Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

துருயேறிய இரும்புகள் இறுதி அத்தியாயங்கள்  

  RSS

Kiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 10 months ago
Posts: 22
18/09/2020 1:34 pm  

ஹாய் ப்ரண்ட்ஸ்😍😘🤗😘

சில health problems அதான் லேட்
ஒரு வழியா கதை முடிஞ்சது. ஒரு வாரம் தளத்துல இருக்கும் படிக்கிறவங்க படிச்சிடுங்க. அடுத்த கதை நாரிகை ரொம்ப விரைவில் அறிமுகம் கொடுக்குறேன்.

துருயேறிய இரும்புகள் ரொம்ப வித்தியாசமான கதை முழுக்க படிச்சா தான் புரியும் மறக்காம உங்க கமெண்ட் பதிவு பண்ணுங்க அது என்ன இன்னும் ஊக்குவிக்கும்.😍😍😘😘

சீக்கிரம் அடுத்த கதையோட வரேன்😍😍

நன்றி

அத்தியாயம் 41

மூன்று மாதங்கள் களேபரம் ஏதும் இன்றி கடந்துக்கொண்டிருந்தது.
தனா இந்த மூன்று மாதங்களில் ஈசனை பார்க்கவே கூடாது என்று முடிவு செய்து வைத்திருந்தாள், அதே போல ஈசனை பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. இந்திராவுடனும் அவள் அந்த நட்பை தொடர விரும்பவில்லை. இந்திரா எத்தனையோ முறை தனாவை கான்டக்ட் செய்தாள், அவள் அதிக வேலை, பாட்டிக்கு உடம்பு சரியில்லை, இங்க போறேன், அங்க போறேன் என்று இந்திராவை அவ்வாய்ட் பண்ணிக்கொண்டே இருந்தாள்.

அன்று இந்திரா காலையிலேயே போன் செய்தாள் தனாவிற்கு, "இன்னைக்கு கண்டிப்பா நீ என்ன பார்க்க வீட்டுக்கு வரனும் வரலனா அப்பறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது" வற்புறுத்தி வரவைத்தாள்.

தனாவும், இந்திராவிடம் நீண்ட நாட்களுக்கு பிறகு சிரித்து சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தாள், அதே நேரம் ஈசன் அவ்விடம் வந்தடைய அவன் முகம் பார்க்கவே தைரியம் இன்றியும், அவனை பார்த்தால் தன்நிலை மறப்பேனோ என்ற பயத்திலேயே அவனை பார்க்காமல் தலையை தொங்கப்போட்டு கொண்டு அமர்ந்திருந்தாள்.

ராஜ் தனாவை பார்த்து தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான்.
முத்து அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள் “தனா நான் உனக்கும் சேர்த்து சமைக்கிறேன் நீ சாப்பிட்டு தான் போகனும்..“ என்றாள் முத்து.

“இல்ல நான் ஆப் டே தான் லீவ் போட்டுருக்கேன் நான் போகனும்..“என்றாள். முத்து குக்கர் சத்தம் கேட்க கிட்சனை நோக்கி ஓடினாள்.

ராஜிக்கு ஏதோ போன் கால் வந்தது. ராஜ் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தபடியே “இந்திரா டேபிலட் போட்டியா..“என்றான்.

“இன்னும் இல்லப்பா..“ என்று சினுங்கினாள் இந்திரா.

“போ பஸ்ட் போய் டேபிலேட் போடு.“

இந்திரா தனாவை பார்த்து, “தனா பிளீஸ் சின்ன ஹெல்ப் அந்த ரூம்ல என்னோட டேபிலட் இருக்கு கொஞ்சம் எடுத்துட்டு வறியா..“

தனா சிரித்துக்கொண்டே எழுந்து சென்றாள். அங்கிருந்த டீப்பாய் மேலே இருந்த டேபிலட் டப்பாவை எடுத்து உற்று பார்த்துக்கொண்டே இருந்தாள். ஏதோ யோசித்தப்படியே சிறிது நேரம் நின்று விட்டு இந்திராவை ஒரு விதமாக பார்த்துவிட்டு அந்த மாத்திரை டப்பாவை கையில் கொடுத்துவிட்டு ஒரு பார்வை பார்த்தபடியே நக்கலாக சிரித்துவிட்டு அவளிடம் விடைபெற்று கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள். அங்கு ராஜ் நின்று கொண்டிருந்தான்.

“நான் கிளம்புறேன்“ என்றாள் அவனை பார்க்காமல்.

“நீங்க எப்போ கல்யாணம் பண்ணிக்க போறிங்க..“

தனா ராஜை பார்த்தாள்.

“சீக்கிரமே சொல்லுறேன்.“ தனா அவனை பிரியவே மனம் இல்லாமல் பிரிந்தாள். ராஜ் தனா போகும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
மறுநாள் ரெஸ்டாரண்டில் சமைத்துக்கொண்டிருந்த போது அவள் கையில் தீக்காயம் பட்டது. நேவிதன் தனாவை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றான் அது திலிப் ஹாஸ்பிட்டல்.

தனாவுக்கு திலிப் பஸ்ட் ஏய்டு செய்தான்.

“வேலை பார்க்கும் போது கவனமா இருக்கவேண்டியது தானே தனா மேடம்.“

“எவ்வளவு கவனமா இருந்தாலும் சில நேரங்கள்ல கைய மீறி போயிடுது டாக்டர்..“

“ஆமாம்..ஆமாம்..“

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே நர்ஸ் ஒருவள் வந்து திலிப்பை அழைத்தாள். “கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க தனா“ என்று சென்றான்.

நேவிதனும் யாருடனோ போன் பேசிக்கொண்டிருந்தான். தனா எழுந்து திலிப் டேபிளில் ஏதோ ஆராய்ந்து கொண்டிருந்தாள். திலிப் வர நேரம் ஆனதால் அங்கிருந்த நர்ஸிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். போகும் போது அங்கிருந்த இன்னொரு நர்ஸிடம் “ரொம்ப தேங்ஸ் அபி சிஸ்டர் உங்களால தான் நிறைய உண்மைகள் எனக்கு தெரிஞ்சது..“

“பரவாயில்லை சிஸ்டர் உங்க கதைய கேட்டப்போ எனக்கு ரொம்ப கஸ்டமா இருந்தது, உங்களுக்கு ஏதாவது செய்யனும் நினைச்சி தான் ஈசனுக்கு நடந்த எல்லாத்தையும் சொன்னேன்.“

“என் உயிரே போனாலும் உங்கள மறக்கமாட்டேன். உங்களுக்கு எந்த ஆபத்தும் வரம பார்த்துக்குவேன்.“

“நான் பார்த்துக்குறேன் தனா சிஸ்…“
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது நேவிதன் ஹாஸ்பிட்டல் வெளியில் நின்று கொண்டிருந்தான், வந்ததும் இருவரும் கிளம்பினார்கள். தனா பைக்கில் செல்லும் போது சாகித்தியன் இரண்டு நாட்களுக்கு முன் தனாவை சந்தித்தது நினைவில் வந்தது. தனா இதுவரை நடந்ததை எல்லாம் சொல்லி சாகித்தியனிடம் அழுதாள்.

சாகித்தியனுக்கு ஈசன் தான் ராஜ் என்று கேள்விபட்டபோது  நம்ப முடியாத உண்மையாக இருந்தது. சாகித்தியனும் தனாவை ஏமாற்ற மனம் இல்லாமல் அந்த ஆக்ஸிடண்டை செய்தது நேவிதன் தான் என்ற உண்மையை சாகித்தியன் சொன்ன போது தனா இரண்டாவது முறையாக உடைந்து போனாள். அந்த நியாபகம் இப்போது அவளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

அத்தியாயம் 42

நேவிதன் ரெஸ்டாரண்டில் இருந்தான். தனா இரண்டு நாட்களாக வேலைக்கு வரவே இல்லை என்ன காரணம் என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருந்தான். மதன் இரவு ரெஸ்டாரண்டை விட்டு சென்றவன் இன்னும் வரவில்லை அந்த கவலை வேறு அவனை பற்றிக்கொண்டது. இப்படி யோசனைகளில் மூழ்கி கொண்டிருக்கும் போதே அவனின் செல்போன் அதிர்ந்தது அவனும் அதிர்ந்து போனான்.
எதிர் முனையில் “சார் நாங்க சன் ஹாஸ்பிட்டல்ல இருந்து கால் பண்றோம் சார், மதன் யாரு சாரு..“
நேவிதன் பதற்றமாக கேட்டான்.

“என்னோட ப்ரண்டு தான்.“

“சார் அவருக்கு ஆக்ஸிடண்ட் ஆகிருக்கு எங்க ஹாஸ்பிட்டல்ல தான் அட்மிட் பண்ணிருக்கோம். நீங்க உடனே வறிங்களா“

அவ்வளவு தான் நேவிதன் தூள் தூளாக ஆனான். அடுத்த விநாடியே ஹாஸ்பிட்டலை வந்தடைந்தான்.
ரிசப்சனில் மதன் பெயரை கேட்டறிந்து ஐ.சி.யூவை நோக்கி ஓடினான். ஒரு நர்ஸ் அதே நேரம் வெளியில் வந்தது.

“நான் மதன் ப்ரண்டு மேடம் என்னோட ப்ரண்டு எப்படி இருக்கான்.“

“சார் நான் தான் அவரு பர்ஸ்ல இருக்க நம்பர வச்சி கால் பண்ணுனன். ரொம்ப கிரிட்டிக்கல் சூட்சிவேஷன் தான் சார் டாக்டர் வந்து சொல்லுவாங்க.“ என்று அங்கிருந்து சென்றாள்.

நேவிதன் என்ன செய்வது என்று அறியாமல் உறைந்து போனான், அங்கிருந்த கண்ணாடி வழியே உள்ளே பார்த்தான் மதன் சுயநினைவு அற்று கிடந்தான்.

கண்ணீர் பீறிக்கொண்டு வந்தது சத்தமாக கத்தினான். இரண்டு மணி நேரங்கள் கடந்தது. நேவிதன் அம்மா அவனை தேற்றிக்கொண்டு இருந்தார். மதன் அம்மா,அப்பாவும் அங்கு வந்து சேர்ந்தனர். மதன் அம்மா ஊரில் இருக்கும் கடவுளை எல்லாம் வேண்டி அழுதார்.

நீண்ட நேரம் நெருப்பை கடப்பது போல் இருந்தது நேவிதனுக்கு. அவனின் நினைவுகள் எல்லாம் மதனை சுற்றியே இருந்தது. பழைய நினைவுகள் எல்லாம் உள்ளுர ஓடிக்கொண்டிருந்தது
டாக்டர் ஐசியூவை விட்டு வெளியில் வந்தார் பதறி எழுந்து நேவிதன் தான் முதலில் ஓடினான் அவனின் நட்பு அவனை பைத்தியம் செய்துவிடும் போல அப்படி தான் இருந்தான் பித்துபிடித்தவன் போல.
அவர் என்ன சொல்வார் என்றே காத்திருக்கிறான்.

“மதன் இப்போ கோமல இருக்காரு. இப்போ எங்களால ஒன்னும் சொல்ல முடியாது அவரு இப்படியே கோமல இருக்கலாம், இல்ல சீக்கிரமே கண் முழிக்கலாம். அப்படி இல்லனா பிரைன் டெத் கூட ஆகலாம்“ நேவிதன் கண்கள் விரிந்தது கண்ணீர் ஊற்றாய் கொட்டியது. மதன் அம்மா அழுது பிரண்டாள்.

திலிப் ஆப்ரேஸன்தேட்டரில்  ஆறு வயது பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஆப்ரேஸன் முடிந்து வெளியில் வந்தான் அந்த குழந்தையின் அம்மா,அப்பாவிடம் குழந்தை நல்லா இருக்கா கவலைபடாதிங்க என்ற போது அவர்கள் கையை எடுத்து கும்பிட்டு அழுதனர். இருவரும் விலக பின்னால் நல்ல உயரம் அளந்த உடல் கம்பீரமாக ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர்.

“மிஸ்டர். திலிப்.“ என்றார் அந்த ஐவரில் ஒருவன்.

“எஸ். ஐ அம்..“

“யூவார் அண்டர் தி அரஸ்ட்..“

திலிப் பேய் அறைந்தது போல நின்றுக்கொண்டிருந்தான்.
தனா அப்படியே ஜன்னல் பக்கமாக திரிந்தக்கொண்டிருந்த இரண்டு பட்டாம்பூச்சிகளை விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பின்புறமாக வந்த பாட்டி அவளின் தலையை கோதிவிட்டாள்.

“இப்படியே எத்தனை நாள் அடைஞ்சி கிடப்ப, உன்ன நீ தான் தேத்திக்கனும் உன்னோட இழப்பு பெருசு இப்படியே இருந்தா நீயே இல்லாம போயிடவ சாப்பிடாம தூங்காம பைத்தியம்பிடிச்சவ போல.“

“எதுக்கு இந்த உடம்புல உயிர் பாட்டி.. நான் யாருக்காக வாழனும்.“

“என்னை திரும்ப நீ அனாதை ஆக்கப்போறியா..“

தனா பாட்டியை பார்த்தாள் அவள் கண்கள் கலங்கியது.
இந்திரா ஏதோ புஸ்தகத்தை பிரட்டிக்கொண்டிருந்தாள்.

முத்து, “அக்கா சாப்பிட வாங்க “ என்று டைனிங் ஹாலில் இருந்து குரல் கொடுத்தாள்.

இந்திரா புஸ்தகத்தை மூடிவிட்டு கட்டிலை விட்டு எழ முயன்றாள் அவளின் கால்கள் அசைவற்று கிடந்தது. அவளால் நகர்த்தவே முடியவில்லை கண்கள் இருண்டது சிறிது நேரத்தில் கைகளும் அசைவற்று போனது. எழ நினைத்தவள் அப்படியே கீழே சரிந்தாள். முத்து ஏதோ சத்தம் கேட்டு உள்ளே ஓடி வந்தாள். பேச்சு மூச்சற்று இந்திரா கீழே கிடந்தாள். பதறி அடித்து முத்து கத்தினாள், முத்து கத்தும் சத்தம் கேட்டு ராஜ் மாடியில் இருந்து ஓடி வந்தான். இந்திராவை பார்த்ததும் பதறி போனான். அவளை தூக்கி கட்டிலில் படுக்கப்போட்டான்.
திலிப்பிற்கு போன் செய்தான் அவன் போன் ரீச் ஆகவே இல்லை. இந்திராவை தூக்கிக்கொண்டு தன் காருக்கு ஓடினான் பக்கத்தில் இருந்த வேறு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச்சென்றான்.

நீண்ட நேரம் டாக்டர்கள் இந்திராவை பரிசோதித்துக்கொண்டிருந்தனர். ராஜ், முத்து இருவருமே திக்குமுக்காடி போய் நின்றனர்.

டாக்டர் ராஜை தனியாக அழைத்து சென்றார்.

“டாக்டர் இந்திரா எப்படி இருக்கா..“

“மிஸ்டர் ராஜ், அவங்களுக்கு கை, கால் எல்லாமே செயல் இழந்து போயிருக்கு அவங்க உடம்புல ஏதோ பாய்சன் மாதிரி கலந்து இருக்கு“

“வாட்..“ என்று அதிர்ச்சி ஆனான் ராஜ்.
“ஆமாம் ராஜ், அந்த பாய்சன் இன்னும் கொஞ்ச நாள் அவங்க எடுத்துகிட்டு இருந்திருந்தா அவங்க இறந்தக்கூட போயிருப்பாங்க.“

ராஜ் விழிபிதுங்கி போனான்.

“டாக்டர் இத சரி செய்ய முடியாத..“

“கவலைபடாதிங்க டிரை பண்ணுவோம் சரியாக சான்ஸ் இருக்கு.“

ராஜ் கண்கலங்கினான்.

டாக்டர் நகர முற்பட்டவர். திடீரென்று திரும்பி ராஜை பார்த்தார்.

“உங்களுக்கு இன்னொரு முக்கியமான விஷயம். அவங்க கன்சிவா இருக்காங்க. உங்க குழந்தை ரொம்ப ஆரோக்கியமா இருக்கு.“

ராஜ் முகம் வெளிரிபோனது போல இருந்தது.

தனா மூன்று நாட்களுக்கு பிறகு ரெஸ்டாரண்டிற்கு சென்றாள். அங்கு நேவிதனும் இல்லை மதனும் இல்லை. வேலை பார்த்துக்கொண்டிருந்த நபர் தனாவிடம் வந்து நடந்ததை சொல்லி வருத்தப்பட்டான். தனா ஹாஸ்பிட்டல் அட்ரஸை கேட்டுக்கொண்டு மதனை பார்க்கச்சென்றாள்.
மதன் இருக்கும் அறையை விசாரித்துக்கொண்டு அறைக்கு சென்றாள். நேவிதன் முழுக்க மதன் அருகிலேயே இருந்தான். மதனை உற்று பார்த்தப்படியே அமர்ந்திருந்தான்.

தனா பின்னால் இருந்து தோள் மேல் கைவைத்தாள். நேவிதன் மெல்ல திரும்பினான். தனா நின்று கொண்டிருந்தாள் அவள் கைகளை பிடித்துக்கொண்டு அழுதான். தனா அவனை ஆறுதல் படுத்தினாள்.

“நேவிதன் எதுவுமே தெரிஞ்சி நடக்குறது இல்ல..“

“இவன்கிட்ட குடிச்சிட்டு வண்டி ஓட்டகூடாதுன்னு சொல்லிருக்கேன் ஆனா திரும்ப அந்த தப்ப தான் செஞ்சான். இப்போ இப்படி கிடக்குறான்.“

“கவலைபடாதிங்க நேவிதன் சீக்கிரம் சரிஆகிடும்..“

“எனக்கு யாரு இருக்கா தனா என்னோட உயிரே இவன் தான் எப்படி கிடக்குறான் பாரு. யாருமே இல்ல என்னோட ஆறுதலுக்கு கூட“
“நான் இருக்கேன்.“ தனா அப்படி சொன்ன போது அவன் பாரம் எல்லாம் குறைந்தது போல இருந்தது. நேவிதன் தனாவை கட்டிபிடித்து அழுதான் தனா அசையாமல் நின்றாள். அதே நேரம் யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டது. தனா சட்டென்று விலகினாள்.

அது ராஜ் தான் “சாரி நான் டிஸ்டப் பண்ணிட்டேனா..“

“இல்ல.. வாங்க“ என்றாள் தனா.
“நீங்க ரூம் உள்ள வரத பார்த்து தான் வந்தேன். என்ன பிரச்சனை..“
நேவிதன் நடந்ததை கூறினான்.

“மை காட்..கவலைபடாதிங்க எல்லாம் சாரியாகிடும்“

“ம்ம்…நானும் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன்.“

தனா ராஜை பார்த்தாள் “நீங்க எப்படி இங்க??“

ராஜ் இந்திராவிற்கு நடந்ததை கூறினான்.

“என்ன சொல்றிங்க..“

“ஆமாம் இன்னைக்கு தான் டிஸ்ஜார்ஜ் பண்ணுனாங்க..ஆனா படுத்த படுக்கையில தான் இருக்கா. திங்ஸ் எடுக்க வந்தேன் எங்க ரூம் பக்கத்துல தான் நீங்க உள்ள வரத பார்த்தேன் அதனால தான் வந்தேன்.“

“நான் வந்து இந்திராவ பார்க்குறேன்.“

“இப்போ நான் வீட்டுக்கு தான் போறேன். வாங்களேன் நானே அழைச்சிட்ட போறேன்.“

“இல்ல அது“ தனா தயங்கினாள்.
நேவிதன் “போயிட்டு வாங்க தனா இந்திராவும் உங்க குளோஸ் ப்ரண்டு தானே.“

“உங்களுக்கு...“

“நான் பார்த்துக்குறேன்.“

தனா, ராஜிடன் கிளம்பினாள் இருவரும் காருக்கு வந்தனர், காரை ஸ்டார்ட் செய்தான்.

அத்தியாயம் 43

தனாவிற்குள் ஏதோ பதற்றம்.
“என்ன நீங்க ஏமாத்திட்டிங்க தனா..“ ராஜ் இப்படி திடீரென்று சொன்னதும் தனாவிற்கு தூக்கிவாரிப்போட்டது.

“ஐ மீன் நீங்க கல்யாணத்துக்கு வரவே இல்லையே.“

“அது...“ என்று இழுத்தாள்.

“இட்ஸ்..ஓ.கே.“ என்றான் ராஜ்.
ராஜ் மொபைல் ரிங் ஆனது.

“எஸ்க் கியூஸ் மீ..“ என்று காரை ஓரமாக நிறுத்தி எடுத்து பேசினான். தனா ராஜை இல்லை ஈசனை பார்த்தாள் அவனுக்குள் எங்காவது தன்னுடைய ஈசன் இருக்கிறானா என்று தேடினாள் அவன் சிரிப்பு அவன் கோபம் அவன் பேச்சு எல்லாமே ஈசனை உயிர்கொள்ள செய்கிறது அவன் முகம் மட்டும் ஈசனை உயிர்நீக்க செய்கிறதே என்று அவளின் எண்ணமாக ஓடியது அசைக்காமல் அவனையே பார்த்தான். ராஜ் போனை கட் செய்து விட்டு அவள் முன்னால் தன் கைகளை அசைத்தான் “என்ன தனா அப்படி பார்க்குறிங்க..எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கா..“

“இல்ல நான் ஏதோ ஒரு யோசனை.“

“கொஞ்சம் போலிஸ் ஸ்டேசன் போயிட்டு போகலாமா.“

“போலிஸ் ஸ்டேசனுக்கா..“

“ஆமாம்..“

“ஏன்..“

“திலிப்ப போலிஸ் அரஸ்ட் பண்ணிருக்காங்க.“

“ஏன்??“

“ஏதோ இல்லீகள் ஆப்ரேஸன் பண்ணிருக்கான் அந்த எவிடன்ஸ் எல்லாம் யாரோ சிபிஐக்கு அனுப்பிருக்காங்க. அதனால ஹாஸ்பிட்டல் சீல் பண்ணி அரஸ்ட் பண்ணிருக்காங்க.“

தனாவுக்குள் உள்ளுர சந்தோஷம் ஆனால் அதை வெளிக்காட்டாமல்.

“கடவுளே..“

இருவரும் போலிஸ் ஸ்டேசன் வந்து சேர்ந்தனர்.

ராஜ் அங்கிருந்த ஆபிசர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். தனா அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் அனுமதிக்கேட்டு திலிப் அருகே சென்றாள்.

“எதுவுமே தானா நடக்குறது இல்ல ஏதோ ஒரு காரணத்தால தான் நடக்குது..கவலை படாதிங்க எல்லாமே சரியாகிடும்.“

திலிப் தனாவை ஒருமாதிரி பார்த்தான். தனா மெல்லமாக புன்னகைத்தாள்.

ராஜ் அங்கு வந்தான் “என்ன தனா தீவிர டிஸ்கசன்..“

“ஒன்னும் இல்ல நீங்க பேசிட்டு வாங்க நான் வெளியில வெயிட் பண்றேன்.“
தனா அவ்விடம் விட்டு சென்றாள்.

“என்னடா இப்படி செஞ்சிருக்க யாருக்கு ஆப்ரேசன் செஞ்சன்னு சொல்லவேண்டியது தானே தண்டணையாவது குறையும்.“

“நான் யாருக்கும் செய்யல என் மேல பொய் வழக்கு போட்டுருக்காங்க.“

“ரொம்ப சீரியஸ்டா சிபிஐ கஸ்டடி கேட்டுருக்காங்க.“

“நான் எங்க போனாலும் நிருபிப்பன்.“
ராஜ் அங்கிருந்து வெளியில் வந்தான்.

“என்னாச்சு..“

“எல்லாம் முடிஞ்சிடும் தனா நம்ப போகலாம..“

அடுத்த சிறிது நேரங்களில் எல்லாம் இந்திரா வீட்டிற்கு வந்தனர்.
இந்திரா அறைக்கு சென்றாள் தனா இந்திரா படுத்த படுக்கையாக இருந்தாள்.

தனா இந்திரா அருகே சென்றாள் “இந்திரா எதுவுமே தானா நடக்குறது இல்ல எதோ ஒரு காரணத்தால தான் இப்படி நடந்திருக்கு. கவலைபடாத எல்லாம் சரியாகிடும்..“

இந்திரா கண்கலங்கினாள்.

“உடம்ப பார்த்துக்கோ..“ என்று அங்கிருந்து வந்தாள் முத்து எதிர்ப்பட்டாள்.

“முத்து நீ ரொம்ப நல்லவ சாகித்தியனும் அப்படி தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க.“

“ம்ம்..வா தனா காபி சாப்பிட்டு போகலாம்.“

“நான் வந்த வேலையெல்லாம் முடிஞ்சிட்டு நான் கிளம்புறேன் முத்து.“

தனா கிளம்பி வாசலுக்கு வந்தாள் எதிரே ஈசன் நின்று கொண்டிருந்தான்.

“என்ன தனா அதுக்குள்ள கிளம்பிட்டிங்க??“

“கொஞ்சம் வேலை இருக்கு அதான்.“

“ஏதோ பேசனும்னு நினைக்கிறேன் ஆனா அப்படி பேசுனா சரியா இருக்குமான்னு தெரியல..“

“நானும் தான்..“

இருவரிடமும் நீண்ட அமைதி.
“நான் கிளம்புறேன்.“

விலகி சென்றாள் தனா. “தன நந்தினி..“

தனா வேகமாக திரும்பினாள் ஈசனை கண் அசைக்காமல் பார்த்தாள் கண்கள் கலங்கியது.

“ஏன் அழறிங்க??“

“என்ன யாரும் முழு பேர் சொல்லி கூப்பிட மாட்டாங்க ஒருத்தர தவிர“

“யாரு??“

“அது ரொம்ப வேண்டியவரு இப்போ அவரு இல்ல..“

“டேக் கேர்..“ என்று விருட்டென்று ராஜ் உள்ளே சென்றான்.

தனா கலங்கிய கண்களோடு தன் வீட்டை வந்தடைந்தாள்.
பாட்டி பெட்டியெல்லாம் ரெடி செய்து வைத்திருந்தாள்.

இருவரும் கிளம்பி வந்து திருச்சி பஸ்சை பிடித்தனர்.

தனா தன் கைபையில் இருந்த ஒரு கடிதத்தை எடுத்தாள். அது ஈசன் சென்னை வரும் முன் தனாவிற்கு கொடுத்த கடிதம்.

அன்பு தனாவிற்கு
உன்கிட்ட பேச எனக்கு கஷ்டமா இருக்கு அதனால தான் இப்படி லெட்டர் எழுதி கொடுத்துட்டு போயிருக்கேன்.

நான் நேத்து உன்கிட்ட அப்படி நடந்திருக்ககூடாது. உனக்கு வாழ்க்கையில அப்படி ஒன்னு நடந்து நீ பாதிச்சிருக்கன்னு தெரிஞ்சும் நான் அப்படி உன்கிட்ட நடந்திருக்க கூடாது என்ன மன்னிச்சிடு. நீ என்னோட உயிர், உன்ன விட்டு நான் பிரியவே மாட்டேன். எனக்கு எப்படியும் இந்த வேலை கிடைச்சிடும் சென்னையில புது வாழ்க்கைய தொடங்குவோம். காத்திரு கட்டாயம் வருவேன்.
தனா அந்த கடிதத்தை தன் நெஞ்சுக்குள் புதைத்து வெடித்து அழுதாள்.

ராஜ் தன் அறைக்குள் வந்து அப்படியே அமர்ந்திருந்தான்.
அவன் கைப்பேசி ஒலித்தது.
எடுத்து காதோரம் ஒற்றி “ஹலோ…“

“சார் ராஜ் தானே..“

“ஆமாம்..“

“நான் ஆவடி இன்ஸ்பெக்டர் பேசுறேன்.“

“சொல்லுங்க..“

“திலிப் சூசைட் பண்ணிக்கிட்டாரு..“
ராஜ் கண்களை அகல விரித்தான்
“நீங்க உடனே வாங்க“

“ம்..“

ராஜ் எழுந்து போய் வாஸ்பேசனில் தண்ணீரை திறந்து முகத்தில் அடித்துக்கொண்டான். அருகே இருந்த டவளை எடுத்து முகத்தை துடைத்தான், டவளை மெல்ல இறக்கி தன் முகத்தை கண்ணாடியில் திருப்பி திருப்பி பார்த்தான்.

ராஜ் தன் அறையைவிட்டு வெளியே வந்து இந்திரா அறைக்கு சென்றான் இந்திரா கண்கள் மூடி இருந்தாள். கைகளை உயர்த்திக்கொண்டு சென்று இந்திராவின் வயிற்றில் கைவைத்து தடவிக்கொடுத்தான் இந்திரா கண்விழித்தாள்.
ராஜ் இந்திராவை பார்த்தான் சிரித்தான் அவளுக்கு எதுவுமே புரியாமல் விழித்தாள்.

தனா திருச்சி வந்தடைந்தாள்.

பஸ்டாண்ட் முழுக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
தனா அதன் அருகே சென்று உற்று பார்த்து சிரித்தாள்.

“யாருமா அது..“ என்றாள் பாட்டி.

“இது தான் ஈசனோட மாமா பாட்டி.“
சத்தம் போட்டு சிரித்தாள் தன் அருகே யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்கவில்லை. பஸ்டாண்ட் முழுக்க இருந்தவர்கள் தனாவை ஒரு மாதிரி பார்த்தனர், அவள் அதை கண்டுக்கொள்ளவே இல்லை இன்னும் சத்தமாக சிரித்தாள். அவள் வலிகள் எல்லாம் உடைய, அவள் சோகம் களைய, நிம்மதி சிரிப்பு அது. அவள் சிந்திய கண்ணீர் எல்லாம் இப்போது சிரிப்பாக மாரிய ஆனந்த சிரிப்பு அது, வயிரை பிடித்துக்கொண்டு சிரித்தாள் அவள் சிரிப்பதை பார்த்த பாட்டியும் சிரித்தாள்.





Share: