Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

வேலைக்குச்செல்லும் ...
 
Notifications
Clear all

வேலைக்குச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு  

  RSS

இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 2 years ago
Posts: 398
05/11/2019 12:21 pm  

வணக்கம் தோழமைகளே!!!

சட்டம் எல்லோருக்கும் சமம்.

தற்போதைய நிலையில் எங்கும் சட்டம் எதிலும் சட்டம்.

அப்படிபட்ட சட்டத்தை பற்றி நமக்கு எடுத்துரைக்க வருகிறார் வழக்கறிஞர் திருமதி சரண்யா வெங்கட். 

படித்து அனைவரும் பயன் பெருங்கள்.

நம் பெண்களின் பாதுகாப்பை பற்றி பேச வேண்டும் என்று ஆர்வமாக முன்வந்த சரண்யா அவர்களுக்கு நன்றி.

This topic was modified 8 months ago by இந்திரா செல்வம்

அன்புடன்
இந்திரா செல்வம்

Quote
Vidya Priyadarsini
(@vidya)
Estimable Member Registered
Joined: 2 years ago
Posts: 153
05/11/2019 3:35 pm  

Waiting saranya mam....thanks.....it will be useful for everyone here....

ReplyQuote

Bhagya Lakshmi
(@bhagya)
Eminent Member Writer
Joined: 7 months ago
Posts: 40
02/01/2020 5:21 pm  

Nice post. In case if case given by victim girl is prolonging do lawyers handle the case directly

ReplyQuote
Bhagya Lakshmi
(@bhagya)
Eminent Member Writer
Joined: 7 months ago
Posts: 40
02/01/2020 5:22 pm  

Nice post. In case if case given by victim girl is prolonging do lawyers handle the case directly 

ReplyQuote

யாழ் மொழி
(@saranya-venkatesh)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 119
07/07/2020 7:06 pm  

தொழிலாளர் இழப்பீடு சட்டம் (the workmens compensation act ):

பிரிவு 1(section 1): இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடியது ஆகும்,  குறிப்பிட்ட சில வகை தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது தகுதி இழப்பிற்கு இழப்பீடு பெறுவதற்கு இச்சட்டம் வகை செய்கிறது.

  பிரிவு 2:

     சட்டம் பொருந்தக்கூடிய தொழில்களும் தொழிலாளர்களும்:

    இச்சட்டம் பொருந்தக்கூடிய தொழில்களையும் தொழிலாளர்களின் பிரிவு 2(dd)  வரையறுக்கிறது.

    பிரிவு 2(dd)ன் படி  தொழிலாளி என்றால்

1. ரயில்வே நிர்வாக அலுவலகங்களில் நிரந்தரமாக பணியமர்த்தப்படாத ரயில்வே தொழிலாளி,

2. a. கப்பல் மாலுமி அல்லது பிற கப்பல் பணியாளர்கள்;

    b. விமான தலைவன் அல்லது விமானி அல்லது பிற விமான பணியாளர்கள்;

    c.  ஓட்டுநர் உதவியாளர் மெக்கானிக் கிளீனர் அல்லது மோட்டார் வாகனம் தொடர்புடைய பிற வேலைகளை செய்பவர்கள்;

   d.  நிறுவனத்தால் வெளிநாட்டில் வேலை செய்வதற்காக வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள்;  அத்துடன் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் விமானம் அல்லது மோட்டார் வாகனத்தில்  வெளியே பணி அமர்த்தப்பட்டவர்கள்; மேலும் காயமடைந்த ஒரு தொழிலாளி இறந்துவிட்டால் தொழிலாளியை சார்ந்து இருப்பவரையும் தொழிலாளி என்ற பதம் குறிக்கும் என்று பிரிவு 2(i) (dd) இன் உட்கூறு (iii) கூறுகின்றது.

   இவை தவிர (ii)வது அட்டவணையில் 70க்கு மேற்பட்ட வகையான தொழில்களில் மற்றும் அவற்றின் உப தொழில்களிலும்  வேலை பார்ப்பவர்கள் அனைவரும் தொழிலாளர்களே என பட்டியலிடப்பட்டுள்ளது அவற்றில் சில:

 தொழிற்சாலை சட்டங்கள்  வரையறுக்கும் உற்பத்தி நடைமுறை நடைபெறும் தொழிற்சாலை வளாகத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள்,  உற்பத்தி நடைமுறை தொடர்புடைய பிற வேலைகளை  அத் தொழிற்சாலை வளாகம் அல்லது வெளியில் வேலை செய்பவர்கள்;

  2. முதலாளியின் வணிகம் அல்லது வியாபாரம் தொடர்பான வெடி பொருட்களை உற்பத்தி செய்யும் அல்லது கையாளும் வேலைக்கு  அமர்த்தப்பட்டவர்கள்;

 3. சுரங்க வேலைகளில் அமர்த்தப்பட்டவர்கள்;

4.  கட்டிடங்கள், அணைக்கட்டுகள், பாலங்கள், கால்வாய்கள், சாலை அமைத்தல்,  பராமரித்தல், பழுதுபார்த்தல் அல்லது இடித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள்;

 5.   இணைப்பு படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்;

  6. சர்க்கஸில் பணியமர்த்தப்பட்டவர்கள்;

  7.  தரைமட்டத்திலிருந்து 3.66  உயரம் அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் உள்ள விளம்பரப் பலகையில் படம் வரையும் ஓவியராக பணியமர்த்தப்பட்டவர்;

  8.  கோவில் விமானங்களில் வேலை பார்ப்பதற்காக சிற்பிகளாக பணியமர்த்தப்பட்டவர்கள்;

  9.  உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள் கழிவு அகற்றும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்;

 10.  உயரமான மரங்களில் ஏறுவதற்கு  பணி அமர்த்தப்பட்டவர்கள்;

   11.  கரும்பு பிழியும் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்;

  12.  வெடி வைத்து வெடிக்கும் வேலை தொடர்பான பணியில் ஈடுபடுபவர்கள்;

  13.  அதில் பயிரிடுதல் அல்லது கால்நடைகளை வளர்த்தல் மற்றும் பராமரித்தல் அல்லது காடு வளர்ப்பு நடவடிக்கைகள் அல்லது மீன்பிடித்தலில் பணியமர்த்தப்பட்டவர்கள்;

  14.  திறந்த கிணறு அல்லது வெட்டு கிணறு,  ஆழ்துளை  - வெட்டு கிணறு, கிணறு நீர் வடிகட்டும் தளம் மற்றும் இது தொடர்பான வேலைகளை செய்தல்,  துளையிடுதல் அல்லது ஆழப்படுத்துதலில் ஈடுபடுபவர்கள்;  

   இவற்றில் 7 முதல் 11 வரை உள்ள தொழில்களில் பணிபுரிபவர்கள் தமிழ்நாடு மாநில அரசால் II  அட்டவணையில் சேர்க்கப்பட்டவர்கள்.

தொழிலாளர் இழப்பீடு  சட்டத்தின் கீழ் ஒருவர் இழப்பீடு பெற வேண்டுமெனில் அத்தொழிலாளி  IIவது  அட்டவணையில் வரிசைப்படுத்தப்பட்ட தொழில் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றினுள் வருபவராக கட்டாயம் இருக்க வேண்டும்,   இரண்டாவது அட்டவணையில் இல்லாத தொழில்களில் பணியமர்த்தப்பட்டவர்கள் இச்சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியாது,  பிரிவு 2ன் கீழ் தொழிலாளி என்ற பதம் இவர்களுக்கு பொருந்தாது.

   மீதம் உள்ள சட்டபிரிவுகளை நாளை காணலாம்...

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்

ReplyQuote
யாழ் மொழி
(@saranya-venkatesh)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 119
08/07/2020 7:15 pm  

தொழிலாளர் இழப்பீடு சட்டம்.

பொருள் விளக்கங்கள்:

    சார்ந்திருப்பவர்கள்(dependant):

பிரிவு 2(1):

   i). இறந்தவரின் விதவை மனைவி, 18 வயது பூர்த்தியடையாத  மகன் அல்லது மகள், தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள் அல்லது விதவைத் தாயார்; 

  ii).  தொழிலாளி இறக்கும்போது அவரது வருமானத்தை முழுமையாக சார்ந்து இருக்கும் 18 வயது பூர்த்தியடையாத உடல் அல்லது மன வலிமை குன்றிய மகன் அல்லது மகள்;

   iii).  தொழிலாளி இருக்கும்போது அவரது வருமானத்தை முழுமையாக அல்லது பகுதி அளவு சார்ந்து இருக்கும்

    a.மனைவியை இழந்தவர்

     b. விதவைத் தாயார் தவிர்த்து இறந்தவரின் பெற்றோர்

     c.  இளவர் ஆக இருக்கும் சகோதரர் அல்லது மணமாகாத சகோதரி அல்லது இளவராக  இருக்கும் விதவை சகோதரி; 

   d. விதவை மருமகள்; 

   e.முன்னதாக இறந்து விட்ட மகனின் இளவர் குழந்தை; 

  f.  முன்னதாக இறந்து விட்ட மகனின் இலவர் குழந்தைக்குப் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லாதிருந்தால் அக்குழந்தை; 

    g. தொழிலாளியின் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லை எனில் அவரது தந்தை வழி தாத்தா பாட்டி;

   பிரிவு 2(i) (e):

    முதலாளி:

     i. கூட்டு உருவாக்கப்பட்ட அல்லது கூட்டு உருவாக்கப்படாத நபர்களின் குழு

     ii. முதலாளியின் நிர்வாக முகவர்

   iii. இறந்துவிட்ட முதலாளியின் சட்ட பிரதிநிதிகள்

    iv.தொழிலாளியாக அல்லது வேலை பழகுனர் ஆக பணி ஒப்பந்தம் செய்து கொண்டவர் தனது தொழிலாளியை மற்றொருவருக்கு தற்காலிகமாக இரவல் கொடுத்து இருக்குமிடத்தில் இரவல் பணியை செய்யும் போது  அம்மற்றொரு தொழிலாளியின்  முதலாளி ஆவார்.

    தகுதி இழப்பு(Disablement):

இச்சட்டத்தின் கீழ் முதலாளியிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டுமெனில் பணியின் மூலம் அல்லது பணியின் போது ஏற்பட்ட விபத்தினால் உடல் தீங்கு ஏற்பட்டு இருக்க வேண்டும்.  அவ்வுடல் தீங்கினால் தொழிலாளிக்கு மரணம் அல்லது தகுதியிழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். தகுதியிழப்பு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கூட இருக்கலாம்.

   பகுதி தகுதி இழப்பு: (partial disablement)பிரிவு 2(1)(g): 

 விபத்தின் காரணமாக ஏற்பட்ட    தீங்கினால்  ஒருவரது சம்பாதிக்கும் திறனில் ஏற்படும் இழப்பு தகுதியிழப்பு எனப்படும். பிரிவு 2(1)(g)  பகுதி தகுதி இழப்பினை இரண்டு வகையாக பிரிக்கிறது.  அவை

i. தற்காலிக பகுதி  தகுதி இழப்பு:

    விபத்தினால் ஏற்பட்ட தகுதி இழப்பின் காரணமாக ஒருவர் அவர் விபத்தின்போது செய்துவந்த குறிப்பிட்ட வேலையை பொறுத்து மட்டும் அவரது  சம்பாதிக்கும் திறன் குறைந்து போனால் அது தற்காலிக பகுதி தகுதி இழப்பாகும்.

ii.  நிரந்தர பகுதி தகுதி இழப்பு:

     விபத்தினால் ஏற்பட்ட தகுதி இழப்பின் காரணமாக ஒருவர் விபத்துக்கு முன்னர் தான் ஏற்று செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பொருத்து அவரது சம்பாதிக்கும் திறன் குறைந்து போனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பு நிரந்தர பகுதி தகுதி இழப்பாகும்.

 சட்டத்தில் வரும் மற்ற பிரிவுகளை வரும் பதிவுகளில் காணலாம்.

Share: