேச கத்துக்குற..?" என்றாள் ஆச்சரியமாக.

மீரா பதிலுக்கு புன்னகைக்க, நித்யா, "ஒன்னு மட்டும் நல்லா புரியுது.." என்றாள்.

மீரா, "என்ன?" என்றாள் ஆர்வமாக!

நித்யா, "நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர். எனக்கு புரியுது நித்யாவின் இந்தக் கூற்றில் மீரா முழிக்க,

நித்யா, "என்ன முழிக்கிற? உண்மையைதான் சொல்றேன். உங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.  எனக்கு சில சமயம் உங்களை பார்த்து பொறாமையா இருக்கும். நீங்க ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க..." என்றாள்.

மீராவிற்கு இதைக்கேட்டு யோசனையாக இருந்தது அவளது முகத்தில் குழப்ப ரேகைகள் பார்த்த நித்யா, "ஒரு வழியாக குழப்பி விட்டுட்டோம். குழம்பி தெளிவாகட்டும். இதுகளை சேர்த்து வைக்கவே நான் எக்ஸ்ட்ரா சாப்பிடணும் போல!" என புலம்பிக் கொண்டு சென்றுவிட்டாள்.

மீராவின் குழப்பம் தான் மேலும் அதிகரித்தது. வழக்கம் போல பல எண்ணங்கள் உடனே உலவ ஆரம்பித்து விட்டாள். பேக் பண்ண திங்க்ஸ் எல்லாம் எடுத்து கப்போர்டில் வைத்தாள். அப்போதுதான் ஜெய்யின் கப்போர்டிலிலிருந்து ஒரு டைரி கீழே விழுந்தது.

மீரா, 'என்ன டைரி, இதுவரைக்கும் நான் இத பார்த்ததே இல்லையே! யார் டைரி இது?' என திறந்து பார்க்க, ஜெய்யின் கையெழுத்து இருந்தது. அதை பார்த்தவள் இது அவருடைதா? என அடுத்த பக்கத்தை திருப்ப போனவளை ஒரு மனம், "அடுத்தவங்க டைரியா படிக்கிறது ரொம்ப தப்பு..." என்க, மற்றொரு மனம், "அடுத்தவங்க இல்லை. உன்னோட கணவர் தான். சோ படிக்குறதுல தப்பு இல்லை..." என்றது.

மீரா, "என்ன இருந்தாலும் இது அவரோட பர்சனல்...' என நினைத்தவள் அதை அப்படியே கப்போர்டில் வைத்துவிட்டாள்.

நித்யா பத்மாவதியும் வரதராஜனை ஒரு வழியாக பேசி சமாளித்தாள். மீராவும் தன் பங்கிற்கு எந்த வருத்தமும் தனக்கு இல்லை என்று கூறி அவர்களை சமாதானம் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஜெய்க்கு மருத்துவமனையில் நிறைய வேலை. அந்த விபத்து நடந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது  அறுவை சிகிச்சை செய்வதற்கு இரவாகிவிட்டது. அந்த நோயாளி ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியவுடன் தான் அவனுக்கு நிம்மதி வந்தது.

எல்லாம் முடிந்து தன்னை சுத்தப்படுத்திவிட்டு கேபினுக்கு வந்த பிறகு தான் அவனுக்கு இன்னும் சாப்பிடாதது பசி வயிற்றை கிள்ளியது. தனது வாட்சை பார்க்க, இரவு நேரமாகி இருந்தது. மீரா தனக்காக காத்திருப்பாள் என தோன்ற, வேகமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

காரில் போகும்போது ஜெய்க்கு மீரா கூறிய வார்த்தைகள் நினைவு வந்தது. அவளது புரிதலை நினைத்து மனம் நிறைந்தது. அப்போதுதான் தான் உணர்ச்சி வசப்பட்டு அவளை அணைத்தது நினைவு வந்தது. ஏதோ ஒரு வேகத்தில் அணைத்து விட்டான்.  ஆனால் இப்போது சற்று வருத்தமாக இருந்தது. அவளது அனுமதி இல்லாமல் இப்படி செய்திருக்கக் கூடாது எனத் தோன்றியது.

ஆனால் காதல் கொண்ட மனமோ, "மீராவுக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும். அவ கிட்ட உனக்கு உரிமை இல்லையா?" என்று கூற மீராவின் ரியாக்சன் நினைவு வர, அவனது இதழ்கள் தானாக மலர்ந்தது.

அவளது வாசனை இன்னும் தன் மீதி இருப்பது போல தோன்றியது. தனது சட்டையை தானே முகர்ந்து கொண்டான். இனிமையான நினைவுகள் உடனே வீட்டை அடைந்தான். அவன் கார் சத்தத்தை வைத்து அவன் வந்து விட்டதை அறிந்த மீரா, "ரஞ்சு, அவர் வந்துட்டாரு... நான் பார்த்துகிறேன். நீ போய் தூங்கு.." என அவளை அனுப்பி வைத்தவள், அவன் காலிங் பெல்லை அழுத்தும் முன் கதவை திறக்க சென்றாள்.
ஜெய் வந்ததும் அவன் அணைத்தது  ஞாபகம் வர, உள்ளுக்குள் ஏதோ குறுகுறுப்பு.

ஜெய்யும் வாசலில் நின்று தனக்குத்தானே தைரியம் கூறி கொண்டவன் காலிங் பெல்லை அழுத்த, மீரா கதவை திறந்து விட்டாள். ஜெய் மீராவை பார்த்து புன்னகைத்தான். மீராவிற்கு அவன் முகத்தில் புன்னகையை மிஞ்சிய சோர்வே தெரிந்தது.

'அவர் காலையில் நடந்ததை மறந்து விட்டார் போல! நான் தான் போட்டு குழப்பிட்டு இருக்கேன்' என தெளிவடைந்தவள், பதிலுக்கு புன்னகைத்துவிட்டு, "ரொம்ப வேலையா?" என கேட்டாள்.

ஜெய், "ஆமா! கொஞ்சம் வேலை அதிகம் தான். அந்த பேஷண்ட் பிழைச்சிட்டாங்க..." என்றான். இதைக் கேட்டதும் மீராவின் முகம் மலர்ந்தது.

மீரா, "இது போதுமே! ரொம்ப சந்தோஷமா இருக்கு. சரி ப்ரஷ் ஆகிட்டுவாங்க. ரொம்ப டயர்டா இருக்கீங்க... நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..." என்க, அவளது மலர்ந்த முகத்தை தனது மனபெட்டகத்தில் சேமித்து வைத்தவன் தனது அறைக்கு சென்றான்.

ஜெய் வந்ததும் இருவரும் சேர்ந்து உணவு உண்டனர். ஜெய், "மீரா, நம்ம நாளைக்கு காலையில பெங்களூர் போகலாம். இன்னைக்கு நடந்த மாதிரி நாளைக்கு கண்டிப்பா நடக்காது..." என்றான் வருத்தத்துடன்.

மீரா, "எதுக்கு இவ்வளவு வருத்தப்படுறீங்க..... நீங்க எவ்வளவு பெரிய நல்ல காரியம் பண்ணிட்டு வந்து இருக்கீங்க. எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல. இன்னொரு நாள் போய்க்கலாம்..." என்று புன்னகைத்தாள். அவள் புன்னகை அவன் மனதில் இருந்து சிறு குற்ற உணர்வையும் நீக்கியது.

ஜெய், "நாளைக்கு எனக்கு எந்த வேலையும் இல்லை. ஹாஸ்பிடல்ல இன்ஃபார்ம் பண்ணிட்டேன்...." என்றான். மீரா சம்மதமாய் தலையாட்ட, சாப்பிட்ட பின் இருவரும் உறங்கச் சென்றனர்.

மறுநாள் காலையில் இருவரும் பெங்களூருக்கு கிளம்பினர்..பெரியவர்கள் "பார்த்து கவனமாக போயிட்டு வாங்க.." என அறிவுரை வழங்கினார்கள்.

கடைசி நேரத்தில் விமான டிக்கெட் கிடைக்காததால், இருவரும் காரில் புறப்பட்டனர். ஜெய் காரை ஓட்டிக் கொண்டு வர,  மீரா அவனுக்கு அருகில் அமர்ந்து இருந்தாள்.

இருவரும் எதுவும் பேசவில்லை. மௌனமாய் ஒரு பயணம். வார்த்தை இல்லா மௌனம். இரு மனங்கள் ஆட்சி செய்யும் மௌனம். மீரா வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

ஜெய் ஒரக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான். மீரா வேடிக்கை பார்த்துக் கொண்டே, கண்களை மூடி கண்ணாடியில் சாய்ந்து உறங்கிப் போனாள். இவ்வளவு நேரம் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், நன்றாகவே பார்க்கத் தொடங்கினான்

அவள் தூங்கும் அழகை கண்களால் களவாடி கொண்டிருந்தான். எப்போதும் எதையோ தேடும் அவளது துறுதுறு கருவண்டு விழிகள், பூவை கண்டது போல ஒரே இடத்தில் இருந்தது. அவளது கூரான நாசியில் வேர்வை துளிகள், மலர்ந்த  அவளது செவ்விதழ்கள்.

பால்வண்ணம் மாறாத  குழந்தை முகம், அவளைப் பார்க்கும்போது கள்ளம் கபடமற்ற குழந்தை உறங்குவது போலவே தோன்றியது. அவளது கார் குழல் கற்றைகள், காற்றின் வேகத்தினால் காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தது. 

இவள் என்னவள் என்னும் எண்ணமே  அவனுக்கு இனித்தது. இந்த நிமிடம் இப்படியே உலகம் நின்றுவிடக் கூடாதா? என்று தோன்றியது. நித்யா மீரா கூறிய அனைத்தையும் ஜெய்யிடம் கூறிவிட்டாள்.

மீரா பேசியதை நினைத்தவனது  இதழ்கள் தானாக புன்முறுவல் பூத்தது. 'என்னோட மீரா வாயால நான் நல்ல மனிதன் என்ற பெயர் கிடைத்துவிட்டது. வேறு என்ன வேண்டும்? நல்ல உறவுக்கு புரிதலும் நம்பிக்கையும் மிகவும் அவசியம். அந்த இரண்டுமே என் மீராவிடம் இருந்து எனக்கு நிறையவே கிடைத்துவிட்டது. மீராவிற்கு என்னிடம் எப்போதிலிருந்து இவ்வளவு நம்பிக்கை! தன்னை புரிந்து கொள்ளும் மனைவி கிடைத்தால் வாழ்க்கை வசந்தமாக விடும். வாழும்போது வாழ்க்கையில் சொர்க்கத்தை என் மீரா எனக்கு கொடுத்துவிட்டாள்' என தோன்ற அவன் காதல் ஊற்றெடுத்தது.

அவரிளிம் இருந்து  கண்ணை அகற்ற முடியாமல் கஷ்டப்பட்டு தன்னை சமநிலை படுத்தியவன், 'வரவர நீ கண்ட்ரோல் இல்லாம போயிட்டு இருக்க. செல்ஃப் கன்டாரோல் வேணும். நிச்சயம் உன்னோட மீரா உன்கிட்ட வருவா..' எனக் கூறிக்கொண்ட மீராவின் தலையை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு, உற்சாகமாக காரை ஓட்டினான். மீராவும் தூக்கத்தில் ஜெய்யின் தோளில் வாகாக சாய்ந்துகொண்டு அவன் கையை இறுக அணைத்து தன் உறக்கத்தை தொடர்ந்தவளுக்காக, காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி தெரியவில்லை!

                                       கரைவாள்...

தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும் மக்ககளே! இன்னும் மூன்று அத்யாயங்களில் கதை நிறைவடைந்து விடும் (அப்டினு நான் ப்ளான் பண்ணிருக்கேன்...) தொடர்ச்சியா 3 எபிசோட் தரேன் மக்களே! ☺️☺️☺️


ReplyQuote
NIVETHA
(@velavaa)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 138
 

Nice epi 😍 


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 98
 

உன் காதலில் நானும் கரைவேனா? 78

ஜெய் குதூகலமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் மீராவிற்கு விழிப்பு தட்டியது. கண்களை திறந்தவள், ஜெய்யின் தோளில் சாய்ந்து இருப்பதைப் பார்த்து பதறி விலகி அமர்ந்தாள்.

ஜெய் அவள் செயலை பார்த்து, 'ரொம்பதான் பண்றா... யாரோ தெரியாதவங்க தோள்ல சாஞ்ச மாதிரி இப்படி பதறுருறா...' என்று செல்லமாக அவளுடன் மனதிற்குள்ளே கோபித்துக் கொண்டான்.

மீரா, 'என்ன  பண்ணி வச்சிருக்க மீரா..?' என தன்னைத்தானே திட்டிக் கொண்டவள், மறந்தும்கூட ஜெய்யின்புறம் திரும்பவில்லை.

கார் திடீரென நிற்க மீரா ஜெய்யை பார்க்க, ஜெய், "பசிக்குது... சாப்பிட போகலாமா?" என்றான்.  மீரா சரி என்று தலையை ஆட்ட, இருவரும் ஹோட்டலில் இறங்கி சாப்பிட்டுவிட்டு, பின் புறப்பட்டனர்.

பின் சில மணி நேரங்களில் இருவரும் பெங்களூரை அடைந்தனர். ஜெய்யின் கார் நித்யாவின் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல், வேறு வழியில் சென்றது.

அது ஜெயின் வீட்டிற்கு செல்லும் வழியும் இல்லை. தன்னை மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் உரைத்தது. மீரா ஜெய்யிடம் கேட்கலாம் என்று அவனை பார்க்க, ஜெய் எதுவும் தெரியாதது போல நார்மலாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

மீரா, "ஜெய்...." என்று அழைத்தாள். ஜெய்க்கு அவள் கூப்பிட்டது கேட்டது. இருந்து மனதில், 'தெரியாம சாஞ்சதுக்கு எப்படி பண்ணா... அவ கூப்பிட்டா திரும்பக் கூடாது..' என நினைத்தவன், அவள் கூப்பிட்டது கேட்காதது போல காரை ஓட்டினான்.

மீரா மீண்டும், "ஜெய்.." என்றழைக்க, இப்போதும் ஜெய் கவனிக்கவில்லை. 'என்ன? இவ்வளவு பக்கத்தில் இருந்து கூப்பிடுறேன். இவருக்கு கேட்கலையா?' என நினைத்தவள், அவன் தோள்பட்டையில் கை வைத்தாள்.

ஜெய் உதட்டுக்குள் புன்னகைத்துக்கொண்டே, "என்ன மீரா?" என்றான்‌.

மீரா, "இவ்வளவு நேரம் கூப்பிட்டு இருக்கேன். உங்களுக்கு கேட்கலையா?" என கேட்க,

ஜெய், "சாரி மீரா, ஏதோ ஞாபகத்தில் இருந்தேன்  அதான் கவனிக்கலை..."

மீரா, "இப்போ நாம எங்கே போறோம்...?"  என கேட்டாள்.

ஜெய், "என்ன மீரா, அதுகூட தெரியாம தான் இவ்வளவு தூரம் வந்து இருக்க?" என்றான் சிரிப்புடன்.

மீரா அவனை பார்த்து முறைக்க, ஜெய், "சொல்றேன்.   சரி முறைக்காத. அத்தை மாமாவை தான் பார்க்க போறோம்..." என்றான்.

மீரா, "நம்ம வீட்டுக்கு இந்த வழியில் போக முடியாதே!" என்றாள்.

ஜெய், "அத்தை மாமாவை பாக்குறதுக்கு முன்னாடி  முக்கியமான ஒருத்தவங்களை மீட் பண்ண போறோம்..." என்றான்.

மீரா, 'யார் அது? என் அப்பா அம்மாவை விட முக்கியமான ஆளு..' என தோன்ற, அதை வாய் விட்டுப் கேட்டே விட்டாள்.

ஜெய் புன்னகையுடன் அவளை பார்த்து விட்டு காரை நிறுத்தினான். மீரா கேள்வியாக பார்க்க,

ஜெய், "உள்ளே போனா அவங்க யாருன்னு தெரிஞ்சுடும். வா போகலாம்.." எனக் கூறி காரை விட்டு இறங்கினான்.

மீரா ஆச்சரியமாக அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே இறங்கினாள். ஜெய் வா என கூறிவிட்டு உள்ளே சென்றான்.

மீரா இன்னும் ஆச்சரியம் விலகாமலே, 'இது யார் வீடு?' என யோசித்துக்கொண்டே அவனுடன் சென்றாள். ஜெய் காலிங் பெல்லை அழுத்த, இரண்டு நிமிடத்தில் கதவு திறக்கப்பட்டது. மேகலா தான் உள்ளே நின்று கொண்டிருந்தார்.

மேகலாவை பார்த்ததும் மீரா இன்ப அதிர்ச்சியாகி, "அம்மா, நீங்க எப்படி இங்க?" என்றவள் ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொண்டாள். மேகலாவும் அவளை அணைத்து கொண்டார்.

மீரா, "அம்மா, இது யார் வீடு? நீங்க ஏன் இங்க இருக்கீங்க?" என்றாள்.

"மேகலா..." என்று அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் குமரவேலு. மீராவிற்கு இது பெரிய அதிர்ச்சி. தனது தாய் தந்தையர் தனது திருமணத்திற்குப் பிறகு ஒன்று சேர்ந்து விடுவார்கள் என நினைத்து தான் ஜெய்யை திருமணம் செய்து கொண்டாள்.

ஆனால் அதன் பிறகும் அவர்கள் சேராமல் இருப்பது அவளுக்கு வருத்தத்தை அளித்தது. அவள் இது பற்றி  அவர்களிடம் கேட்கவில்லை. தன் தந்தையே ஆனாலும் சிறு தயக்கம். அவ்வபோது இதை நினைத்து அவள் வருத்தப்பட்டது உண்டு. ஆனால் இப்போது அது நடந்து விட்டது. அதை அவளால் நம்பமுடியவில்லை சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. இது எப்போது நடந்தது? ஏன் தன்னிடம் கூறவில்லை? என்ற கேள்வி மனதில் ஒரு பக்கம் இருந்தாலும், அளவில்லா சந்தோசத்தில் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவள் வாழ்வில் மிக மிக சந்தோஷமாக இருக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று. தனது மன பெட்டகத்தில் அதை பத்திரமாக சேமித்து கொண்டாள்.

வாழ்க்கை முழுவதும் மேகலா தனியாகவே வாழ்ந்து விடுவாரோ?  என்று அவள் கவலைப் பட்ட நாட்கள் சொற்பம்.

ஜெய், "என்ன? இப்படியே வாசல்ல நிற்கிறதா ஐடியாவா?" என்று கேட்க, மீரா உடனே அவர்களிடம் இருந்து விலகினாள்.

மேகலா, "உள்ள வாங்க மாப்பிள்ளை..." அவனை  வரவேற்க, ஜெய் புன்னகையுடன் உள்ளே வந்தான்.

மீரா மனதில் இன்னும் அந்த கேள்வி ஓடிக் கொண்டுதான் இருந்தது. 'இவர்கள் எப்போது ஒன்று சேர்ந்தார்கள்? அதுவும் வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள். இவ்வளவு நடந்திருக்கு எனக்கு தெரியலை.  ஆனால் அவருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு...' என யோசித்துக் கொண்டே உள்ளே வர,

மேகலா, "மீரா நீயும் மாப்பிள்ளையையும் போய் குளிச்சுட்டு வாங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..." என்றாள்.

மீரா, 'நாம வந்தது இவங்களுக்கு சர்ப்ரைஸ்னு ஜெய் சொன்னாரு. ஆனால் அம்மா நம்ம வர்றது முன்னாடியே தெரிஞ்ச மாதிரி சமைச்சு எல்லாம் வச்சிருக்காங்க. ஒண்ணுமே சரியில்லை..' என சந்தேகிக்க, அவளது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஜெய், "சரிங்க அத்தை.." என்று ஏதோ பழக்கப்பட்ட இடத்திற்கு செல்வது போல அறைக்குள் சென்றான்.

மேகலா, "என்னம்மா நிக்குற... போய் பிரஷ் ஆகிட்டுவா. டைம் ஆகிடுச்சு... உனக்கும் பசிக்கும் இல்ல..." என்றார்.

மீரா, 'சரி, வந்து கேட்போம்..' என  அறைக்குள் சென்றாள். இருவரும் குளித்துவிட்டு வர, மேகலா உணவு பரிமாறினார். நால்வரும் பேசிக்கொண்டே உண்டனர். சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, ஜெய் மீரா அவள் பெற்றோருடன் தனிமையில் பேசட்டும் என நினைத்தவன், "டிரைவ் பண்ணது எனக்கு டயர்டா இருக்கு. நான் தூங்க போறேன்.." என்று கூறி அறைக்குள் சென்று விட்டான்.

ஜெய்யின் எண்ணம் மீராவிற்கு புரிய, மனதில் புன்னகை அரும்பியது. எல்லாவற்றையும் எனக்காக யோசித்து செய்கிறாரே! என தோன்றியது. அவன் சென்றவுடன் மீரா, "அம்மா, நீங்களும் அப்பாவும் சமாதானம் ஆகிட்டதை ஏன் என்கிட்ட சொல்லல? தனியாக வீடு எடுத்து வேற தங்கி இருக்கீங்க. இதை கூட சொல்லலை...' என செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

அவளது செய்கையைப் பார்த்து இருவருக்கும் புன்னகை அரும்பியது. ஒரு குழந்தை கோபித்துக் கொள்வது போலவே தோன்றியது. குமரவேலுக்கு மீராவின் அழகான குழந்தை பருவத்தில் தான் இல்லாமல் போய் விட்டோமே என தோன்ற, அவரது புன்னகை சட்டென மறைந்தது. இதனை இருவருமே கவனித்தனர்

குமரவேலின் எண்ணம் புரிந்த மேகலா, அவர் கையை ஆதரவாகப் பற்றி, "நடந்ததை நினைச்சு கவலைப் படாதீங்க. இனிமேல் இருக்க வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வோம்.." என்றார். குமரவேலின் வருத்தம் மறைந்து, மனநிறைவுடன் கூடிய புன்னகை அரும்பியது.

மீராவுக்கும் இது பெரிய ஆச்சரியம். அப்பாவின் முகத்தைப் பார்த்தே, அம்மா அவரது எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்கிறார் என்று! மீரா ஆ வென்று அவர்களைப் பார்க்க,

மேகலா, "என்ன மீரா, அப்படி பார்க்கிற..." என கேட்க, மீரா தன் மனதில் நினைத்ததை கூற,

மேகலா, "இப்போதான உனக்கு கல்யாணம் ஆகி இருக்கு. போக போக உனக்கும் புரியும்.." என்றார்.

மீரா, "எனக்கும் ஜெய் மனசுல நினைக்கிறது புரியுமா? என யோசித்தவள், அதை அப்புறமா பார்த்துக்குவோம். இப்ப நம்ம சந்தேகத்தை தீர்த்துக்குவோம்...' என நினைத்தவள், "அம்மா, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க முதல்ல..." என்றாள் விடாப்பிடியாக.

மேகலா பதில் சொல்ல வர, குமரவேல் முந்திக்கொண்டு, "எல்லாத்துக்கும் ஜெய் தம்பி தான் காரணம். அவர்தான் எங்களை சேத்து வச்சாரு. இப்போ இந்த வீடும் அவர்தான் பார்த்துக் கொடுத்தாரு..." என்றார்.

மீராவிற்கு இதைக் கேட்டு எப்படி ரியாக்ட் பண்ணுவது என தெரியவில்லை. 'ஜெய்யா இதை செய்தார்? எதற்காக இவர் இதையெல்லாம் செய்கிறார்? எனக்காக இதை எல்லாம் செய்கிறாரா?' என தோன்ற உள்ளுக்குள் ஒருவித பரவசம் தோன்றியது. அது எதனால் என்று அவளுக்கு தெரியவில்லை. 

அவனது எதிர்பார்ப்பில்லாத அன்பு கண்டு ஒரு நொடி வியந்துதான் போனாள். 'எல்லாவற்றையும் செய்துவிட்டு எதுவுமே நடக்காதது போல எப்படி தான் அவரால் நடக்க முடியுதோ!' என பலவாறான யோசனைகள்.

மேகலா, "என்ன மீரா, பதில் பேசாம எங்களையே பார்த்துட்டு இருக்க.." என்றார்.
மீரா ஒன்னும் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

மேகலா, "ஜெய் தம்பி மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கனும்..."

குரவேலும், "ஆமா! நம்மலா தேடி  போய் ஒரு மாப்பிள்ளை பார்த்து இருந்தாலும் இவரை விட ஒரு நல்ல பையன கண்டுபிடிச்சிருக்க முடியாது.." என்க,

மேகலா, "ஆமா! எங்களுக்காக நிறைய செய்றாரு..." என்றார். மீராவிற்கு அவன் செயல் அளவில்லாத ஆனந்தத்தை கொடுத்தது. உடனே அவனிடம் நன்றி கூற வேண்டும் என்று தோன்றியது.

மேகலா, "சரிமா... காலைல பேசிக்கலாம். நீ இவ்வளவு நேரம் ட்ராவல் பண்ணினது டயர்டா இருக்கும். போய் தூங்கு..." என்றார்.

"என் மனசுல இருக்குறதையும் அம்மா கண்டுபிடிச்சுடுக்குறாங்களே!' என நினைத்தவள், தலையை ஆட்டிவிட்டு அறைக்கு சென்றாள்.

மீரா 'எப்படி அவரிடம் நன்றியை தெரிவிக்க..?' என யோசித்துக் கொண்டே செல்ல, ஜெய் உறங்கி இருந்தான். 'காலையிலிருந்து கார் ஓட்டி வந்தது ரொம்ப டயர்டா இருக்கும். அதான் தூங்கிட்டாரு போல!' என நினைத்தவள், அவன் அருகில் படுத்துக் கொண்டாள். அவளுக்கு அளவில்லாத சந்தோஷத்தில் தூக்கம் வர மறுத்தது. இந்த புது வித பரவசம் எதனால் என்று அவளுக்கு தெரியவில்லை.

திரும்பிப் படுத்தவள் ஜெய்யை பார்த்தாள். இதழில் புன்னகையுடனே உறங்கிக்
கொண்டிருந்தான். முதன்முதலாக அவன் முகத்தை இவ்வளவு அருகில் காண்கிறாள். அவனது பரந்த நெற்றியில் புரளும் கேசம், கூர்மையான அவனது விழிகள், அளவான நாசி, எப்பொழுதும் மாறாத புன்னகை கொண்டிருக்கும் அவனது அதரங்கள் என அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதை எதையும் அறியாத ஜெய்யும் வழக்கம் போல மீராவுடன் கனவில் காதல் செய்து கொண்டிருந்தான். வழமையாக ஜெய் செய்யும் இந்த வேலையை மீரா பார்த்துக் கொண்டிருந்தவள், வெகு நேரம் கழித்தே உறங்கினாள். மறுநாள் காலை பொழுது அழகாக விடிந்தது.

மீராவிற்கு முன் ஜெய் கண் முழித்து விட்டான். கண் முழித்த அவனுக்கு இன்ப அதிர்ச்சி. மீரா அவனுக்கு மிக அருகில் படுத்திருந்தாள். மீராவின் முகம் அவன் முகத்திற்கு வெகு அருகில்.

அவனை ஆராய்ச்சி செய்தவள் அப்படியே உறங்கி விட்டிருந்தாள். மீராவை இவ்வளவு அருகில் பார்த்தவனின் மனது குத்தாட்டம் போட்டது. அவளை காதலுடன் ரசித்துக் கொண்டிருந்தவன், அவளிடம் அசைவு தெரியவும் வேகமாக இறங்கி குளியலறைக்குச் சென்றான்.

மீராவிற்கு லேட்டாகத்தான் விழிப்பு தட்டியது.  கண்முழித்து பார்க்க, ஜெய்யை அருகில் காணவில்லை நேரத்தை பார்க்க 8.30 எனக் காட்டியது. அடித்துப் பிடித்து எழுந்தவள், "எப்படி இவ்வளவு நேரம் தூங்கினேன்? எப்பவும் சீக்கிரம் எழுந்துடுவேனே.. அம்மா திட்ட போறாங்க..." எனப் புலம்பிக் கொண்டே வேகமாக குளிக்க சென்று கீழே வர, 9 மணி ஆகிவிட்டிருந்தது.

அவள் வெளியே வந்தபோது மயக்கம் வராத குறைதான். அவ்வளவு பெரிய அதிர்ச்சி!  பேலன்ஸிற்காக சுவற்றை பிடித்துக் கொண்டாள்.  தான் கண்ட காட்சியை அவளால் நம்ப முடியவில்லை. ஒரு வேலை தூக்க கலக்கத்தில் இருக்குமோ? என நினைத்தவள், கண்ணை கசக்கி விட்டு மீண்டும் பார்க்க, ஒன்றும் மாறவில்லை.  பார்த்த காட்சி அப்படியே தான் இருந்தது.

                                      கரைவாள்...

ஹாய் மக்களே! இன்னும் 3 எபிசோட்ல கதை முடிஞ்சுடும். அடுத்து நீங்க ஆசைப்பட்ட மாதிரி வர்ணிகா, விழிகளிலே ஒரு கவிதை ரெகுலர் அப்டேட்ஸ் தரேன்.
அப்புறம்... அவ்ளோதான் பா. பாய் 😍

 

 


ReplyQuote
NIVETHA
(@velavaa)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 138
 

nice interesting epi 😍 


ReplyQuoteJanu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 98
 

உன் காதலில் நானும் கரைவேனா? 79

 

மீரா கண்ணை கசக்கி விட்டு மீண்டும் பார்க்க, மீராவின் மொத்த குடும்பமும் அங்கு அமர்ந்திருந்தது. நித்யா அமர்ந்து டிவி பார்த்துகொண்டிருக்க, பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

மீரா வந்ததும் மேகலா, "மீரா, இந்தா காபி..." என்று நீட்ட, மீரா அதிர்ச்சி விலகாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க, மேகலா, "மீரா.. என்ன சிலை மாதிரி நிக்குகிற... காப்பியை பிடி..." என்று அவள் கையில் வைத்தார். ஜெய்யும் அவர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.  அங்கு என்ன நடக்கிறது என ஒன்றுமே அவளுக்குப் புரியவில்லை.

மீரா, "நீங்க எல்லாரும் எப்ப இங்க வந்தீங்க?" என்றாள.

எல்லோரும் என்ன பதில் சொல்ல என்று தெரகயாமல் முழிக்க, நித்யா முந்திக்கொண்டு, "அதுவா.... அது வந்து நாங்க இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தோம்..." என்றாள்.

மீரா, "நீங்க எங்க கூடவே வந்து இருக்கலாமே!" என கேட்க,

நித்யா, "நேத்து வரை எங்களுக்கு இங்க வர்ற ஐடியாவே இல்லை.  நைட் தான் கிளம்ப அவசியம் வந்தது.." என்றாள்.

மீரா, "அப்படி என்ன அவசியம் வந்துச்சு?" என கேட்க,

'விடாமல் பால் போடுறாளே...'என்ன சொல்லி சமாளிக்கிறது?' என நினைத்தவளின் கண்கள் அலைபாய, அங்கே அமர்ந்திருந்த சுரேந்தரை கண்டதும் அவள் மண்டையில் மணி அடித்தது. அவள். முகத்தின் பிரகாசத்தை பார்த்த க்ரீஷும் ஜெய்யும், 'ஆஹா! ஏதோ பிளான் பண்ணிட்டா போல...' என நினைத்தனர்.

நித்யா, "அது வேற ஒன்னும் இல்ல. நம்ம சுரேன் அண்ணாவுக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கோம்..." என்றாள.

சுரேந்தர் மைண்ட் வாய்ஸில், 'என்னது? எனக்கே தெரியாம எனக்கு பொண்ணு பார்க்கப் போறீங்களா?' என நினைத்தான்.

மீரா சுரேந்தரை பார்க்க, சுரேந்தர், "ஹிஹிஹி..." என்னை இளித்து, ஆமா! என தலையை ஆட்டினாள்.

நித்யா,'அப்பாடா! ஒருவழியாக சமாளித்துவிட்டோம்...' என நினைக்க,

மீரா, "சுரேந்தர் அண்ணா அப்பா அம்மா வரலையா?" என்று கேள்வி கேட்டாள்.

நித்யா, "ஐயோ! மறந்துட்டோமே..!' என நினைத்தாள்.

சுரேந்தர், 'இப்போ எப்படி சமாளிக்கப் போற?' என்று நித்யாவை பார்க்க,

நித்யா, "என்ன சுரேந்தர் அண்ணா... பாத்துகிட்டே இருக்கீங்க... பதில் சொல்லுங்க..." என்று அவனை கோர்த்துவிட்டாள.

சுரேந்தர், 'ஐயையோ! வழக்கம்போல நம்மளை கொடுத்து விட்டாளே!' என நினைத்து திருதிருவென முழிக்க, அவனது முழியை பார்த்து மற்றவர்களுக்குப் சிரிப்பு வந்து விட்டது.  க்ரிஷ்க்கும்‌ ஜெய்க்கும் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக போய்விட்டது.

நித்யா, "அண்ணா! சொல்றதுக்கு யோசிக்கிறாரு மீரா.. நானே சொல்றேன். உங்க கல்யாணத்துல ஒரு பொண்ண பார்த்து அண்ணாவுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு. ஏற்கனவே இவ்வளவு நாள் சிங்கிளா இருந்துட்டோம். இனியும் தாமதிக்கக்கூடாதுன்னு வாரணம் ஆயிரம் சூர்யா ஸ்டைலில் உடனே ப்ரொபோஸ் பண்ணிட்டாரு..." என்றாள்.

சுரேந்தர், 'வாவ்! நான் சூர்யா மாதிரி ப்ரொபோஸ் பண்ணேனா?' என்று சந்தோஷப்பட,

க்ரிஷ், "டேய்! உனக்கு அவ்வளவு எல்லாம் ஒர்த் இல்ல.... அது எல்லாம் சமாளிபிகேஷன்‌ ஓவரா சந்தோஷம் படாத!" என்று கூற,

சுரேந்தர், "நிஜத்தில் அது நடக்கலை. என் தங்கச்சி கதையாவது நான் ஹீரோவா இருக்கேன்..." என்றான்.

நித்யா, "அண்ணாவோ அழகுல மயங்கி அந்த பொண்ணு உடனே ஓகே சொல்லிடுச்சு... இப்போ அந்த பொண்ணு வீட்டுக்கு நாங்க பொண்ணு கேட்டு போக போறோம்.." என்றாள்.

மீரா, "எல்லாம் ஓகே. இதுல சுரேந்தர் அண்ணாவோட அம்மா அப்பா ஏன் வராம இருக்காங்க...?" என்று கேட்க,

நித்யா, "அங்க தான் விஷயமே இருக்கு. அண்ணா ஓட அம்மா அப்பாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை. ஆனால் அண்ணாவுக்கு அந்த பொண்ணு மேல ரொம்ப லவ். அதான் நாங்க அண்ணாவுக்காக பொண்ணு கேட்டு வந்து இருக்கோம்..." என்றாள்.

மீரா ஏதோ கேட்க வர,

நித்யா, "எனக்கு தெரியும்! நீ என்ன கேட்க வரேன்னு... அண்ணாவோட அம்மா அப்பாவுக்கு ஏன் விருப்பம் இல்லைன்னு தான? அண்ணாவுக்கு ரம்யா ரம்யான்னு ஒரு அத்தை பொண்ணு இருந்தா. அந்த பொண்ணு சின்ன வயசுல இருந்து அண்ணாவை விரும்பி இருக்கா. அவங்களுக்கு ரம்யாவை அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசை. அதான் அவங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை..." என்று கூறி முடித்தாள்.

க்ரிஷ், 'இவனுக்கு ஒன்னுக்கே வழி இல்ல. இதுல ரெண்டு பேரா?' என நினைக்க,

சுரேந்தர், 'ஓ... டபுள் ஹீரோயின் கான்செப்டா? இது கூட நல்லா இருக்கே!' என இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

மீரா மீண்டும் நம்பாமல் நித்யாவைப் பார்க்க, 'இவ்வளவு பெரிய கதையை சொன்ன பிறகும் இவ நம்பலை. இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாது!' மற்றவர்களை பார்த்தாள்.

மீரா சுரேந்தரைப் பார்க்க, சுரேந்தர், "அழகா பொறந்தது என் தப்பா?" என கேட்க, சுரேந்தரின் இந்த டயலாக்கை கேட்டு எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. மீரா சுரேந்தரை வித்தியாசமாக பார்த்தாள்

சுரேந்தர், 'ஐயையோ உளரிட்டோமே!' என நினைத்து விட்டு முகத்தை பாவமாக வைத்தவன், "அம்மா அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்றது, எனக்கு வருத்தமா இருக்கு..." என்று வராத கண்ணீரைத் துடைத்தான்.

க்ரிஷ், "டேய் மச்சான்! ஓவர் பெர்பாமன்ஸ் பண்ணி எல்லாத்தையும் கெடுத்துடாத.." என்று அவன் காதுக்குள் கூற, சுரேந்தர் இருந்தும் தன் நடிப்பை தொடர்ந்தான்.

மீரா அவன் நடிப்பை உண்மையாக இருக்கும் என நம்பி, "அண்ணா! கவலைப்படாதீங்க... அம்மா அப்பா புரிஞ்சுப்பாங்க..." என்றாள். இதை கேட்டதும் எல்லோருக்கும் அப்பாடா என பெருமூச்சு வந்தது.

மேகலா இதுக்குமேல இவ கிட்ட பதில் சொல்ல முடியாது என நினைத்தவர், "மீரா, எல்லோரும் ரெடியாக இருக்காங்க.... நீ மட்டும் தான் பாக்கி...  கிளம்பு... போய் சீக்கிரம் கிளம்பி வா.." என்றார்.

மீரா சரி என்று கூறிவிட்டு தனது அறையை நோக்கி சென்றாள். வாசல் வரை சென்று திரும்பி பார்க்க,

நித்யா பொறுமை இழந்து, "இன்னும் என்ன?" மீரா என்றாள்.

மீரா, "இல்லை‌... சுஜாதாம்மா.." என ஆரம்பிக்க,

நித்யா, "அவங்ககிட்ட அட்ரஸை சொல்லிட்டேன். நேரா அவங்க வந்துடுவாங்க..." என்றாள்.

மீரா தனது அறைக்குள் சென்றதும் க்ரிஷ், "நித்தி, என்ன மாறி கதை விடுற... யப்பா! ஒரு குட்டி படமே ஓட்டிட்ட..." என்றான்.

நித்யா, "பின்ன? அவளை சமாளிக்க வேண்டாமா?" என கேட்க,

க்ரிஷ், "நித்தி... நீ வேற லெவல் போ.." என்றான்.

சுரேந்தர், "என்னோட பெர்பாமன்ஸும் இதுல இருக்கு...." என்க,

க்ரிஷ் அவனை முறைத்து, "கொஞ்ச நேரத்தில பிளானை கெடுத்துவிட இருந்தியேடா... எப்படி? எப்படி? அழகா பொறந்தது என் தப்பா? எப்படிடா இப்படி மனசாட்சி இல்லாம பொய் பேசுற..." என கேட்க,

நித்யா, "ஏன்? என் அண்ணாவுக்கு என்ன குறை? நல்ல படத்துல வர்ற ஹீரோ மாதிரி தான இருக்காரு...' என்று கூற,

க்ரிஷ், "இதுங்க பாசமலர் தொல்ல தாங்க முடியலையே!" என அலுத்துக்கொள்ள, அங்கே பெரும் சிரிப்பலை எழுந்தது.

நித்யா, "அண்ணா, கவலைப்படாதீங்க... நான் சொன்னது கண்டிப்பா நடக்கும்.." என்று கூறினாள்.

சுரேந்தர், "எனக்கு தான் அத்தை பொண்ணு இல்லையே!" என்று அதிமுக்கியமான சந்தேகத்தைக் கேட்டான். இதைக்கேட்டு எல்லோரும் சிரிப்பு வந்துவிட்டது.

நித்யா ஏகத்துக்கும் கடுப்பாகி, "இந்த ஜென்மத்துல உங்களுக்கு கல்யாணம் நடக்காது..." என்றாள். இவர்கள் இங்கே பேசி சிரித்துக் கொண்டிருக்க, மீரா ரெடியாகி வந்தாள். சிவப்பு நிற பட்டுப்புடைவையில் நேர்த்தியாக இருந்தாள். ஜெய்யால் அவளிடம் இருந்து  கண்ணை எடுக்க முடியவில்லை.

க்ரிஷ், "ஜெய், போதும்! ரொம்ப வழியாத..." என்று காதில் கூற, ஜெய் அதில் தன் நிலை அடைந்து ஹீஹீஹீ என இளித்தான்.

பத்மாவதி, "நல்ல நேரம் முடியறதுக்குள்ள அவங்க வீட்டுக்கு போகணும்... எல்லாரும் வாங்க..." என்க,

மீரா, "நான் இன்னும் சாப்பிடவே இல்லை.." என்றாள்.

நித்யா, "பொண்ணு வீட்ல பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தருவாங்க..." என அவளை  இழுத்துச் சென்று விட்டாள்.

எல்லோரும் காரில் சென்று கொண்டிருந்தனர். மீரா சுரேந்தரிடம், "அண்ணா! அந்த பொண்ணு பேரு என்ன?" என கேட்க,

சுரேந்தர், 'இப்படி அதிரடியான கேள்வி கேட்டா, நான் பேருக்கு எங்க போவேன்?' என நினைத்து, திருட்டு முழி முழித்தான்.

நித்யா முந்திக் கொண்டு, "அந்த பொண்ணு பேரு சவுமியா..." என்றாள்.

மீரா, "நித்யா நான் கேக்குற கேள்விக்கு எல்லாம் நீயே பதில் சொல்ற..?" என கேட்க,

நித்யா, "அம்மா அப்பா வரலைன்னு அண்ணா சோகமா இருக்காரு. அதான்..." என்றாள்.

சுரேந்தர், "நானே சோகத்தில் இருக்கேன். நீ என்னை கேள்வி கேட்டு மேலேயும் கஷ்டப்படுத்தாத..." என்று கண்ணை கசக்க,

மீரா பதறி, "நான் எதுவும் கேட்கலை..." என்றாள்.

க்ரிஷ், "மச்சான், ரம்யா சௌமியா... ம்ம்.. கலக்கு..." என்க,

சுரேந்தர், "கற்பனைலயாவது நடக்கட்டும்..." என்றான்.

காரில் வெகு நேரம் பயணம் செய்து  கொண்டிருக்க, மீரா, "அவங்க வீடு எங்க இருக்கு? ரொம்ப நேரமா ட்ராவல் பண்ணிட்டு இருக்கோம்.. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?" எனக் கேட்க,

சுரேந்தர், "யாருக்கு தெரியும்?" என்று தோளைக் குலுக்கினான்.

க்ரிஷ் சுரேந்தரின் தொடையில் நறுக்கென்று கிள்ளி விட்டான். சுரேந்தர் வலி பொறுக்காமல் ஆ...! என்று கத்த, எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்க, சுரேந்தர் க்ரிஷை முறைத்தான்.

க்ரிஷ், "ஏதாவது எறும்பு கடிச்சு இருக்கும்..." என்று கூற, சுரேந்தர் வேறு வழியில்லாமல் "ஆமா எறும்பு கடிச்சுடுச்சு.." என்று சமாளித்தான். இவர்கள் கலாட்டாவில் மீரா கேட்க வந்த கேள்வியை மறந்து போய்விட்டாள்.

க்ரிஷ் காரை நிறுத்த, மீரா வீடு வந்துடுச்சா? என்று பார்க்க அது ஒரு ஹோட்டல் முன்னாடி நின்றிருந்தது. ஹோட்டலின் பெயர் ஒரு துணியால் மறைக்கப்பட்டிருந்தது.

மீரா கேள்வியாகப் பார்க்க, நித்யா, "மீரா.. பசிக்குதுன்னு சொன்னல்ல... வா சாப்பிட்டு போய்டுவோம்..." என்று கூற,

மீரா, "நல்ல நேரம் முடிஞ்சிடப் போவுது ரஞ்சு.."

நித்யா, "நல்ல நேரம் தான? முடிஞ்சா முடிஞ்சு போகுது... உன்னோட பசி தான் எனக்கு முக்கியம்..." என்று அவளை வெளியே இறங்க வைத்துவிட்டாள்.

வெளியே வந்த மீராவிற்கு மீண்டும் அதிர்ச்சி! அங்கே மீராவின் தோழிகள் மற்றும் தெரிந்தவர்கள், நெருங்கிய சொந்தங்கள், சதாசிவமும் சுஜாதாவும் கூட நின்றிருந்தனர்.

நித்யா, "இதுக்கு மேல மீரா தாங்க மாட்டா... போதும் சஸ்பென்ஸ் ஓபன் பண்ணிடுவோம்..." என்று கூற, அந்த ஹோட்டல் பெயரை மூடியிருந்த திரையை விலக்கி விட்டனர்.

மீரா ரெஸ்டாரண்ட் என்ற பெயர் பலகை மின்னியது. அதனை பார்த்த அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. எல்லோரும் அங்கே கூடினர். ஜெய் அவள் கையில் கத்திரிக்கோலை நீட்ட, மீரா என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க,

நித்யா, "மீரா, முதல்ல ரிப்பனை கட் பண்ணு.... அப்புறமா உனக்கு எல்லாத்தையும் சொல்றோம்.." என்றாள்.

மேகலாவும் குமரவேலு, "நல்ல நேரம் முடியறதுக்குள்ள கட் பண்ணுமா.." என்று கூற மீராவும் ஆச்சர்யம் அதிர்ச்சி எதுவுமே விலகாமல், ரிப்பனை கட் பண்ண எல்லோரும் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மேகலா, "மீரா, மாப்பிள்ளையோட வலது காலை எடுத்து வைச்சுவா..." எனக் கூற,

ஜெய், "வா.. மீரா.." என்று அவள் கையை தன் கையோடு கோர்த்துக் கொண்டு உள்ளே அழைத்துச்சென்றான். ஜெய் கையைப் பிடித்ததும் மீராவிற்கு ஒரு புதுவித உணர்வு. எல்லோரும் உள்ளே வந்தவுடன்,

நித்யா, "மீரா, நீதான் நீதான் ஃபஸ்டு சாப்பிடனும்.." என்று அழைத்து அமர வைத்தாள்.

மீரா, "பெரியவங்க எல்லோரும் இருக்கும் போது நான் எப்படி சாப்ட்?" என்று கேட்க கூட இல்லை. அவள் முன் இலை போடப்பட்டு ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் எடுத்து வைத்து இலையை நிரப்பி விட்டனர். மீராவிற்கு தனது குடும்பத்தினரின் பாசத்தை கண்கள் கலங்கிவிட்டது.

நித்யா, "மீரா, சாப்பிடு. நீ சாப்பிட்ட பிறகுதான் எல்லோருக்கும் பரிமாற வேண்டும்..." என்றாள். அதற்காக எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். மீரா சந்தோஷத்துடன் சாப்பாட்டை சாப்பிட்டாள்.

மேகலா, "மீரா, சாப்பாடு எப்படி இருக்கு?" என கேட்டாள்.

மீரா, "ரொம்ப நல்லா இருக்குமா.." என்றாள். இதை கேட்டதும் குமரவேலின் முகத்தில் புன்னகை பூத்தது.

மேகலா, "உங்க அப்பா தான் இதை சமைச்சது..." எனக் கூற,

மீரா மிகவும் சந்தோஷமாக, "அப்பா, சூப்பரா சமைச்சு இருக்கீங்க.." என்றாள்.

குமரவேல், "இதைக் கேட்க தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்..." என்று கூறி புன்னகைத்தார்.

நித்யா, "வாங்க... மத்தவங்க எல்லோருக்கும் பரிமாறுவோம்.." என்று வந்த அனைவரையும் வரவேற்று சாப்பாடு பரிமாறினாள்.

மீரா சாப்பிட்டுக் கொண்டிருக்க, மற்றவர்கள் ஓடியாடி விருந்தினரை உபசரித்து கொண்டிருந்தனர். மீராவிற்கு சந்தோஷத்தில் வயிறும் மனமும் நிறைந்துவிட்டது. அவளால் சாப்பிட முடியவில்லை.

மீராவின் கலங்கிய விழிகள் பார்த்த நித்யா பதறி, "என்னாச்சு மீரா? சாப்பாடு ரொம்ப காரமா இருக்கா?" என கேட்க,

மீரா தலையை இடவலமாக ஆட்டி, "உங்களோட சர்ப்ரைஸ்னால சந்தோஷத்தில் எனக்கு கண் கலங்குது..." என்றாள்.

நித்யா புன்னகையுடன், "இது எல்லாமே ஜெயோட ஏற்பாடுதான்.." என்று கூற, மீராவிற்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.

"இதுவும் அவரோட வேலையா?" எனக் கேட்க,

நித்யா, "ஆமா! இதெல்லாம் அவன்தான் செஞ்சான். அவன்தான் கடந்த ஒரு மாசமா மேகலா அம்மா கிட்டயும் குமார் அப்பாகிட்ட பேசி அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சான். அதுவுமில்லாம இன்னொரு முக்கியமான விஷயம்..." என்று நிறுத்த,

மீரா ஒருவித பதட்டத்துடன், "என்ன அது?" என்று கேட்டாள்.

நித்யா, "இப்ப சொல்ல மாட்டேன். வீட்டுக்கு போன உடனே சொல்றேன்..." என்றாள்.

மீரா, "அவ்வளவு நேரம் எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது. இப்பவே சொல்லு.. பிளீஸ்.." என கெஞ்சினாள்.

நித்யா, "சொல்ல மாட்டேன்..." என்று தலையை ஆட்ட, மீரா முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

மீராவின் முகத்தை பார்த்த நித்யா, "சரி சரி... பங்ஷன்ல முகத்தை இப்படி சோகமா வச்சுக்காத... நான் சொல்றேன்.." என்றாள்.

மீரா ஆர்வமாக அவளை பார்க்க, நித்யா, "ஜெய் இவ்வளவு பண்ணி இருக்கான் இல்ல, அதெல்லாம் அவனோட படத்துல இல்ல. குமார் அப்பாவை ஏமாத்துனவங்க மேல கம்ளைண்ட் கொடுத்து அவங்க கிட்ட இருந்து எல்லாத்தையும் வாங்கி கொடுத்துட்டான்... சரி நீ சாப்பிடு நான் வந்தவங்களை கவனிக்கிறேன்..." என்று கூறி சென்று விட்டாள்.

நித்யா கூறியதைக் கேட்ட மீரா, என்ன உணர்ந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை. இவை அனைத்தையும் அவன் தனக்காக தான் செய்தான் என்று நினைக்கும் போது உள்ளுக்குள் ஒரு பரவசம், சந்தோஷம் என்று சொல்ல முடியாத உணர்வுகள் அவளை ஆட்கொண்டது. ஜெய் இவற்றையெல்லாம் அவனுடைய செலவில் செய்தான் என்று கேட்கும்போது மகிழ்ச்சி அடைந்தாள் தான்.

ஆனால் இவற்றை தனது தந்தையின் உரிமைக்காக போராடி, அவரது சொத்தை அவருக்கு மீட்டுக் கொடுத்து, அதில் தான் செய்தான் என நினைக்கும் போது அவளது மகிழ்ச்சி பன் மடங்காகியது.

ஜெய் இவற்றை தனது செலவில்  செய்வதை பெரிய விஷயமல்ல. குமாரின் உரிமையை மீட்டு எடுத்து, இவற்றை செய்தது அவரின் சுயமரியாதையை மீட்டு எடுத்தது போல. குமாரை ஏமாற்றியவர்கள் முன்னே அவரை கௌரவப் படுத்தியுள்ளான்... என நினைக்கையில் உள்ளம் பூரித்தது. அவன் மீது இனம்புரியாத உணர்வு ஊற்றெடுத்தது. அவனைக் காண அவள் மனம் விரும்பியது. கண்கள் அவனை தேடியது. அவள் கண்கள் அவனை தேடி அலை பாய, அவள் தேடலுக்கு சொந்தமானவன் எல்லாருக்கும் புன்னகையுடன் சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருந்தான்.

மீரா இமைக்கவும் மறந்து அவனை பார்த்தாள். அவளின் இந்த பார்வைகள் அவளுக்கே புதிது. இவ்வளவு நாள் அவனை பார்த்த பார்வையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவன் மேல் இனம் கண்டறிய முடியாத உணர்வு புதிதாக தோன்றி இருந்தது. ஜெய்க்கு யாருடைய பார்வையோ தன்னை துளைப்பது  போல தோன்ற, சுற்றுமுற்றும் தேடினான்.

மீரா அவன் பார்வை தன் புறம் திரும்புவது தெரிந்து வேகமாக தலையை குனிந்து கொண்டாள். மீராவை பார்க்கும்போது அவள் சாப்பிடுவது போல பாவ்லா செய்து கொண்டிருந்தாள். அதை பார்த்து ஜெய், மனம் நிறைந்த புன்னகையுடன் தன் வேலையை தொடர்ந்தான். மீராவின் பார்வை அதன்பின் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் அவனை தொடர்ந்து கொண்டிருந்தது. அவனது எதிர்பார்ப்பில்லாத அன்பு கடலில் மூழ்கி தத்தளித்து, அதிலிருந்து மீள மனம் வரவில்லை. அவன் மீது ஒரு ஈர்ப்பு அவளுக்கு உருவானது. அடிக்கடி அவளது கண்கள் அவன் மீது ரசனையுடன் படிந்து மீண்டது.

                                         கரைவாள்...

 


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 98
 

உன் காதலில் நானும் கரைவேனா? 80 (இறுதி பாகம் - 1 )

மீராவால் ஜெய்யிடம் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை. அவனையே ரசித்துக் கொண்டிருந்தாள். அவனின் அபரிமிதமான அன்பை கண்டு வியந்தவள், இமைக்கவும் மறந்து பார்த்தாள்.

மீராவின் கண்களில் தெரிந்த அன்பை பார்த்து, 'ஒரு வழியா மீராவுக்கு பல்ப் எரிஞ்சுடுச்சு..' என நினைத்து நித்யா புன்னகைத்தாள்.

க்ரிஷ் நித்யாவின் புன்னகையை பார்த்து என்னவென கேட்க, நித்யா, "ஒரு வழியா மீராவுக்கு  பல்ப் எரிஞ்சிடுச்சு. அதை பார்த்துதான் சிரிச்சேன்..." என்றாள்.

இதை கேட்டு பக்கத்தில் இருந்த சுரேந்தர் ஹோட்டலை சுற்றி பார்த்துவிட்டு, "எல்லா பல்பும்  கரெக்டா தான எரியுது.." என்றான். சுரேந்திரின் வார்த்தையை கேட்ட இருவருக்கும் புன்னகையில் இதழ் பெரிதாகவே விரிந்தது.

நித்யா க்ரிஷிடம், "இந்த ட்யூப் லைட் எப்போ எரிய போகுதோ?" என அலுத்துக் கொண்டாள்.

க்ரிஷ், "எனக்கும் தெரியல..." என உதட்டை பிதுக்கினான்.

சுரேந்தர் மீண்டும், "டியூப்லைட் நல்லாதான இருக்கு.." என்றான். இருவருக்கும் இப்போது சிரிப்பை அடக்கமுடியவில்லை.. சத்தமாக சிரித்துவிட்டனர்.

நித்யா, "அண்ணா, வாசல்ல ஒரு லைட் எரியலை. இப்பதான் எரிஞ்சுது.." என்றாள். அடக்கப்பட்ட புன்னகையுடன்.

சுரேந்தர், "ஓ... அப்படியா!" என்று கேட்டு விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

நித்யா மீராவிடம் சென்று தொண்டையை செரும, மீராவிடம் அசைவு இல்லை.

நித்யா, "மீரா, போதும்! ஜெய்யை சைட் அடிச்சது.. வேகமாக சாப்பிடு.." என்று கூற,

அவள்‌குரலில் சுயநினைவை அடைந்தவள், "அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. சும்மாதான் பார்த்துட்டு இருந்தேன்.." என்று கூறி தலையை குனிந்து கொண்டாள்.

நித்யா, "அதான் நீ ஆன்னு... அவன பார்த்துட்டு இருந்ததை  நான் பார்த்தேனே! சமாளிக்காத.." என்றாள்.

மீரா, "நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு உளராத..." என்றுவிட்டு சாப்பிடும்படி பாவ்லா செய்தாள்.

நித்யா அவளது குழறிய பேச்சை வைத்தே அவளுக்கு ஜெய்யின் மீது காதல் வந்துவிட்டது என புரிந்து கொண்டவள் புன்னகையுடன், "ஜெய் கிட்ட போய் நீ அவனை சைட் அடிச்சன்னு சொல்றேன்..." என்று கூற,

மீரா பதறிக்கொண்டு, "அப்படி எல்லாம் பண்ணிடாத!" எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே நித்யா ஜெய்யிடம் சென்றுவிட்டாள்.

மீரா, 'ஐயையோ! இவ என்ன சொல்ல போறாளோ?' என பதட்டத்துடன் பார்த்தாள்.

நித்யா ஜெய்யிடம், "என்ன ஜெய், முழுநேர சர்வராகவே மாறிட்ட போலையே!" என்றாள்.
ஜெய் அவளை முறைத்தான்.

நித்யா, "என்னை முறைச்சது போதும். உன் பொண்டாட்டிக்கு ஏதோ வேணுமாம். போய் என்னன்னு கேளு.." என்றாள்.

ஜெய், "இத தான நீ முதல்ல சொல்லி இருக்கணும். அத விட்டுட்டு கதை பேசிட்டு இருக்க... இதோ இப்பவே போறேன்.." என்றவன் மீராவை நோக்கி சென்றான்.

ஜெய் தன்னை நோக்கி வருவதை கவனித்த மீராவிற்கு பயம் தொற்றிக்கொண்டது. இதயம் படபடவென துடித்தது. மருண்ட மான் விழிகளை அலைபாய விட்டுக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

ஜெய் மீராவின் அருகில் வந்து, "என்ன மீரா?" என்க,

மீரா பயத்தில், "அவ சொல்றதை எதையும் நம்பாதீங்க.. நான் சும்மா வேடிக்கைதான் பார்த்துட்டு இருந்தேன்..." என்றாள்.

ஜெய் குழப்பத்துடன், 'என்ன சொல்றா இவ?' என புரியாமல் பார்க்க,

நித்யா மீராவிடம், "நீ கேட்ட சாம்பார் எடுத்துட்டு வந்துட்டேன்.." என்று கூறிவிட்டு ஜெய்யிடம், "நான் மீராவை பார்த்துகிறேன். நீ போய் மத்தவங்கள கவனி.." என்றாள்.
ஜெய் முழித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான். மீரா நித்யாவை முறைத்தாள்.

நித்யா, "என்ன டார்லிங், பயந்துட்டியா?  சும்மா விளையாட்டுக்கு தான் பண்ணேன். நான் அவன்கிட்ட எதுவுமே சொல்லல.." என்றாள். அப்போதுதான் மீராவிற்கு போன உயிர் திரும்பி வந்தது.

நித்யாவின் கலாட்டாவுடன், ஹோட்டல் திறப்பு விழா சிறப்பாக சென்றது. மீராவும் வந்தவர்களை புன்னகையுடன் உபசரித்தாள். அவளது கண்கள் ஜெய்யே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

திறப்பு விழா முடிந்து எல்லா வேலையும் முடித்துவிட்டு அனைவரும் கிளம்பினர். நித்யா வீட்டிலேயே எல்லோரும் தங்கி கொள்வதாக முடிவாயிற்று. அன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது.

மீராவிற்கு தான் இத்தனை நாட்களாக இருந்த கவலை தீர்ந்தது. அவனிடம் எப்படி நன்றி கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை. என்ன பேசுவது என்று பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டாள். ஆனால் சிறு தயக்கம் பயம் அவளிடம் இருந்தது. வெகு நாட்கள் கழித்து எல்லோரும் சந்திப்பதால் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர்.

சதாசிவம் குமரவேலிடம், "ஜெய் தம்பி மாதிரி  ஒரு மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.." என்று கூற,

குமரவேல், "அவர் எங்களுக்கு மருமகன் இல்லை‌, மகன் தான்.‌ எங்களுக்கு ஒரு மகன் இருந்திருந்தா கூட இவ்வளவு செஞ்சு இருப்பானா என்று தெரியல.." என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

எல்லோருக்கும் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி. ராஜனுக்கும் பத்மாவதிக்கும் ஜெய்யை நினைத்து பெருமையாக இருந்தது.

நித்யா, "குமார் அப்பா, ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. இதெல்லாம் அவன் பண்றதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு..." என்றாள்.

ஜெய், 'இதென்ன புது கதையா இருக்கு?' என்று பார்க்க, மற்றவர்களும்  கேள்வியாக  அவளை நோக்கினர்.

நித்யா, "ஜெய் எல்லாத்தையும் மீராவுக்காக தான் பண்றான்..." என்றாள். இதைக்கேட்டு எல்லோரும் புன்னகைக்க, ஜெய்யின் விழிகளும் மீராவின் விழிகளும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டது.

அவன் விழிகளில் இருந்த ஏதோ ஒன்று மீராவை இழுப்பது போல தோன்றியது. அவள் தேடினாள், அவன் கண்களுக்குள் தனக்கான தேடலை தேடினாள். வழக்கம் போல அவள் தேடல் அவனிடமே முடிந்தது. விடையும் கிடைக்கவில்லை.

ஆனால் புதிதாக உள்ளுக்குள் சொல்ல முடியாத குறுகுறுப்பு படபடப்பு. பார்வையை கடினப்பட்டு அவனிடமிருந்து விலகி கொண்டாள். ஜெய் மீராவின் செயலைப் பார்த்து உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான்.

க்ரிஷ், "அப்போ நாங்க நாளைக்கு கிளம்புறோம்..." எனக்கூற,

சதாசிவம், "என்ன மாப்பிளை, வந்து ரெண்டு நாள் கூட தங்கலை..." என கேட்க,

க்ரிஷ் பதில் கூறும் நித்யா முந்திக்கொண்டு, "அப்பா, அவருக்கு ஆபீஸ் வேலை இருக்கு. நாங்க அடுத்த முறை வரும்போது நிறைய நாள் தங்கிட்டு போறோம்..." என்றாள். பெரியவர்கள் அரை மனதுடன் சரி என்றனர்.

ஜெய், "அப்போ நாம எல்லாருக்குமே நாளைக்கு சேர்ந்தே போகலாம்.." என்றான் இதைக் கேட்டதும் மீராவின் முகம் வாடிவிட்டது.  ஜெய்யுடன் தனியே செல்ல அவள் மனம் விரும்பியது.  தனது மன ஓட்டத்தை நினைத்து அவளே திடுக்கிட்டாள்.

நித்யா மீராவின் முகத்தை வைத்து அவளது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு, 'இவனுக்கு எப்ப பல்ப் எரியுமோ?' என புலம்பிக்கொண்டே, "நீங்க ரெண்டு பேரும் ரெண்டு நாள் தங்கிட்டு வாங்க.." என்றாள்.

ஜெய் ஏதோ சொல்ல வர, நித்யா அவனை முறைக்க, அமைதியாகி விட்டான். மீராவிற்கு இது அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது. எவ்வளவு முயன்றும் அவள் முகத்தில் பிரதிபலித்தது.

எல்லோரும் உறங்க செல்ல, மீரா ஜெய்யிடம் எப்படியாவது நன்றி கூறவேண்டும் என நினைத்தாள். ஆனால் வார்த்தைதான் வரவில்லை. அவனிடம் பேச தயக்கம். அவன் முகத்தை பார்த்தாலே ஏதேதோ சொல்ல முடியாத உணர்வு.

அவளது முகத்தைக் கவனித்த ஜெய், "என்ன மீரா, ஏதாவது சொல்லனுமா?" என கேட்க, மீரா வேகமாக ஒன்றுமில்லை என தலையை ஆட்டிவிட்டு, அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள்.

ஜெய், 'எதுக்கு இவ இப்படி நடந்துக்குறா?' என யோசித்து விட்டு படுத்தவன், சிறிது நேரத்தில் அசதியில் உறங்கி போனான்.

மீரா மனதில், 'ஏன் மீரா இப்படி நடந்துக்கிற?' என தன்னைத்தானே திட்டி புலம்பிக்கொண்டு இருந்தாள். மீராவின் கண்களை உறக்கம் தழுவ மறுத்தது. 

ஜெய் உறங்கி இருப்பான் என்ற நம்பிக்கையில் கண்களை மூடிக்கொண்டே திரும்பியவள், ஒற்றைக் கண்ணை திறந்து பார்த்தாள். ஜெய் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.

மீரா தைரியமாகவே கண்களை திறந்து பார்த்தாள். அவனது கண்கள், நாசி, புன்னகை தவழும் இதழ்கள், மீசை என ஒவ்வொன்றாகப் பார்த்தாள். அவனை இதற்கு முன்பும் பார்த்தாள் தான். ஆனால் அது ஆராய்ச்சி பார்வை. இன்று தன் கணவன் என்று உரிமையுடன் கூட ரசனைப் பார்வை பார்த்தாள்.

அவனுக்கும் அவளுக்கும் நிறைய இடைவெளி இருப்பதாக தோன்ற, அவன் தூங்கிவிட்டான் என்ற தைரியத்தில் அவனை நெருங்கி படுத்தாள்.

ஜெய் தூங்கி விட்டான் தான். இருந்தும் அவளுக்குள் ஒரு சிறு படபடப்பு. அவனை முதன்முதலில் நெருக்கத்தில் பார்ப்பதனால். தூங்கும் போது கூட அவன் அவள் கண்ணுக்கு அழகாகத் தான் தெரிந்தான்.

ஜெய்யிடம் சிறு அசைவு தெரிய, மீரா கண்களை மூடிக்கொண்டாள். ஜெய்யின் கைகள் தூக்கக்கலக்கத்தில் தானாகவே அவளை அணைத்துக் கொண்டது. மீராவிற்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது. அவன் திரும்பி வாகாக அவள் தோளில் முகம் புதைத்து கொண்டான்.

அந்த நொடி அவள் உறைந்து விட்டாள். நார்மலாகவே அவளுக்கு சில நொடி தேவைப்பட்டது. அவள் மனம் அவனிடமிருந்து விலக நினைக்கவில்லை.  திடீரென்று ஏற்பட்ட அவனது அருகாமையினால் அசவுகரியமாக உணர்ந்தாள். சிறிது நேரம் கழித்தே உறங்கினாள். நிம்மதியுடன் கூடிய பாதுகாப்பான உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

மறுநாள் காலையில் அவனுக்கு முதலில் விழிப்பு தட்டியது. என்றும் இல்லாமல் இன்று ஏதோ வித்தியாசமாக இருப்பது போல தோன்ற, கண்களை நன்றாக திறந்து பார்த்தான். மீரா அவன் மார்பில் முகம் புதைத்து உறங்கிக்கொண்டிருந்தாள்.  அவனால் இதனை நம்ப கூட முடியவில்லை. தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். வலித்தது உண்மைதான் என உரைத்தது.

அவனுக்கு மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை. அந்த நொடி அவன் வாழ்வில் மிகவும் எதிர்பாராத தருணங்களில் இதுவும் ஒன்று. அவனது மனது மிகவும் ஆசைப்பட்ட தருணம்.  அது நடக்கும் போது அவனுக்கு தலைகால் புரியவில்லை. அவன் விரல்கள் மீராவின் கன்னங்களை ஆசையாக வருட, மீரா தூக்கத்தில் சிணுங்கி விட்டு மீண்டும் அவனுள்ளே புதைந்து படுத்தாள். 

அவனுக்கு அந்த நொடி உலகமே உறைந்து விடக் கூடாதா? என்று தோன்றியது. அவனுக்கு எழவே மனசில்லை. மீரா கண் முழித்து விட்டால், எப்படி ரியாக்ட் பண்ணுவா? என்னு தோன்றவே, மனமில்லாமல் எழுந்து குளிக்க சென்றாள்.

ஜெய் குளிக்கும் போது பாத்ரூமில் கேட்ட தண்ணீர் சத்தத்தில் மீராவும் கண் விழித்து விட்டாள். அவளுக்கு அவன் அணைத்தது நினைவில் வரவே, இதழில் குறுநகை பூத்தது.

அதன் பின் க்ரிஷ் நித்யாவுடன், பெரியவர்களும் சென்னைக்கு கிளம்பினார். 

ஜெய்யும் மீராவும் இரண்டு நாட்கள் இன்பமாக கழித்தனர்.  கண்களால் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் களவாடினர். மீராவிற்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. இவனின் ஒட்டுமொத்த அன்பு எனக்கு மட்டும் என்ற எண்ணம் அவள் வாழ்க்கையை நிறைவு பெறச் செய்வதாக தோன்றியது. அவனின் ஒவ்வொரு செயலிலும் உள்ள காதலை ஆசையாக அனுபவித்தாள்.

ஜெய் மீராவின் மாற்றத்தை கவனித்தான். அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான். நம் அன்பு ஓர் இடத்தில் மதிக்கப்படும் போது, கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. அதனை அவன் அனுபவித்தான். மீராவிற்கு வாழ்க்கை மிகவும் அழகாக விட்டது போல தோன்றியது.

இரண்டு நாட்கள் இருவருக்கும் தங்கள் துணையின் அருகாமையில் இரண்டு நொடி போல கடந்து விட்டது. இருவருக்கும் இன்னும் சிறிது நாட்கள் இருந்துவிட்டு செல்லலாம் என தோன்றியது. மீராவிற்கு அவனிடம் கூற தயக்கம். ஜெய் இதுவரை மீராவிடம் தனக்காக எதுவும் கேட்டதில்லை.  மகிழ்ச்சியாக இருவரும் விடைபெற்று கிளம்பினர்.

குமரவேல் இருவரையும் பேருந்தில் செல்லுமாறு கூறி விட்டதால்,  ஜெய்யும் மீராவும் பெங்களூர் செல்லும் பேருந்தில் அமர்ந்து இருந்தனர்.

அந்த அதிகாலை நேரத்தில் ஜன்னல் வழியே காற்று அடிக்க, மீரா குளிர் தாங்காமல் கைகளை கட்டிக்கொண்டாள்.

ஜெய், "என்ன மீரா, ரொம்ப குளிருதா?" என கேட்க, அவள் ஆமாம் என தலையை ஆட்டினாள்.

ஜெய் தனது ஜாக்கெட்டை கழட்டி அவளிடம் நீட்ட, புன்னகையுடன் வாங்கி அதை அணிந்து கொண்டாள். அவளுக்கு அதில் அவன் வாசம் வீசுவதாக தோன்றியது.  அவளது விரல்கள் தானாக அதை வருடியது. போகும்போது அவன் தோளில் தலை வைத்து படுத்து இருப்பதை பார்த்துவிட்டு பதறி விலகியவளின் மனம், இப்போது அவன் தோளில் சாய்ந்துக் கொள்ள விரும்பியது.

அவளின் எண்ண ஓட்டத்தைப் பார்த்து அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. எத்தனை விநோதமானது இந்த மனம் என்று தோன்றியது. கண்களை மூடி சீட்டில் சாய்ந்தவள் சிறிது நேரத்தில் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். ஜெய் அவள் சாய்வதற்கு வாகாக அமர்ந்து கொண்டான். அவர்களின் இனிமையான பயணம் தொடர்ந்தது.

 
                                   கரைவாள்..

ஹாய் ஃப்ரண்ட்ஸ், இறுதி பாகம் நாளை காலை பதிவிடப்படும். 😍

 

 


ReplyQuote
NIVETHA
(@velavaa)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 138
 

uds super sis 😍 lovely and romantic epi


ReplyQuote
Subha Mathi
(@subhamathi)
Estimable Member Registered
Joined: 2 months ago
Posts: 107
 

Nice sis 😍😍


ReplyQuotePage 12 / 14
Share: