Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

உன் காதலில் நானும் கரைவேனா? - Tamil Novel  

Page 4 / 5
  RSS

Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 44
06/09/2020 5:08 pm  

உன் காதலில் நானும் கரைவேனா? 28

 

போன் கால் வர க்ரிஷ் எடுத்து பேசினான். மறுமுனையில் ஒரு ஆண் குரல் கேட்டது. "என்ன க்ரிஷ் என்னையவே நீ பகைச்சுக்கிட்டேல..." என்றான்.

க்ரிஷ், "நீயா! உனக்கு என்ன வேணும்... சீக்கிரம் சொல்லு, எனக்கு வேலை தலைக்கு மேல இருக்கு."

ராகவன், "நான் யாருன்னு காட்ட சொன்னேன்ல நான் காட்டிட்டேன்டா. நான் இப்ப சொல்ல போற விஷயத்தை கேட்டு தலைக்கு மேல இருக்க வேலையெல்லாம் விட்டுட்டு நீ ஓட போற என்றவன், ஆமா உனக்கு இப்பதான் கல்யாணமாச்சு கேள்விப்பட்டேனே..." என்றான்.

இதைக் கேட்டதும் க்ரிஷ்க்கு பகீரென்றது. "நித்யா..." என்று அவன் கூற ராகவ், "உன் வைஃப் பேரு நித்யாவா? அவளை கடத்தும்போது பேர் கேக்க மறந்துட்டேன்" என்றான்.

க்ரிஷ் கோபமாக, "டேய்! என் நித்யாவுக்கு மட்டும் எதுவும் ஆச்சுன்னா ஏன்னை உயிரோடவே விடமாட்டேன்..." என கத்தினான்.

"என்னை​ கொல்றது இருக்கட்டும், நீ ஃபர்ஸ்ட் உன் பொண்டாட்டிய காப்பாத்துடா..." 

கிரிஷ் நித்யாவிற்கு கால் செய்து கொண்டே கார் பார்க்கிங்ற்க்கு ஓடினான். நித்யா காலை எடுக்கவில்லை. அவன் பதட்டத்துடன் காரை வீட்டை நோக்கி ஓடினான். மீண்டும் மீண்டும் நித்யாவிற்கு கால் செய்தான். ரிங் முழுவதுமாக சென்று கால் கட் ஆகியது.

க்ரிஷ் வீட்டிற்கு கால் செய்தான் அவனது பெற்றோரும் கால் அட்டென்ட் செய்யவில்லை. க்ரிஷ்க்கு பயம் கூடிக்கொண்டே போனது. காரை அசுர வேகத்தில் ஓட்டி வீட்டை அடைந்தான். வீட்டிற்கு சென்று பார்த்தான். வீட்டில் யாருமே இல்லை. வாட்ச்மேனிடம் கேட்டதற்கு, "அவர்கள் வெளியே சென்று இருக்காங்க" என்று கூறினார்.

க்ரிஷ், "எங்கு போய் இருக்காங்க என்று தெரியுமா?"

வாட்ச்மேன், "இல்ல சார், தெரியாது..." என்றான்.

க்ரிஷ்க்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. சுரேந்தரிடம் சொல்லி போலீசில் புகார் கொடுக்க சொல்லியவன் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். நேரம் வேறு சென்று கொண்டிருந்தது. எங்கு சென்று தேடுவது என்று தெரியவில்லை... யாரிடம் போய் கேட்பது என யோசித்துக் கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.

நித்யா தான் கதவை திறந்து உள்ளே வந்தாள். கைநிறைய பேக்குடன் வந்தாள். அவளை பார்த்ததுமே க்ரிஷ்க்கு சந்தோஷம் தாளவில்லை. நித்யா 'இவர் எதுக்கு இந்த நேரத்துல வந்து இருக்காரு, ரொம்ப பதட்டமா வேற தெரியுராறே...' என நினைத்தாள்.

கிரிஷ் வேகமாக ஓடிவந்து அவளை அணைத்துக்கொண்டான். "நித்யா உனக்கு ஒன்னும் இல்லையே..." என்று கேட்டான் பதட்டமாக.

"நீங்க ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க? நான் நல்லா தான் இருக்கேன்." 

"ஏன்டி நான் போன் பண்ணப்ப  ஏன் எடுக்கல?" என்றான் கோபமாக.

"நான் மால்ல இருந்தேன். அதான் நீங்க கால் பண்ணும் போது சவுண்ட் கேக்கல."

"அப்போ வெளியே வந்த பிறகு பார்த்து கால் பண்ண மாட்டியா..?" 

"நான் வெளிய  வந்து பார்த்திட்டு உங்க மொபைலுக்கு கால் பண்ணேன். பட் அது சுவிட்ச் ஆப்னு வந்துச்சு." 

க்ரிஷ் வேகமாக தனது மொபைலை எடுத்துப் பார்த்தான். அது சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

"ஆமா பாஸ், நீங்க இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்திருக்கீங்க? பதட்டமா வேற இருக்கீங்க.... ஏதாவது பிரச்சனையா?"

"அதை விடு, அப்புறம் சொல்றேன். அம்மா அப்பா எங்க? இந்த நேரத்துல எங்க போனாங்க?"

"அத்தையும் மாமாவும் கோயிலுக்கு போய் இருக்காங்க. இப்ப வரும்போது தான் பேசினேன், அவங்க வந்துட்டு இருக்காங்களாம்.."

அவன் நித்யாவின் போனை வாங்கி பத்மாவிற்கு கால் செய்தான். மறுமுனையில் பத்மா, "சொல்லு நித்யா.."

"அம்மா, நான் தான் க்ரிஷ் பேசுறேன்.." 

"நீ எதுக்குடா நித்யா போன்ல பேசற..?"

"அம்மா, எங்க இருக்கீங்க?"

"கோவிலுக்கு போயிட்டு வந்துட்டு இருக்கோம்டா..."

"சரி சீக்கிரம் வாங்க, வீட்டுக்கு வந்த பிறகு பேசிக்கலாம்" என்றான்.

நித்யா, "பாஸ் என்ன பிரச்சனை என்று கேட்கிறேன், பதில் சொல்ல மாட்றீங்க..."

"சொல்றேன், முதல்ல எனக்கு ஒரு காபி போட்டு தறீயா? தலை வலிக்குது."

"இதோ கொண்டுவரேன்..." என்று கிச்சனுக்கு சென்றாள்.

க்ரிஷ் நித்யா போனிலிருந்து சுரேந்தர்க்கு கால் செய்தான். சுரேந்தர், "மச்சான் நான் கமிஷனர்க்கிட்ட பேசிட்டேன், கவலைப்படாதடா, தங்கச்சிக்கு எதுவும் ஆகாது" என்றான்.

"மச்சான் அவளுக்கு ஒன்னும் இல்ல, வீட்டுக்கு வந்துட்டாடா.  மாலுக்கு போயிருந்தாளாம்டா..."

"மச்சான், அப்போ அந்த கால்.."

கிரிஷ், "அது அவன் என்னை மிரட்டி இருக்கான்னு நினைக்கிறேன். இருந்தாலும் அவனை ஏதாவது பண்ணனும்டா.."

"நீ கவலைப்படாதடா, அவனை வாட்ச் பண்றதுக்கு ஒரு ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கேன். ஏதாவது ஆதாரம் அவனுக்கு எதிராக மட்டடும், அவனுக்கு இருக்கு.." 

"கொஞ்ச நேரத்துல என்னை பதறவச்சுட்டான்டா...  இனிமேல் நித்யாவையும் அம்மா அப்பாவையும் தனியாக எங்கேயும் அனுப்பக் கூடாது. அவங்க பாதுகாப்புக்கு யாராவது ஏற்பாடு பண்ணனும்..."

சுரேந்தர், "எனக்கு தெரிஞ்ச யாரையாவது நான் ஏற்பாடு பண்றேன். நீ பயப்படாதே!" என்று போனை வைத்தான்.

நித்யா காபியை எடுத்து வந்து க்ரிஷிடம் கொடுத்தாள். க்ரிஷ், "தேங்க்ஸ்.." என்று புன்னகையுடன் காபியை வாங்கினான். அவன் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தவள், "சொல்லுங்க.. என்ன விஷயம்?" என்றாள்.

க்ரிஷ் நடந்த அனைத்தையும் கூறினான். பின் "நித்தி நல்லா கேட்டுக்கோ.. எனக்கு பிசினஸ்ல எதிரிங்க ரொம்ப அதிகம். இனிமே நீ ரொம்ப பாதுகாப்பா இருக்கணும். எங்கேயும் தனியா போக கூடாது. எங்க போனாலும் என் கிட்ட சொல்லிட்டு தான் போகணும்.." என அரை மணி நேரத்திற்கு வகுப்பு எடுத்தான். நித்யா எல்லாவற்றிக்கும் சரி என்று தலையை ஆட்டினாள்.

க்ரிஷ், "நித்தி தலையத் தலைய ஆட்டி விட்டு உன் விளையாட்டுத் தனத்தை எல்லாம் இதுல காட்டக் கூடாது. இது சீரியஸான விஷயம்." 

"பாஸ், நீங்க இவ்வளவு சொல்லவேண்டிய அவசியமே இல்ல, நான் இனிமேல் உங்க கிட்ட சொல்லாம எங்கேயுமே போக மாட்டேன். நீங்க இதப் பத்தி யோசிக்காம உங்க வேலைய பாருங்க.. என்றவள் ஆமா பாஸ், ஒரு கவர்மெண்ட் டெண்டருக்கு மீட்டிங் போனீங்களே... என்ன ஆச்சு?"

"இந்த பிரச்சனைல அந்த சந்தோஷமான விஷயத்தை மறந்துவிட்டேன். அந்த கான்ட்ராக்ட் நமக்குத்தான் கிடைச்சு இருக்கு."

இதைக் கேட்டதும் நித்யா, "வாவ்! என துள்ளி குதித்தாள். "எனக்கு என்ன ட்ரீட் தர போறீங்க?" என்றாள்.

"ட்ரீட்  தான தந்துட்டா போச்சு.." எனக்கூறி மர்மமாக சிரிக்க நித்யா மைண்ட் வாய்ஸில் "ஆஹா... நித்யா! அவர் சிரிப்பே சரியில்லை...' என நினைத்து எஸ்கேப் ஆகிடுவோம் என எழுந்தாள். 

"என்ன நித்யா, ட்ரீட் கேட்ட.. வாங்காமல் போற.." என அவளை நெருங்க நித்யா பயத்தில் பின் வாங்கினாள்.

க்ரிஷ், "எங்க போற.." என அவள் கையை பிடித்து நிறுத்தினான். நித்யா "கடவுளே! காப்பாத்து காப்பாத்து..." என வாய்க்குள்ளே முனங்கி கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள். க்ரிஸ் சிரித்துக்கொண்டே அவளை நெருங்க, யாரோ வரும் அரவம் கேட்டு வேகமாக விலகினான்.

க்ரிஷின் பெற்றோர் வந்துவிட்டனர். க்ரிஷ் அவர்களைப் பார்த்து விட்டு சோபாவில் அமர்ந்து கொண்டான். நித்யா இன்னும் அதே நிலையிலேயே கண்ணை மூடியபடியே கடவுளை அழைத்து கொண்டு இருந்தாள்.

பத்மா அவளைப் பார்த்து விட்டு ஹாலில் நின்று என்ன பண்ணிட்டு இருக்கா என்று நினைத்துவிட்டு, "நித்யா என்ன பண்ற?" என்று அவனை உலுக்கினார்.

திடீரென்று பத்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள். பத்மா, "உன்னைத்தான் கேட்கிறேன், இங்க என்ன பண்ணுற?" என்றார்.

நித்யா என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள். க்ரிஷ் அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். நித்யா என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் அத்தை, "நான் உங்களுக்கு காபி கொண்டுவரேன்..." என ஓடி விட்டாள். அவளது சமாளிபிகேஷனை பார்த்து அவன் வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

க்ரிஷின் பெற்றோர் என்ன நடந்ததது என்று விசாரிக்க அவன் எல்லாவற்றையும் அவர்களிடம் கூறி நித்யாவிற்கு கூறிய அனைத்து அறிவுரைகளையும் அவர்களிடம் கூறி ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னான்.

*******************************

சுஜாதாவும் சதாசிவம் குளித்துவிட்டு சாப்பாடு எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். அங்கே மருத்துவமனையில் ரஞ்சுவின் அருகில் கடவுளிடம் வேண்டிக் கொண்ட அமர்ந்திருந்தார் மேகலா.  ரஞ்சுவின் கருவிழியில் அசைவு தெரிந்தது. கைகளிலும் அசைவு தெரிந்தது. அதை பார்த்த மேகலா ஒருபுறம்பயம் வந்தாலும், எப்படி இருந்தாலும் சமாளித்து தான் ஆக வேண்டும் என நினைத்தவர் அவளை எதிர்கொள்ள தயாரானார்.

சில நிமிடங்களில் அவளுக்கு விழிப்பு தட்டியது. கண் விழித்ததும் பழையபடி கத்த ஆரம்பித்து விட்டாள். "என்னை​ எதுக்கு காப்பாற்றினீங்க...? எனக்கு வாழவே பிடிக்கல.... நான் சாகனும்" என்று கத்திக்கொண்டு இருந்தாள்.

மேகலா, "நித்யா அமைதியா இருடா...  என பொறுமையாக எடுத்துக் கூறியவர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அவளின் கன்னத்தில் அறைந்து விட்டார். இதனை எதிர்பார்க்காத ரஞ்சு மேகலாவை அதிர்ச்சியாக பார்த்தாள்.

மேகலா, "சொல்லிக்கிட்டே இருக்கேன் கேட்கவே மாட்ற... மீரா நம்மளை விட்டு போய் விட்டா தான், இல்லன்னு சொல்லல. அவளுக்கு ஆயுசும் முடிஞ்சுருச்சு. அதான் போய்ட்டா...  எல்லோரும் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு போய் தான் ஆகணும். அவளுக்கு சீக்கிரமே விதி முடிஞ்சிடுச்சு, போயிட்டா... அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? நீயும் அவ கூட சேர்ந்து போவேன் என்று அடம் பிடிப்பியா...? அப்போ உன்னையே நம்பி உனக்காக வாழ்ற அப்பா அம்மாவுக்கு  என்ன பதில்?

மீரா உன்ன விட்டு போனப்ப உனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சோ அது மாதிரி தானே நீ எங்களை விட்டு போனா எங்களுக்கும் இருக்கும்.  இதுக்கு மேலயும் நீ வாழ பிடிக்கல, சாகப் போறேன்னு சொல்லிட்டு இருந்த எங்களை உயிரோட பார்க்க முடியாது. நீ இல்லாம எங்களுக்கு வாழ்க்கையில் என்ன இருக்கு? நாங்களும் செத்துப் போயிடுறோம். எங்க பொணத்தை பார்த்துட்டு நீயும் சாகு..." என்றார்.

அவர் பேசுவதைக் கேட்க கேட்க ரஞ்சுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மேகலாவை அணைத்துக் கொண்டாள். மேகலா அவள் கன்னத்தை தடவி, "ரொம்ப வலிக்குதாடா..?  நீ நான் சொல்ல சொல்ல கேட்காததால் அதான் அடிச்சிட்டேன். ஏற்கனவே  மீராவை இழந்துட்டு அந்த இழப்பை தாங்க முடியாமல் வேதனையில் இருக்கேன். இப்போ நீயும் இப்படி பேசினா எனக்கு எப்படி இருக்கும்..." என்றார். அவள் எதுவும் பேசவில்லை மௌனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தாள்.

சிறுது நேரத்தில் சுஜாதாவும் சதாசிவமும் வந்துவிட்டனர்  ரஞ்சனா அமைதியாக இருப்பதைப் பார்த்த சுஜாதா, "மேகலா என்ன ஆச்சு?"

மேகலா, "ஒன்னும் இல்ல, அப்புறம் சொல்கிறேன் என்றவர் பாப்பாவுக்கு பசிக்கும், சாப்பாடு எடுத்து வை" என்றார்.

சுஜாதா  சாப்பாட்டை எடுத்துக் கொடுக்க மேகலா ரஞ்சுவிற்கு ஊட்டி விட்டார். ரஞ்சனா எதுவும் பேசாமல்  உணவை உண்டாள். பின் மேகலா மாத்திரையை எடுத்துக் கொடுக்க அதை வாங்கி சாப்பிட்டாள். மாத்திரையின் வீரியத்தில் கொஞ்ச நேரத்தில் உறங்கி விட்டாள்.

சுஜாதா அவள் உறங்கியதும், "மேகலா என்ன ஆச்சு? இவ்வளவு நேரம் கத்தீகிட்டு இருந்தா... இப்போ அமைதியா இருக்கா எதுவும் சொல்லாம சாப்பிட்டு தூங்கி விட்டா.." என்றார்.

சதாசிவத்திற்கும் மனதில் இதே கேள்வி இருவரும் வரும்போதே அவளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயத்துடன் வந்தனர். மேகலா நடந்தவற்றை கூறினார்

சுஜாதா, "மேகலா, அவ உன் பேச்சை மட்டும் தானே கேக்குறா. நீ தான் அவளை எப்படியாவது இதிலிருந்து வெளியே கொண்டு வரணும்" என்றார்.

மேகலா, "கவலைப்படாத! அவ பழைய மாதிரி நம்ம கிட்ட திரும்பி வந்துடுவா..." என ஆறுதல் கூறினார்.

மேகலாவும் மனதில் 'என் பொண்ண எப்படியாவது எங்களுக்கு பழைய மாதிரி திருப்பி கொடுத்து கடவுளே!' என்று வேண்டிக்கொண்டார்.

                                      கரைவாள்.....

  •  

 

 


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 44
07/09/2020 6:10 pm  

உன் காதலில் நானும் கரைவேனா? 29

 

க்ரிஷ் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். நித்யா அமர்ந்து அவனை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தாள. க்ரிஷ் கண்ணாடி முன், தயாராகிக்கொண்டே, "ஏய் சண்டக்கோழி என்ன என்னை சைட் அடிக்கிறியா?" என்றான். நித்யா அவசரமாக இல்லை என மறுத்தாள்.

க்ரிஷ், "பொய் சொல்லாதடி, நீ என்னை கண்ணை மூடாமல் பார்த்துட்டு இருந்ததை கண்ணாடி வழியே நான் பார்த்து விட்டேன்" என்றான்.

நித்யா, "இது சரிப்பட்டு வராது. நான் இங்கே இருந்தா நீங்க என்ன வம்பு இழுத்துக் கொண்டே இருப்பீங்க. உங்களுக்கு ஆபிஸ் டைம் ஆகிவிடும், நான் கீழ போறேன்" என்று ஓடி விட்டாள். க்ரிஷ் சிரித்துக்கொண்டே ரெடியாகிக் கொண்டிருந்தான்.

அவன் ரெடியாகி கீழே வர நித்யா சாப்பாட்டை பரிமாறினாள். சாப்பாட்டை வாயில் வைத்தவுடன் முகம் மாறியது. நித்யா அதை கவனித்து விட்டு, "என்ன ஆச்சு? ஏன் உங்க முகம் ஒரு மாதிரி ஆகிடுச்சு?" என்றாள்.

க்ரிஷ், "ஒன்றும் இல்லை.." என்று கூறி மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான். ஆனால் அவனால் சாப்பிட முடியவில்லை எழுந்து வாஷ்பேஷனை நோக்கி ஓடினான். வாயில் இருந்ததை துப்பிவிட்டு வாயை கழுவினான்.

எல்லோரும் என்ன ஆயிற்று என்று பார்க்க க்ரிஷ் தண்ணீரை எடுத்து வேகமாக பருகினான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. எல்லோரும் பதறி என்னவென்று கேட்க, "யாரு இன்னைக்கு சமைச்சது?" என்று கேட்டான்.

பத்மா, "நான்தான் சமைச்சேன், ஏன்டா?" என கேட்க,

க்ரிஷ், "அம்மா, சாப்பாட்டை வாயில் வைக்க முடியலை, உப்பும் காரமும் ரொம்ப அதிகமா இருந்துச்சு" என்றான்.

க்ரிஷின் தந்தை, "இல்லையே! நான் சாப்பிட்டேன், எல்லாம் கரெக்டா தான் இருந்திச்சு" என்றார்.

பத்மா, "ஆமாடா, நான் கூட சாப்பிட்டேன்" என்றார்.

க்ரிஷ், "அப்போ நா பொய் சொல்றைனா?" என்றவன், "இந்தாங்க, நீங்களே சாப்பிட்டு பாருங்க" என்றான். யாராலும் அந்த சாப்பாட்டை வாயில் வைக்க முடியவில்லை. அதில் அவ்வளவு காரம், உப்பு இருந்தது.

பத்மா, "எப்படி இவ்வளவு காரம் வந்துச்சு? நாங்க சாப்பிடும்போது நல்லா தானே இருந்தது" என்றவர், சமையலுக்கு உதவிக்கு வரும் சுமதியை அழைத்தார்.

தோட்டத்தில் வேலை பார்த்துக்
கொண்டிருந்த சுமதி, "சொல்லுங்க அம்மா.." என்று வந்து நின்றார்.

பத்மா, "சாப்பாட்டுல எப்படி உப்பு காரம் எல்லாம் அதிகமாயிடுச்சு?" என கேட்க. சுமதி, "அம்மா, எனக்கு எதுவும் தெரியாதுமா. நித்யாமா தான் கிச்சனுக்குள்ள போனாங்க" என்றாள்.

எல்லோரும் நித்யாவை திரும்பிப் பார்க்க நித்யா முகத்தில் பதட்டமாக, "நான் எதுவும் பண்ணல" என்றாள்.

க்ரிஷின் தந்தை, "பத்மா, நீ கிச்சன்ல இருந்து வந்ததற்கு பிறகு யார் கிச்சனுக்கு போனது?" என கேட்டார்.

பத்மா, "நான் உங்களுக்கு சாப்பாடு பரிமாறி விட்டு எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு வந்துட்டேன். அப்புறம் நித்யா மட்டும்தான் கிச்சனுக்கு உள்ள போனா" என்றார்.

க்ரிஷ் நித்யாவை பார்க்க நித்யாவின் கண்கள் கலங்கிவிட்டது. "நான் எதுவும் பண்ணலை​" என்றாள்.

க்ரிஷ்க்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பத்மா, "நம்ம ரெண்டு பேர் மட்டும்தான் கிச்சனுக்குப் போனோம்.நீ பண்ணல என்றால் நான் பண்ணினேனா?" எனக் கேட்டார்.

நித்யா, "ஐயோ! அத்தை, நான் அப்படி சொல்லல" என்றாள்.

க்ரிஷ் இது பெரிய சண்டையாகாமல் தடுப்பதற்காக, "சரி இந்த பிரச்சனை இதோட முடிச்சிடுங்க. யார் இதை பண்ணா என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டாம், யாரும் இதைப்பற்றி பேச வேண்டாம்" என்று முடித்து விட்டான். அதற்கு மேல் யாரும் எதுவும் பேசவில்லை. எல்லோர் மனதிலும் யார் இதைச் செய்திருப்பா என்ற கேள்வியே ஓடிக்கொண்டிருந்தது.

நித்யா கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு ரூமிற்கு சென்று விட்டாள். க்ரிஷ், "அம்மா எனக்கு உங்க மேலயும் நம்பிக்கை இருக்கு. அவ மேலயும் நம்பிக்கை இருக்கு. நீங்க போட்டு மனச குழப்பிக்காதீங்க" என்றவன் அவளை சமாதானப் படுத்துவதற்காக மேலே ரூமுக்கு சென்றான்.

நித்யா அழுது கொண்டிருந்தாள். க்ரிஷ் நித்யா என்று அழைத்தான். அவளிடம் பதிலில்லை. மீண்டும் அழைக்கவும் அவளிடம் பதிலில்லை.

கிரிஷ் அவள் முகத்தை தன் புறம் திருப்பி, "நித்யா, நான் சொல்றதை கேளு" என்றான். நித்யா, "கேவிக் கொண்டே, "சத்தியமா நான் எதுவும் பண்ணல" என்றாள்.

க்ரிஷ், "நித்யா, நான் சொன்னேனா இப்ப நீ தான் பண்ணினேன் என்று? எதுக்கு தேவை இல்லாம பேசுற, எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு" என்றான்.

நித்யா, "அத்தை சொல்றது சரிதானே! கிச்சனுக்குள்ள நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் போனோம். இது அத்தை பண்ணல என்றால் அப்போ நான் தான் பண்ணி இருக்கேன்னு அர்த்தம்" என்றாள்.

க்ரிஷ், "லூசு மாதிரி பேசாத! எனக்கு உன்னை பத்தியும் தெரியும் அம்மாவைப் பற்றியும் தெரியும். நீங்க ரெண்டு பேருமே இதை பண்ணி இருக்க மாட்டீங்க. நீ முதல்ல அழுகிறதை நிப்பாட்டு" என்றான்.

நித்யா கண்ணை துடைத்துவிட்டு, "நாங்க ரெண்டு பேருமே செய்யலன்னா, அப்போ இத யாரு செஞ்சுருப்பா?" என்றாள்.

க்ரிஷ், "நித்தி, அதைப் பத்தி பேசாத, லீவ் திஸ் டாபிக். அதப்பத்தி பேசினா பிரச்சனை தான் வரும், நான் கிளம்புற நேரத்துல நீ இப்படி அழுது வடிந்து கிட்டு இருந்தா நான் எப்படி நிம்மதியாக ஆபீஸ் போவேன்? புது காண்ட்ராக்ட் வேலை வேற ஸ்டார்ட் பண்ணனும்" என்றான்.

இதைக்கேட்ட நித்யா முகத்தை அழுந்த துடைத்து விட்டு, "நான் அழுகலை, ஆபீஸ் கிளம்புங்க, போய் உங்க வேலைய பாருங்க. நான் நல்லாத்தான் இருக்கேன்" என கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

க்ரிஷ் ஆபீஸ் சென்று விட்டாலும் மனம் முழுவதும் வீட்டைச் சுற்றியே இருந்தது. இதை யாரு செய்திருப்பா? எனக்கு ரெண்டு பேர் மேலயும் நம்பிக்கை இருக்கு. சுமதி அக்கா ரொம்ப நாளா வேலை பார்க்குறாங்க, இதுவரைக்கும் இப்படி எதுவும் நடந்தது இல்லையே! என்று மனதை போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான்.

பத்மாவிற்கு நித்யாவின் கண்கள் கலங்கியதை பார்த்து வருத்தமாக இருந்தது. இதை நானும் செய்யவில்லை அவளும் செய்யவில்லை என யோசித்தவர் எதுவாக இருந்தாலும் என்ன வீட்டுக்கு வந்த மருமகள் வந்த கொஞ்ச நாளில் கண்கலங்க வைத்து விட்டோமோ..? என்று தோன்ற நித்யாவிடம் பேசுவதற்காக அவள் அறைக்குச் சென்றார்.

நித்யா சோகமாக அமர்ந்து இருந்தாள் பத்மாவை பார்த்ததும் வேகமாக எழுந்தவள், "வாங்கா அத்தை" என்றவள் பத்மா பேசும் முன், "அத்தை, நான் எதுவும் பண்ணலை​" என்றாள்.

பத்மா, "நித்யா, இனிமேல் அதைப்பற்றி பேச வேண்டாம். இதை யாரோ பண்ணிட்டாங்கன்னு நினைத்துக் கொள்வோம். வீட்டுக்கு வந்த மருமகள் வந்த மூணாவது நாளே கண் கலங்க வைச்சுட்டோம்னு என்று வருத்தமா இருக்கு. குடும்பம்னா ஆயிரம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும், எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்கக் கூடாது" என்றார்.

நித்யா, "சரிங்க அத்தை..." என்றாள். பத்மா, "சரி போய் முகத்தை கழுவிட்டு வா, மதியத்துக்கு சமைக்கிற வேலையை பார்ப்போம்" என்றார்.

நித்யா ப்ரெஷாகி வர இருவரும் பேசிக்கொண்டே சமையலை முடித்தனர். நித்யா கொஞ்சம் சகஜ நிலைக்கு மாறி இருந்தாள். இருவரும் சமையலை முடித்துவிட்டு இருவரும் பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.

காலிங் பெல் அடிக்க, நித்யா கதவை திறக்க, ஒர் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்றிருந்தார். பட்டு புடவை கட்டி நிறைய நகைகள் அணிந்து இருந்தார். நித்யா யார் என்று பார்த்தாள்.

பத்மா, "யாரு வந்து இருக்கது?" என்க,
அவள், "தெரியல அத்தை..." என்று குரல் கொடுக்க பத்மா வந்து பார்த்தார்.

*************************

இரண்டு நாட்களாக ரஞ்சு மருத்துவமனையிலேயே இருந்தாள். எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை, யாரிடமும் பேசவில்லை. சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவாள், மற்ற நேரங்களில் சுவற்றை வெறிப்பாள். பின்பு உறங்கி விடுவாள்.

ரஞ்சனாவின் பெற்றோருக்கு அவள் அமைதியாக இருக்கிறாள் என்று நிம்மதியாக இருந்தாலும் அவள் இப்படியே இருந்து விடுவாளோ..? என்ற பயம் அதிகமாக இருந்தது.

டாக்டர் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்தார். சதாசிவம், "டாக்டர், இப்போ ரஞ்சு குணமாகிட்டாளா? அவளை நாங்க டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?" என கேட்டார்.

டாக்டர், "இருங்க, அவங்கள செக் பண்ணிட்டு சொல்றேன்" என்றார். டாக்டர் ரஞ்சனாவின் கையை பார்த்து விட்டு அவளிடம் பேசினார். "இப்போ உங்களுக்கு வலிக்குதா..?" என கேட்க அவள் இல்லை என்று தலையாட்டினாள். "வேறு எதுவும் ப்ராப்ளம் இருக்கா?" என்க அதற்கும் இல்லை என தலையை ஆட்டினாள். வாயை திறந்து பேசவில்லை.

டாக்டர், "சதாசிவம், இப்போ அவங்க குணம் ஆகிட்டாங்க. நாளைக்கு கைல இருக கட்டைபிரித்த உடனே டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்" என்றார்.

சதாசிவம், "டாக்டர், அப்புறம் அந்த சைக்கார்டிஸ்ட் விஷயம்..." என்க,

டாக்டர், "இப்போ எப்படி பிகேவ் பண்றாங்க? வைலன்டா நடந்துக்கிறாங்களா? கத்துறாங்களா...?" என கேட்க,

சதாசிவம், "இல்லை டாக்டர், ரெண்டு நாளா அமைதியா தான் இருக்கா. யாருகிட்டயும் பேசுறது இல்ல, சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவா, அப்புறம் தூங்கிடுறா" என்றார்.

டாக்டர், "அப்போ அவங்க சைகார்டிஸ்ட் கிட்ட போகத் தேவையில்லை. அவங்களே கொஞ்ச நாளில் சரியாகி விடுவாங்க. அப்போ அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தான் அவங்க அப்படி நடந்து இருக்காங்க" என்றார்.

சதாசிவம், "டாக்டர் அவ இப்படி இருக்கிறதுதான் எனக்கு பயமே. இவ எப்பவும் கலகலப்பாக பேசிட்டு இருந்த பொண்ணு... இப்படியே அமைதியா யார்கிட்டயும் ஏய் பேசாம போய்விடுவாளோ..? என்று பயமாக இருக்கு" என்றார்.

டாக்டர் "சதாசிவம், உங்க பயம் தேவை இல்லாதது. அவங்க நடந்த தூக்கத்தில் இருந்து மீள கொஞ்ச நாட்கள் தேவைப்படுது நீங்க அவங்களுக்கு கொஞ்சமாவது டைம் கொடுங்க. நாள் போகப் போக அவங்க பழையபடி மாறிடுவாங்க" என்றார்.

சதாசிவம், "நீங்க பேசுறது மனதுக்கு ஆறுதலாக இருக்கு" என்றார். டாக்டர் ஒரு புன்னகையுடன் கடந்து விட்டார்.

மறுநாள் ரஞ்சுவின் கை கட்டு பிரிக்கப்பட்டது. டிஸ்ஜார்ஜ் ப்ராசஸ் எல்லாம் முடிய அவளை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். வீட்டிற்கு சென்றதும் மேகலா திருஷ்டி கழித்து அவளை உள்ளே அழைத்தார்.

அவள் எதுவும் பேசாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். ரஞ்சுவின் பெற்றோர் பதைபதைப்புடன் இருந்தனர். மருத்துவமனையில் அமைதியாக இருந்தவள் வீட்டிற்கு வந்து ஏதாவது கலாட்டா பண்ணி விடுவாளோ என்று... ஆனால் அவள் அவ்வாறு எதுவும் செய்யவில்லை. மேகலா பால் காய்ச்சிக் கொண்டுவந்து கொடுக்க அதை வாங்கி குடித்தாள்.

மேகலா, "பாப்பா, ரூம்ல போய் ரெஸ்ட் எடுத்துக்குறீயா?" என கேட்க சரி என்று தலை அசைத்தாள். மேகலா ரஞ்சுவை ரூமில் கொண்டு போய் படுக்க வைத்துவிட்டு கீழே வந்தவர் சுஜாதா மற்றும் சதாசிவத்தின் முகத்தை பார்த்து விட்டு, "இரண்டு பேரும் ஒரு மாதிரி பதட்டமா இருக்கீங்க?" என்றார்.

சுஜாதா, "ரஞ்சு கத்தி கலாட்டா பண்ணி விடுவாளோ? என்று பயமாக இருக்கு" என்றார்.

மேகலா, "நீங்க ரெண்டு பேரும் பயப்படுவதை நிறுத்துங்க. அவளே அதை மறந்துட்டு வெளியே வரணும்னு நினைச்சாலும் நீங்களே ஞாபக படுத்துடுவீங்க போல... ரெண்டு பேரும் முதல்ல நேர்மறையா யோசிங்க. நல்லது தான் நடக்கும்" என்று அவர் பேசிக் கொண்டிருக்க மேலே பயங்கரமான சத்தம் ஒன்று கேட்டது.

 

கரைவாள்....


ReplyQuoteJanu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 44
08/09/2020 7:10 pm  
உன் காதலில் நானும் கரைவேனா? 30

நித்யா கதவை திறக்க வெளியே 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்றிருந்தார். பட்டுப்புடவையில் நிறைய நகைகளை எல்லாம் அணிந்து உயர்ரக தோற்றத்தில் இருந்தார்.

பத்மா, "யாரும்மா வந்திருக்கா.." என குரல் கொடுக்க, நித்யா, "தெரியல அத்தை" என்க, பத்மாவே வந்து விட்டார். அந்தப் பெண்ணைப் பார்த்து பத்மா, "கோகிலா அண்ணி வாங்க.." என்று வரவேற்றவர் நித்யாவிடம், "இவங்க உங்க மாமாவுக்கு அக்கா, இவ்வளவு நாள் வெளிநாட்டிலிருந்தாங்க. அதான் உங்க கல்யாணத்துக்கு வர முடியலை. இவங்க உனக்கு பெரியம்மா முறை வேண்டும்" என்றார்.

பின் கோகிலாவிடம், "அண்ணி இது நித்யா, நம்ம க்ரிஷோட பொண்டாட்டி!" என்றார். நித்யா, "வாங்க பெரியம்மா.." என்று புன்னகையுடன் வரவேற்றாள். அவர் நித்யாவை பார்த்த பார்வையை நித்யாவால் இனம் கண்டறிய முடியவில்லை.

பத்மா, "நித்யா, அண்ணிக்கு காபி போட்டு எடுத்துட்டு வா" என்க நித்யா, "சரிங்க அத்தை" என்று கூறி கிச்சனுக்குள் நுழைந்தாள்.

பத்மா கோகிலாவிடம் பேசிக்
கொண்டிருந்தார். பத்மா, "ஏன் அண்ணி க்ரிஷ் கல்யாணத்துக்கு வரலை, உங்க தம்பி உங்கள ரொம்ப எதிர்பார்த்தார்" என்றார்.

கோகிலா, "நான் வேணும்னே வா வரலை, வரமுடியாத சூழ்நிலை என்றவர், நான் வரலைன்னா என்ன, அதான் கல்யாணத்த நல்ல படியா முடிச்சிட்டீங்களே" என்றார்.

பத்மா, "என்ன அண்ணி இப்படி பேசுறீங்க..." என்க,

கோகிலா, "எப்படி பேசுறேன்? நம்ம சொந்தமில்லாத பொண்ணா... யாரு என்ன குலம் என்றே தெரியாதவளை கூட்டிட்டு வந்திருக்கீங்க..." என்றார்.

பத்மாவிற்கு இவர் பேசுவதை நித்யா கேட்டு விட்டால் என்ன ஆவது? என்று பயமாக இருந்தது. பத்மா, "எதுக்கு அண்ணி இப்ப அதையெல்லாம் பேசுறீங்க? விடுங்க" என்று அவரை சமாதானம் செய்ய முயன்றார்.

அதேநேரம் நித்யா காபியுடன் வந்தாள். பத்மாவிற்கு நித்யா அனைத்தையும் கேட்டு இருப்பாளோ..? என்ற பதைபதைப்பு. அவள் முகத்தை ஆராய்ந்தவர் அவள் முகம் எப்போதும் போல் நார்மலாகவே இருந்தது. நல்லவேளை அவள் கேட்கவில்லை என்று பெருமூச்சு விட்டார்.

கோகிலா, நித்யாவை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தார். பத்மா கோகிலா, நித்யாவை ஏதாவது பேசி விடுவாரோ? என்ற எண்ணத்திலேயே அமர்ந்திருந்தார்.

டெலிபோன் வர நித்யா பேசுவதற்காக எத்தனிக்க கோகிலா, "பத்மா, நீ போய் போன்ல யாருன்னு பாரு, என்னை கேட்ட மாதிரி எல்லாரையும் யாருன்னு கேட்கப் போறா" என்றார். இதைக் கேட்டதும் நித்யாவின் முகம் சட்டென்று சுருங்கியது.

பத்மா வயதில் பெரியவர் சொல்கிறாரே என்று தட்ட முடியாமல் எழுந்து சென்றார். கோகிலா நித்யாவிடம் பேச ஆரம்பித்தார். அவளை வார்த்தையால் குத்தி கிழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, "உனக்கு அப்பா அம்மா சொந்தம்னு யாரும் கிடையாதா? நீ ஒரு அனாதையா?" என்றார்.

இதைக் கேட்டதும் நித்யாவின் கண்கள் கலங்கிவிட்டது. அவள் வருந்துகிறாள் என தெரிந்தும் மேலும் மேலும் பேசினார்.
"பார்க்க மட்டும்தான் லட்சணமாக இருக்க, வரதட்சணை என்று ஒன்னும் கொண்டு வரலை, எங்க வீட்டுப் பையனுக்கு பொண்ணு கொடுக்க நீ நான்னு வரிசையாக நின்னாங்க. ஆனால் அவன் தான் காதல் கத்தரிக்கான்னு உன்னை கூட்டிட்டு வந்துட்டான். அவன்தான் வயசு கோளாருல பண்றான் என்றால் என் தம்பியும் அவன் பொண்டாட்டியும் அதற்கு ஒத்து ஊதி இருக்காங்க" என்று வார்த்தைகளை கடித்து துப்பினார்.

நித்யாவின் கண்களில் தேங்கியிருந்த வெள்ளம் கரை உடைத்து ஓடியது. அவர் வார்த்தை நித்யாவை கூறு போட்டு விட்டது.

பத்மா முடிந்த அளவு வேகமாக போன் பேசிவிட்டு வர முயற்சித்தார். பத்மா வருவதை பார்த்த நித்யா வேகமாக கண்களை துடைத்துக் கொண்டாள். பத்மா வந்ததும் கோகிலா பேச்சை நிறுத்தி விட்டார்.

பத்மா நித்யாவின் முகத்தை பார்த்தே கோகிலா அவளை ஏதோ சொல்லி விட்டார் என கண்டுபிடித்து விட்டார். ஆனால் கோகிலாவிடம் பேச தைரியம் இல்லை. பத்மா நித்யாவை அங்கிருந்து அனுப்புவதற்காக, "நித்யா உனக்கு தலை வலிக்குதுன்னு சொன்னேல, போய் ரெஸ்ட் எடு" என்றார்.  நித்யாவும் தனக்கு தனிமை வேண்டும் என்பதை உணர்ந்து ரூமுக்கு சென்று விட்டாள்.

க்ரிஷ்க்கு ஆபிசில் எந்த வேலையும் ஓடவில்லை. சுரேந்தரை அழைத்திருந்தான். சுரேந்தர், "என்னடா மச்சான், எதுவும் பிரச்சனையா?" என கேட்டுக்கொண்டே க்ரிஷின் கேபினுக்குள் நுழைந்தான்.

க்ரிஷ், "வாடா..." என்று அழைத்தாள் குரலில் சுரத்தே இல்லாமல். சுரேன், "என்னடா பிரச்சனை? ஏன் ஒரு மாதிரி இருக்க.." என கேட்க, க்ரிஷ் காலையில் நடந்தவற்றைக் கூறி, "எனக்கு யாரு செய்திருப்பான்னு தெரியலடா. இதை நினைத்து எனக்கு காலையில இருந்து ஒரு வேலையும் ஓடலை.  ஒரே குழப்பமா இருக்கு..." என்றான்.

சுரேந்தர், "வீட்டுக்குள்ள வந்து இப்படி பண்ற அளவுக்கு யாருக்கும் தைரியம் இருக்கும்? வீட்டில் வேலை செய்றவங்க எல்லாம் எப்படி?" எனக் கேட்க,

க்ரிஷ், "சுமதி அக்கா ரொம்ப  வருஷமா நம்ம வீட்டில வேலை பாக்குறாங்க. அவங்களைப் பத்தி எனக்கு தெரியும், ரொம்ப நல்ல கேரக்டர் டா" என்றான்.

சுரேந்தர், "அப்போ இதை யார் பண்ணி இருப்பா? ஒருவேளை அந்த ராகவன் வேலையா இருக்குமோ..?"

கிரிஷ், "இல்லடா... அதுக்கு வாய்ப்பே இல்ல. வீட்டுக்குள்ள அவ்வளவு சீக்கிரம் யாரும் அவனோட ஆளுங்க வர முடியாது' என்றான்.

சுரேந்தர், "அப்போ இதை யாருதான் பண்ணி இருப்பா? அம்மாவும் நித்யாவும் இத பண்ண வாய்ப்பு இல்லை" என்றான்.

க்ரிஷ், "அதை யோசித்து தான் நானும் காலையிலிருந்து மண்டையை பிச்சி கிட்டு இருக்கேன்" என்றான்.

சுரேந்தர், "சரி ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத, வீட்டை சுத்தி வாட்ச் பண்ண ஆளுங்கள செட் பண்ணி விடுவோம். யாரும் சந்தேகப்படுற மாதிரி இருந்தா அவனை பிடித்து விசாரிக்கலாம். இனிமேல் அது மாதிரி நடக்காம பார்த்துக்கலாம்" என்றான்.

க்ரிஷ், "ஆமாடா, இனிமேல் ரொம்ப பாதுகாப்பா இருக்கணும். இன்னைக்கே அம்மாவுக்கும் நித்யாவுக்கும் சண்டை வரை இருந்தது, நான்தான் பேசி சமாளிச்சேன். நித்யா பிறந்ததிலிருந்தே யாரும் இல்லாமல் வளர்ந்தவ. நிறைய ஆசையோடு எங்க குடும்பத்துல சேர்ந்த அவளுக்கு எந்த குறையும் இல்லாம நான் பாத்துகிறேன்னு சொல்லி இருக்கேன். ஆனால் வந்த கொஞ்ச நாளிலே அவள் கண் கலங்குற சூழ்நிலையை வந்துருச்சு..." என்று வருத்தப்பட்டான்.

சுரேந்தர், "கிரிஷ், நீ வருத்தப்படாதே! உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும். தங்கச்சி கூட நீ சந்தோஷமா வாழ்வ.... என்று அவனுக்கு ஆறுதல் கூறியவன், தங்கச்சி வந்த நல்ல நேரம் தான் உனக்கு கவர்மெண்ட் கான்டிராக்ட் கிடைச்சிருக்கு  இது உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு, இத மட்டும் நல்லா முடிச்சிட்டா உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அதை கான்சன்ட்ரேட் பண்ணு" என்றான்.

சுரேந்தரிடம் பேசிய பிறகு க்ரிஷ்க்கு ஒரு தெளிவு பிறந்தது  அன்று வேலையை முடித்து விட்டு சீக்கிரமாகவே வீட்டிற்கு திரும்பினான். கிருஷ் வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் பார்த்தது கோகிலாவை தான்.

க்ரிஷ் கோகிலாவை புன்னகை முகமாக, "வாங்க அத்தை, ஏன் என் கல்யாணத்துக்கு கூட வரவில்லை..." என்று கோபித்துக் கொண்டான். 

கோகிலா மனதில், "ஆமா! இவன் அப்படியே எலிசபெத் மகாராணியை கல்யாணம் பண்ணி இருக்கான். நான் கல்யாணத்துக்கு வரலை என்று கோபப்படுகிறான்' என நினைத்தவர் அதை வெளியே சொல்லாமல், "வரமுடியாத சூழ்நிலை, நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன்ல" என்க,

க்ரிஷ், "சரி விடுங்க அத்தை, முடிஞ்சதைப் பத்தி பேச வேண்டாம். வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்று கேட்டான்.

கோகிலா, "எல்லோரும் நல்லா இருக்காங்க..."

க்ரிஷ், "சாப்பிட்டீங்களா அத்தை.."

கோகிலா, "உனக்காக தான் வெயிட் பண்றேன், நீ வந்த உடனே சாப்பிடலாம்னு.." என்றார்.

பத்மா, "ஆமாடா! அண்ணி நீ வந்தா தான் சாப்பிடுவேன் சொல்லிட்டாங்க. போய் பிரஷ் ஆகி நித்யாவையும் கூப்பிட்டுவா.. எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்" என்றார். கிருஷ் சரிம்மா என்று கூறி ரூமிற்கு சென்றான்.

நித்யா ரூமில் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தார். முகத்தில் கண்ணீர் கோட்டின் தடயம் இருந்தது. க்ரிஷ் காலையில் நடந்த பிரச்சனையை மறந்துவிட்டு ஒரு தெளிவான மனநிலையுடன் ரூமுக்குள் நுழைந்தவன் நித்யாவின் முகத்தை பார்த்தவுடன் அது முற்றிலும் தலைகீழாக மாறியது.

*************************

மேகலா சுஜாதாவிற்கும் சதாசிவத்திற்கும் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். மேலே இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டது.

ரஞ்சனாவிற்கு மருத்துவமனையில் இருந்த வரை ஒன்றும் தெரியவில்லை. ஆனால் வீட்டிற்கு வந்ததும் அங்குள்ள ஒவ்வொரு பொருட்களும் இடங்களும் மீராவை ஞாபகப்படுத்தியது. அவளுடன் சண்டை போட்டது, அவளுடன் விளையாண்ட தருணங்கள் என அவளது நினைவுகள் ரஞ்சனாவை வாட்டி எடுத்தது.

அவளால் தாங்க முடியவில்லை தலையில் யாரோ சம்பட்டியை வைத்து அடிப்பது போன்ற உணர்வு. மீரா அவளிடம் பேசிய வார்த்தைகளே மூளைக்குள் உழன்றது. ஒருமுறை ரஞ்சனாவிற்கும் மீராவுக்கும் சண்டை வந்தது. மீரா பள்ளியில் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்க அதை பார்த்து ரஞ்சு மீராவிடம் கோவித்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லை.

அப்போது மீரா ரஞ்சனாவிடம் கூறிய வார்த்தைகள், "ஆயிரம் பேர் என் வாழ்க்கையில் வந்தாலும் என்னைக்குமே எனக்கு நீ தான் ஃபர்ஸ்ட். எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன்" என்று அவளிடம் சத்தியம் செய்து கூறினாள்.

அன்று நடந்த நிகழ்வே அவள் கண்முன் ஓடியது. மீராவின் வார்த்தைகளே அவள் காதில் ரீங்காரம்  இட்டுக்கொண்டிருந்தது. சூழ்நிலையின் கணத்தை அவளால் தாங்க முடியவில்லை. அதை சமன் படுத்துவதற்காக வாயை திறந்து சத்தமாக கத்தினாள்.

அந்த கத்தலில் மூவரும் மேலே வந்துவிட்டனர். அன்று நடந்த நிகழ்வுக்கு பின் சதாசிவம் எல்லா அறைகளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாவியை வாங்கி வைத்திருந்தார். ரஞ்சுவின் ரூம் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றனர்.

ரஞ்சனா கத்தி கத்தி மன அழுத்தம் அதிகமாகி மயக்கம் ஆகிவிட்டாள். சதாசிவம் டாக்டருக்கு கால் செய்தார்.

டாக்டர், "என்ன சதாசிவம், இப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போனீங்க. இப்போ ஏதாவது பிரச்சனையா?" என கேட்டார்.

சதாசிவம், "டாக்டர், வீட்டுக்கு வர்ற வரைக்கும் அமைதியா தான் இருந்தா. வீட்டுக்கு வந்தவுடனே பழைய மாதிரி எல்லா பொருளையும் தூக்கி போட்டு உடைத்து மயக்கம் ஆகிட்டா... எனக்கு பயமா இருக்கு, கொஞ்சம் சீக்கிரம் வர்றீங்களா?" என்றார்.

டாக்டர், "சதாசிவம், பதட்டபடாதீங்க, நான் உடனே கிளம்பி வரேன்" என்றார். டாக்டர் சொன்ன மாதிரியே விரைவாகவே வந்துவிட்டார் ரஞ்சனாவை பரிசோதித்துவிட்டு சதாசிவத்திடம், "ஒன்னும் பயப்பட தேவை இல்லை, அவங்களுக்கு கோவத்துல பிபி அதிகமாகி மயக்கம் ஆகிட்டாங்க" என்றார்.

சதாசிவம், "டாக்டர், மறுபடியும் பழைய மாதிரி பிஹேவ் பண்ணுறா... சைகார்டிஸ்கிடட்  கூட்டிட்டு போகணுமா?"

டாக்டர், "கண்டிப்பா கூட்டிட்டு போகனும்..." என்றவர் ஒரு அட்ரஸை கொடுத்து, "இந்த இடத்துக்கு நாளைக்கு போங்க, இவங்க பெரிய சைக்கார்டிஸ்ட், இவங்க கிட்ட போனா எல்லாரும் கண்டிப்பா குணமாகி விடுவாங்க. அவங்களுக்கு உடலளவில் எந்த பிரச்சனையும் இல்ல. மனதளவில் தான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க. அவங்க கோபப்பட்டு உங்களை திட்டினாலோ காயப்படுத்தினாலும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க..." என்று பல அறிவுரைகளை வழங்கி விட்டு கிளம்பினார்.

மூவரும் இந்த பிரச்சனை என்று தான் முடிவுக்கு வருமோ..? என்று ஓய்ந்து விட்டனர்.

                                   கரைவாள்.....

 

 

ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 44
09/09/2020 4:23 pm  

உன் காதலில் நானும் கரைவேனா? 31

 

நித்யாவின்  கலங்கிய முகத்தை பார்த்து பதறி கிரிஷ், "நித்யா, என்ன ஆச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..."

க்ரிஷ் இவ்வளவு சீக்கிரம் வருவான் என்பதை எதிர்பார்க்காத நித்யா எழுந்து வேகமாக முகத்தைத் துடைத்தவள், "ஒன்னுமில்லை..." என்றாள்.

 

க்ரிஷ், "நித்யா, ஏன் பொய் சொல்ற? உன் முகமே ஒரு மாதிரி இருக்கு... காலைல நடந்ததை நினைத்து இன்னமும் ஃபீல் பண்ணிட்டு இருக்கியா?"

 

நித்யா அவசரமாக, "இல்லை, அதை அப்பவே நான் மறந்துட்டேன்" என்றாள்.

 

க்ரிஷ், "அப்போ, அதுக்கு பிறகு என்ன நடந்தது? சொல்லு" என்றான்.

 

நித்யா பதில் சொல்லவில்லை.

 

க்ரிஷ், "சொல்லு நித்யா..." என்றான் அழுத்தமாக. அவன் பேசி முடித்தது தான் தாமதம் அவனை கட்டிக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.

 

க்ரிஷ் பதறி, "நித்யா என்ன ஆச்சு? ஏன் அழுகுற?" என்றான். நித்யா தேம்பிக் கொண்டே, "நான் அநாதையா? எனக்குனு யாருமே இல்லையா?" என்றாள்.

 

இந்த வார்த்தையை கேட்டு க்ரிஷ் உள்ளுக்குள் உடைந்து போனான். "யார் அப்படி சொன்னது? உனக்காக நான் எப்பவுமே இருப்பேன்" என்றான்.

 

நித்யா, "நான் எதுவும் இல்லாதவளா? உங்களை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டேனாம்" என்றாள்.

 

அவளின் வார்த்தைகள் அவனை மேலும் உருக்குலையைச் செய்தது. க்ரிஷ், "உன்கிட்ட இப்படி எல்லாம் பேசினது அத்தையா?" நித்யா அழுது கொண்டே ஆமாம் என தலையை ஆட்டினாள்.

 

க்ரிஷ், "இவங்களுக்கு இதே வேலையா போச்சு... யாராயாவது பேசி நோகடிச்சுட்டே இருப்பாங்க. பணம் மட்டும் தான் வாழ்க்கை என்ற மாதிரி பேசுவாங்க... இப்போவே போய் உண்டு இல்லைன்னு பண்றேன் அவங்கள" என்று  அவன் கோபமாக எழுந்து போக நித்யா பதறி அவனை நிறுத்தினாள்.

 

நித்யா, "வேண்டாம்... சொல்றதை கேளுங்க, என்னால எந்த பிரச்சனையும் குடும்பத்தில் வரக்கூடாது" என்றாள்.

 

"பிரச்சனை வரக்கூடாதுன்னா, அப்போ அவங்க பேசிக்கிட்டே இருப்பாங்க..

 

நாம பொறுத்து போயிட்டே இருக்கணுமா?" என்றான்.

 

நித்யா, "இதுக்கு பேரு பொறுத்துப் போவது கிடையாது, விட்டுக்கொடுத்து போவது. நம்ம குடும்பத்தில் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமென்றால் நாமதான் விட்டுக்கொடுத்து போகணும். இப்போ நீங்க போய் அவங்க கிட்ட சண்டை போட்டா நான் தான் வந்ததும் வராததுமா உங்ககிட்ட இல்லாததும் பொல்லாததுமாக சொல்லிக் கொடுத்திட்டேன்னு சொல்லுவாங்க. உங்களுக்கு நான் இப்படி பெயர் வாங்கினாலும் பரவாயில்லைன்னு தோனுச்சுனா போய் சண்டை போடுங்க. எனக்கு உங்ககிட்ட சொல்லணும் போல தோணிச்சு, அதான் சொல்லிட்டேன். இப்போ மனசு பாரம் கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கு" என்றாள்.

க்ரிஷ் அவள் பேசுவதை ஆச்சரியமாக பார்த்தான். நித்யா, "என்ன அப்படிப் பாக்குறீங்க?"

க்ரிஷ், "சில சமயம் ரொம்ப பக்குவமா பேசுற, சில சமயம் குழந்தை தனமா நடந்துக்கிற... உன்ன புரிஞ்சிக்கவே முடியலடி" என்றான்.

நித்யா புன்னகையுடன், "நான் அவங்க பேசுன  மன்னிச்சிட்டேன் என்றுதான் சொன்னேன், மறந்துட்டேன்னு சொல்லல. அது மனசுல ஒரு ஓரமாக  வடுவா இருக்க்கத்தான் செய்யும்  இதிலென்ன பாக்குவம் இருக்கு.  அப்புறம் என்ன புரிஞ்சுக்க நிறைய டைம் இருக்கு, இப்போ போய் பிரஷ் ஆகிட்டு வாங்க" என்றாள்.

க்ரிஷ், "ம்ம்... போறேன், அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம், நீ வாழ்க்கையில எப்பவுமே தனி ஆள் கிடையாது. உன் கூட நான் இருப்பேன் அது எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சரி, புரிஞ்சுதா? என்னோட உலகத்தில் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு நீதான் இருக்க. இனிமேல் நீ வாழ்க்கையில என்னைக்காவது அநாதைன்னு ஃபீல் பண்ணா, அன்னைக்கு என்னோட வாழ்க்கையில நான் தோத்துட்டேன் என்று அர்த்தம்" என்றான் அழுத்தமான பார்வையோடு.

நித்யா, "எதுக்கு இவ்வளவு சீரியஸா பேசுறீங்க? எனக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை இருக்கு. உங்களோட உலகத்திலே எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு நான் தான் இருக்கேன்னு சொன்னீங்களே.... ஆனா என்னோட உலகத்துல நீங்க மட்டும் தான் இருக்கீங்க. நீங்க இருக்கும் போது நான் எப்போதும் எதற்கும் கவலைப்பட மாட்டேன். உங்களை என்னைக்கும் எதுலயும் நான் தோற்க்க விட மாட்டேன்" என்றாள்.

க்ரிஷ் அவள் பேச்சில் அசந்து அவளை அணைத்துக்கொண்டான். "நீ இல்லாம வாழ்க்கையில நான் ஒண்ணுமே இல்லடி" என்றான். நித்யா, "சரி சரி போதும் போங்க, வந்ததும் டிரஸ் கூட மாத்தலை... போய் ப்ரெஷ் ஆகுங்க முதல்ல" என்றாள்.

க்ரிஷ், "என்னடி ரொம்ப அதிகாரம் பண்ணுற... என் பொண்டாட்டியை நான் கட்டிபிடிப்பேன்" என்றான்.

 

நித்தியா சிரித்துக்கொண்டே, "உங்க பொண்டாட்டி மதியத்திலிருந்து சாப்பிடலை, அவளுக்கு பசிக்குதாம்... சீக்கிரம் சாப்பிட போகனும்" என்றாள்.

 

க்ரிஷ், "என்ன நீ மதியம் சாப்பிடலையா? என்ன பிரச்சனை வந்தாலும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன், சீக்கிரம் சாப்பிட போகலாம்" என்றவன் ஐந்து நிமிடத்தில் கை கால் கழுவி விட்டு வந்தான்.

 

நித்யாவும் முகத்தை கழுவிவிட்டு தெளிவாக வந்தாள். இருவரும் தெளிவான முகத்துடன் வருவதைப் பார்த்த பத்மா நிம்மதி அடைந்தார்.  கோகிலா பேசியது அவனுக்கு தெரிந்தால் கண்டிப்பாக சண்டை போடுவான். மதியத்திலிருந்தே நித்யாவிடம் தனியாக பேசும் சந்தர்ப்பம் அமையவில்லை.  அமைந்திருந்தால் அவளிடம் பேசி சமாதானப் படுத்தி இருப்பார்.

 

க்ரிஷ்க்கு கோகிலா மீது கோபம் இருந்தபோதும் அதை காண்பிக்காமல் இயல்பாகவே நடந்து கொண்டான். பத்மாவிற்கு நித்யாவின் இந்த பக்குவம் மகிழ்ச்சியை கொடுத்தது. க்ரிஷின் வாழ்க்கை பற்றிய கவலை நீங்கியது. அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றனர். மறுநாள் காலையில் வழக்கம் போல தொடங்கியது.

 

க்ரிஷ், "நித்யா  எல்லாதுக்கும் ஒரு எல்லை இருக்கு, அவங்க ரொம்ப பேசினா நீ பதிலுக்கு ஏதாவது பேசு... என்கிட்ட மட்டும் எப்படி பேசுற? அன்னைக்கு தாரிகா கிட்ட கூட சண்டை போட்டியே... அதே மாதிரி இவங்க கிட்டயும் பேசு, என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன். புரிஞ்சுதா? அப்படி உன்னால பேச முடியலை என்றால் என்கிட்ட சொல்லு, நான் பார்த்துக்குறேன்" என்றான்.

 

நித்யா, "நேத்து நைட்டுதான் படிச்சு படிச்சு சொன்னேன். இப்ப திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா? எதுனாலும் நானே பார்த்துக்குறேன், நீங்க பேசாமல் இருந்தாலே போதும். இப்போ ஆபீசுக்கு டைம் ஆச்சு, நீங்க கிளம்புங்க" என்றாள்.

 

க்ரிஷ், "கிளம்பறதுக்கு முன்னாடி என் கோட்டா?" என்க நித்யா, "என்ன கோட்டா?" என்றாள்.

 

கிரிஷ், "இந்தக் கோட்டா...." என்று தன் கன்னத்தை காண்பித்தான். நித்யா, "அத்தை கூப்பிடுறாங்க... இதோ வரேன் அத்தை" என்று பொய் சொல்லிவிட்டு வெளியே ஓடினாள்.

 

க்ரிஷ், 'எல்லா விஷயத்துலயும் நல்லாத்தான் பேசுறா... நான் பக்கத்துல போனா மட்டும் பயந்து ஓடிட்றா' என நினைத்துக்கொண்டே கிளம்பினான்.

 

அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக வெளியே ஓடி வந்தவள் ஹாலை துடைப்பதற்காக சுமதி வைத்திருந்த சோப்புத் தண்ணீரை தட்டி விட்டு விட்டாள். சுமதி, "என்னம்மா பார்த்து வர மாட்டீங்களா?  விழுந்துட்டா எங்கேயாவது அடி பட போகுது" என்றாள்.

 

நித்யா, "சாரிக்கா, பார்க்காமல் வந்துட்டேன். நான் போய் துடைக்க துணி எடுத்துட்டு வரேன்" என்க,

 

சுமதி, "இருங்கம்மா, நான் போய் எடுத்துட்டு வரேன்" என்று கிச்சனுக்கு சென்றாள். நித்யா யாரும் பார்க்காமல் விழுந்து விட போறாங்கா என்று நினைத்து அங்கேயே இருந்தாள். டெலிபோன் அடித்தது, எடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தவள், ஏதாவது முக்கியமான ஆளாக இருக்கும் என்று எடுத்துப் பேச சென்றாள்.

 

நித்யா போனில் யார் என்று விசாரிக்க மறுமுனையில் க்ரிஷின் அப்பாவை கேட்டனர். கீழே இருந்து குரல் கொடுத்தாள், "மாமா உங்களுக்கு தான் போன்" என்றாள். அவரும், "இதோ வரேன்மா...." என்று இறங்கினார்.

 

நித்யாவும் அந்த சோப்புத் தண்ணீரை மறந்து விட்டாள். அவர் கவனிக்காமல் சோப்பு நீரில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டார். அவர் விழுந்த சட்டத்தை எல்லோரும் ஹாலில் கூடிவிட்டனர். நித்யா அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். கரிஷ் ஓடிவந்து, "அப்பா, என்ன ஆச்சு!" என்று பதறி தூக்கி விட்டான்.

 

****************************

 

டாக்டர் சென்றதுதும் எல்லோரும் இந்த பிரச்சனை என்று தீரும் என்று ஒய்ந்து விட்டனர். மேகலா தான், "என்ன நடந்தாலும் மனசு தளரக்கூடாது. வாழ்க்கையில் பிரச்சினை வரத்தான் செய்யும், அதையெல்லாம் கடந்து போய் தான் ஆக வேண்டும்" என்று அவர்களைத் தேற்றினார்.

 

அன்றைய தினம் அதன்பிறகு ரஞ்சனா எந்த கலாட்டாவும் பண்ணவில்லை.  மறுநாள் அவர்கள் டாக்டர் சொன்ன மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்காக கிளம்பனார்கள்.

 

ரஞ்சு வர மாட்டேன் என்று மறுக்க, மேகலா பேசி சமாதானப்படுத்தி அவளை அழைத்துச் சென்றார். அது பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற மனநல மருத்துவமனை. சதாசிவம் நேற்றே அந்த மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் வாங்கி இருந்தார். அவர்கள் உள்ளே நுழைந்ததும் ஒரு செவிலியர் வந்து என்னவென கேட்க சதாசிவம்  அப்பாயிண்ட்மெண்ட் பற்றி கூறினார்.

 

செவிலியர் அங்கே மருத்துவர் அறையின் முன் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர சொன்னார். அவர்கள் முறை வரும்போது அழைப்பார்கள் என்றும் கூறிச் சென்றார். அவர்கள் அங்கேயே காத்திருந்தனர்.

 

மருத்துவர் அறையின் முன்பு டாக்டர் சுகந்தி பி.ஹெச்.டி., என்று எழுதி இருந்தது. வெளியே சுவற்றில் நிறைய படங்கள் மனநல மருத்துவம் பற்றி முதல் நிலை இரண்டாம் நிலை என வரிசையாக விளக்கி போடப்பட்டிருந்தது. வரிசையாக ஒவ்வொருத்தர் பெயராக அழைக்க வர எழுந்து சென்றனர். ரஞ்சுவின் முறை வந்ததும், அவள் உள்ளே வர மாட்டேன் என அடம் பிடித்தாள். மேகலா தான் அவளை கெஞ்சி உள்ளே அழைத்து சென்றார்.

டாக்டர் சுகந்தி, "வாம்மா..." என்று புன்னகையுடன் வரவேற்றார். ரஞ்சு முகத்தை உர்ரென்று வைத்திருந்தாள். சுகந்தி மேகலாவிடம், "நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பன்றீங்களா?"

ரஞ்சனா, "ம்கூம்... அவங்க வெளியே போனா நானும் வெளியே போய் விடுவேன்" என்றாள். சுகந்தி, "ஓகே, நோ ப்ராப்ளம், அவங்க இருக்கட்டும்... என்றவர், ரஞ்சனாவிடம் சரி சொல்லுமா, உன் பெயர் என்ன?" என்று கேட்க ரஞ்சனா தன் பெயரை சொன்னாள்.

அவர் நிறைய கேள்வி கேட்டார். ரஞ்சனாவின் பொறுமை காற்றில் பறந்து விட்டது. "நீங்க நிறைய கேள்வி கேட்குறீங்க, எனக்கு உங்ககிட்ட பேச பிடிக்கல" என்று கோபமாக எழுந்து சென்று விட்டாள்.

மேகலா வெளியே வந்து, "ரஞ்சு, நில்லுமா.... சொல்றதை கேளு, இப்படி எல்லாம் பண்ணக்கூடாது" என்று கூறிக் கொண்டே அவள் பின்னால் சென்றார். வெளியே இருந்த சுஜாதாவும் சதாசிவமும் என்னவென்று விசாரிக்க,

மேகலா, "பாதியிலேயே எழுந்து வந்துட்டா. நான் அவளைப் பார்க்கிறேன் நீங்க போய் டாக்டர்கிட்ட பேசுங்க" என்று ரஞ்சுன் பின் சென்றார். சதாசிவம் உள்ளே செல்ல சுகந்தி, "வாங்க மிஸ்டர் சதாசிவம்.." என்றார்.  சதாசிவம் சுகந்தியிடம் நேற்றே பேசி எல்லா விஷயங்களையும் கூறியிருந்தார்.

சதாசிவம், "டாக்டர், அவ பண்ணதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்."

டாக்டர், "நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல. அவங்க என்னோட பேஷன்ட். இதுக்கு மேல நிறைய பேர் என்னை திட்டி இருக்காங்க. அவங்களை குணப்படுத்துவது என்னோட கடமை. சோ வருத்தப்படாதீங்க" என்றார்.

சதாசிவம், "டாக்டர், எப்போ என் பொண்ணு பழைய மாதிரி மாறுவா... அவளுக்கு என்ன தான் பிரச்சனை" என்றார்.

டாக்டர், "மிஸ்டர் சதாசிவம், நீங்க பயப்படாதீங்க... உங்க பொண்ணுக்கு வந்திருக்கிறது டிப்ரஷன். அதாவது சயின்டிஃபிகா சொல்லனும் என்றால் கெமிக்கல் ரிசப்டார்ஸ் இம்பேலன்ஸ். தமிழில் மன அழுத்தம் என்று சொல்லுவாங்க. நம்மால் ஏத்துக்க முடியாத ஒரு விஷயம் ஏதாவது நடந்து இருந்தால், உதாரணமாக நமக்கு ரொம்ப பிடிச்சவங்களோட இழப்பு, அது ஒரு செல்லப் பிராணியாக கூட இருக்கலாம். குழந்தைங்க எல்லாம் சின்ன வயசுல பெற்றோரை இழக்கும் போது, ஏதாவது கொடுமைகளுக்கு ஆளாகும் போது வரும். இது குணப்படுத்த முடியாத நோய் எல்லாம் இல்ல. ஈஸியா குணப்படுத்திவிடலாம்..."

"சைக்காலஜிஸ்ட் டாக்டர், பேஷன்ட் கூட பேசி அவங்களுக்கு நம்ம மேல ஒரு நம்பிக்கையே வர வைப்பாங்க. அப்புறம் அவங்க கிட்ட பேசி அவங்களை குணப்படுத்துவாங்க. அப்றம் எல்லா உண்மையே தெரிஞ்சுகிறதுக்கு ஹிப்னாட்டிசம் மெத்தட் கூட பயன்படுத்துவோம். இதெல்லாம் ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா உங்க பொண்ணுக்கு நடக்கிற ட்ரீட்மெண்ட் பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும் அண்ட் ஒன்திங்க் உங்க பயத்தை போக்குவதற்காக தான் சொன்னேன்" என்றார்.

 

சதாசிவம், "சரிங்க டாக்டர், நாங்க எப்போ திரும்ப வரணும்?"

 

சுகந்தி, "நான் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன்" என்றார்.

சதாசிவம், "சரிங்க டாக்டர், நாங்க கிளம்புறோம்" என கூறி விடைபெற்றார்.

                                கரைவாள்....


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 44
11/09/2020 5:38 am  

உன் காதலில் நானும் கரைவேனா? 32

 

க்ரிஷ் ஓடிவந்து, "அப்பா என்ன ஆச்சு?" என பதறி தூக்கினான். குடும்பமே அங்கு கூடி விட்டது. நித்யா பயத்தில் உறைந்து விட்டாள்.

கோகிலா, "யாரு இங்க தண்ணியா ஊத்துனது?" என கத்தினார்
சுமதியும் அங்கு வந்து விட்டாள்.

க்ரிஷ், "அத்தை அதை அப்புறமா விசாரிச்சுக்கலாம். அப்பாவை இப்போ ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம்" என்றான். அவரால் நடக்க கூட முடியவில்லை.

நித்யாவும் சுமதியும் பயத்துடனே நின்றிருந்தனர். க்ரிஷ் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காரில் அமர வைத்தான். பெரியவர்கள் காரில் ஏறிக்கொள்ள நித்யா, "நானும் வரேன்" என்றாள்.

க்ரிஷ், "இல்ல நித்யா, நீ வீட்டில் இரு, நாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வரோம்" என்றான். நித்யாவும் மனமே இல்லாமல் சரி என்று தலையை ஆட்டினாள். அவர்கள் காரில் கிளம்பி விட்டனர். நித்யா தான் ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

சுமதி, "என்ன நித்யாமா, உங்கள நின்னு பார்த்துக்க சொல்லிட்டு தான் போனேன். எங்கம்மா போனீங்க?" என்றாள்.

நித்யா, "அக்கா நான் நின்னு பார்த்துட்டுதான் இருந்தேன். போன் அடிச்சது, அதான் பேச போனேன். நான் தான் மாமாவை கூப்பிட்டேன். போன் பேசுறது ஞாயக்த்துல தண்ணி கொட்டி இருந்ததையே மறந்துட்டேன்" என்றாள் கண்கலங்க.

சுமதி, "நித்யாமா, மறக்குற விஷயமா இது? ஐயாவுக்கு ஒன்னு கிடக்க ஏதாவது ஒன்னு ஆயிடுச்சின்னா என்ன பண்றது?" என்றார்.

நித்யா, "அக்கா, நான் ஏற்கனவே பயத்துல இருக்கேன். நீங்க மேலும் பயமுறுத்துறீங்க. அக்கா மாமாவுக்கு ஏதாவது அடிபட்டு இருக்குமோ..? என்று பயமா இருக்கு" என்றாள்.

சுமதி, "பயப்படாதீங்கமா... ஐயாவுக்கு ஒன்னும் ஆகாது" என்று சமாதானப் படுத்த முயற்ச்சித்தாள். நித்யாதான் 'தன் மீதுதான் தவறு, என் ஞாபக மறதி எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தி உள்ளது? என நினைத்து கண்ணீர் சிந்தினாள்.

க்ரிஷ் வேகமாக காரை ஓட்டிச்சென்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருந்தது பத்மா தான் பயத்தில் அழுது கொண்டிருந்தார்.

க்ரிஷ், "அம்மா, அழாதீங்க... அப்பாக்கு எதுவும் இருக்காது, சின்ன காயம் தான் இருக்கும்" என்றான். இருந்தும் அவர் சமாதானமாகாமல் அழுதுகொண்டிருந்தார்.  கோகிலாவும் தன் பங்கிற்கு ஆறுதல் கூறினார்.

சிறிது சிறிது நேரத்தில் சிகிச்சை முடிந்து வெளியே வந்தார் டாக்டர்.

க்ரிஷ், "டாக்டர், அப்பாவுக்கு எதுவும் இல்லைவ டாக்டர்" எனக் கேட்டான்.

டாக்டர், "நான் செட் பண்ண வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. காலில் மட்டும் ரொம்ப வலிக்குது என்று சொன்னார். ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டால் என்ன பிரச்சனை என்று சொல்லிவிடுவேன். இப்ப வழிக்கு மட்டும் பெயின் கில்லர் கொடுத்து இருக்கேன். நீங்க பயப்பட வேண்டாம். மற்றபடி உடம்பில் எந்த பிரச்சினையும் இல்லை" என்றார். இதைக் கேட்டதும் எல்லோருக்கும் நிம்மதி பிறந்தது.

க்ரிஷ், "டாக்டர் நாங்க போய் பார்க்கலாமா?' என கேட்டான். டாக்டர், "போய் பாருங்க.." என்றார். எல்லோரும் உள்ளே சென்றனர்.

பத்மாவின் கலங்கிய முகத்தை பார்த்த க்ரிஷின் அப்பா ராஜன், "பத்மா, என்ன இது? குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க... எனக்கு ஒன்னும் இல்ல, நான் நல்லா தான் இருக்கேன்" என்று அவரை சமாதானப்படுத்தினார்.

க்ரிஷ், "நல்லா சொல்லுங்க அப்பா, நான் சொன்னா கேட்க மாட்டாங்க.... வந்ததிலிருந்து அழுதுகிட்டே இருக்காங்க" என்றான்.

பத்மா, "நீ பேசாம இருடா, என்னோட பயம் எனக்கு தான் தெரியும்" என்றார்.

க்ரிஷ், "மா அதான் டாக்டர் ஒன்றுமில்லை என்று சொல்லிட்டாங்க இல்ல. அப்புறம் ஏன் இவ்வளவு வருத்தப்படுறீங்க?" என்றான்.

பத்மா, "இன்னும் ஏதோ ஸ்கேன் எடுத்து பார்க்கணும் என்று சொன்னாங்க இல்ல. அத நெனச்சு தான் பயப்படுகிறேன்" என்றார்.

க்ரிஷ், "அம்மா, ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு ஒண்ணுமே இல்ல தான் என்று சொல்ல போறாங்க" என்றவன்,
"சரி கேன்டீன் போய் உங்களுக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன்" என்று கேண்டீன் சென்றான்.

பத்மா, "என்னங்க, எப்படி கீழே விழுந்தீங்க? பார்த்து வரக் கூடாதா..." என்றார்.

ராஜன், "நான் பார்த்து தான் வந்தேன். அங்கே தண்ணி கொட்டி இருந்துச்சு" என்றார்.

கோகிலா, "யார் அங்கே தண்ணீயை கொட்டுனது?" என்று கோபமாக கேட்டார்.

பத்மா, "அண்ணி எனக்கு யாரென்று தெரியலை, வீட்டில் போய்தான் விசாரிக்கணும்" என்றார்.

க்ரிஷ் காபி வாங்கிட்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தான். பின் ஸ்கேன் எடுப்பதற்காக இரண்டு பேர் வந்து ராஜனை அழைத்துச் சென்றனர். க்ரிஷூம் உடன் சென்றான்.

அவர்கள் ஸ்கேன் எடுத்து முடித்து விட்டு ரிப்போர்ட் வாங்குவதற்காக அரைமணி நேரம் காத்திருந்தனர். ரிப்போர்ட் வந்ததும் க்ரிஷ் ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு மருத்துவரைப் பார்க்கச் சென்றான்.

பத்மா, "நானும் வருவேன், டாக்டர் சொல்வதை நான் கேட்கணும்" என்றார்.

க்ரிஷ், "சரி வாங்க..." என்று டாக்டரிடம் அவரையும் அழைத்துச் சென்றான். டாக்டர், "வாங்க க்ரிஷ்.. வாங்க என்று பத்மாவையும் கூறியவர், ரிப்போர்ட் வாங்கி பார்த்தார். 2 நிமிடம் கழித்து அதை படித்து முடித்தவர், "கால்ல ஏதாவது பிராக்சர் இருக்குதா? என்று பார்க்கத்தான் ஸ்கேன் எடுக்க சொன்னேன். ஆனா அது மாதிரி எதுவும் இல்லை  மாத்திரை சாப்பிட்டால் மட்டும் போதும்  காலில் சுளுக்கு தான் விழுந்து இருக்கு" என்றார்.

இதைக் கேட்டதும் பத்மாவின் முகம் தெளிவடைந்தது. க்ரிஷ், "ஓகே டாக்டர், நாங்க எப்போ அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்?" என்றான்.

டாக்டர், "இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணலாம், நான் ரீசார்ஜ் சீட் ரெடி பண்ண சொல்றேன்" என்றார். கிரிஷ், "தேங்க்யூ டாக்டர்.." என்று கூறி வெளியேறினான்.

க்ரிஷ், "அம்மா, நான் தான் சொன்னேன்ல, அப்பாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று. டாக்டரும் அதை தான் சொன்னாரு, பாரு..." என்றான்.

பத்மா, "டாக்டர் சொல்லி கேட்ட பிறகுதான் எனக்கு நிம்மதியா இருக்கு" என்றார். டிஸ்சார்ஜ் ஷீட் ரெடியானதும் நால்வரும் வீட்டிற்கு கிளம்பினர்.

நித்யா போய் இவ்வளவு நேரமாச்சு, ஒரு போனையும் காணோம் என்று நினைத்து க்ரிஷ்க்கு கால் செய்தால். க்ரிஷ் நித்யாவின் காலைப் பார்த்து, 'ஐயோ! இவளுக்கு சொல்ல மறந்துட்டேனே... கிளம்பும்போதே ரொம்ப பயத்தோட இருந்தாளே!' என நினைத்து காலை அட்டன்ட் செய்தவன், "சாரி நித்யா, ஹாஸ்பிடல் அலைஞ்சதுனாலை கால் பண்ண மறந்துட்டேன்" என்றான்.

நித்யா, "அதை விடுங்க, டாக்டர் என்ன சொன்னாங்க? மாமாவுக்கு இப்போ எப்படி இருக்கு" என்றாள்.

க்ரிஷ், "நித்யா, ஏன் இவ்வளவு டென்ஷனா பேசுற? அப்பாவுக்கு ஒன்னும் இல்லை.  ஸ்கேன் கூட எடுத்துப் பார்த்தோம், காலில் சுளுக்கு தான் விழுந்து இருக்கு, வேற எந்த பிரச்சனையும் இல்லை. டிஸ்சார்ஜ் கூட பண்ணிட்டோம், இப்ப வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம்" என்றான்.

நித்யாவிற்கு இதைக்கேட்டதும் இவ்வளவு நேரம் இருந்த பயம் நீங்கியது. "சரிங்க பார்த்து வாங்க" என்று காலை கட் செய்தாள்.

நித்யா, 'வீட்டிற்கு அவர்கள் வந்ததும் இந்த பிரச்சினை கண்டிப்பாக பூதாகரமாக கிளம்பும். இதை ஆரம்பித்தது நான் தான், எது வந்தாலும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்' என்று நினைத்து அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். கார் ஹாரன் அடிக்க எழுந்து சென்று பார்த்தாள். அவர்கள் வந்துவிட்டனர்.

க்ரிஷ் ராஜனை கைத்தாங்கலாக அழைத்து வந்தான். நித்யா  அவர்களுக்கு தண்ணி எடுத்து வந்து கொடுத்தாள். கோகிலா வந்ததும் ஆரம்பித்துவிட்டார், "பத்மா, யாரு அவங்க தண்ணி ஊத்துனது என்று கேளு" என்றார்.

பத்மா, "சுமதி..." என்று அழைத்தார்.
நித்யா, "அத்தை நான் தான் தெரியாம கால் தவறி தண்ணியை கொட்டிட்டேன்" என்று உள்ளூர பயத்துடனே கூறினாள்.

கோகிலா இதைக்கேட்ட அவளைப் பிடித்துக் கொண்டார். "உனக்கு அறிவே இல்லையா? இப்படித்தான் பொறுப்பில்லாமல் நடந்துக்குவியா? ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிருந்தா என்ன பண்றது? அம்மா அப்பா இருந்திருந்தால் எல்லாம் சொல்லிக் கொடுத்து பொருப்பா வளர்த்து இருப்பாங்க. இப்படித் தேடி போய் ஒரு அனாதையை கூட்டிட்டு வந்திருக்கீங்க" என்றார்.

இதைக் கேட்டு க்ரிஷ்க்கு கோபம் வந்துவிட்டது. அத்தை அவ தெரியாம பண்ணினா. அதுக்கு போய் அநாதை அது இதுன்னு பேசுறீங்க... அவ என் பொண்டாட்டி" என்றான் சத்தமாக.

பத்மாவிற்கு எப்படி இந்த  சண்டையை நிறுத்துவது என்று தெரியவில்லை. இருவருமே கோபக்காரர்கள். கோகிலா, "அவ தெரியாம எல்லாம் பண்ணலை. வேணும்னே தான் பண்ணி இருக்கா. அவ தான தண்ணி ஊத்துனா.... அப்போ என் தம்பி வரும்போது தண்ணி இருக்கு என்று சொல்லி இருக்கணும் இல்ல. ஆனால் அவ அதை வேடிக்கை பார்த்துட்டு இருந்துருக்கா....." என்றார்.

நித்யா அழுதுகொண்டே, "இல்ல, போன் வந்தது. அதுதான் பேச போனேன். நான் வேணும்னே பண்ணல" என்றாள்.

க்ரிஷ், "அத்தை, நீங்க வேணும்னே என் பொண்டாட்டி மேல பழி போடாதீங்க. இப்படித்தான் நேத்து என் பொண்டாட்டிய அனாதை, ஒன்றும் இல்லாதவ என்று வாய்க்கு வந்தபடி பேசி இருக்கீங்க. உங்கள உண்டு இல்லை என்று பண்ணிடலாம்னு என்று நினைச்சேன். ஆனால்  நித்யா சொன்னதாலதான் நான் விட்டு விட்டேன்" என்றான்.

கோகிலா பேச  க்ரிஷ் பதிலுக்கு பேச என இருவருக்கும் சண்டை முட்டி விட்டது. பத்மாவும் ராஜனும் இருவரிடமும் சண்டை போட வேண்டாம் என்று சண்டௌயை நிறுத்தி விட முயற்சி செய்தனர். நித்யாவும் க்ரிஷை தடுக்க முயற்சித்தாள்.

ஆனால் இருவரும் எதையும் கண்டுகொள்ளாமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவில்  கோகிலா கோபித்துக்கொண்டு யார் சொல்வதை கேட்காமல் வெளியேறிவிட்டார். பத்மாவும் ராஜனும் க்ரிஷை கடிந்து கொண்டபோது க்ரிஷ் நான் சொன்னது சரிதான் என்று முடித்து விட்டான்.

*************************

இரண்டு நாள் கழித்து மீண்டும் ரஞ்சனாவை அந்த மனநல மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர். ரஞ்சனா இந்த முறை மிகவும் கலாட்டா பண்ணி விட்டாள். "நான் என்ன பைத்தியமா? என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு போறீங்க...? நான் வரமாட்டேன்" என்று கத்தினாள்.

மேகலா தான் அவளிடம் சண்டை போட்டு கோபித்துக்கொண்டு பேசமாட்டேன், சாப்பிட மாட்டேன், என பிளாக்மெயில் செய்தே அவளை அழைத்து வந்தார். இந்த முறை ரஞ்சனா மட்டுமே டாக்டர்  அறைக்குச் சென்றாள்.

சுகந்தி புன்னகையுடன், "வாங்க ரஞ்சனா..." என்று வரவேற்றார். ரஞ்சு முகத்தை வேறுபக்கம் திருப்பிகொண்டாள். சுதந்தி இன்னும் மாறாத புன்னகையுடன் அவளிடம் பேசினார், "ரஞ்சனா, சாப்பிட்டியா?" என்றார். அவளிடம் பதிலில்லை.

சுகந்தி மனம் தளராமல் மீண்டும் அவளின் பேச முயற்சித்தார். சுகந்தி, "ரஞ்சனா உனக்கு மீரான்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?" என்றார்.

மீரா என்ற பெயரைக் கேட்டதும் ரஞ்சனா வேகமாக திரும்பி சுகந்தியை பார்த்தாள். சுகந்தி மீராவைப் பற்றி பேசினால் தான் இவ கிட்ட க்ளோஸ் ஆக முடியும் என தெரிந்துகொண்டு மீராவைப் பற்றி பேசினார்.

சுகந்தி, "ரஞ்சு, மீராவை ஏன் உனக்கு பிடிக்கும்?" என கேட்டார். ரஞ்சனா மீராவை பற்றிய விஷயம் என்பதால் பதில் கூறினாள். "எனக்குத் தெரியல, ஆனா ரொம்ப பிடிக்கும்" என்றாள்.

சுகந்தி, "அப்படியா... நீ மீராவை எப்போ முதல் முதலில் பார்த்த?" என்றார்.

"நான் அவளை என்னோட 10 வயசுல தான் முதன் முதலாக பார்த்தேன்" என்று அன்று நடந்த நிகழ்வை கூற தொடங்கினாள்.

அன்று ரஞ்சுவின் பத்தாவது பிறந்தநாள். ரஞ்சு தன் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றிருந்தாள். சதாசிவம் கோவிலின் முன் கார் நிறுத்த இடம் இல்லாததால் எதிரிலிருந்த ரோட்டிற்கு அந்தப்புறம் காரை நிறுத்தினார். மூவரும் இறங்கி ரோட்டை கடந்து கோவிலுக்கு சென்றனர்.

ரஞ்சனாவின் பெற்றோர் ரஞ்சனாவின் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராமல் அவள் தீர்க்காயுசோட இருக்கணும் என்று வேண்டினர். ஒன்றும் அறியாத அந்த வயதில் ரஞ்சு தன் கைகளை கூப்பி பெற்றோரைப் போலவே செய்து கொண்டிருந்தாள்.

ரஞ்சனா அந்த வயதில் துறுதுறுவென்று இருப்பாள். அவர்கள் கடவுளை வணங்கிவிட்டு வெளியே வந்தனர். சதாசிவமும் சுஜாதாவும் வருவதற்குள் ரஞ்சனா கார் அருகே செல்வதற்காக ரோட்டில் ஓடினார். சதாசிவமும் சுஜாதாவும் பயந்து அவள் அருகில் ஓட ரஞ்சுவை நோக்கி ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.

ரஞ்சனா அந்த காரை பார்த்து பயத்தில் அப்படியே நின்றுவிட்டாள். வேகமாக ஒரு கரம் வந்து அவளை தூக்கியது. அதை பார்த்ததும் தான் சதாசிவத்திற்கும் சுஜாதாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது. சுஜாதா ஓடி சென்று குழந்தையை வாங்கிக் கொண்டார்.

சதாசிவம் அப்பெண்ணிடம், "ரொம்ப நன்றிமா, நீங்க எங்க பொண்ணை காப்பாற்றி ரொம்ப பெரிய உதவி செஞ்சி இருக்கீங்க..." என்றார்.

அவர், "இருக்கட்டும், இதுக்கு எதுக்கு  நன்றி சொல்றீங்க... குழந்தையை பத்திரமா பார்த்துக்கோங்க" என்றார்.

சதாசிவம், "இவ்வளவு நேரம் என் கைய புடிச்சு தான் இருந்தாள். திடீர்னு கையை விட்டுவிட்டு ஓடிவந்துட்டா" என்றார்.

சுஜாதா பயத்தில் ரஞ்சனாவை இருக்கமாக கட்டிக் கொண்டார். அவர் கண் கலங்கிவிட்டது.

ரஞ்சு, "அம்மா ஏன் அழுகுற.." என்று கண்ணீரை துடைத்தாள். அப்பெண் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை வந்து அம்மா என்று அழைத்தது.

சுஜாதா அந்த குழந்தையை பார்த்துவிட்டு, "உங்க பொண்ணா?" எனக் கேட்டார். அவர் ஆமா என்று கூறினார்.

ரஞ்சு அவளிடம், "ஹாய்! என் பெயர் ரஞ்சனா" என்றாள். அவள், "நான் மீரா.." என்று கூறி புன்னகைத்தாள்.

ரஞ்சு, "பிரண்ட்ஸ்..." என்று கூறி கை நீட்ட மீராவும் கை குலுக்கினாள். இதை பார்த்த பெற்றோர்கள் புன்னகைத்தனர். சுஜாதா தன்னை அறிமுகப்படுத்த அப்பெண், "என் பெயர் மேகலா" என்றார்.

சதாசிவம் அவர் கையில் சூட்கேஸ் இருப்பதை பார்த்து, "எங்கேயாவது ஊருக்கு போறீங்களா? வாங்க நாங்க உங்களை டிராப் பண்ணட்டுமா?" என்றார். இதைக் கேட்டதும் மேகலாவின் முகத்தில் சொல்லவென்னா துயரம். அதை சுஜாதாவும் சதாசிவம் கவனித்தனர்.

மேகலா தன்னை சமன்படுத்திக் கொண்டு, "இல்ல, நாங்களே போய்க்கிறோம்" என்றார். மலைகள் பேசி நண்பர்களாகிவிட்டனர்.

ரஞ்சு சுஜாதாவிடம், "அம்மா, மீராவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவோமா?" என்றாள் மழலை குரலில்.

சுஜாதா சதாசிவத்திடம், "அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன். நம்ம பொண்ணை காப்பாத்தின அவங்களுக்கு நம்மை ஏதாவது உதவி செய்யணும். பாப்பா சொல்ற மாதிரி அவங்களை நம்மளோட கூட்டிட்டு போய்டலாம்" என்றார். சதாசிவம் அதை ஆமோதித்து மேகலாவிடம் கேட்க அவர் மறுத்துவிட்டார்.

சுஜாதா, "அக்கா, என்ன உங்க தங்கச்சியா நினைச்சுக்கோங்க. இப்போ உங்களுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன். நீங்க எங்க கூட வாங்க, நாங்க உங்க பிரச்சனை பற்றி நீங்கள் சொல்ற வரைக்கும் கேட்க மாட்டோம்" என்று பேசி அவரை சம்மதிக்க வைத்து அழைத்து சென்றனர். அப்போதிலிருந்து  இருவரும் இணைபிரியா தோழிகள் ஆயினர், என்று நடந்ததை ரஞ்சனா கூறி முடித்தாள்.

                                 கரைவாள்.....

 


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 44
12/09/2020 3:23 pm  
உன் காதலில் நானும் கரைவேனா? 33

சில நாட்கள் கடந்து இருந்தது. கோகிலா சென்ற பிறகு அந்தப் பிரச்சினை பற்றி யாரும் பேச வேண்டாம் என்று க்ரிஷ் கூறிவிட்டான். அதனால் அது
பூதாகாரமாகவில்லை.

நாட்கள் எந்த பிரச்சினையுமின்றி அமைதியாகவே நகர்ந்தது.   க்ரிஷ் வேலையில் பிஸியாக இருந்தான். இரவு வெகு தாமதமாகவே வீட்டிற்கு வந்தான்.  வேலைப்பளு அவனுக்கு அதிகமாக இருந்தது.

கிரிஷ் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தான். "மே ஐ கம்மின் சார்.." என்று குரல் கேட்க, க்ரிஷ், "எஸ் கம்மின்" என்றான். க்ரிஷ்ஷின் பி.ஏ ராஜ் உள்ளே நுழைந்தான்.

க்ரிஷ், "சொல்லு ராஜ், என்ன விஷயம்?" என்றான்.  ராஜ், "சார், மும்பையில நடக்கிற இன்டர்நேஷனல் கான்பிரன்ஸ்க்கு உங்களுக்கு இன்விடேஷன் வந்து இருக்கு" என்றான்.

க்ரிஷ், "அப்படியா! எப்போ அந்த கான்பிரன்ஸ் நடக்குது?" என்றான்.

ராஜ், "சார், திங்கள் கிழமை  நடக்குது" என்றான். 

க்ரிஷ், "திங்கள்  கிழமையா?  ஏற்கனவே எனக்கு ஒர்க் லோட் அதிகமா இருக்கு
இந்த கவர்மெண்ட் கான்டிராக்ட்காக நான் ரொம்பவே ஹார்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். இதுல இந்த கான்பிரன்ஸ்க்கு போக எனக்கு ஏது டைம்? எப்படியும் மும்பைக்கு போய்ட்டு வந்தா ஒரு நாள் முழுக்க தேவைப்படும்" என்றான். 

ராஜ், "சார் நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.  ஆனால் இதுல ரொம்ப அரிதாக நடக்குற கான்பிரன்ஸ். இதுல நிறைய பிசினஸ்மேன்ஸ் எல்லாம் வருவாங்க, அங்க போனா உங்களுக்கு நிறைய காண்டாக்ட் கிடைக்கும் என்றவன், கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்க" என்றான். 

க்ரிஷ், "ராஜ், நான் போறதா இல்லையானு யோசிச்சுட்டு உன்கிட்ட சொல்றேன்" என்றான். 

ராஜ், "சார், கொஞ்சம் சீக்கிரம் முடிவு பண்ணுங்க. அப்பதான் பிளைட் டிக்கெட் புக் பண்ண முடியும்" என்றான். 

க்ரிஷ் சரியென்று தலை அசைத்தான்.  அங்கு செல்லலாமா வேண்டாமா என்று யோசித்தவன்  அப்புறமா அதை பற்றி முடிவெடுக்கலாம் என்று நினைத்து வேலையை கவனிக்கலானான். 

"என்ன மச்சான், ரொம்ப பிசியா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் சுரேன்.

க்ரிஷ், "ஆமாடா, இந்த காண்ட்ராக்ட் முடிஞ்ச பிறகுதான் நான் கொஞ்சம் ஃப்ரீயா ஆவேன்" என்றான்.

சுரேன், "வேலை வேலைன்னு உடம்பை கெடுத்துக்  கொள்ளாத!  நேரத்துக்கு சாப்பிடு, வீட்டுக்கு போ" என்றான். 

க்ரிஷ், "சரிடா, நீ வீட்டு பக்கமே வரவிலைன்னு என்கிட்ட உன் தங்கச்சி கம்ப்ளைன்ட் பண்றா. அவ  உன் மேல கோவமா இருக்கா. அவ  உன்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டா" என்றான்.

சுரேன் புன்னகையுடன், "என் தங்கச்சியை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும், நான் பார்த்துக்குறேன்" என்றான்.

க்ரிஷ், "உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வரமாட்டேன், நீ என்னமோ பண்ணு என்றவன், மச்சான் உனக்கு மும்பை கன்பரன்ஸ்க்கு இன்விடேஷன் வந்துச்சா?"

சுரேன், "வந்துச்சுடா..."

க்ரிஷ், "போற ஐடியா இருக்கா?" என்க,

சுரேன், "ஆமாடா! அப்பா கூட போயிட்டு வரலாம்னு சொன்னாரு. அதான் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
நீ மச்சான்?" என்றான்.

க்ரிஷ், "இல்லடா, போகல. ஏற்கனவே வேலை தலைக்கு மேலே இருக்கு" என்றான்.

சுரேன், "மச்சான் இது நல்ல சான்ஸ், வர மாட்டேன்னு சொல்லாத, கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் கூட நீ போகலை​. தங்கச்சியை கூட்டிட்டு போயிட்டு வாடா, கல்யாணம் முடிஞ்சு எத்தனை நாளாச்சு என் தங்கச்சியை  எங்கேயாவது வெளில கூட்டிட்டு போனியா? நித்யாவுக்கு உன் கூட வெளியே போகணும்னு ஆசை இருக்காதா? என்றான். 

க்ரிஷ்ஷிற்கு சுரேன் சொல்வது சரி என்றே தோன்றியது. 'கல்யாணம் முடிந்த பிறகு கோவிலுக்கு கூட அவளை அழைத்துச் செல்லவில்லை. வேலை அதிகமிருப்பதால் இரவு பத்து மணிக்கு மேல தான் வீட்டுக்கு போறேன். அவ கூட சரியாய் பேசுவதுகூட இல்லை. அவளுக்கும் ஆசைலாம் இருக்கும்ல, ஒரு தடவை கூட அது பத்தி என்கிட்ட கேட்டதில்லையே! அவளுக்காவாது  இந்த கான்பிரன்ஸ்க்கு போகணும்' என நினைத்தவன் சுரேனிடம், "மச்சான், நீ சொல்றது சரிதான். இந்த கான்பிரன்ஸ்க்கு நித்யாவோட போறேன்" என்றான். 

சுரேன், "நான்அப்பா கூட திங்கட்கிழமை காலையில் தான் வருவேன். நீங்க ஞாயிற்றுக்கிழமையே கிளம்பிப் போங்க. அன்னைக்கு ஒரு நாள் மும்பையை சுற்றி பார்த்துவிட்டு மறுநாள் கான்பிரன்ஸ் அட்டண்ட் பண்ணிட்டு வாங்க" என்றான்.

க்ரிஷ், "மச்சான்,  நல்ல ஐடியா குடுத்திருக்க.... இப்பவே ராஜ் கிட்ட சொல்லி டிக்கெட் புக் பண்ண சொல்றேன்" என்றான். பின் சிறிது நேரம் பேசிவிட்டுக் சுரேன் கிளம்பிவிட்டான்.

கிரிஷ்ஷிக்கு நித்யாவுடன் மும்பை செல்லப்போகிறோம் என்று நினைக்கவே மகிழ்ச்சியாக இருந்தது. அந்த குஷியில் வேகமாக தன் வேலையை முடித்துவிட்டு சீக்கிரமாக வீட்டிற்க்கு கிளம்பினான். க்ரிஷ்ஷின் பெற்றோர் சாப்பிட்டு  உறங்கிவிட்டனர்.

நித்யா மட்டும் க்ரிஷ்ஷிற்காக  ஹாலில் காத்திருந்தாள். க்ரிஷ் வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் பார்த்தது அவனுக்காக சோபாவில் காத்திருந்த நித்தியைத்தான்.

க்ரிஷ் இருந்த குஷியில் ஓடிச்சென்று அவளை தூக்கி சுத்த ஆரம்பித்து விட்டான். அவனது செய்கையில் நித்யா பதறிக்கொண்டு, "இறக்கிவிடுங்க... என்ன பண்றீங்க? அத்தை மாமா யாராவது வந்துட போறாங்க..." என்றாள்.

அவளது பதட்டத்தை பார்த்து சிரித்துக்கொண்டே அவளை இறக்கிவிட்டவன், "யாரு வந்தா எனக்கு என்னடி? நீ என் பொண்டாட்டி டி" என்றான்.

நித்யா, "உங்களுக்கு என்ன? எனக்கு தான் எல்லாம் என்றவள், ஆமா சார் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல.." என்றாள்.

க்ரிஷ், "ரொம்ப இல்ல, ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.." என்றான்.

நித்யா, "அதுக்கு காரணம் என்ன என்று நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றாள்.

கரிஷ், "ஓ... தாராளமா, உனக்கு சொல்லாமலா... நாம வர்ற ஞாயிற்றுக்கிழமை ஹனிமூன் போக போறோம். அதான் ஐயா இவ்வளவு சந்தோஷமா இருக்கேன்" என்றான்.

நித்யா இதைக் கேட்டதும் சந்தோஷமாக, "உண்மையாவா..?" என்றாள்.

க்ரிஷ், "உண்மைக்கே தான்... இந்த விஷயத்தில நா பொய் சொல்வேனா என் பொண்டாட்டி" என்றான். 

நித்யா, "இல்ல, நீங்களே கவர்மெண்ட் கான்டிராக்ட் வேலைல ரொம்ப பிசியா இருக்கீங்க... இப்பலாம்  வீட்டுக்கு வரவே லேட் ஆகுது. அதான் அப்படி கேட்டேன்" என்றாள்.

க்ரிஷ், "ஆயிரம் வேலை இருந்தாலும் எனக்கு என் பொண்டாட்டி தான் முக்கியம், புரிஞ்சுதா?" என்றான்.

நித்தி, "பேசினது போதும், சரி முதல்ல பிரஷ் ஆயிட்டு வந்து சாப்பிடுங்க, டைம் ஆகிடுச்சு.... உங்களுக்கு பசிக்கும், அப்புறம் மற்றதை பேசலாம்" என்றாள். 

க்ரிஷ், "நித்தி, சாப்பாடெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். ஃபர்ஸ்ட் உன்கிட்ட கொஞ்சம் பேசணும், வா உட்காரு.." என்றான்.

நித்தி அவனருகில் அமர்ந்து, "சொல்லுங்க..." என்றாள்.

க்ரிஷ், "நித்தி, நம்மளுக்கு கல்யாணமாகி கிட்டத்தட்ட ஒரு மாசமாகப் போகுது. கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன்னை எங்கேயுமே கூட்டிட்டு போகலை. இப்பலாம் லேட்டா வர்றதுனால உன்கிட்ட சரியா பேசுவதுகூட இல்லை. இதுவே உன் இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா கண்டிப்பா என் கிட்ட இதெல்லாம் கேட்டு சண்டை போட்டு இருப்பா, இல்லை அட்லீஸ்ட் இதை நினைத்து வருத்தப்பட்டாவது இருப்பா. ஆனா நீ என்கிட்ட சின்ன வருத்தம் கூட இல்லாமல் எப்போதும் போலவே நடந்துக்கிற, எப்படி?" என்றான்.

நித்யா புன்னகையுடன், "சண்டை போடுவதெல்லாம் புரிதல் இல்லாத இடத்தில தான் நடக்கும். அதனால தான் பிரச்சனை வரும். எனக்கு உங்க கிட்ட நிறைய புரிதல் இருக்கு. நான் உங்க சூழ்நிலையே புரிஞ்சுகிட்டேன். நீங்க என்ன வேணும்னா என்கிட்ட இந்த மாதிரி நடந்துக்கிறிங்க... உங்களுக்கு வேலை இருக்கு, அதனாலதான் கொஞ்சம் பிசியா இருக்கீங்க. இதெல்லாம் தெரிந்தும் நான் உங்ககிட்ட சண்டை போடட்டேன்னா அது என்னோட வீம்புக்காக தான் இருக்கும்" என்றாள். 

"அப்புறம் இன்னொரு விஷயம், எங்கேயாவது கூட்டிட்டு போறது புடிச்ச விஷயத்தை செய்கிறது இதெல்லாம் பண்ணாத உண்மையான அன்பு இருக்குன்னு அர்த்தம் கிடையாது" என்றாள்.

க்ரிஷ், "என்னடி இப்படி சொல்லிட்ட... நீ என் கிட்ட சண்டை போட்டா உன்னை கெஞ்சிக் கொஞ்சி சமாதானப்படுத்தலாம்னு நினைச்சேன். நீ சொல்றதை பார்த்தா நீ என்கிட்ட எப்பவுமே சண்டை போட மாட்ட போலையே!" என்றான். 

நித்தி, "ரொம்பதான் ஆசை! உங்களுக்காக எல்லாம் நான் சண்டை போட முடியாது. போய் பிரஷ் வாங்கிட்டு வாங்க, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்றாள். 

க்ரிஷ், "நித்தி கோச்சிக்கிட்டியா? நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீ எனக்கு வாழ்க்கை துணையா கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். எத்தனை பேருக்கு அவங்கள புரிஞ்சுகிட்ட வாழ்க்கைத் துணை கிடைச்சுருக்கு அப்படின்னு எனக்கு தெரியலை. ஆனா என்னை புரிஞ்சுகிட்ட நீ எனக்கு கிடைச்சிருக்க.." என்றான். 

நித்யா, "நீங்க வைக்கிற ஐஸ்ல எனக்கு ஃபீவரே வந்துரும் போல.." என்று கூறிக்கொண்டே சாப்பாடு எடுத்துவைக்க கிச்சனுக்கு சென்றாள். க்ரிஷ் புன்னகையுடன் ரூமை நோக்கி சென்றான்.

                  ******************

நாட்கள் செல்ல ரஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக தேறிக் கொண்டிருந்தாள். ஆனால் அவ்வப்போது மட்டும் மீராவின் ஞாபகம் வந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். சில சமயம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பாள். 

மனநல மருத்துவமனைக்கு செல்ல இப்போதெல்லாம் அவள் அடம் பிடிப்பதில்லை.  டாக்டர் சுகந்தி ரஞ்சுவிடம்  நெருங்கி அவளுடைய
தோழியாகியிருந்தார். அவர் மீராவைப் பற்றி பேசுவதால் ரஞ்சுவும் ஆர்வமாக மருத்துவமனைக்கு சென்றாள். சுகந்தி ரஞ்சுவிற்க்கு இரண்டாம் நிலை தெரபி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். சுகந்தியின் அறைக்குள் ரஞ்சு நுழைந்தவுடன் சுகந்தி, "வா ரஞ்சு.." என்று புன்னகையுடன் வரவேற்றார்.

ரஞ்சு பதிலுக்கு புன்னகைத்தாள். சுகந்தி, "ரஞ்சு, காலையில் என்ன சாப்பிட்ட?" என்றார். ரஞ்சு யோசித்துவிட்டு, "நான் காலையில் சாப்பிடவில்லை" என்றாள். 

சுகந்தி, "ஏன் சாப்பிடல?"  என்க,
ரஞ்சு, "பசிக்கலை,  அதனால சாப்பிடல" என்றாள்.

சுகந்தி, "அப்படிலாம் சொல்லக் கூடாது. இனிமே பசிச்சாலும் பசிக்கலனாலும் சரியான நேரத்துக்கு சாப்பிடணும்" என்றார்.  ரஞ்சு சரியென்று தலையாட்டினாள். 

சுகந்தி, "நேற்று எதில விட்டோம்?" எனக் கேட்க ரஞ்சு, "நானும் மீராவும் ஸ்கூல்ல ஜாயின் பண்ண வரைக்கும் சொன்னேன். ஒரே ஸ்கூல்ல போனப்பிறகு  நானும் மீராவும் எப்போதும் வீட்லயும் ஸ்கூல்லயும் ஒண்ணாதான் இருப்போம்.  மீரா நல்லா படிக்கிற பொண்ணு அவதான் எப்பவும் முதல் ரேங்க் எடுப்பா. எனக்கு பாடம் புரியலைன்னாலும் பொறுமையாய் எத்தனை தடவை கேட்டாலும் சொல்லிக்கொடுப்பா. அவ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.."

"எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி செய்வா. யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக நிற்பா. அதனாலதான் எனக்கு அவளை  ரொம்ப பிடிக்கும்" என்று மீராவைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஆர்வமாக ரஞ்சு கூறினாள்.

சுகந்தியும் ரஞ்சி கூறுவதை பொறுமையாக கேட்டார்.  ரஞ்சு இன்றுவரை பேசியதிலிருந்து சுகந்தி அறிந்து கொண்டது மீரா ரஞ்சுவின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒருத்தி. அவள் இழப்பை ரஞ்சுவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறாள். இவளை அந்த விஷயத்தில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கு வேறு ஏதாவது விஷயத்தில் இவளின் கவனத்தைத் திருப்ப வேண்டும். அதன்படி அவளுக்கு சிகிச்சை அளிக்கலாம் என முடிவெடுத்தார்.

                                       கரைவாள்....

 

 

ReplyQuoteJanu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 44
19/09/2020 7:23 am  

 உன் காதலில் நானும் கரைவேனா? 34

 

க்ரிஷ் நாளைக்கு மும்பைக்கு கிளம்புவதால் வேலைகளை ஓரளவுக்கு முடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். சைன் பண்ண வேண்டிய பைல்களை எல்லாம் இன்றே சைன் வாங்கி விடச்சொல்லி ராஜிடம் சொல்லிவிட்டான்.  க்ரிஷ் அபிசியலாக  மும்பைக்கு சென்றாலும் நித்தியுடன் செல்வதால் எந்த வேலையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்தான். 

ராஜ், "சார், நானே உங்ககிட்ட சொல்லலாம்னு நெனச்சேன். கல்யாணம் ஆன பிறகு ஹனிமூன் கூட போகலைன்னு.... மேடம் கூட மும்பைக்கு ஒரு ட்ரிப் மாதிரி போயிட்டு வாங்கன்னு... ஆனால் நீங்களே அதை பண்ணிட்டிங்க" என்றான்.

க்ரிஷ் புன்னகையுடன், "சுரேந்தரும் இதைத்தான் சொன்னான்" என்றான்.

ராஜ், "ஓகே சார், ஆல் த பெஸ்ட்" என்க, கிரிஷ் ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான். ராஜ் வெளியே சென்றவுடன் க்ரிஷ் எல்லோருக்கும் இந்த விஷயம் தோணிருக்கு எனக்கு மட்டும் தான் தோணலை.  நான் வேலை வேலைன்னு இருந்துட்டு நித்யாவை கவனிக்காம விட்டுட்டேன். பிசினஸில் மட்டும் ஜெயிச்சா பத்தாது வாழ்க்கையில தோற்கக் கூடாது என நினைத்தவன் இனிமேல் நித்யாவுக்காகவும் நேரம் செலவழிக்கவனும் என நினைத்துக் கொண்டான்.

பத்மாவதி, "மும்பைக்கு போக எல்லாம் எடுத்திட்டு வச்சிட்டியா?" என்றார்.

நித்யா, "இல்ல அத்தை, அவர் வந்த பிறகு அவருக்கு எந்த ட்ரெஸ் வேணும்னு கேட்டுட்டு எடுத்து வைக்கணும்" என்றாள்.

பத்மா, "க்ரிஷுக்கு போன் பண்ணி இன்னைக்கு அவனை கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லிடு" என்றார்.

நித்தி, "சரிங்கத்தை.." என்றவள் எதோ கேட்க தயங்க பத்மா, "என்னம்மா? எதுனாலும் தயங்காம கேளு" என்றார். 

நித்தி, "இல்ல அத்தை, எதுக்கு சீக்கிரமா வர சொல்றேன் என்று அவர் கேட்டா என்ன பதில் சொல்றது?" என்றாள்.

பத்மா சிரித்துக்கொண்டே, "இத கேட்க தான் இவ்வளவு தயங்குனியா? இப்பதான் நான் என் சித்தி கிட்ட பேசினேன். அவங்க தான் கல்யாணம் ஆன பிறகு நீங்க முதல் தடவை வெளியே போறீங்க, கோயிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க. அதான் அவன் சீக்கிரம் வந்தா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பக்கத்துல இருக்க அம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்க" என்றார்.

நித்யா, "சரிங்க அத்தை, அவர்கிட்ட சொல்லிட்டு நான் கிளம்புறேன்" என்றாள். நித்தி  க்ரிஷ்ஷிற்கு கால் செய்வதற்காக போனை எடுக்க அவளுக்கு அழைப்பு வந்தது.  யார் என்று பார்க்க அம்மா என்று வர அட்டெண்ட் செய்து, "சொல்லுங்கம்மா..." என்றாள்.

"நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?" என்றாள். மறுமுனையில், "நான் நல்லா இருக்கேன்" என்று பதில் வந்தது. பின் சில நிமிடங்கள் பேசி முடித்து போனை கட் செய்தவள்  க்ரிஷ்ஷிற்கு  கால் செய்தாள்.

க்ரிஷ் காலை அட்டென்ட் செய்து, "சொல்லு பொண்டாட்டி.." என்றான். 

"வேலையா இருக்கீங்களா..?" 

"ஆயிரம் வேலை  இருந்தாலும் உனக்காக தள்ளி வைச்சுடுவேன்,  சொல்லு என்ன விஷயம்?"

"இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா?"

"வர முடியுமா என்ன? வான்னு சொன்னா வரப்போறேன். அதுவும் என் பொண்டாட்டி என் கிட்ட முதல் முதலாக ஒரு விஷயம் கேட்ருக்கா? செய்யாம இருப்பேனா? எத்தனை மணிக்கு வரணும்?" என்றான்.

நித்யா சிரித்துக்கொண்டே, "அஞ்சு மணிக்கு வந்துடுங்க..."  என்றாள்.

க்ரிஷ், "ஐந்து மணிக்கு ஷார்ப்பா வீட்டில இருப்பேன்" என்றான்.

நித்யா அடர் பச்சை நிறத்தில் ஒரு புடவை அணிந்து அதற்கு ஏற்ப எளிமையான நகைகள் அணிந்து இருந்தாள்.  கிளம்பி ரெடியாகி கண்ணாடியில் பார்க்க அவரளுக்கு திருப்தியாக இருந்தது. 

நித்யா கீழே வர பத்மா அவளை பார்த்துவிட்டு, "நித்யா இந்த புடவையில நீ ரொம்ப அழகா இருக்க, என் கண்ணே பட்டுடும் போல, உனக்கு சுத்தி போடணும்" என்றார். நித்தி புன்னகையுடன், "தேங்க்ஸ் அத்தை..." என்றாள்.

க்ரிஷ் சொன்ன மாதிரியே சரியாக ஐந்து மணிக்கு வந்து விட்டான். க்ரிஷ் நித்தியைப் பார்த்து ஒரு நிமிடம் அசந்து விட்டான்
"வாவ்! செமையா இருக்க.." என்று விசில் அடித்தான். 

நித்தி வேகமாக அவன் வாயை பொத்தி, "அத்தை கிச்சன்ல இருக்காங்க..." என்றாள். க்ரிஷ், "என்னடி வந்தவுடனே இப்படி கண்ணுக்கு குளிர்ச்சியா நிற்கிற..." என்று கூறி அவளை அணைக்க வர நித்தி வேகமாக விலகிப்போய், "குளிச்சிட்டு வாங்க, கோயிலுக்கு போகனும்" என்றாள்.

க்ரிஷ், "என்னது கோவிலுக்கு போறோமா? நான் கூட நீ சீக்கிரம் வரச் சொன்னதால வேற எங்கேயாவது போக தான் கூப்பிடுறயோன்னு நினைச்சேன்" என்றான்.

நித்தி, "வேற எங்க போக கூப்பிட போறேன், கோவிலுக்கு போக தான் கூப்பிட்டேன். போய் குளிச்சுட்டு வாங்க.." என அவனை பாத்ரூமிற்கு தள்ளினாள். 

சிறிது நேரத்தில் க்ரிஷ் குளித்து கிளம்பி வந்தான். நித்தியாவின் கண்கள்  அவனைப் பார்த்து  ஆச்சர்யத்தில் விரிந்தது. அவன் டீ சர்ட் பேண்ட் போட்டிருந்தான். எப்போதும் கோட்ச சூட்தான் அணிவான்.  எல்லாம் ஒரு நிமிடம் தான், அவன் பார்ப்பதற்குள் நித்தி பார்வையே அகற்றிவிட்டாள்.

க்ரிஷ் கீழே இறங்கி வந்து, "கிளம்பலாமா? நான் ரெடி" எனக் கேட்க,

நித்யா, "போகலாம் ஒரு நிமிஷம் என்றவள், அத்தை.." என்று அழைத்தாள்.

பத்மா, "சொல்லு நித்யா..." என்று குரல் கொடுக்க, "அத்தை ஒரு நிமிஷம் வரீங்களா?" என்றாள்.

பத்மா, "சொல்லு நித்யா என்ன?" என்று கேட்க, "உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கணும், மாமா எங்க?" என்று கேட்டாள்.

பத்மா, "அவர் வெளியே போயிருக்காரு.." என்க,

நித்யா, "பரவால்ல, நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க.." என்று க்ரிஷ்ஷுயடன் காலில் விழுந்தாள்.

பத்மா, "ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க... சீக்கிரமா ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடுங்க என்றவர், பார்த்து போய்ட்டு வாங்க.." என்றார்.

க்ரிஷ், "கண்டிப்பா செய்றேன், கவலைப்படாதீங்க! நீங்க  ஆசைப்பட்ற மாதிரி சீக்கிரமா ஒரு குழந்தையை பெத்துத் தரோம்" கொடுக்கிறோம் என்றவன் நித்யாவைப்  பார்த்து கண்ணடித்தான். நித்யா அவன் செயலில் அதிர்ந்து வேறு புறம் திரும்பி விட்டாள்.  இருவரும் காரில் கிளம்பினார்கள்.

க்ரிஷ், "நித்தி, அம்மா சொன்னதை கேட்டியா?" என்க,

நித்தி, "அத்தை சொல்லி நான் எதை கேட்காமல் இருந்திருக்கேன்.. அவங்க சொல்ற எல்லா வேலையும் சரியாதான செய்கிறேன்" என்றாள். 

க்ரிஷ், "அட மக்கு பொண்டாட்டி! அம்மா குழந்தை பெற்றுக்கொள்ளத் சொன்னாங்களே, அதை சொன்னேன்." இதைக்  கேட்டு நித்யா  ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள்.

க்ரிஷ், "நித்தி,  திரும்பி என்னை பார்" என்றான்.

நித்யா, "ம்கூம்... திரும்ப மாட்டேன்" என்றாள். 

க்ரிஷ் காரை நிறுத்திவிட்டு, "நித்யா, நீ என்ன பார்த்தா தான் நான் காரை எடுப்பேன்" என்றான்.

நித்தி தன்னை சமன் படுத்தி கொண்டு அவன் புறம் திரும்பியவள், "ஏன் இப்படி நடுரோட்டில் அடம் பிடிக்கிறீங்க..." என்றாள். க்ரிஷ் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நித்தியால் அந்த பார்வையை தாங்க முடியவில்லை. தன்னை சமன்படுத்தி கொண்டு, "நாம போறதுக்குள்ள கோயிலை பூட்டிவிட்டுவாங்க.." என்றுதட்டுத்தடுமாறி கூறினாள்.

க்ரிஷ், "சரி போகலாம், அதுக்கு முன்னாடி நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு. நான் கிட்ட வந்தாலே நீ ஏன் பயப்படுற?" என்றான்.

நித்தி இதற்கென்ன பதில் கூறுவதென்று தெரியாமல் முழித்தாள்.  க்ரிஷ், "என்னைப் பார்த்தா உனக்கு பயமா இருக்கா? இல்லை உனக்கு என்னை பிடிக்கலையா?" என்றான்.

நித்தி அவசர அவசரமாக மறுத்து, "அப்டிலாம் இல்லை, உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்.  நான் ஆசிரமத்தில வளர்ந்ததால உங்க கூட அட்டாச் ஆக கொஞ்ச நாள் ஆகும். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக பழகிட்டு இருக்கேன்" என்றாள்.

க்ரிஷ், "அப்போ ஆபிஸ்ல மட்டும் எல்லார்கூடவும் சுலபமா அட்டாச் ஆகிட்ட..."

நித்தி, "அது ஆபிஸ், காலைல வந்திட்டு ஈவ்னிங் போய்டுவேன். இது அப்பிடியா? என்னோட குடும்பம்... ஆபிஸ மாத்தலாம். குடும்பம் அப்பிடியா?" என்றாள். 

க்ரிஷ், "இதை நீ முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல" என்க, நித்தி பதில் சொல்லவில்லை. 

க்ரிஷ், "இனிமேல்  உனக்கு என்னை தோணுனாலும் என்கிட்ட சொல்லிடனும். அது எதுவாக இருந்தாலும். நீயும் நானும் வேற வேற இல்லை. நான் உன் பக்கத்துல வரலை. உனக்கு கொஞ்சம் டைம் கொடுக்கிறேன்" என்றான்.

நித்தி, "ம்ம்... சரி என்றவள் கோவிலுக்கு டைம் ஆகிடுச்சு, போலாமா?" என்றாள். இருவரும் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வணங்கினர். பின் சிறிது நேரம் சன்னதியில் அமர்ந்துவிட்டு கிளம்பினர்.

காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது நித்யா, "பாஸ்.." என்றழைத்தாள். க்ரிஷ், "என்ன?" என்றான்.

நித்தி, "எனக்கு ஐஸ்கிரீம் வேணும்..." என்றாள். இதைக் கேட்ட க்ரிஷ்ஷின் முகத்தில் புன்னகை அரும்பியது. க்ரிஷ் அவளை ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்து சென்று கேட்டதை விட அதிகமாக வாங்கிக் கொடுத்தான். நித்தி சந்தோஷமாகி விட்டாள். க்ரிஷ் நித்யா இனிமேல் தன்னிடம் தயக்கத்தை விட்டு பேசுவாள் என்ற மகிழ்ச்சியுடன் காரை ஓட்டினான்.

                            ************

காலம் தான் அனைத்திற்கும் மருந்து. நாட்கள் செல்ல செல்ல ரஞ்சுவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். இப்பொழுதெல்லாம் அவள் கத்தி ஆர்பாட்டம் செயவதில்லை. முற்றிலும் மாறியிருந்தாள். பழையபடி கலகலப்பாக இல்லாவிடினும் அமைதியை கடைப்பிடிப்பதில்லை.

மீரா இவ்வுலகில் இல்லை என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிட்டாள். ரஞ்சுவின் பெற்றோருக்கும் மேகலாவிற்கும் ரஞ்சுவின் இந்த மாற்றம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. எங்கே மாறவே மாட்டாளா..? என்று நினைத்து இந்தவர்களுக்கு  இது நிம்மதியை கொடுத்தது. அவளது கவுன்சிலிங்கும் விரைவில் முடியப் போகிறது.

டாக்டர் சுகந்தியும் ரஞ்சுவும் நண்பர்கள் ஆகியிருந்தனர். இன்று ரஞ்சுவிற்கு கடைசி நாள் கவுன்சிலிங். முதல்நாள் கவுன்சிலுக்கிற்கு வர மறுத்தவள் இப்போது முடியப் போகிறது என்று வருத்தப்பட்டாள்.

ரஞ்சு உள்ளே நுழைந்ததும் சுகந்தி, "வா ரஞ்சு.." என வரவேற்றார்.  ரஞ்சு பதிலுக்கு புன்னகைத்தாள்.

சுகந்தி, "என்ன ரஞ்சு, உன் முகமே சரியில்லை... எதுவும் பிரச்சினையா?" என்க, ரஞ்சு, "அதெல்லாம் ஒண்ணுமில்லை..." என்றாள்.

சுகந்தி, "இல்லையே! எதையோ மறைக்கிற மாதிரி இருக்கே" என்றார்.

ரஞ்சு, "முதல்நாள் இங்க ஏன்டா வர்றோம்னு நினைச்சேன். ஆனா இப்போ சீக்கிரம் முடியப் போகுதேன்னு தோணுது" என்றாள் வருத்தமாக.

சுகந்தி, "இவ்வளவுதானா? நான் என்னமோ ஏதோன்னு நெனச்சுட்டேன். உனக்கு என்னை பாக்கனும்னு தோணும்போது இங்க வந்துப் பாரு. உன்னை யாரும் என்ன சொல்லப் போறா?" என்றாள்.

ரஞ்சு, "நிஜமாவா?" 

சுகந்தி, "நிஜமாதான்..." 

ரஞ்சு புன்னகைத்தாள் மகிழ்ச்சியுடன். சுகந்தி, "சரி, ட்ரீட்மெண்ட்க்கு போகலாமா?" என்றாள். ரஞ்சு தலையை ஆட்டினாள்.

சுகந்தி நிறைய கேள்விகள் கேட்டாள். ரஞ்சு அனைத்து கேள்விகளுக்கும் பதில் பொறுமையாக தெளிவாக கூறினாள். சுகந்தி, "ம்ம்... நீ முழுமையா குணமாகிட்ட, இனிமேல் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  நீ நார்மலா உன் லைப்ப லீட் பண்ணலாம். உனக்கு எதுல விருப்பம் இருக்கோ அதை செய்" என்றாள்.

ரஞ்சு, "ம்ம்... சரி இன்னும் என்னப் பன்றதுன்னு யோசிக்கலை. இனிமேல் தான் முடிவெடுக்கனும்" என்றாள்.

சுகந்தி, "சரி உன் அம்மா அப்பாவ வரச்
சொல்லு" என்றாள். ரஞ்சு அவள் பெற்றோரை அழைத்து வந்தாள். சுகந்தி சதாசிவத்திடம், "உங்க பொண்ணு முழுமையா குணமாகிட்டாங்க. இனிமேல் ட்ரீட்மெண்ட்க்கு வரத் தேவையில்லை" என்றாள்.

இதைக் கேட்டு அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி. சதாசிவம், "உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை. நீங்க எங்க வாழ்க்கைக்கு அர்த்தமான என் பொண்ணை திருப்பி குடுத்து இருக்கீங்க....." என்று நா தழுதழுக்க கூறினார்.

சுகந்தி, "இது என்னோட கடமை சார்.." என்று புன்னகைத்தாள்.

சுஜாதா, "ரெம்ப நன்றிம்மா" என்றவர், "கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வரனும்..." என்றார்.

சுகந்தி, "கண்டிப்பா வர்றேன்.." என்றாள். பின் அவர்கள் நால்வரும் விடைப் பெற்றுக் கிளம்பினர்.

                                      கரைவாள்...

 


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 44
19/09/2020 7:26 am  

உன் காதலில் நானும் கரைவேனா? 35

 

க்ரிஷூம் நித்யாவும் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் கிருஷ் ரேடியோவை ஆன் செய்தான்.

"நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே! நீளம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே!
போக போக ஏனோ நீளும் தூரமே!
மேகம் வந்து போகும் போக்கில்தூறல் கொஞ்சம் தூறுமே!
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்... எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்...

நான் பகல் இரவு நீ
கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு....

நீ வேண்டுமே எந்த நிலையிலும்
எனகென நீ போதுமே!"....

என்னும் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது...

இருவருக்கும் அந்த பாட்டை கேட்டு புன்னகை மலர்ந்தது.  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவருக்கும் அந்த பயணம் மிகவும் பிடித்து இருந்தது. அவனுக்கு எந்த பயணம் நீளாதோ..? என்று தோன்றியது.

இருவரும் ஒரு வித புது மனநிலையில் இருந்தனர். அவர்கள் மனநிலையை கலைக்கும் விதமாக அவனின் போன் அடித்தது. எடுத்து பார்த்தான், பத்மா தான் அழைத்திருந்தார். 

காலை அட்டெண்ட் செய்தவன், "சொல்லுங்க அம்மா..." என்றான்.

பத்மா, "என்னடா, எங்க இருக்கீங்க? நேரம் ஆகிடுச்சு... வெளியே சாப்பிட்டுட்டு வரிங்களா? இல்ல நானே சாப்பாடு செய்யட்டுமா?"

க்ரிஷ், "இல்லமா, நாங்க இப்ப வந்துடுவோம்.  எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம். நாம ஒன்னா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு" என்றாள்.

பத்மா, "சரிடா, சீக்கிரம் வாங்க..."  என்று கூறி காலை கட் செய்தார். இருவரும் சிறிது நேரத்திலேயே வீட்டை அடைந்தனர்.

பத்மா அனைவருக்கும் இரவு உணவு தயாரிக்க நித்யாவும் அவருக்கு உதவினாள். இருவரும் சமைத்து முடித்ததும் பேசி சிரித்து உண்டு மகிழ்ந்தனர். க்ரிஷ் மனதில் 'வாழ்க்கையில இதெல்லாம் எவ்வளவு அழகான தருணம்! இது இவ்வளவு நாளா மிஸ் பண்ணியிருக்கேன். இனிமேல் வேலைக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை குடும்பத்துக்கும் கொடுக்கணும்' என நினைத்தான்.

அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றனர். நித்யா நாளை மும்பைக்கு செல்வதற்காக ட்ரெஸ்ஸை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.  க்ரிஷ், "நித்யா, நான் உனக்கு உதவி பண்ணவா?" எனக் கேட்டான்.

நித்யா, "அதெல்லாம் வேண்டாம், இதெல்லாம் நீங்கள் செய்யக் கூடாது. உங்களுக்கு என்ன டிரஸ் வேண்டும் என்று சொல்லுங்க, நானே எடுத்து வைக்கிறேன்" என்றாள்.

க்ரிஷ், "நான் செய்யக் கூடாதா? நான் செய்வேன். நீ மட்டும் எனக்கு எல்லா வேலையும் பார்க்குற..." என்று அவன் அவளது உடையை எடுத்து மடித்து வைத்தான்.

நித்யா வேகமாக அவளது உடையை அவனிடமிருந்து பிடுங்கி, "சொன்னா கேட்க மாட்டீங்ளா? இது பொம்பளைங்க வேலை. நீங்க செய்யக்கூடாது" என்றாள்.

கிரிஷ், "வேலைனா  எல்லாம் வேலை தான்.  அதனை பொம்பளைங்க வேலை, ஆம்பளைங்க வேலை, நான் செய்வேன்" என்று மீண்டும் மடித்து வைத்தான்.

நித்யா, "நீங்க வர வர ரொம்ப அடம் பிடிக்கிறீங்க குழந்தை மாதிரி" என்று கூறி வேலையை தொடர்ந்தாள்.

க்ரிஷ், "நீ தான் இப்போதைக்கு நீ குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்ட...  அதான்  குழந்தை வர்ற வரைக்கும் நான் உனக்கு குழந்தையாக இருக்கேன்" என்று கூறி கண் சிமிட்டினான். அவனது செய்கையை பார்த்து நித்யாவிற்கு புன்னகை அரும்பியது.  அவன் உதவி செய்ததால் இருவரும் வேகமாக வேலையை முடித்துவிட்டு உறங்க சென்றனர்.

மறுநாள் காலையில் விரைவாக பிளைட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் க்ரிஷ் அலாரம் வைத்து விட்டு நடு. மறு நாள் பொழுது அழகாக விடிந்தது. அலாரம் சரியாக அதன் வேலையை பார்க்க க்ரிஷ் கண் விழித்து விட்டான். ஆனால் நித்யா இன்னும் எழவில்லை. 'என்ன எப்போதும் எனக்கு முன்னாடியே எழுந்திடுவா' என நினைத்தவன் தூங்கும் அவளையை சிறிது நேரம் ரசித்து பார்த்துவிட்டு எழுந்து குளித்து வரச் சென்றான்.

அவன் குளித்துவிட்டு வந்தும் அவள் எழவில்லை.  க்ரிஷ் 'தினமும் சீக்கிரம் எழுந்துடுவா.. இன்னைக்கு ஒரு நாளாவது தூங்கட்டும்' என்று கிளம்பி விட்டு அவளை எழுப்பலாம் என நினைத்தவன் ரெடியானான். அவன் கிளம்பி விட்டன் நித்யாவை எழுப்பினான்.

க்ரிஷ், "நித்தி... நித்தி.." அழைக்க அவள் எழவில்லை.  க்ரிஷ் ஏன் இவ இப்படி தூங்குறா என நினைத்து அவளை தொட்டு எழுப்ப அவள் உடல் நெருப்பாகக் கொதித்தது. அவன் பதறி நெற்றியை தொட்டுப் பார்க்க அது மிகவும் சூடாக இருந்தது.

க்ரிஷ், "நித்யா, கண்ணைத் திற.." என்று கூற அவள் கண்ணை திறக்க முயற்சித்தாள், ஆனால் முடியவில்லை.
கிரிஷ் பதறிக்கொண்டு பத்மாவிடம் சென்றான்.

"அம்மா, நித்யாவுக்கு உடம்பு நெருப்பாய் கொதிக்குது" என்றான்.

பத்மா, "என்ன காய்ச்சலடிக்குதா? ஏன் திடீர்னு காய்ச்சல் வந்தது? டாக்டருக்கு போன் பண்ணு" என்றான்.

கிரிஷ், "நேத்து அவ ஐஸ்க்ரீம் கேட்டா, நான்தான் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தேன்.  அதானால  தான் அவளுக்கு காய்ச்சல் வந்துருச்சு. அவ தான் கேட்டானா நான் வாங்கி கொடுத்து இருக்க கூடாது" என கூறி தன்னைத்தானே நொந்தவன் டாக்டருக்கு கால் செய்தான்.

அவன் போய் போன் செய்த சிறிது நேரத்திலேயே டாக்டர் வந்துவிட்டார். கிரிஷ், 'நான் அவளோட மும்பைக்கு செல்ல வேண்டும் என்ற நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே! நேற்று இரவு கூட ஆசையாக எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்' என நினைத்து வருந்தினான்.

டாக்டர் அவளை செக் செய்துவிட்டு "பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல. சாதாரண காய்ச்சல் தான், ஊசி போட்டு இருக்கேன். இரண்டு நாளில் சரியாகிவிடும்" என்றார்.

க்ரிஷ், "டாக்டர், சீக்கிரம் சரியாகிவிடுமா? இல்ல நான் அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வரணுமா?" என கேட்டான்.

டாக்டர் புன்னகையுடன், "நீங்க பயப்படுற அளவுக்கு எல்லாம் ஒன்னுமில்லை​.  டேப்லெட் சாப்பிட்டால் சரியாகிவிடும்" என்று கூறிச் சென்றார். நித்யாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றதும் க்ரிஷ் மிகவும் சோர்ந்து விட்டான்.

க்ரிஷ் அவள் அருகிலே இருந்தான்.  எங்கும் நகரவில்லை. பத்மா, "ஏன்டா சாதாரண காய்ச்சல் தானே, ரொம்ப பயப்படாதே!" என்று ஆறுதல் கூறினார். இருந்தும் அவனுக்கு நித்தியா கண் விழிக்கும் வரை பயமாகவே இருந்தது.  கொஞ்ச நேரம் கழித்து நித்யா கண்விழித்தாள்.

க்ரிஷ், "நித்யா, இப்போ எப்படி இருக்கு? பரவாயில்லையா? அம்மாவை சாப்பாடு எடுத்துட்டு வர சொல்லவா?" என்று கேள்விகளை அடுக்க, நித்யா, "ஏன் இவ்வளவு பதட்டம்? எனக்கு ஒன்னும் இல்லை​, நார்மல் காய்ச்சல்தான்" என்று கூறி புன்னகைக்க முயன்றாள்.

க்ரிஷ், "என் தப்புதான், நான் உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து இருக்க கூடாது. அதனால தான் காச்சல் வந்திருச்சு..."

நித்தி, "ஐஸ்கிரீம் வாங்கி தரலனாலும் காய்ச்சல் வரணும் என்றிருந்தால் வந்துதான் ஆகும்" என்றாள்.

க்ரிஷ், "ஷ்... நீ என்ன சமாதானம் சொன்னாலும் இனிமேல் உனக்கு ஐஸ்கிரீம் கிடையாது" என்றவன் நித்யா ஏதோ பதில் சொல்ல வர, "எதுவும் பேசாத! அப்புறம் பேசலாம், நான் போய் அம்மாகிட்ட சாப்பாடு வாங்கிட்டு வரேன்" என்று கீழே சென்றான்.

பத்மா கஞ்சி வைத்துக் கொடுக்க க்ரிஷ் நித்யாவுக்கு ஊட்டிவிட்டான். நித்யா, "வேண்டாம், நானே சாப்பிடுக்கிறேன்" என மறுக்க க்ரிஷ், "பேசாம இரு, நான் சொல்றது தான் கேட்கணும்" என்று கூறி அவளுக்கு ஊட்டி விட்டு மாத்திரையும் கொடுத்தான்.  நித்யா உண்டுவிட்டு மாத்திரையின் வீரியத்தில் உறங்கிப் போனாள்.

க்ரிஷ் அவள் அருகிலேயே அமர்ந்து இருந்தான். இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. பத்மாவும் ராஜனும் சொல்லியும் கூட கேட்கவில்லை.  பிளைட்டையும் கேன்சல் செய்துவிட்டான்.

தூக்கம் கலைந்து சில மணி நேரங்கள் கழித்து கண்விழித்த நித்யா, அவளையை பார்த்தபடியே கண்ணத்தை கைகளில் தாங்கி அமர்ந்து இருந்த க்ரிஷைப் பார்த்தாள். "நான் தூங்கிறதுக்கு முன்னாடி இங்க உட்கார்ந்து இருந்தீங்களே, இன்னும் அப்படியே உட்கார்ந்து இருக்கீங்களா?" என்று அதிர்ச்சியாக கேட்க, அவன்  அதை காதில் வாங்காமல் அவள் நெற்றியை தொட்டுப் பார்த்துவிட்டு சூடு குறைந்து இருப்பதை உறுதிப்படுத்தி காய்ச்சல் குறைந்து விட்டது என பெருமூச்சு விட்டான்.

*********************

அனைத்து கவுன்சிலிங்கும் முடிந்து ரஞ்சனா பழையபடி மாறி இருந்தாள். அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தாள். வீட்டில் பழைய சூழ்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக்கொண்டிருந்தது.

மேகலாவும் மீராவின் இறப்பில் இருந்து மீண்டு விட்டார். ரஞ்சு  குணமாகிவிட்டது அவருக்கு நிம்மதியாக இருந்தது. எல்லோர் மனதிலும் அடுத்து ரஞ்சனா என்ன செய்ய போகிறாள்? என்ற எண்ணம் இருந்தது.

எல்லோரும் இரவு உணவு உண்டு கொண்டிருந்தனர். சதாசிவம் பேச்சை ஆரம்பித்தார் "ரஞ்சனா அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க..."

ரஞ்சு, "எனக்கும் அதான் தெரியலப்பா, யோசிச்சிட்டு இருக்கேன்" என்றாள்.

சதாசிவம், "ரஞ்சு மேல ஏதாவது படிக்கிறியா?  ஏதாவது கோர்ஸ் சேர்த்து விடவா?" என கேட்டார்.

ரஞ்சு, "இல்லப்பா, எனக்கு மேல படிக்கிற ஐடியா இல்லை.  வேற ஏதாவது பண்றேன்பா. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க, யோசிச்சிட்டு சொல்றேன்" என்றாள்.

சதாசிவம், "இரண்டு நாள் என்னமா, ஒரு வாரம் கூட யோசி, யோசிச்சிட்டு உனக்கு என்ன தோணுதோ அதை செய்.  நீ என்ன சொன்னாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றார்.

ரஞ்சனா, "தேங்க்ஸ்பா.." என்று கூறி புன்னகைத்தாள். அடுத்த இரண்டு நாள் அமைதியாகச் சென்றது. அவள் இரண்டு நாளாக அமர்ந்து யோசித்து ஒரு முடிவு எடுத்தாள்.

ரஞ்சனா, "அப்பா, நான் என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவு எடுத்து இருக்கேன்" என்றாள்.

சதாசிவம், "சொல்லுமா, என்ன?" என கேட்க,  ரஞ்சனா, "அப்பா, நான் நம்ப கம்பெனிக்கு வந்து பிசினஸ் பார்க்கலாம்னு இருக்கேன்."

இதைக் கேட்டு சதாசிவத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி.  தானும் இதையேதான் அவரிடமும் சொல்லலாம் என நினைத்திருந்தார். இருந்தும் அவள் என்ன சொல்வாள் என யோசித்தார்.

சதாசிவம், "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா.  எனக்கு அப்புறம் நீ தான் நம்ம  பிஸ்னஸை பார்த்துக்கனும் என்று நினைச்சேன். அது இப்போ நடக்கப்போகுது.  நாளைக்கு நீ நம்ம கம்பெனிக்கு வந்து எம்.டியா பொறுப்பை ஏத்துக்கோ" என்றார்.

ரஞ்சு, "அப்பா, நான் வந்த உடனே எம்டி சீட்ல உட்கார மாட்டேன். நான் ஃபர்ஸ்ட் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறேன். நீங்க எனக்கு சொல்லிக் கொடுங்க. அப்புறம் நான் கம்பெனி பொறுப்பு ஏற்கிறேன்" என்றாள்.

சதாசிவம், "நீ எது சொன்னாலும் எனக்கு சம்மதம்" என்றார். மேகலாவிற்கும் சுஜாதாவிற்கும் இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்தது.

                                 கரைவாள்....

ஹாய் மக்களே! இந்த புள்ளை என்னடா ஃபாஷ்பேக் சொல்லாம கதையை இழுக்குது.. நிறைய சீன் வைக்குதுனு நீங்க நினைக்கலாம்... இப்ப வக்குற எல்லா சீன்க்கும் கண்டிப்பா காரணம் ஃப்ளாஷ்பேக்ல சொல்லிடுவேன்.. ஃப்ளாஷ் பேக் இன்னும் இரண்டு அல்லது மூன்று எபிசோட்ல சொல்லிடுவேன்...😍

 


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 44
19/09/2020 7:35 am  

உன் காதலில் நானும் கரைவேனா? 36

 

நித்யா, "நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.... நான் தூங்குவதற்கு முன்னாடி இருந்து இங்க தான் உட்கார்ந்து இருக்கீங்களா?"

அவன், "ஆமா, அதுக்கு இப்போ என்ன?" என்றான். நித்யா, "எவ்வளவு நேரம் அசையாமல் உட்கார்ந்து இருக்கீங்க... உடம்பு என்னாவது" என்றாள்.

க்ரிஷ், "அதெல்லாம் ஒன்னும் ஆகாது.." என்றான்.

நித்யா, "நீங்க சாப்பிட்டீங்களா..?" எனக் கேட்க, கிரிஷ், "சாப்பிடலாம் சாப்பிடலாம்..." என்றான்.

நித்யா, "மதிய சாப்பாடு நேரமே வந்துடுச்சு!  நீங்க இன்னும் சாப்பிடாம இருக்கீங்க..... ஏன் இப்படி பண்றீங்க? சாதாரண காய்ச்சல் தானே! என்றவள், தள்ளிப் போங்க.. நான் போய் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என்று எழப்போக கிரிஷ், "நித்யா, இன்னும் உனக்கு காய்ச்சல் சரியாகலை. என்ன பண்ற?" என்று அதட்ட அவள், "எனக்கு காய்ச்சல் சரி ஆகிடுச்சு... சாப்பிடாம இருந்தா உங்களுக்கு தான் உடல் நிலை பாதிக்கப்படும், ஒழுங்கா சாப்பிடுங்க" என்றாள்.

இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க அது பத்மாவிற்கும் ராஜனுக்கும் கேட்டுவிட அவர்கள் வந்து விட்டனர். பத்மா, "என்ன ஆச்சு? ஏன் இப்படி வாக்குவாதம் பண்றீங்க..." என்றார்.

க்ரிஷ், "அம்மா, நித்யா சொன்ன பேச்சைக் கேட்கமாட்டறா... இப்போதான் காய்ச்சல் கொஞ்சம் குறைஞ்சிருக்கு, இப்போ இவ வேலை செய்ய போறாளாம்" என்றான்.

நித்யா, "அத்தை இவர் காலையிலிருந்து சாப்பிடாமல் இருக்கார். மதிய சாப்பாடு நேரமே வந்துடுச்சு, சாப்பிட சொன்னா கேட்க மாட்டராரு... அதான் சாப்பாடு எடுக்க வந்தேன்" என்றாள்.

பத்மாவிற்கு அவர்கள் அன்பை கண்டு மனம் மகிழ்ந்தது. பத்மா நித்யாவிடம், "நானும் காலைல இருந்து சொல்லிட்டேன் கேட்க மாட்டறான் என்றவர், க்ரிஷ் நீ சாப்பிட வா... நித்யா நீ ரெஸ்ட் எடு" என்று க்ரிஷை கையோடு அழைத்துச் சென்றுவிட்டார்.

க்ரிஷ் வேகமாக சாப்பிட்டுவிட்டு நித்யாவிற்கு சாப்பாடு எடுத்து வந்தான். நித்யா, "அதுக்குள்ளேயும் சாப்பிட்டு வந்துட்டீங்களா?" என ஆச்சரியமாக கேட்க, அவன், "சாப்பிட்டேன், நீ சாப்பிடு.." என்று சாப்பாட்டை அவள் வாய் அருகில் கொண்டு செல்ல நித்யா, "காலையில என்னால முடியலை, அதனால நீங்க ஊட்டி விட்டீங்க.  இப்பதான் நான் நல்லா இருக்கேனே! குடுங்க நான் சாப்பிட்டுக்கிறேன்" என்றாள்.

க்ரிஷ், "இன்னும் உனக்கு உடம்பு முழுசா சரியாகலை. நான் ஊட்டி விட்டால் நீ சாப்பிட மாட்டியா?" என்று  தோரணையாக கேட்க, நித்யா அதிலேயே வாயை திறந்து வாங்கிக் கொண்டாள். அவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சாப்பாட்டை ஊட்டி விட்டான்.

நித்யா பாதி  சாப்பாட்டில் போதும் என்றாள். க்ரிஷ், "இல்ல முழுசா சாப்பிட எழக்கக்கூடாது..." என்று அவளை சாப்பிட வைத்தே விட்டான். பின்பு மாத்திரைகளை கொடுக்க, அவள்  வாங்கி சாப்பிட்டாள்.

நித்யா, "நீங்க மும்பைக்கு போவதாக இருந்துச்சே! போகலையா?" என கேட்க, அவன், "இப்படி உன்ன விட்டுட்டு நான் மட்டும் எப்படி மும்பைக்கு போக முடியும்?"

நித்யா, "இது உங்களுக்கு ரொம்ப முக்கியமான கான்ஃபரன்ஸ் தான?" என்றாள்.

க்ரிஷ், "இது இல்லன்னா வேற கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்ணிக்கலாம்" என்றான் அசால்டாக.

நித்யா, "இது இன்டர்நேஷனல் கான்ஃபரன்ஸ், ரொம்ப ரேரா தான் நடக்கும்..நீங்க போன உங்களுக்கு நிறைய காண்டாக்ட் கிடைக்குமே" என்றாள்.

அவன், "எனக்கு அதெல்லாம் விட நீ தான் முக்கியம்" என்றான்.

நித்யா, "அதான் எனக்கு குணம் ஆகிடுச்சே!  நாளைக்கு தான் கான்ஃபரன்ஸ். சோ  நீங்க கிளம்புங்க" என்றாள்.

க்ரிஷ், "இன்னும் உனக்கு முழுசா காய்ச்சல் சரியாகலை என்றவன், அதுமட்டுமில்லாமல் உன்ன கூட்டிட்டு போறேன் என்று வேற சொல்லிவிட்டேன். நீ எவ்வளவு ஆசையா நேத்து எல்லாத்தையும் பேக் பண்ண... இப்போ நான் மட்டும் எப்படி தனியா போறது?  எனக்கு போக மனசு வரலை" என்றான்.

நித்யா, "நீங்க என்ன, என்னை வேணும்னேவா  விட்டுட்டு போறீங்க?  என்னாலை வரமுடியாத சூழ்நிலை, அதான் விட்டுட்டுப் போறீங்க. இதனால எனக்கு எந்த வருத்தமும் இல்ல, நீங்க போயிட்டு வாங்க" என்றாள்.

க்ரிஷ், "நீ என்ன சொன்னாலும் நான் மும்பைக்கு போற ஐடியாவில் இல்லை."

நித்யா, "ஏன் இப்படி அடம் பிடிக்கிறீங்க...
நீங்க மும்பைக்கு போகவில்லை என்றால் எனக்கு தான் வருத்தமாக இருக்கும்" என்றாள்.  அவனிடம் பதில் இல்லை.

" நான் வருத்தப் பட்டாலும் பரவாயில்லை என்று நீங்க நினைச்சா போகவேண்டாம் என்கிட்ட எதுவும் பேச வேண்டாம் என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். அவளது முக வாட்டத்தை பொறுக்காமல் சரி முகத்தை அப்படி வைக்காத! நான் கான்ப்ரன்ஸ்க்கு போறேன்" என்றான்.

இதைக்கேட்டு நித்யா சந்தோஷம் ஆகிவிட்டாள்.. "சரி சீக்கிரம் டிக்கெட் புக் பண்ண சொல்லுங்க" என்றாள்.

அவன், "சரி சொல்றேன்.." என்று ராஜ்க்கு கால் செய்தான். ராஜ், "சார், மும்பைக்கு போயிட்டீங்களா?" எனக் கேட்டான் எடுத்தவுடன்.

க்ரிஷ், "இல்லை, நான் சென்னையில் தான் இருக்கேன்" என்றான். ராஜ், "சார் என்ன ஆச்சு? ஏன் போகல?" எனக் கேட்க,

க்ரிஷ், "நித்யாவுக்கு திடீரென்று காய்ச்சல் வந்துருச்சு..." என்றான்.  ராஜ், "சார் இப்போ மேடம்க்கு எப்படி இருக்கு... பரவாயில்லையா?" எனக் கேட்க,

க்ரிஷ், "டாக்டர் வந்து பார்த்தாங்க, இப்போ பரவாயில்லை.  ஓரளவுக்கு நல்லா இருக்கா..." என்றான்.

ராஜ், "சார், நீங்க மும்பைக்கு போகலையா?" என்ற கேள்வியை எழுப்ப, க்ரிஷ், "இல்ல நான் போறேன். இன்னைக்கு நைட் பிளைட்க்கு டிக்கெட் புக் பண்ணிடு" என்றான்.  ராஜ் ஓகே சார் என்று கூறி காலை கட் செய்தான்.

பத்மாவதியும் ராஜனும் அதான் நாங்க இருக்கோம் இல்ல, நாங்க அவள பார்க்க மாட்டோமா..? நீ மும்பைக்கு போயிட்டு வாடா! என்று கூறினார். அவன் நித்யாவை விட்டு செல்ல மனமில்லாமல் வீட்டிலிருந்து கிளம்பினான். 

நித்யா, "போகும் போது ஏன்  மூஞ்சியை இப்படி வச்சிருக்கீங்க... கொஞ்சம் சிரிச்சாதான் என்ன.." என்றாள்.

க்ரிஷ் புன்னகைத்து, "வரேன், பார்த்து மாத்திரையெல்லாம்  சரியான நேரத்துக்கு சாப்பிடணும்" என்று பல அறிவுரைகளை கூறி கிளம்பினான்.

விமான நிலையத்திற்கு சென்றும் அவனது மனம் நித்யாவையே சுற்றி வந்தது. விமான நிலையத்துக்கு வந்த உடன் நித்யாவுக்கு கால் செய்தான்.

நித்யா காலை அட்டெண்ட் செய்து "இப்போதானே கிளம்புனீங்க... அதுக்குள்ளேயும் போன் பண்ணிட்டீங்க..." என கேட்க, அவன் "ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன். அதான்  சொல்லலாம் என்று போன் பண்ணேன்" என்றான்.

நித்யா 'ரெண்டு நிமிஷம் சேர்ந்த மாதிரி பேசினா இவர் கிளம்பி வந்தாலும் வந்துடுவாரு..' என நினைத்தவள், "சரி, மும்பையை ரீச் ஆயிட்டு கால் பண்ணுங்க" என்று கூறி காலை கட் பண்ணிவிட்டாள்.

க்ரிஷ், 'இவ ஏன் இப்படி பண்றா... இனிமேல் வீட்டுக்கு போறவரைக்கும் இவளுக்கு கால் பண்ணவே கூடாது. கொஞ்ச நேரம் தவிக்க விடுவோம்' என்று நினைத்தான். போன் பண்ண கூடாது என நினைத்தாலும் அவளை பற்றிய நினைவுகளுடனே உழன்றுக் கொண்டிருந்தான். நித்யா உறங்கி விட்டாள்.

க்ரிஷ் மும்பை ஏர்போர்ட்டை அடையும்போது நேரம் பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது. கான்ஃபரன்ஸ் நடக்கும் ஓட்டலுக்கு சென்று அவன் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையின் சாவியை வாங்கி சென்று ரூமை அடைந்தான்
அவன் நேரத்தை பார்க்க பனிரெண்டுக்கு மேல் ஆகியிருந்தது. இந்த நேரம் எல்லோரும் உறங்கி இருப்பார்கள் நாளை பேசிக்கொள்ளலாம் என நினைத்து உறங்கிப் போனான்.

மறுநாள் பொழுது விடிந்தது. பத்மாவிடம் மட்டும்  தன் வந்துவிட்டதை கூறிவிட்டு நித்யாவை பற்றி விசாரித்தான். நித்யாவிற்கு கால் செய்யவில்லை. அவளாக செய்யட்டும் என்று விட்டு விட்டான்.

காலை பத்து மணிக்கு மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலில் தான் தொடங்கியது.  சுரேந்தர் வந்து அவனுடன் இணைந்து கொண்டான். க்ரிஷ் ஏற்கனவே நித்யா வராததை அவனிடம்  கூறிவிட்டான்.  கான்பிரன்ஸில் பெரிய பெரிய பிசினஸ் மேக்னட்கள் கலந்து கொண்டனர்.

கான்ஃபரன்ஸ் ஒரு நாள் முழுவதும் நடந்தது.  க்ரிஷ்க்கு நித்யா காலையில் இருந்து இரண்டு முறை கால் செய்தும் அவன் அட்டென்ட் பண்ணவில்லை.  'நான் பேசிட்டு இருக்கும்போது மட்டும் காலை கட் பண்ணினா...  அவ கிட்ட பேச மாட்டேன்' என்று வீம்பாக நினைத்துக்கொண்டான்.

கான்பிரன்ஸ் முடிந்து மாலை நேரம் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் குழுக்களாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். க்ரிஷ்க்கு நித்யாவிடம் இருந்து அழைப்பு வர அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

சுரேந்தர், "மச்சான், உங்க சண்டை எல்லாம் நேர்ல போய் போட்டுக்கோ... இப்போ கால் அட்டென்ட் பண்ணி பேசு, ஏதாவது அவசரமாக இருக்க போகுது" என்றான். க்ரிஷ்க்கு அவன் சொல்வதும் சரிதான் என தோன்ற,  காலை பேசுவதற்காக எழுந்து சென்றான்.  மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை, அவன் முகத்தில் அதிர்ச்சி.

************************

"ரஞ்சு கிளம்பிட்டியா..?" என்று சுஜாதா குரல் கொடுக்க, "அம்மா இதோ வந்துவிட்டேன்..."  என்று கூறி கீழே இறங்கி வந்தாள் ரஞ்சனா.

ரஞ்சு சேலை கட்டி அதனை அட்ஜஸ்ட் செய்து கொண்டே இறங்கி வந்தாள்.  அவள் முகத்தில் தெளிவை பார்த்த அவளது பெற்றோருக்கும் மேகலாவிற்கும் அளவில்லா மகிழ்ச்சி.

அவள் கீழே  இறங்கி வந்து, "அம்மா, இந்த புடவை நல்லா இருக்கா?" என கேட்டாள். பெண்கள் இருவரும் ஒரே போல் உனக்கு எது போட்டாலும் அழகா தான் இருக்கும் என்றனர். ரஞ்சனா இன்று கம்பெனிக்கு செல்ல இருக்கிறாள்.

சதாசிவம், "டைம் ஆயிடுச்சு,  கிளம்பலாம்.  அப்போதான் நல்ல நேரத்திற்கு போக முடியும்" என்றார்.

ரஞ்சு, "ஒரு நிமிஷம்பா.." என்றவள் மீராவின் புகைப்படத்துக்கு முன் நின்று கண்மூடி சில நிமிடங்கள் வேண்டி விட்டு "இப்போ போகலாம்.." என்றாள்.

அவளது செயலை பார்த்த மற்றவர்களுக்கு நெகிழ்ச்சி. மேகலா 'தான் கூட யோசிக்கவில்லை அவ யோசிச்சிருக்கா' என மகிழ்ந்தார். நால்வரும் சதாசிவத்தின் ஆபிஸிற்கு சென்றனர்.

அங்குள்ள பணியாளர்கள் எல்லாம் ரஞ்சுவை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ரஞ்சனா இன்முகத்துடன் அவற்றை ஏற்றுக்கொண்டாள்.  சதாசிவம் ஆபீஸுக்கு சென்றதும் மீட்டிங் ஹாலில் சென்று எல்லோரையும் வரவழைத்தார். எல்லோரிடமும் ரஞ்சனா இன்றிலிருந்து எம்.டி ஆக பொறுப்பு ஏற்பதாக அறிவித்தார்.

எல்லோரும் அவளிடம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சதாசிவம் அவளுக்கு தன் கேபினுக்கு அருகிலே ஒரு கேபினை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

ரஞ்சனா எம்.டி சீட்டில் அமர, அதை பார்த்து அவள் பெற்றோருக்கு சந்தோஷமாக இருந்தது. சிறிது நேரம் இருந்துவிட்டு சுஜாதாவும் மேகலாவும் கிளம்பினர்.

சதாசிவம் ரஞ்சுவின் கேபினுக்கு ஒரு பெண்ணை அழைத்து வந்தார். ரஞ்சுவிற்கு அவர் யாரென்றே தெரியாத போதும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்.

சதாசிவம், " ரஞ்சு இவர்தான் பென்ஸி, இனிமேல் இவங்க தான் உனக்கு கைடு. இவங்க தான் உனக்கு பிசினஸ்ல எல்லாத்தையும் சொல்லிக் கொடுப்பாங்க" என்றார்.

ரஞ்சு அவரை பார்த்து புன்னகைத்தாள். தான் யாரென்று தெரியாத போதும் அவள் எழுந்து நின்று மரியாதை கொடுத்த விதம் அவருக்கு மிகவும் பிடித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். ரஞ்சனாவிற்கும் அவரைப் பிடித்து விட்டது.

பென்ஸி, "நீங்க கவலைப்படாதீங்க, உங்க பொண்ணு இனிமேல் என் பொறுப்பு" என்று கூறி புன்னகைத்தார்.

  
                                 கரைவாள்...

 


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 44
19/09/2020 2:58 pm  

உன் காதலில் நானும் கரைவேனா? 37

 

க்ரிஷ்க்கு நித்யாவின் குரலில் இருந்த பதட்டம் பயத்தை உண்டாக்கியது. "நீ சொல்றது எனக்கு புரியலை​. தெளிவா சொல்லு, என்ன ஆச்சு?" என்றான் பயத்துடன்.

நித்யா அழுதுகொண்டே, "வீட்டுக்கு சீக்கிரம் வாங்க.." என்றாள்.

க்ரிஷ், "வரேன்... நீ பேசுறத பார்த்தா எனக்கு பயமாயிருக்கு. அம்மா, அப்பா எங்க? அம்மா கிட்ட போனை குடு" என்றான்.

நித்யா எதுவும் சொல்லாமல் தேம்பிக்கொண்டு இருந்தாள். அவள் பதில் சொல்லும் நிலையில் இல்லை என்பதை புரிந்தவன், "சரி, நீ போன வை. நான் கிளம்பி வரேன்" என்றவன் சுரேந்தரிடமும் கூட சொல்லாமல் தனது காரை நோக்கி ஓடினான். காரை வேகமாக ஓட்டி கொண்டே தனது அம்மாவுக்கு கால் செய்தான்.

பத்மாவின் போன் ரிங்காகிக் கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. ராஜனுடைய நம்பருக்கும் அழைத்தான். அங்கேயும் அதே நிலைமைதான்...

'யாரும் போனை எடுக்க மாட்றாங்க, அவ வேற அழுகுறா.. என்ன ஆச்சுன்னு தெரியலை!' என்று கோவமாக கையை ஸ்டியரிங்கில் குத்தினான்.

போன் பேச சென்ற அவனை காணவில்லை என்று சுரேந்தர் தேடி வந்தான். எங்கு தேடியும் காணாததால் அவனுடைய ரூமிற்கு சென்று பார்த்தான். அங்கேயும் க்ரிஷ் இல்லை. 'எங்க போனான் இவன் சொல்லாம கொள்ளாம' என்று நினைத்து க்ரிஷ்க்கு கால் செய்தான்...

க்ரிஷ் காலை அட்டென்ட் செய்தான். சுரேந்தர், "டேய்! எங்கடா போன? போன் பேசிட்டு வரேன் என்று தானே சொன்ன..." என்றான்.

க்ரிஷ், "நித்யா போன்ல அழுகுறாடா... என்னன்னு கேட்டா சொல்ல மாட்டுறா... அவ குரலில் இருந்த நடுக்கத்தைப் பார்த்து எனக்கு பயமாயிருக்குடா... அதான் ஏர்போர்ட்டுக்கு போயிட்டு இருக்கேன்" என்றான்.

சுரேந்தர், "என்னையும் கூட்டிட்டு போய் இருக்கலாமேடா... இவ்வளவு பதட்டத்துல இருக்க, எப்படி தனியா போக போற... என்றவன், அம்மா அப்பாவுக்கு கால் பண்ணி என்ன ஆச்சுனு விசாரிக்க வேண்டியது தானே!" என்றான்.

க்ரிஷ், "கால் பண்ணேன்டா.  அவங்களும் எடுக்கல, அதான் எனக்கு பயமா இருக்கு" என்றான்.

சுரேந்தர், "மச்சான், வீட்ல வேற யாரு இருக்கா? வேலை செய்றவங்க, வாட்ச்மேன் அவங்ககிட்ட கால் பண்ணி பேச வேண்டியதுதானே!" என்றான்.

க்ரிஷ், "சுமதி அக்கா வேலை முடிஞ்சு கிளம்பி இருப்பாங்க... வாட்ச்மேன் இருப்பாரு அவர கேட்கிறேன்" என்று கூறி சுரேந்தரின் காலை கட் செய்துவிட்டு வாட்ச்மேனுக்கு அழைக்க, அது நாட் ரீச்சபிள் என்று வந்தது.

க்ரிஷ்க்கு நடக்கும் விஷயங்கள் அனைத்தும் பயத்தை உண்டாக்கியது. அசுர வேகத்தில் காரை ஓட்டியவன். சென்னை பிளைட் பிடித்து விட்டான்.  பிளைட் சென்னை வந்தடையும் வரை அவனுக்கு பதட்டமாகவே இருந்தது.

சென்னை ஏர்போர்ட்டை வந்த அடைந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்து விட்டான். க்ரிஷ் காரைப் பார்த்ததும் வாட்ச்மேன் வேகமாக வந்த கேட்டை திறந்தான்.

க்ரிஷ்  வாட்ச்மேனிடம்
கோபமாக, "நீ எதுக்கு போன் வெச்சி இருக்க? கால் பண்ணா போகவே மாட்டுது" என்ற வார்த்தைகளை கடித்து துப்பினான்.

வாட்ச்மேன் க்ரிஷின் கோபத்தைப் பார்த்து பயந்து, சார் போன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கீழே விழுந்துடுச்சு. அதுல இருந்து ஏதோ ஆகிடுச்சு.." என்றான்.

க்ரிஷ், "அம்மா, அப்பா எல்லோரும் எங்க? ஏன் யாருமே போன எடுக்கல" எனக் கேட்டான்.

வாட்ச்மேன், "சார் அம்மா நம்ம சுமதியோட குழந்தைக்கு திடீரென்று உடம்பு சரி இல்லாமல் போயிடுச்சுன்னு அவங்க கூட ஹாஸ்பிடலுக்கு போயிருக்காங்க.. என்றவன், சின்னம்மாவும் பெரிய ஐயாவும் உள்ள தான் இருக்காங்க" என்றான்.

க்ரிஷ் அப்பாவும் கூட இருக்காரா? அப்புறம் ஏன் நித்யா அழுதா? அப்பாவும் போன் எடுக்கலை என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றான். வீடே அமைதியாக இருந்தது. யாரும் இருக்கும் அரவம் இல்லை.

க்ரிஷ், "நித்யா, அப்பா..." என்று அழைத்துக் கொண்டே ஹாலிலுலும் கிச்சனில் தேடினான். யாரும் அங்கே இல்லை என்பதால் ரூம்க்கு ஓடினான்.

க்ரிஷ் காலில் ஏதோ இடற கீழே பார்த்தான். ராஜன் மயங்கி கிடந்தார். "அப்பா என்ன ஆச்சு..?" என்று பதறி அவரை எழுப்ப முயற்சி தான். அவரும் முழிக்கவில்லை. மூக்கில் கை வைத்துப் பார்க்க மூச்சு வந்தது.  அப்போது தான் அவனுக்கு நிம்மதி வந்தது.

அவரை தூக்கி கட்டில் படுக்க வைத்தவன் ஏதோ வித்தியாசமான வாசம் வர சுற்றும் முற்றும் பார்த்தான். மது பாட்டில்கள் இரண்டு கீழே கிடந்தது. அப்பா குடித்து இருக்காரா? என நினைத்து அவர் அருகில் செல்ல மது வாசம் குப்பென்று அடித்தது.

ராஜன் அவ்வப்போது குடிப்பார். அடிக்கடி இல்லை, மாதத்தில் இரண்டு மூன்று முறைதான். க்ரிஷ்க்கு அப்போதுதான் நித்யாவின் நினைவு வர ரூம் முழுக்க தேடினான்.

அப்போதுதான் அவனது ரூமில் ராஜன் விழுந்து கிடந்தது உரைத்தது.  அப்போ நித்யா எங்கே போனா?  என்று தெரியவில்லை. மனது கிடந்து அடித்தது. வேகமாக அடுத்த ரூமுக்கு ஓடினான். அங்கு  அவன் நித்யாவின் கோலம் பார்த்து கண் கலங்கி நின்றான்.

ரூமின் ஒரு மூலையில் ஒடுங்கி பெட்சீட்டால் முழுதாக போர்த்தி இருந்தாள். முகம் முழுக்க பயத்தில் வெளிரி இருந்தது. க்ரிஷ், "நித்யா..."  என்றழைக்க, ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.

அவளின் இந்த நிலையை கண்ட அவன் உடைந்து போனான். "நித்யா, ஒன்னும் இல்ல, பயப்படாதே! நான் இருக்கேன்" என்று ஆறுதல் கூறினான்.

நித்யா அவனை கட்டிக்கொண்டு
ஓவென... அழ ஆரம்பித்துவிட்டாள். க்ரிஷ் "நித்யா​ ஆழாத! என்ன நடந்தது என்று சொல்லு" என அவளை உலுக்க அவள் போர்த்தி இருந்த பெட்ஷீட் கீழே விழுந்தது.

நித்யாவின் பிளவுஸின் பின் புறம் கிழிந்து தொங்கியது. அதை பார்த்து க்ரிஷ் உடைந்து விட்டான். தன்னை நம்பி வந்த பொண்ணுக்கு இந்த நிலைமையா? என்று.... க்ரிஷ், "நித்யா, யாரு உன்னை இப்படி பண்ணா? சொல்லு... அவனை கொல்லாமல் விடமாட்டேன்" என்று கோபத்தில் உருமினான்.

நித்யா எதுவும் பேசாமல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். க்ரிஷ்,  "நித்யா சொல்லப் போறியா? இல்லையா?" என்று மீண்டும் கத்த அவள் திக்கி திணரி, "மாமா..." என்றாள்.  இதைக் கேட்டு க்ரிஷ் அதிர்ந்தான்.

இருக்காது.... இருக்கவே கூடாது... இருக்காது... என் காதுல தான் தப்பா விழுந்து இருக்கு என்று நினைத்து நித்யாவை பார்க்க அவள், "உங்க அப்பாதான்.." என்றாள்.

க்ரிஷ் அதிர்ச்சியில் பின்னாடி இரண்டு அடி நகர்நது விட்டான். அவனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! முற்றிலுமாக தளர்ந்து விட்டான். தனது தந்தை இப்படி செய்துவிட்டாரா..? வீட்டுக்கு வந்த மருமகளிடம், மகளாக பார்க்கவேண்டிய பெண்ணிடம் குடிபோதையில் தவறாக நடக்க முயற்சிதாரா? சூழ்நிலையின் கனத்தை அவனால் தாங்க முடியவில்லை.

என்ன செய்வதென்று தெரியவில்லை. நித்யாவை பார்த்தான். அவளது கலைந்த கேசம், அழுத தோற்றம் அவனை மேலும் மேலும் உடைய செய்தது. முற்றிலுமாக அவன் நெருங்கி விட்டான்.

அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அழுது அழுது நித்யா மயங்கிச் சரிய அவன் ஓடி போய்  அவளை தாங்கி விட்டான்.

க்ரிஷ் நித்யா கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயற்சி செய்தான்.  அவள் கண் திறக்கவில்லை. இன்னும் உடல் நெருப்பாகக் கொதித்தது.  பக்கத்தில் இருந்த நீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்து எழுப்பினான். மெதுவாக கண் விழித்த நித்யா க்ரிஷின் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

"என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க! எனக்கு பயமா இருக்கு" என்று கண்ணீர் சிந்தினாள். க்ரிஷ் கலங்கிய கண்களோடு நித்யாவை பார்த்து, "எங்கேயும் போகமாட்டேன்.." என்று அவளை அணைத்துக்கொண்டான்.

அதிர்ச்சியிலிருந்து மெதுவாக மீண்டவன் "நித்யா வா... ஹாஸ்பிடல் போகலாம். உனக்கு காய்ச்சல் ரொம்ப அதிகமாக இருக்கு.." என்று அவளை அழைத்தான்.

"நான் எங்கேயும் வரலை, எனக்கு பயமாயிருக்கு.." என்றாள் குரல் நடுங்க.

"நான் இருக்கும் போது எதுவும் நடக்காது.." என்று அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான். நித்யா வெளியே வர தயங்க க்ரிஷ், "என்ன ஏதாவது வேணுமா?" எனக் கேட்க நித்யா தனது கிழிந்த பிளவுசை காட்டினாள். க்ரிஷ்க்கு அந்த நிமிடம் தன் வாழ்வில் தோற்று விட்டது போன்ற உணர்வு. அவளுக்கு வேறு உடை எடுத்துக்கொடுத்து மாற்ற சொன்னான்.

போதையில் மயங்கி கிடந்த ராஜன் மெல்ல தட்டுத்தடுமாறி எழுந்து வந்தார். ராஜன் க்ரிஷை பார்த்து, "க்ரிஷ் எப்போ வந்த?" எனக் கேட்டார். கிருஷ் அவருடன் பேசுவது பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டான். இப்படிப்பட்டவருடன் பேசுவதை கீழ்த்தரமான விஷயம் என்று நினைத்தான்.

ராஜன், "என்னடா க்ரிஷ், எப்போ வந்தன்னு  கேட்டால் பதில் சொல்ல மாட்டற... முகத்தை திருப்புற..."  என்று கேட்க, க்ரிஷ்  கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், "ஏன்பா குடிச்சா உங்களுக்கு கண்மண் தெரியா மகள் மாதிரி பார்க்க வேண்டிய நித்தியா கிட்ட தப்பா நடந்துக்க..." என்றவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. குரல் தழுதழுக்க "ஏன்பா இப்படி பண்ணுனீங்க..?" என்றான்.

ராஜன் ஏகத்திற்கும் அதிர்ந்து, "க்ரிஷ் யாரைப் பார்த்து என்ன பேசுற.." என்றார்.

க்ரிஷ், "உங்கள பார்த்து தான் கேட்கிறேன். அவ இருந்த கோலத்தைப் பார்த்து எனக்கு என்னடா வாழ்க்கை இது என்று தோணிடுச்சு... என்ன நம்பி வந்த பெண்ணை இப்படி ஒரு நிலைமை எல்லாம் நிக்க வச்சுட்டீங்களே!" என்றான் குரலில் வருத்தத்துடன்.

ராஜன், "க்ரிஷ், நீ என்ன சந்தேகப்படுறீயா? என் மேல இப்படி ஒரு பழிய போட்டுட்டியேடா டா.." என்றார்.

க்ரிஷ், "நீங்க எப்படி என் ரூமுக்கு வந்தீங்க..? ஏன் அங்க விழுந்துகிடந்தீங்க.." என்றான். இதற்கு அவரிடம் பதில் இல்லை. என்ன நடந்தது என்று அவருக்கு ஞாபகம் இல்லை.

உடை மாற்றிக் கொண்டு வந்த நித்யா ராஜனைப் பார்த்து பயந்து க்ரிஷின் பின்னால் பின்னால் ஒளிந்தாள். க்ரிஷ், "உங்க முகத்துல முழிக்கவே எனக்கு பிடிக்கலை.." என்று கூறி நித்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். ராஜன் சோர்ந்து அமர்ந்து விட்டார்.

மருத்துவமனையில் டாக்டர் நித்யாவை பரிசோதித்துவிட்டு, "டிரிப்ஸ் போட்டு இருக்கேன். இன்னைக்கு ஒரு நாள் மருத்துவமனையில் அட்மிட் செய்யனும்" என்று கூறினார்.

நித்யா க்ரிஷின் கையைப் பிடித்து கொண்டாள். "எங்கேயும் போய்டாதீங்க..." என்றாள். க்ரிஷ், "நான் எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன்..." என்று கூறி அவளை உறங்க வைத்தான்.

சுரேந்தர் அவனுக்கு கால் செய்ய க்ரிஷ் மருத்துவமனையில் இருப்பதைக் கூறினான். சுரேந்தர் சிறிது நேரத்தில் மருத்துவமனை வந்தடைந்தான். சுரேந்தர் நித்யாவை பார்த்துவிட்டு, "என்ன ஆச்சு? இன்னும் காய்ச்சல் சரியாகலையா...?" என்றான்.

க்ரிஷ், "ஆமாடா... டாக்டர் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்க இருக்க சொல்லியிருக்காங்க என்றவன், சுரேந்தர் நாங்க ரெண்டு பேரும் தங்குவதற்கு ஒரு வீடு பாருடா.." என்றான்.

சுரேந்தர், "என்னாச்சுடா? ஏன் தனி வீடு பார்க்க சொல்ற... எதுவும் பிரச்சனையா?" என கேட்க, "என்கிட்ட எதுவும் கேட்காத டா. நான் சொல்ற நிலைமையில் இல்லை" என்றான்.

சுரேந்தர் அதற்குமேல் கேட்கவில்லை. க்ரிஷ், "நாளைக்கு காலையில் எங்களுக்கு ஒரு வீடு வேணும்" என்றான்.

சுரேந்தர், "நம்ம கெஸ்ட் ஹவுஸ் ப்ரீயா தான் இருக்கு. அங்கேயே தங்கிக்கோங்க.." என்றான்.

க்ரிஷ், "இல்லடா! அது சரிப்பட்டு வராது..."

சுரேந்தர், "நம்ம வீடு இருக்கும் போது நீ ஏன் வெளியே தாங்கனும்? நீ அங்க தான் தாங்கனும்" என்று கட்டாயமாக சொல்லிவிட்டார்.

டாக்டர் சுமதியோட குழந்தைக்கு ஒன்றும் இல்லை ஒரு நாள் மட்டும் தங்கி இருக்க சொல்ல பத்மா சுமதிக்கு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு நாளை வந்து பார்ப்பதாக கூறிவிட்டு கிளம்பினார்.

பத்மா வீட்டிற்கு வரும்போது வீடு இருட்டாக இருந்தது. பத்மா என்ன வீடு இருட்டா இருக்கு. நித்யா எங்க இருக்கா. லைட் கூட போடாம நித்யா எங்கே போனா? என லைட்டை போட்டவர் முதலில் கண்டது சோர்வாக அமர்ந்திருந்த ராஜனை தான்.

பத்மா பதறி, "என்ன ஆச்சுங்க? ஏன் இப்படி உட்காந்து இருக்கீங்க... நித்யா எங்க?" என கேட்க, ராஜன் குரல் தழுதழுக்க நடந்ததை கூறினார்.

*************************

ரஞ்சு முதலில் பிஸ்னஸை பற்றி தெரியாததால் சற்று தடுமாறினாள். அவளுக்கு பென்ஸி எல்லா தொழில்நுட்பங்களையும் பிரச்சினைகள் வரும்போது எப்படி எதிர்கொள்ள வேண்டும் யாரை எவ்வாறு கையாள வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்....

நித்யா இயல்பிலே புத்திசாலி என்பதால் விரைவாக கற்றுக் கொண்டாள். முழு கம்பெனியையும் எடுத்து நடத்தும் அளவுக்கு அனைத்தையும் கற்றுத் தெரிந்து விட்டாள். சதாசிவமும் ரஞ்சனாவின் அறிவுக்கூர்மையை பார்த்து ஆனந்தப்பட்டார்.

ரஞ்சனா அன்று வழக்கம்போல ஆபீஸுக்கு சென்றாள்.  வழக்கத்திற்கு மாறாக ஆபீஸில் நிசப்தம் நிலவியது போன்று தோன்றியது. தனது ரூமுக்கு சென்றதும் ரஞ்சனா தனது பி.ஏ மதுமதியை அழைத்தாள்.

மதுமதி, "மே ஐ கம் இன்?" என்று கேட்டு உள்ளே நுழைய ரஞ்சனா, "மது என்ன பிரச்சனை? ஏதோ சரி இல்லாத மாதிரி தோணுது. எல்லாரும் ஏன் ஒரு மாதிரி இருக்காங்க...?" என கேட்டாள்.

மதுமதி, "மேடம், நம்ம கம்பெனி ஒர்க்கர்ஸ் எல்லோரும் ஸ்ட்ரைக் பன்ன போறாங்களாம். யூனியன் லீடர் கிட்ட இருந்து நியூஸ் வந்திருக்கு. நம்ம இன்னும் ஒரு வாரத்துல  எல்லா ஆர்டரையும் டெலிவரி பண்ணனும். இல்லை என்றால் பெரிய பிரச்சினையாகிவிடும். இதுனால நம்ம கம்பெனிக்கு பெரிய கெட்ட பெயர் வந்து விடும். நம்மகிட்ட ஆர்டர் கொடுத்த நிறைய பேர் ஆர்டரை கேன்சல் பண்ண நிறைய வாய்ப்பு இருக்கு. சதாசிவம் சார் இத்தனை வருஷமா எந்த கெட்ட பெயரும் வராம பாத்துக்கிட்டாரு.... இப்போ அந்த பெயருக்கு ஏதாவது இழுக்கு  வந்திடுமோ...? என்று பயமா இருக்கு" என்று பதட்டமாக கூறினாள்.

ரஞ்சனா, "ஏன் திடீரென்று ஸ்ட்ரைக் அறிவிச்சிருக்காங்க?"

மதுமதி, "எனக்கு தெரியல மேடம். எப்பவும் இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. சார் வொர்க்கர்ஸ்க்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. தேவைக்கு மேலதான் செய்து இருக்காரு. யாரோ தூண்டிவிட்டு தான் இதுமாதிரி பண்றாங்க மேடம்" என்றாள்.

விஷயம் கேள்விப்பட்டு சதாசிவமும் வந்துவிட்டார். சதாசிவம், "ரஞ்சனா இது ரொம்ப சிக்கலான விஷயம். உனக்கு பேச தெரியாது. உன்னால இதை சமாளிக்க முடியாது. நானே பார்த்துக்குறேன்" என்றார்.

ரஞ்சனா, "இல்லப்பா, இதை நானே பார்த்துக்குறேன். நீங்க பயப்படாதீங்க.. என்னைக்கு இருந்தாலும் நான் இதெல்லாம் தெரிந்துதான ஆகவேண்டும். நான் செய்றேன் அது சரியா தப்பா என்று மட்டும் எனக்கு வழிகாட்டுங்க" என்றாள்.

சதாசிவம் அவளது தன்னம்பிக்கையை பார்த்து, "சரி நீயே பார்த்துக்கோ.." என்றார். ரஞ்சனா இதை எப்படிக் கையாள்வது என பொறுமையாக யோசித்தாள்.

                                     கரைவாள்....

 


ReplyQuotePage 4 / 5
Share: