I'm Glad to welcome one more new writer here. Welcome Malar Bala...
Malar Bala's Paavaiyin Paarvai Tamil Novel...
கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்
இடியுடன் பலத்த மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது சுந்தரமூர்த்திக்கு. அப்படி ஒரு ஆவேசத்துடன் பேசிவிட்டு அவர் எதிரில் நின்றது அவரது மூத்த மகன் வெற்றி தான். ஒரு மனிதன் பேசினால் கூட மூச்சு வாங்கும் என்பதே அவர் அவனால் தான் தெரிந்து கொண்டார். சுந்தரம் பேசவே யோசிப்பவர் ஆனால் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் மிகவும் உறுதியாய் இருப்பார். அமைதியாகக் கூறினாலும் அதில் உள்ள திடம் யாரும் எதிர்த்து பேச இயலாமல் போய்விடும். வெற்றியோ அதற்கு எதிர் மாறாக இருந்தான். சுந்தரம் தொழில் தொடங்கிய போதிலும் பெரிதாக அதில் லாபம் வந்தது வெற்றி பிறந்த பின்பே வந்தது. பிறகு அவன் தந்தையுடன் சேர்ந்து தொழிலில் பல மாற்றங்களைச் செய்து கால்பதித்த இடமெல்லாம் வெற்றிக்கு வெற்றியாகவே அமைந்தது. வெற்றியை நினைத்து சுந்தரம் பெருமைப் பட்டாலும் அவருடைய மிகப் பெரிய பயமே இவனது இந்த முன் கோபம்தான். சுந்தரம் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே வெற்றியின் குரல் அவரை நினைவுலகிற்கு மீட்டு வந்தது.
'அப்பா உங்களிடம் தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. யார்தான் அவள்? நீங்கள் ஏன் சம்மதித்தீர்கள்.. பணத்திற்காகூட நம் அருணிடம் பழகலாம் இல்லையா?’ என வெற்றியின் கேள்விகள் வரிசையாக வந்தன..
சுந்தரமோ.. உன் தம்பி அந்த பெண் வேலைக்கு வந்தால் தானும் அலுவலகம் வரேன் என்று வாக்கு கொடுத்துள்ளான் எனக்கு இப்பொழுது அவன் அலுவலகம் வருவது தான் முக்கியம் உனக்கும் அதுதான் முக்கியம் என்று நம்புகிறேன் எனவே இதைப் பற்றிப் பேச இனி ஒன்றும் இல்லை என்று முடித்து விட்டார்.
இதற்கு மேல் இவரிடம் பேசி பயன் இல்லை என்று வெற்றிக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. தொழிலில் பல வெற்றிகளைக் கண்டாலும் அவனால் முடியாத ஒரே காரியம் அவன் தந்தையின் மனதை அறிவதுதான். அவர் என்ன நிணைக்கின்றார் என்று என்்்று அவரால் மட்டும் தான் கூற முடியும். இந்த விஷயமும் அப்படி தானோ இல்லை தம்பி அலுவலகம் வந்தால் போதும் என்று நினைகின்றாரா.. எல்லாம் அந்த ராட்சசியால வந்தது யார் அவளோ இப்படி தந்தையையும் தம்பியையும் அவள் கைகளில் போட்டு வைத்திருக்கிறாள் என மனதிற்குள் முகம் பெயர் தெரியாத அவளை அர்ச்சனை செய்து கொண்டிருந்தான் வெற்றி.
தன் மேல் இவ்வளவு கோபத்தோடு ஒருவன் இருப்பதே தெரியாமல் மகளிர் விடுதியில் தன் முதல் நாள் வேலைக்கு ஆயுத்தம் ஆகிக் கொண்டிருந்தாள் மதிவதனா. ஒன்பது மணிக்கு அருண் மதியை அலுவலகம் அழைத்துச் செல்ல வருவதாகக் கூறியிருந்தான். பொதுவாக தன் வேலைகளைத் தானே செய்து கொள்வாள் அதே போல் அருண் சொன்ன பொழுது மறுக்கவே செய்தாள் ஆனால் அருண் கூறியது போல் இருக்கும் நிலையில் யார் கண்களிலும் படாமல் இருப்பதே இப்போதைக்கு முக்கியம் என்பதால் அவளும் சம்மதித்தாள்.
அவள் காரில் ஏறியதும் அருண் பேசத் தொடங்கினான். மதி நான் அப்பாவிடம் பேசி விட்டேன் அக்கவுண்ட் பிரிவில் உங்களுக்கு வேலை. உங்கள் வேலை முடிந்ததும் நானே விடுதியில் விட்டுவிடுகிறேன் தனியாக எங்கும் செல்ல வேண்டாம் சரியா?
நிலைமை மதி அறிந்ததால் சரி அருண். என்னால் உங்களுக்குத் தான் அதிக தொல்லை என்றால்.
‘ என்னை யாரோவாக பார்த்தால் தான் இப்படியெல்லாம் தோன்றும்' என முன்னொரு காலத்தில் மதி அவனிடம் கூறியதையே கூறியதும் மதி சிறிய புன்னைகை மட்டுமே பதிலாய் தந்தாள். அதற்குள் அலுவலகம் வந்துவிட்டதால் வாசலில் அவளை இறக்கி விட்டு இங்கேயே இருங்கள் மதி நான் காரை நிறுத்திவிட்டு வருகிறேன் என்று சென்றான்.
அத்தியாயம் 2
நூறாவது முறையாக வெற்றி மனதிற்குள் அந்த முகம் தெரியாதவளை திட்டி தீர்த்தும் அவன் கோபம் அடங்கவில்லை. எப்படியாவது அந்த இராட்சசியை துரத்தியே ஆக வேண்டும் என்று முடிவுடன் இருந்தான். அந்த அலுவலகத்தில் வெற்றி பொருப்பேர்த்ததும் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தான். அதில் ஒன்று புதிதாக வேலைக்கு சேரும் ஊழியர்களிடம் அரைமணி நேரம் வெற்றியும் சுந்தரமும் அமர்ந்து உரையாடுவது. அதில் அலுவலகத்தை பற்றியும் அவர்கள் வேலை மற்றும் வேலை முறைகளை பற்றியும் பேசுவார்கள். இதனால் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் வரும் என்று வெற்றி நம்பினான். இன்றும் புதியவளுடைய அப்படிப்பட்ட சந்திப்பிர்காகவே காத்திருந்தான். அவள் முகத்திரையை கிழித்து துரத்தி விடவேண்டும் என்றென்னினான். எனவே அவனது செயலாளர் ஷிலாவை அழைத்து இன்று புது ஊழியர்களை சந்திப்பதை தவிர என்னுடைய அட்டவணைகளை எல்லாம் வேறொறு தினத்திற்கு மாற்றிவிடுங்கள் என்றான்.
“சார், இன்று எந்த புது ஊழியர்கள் சந்திப்பும் இல்லை” என்றாள் ஷிலா..
இதில் குழப்பமடைந்த வெற்றி… அருண் இன்று தானே வேலைக்கு சேருகின்றான் என்றான்..
“சுந்தரம் சார் தான் அருண் சார்க்கும் புதிதாக சேரும் மேடத்திர்க்கும் இந்த சந்திப்பு வேண்டாம் என்றார்” என்றாள்..
சரி நீங்கள் செல்லுங்கள் என்று ஷிலாவை அனுப்பி விட்டான்..
“இந்த அப்பா என்ன தான் நினைக்கின்றார்! இந்த விஷயத்தில் மட்டும் ஏன் எதையும் சிந்திக்க மாட்டேன் என்கின்றார்” என்று அவனுள்ளையே ஆயிரம் கேள்விகள் எழுந்தன..
அவனது சிந்தனைகளுக்கு விடையாக அறை கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தது அருண் தான். அவனை பார்த்ததும் வெற்றியால் சுந்தரத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
காரணம் அருணின் மாற்றம்… அருண் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தவனைப் போல் நேர்த்தியான சிகை அலங்காரம், கிளின் ஷேவ் என பழைய அருணாக மாறியிருந்தான். பழைய விளையாட்டு தனம் மட்டும் மாறி அவன் முகத்தில் ஒரு முதிர்ச்சியும் பொறுப்புடைமையும் தெரிந்தது. வெற்றியால் இதை நம்பவே முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் அருணை மயக்க நிலையில் மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவர் அருண் விஷம் அருந்தி உள்ளார் என்றும் மிக மண அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறினார்.
வெற்றியும் மருத்துவர்களும் பல முறைகளில் முயன்றும் அதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. அதன் பிறகு அவன் குணமடைந்து வீட்டிற்கு வந்த பின் யாருடனும் பேசியதே இல்லை. அவன் அறையில் விட்டத்தை வெறித்து கொண்டிருப்பான். அவனாக நினைத்தால் உண்பான் இல்லை என்றால் இல்லை. பல முறை முயன்றும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. இன்று எப்படி இவன் மாறினான் என்று வெற்றிக்கு ஆச்சரியமாக இருந்தது.
சிந்தனைகளில் சிக்கியிருந்தவனை அருணின் குரல் நிகழ்வுக்கு கொண்டுவந்தது.
“அண்ணா.. என்ன சிந்தனையில் இருக்கின்றீர்கள்? எத்தனை முறை அழைப்பது!” என்றான்.
‘இல்லை. ஒன்றுமில்லை. நீ இன்றிலிருந்து வேலைக்கு சேர்கிறாய் அல்லவா? பொதுவாக புதிய ஊழியர்களுக்கு ஒரு சந்திப்பு வைப்பது நமது அலுவலகத்தில் வழக்கம் நீ எப்போது வருகின்றாய் என்று வெற்றி விணவினான்.
வெற்றியை சிறு வயதில் இருந்தே அருண் அறிந்ததால் இச்சந்திப்பு அவர்கள் இருவருக்கும் வேண்டாம் என்று சுந்தரம் கூறியது தெரிந்தே கேட்கிறான் என்று அருணால் புரிந்து கொள்ள முடிந்தது.
'இல்லை அண்ணா நீங்கள் இன்றுதானே ஊரில் இருந்து வந்தீர்கள் எனவே உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அச்சந்திப்பை அப்பா நேற்றே முடித்து விட்டாரே என்றான்.
அருண் சொல்வது பொய் என்று வெற்றிக்கு தெரியும் ஆனால் சுந்தரத்திடம் இதை பற்றி பேச இயலாது என்று தெரிந்தே அவரை முன்நிறுத்தி கூறுகின்றான் என்றும் புரிந்தது. வெற்றிக்கு தம்பியின் புத்தி கூர்மையை நினைத்து பெருமையாக இருந்தாலும் தன்னிடமே பொய் கூறுகின்றானே இதற்கெல்லாம் அந்த ராட்சசி தான் காரணம் என்று அவள் மீதே தன் கோபத்தை திருப்பினான்..
தொடரும்…
Pls.. share ur valuable cmnts here to improve my skills
https://www.sahaptham.com/community/malar-bala/paavaiyin/#post-3038
அத்தியாயம் 3
வெற்றியின் கோபம் ஒரே நாளில் உச்சியை தொட்டது. அந்த பெண் வந்து ஒரே நாளில் தந்தையையும் தம்பியையும் தன்னிடமே உண்மையை மறைக்க வைத்துவிட்டாள் என்று எண்ணினான். ஆனால் அருணின் மாற்றத்தை பற்றி யாரிடம் கேட்பது என்று யோசித்து கடைசியாக கண்ணம்மா விடம் கேட்கலாம் என்று தீர்மானித்தான். அருண் பிறந்த அன்றே வெற்றியின் தாய் இறந்ததால் அவர்கள் இருவரையும் வளர்த்தது கண்ணம்மா தான். சுந்தரத்திற்கு ஒரு வகையில் அக்கா முறை மிகவும் ஏழ்மையான குடும்பம், கணவனும் குடிப் போதையில் இறந்து விட்டான் என்று சுந்தரத்தின் மனைவியிடம் வேலை என்று வந்தாராம். அப்பொழுது தான் அருண் கருவாகியிருந்தான். எனவே தனக்கு துணையாக வைத்து கொண்டார். பிறகு தான் இறந்து விடுவோம் என்று தெரிந்த பின்னர் கண்ணமாவிடம் தன் பிள்ளைகளை உன் பிள்ளைகளாக பார்த்து கொள்ளவேண்டும் என்று சத்தியம் வாங்கி கொண்டு இறந்து விட்டாளாம். அருண் கண்ணமாவிடமே அதிக நெருக்கமாக இருப்பான். எனவே அன்று வேலை முடிந்ததும் வெற்றி நேராக கண்ணமாவிடமே சென்றான். கண்ணம்மா மிகவும் மகிழ்ச்சியாக இனிப்பு வகைகளை தயார் செய்து கொண்டிருந்தார். வெற்றியை பார்த்ததும்.. “அருணை பார்தீர்களா தம்பி? ஆளே மாறிவிட்டான் இல்லையா.. என்று வினவினார்.
வெற்றி.. “ அதைதான் நானு கேட்களாம் என்று வந்தேன்.. இந்த திடீர் மாற்றம் எப்படி அத்தை நடந்தது என்று கேட்டான்..
“அருண் எப்பொழுதும் போல யாரிடமும் பேசாமல் அவன் காரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான். மீண்டும் வீட்டுக்கு வரும் பொழுது ஏதோ யோசனயுடன் வந்து நேராக உங்கள் அப்பாவின் அறைக்கு சென்றான். அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை பின்பு நேராக அவன் அறைக்கு சென்றான் சில மணி நேரம் கழித்து பழைய அருணாக மாறி மீண்டும் வெளியில் சென்றான்.. ஆனால் அவன் எங்கு சென்றான் அங்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.. எது எப்படியோ நம் அருண் நமக்கு கிடைத்து விட்டான்.. என்றார்..
வெற்றி மேலும் குழம்பி போனான். இதைப்பற்றி யாரிடம் தான் கேட்பது என்றே அவனுக்கு புரியவில்லை. அவன் அலுவலகத்தில் ஊழியர்களின் விபரங்களை ஒரு கோப்பையில் சேகரிப்பது வழக்கம் அதில் அவளது விபரங்களை அறிந்து மேலே முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தான். மறுநாள் அலுவலகம் சென்றதும் அக்கோப்பையில் தேடி பார்த்தான். அதில் மதியின் விபரங்களுக்கு பதிலாக ஒரு கடிதம் மட்டுமே இருந்தது.
அக்கடிதத்தில் அவ்வூளியர் மூலம் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதற்கு முழு பொறுப்பும் அருண் ஏற்று கொள்வதாக எழுதி கையெழுத்து போட பட்டிருந்தது.
கடிதத்தை பார்த்ததும் வெற்றியால் தன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவனை யாரோ தலையில் சுத்தியலால் அடிப்பது போல் தலைவலி வந்தது தான் மிச்சம். தலைவலி தாங்காமல் டீ அருந்தலாம் என்று கேன்டீனிர்க்கு சென்றான். உள்ளே நுழைந்ததும் அவன் கண்களை அவனால் கூட நம்ப முடியவில்லை. அங்கு அவன் அப்பெண்ணை மூன்று வருடங்கள் கழித்து சந்தித்தான். நொடி பொழுதில் அவன் மனம் மூன்று வருடங்கள் பின்நோக்கி சென்றது.
தொடரும்..
Pls share ur valuable cmnts here:
https://www.sahaptham.com/community/malar-bala/paavaiyin/paged/2/#post-3341
அத்தியாயம் 4
நொடி பொழுதில் பல யுகங்கள் கடக்குமாம் மனம். அதே போல் வெற்றியின் மனம் மூன்று வருடங்கள் பின்னோக்கி ஓடின. அது அவன் நண்பனின் தங்கை பிறந்த நாள் விழா. வெற்றியின் முன்கோபம் காரணமாக அவனிடம் பலர் விலகி நின்றே பழக்கம். ஆனால் அவனை முழுதாக புரிந்து கொண்டு அவனுடன் சிறு வயதிலிருந்தே உடன் இருப்பது இரண்டு நண்பர்கள் தான். ராம் அவன் குடும்ப தொழிலை பார்க்கின்றான். மற்றொருவன் உதய். மருத்துவராக உள்ளான். அவனது தங்கையின் பிறந்த நாளே அது. வெற்றியும் ராமும் உள்ளே நுழையும் போது உதய் யாரையோ திட்டி கொண்டே எதிரில் வந்தான்.
“என்னடா இப்படி தனியாக யாரை திட்டி கொண்டு வருகின்றாய்?” என்று நண்பனை பார்த்து கேட்டவர்கள் அவன் தங்கள் கேள்வியை கவணிக்காமல் யாரையோ தேடுவதை கண்டு சுற்றி யாரை இவன் தேடுகின்றான் என்றும் தேடினார்கள்.
“ யாரைடா தேடுகின்றீர்கள்?” என்று குழப்பத்துடன் கேட்டான் உதய்.
ராம் “நண்பா! உன்னிடம் என்ன கேட்டோம்? யாரை திட்டுகின்றாய் என்று ஆனால் நீ அதை கவணிக்காமல் யாரையோ தேடி விட்டு.. எங்களிடம் கேட்கிறாய்?” என்றான்.
உதய் “எல்லாம் அந்த வானரம் தான்.. வேறு யார் என்னை சீன்ட போகிறார்கள்” என்றான் கோபமாக.
நண்பர்கள் இருவரும் இவன் என்ன பேசுகின்றான் என்றே புரியாமல் பார்க்கவும். என்னுடன் வாருங்கள் என்று உதய் அவன் அறைக்கு அழைத்து சென்றான்.
“என்ன பிரச்சினை உதய்? எதுவானாலும் சொல் பார்த்து கொள்ளலாம்..” என்றான் வெற்றி.
வெற்றி பேசி கொண்டிருக்கும் பொழுதே, ராம் “இது என்னடா!! உன் சட்டை எல்லாம் இப்படி ஈரமாக உள்ளது?” என்றான். அப்பொழுது தான் வெற்றியும் அதை கவனித்தான். உதய் அதை தட்டி கொண்டே..
“எல்லாம் அந்த வானரம் வதனி தான்டா காரணம். வேண்டும் என்றே என் மேல் ஜுஸை ஊற்றி விட்டாள்.” என்றான்.
“விடுடா.. யாரும் வேண்டும் என்றே ஊற்றுவார்களா? தெரியாமல் நடந்திருக்கும்” என்றான் ராம்.
“உனக்கு அவளை பற்றி தெரியவில்லை. அவள் வேண்டும் என்று தான் ஊற்றினாள்” என்றான்.
நீ எப்படி நிச்சயமாக கூறுகின்றாய் என்று வெற்றி கேட்டதற்கு. அவள் அப்படி தான் அவளை வானரம் என்றாள் பிடிக்காது. நான் அவளை சீன்டவே அப்படி கூப்பிடுவேன் எதையாவது எடுத்து அடிப்பாள் இன்றும் அப்படி தான் என்றான்.
“தவறை உன் மேல் வைத்து கொண்டு அப்பெண்ணை திட்டுகிறாயே!” என்றான் வெற்றி.
“அவளை பார்த்தாலே தானாக வந்து விடுவிகறதடா.. சரி இருங்கள் சட்டை மாற்றி விட்டு செல்வோம் என்று கூறிவிட்டு.. உடை மாற்றியதும் நண்பர்கள் மூவரும் விழா நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
“அந்த வானரம் யாரென்று காட்டு டா உன்னை பாடாய் படுத்தும் பெண்ணை பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது” என்றான் ராம்.
உதய் அவனை முறைத்து விட்டு வதனியை தேடினான். ஆனால் அவளை அவனால் காண முடியவில்லை. அதற்குள் விழா தொடங்கவே அவன் கவணம் அதில் சென்றது.
விழாவின் நாயகி சுவேதா கேக் வெட்டிய பிறகு.. அனைவரும் பஃபேவில் சாப்பிட தொடங்கினர். உதய் யாரையோ தேடுவது போல் தோன்றவே வெற்றி யாரை தேடுகிறாய் என்று கேட்டான்.
“இல்லைடா வானரம் எங்கே போனது என்று தெரியவில்லையே கேக் வெட்டும் பொழுதும் காணவில்லை என்றான்.
உதய் பேசி கொண்டிருக்கும் பொழுதே சுவேதா அவர்கள் அருகில் வந்ததால் அவளை அழைத்து உன் தோழி வானரம் எங்கே என்று கேட்டான் உதய்.
“அவளிற்கு இந்த சாப்பாடு எதுவும் பிடிக்கவில்லையாம் அதுதான் அம்மா தோசை ஊற்றி குடுக்கின்றார்கள் வீட்டினுள்ளே” என்றாள்.
“ஆனால் கேக் வெட்டும் பொழுதும் இல்லையே?”
“இருந்தாள் மிக்கி மவுஸ் வேடம் போடுபவரை சாப்பிட அனுப்பி விட்டு அவள் போட்டு கொண்டாள்” என்றாள்.
“என்ன!!” என்று ஆச்சரியமாக கேட்டான் வெற்றி.
“அவள் அப்படி தான் அண்ணா. யாரும் பசியில் இருந்தால் அவளால் தாங்கி கொள்ள இயலாது” என்று புன்னகையுடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சுவேதா.
“யாரடா அந்த வானரம்? அவள் பெயர் என்ன ? வந்ததில் இருந்து அவளை பற்றின பேச்சே ஓடி கொண்டிருக்கின்றது. உங்கள் தந்தை மட்டுமே வந்த விருந்தினரை கவணிக்கின்றார் மற்ற மூவரும் அவளை பற்றியே பேசி கொண்டிருக்கின்றீர்கள் என்றனர் உதயின் நண்பர்கள்.
நண்பர்கள் கூறியதை கேட்டு சிரித்து விட்டு உதய் “அவள் பெயர் வதனி. முன்பு இதே தெருவில் தான் இருந்தார்கள். பிறகு அவள் அப்பாவின் வேலை காரணமாக வேறு இடம் சென்று விட்டனர். நம் வீட்டில் அம்மா அப்பா இருவருமே மருத்துவர்கள் அல்லவா. நாங்கள் பள்ளியில் இருந்து வரும் பொழுது இருவருமே வீட்டில் இருக்க மாட்டார்கள். சுவேதாவும் வதனியும் ஒரே வகுப்பு எனவே மூவருமே அவள் வீட்டில் தான் இருப்போம். எனக்கு சுவேதாவை போல் தான் அவளும். வீட்டிலும் சுவேதாவையும் வதனியையும் ஒன்றாக தான் பார்ப்பார்கள். ஆனால் என்னால் தான் அவளை சீன்டி சண்டை போடாமல் விட மனம் வருவதில்லை” என்று கூறிவிட்டு சிரித்தான்.
“நாங்கள் கூட இருவரும் எதிரி என்று நினைத்து விட்டோம்” என்று கூறி ராம் தன் தலையிலேயே அடித்து கொண்டான். அப்பொழுது என்று அங்கு வந்த வதனி.. “என்ன உதய் அண்ணா! நீ பேசியதில் ஒருவருக்கு முற்றிவிட்டது போல!? என்று ராமை காட்டி கேட்டாள்.
“பேசிய விஷயம் அப்படி வேறு ஒன்றும் இல்லை” என்று உதய் பதில் கொடுக்கவும் தன்னை பற்றி தான் அங்கு பேசி கொன்டு இருந்திருக்கின்றார்கள் என்று வதனி புரிந்து கொண்டாள். உடனே “உதய் அண்ணா உங்களுக்கு உதை(அழுத்தமாக கூறிவிட்டு) என்று பெயர் வைத்ததில் தவறே இல்லை” என்று கோபமாக கூறிவிட்டு மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று அங்கிருந்த குழந்தைகளுடன் அய்கியமாகி விட்டாள்.
விருந்தினர்கள் ஒவ்வொரு வராக விடைபெறவும். அனைவரையும் வழி அனுப்பி விட்டு கடைசியாக நண்பர்கள் மூவரும் பேசி கொண்டிருக்கும் பொழுதே வதனியுடைய தந்தை அங்கு வந்து சேர்ந்தார். “வாருங்கள் அப்பா.. வதனியும் சுவேதாவும் உறங்கி விட்டார்கள்.. காலையில் நானே வீட்டில் விடுகிறேனே?” என்று உதய் அவரிடம் கேட்டு கொண்டு.. அவரை தன் நண்பர்களுக்கு அறிமுகமும் செய்து வைத்தான். சுவேதா வதனியை தவிர மற்ற அனைவரும் இரவு நெடு நேரம் பேசி கொண்டிருந்தனர். அதில் அதிகம் வதனி பற்றியே இருந்தது. அவள் செய்த குறும்புகள் பற்றி பேசினார்கள். அனைவரையும் அதிகம் சிரிக்க வைத்தது வதனியின் தந்தைதான். முதல் சந்திப்பிலேயே மிகவும் பலக்கம் பட்டவர் போல் வெற்றிக்கு தோன்றியது. பிறகு அவர் கிளம்பும் பொழுதே ராமும் வெற்றியும் கிளம்பி விட்டனர். அன்று முழுதும் வெற்றியால் உறங்க முடியாமல் போனது. கண்களை மூடினாலே வதனியின் உருவம் தான் தோன்றியது. அவளது சிறு பிள்ளை தனமும், சிறுவர்களுடன் சிறுமியாய் விளையாடியதுமே மீண்டும் மீண்டும் தோண்றியது.
அதன் பின் வெற்றி பல முறை உதய் வீட்டிற்கு சென்றான் ஆனால் வதனியை பார்க்க முடிந்ததே இல்லை. ஓரிரு முறை உதயிடம் விசாரித்துள்ளார் பார்த்தான். ஆனால் உதயோ வெற்றி மனதிற்குள் இருப்பது புரியாமல்.. “அம்மனி கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து நம்மை மறந்து விடுகிறார்கள்.. கேட்டாள் படிக்கிறாரார்களாம்” என்று அந்த பேச்சை முடித்து விட்டான். இதற்கு மேல் கேட்டாள் தவறாக தோன்றும் என்று நினைத்து வெற்றியும் வெளிபடையாக கேட்காமல் அடிக்கடி உதயின் வீட்டிற்கு மட்டும் சென்று வந்தான். பிறகு தொழில் வளர்ச்சி வளர வதனியின் நினைவுகளை சிறிது பூட்டி வைத்தான். இருப்பினும் சிறுவர்களை பார்க்கும் பொழுது அவளது துறுதுறுப்பான கண்கள் அவன் நினைவில் வந்து போகும்.
மூன்று வருடங்கள் கழித்து இன்று வதனியை பார்க்கின்றான். ஆனால் அன்றிருந்த துறுதுப்பு இன்று அவள் கண்களில் இல்லை. அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். அதை பார்த்ததும்.. “ஒரு ஐந்து நிமிடமாவது அவள் அமைதியாக இருப்பதை பார்க்க வேண்டும் அதுதான் என் இலட்சியம் தம்பி” என்று அவளது தந்தை கூறியது அவன் காதுகளில் இப்பொழுதும் ஒலிப்பது போல் தோன்றியது.
ஆனால் இவளது அமைதியின் காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையுடன் அவள் அருகில் செல்ல கால்களை எடுத்து வைத்தான். அப்பொழுது வதனியின் தோலில் கை வைத்து அவளை எழுப்பியது அருண் தான். அருணை அங்கு பார்த்ததும் வெற்றிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. இவன் இங்கு என்ன செய்கின்றான்? ஒருவேளை வதனியை அருணிற்கு தெரிந்திருக்குமோ! என்றே யோசித்தான். அருணை வெற்றி பார்த்தது போல் அருணும் வெற்றியை பார்த்து விட்டான். நேருக்கு நேர் பார்த்ததால் அறிமுகம் செய்து தான் ஆக வேண்டும் என்று அருணிற்கு தோன்றியது. எனவே வதனியை வெற்றியின் அருகில் அழைத்து வந்து இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.
“அண்ணா.. இது மதி.. நம் அலுவலகத்தில் புதிதாக என்னால் சேர்க்க பட்டவர். மதிம்மா இது என் அண்ணன். “என்று அறிமுகம் செய்து வைத்தான்.
வெற்றியால் எதுவும் புரிந்து கொள்ளவே முடியவில்லை இங்கு என்ன நடக்கின்றது? இவன் கூறுவதை பார்த்தால் இவள்தான் அந்த ராட்சசியா? ஆனால் மதி என்கின்றானே.. “முழு பெயர் என்ன?” என்று மட்டும் கேட்டான்.
மதி “மதிவதனா” என்று கூறினாள்.
இதற்கு மேல் அண்ணன் பேசினால் அவன் மதியை காய் படுத்தி விடுவானோ என்று பயந்து அருண் வேளை இருப்பதாக கூறி அங்கிருந்து மதியை அழைத்து சென்று விட்டான். அன்று அவர்களை பேச விட்டிருந்தாள் பின் வரும் பல பிரச்சனைகள் நிகழலாமல் இருந்திருக்கும் என்று அன்று அருண் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தொடரும்…
Pls share ur valuable cmnts here..
https://www.sahaptham.com/community/malar-bala/paavaiyin/paged/2/
அருண் மதியின் கைகளை பிடித்து அழைத்து சென்ற காட்சியே வெற்றியின் கண்முன் மீண்டும் மீண்டும் தோண்றியது. அவனால் அதை நம்பவே முடியவில்லை. மூன்று வருடங்கள் முன்பு பார்த்து தான் காதலித்த பெண். எங்கு தேடியும் அவனால் அவளை கண்டுபிடிக்க முடியாமல் போன பெண் இன்று தன் குடும்பத்தில் இத்தனை பிரச்சனைகளை உண்டு பன்ன இயலுமா? வெற்றியால் அதற்கு மேல் வேளையில் ஈடுபட முடியவில்லை எனவே அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டான்.
தன் அறையின் பால்கனியில் நின்று பௌர்ணமி நிலவை நீண்ட நேரமாக பார்த்து கொண்டிருந்தான் வெற்றி. கடந்த மூன்று ஆண்டுகளாகவே பல பௌர்ணமிகளை அங்கு தான் கழித்திருக்கின்றான். முழு நிலவை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் மனதை வதனியின் முகமே ஆட்கொண்டிருக்கும். அவளிடம் பேசுவதாக நினைத்து நிலவிடமே பேசுவான். ஆனால் இன்று அந்த நிலவு அவனுக்கு ரசிக்கவில்லை. மனம் முழுவதும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது அது என்னவென்றே அவனால் கண்டு கொள்ள முடியவில்லை. இன்று அருணுடன் வதனியை பார்த்ததில் இருந்தே இந்த நெருடல் அவனுள் இருந்து கொண்டே இருந்தது. வெறும் பணத்திற்காக பழகும் அளவு வதனி இல்லை என்று வெற்றியால் நிச்சயம் கூற முடியும் பிறகு! ஒருவேளை இருவரும் காதலிக்கின்றார்களா? என்று தனக்கு தானே கேள்வி எழுப்பி கொண்டான். ஆனால் அப்படி ஒரு நினைவே அவனது இதையத்தை யாரோ அவனிடம் இருந்து பிரித்து எடுப்பது போல் இருந்தது. இதற்கு மேல் இங்கிருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்று தோன்றவே அங்கிருந்து அவனது அறைக்குள் நுழைந்தான். அப்பொழுது தான் அவன் மனதில் இருந்த அந்த நெருடலின் பதில் அவனுக்கே புரிந்தது.
அது உதயின் தங்கை சுவேதாவும் வதனியும் ஒரே வகுப்பில் படித்தார்கள் என்பதுதான் அப்படி என்றால் வதனி அருணைவிட வயதில் மூர்த்தவள். ஏனோ இப்போது தான் வெற்றியால் நிம்மதியாக சுவாசிக்க முட்ந்தது. ஆனால் கூடவே வேறு ஒரு சந்தேகமும் எழுந்தது.
“ஒருவேளை அவர்கள் இருவரும் காதலித்து.. இந்த வயது வேற்றுமை தான் அவர்களுக்குள் பிரச்சினையாக இருக்குமோ? அல்லது வேறு எதும் பிரச்சினையாக இருக்குமா?” என்று தனக்கு தானே கேள்வி எழுப்பி கொண்டான்.கடைசியில் வெற்றியின் தூக்கம் கெட்டது தான் மிச்சமாகி போனது. காலையில் அலுவலகத்திற்கு கிளம்பி வந்த மூர்த்த மகனை சுந்தரம் விசித்திரமாக பார்த்தார். “இவர் ஏன் நம்மை இப்படி பார்க்கிறார் என்று வெற்றி யோசித்து கொண்டிருக்கும் பொழுதே.. அங்கு வந்த அருண்.
“என்ன அண்ணா உடம்பு சரி இல்லையா? கண்கள் இரண்டும் வீங்கி சிவந்து இருக்கின்றதே?” என்று கேட்டான்.
அட ராமா… இதை கவணிக்க மறந்தோமே… என்று வெற்றி என்ன கூறுவது என்று யோசிக்கும் பொழுதே..
“என்ன அண்ணா பதில் சொல்லாமல் ஏதோ யோசித்து கொண்டிருக்கின்றீர்களே!” அருண்
“ஒரே தலைவலியாக இருக்கின்றது. வேறு ஒன்றும் இல்லை” வெற்றி.
“ஏன் அண்ணா? என்ன திடிரென? டாக்டரை பார்க்கலாமா?” அருண்.
அடங்க மாட்டேங்கிறானே… என மனதிற்குளையே நொந்து போனான் வெற்றி..
“இல்லை. மாத்திரை எடுத்துக் கொண்டேன். தேவை என்றால் செல்லலாம்” என்றான்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுதே கண்ணம்மா அனைவருக்கும் காலை உணவு பரிமாறவும் அனைவரும் சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பினர். அருண் தங்களுடன் வராமல் மதியை அழைக்க சென்றது வெற்றிக்கு கோபம் தான் ஆனால் சுந்தரம் உடன் வரவே அவனால் ஏதும் செய்ய இயலாமல் போனது.
அருணிற்கும் மதிக்கும் இடையில் காதலா இல்லை வேறு பிரச்சினையாக இருக்குமா என்று வெற்றி மிகவும் குழம்பி போனான். அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸிற்கு தனி அறை இருந்தது அது முற்றிலும் கண்ணாடிகளால் ஆனது. உள்ளேயும் வெளியேயும் இருப்பது அப்படியே காட்டும். எனவே வெற்றி அந்த பக்கமாக அடிக்கடி சென்று வந்தான். மதியும் அருணும் வேளையிலேயே முடங்கி கிடந்தனர். ஆனால் வெற்றியால் மதி சிரிப்பதை பார்க்கவே முடியவில்லை.
“இவள் என்ன சிரிப்பதையே மறந்து தொலைத்தாலா!” என்று வெற்றி தனக்கு தானே பேசிக்கொண்டு தன் அறைக்குள் வந்து அமர்ந்தான். அவன் பின்னோடு வந்த அருண்..
“என்ன அண்ணா? அலைந்து கொண்டே இருக்கின்றாய்?” என்று கேட்டான்.
அவனை அங்கு எதிர் பார்க்காத வெற்றிக்கு முதலில் தூக்கி வாரி போட்டாலும் தன்னை நொடி பொழுதில் சுதாரித்து கொண்டு “நீ எப்போது என்னை பார்த்தாய்? நான் அனைவரும் வேலை சரியாக செய்கின்றார்களா என்று பார்க்க வந்தேன் என்றான்..
“ஓ.. இல்லை நான் நான்கு முறை அங்கு பார்த்து விட்டேன் அதுதான் எதுவும் வேண்டுமா என்று கேட்க வந்தேன். சரி வரேன் அண்ணா” என்று கூறிவிட்டு அருண் அங்கிருந்து சென்றான்.
அருண் அங்கிருந்து சென்றாலும் அவன் போகும் முன் வெற்றியை பார்த்த பார்வையிலையே அருண் வெற்றி கூறியதை நம்பவில்லை என்று வெற்றிக்கு புரிந்தது.
அதன் பின் அலுவலகத்தில் முக்கியமாக முடிக்க வேண்டிய வேலைகல் வருசையாக வரவே அனைவரும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டனர். இரண்டு வாரங்கள் வேறு விதமான சிந்தனைகள் இன்றி கடந்த பின்பு வேலை பழுவும் சற்று குறைந்தது.
அதன் பின் வந்த ஞாயிறு அன்று அனைவரும் வீட்டில் ஓய்வு எடுக்க சுந்தரம் மட்டும் காலையிலேயே எங்கோ சென்று இரவு தான் வீட்டிற்கு வந்தார். வந்தவர் வெற்றியையும் அருணையும் அழைத்து
“நாளை ஒரு மீட்டிங் இருக்கின்றது காலை பத்து மணியை போல நீங்கள் இருவரும் வந்து என்னை பாருங்கள்.. வரும் பொழுது அந்த பெண் மதியையும் அழைத்து வாருங்கள்” என்று கூறி விட்டு நேரே அவர் அறைக்குள் சென்று விட்டார். மதியை ஏன் அழைத்து வர சொல்கின்றார் என்ற கேள்வி சகோதரர்கள் இருவருக்குமே இருந்தது ஆனால் வெளி காட்டாமல் நகர்ந்து சென்றனர்.
மறுநாள் காலை சுந்தரம் கூறியது போல் மூவரும் அவரை பார்க்க சென்றனர். அவர்களை அமர சொல்லி விட்டு சுந்தரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அருணிற்கு இந்த சந்திப்பு மதியை பற்றியோ என்ற பயம் இருந்தது.
வெற்றிக்கு “இவர் ஏன் மூன்று பேரையும் தனியாக வர சொன்னார்? ஏதும் பிரச்சினையாக இருக்குமோ.. என்ற சந்தேகம் இரவிலிருந்தே இருந்தது அது சுந்தரத்தின் அமைதியால் இப்பொழுது உறுதி ஆனது.
ஒவ்வொருவரும் ஒரு மனநிலையில் இருக்க ஏதோ பேசுங்கள் என்பது போல மதி மட்டும் அமைதியாக தரையை பார்த்து அமர்ந்திருந்தாள். ஒருவழியாக சுந்தரமே தன் மௌனத்தை கலைத்து பேச தொடங்கினார்.
“நம் அலுவலகம் தொடங்கி இதுநாள் வரை நமது ஊழியர்கள் மேல் எந்த வித அவநம்பிக்கையும் நாம் வைத்தது இல்லை. அவர்களும் நம் மீது அதே நம்பிக்கை வைத்து உள்ளார்கள். இன்று நாம் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளோம். இருபக்கமும் நம்பிக்கை குறையாத அளவு நமது நடவடிக்கை இருக்க வேண்டும்.” என்று கூறி சிறு இடைவேளி விட்டார்.
‘இவருக்கு இதே வேலையாக போய் விட்டது. என்ன பேசுகிறார் என்று அவறுக்கு மட்டும் தான் புரியும்.’ என்று வெற்றி வழக்கம் போல் மனதில் நினைத்து கோண்டே பாவம் மதி புதிதாக இவரது பேச்சை கேட்கிறாள் என்று திரும்பி பார்த்தான். அங்கு அருணும் வெற்றியின் அதே புரியாத நிலையில் தான் இருந்தான். ஆனால் அதுவரை அமைதியாக தரையை பார்த்து கொண்டிருந்த மதி இப்பொழுது மிக ஆர்வமாக சுந்தரத்தை பார்த்து கொண்டிருந்தாள். சுந்தரமும் மதியைதான் சிறிய புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார்.
தொடரும்..
Pls share ur valuable cmnts here..
https://www.sahaptham.com/community/malar-bala/paavaiyin/paged/2/
அத்தியாயம் 6
மதியின் இந்த ஆர்வம் வெற்றியை மட்டும் இன்றி அருளையும் வியப்பாக்கியது. இருவருக்குள்ளும் ஏதோ இரகசியம் இருப்பதாக மிக வெளிப்படையாக தெரிந்தது. அருண் தனக்கு தெரியாமல் இவர்கள் எப்போது பேசினார்கள் என்று குழம்பி இருந்தான். அங்கு இருந்த அமைதியை சுந்தரமே மீண்டும் களைத்தார்.
“இந்த சூழ்நிலையில் நமக்கு மிகவும் நம்பிக்கையான ஆட்கள் தேவை அது வெளி ஆளாக இல்லாமல் நாமாகவே இருப்பது இன்னும் நல்லதாக இருக்கும் என்பதாலையே உங்கள் மூவரையும் வர சொன்னேன்” என்றார்.
மதி “புரிகிறது. ஆனால்..” என்று அவள் கூறும் பொழுதே
சுந்தரம் “பொருமா. நான் முடித்து விடுகின்றேன்.” என்றார்.
மதி அதற்கு அமைதியாக தலை அசைக்கவும். சுந்தரமே தொடர்ந்தார்.
“நம் அலுவலகத்தில் சில பண கையாடல்கள் நடப்பதாகவும். அதை நம் ஊழியர்களே செய்வதாகவும் இதற்காக நம் கணக்குகளில் கூட குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அதுவும் மிக நம்பிக்கை உடையவர் ஒருவரிடமிருந்து. இதை பற்றி முதலில் நாம் முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகே இதற்கு பின் யார் உள்ளார்கள் என்று கண்டு பிடிக்க இயலும்”என்றார்.
“நீங்கள் கூறுவது புரியவில்லை. யார் கூறினார்கள்? கணக்குகளை சரியாக பார்க்க தான் ஆட்களை போட்டு உள்ளோம். அதிலையே தவறு என்றால் நிச்சயம் அக்கவுண்ட்ஸ் பிரிவில் தான் இதை செய்திருக்க வேண்டும். ஆனால் யாரோ கூறினதை மட்டும் வைத்து இது உன்மை என்று எப்படி நம்புவது? சொன்னவர் பொய் கூட கூறியிருக்கலாம் அல்லவா? ஏன் என்றால் நாமும் வருடம் இருமுறை நமது கணக்குகளை சரிபார்க்கின்றோமே?” என்று இடைவிடாமல் கேள்வி எழுப்பினான் வெற்றி.
அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்த சுந்தரம் அருணை பார்த்து
“உனக்கும் இது போல் கேள்விகள் இருந்தால் கேட்டு விடு. அனைத்துக்கும் ஒன்றாக பதில் கூறிவிடுகின்றேன்.” என்றார்.
அருண் சிறிது யோசித்து விட்டு “ நான் இப்போது தான் அலுவலகத்தில் சேர்ந்து உள்ளேன் என்பதால் இங்கு உள்ள எந்த ஒரு நிலையும் மிக துள்ளியமாக தெரியாது. அதனால் நான் கேட்க என்று எதுவும் இல்லை ஆனால் இதில் மதியை ஏன் அழைததீர்கள் என்று மட்டும் எனக்கு தெரிய வேண்டும்” என்றான்.
சுந்தரம் அருணின் கேள்விக்கு சிறியதாக புன்னகை செய்துவிட்டு
“ அருண் உனது கேள்விக்கு பதில் கடைசியாக கூறுகின்றேன் முதலில் வெற்றியின் கேள்வி. அதை என்னை விட மதி மிகவும் தெளிவாக கூறுவாள்”என்று மதியை பார்த்தார்.
வெற்றி குழப்பத்துடனும் அருண் கலக்கத்துடனும் மதியை பார்த்தார்கள்.
மதி “நம் அலுவலகம் தொடங்கி இதுநாள் வரை நமது கணக்குகளை பார்ப்பது அக்கவுண்டன்ட் முத்து சார் தான். அவரும் அவருக்கு அக்கவுண்ட் பிரிவிலிருந்து கொடுக்கப்படும் கணக்குகளையே பார்க்கின்றான். பண குளறுபடிகள் ஒரு குறிப்பிட்ட ஆண்டு காலத்தில் தான் நடந்து வருகின்றது. நாமும் சரி பார்த்தாலும் நூறு ரூபாயில் பத்து ரூபாய் குறைந்து இருந்தால் உடனே அனைவர் கண்ணிலும் படும் இரண்டு ரூபாய் குறைந்து இருந்தால் கணக்கு பார்ப்பவர்கள் கண்ணில் படும். ஆனால் ஐம்பது பைசா குறைந்தால்? அதை நாம் மதிப்பது இல்லை பல இலட்சம் பார்க்கும் பொழுது இதை பற்றிய யோசனைகள் கூட தோன்றாது இல்லையா? அதுதான் இங்கும் நடந்து உள்ளது. இது யார் கண்களிலும் படாமல் இருந்திருக்கின்றது. இதை எப்போதில் இருந்து செய்தார்கள் என்று கண்டு பிடித்தால் தான் யார் என்றும் கண்டு பிடிக்க இயலும்.” என்று மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் படி விளக்கினாள் மதி.
வெற்றி “ இப்பொழுது இதை யார் கூறினார்கள்? அது மட்டுமல்லாமல் நாம் எப்படி இதை தவிர விட்டோம்?” என்று இன்னும் நம்பாத குரலிலேயே கேட்டான்.
சுந்தரம் “அருண் இப்பொழுது உன் கேள்விக்கான பதிலை கூறுகிறேன். இதை என்னிடம் கூறியது வேறு ஒருவர் என்றாளும் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை முதலில் கண்டு பிடித்தது மதி தான். எனவே இதை பற்றி முழுதாக கண்டு பிடிக்க மதி நமக்கு உதவுவாள் என்று நம்புகிறேன்” என்றார்.
ஆனால் இதை கேட்டதும் அருண் தனது கட்டுப்பாட்டை இழக்கும் அளவு கோபம் கொள்வான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அருண் மிகுந்த கோபத்துடன் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து விட்டான். சுந்தரத்தை ஒரு இயலாமையுடன் பார்த்து விட்டு தன் பார்வையையும் கோபத்தையும் மதியிடம் திருப்பினான். அவன் குரல் உயர்ந்திருந்த விதத்தில் விட்டால் மதியை அடித்து விடுவானோ என்ற அச்சம் அங்கிருந்த மற்ற இருவருக்கும் வந்தது.
“மதி. உங்களிடம் நான் என்ன கூறினேன் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? எது நம்மால் முடியுமோ, எதை நாம் செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்தால் போதும். உங்கள் இஷ்டத்திற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம் அதை நான் வேடிக்கை பார்ப்பேன் என்று கணவிலும் நினைக்காதீர்கள்.” என்று மூச்சு விடாமல் நடுவில் பேச முயன்ற மதிக்கும் வாய்பளிக்காமல் பேசிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான். போகும் பொழுது கதவருகில் இருந்த பூச்ஜாடி மேல் தன் கோபத்தை காட்டி அதை உடைத்து விட்டு சென்றான்.
அருணின் செயலால் அதிர்ச்சி அடைந்த சுந்தரமும் வெற்றியும் எதுவும் புரியாமல் குழம்பி இருந்தார்கள். அவர்களை பார்த்து மதி
“அருணிற்காக நான் உங்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர நான் கட்டாயம் உதவி செய்கின்றேன். எப்பொழுது இதை தொடங்க வேண்டும் என்று மட்டும் கூறுங்கள்” என்றாள்.
சுந்தரம் ஒருவழியாக அதிர்ச்சியில் இருந்து தன்னை மீட்டு எடுத்து கொண்டு “அருண்?” என்று பேச தொடங்கினார்.
மதி “அருணை நான் பார்த்து கொள்கிறேன். அதை பற்றி கவலை வேண்டாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
பாவம் வெற்றியால் தான் அவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அவனது முகத்திலேயே சுந்தரத்திற்கு தெரிந்தது. சுந்தரம் இதில் மதி தலையிடுவதை வெற்றி தான் தடுக்க கூடும் என்று நினைத்தார். வெற்றி மதியை நம்ப மாட்டான் என்றும் நினைத்திருந்தார். ஆனால் வெற்றி அமைதியாகவும் அதற்கு எதிர்மாறாக அருண் கோபம் பட்டு கத்தியதே அவருக்கு அதிர்ச்சி என்றால் அருண் தன் வழக்கத்திற்கு மாறாக தன் கோபத்தை பூச்ஜாடியின் மீது காட்டியது அதைவிட அதிர்ச்சியாக இருந்தது. எனவே அவருக்கு மீண்டும் சிந்திக்க தனிமை தேவை பட்டதால் வெற்றியை அனுப்பி விட்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
மற்றொரு பக்கம் வெற்றி கோபக்கடலில் நீந்திக் கொண்டிருந்தான். ‘என்ன திமிர் இருக்கனும் அந்த ராட்சசிக்கு. அருணிற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றா கூறுகிறாள்? மன்னிப்பு கேட்க இவள் யார்? இவளுக்கு என்ன உரிமை உள்ளது? அல்லது எனக்கு தான் உரிமை உள்ளது என்று சொல்லி காட்டுகிறாளா? இது மட்டுமா? அருணை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறுகிறாள்! உங்கள் பேச்சை விட என் பேச்சுக்கு தான் மதிப்பு அவன் என் கைக்குள் என்று அர்த்தமா?’ என்று அவனுக்குள்ளேயே பேசி அவன் அறையை நடந்து நடந்து தேய்த்து கொண்டிருந்தான்.
மாலை வரை அருளையும் மதியையும் அலுவலகத்தில் பார்க்க முடியவில்லை. அலுவலகம் முடிவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு அருண் சுந்தரத்திடமும் வெற்றியிடமும் பேச வேண்டும் என்று வந்து நின்றான். அவன் பின் மதியும் வந்தாள். சுந்தரத்திடம் அருண்
“என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. நான் மரியாதை குறைவாக பேசிவிட்டேன். எதை பற்றியும் யோசிக்காமல் கோபத்தில் அப்படி நடந்து கொண்டேன்.”என்று மன்னிப்பு கேட்டான்.
சுந்தரம் “சரிப்பா. இப்பொழுது மதி நமக்கு உதவலாம் இல்லையா?” என்று கேட்டார்.
அருண் முக மலர்ச்சியுடன் “கண்டிப்பாக அப்பா” என்றான்.
பிறகு அருணும் மதியும் அங்கிருந்து விடை பெற்றனர். அதுவரை அமைதியாக இருந்த வெற்றி அவர்கள் சென்றதும் சுந்தரத்தை பார்த்து ஆவேசமாக பேசினார் தொடங்கின்னான். ஆனால் அவன் பேசும் முன்பே சுந்தரம்
“பொறுப்பான. நீ என்ன பேச போகிறாய் என்று எனக்கு தெரியும். ஆனால் வீட்டில் சிறியவர்கள் என்றுமே வீட்டில் உள்ள பெரியவர்களை பின்பற்றியே நடப்பார்கள். அருணின் இன்றைய முன் கோபம் உன்னை பின் பற்றி கூட இருக்கலாம் அல்லவா?” என்று கேட்டு சிரித்தார்.
வெற்றியால் இதற்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.
“கடைசியில் என் தலையில் கட்டுகிறீர்களா?” என்று கேட்டான்.
சுந்தரம் “நீயும் அருணின் இந்த மாற்றத்தின் காரணம் மதி என்று தானே கூற வந்தாய்?” என்று கேட்டார்.
“நான் கூற வந்தது தவறில்லை. உங்களிடம் கூற வந்தேன் அல்லவா? அதுதான் தவறு. அந்த பெண் மதியை தூக்கி வைத்து ஆடாதீற்கள் ஒரு நாள் கவலை படும் படி செய்து விட போகிறாள்” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றான்.
தொடரும்…
Pls share ur valuable cmnts here
https://www.sahaptham.com/community/malar-bala/paavaiyin/paged/2/