Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

ஆழ்கடலடி என் இதயம் !!!  

Page 2 / 2
  RSS

Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 136
24/09/2020 4:57 pm  

@lavanyadhayu aha arumai.. Waiting for Anupama voda master plan and action 😉 😉 


ReplyQuote
Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 10 months ago
Posts: 81
30/09/2020 6:48 pm  

இதயம் - 8

"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னிலே பொது வான் வழக்கமாம்" - மகாகவி பாரதியார்

 

ஒவ்வொரு மணித்துளியையும் நெட்டித்தள்ளியபடி தன்னவனின் அழைப்புக்காகக் காத்திருந்தாள் அனுபமா.

தன் தாயிடம் திருமணத்திற்கான சம்மதத்தை அவன் தெரிவித்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகி இருந்தது. உடனே தனக்கு போன் செய்வான் என அனு இங்கு காத்திருக்க அவனோ தன் அறை தரையின் டைல்ஸைக் கால்களால் தேய்த்துக் கரைத்துக் கொண்டிருந்தான்.

வெகுநேர சிந்தனைக்கு பிறகு ஒரு முடிவெடுத்தவன் அனுவுக்கு அழைப்பு விடுத்தான். முதல் முறை முழுமையாக போன் ஒலித்தும் அனு எடுக்கவில்லை.

'என்னைக் காக்க வச்சிங்கள்ல? இப்போ நீங்க காத்திருங்க' என மனதுக்குள் எண்ணியபடி போன் திரையைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். மறுபடியும் அவனிடமிருந்து அழைப்பு வரும் என காத்திருந்தாள். 'பேசாம போனை எடுத்து இருக்கலாமோ?' என எண்ணிய நொடி அவனிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது.

உடனே போனை எடுத்தவள்,"ஹலோ, அர்ஜுன் நா உங்க சிஸ்டர் கிட்ட பேசிட்டேன். இந்த மேரேஜ் வேணாம்னு சொல்லிட்டேன்." என்றாள் படப்படவென.

மறுபுறம் ஒரு நொடி அமைதிக்காத்தவன், "அனுபமா நா சொல்றத கேட்டு நீ கோபப்படக் கூடாது. நீ இந்த மேரேஜ்க்கு ஓகே சொல்லிடு ப்ளீஸ்" என்றான் தாழ்மையானக் குரலில்.

மனதுக்குள் ஒரு 'ஹுர்ரே' சொல்லிக்கொண்டாள் அனு. குரலில் வலிய கோபத்தை வரவைத்துக் கொண்டு,"என்ன அர்ஜுன் விளையாடுறீங்களா? நா என்ன உங்களுக்கு பொம்மையா? இல்ல அடிமையா? உங்களுக்கு பிடிச்சா நா ஓகே சொல்லணும், வேணாம்னா நோ சொல்லனுமா?" என்றாள்.

"ஸாரி அனுபமா. என்னை நீயாவது புரிஞ்சிக்கோ ப்ளீஸ்.
எனக்கு மேரேஜ் பண்ணிக்க விருப்பமே இல்ல, அம்மாவுக்காகத் தான் ஓகேனு சொன்னேன், உன்கிட்ட மேரேஜ் நிறுத்த ஹெல்ப் கேட்டேன். பட் இப்போ சிச்சுவேஷன் வேற மாதிரி இருக்கு. அம்மா நீ மேரேஜ் வேணாம்னு சொன்னதும் மறுபடியும் ஒடம்பு முடியாம ஆகிட்டாங்க."

"அம்மாவுக்கு என்ன ஆச்சு அர்ஜுன்? எதுவும் பிராப்ளம் இல்லையே?"என்றாள் பதறிய குரலில்.

"பெருசா ஒண்ணும் பிராப்ளம் இல்ல. பீபி அதிகமாகிடிச்சி. பட் அவங்க மனச ரொம்ப கஷ்டப்படுத்திக்கிறாங்க. இப்படியே போனா ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு. என்னால அவங்களுக்கு ஏதாவது ஆச்சின்னா, என்னாலயே என்னை மன்னிக்க முடியாது அனுபமா. அவங்க உன்னை தான் மருமகளா நினைக்கிறாங்க. அதனால நம்ம மேரேஜ் கண்டிப்பா நடந்தே ஆகணும்" என்றான்.

"உங்களுக்கு மட்டும் தான் அம்மா இருக்காங்களா அர்ஜுன்? நா என்ன பூமியில இருந்து மொளச்சேனா? எங்க வீட்டுல பெரிய பிராப்ளம் ஆகும்னு தெரிஞ்சும் உங்களுக்காக இந்த மேரேஜை நிறுத்த ஒத்துக்கிட்டேன். இப்போ மறுபடியும் எப்படி ஓகேனு சொல்வேன்? இப்படி மாத்தி மாத்தி பேசினா, என்னை பைத்தியம்னு நினைக்க மாட்டாங்களா?" என்றாள்.

"அனுபமா ப்ளீஸ்... கோபப்படாத. நா சொல்றத கவனி. உனக்கு மேரேஜே வேணாம்னு சொல்லிட்டு இருந்ததா சொன்ன, வேற வழி இல்லாம தான இந்த மேரேஜ்க்கு ஒத்துக்கிட்ட? நானும் அதே சிச்சுவேஷன்ல தான் இருக்கேன். எப்படியும் வேற யாரையாவது நம்ம வீட்டுல மேரேஜ் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ணிட்டே தான் இருப்பாங்க, அப்புறம் நம்ம லைஃப் கஷ்டமாகிடும், அதுக்கு பதில் நம்ம ரெண்டுபேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்னா, அட்ஜஸ்ட் பண்ணி லைப் லீட் பண்ணலாம். வீட்டுலயும் பிரச்சனை இல்லாம இருக்கும். நம்ம ரெண்டு பேருக்கும் பெனிபிட் இருக்கு. யோசிச்சிப் பாருமா" என்றான்.

'உங்களுக்கு பெனிஃபிட் இருக்கு. எனக்கு இல்ல' என மனதுக்குள் எண்ணியபடி," மேரேஜ் பண்ணிக்கிட்டா போதுமா? அப்புறம் நம்ம வீட்டுல சும்மா இருப்பாங்களா? அவங்க ஆசைகள் அதிகம் அர்ஜுன். எவ்ளோ நாளைக்கு நம்ம நடிச்சிட்டே இருக்க முடியும்? எனக்கென்னவோ ஒன்னும் சரியாப் படல" சலிப்பாக சொன்னாள் அனு.

"இப்போதைக்கு இருக்குற பிரச்சனையை சமாளிப்போம் அனுபமா. மத்தத அப்புறம் பாத்துக்கலாம். உனக்கு நா ஒரு பிராமிஸ் தரேன். உன் லைஃபை நீ உன் இஷ்டப்படி வாழலாம். நா உன்னோட பிரைவசிய டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். டூடேஸ் டைம் எடுத்துக்கோ. நல்லா யோசிச்சி உன் முடிவை சொல்லு. உனக்கு இஷ்டம் இல்லனா, நா வேற ஏதாவது யோசிச்சிக்கிறேன். பை" என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.

அனு கசப்பான புன்னகையை சிந்தினாள். 'எவ்ளோ நடிக்க வேண்டி இருக்கு? நா அவரை ஏமாத்துறேனா? தப்பு பண்றேனோ?' என எண்ணியவள் பின்," 'எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்' சோ என் காதலுக்காக நா சொல்ற பொய்யெல்லாம் பொய் கணக்குல வராது" என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

அருந்ததிக்கு போன் போட்டு, "நாட்டுக்கொரு நல்ல சேதி நாத்தனாரே!"எனப் பாடினாள்.

"என்னடி? அதான் உன் ஆள் வாயாலேயே மேரேஜ் கண்டிப்பா நடக்கும்னு பிராமிஸ் வாங்கிட்டேயே! இன்னும் என்ன நல்ல சேதி?" என்றாள் அரு.

"அதுமட்டுமில்ல, இந்த மேரேஜ்க்கு நா ஓகே சொல்லணும்னு உன் அண்ணன் என்கிட்ட கெஞ்சிக்கேட்டாரு தெரியுமா?"என்றாள் சிரிப்புடன்.

"அடியேய் கில்லாடிடி நீ. வேணாம்னு சொன்னவனை கெஞ்சி கேக்க வச்சிருக்க பாரு. சூப்பர்" என்றாள்.

"இது ஒன்னும் பெரிய சாதனை இல்ல. இன்னும் உன் அண்ணாவை கல்யாணம் பண்ணி, அவரை என் பின்னாடி சுத்த வைக்கணும். இனிமே தான் மெயின் வொர்க்கே இருக்கு" என்றாள்.

"நீ செய்வடி. என்ன ஹெல்ப் வேணுமோ கேளு.சண்டைப் போட நானும், மயக்கம் போட அம்மாவும் இருக்கோம்" என்றாள் அருந்ததி.

அனுவுக்கு சிரிப்பு வந்தது. "ஹேய், அவரை இப்படியே ஏமாத்த முடியும்னு நெனைக்கிரியா? இப்போ ஏதோ அம்மா ஹெல்த் பத்தி யோசிச்சி எமோஷனலா இருக்காரு. கொஞ்சம் தெளிவா ஆனார்னா, நம்ம செத்தோம்" என்றாள்.

அவளுக்கு அர்ஜுன் பற்றி நன்றாகத் தெரியும். அவன் அன்பிற்கு அடங்கிப்போவான். ஆனால் துரோகம் செய்வதை எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டான். கல்லூரிக்காலத்தில் அவனின் இந்த குணநலன்களை அவள் பெரிதும் ரசித்திருக்கிறாள்.

தான் அவனிடம் பொய் சொல்லும் நிலை வரும் என அவள் எண்ணியதில்லை. அவனிடம் எல்லா உண்மையையும் சொல்லும் நல்ல நாளுக்காக காத்திருக்கிறாள்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuoteLavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 10 months ago
Posts: 81
03/10/2020 6:47 pm  

இதயம் - 9

"நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்;
அமிழ்ந்து பேரிருளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!" - மகாகவி பாரதியார்

"சீக்கிரம் கெளம்புங்கமா, அவங்க எல்லாரும் வந்துடுவாங்க. ஹாலில் இருந்து தன் பெற்றோரின் அறைவாசலை நோக்கிக்கத்திக் கொண்டிருந்தாள் அருந்ததி. "ஹேய்! நீ எதுக்கு இப்போ அலறிக்கிட்டு இருக்க? கல்யாணம் உனக்கா? உன் அண்ணனுக்கா?" கிண்டலாகக் கேட்டான் வருண்.

"கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகிடுச்சில்ல? இப்போ நா பேசுறது எல்லாம் அலருற மாதிரி தான் இருக்கும்" முறைத்தபடி சொன்னாள் அரு.

"பேபி! ஏன் டென்ஷன் ஆகுறடா? நம்ம மேரேஜ்க்கு ஷாப்பிங் போனப்போ கூட நீ ஒரு மணிநேரம் லேட்டா தான வந்த? இப்போ இவ்ளோ பரபரப்பு எதுக்குனு தான் கேட்டேன்" என்றான் வருண்.

"இது என் அண்ணனுக்கும் என் பெஸ்ட்ட்ட்... பிரெண்டுக்கும் நடக்குற மேரேஜ். எனக்கு இது ரொம்ப முக்கியம். அண்ணா ஒரு ஆர்வமும் இல்லாம இருக்கான். நா தான் எல்லாத்தயும் பார்த்துக்கணும். இந்த மேரேஜ் நடக்குற வரைக்கும் என்னால ரிலாக்ஸ்டா இருக்க முடியாதுங்க" என்றாள்.

"இது உன் அண்ணன் மேரேஜ் மட்டும் இல்ல, என் தங்கச்சி மேரேஜும் தான். உனக்கு எல்லா சப்போர்ட்டும் தர நா இருக்கேன், நீ டென்ஷன் ஆகாதடா" என்றான் வருண் கனிவுடன்.

வருண் அருந்ததியின் தாய் அகல்யாவின் அண்ணன் ஆதிகேசவனின் மகன். நெருங்கிய உறவினர் என்பதால் சிறுவயதிலிருந்தே இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும். வருண் அருந்ததியைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டான். அருந்ததி வருணின் மீது காதல் இருந்தும் அவன் காதலை ஏற்க தயங்கிய போது அனுபமா தான் அவள் தெளிவான முடிவு எடுக்க உதவினாள். அருந்ததிக்காக வருணிடமும் பேசினாள்.

அவளது தெளிவான அணுகுமுறை, மரியாதையான பேச்சு இதெல்லாம் வருணுக்குப் பிடித்தது. பின் அருந்ததி மூலம் அவளின் குணம் அறிந்து, அவளை தன் சகோதரியாகவே ஏற்றுக்கொண்டான்.

இருவரும் பெற்றோருக்கு ஒற்றை பிள்ளைகள் என்பது அவர்களின் பாசத்திற்கு வலுசேர்த்தது.

தனது அன்பான தங்கைக்கும் மரியாதைக்குரிய மைத்துனனுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தில் அவனும் ஆர்வமாக இருந்தான்.

அர்ஜுனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் திருமண உடைகள், நகைகள் எடுக்க கடைக்கு சென்றனர். அனுபமா நிச்சயதார்த்தம் வேண்டாம், திருமணமும் மிக எளிமையாக நடந்தாள் போதும் என்று சொல்லிவிட்டாள்.

"கல்யாணம் எவ்ளோ கிரேண்டா நடக்குதுன்றது முக்கியம் இல்ல, நம்ம லைஃப் பார்ட்னர் யார்? அவங்களோட நாம வாழப் போற லைஃப் எப்படி இருக்கப் போகுதுங்கறது தான் முக்கியம். என் கல்யாணம் என் விருப்பப்படி, விரும்பியவரோட நடக்கப்போகுது. இதை விட வேற என்ன வேணும்? கல்யாணத்துக்கு பண்ற செலவுல யாராவது ரெண்டு குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுங்க, தேவை இருக்குறவங்களுக்கு உதவிப்பண்ணுங்க, எங்க வாழ்க்கைக் கண்டிப்பா நல்லா இருக்கும்" என்று சொல்லிவிட்டாள் அருந்ததியிடம்.

இதனை அறிந்த அர்ஜுனின் தந்தை அருணாச்சலம் மிகுந்த ஆனந்தப்பட்டார். நல்ல பெண்ணை தான் மனைவியும் மகளும் தேர்வு செய்து இருப்பதாக எண்ணினார்.

அனுவிற்காக எளிமையாக கோவிலில் திருமணம், ஆதவற்றோர் இல்லங்களில் அன்றைய தினம் உணவுக்கு ஏற்பாடு, அனுவுக்கு தெரிந்த சில பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வது, பிறகு தொழில் நண்பர்கள் தனது அலுவலக ஊழியர்களுக்கு விமர்சையாக வரவேற்பு என முடிவு செய்தார் அவர்.

இதோ திருமணத்திற்கு தேவையான உடைகள் மற்றும் நகைகள் வாங்க கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். இறுக்கமான முகத்துடனே உடன் வந்தான் அர்ஜுன். கடையில் இவர்கள் முன்பு சென்று காத்திருக்க, ஆட்டோவில் வந்திறங்கியது அனுபமா குடும்பம்.

ஓடிவந்து அணைத்துக்கொண்ட அருந்ததியிடமும் அவள் குடும்பத்தினரிடமும் பேசினர். அர்ஜுன் கூட அனுவின் பெற்றோரிடம் வரவேற்பாக நலம் விசாரித்தான். பின் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டான். 

தன்னவனைக் காண ஆவலுடன் வந்த அனுபமா, அவனின் பிடித்தமில்லாமையைக் காட்டும் எரிச்சல் முகத்தை பார்த்ததும் சோர்ந்துப் போனாள். 'இவனை எப்படி கட்டி மேய்க்கப்போறேனோ? ' என மனதுக்குள் புலம்பினாள். பின் அவனைக் கண்டுக் கொள்ளாததுப் போல் முக பாவத்துடன் உடைகளைத் தேர்வுசெய்யத் தொடங்கினாள்.

சிரித்த முகத்துடன் திருமணத்திற்கு தேவையானப் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தவளை சந்தேகமாகப் பார்த்தான் அர்ஜுன். அவனை ரகசியமாக கவனித்துக் கொண்டிருந்தவள் சுதாரித்தாள்.

'மச்சான யோசிக்கவிட்டா டேஞ்சராச்சே!' என எண்ணியவள், "அம்மா , எங்க டிபார்ட்மெண்ட் எச்.ஓ. டிக்கு ஒரு மெசேஜ் கன்வே பண்ண மறந்துட்டேன், நீங்க பார்த்துட்டு இருங்க நா போன் பண்ணிட்டு வந்துடறேன்" என சொல்லிவிட்டு போனை எடுத்துக்கொண்டு கடைவாசலுக்கு வந்து, அர்ஜுனை அழைத்தாள்.

யாருக்கு வந்த விருந்தோ? என குஷன் சேரில் ராஜதோரணையில் அமர்ந்துக்கொண்டு , அங்கு நடப்பதைப் பார்த்துக்கொண்டு இருந்தவன், இவள் கடைவாசல் நோக்கி போனதை கவனித்தான். திடீரென அவள் அழைத்ததும் குழம்பியபடி அழைப்பை ஏற்றான். அடுத்த நொடி அனுவின் அதிரடித் தொடங்கியது.

"அர்ஜுன், என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? இங்க எல்லாம் உங்க இஷ்டம் தானா? நீங்க பாட்டுக்கு வேடிக்கைப் பார்த்துட்டு உக்கார்ந்திருக்கீங்க. என்னோட பேரண்ட்ஸ் வந்து இருக்காங்க. மரியாதைக்கு கூட பக்கத்துல வந்து பேசாம, ஒய்யாரமா உக்கார்ந்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்றாள் கோபமாக.

"நீங்க வந்ததும் பேசினேனே, அது போதாதா? இந்த மேரேஜ்லயே எனக்கு இஷ்டம் இல்ல, அப்புறம் எப்டி ஷாப்பிங்ல இண்ட்ரெஸ்ட் இருக்கும்?" என்றான் பல்லைக் கடித்தபடி.

அனுவிற்கு கோபம் வந்தது. "சும்மா சும்மா இஷ்டம் இல்லனு சொல்லிட்டே இருக்காதீங்க. உங்களுக்கு மட்டும் தான் இஷ்டம் இல்லையா? எனக்கும் தான் இல்ல. ஆனா நா என் பேரண்ட்ஸ்க்காக ஆக்ட் பண்ணலையா? இங்க பாருங்க அர்ஜுன், உங்களுக்காக தான் நா இந்த மேரேஜ்க்கு மறுபடியும் ஓகே சொல்லியிருக்கேன். எனக்கு என் குடும்ப மரியாதை ரொம்ப முக்கியம். வரும்போது சம்பிராதாயத்துக்கு 'வாங்க, நல்லா இருக்கீங்களா?'னுக் கேட்டா போதுமா? கல்யாண ஷாப்பிங்ல இன்வால்வ் ஆக வேணாமா? நீங்க எதுக்கு ஷாப்பிங்க்கு வந்தீங்க? ஏதாவது வேலை இருக்குனு சொல்லி கட் பண்ணி இருக்கலாம்ல? இப்போ என் அம்மா நீங்க ஏன் ஒதுங்கி உக்கார்ந்துட்டு இருக்கீங்கனு கேக்குறாங்க" என்றாள் கடுப்பாக.

"நானும் அப்படி சொல்லிப்பார்த்தேன். அரு தான் என்னை மிரட்டிக் கூட்டிட்டு வந்துட்டா" என்றான். இப்போது அவன் குரலில் கோபம் இல்லை, இயலாமை தான் இருந்தது.

"போதும் அர்ஜுன், வீண் கதை வேணாம். இப்போ என்ன பண்ணப்போறீங்க? "என்றாள் கறாராக.

"நீ உள்ளே வா. நா பார்த்துக்குறேன்" என்றான்.

மெல்ல தனக்குள் சிரித்துக் கொண்டவள் கடைக்குள் வந்தாள். அங்கு அர்ஜுன் தேவகியின் அருகில் நின்றுக்கொண்டு முகூர்த்த சேலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு இருந்தான்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 136
06/10/2020 6:41 pm  

Hi Lavanya...Anu sama podu podara Arjun kita.. But nejama evvalavu kastama erukum namaku pudichavanga kita act panrathu.. Feeling sorry for her.. Romba interesting a eruku but pls konjam little big episode kudunga


ReplyQuote
Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 10 months ago
Posts: 81
07/10/2020 8:17 am  

@vaniprabakaran Thank u sissy... From Next episode sure ah big episodes poduren. 

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuote
Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 10 months ago
Posts: 81
11/10/2020 5:31 pm  

இதயம் - 10

"அறிவு கொண்ட மனிதவுயிர்களை

அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;

நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்களாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!"

- மகாகவி பாரதியார்

 

சிரித்த முகத்துடன் மருமகனுடன் சேர்ந்து சேலை எடுத்துக்கொண்டு இருந்த தேவகி ரசனைப் பார்வையுடன் அருகில் வந்த மகளை முறைத்தாள்.

"மாப்பிள்ளை எவ்ளோ பெரிய பிசினஸ் மேன்? ஆனா எந்த பந்தாவும் இல்லாம 'நா சேலை செலக்ட் பண்றேன் ஆண்ட்டி' னு வந்து இருக்காரு பாரு. நீ என்னவோ அந்த காலேஜே உன் பேர்ல தான் இருக்குற மாதிரி பாதில ஓடுற! ஒழுங்கா எல்லாம் செலக்ட் பண்ணு" என்றார் ரகசியக் குரலில்.

'உங்க மாப்பிள்ளை லட்சணம் தெரியாம சப்போர்ட் பண்றிங்களே மம்மி' என மனதுக்குள் எண்ணியபடி திருமணத்திற்கான உடைகளைத் தேர்வுசெய்தாள் அனு.

கல்யாண ஷாப்பிங் முடிந்ததும், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினர். அனுபமாவிற்கு ஒரு மலையையேப் புரட்டியது போல அலுப்பாக இருந்தது.

'ஹப்பா... மனசு முழுக்க ஆசைய வச்சிக்கிட்டு ஆசையே இல்லாத மாதிரி நடிக்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு? இப்பவே இப்டினா, மேரேஜ் முடிஞ்சதும் எப்டி சமாளிக்கப் போறேனோ?' என தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தாள்.

அவள் அம்மாவோ ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார். "எல்லாத்துக்கும் காலம் நேரம் கூடிவரனும்னு சொல்வாங்க, அது சரியா தான் இருக்கு. போன மாசம் கல்யாணமே வேணாம்னு ஒளரிக்கிட்டு இருந்த, இப்போ அடுத்த மாசத்திலேயே கல்யாண தேதி முடிவாகி இருக்கு பாரு. கடவுள் என் பக்கத்துல தான் இருக்காரு" என்றார்.

'உண்மை தான்மா. எட்டு வருஷமாக் காத்துட்டு இருந்தேன். இப்போ என் காதலனோட கல்யாணம் முடிவாகி இருக்கு, அதுவும் காதலர் தினத்துக்கு அடுத்த நாள்' என மௌன மொழியில் தாய்க்கு பதில் சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு தன் திருமண அழைப்பிதழை வருடினாள் அனுபமா.

திருமணத்திற்கு தன்னை தயார் செய்துக்கொள்வது, நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் அளிப்பது என அருந்ததியுடன் சுற்றிக்கொண்டு இருந்தாள் அனு. வேகமாக ஓடிய நாட்களும் திருமணத்திற்கு முந்தைய நாளில் வந்து நின்றது.

எ.அர்ஜுன் எம்.பி.ஏ வெட்ஸ் ஆர்.அனுபமா எம்.எஸ்.சி, எம்.பில் என பூக்களால் எழுதப்பட்டிருந்தப் பெயர்ப்பலகையைப் பார்த்தபடி காரில் இருந்து திருமண மண்டப வாசலில் இறங்கினாள் அனு.

'அஜ்ஜு செல்லம், நா உன்னைத் தேடி வந்துட்டேன்டா, இனி எப்பவும் நீ என்னைப் பிரிய நா உன்னை அலவ் பண்ணவே மாட்டேன்' என மனதுக்குள் உறுதியேற்றபடி கேமராவுக்கு தன் திருமண நிச்சயதார்த்த அலங்காரத்தை பதிவுசெய்ய அனுமதி தந்துக்கொண்டு இருந்தாள்.

அவர்களின் திருமணம் நடக்க இருக்கும் கோவிலுக்கு மிக அருகில் இருந்த அந்த சிறிய மண்டபத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் விடியற்காலையில் எழுந்துக் கிளம்பி கோவிலுக்கு செல்ல சரியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.

இளம்பச்சை நிறத்தில் பார்டர் வைத்த சந்தன நிற சேலையில் அனுபமாவும் சந்தன நிற குர்தாவில் அர்ஜுனும் அழகாக நின்றிருக்க, அவர்களிடம் போட்டியிடுவது போல் இளஞ்சிவப்பு நிற சேலையில் அருவும், அதே நிற குர்தாவில் வருணும் அவன் மகனும் இருந்தனர்.

பெரியவர்களை வணங்கிய மணமக்களிடம் உறவில் மூத்தவர் ஒருவர்,"உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்துல சம்மதமா?" என கேட்டார்.

"ம்க்கும்... நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டுக் கேக்குற கேள்வியப் பாரு. இப்போ நாங்க வேணாம்னு சொன்னா கல்யாணத்தை நிறுத்திடுவாரா என்ன?" என மெல்லியக் குரலில் அருவிடம் கேட்டாள் அனு.

"சும்மா இருடி. இது ஒரு சம்பிரதாயம். கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி தான் கேப்பாங்க" என்று அரு சொல்லிக்கொண்டு இருக்க, "நீ வேற, உன் அண்ணங்காரர் ஒரு மாதிரியான ஆளு. டக்குனு சம்மதம் இல்லனு சொல்லிட்டா, நா என்ன பண்ணுவேன்?" என அனு புலம்ப , அதே நேரம் அர்ஜுனிடம், "மாப்பிள்ளை தம்பி உனக்கு சம்மதமா ? " என உரக்கக் கேட்டார் அந்த பெரியவர்.

அனுவை நேர்பார்வைப் பார்த்தபடி,"சம்மதம்" என்றான் அர்ஜுன்.

அவன் பார்வையும் வார்த்தையும் தந்த இராசயன மாற்றத்தை அனுபவித்தபடி இருந்தவள், "உனக்கு சம்மதமா மா?" என்ற கேள்விக்கு கண்ணில் காதலுடன் அர்ஜுனைப் பார்த்துக்கொண்டே ,"முழு சம்மதம்" என்றாள்.

அருந்ததி மோதிரங்கள் கொண்ட பெட்டியை நீட்ட, அர்ஜுன் அனுபமாவின் கைபிடித்து மோதிரம் அணிவித்தான். தனக்கு உரியவனாக அவனின் முதல் தொடுகை சிலிர்ப்பை ஏற்படுத்த, தன் பூவிரலால் அவன் கரம்பற்றி மோதிரம் அணிவித்தாள் அனு.

"அண்ணா இன்னிக்கு நீங்க ரெண்டுப் பேரும் ஒண்ணா செலிபிரேட் பண்ற பர்ஸ்ட் வேலன்டைன்ஸ் டே, அதுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரிங் போட்டுக்கிட்டு செலிபிரேட் பண்றீங்க. லக்கி கப்புள், வாழ்த்துக்கள்" என்றாள் அரு.

செல்லமாக அவள் தலையில் தட்டினான் அர்ஜுன்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuoteLavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 10 months ago
Posts: 81
22/10/2020 7:30 pm  

இதயம் - 11

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!"

அனுபமாவின் அருகில் வந்த அருந்ததி, "அனு, அண்ணா பழையபடி சீக்கிரமே மாறிடுவான்னு தோணுதுடி"என்றாள்.

அவளை அனுதாபமாகப் பார்த்தாள் அனு. 'அடியேய் உன் அண்ணா செமையா ஆக்ட் பண்றான். இது புரியாத மக்கா இருக்கியேடி' என மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.

அன்று திருமணத்திற்கு சம்மதம் சொல்ல இரண்டு நாள் யோசிக்க நேரம் தந்தவன், மறுநாளே மீண்டும் அழைத்தான், "அனுபமா, யோசிச்சியா?" என்ற கேள்வியோடு.

"நேத்து தான அர்ஜுன் கேட்டிங்க! இன்னும் டூ டேஸ் ஆகலயே"

"என்னால வெய்ட் பண்ண முடியலமா, உன் முடிவு என்னனு தெரிஞ்சா தான், நா நெக்ஸ்ட் யோசிக்க முடியும். அதான்"
என்றான்.

"நீங்க சொன்னதை யோசிச்சேன் அர்ஜுன். நீங்க சொல்றதும் சரி தான் . எங்க வீட்டுல அரு கிளப்பிவிட்டதால கல்யாணம் பண்ணியே ஆகணும்னு முடிவா இருக்காங்க. உங்கள வேணாம்னு சொன்னா, இமிடியேட்டா வேற மாப்பிள்ளையைப் பாப்பாங்க. அதோட எனக்கும் உங்க அம்மா மேல அக்கறை இருக்கு. உங்களுக்கும் இப்போ என் உதவி தேவப்படுது. அதனால இப்போதைக்கு நம்ம கல்யாணம் தான் நமக்கு கடவுள் தந்து இருக்குற ஒரே சாய்ஸ்னு தோணுது."

"எஸ் . இப்போதைக்கு நாம மேரேஜ் பண்ணிப்போம், அப்புறம் நா சொன்ன மாதிரி, உன் பிரைவசியை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். கொஞ்ச நாளைக்கு நாம ரெண்டு பேரும் இந்த மேரேஜ்க்கு முழு மனசா ஓகே சொல்ற மாதிரியே வீட்டுல கிரியேட் பண்ணிடுவோம். இப்போ போய் ரெண்டு பேர் வீட்டுலயும் மேரேஜ் வொர்க்க ஸ்டார்ட் பண்ண சொல்லிடுறேன்" என்றான்.

அதன்படி அவனே அவன் தாயிடம் இருவர் சம்மதத்தையும் சொல்லிவிட்டான். அனுவை அவர்கள் வீட்டில் அனைவருக்கும் தெரியும் என்பதால், தொழில் தொடர்பாக வெளிநாடு சென்றிருந்த அர்ஜுனின் தந்தை வந்தவுடன் பேசி, அனு வீட்டிற்கு சென்று சம்மந்த பேச்சு முடித்து அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம், அதற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் என முடிவு செய்து இப்போது 'விடிந்தால் திருமணம்' எனும் நிலையில் இருக்கிறது.

"தன்னோட அம்மாவை நம்ப வைக்க இவன் சந்தோசமான மாப்பிள்ளையா நடிக்கிறான், ஆனா நா சந்தோஷத்தை வெளிக்காட்டிக்க கூடாதுனு சாதாரணமா இருக்குற மாதிரி இவன் முன்னாடி நடிக்கிறேன். கடவுளே எப்படியாவது இந்த மேரேஜ நடத்திடுப்பா" என வேண்டிக் கொண்டாள் அனு.

பிப்ரவரி 15, 2019
வெள்ளிக்கிழமையும் அழகாக விடிந்தது.

அனுபமா தன் முகத்தை மீண்டும் மீண்டும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருந்தாள். மணமகள் தோற்றத்தில் அவளைப் பார்க்கும்போது ஏனோ சிரிப்பாக இருந்தது. 'மேரேஜ் பண்ணிக்கறதுல எனக்கு ஈடுபாடு இல்ல' என்று போன மாதம் வரை சொல்லிக் கொண்டிருந்தது நீ தானா? என்று அவள் மனசாட்சி நக்கலடித்தது.

'போன மாசம் வரைக்கும் என் அர்ஜுன் தான் மாப்பிள்ளையா வருவார்னு தெரியாது. அதான் அப்படி சொன்னேன், இப்போ மேடம் லெவலே வேற தெரியும்ல? சோ நீ ஓடிபோய்டு' என அதனை விரட்டிவிட்டாள் அனு.

அதற்குள் அவளை அழைத்து செல்ல அருந்ததி வந்துவிட்டாள். "ஹே அண்ணி ! அழகா இருக்கடி, என் அண்ணா மயங்கப்போறான்" என்றாள்.

"அடியே! வெறுப்பேத்தாம வாடி, உன் அண்ணன் காதுல இது கேட்டுத் தொலச்சிடிச்சிடப் போகுது" என்றபடி அருவை இழுத்துக்கொண்டு தனது அறையிலிருந்து வெளியே கிளம்பினாள்.

"ஹேய், நா தான்டி உன்ன கூட்டிட்டுப் போகணும், இருடி!" என்று அனுவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள் அரு.

வெளியில் வந்த அனு, அங்கு தன் நண்பர்களுடன் நடந்து வந்த அர்ஜுனைக் கண்டு கண்சிமிட்ட மறந்தாள்.

மணமகன் கோலத்தில் அவனின் கம்பீரம் இன்னும் கூடியிருந்தது. திருமண அலங்காரத்தின் ஒரு பகுதியாக அவன் கன்னத்தில் வைக்கப்பட்டிருந்த சிறு கருப்புப்பொட்டு கூட அவன் அழகை எக்கச்சக்கமாகக் கூட்டிக்காட்டியது. அவனது பார்வை இவள் பக்கம் திரும்பியதும், முகத்தை இயல்பாக வைத்தபடி நின்றாள்.

அர்ஜுனின் பார்வை ஓரிரு நொடிகள் அவள் மீது படிந்து நகர்ந்தது. அதுவே அவளை உற்சாகமாக்க போதுமானதாக இருந்தது.

அனைவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றனர். அவர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த மணவறையில் அமர்ந்தபோது அனு ஏதோ சொர்க்கத்தில் இருப்பதாக உணர்ந்தாள். அனைவரிடமும் ஆசீர்வாதம் பெறப்பட்ட மங்கல்யத்தை ஐயர் அர்ஜுனிடம் நீட்ட, அவன் அதனை வாங்கி அனுபமாவின் கழுத்தில் அணிவித்தான். தன்னை மீறி கண்களில் துளிர்த்த கண்ணீரை கண்களுக்குள்ளேயே அடக்கினாள் அனு.

குங்குமமிட அனுவை அணைத்தபடி வந்த அவனின் கரம் தனக்குள் ஏற்படுத்திய சிலிர்ப்பை அவனுக்கு தெரியாமல் எப்படி மறைப்பது என அவளுக்கு தெரியவில்லை. தன்னை மறந்து அர்ஜுனை ஏறிட்டுப்பார்த்தாள். உலகின் அத்தனை உணர்வுகளையும் ஏந்தி இருந்த அவளின் முகத்தைக் கண்டவன், தன்பக்கம் இருந்த அவளின் இடதுக்கரம் பற்றி அழுத்தினான்.

அனுவிற்கு இது ஆனந்த அதிர்ச்சி. அவளின் பதற்றம் விலகி தெளிவு வந்தது போல இருந்தது. சிரித்த முகத்துடன் அவன் கரம்பற்றி மணவறையை சுற்றிவந்தாள்.

அருந்ததி ஓடிவந்து தன் தோழியை அணைத்துக் கொண்டாள். அகல்யாவும் தேவகியும் ஆனந்தக் கண்ணீரில் குளித்துக்கொண்டு இருந்தனர். பெரியவர்களின் ஆசிபெற்று, கடவுள் தரிசனம் முடித்துவிட்டு அர்ஜுன் வீடு நோக்கிப் பயணப்பட்டாள் அனுபமா.

ஏதோ சாதித்த உணர்வு ஏற்பட்டது அவளுக்கு. 'சீக்கிரம் அர்ஜுனிடம் உண்மையை சொல்லிவிட வேண்டும், இனியும் கல்யாணத்தில் விருப்பம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டியதில்லை' என முடிவெடுத்தாள்.

அர்ஜுனின் வீட்டுக்குள் இரண்டாவது முறையாக வருகிறாள் அனு. முதல்முறை வந்த போது இருந்த தயக்கம் இப்போது இல்லை. முழுக்க முழுக்க ஆனந்தமும் உரிமை உணர்வுமே இருந்தது. ஆரத்தியெடுத்து அன்புடன் வீட்டுக்குள் அழைத்து சென்றார் அகல்யா. பூஜையறையில் விளக்கு ஏற்றி கடவுளுக்கு நன்றி சொன்னாள் அனு.

பால்,பழம் சாப்பிட்டுவிட்டு அனுவின் வீட்டுக்கு சென்றனர். மாலையில் அர்ஜுன் வீட்டுக்குத் திரும்பி வந்தனர். ஒரே மகளை திருமணம் செய்து தரும் பெற்றோரின் வலியை தம் கண்ணீரால் வெளிப்படுத்தினர் அனுவின் பெற்றோர். ஆனால் அனு ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை. மாறாக பெற்றோருக்கு தான் ஆறுதல் சொன்னாள்.

அன்று இரவு எளிமையான அலங்காரத்துடன் இருந்த அனுவை ஒருமுறை அணைத்துவிட்டு ,"அனுமா, என் பையன பத்தி நா உனக்கு சொல்ல வேண்டியது இல்ல, எனக்கு உன்மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு.அதனால அவனை நா உன்கிட்ட ஒப்படைக்கிறேன். இந்த வீட்டுக்கு நீ தான் இனி ராணி, இந்த குடும்பம் உன் பொறுப்பு. எதை பத்தியும் கவலைப்படாம உன் வாழ்க்கய நீ தொடங்கு"என்றார் அகல்யா. அருகில் இருந்த அரு,"மா..... நா உங்க பொண்ணு, இதுவரைக்கும் என்கிட்ட இப்படி எப்பவாவது 'நீ தான் இந்த வீட்டு ராணி' னு சொல்லி இருப்பீங்களா? உங்க மருமகளைக் கண்டதும் பட்டுனு உங்க பட்டத்தைக் குடுத்துட்டீங்களே!" என்றாள்.

"நீ உன் வீட்டுல ராணியா இருந்துக்கோ, என் மருமக கூட போட்டிபோடாத" என்றார் அகல்யா. இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு,"நீங்க தான் அம்மா எப்பவும் இந்த வீட்டு ராணி, அரு இளவரசி. எனக்கு எந்த பட்டமும் அதிகாரமும் வேணாம். இந்த வீட்டு மருமகன்ற பட்டமே போதும்"என்றாள் அனு.

பெருமிதமாக அவளைப் பார்த்து சிரித்துவிட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டார் அகல்யா.

பின் அவர் ஆசீர்வதித்து அனுப்ப, அருவின் பின்னால் ஆனந்தமும் ஆர்வமுமாக மெல்ல மெல்ல அடி வைத்து அர்ஜுன் அறைக்கு செல்லும் மாடிப்படியில் ஏறினாள் அனு.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuote
Page 2 / 2
Share: