Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications

உயிர்த்தேனே உனக்காக - Comments  

Page 13 / 14
  RSS

Janani Naveen
(@jananinaveen)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 114
27/01/2020 7:12 am  

@raghusai

Thanks ma


ReplyQuote
Janani Naveen
(@jananinaveen)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 114
27/01/2020 7:13 am  

@shalini-m

Thanks alot ma


ReplyQuote
Janani Naveen
(@jananinaveen)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 114
27/01/2020 7:13 am  

@sarus

Thanks alot ma 


ReplyQuote
Janani Naveen
(@jananinaveen)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 114
27/01/2020 7:15 am  

@sarus

Thanks alot ma 


ReplyQuote
Janani Naveen
(@jananinaveen)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 114
27/01/2020 7:16 am  

@rizvi

Thanks alot ma 


ReplyQuote
Janani Naveen
(@jananinaveen)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 114
27/01/2020 7:16 am  

@lakshmivijay

Thanks alot ma 


ReplyQuote
Janani Naveen
(@jananinaveen)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 114
27/01/2020 7:20 am  

@raghusai

Happy pongal ma


ReplyQuote
GAJA YOGA
(@gyoga)
New Member Registered
Joined: 2 months ago
Posts: 2
28/01/2020 4:11 pm  

HI JANU MAM,

 

I LOVE THE WAY YOU NARRATE YOUR STORY. I SOMETIMES FEEL IM INVOLVED INT EH STORY.

 

THANKS

GAJA


ReplyQuote
Janani Naveen
(@jananinaveen)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 114
29/01/2020 5:40 pm  

@gyoga

Thanks alot dear


ReplyQuote
Janani Naveen
(@jananinaveen)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 114
30/01/2020 1:04 pm  

உயிர்த்தேனே உனக்காக

அத்தியாயம்-28

அழகிய ஆலிவ் பச்சையில் கரும்சிகப்பு பூக்கள் போட்ட நீள பாவாடையும் அழகிய கண்ணாடி வேலை பாடு செய்த கருஞ்சிகப்பு மேலாடை அணிந்து கழுத்தை சுற்றி அழகிய வேறுபாடுகள் செய்த ஸ்டோல் அணிந்து தன்னை முன்னும் பின்னும் திரும்பி பார்த்து கொண்டாள்.

அடர்ந்த கூந்தலை ஒற்றை ஹேர்பாண்ட் கொண்டு அடக்கியவள் கணவன் வீடு செல்ல தயார் ஆகி விட்டாள்.

முகத்தின் பூரிப்பு எப்பொழுதையும் விட அவளை மேலும் அழகாக காட்டியது.

மணி ஐந்து என்று கடிகாரத்தில் ஐந்து முறை குயில் கூவி அறிவித்தது.

கணவனிடம் பேசி அவன் வீட்டிற்கு செல்லும் போது வந்து அழைத்து போக சொல்ல வேண்டும் என்று நினைத்தவள் அவனது அலைபேசிக்கு அழைத்தாள் அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக கூறியது.

மீண்டும் மீண்டும் முயன்றும் அதே பதில் தான் வந்தது. காலையில் இருந்தே ஏதோ படபடப்பாக இருப்பதாக உணர்ந்தவள் இப்போது கணவன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் முகம் சுருங்கினாள். வீட்டிற்கு போகும் போது தன்னை வந்து அழைத்து போகும் படி குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தவிப்புடன் காத்திருந்தாள்.

நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது அவனிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை என்றதும் அவளது மனம் மத்தளம் கொட்ட தொடங்கியது.

மனது மிகவும் பாரமாக அழுத்த எதுவோ சரியில்லை என்று உள்ளுணர்வு கட்டியம் கூறியது.

முகம் முழுதும் பயத்துடன் சாமி அறைக்கு சென்றவள் கண் மூடி நின்றாள். மனம் முழுதும் கணவனின் நலத்தை மட்டுமே வேண்டியது. மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது.

அவளவன் அருகே இருந்தால் ஒரு துளி கண்ணீர் வரும் முன் அதை துடைத்திருப்பான் என்ற எண்ணம் எழுந்ததும் கண் விழித்தவள் எதிரே இருந்த குங்கும சிமிழில்இருந்து நெற்றி வகுட்டிலும் தாலியிலும் குங்குமம் வைத்து வேண்டிக் கொண்டாள். அப்போது சரியாக மாதேஷ் வீட்டின் உள்ளே நுழைந்தான்.

அவனது முகம் சற்று பதட்டமாக இருப்பது போல இருக்க அவளுக்கு உள்ளுணர்வு அடித்து சொன்னது அவளவனுக்கு ஏதோ ஆபத்து என்று.

நொடியும் தாமதிக்காது தமையனிடம் விரைந்தவள்

“அ..அண்ணா அவருக்கு என்ன?” என்றாள் உயிரை கையில் பிடித்து கொண்டு.

கணவன் ஆபத்தான நிலையில் இருப்பதை அவளது உள்ளுணர்வு மூலம் அறிந்து கொண்ட பெண்ணவளுக்கு எத்தனை நேசம் இருக்க வேண்டும் கணவனிடம் என்ற நினைவே அவளது தமையனை கண் கலங்க வைத்தது.

ஆனால் இது அழும் நேரம் இல்லையே. அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய தருணம் அல்லவா?

சில மணி நேரத்திற்கு முன் தான் கிருஷ்ணாவிடம் இருந்து மாதேஷுக்கு அழைப்பு வந்தது. தொழிற்சாலை கட்டிட வேலை நடக்கும் இடத்தில் தாரகேஷை கொலை செய்ய நடந்த முயற்சியில் கூலிப்படையினறால் கத்தி காயம் பட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக தெரிவித்து இருந்தான்.

பாதுகாப்பு படையினர் உடன் இருந்த போதே அவர்களுள் ஒருவனை கடுமையாக தாக்கி விட்டு தாரகேஷை நெருங்கி இருந்தனர். மற்றவனுடன் சேர்ந்து தாரகேஷும் அந்த அடியாட்களுடன் சண்டை போடும் போது அவனது வயிற்றில் ஆழமாக கத்தி ஒன்று பாய்ந்தது. அந்த மற்ற பாதுகாப்பு வீரன் சமயோஜிதமாக செயல்பட்டு அந்த அடியாட்களை தடுத்ததால் தான் இந்த அளவுக்காவது தாரகேஷை மீட்க முடிந்தது.இல்லையேல் அவன் உயிர் பிரியும் வரை அவனை குத்தி கிழித்து இருந்திருப்பார்கள்.

நித்யாவின் தாய்மை நிலை தெரியும் அதனால் மாதேஷுக்கு அழைத்து நிலவரத்தை கூற அவனும் மருத்துவமனை சென்றிருந்தான்.

நிலமை சற்று கவலைக்கிடம் தான். எதுவும் இப்போது கூற முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் என்ற செய்தி பெரும் இடியாக வந்தது.

இதை தங்கை எப்படி தாங்கி கொள்ள போகிறாள்? நினைக்க நினைக்கு அவனுக்குமே துக்கம் தொண்டையை அடைத்தது.
சிரமப்பட்டு விழுங்கி கொண்டு அவளை அழைத்து செல்ல வந்திருந்தான்.
“அவருக்கு சின்ன விபத்து தான் நித்யா. நீ வா நான் கூட்டிட்டு போறேன்” என்றான் முயன்று வருவித்த சாதாரண குரலில்.

பதறிய தாயிடம் கண்களால் ஜாடை காட்டி கலங்க வேண்டாம் என்று கூறி அனைவரையும் அந்த பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

தீவிர சிகிச்சை பிரிவுக்கு நேராக அழைத்து செல்ல அங்கே மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் கிருஷ்ணா.

முகத்தில் அத்தனை துயரம் மண்டி கிடந்தது.

அழுது அழுது சிவந்து போன முகத்துடன் உயிரை கண்களில் தேக்கி வயிற்று சிசுவுடன் நடந்து வந்த நித்யாவை கண்டு அவனும் சகோதரனாக கலங்கி தான் நின்றான்.

கிருஷ்ணாவை நெருங்கி “என்..என்ன ஆச்சு அவருக்கு? இப்போ எப்படி இருக்காங்க? எனக்கு அவரை பார்க்கனும் ப்ளீஸ்” என்றாள் பாவமாக தேம்பி கொண்டே.

இந்த நிலையில் அவள் இப்படி உணர்ச்சி வச படுவது அவளுக்கும் அவளது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லதல்ல என்று புரிந்து அவளை அமைதி படுத்த மற்றவர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்க வில்லை.

சுவற்றில் சாய்ந்து நின்று தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

அப்போது பார்த்து வயிற்றில் பிள்ளை அசைந்து அதன் இருப்பை நினைவு படுத்தியது.

‘பிள்ளை!’ அவனது உயிரான பிள்ளை.

யாரிடமும் எதற்கும் தலை வணங்காத தாரகேஷ்! யாரிடமும் மண்டியிடாத அந்த செருக்கன் ஒவ்வொரு முறை வரும் போதும் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து வயிற்றில் இருக்கும் பிள்ளையிடம் பத்து நிமிடங்களாவது பேசி இதழ் பதிக்காது இருக்க மாட்டான்.

பெண் குழந்தை தான் என்று தீர்மானமாக நம்பியவன் கருவில் இருக்கும் போதே அதன் மீது உயிரையே வைத்திருந்த தாரகேஷ். அவளுக்காக இல்லாவிட்டாலும அவனது குட்டி தேவதைக்காக அவன் வேண்டும் என்ற எண்ணம் அதன் போக்கில் சுழல உயிரை கையில் பிடித்து கொண்டு மருத்துவர் வருகைக்கு காத்திருந்தாள்.

அவளை மேலும் அரை மணி நேரம் தவிக்க வைத்து விட்டு வெளியே வந்த மருத்துவரை மொத்த குடும்பமும் சூழ்ந்து கொண்டது.

“மிஸ்டர் தாரகேஷ் கொஞ்சம் கிரிட்டிகல் பொசிஷன்ல தான் இருக்கார். ஒரு இடத்தில கத்தி ஆழமா இறங்கி இருக்கு. மீதி இடத்தில் எல்லாம் காயம் தான். இன்டர்னல் ப்ளீடிங் நின்றால் ஆபத்து கட்டத்தை தாண்டிடுவார்.
ஒரு இருபத்தி நாலு மணிநேரம் கழிச்சு தான் சொல்ல முடியும். கடவுளை நம்புங்க.” என்று விட்டு நகர்ந்தார்.

அங்கிருந்த நாற்காலியில் சோர்ந்து போய் அமர்ந்தாள் நித்யா. அவனை முதன் முதலில் பார்த்தில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வந்தது.

அவளுக்காக ஏங்கி அவளை கட்டம் கட்டி தூக்கி திருமணம் புரிந்தது, தீ யில் அவள் காலை வைத்த போது அவளுக்கு முன் வந்து அவளை கையில் ஏந்தி கொண்டு தீயில் நடந்தது, அவனது ஏக்க பார்வைகள், அவனது காதல் யாசகம், இருவரும் ஒன்றாக இணைந்த தினம், வேட்கையை அடக்கி அவளை மலரை விட மென்மையாக போற்றிய மென்மை, அதன் பின் கூட அவளது காதலுக்காக மட்டுமே ஏங்கி நின்ற ஆசை கணவன், கடைசியாக அவனது பூர்வ ஜென்ம நினைவுகளில் சிந்தனை வந்து நின்றது.

திடீரென்று அவளது சோர்ந்த மனதில் ஏதோ சொல்ல முடியாத திடம் வந்தது.

அவள் அவனது காதலை நம்பினாள். அவனது காதல் மட்டும் அல்ல இப்போது அவள் அவன் மீது வைத்த காதலும் நிஜம். அந்த காதலே அவர்களை எப்போதும் ஒன்றாக வைத்திருக்கும். அது வாழ்விலாக இருந்தாலும் சரி மரணத்தினால் என்றாலும் சரி என்று எல்லாம் கடந்த ஒரு நிலைக்கு வந்திருந்தாள்.

கண்களை துடைத்து கொண்டு எழுந்தவள்

“எனக்கு ஐசியூ உள்ளே போகனும்.” என்றாள் திடமான குரலில்.

அவளது பிடிவாதமான குரலில் வேறு வழி இன்றி அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே இருந்த மருத்துவரிடம் விஷயத்தை சொன்னான் கிருஷ்ணா.

அவரோ ஒரேயடியாக “இது ஐசியூ வெளியே இருந்து ஆட்களை உள்ளே விட்டால் பேஷண்ட்டுக்கு இன்ஃபெக்ட் ஆகிடும். விட முடியாது” என்று மறுக்க அங்கே ஒரு ராணியின் கம்பீரத்துடன் வந்து நின்ற நித்யா.

“டாக்டர் உள்ளே போராடிட்டு இருக்கறது என்னோட உயிர். நான் வெளியே இருந்தால் அந்த உயிரை என்னால மீட்டு எடுக்க முடியாது. நான் உள்ளே போகனும் அவர் கூட நான் இருந்தே ஆகனும்” என்றாள் இதுவே கட்டளை என்ற தொணியில் வர்மன் குரூப் ஆஃப் கம்பெனியின் ராணி.

அத்தனை நேரம் அழுது கொண்டு இருந்த பெண்ணின் இந்த நிதானம் மற்றும் இந்த ஆளுமையில் அனைவருமே திகைத்து நின்றனர்.

மருத்துவருக்கும் வேறு வழி இல்லாது அவளை உள்ளே அனுமதித்தார்.

கைகளை சானிடைசர் போட்டு சுத்தம் செய்து கொண்டு அவனிடம் சென்று அமர்ந்தாள்.

மூக்கில் வாயில் என்று ஏதேதோ டியூப் மற்றும் வயர்கள் பொறுத்த பட்டு கண் மூடி படுத்திருந்தது அந்த திடகாத்திரமான கிரேக்க சிலை.

முதல் நாள் இதே நேரம் மொட்டை மாடியில் இதே திடமான கைகளுக்குள் கட்டுண்டு நின்று தங்கள் மகவின் அசைவு உணர்ந்து மகிழ்ந்து இருந்தனர். இன்று இப்படி உணர்வின்றி இருக்கும் கணவனை கண்டு மளுக்கென்று கண்ணில் நீர் கோர்த்து கொண்டது.

முயன்று தொண்டையை விட்டு வர தொடங்கிய கேவலை அடக்கி கொண்டு

வயர் பொறுத்த படாத வலது கை பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு கட்டுகள் இன்றி இருந்த வலது தோள் வளைவில் தலை சாய்த்தாள்.

கண்கள் கண்ணீர் உகுக்க வில்லை. அவன் பிழைக்க மாட்டானோ என்று பயந்தால் தானே கண்ணீர் வரும். அவளுக்கு நன்கு தெரியும் அவள் இருக்கும் வரை அவன் இருப்பான். அவன் உலகை விட்டு நீங்கும் முடிவெடுத்தால் அவளை விட்டு விட்டு செல்ல மாட்டான் என்று நன்கறிவாள்.
இது நாள் வரை வராத அவர்கள் நேசத்தின் மீதான புரிந்துணர்வு இப்போது ஆணித்தரமாக வந்தது.

“நீ என்னை மஞ்சுவா பார்த்தாலும் சரி நித்துவா பார்த்தாலும் சரி இனி என்னை அது பாதிக்காது.
மொத்தத்தில் உன் காதலி நான் எனக்கு அது போதும். இனிமே நீ மஞ்சுவா நான் வேணும்னு சொன்னால் கூட நான் கோபப் பட மாட்டேன். உனக்கு எப்படி பிடிக்குமோ அப்படியே நினைச்சுக்கோ. ப்ளீஸ் எழுந்து வா தரு.” என்ற சொற்களை வேறு வேறு விதமாக தொடர்ந்து அவனது காதுக்குள் விடாது கூறி கொண்டு இருந்தாள்.

மருத்துவர்கள் கூட நம்பிக்கை இழந்து இருந்தனர். அவள் வரும் முன்பே நாட்டின் தலை சிறந்த மருத்துவர் குழு வந்து அவனுக்கு சிகிச்சையை தொடங்கி விட்டனர்.

கிருஷ்ணா சம்பவம் நடந்த உடனேயே மாதேஷுக்கு அழைத்து விட்டான். நிலவரம் தெரியாமல் தங்கையை அழைத்து செல்ல மனம் இன்றி முதலில் தான் மட்டும் மருத்துவமனைக்கு விரைந்தான். அவன் வந்து சேரும் போது சரியாக ஆம்புலன்ஸில் தாரகேஷை அழைத்து வந்தனர்.

நான்கு மணி நேர அறுவைசிகிச்சை. தங்கை இருக்கும் நிலையில் அந்த நான்கு மணி நேரத்தை கடப்பது கடினம் என்று உணர்ந்து அவளுக்கு பதில் அவன் கை எழுத்து போட்டு அறுவை சிகிச்சை தொடங்கியது. அதன் பின் அவனை தீவிர சிகிச்சைக்கு மாற்றிய பின் தான் நித்யாவை அழைத்து வந்தான் மாதேஷ்.

கொலை முயற்சி. அதுவும் முன்னனணி தொழிலதிபன். இதை ஊடகத்தின் பார்வைக்கு மறைப்பது பெரும் கஷ்டம். ஆனால் ஒரு அளவுக்கு விஷயம் வெளியே தெரியாது கிருஷ்ணா தடுத்து விட்டான்.

அறுவை சிகிச்சை முடிந்தும் ஆபத்தான கட்டத்தில் மதில் மேல் பூனை என்ற நிலையில் தான் இருந்தான் தாரகேஷ். மருத்துவர்கள் கூட நம்பிக்கை இழக்கும் தருவாயில் அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கையில் அவனுடன் சேர்ந்து அந்த எமனிடம் போராடினாள்.

புராண காதலத்தில் மட்டும் இல்லை கொண்டவனிடம் அன்பு கொண்ட சாவித்திரிகள் எந்த யுகத்திலும் உண்டு.

அவனது விதியில் அவளுடன் ஒரு நிறைவான இல்வாழ்க்கை வாழ எழுதி வதைத்து இருக்கிறதோ, அல்லது அவளது குரலும் ஸ்பரிசமும் செய்த மாயம் அவனது உயிர் பறவையை பிரிந்து போகாது பிடித்து வைத்ததுவோ அல்லது அவள் நம்புவது போல அவர்கள் காதல் செய்த மாயமோ எதுவோ ஒன்று அவனது புலன்களை மீட்டது. மீளா துயிலின் பிடியில் நழுவி கொண்டிருந்த உயிர் அவளிடமே மீண்டு வந்தது.

முற்றிலும் இருபத்தி நான்கு மணிநேரம் எடுத்து கொண்ட மருத்துவர்கள் அவன் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டான் என்று அறிவித்தனர்.

அப்போதும் அவளிடம் கண்ணீர் இல்லை. இது அவன் பிழைத்து விடுவான் என்பது அவளுக்கே சர்வ நிச்சயமாக தெரிந்த ஒன்று என்பது போல தான் நடந்து கொண்டனர்.

ஆரம்ப கட்ட அதிர்ச்சியின் பின் அவள் நிமிர்ந்து நின்று நம்பிக்கையுடன் அவன் பிழைத்து கொள்வான் என்று சர்வ நிச்சயமாக கூறியது அவர்களின் காதலின் உச்ச நிலை என்று சுற்றி இருந்த அனைவரும் புரிந்து கொண்டனர்.

கிருஷ்ணா அவர்களின் திருமண ரகசியத்தை அறிந்தவன். அவனுக்கு கூட நித்யாவின் இந்த மாற்றம் மகிழ்ச்சியை தந்து தாரகேஷுக்காக மகிழ்ந்தான்.

அவன் கண் விழித்ததும் பார்த்தது அவளது முகம் தான். புன்னகையுடன் சற்று சிரமத்திற்கு இடையே திக்கி திணறி அவன் கேட்டது “கோபம் போய்டுச்சா பேபி?” என்றது தான்.

அவனை பார்த்து சிரித்து “மனசு முழுக்க காதல் வந்துச்சு” என்றாள் கண்களுக்குள் ஊடுருவி.

அவனுடன் கோபம் கொண்டது பற்றி எல்லாம் அவள் நினைக்கவும் விரும்பவில்லை. அவன் எதற்காக கோபம் கொண்டாள் என்று கேட்டுவிட்டால்? அவனுக்கு அது தெரியாமலே இருக்கட்டும். அவனது விருப்பம் மஞ்சு என்றவள் மீதான காதல் தான் என்றால் நித்யா என்ற பெண்ணின் சுயம் தொலைத்து மஞ்சுவாகவே இருக்கவும் அவளுக்கு சம்மதம்.

ஆனால் அரை மயக்க நிலையில் அவள் ஓயாது பேசியது அவனது மனதின் ஒரு மூலையில் ஒலித்து கொண்டு தான் இருந்தது.

ஆனால் அப்போது எதையும் கேட்கும் எண்ணம் இல்லாது அவளை பார்த்து புன்னகைத்தவன்

“இப்படி கத்தி குத்து வாங்கினால் தான் உன் மனது முழுக்க காதல் வரும்ன்னு தெரிஞ்சிருந்தால் முன்னாடியே வாங்கி இருப்பேன் டி” என்றான் விளையாட்டாக.

ஆனால் அவனது வார்த்தைகள் அவளை விலக்க செய்தது. கண்களை கலங்க விடாமல் இருக்க மிகவும் சிரமம் கொண்டாள்.

முழுதாக ஒரு மாதம் எடுத்தது அவன் பழைய நிலைக்கு திரும்ப. அது வரை மருத்துவமனை விட்டு செல்லாது அங்கேயே தான் தங்கி இருந்தனர். அவளிடம் வீட்டிற்கு போய் ஓய்வு எடுக்கும் படி அவன் கூறியும் பிடிவாதமாக அவனுடனே தான் தங்கி இருந்தாள்.

உள் காயங்கள் முற்றிலும் குணமாகி தையல்கள் பிரிக்கப்பட்டு அன்று மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தனர்.

சகுந்தலா ஆலம் சுற்றி வரவேற்றார்.
அவர்கள் வீடு வந்தும் ஒரு வாரம் வரையில் தாரகேஷ் ஓய்வாக வீட்டில் தான் இருந்தான்.

நித்யாவின் குடும்பமும் அந்த ஒரு வாரம் முழுதும் அங்கு இருந்து விட்டு தான் கிளம்பினர்.

அவர்கள் கிளம்பியதும் தங்கள் அறையில் இருந்த பால்கனியில் நின்று ஏதோ சிந்தனையில் இருந்த கணவன் அருகே வந்து நின்றாள் பெண்ணவள்.

கணவனின் தீவிர சிந்தனை எதனால் என்று யோசித்தபடி அவனது தோள் தொட்டாள்.

அவளை திரும்பி பார்த்தவன் தனது தோள் வளைவுக்குள் அவளை இழுத்து கொண்டான்.

“என் மேல ஏன் கோபமா இருந்த பேபி?” என்றான் அவள் வாய்மொழி கேட்கும் பொருட்டு.

இதை எதிர்பார்காதவள் திகைத்து விழித்து பின் “ஹான் தெரியலை ஏனோ கோபம் வந்தது. அது மசக்கையினால் கூட இருக்கலாம்” என்றாள் சமாளிப்பாக.

“ஓ அப்படியா மஞ்சு பேபி?” என்றான் அவளது நெற்றியில் முட்டி.
அப்போதும் புன்னகை முகமாக நின்றவளை கண்டவன்
“பொய் போதும் நிது பேபி. நான் தப்பு செய்தாலோ இல்லை உனக்கு பிடிக்காத செயல் எதுவும் செய்தாலோ என்னோட சட்டையை பிடித்து கேட்கும் உரிமை உனக்கு மட்டும் தான் இருக்குன்னு உனக்கு தெரியும் தானே? என்றான் அவளை பார்த்து.

அதற்கு மேல் மறைக்கும் எண்ணம் இல்லாது
“ஆமாம் கோபம் இருந்தது தான். உங்களுக்கு தான் முன் ஜென்மம் நியாபகம். ஆனால் எனக்கு அப்படி எந்த நியாபகமும் இல்லை. நீங்க நான் தான் மஞ்சுன்னு சொன்னால் கூட எனக்கு அது யாரோ ஒரு ஆள் தான். அது நான் தான் என்ற உணர்வு எனக்கு வரலை. அப்படி இருக்கும் போது மஞ்சுவாக நான் இருக்கனும்னு நீங்க சொன்னால் நித்யாக்குன்னு ஒரு மனது இருக்கு. அவளுக்கு ஒரு சுயம் இருக்கு. அதுக்கு என்ன மரியாதை? அதனால தான் கோபம்” என்றாள்.

அவன் மரண படுக்கையில் இருக்கும் போது ஓயாது அரை மயக்கத்தில் அவள் சொன்ன “இனி மஞ்சுன்னு சொன்னால் கோபப்பட மாட்டேன். உன்னோட மஞ்சுவா இருக்கேன்” என்ற சொற்கள் அவனை சென்றடைந்தது தான் . அந்த வார்த்தைகள் அவனை குழப்பியது. ஆனால் அதற்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும் என்று அவன் சிந்திக்கவே இல்லை.

அவளது இடத்தில் இருந்து பார்க்கும் போது அவள் சொல்வது சரி தானே! யாரோ ஒருவனை சுட்டி காட்டி அவனை போல நீ வேண்டும் என்று சொன்னால் அவனால் ஏற்று கொள்ள கூடுமா? அது எத்தனை அபத்தமோ அதே போல தானே அவளுக்கும். அந்த நுண் உணர்வை புரிந்து கொள்ள முடியாத மூடனாக இருந்திருக்கிறானே?! என்று மிகவும் வருந்தினான்.

அவனது வருத்தம் அறியாது அவள் தொடர்ந்தாள்.

“மஞ்சுளவாணியோ நித்யகல்யாணியோ அது எல்லாம் இந்த உடம்புக்கு இருக்கும் பெயர்கள் தான் தரு. ஆன்மா அது எப்பவும் உன்னோட காதல் மனைவி தான். அதுக்கு நித்யான்னு அடையாளம் தேவை இல்லை. காதல்ன்னு வந்தால் அங்கே “தான்” என்ற சுயம் தொலைந்து போகனும். அது தான் காதல் இதை புரிஞ்சுக்காம கோபப்பட்டுட்டேன்.
ரவியோட மஞ்சுளவாணியோ இல்லை தாரகேஷோட நித்யகல்யாணியோ எதுவாக இருந்தாலும் உன் மனதில் நான். அது போதும் எனக்கு” என்ற மனைவியின் காதலில் மெய்சிலிர்த்து நின்றான்.

இதை தானே கேட்டான் இந்த காதலின் சரணாகதியை தானே அவன் யாசித்தான். தனது சுயத்தை இழந்தாலும் உன் மனதில் நான் அது போதும் என்று சொல்லும் அவளை இன்னும் இன்னும் பிடித்தது.

அவளுள் அவன் கண்ட மஞ்சுளவாணி அந்த நிமிடம் விடை பெற்று முற்றும் முழுதாக அவளை தாரகேஷுக்காக பிறந்த நித்யகல்யாணியாக மனம் மேலும் நேசிக்க தொடங்கியது.

அவளை இன்னும் அருகே இழுத்தவன் அவளது கண் பார்த்து “அந்த ரவீந்திரனோட இந்த தாரகேஷ் கொடுத்து வைத்தவன். ஏன்னா அவனோட காதலிக்கு அவனின் காதலை விட அவளது கொள்கைகளும் அவளது பழி வெறியும் தான் முக்கியமாக பட்டது.
ஆனால் தாரகேஷோட நித்யகல்யாணிக்கு அவளை விட அவளின் சுயத்தை விட அவளோட தாரகேஷ் தான் முக்கியம். இத்தனைக்கும் அவளோட விருப்பம் இல்லாமல் அவள் மேல இந்த பந்தத்தை நான் திணித்தும் கூட என்னை இவ்வளவு காதலிக்கு நித்யகல்யாணியின் காதல் எல்லாத்தையும் விட உயர்ந்தது. எனக்கு நித்யா தான் வேணும்.” என்றான் கலங்கிய கண்களுடன்.

அத்தனை நாட்கள் அவன் உயிருக்கு போராடிய போதில் இருந்து அவள் கட்டு படுத்தி வைத்த கண்ணீர் யாவும் கரை உடைக்க அவனை கட்டிக் கொண்டு விம்மலும் விக்கலுமாக கதறி தீர்த்தாள்.

அவனது எந்த சமாதானமும் எடுபடவில்லை.

வயிற்றில் பிள்ளையை வைத்து கொண்டு இப்படி கதறும் மனைவியை காண சகிக்காது அவளது முகத்தை பற்றி இழுத்து ஒரு வன்மை முத்தத்தில் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

அழுகைக்கு முற்றுப்புள்ளியாக மாறிய இதழணைப்பு மோகத்தின் ஆரம்ப புள்ளியாக மாறியது.

மெலிதாக மழை தூரல் போட தொடங்கியது. அவர்கள் முதன் முதலில் இணைந்த அன்று பூமியை நனைத்த வானமுது இன்று இருமனம் ஒன்றாக இணைந்த பின் நடக்கப் போகும் சங்கமத்திற்கு சாட்சியாக மாறியது.

கைகளில் மனைவியை ஏந்தியவன் மஞ்சத்தை அடைய எதிர்பார்ப்பில் பெண்ணவள் சிலிர்த்தாள்.

அவளது தாய்மை நிலையை மனதில் கொண்டு அவனது அடங்காத ஆசையை கட்டுக்குள் வைத்து எடுப்பதையும் கொடுப்பதையும் அளவுடன் இருக்குமாரு பார்த்துக் கொண்டான். மனதில் கசடுகள் மறைந்து கூடும் முதல் கூடலில் பெண்ணவள் தேவைகள் தொடர்கதையாக நீண்டது. அதுவே அவனது மோகத்தையும் அணைய விடாது அவளுள் இழுத்து சுருட்டி கொண்டது.

பல மணித்துளிகள் கடந்து அவளது நலனை மட்டுமே மனதில் கொண்டு முடித்து வைத்தான் அந்த ஆனந்த லகரியை.

மூச்சு வாங்க அவள் முகம் பார்த்தான். நாணத்தில் சிவந்த முகம் இதுவரை இல்லாத சோபையை கொண்டு அழகாக மிளிர்ந்தது.

இமைகள் குடை பிடிக்க பார்வையை தழைத்தாள் தையல். அவளது கன்னம் தாங்கி விழி பார்த்து

அழகிய புன்னகையுடன் ரகசிய குரலில் சொன்னான் “உயிர் தேனே உனக்காக உயிர்த்தேனே”.
ஆழமான அர்த்தமிகு வார்த்தைகள்.

அலுவலகம் செல்ல தொடங்கி இருந்தான் தாரகேஷ். அவனை கொல்ல வந்த கூலிப்படையினர் பிடிபட்டனர். அவன் நினைத்தது போல இதை செய்தது மஞ்சரியின் தமையனும் அவனது நண்பனுமான அபிஜித்.

காவல்துறையினர் அவனை கைது செய்ய சென்றிருந்தனர். அப்போது அபியின் கையில் விலங்கு போடும் கடைசி நொடி அங்கு சென்ற தாரகேஷ் அவனது பண பலத்தை கொண்டு அந்த கைதை தடுத்துவிட்டான்.

அதை எதிர்பார்க்காத அபியிடம் “தெரிஞ்சோ தெரியாமலோ உன் குடும்பத்துக்கு நான் தப்பு பண்ணிட்டேன். ஆனா என்ன காரணம்னு உன் தங்கை கிட்டே அன்னைக்கே சொல்லிட்டேன் நான். இப்போ அவ என்னை மறந்துட்டு வேற யாரையும் திருமணம் செய்ய கூட தயாரா இருக்கலாம். அவளிடம் பேசி பார் உனக்கு தெரியும். ரெண்டு முறை நீ என்னை கொல்ல முயன்ற போதும் அது என்னோட தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லது நான் நடந்திருக்கு” என்றான்.

அவன் சொன்னதும் என்ன நல்லது என்று அபிஜித்திற்கு புரியாமல் விழித்தான். அதை கண்டு கொள்ளாது தாரகேஷ் தொடர்ந்தான் “நான் உன்னை எல்லார் முன்னாடியும் அடிச்சது தான் கோபம்னா.. நீ அடிக்க வந்த நான் திருப்பி கொடுத்தேன். அவ்வளவு தான். இதுக்கு மேல உன்னோட வழியை பார்த்துட்டு நீ போ. என் வழியில் நான் போறேன். குட் பை” என்று கிளம்பி விட்டான்.

நாட்கள் அழகாக பெருங்காதலும் சிறு சிறு உடல்களும் கொண்டு நகர்ந்தது. அவளது ஒன்பதாம் மாதம் அவர்களது மாளிகையிலேயே முக்கியமானவர்களை மட்டும் அழைத்து அவளுக்கு வளைகாப்பு செய்தனர்.

விருந்தினர்கள் ஒருவர் பின் ஒருவராக வர தொடங்கி இருந்தனர். கீழே மாதேஷுடன் பேசி கொண்டிருந்த தாரகேஷின் பார்வை மாடி படியையே பார்த்து கொண்டு இருந்தது.

இத்தனை நேரம் சென்றும் அவள் இறங்கி வராததால் அவனே சென்று பார்த்து வர முடிவு செய்து மாதேஷிடம் வருபவர்களை கவனித்து கொள்ளும் பொறுப்பை விட்டு விட்டு மாடிக்கு விரைந்தான்.

அங்கே அந்த அழகிய காஞ்சி பட்டு புடவையை கட்டி முடித்தவள் கொசுவத்தை சரி செய்ய முடியாது தவித்து கொண்டிருந்தாள்.

மிகவும் பெரிதாகி இருந்த வயிறு அவளை கொஞ்சம் கூட குனிய முடியாமல் தடுத்தது.

கணவனை அழைக்க நினைத்த நொடி கதவை திறந்து கொண்டு அவளது எண்ணத்தின் நாயகனே வந்து சேர்ந்தான். பட்டு வேட்டி சட்டையில் உயரமாக கம்பீரமாக இருந்த அவனது வனப்பில் பெண்ணவள் எப்போதும் போல பித்தாகி நின்றாள்.

அதை புரிந்து கொண்ட அவளவனின் கண்களும் அவளை ரசனையுடன் தான் தழுவி கொண்டது.

நேரம் செல்வதை உணர்ந்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவளது புடவை கொசுவத்தை சரி செய்து விட்டான். எழும் முன் புடவையை விலக்கி பிள்ளை தாங்கிய வயிற்றில் இதழ்பதிக்க அவனது மீசை முடி குத்திய சிலிர்ப்பில் அவள் துள்ளும் முன் தந்தை முகத்தில் அவனது குட்டி தேவதை ஒரு உதை உதைத்திருந்தாள்.

“அவுச்” என்று வயிற்றை பற்றி கொண்டவள்
“வெளியே உங்க அட்டகாசம் உள்ளே உங்க ஜுனியர் அட்டகாசம்.” என்று போலி அலுப்புடன் சலித்து கொண்ட மனைவிக்கும் அவளது கன்னத்தில் ஆழ முத்தம் ஒன்று பதிக்க அதில் கண்கள் கிறங்கி இருந்த மனையாளை
சிரித்து கொண்டே அழைத்து சென்றான் நிகழ்ச்சிக்கு.

இருவரது ஜோடி பொருத்தமும் பார்பவர்கள் கண்களை நிறைத்தது.

அடுத்த நாளே அவனது புது தொழிற்சாலை துவக்க விழா. நிதா எக்ஸ்போட்ர்ஸ் என்று அவர்களின் முதல் எழுத்தை கொண்டு தான் இந்த தொழிற்சாலை தொடங்கி இருந்தான்.

இன்னும் பத்து தினங்கள் தான் இருந்தது அவளது பிரசவத்திற்கு மருத்துவர் சொன்ன தேதிக்கு.

துவக்க விழாவை தள்ளிப்போட நினைத்தவனிடம் வேண்டாம் அதற்கு பிறகு ஆடி மாதம் வருவதால் இப்போதே செய்து விடுவோம் என்று பிடிவாதம் பிடித்வளின் சொல்லை தட்ட இயலாது வளைகாப்பிற்கு அடுத்த நாளே திறப்பு விழா திட்டமிட்டு இருந்தனர்.

கிருஷ்ணா எல்லா ஏற்பாட்டையும் முன் நின்று பார்த்து கொண்டான்.

டிசைனர் வைத்து அவளுக்காக பிரத்தியேகமாக தைத்த பேபி பிங்க் அனார்க்கலி சல்வாரில் அழகாக வந்திருந்தாள்.

அவளது முகத்தில் சோர்வு தெரிகிறதா என்று அவ்வப்போது அவனது கண்கள் வேலையின் நடுவே கூட அவளையே வட்டமிட்டது.

விழா முடியும் வரை எந்த பிரச்சனையும் இன்றி இனிதே முடிந்தது.

முக்கிய விருந்தினர்கள் அனைவரும் சென்றதும் கிருஷ்ணா மற்றும் வீட்டு உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

கிளம்பலாம் என்று காருக்கு வரும் போது அவளது முதுகு தண்டில் சுருக்கென்று மின்னல் போல வலி வந்து மறைந்தது.

அவளது முகம் முத்து முத்தாக வியர்த்து போனது.

அவளது நலம் அறிய முகத்தையே அவ்வப்போது பார்த்து கொண்டு இருந்த கணவனின் கண்களில் அவளது மாற்றம் தப்பாது விழுந்தது.

“ஹேய் என்ன ஆச்சு? எங்கயும் வலிக்குதா? வா ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்றான் பதட்டமாக.
கணவன் பதட்ட படுவது பிடிக்காமல் “அது எல்லாம் ஒன்னும் இல்லை நீங்க பயப்ப..” என்று வாக்கியத்தை முடிக்கும் போது அவளது பனிக்குடம் உடைந்து அவள் நின்ற இடம் முழுதும் நீர் கொட்டி இருந்தது.

பயத்தில் அவள் கண்கள் அகல நின்ற வேளை அடுத்த வலி சற்று அதிக நேரம் நீடிக் “தரூ” என்று அருகே நின்றவனின் சட்டை காலரை பற்றி கொண்டாள்.

அவன் அதற்கு மேல் பயந்து போய் இருந்தாலும் நிதானமாக அவளை தூக்கி கொண்டு கார் நோக்கி நடக்கும் போதே சகுந்தலா, தீரதயாளன் மற்றும் மாதேஷ் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

மாதேஷிடம் அவனது காரில் அவர்களை அழைத்து வர சொன்னவன் மனைவியை பின் இருக்கையில் படுக்க வைத்து விட்டு கிருஷ்ணாவிடம் தனது வண்டியை ஓட்ட சொன்னான்.

மனைவியின் தலையை எடுத்து மடியில் வைத்து கொண்டு அவளது கைகளை பற்றி கொண்டு அவளது ஒவ்வொரு வலிக்கும் அவன் துடித்து கொண்டிருந்தான் ஆசை கணவன்.

மருத்துவமனை வந்து அவளை பிரசவ அறைக்கு கொண்டு செல்லும் போதும் அவனும் அவளுடனேயே இருந்தான்.

அன்னையை உடலாலும் தந்தையை மனதாலும் துடிக்க வைத்து சரியாக ஒரு மணி நேரம் சென்று பிறந்தாள் அவர்களின் பெண்ணரசி நிதா.

அழகிய ரோஜா குவியலாக தாயின் மொத்த அழகையும் கொண்டு பிறந்த மகளின் மீது வைத்த பார்வையை பெற்றோருக்கு விலக்க இயவில்லை. மகளை கையில் ஏந்தி மனைவியின் நெற்றியில் ஒரு ஆழ்ந்த முத்தம் தந்து “தேங்க்ஸ் பேபி” என்றான் நிறைவாக.

சரியாக நான்கு ஆண்டுகள் கடந்து அந்த எஸ்யூவி வாகனம் கேரளாவில் அவனது பூர்வீக வீடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
தாரகேஷ் அருகே நித்யா அமர்ந்திருக்க அவள் மடியில் ஒரு வயது நிதேஷ் நரசிம்மவர்மன்.

பின் இருக்கையில் தீனதயாளனும் சகுந்தலாவும் அமர்ந்திருக்க அவர்களுக்கு நடுவே நான்கு வயது நிதா அமர்ந்து சகுந்தலா கையில் இருக்கும் நிதேஷின் இரட்டையான சித்தேஷ் நரசிம்மவர்மனுடன் விளையாடி கொண்டிருந்தாள்.

ஆம் நிதாவிற்கு அடுத்து அவர்களுக்கு பிறந்தது இரட்டை மகன்கள். ஆழமான காதலுக்கு சாட்சியாக, அவள் மீது அவன் கொண்டுள்ள தீராத மோகத்திற்கு சாட்சியாக பிறந்த இரட்டையர்கள்.

பேச்சும் சிரிப்புமாக நகர்ந்த பயணத்தின் போது சகுந்தலா நினைவு வந்தவராக

“ஹேய் சொல்ல மறந்துட்டேன் அன்னைக்கு கோவிலில் காமாட்சியை பார்த்தேன். அதிசயமா என்னிடம் நல்லா பேசினா. காவேரிக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இருக்காம். ரிஷி பெங்களுர்லயே செட்டில் ஆயிட்டானாம். அவனோட பொண்டாட்டி முழுகாம இருக்கா அடுத்த மாதம் பிரசவ தேதி சொல்லி இருக்காங்களாம். இப்போ ரெண்டும் ராசி ஆகிடுச்சாம்.நல்லா இருக்காங்களாம். உன்னை பத்தி கூட விசாரிச்சா. “ என்று அவர் பேசி கொண்டே போக நித்யாவின் பார்வையை தொட்டு மீண்டது தாரகேஷின் பார்வை.

இருவரது இதழ்களும் நிறைவான ஒரு புன்னகையை சிந்தியது.

முன்பு ஒரு முறை ரிஷியை பற்றி பேச்சை எடுத்து “ரிஷி எப்படி இருக்கார் என்ன ஏதுன்னு விசாரிக்க சொல்லட்டா நிது?” என்றான் தாரகேஷ்.

என்ன இருந்தாலும் மனைவியின் தோழன். அவனது வாழ்வை பற்றி அவளுக்கு கவலை இருக்குமோ அதை தன்னிடம் கேட்க தயங்குகிறாளோ என்று நினைத்து கேட்டான்.

அவளோ தெளிவாக “அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அவருக்கு நல்லா அமைச்சுக்க தெரியும் தரு” என்றதோடு முடித்து கொண்டாள்.

அதன் பின் இப்போது தான் அவனை பற்றிய செய்தி அவளது அன்னை மூலம் காதில் விழுகிறது.

அதே பூர்ன கும்ப மரியாதை பரிவட்டம் என்று குல தெய்வ வழி பாடு கோல்கலமாக நடந்தது. பூசை முடிந்து வெளியே வந்த போது அங்கே பூ(தீ) மிதி வேண்டுதல் நடந்து கொண்டிருந்தது.

அதை கண்டு அப்போதும் பழைய சம்பவத்தை நினைத்து கண்கள் கலங்கியவளாக கணவனை காண அவனோ அவளை கண்டு ஒற்றை கண் சிமிட்டி சிரித்தான். அடுத்த நொடி கண்ணீர் மறைந்து வெட்கம் கொண்டாள் பெண்.

இது போதும் இந்த காதல் ஒன்று போதும் அவர்கள் வாழ்வு முழுமைக்கும்.

முற்றும்.

எபிலாக்

மதுராந்தகம் பூம்பொழில் அரண்மனையில் அந்த அறையில் இருந்த ரவீந்திரன் வரைந்த ஓவியங்களை பார்த்து கொண்டிருந்தாள் நித்யா.

நிதாவிற்கு எட்டு வயது இரட்டையர்களுக்கு ஐந்து வயது. அவர்கள் மூவருக்கும் பள்ளி விடுமுறை அதனால் அவர்களின் பாட்டி தாத்தாவுடன் இருப்பதாக கூறி விட்டனர்.

மாதேஷுக்கு திருமணம் முடிந்து ஆறு மாத பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இளையவர்களின் ஈடுபாடு இப்பொழுது எல்லாம் அந்த குழந்தையிடம் தான். அடிக்கடி பாட்டி வீட்டிற்கு அவர்களை கட்டி இழுத்தாள் அந்த குட்டி தேவதை.

இப்போதும் தாய் தந்தையுடன் வர மறுத்து பாட்டி வீட்டில் தான் தஞ்சம் பிள்ளைகள் மூவரும்.அதனால் கணவன் மனைவி மட்டும் வந்திருந்தனர்.

மனைவியை வெகு நேரம் காணாது அந்த அறைக்கு தேடி வந்தவன் அவள் ரவீந்திரன் மற்றும் மஞ்சு இணைந்து காதலில் கட்டுண்டு இருந்த நிலையை தத்ரூபமாக வரைந்திருந்த அந்த ஓவியத்தின் முன் நின்றிருந்தாள்.

அவள் அருகே சென்று பின் இருந்து அனைத்து கொண்டு அவனும் அந்த ஓவியத்தின் மீது பார்வையை பதித்து

“இங்கே என்னடா பண்ணிட்டு இருக்க?” என்றான். அவள் என்ன சொல்லுவாள் என்று அவனுக்கு தான் தெரியுமே. எப்போதும் நடப்பது தான் இது.

“இல்லை இந்த ஓவியத்தை எல்லாம் பார்த்தால் எனக்கும் ஏதாவது நியாபகம் வருதான்னு பார்க்கறேன். இன்னும் கொஞ்சம் இந்த மஞ்சு பற்றி சொல்லுங்களேன்” என்றாள் ஆர்வமாக.

“அடியேய் இது என்ன அம்னீஷ்யாவா நடந்ததை சொன்னால் நினைவு வரதுக்கு. இது பூர்வ ஜென்ம நியாபகம். எல்லாருக்கும் வராது. இப்போ எதுக்கு இது?” என்றான்

“இந்த மஞ்சுளவாணியை விட நான் கம்மியான காதலை காட்டிட கூடாதேன்னு தவிப்பு தான்.” என்றாள் உண்மையான தவிப்புடன்.

மலர்ந்து சிரித்தவன் “ரவீந்திரனோட காதலி அவனை எப்படி காதலித்து இருந்தால் நமக்கு என்ன? இந்த தாரகேஷின் காதலி அவளோட ஒட்டு மொத்த காதலையும் எனக்கே எனக்காக கொட்டி கொடுக்கறா.” என்றவனை விழிகள் மலர பார்த்தாள்.

எப்போதுமே அவள் கேட்கும் கேள்வி தான். அது அவளது காதலின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. இருந்தும் அது எந்த விதத்திலும் அதை விட குறைந்து விட கூடாது என்ற தவிப்பில் கேட்பது. சிறு பிள்ளை தனமானது. அவனும் அதை ரசித்து பதில் சொல்வான்.

“ நீயும் நானும் மட்டும் இருக்கும் இந்த தனிமை அதில் இனிமை கூட்டும் வழியை பார்க்காமல் இது என்ன வேண்டாத பேச்சு?” என்று அவளை அவனது கைகள் ஆக்டோபஸாக வளைத்து கொண்டது.
அதன் பின் யாரின் காதல் உயர்ந்தது என்று வார்த்தைகளால் இன்றி கொடுக்கல் வாங்கல் மூலம் ஒரு யுத்தம் நடந்தது. அவர்கள் வாழ்வில் இந்த அன்பின் யுத்தம் என்றுமே நீங்காது நிலைத்து நிற்கும். பல ஜென்மமாக வாழாத வாழ்வை இந்த ஜெனன்மத்தில் நிறைவாக வாழ்வார்கள்.

சுபம்

 


ReplyQuote
Page 13 / 14
Share: