Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

துருயேறிய இரும்புகள் அத்தியாயங்கள் 28_29_30  

  RSS

Kiruba Jp
(@kirubajp)
Active Member Writer
Joined: 6 months ago
Posts: 12
13/07/2020 12:46 pm  

ஹாய் ப்ரண்ட்ஸ் 😍😍😍

லேட் போஸ்ட் அதனால மூன்று அத்தியாயங்கள் போட்டுருக்கன் படிங்க கமெண்ட் பண்ணுங்க.

Almost climax நெருங்கியாச்சி இந்த கதை புதுசா படிக்கிறவங்க தயவுசெய்து முதல்ல இருந்து படிங்க நடுவுல படிச்சா புரியாது நான் திரும்ப சொல்றேன் ஒவ்வொரு பக்கமும் வரியும் டிவிஸ்ட் இருக்கு நிறுத்தி நிதானமாக படிச்சா புரியும் இல்ல குழப்பும் சோ கவனம் நீங்க கவனமா படிச்சா தான் கிளைமாக்ஸ் புரியும் இல்ல அதுவும் புரியாது.

Reader mind voice : எத்தனை குழப்பம் 🙄🙄

Me: ரொம்ப குழம்புதா எனக்கும் தான்😂🤣

அடுத்த அத்தியாயங்களோட வரேன்

👋👋👋👋👋👋👋👋👋

வேல் வந்து விளையாடும் பூமி முழு கிராமத்து நாவல் கீழ போஸ்ட் பண்ணிருக்கன் கிராமத்து கதையில டிவிஸ்ட் வேணும் திரில் வேணும்னு நினைக்கிற வங்க அத டவுன்லோட் பண்ணி படிங்க link my fb pagela இருக்கு✌️👇👇

நன்றி

அத்தியாயம் 28

நேரம் கடந்தது ஈசன் நினைவுகள் மெல்லமாய் திரும்பியது. தலைக்கு பின்னால் வலி இருந்தது, கண்களை திறந்தான். மங்கலான அறை வெளிச்சம் நன்றாக கண்களை திறந்து தனாவை தேடினான், தனா அங்கில்லை.

இந்திரா “தனா…தனா..“ என்று சத்தம் போட்டாள். மெல்ல நினைவு திரும்பியவளை தோள்களை உலுக்கினாள்.

“சொல்லுங்க இந்திரா..“

“சொல்லுங்கவா..இப்போ வரைக்கும் நான் சொன்னது எதுவுமே உன் காதுல விழவே இல்லையா..“

“இல்ல நான் எனக்கு…“

“என்வீட்டுல ஏதோ பில்லி சூனியம் இருக்கும் போல யாரு வந்தாலும் ஸ்டன் ஆகிடுறாங்க.“

தனா வராத சிரிப்பை வரவழைத்துக்கொண்டு சிரிந்தாள்.

“நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொன்னேன்.“

“அய்யோ ஸாரி இந்திரா திரும்ப சொல்லேன்..“

இந்திரா தனாவை விசித்திரமாக பார்த்தாள்.

தனா வீட்டை விட்டு வாசலுக்கு வந்தாள். வெளியே நின்று கொண்டிருந்த வாட்ச்மேனிடம் வந்தாள். “அண்ணன் எனக்கு முக்கியமான வேலை இருக்கு முத்துவுக்கும் உடம்பு முடியாம போயிட்டா நான் மேடம் கிட்ட சொல்லிட்டேன் அவங்க பார்த்துகுறன்னு சொன்னாங்க. இருந்தாலும் நீங்க அடிக்கடி போய் பார்த்துக்கோங்க“

“சரிமா..சரிமா..இப்போ சார் வந்துடுவாங்க. நான் போன் பண்ணி சொன்னேன், ஒருமணி நேரத்துக்கு முன்னாடியே அவரு ஏர்போர்டுல தான் இருக்கன்னு சொன்னாரு அனேகமா இன்னெரம்...“

அவன் சொல்லும் போதே தெரு முனையில் கார் ஒன்று வரும் சத்தம் கேட்டது.

“சார் தான் போல..“

“சரி அண்ணன் நான் கிளம்புறேன்.“

“சரிமா..“

அவள் நகர்ந்து செல்ல கார் காம்பவுண்டுக்குள் நுழைந்தது. ராஜ் தனாவை பின் பக்கம் பார்த்தான் வாட்ச்மேனிடம் காரை நிறுத்தி கேட்க “அது மேடம் ப்ரண்டு சார்..“ என்றான்.

முத்துவும் சாகித்தியனும் ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தனர்.

“என்னாச்சு ஏன் பாதியில வந்துட்ட“
முத்து இவ்வளவு நேரம் கட்டுபடுத்தி வைத்திருந்த கண்ணீர் பீய்ச்சி கொண்டு கொட்டியது. “நான் யாரையெல்லாம் நம்புறனோ அவங்க எல்லாம் துரோகிங்களா தான் இருக்காங்க..“

சாகித்தியனுக்கு புரியவில்லை. ஒரு வேளை நம்மை தான் சொல்கிறாளோ என்று மனது பதறியது, இதற்குமேல் மறைக்காமல் அவளிடம் உண்மையை சொல்லவேண்டும் என்று நினைத்தான்.

“யாரு..யாரு..துரோகம் செஞ்சா..“

“இந்திரா..“

“இந்திராவா…உங்க மேடமா..என்ன..செஞ்சாங்க..“

“என் வாழ்க்கையில நடந்த எல்லா சோதனைக்கும் அவ தான் காரணம்.“
முத்து இப்படி பேசுவது சாகித்தியனுக்கு அச்சத்தை கொடுத்தது. அவன் குறுக்கே பேசவில்லை.

“என் தங்கச்சிய இழந்தேன்..என் குழந்தைய இழந்தேன் எல்லாமே அவளால தான்.“

“உனக்கு பைத்தியமா அவங்க எப்படி காரணம் ஆக முடியும்..“

“எனக்கு நடந்த ஆக்ஸிடன்ட் அவ பண்ணுனது தான்..“

“நீ தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க?? கண்டிப்பா அவங்க கிடையாது.“

முத்து உற்று சாகித்தியனை பார்த்தாள்.

“உங்களுக்கு தெரியாது சாகித்தியன் எல்லாத்துக்குமே அவ..“ முத்து முடிப்பதற்குள்ளாகவே.

“உனக்கு தான் தெரியாது, இந்திரா முழுக்காரணம் கிடையாது. வேற ஆள் தான் முழு காரணம். அது…“

“எனக்கு நடந்த ஆக்ஸிடன்ட் உனக்கு எப்படி தெரியும்..“

“நான் சொல்றேன் முத்து..“

“அப்போ நீயும் அவனுங்கள்ல ஒருத்தனா.. நீயா வந்து என்னை காதலிக்கிறன்னு சொன்னப்பவே தெரியும் நீ அவங்கள்ல ஒருத்தன் தான்..“

“இல்லமா.. நீ உட்காரு..கத்தாத இது பொதுஇடம்..“

“இல்ல.. நீ தான்..“

அவள் கத்திக்கொண்டே எழுந்து ரெஸ்டாரண்டை விட்டு வெளியே போனாள் எல்லாரும் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். சாகித்தியனும் மெல்ல எழுந்து வெளியில் வந்த போது முத்து அங்கு இல்லை.

சாகித்தியன் சட்டை பையில் கிடந்த செல்போன் வைப்ரேஷன் ஆனது. எடுத்து டிஸ்பிலேவை பார்த்தான் ‘தனா‘.

அத்தியாயம் 29

ராஜ் வீட்டிற்குள் வந்து இந்திராவை பார்த்தான் அவள் உறங்கி கொண்டிருந்தாள். அவளை டிஸ்டப் செய்ய மனம் இல்லாமல் தன் அறைக்கு சென்றான். அவன் தலைக்கு பின்னால் வலியாக இருப்பது போல இருந்தது, பிளைட்டில் வந்த டயடுனஸ் என்று குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு மேசை டிராயரில் இருந்த மாத்திரையை எடுத்து போட்டுக்கொண்டான்.

மெத்தையில் கிடந்த செல்போன் உயிர்த்து சிணுங்கியது.

“என்ன வீட்டுக்கு வந்துட்டியா…“

“வந்துட்டேன்..இந்திராவுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே..“

“ஒன்னும் இல்ல நீ எதுவும் குழம்பாத.. பெங்களுர் போனியே டாக்டர் என்ன சொன்னாரு..“

“ஒன்னும் இல்ல சீக்கிரமே எல்லாம் சரிஆகிடும்னு சொன்னாரு..“

“சரி நான் அவர்கிட்ட பேசிக்கிறேன். நீ ரெஸ்ட் எடு..“ திலிப் போனை வைத்ததும் ராஜ் கட்டிலில் சாய்ந்தான்.

திலிப் விஸ்கி பாட்டிலில் இருந்த விஸ்கியை கிளாஸில் ஊற்றி ஐஸ்கட்டிகளை மிதக்கவிட்டு ஒரு ஸ்வீப் இழுத்தான். தன் மொபைலை எடுத்து யாருக்கோ கால் செய்தான்.

“சொல்லுங்க திலிப்..“

“ஹவ் ஆர் யூ மிஸ்டர் ஸ்ரீதர்..“

“யா..பைன் நீங்க வருவிங்கன்னு பார்த்தேன் ஆனா ராஜ் மட்டும் வந்திருந்தாரு எனக்கு சாக் ஆகிட்டு..“

“நான் தான் சார் அவன் எல்லாம் தெரிஞ்சிக்கட்டும்னு அனுப்புனேன்.“

“ஓ.கே. பட் அது கொஞ்சம் ரிஸ்க் தான். இன்னும் கொஞ்ச நாள் அவரு நம்மோட அப்சர்வேஷன்ல தான் இருக்கனும்.. அதோட நம்ம இந்திராவுக்கு டிரிட்மெண்ட் கொடுக்குறதா சொல்லி இருக்கோம் இந்திராவுக்காக வரதா நினைச்சி தான் வந்தாரு எப்படியோ மாஸ்டர் செக்கப் செஞ்சிக்கங்கன்னு அப்படி இப்படினு சாமாளிச்சிட்டன் ஃபேக் ரிப்போர்ட் இந்திராவோடது ஒன்னும் கொடுத்து அனுப்பிட்டன்“

“ரொம்ப தேங்க்ஸ் சார்...கண்டிப்பா நான் எதுக்காவும் என்னோட ப்ரண்ட இழக்கவே மாட்டேன் சார்.. அவனோட இல்லுசன் கொஞ்சம் அதிகம் ஆகியிருக்கே அத பத்தி..“

“விடுங்க திலிப் நம்ம ஒரு பறவைய உருவாக்கியிருக்கோம், அந்த பறவைகிட்ட இப்படி இப்படி நடந்ததுன்னும் நீ ஒரு பறவைன்னும் சொல்லிருக்கோம் அப்போ அந்த பறவை எல்லாத்தையும் இப்படி நடந்து இருக்கும்னு கற்பனை பண்ணும் போது அதுக்கு நிறைய கற்பனை பாத்திரங்கள் தோன்றும் தான்.“

“டாக்டர் அவன் ரொம்ப எக்ஸ்டாடுனரியா பண்றான் சஞ்சய் வந்ததாவும் இந்திரா பார்த்ததாவும் இவன் சுட்டதாவும் புதைச்சதாவும் எனக்கு போன் பண்ணி வரசொல்லி பெரிய கூத்தே கட்டிட்டான். நானும் அவனுக்கு ஏத்த மாதிரி நடிக்க வேண்டியதா போச்சு என்னோட ஹாஸ்பிட்டல் கம்பவுண்டர வச்சி நான் எப்படியோ மேனேஜ் பண்ணிட்டேன்.“

“திலிப் சஞ்சய் எப்பவோ இறந்துட்டான் ஆனா ராஜ் பொறுத்த வரைக்கும் நீ உயிர் கொடுத்து வச்சிருந்த. ஆனா இப்போ ராஜ் சஞ்சய தான் தான் கொன்னோம்னு நினைக்கிறாரு. இந்த மூளையில சுரக்குற ஏகப்பட்ட ஹார்மேன் நல்லதும் செய்யும் கெட்டதும் செய்யும் என்ன பொருத்தவரைக்கும் ராஜ்க்கு அது நன்மை செஞ்சிடுச்சி. அவரோட புதிர்கள அவரே ஓன் விடைய வச்சி சால்வ் பண்ணிக்கிறாரு. இன்னும் கொஞ்ச நாள்ல பழைய ராஜ நீங்க பார்க்கப்போறிங்க.“

“நான் உங்கள நம்பியிருக்கேன் டாக்டர். நீங்க எவ்வளவு உலக நாடுகள்ல மருத்துவம் பார்த்துருக்கிங்க ஒரு ஜீனியஸ் என்னோட ராஜ் மீண்டும் எனக்கு கிடைக்க முழு காரணம் நீங்க தான்“

“டோன்ட்வரி திலிப். அப்பறம் ஒரு இம்பார்ட்டன்ட் மேட்டர். நீங்க அந்த முத்து, அப்பறம் பிரஸ்ல வந்து விசாரிச்சதா சொன்ன அந்த பையன் இவங்கள ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க. ராஜினால் கண்டிப்பா அவங்க உயிருக்கு ஆபத்து வரும்.“

“டாக்டர்…“

“யெஸ் திலிப்... இப்போ இந்திரா ஆக்ஸிடண்ட் பண்ணுன உண்மை தெரிஞ்சது முத்துக்கு, ரிப்போர்டருக்கும். ரிப்போர்ட்டர் தன்னை விசாரிக்க வந்த பையன பத்தி ராஜ்கிட்ட சொல்லிருக்கான், அவன் யாருன்னு உங்களுக்கும் தெரியலை அப்போவிசாரிக்க வந்த பையனுக்கும் உண்மை தெரிஞ்சிடும்னு நினைப்பாரு ராஜ், சரியா..“

“நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் அந்த ரிப்போர்டர ராஜிக்கு அறிமுகபடுத்தியிருக்கவே கூடாது. அந்த சூழ்நிலையில ராஜ் தெரிஞ்சிக்க வேண்டியதா போச்சு. ராஜ் கிட்ட முத்துவ பத்தி சொன்னது கூட ஸ்டாங்க அவனுக்குள்ள எல்லாத்தையும் விதைக்கனும்னு தான் சொன்னேன். இப்போ எல்லாமே பிரச்சனையா வந்து நிற்குது.“

“நான் அப்பவே சொன்னேன் ரொம்ப அவருக்கு திணிக்க வேண்டாம்னு.“

“டாக்டர் இந்திரா லைப்ல நிறைய கஷ்ட பட்டவ. சொல்ல போனா ராஜிக்கு முன்னாடியே இந்திராவ எனக்கு தெரியும் எல்லாமே இந்திராவ விட்டு போனப்போ அவ கற்பு வரைக்கும், ராஜ் மட்டும் தான் எல்லாமா இருந்தான். இந்திரா இப்போ நார்மலா இருக்கவே ராஜ் மட்டும் தான் காரணம். நான் இந்திராவோட பேமிலி டாக்டர் மட்டும் இல்ல இந்திராவுக்கு கார்டியன் கூட,நான் கார்டியனா தான் என்னோட கடமைய செஞ்சேன். ராஜ் இந்திராக்கூட தான் இருக்கனும். ராஜ் இல்லனா இந்திரா என்ன ஆவான்னே சொல்ல முடியாது. நான் ராஜிக்காவும் இந்திராவுக்காகவும் எந்த லெவளுக்கு வேணும்னாலும் போவேன்.“

“எனக்கு தெரியாதா திலிப் இந்திரா உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு. அவங்க அப்பா இறந்த போது இந்திராவுக்கு எல்லாமாவும் நீங்க தான் இருந்திங்க. ராஜை இந்திரா கூட பழக வச்சதே நீங்க தான். நீங்க நினைச்சமாதிரியே எல்லாம் சரியா தான் போனுச்சி ராஜிக்கும் புது வாழ்க்கை கிடைச்சது இந்திராவுக்கும் புது ரிலேசன் சிப் கிடைச்சது. எல்லாமே அந்த சஞ்சய் ராஸ்கல் தான் கெடுத்துவிட்டான். இந்திராகிட்ட நல்லவனா நடிச்சி அவங்கள ஏமாத்தி அப்யூஸ் பண்ணி போதைக்கு அடிமையாக்கி அவங்க மனநலம் பாதிச்ச அளவுக்கு போயிட்டாங்க.“

“அதனால தான் அந்த சஞ்சய் நாய என் கையாலையே கொன்னேன். அவன் சாக வேண்டியவன் டாக்டர், சாக வேண்டியவன்..“

“டோன்ட் எமோஸ்னல் திலிப்.. நமக்கு இனிமே தான் நிறைய பிரச்சனைகள் இருக்கு எல்லாதையும் தாண்டி வரனும்..“

“யெஸ்..இனிமே தான் ஆரம்பம் கிளைமக்ஸ் எப்படி இருக்கும்னு அந்த கடவுள் தான் முடிவு பண்ணனும்.“

அத்தியாயம் 30

“சொல்லுங்க தனா..“

“முத்துவ பார்த்திங்களா..“

“இங்க தான் இருந்தாங்க ஆனா இப்போ இல்ல..“

“எங்க??“

“அவங்க தப்பா நினைச்சிட்டு இருக்காங்க தனக்கு நடந்த எல்லாத்துக்கும் காரணம் இந்திரான்னு.“

“நானும் பார்த்தேன் கார பார்த்ததும் முத்து முகம் மாறிடுச்சி. நான் ஒன்னு சொல்றேன் நடந்த எல்லாத்துக்கும் இந்திரா கூட காரணமா இருக்கலாம் இல்லையா“

“கண்டிப்பா இல்ல நான் நேர்ல பார்த்தவன் எல்லாத்துக்கும் காரணம்??“

“யாரு??“

“நான் சொல்றேன் நான் நிறைய உண்மைகள் கண்டுப்பிடிக்க வேண்டியது இருக்கு.“

“சாகித்தியன் நான் ஒன்னு கேட்கவா முத்துகூட வந்த அந்த நபர் அதான் அந்த ஆக்ஸிடண்டுல இறந்தாருன்னு சொன்னிங்களே அவரு யாருன்னு தெரியுமா“

“அது பெரிய ஆக்ஸிடன்ட் ஆனா எதுவுமே வெளிய வரல எல்லாத்துக்கும் பணம் தான் காரணம் இந்திரா செஞ்ச தப்பு அது தான்.“

“நீங்க அங்க இருந்திங்க தானே..“

“தனா அங்க இருந்த எல்லாருமே இந்திராவுக்கு தெரிஞ்சவங்க போலிஸ் டாக்டர் எல்லாரும். அந்த இறந்த ஆள் யாருன்னே தெரியல நான் பார்த்தது முத்துவ மட்டும் தான் நான் சவாரி முடிச்சி வந்தப்ப தான் அந்த ஆக்ஸிடண்ட் நடந்தது. நான் ரொம்ப கிட்ட பார்த்தேன் பைக் குறுக்க போனப்போ இந்திராவோட கார் பேலன்ஸ் தவறி முத்து வந்த பைக் மேல மோதிடுச்சி. நல்ல வேகத்துல மோதுனதால அந்த பைக்ல இருந்த ஆள் தூக்கி வேகமா அந்த கார் கண்ணாடிலயே மோதி கிடந்தான். நான் வேகமா போய் பார்த்தப்போ முத்து கொஞ்சம் தள்ளி ரொம்ப சொல்ல முடியாத கொடூர நிலையில கிடந்தாங்க நான் அவங்க கிட்ட போக அதுக்குள்ள அங்க போலிஸ் டாக்டர்ஸ் எல்லாம் வந்தாங்க என்ன அப்பறபடுத்துறதுலயே இருந்தாங்க எனக்கு வேற வழி இல்லாம கிளம்பிட்டேன். எனக்குள்ள முழுக்க இருந்தது முத்து மட்டும் தான் அந்த குழந்தை அந்த சாலையில அப்படியே..“

சொல்லும் போதே சாகித்தியன் தொண்டை குழி அடைத்தது.
சாகித்தியன் கண்கலங்கினான்.

“கவலைபடாதிங்க சாகித்தியன்.. முத்து உங்கள புரிஞ்சிப்பாங்க..“

“நானும் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன்.“

“ஆக்ஸிடன்ட் நடந்த அங்க எதும் சிசிடிவி கேமரா இருக்குமா சாகித்தியன்.“

“என்ன தனா இப்படி ஒரு விபத்து நடந்ததையே மறைச்சிட்டாங்க. ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சி அங்க கேமரா இருந்தா அத விட்டு வைக்கவா போறாங்க..“

“அவங்க ஏன் இத மறைக்கனும் நினைக்கிறாங்க??"

"மேபீ...இந்திரா மேல கேஸ் வரும்னு நினைச்சு இருப்பாங்க"

"ஓ..சரி சாகித்தியன் நான் கட் பண்றேன்.“

“தனா ஒரு நிமிஷம் நான் சொன்னேன் இல்லையா இந்திராவுக்கு எந்த அடியும் படல ஆனா இந்திராகூட இருந்தவருக்கு பயங்கர அடி பட்டு இருந்தது. மொத்தம் அங்க மூனு பேரு இல்ல நாலு பேரு..“
“வாட்…“

ராஜ் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். சோபாவில் கிடந்த இந்திரா கண்களை மூடி கிடந்தாள். திடீரென்று கண்களை திறந்தாள், அந்த நீல நிற பளிங்கு கண்கள் பளிச்சிட்டது. எழுந்து அமர்ந்து ராஜ் அறையை நோக்கி நடந்தாள். கதவை திறந்து உள்ளே சென்றாள். ராஜ் அசந்து உறங்கி கொண்டிருந்தான்.
மெல்லமாக அருகே சென்று அவனை உற்று பார்த்தாள். பழைய நினைவுகள் புரள, தனக்காக ராஜ் எத்தனை கஷ்ட பட்டான். எல்லாவற்றையும் இழந்து தான் தான் கதி என்று கிடந்தான், அவன் பேச்சை கேட்காமல் நான் செய்த சில காரியங்கள் இருவரின் வாழ்க்கையே திருப்பி போட்டு விட்டதே ராஜ் நான் தப்பு செஞ்சிட்டேன் என்ன மன்னிச்சிடு….என்ன மன்னிச்சிடு.. கண்கள் கலங்க இரண்டு கையால் முகத்தை துடைத்தாள். அவன் அருகிலேயே அமர்ந்தாள். அவன் போனை எடுத்து திலிப் நம்பரை தட்டினாள்.

“இந்திரா…“

“என்ன நடக்குது இங்க, என்ன நடக்குது எல்லாம் முடிஞ்சிட்டு எல்லாமே…“

“இல்ல இந்திரா நீ டென்ஷன் ஆகாத நான் கண்டிப்பா எல்லாத்தையும் சரி செய்வேன்..“

“இல்ல திலிப் நான் உயிரோட இருக்கவே கூடாது..நான் உயிரோட இருக்கவே கூடாது நான் நிறைய தப்பு செஞ்சிட்டேன்.“

“இல்ல…“

“நான் ஏன் சாகனும் எனக்கு ராஜ் வேணும்…என்னால அவன் இல்லாம இருக்க முடியாது…கொல்லனும்..எல்லாரையும் கொல்லனும்…"


Quote
Share: