Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

அத்தியாயம் 16-17  

  RSS

Kiruba Jp
(@kirubajp)
Active Member Writer
Joined: 6 months ago
Posts: 17
27/05/2020 1:22 pm  

அத்தியாயம் 16

ராஜ் பதறி அடித்துக்கொண்டு இந்திராவின் அருகே வந்து பார்க்கும் போது இந்திரா மயங்கிய நிலையில் கிடக்க பதறிபோய் விழுந்து அடித்துக்கொண்டு எழுந்து காபி டீப்பாய் மேல் இருந்த தன் மொபைலை எடுத்து திலிப்பிற்கு கால் செய்தான். திலிப் தன் வீட்டு பாரில் டிரிங்ஸ் எடுத்துக்கொண்டிருந்தான்.

போன் சைலன்டில் கிடந்தது.

“பிக்கப்..பிக்கப்..“ என்று கத்தினான் ராஜ். அவன் எடுப்பது போல தெரியவில்லை. மீண்டும் வேகமாக வந்து இந்திராவின் முகத்தில் தண்ணீரை தெளித்தான்.

இந்திராவின் கண்கள் மெல்ல அசைந்தது. மீண்டும் ஒரு முறை தண்ணீரை அடித்தான்.

மெல்லமெல்ல கண்விழித்தாள் “ராஜ்.. ராஜ்.. அவன் வந்தான் அவன் தான் திரும்..ப..ப“

பதறி போய் உளறினாள். “முதல நிறுத்து..நிறுத்து..நி..றுத்து..“ என்று கத்தினான்.

“ரிலாக்ஸ்..ரிலாக்ஸ்.. யாரு? இப்போ சொல்லு?“

“சஞ்சிவ்? சஞ்சிவ்?“

“சஞ்சிவா??“ ராஜ் வேகமாக எழுந்து தன் அறைக்கு சென்று கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த மேசை டிராயரில் ரிவால்வரை எடுத்து கதவை திறந்துக்கொண்டு வெளியில் வந்தான். மழை சோவ்வென்று கொட்டியது. அப்படியே நனைந்துக்கொண்டு வாட்ச்மேனை அழைத்தான். வாட்ச்மேன் தரை வழுக்கிவிட விழுந்து எழுந்து ஓடி வந்தான்.

“சார்..சார்..“

மழையின் இரைச்சல் காரணமாக ராஜ் சத்தமாக பேசினான்.“எங்க போய் தொலைஞ்ச காம்பவுண்டுக்குள்ள யாரோ வந்துருக்காங்க“

“சார் மழை பெஞ்சது நால பிளாக்ல இருந்தேன் சார்.“

“சீக்கிரம் போ..போய் பாரு போ“
வாட்ச்மேன் திரும்பி ஓட. ராஜ் திரும்பி வீட்டின் பின் பக்கம் வந்தான் மழை கொட்டியது இடி,மின்னல் என அந்த இருட்டின் கொட்டும் மழையில் நின்ற உருவம், ராஜை அதிரச்செய்தது.

“சஞ்சய்..“ ராஜ் கன்னை உயர்த்தினான்.
“சார்..சார்..பிளீஸ் நான் சொல்றத கேளுங்க?“

“உன்னையெல்லாம் கேள்வி கேட்கவேகூடாது சுட்டு தள்ளனும்டா??“

“சுடுங்க அதுக்கு முன்னாடி இந்திராகிட்ட அன்னைக்கு என்ன நடந்ததுன்னு போய் சொல்லுவேன்.“

“என்ன?“

“நடந்தது எல்லாம் எனக்கு தெரியும் நீயும் அந்த திலிப்பும் என்ன தில்லுமுல்லு செஞ்சிங்கன்னு தெரியும்.நான் போய் இந்திராகிட்ட சொல்லவா??“

“உனக்கு என்ன வேணும்..“

“அப்படி வாங்க ஒரு கோடி பணம் வேணும்.“

“வாட் ஒரு கோடியா? அவ்வளவு பணம் என்கிட்ட இல்ல??“

“நம்பர் ஒன் கிரிமினல்…லாயர். ஒரு கேஷ்க்கு முப்பது லட்சம் வரைக்கும் பேமன்ட் வாங்குறிங்க? பத்தாதுக்கு இந்திரா தங்கமுட்டை போடுற வாத்து, சொத்து மட்டுமே இருநூறுகோடிக்கு மேல இருக்கு?“

“ஓ.கே. பணத்தை தரேன். என்ன எவிடன்ஸ் வச்சிருக்க அத என்கிட்ட கொடு.“

“இதோ இந்த போன் தான் எவிடன்ஸ்? அது மட்டும் இல்லாம என்னோட ப்ரண்டும் இருக்கான் அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு தான் வந்திருக்கேன் அடுத்த ஒரு மணிநேரத்துல நான் அங்க போகல அவன் போலிஸ்கிட்ட போயிடுவான்.“

“நாளைக்கு என்னோட ஆபிஸ்க்கு வா? பணத்தை தரேன் நீ இந்த போன கொடுக்கனும்.“

“வெயிட் இன்னொரு டிமான்ட் இருக்கு??“ என்ன என்பது போல் புருவத்தை தூக்கி ராஜ் பார்த்தான். மழை சத்தம் வேறு சோ..சோ என்றது. முகத்தில் வழிந்து ஓடிய மழைநீரை துடைத்துக்கொண்டு சஞ்சயை பார்த்துக்கொண்டிருந்தான் ராஜ்.

சஞ்சய் இப்போது ராஜின் காதருகே வந்து “என்ன அவமானபடுத்தி கேஸ் போட்டு என் வாழ்க்கையே சீரழிச்சிட்ட. எதுக்காக என்ன போலிஸ்ல புடிச்சி கொடுக்க நினைச்சியோ அந்த விஷயம் எனக்கு வேணும்? இந்திராவோட வீடியோ? முழு வீடியோ?“ சொல்லிவிட்டு இடிக்க இடிக்க சிரித்தான் சஞ்சய்.

கொட்டும் மழையிலும் ராஜ் உடல் அனலாக வீசியது.

அடுத்த கேள்வி எதுவும் கேட்காமல் ராஜ் ரிவால்வரை லோட் செய்தான். இந்திரா “ராஜ்..ராஜ்..“என்று அழைத்தாவரே குடையை பிடித்துக்கொண்டு அவனை தேடிக்கொண்டு வந்தாள்.

ராஜ் யோசிக்கவே இல்லை சஞ்சயை சுட்டு தள்ளினான். சஞ்சய் சிரிப்பு அடங்கியது. ரிவால்வர் சத்தம் கேட்டு வாட்ச்மேன், இந்திரா இருவரும் ஓடி வந்தனர். அதற்குள் ராஜ் இருளை விட்டு இந்திரா அருகே வந்தான்.

“யாரும் இருக்காங்களான்னு சுட்டு பார்த்தேன், யாருமே இல்ல, நீ ஏன் இவ்வளவு மழையில வந்த போ..போ உள்ள“

“அது சஞ்சிவ் தான“

“எல்லாம் உன்னோட இல்லுயூசன். கம்ஆன் நீ வீட்டுக்குள்ள போய் தூங்கு நான் போலிஸ்ல போய் கம்பிளைன்ட் பண்ணிட்டு வரேன். கோ.“ இந்திராவை தன் அறைக்கு சென்று படுக்கவைத்து விட்டு வாசல் கதவை லாக் செய்துவிட்டு வந்தான். தொப்பென்று நனைந்து இருந்தான். அதற்குள் இங்கு வாட்ச்மேன், டெட்பாடிய நகர்த்திக்கொண்டிருந்தான்.

“அவன் பாக்கெட்டுல மொபைல் இருக்கான்னு பாரு?“

“இருக்கு சார்.“

“எடு??“

“நீ டெட்பாடிய கிளியர் பண்ணி நம்ம பண்ணைவீட்டுல கொண்டு போய் புதைச்சிடு. இங்க எந்த ஆதாரத்தையும் விட்டு வைக்கமா எல்லாத்தையும் கிளியர் பண்ணு. இவன் மேல ஏற்கனவே பல கேஷ்கள் இருக்கு இவன தேடுறதுல போலிஸ் அவ்வளவா இன்ட்ரஸ்ட் காட்டாது, இவன தேடுறதுக்கும் யாரும் இல்லாத அனாதை பொறுக்கி நாய். அப்படியே ஏதாவது வந்தாலும் எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்கு தெரியும். ஐ அம் ய கிரிமினல்..“ சொல்லிவிட்டு அவன் போனை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு வந்தான் ராஜ்.

அதே நேரத்தில் வாட்ச்மேன் எல்லாத்தையும் கிளியர் செய்து பாடியை காரில் ஏற்றிக்கொண்டு ராஜின் பண்ணைவீட்டுக்கு சென்றான்.
ராஜ் முழுவதும் நனைந்து இருந்ததால் ஷவரில் மீண்டும் வெது வெதுப்பான நீரில் தன்னை அமைதிபடுத்திக்கொண்டான்.

பாத்ரூமை விட்டு வெளியில் வந்த போது பெட் மீது கிடந்த சஞ்சய் போன் அடித்தது. நம்பரை எடுத்து பார்த்தான் கே1 என்ற நேம் ஸ்கீரினில் காட்டியது.

ராஜ் போன் அடிப்பதை பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஏதோ ஒரு நம்பருக்கு தன் மொபைலில் இருந்து கால் செய்தான்.
எதிர்முனையில் இன்னொரு ஆணின் குரல்.

“சொல்லுங்க சார் இந்த நேரத்துல கால் பண்ணிருக்கிங்க.“

“நம்ப பசங்க இருக்காங்கள?“

“இருக்காங்க சார்.“

“நான் ஒரு நம்பர் தரேன் அத டிரேஸ் பண்ணி அங்க யாரு இருந்தாலும் நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வாங்க??“

“ஓ.கே சார்.“

இணைப்பை துண்டித்தான். மொபைலை எடுத்து ஏதும் எவிடன்ஸ் இருக்கா என்று தேடினான். அதில் சில பெண்களை தப்பான முறையில் எடுக்கப்பட்ட வீடியோக்கல் இருந்தது. ராஜ் தேடுவது போல் வேறு எதுவுமே இல்லை.

இந்த நேரம் திலிப் ராஜ் மொபைலுக்கு கால் செய்தான்.

“ஃபூல் போன் பண்ணுனா எடுக்கமாட்ட??“
“ஸாரிடா கொஞ்சம் டைட், வாட் ஹாப்பன்.“

சில மணி நேரத்தில் நடந்ததையெல்லாம் சொன்னான் ராஜ். திலிப் அதிர்ந்தான் “இது என்னடா புதுப்பிரச்சனை? ஏன்டா அவன கொன்ன?“

“அவன் உயிரோட இருந்தா இந்திராவுக்கு தான்டா பிரச்சனை??“

“நீ இந்திரா மேல வச்சிருக்க காதலால இன்னும் என்னன்ன தப்பு செய்யப்போறியோ நான் உன் மேல வச்சிருக்க நட்பால நான் என்னன்ன செய்யப்போறனோ?“

“ஓ.கே. நீ கிளம்பி நம்ம பண்ணைவீட்டுக்கு வா?? பாடிய கிளியர் பண்ணிட்டேன்.“

“ஓ.கே.“

அத்தியாயம் 17

போனை வைத்துவிட்டு உடையை மாற்றிக்கொண்டு, இந்திரா இருக்கும் அறையை நன்றாக மூடிவிட்டு வீட்டு கதவுகளை லாக் செய்துவிட்டு வெளியே வந்தான். அதற்குள் அங்கு பாடி டிஸ்போஸ் செய்துவிட்டு பார்த்தி வீடு திரும்பி இருந்தான். அவனிடம் சொல்லிவிட்டு தன் காரை எடுத்துக்கொண்டு பண்ணைவீட்டை நோக்கி ஓட்டினான்.

ஏற்கனவே திலிப் வந்திருந்தான். ராஜ் வந்ததும் இருவரும் சேர்ந்து வீட்டின் உள்ளே சென்றனர். ஒருவனை கயிறுகளால் கட்டி போட்டிருந்தனர், அவனை சுற்றி நான்கு பேர் தடித்தடியாக.
“பார்த்தியா எள்ளுன்னா எண்ணைய்யா நிற்பானுங்க நம்ப பாய்ஸ்?“ என்று புகழ்பாடினான் திலிப்.

“போங்க சார் கூச்சமா இருக்கு?“
என்றான் நான்கு பேரில் ஒருவன்.
“டேய் இவன் தானா?“

“ஆமாம் சார் இவன் தான், டிரேஸ் பண்ணுன அட்ரஸ்ல இவன் தான் இருந்தான். ஒரு ஐடன்டிஃபயிக்காக நீங்க கொடுத்த நம்பருக்கு கால்பண்ணுனோம், அது இவன் நம்பர் தான் சரக்கடிச்சி மட்டயா கிடந்தான் தண்ணிய தெளிச்சி கொண்டு வந்தோம்.“

திலிப் அவனை உற்று பார்த்துவிட்டு “ராஜ் இவன் நம்ப ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்குறவன்டா. பேரு சரவணன் நினைக்கிறன்.“

“நினைச்சன் இந்த நாய் தான் நம்ப செஞ்சத அந்த நாய் கிட்ட சொல்லிருக்கு?“

“யெஸ், அசோக் எழுப்புங்கடா அவன“ என்றான் திலிப் கடுமையாக.
“சார் புல் டைட் சார் இப்போ எது கேட்டாலும் நிதானமா சொல்லமாட்டான். காலையில பேசலாம்னு நினைக்கிறேன்.“

“இவன இப்பயே போட்டுடுவோம்டா திலிப்.“

“இருடா ஏதாவது ஆதாரம் வச்சிருக்காங்களான்னு விசாரிப்போம். அதுக்கப்பறம் இவன போடலாம் வா மார்னிங் வரலாம்.“

வலுகட்டாயமாக ராஜ்ஜை இழுத்துச்சென்றான் திலிப்.

மறுநாள் காலை பொழுது.

தனா எப்போதும் போல ரெஸ்டாரண்ட் வந்து தன் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் வந்ததும் மதன் எதிரே எங்கேயோ அவசரமாக சென்றான். அவனை பார்த்தப்படியே தான் உள்ளே வந்தாள். அவனும் இப்போதெல்லாம் சரியாக பேசுவதில்லை அது தனாவிற்கு தெளிவாக புரிந்தது.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் மதனின் பைக் சத்தம் கேட்டது. பைக்கில் இருந்து இறங்கி நேவிதன் வந்தான். அவனை நேருக்கு நேர் பார்க்காமல் விலகி சென்றாள். ஆனால் நேவிதன் அதை பொருட்படுத்தாமல் அவள் அருகே சென்றான்.

மிகவும் கோபமாக இருந்தாள்.

“எங்கபார்த்தாலும் விசாரிச்சிட்டேன் உன்னை தவிர அங்க யாருக்கும் ஈசன்னா அவ்வளவா தெரியவே இல்லை? அவன் உன்னை ஏமாத்திருக்கான் அந்த வீடு கூட அவனோடது கிடையாது?“

தனா தலையை தூக்கி இப்போது நேவிதனை பார்த்தாள். கண்கள் கலங்கி போய் இருந்தது.

“நான் உங்ககிட்ட எதுவுமே கேட்கலயே, என்னோட ஈசன பத்தி எனக்கு தெரியும். அவன் என்ன ஏமாத்தமாட்டான் நீ உன் வேலை என்னவோ அத பாரு? ஹிரோயிசம் காட்டவேண்டாம்?“

மதன் வேகவேகமாக வந்தான்

“இதெல்லாம் பத்தாது உன் கால்ல இருக்குள்ள அந்த செருப்பு அதகழட்டி அடி? அப்பவும் திருந்த மாட்டான்.“சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

இப்பவும் நேவிதன் இதமாக பேசினான். “தனா நீ எவ்வளவு ஆழமா ஈசன லவ் பண்ணுறியோ அதே அளவுக்கு நான் உன்ன லவ் பண்றேன். ஆனா உன்ன ஏமாத்தி தான் என்னோட காதல நிறுப்பிக்கனும்னு அவசியம் கிடையாது. நான் சொல்றது எல்லாமே உண்மை“நேவிதனும் சென்றான்.

தன் அறைக்கு சென்றவன் சீட்டில் அமர்ந்து அந்த சுழல் நாற்காளியை இடம் வலமாக திருப்பிக்கொண்டிருந்தான். மதன் கோபமாக அமர்ந்திருந்தான்.

“அவன் பிராடுன்னு தெரிஞ்சும் இவ இப்படி பண்றா இன்னும் நல்லவனா இருந்தா??“ கடுக்கடுத்தான் மதன்.
“அவன் நல்லவன் தான்டா“

‘‘என்னடா சொல்ற அப்பறம் ஏன்? அப்படி சொன்ன?.“

“ஈசன் ரொம்ப நல்லவன் அவன் பெரிய பணக்காரனும் தான். அவன் தனாகூட தான் ஓடிப்போயிட்டான்னு சொல்லி தனா மேல ஈசனோட தாய் மாமா கேஸ் போட்டுருக்கான். அது மட்டும் இல்ல ஈசனோட சொத்து பூர இல்லீகளா அப்பேஸ் பண்ணிருக்கான். அங்க போய் விசாரிச்சப்போ தான் இவ்வளவும் தெரிஞ்சது?? யாருக்கும் தெரியாம அவனோட வீட்டுக்குள்ள போய் ஏதாவது தகவல் கிடைக்குமான்னு தேடுனன் அப்போ தான் அவன் இன்டர்வியூ கார்டு கிடைச்சது. அங்க போய் விசாரிச்சா கண்டிப்பா எதாவது தகவல் கிடைக்கும். ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் ஈசன் இப்போ உயிரோடவே இல்ல??“

“என்னடா சொல்ற?? “ மதன் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான்.

Share: