Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

உன் காதலில் நானும் கரைவேனா? - Tamil Novel  

Page 9 / 10
  RSS

Janu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 5 months ago
Posts: 72
16/10/2020 8:20 am  

உன் காதலில் நானும் கரைவேனா? 54

 

ஜெய் க்ரிஷ்க்கு கால் செய்தான். நித்யாவின் நினைவுகளில் உழன்று கொண்டிருந்த க்ரிஷ் காலை அட்டெண்ட் செய்து, "சொல்லுடா..." என்றான்.

ஜெய், "க்ரிஷ், மீராவுக்கு நினைவு திரும்பிடுச்சு..." என்றான். இதைக் கேட்டு க்ரிஷ்க்கு வருத்தப்படுவதா? இல்லை சந்தோஷப்படுவதா? என்று தெரியவில்லை.

மீரா கண் விழித்து விட்டது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மீராவிற்கு தான் என்ன பதில் சொல்வது என்று வருத்தமாகவும் இருந்தது. அவன் இவ்வாறாக யோசித்துக் கொண்டிருக்க அவனிடம் பதில் வராததைக் கண்டு ஜெய், "க்ரிஷ், லைன்ல தான் இருக்கியா?" என்று குரல் கொடுக்க, க்ரிஷ், "ம்ம்... இருக்கேன்" என்றான்.

ஜெய், "க்ரிஷ், நீ இப்போ கிளம்பி இங்க வர்ற... எல்லா பிரச்சினையும் இன்னைக்கே பேசி முடித்துவிட வேண்டும்... என்ன முடிவாக இருந்தாலும் இன்னைக்கே தெரிஞ்சிடும்..." என்றான்.

இதைக் கேட்டு க்ரிஷ்க்கு உள்ளூர பயம். நித்யாவை விட்டு பிரிவதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இருந்தாலும் நித்யாவை பார்க்கும் ஆவல் படையெடுக்க, "சரிடா, இப்பவே கிளம்புறேன்..." என்றான்.

ஜெய், "சரிடா, பார்த்து வா..." என்றான்.

க்ரிஷ், "சுரேந்தரை அழைத்துக்கொண்டு பெங்களூருக்கு ப்ளைட்..." ஏறினான்.

க்ரிஷ்க்கு மீராவிற்கு பதில் சொல்வது எல்லாம் பெரிதாக தெரியவில்லை. நித்யாவை இரண்டு மாதங்களுக்குப் பிறகு சந்திக்கப் போவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்ன நடந்தாலும் நித்யாவை விட்டுக் கொடுக்க கூடாது என்ற மனநிலைக்கு வந்து இருந்தான்.

நித்யா தன்னைப் பழி வாங்குவதற்காக தான் தன்னை திருமணம் செய்து கொண்டாள் என்பதெல்லாம் அவன் நினைவில் இல்லை. அவன் உயிர்ப்புடன் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு நித்யா வேண்டும். அவள் இல்லாத இரண்டு மாதத்தில் அவன் அவ்வளவு அனுபவித்து இருந்தான். க்ரிஷ் சென்ற விமானம் பெங்களூர் ஏர்போர்ட் வந்தடைந்தது.

சில மணி நேரங்களுக்கு முன்பு

வழக்கம்போல நித்யா மீராவிடம் அவர்கள் கல்லூரி கால வாழ்க்கையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். இரண்டு மாதங்கள் ஆகியும் மீரா கண்விழிக்காதது நித்யாவிற்கு கவலையை அளித்தது.  பேசிக்கொண்டிருக்கும்போதே நித்யாவிற்கு கண்கள் கலங்கியது. 

பேசுவதை நிறுத்திவிட்டு மீராவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். மீராவின் கருவிழிகள் லேசாக அசைந்தது. அதை பார்த்த நித்யா நம்பமுடியாமல் கூர்ந்து கவனிக்க மீண்டும் மீராவின் கருவிழிகள் அங்குமிங்கும் அசைந்தது.  மூடிய கண்களுக்குள் அது தெளிவாக தெரிந்தது.

நித்யாவிற்கு சந்தோஷம் தாளவில்லை. "சிஸ்டர்.. சிஸ்டர்..." என அழைத்துக் கொண்டே போன் பேசிக் கொண்டிருந்த செவிலியரிடம் ஓடிவந்தாள். அமைதியாக இருந்த வீட்டில் நித்யாவின் குரல் சத்தமாக ஒலிக்க, எல்லோரும் மீராவின் அறைக்கு வந்து விட்டனர்.

நித்யா, "மேகலாம்மா, மீராவோட கண் விழி அசையுது..." என்றவள், சந்தோஷமாக அணைத்துக் கொண்டாள்.

செவிலியர் வந்து பார்க்க, அப்போதுதான் மெதுவாக கண்களைத் திறந்தாள். மீராவிற்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவள் முன் கலங்கிய விழிகளுடன் குடும்பத்தினர் அனைவரும் நின்றிருந்தனர்.

அவள் எழுந்திருக்க முயற்சி செய்ய அவளால் முடியவில்லை. இரண்டு வருடமாக கை கால்களை அசைக்காமல் இருந்ததால் கை கால்கள் வலிப்பது போன்ற உணர்வு. நித்யா ஓடிச் சென்று அவளுக்கு உதவி செய்து, தலையணையை எடுத்து அவள் முதுகுக்கு வைத்துச் சாய்ந்தபடி அவளை அமர வைத்தாள்.

எல்லோருக்கும் சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை. மேகலா ஓடி வந்தே மீரா என்று கலங்கிய கண்களுடன் அவளை அணைத்துக் கொண்டார்..மீராவிற்கு எதுவும் புரியவில்லை, குழப்பமாக இருந்தது. கடைசியாக ராஜனிடம் பேசிவிட்டு வந்தது, க்ரிஷ் பேசியது, பின்  அனிதாவிற்கு விபத்து என போன் கால் வந்தது,அவள் ஸ்கூட்டியில் செல்லும்போது ஒரு லாரி இடித்தது, அது மட்டும்தான் ஞாபகத்தில் இருந்தது.

மீரா தாயின் கண்ணீரை பார்த்து, ஏம்மா அழுகுற.. என்ன ஆச்சு?" என்றாள்.

மேகலா, "மீரா, உனக்கு ஆக்ஸிடென்ட் ஆனதால நீ கோமாவுக்கு போயிட்ட. 2 வருஷமா கோமாவில தான் இருந்த... இப்போதான் கண் முழிச்சி இருக்க..." என்று கூறினார்.

மீராவுக்கு இதைக் கேட்டு அதிர்ச்சி. இரண்டு வருஷமா கோமால இருக்கேனா? எல்லாமே நேற்றுதான் நடந்த மாதிரி இருக்கு என்று அவளுக்கு தோன்றியது.

நித்யா வந்து, "மீரா நீ இல்லாம நாங்க எவ்வளவு கஷ்டப் பட்டோம் தெரியுமா?" என்று அவளை அணைத்துக் கொண்டாள்.

மீரா, "ரஞ்சு, அதான் நான் கண்ணு முழிச்சுட்டேனே! ஏன் அழுகுற..." என்று சமாதானம் செய்தாள். ரஞ்சனாவின் பெற்றோரும் இதனை அளவில்லா சந்தோஷத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

நித்யா, "ஜெய்க்கு போன் பண்ணி முதல்ல இந்த விஷயத்தை சொல்லணும்..." என்று அவனுக்கு போன் செய்தாள்.

மற்ற மருத்துவர்களுடன் ஒரு மீட்டிங்கில் இருந்தான் ஜெய். நித்யாவின் காலை பார்த்தவன், "எக்ஸ்க்யூஸ் மீ..." என்று கேட்டு விட்டு வெளியே வந்தவன், காலை அட்டெண்ட் செய்து, "சொல்லு நித்யா...." என்றான்.

நித்யா, "மீரா கண்ணு முழிச்சிட்டா..." என்று சந்தோஷ கூச்சலிட ஜெய்க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இது கனவா? நினைவா? என்று தெரியவில்லை.  தன் காதுகளை அவனாலே நம்ப முடியவில்லை. "நித்யா, நீ சொல்றது உண்மையா?" எனக் கேட்க,

நித்யா, "ஆமா! உண்மைதான், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கண் முழிச்சா.. நீ சீக்கிரமா கிளம்பி வா.." என்றாள்.

ஜெய், "இதோ உடனே வரேன்..." என்று கூறி செய்தான்.  அவன் குரலிலேயே ஆனந்தம் பொங்கி வழிந்தது. வேகமாக தனது கேபினுக்குள் சென்றவன், "இந்த மீட்டிங்கை நாளைக்கு வைத்துக்கொள்ளலாம். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு..." என்று கூறி கிளம்பி விட்டான்.

மீராவிற்கு நடப்பதை நம்ப முடியவில்லை. எல்லாமே குழப்பமாக இருந்தது. திடீரென்று க்ரிஷின் ஞாபகம் வந்தது. அவன் பேசிய வார்த்தைகளும் ராஜன் பேசிய வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது. மனது பாரம் ஆகியது. தன் குடும்பத்தினரை ஏமாற்றியது போன்ற உணர்வு ஏற்பட்டது.

நித்யா, "ஜெய் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவான்..." என்றாள்.

மீரா இப்போது நடந்ததைக் கூறினால் அவர்களின் சந்தோஷமான மனநிலை கெட்டுவிடும் என நினைத்து எதையும் சொல்லவில்லை. 

மேகலா, "ரஞ்சு, ஜெய் தம்பி என்ன சொன்னாரு?" எனக் கேட்க,

நித்யா, "இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவான். மீரா கண் முழிச்சதை சொன்னதும் அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான்.." என்றாள்.

மீராவின் காதில் ஜெய் என்ற வார்த்தையை அடிக்கடி விழ, மீரா, "ரஞ்சு, யார் அந்த ஜெய்?" எனக் கேட்டாள்.

நித்யா சொல்வதற்குள் மேகலா முந்திக்கொண்டு, "ஜெய் தம்பி உனக்கு ட்ரீட்மென்ட் பார்த்த டாக்டர். அவர் தான் நாங்க நீ கண் முழிக்கலைன்னு கவலைப்படும் போதெல்லாம் ஆறுதல் சொன்னார். நீ சீக்கிரம் முழிச்சுடுவன்னு  அவர் ரொம்ப நம்பிக்கையா இருந்தாரு... அந்த நம்பிக்கைதான் உன்ன சீக்கிரம் கண்முழிக்க வச்சு இருக்கு..." என்றார்.

மீரா, "ஓ... அப்படியா!" என்றவள், அவருக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

ஜெய் விரைவாகவே நித்யாவின் வீட்டை அடைந்தான். அவனுக்காக வெளியே காத்திருந்த நித்யா அவனைப் பார்த்ததும், "ஜெய், மீரா கண் முழிச்சிட்டா.. வா வந்து அவளை பாரு..." என்று அழைத்துச் சென்றாள்.

ஜெய்யின் மனதில் சொல்ல முடியாத உணர்வு. இரண்டு வருடமாக கண்விழித்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேச மாட்டாளா? என ஏங்கிய அந்த தருணம் கைகூடி நிற்கிறது. ஜெய் மீராவை பார்த்தான். அந்த நிமிடம் அவனுக்கு தன் வாழ்வில் எதையோ வென்று விட்ட உணர்வு.  அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எல்லோர் முன்னிலையிலும் தன் உணர்வுகளை கஷ்டப்பட்டு மறைத்தவன் மீராவை பார்த்து புன்னகைத்தான். மீராவும் பதிலுக்கு புன்னகைக்க, அது அவன் செய்த உதவிக்காக மட்டுமே!

ஜெய் வந்து மீராவை பரிசோதித்து விட்டு அவளிடம் சில கேள்விகளை கேட்டான். எல்லாம் முடிந்த பிறகு ஜெய், "அவங்க கம்ப்ளீட்டா குணமாகிட்டாங்க. அவங்களுக்கு இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லை..." என்றான்.

மேகலா ஜெய்யிடம், "தம்பி நீங்க செஞ்ச உதவிய நான் உயிர் உள்ளவரைக்கும் மறக்க மாட்டேன். என் வாழ்க்கையே என் பொண்ணு தான். நீங்க அவளை திருப்பி கொடுத்து இருக்கீங்க..." என்று கையெடுத்து கும்பிட,

ஜெய், "ஐயோ! ஆன்ட்டி, ஏன் என்னை இப்படி கஷ்டபடுத்துறீங்க?" என்றான்.

மேகலா, "இல்ல தம்பி, நீங்க செஞ்சிருக்கது ரொம்ப பெரிய உதவி..." என்றாள். சுஜாதாவும் சதாசிவம் அதனை ஆமோதித்தனர்.

நித்யா, "ஆமா ஜெய், நீ என் மீராவை எனக்கு திருப்பிக் கொடுத்துருக்க..." என்றாள். ஜெய் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நின்றிருந்தான்.

மீராவும் இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் மனதில் ஜெய்யின் மேல் மதிப்பும் மரியாதையும் உண்டானது.  யாரும் எதுவும் பேசாமல் இருக்க ஜெய் மேகலாவிடம், "உங்க பொண்ணு கண்ணு முழிச்சிட்டாங்க.  எனக்கு ஸ்வீட் எதுவும் கிடையாதா?" என்றான் அந்தப் பேச்சை மாற்றும் விதமாக.

மேகலா, "ஸ்வீட் என்ன தம்பி, உங்களுக்காக
விருந்தே போடுறேன்.." என்றவர், "சுஜாதா, வா இந்த சந்தோஷமான விஷயத்தை கொண்டாடுவோம்..." என்று இருவரும் விருந்து சமைக்க கிச்சனுக்கு சென்றனர்.

மீரா, "ரஞ்சு, நான் போய் குளிச்சுட்டு வரேன்" என்றாள்.

நித்யா, "சரி மீரா, நாங்க கீழ வெயிட் பன்றோம்..." என ஜெய்யை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.

சதாசிவம் இந்த மகிழ்ச்சியை கொண்டாட கம்பெனி ஊழியர்களுக்கு எல்லாம் இனிப்பு வழங்க ஏற்பாடு செய்தார். எல்லோரும் மகிழ்ச்சி கடலில் மிதந்து கொண்டிருந்தனர். நிறைய நாட்களுக்கு பிறகு நித்யாவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி! அதை ஜெய் கவனித்தான். 

நித்யா, "ஜெய், மீராவுக்கு இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லைல..." என்று கேட்டாள். அவள் குரலில் இருந்த கலக்கத்தை கவனித்த ஜெய் அவள் கையை பிடித்து, "நித்யா, இனிமேல் மீராவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை..."  என்றான்.

நித்யா, "ஒரு தடவை ஃபுல் பாடி செக்கப் பண்ணிடலாமா?" என்றாள்.

ஜெய், "அவசியம் இல்ல நித்யா, உன் திருப்திக்காக வேனா பண்ணலாம்" என்றான். சுஜாதாவும் மேகலாவும் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

மீரா குளித்து முடித்து கீழே இறங்கி வந்தாள்.  நித்யாவிற்கு மீராவை பழைய மாதிரியே பார்ப்பது போன்ற உணர்வு. மேகலா மீரா வந்தவுடன், "நேராக போய் சாமி கும்பிட்டு வாமா.." என்றார்.

மீராவும் விளக்கேற்றி கடவுளிடம் வேண்டிக் கொண்டாள். அவள் சிந்தனைகள் முழுவதும் க்ரிஷே நிறைந்திருந்தான். அவனை சந்தித்ததில் இருந்து இன்று வரை நடந்தது அவள் எண்ணங்களில் ஓடியது. அவன் அப்படி பேசி இருக்க மாட்டான் என்று உள்மனது சொன்னது. மூளை அவன் தான் அவ்வாறு பேசினான். நீ தான் அவன் பேசியதை கேட்ட என்று கூற மூளைக்கும் மனதிற்கும் இடையில் நடந்த போராட்டத்தில் சிக்கி தவித்தாள். ஒருவழியாக கடவுளை வணங்கிவிட்டு வெளியே வந்தாள்.

நித்யா மிகவும் சந்தோஷமாக ஜெய்யுடன் பேசிக்கொண்டிருந்தாள். மீரா வந்ததும் வா என்று அவளை அருகில் அமர்த்திக் கொண்டாள். சுஜாதா, "ரஞ்சனா..." என்று அழைக்க, "இதோ வரேன்மா..." என்பவள், "நீங்க பேசிட்டு இருங்க, வந்துடுறேன்" என எழுந்து சென்று விட்டாள்.

இருவருக்குமே என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மீரா முதலில் மௌனத்தை கலைத்து, "ரொம்ப தேங்க்ஸ்" என்றாள்.

ஜெய் புன்னகையுடன், "தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு? நான் என் கடமையைத் தான்  செஞ்சேன்..." என்றான்.

மீராவிற்கு முதன்முதலாக ஜெயின் குரலை கேட்டவுடன் தோன்றிய அதே எண்ணமே மீண்டும் தோன்றியது. இந்த குரலை எங்கோ கேட்ட உணர்வு. அதுவும் மிக நெருக்கமாக அடிக்கடி கேட்ட உணர்வு. ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை. குழப்பமாக இருக்க, அவனிடமே கேட்டு விடுவோம் என நினைத்தவள், "நாம முன்னாடியே மீட் பண்ணியிருக்கோமா?" எனக் கேட்டாள்.

ஜெய், "இல்ல, ஏன் கேட்கிறீங்க..?" என கேட்டான்.

மீரா, "இல்ல, உங்க குரலை ஏற்கனவே கேட்ட மாதிரி ஒரு ஃபீலிங்" என்றாள். இதை கேட்டு ஜெய்யின் மனம் துணுக்குற்றது. "இல்ல மீரா, பார்த்து இருக்க வாய்ப்பே இல்லை..." என்றான்.

நித்யா காபி எடுத்து வர மூவரும் பேசிக்கொண்டே காபியை அருந்தினர். நித்யா சந்தோஷத்தில் க்ரிஷைப் பற்றி நினைக்க வில்லை. ஆனால் மீராவின் மனம் முழுவதும் க்ரிஷின் நினைவுகளே!

மேகலாவும் சுஜாதாவும் சமைத்து முடித்து விட அனைவரையும் உணவு உண்ண அழைத்தனர். எல்லோரும் மகிழ்ச்சியாக வெகுநாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து சேர்ந்து சாப்பிட்டனர்.

எல்லாமே மீராவுக்கு பிடித்த உணவாகவே பார்த்துப் பார்த்துச் அமைத்திருந்தனர். ரஞ்சு கரண்டியை கீழே தவற விட்டாள். அதை எடுத்து குனியும் போது அவள் தாலி வெளியே வந்து விழுந்தது. அதை பார்த்த மீரா ரஞ்சுவின் முகத்தை பார்த்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இருந்தது.

மீரா சந்தோஷமாக, "ரஞ்சு, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்றாள். அவள் கேட்ட கேள்வியில் அனைவருமே அதிர்ச்சியுற்றனர். எல்லோர் முகமும் இருளடைந்து விட்டது.

நித்யாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. மீரா கேட்ட பிறகுதான் அவளுக்கு க்ரிஷின் நினைவு வந்தது. நடந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தால் மீரா என்ன சொல்லுவாள் என்ற பயம் எழுந்தது. இனிமேல் க்ரிஷ் தனக்கு சொந்தம் இல்லை என்ற எண்ணம் அதைவிட பூதாகரமாக எழுந்தது. ரஞ்சு முகத்தில் பயத்தை வெளிக்காட்டாமல் ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.

மீரா, "வாவ்! யார் அந்த அதிர்ஷ்டசாலி? எனக்கு அவரை பார்க்கணும் போல இருக்கு..." என்றாள்.

இதற்கு நித்யாவிடத்தில் பதில் இல்லை. ஜெயிக்கு மீரா இந்த கேள்வியை கேட்ட பிறகுதான் க்ரிஷ்க்கு இன்னும் எதையும் சொல்லவில்லை என்று உரைத்தது. முதல் வேலையாக அவனிடம் தெரிவிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

நித்யாவின் நிலையை பார்த்த மேகலா, "மீரா, அவருக்கு இன்னும் நித்யா சொல்லி இருக்கமாட்டா... சாப்பிட்ட பிறகு அவரை வரச் சொல்லுவா.." என்றார்.

மீராவிற்கு ஆவல் தாங்க முடியவில்லை. ரஞ்சனாவின் கணவர் எப்படி இருப்பார்? இவளுக்கு பொருத்தமானவரா? என்ன வேலை பார்க்கிறார்? ரஞ்சுவை நன்றாக பார்த்துக் கொள்கிறாரா? என்று தோன்ற, சாப்பிட்டு முடித்ததும் ரஞ்சனாவிடம் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

மீரா இந்த கேள்விக்கு பிறகு யாருக்கும் சாப்பிட பிடிக்கவில்லை. கனத்த மவுனம் நிலவியது. பேருக்கு உண்டுவிட்டு அனைவரும் எழுந்தனர்.

மீரா ரஞ்சுவிடம் அவள் கணவனை பற்றி கேள்விகளை அடுக்க, "அவர் நேரில் வந்ததும் நீயே பார்த்துக்கோ..." என்று விட்டாள். க்ரிஷூம் சுரேந்தரும் நித்யாவின் வீட்டை நோக்கி பயணப்பட்டனர்.

      
                                       கரைவாள்...

 


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 5 months ago
Posts: 72
16/10/2020 8:26 am  

உன் காதலில் நானும் கரைவேனா? 55

 

க்ரிஷூம் சுரேந்தரும் நித்யாவின் வீட்டை அடைந்தனர். கிரிஷ் நித்யாவை பார்க்கும் சந்தோஷத்தில் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி எறிந்தான். எது வந்தாலும் அது நித்யாவிற்கு பிறகுதான் என முடிவு செய்து கொண்டான்.

ஜெய் அவனுக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தான். நித்யாவும் அவனுக்காக ஹாலில் அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் மனதில் அலையலையாய் எண்ணங்கள். மீராவிற்கு உண்மை தெரிந்தால் என்ன முடிவை எடுப்பாள். க்ரிஷ் தனக்கு சொந்தமில்லை என்று நினைக்கும் போது உள்ளம் பதைபதைத்தது. அவள் முகத்தில் பரிதவிப்பு நன்றாக தெரிந்தது. அதை அவள் மறைக்க முயன்று கொண்டிருந்தாள்.

ஜெய்யும் அவள் பரிதவிப்புகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். மீராவிற்கு அனிதா போன் செய்திருந்தாள். அவள் போன் பேசிக் கொண்டிருந்தாள்.

க்ரிஷ் உள்ளே நுழைந்ததும் அவன் கண்கள் நித்யாவை தான் தேடியது. நித்யாவும் க்ரிஷைப் பார்த்ததும் எழுந்து நின்று விட்டாள். நித்யாவை பார்த்ததும் க்ரிஷின் உணர்வுகள் உயிர் பெற்று எழுந்தது. அவன் உயிர் அவனிடம் மீண்டும் வந்து சேர்ந்துவிட்டது போன்ற உணர்வு. அவன் கண்களில் காதலையும் ஏக்கத்தையும் ஒருசேர தேக்கி அவளைப் பார்த்தான்.

நித்யாவும் இமைக்காமல் அவனைத்தான் பார்த்தாள். அவனின் தோற்றத்தைப் பார்த்தாள். உடல் இளைத்து, நிறம் கருத்து, காடு போல வளர்ந்த தாடி, கலைந்த கேசம் என்று ஆளே மாறி இருந்தான். க்ரிஷ்ஷா இது என்று சந்தேகம் படியான ஒரு தோற்றம்.  எல்லாம் தன்னால் தான் அவன் இப்படி ஆகி விட்டான் என்ற உணர்வு எழுந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தன்னிலை மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

நித்யா க்ரிஷைப் பார்த்து கலங்கி விடக்கூடாது என்று என்ன முயன்றும் கட்டுப்படுத்தியும் அவள் உணர்வுகள் பிரவாகாரமாக எழுந்தது. அதை அவளால் மறைக்க முடியவில்லை. க்ரிஷூம் நித்யாவின் தோற்றத்தை தான் ஆராய்ச்சி செய்தான். அவள் மெலிந்த தேகம் இன்னும் மெலிந்து இருந்தது. முகத்தில் பொலிவு இல்லை. எதையோ இழந்தது போன்ற ஒரு தோற்றம்.

யாரும் அவர்களின் மௌனத்தை கலைக்க விரும்பவில்லை. வெகுநேரம் இந்த பார்வை நீண்டுகொண்டே போனது. நித்யாவின் மூளை அவன் மீராவிற்கு சொந்தமானவன் என்று உரைக்க, அவள் மன உணர்வுகள் அதை வென்று விட்டது. என்ன முயன்றும் கண்கள் கலங்குவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவர்கள் தங்கள் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, நீண்ட பயணம் முடிவில்லாமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

அவன் வருவதற்கு முன்புவரை அவன் மீராவிற்கு சொந்தமானவன் என்று எண்ணிக் கொண்டிருந்த அவள் எண்ணம் சுக்கு நூறாய் உடைந்து போனது. அந்த சமயம் பார்த்து அனிதாவிடம் பேசிவிட்டு கீழே வந்த மீராவிற்கு க்ரிஷைப் பார்த்தும் பலத்த அதிர்ச்சி! சொல்ல முடியாத எண்ணங்கள் அணிவகுத்து நின்றது.

அவன் தனக்காக தான் வந்திருப்பான் என்று காதல் கொண்டது மனது எண்ணி கலங்க, அவன் பேசிய வார்த்தைகள் மூளைக்குள் ஓடியது. மற்றவர்களுக்கு உண்மை தெரிந்தால் என்ன ஆவது என்று வரிசையாக எண்ண அலைகள், அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!

அவள் தாயைப் பற்றி பேசியது அவளுக்கு கோபம் வந்துவிட்டது. தன் குடும்பத்திற்கு தெரியாமல் தான் இவ்வளவு பெரிய செயலை செய்த குற்றவுணர்வு அவளை தாக்கியது.  காதலை  விட தன் தாயை பெரிதாக எண்ணியவள் குற்றவுணர்ச்சியுடன் கோபமாக க்ரிஷிடம், "உன்னை யார் இங்கே வர சொன்னது?" என கேட்டாள்.

மீராவின் குரலில் சுயநினைவு பெற்று இருவரும் குரல் வந்த திசையை நோக்க, மற்றவர்களும் மீராவை பார்த்தனர்.

மீரா மீண்டும் கோபமாக, "யாரை கேட்டு இங்கே வந்த?" என்று  கத்தினாள். க்ரிஷிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை; எந்த சலனமும் இல்லாமல் அவளைப் பார்த்தான். அவன் தெளிவான மனநிலையில் இருந்தான். மீரா தன் நினைவில் இல்லாத இறந்தகாலம், நித்யா மட்டுமே அவனை நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமுமே! எல்லாவற்றையும் சமாளிக்கும் மன நிலையில் இருந்தான். மீரா கோபப்பட்டு தன்னை அடித்தால் கூட அதை வாங்கிக்கொள்ளலாம். ஏனென்றால் அவள் தன்னால் காயப்பட்டிருக்கிறாள், பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என நினைத்தான்.

மீரா கலங்கிய விழிகளுடன், "ஏன்டா என்னை ஏமாத்தின? நானா காதலிக்கிறேன்னு உன் பின்னாடி வந்தேன்? நீ தான வந்த... என்னை காதலிச்ச...  என்னை காதலிக்கும் போது உனக்கு என்னோட பேக்ரவுண்ட் தெரியலையா? உங்க அப்பா எங்க அம்மா பத்தி எப்படி தப்பா பேசினாங்க தெரியுமா? நான் செஞ்ச தப்புக்கு அதை என் அம்மா ஏன்டா தேவையில்லாமல் பேச்சு வாங்கணும்..." என்று கலங்கிய விழிகளுடன் ஆவேசமாக கேட்டாள்.

இதற்கும் அவனிடம் பதில் இல்லை. அவன் பேசாமல் இருப்பதை பார்த்து மீராவிற்கு கோபம் அதிகமாகியது. நிலைமை விபரீதமாக போவதை உணர்ந்து நித்யா முன்நின்று, "மீரா, இவர் தான் என்னோட கணவர்" என்றாள் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன்.

இந்த செய்தி மீராவிற்கு பேரதிர்ச்சி! இவன் என் ரஞ்சுவின் கணவனா? என்று நினைக்கையில் கோபம் அழுகை எல்லாம் சேர்ந்து வந்தது. தன்னை ஏமாற்றிய அவன் தன் உடன் பிறவா சகோதரியின் கணவனா? இதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "என் வாழ்க்கையை வீணாக்குனது பத்தாதுதுன்னு என் ரஞ்சுவோட  வாழ்க்கையை ஏன்டா வீணாக்குன? நான் உனக்கு என்னடா பண்ணேன்?" என்று அழுதுகொண்டே கேட்டவள்,

நித்யாவிடம், "ரஞ்சு, நீ எப்படி இவனை கல்யாணம் பண்ணின? இவன் ஒரு ஏமாத்துக்காரன். ஏன் ரஞ்சு இப்படி அவரசபட்டுட்ட..." என்று கேட்டாள்.

நித்யா, "மீரா, அவர் ஏமாற்றுக்காரர் இல்ல, அவர் நல்லவர்... அவங்க அப்பா செஞ்ச தப்புனால் தான் அவர் உன் கண்ணுக்கு கெட்டவரா தெரிஞ்சு இருக்காரு..." என்க,

மீரா, "இல்ல ரஞ்சு, உனக்கு எதுவும் தெரியாது. இவன் என்னை காதலிச்சு ஏமாத்திட்டான்..." என்றாள் கோபம் சற்றும் குறையாமல்.

ரஞ்சு, "எனக்கு எல்லாமே தெரியும் மீரா. தெரிஞ்சது நான் தான் பேசுறேன்.." என்றாள்.

மீரா, "என்ன, உனக்கு எல்லாமே தெரியுமா?" என்று அதிர்ச்சியாக பார்க்க, நித்யா ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.

மீரா, "தெரிஞ்சும் நீ ஏன் இவனை கல்யாணம் பண்ண? உன் வாழ்க்கையை நீயே வீணாகிட்ட..." என்றவள், பெரியவர்களிடம் திரும்பி நீங்க இருந்தும் ஏன் இப்படி நடக்கவிட்டீங்க? என்று குற்றம் சாட்டும் பார்வை பார்க்க,

நித்யா, "மீரா, அவங்களுக்கு எதுவும் தெரியாது..." என்று தன் மீராவின் டைரியை படித்ததில் இருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் கூறினாள்.

மீரா இதைக் கேட்ட அதிர்ச்சியில் கல்லாக சமைந்து விட்டாள். அவளால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அப்படியே அமர்ந்து விட்டாள். அவள் கூறியதை கிரகிக்கவே அவளுக்கு சில கணங்கள் தேவைப்பட்டது. தான் தான் தவறாக புரிந்து கொண்டு விட்டோம், அவன் உண்மையாகத் தான் காதலித்தான் என நினைக்கவே மனம் கனத்தது.

அதற்கு மேல் தனக்கு நேர்ந்த துன்பத்திற்காக ரஞ்சு வாழ்க்கையையே பணயம் வைத்திருக்கிறாள். அவளது தூய்மையான அன்பை எண்ணி மனம் நெகிழ்ந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. சூழ்நிலையை அவளால் தாங்க முடியவில்லை.

க்ரிஷ் மீரா முன் மண்டியிட்டு அமர்ந்தான். மீரா தலையை நிமிர்த்தி பார்க்க க்ரிஷ், "மீரா, தெரிஞ்சோ தெரியாமலோ என்னால உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கு. அத மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையால சரி பண்ணிட முடியாது. பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைங்கள தான் சேரும். அது மாதிரி எங்க அப்பா பண்ண தப்புக்கு நான் தான் தண்டனையை ஏத்துக்குறேன். நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். ஆனால் ஒன்னு..." என்க,
இவ்வளவு நேரம் கண்களை மூடி கேட்டுக்கொண்டிருந்த மீரா கண்களை திறந்து அவனை பார்த்தாள்.

க்ரிஷ், "ஆனா ஒன்னு, என்னால நித்யாவை மட்டும் விட்டுக் கொடுக்க முடியாது. அவ  இல்லாமல் என் வாழ்க்கையில எதுவுமே இல்ல. நான் உங்களை காதலிச்சேன்னு இவங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும். சத்தியமா எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. நீங்க என்னோட நினைவில் இல்லாத இறந்தகாலம். இனிமே என்னோட நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே நித்யா தான். ப்ளீஸ் என் நித்யாவை என்கிட்டே இருந்து பிரிச்சுடாதீங்க... ப்ளீஸ்.." என்று கண்கலங்கி அவனிடம் மன்றாடினான்.

க்ரிஷின் வார்த்தையை கேட்ட மீரா மொத்தமாக நொறுங்கிப் போனாள். தவறு தன்னுடையது தான். அவனுடைய தூய்மையான காதலை சந்தேகப்பட்டது நான் தான். அன்று அவனிடம் நான் தெளிவாக பேசி இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது. தன் மீதுதான் தவறு என்று தெரிந்தும் அவன் மேல் பழியைப் போட்டு பேசுகிறானே! இவனையா சந்தேகப்பட்டு திட்டினேன்: என்று தன் மேலேயே மீராவுக்கு கோபம் வந்தது.

க்ரிஷின் வார்த்தையை கேட்ட நித்யாவின் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. என்ன மாதிரியான காதல் இவனுடையது. தான் அவனை பழிவாங்க நினைத்து,  காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொண்டேன் என தெரிந்தும் எனக்காக அவளிடம் மன்றாடுகிறான், யாசிக்கிரான். இவனுக்காக நான் என்ன செய்துவிட்டேன் நான்? எதற்காக இவன் எனக்காக இவ்வளவு போராடுகிறான். இவன் காதல் கிடைக்க நான் என்ன தவம் செய்து இருக்கிறேன்? இவனுடைய காதலுக்கு நான் தகுதியானவன் அல்ல' என்று தோன்றியது. அவன் காதலுக்கு முன்பு தான் தோற்று விட்டது போன்ற உணர்வு. தன் உணர்வுகளை மறைத்து முகத்தை சரி செய்து கொண்டவள் மீராவிடம், "எனக்கு அவர் மேல் காதல் எல்லாம் இல்ல, உனக்காகத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இது உன்னோட இடம், நீ வாழ வேண்டிய வாழ்க்கை. நான் இவருக்கு விவாகரத்து கொடுத்துடுகிறேன்.." என்று மனதை கல்லாக்கி கொண்டு கூறினாள். அவள் வார்த்தையை கேட்டு க்ரிஷ் துடிதுடித்து நித்யாவை பார்த்தான்.

                                       கரைவாள்....

 


NIVETHA liked
ReplyQuote
NIVETHA
(@velavaa)
Trusted Member Registered
Joined: 10 months ago
Posts: 88
19/10/2020 9:43 am  

2 uds are super sis 😍 kirsh pavam sis 😓 nithyavum than 😭 waiting for ur nxt ud sis 😎 sekram vaga


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 5 months ago
Posts: 72
21/10/2020 3:37 pm  

உன் காதலில் நானும் கரைவேனா? 56

 

நித்யா பேசியதைக் கேட்டு க்ரிஷ் துடிதுடித்து அவளைப் பார்த்தான். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. க்ரிஷ் நித்யா பேசியதை கேட்டு மனம் உடைந்து விட்டான். நான் இவளுக்காக கெஞ்சிக் கொண்டு இருக்கிறேன். இவள் என் மேல் காதலே இல்லை என்கிறாள். நான் இவனிடம் நடித்தேன், விவாகரத்து கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறாளே! என உடைந்து போனவன் அவளை அடிபட்ட பார்வை பார்த்தான்.

நித்யா கவனமாக அவனது பார்வையை பார்த்தாள். நித்யா சொன்னதை கேட்ட மீரா கோபமாக அவளைப் பார்த்தாள். நித்யா பயத்துடன் அவளை ஏறிட்டு ஏதோ சொல்ல வர மீரா அவளை ஓங்கி அறைந்து விட்டாள். நித்யா இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் கைகளை கன்னத்தில் வைத்தாள். மற்றவர்களும் இதை அதிர்ச்சியாக பார்த்தாள். நித்யா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

மீரா, "ஏன்டி, இப்படி இருக்க.. வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு கடன்காரியாவே இருக்கணுமா? ஏற்கனவே எனக்காக எல்லாத்தையும் செஞ்சு என்ன கடன்காரியா வச்சி இருக்க. இப்போ உன் வாழ்க்கையை எனக்காக விட்டுக்கொடுத்து தீர்க்கவே முடியாத கடன்காரி என்னை மாத்திடாதடி..." என்று கூறினாள்.

நித்யா, "அப்படி எல்லாம் இல்ல டி, இது நீ வாழ வேண்டிய வாழ்க்கை. நான் தான் இடையில் வந்து விட்டேன்..." என்றாள்.

மீரா கையை நீட்டி, "போதும் இதுக்கு மேல எதுவும் பேசாத! நீ எனக்கு எந்த விளக்கமும் சொல்ல தேவை இல்லை. தப்பு என்னோடது தான். அன்னைக்கு இவர் ஆபீஸ்க்கு உள்ள போய் நேராப் போய் அவர் கிட்ட பேசியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. எந்த உறவைலயும் முக்கியம் நம்பிக்கை. நான் இவரை சந்தேகப்பட்டுட்டேன். இவர் அப்பா என்ன சொல்லியிருந்தாலும் நான் நம்பி இருக்கக் கூடாது. ஒரு நொடினாலும் நான் சந்தேகப்பட்டு அந்த உறவை நான் கலங்கப்படுத்திட்டேன். நான் அவரோட காதுக்கு தகுதி இல்லாதவ. இப்பக்கூட அவங்க அப்பா செஞ்ச தப்புக்கு அவர் தண்டனை அனுபவிக்க தயாராக இருக்கேன்னு சொல்றாரு... நீ அவரை ஏமாத்திட்டன்னு தெரிஞ்சும் உண்மையான காதலுக்காக என்கிட்ட கெஞ்சுகிறாரு... இதுக்கு மேலயும் அவரை காயப் படுத்த விரும்பல, அவர் கூட போய்டு..." என்றாள்.

நித்யாவிற்கு இப்போதும் மீராவை ஏமாற்றி விட்டோம் என்று தோன்றியது. மறுப்பாக தலையை ஆட்டினாள்.

மீரா, "நித்யா, சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா? ஏற்கனவே அவர் உண்மையான காதலை ஏமாற்றி விட்டேன் என்று குற்ற உணர்ச்சியில் இருக்கேன். நீ இப்படி பண்ணி வாழ்க்கை முழுவதும் என்னை வருத்தப் பட வச்சுடாத! நான் உனக்கு அப்படி என்னடி செஞ்சுட்டேன்? எனக்காக இவ்வளவு பண்ணுற... எனக்காக பழி வாங்குறன்னு உன் வாழ்க்கையைவே பணையம் வெச்சிருக்க... உன்னோட அன்புக்கு முன்னாடி அவருடைய காதலுக்கு முன்னாடி நான் தோற்றுப் போய் நிற்கிறேன். நீ இப்ப எனக்காக விட்டுக் கொடுத்தாலும், நான் அந்த வாழ்க்கையை குற்ற உணர்ச்சியோடு தான் வாழ்வேன். இதுக்கு மேல உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது என்று எனக்கு தெரியலை..." என ஓய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

அவளின் அழுகையைப் பார்த்து எல்லோரும் கண்கள் கலங்கிவிட்டது. நித்யா, "ஏன்டி இப்படி எல்லாம் பேசுற. எனக்கு கஷ்டமா இருக்கு  நீ சொல்றதை நான் கேட்கிறேன்டி..." என்று அவளை அணைத்துக் கொண்டாள். எல்லோரும் அவர்கள் உணர்ச்சி போராட்டத்தை கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நித்யா சரி என்று கூறியவுடன் மீரா விழுக் என்று நிமிர்ந்து பார்த்தாள். மீரா, "ரஞ்சு, உண்மையான சொல்ற?" எனக் கேட்க, நித்யா ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.

மீரா உடனே கண்ணீரை துடைத்துக்கொண்டு க்ரிஷைப் பார்த்து, "இங்கே வாங்க..." என்றாள். க்ரிஷ் அருகில் வந்ததும் நித்தியாவின் கையை பிடித்து அவனின் கையில் வைத்தவள், "நீங்க கேட்ட மாதிரியே உங்க நித்யாவை உங்க கிட்ட கொடுத்திட்டேன். அவ தான் எனக்கு எல்லாமே! அவளை பத்திரமா பார்த்துக்கோங்க..." என்றாள்.

நித்யா பேசிய பேச்சினால் அவனுக்கு கோபம் வந்தாலும் அதனை வெளியே காட்டாமல், "நீங்க சொல்லவே வேண்டாம் கண்டிப்பா அவளை நான் நல்லாப் பாத்துப்பேன்..." என்றான் உறுதியுடன்.

அவன் வார்த்தையில் நித்யா மேலும் மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளானால். அவன் காதலிக்க தான் தகுதியானவன் அல்ல என்ற எண்ணமே மீண்டும் மீண்டும் அவள் மனதில் வந்தது. யாருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

சூழ்நிலையை சமாளிக்கும் பொருட்டு மீரா, "இதோட எல்லாம் முடிஞ்சிடுச்சுடுச்சு... யாரும் நடந்ததை பற்றி பேச வேண்டாம்..." என்றாள். இதற்கும் யாரும் எதுவும் பேசவில்லை.

மீரா, "ஏன் எல்லாரும் இப்ப சோகமா இருக்கீங்க..." என்றவள் சுஜாதாவிடம், "அம்மா, க்ரிஷ் முதன்முதலா நம்ம வீட்டுக்கு வந்து இருக்காரு... அவர் நித்யாவோட கணவர். நம்ம வீட்டு மாப்பிள்ளை. அவரை உபசரிக்க மாட்டீங்களா? போய் சாப்பாடு அசத்தலா செய்யுங்க..." என்றாள்.

அவள் சூழ்நிலையை இலகுவாக்க முனைகிறாள் என்று பெரியவர்கள் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நடந்தனர்.

மீரா, "நித்யா, போய் முகத்தை கழுவிட்டு வா. அழுது அழுது சிவந்திடுச்சு பாரு... இனிமே நீ எப்பவும் அழக்கூடாது, புரிஞ்சுதா?" என கேட்க, நித்யா சரி என்று தலையை ஆட்டினாள்.

மீரா, "போ... போய் பிரஷ் ஆகிட்டுவா... நானும் போய் முகம் கழுவிட்டு வரேன்..." என்றவள், "நீங்க எல்லாரும் உட்காருங்க..." என்றாள்.

க்ரிஷ், சுரேந்தர், ஜெய் மூவர் மனதிலும் தோன்றிய விஷயம் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையை இவ்வளவு சுலபமாக சமாளித்துவிட்டு எதுவுமே தெரியாதது போல நடந்து கொள்கிறாள். மனதில் வருத்தம் இருந்தாலும் முகத்தில் ஒரு துளி கூட காட்டவில்லை. எவ்வளவு பெரிய ஏமாற்றம், தாங்க முடியாத வலி, இவை அனைத்தையும் சமாளித்து விட்டாள். என்று தோன்றியது. மீரா அவர்கள் மனதில் உயர்ந்து விட்டாள்.

மீரா தனது அறைக்கு சென்று கதவை பூட்டியவள் கதவில் சாய்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள். காலில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதாள். 'ஒரே நாளில் வாழ்க்கை இவ்வளவு பாரம் ஆகி விட்டதே!' என்று தோன்றியது.  ஏற்றுக்கொள்ள முடியாத ஏமாற்றம். சிறிது நேரம் தன்னால் முடிந்த மட்டும் அழுதவள், 'தான் செய்தது சரியான காரியம் தான். க்ரிஷ்க்கு நித்யாவின் மேல் உள்ள காதல் அவர் பேசிய பேச்சிலேயே தெரிந்தது. தான் இல்லை என்று தெரிந்த பின்பும் உயிரை விடத் துணிந்த அவனது உண்மையான காதலை சந்தேகித்த, எனக்கு இது தேவைதான். எனக்காக தன் வாழ்க்கையை பணியவைத்தவளது  தூய்மையான அன்பு எத்தகையது? அத்தகையவளின் அன்பும், அவனின் தூய்மையான காதலுமே என்றும் ஒன்றுசேர வேண்டும். க்ரிஷினை நித்யாவின் வார்த்தைக்காக ஏற்றுக்கொண்டாலும் நித்யாவினை மனதில் வைத்துக்கொண்டு, அவனால் தன்னுடன் நிம்மதியாக வாழ முடியாது. அது அவனுக்கு நரகவேதனை, தனக்கும் குற்ற உணர்ச்சியில் வாழ முடியாது. தான் எடுத்தது 100% சரியான முடிவு' என்று தன் மனதை தேற்றிக் கொண்டவர் எழுந்து முகத்தை கழுவி விட்டு எந்த உணர்ச்சியையும் காட்டாமல் முகத்தில் வரவழைத்த புன்னகையுடன் வெளியே வந்தாள்.

கிச்சனுக்கு சென்று காபி போட்டுக் கொண்டு வந்தவள் புன்னகை முகமாகவே எல்லோருக்கும் கொடுத்தாள். நித்யா இன்னும் முகம் தெரியாமல் இருப்பதை பார்த்தவள், "ரஞ்சு, ஏன் முகத்தை இப்படி வச்சுருக்க... என் ரஞ்சு இப்படி இருக்கவே மாட்டா... அவ எப்பவுமே கலகலப்பா இருப்பா... சுத்தி இருப்பவர்களையும் கலகலப்பா மாற்றிடுவா... இந்த ரஞ்சனாவை எனக்கு பிடிக்கலை. இரண்டு வருஷம் கழிச்சு எழுந்து உன் கிட்ட பேசுறேன். நீ இப்படி பேசாம இருக்க..." என்றாள்.

நித்யா முயற்சி புன்னகையை வரவழைத்தாள். மீராவிற்காக எல்லோரும் நார்மலாகவே நடத்த முயற்சித்தனர். இரவு உணவை மீரா எல்லோருக்கும் பரிமாறினாள்.

சுரேந்தர் 'கடவுளே! இந்த பொண்ணு வாழ்க்கை இனிமேலாவது சந்தோஷமாக இருக்க வேண்டும்' என வேண்டிக் கொண்டான்.

நித்யா, "மீரா நீயும் எங்களுடன் சாப்பிடு..." என்று கூற,

மீரா, "இல்ல, நீங்க எல்லோரும் சாப்பிடுங்க... நான் அப்புறம் சாப்பிடுறேன்" என்று விட்டாள்...

                                 கரைவாள்....

 


ReplyQuoteJanu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 5 months ago
Posts: 72
21/10/2020 3:40 pm  

உன் காதலில் நானும் கரைவேனா? 57

எல்லோரும் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றனர். ஜெயிக்கு பிரச்சனை எல்லாம் ஓரளவு சரியாகிவிட்டது என்று நிம்மதியாக இருந்தாலும், மீராவின் அழுகை அவனுக்கு வருத்தத்தை அளித்தது. 

அவள் எடுத்தது சரியான முடிவு. மீரா நித்யாவிற்காக விட்டுக் கொடுத்ததும், நித்யா மீராவிற்காக விட்டுக் கொடுத்தும் அவர்கள் நட்பின் ஆழத்தை காட்டியது என்று அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அவனது சிந்தனையை கலைக்கும் விதமாக அவனது மொபைல் ரிங்காகியது. பத்மாவதி தான் அழைத்திருந்தார். ஜெய் காலை அட்டெண்ட் செய்து, "ஹலோ அம்மா, சொல்லுங்க..." என்றான்.

பத்மாவதிக்கு நடந்தது எதுவும் தெரியாததால், "என்னப்பா பண்ற? சாப்பிட்டியா?" எனக் கேட்டார்.

ஜெய் நடந்தவற்றை இவர்களிடம் சொல்லி விடலாமா என நினைத்தான். சொல்லிவிட்டால் க்ரிஷிற்கும் ராஜனுக்கும் இடையே உள்ள மன வருத்தம் தீர்ந்து விடும்.  ராஜன் செய்த குற்றத்திற்காக இன்றுவரை வருந்துகிறார். திருந்தி வாழ நினைப்பவர் மீண்டும் தண்டிப்பது சரியானது அல்ல என நினைத்தவன், "அம்மா, நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்..." என்றான்.

பத்மா, "ஜெய், க்ரிஷைப் பத்தியா? அப்பா அவனை பார்த்தை கோலத்தை பற்றி சொல்லும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா ஆயிருச்சு.  பெத்த புள்ளையை இப்படி கஷ்டப்பட வைச்சிட்டேன். நான் எல்லாம் எதுக்கு இருக்கேன்னு தோணுச்சு. உங்க அப்பா அவர் செஞ்ச தப்பு நான் தான் இதெல்லாம் நடந்தது என்று தினமும் கவலைப்படுறாரு. அவரை என்னால் சமாதான படுத்த முடியலை. எனக்காக அவகிட்ட கொஞ்சம் பேசுறியா? நான் நித்யா கிட்ட பேசி அவளை சமாதானப்படுத்தினேன். அவ ரொம்ப நல்ல பொண்ணு.  அவளோட ப்ரண்ட்க்கு இப்படி ஆகிடுச்சுனு கோபத்துல அப்படி பண்ணிட்டா... நான் சொன்னா அவ கேப்பா..." என்று கூறினார்.

ஜெய், "அம்மா, கவலை படாதீங்க. அதுக்கு எல்லாம் அவசியமில்லை..." என்று நடந்தவற்றை கூறினான்.

பத்மா நம்பாமல், "உண்மையாகவா? என்னால நம்ப முடியல. அந்த பொண்ணு கண் முழிச்சிட்டாளா? இது உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாரு..." என்றவர், "அந்த பொண்ணுக்கு  எவ்வளவு நல்ல மனசு இருந்தா இப்படி பேசி இருப்பா. அவளுக்கு கெடுதல் செஞ்ச நமக்கு நல்லது நினைக்கிறா... அவ வாழ்க்கையவே விட்டுக்கொடுத்து இருக்கா. அவளுக்கு போய் கடவுள் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிறாரே!" என்று வருத்தப்பட்டார்.

ஜெய், "அம்மா, கவலை படாதீங்க. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்..." என்றான்.

பத்மாவதி, "இதை இப்பவே உங்க அப்பா கிட்ட சொல்றேன்..." என்று மகிழ்ச்சியாக சொன்னவர் ராஜனிடம் ஜெய் கூறிய அனைத்தையும் சொன்னார்.

ராஜனுக்கு இதைக் கேட்டு அளவில்லா மகிழ்ச்சி. க்ரிஷின் வாழ்க்கை தன்னால் தான் இப்படி ஆகி விட்டது என்ற மன வருத்தத்தில் இருந்தவர், இப்போது எல்லாம் சரியாகி விட்டது, மீராவும் கண் விழித்து விட்டாள். நித்யாவுடன் க்ரிஷ் சேர்ந்து விட்டான் என்று சந்தோஷப்பட்டார்.

ராஜன், "ஜெய், நான் செஞ்ச தப்புக்கு தினமும் வருத்தப்பட்டுட்டே இருந்தேன். நாங்க இப்பவே கிளம்புறோம். நாம் மீரா கிட்ட மனசார மன்னிப்பு கேட்கனும். அப்போதான் நான் நிம்மதியா இருக்க முடியும்..." என்றார்.

ஜெய், "சரிங்க அப்பா, கிளம்பி வாங்க. ஆனால் க்ரிஷ் கண்டிப்பா கோபப்படுவான்..." என்றான்.

ராஜன், "பரவாயில்லப்பா, செஞ்ச தப்புக்கு நான் தண்டன அனுபவிச்சு தானே ஆகணும். நான் நேர்ல வரேன்..." என்றார். ஜெய், "சரிப்பா...." என்று காலை கட் செய்தான்.

ஜெய் 'நாளைக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது' என கடவுளை வேண்டிக் கொண்டான்.

நித்யா பயத்துடனே தனது அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு தெரியும் அவள் மீராவிடம் கூறியதைக் கேட்டு கேட்டு அவனுக்கு கண்டிப்பாக கோபம் இருக்கும் என்று.

க்ரிஷக்கு மனது ஆறவில்லை 'எவ்வளவு சுலபமாக என்னை விவாகரத்து செய்து விடுகிறேன் என்று கூறுகிறாள்.. நான் அவள் மேல் வைத்திருக்கும் காதலுக்கு அவ்வளவுதான் மதிப்பா? இல்லை உண்மையிலேயே அவளுக்கு என்மீது காதல் இல்லையா? என்று நினைக்க, அவன் மனது இல்லை நிச்சயமாக அவளுக்கு உன்மீது காதல் உள்ளது. அதை நிறைய முறை நீ அவள் கண்களில் பார்த்திருக்கிறாய்! என்றது. நான் இல்லாமல் அவளால் இருக்க முடியுமா?' என்று பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.

நித்யா அவன் முன் வந்து நின்றாள். க்ரிஷ் அவள் வந்ததே உணர்ந்தாலும் நிமிர்ந்து பார்க்கவில்லை. நித்யா வெளிவராத குரலில், "என்னங்க...." என்று அழைத்தாள். அவனிடம் பதில் இல்லை. அவள், "நான் பேசுனது தப்புதான்..." என்று ஆரம்பிக்க, அவன் நிமிர்ந்து அவளை ஒரு முறை முறைத்தான். அவன் முகத்தில் அவ்வளவு கோபம்.  அவன் முகத்தை பார்த்த பிறகு நித்யாவிற்கு பேச்சே வரவில்லை.

க்ரிஷ், "எதுவும் பேசாத! இருக்க கோபத்துல ஏதாவது சொல்லிடப் போறேன். நாம என்ன செஞ்சாலும் இவன் நம்மள தேடி வர்றான்னு என்ன பார்த்தா உனக்கு இளக்காரமா இருக்கா? ஈஸியா டிவோர்ஸ் கொடுத்துடுறேன்னு சொல்ற. நான் இல்லாம உன்னால இருக்க முடியுமா? இல்ல உண்மைக்கே நீ என்கிட்ட நடுச்சியா? நான் தான் நீ என்னை காதலிக்கிறன்னு முட்டாள்தனமாக நம்பிட்டு இருக்கேனா?" என்றான் கோபமாக.

நித்யாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவள் செய்த தவறை மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையால் சரி செய்திட முடியாது என்று எண்ணி அவள் மௌனமாக கண்ணீர் வடித்தாள். க்ரிஷ் 'இவ எதற்கும் பதில் சொல்ல மாட்டா' என்று நினைத்தவன் கோபத்துடன் திரும்பி படுத்துக் கொண்டான். நித்யாவும் அழுதுகொண்டே அவனருகில் படுத்துக் கொண்டாள்.  இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர். நித்யாவின் அழுகை க்ரிஷிற்க்கு வருத்தமாக இருந்தாலும் அவளை சமாதானம் செய்ய மனம் வரவில்லை. கண்களை மூடி படுத்துக் கொண்டான்.

      
                                   கரைவாள்...

 


NIVETHA liked
ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 5 months ago
Posts: 72
21/10/2020 3:43 pm  

உன் காதலில் நானும் கரைவேனா? 58

 

மீரா மேகலாவுடன் அவர் அறையிலேயே படுத்து கொண்டாள். மேகலா மகளின் நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார். ஆனால் அவள் எடுத்தது சரியான முடிவு என்றே அவருக்கு தோன்றியது. கிரிஷ் மனதில் நித்யா இருக்கும் போது, அவனால் மீராவுடன் சந்தோஷமாக வாழ முடியாது என்பதே அவரின் எண்ணம்.

மீராவிற்கு உறக்கம் வர மறுத்தது புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். மேகலா எழுந்து லைட்டை போட, மீரா கண்விழித்து தான் இருந்தாள். அவள் கண்களில் கண்ணீரின் தடயங்கள்.

மேகலா பதறி, "என்னாச்சு மீரா?" என கேட்க, மீரா அவரை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

மேகலா, "மீரா, இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த.. இப்போ ஏன் அழுகுற?" என கேட்க,

மீரா, "அம்மா, எனக்கு கஷ்டமா இருக்குமா...." என்றாள். மேகலா அவளின் முதுகை வருடி ஆறுதல் கூறினார்.

மீரா, "அம்மா, என் முடிவு சரிதானாம்மா?" என்று கேட்க,

மேகலா, "மீராம்மா, நீ எடுத்தது ரொம்ப சரியான முடிவு. நீ சரியா தான் யோசிச்சு இருக்க... க்ரிஷ் மனசுல நித்யா இருக்கும் போது உன் கூட அவரால் எப்படி சந்தோஷமா வாழ முடியும்? உனக்கும் நித்யா வாழ்க்கையை வாழுறோம்னு குற்ற உணர்ச்சியா இருக்கும். நித்தியாவுக்காக நீ இத செஞ்சதுல எந்த தப்பும் இல்ல. ஏன்னா உனக்காக தான் நித்யா தன் வாழ்க்கையையே பணயம் வைச்சிருக்கா... இது எல்லாத்துக்கும் மேல நித்யாவுக்கு க்ரிஷை ரொம்ப பிடிக்கும். அதை அவ சொல்லல என்றாலும் எனக்கு நல்லா தெரியுது. யாருக்கு யார்னு எழுதி இருக்கோ, அதான் நடக்கும். நீ வருத்தப்படாதே!" என்று ஆறுதல் கூறினார். 

மீரா அழுதுகொண்டே அவர் மடியில் படுத்து உறங்கி விட்டாள். மேகலா 'கடவுளே! என் பொண்ணு வாழ்க்கை இனிமேலாவது நல்ல அமையணும்' என்று வேண்டிக் கொண்டு அவள் அருகில் படுத்துக்கொண்டார். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மனநிலையில் உறங்க, பொழுது விடிந்தது.

மீரா எதுவுமே நடக்காதது போல நடந்து கொண்டாள். மேகலாவிற்கு, எப்படி இவளால் இப்படி எதுவுமே நடக்காதது போல நடந்து கொள்ள முடிகிறது என்று தோன்றியது.

எல்லோரும் குளித்து முடித்து வர மேகலா, அனைவருக்கும் உணவு பரிமாறினார். அனைவரும் அடுத்து என்ன என்று யோசிக்க, க்ரிஷ் சதாசிவத்திடம், "மாமா, நாங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்புறோம்..." என்றான்.

எல்லோரும் இவ்வளவு சீக்கிரமா? என நினைக்க சதாசிவம் மகளைப் பார்த்தார். நித்யா அவன் ஏற்கனவே கோபத்தில் இருப்பதால் அவன் முடிவை ஏற்று, "ஆமாப்பா..." என்றாள்.

சுஜாதா, "என்ன ரஞ்சுமா, நீயும் மாப்பிள்ளையும் முதல் முறையா வீட்டுக்கு வந்து இருக்கீங்க. ரெண்டு நாள் கூட தங்காமல் கிளம்புறீங்க..." என்க,

க்ரிஷ், "இல்ல அத்தை, எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு..." என்று பொய் கூறினான். அவன் கிளம்புவதற்கு உண்மையான காரணம், அவனுக்கு மீராவை பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி எழுகிறது. அதுவும் அவள் எதுவுமே நடக்காதது போல நடந்து கொள்வது, அவனை மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது.

அவன் கூறிய பின்பு யாரும் எதுவும் கூறவில்லை. மீராவிற்கும் அவனது சங்கடம் புரிந்தது. அவளும் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. க்ரிஷூம் நித்யாவும் அவர்களுடன் சுரேந்தரும் அன்று இரவு விமானத்தில் கிளம்புவது என முடிவாகியது...

நித்யா தனது பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க, மீரா அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். ஆண்கள்  அனைவரும் ஹாலில் அமர்நது பேசிக் கொண்டிருந்தனர். சதாசிவம் க்ரிஷின் கம்பெனி பற்றியும் அவனது பிசினஸ் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார். அவனும் தன்னைப் பற்றி அவருக்கு தெரிவது அவசியம் என நினைத்தவன் தனது குடும்ப பின்னணி, பிசினஸ் என அனைத்தையும் கூறிக் கொண்டிருந்தான்.

அப்போது காலிங் பெல் அடிக்க, சுஜாதா கதவை திறந்து பார்க்க, வெளியே ராஜனும் பத்மாவதியும் நின்றிருந்தனர். சுஜாதா அவர்களை கேள்வியுடன் பார்க்க,

ராஜன், "இது மிஸ்டர் சதாசிவம் வீடு தானே?" என கேட்க,

சுஜாதா, "ஆமா! நீங்க யாரு?" என்றார்.

ராஜன், "நாங்க க்ரிஷோட அம்மா, அப்பா.." என்றார்.

சுஜாதா , "வாங்க..."  என்று அவர்களை அழைத்தவர், சதாசிவத்திடம், "என்னங்க மாப்பிள்ளையோட அம்மா அப்பா வந்துருக்காங்க..." என்றார்.

சதாசிவத்திடம் பேசிக்கொண்டிருந்த க்ரிஷ், இதைக்கேட்டு கோபமாக ராஜனைப் பார்த்து, "நீங்க எதுக்கு இங்க வந்தீங்க...?" என்றான். அவனின் கோபமான குரலை கேட்டு மீராவும் நித்யாவும் வெளியே வந்துவிட்டனர்.

மீராவிற்கு ராஜனைப் பார்த்து அதிர்ச்சி. நித்யாவும் அவர்களை எதிர்பார்க்கவில்லை. க்ரிஷ், "முதல்ல இங்கிருந்து வெளியே போங்க..." என்றான்.

சதாசிவம், "மாப்பிள்ளை, கொஞ்சம் அமைதியா இருங்க..." என்றார்.

க்ரிஷ், "மாமா, எல்லா பிரச்சனையும் இவரால் தான். எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்.." என்றான்.

ராஜன், "க்ரிஷ், நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்க தான் வந்து இருக்கேன்..." என்றார்.

க்ரிஷ், "நீங்க செஞ்சது மன்னிக்கக் கூடிய தப்பு இல்ல!" என்றான்.

ஜெய், "க்ரிஷ், கொஞ்சம் அமைதியா இரு. தப்பு செஞ்சவங்களுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாவது கொடுக்கனும்..." என்றான். சுரேந்தரும் இதையை கூற, க்ரிஷ் தனது கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டிருந்தான்.

ராஜன் மீராவிடம் சென்றார். பெரியவர்களும் இதை பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.  அவ்வளவு நேரம் கட்டுப்படுத்தி இருந்த மீராவின் உணர்வுகள் கிளர்ந்து எழ அவள் கண்கள் குளமாகியது. ராஜன் பேசிய பேச்சுக்கள் நினைவு வந்தது.

ராஜன், "என்ன மன்னிச்சிடுமா.. உனக்கு நான் செஞ்சது பெரிய தப்பு. அதை மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையாலே சரி பண்ண முடியாது. இருந்தாலும் கேக்குறேன். இல்லனா நான் நிம்மதியாக வாழ முடியாது..." என்று கண் கலங்கினார்.

மீராவிற்கு இவ்வளவு பெரிய மனிதர் தன் முன் கைகூப்பி நிற்பது கஷ்டத்தை வரவழைத்தது. அவரவருக்கு அவரவர் நியாயம். தன் பிள்ளைக்காக அவர் இதை செய்திருக்கிறார். திருந்தி வாழ நினைப்பவரை மேலும் தன் வதைக்கக் கூடாது என நினைத்தவள், "கையை இறக்குங்க அங்கிள். உங்களுக்கு  என்னோட அப்பா வயசு இருக்கும். நீங்க செஞ்ச தப்பை உணர்ந்துட்டீங்க. இதுக்கு மேல நான் உங்கள என்ன சொல்ல முடியும். என்னால உங்களை மன்னிக்கிறது கஷ்டம்தான். ஆனால் நடந்ததை மறந்திட முயற்சி செய்கிறேன்..." என்றாள் கண்ணீரை துடைத்து. அவளது இந்த பதிலை அனைவரும் வியந்து பார்த்தனர். 

இருவரை தவிர ஒருவர் நித்யா. நித்யாவிற்கு மீராவைப் பற்றி நன்றாக தெரியும். மற்றொன்று மேகலா, தன் மகளை சரியாக தான் வளர்த்து உள்ளோம் என நினைத்தார்.

ராஜன் மீராவிடம், "உனக்கு ரொம்ப பெரிய மனசுமா. உன் நல்ல மனச நான் புரிஞ்சுக்காம விட்டுவிட்டேன்..." என்றார்.

மீரா, "அங்கிள், முடிஞ்சதை பத்திப் பேச வேண்டாம். அதை மறக்க முயற்சி செய்வோம்..." என்றாள்.

மீரா க்ரிஷிடம் சென்று, க்ரிஷ் நீங்க நேத்து நான் என்ன சொன்னாலும் செய்றேன் சொன்னிங்களே எனக்காக ஒன்னு செய்வீங்களா?" என்றாள்.

க்ரிஷ் உடனே, "சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?" என்றாள்.

மீரா, "உங்க அப்பாவ மன்னிச்சு ஏத்துக்கோங்க..." என்றாள்.

க்ரிஷ் இதைக் கேட்டு அதிர்ச்சியாகி, "மீரா உங்களுக்கு அவர் பண்ணது எவ்வளவு பெரிய கெடுதல்.." என்றான். 

மீரா, "க்ரிஷ், எனக்கு அவர் கெட்டவரா இருக்கலாம். உங்களை பொறுத்த வரையும் அவர் நல்ல அப்பா. தன் பிள்ளை வாழ்க்கை நல்லா இருக்கணும் என்ற எண்ணத்தில் தான் என்கிட்ட அப்படிப் பேசினாரு. நீங்க அப்படி ஆனபிறகு உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாரு. அவர் சென்ற வழி  தப்பு தான். பட் அவர் உங்க நல்லதுக்காகத்தான் செஞ்சிருக்காரு..." என்றாள். எல்லோர் மனதிலும் உயர்ந்து நின்றால் மீரா.

க்ரிஷ் எதோ சொல்ல வர, மீரா, "க்ரிஷ், நான் சொல்றதை செய்கிறேன்னு சொன்னீங்களே!" என்றாள்

க்ரிஷ் எதுவும் பேசவில்லை. ராஜன், "க்ரிஷ், என்ன மன்னிச்சிடு பா. நான் செஞ்சது தப்புதான்..." என கண் கலங்கினார். அவரின் இந்த தோற்றம் அவனை இளக்க வைத்தது. இருந்தும் மீராவிற்கு அவர் செய்தது நினைவு வர, கோபம் இருந்தது. இருந்தாலும் மீராவின் வார்த்தைக்காக அவரிடம் பேசினான். "உடனே என்னால உங்களை மன்னிக்க முடியாது. நீங்க மீராவுக்கு செஞ்சது அடிக்கடி ஞாபகம் வருது.  மீரா சொன்ன மாதிரி தான் நானும் மறக்க முயற்சி செய்கிறேன்..." என்றான்.

ராஜன், "நீ என் கிட்ட பேசினது எனக்கு போதும்பா..." என்றவர், மீராவிடம், "நான் உனக்குக் கெடுதல் பண்ணினாலும் நீ எனக்கு நல்லது பண்றமா.. உன் குணத்துல நீ உயர்ந்து நிக்குற..." என்றார்.

மீரா, "அங்கிள், போதும் இந்த நன்றி சொல்றது, மன்னிப்பு கேட்கிறது எல்லாம்!" என்றாள்.

ராஜன் நித்யாவிடம், "நீயும் என்னை மன்னிச்சிடு மா..." என்க,

நித்யா, "ஐயோ! மாமா, நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும். போடக்கூடாத ஒரு பழைய உங்க மேல போட்டுட்டேன்..." என்றாள். நித்யா இவ்வாறு பேசுவதற்கு காரணம், மீரா நித்யாவின் பொருட்களை எடுத்து வைக்கும் போது அவளின் தவறுகளை சுட்டிக்காட்டினாள். அவளுக்கு பல அறிவுரைகளை வழங்கினார்.

ராஜன் மேகலாவிடம், "உங்ககிட்ட தான் நான் எப்படி மன்னிப்புக் கேக்குறதுன்னே தெரியலை. உங்களுக்கு தான் பாதிப்பு அதிகம். உங்க பொண்ணை பிரிஞ்சு  இரண்டு வருஷம் கஷ்டப்பட்டு இருக்கீங்க..." என்றார்.

மேகலா, "நான் கஷ்டப் பட்டது உண்மைதான். ஆனா உங்க பையன் என் பொண்ணை ரெண்டு வருஷம் பத்திரமா பார்த்து எங்ககிட்ட திருப்பி கொடுத்து இருக்காரு  என் பொண்ணோட முடிவு தான் என்னோட முடிவு..." என்று விட்டார்.

அவர்களின் இந்த மன்னிப்பு ,மேலும் அவரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது உணர்ச்சிப் போராட்டங்கள் எல்லாம் முடிய இரவு எல்லோரும் சென்னைக்கு கிளம்பினார்.

மீரா, "நித்யா, நான் நல்லாத்தான் இருக்கேன். என்ன நெனச்சு நீ கவலைப்படாத! உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சு இருக்கு. நீ சந்தோஷமா இருந்தா தான் நான் இங்க சந்தோஷமா இருக்க முடியும்..." என்று கூறி அவளை வழி அனுப்பினாள்.

க்ரிஷ் வீட்டிற்கு செல்லும் வரையும் நித்யாவிடம் எதுவும் பேசவில்லை. நித்யா அவனிடம் பேச முயற்சிக்க, க்ரிஷ் முகத்தில் உள்ள இறுக்கத்தை பார்த்தவள், அமைதியாகி விடுவாள்.

வீட்டிற்கு வந்த பிறகும் க்ரிஷ் நித்யாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை. நித்யாவும் தான் செய்த தவறுக்கு இந்த தண்டனை தேவைதான் என நினைத்துக்கொண்டாள். ஆனால் அவன் கூறாமலே அவன் அனைத்து தேவைகளையும் செய்தாள்.

க்ரிஷ்க்கு நித்யா மீது கோபம் இருந்தபோதும், அவள் அருகாமையை வெகுவாக விரும்பினான். கோபம் இருந்தாலும் பேசாமல் இருந்தாலும் அவள் தன் கண்முன்னே இருக்க வேண்டும் என நினைத்தான். அவளது அழுத முகத்தை பார்த்து அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும், அவள் தன்னை பிரிந்து விடுவேன் என்று கூறியது  மிகவும் கோபத்தை வரவழைத்தது.

இரவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றனர். க்ரிஷ் எப்போதும் போல முகத்தை திருப்பிக் கொண்டு படுத்துவிட்டான். நித்யாவிற்கு இது பழக்கமாயிடுச்சு. அவன் சீக்கிரம் தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அவன் அருகிலேயே படுத்து விட்டாள்.

நித்யா சிறிது நேரத்தில் உறங்கி விட, அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்த க்ரிஷ் திரும்பி, நித்யாவின் முகத்தை பார்த்தான். அவளது அழகு முகத்தில் கவலை குடியிருந்தது. அவளை பார்த்துக்கொண்டே இருந்தவனும் சிறிது நேரத்தில் உறங்கி விட்டான். மறுநாள் வழக்கம்போல எல்லாம் இயங்கிக் கொண்டு இருந்தது. 

நித்யா அவனின் குடும்பத்துடன் நன்கு பழகி இருந்தாள். க்ரிஷ் ஆபீசுக்கு கிளம்பி வர நித்யா அவனுக்கு சாப்பாட்டை பரிமாறினாள். அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபத்தை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

க்ரிஷூம் ராஜனுடன் சகஜமாக பேச முயற்சி செய்து கொண்டிருந்தான். ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ராஜன் யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார். வாசலில் சதாசிவம் சுஜாதாவும் நின்றிருந்தனர்.

ராஜன் எழுந்து சென்று, "வாங்க சம்பந்தி...." என வரவேற்றார். நித்யாவும் அவர்களை பார்த்த சந்தோஷத்தில் ஓடிச்சென்று அணைத்துக் கொண்டாள்.

சாப்பிட்டுக்கொண்டிருந்த க்ரிஷ் எழப் போக சதாசிவம், "மாப்பிள்ளை, சாப்பிடும்போது எந்திரிக்காதீங்க..." என்றார். பத்மாவதி காபி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தார்.

சதாசிவம், "சம்பந்தி, நித்யாவுக்கு கல்யாணம், எங்க சொந்தகாரங்க யாருக்கும் தெரியாமல் நடந்துடுச்சு. எல்லோருக்கும் தெரிய படுத்த ஒரு ரிசப்ஷன் வச்சுடலாம்னு இருக்கோம். அதான் உங்ககிட்ட அதை பத்தி பேசலாம்னு  வந்திருக்கோம்..." என்றார்.

ராஜன், "நல்ல விஷயம்தான் சம்பந்தி, செஞ்சிடலாம். ஜோசியரை கூப்பிட்டு ஒரு நல்ல நாளாக பார்க்கலாம்..." என்றார்.

சதாசிவம், "ரொம்ப சந்தோஷம் சம்பந்தி..." என்றவர், நித்யாவை பார்த்து, "உனக்கு சம்மதமா?" என கேட்க நித்யாவின் கண்கள் தானாக க்ரிஷைப் பார்க்க க்ரிஷ், "எங்களுக்கு சம்மதம் மாமா, நீங்க ஏற்பாடு பண்ணுங்க..." என்றான்.

சுஜாதா நித்யாவின் இந்த செயலை பார்த்து, தன் மகள் கணவனுடன் சந்தோஷமாக தான் வாழ்கிறாள் என மனம் மகிழ்ந்தார். பத்மாவதி தங்களது குடும்ப ஜோசியரை வரவழைத்து அவர் அடுத்த வாரத்தில் ஒரு நல்ல நாள் இருப்பதாக கூறினார்.

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் நித்யாவிற்கு க்ரிஷ்க்கும் ரிசப்ஷன் என முடிவு செய்யப்பட்டது.

சுஜாதாவும் சதாசிவமும் அன்று இரவே பெங்களூருக்கு புறப்பட்டனர். க்ரிஷ் வேலை முடிந்து வர நேரமாகியது.

இந்த இரண்டு மாதங்களாக க்ரிஷ் ஆபீஸுக்கு வராததால் நிறைய வேலைகள் அவன் தலைக்குமேல்  இருந்தது. நித்யா அவனுக்காக காத்திருந்து, சோபாவில் சாய்ந்த வாக்கிலே உறங்கி இருந்தாள்.

க்ரிஷ் வர வெகு நேரமாகி விட்டதால் தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு திறந்தான். அவன் உள்ளே நுழைந்ததும் கண்டதும் சோபாவில் குழந்தை போல உறங்கும் நித்யாவை தான். அவளைப் பார்த்து அவனுக்கு உதட்டில் புன்னகை பூத்தது.

மனதில் 'யார்  இவளை இவ்வளவு நேரம் வெயிட் பண்ண சொன்னது?' என செல்லமாக கடிந்தவன், அவள் அருகில் சென்றான்.

க்ரிஷ்  வந்த அரவம் கேட்டு அவள் கண் விழிக்க வில்லை. அவள் தூக்கம் கலையாத வர அவளை கைகளில் ஏந்தி கொண்டவன், அவர்களுடைய அறைக்கு சென்று அவளை படுக்க வைத்தான்.

பிறகு பிரஷ் ஆகிவந்தவன், அவள் அருகிலேயே அவளை அணைத்துக்கொண்டு உறங்க முற்பட்டான். அவள் தன் கை அணைப்பில் இருக்கும் சுகத்திலேயே உறங்கிப் போனான்.

 
                                     கரைவாள்....

 


ReplyQuote
NIVETHA
(@velavaa)
Trusted Member Registered
Joined: 10 months ago
Posts: 88
23/10/2020 6:21 am  

uds super sis..yepdiyo yella problemsum solve aana sarithan 😊 waiting for ur nxt ud  sis 😎 come soon


ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 5 months ago
Posts: 72
24/10/2020 2:08 pm  
உன் காதலில் நானும் கரைவேனா? 59பெங்களூரின் பிரதான சாலையில் உள்ள ஹோட்டல் மெரிடியன் வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதன் நுழைவு வாயிலில் நித்யரஞ்சனா வெட்ஸ் குரு கிருஷ்ணா என்ற பெயர் பலகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

க்ரிஷ் கோட் சூட்டில் கம்பீரத்துடன் நின்று இருந்தான். அவன் அருகில் அவன் அழகுக்கு சற்றும் குறையாமல் ஊதா நிற லெஹெங்காவும் அதற்கேற்ற  அணிகலன்களுடன் பேரழியாக  நின்றிருந்தாள் நித்யா.

மீரா, நித்யாவை பார்த்து பார்த்து அலங்காரம் செய்தாள். எல்லோரும் பொண்ணு மாப்பிள்ளை ஜோடிப்பொருத்தம் அருமையாக உள்ளது என பேசிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் சதாசிவத்திடம், "தேடி தேடி ஒரு நல்ல மாப்பிள்ளைய பார்த்துட்டீங்க போல..." என கேட்க சாதாசிவத்திற்கு பெருமிதமாக இருந்தது.

மீரா வந்தவர்களை வரவேற்பது என பல வேலைகளை ஓடியாடி செய்துக் கொண்டிருந்தாள். இந்த ரிசப்ஷனில் அளவில்லா சந்தோஷமாக இருந்தது மீரா தான். அவள்தான் சதாசிவத்திடம் பேசி ரிசப்ஷன் வைக்க ஏற்பாடு செய்தாள்.

க்ரிஷின் குடும்பத்தினரும் மீராவை கவனித்தனர். மீராவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. ஜெய்யும் சுரேனும் கூட நிற்காமல் வேலை செய்துக் கொண்டிருந்தனர். நித்யாவின் கல்லூரித் தோழிகள் நிறைய பேர் வந்திருந்தனர். நித்யாவும் க்ரிஷ்ஷும் புன்னகை மாறாத முகத்துடன் அனைவரின் வாழ்த்தையும் பெற்றனர்.  நித்யாவின் பெற்றோருக்கு தன் மகளின் திருமணத்தை பார்க்கவில்லையே என்ற ஏக்கம் தீர்ந்தது. மனநிறைவுடன் இருந்தனர்.

ஒவ்வொருவராக மேலே ஏறிவந்து வாழ்த்துக்களைக் கூறி பூங்கொத்தை அழைத்து சென்றனர். அப்போது அங்கு வந்த நித்யாவின் தோழி ஒருத்தி, "என்னடி ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, ஒருத்தரை தான் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னீங்க..
இப்ப நீ மட்டும் கல்யாணம் பண்ணி இருக்க... அவ தனியா நின்னுட்டு இருக்கா..." என்று கேட்டாள்.

இதைக் கேட்டு நித்யாவின் முகமும் க்ரிஷின் முகமும் சிறுத்துப் போனது. நித்யாவிற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. மீரா இதை தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

மீரா என்னவென்று விசாரிக்க அவர்கள் அருகில் வர, அதற்குள் நித்யா அவளது தோழியை சமாளித்து, அவ்விடத்தை விட்டு நகர்த்தி இருந்தாள்.

மீரா வந்து, "நித்யா, என்ன ஆச்சு? ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு.. அவ என்ன சொன்னா?" என்று கேட்டாள்.

நித்யா, "ஒன்னும் இல்ல. நான் நார்மலா தான் இருக்கேன்..." என்றாள்.

க்ரிஷ் 'மீராவின்  வாழ்க்கை சீக்கிரத்தில் சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். இல்லையென்றால் தானே அவளின் வாழ்க்கையை சரிப்படுத்த வேண்டும்' என்று நினைத்துக்கொண்டான். மீராவின் வாழ்க்கை சரியான பிறகு தான் தன்னால் குற்ற உணர்வு இல்லாமல் நித்யாவுடன் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும் என்று நினைத்தான்.

நேரம் செல்ல செல்ல வந்த உறவினர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு கிளம்ப தொடங்கினார்கள். மிஞ்சி இருந்தது நித்யாவின் குடும்பத்தினரும் க்ரிஷின் குடும்பத்தினரும் தான்.

க்ரிஷின் குடும்பத்தினர் நித்யாவின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி விட்டு கிளம்புவதாக  ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அன்று இரவு வெகுநாட்களுக்கு பிறகு மீராவும் ரஞ்சுவும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

நித்யா, "மீரா, நாளைக்கு காலைல நம்ம ஜெய்யோட ஹாஸ்பிட்டல் போறோம்..." என்றாள். மீரா நித்யாவை கேள்வியாக பார்க்க, நித்யா, "உனக்கு ஃபுல் பாடி செக்கப் பண்ணனும்.."

மீரா, "அதெல்லாம் எதுக்கு ரஞ்சு, நான் தான் முழுசா குணமாகிட்டேனே!"

ரஞ்சு, "பரவாஇல்லை மீரா, உனக்கு ஃபுல் பாடி செக்கப் பண்ணுவோம். அப்பதான் எனக்கு மனதிருப்தி கிடைக்கும்.." என்றாள். மீராவும் சரி என்று ஒப்புக் கொண்டாள். இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்க சென்றனர்.

மறு நாள் காலையில் மீராவுடன் செக்கப்காக க்ரிஷூம் நித்யாவும் சென்றனர். காரில் செல்லும் போது நித்யாவும் மீராவுமே பேசிக் கொண்டு வந்தனர். க்ரிஷ் அவற்றை மௌனமாக கேட்டுக் கொண்டே வந்தான். க்ரிஷிற்கு நித்யா பழையபடி மாறிவிட்டதாக தோன்றியது. அவள் முகம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முவரும் சிறிது நேரத்திலே மருத்துவமனையை அடைந்தனர்.

ஜெய் இவர்களுக்கு முன்னதாகவே மருத்துவமனை சென்று செக்கப் செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தான்.

மீரா சென்றதும் அவளுக்கு இரத்த பரிசோதனை, இசிஜி, எம்.ஆர்.ஐ, என அனைத்து பரிசோதனையும் செய்யப் பட்டது. நித்யா வெளியில் சற்று பதட்டத்துடனே அமர்ந்திருந்தாள்.

அவள் பதட்டத்தைப் பார்த்து அவளருகில் வந்த ஜெய், "நித்யா, ஏன் இப்படி பயப்படுற... அதான் நான் ஏற்கனவே சொன்னேன்ல அவங்களுக்கு ஒன்னும் இல்லைன்னு. இந்த டெஸ்ட்டு உன்னோட பயத்தைப் போக்குறதுக்காக தான் எடுக்குறோம். மத்தபடி அவங்களுக்கு எல்லாமே நார்மலாக தான் இருக்கு..." என்றான். நித்யா புன்னகைக்க முயற்சி செய்தாள். பின் சிறிது நேரம் ஜெய், அவளை திசை திருப்ப வேறு பேச்சுகளை பேச அவள் சற்று இயல்பாகி இருந்தாள்.

க்ரிஷ் தூரமாக அமர்ந்து இவற்றைக் கவனித்து கொண்டு தான் இருந்தான். அவனுக்கு அவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும், கவனித்து கொண்டு இருந்தான்.

அவன் மனதில், 'எல்லார்கிட்டேயும் சிரிச்சு சிரிச்சுப் பேசுறா.. ஆனால் என் கிட்ட மட்டும் பேச மாட்டுறா...' என நினைக்க அவன் மனசாட்சி, 'நீதான் அவ பேச வந்தாலே முறைச்சு முறைச்சு பார்க்குற.. அப்புறம் எப்படி அவ உன்கிட்ட பேசுவா..?' என எதிர்கேள்வி கேட்க, அதை இரண்டு கொட்டு கொட்டி அதட்டியவன், 'நான் கோபமா இருந்தா பேச மாட்டாளா? அவளா வந்து என்னை சமாதனம் பண்ற வரைக்கும் நான் சாமதானமாக மாட்டேன்' என நினைத்தவன், நித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜெய் க்ரிஷைப் பார்த்துவிட்டு, "நித்யா, நான் சொன்னதும் சீக்கிரமா திரும்பி பார்க்காத... க்ரிஷ் ரொம்ப நேரமா உன்னையவே சைட் அடிச்சிட்டு இருக்கான்..." என்றான்.

நித்யா, 'அப்படிலாம் இருக்காதே!' என நினைத்து திரும்பி பார்க்க, க்ரிஷ் வேகமாக தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான். நித்யா அவன் பார்வை சென்ற திசையைப் பார்க்க, அங்கு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது.

நித்யா ஜெய்யை முறைத்து விட்டு, "உனக்கு கண்ணு தெரியலையா? அவர் அந்த பக்கம் விளையாடிட்டு இருக்க குழந்தையை பார்த்துட்டு இருக்காரு... நீ என்னடான்னா என்னைப் பார்க்குறாருன்னு சொல்ற..." என்றாள்.

ஜெய், "நித்யா, நான் சொல்றத நம்ப மாட்டியா? இவ்வளவு நேரமாக உன்ன தான் பார்த்துட்டு இருந்தான்.. நீ திரும்பும்போது கரெக்டா அந்த பக்கம் முகத்தைத் திருப்பிக்கிட்டான்..." என்றான்.

நித்யா மனதிற்குள் 'பக்கத்தில போனாலே முறைக்கிறாரு.. இவர் எப்போ என்னை மன்னிச்சு ஏத்துக்கிறது' என நினைத்து பெருமூச்சுவிட்டவள், "வேற எதாவது பேசு ஜெய்..." என்றாள்.

ஜெய், "என்ன பேசுறது?" என்று யோசிக்க,

நித்யா, "ஜெய், எனக்கு ஒரு டவுட்டு.." என்றாள்.

ஜெய், "சொல்லு நித்யா..." என்க,

நித்யா, "ஜெய் நான் அவருடைய கம்பெனியில் சேரும் போது பேக் சட்விகேட்ஸ் தான் கொடுத்திருந்தேன். அட்ரஸ் கூட ஒழுங்கா குடுக்கலை. அம்மா அப்பா இல்லைன்னு சொல்லி வச்சு இருந்தேன். அப்புறம் எப்படி நீ கரெக்டா என்னோட வீடு தேடி வந்த? அதுவும் மறுநாளே... இத நான் உன்கிட்ட அப்போதிலிருந்தே கேட்கனும்னு  நினைச்சுட்டு இருந்தேன்.." என்றாள்.

ஜெய்,  "நீ கொடுத்த சட்விகேட் டீடெயில்ஸ் எல்லாமே பேக்கா இருந்தாலும், உன்னோட ஃப்ரெண்டு நந்தினி  அவங்க உண்மையான பிரண்டு தானே! அவங்களை தேடி கண்டுபிடிச்சு உன்னை பத்தின டீடெயில்ஸ் வாங்கினேன்..." என்றான்.

நித்யா, "ஓ... அவளை மறந்துட்டேன்" என்றாள். பின் அவர்கள் உரையாடல் தொடர மீராவிற்கு எல்லா டெஸ்டும் எடுத்து முடித்து விட்டனர். அரை மணி நேரத்தில் எல்லா ரிப்போர்ட்ஸ்ம் வந்துவிட  ஜெய் அவற்றைப் பார்த்து கொண்டிருந்தான்.

அவன் எதிரில் நித்யா, க்ரிஷ், மீரா மூவரும் அமர்ந்திருந்தனர். ஜெய், "நித்யா, மீராவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாமே நார்மலாக இருக்கு..." என்றான் இதைக் கேட்டதும் அனைவர் முகமும் மலர்ந்தது.

மீரா, "நானும் சொன்னேன். நீ நம்ப மாட்டேன்னு சொல்லிட்ட..  இப்போ நாலு மணி நேரம் டெஸ்ட் எடுத்து, ரிப்போர்ட்ல அத் வந்தது வந்து இருக்கு..." என்று கூறினாள்.
நித்யா, "இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு..." என்றாள்.

அவர்கள் வீடு திரும்பினர். மறுநாள் மகிழ்ச்சியாக கழிந்தது. மறுநாள் நித்யா க்ரிஷ் மற்றும் க்ரிஷின் குடும்ப உறுப்பினரும் சென்னைக்கு புறப்பட ஆயத்தமானர். நித்யா அவள் பெற்றோரிடம் கூறிவிட்டு மீராவிடமும் கூறிவிட்டு, சற்று மனவருத்தத்துடன் சென்னைக்கு புறப்பட்டாள்.

       
                         கரைவாள்...

 

 

ReplyQuoteJanu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 5 months ago
Posts: 72
24/10/2020 2:11 pm  

உன் காதலில் நானும் கரைவேனா? 60

 

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. நித்யாவிற்கும் க்ரிஷிற்கும் ரிஷப்சன் முடிந்து சில மாதங்கள் கடந்திருந்தது. அவனின் கோபம் இப்போது குறைந்து இருந்தது. ஆனால் அவன் நித்யாவிடம் பேசவில்லை. முன்பு போல முகத்தை கோபமாக வைத்துக் கொள்ளவும் இல்லை.

நித்யா தான் இவன் கோபம் குறைந்து விட்டதா? சமாதானம் ஆகி விட்டானா? என தெரியாமலே உழன்று கொண்டிருந்தாள். க்ரிஷ் நித்யா வந்து தன்னை சமாதானம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தான். நித்யாவும் அவனிடம் பேசுவதற்கே தாங்கிக் கொண்டுதான் இருந்தாள்.

க்ரிஷ், அன்று  எப்போதும் போல எழுந்து குளித்து கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான். தலைவாரிக் கொண்டிருந்தவன் கண்ணாடியில் நித்யாவை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் சிலை ஆகிவிட்டான்.

நித்யா அவளது நிறத்திற்கு ஏற்றவாறு பிங்க் நிற புடவை கட்டி, அதற்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து, மிதமான ஒப்பனையில் தேவதையாக நின்றிருந்தாள். ஒரு நிமிடத்தில் தன் தலையை உலுக்கிக் கொண்டவன், மீண்டும் தன்  வேலையை தொடர்ந்தான். ஆனால் அவனால் முழுதாக அதில் ஈடுபட முடியவில்லை. நித்யா அவனை தொல்லை செய்து கொண்டிருந்தாள். ரூமிற்குள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

'இவ இந்த ஜென்மத்துல நம்மள சமாதானப்படுத்த முயற்சி செய்ய மாட்டா' என நினைத்து பெருமூச்சு விட்டான். நித்யா அவனை சோதிப்பதற்காகவே அவன் அருகில் வந்து கபோர்டில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

க்ரிஷ் இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்லை என்று நினைத்தவன் திரும்பி குனிந்து அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். அவனின் இந்த செயலில் அதிர்ச்சியான நித்யா விழிவிரித்து நின்றுவிட்டாள்.

க்ரிஷ் அவளின் நிலையை பார்த்து சிரித்துக் கொண்டே கீழே இறங்கி சென்றுவிட்டான். நித்யா ஒரு நிமிடத்தில் தன் நிலையை அடைந்தாள். நடந்தது கனவா? நிஜமா? என்று யோசித்தவள் கண்டிப்பாக இருக்கும். அவர் என்கிட்ட பேசவே மாட்றாரு என நினைத்தவள், கீழே இறங்கிச் சென்றாள்.

பத்மா, "நித்யா, கிளம்பிட்டியா? வா அவனுக்கு சாப்பாடு எடுத்துவைமா..." என்று கூறி விட்டு கிச்சனுக்குள் சென்றார். க்ரிஷ் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டான். நித்யா தான் குழப்பமான மனநிலையில் அவனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தாள். க்ரிஷ் அவளின் முகத்தை பார்த்து உதட்டுக்குள் சிரித்துக் கொண்டான்.

சாப்பிட்டுக் கைகழுவி விட்டு வந்தவன் சுற்று முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன், அவளை இழுக்க, அவள் ஒரே இழுப்பில் அவன் அருகில் வந்து விட்டாள். குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், "வரேன் பொண்டாட்டி..." என்று கூறிவிட்டு சென்றான்.

நித்யா மீண்டும் அவனை அதிர்ச்சியாக பார்க்க க்ரிஷ் திரும்பி அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான். நித்யா தன் சிவந்த தன் கன்னத்தை மறைக்க கைகளால் தேய்த்து கொண்டிருந்தாள்.

மீராவின் வாழ்க்கையில் இப்போது பழைய மாதிரி மாறிக்கொண்டிருந்தது. க்ரிஷை அவள் மறந்து விட்டிருந்தாள். சதாசிவம் தனது பிஸ்னசை பார்த்துக்கொள்ள கூறியபோது, அதை மீரா மறுத்து விட்டு தனது முயற்சியில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இருந்தாள். புது கம்பெனி புதிய தோழிகள் என்று வாழ்க்கையில் நிறைய மாறுதல் அவளுக்கு.

அடிக்கடி அவள் நித்யாவுடன் செல்லும் ஆசிரமத்திற்கு சென்று குழந்தைகளுடன் நேரம் செலவிட்டாள். மீரா ஸ்கூட்டியில் ஆபீஸ் சென்று கொண்டிருந்தாள். திடீரென அவள் ஸ்கூட்டி ஓடாமல் நின்று விட்டது. அவள் இறங்கி பார்க்க டயர் பஞ்சர் ஆகி இருந்தது. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நேரம் வேறு ஆகி கொண்டிருந்தது.

மெக்கானிகிற்கு கால் செய்தால் அவன் வர அரைமணி நேரமாவது ஆகும் என்று கூறிவிட்டான். மீரா டாக்சிக்கு கால் செய்வோம் என்று போனை எடுக்க, அவள் அருகில் ஒரு கார் வந்து நின்றது மீரா யாரென்று பார்க்க ஜெய் காரிலிருந்து இறங்கினான்.

ஜெய், "மீரா, நீங்க எங்க இங்க?" எனக் கேட்க,

மீரா, "இந்த வழியாக ஆபீஸ் போவேன். என் ஸ்கூட்டி பஞ்சர் ஆகிடுச்சு. அதான் கால் டாக்ஸி புக்  பண்ணலாம்னு மொபைல் எடுத்தேன். நீங்க வந்துட்டீங்க...." என்றாள்.

ஜெய், "வாங்க,  நான் உங்களை ட்ராப் பண்றேன்..." என்றான்.

மீரா, "இல்லை, இருக்கட்டும் பரவாயில்லை.... நீங்க போங்க, நான் டாக்சியில் போய்க்கிறேன்..." என்றாள்.

ஜெய், "அட வாங்க மீரா, நான் ஹாஸ்பிடல் போற வழி தான். நான் உங்கள இறக்கி விட்டுட்டு போறேன்..." என்றான். மீராவும் இதற்குமேல் மறுத்தால் நாகரீகமாக இருக்காது என நினைத்தவள்,  காரின் பின் இருக்கையில் அமர்ந்தால் அவன் டிரைவர் போல் ஆகிவிடும் என நினைத்தவள், முன் இருக்கையில் அமர்ந்தாள்.

ஜெய் காரை எடுத்தான். இருவரும் எதுவும் பேசவில்லை. சில கணங்கள் மௌனமாகக் கழிய ஜெய் பேச்சை ஆரம்பித்தான். "மீரா உங்களுக்கு வேலை எல்லாம் எப்படி போகுது?" என கேட்டான்.

மீரா, "நல்லா போகுது... நிறைய புது பிரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க... உங்க ஹாஸ்பிடல்ல வொர்க்லாம் எப்படி போகுது?" என்றாள்.

ஜெய், "நல்லா போகுது..." என்றான்.

மீரா, "நீங்க நிறைய ஏழை குழந்தைகளுக்கு ஃப்ரீயா ஹார்ட் சர்ஜரி பண்றதா கேள்விபட்டேன்..." என்க, ஜெய் ஆமாம் என்று தலையை ஆட்டினான்.

மீரா, "உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. நீங்க செய்றது ரொம்ப பெரிய விஷயம்..." என்றாள்.

ஜெய், "இதுல என்னங்க இருக்கு? என்கிட்ட இருக்கு,  இல்லாதவங்களுக்கு செய்றேன்..." என்றான்.

மீரா, "இல்லைங்க, இருக்கிறவங்க எத்தனை பேருக்கு செய்ய மனசு வரும்? உங்ககிட்ட அந்த மனசு இருக்கு..." என்றாள்.

ஜெய், "மீரா, நீங்க என்ன ரொம்ப புகழ்றீங்க...." என்றான்.

மீரா, "உண்மையைதான் சொல்றேன்..." என்று கூறி புன்னகைக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.

இவர்கள் இப்படியே பேசிக் கொண்டிருக்க மீராவின் அலுவலகம் வந்து விட்டது. மீரா காரில் இருந்து இறங்கியதும், "தேங்க்ஸ் ஜெய்" என்றாள்.

ஜெய், "என்ன மீரா, தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்ன இப்படி பிரிச்சி பாக்குறீங்க? நாமெல்லாம் ஒரே குடும்பம் தானே?" என கேட்க,

மீரா, "சாரி, தெரியாம சொல்லிட்டேன் என்றாள்.

ஜெய் அவளை முறைத்து, "மறுபடியும் சாரியா?" என கேட்க, மீரா நாக்கை கடித்து விட்டு, "சாரி, தேங்க்ஸ் இரண்டுமே வாபஸ்" என்றாள். ஜெய் புன்னகைத்துக் கொண்டே காரை எடுத்தான். மீராவும் புன்னகையுடனே அலுவலகத்துக்குள் சென்றாள்.

ஆபீஸ் வந்த க்ரிஷ்க்கு நித்யாவின் நினைவாகவே இருந்தது. இவ்வளவு நாளும் நித்யாவை நினைத்து பார்ப்பான் தான். ஆனால் இன்று அவள் நினைவு அதிகமாக அவனை இசைத்துக் கொண்டிருந்தது  எந்த வேலையும் கவனிக்க முடியவில்லை.

நித்யா அவனின் செயலால் மேலும் குழம்பிப் போனாள். அவன் மீசை பட்ட இடம் குறுகுறுக்க, அதை தன் கைகளால் தேய்த்து கொண்டிருந்தாள்.

"நித்யா, கிளம்பலாமா?" என கேட்டுக்கொண்டே வந்த பத்மா நித்யாவை பார்த்துவிட்டு, "என்ன ஆச்சு நித்யா? என் கண்ணத்தை தேய்க்கிற?" என்று கேட்டார்.

நித்யா பதறிக்கொண்டு, "ஒன்னும் இல்ல அத்தை..." என்றவள், "வாங்க போகலாம்..." என முன்னே நடந்தாள். பத்மா 'இவ ஏன் இப்படி நடந்துக்குறா?' என நினைத்தபடியே அவளுடன் கோவிலுக்கு சென்றார்.

காமாட்சியம்மன் கோவிலில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தாள். நித்யா கண்களை மூடி "அம்மா, இன்னைக்கு மாதிரி எல்லா நாளும் நல்ல படியா போகணும். மீராவோட வாழ்க்கையும் நல்லா அமையணும்..." என மனமுருக வேண்டிக்கொண்டாள். இருவரும்  சாமி கேம்பிட்டு விட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.

க்ரிஷ் என்னதான் சீக்கிரமாக செல்ல வேண்டும் என நினைத்தாலும் அவனை வேலை இழுத்துக்கொள்ள கிளம்ப நேரமாகிவிட்டது. நித்யா கிரிஷ் காலையில் நடந்து கொண்ட விதத்தை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தாள். அவன் வெகு நேரம் காலிங் பெல் அடிக்கவே வந்து கதவை திறந்தாள்.

நித்யா அவன் முகம் பார்க்காமல் யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தாள். அவனுக்கு நித்யா சாப்பாடு எடுத்துவைக்க, க்ரிஷ், "நித்யா, நீ சாப்பிட்டியா?" எனக்கேட்டான்.

நித்யா இவன் தன்னிடம் பேசுகிறானா? என நினைத்து முழிக்க, க்ரிஷ், "என்ன, சாப்பிட்டியான்னு கேட்டா பதில் சொல்லாம முழிக்கிற..." என்றான். நித்யா, "இல்லை..." என்றாள்.

க்ரிஷ், "ஏன் இன்னும் சாப்பிடல? நான் வர லேட் ஆச்சுன்னா உன்ன சாப்பிட சொன்னேன்ல?" என்றான். நித்யா இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழிக்க,

க்ரிஷ், "எதை கேட்டாலும் இப்படி திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி முழிக்கிறது... வா வந்து சாப்பிடு..."  என்று அழைக்க, அவன் அருகில் அமர்ந்து சாப்பிட தொடங்கினாள். அவனின் கைகள் சாப்பிட்டு கொண்டிருந்தாலும் அவன் கண்கள் நித்யாவை தான் பார்த்துக் கொண்டிருந்தது. நித்யா அவனின் பார்வை வீச்சை தாங்காமல் குனிந்து கொண்டவள் சாப்பிட்டு முடியும் வரை நிமிர்ந்து பார்க்கவில்லை.

இருவரும் சாப்பிட்டு முடிக்க க்ரிஷ் உடை மாற்ற சென்றான். நித்யா அவன் வருவதற்குள் படுத்து கண்களை மூடிக்கொண்டாள். கண்களை மூடி படுத்து இருந்தாலும் அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். அவனிடம் பேசுவோமா? வேண்டாமா? பேசினால் திட்டுவானா? ஏன் அப்படி செஞ்சன்னு  கேள்வி கேட்டால் என்ன செய்வது? என யோசித்துக் கொண்டிருந்தாள்.

க்ரிஷ் உடை மாற்றி விட்டு அவளருகில் வந்து படுத்தான். நித்யா கண்களை இறுக மூடிக் கொண்டாள். கிரிஷ் அவள் மேல் தன் கைகளை போட்டு அணைத்துக் கொண்டான். நித்யாவிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.

க்ரிஷ் இவ சரிப்பட்டு வரமாட்டா என நினைத்தவன் வேகமாக அவளை தன் புறம் திருப்பினான். நித்யா கண்களை திறந்து பார்த்தாள்.

க்ரிஷ் கோபமாக, "ஏன்டி என்னை விட்டு போய்டுவன்னு சொன்ன? உன்னால என்ன விட்டு இருக்க முடியுமா?" என்றான். நித்யா மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள்.

க்ரிஷ், "பதில் சொல்லுடி... நான் மட்டும்தான் நீ எனக்கு முக்கியம்னு நினைச்சுட்டு இருக்கேன். உனக்கு நான் யாருமே இல்லையா? உனக்கு என் மேல காதல் இல்லையா? உண்மைக்கே நீ நடிக்க மட்டும்தான் செஞ்சியா?" என்றவனின் குரல் வேதனை இழையோடியது.

அவன் பேசியதை கேட்டு கண் கலங்கியவள், வாய் மேல் கையை வைத்து மூடியவள் இதுக்கு மேல பேச வேண்டாம் என்று தலையை ஆட்டியவள் தொடர்ந்தாள்.

"எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அன்னைக்கு அப்படி பேசுனத்துக்கு காரணம், மீராவுக்கு துரோகம் செஞ்சுட்டு என்னால குற்ற உணர்ச்சி கூட வாழ முடியாதுன்னு தான். இதை மீரா வாழ வேண்டிய வாழ்க்கை என்று எனக்கு தோணுச்சு. ஆனால் அந்த வார்த்தையை சொல்லும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா? என் உயிரே என்னை விட்டு போகிற மாதிரி இருந்துச்சு.... நீங்க இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியலை. நீங்க இல்லாம நான் என்ன ஆவேன் என்று கூட தெரியலை. உங்கள விட்டுட்டு போன அந்த ரெண்டு நாள் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? பைத்தியம் பிடிக்காத தான் குறை. எங்கு பார்த்தாலும் நீ அங்க இருக்க மாதிரி தோணுச்சு... அப்போதான் நான் உங்களை எந்த அளவுக்கு விரும்புகிறேன்னு  எனக்கு தெரிஞ்சது. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது என்று தோணுச்சு... தயவு செய்து இனிமேல் இந்த மாதிரி பேசாதீங்க. இனிமேல் நான் உங்கள விட்டு பிரியனும்னா  அது என் உயிர் போன பின்பு தான் நடக்கும்..." என்றவளை வேகமாக இருக்கி அணைத்துக்கொண்டான். அவள் அவன் மார்பில் முகம் புதைத்து, கண்ணீர் உகுத்தாள்.

அவள் முகத்தை நிமிர்த்திவன் அவள் கண்ணீரைத் துடைத்தான். நித்யா, "சாரி..." என்றாள்.

க்ரிஷ், "இந்த சாரி பத்தாது..." என்றான். நித்யா அழுகையை நிறுத்திவிட்டு அவனை  பார்த்தாள். க்ரிஷ், "எனக்கு ஒரு கிஸ் கொடு..." எனக் கேட்க நித்யா மிரட்சியுடன் அவனைப்  பார்த்து மாட்டேன் எனத் தலையை ஆட்ட, க்ரிஷ், "அப்போ நான் தரேன்..." என்று கூறி அவள் இதழை சிறைப்பிடித்தவன் அவளுள் தொலைந்த தன்னைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டான்.

                                        கரைவாள்.....

 


NIVETHA liked
ReplyQuote
Janu Murugan
(@aruna-murugan)
Trusted Member Writer
Joined: 5 months ago
Posts: 72
24/10/2020 2:14 pm  

உன் காதலில் நானும் கரைவேனா? 61

 

நித்யாவிற்கும் க்ரிஷ்க்கும் காதலோடு நாட்கள் வேகமாக சென்று கொண்டிருந்தது. ஒருவர் அருகாமையில் மற்றவருக்கு நேரம் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது.

க்ரிஷ்க்கும் நித்யாவிற்கு இணக்கம் அதிகமாகி இருந்தது. இப்பொழுது எல்லாம் நித்யா ஊட்டி விடாமல் க்ரிஷ் மதிய உணவு உண்பதில்லை. மதிய வேளையில் கூட நித்யா சமைத்து அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விடுவாள். நித்யாவின் நண்பர்கள் அவளை அடித்து கலாய்த்து தள்ளி விடுவர். இருந்தும் அதனை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவள், அவனுக்கு சாப்பாடு எடுத்து செல்வதை நிறுத்த வில்லை.

க்ரிஷ் நித்யாவின் மீது கொண்ட காதலை விட, நித்யா அதிகமாக அவனைத் தன் காதலில் திக்குமுக்காட செய்தாள். அவன் நித்யாவின் அன்பை இன்பமாக அனுபவித்தான். இப்போதெல்லாம் க்ரிஷ்க்கு நித்யா இல்லாமல் வீட்டில் எந்த வேலையும் ஓடுவதில்லை. ஒரு நாளைக்கு நூறு முறை நித்யாவின் பெயரை அழைத்து விடுவான். நித்யாவும் சளைக்காமல், அவன் அழைத்த உடனே அவன் அருகில் சென்று என்னவென்று கேட்பாள்.

ஒரு நாள் பத்மாவதியே பொறுக்காமல், "ஏன்டா, எத்தனை தடவை என் மருமக பேரை ஏலம் போடுவ? பாவம் அவள் மாடி ஏறிய உடம்பு இளைத்து போயிட்டார் என்று கூற கிருஷ் பதில் கூறுமுன் வித்யா முந்திக்கொண்டு அத்தை இதிலென்ன இருக்கு அவருக்கு நான் செய்யாமல் வேற யாரு செய்வா அவர் எல்லாத்துக்கும் என்ன தேடுறது எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு என்றாள்.

க்ரிஷ் பார்த்தீங்களா என் பொண்டாட்டிய என்று பெருமிதமாக பார்த்தான். பத்மாவதி, "நல்ல பொண்டாட்டி, நல்ல புருஷன், போங்கடா...." என்று நகர்ந்து விட்டார். அன்றும் வழக்கம்போல க்ரிஷ், "நித்யா...." என்று பத்தாவது முறையாக கத்திக் கொண்டிருந்தான்.

"இதோ வரேங்க...." என்று கிச்சனில் இருந்து குரல் கொடுத்தவள், வேகமாக தனது அறையை நோக்கி சென்றாள்.

நித்யா அறைக்குள் நுழைய, அங்கே க்ரிஷ் இல்லை. 'என்ன வர சொல்லிட்டு எங்க போயிட்டாரு இவரு...' என நினைத்து தேட, க்ரிஷின் வலிய கரங்கள் அவளை பின்னிருந்து அணைத்து.

நித்யா சிரித்துக்கொண்டே அவன் புறம் திரும்பி, "இதுக்குதான் கூப்பிட்டீங்களா?" என கேட்க, "ஆமா!" என்று கூறி அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

அவன் மீசை கழுத்தில் உரச அந்த குறுகுறுப்பில் நெளிந்தவள், "விடுங்க, எனக்கு கிச்சனில் வேலை இருக்கு..." என்று விலக பார்க்க, அவனின் இறுக்கமான பிடியிலிருந்து அவளால் விலக முடியவில்லை.

நித்யா, "ப்ளீஸ்ங்க.. விடுங்க..." என்க,

க்ரிஷ், "எனக்கு டையை கட்டி விட்டுட்டு போ..." என்று டையை அவளிடம் நீட்டினான்.

நித்யா, "வர வர குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறீங்க...." எனக் கூறி  சிரித்துக்கொண்டே அவன் டையை தட்டி விட்டாள். அவள் டையை கட்டிக்கொண்டு இருக்கும்போதே அவன் விரல்கள் அவள் கன்னத்தில் கோலமிட்டு கொண்டிருந்தன.

நித்யா, "கொஞ்சம் நேரம்  கூட சும்மா இருக்க மாட்டீங்களா?" என போலியாக அலுத்து கொண்டவள், தன் வேலையைத் தொடர்ந்தாள்.

நித்யா டையை கட்டிவிட்டு நகரப் போக, க்ரிஷ் அவளைப் பிடித்து நிறுத்தினான். நித்யா என்னவென்று புருவம் உயர்த்தி கேட்க,

க்ரிஷ், "இன்னைக்கு கோட்டாவை குடுக்காம போற..." என கேட்டான்.

நித்யா, "ஷ்... மறந்துட்டேன்" என்றவள், வெட்கப் புன்னகையுடன் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். இருவரும் அந்த ஏகாந்த நிலையை அனுபவித்துக் கொண்டிருக்க நித்யா என்ற பத்மாவின் அழைப்பில் நித்யா சுயநினைவு பெற்று, "இதோ வரேன் அத்தை..." என்று கீழே ஓடி விட்டாள்.

அவனும் ஆபீசுக்கு ரெடியாகி வர, நித்யா அவனுக்கு சாப்பாடு பரிமாறினாள். கிரிஷ் சாப்பிட்டுவிட்டு கிளம்புகையில், அவசர அவசரமாக அவள் கன்னத்தில் முத்தமிட்டு சென்றான். இது தினமும் நடக்கும் விஷயம்தான். வழக்கம்போல நித்யாவும் யாராவது பார்த்து விட்டார்களோ? என பய பார்வையுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை என்றவுடன் பெருமூச்சு விட்டு விட்டு, கிச்சனுக்குள் சென்று தன் வேலையைத் தொடர்ந்தாள்.

மீராவிற்கு அன்று அலுவலகம் விடுமுறை.  வீட்டில் இருந்தால் போரடிக்கும் என நினைத்தவள், தான் எப்போதும் செல்லும் ஆசிரமத்திற்கு கிளம்பி சென்றாள்.

மீனாட்சி அம்மாள் மீராவை பார்த்ததும், "வாம்மா..." என்று புன்னகை முகமாக அவளை  வரவேற்றார். மீனாட்சி அம்மாளிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறியிருந்தாள் மீரா. 

அவள் உயிரோடு வந்தததே மீனாட்சி அம்மாளுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி.  நடந்ததை அறிந்த அவரும் மீராவின் முடிவு சரியானது என்றே கூறினார்.

மீரா, "மீனாம்மா, குழந்தைகள் எல்லாம் எங்க இருக்காங்க?" என்றவள், "அவங்க கிட்ட இந்த சாக்லேட் கொடுக்கனும்..." என்று கேட்க,

மீனாட்சி, "அவங்க வெளியேதான் விளையாடிட்டு இருகாங்க. நீயே போய் உன் கையால கொடுத்துட்டு வா..." என்றார்.

மீராவும் சரிங்க அம்மா என்று கூறி குழந்தைகளை நோக்கி சென்றாள். விளையாடிக் கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் மீராவை பார்த்ததும் மீரா அக்கா என்று ஓடி வர, அவர்களை அணைத்துக் கொண்டவள், தான் வாங்கி வந்து இருந்த இனிப்புகளை ஒவ்வொன்றாக  பிரித்துக் கொடுத்தாள்.

மீராவிற்கு இங்கு வந்தால் அளவில்லா ஆனந்தம் கிட்டியது. நடந்த விஷயங்களால் கலங்கி நின்றபோது அவளுக்கு ஆறுதலாக இருந்தது, அணைத்துக் கொண்டது இந்த ஆசிரமம் தான். இந்த குழந்தைகளின் சிரிப்பில் அவள் தன் கவலைகளை மறந்து விடுவாள்.

எல்லோருக்கும் இனிப்பை வழங்கியவள் அங்கிருந்த ஒரு குழந்தையிடம், "கவி எங்கே?" என்று கேட்டாள். கவிநிலா  அங்கிருக்கும் குழந்தைகளில் மீராவிடம் மிகவும் நெருங்கிப் பழகுபவள். அக்கா அடுத்த தடவை வரும்போது பெரிய சாக்லெட் வாங்கிட்டு வாங்க என்று உரிமையுடன் கேட்பவள்.

அந்த குழந்தை, "அக்கா அவளுக்கு காய்ச்சல், உள்ள தூங்கிட்டு இருக்கா..." என்றாள்.

மீரா என்ன திடீர்னு காய்ச்சல் என யோசித்துக் கொண்டே உள்ளே செல்ல, கவி பெட்ஷீட்டை போர்த்தி படுத்து இருந்தாள். அவளின் நெற்றியை தொட்டுப் பார்க்க அது நெருப்பாகக் கொதித்தது. கவியிடம் இருந்து மெல்லிய முனகல் வெளிப்பட்டது.

மீரா பதறிக்கொண்டு மீனாட்சி அம்மாளிடம் கூற மீனாட்சி அம்மாள், "மீரா, பயப்படத! மாத்திரை கொடுத்து இருக்கேன். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்..." என்றார்.

மீராவிற்கு அவருடைய சமாதானம் ஏற்புடையதாக தெரியவில்லை. யாராவது மருத்துவரை அழைக்கலாம்  என்று நினைத்தவளின் ஞாபகத்தில் வந்தது ஜெய் மட்டுமே.

மீராவும் ஜெய்யும் ஓரளவு நெருங்கிய நண்பர்களாகி இருந்தனர். இருவரும் ஒரே வழியில் வேலைக்கு செல்வதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஜெய் மீராவின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வான்.

மீரா ஜெய்க்கு அழைப்பு விடுக்க, அழைப்பை ஏற்றவன், "சொல்லு மீரா.." என்க,

மீரா, "ஜெய், இப்போ உங்களுக்கு ஏதும் வேலை இருக்கா?" என்று கேட்க,

ஜெய், "சொல்லு மீரா, என்ன விஷயம்?" என்க,

மீரா, "நான் எப்போதும் ஒரு ஆசிரமத்துக்கு வருவேன்ல, அங்க ஒரு குழந்தைக்கு காய்ச்சல். நீங்க வர முடியுமா?" என்று கேட்டாள்.

ஜெய், "இப்பவே கிளம்புறேன். நீ எனக்கு அட்ரஸை மெசேஜ் பண்ணு..." என்றவன், உடனடியாக மருத்துவமனையில் இருந்து கிளம்பினான். வேகமாக வண்டியை ஓட்டியவன், மீரா அனுப்பிய முகவரியை விரைவாகவே அடைந்தான்.

ஜெய் வந்ததும், "வாங்க ஜெய்.." என அவளை கவி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றவள், "இந்த பொண்ணுக்கு தான் உடம்பு முடியல..." என காட்டினாள்.

ஜெய் மீராவின் பதட்டத்தை பார்த்து, "மீரா, ஏன் இவ்வளவு டென்ஷன்? சாதாரண காய்ச்சல் தானே! நான் செக் பண்றேன்..." என்றவன் கவியை செக் செய்தான். உடல் வெப்பநிலை அதிகமாகி நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருக்க, ஒரு ஊசியைப் போட்டுவிட்டவன், "பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை. இந்த மாத்திரையை சாப்பிட்ட பிறகு கொடுங்க..." என்றான். இதை கேட்டதும் தான் மீராவிற்கு நிம்மதியாக இருந்தது.

இருந்தும் அவனிடம், "ஜெய், சீக்கிரமா குணமாகிவிடும்ல?" என கேட்க,

ஜெய், "நாளைக்கே அவளுக்கு சரியாகிடும்..." என்றான்.

மீனாட்சி அம்மாள், "நல்லா சொல்லுங்க தம்பி, நானும் இதைத்தான் சொன்னேன். கேட்காம உங்களுக்கு கால் பண்ணி அலைய வைச்சுட்டா..." என்றார்.

ஜெய், "இதில் என்ன மேடம் அலைச்சல் இருக்கு? ஒரு டாக்டரா எந்த நேரத்துலயும் யாருக்கு உடம்பு சரியில்லைனாலும் பாக்குறது என்னோட கடமை. இனிமே உங்களுக்கு என்ன உதவி என்றாலும் என்கிட்ட நீங்க தயங்காமல் கேட்கலாம். எந்த நேரத்திலனாலும் நான் வந்து மருத்துவம் பார்க்கிறேன்..." என்றான்.

அவன் இந்த பரந்த குணத்தைக் கண்டு வியந்தவர், "கண்டிப்பா தேவை என்றால் கேட்கிறேன்..." என்றார். ஜெய்யும்  குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்தான். பின் சிறிது நேரம் அங்கு இருந்தவர்கள் கிளம்பினர்.

மீரா ஸ்கூட்டியை வீட்டில் விட்டு விட்டு பேருந்தில் வந்து இருந்தாள். ஜெய், "வா மீரா, நான் உன்னை ட்ராப் பண்றேன்..." என்றான். மீராவும் சரி என்று காரில் ஏறினாள். இருவரும் எதுவும் பேசவில்லை.

ஜெய் ரேடியோவில் பாடலை ஒலிக்கவிட்டு கொண்டே காரை ஓட்டினான். மீரா வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். அங்கே ஒருவர் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார். மீராவும் அதை கவனித்தாள். ஜெய் வண்டியை நிறுத்துமாறு கூறும் முன் அவர் மயங்கி மயங்கி விழுந்து இருந்தார்.

                                   கரைவாள்....

மக்களே! கதை நகறைவு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கு... எனக்கு தெரிஞ்ச எல்லா கேள்விக்கும் விடை சொல்லிட்டேன். எங்கயாவது ஏதாவது தெரியாமல் விட்டு இருந்தா கமெண்ட்ல சொல்லிடுங்க பா... அதுக்கு நான் விடை கொடுத்துடுறேன்... 😍😍😍😍😍

 


NIVETHA liked
ReplyQuote
Page 9 / 10
Share: