Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

கரு இல்லாத கதை - மீனாக்ஷி சிவக்குமார்  

  RSS

Meenakshi Sivakumar
(@meenakshi-sivakumar)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 20
29/06/2019 3:18 pm  

           கரு இல்லாத கதை

சாரு வை அவளது மாமியார் இழுத்துக்கொண்டு சாரு வின் தாய் வீட்டிற்கு வந்தாள்,

"இந்தா உன் மகளை நீயே வச்சிக்கோ அண்ணண், உன் கிட்ட எதுவுமே நான் பேச வரலை" என்று வெறுப்பை கொட்டி தீா்ந்துக்கொண்டு இருந்தாள் சாரு வின் மாமியார் ஆண்டாள்.

இதற்கிடையில், சார்விக்கு நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தர் பதவி கிடைத்தது, அரசாங்க வேலை கிடைத்த சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தை தன் தாய், தந்தையிடம் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொண்டாள் சார்வி,  

நீண்ட நேரமாக தொடர்பு கொண்டும் எந்தவித பதிலும் இல்லாததால் சார்வி தன்  வீட்டிற்கு கிளம்பலானாள்.

சார்வி, ஒரு 25 மதிக்கத்தக்க பெண்மணி, நல்ல உடல்வாகு நகரத்தில் M.Sc.,M.Phil வரை படித்து முடித்து அரசாங்க வேலைக்காக படித்து கொண்டும், பகுதி நேரமாக ஒரு தனியார் கம்பெனியில் Steno வாகவும் இருந்தாள். 

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தர் பணிக்கான தகுதி தேர்வில் வெற்றி பெற்று தற்போது சுருக்கெழுத்தராக தேர்ச்சி பெற்று, தன் பணி நியமன ஆணையை பெறுவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறாள் சார்வி.

சாரு, அந்த கால நடிகை சீீீதாவை உரித்து வைத்தது போல இருப்பாள், 

 
மாமியார் தன் கணவனிடம் இருந்து தன்னை பிரிப்பதாக எண்ணியப்படியே, மாமியாரின் வசைப்பாட்டுக்கு செவியை தானம் கொடுத்து விட்டு, சிவனே என்று நின்றாள்.

சாருவின் தாய்க்கு தன் மகளின் வாழ்க்கை தன்னால் பாதிக்கப்பட்டு விட்டதே, என்று கலங்கினாள்.

சாருவின் கணவரின் வெறுப்பும், மாமியாரின் கொடுமையும் சாருவிற்கும், அவளது குடும்பத்திற்கும் பெரும் இடியாக தான் இருந்தது.

" என் மகனுக்கு வேற கல்யாணம் பண்ணப்போறோம், தடுக்கனும் னு நினைச்ச, உன்னை இருந்த இடம் தெரியாம பண்ணிருவன்" என்று இரக்கமே இல்லாமல் மாமியார் பேசியது சாருவிற்கு  வேதனையாகவும், வலியாகவும் இருந்தது.

சாருவின் மாமியார் தன் காரில் புறப்படும் போது,  சார்வி எதிரில் வந்தாள், 

 
"அத்தை நான் அரசாங்க வேலை வாங்கிட்டேன், இந்தாங்க" என்று தன் அத்தைக்காக ஆசையாய் வாங்கி வந்த புடவையை நீட்டினாள், சாருவின் வீட்டின் வாசலில் இருந்து,

 "சார்வி செல்லம் எப்படிம்மா இருக்க, நல்ல இருடா, உன் எண்ணத்துக்கு நீ நல்லா இருப்பம்மா", என்று கண்ணீர் வடித்தாள். 

" என்ன அத்தை நீங்க, எங்கள படிக்க வைக்க அப்பா கஷ்டப்பட்டதைவிட நானும், என் அக்கா சாருவும் படிக்க நீங்க பட்ட கஷ்டத்தை மறந்தா, நாங்க மனுசியே இல்ல அத்தை" என்ற சார்வியின் இதயம் கலங்கியது.

"மாமாவுக்கும், அத்தானுக்கும் பட்டு வேட்டி எடுத்துட்டு வந்துருக்கேன், குடுத்துறுங்க நான் பின்னாலே வந்துடுறேன்" என்றாள் சார்வி.

"மாமா வாழ்க்கையே ஒன்னுமில்லாம ஆகிட்டாலே, உன் அக்கா" என்று கதறினாள் மாமியார்.

அப்படி என்னதான் நடந்தது, இப்படி பாசத்தை கொட்டுற ஆண்டாள் ஏன்  இப்படி பத்ரிகாளி ஆட்டம் ஆடுறாங்க, அப்படினு தான யோசிக்கிறீங்க. 

வாங்க என்ன நடந்தது, ஏன் இவங்க இப்படி ஆனாங்க னு பாக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில்   மளிகைக்கடை வைத்திற்கும் குணநிதிக்கு இரண்டு மகள்கள் மட்டும் தான் சாரு, சார்வி.

சாரு பிறந்து இரண்டாவது வருடத்தில் சார்வி பிறந்தாள், குணநிதியின் மனைவி கோதைக்கு உலகமே தன் குடும்பமும்,மகள்களும் தான். 

குணநிதி  வீட்டில் இல்லாத நேரத்தில் கோதை தான் தந்தையாகவும் இருந்து, வீட்டை வழி நடத்தி செல்வாள்.

குணநிதியின் ஒரே தங்கையாகிய ஆண்டாளுக்கு, BHEL லில் வேலை பார்க்கும் கிருஷ்ணை திருமணம் செய்து வைத்தான் குணநிதி, 

தாய் இல்லாமல் வளர்ந்த ஆண்டாளுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து திருமணம் செய்து வைத்தான்.

ஆண்டாள் பருவம் அடையும் தருணத்தில், அவளது தந்தை இறந்து விட எல்லாமுமாக இருந்த தன் அண்ணனை  பிரிந்து செல்ல மனமில்லாமல் பிரிந்து சென்றாள் ஆண்டாள், 

முதல் பிரசவத்திற்கு தன் தாய் வீட்டிற்கு வந்த ஆண்டாள், முதல் குழந்தை ஆணாக இருந்தால் உனக்கு பிறக்க போகும் பெண் குழந்தைக்கு தான் என்று சம்பந்தம் இட்டாள்.

அப்போது தான் குணநிதிக்கும் கோதை கல்யாணம் நடந்திருந்தது, 

குணநிதியின் குடும்பம் கஷ்டப்படும் போது எல்லாம், கை கொடுத்து தூக்கிவிட்டது ஆண்டாள் தான்.

கால சக்கரம் வேகமாக சுழன்றுக்கொண்டுருந்தது.

சார்வி எட்டாவது படித்துக்கொண்டு இருந்தாள், காலையில் இருந்தே அவளுக்கு தன்னது உடல்நிலையில் ஏதோ மாற்றம் நடப்பது போலவே இருந்தது, 

பாதி நேரம் விடுப்பு எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தவள் தன் தாயிடம் எதுவும் சொல்லாமல், அப்படியே வந்து படுத்து விட்டாள், 

வீட்டில் சார்வி, கோதை தவிர யாருமே இல்லை, சார்வி குளிக்க போன சமயத்தில், கோதை சார்வின் மாற்றத்திற்கான காரணத்தை புரிந்ததுக்கொண்டாள். சார்வி பூப்படைந்து விட்டாள்.

சார்வியின் நிலை மகிழ்ச்சியை கொடுத்தாலும், சாருவின் நிலை நினைத்து வருத்தப்பட்டாள்,

சார்விடம் சாருவின் நிலையை எடுத்து சொல்லி, யாரிடமும் தான் பூப்படைந்ததை சொல்லக்கூடாது என்று சொன்னாள் கோதை.

சார்வியும் சாி என்று ஒத்துக்கொண்டாள், 

சார்விக்கு டெங்கு காய்ச்சல் என்று பொய் சொல்லி, அவளை வெளியே விடவே இல்லை, சடங்கு சம்பிரதாயமும் இருவருக்குள்ளே நடந்து கொண்டு இருந்தது.

சாருவிற்கு, தான் இன்னும் வயதுக்கு வரவில்லை என்ற ஏக்கம் இருந்தது ,  

சாருவிற்கு தான் ஒரு நாள் நிச்சயம் வயதுக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் இருந்தாள், ஆனால், இவள் ஒரு போதும் பூப்படைய போவதில்லை என்பது கடவுளுக்கு மட்டும் தானே தெரியும்.

1 வருடமாக சார்வி யாருக்கும் தெரியாமல் மாதவிடாய் பிரச்சனையை எதிர்க்கொண்டு இருந்தாள்.

ஒரு நாள் பள்ளியின் உணவு வேளையில், 

சார்வின், தோழியின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கிளம்புவதை பற்றி பேசிக்கொண்டு இருந்தனா் அவளது தோழிகள்.

"நம்ம பிரண்டஸ் எல்லாரும் வயசுக்கு வந்துட்டாங்க, சார்விய தவிர,இவளும் இவ அக்கா மாதிரி வயசுக்கே வரமாட்டா போலயிருக்கே" என்று கிண்டல் அடிப்பதை சார்வியினாள் ஏத்துக்கொள்ளவே முடியவில்லை.

தன்அக்காவாள் படும் அவமானத்தை  தாங்கி கொள்ள முடியவில்லை சார்விக்கு.

 தன் தாயின் மீது அதிக  வெறுப்பும் கோபமும் வந்தது, இன்று மாலை ஒரு முடிவு கட்டி விட வேண்டும் என சைக்கிளில் வேகமாக புறப்பட்டாள்.

சைக்கிளை விட்டு இறங்கியவள், சைக்கிளை தன் காலால் எட்டி தள்ளிவிட்டு வேகமாக அடுப்பங்கரையை நோக்கி நடந்தாள் சார்வி.

அவளுக்கு பிடித்த பால் கொழுக்கட்டையை செய்து கொண்டு இருந்தாள் கோதை,

"சார்வி இந்தா உனக்கு பிடிச்ச பால் கொழுக்கட்டை " என்றாள் கோதை யதார்த்தமாக, 

வந்த வேகத்தில் தட்டிவிட்டாள், அது கோதையின் கை மற்றும் முதுகில் விழுந்தது, சூடாக இருந்தாள் அது மேனியில் பட்டதும் வலியில் கத்தினாள் கோதை.

"எப்பம்மா சொல்ல போற நான் வயசுக்கு வந்தத, நான் நீ பெத்த புள்ளை தானே  ஏன் என் சந்தோஷத்தை சாவடிக்கிற, என் கூட படிக்கிற பிள்ளைங்க என்னை கிண்டல் பண்ணுறாங்க, என் உணர்வ கொஞ்ச கொஞ்சமா கொல்லுற, என்னால் முடியல, அவளுக்காக நான் கஷ்டப்பட முடியாது, அவ தலையெழுத்து வயதுக்கு வரவே மாட்டா, அவளுக்காக நான் அனுபவிக்கனுமா," என்று தலையிலே அடித்துக்கொண்டு அழுதாள் சார்வி.

இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்த சாருவிற்கு தன் பிறப்பின் மீது  ஆத்திரமாகவும் இருந்தது,  

இதை அனைத்தையும் கவனித்த கோதை சாருவை மருத்துவரிடம் அழைத்து சொன்றாள்.

(obstetrics & gynecology) ஒபிஸ்ட்ட்ரிக்ஸ்  & கினேகாஜி  மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்  
மருத்துவர் டாக்டர். சங்கீதா வேணுகோபால், "கோதை சாருவை கொஞ்சம் வெளியே இருக்க சொல்லுங்க, நீங்க மட்டும் உள்ளே வாங்க" என்று சொல்லியப்படியே தன் அறையினுள் நுழைந்தாள்.

"டாக்டர், சாருவிற்கு ஒன்னுமில்லையே" என்றாள் கோதை.

"உட்காருங்க கோதை, நான் சொல்லுறதை கவனமா கேளுங்க" என்றப்படி சங்கீதா பேசலானாள்.

பூப்படைதலுக்கான மாற்றங்கள் கர்ப்பப்பையில் மட்டும் நடக்குறதுல்ல, மூளையில் இருந்து ஜி.என்.ஆர் (Gonodotropin releasing Hormone) கோனொடோட்ரோபின்  ரிலீசிங்   ஹோர்மோன் என்ற ஹார்மோன் சுரந்து, அது மூளையின் அடிப்பகுதியில இருக்குற பிட்யூட்டரி(pitutary) என்ற சுரப்பினை தூண்டிவிடும்.

இந்த சுரப்பிலிருந்து சுரக்கும்  (Follicular Stimulating Hormone) போலிசுழற்  ஸ்டிமுலேட்டிங்  ஹோர்மோன்  என்ற திசுவை  தூண்டிவிடும், உடனே அது ஈஜ்டிரஜன் என்கிற இன்னொரு ஹார்மோனை உற்பத்தி செய்து, இது தான் சில மாற்றங்கள் ஏற்படுத்தும், மூளையின் ஒரு பகுதியிலிருந்து வரும் ஜி.என்.ஆர். தான் இதுக்கான மூலக்காரணம்.

இந்த நிகழ்வு நடக்கும் போது அதிக உதிரப்போக்கு நடக்கும், அதான் பூப்படைதலுனு சொல்லூவாங்க,

 
உங்க மகளுக்கு இந்த நடக்கவே இல்ல, அதான் அவங்க இன்னும் வயதுக்கு வரல,

பூப்படைதல் அடையாத பெண்கள், பெண்மையில் முழுமை அடையாதவராக பார்க்கப்படுறாங்க,

செயற்கை முறையில் வர வச்சாலும் ,அது தற்காலிக தீர்வாதான் இருக்கும், நீங்க இதை ஏன்,எதுக்குனு ஆராய்ச்சி பண்ணாம , அவங்கள நீங்க  எப்படி நடத்துறீங்கனு இருக்குறதுல தான் இருக்கு,

கருப்பையில் சினை உருவாக நான் மருந்து தரேன், தொடர்ந்து சாப்பிடுங்க, ஒரளவு தான் என்னால பண்ணமுடியும், அவங்களுக்கு ஹரர்மோன் சுத்தமா சுரக்கல, பாப்போம் என்று  மருந்துகளை எழுதி நீட்டினாள் டாக்டர்  சங்கீதா.

கோதைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை,  கோதை சாருவை பற்றிய கவலையிலே இருந்தாள்.

சார்வியின் ஏக்கமும், சாருவின் குறையும் கவலையை தந்தது,  கோதை ஒரு முடிவுக்கு வந்தாள், 

ஆட்டு இரத்தத்தை சாரு தூங்கி கொண்டு இருக்கும் போது, அவளது துணியிலும்,  அவள் நடந்து பாத்ரூம் செல்லும் வழி எங்கும் சொட்டு  சொட்டாக வைத்தாள்,

கோதை கடைக்கு செல்வது போல செல்ல, வேணுமென்றே எதிர்வீட்டு வனிதாவை சாருவிடம் சென்று பால் வாங்க பாத்திரம் வாங்கி கொண்டு வர சொல்ல,

வந்த வனிதா, பாத்ரூரில் குளிக்கும் சாருவை அழைக்க சாரு அழ ஆரம்பித்தாள், கதவை திறந்து உள்ளே சென்ற வனிதா, சாரு வயதுக்கு வந்து விட்டதாக உறுதி செய்தாள்,

கோதை தன் விருப்பம் போல அனைத்தும் நடக்க, மஞ்சள் நீராட்டு விழா விமர்சையாக நடந்தது, 

வந்த கையோடு ஆண்டாள் தன் மகன் மோகனுக்கு நிச்சயதார்த்தம்  செய்து, திருமணத்திற்கு நாள் குறித்து சென்றாள்,

சாரு மற்றும் மோகன் கல்யாணம் விமர்சையாக நடந்து முடிந்தப்பின் சார்வி வயது வந்தாக சொல்லி, அவளது மஞ்சள் நீராட்டு விழா நடந்தது,

விழா முடிந்த கையோடு சென்னைக்கு படிக்க சென்றாள் சார்வி.

சாருவிற்கு தன் அம்மா தன்னை பூப்படைந்ததாக  செய்த நாடகம் தெரிந்தும், சிறு வயதிலிருந்து மோகன் மீது உண்டான காதலால் திருமணத்திற்கு சம்மதித்தாள்,

இருவரும் இல்லற வாழ்வில் ஈடுபட்டு கொண்டு இருந்தனா்,  குழந்தைக்கான ஏக்கம் வந்தது, 

ஆண்டாள் செல்லாத கோயில், இல்லை குளம் இல்லை, சாருவும் தன் குறை தெரிந்தே துணைக்கு  சென்று கொண்டு  இருந்தாள்,

திடீர்   சித்தர் என்று கோயிலின் பக்கத்தில் இருந்த, ஒருவர்.

 
 உங்க மகனுக்கு அழகான ஆம்பள வாரிசு இன்னும் மூன்று மாசத்துல உருவாகனுனா நான் சொல்லுற மாதிரி செய்யனும், உங்க மருமகள அழைச்சிக்கிட்டு பிரம்ம முகூர்த்ததுல இந்த கோலிலோட குளத்துல குளிச்சிட்டு, என்னை பார்க்க வாங்க, நான் உங்க வம்ச விளக்க ஏத்தி வைக்கிறேன் என்று அருள் வருவது போல சொல்லி மயக்கமடைந்தார்.

பலவீனமானவர்களை எளிதில் ஏமாற்றி விடலாம் இல்லையா, ஆண்டாளும் அவர் சொன்னது போலவே செய்து விடலாம் என்று முடிவு செய்தாள்.

மறு நாள் காலையில், சித்தர் சொன்னத்தை செய்து முடித்து  முன் வந்து அமர்ந்தனா், 

சித்தர் என்ற போர்வை போர்த்திக்கொண்ட ஆசாமிகளின் அட்டகாசம் அரங்கேறியது, 

"உங்க மருமகளுக்கு நாக தோஷம் இருக்கு ஒரடி உயரத்துல நாக சிலை வெள்ளியில செய்து விடுங்க, 2000 ரூபாய்க்கு பூஜை பொருட்கள் வாங்கிட்டு வந்து குடுங்க, அது இல்லாம எனக்கு 10,000 பணம் குடுத்தா நான் கொள்ளி மலையில் இருந்து, அரிய வகை  கொண்ட  மூலிகை மருந்து உங்களுக்கு கிடைக்கும்" என்று ஏமாத்து வேலையை ஒன்றின் மீது ஒன்றாக அரங்கேற்றினான்.

பணத்தை கொடுத்தும், நாக சிலை செய்துகொடுத்தனா், சித்தர் ஒரு மூலிகை மருந்தை கொடுத்தார் .

சாருவிற்கு தான் வயதுக்கு வரவில்லை, என்பதை நினைத்து, தன் நிலை தெரியவரும் வேலையில் தன் உயிரை மாய்த்து கொள்வது என்ற முடிவில் இருந்தாள்.

நாட்கள் நகர்ந்தது, மோகனை அனைவரும் ஆண்மை இல்லாதவன் என்று கேலி செய்தனர், 

 
ஆண்களுக்கும் கற்பு உண்டு, அவர்களும் குழந்தை பெற்று கொள்ளாத நிலையில் இந்த சமூகத்தின் அவமதிப்புகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

மருந்தவரிடம் ஆலோசனை பெற மோகனும்,சாருவும், ஆண்டாளும் சென்றனா், மருந்துவர் இருவரையும் பரிசோதித்து சாரு பூப்படையவில்லை, பூப்படைவதற்கான ஹார்மோனின் இயக்கம் முற்றிலுமாக நடைபெறவில்லை என்று உறுதி செய்தார்.

 ஆண்மை தன்மை இல்லாத ஒரு ஆணை பெண்ணிற்கு தெரிந்தே திருமணம் செய்து வைப்பது, எந்த அளவிற்கு பாவமோ, குற்றமோ,அதே காரியத்தை தான் சாரு மோகனுக்கு செய்து உள்ளாள், தன்னுடைய ஆசைக்கு மோகனை பயன்படுத்தி கொண்டாள்.

மோகனுக்கு அசிங்கமாகவும், வெறுப்பாகவும் இருந்தது, மிகுந்த மன அழுத்தத்திற்கு  தள்ளப்பட்டான்.

இதனால் சாருவை அவளது வீட்டில் கொண்டுவந்து விட்டாள் ஆண்டாள், சாருவிற்கு தன் குறை தெரியும் என்பதே மட்டும் தான் ஆண்டாளால் தாங்கி கொள்ளமுடியவில்லை.

சாரு வாழ்க்கையை சார்வி காப்பாற்ற வேண்டும், என்று கோதை சொல்ல, சார்வி  மறுத்தாள். கோதை செத்து விடுவேன் மிரட்டினாள்,

"சார்வி உன் அக்கா வாழ்க்கைய வேற ஒருத்தி வந்து பங்கு போடுறதுக்கு முன்னாடி, நீயே மோகனை கல்யாணம் பண்ணிக்க அப்ப தான் உன் அக்கா வாழ்க்கையை  காப்பாத்த முடியும்" என்று அழுது ஆர்ப்பாட்டம்  செய்தாள் கோதை.

சாருவும் அதையே முன் மொழிந்தாள்,
"சார்வி, குறையோட பொறந்ததுல என் தப்பு என்னை இருக்கு, நான் உன் வாழ்கைய ஒரு நாளும் பங்கு போட மாட்டேன், என்னால் உண்டான அவர் மேல இருக்குற கறைய நீ தான் போகனும், எனக்காக இத மட்டும் பண்ணு சார்வி" என்று காலில் விழுந்தாள் சாரு.

"பிரம்மனின் படைப்பில் ஒவ்வொன்றும் அரிய விசயம் தான், கொஞ்ச வித்தியசமா கையோ, காலோ பொறக்குற குழந்தை எப்படி வித்தியாசமா  இந்த உலகம் பாக்குதோ அதே போல தான் இதுவும் சார்வி, 

 
நீ படிச்ச புள்ளை புரிச்சிக்குவனு நினைக்கிறேன், இப்பவே முடிவு சொல்ல வேணாம், மோகன் வேற ஒருத்திய கை காட்டுறதுக்க முன்னாடி சொன்னா போதும் , கஷ்டத்தோட வாழ்ந்துடலாம், கறையோட வாழ கூடாது,
 
 நம்ப  உண்டானத நீ சரி பண்ணுவனு நினைக்கிறேன்" என்று குணநிதி நிதானமாக அறிவுரை கூறி கொண்டு சென்றார்.

"அவளோட பிரச்சினைக்கு நான் எப்படி தீர்வாக முடியும், எனக்குனு ஆசை இருக்காதா, அக்கா புருஷன நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும், என் கனவு, வேலை எல்லாம் கனவாவே முடிச்சிபோச்சா, கல்யாணம் என்றால் என்ன பலிபீடமா அவ பாவத்துக்கு நான் பலி ஆகணுமா " என்ற பல கேள்விகளுக்கு முடிவு வராமலே  முடிவிலியாக தொடர்கிறது இந்த சிறுகதை  ஒரு தொடர்கதையை நோக்கி.

-மீனாக்ஷி சிவக்குமார்.


Quote
Share: