Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

உன் காதலில் நானும் கரைவேனா? - Tamil Novel  

Page 2 / 3
  RSS

Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 21
22/06/2020 6:59 am  

        மீரா பதட்டமாக அமர்ந்து இருந்தாள். அவனை இன்னும் காணவில்லை. எப்போதும் அவன் முன்னாடியே வந்து வெயிட் பண்ணுவான்.  ஆனா இன்னைக்கு நான் அரை மணி நேரமா வெயிட் பண்றேன். இன்னும் அவனை காணோம். வேணும்னே என்ன தவிக்கவிட்றான் என திட்டினாள்.....

     அவன் ஒளிந்து கொண்டு அவள் தவிப்பை ரசித்துக் கொண்டிருந்தான். ஹப்பா எவ்வளவு தவிக்குறா என் மீரா பேபி. உனக்கு என் மேல இவ்வளவு காதலா? இப்படி ஒரு காதலி கிடைக்க நான் என்ன செஞ்சேன்னு தெரியலை என்று நினைத்தவன் சரி போய்விடுவோம். விட்டால்  இவ வீட்டுக்கு கிளம்பி வந்துடுவா என்று அவளிடம் சென்றான். அவன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான்.

       மீரா அவன் முகத்தை பார்த்து என்ன ஆச்சு புஜ்ஜிமா?  மாமா என்ன சொன்னாங்க என்றாள். அவன் பதில் பேசாது போகவே மீராவிற்கு பயம் தொற்றிக்கொண்டது. புஜ்ஜிமா சொல்ல போறியா? இல்லையா? என்றாள். அவன் அப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லல என்றான். மீராவிற்கு இதைக் கேட்டதும் கண்கள் கலங்கியது. கண்ணீர் கன்னத்தை தொட்டு விட்டது. அவன் பதறிக்கொண்டு ஏய் பேபி நான் சும்மா சொன்னேன்.  அப்பா  நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு. நீ எப்படி ரியாக்ட் பன்றேன்னு பாக்கத்தான் அப்படி சொன்னேன், சாரி என்றான். மீரா இதைக் கேட்டதும் ஆனந்த அதிர்ச்சியில் லூசு உனக்கு அறிவே இல்லையா? எதுல விளையாடனும் விவஸ்தையே இல்லை. நான் எவ்வளவு பயந்துட்டேன் போடா என அவனை அடித்தவள் உன் கூட பேச மாட்டேன் என்றாள்.....

    அவன் மீரா பேபி என்ன இப்படி பொசுக்குன்னு போடான்னுட்ட என்றான். ஆமாண்டா அப்படிதான் சொல்லுவேன்டா என்றாள்.  அவன் அவளைப் பார்த்து சிரித்தான். மீரா, சே இப்பதான் பேச மாட்டேன்னு சொன்ன.  திரும்பியும் போய் அவன் கிட்ட பேசுற பாரு. உன்னை பார்த்து நக்கலா அவன் சிரிக்கிறான் என தன்னை தானே கடிந்து கொண்டவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்......

      அவன் ஏன் என் பேபி என்கிட்ட பேச மாட்டாள்.  என் செல்லத்துக்கு என்ன பிரச்சனை என்றான்  மீரா எதுவும் பேசவில்லை. அவன் ம்கூம் இவ இப்படி எல்லாம் பண்ணவழிக்கு வர மாட்ட என நினைத்தவன் சரி உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா விடு. அதோ அந்த வைட் சுடிதார் போட்ட பொண்ணு என்னவே பார்க்குது. நான் போய் அவ கிட்ட பேசுறேன் என்றவன்,  ஹாய் வைட்  சுடி என்றான். மீரா விலுக்கென்று  திரும்பி, டேய் என்னை விட்டுட்டு வேற பொண்ண பார்த்துடுவ நீ?  உன்னை மர்டர் பண்ணி விடுவேன் என்றாள்.  அவன் பார்ரா என் மீரா பேபிக்கு கோவம் எல்லாம் வருது என்றான். மீரா இங்க பாரு புஜ்ஜிமா இனிமே விளையாட்டுக்கு கூட இது மாதிரி பொய் சொல்லாத. நீ இல்லாத வாழ்க்கையை  நினைத்துக்கூட பார்க்க மாட்டேன்  என்ன புரியுதா? என்றாள். அவன் நல்லா புரியுது என்றான். அவள் என்ன புரிஞ்சது? என்றாள். அவன் என் மீரா பேபிக்கு என் மேல எவ்வளவு காதல் என்று கூறி கண் சிமிட்டினான். அவன் கூறிய விதத்தில் மீராவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. மீரா சிரித்து விட்டாள். அவன் அப்பாடா ஒரு வழியா சிரிச்சிட்ட.  இப்பதான் நிம்மதியா இருக்கு . சரி வா நம்ம சந்தோஷத்தை செலிபிரேட் பண்ணுவோம் என அழைத்துச் சென்றான்.......

            ********************

         நித்யா அவன் இதழ் தந்த சுகத்தில் கண்களை மூடிக்கொண்டாள். வெகு நேரம் அவள் அதே நிலையிலிருக்க க்ரிஷ் அவள் காதருகில் சென்று நித்தி இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கப் போற?.  எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று அவளை இறுக்கினான். அவன் பேச்சில் நினைவு வந்தவள் அவனை விலக்கி விட்டு திரும்பி கொண்டாள். அவன் செயலில் நித்தியின் கன்னம் சிவந்து விட்டது. அதை மறைக்க பெரும்பாடு பட்டாள். ஆனால் அவன் அதை பார்த்து விட்டான்.  நித்யா காரிலிருந்து அவனை பார்க்காமல் இறங்கி ஓடிவிட்டாள்......

     வினோத்,  நித்யா என்ன பாஸ் காரிலிருந்து இறங்கி வர? போகும் போது ஸ்கூட்டியில தானே போன என்றான். அவன் கேள்வியில் எல்லோரும் ஆச்சரியமாகவும்  கேள்வியாகவும் அவளை  பார்த்தனர். நித்யா, வினோத் இங்க வாயேன் என்றாள். வினோத் சொல்லும் நித்தி என்றான். நித்யா அவன் தலையில் நறுக்கென்று கொட்டி, ஆபீஸ் வேலையை தவிர மத்த வேலையெல்லாம் கரெக்டா பாரு என்றாள்......

    வினோத் தலையைத் தேய்த்துக் கொண்டே அதான் கொட்டீட்டல்ல.  இப்ப சொல்லு என்றான். நித்யா இவன் விடமாட்டான் போல என்று நினைத்தாள். ப்ரீத்தா சொல்லும் நித்தி என்றாள். தாரிகா ஆமா நித்தி நான் கூட கேக்கணும்னு நினச்சேன். நேற்று கூட சாரோட கார்ல தான் வந்த என்றாள். மற்றவர்கள் இது வேறயா என்றனர்......

    நித்யா அது நான் போகும்போது ஸ்கூட்டில போனேன். அது பஞ்சர் ஆகிடுச்சு.  நான் ஆட்டோக்கு வெயிட் பண்ணும் போது பாஸ் வந்தாரா,  அதனால் எனக்கு லிப்ட் கொடுத்தாரு என்றாள்.  வினோத் அப்போ நேத்து ஏன் பாஸ் கூட போன?  நேத்தும் ஸ்கூட்டி பஞ்ஜரா என்றான். நித்யா விஷம் விஷம் விடுதான்னு பாரு என்று நினைத்தாள்.  வினோத் என்னை கழுவி ஊத்துனது போதும், மேட்டருக்கு வா என்றான்......

     நித்யா அது நேத்து நான் பாஸ் கூட சண்டை போட்டேன்ல.  அதான் என்னை சமாதானப்படுத்த ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிட்டு போனாரு என்றாள். இதை கேட்ட அனைவரும் ஒ...... என்றனர் கோரசாக. வினோத்,  மச்சி என்னை கூட பாஸ் நிறைய தடவை திட்டி இருக்காரு. ஆனா ஒரு தடவை கூட ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிட்டு போனது இல்லையே என்றான். ப்ரீத்தா அவன் தோளில் தட்டி, லூசு உன்னை​ எதுக்கு கூட்டிட்டு போகணும்  நித்யா அவருக்கு ஸ்பெஷல் என்றாள். மற்றவர்கள் அப்படியா என்றனர். நித்யா ஐயோ வச்சு செய்யுதுங்களே என்று நினைத்தாள். நித்யாவின் கன்னம் வீங்கி இருப்பதை அப்போதுதான் கவனித்தாள் ப்ரீத்தா. நித்யா என்ன ஆச்சு ஏன் கன்னம் வீங்கி இருக்கு என்றாள். மற்றவர்கள் பதறி என்ன ஆச்சு என்று கேட்க அவள் முழித்தாள்......

                                      தொடரும்....

ReplyQuote
Riya Ram
(@riya2311)
New Member Registered
Joined: 1 month ago
Posts: 4
22/06/2020 10:59 am  

Intresting

ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 21
27/06/2020 6:24 am  

         வினோத்,  நித்தி சொல்லு. உன்னை யாரு அடிச்சா?  கை விரல் தடம் அப்படியே பதிந்து இருக்கு .  சொல்லு யாருன்னு பதிலுக்கு ரெண்டு கன்னத்தையும்  பழுக்கவிடலாம் என்றான்.....

    இங்கே க்ரிஷ் எனக்கு எப்படி அவமேல  இவ்ளோ லவ் வந்துச்சு? அவ கார்ல அடிபட போகும் போது  உயிரே போனமாதிரி ஒரு உணர்வு . இதுதான் காதலா?  இந்த உணர்வு கூட நல்லா இருக்கு.  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என தனக்கு தானே பேசி கொண்டவன் நித்யாவை அமர வைத்து எல்லோரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க,  ஒரு வேளை அவளது காயத்தை பற்றி தான் கேட்டுட்டு இருக்காங்களோ? என நினைத்தவன் வேகமாக இன்டர்காமில் அவளை அழைத்தான்....

     நித்யா அது என ஆரம்பிக்க அவள் இன்டர்காம் அலறியது.  எடுத்துப் பேசியவள் இதோ வரேன் பாஸ் என்று வைத்தாள். வினோத், இப்போ தப்பிச்சுட்ட. ஆனால் போயிட்டு வந்து தான ஆகனும். நாங்க வெயிட் பண்றோம் என்றான்.....

       நித்யா அவனுடைய கேபினுக்குள் நுழைந்தாள்.  நித்யாவால்  அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. கீழே தரையைப் பார்த்துக் கொண்டே எதுக்கு கூப்பிடீங்க பாஸ் என்றாள். க்ரிஷ் அவள் செய்வதை பார்த்து, என்னை  பார்த்து இவளுக்கு வெட்கமோ என நினைத்தவன் அவளிடம்,  அவங்க உன்னை நிக்க வச்சு என்ன என்கொயரி பண்ணிட்டு இருந்தாங்க?  எனக் கேட்டான்.......

         நித்யா அது என் கன்னத்தில் இருக்க காயம் எப்படி வந்துச்சுன்னு கேட்டாங்க என்றாள். க்ரிஷ்ஷிற்கு  இதைக் கேட்டதும் வருத்தமாக இருந்தது. க்ரிஷ்,  ரொம்ப வலிக்குதா?  நாம வேணா ஹாஸ்பிட்டல் போகலாமா? என்றான். நித்யா அதெல்லாம் ஒன்னும் இல்லை.  ரெண்டு நாள்ல தானே சரியாகிவிடும் என்றாள். க்ரிஷ் அப்புறம் என்ன கேட்டாங்க என்றான்.......

     நித்யா முழித்தாள். க்ரிஷ்,  என்ன முழிக்கிற ? நீ வந்ததில இருந்து பேசினதை நான் பார்த்துட்டுதான் இருந்தேன் என்றான். நித்யா, பாஸ் அது நேத்து நீங்க என்னை சமாதானப்படுத்த ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தீங்களா.  அதான் நீங்க மத்தவங்களுக்கு ஏன் அது மாதிரி வாங்கி தரலை என்று கேட்டாங்க என்றாள்.  அந்த கேள்விக்கு பதில்  சொல்ல வேண்டியது தானே என்று எழுந்து அவளை நோக்கி முன்னேறினான்......

       நித்யா அது என்ன சொல்ல என்று திணறிக் கொண்டே பின்னோக்கி நகர்ந்தவள் சுவற்றில் முட்டி நின்றாள். க்ரிஷ் கைகளை ஊன்றி அவளை சிறை செய்தவன் நீ தான் சொல்லணும் என்றான். நித்யா என்கிட்ட சொல்ல எதுவுமில்லை என்றவளின் இதயம்  தாறுமாறாக துடித்தது. அவனின் நெருக்கம் வயிற்றுக்குள் ஏதோ பிசைவது போன்ற உணர்வை தந்தது. க்ரிஷ் அவள் முகத்தை நோக்கி குனிய நித்யா முகத்தை திருப்பிக் கொண்டாள். அவன் அவள் கூந்தலில் முகம் புதைத்து வாசத்தை உணர்ந்தவன் மிஸஸ்  குரு கிருஷ்ணா ஆகப் போறேன்னு சொல்ல வேண்டியது தானே என்று அவள் இடையை இறுக்கினான். அவள்  அவனை பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள். க்ரிஷ் அவள் இடையின் இறுக்கத்தை கூட்டியவன் ம்ம் சொல்லுடி என்று அவள் காது மடலில் இதழ் பதித்தான். நித்யாவிற்கு வெட்கத்தால் கன்னம் சிவந்து விட்டது.............

        வேகமாக அவனை விலக்கியவள் வெளியே செல்ல முயன்றாள். க்ரிஷ் அவள் கையை பிடித்து நிறுத்தியவன்  ஏய் எனக்கு பதில் சொல்லிட்டு போடி என்றான். நித்தி இதை நீங்களே அவங்ககிட்ட சொல்லுங்க என்றாள். க்ரிஷ் அதுக்கு என்ன சொல்லிட்டா போச்சு என்றவன் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்......

    நித்யா பாஸ் நான் சும்மாதான் சொன்னேன்.  வேணாம் பாஸ் என்றாள். க்ரிஷ் நான் உண்மையத்தான் சொன்னேன் என்றான்.  நித்யா பாஸ் ப்ளீஸ் வேண்டாம் என கெஞ்சினாள்.  அவன் அதை காதில் வாங்காமல் அவளை கூட்டிசென்று அவர்கள் முன் நிறுத்தினான். எல்லோரும் எம்.டி வந்ததனால் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றார்கள். க்ரிஷ்  எல்லோரும் உட்காருங்க என்றவன் காய்ஸ் நீங்க நித்யா கிட்ட ஏதோ கேள்வி கேட்டீங்களா? அந்த கேள்விக்கு என்னை பதில் சொல்ல சொன்னா நித்தி என்று அவளை கோர்த்து விட்டான்......

     எல்லோர் பார்வையும் அவள் மீது திரும்பியது.  அவள் நான் எதுவும் பண்ணலை என்றவாறு முகத்தை வைத்துக் கொண்டாள்.  க்ரிஷ் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் நித்யா கூடிய சீக்கிரமே மிஸஸ் நித்யா குருகிருஷ்ணா ஆகப் போறா ஓகேவா? என்றான்......

      எல்லோரும் நித்யாவிற்கு கங்கிராட்ஸ் சொல்லினர் .  அவனிடமும் கங்கிராட்ஸ் சார் என்றனர். க்ரிஷ் அனைவருக்கும் புன்னகையே பதிலளித்தான். நித்யாதான் பேவேன்று  என்று நின்றிருந்தாள். க்ரிஷ், காய்ஸ் கேரி ஆன் யுவர் ஒர்க்  என்று தன்  கேபினுக்கு சென்றான். எல்லோரும் நித்யாவை பிடித்துக்கொண்டனர்.  ஏன்டி இத நீ உன் வாயில சொல்ல மாட்டியா? என்று கேள்வியால் துளைத்து எடுத்தனர். நித்யா ஏதேதோ கூறி சமாளித்து விட்டாள். பின் அவரவர் வேலையை தொடர்ந்தனர்.......

         எல்லோரும் வேலையை முடித்துக் கிளம்பத் தொடங்கினர். நித்யாவின் ஸ்கூட்டி இன்னும் வரவில்லை . ப்ரீத்தாவிடம் என்ன வீட்ல ட்ராப் பண்றியா? என்றாள். ப்ரீத்தா ம்ம் ஏறுடி ஸ்கூட்டில என்றாள்.  நித்யா ஸ்கூட்டியில் ஏறப் போக க்ரிஷின் கார் அவள் முன் வந்து நின்றது. ப்ரீத்தா சிரித்துக்கொண்டே அதான் உன் பியான்சி வந்துட்டாரே.  நீ அவர் கூடவே போ நான் கிளம்புறேன் என்று ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள். நித்யா காரில் ஏறாமல் நிற்க இப்ப ஏறுறீயா?  இல்ல நான் குண்டு கட்டாக தூக்கி காருக்குள்ள போடவா? என்றான். நித்யா வேகமாக காரில் ஏறினாள் . அவன் சிரித்துக்கொண்டே அந்த பயம் இருக்கட்டும் என்று காரை எடுத்தான்......

             ****************************

              மீரா புஜ்ஜிமா நாம எங்கே போகிறோம்? என கேட்டாள். அவன் ஒரு ஹோட்டலுக்கு போறோம்.  எப்படியும் என் பதில் கேக்குற  ஆர்வத்துல நீ சாப்பிட்டு இருக்க மாட்ட என்றான்.  மீரா எப்படி புஜ்ஜிமா என்ன பத்தி இவ்வளவு கரெக்டா புரிஞ்சு வச்சிருக்க என  கேட்டாள். அவன் என் மீராவை  பத்தி எனக்கு தெரியாம வேறு யாருக்குத் தெரியப் போகுது என்றான். மீரா அவனையே காதலோடு பார்த்தாள்.....

          அவன் என்ன பேபி என்னையே இப்படி பாக்குற? என்றான். மீரா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?,  அவன் எப்படி இருக்கு என்றான் ஆவலாக.  மீரா ம்ம் உன்ன கட்டிப்புடிச்சி அப்படியே...... அவன் அப்படியே என்ன என்றான். மீரா கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு என்றாள்.  அவன் வேகமாக காரை நிறுத்தி கன்னத்தை அவள் அருகில் கொண்டு சென்றவன் ம்ம் கொடுடி என்றான்.........

     மீரா ஆசையாக இருக்குன்னு தான் சொன்னேன். செய்றேன்னு சொல்லலையே ஒழுங்காக காரை எடு என்றாள்.  அவன் சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டு விட்டு இப்போ பேசாமல் போக சொல்றா என்று காரை எடுத்தான் . அவன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு காரை ஓட்டினான். அவளுக்கு அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது......

    மீரா புஜ்ஜிமா என்றாள்.  அவன் என்ன என்றான் காட்டமாக.  மீரா கோவிச்சிக்கிட்டியா?  எனக் கேட்டாள்.அவன் இல்லையே என்றான். மீரா அப்புறம் என் முகத்தை இப்படி வச்சுருக்க? எனக் கேட்டாள்.  அவன் அவள் புறம் திரும்பி அனைத்து பற்களையும் காட்டி  இளித்து விட்டு இது போதுமா? என்றான். மீரா பத்தலையே என்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து இது போதுமா என்றாள்.......

         அவன் அதிர்ச்சியாகி ஏன் இப்படி இன்ப அதிர்ச்சி கொடுக்கிற? என்றான். மீரா சரி சீக்கிரமா காரை ஓட்டு.  எனக்கு ரொம்ப பசிக்குது என்றாள். அவன் காரை வேகமாக ஓட்டி ஒரு ஹோட்டலுக்கு சென்றான். அவர்கள் தேவையானதை  ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் காரில் புறப்பட்டனர் ......

      அவன் நம்ம ஆபீஸ்க்கு போலாமா?  என்றான்.  மீரா இல்ல புஜ்ஜிமா எனக்கு டைம் ஆயிடுச்சு ரெண்டு மணி நேரம் தான் பர்மிஷன் போட்டு இருக்கேன்.  லேட்டா போனா அந்த மேனேஜர் திட்டுவான் என்றாள்.  அவன் கிட்ட இப்படி திட்டு வாங்கிட்டு அங்க எதுக்கு வேலை பார்க்கணும்?  பேசாம நம்ம கம்பெனில எம்டி சீட்டில் வந்து உட்காரு  என்றான். மீரா நான் என்னைக்குமே என் சொந்த காலில் நிற்க ஆசைப்படுகிறேன் என்றாள். அவன் அதுவும் சரிதான். உன் ஆசையில நான் என்னைக்குமே தலையிட மாட்டேன்.என்னோட விருப்பத்தை உன் மேல திணிக்கமாட்டேன்  என்றவன் சரி உன் கம்பெனியிலேயே நான் உன்னை ட்ராப் பண்றேன் என்று அவளை இறக்கிவிட்டு சென்றான்......

                                       தொடரும்....

ReplyQuote
Rudra Devi
(@rudradevi442)
Eminent Member Registered
Joined: 12 months ago
Posts: 24
27/06/2020 7:41 am  

Nice ud sis , waiting for next ud

ReplyQuoteRiya Ram
(@riya2311)
New Member Registered
Joined: 1 month ago
Posts: 4
27/06/2020 9:59 am  

Super ...waiting for next ud

ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 21
29/06/2020 3:52 pm  

      நித்யாவும் க்ரிஷும் காரில் சென்று கொண்டிருந்தனர்.  இருவரும் எதுவும் பேசவில்லை.  நித்யா ஜன்னல் புறம் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். க்ரிஷ்,  நித்தி என்றான்.  அவள் திரும்பாமலே ம்ம் என்றாள்.  க்ரிஷ் திரும்பி என்ன பாரு என்ன பாரு என்க அவள் திரும்பாமலே பரவாயில்லை நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க என்றாள். க்ரிஷ் பொறுமை இழந்து காரை நிறுத்திவிட்டு அவளை தன் புறம் திருப்பியவன் இங்க பாரு.  ஏன் இப்படி இருக்க? நீ நார்மலா இருடி.  அதான் எனக்கு பிடிக்கும் என்றான்.......

     நித்யாவால்  அவனை பார்க்க முடியவில்லை. அவள் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. க்ரிஷ் நித்யாவின் முகத்தை கையில் ஏந்தி என்னை பாரு என்றான்.  அவளால் அந்த பார்வையின் வீச்சை தாங்க முடியவில்லை.  அவன் பார்வை அவள் உயிர் வரை ஊடுருவியது. நித்யா, மறுபடியும் ஜன்னல் பக்கம் திரும்பி நான் நல்லாத்தான் இருக்கேன் என்று குழறிய படி கூறினாள்......

      க்ரிஷ்  சிரித்தபடியே  வண்டியை ஸ்டார்ட் செய்தான்.  அவனின் கார் ஒரு கிளினிக்கின் முன் நின்றது.  நித்யா அவனை கேள்வியாக பார்க்க கிருஷ் வா உன் கன்னத்துல இருக்க காயத்திற்கு ட்ரீட்மென்ட் எடுக்கலாம் என்றான். நித்தி,  இல்லை இது தானாக சரியாகிவிடும்.  இதுக்கு எதுக்கு ஹாஸ்பிடல் என்றாள். க்ரிஷ் அவள் வாயில் கை வைத்து ஷ்ஷ் எதுவும் பேசாதே வா என்று கைபிடித்து அழைத்துச் சென்றான்.....

    டாக்டர் இந்த காயம் எப்படி ஏற்பட்டது? என்றார்.  நித்யா என்ன சொல்வதென்று யோசிக்க, க்ரிஷ் நான்தான் டாக்டர் கோபத்துல அடிச்சுட்டேன் என்றான். டாக்டர் அதிர்ச்சியாகி எனது கோபத்துல அடிச்சுட்டீங்களா? உங்களுக்கு அறிவே இல்லையா? என்று திட்ட நித்யா டாக்டர் என் மேல தான் தப்பு என்றாள். டாக்டர் நீ பேசாம இருமா என்றவர் அவங்க உங்களுக்கு என்ன ரிலேஷன் எனக் கேட்டார். க்ரிஷ் அவ என் ஃபியான்ஸி டாக்டர் என்றான். அவர் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி அடிக்கிறீங்க?  திட்டிக் கொண்டே அவள் காயத்திற்கு மருந்து போட்டுவிட்டார்.     

                  ட்ரீட்மெண்ட் முடிந்து வெளியே வர க்ரிஷ் மறுபடியும் நித்யாவிடம் சாரி கேட்டான்.  நித்யா திரும்பவும் ஆரம்பிக்காதீங்க.  எனக்கு வலிக்கலை. நீங்க என் மேலே இருக்க அக்கறையில் தான் இதை பண்ணுனீங்கன்னு எனக்கு தெரியும் என்றாள். அவனும் சமாதானமாகி காரை எடுத்தான்......

       அவனின் கார் நித்யாவின் பிளாட்டை நெருங்கிக்கொண்டு இருந்தது.  அதற்குள் பிளாட் வர போகுதா? சே  இந்த பயணம் இன்னும் கொஞ்சம் நீள கூடாதா?  என்றிருந்தது அவனுக்கு.....

      கிரிஷ் காரை நித்யாவின் பிளாட்டின் முன் நிறுத்தினான் .  நித்யா, ரொம்ப தேங்க்ஸ் பாஸ் என்று விட்டு இறங்க போக கிருஷ் அவள் கையை பிடித்து இழுத்தான். இறங்க போனவள் சீட்டில் சாய்ந்தாள். க்ரிஷ் அவள் இடையைப் பற்றி அருகில் இழுத்து அவள் கண்ணோடு கண் பார்த்து என்ன எதுவுமே சொல்லாம போற? என கேட்டான். நித்யா என்ன சொல்வதென்று தெரியாமல் பார்த்தாள். க்ரிஷ் கல்யாணம் பண்ணிக்கலாமா? என கேட்டான். நித்யா ம்ம் என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.  க்ரிஷ் சண்டக்காரி வாயை திறந்து சொல்லுடி என்றான். நித்யா ம்ம் பண்ணிக்கலாம் என்றாள்.....

      அவனுக்கு சந்தோஷம் தாளவில்லை.  நித்யாவின் கண்களில் இருந்த அவனின் பார்வை நித்யாவின் உதட்டிற்கு சென்றது.  அவன் அவளின் இதழை நெருங்க நித்யா பதட்டத்தில் கண்களை மூடிக்கொண்டாள். கண்களை மூடியவள் சில நிமிடங்கள் கழித்து கண்களை திறக்க அவன் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். நித்யாவிற்கு வெட்கத்தால் கன்னம் சிவந்து விட்டது. க்ரிஷ் என்ன என்று புருவம் உயர்த்தினான். நித்யா ஒன்றும் இல்லை என்று தலையை ஆட்டியவள் காரில் இருந்து கீழே இறங்கினாள். க்ரிஷ் ஏன்டி என்னை வீட்டுக்கு கூப்பிட மாட்டியா? என கேட்க நித்யா பதறிக்கொண்டு வேண்டாம் என்றாள். க்ரிஷ், நான் சும்மாதான் கேட்டேன். நீ ஏன் இப்படி பதட்டப்படுற? அப்போ ஏதோ இருக்கு.  நான்  கண்டிப்பா வருவேன் என்று காரிலிருந்து இறங்கினான்............

        *************************

        மீரா பதட்டமாக அவன் வீட்டு காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்தாள். கதவை திறந்தவன் என்ன பேபிமா இவ்வளவு சீக்கிரம் என்ன பார்க்க வந்து இருக்க என்றான்.  மீரா தாவிச்சென்று அவனை அணைத்துக் கொண்டாள். அவன் என்ன என் பேபிமாக்கு காலையிலே மூடு வந்துருச்சு என கேட்டவன் அவள் கண்ணீர் தன் மீது விழவே பதறிக் கொண்டு அவளை விலக்கியவன் பேபிமா என்ன ஆச்சு?.  ஏன் அழுகுற என்றான்......

      மீரா நீயும் நானும் பிரிஞ்சு போற மாதிரி எனக்கு ஒரு கனவு வந்தது.  அதுவும் காலையில் 5 மணிக்கு என்றாள். அவன் இவ்வளவுதானா? நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.  இந்த கனவெல்லாம் பலிக்காது.  உன்னையும் என்னையும் யாராலயும் பிரிக்க முடியாது.  இந்த ஜென்மத்துல உனக்கு நான் எனக்கு நீ அவ்வளவு தான் என்ன புரிஞ்சுதா? என்று அவள் கண்ணீரைத் துடைத்தான்......

மீரா எனக்கு பயமாயிருக்கு என்ற அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.  அவன் ஆதரவாக அவள் தலையை வருடியவன் , ஒன்னும் நடக்காது பேபிமா கவலை படாதே என்றான்.  அவள் வெகு நேரமாக அதே நிலையிலே இருந்தாள். அவன் பேபிமா எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறதா ஐடியா என்றான். மீரா என் புஜ்ஜிமாவை நான் எவ்வளவு நேரம் வேணாலும் கட்டி புடிச்சு நிப்பேன் என்றாள். அவன் சிரித்துக்கொண்டே எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லமா.  உன் புஜ்ஜிமா ஓட அப்பா இங்கதான் இருக்கார்,  அவர் கேட்பாரே என்றான்......

         இதை கேட்டதும் மீரா பதறிக் கொண்டு விலகினாள். அவன் என்ன பேபி பயந்துட்டியா?  அப்பா எதோ மீட்டிங் இருக்குன்னு  காலையிலேயே கிளம்பி வெளியே போய்விட்டார் என்றான். மீரா பொறுக்கி,  பொய்யா சொல்ற என அவனை அடித்தவள் சரி சீக்கிரம் கிளம்பு என்றாள். அவன் எங்க பேபி? என்க மீரா கோவிலுக்குப் போய் எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே அவன் முந்திக்கொண்டு கல்யாணம் பண்ணிக்க போறமா? என கேட்டான். மீரா அவன் தலையில் கொட்டி ஆசையை பாரு. கோவிலுக்கு போய் நம்ம ரெண்டு பேரு பேர்லயும் பூஜை பண்ண போறோம் என்றாள்......

   அவன் சரி வா போய் நாம ப்ரஷ்ஷாகிட்டு  வரலாம் என்றாள்.  மீரா நான் எதுக்கு? நீ போய் சீக்கிரம் கிளம்பி வா என்றாள்  அவன் மீரா பேபி வந்து எனக்கு குளிக்க ஹெல்ப் பண்ணு என்றான் சிரிக்காமல். மீரா அவனை முறைத்து புஜ்ஜிமா விளையாடாமல் வேகமா போய் கிளம்பு. எனக்கு டைம் ஆயிடுச்சு என அவனை ரூம்க்குள் தள்ளினாள். அவன் ரெடியாகி வந்ததும் இருவரும் கோவிலுக்கு கிளம்பினர்.......

       மீரா கோவிலில் கடவுளிடம் மனமுருக வேண்டிக்கொண்டாள்.  அவன் பேபி நீ இவ்ளோ ஃபீல் பண்றது பார்த்து எனக்கு கவலையா இருக்கு.  பேசாம எங்க அப்பாவை இன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்து பேச சொல்லவா? என்றான். மீரா வேணாம் புஜ்ஜிமா இன்னும் ரெண்டு மாசத்துல ரஞ்சு வந்துடுவா.  அப்புறம் நம்ம கல்யாணத்த பத்தி பேசலாம் என்றாள். அவனும் சரி இன்னும் ரெண்டு மாசம் தான?  அதுக்கப்புறம் டும் டும் தான் என்றான். மீராவிற்கு அவன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி ஏற்பட்டாலும் மனதின் ஒரு ஓரத்தில் பயம் இருந்து கொண்டேதான் இருந்தது.  அவன் மீராவை அலுவலகத்தில் இறக்கி விட்டு சென்றான்......

        மீராவிற்கு ஏதோ தவறாக நடக்க இருப்பது போலவே உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.  அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை.  அனிதா என்ன ஆச்சு மீரா? ஏன் டல்லா இருக்க? என கேட்க மீரா ஒன்றுமில்லை. லைட்டா தலைவலி என கூறி சமாளித்து விட்டாள். ஒரு வழியாக லஞ்ச் டைமும் வந்தது.  மீராவிற்கு இருந்த மனநிலையில் அரைநாள் அரையுகமாக   கழிந்தது. லஞ்ச் பிரேக்கில்  மீரா லஞ்ச் பாக்ஸில் வைத்திருந்த சாப்பாட்டை வாயில் எடுத்து வைக்கப் போக அவள் மொபைல் அலறியது. புது எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.  அதை பார்த்ததும் மீராவிற்கு ஏதோ உள்ளுணர்வு வந்து பயம் தொற்றிகொண்டது.........

                                      தொடரும்.....

ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 21
02/07/2020 6:36 am  

ஹாய் ப்ரண்ட்ஸ், நிறைய பேர் என் கதைக்கு கமெண்ட் பண்ணிருந்திங்க. ஆனால் நான் அதுக்கெல்லாம் ரிப்ளை பண்ணலை. ஏன்னா இந்த வெப் சைட்டுக்கு நான் புதுசு. எப்படி ரிப்ளை பண்றதுனே தெரியலை. சோ என்னை மண்ணிச்சுடுங்க செல்லங்களா....மீன் பாவம் ல. இனிமேல் எப்படி ரிப்ளை பண்றதுன்னு காத்துட்டு ரிப்ளை பண்றேன் பா...

ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 21
05/07/2020 5:16 am  

           மீரா போனை அட்டெண்ட் செய்து காதில் வைத்து "ஹலோ என்றாள். மறுமுனையில் ஒரு ஆண் குரல் கேட்டது.  ஹலோ நான் வரதராஜன் பேசுறேன் என்றார். மீரா யார் என யோசித்தவள் பிறகு ஞாபகம் வந்து, "சொல்லுங்க அங்கிள்" என்றாள். அவர்," நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். மீட் பண்ணலாமா?". மீரா சற்று யோசித்தவள்," சரிங்க அங்கிள்,  நான் ஆபீஸ் முடிஞ்சு ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பி விடுவேன்.  எங்க மீட் பண்ணலாம்?". வரதராஜன்," க்ரீன்வெல் ஹோட்டலில் மீட் பண்ணலாம்" என்றார். மீரா," சரிங்க அங்கிள்" என்று போனை கட் செய்தாள். மீரா இவர் எதுக்கு தனியா மீட் பண்ணனும் என்று கூறுகிறார்.  என்னவாக இருக்கும் என யோசித்து தலையை பிய்த்துக் கொண்டவள் சரி என்ன என்று போய் விசாரிச்சுக்கலாம் என்று வேலையை பார்த்தாள். நேரம் நாலு முப்பது எனக் காட்ட பர்மிஷன் வாங்கி விட்டு கிளம்பினாள் மீரா......

    மீரா அந்த  ஹோட்டலுக்குள் நுழைய அவர் ஏற்கனவே வந்து காத்திருந்தார். மீரா, " சாரி அங்கிள் கொஞ்சம் லேட்டாயிடுச்சு" என்றாள். அவர்," பரவாயில்லமா. இப்போதான் வந்தேன், உட்காரு" என்று அவளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு ஆர்டர் செய்தார். மீரா அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவரை பார்த்தாள். அவர்," நான் நேரா விஷயத்துக்கு வந்துடுறேன்.  எனக்கு சுத்தி வளச்சு பேச தெரியாது என்றவர் உனக்கு எவ்வளவு வேணும்?" என்றார்.  மீரா," புரியல என்ன சொல்ல வரீங்க?" என்றாள்.......

      வரதராஜன்," என் பையன விட்டுட்டு போக உனக்கு எவ்வளவு பணம் வேணும்?" என்றார்.  மீரா," அங்கிள் என்ன பேசுறீங்க?" என்றாள் கோபமாக.  அவர்," நீ  நடிக்காத எனக்கு தெரியும்.  உங்கள் மாதிரி லோ கிளாஸ் ஆளுங்களுக்கு பணக்கார பசங்களா புடிச்சிட்டா வாழ்க்கை முழுவதும் பணக்கார வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணம்" என்றார். மீரா," அங்கிள் வாய்க்கு வந்ததை பேசாதீங்க.  உங்களுக்கு மட்டும் தான் பேச தெரியும் என்பது போல்  பேசாதீங்க.  எனக்கு பேச தெரியும்" என்றாள். வரதராஜன்," ரொம்ப நல்லவ மாதிரி பேசாத. உன் அம்மா இப்படித்தான் பணக்கார வீட்டு பசங்கள வளைச்சுப் போடனும்னு சொல்லிக் கொடுத்து அனுப்பினாளா?" . மீராவிற்கு கோபம் அதிகமாகியது," தேவை இல்லாம எங்க அம்மாவை பத்தி பேசாதீங்க". அவர்,"உன் குடும்பத்தை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். உங்க அம்மா நடத்தை சரியில்லை என்று தானே உங்க அப்பா உங்க அம்மாவையும் உன்னையும் வீட்டை விட்டு துரத்தி விட்டான்" என்றார். இதைக் கேட்டதும் மீராவின் கண்கள் குளமாகியது......

      மீரா," போதும் நிறுத்துங்க. இதுக்கு மேல பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன்.  இதுவரைக்கும் நீங்க பேசினதெல்லாம் கேட்டதற்கு காரணம் உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து தான். நீங்க என்னை இப்படி பேசின விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சது உங்க முகத்திலேயே முழிக்க மாட்டார்".  வரதராஜன்," எல்லாம் அவனுக்கு தெரியும்.  உன் கேடுகெட்ட குடும்பத்தை பத்தி அவன்கிட்ட சொல்லிட்டேன். அவனுக்கு உன் முகத்தை கூட பார்க்க பிடிக்கலை. அதனாலதான்  என்னை பேச சொல்லி அனுப்பினான்".  மீரா," இல்லை​ நீங்க பொய் சொல்றீங்க.  எனக்கு அவனை பத்தி தெரியும்" என்று கூறியவளின் குரல் உடைந்து இருந்தது.  வரதராஜன்," நீ நம்பவில்லை என்றால்  அவன்கிட்டே போயி பேசு.  அவனே உன்கிட்ட சொல்லுவான் உன்னை பிடிக்கலை என்று".........

    மீரா அழுதுகொண்டே வெளியேறினாள். ஸ்கூட்டி ஓட்டி கொண்டிருந்த அவளின் கண்ணீர்  நிற்கவில்லை. என்னவெல்லாம் பேசிவிட்டார்.  என் அம்மாவை பற்றி பேச அவருக்கு என்ன உரிமை இருக்கு? இதை எல்லாம் அவன் கிட்ட சொல்லனும் என நினைத்தவள் ஒரு வேளை அவனும் என்கிட்ட இந்த மாதிரி பேசினா நான் என்ன பண்ணுவேன்? என நினைக்க கைகள் நடுங்கியது. அவன் இல்லாத வாழ்வை எண்ணி பார்க்க முடியவில்லை. இல்லை எனக்கு தெரியும் அவனை பத்தி. அவன் அப்படி எல்லாம் சொல்ல மாட்டான் என தனக்குதானே தைரியம் சொல்லிக்கொண்டு அவன் ஆபிஸை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.......

       ***************************

        க்ரிஷ் நித்யாவின் வீட்டுக்கு வரேன் என்று சொல்ல அவள் வேகமாக மறுத்தாள். க்ரிஷ்," ஏன் இப்படி பதட்டபடுற? அப்போ எண்ணமோ இருக்கு. கண்டிப்பா நான் வருவேன்" என்றான். நித்யா," பாஸ் உங்களுக்கு டைம் ஆயிடுச்சு" என்றாள். க்ரிஷ்," எனக்கு ஒன்னும்  டைம் ஆகலை.  அதுக்கு மேல எந்த வேலையும் இல்லை.  நான் உன் வீட்டுக்கு வந்துட்டே போறேன்" என காரிலிருந்து இறங்கினான்........

        நித்யாவால்  அவனை வர வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை.  அவனைக் கூட்டிக் கொண்டு லிப்டில் ஏறினாள். நித்யா தன் வீட்டை அடைந்ததும் சாவியை எடுத்து கதவைத் திறக்க முயற்சி செய்து," பாஸ் கதவு திறக்கமாட்டுது பாஸ்.  நீங்க வேணா அடுத்த தடவை வரும் போது வர்றீங்களா?" என கேட்டாள். க்ரிஷ்,"சாவி என்னிடம் கொடு" என வாங்கி அவனே கதவை திறந்தான்.  நித்யா ஹிஹிஹி என இளித்து "உள்ள வாங்க பாஸ்"  என்று அழைத்தாள்.........

     க்ரிஷ் வீட்டைச் சுற்றிப் பார்த்தான்.  இரண்டு பெட் ரூம் ஒரு கிச்சன் சின்ன ஹால் கொண்ட சின்ன வீடு. நித்யா," இருங்க பாஸ் நான் காபி போடுறேன்" என்று கிச்சனுக்கு சென்றாள்.  க்ரிஷ்," அதெல்லாம் வேண்டாம் தண்ணீர் மட்டும் போதும்" என்றான்.  நித்யா," முதல் தடவை வீட்டுக்கு வந்துட்டு எதுவும் சாப்பிடாமல் போறீங்க?" என்று காபி போடச் சென்றாள்.......

       க்ரிஷ் எழுந்து நின்று வீட்டை நோட்டம் விட்டான்.  சுவற்றில் ஒட்டி இருந்த போட்டோவை பார்த்து நீயா? எனக் கேட்டான்.  நித்யா ,"எல்லாமே என் ரூம் மேட் நந்தினியோடது"  என்றவள் அப்போதுதான் டேபிள் மேலிருந்த போட்டோவை பார்த்தாள். நித்யாவிற்கு பகிரென்றது.  அவனுக்கு தெரியாமல் அந்த போட்டோவை டேபிளுக்கு அடியில் தள்ளி விட்டாள். க்ரிஷ்," அப்படியா?  இப்போ அவங்க எங்க?" என்க,  நித்யா, " "அவளுக்கு நிச்சயதார்த்தம்.  அதான் பாஸ் அவ ஊருக்கு போயிட்டா" என்றவள் அப்போதுதான் அவன் முகத்தை பார்த்தாள் கிருஷ் கோபமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.......

       நித்யா என்னாச்சு இவருக்கு இவ்வளவு நேரம் நல்லாத்தான இருந்தாரு என யோசித்தாள். க்ரிஷ், " நித்யா நீ எதுக்கு என்ன வர வேண்டாம்னு சொன்னேன் என்று எனக்கு தெரிந்து விட்டது" என்றான்........

       நித்யா ஐயோ! போட்டோவைப் பார்த்துட்டானா?.  இப்போ என்ன பண்றது என முழித்தவள் அவனிடம் ஏதோ சொல்ல வாயை திறந்தாள். க்ரிஷ்," ஏதும் பேசாத!  என்மேல அவ்வளவு தான் உனக்கு நம்பிக்கையா?  என்ன இப்படி கேவலமாக நினைச்சுட்டியே?" என்று திட்டியபடி வெளியேறப் போனான். நித்யா வேகமாக அவன் கையை பிடித்து நிறுத்தி," இல்ல நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க" என்றாள்.....

    க்ரிஷ்," அப்போ எதுக்கு என்ன வர வேண்டாம் என்று சொன்ன?"என கேட்டான். நித்யா என்னவென்று சொல்வாள். அந்த போட்டோவை பார்க்க விடாமல் தடுப்பதற்காக என எண்ணியவள் பேசாமல் அவனையே பார்த்தாள்...

     க்ரிஷ்," நீ பேசாம இருக்கிறதை பார்த்தா நான் சொன்ன மாதிரி தானே நினைச்சிருக்க?" என்று கோபமாக பேசினான். அவனை தடுப்பதற்கு வழி தெரியாமல் ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டாள். அந்த ஒரு அணைப்பில் அவள் மேல் இருந்த கோபம் போன இடம் தெரியவில்லை. நித்யா," சாரி பாஸ்.  உண்மைக்கே நான் அப்படி நினைக்கவில்லை" என்றாள்.  அவனுக்கு கோபம்  போய் விட்டது. இருந்தாலும் அவன் அவளிடம் சற்று விளையாடலாம் என்று நினைத்தவன்," இப்படி கட்டிப் புடிச்சா என் கோவம் போய்டுமா? . நான் இன்னும் கோவமா தான் இருக்கேன்" என்றான். நித்யா," உங்க கோபம் என்ன பண்ணா போகும் பாஸ்" என்றாள். க்ரிஷ, "ம்ம் எனக்கு கிஸ் கொடு கன்னத்துல" என்றான். நித்தி அவன் பதிலில் முழித்தவள் பின் அவன் விளையாடுகிறான் என புரிந்து உங்களை என்று அடித்தாள். அவள் அடிகளை வாங்கிக் கொண்டு அவளை அணைத்துக் கொண்டான். நித்தியும் அவன் மேல் சுகமாக சாய்ந்து கொண்டாள்......

                                       தொடரும்......

ReplyQuoteJanu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 21
05/07/2020 8:15 am  

@riya2311 thank you ma

ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 21
05/07/2020 8:16 am  

@rudradevi442 thank you ma

ReplyQuote
Page 2 / 3
Share: