Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

கனவை களவாடிய அனேகனே - Teaser  

  RSS

Spicy Kannamma
(@spicy-kannamma)
Active Member Writer
Joined: 2 months ago
Posts: 6
03/10/2019 4:03 pm  

ஹாய் மக்களே..

நான் உங்கள் புதிய தோழி Spicy Kannamma. என்னுடைய எழுத்துக்கள் மூலமாக உங்கள் எல்லாரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னையும் உங்கள் அழகான குருவி கூட்டுக்குள் சேர்த்துப்பீங்கனு நம்புறேன்.. இப்பொழுது நான் தொடங்கவிருக்கும் "கனவை களவாடிய அனேகனே" கதைக்கான டீசர் இதோ உங்களுக்காக.. படித்துவிட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க நட்பூஸ்..

இப்படிக்கு உங்கள் அன்பையும் ஊக்கத்தையும் எதிர்நோக்கும் உங்கள் கண்ணம்மா ❣️

*********************************

கனவை களவாடிய அனேகனே டீசர் 

“ அய்யோ கடவுளே.. ஏன் தான் நேத்து லீவ் போட்டேனோ.. இந்த மேனேஜர் தொல்லை தாங்க முடியலை.. “ என்று முணுங்கியபடி தனது கேபினுக்குள் வந்து அமர்ந்தாள் அம்ரிதா.

அமர்ந்த இரண்டாம் நிமிடம் அத்தனை புத்துணர்வான வாசம் அவள் மனதினை தொட்டது. அவளுக்கு நிச்சயமாக தெரியும் அந்த வாசம் அவளது நாசியின் வழியே உணரப்படவில்லை. ஆனால் மூச்சுக்குழலெங்கும் பரவி தன்னை மூர்ச்சையாக்கும் அந்த புதுவித புத்துணர்வை அவள் ரசித்த வண்ணமே தனக்குள் ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் படாரென திறக்கப்பட்ட அவளது கேபின் கதவின் சத்தம் அவள் நிலைக்கொண்டிருந்த பரவச சுகத்தை கலைத்திட கடும் கோபம் கொண்டவளாய்

” அறிவு இருக்கா ப்ளெடி ஃபூல்.. “ என்று கத்தி முடித்த பின்பு தான் கவனித்தாள் அங்கு நின்றுக்கொண்டிருந்தது சாட்சாத் அவளது மேனேஜர் மோகன் தான்.

“ வாட் ..? யஸ்.. ஐ அம் அ ஃபூல்.. உன்ன போய் இங்க வேலைக்கு வச்சேன் –ல.. நான் ஃபூல் தான்.. “ – கொந்தளிப்புடன் மேனேஜர் கேட்க

“ அ… ஆ… ஐ அம் சாரி சார்.. ஆக்ட்சுவலி.. “ – திக்கித்திணறிக் கொண்டிருந்தாள் அம்ரிதா.

“ இந்த ஃபைல் –அ எடுத்துக்கிட்டு போ –னு அவ்வளவு நேரம் லெக்சர் கொடுத்துருக்கேன்.. எடுக்காம இங்க வந்து நின்னு கனவு கண்டுக்கிட்டு இருக்கியா..? வேலை செய்ய இஷ்டம் இருந்தா இருக்கலாம்.. அதர்வைஸ் லீவ் திஸ் ஆஃபீஸ் ரைட் நவ்.. “ என்றபடி கோப்பினை அம்ரிதாவின் முன் வீசிவிட்டு சென்றார் மோகன்.

“ ஓ.. ஷிட்.. வாட் தி ஹெல் ஹப்பனிங் ஹியர்..?! கம் ஆன் அம்மு.. ச்சில்.. “ என தன்னை தானே சமாதானப்படுத்தியவளை விட்டு அப்போதும் நீங்காது நிறைந்திருந்தது அந்த ஆத்மார்த்தமான வாசம்.

வேலையை கவனிக்கவா இல்லையேல் இந்த வாசத்துடன் பயணிக்கவா என அவள் மனம் சிதறிக்கொண்டிருந்த நேரம் மீண்டும் கேட்டது கதவு தட்டப்படும் சத்தம்.

’ போன காண்டாமிருகம் திரும்ப வந்திருச்சோ..?! ‘ என்ற பயத்துடன் “ யஸ் கம் இன்..” என்றவளது பார்வையில் பிரம்மிப்பு ஆட்சி செய்யும் வண்ணம் பிரகாசமான உருவமாய் தேஜஸ் கலந்த சிரிப்புடன் வந்து நின்றான் அனேகன். ஆம்.. அவளது அனேகன். அவளுக்கு வேண்டுமானால் அவனை தெரியாதிருக்கலாம். ஆனால் தன்னவளுக்காகவே தவம் செய்து சர்வ வல்லமைகளையும் பெற்று வந்த அவன் அறியமாட்டானா அவளை..?

அவனது முகம் வெளிக்கொணரும் ஈர்ப்பில் இருந்து தன் பார்வையை மிகவும் கஷ்டப்பட்டு விடுவித்தாள் அம்ரிதா. ஆனால் அதனை மீண்டும் தன் வசமாக்க ஒரு சிறு புன்னகை போதுமானதாய் இருந்தது அனேகனுக்கு.

“ ஹலோ பேபி.. “ என்றவன் தன் கைகளில் வைத்திருந்த பூங்கொத்தினை அவளிடம் நீட்டினான். அவளது கைகள் தன்னை அறியாமலேயே அதனை வாங்கிக்கொண்டது.

தற்பொழுது தன் கைகள் வெற்று மனையாக இருப்பதை விரும்பாத அனேகன் அம்ரிதாவின் அருகில் வந்தான். தன் கரங்கள் கொண்டு தன்னவளின் மெல்லிடையை சுற்றி அணைத்தான். தன்னோடு மேலும் இறுக்கினான்.

ஆனால் அவளோ அவனை கண்ட முதல் பார்வையின் பிரம்மிப்பு மாறாமல், நடப்பது என்னவென்றே உணராமல் சிலையாய் அவள் விழிகளை மட்டுமே நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் உடம்பின் உருப்புகள் அனைத்தும் அவனது அணைப்பினால் அசையாதிருந்தது. அசைவு பெற அனுமதி வாங்கியிருந்தது அவளது கருவிழிகள் மட்டுமே. அதுவும் தன்னவன் விழிகள் செல்லும் இடத்திற்கெல்லாம் அவன் பின்னே மட்டுமே செல்வேன் என் அடம் பிடித்திருந்தது.

அது சரி.. அவன் வந்த நொடிப் பொழுதினில் சிறிதும் தாமதிக்காமல் அவள் பார்வையை சிறை வைத்து விட்டானே..! பிறகு எங்கணம் கன்னியவள் கட்டளையை கட்டவிழ்க்க முடியும்..?

கட்டழகியின் கர்வம் தன்னை கண்டுக்கொள்ளும் முன் தேனிதழ் வண்ணமாய் பூவிதழ் சின்னமாய் விளங்கிய அவளது சிற்றிதழுக்கு கச்சிதமான இதழ் முத்தம் ஒன்றை பரிசளித்து தன் காதலின் ஆழம் அதனை அவள் அடிமனதினுள் பதியும் முத்திரையாக்கினான்.


Topic Tags
Rekajegan Rekajegan
(@rekajegan)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 15
04/10/2019 6:58 am  

அருமை அருமை


ReplyQuote
Spicy Kannamma
(@spicy-kannamma)
Active Member Writer
Joined: 2 months ago
Posts: 6
04/10/2019 2:09 pm  

@rekajega

மிக்க நன்றி 😊


ReplyQuote
Megala Appadurai
(@megala-appadurai)
Eminent Member Contributor
Joined: 1 year ago
Posts: 39
09/10/2019 3:47 pm  

வாவ் அடி தூள் ஆரம்பமே அமர்க்களம் 😍😍😍😍😍😍😘 😘😘😘😘😘😘 அனேகன் என்னடா பண்ற டேய்.... செல்லோ சூப்பர் டா வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹🌹🌹 சகாப்த்தில் சகாப்தம் படைத்திட வாழ்த்துகள் 


ReplyQuote
Spicy Kannamma
(@spicy-kannamma)
Active Member Writer
Joined: 2 months ago
Posts: 6
10/10/2019 5:32 pm  

@megala-appadurai

Thank you Maggie maa😍😍😍 Very happy ❤️❤️❤️❤️❤️ 


ReplyQuote
Share:

error: Content is protected !!

Please Login or Register