Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

துப்பறிவாளன் - மீனா...
 
Notifications

துப்பறிவாளன் - மீனாக்ஷி சிவக்குமாா்  

  RSS

Meenakshi Sivakumar
(@meenakshi-sivakumar)
Eminent Member Writer
Joined: 9 months ago
Posts: 20
04/06/2019 3:35 pm  

துப்பறிவாளன்

 
இரவு 12:00 மணி, ஜனவரி 01.01.2019.
 
யாதவ் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவன் காதருகில் சென்று " விஸ் யூ ஹேப்பி நியூ இயா் டா கேடி" என்று வேகமாக கத்தினாள் ஜோஷினி.
 

தூங்குவது போல பாவனை செய்த யாதவ், அவளை  பிடிக்க நினைக்க அவளோ தள்ளிவிட்டு ஒடினாள்.

 
வான வேடிக்கையும், ஆட்டமும் பாட்டுமாக இருந்த தெருவை மாடியில் இருந்தபடி  
பாா்த்துக்கொண்டு இருந்த, "ஐோ" வை பின்னால் இருந்து கட்டிக்கொண்டான் யாதவ்.
 

"ஜோ நான் ரொம்ப பாக்கியசாலி உன்ன அடைஞ்சத்துல, இந்த உலகத்துலயே நான் அதிகம் விரும்புறது உன்ன தான் தெரியுமா என் அன்பு காதல்  மனைவியே " என்றப்படியே அவளை இறுகிக்கட்டிக்கொண்டான் யாதவ்.
 

"யாதவ்,நம்ப ஏழு வருமா காதலர்கள், இன்னைக்கு கணவன் மனைவி, வாழ்க்கை வேகமா போய்கிட்டு இருக்கு யாதவ், இந்த உலகத்துலயே ரொம்ப  சந்தோசமான பொண்ணு யாரு சொல்லு? நான் தான்! , என் வாழ்க்கையோட மொத்த சந்தோஷம் நீ தான் " என்ற அவள் அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
 

போனில் மணி ஒலித்தல்,
 

"யாதவ் போன் ரீங் ஆகுது, நான் எடுத்துட்டு வரேன், இரு" என்று எழுந்து நடந்தவள் போனை எடுத்து வந்துக்கொடுத்தாள் யாதவிடம்,
 

"யாரு" என யாதவ் சைகை செய்ய 
 " பிக் பாஸ், தொல்காப்பியன்"  என்றாள் மெதுவாக, 

 
"ஹாலோ, தொல்ஸ் விஸ் யூ ஹேப்பி நியூ இயா்" என்றான் துள்ளலோடு,
 

மறுமுனையில், "விஸ் யூ ஹேப்பி நியூ இயா், ஆா் யூ பிஸி யாதவ்" என்றான் கனிவான குரலில் தொல்காப்பியன்.
 

"சொல்லூங்க தொல்ஸ்", என்றான் பணிவுடன்.
 

"பிரேக்கிங் நியூஸ்" பாத்துட்டு கூப்பிடுங்க யாதவ்" என்று போனின் தொடா்பை துண்டித்து விட்டான் தொல்காப்பியன்.
 

"ஜோ, டிவி ஆன் பண்ணு" என்று சொன்னப்படியே ஷோப்பாவில் வந்து சாய்ந்தப்படி அமா்ந்தான் யாதவ்.
 

ஐோ வும் டிவியை ஆன் செய்து ரீமோட்டை கையில் எடுத்தப்படியே யாதவின் அருகில் வந்து அமா்ந்தாள்.
 

 பிரேக்கிங் நியூஸில்  வந்தவை, 
 

வணக்கம்,போரூர்  ஸ்ரீ அருள்மிகு இராமநாதீஸ்வரா் கோயில் அருகே உள்ள பிரபல மாடலிங் துறை நிபுணரான ரேயாஸ், மற்றும் அவரது குடும்பம் பயங்கரமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு, 
முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடைந்துள்ளனா். இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் , பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யாரு? போன்ற கேள்விகளோடு போலீஸ் சார் விசாரனை நடத்தி வருகின்றனர். 
 

இந்த நிகழ்வு மாடலிங் துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
 

இறந்த ரேயாஸ் பிரபல காட்டுயிர் புகைப்படக்கலைஞா் பிரேஸ்வரா லகானியின் மகன் என்பதும், பிரேஸ்வரா லகானி சில மாதங்களுக்கு மேலாக காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 
"ஜோ டிவியை ஆப் பண்ணு" என்று எதையோ யோசித்தப்படியே தொல்காப்பியனுக்கு போன் செய்தான் யாதவ்.
 

"தொல்ஸ்," பார்க்கவே பயங்கரமா இருக்கு", என்றான் புருவத்தை விரித்து.
 

"நீங்களும், ஜோவும் இங்க வந்தா நல்ல இருக்கும் யாதவ்" என்ற கணமே போனின் இணைப்பை துண்டித்தான் தொல்காப்பியன்.
 

சிறிது நேர யோசிப்பிற்கு பின், 
 

ஜோ என்று அவன் அழைக்கும் முன்பே, ஐோ தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு தயாராகி விட்டாள், 
 

இரண்டு நிமிடத்தில் யாதவும் கிளம்ப, காாில் இருவரும் ஜ லைட் டிடேக்டிவ் ஏஜென்சி நோக்கி சென்றுக்கொண்டு இருந்தனா்.
 

"ஜோ, எப்படி நீ இவ்வளவு சாதாரணமா கிளம்பிட்ட, உனக்கு நம்ம வேலை மேல கோபம்  வரல" என்ற யாதவின் கேள்விக்கு சிாித்தப்படியே யாதவின் தலை முடியை கொதினாள் ஐோ.
 

" தமிழ்நாட்டுல இருக்குற டாப் 10 கிரிமினல் லாயர் யாதவ் மற்றும் ஜோஷினி யாதவ் இருவருக்கும் தயக்கமா? 
 

வெக்கம்,வேதனை,அவமானம், துக்கம் என்றாள் ஜோ சிவாஜி கணேசன் பாணியில்.
 

யாதவ் வெறித்தப்படியே ஜோவை பாா்த்துக்கொண்டு இருந்தான்.
 

"ஏய், எனக்கு வோா்க் மேல கோபம் இல்ல, கல்யாணமாகி  3 மாசம் கூட ஆகல அதுக்குள்ள வேலைக்கு போகனுமா தான் யோசிக்கிறேன்" என்றான் கம்மிய குரலில்.
 

தொல்காப்பியன் சீனியர்  கிரிமினல் லாயர் அது மட்டுமில்ல நம்ம இரண்டு பேரோட சீனியர், 
 

இப்போ, நம்ம முன்னும் பேரும் ஐ லைட் டிடேக்டிவ் ஏஜென்சியோட ஒனா்ஸ், 
 

அத விடு நிழல் யூடூப் சேனல் லோட உயிரே நாடி  புரியுதா? மைடியா் மச்சான் என்றாள் கிண்டலோடு.
 

காரை ஜ லைட் டிடேக்டிவ் ஏஜென்சியின் கார் பார்க்கிங் கில்  நிறுத்தினான் யாதவ், ஜோவும் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இறங்கினாள்.
 

யாதவ் மற்றும் ஜோவும் லிப்டில் ஏறி இரண்டாம் தளத்திற்கு சென்றனா்,
 

"யாதவ் கொஞ்சம் சிரிச்ச முகத்தோடு இரு  " என்று ஜோ பற்களை கடித்துக்கொண்டு சொன்னாள், தொல்காப்பியனின் அறைக்கு முன்  நின்று கொண்டு, 
 

யாதவும் சாி என்றப்படி தலையாட்டினான், நன்கு மூச்சை இழுத்து விட்டு அறையின் கதவை தட்டினான் யாதவ். 
 

"தொல்ஸ் வரலாமா " என்றப்படி கதவை பாதி திறந்தான் யாதவ்,"
 

"வாங்க யாதவ் " என்றான் தொல்காப்பியன் எதிா் பாா்ப்போடு.
 
யாதவும், ஜோவும் வந்து முன் இருக்கையில் அமா்ந்தனா்.
 

"என்மேல எதும் கோபம் இல்லையே" என்றான் தொல்காப்பியன்.
 

"இல்ல தொல்ஸ், நீங்க சொல்லுங்க" என்று சேர்ந்தே சொன்னார்கள். .
 

யாதவ் மட்டும் தொல்ஸ் சை மனதிற்குள் கடிந்துக்கொண்டான், 
 

"பாவி, அஞ்சு வருசம் இவன் சீனியர் ஆனதும் போதும் நம்மல படுதுறான்யா, பொண்டாடி பெங்களூர் ல இருக்குறது இவருக்கு கொண்டாடமா போச்சி, பையனும் வெளி ஊருல படிக்கிறான் ல அதான் இவன் தொல்லை தாங்க முடியல" என்று புலம்பிக்கொண்டு இருந்தவனின் கையில் கிள்ளினாள் ஜோ.
 

தூக்கத்திலிருந்து எழுந்தது போல முழித்தான் யாதவ்.
 

"ஒகே யாதவ் அண்ட் ஜோ கம் டு தி பாய்ண்ட, என்ன நினைக்கிறீங்க இந்த கேஸ் பத்தி" என்று கேட்டார் தொல்காப்பியன் கூர்ந்த பாா்வையோடு.

 
"தொல்ஸ், யாராவது மாடலிங் துறையில எதிரி இருப்பாங்கலோ, முகத்தை சிதைச்சு இருக்காங்க னு சொல்லும் போது, இதுவா இருக்குமோனு நினைக்கிறேன்" என்றாள் ஜோ.
 

"எனக்கு அப்படி தோணல தொல்ஸ், வேற ஏதோ பெரிய காரணம் இருக்கனும், இவ்வளவு வன்மத்தோட ஒருத்தர் கொலை பண்ணும் போது, அந்த நபர் நாா்மலா இருக்க முடியாதுனு நான் நினைக்கிறேன் தொல்ஸ்" என்றான் யாதவ்.
 

"ம், கண்டிப்பா யாதவ், ஒரு கொலையை கண்டுபுடிக்கப்போகும்  போது, அந்த கொலையோட வாசனையை உணரணும் நம்ப இன்னும் உணரலனு நினைக்குறேன்" என்றான் தொல்காப்பியன் குழம்பிய மனநிலையோடு.
 

"இது நம்ம யூடியோபோட ரேடிங்க அதிகப்படுத்தும் தொல்ஸ்" என்றான் யாதவ்,
 

"இந்த கேஸ் நமக்கிட்ட  வருமா? எனக்கு இப்பவே அந்த வீட்டுக்கு போகனும் போல இருக்கு தொல்ஸ்" என்றாள் ஜோ.
 

"ஏசி குரு மூர்த்தி தான் அத டிசைட் பண்ணும் ஜோ, போலீஸ் எந்த ஒரு கேஸ்க்கு முடிவுக்கு வர முடியலயோ,அப்ப  அது கோல்ட்  கேஸ் லிஸ்ட் ல  வந்துரும், அப்போ அந்த கேஸ் டிடேக்டிவ்கிட்டையோ, இல்ல கிரிமினல் லாயர்கிட்டோ குடுப்பாங்க, பட் மிஸ்டா் குரு இன்டலிஜன்ட். வெய்ட் பண்ணிப்பாப்போம், நீங்க ரெஸ்ட் எடுங்க காலையில சார்ப்பா 10 மணிக்கு நம்ம மீட் பண்ணலாம்" என்றபடி தன் கைப்பேசியை இடது கையில் எடுத்துக்கொண்டு தொல்ஸ் எப்போதும் ஒய்வு எடுக்கும் அறையை நோக்கி நடந்தான்.

 
அலுவலகம் என்றாலும் ஒய்வு எடுப்பதற்காக அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன, டிடேக்டிவ் ஏஜென்சி என்பதால் இரவு பணிகள் இருக்கும் பட்சத்தில் அந்த அறையை பயன்படுத்தி கொள்வது வழக்கம்.
 

காலை 10:00 மணி அளவில்,
 

மூவரும் ஏசி குரு மூர்த்தியை பாா்பதற்காக யாதவ் காரில் புறப்பட்டனா்,
 

சாியாக மணி 10:45 ஏசி குருமூர்த்தியை அவரது அலுவலகத்திலே சந்தித்தனா். 
 

குரு மூர்த்தியும், இவர்கள் மூவரும்  4 வருடங்களாக நல்ல நண்பர்கள், 4 வருடத்திற்கு முன்பு நடந்த வினய் கொலை வழக்கில் ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடா்ந்து வருகிறது.
 

"மிஸ்டா் குரு", என்றான் தொல்காப்பியன்,
 

"தொல்ஸ் வாங்க, வாங்க ஐோ, ஹாய் யாதவ்" என்றான் குரு தோழமையோடு.
 

"நேத்துல இருந்து தூங்கல, செம அசதி" என்றான் குரு முகத்தை துடைத்தப்படி.
 

"கொலைய பத்திய துப்பு ஏதாவது கிடைச்சுதா குரு" என்றாள் ஐோ.
 

"இல்ல ஜோ, உங்க மூன்று பேராட உதவி தேவை, நான் காலையில் கூட உங்களுக்கு போன் பண்ணுன, லையன் கிடைக்கல" என்றான் மென்மையோடு.
 

"யாரு முதல்ல உங்களுக்கு கொலை நடந்ததா சொன்னது குரு" என்றான் யாதவ் ஆவலோடு.
 

"நியூ இயர் இல்லையா, சோ அந்த பகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து நியூ இயர் கொண்டாடுறது வழக்கம், கேக்,கிப்ட அண்ட சாக்லேட் கொண்டுப்போயி எல்லா வீட்டுக்கும் மிஸ்டா் அபிஷேக்  குடுப்பாரு. அப்படி அவங்க வீட்டுக்கு போகும் போது தான் இந்த கொலையை பாத்துட்டு கால் பண்ணுனாங்க," என்றான் குரு.
 

" டோா் ஒபன்ல இருந்துதா" என்றான் தொல்ஸ்.
 

"யேஸ், ஒரு தடயம் கூட கிடைக்கல தொல்ஸ், நீட்டா மா்டர் பண்ணிருக்கான்" என்றான் குரு.
 

"கண்டிப்பா ஒரு தடயத்தையாவது விட்டு  போயிருப்பான் குரு, கண்டுபிடிச்சிடலாம்" என்றான் யாதவ்.
 

"ஒகே, ரேயாஸ் அப்பா எங்க, ஏன் இந்த கொலை நடந்தது, ஏதாவது தெரியுமா குரு" என்றாள் ஜோ ஆச்சரியத்தோடு, 
 

"தெரியல ஜோ,  பிரேஸ்வரா ஜீனியர் மிஸ்டா் மனயூவ கேட்டா ஏதாவது கிடைக்க வாய்ப்பு இருக்கு" என்றான் குரு தெளிந்த பாா்வையோடு.
 

"ரேயாஸ் வீட்டை பாத்துட்டு போலாமே குரு" என்றான் தொல்ஸ்.
 

"இல்ல, தடவியல் துறை வீட்டுல இருக்காங்க இப்போ நம்பள உள்ளே விடமாட்டாங்க, நம்ம போயிட்டு வரதுக்குள்ள முடிஞ்சிடும் அப்புறம் போகலாம்" என்றான் குரு.
 

"ம், ஒகே யாதவ் நம்ம காரில் போகலாம், குரு நீங்க வரீங்களா எங்களோட" என்றாள் ஜோ.
 

"நான் மப்டிலதான் வரேன், ஒன்னாவே போகலாம்" என்றான் குரு.
 

நால்வரும் ஒன்றாக சேர்ந்து யாதவ் காரில் சென்று,
 

வளசரவாக்கத்தில் உள்ள டிரீம்ஸ் ஆலிகரி என்ற காட்டுயிர் மற்றும் நடிகர், நடிகையர்களுக்கு புகைப்பட ஆல்பம் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குனா் மற்றும் பிரேஸ்வரா லகானியின் ஜீனியர் மனயூவின் அறைக்கு முன்பு இருக்கும் காத்திருப்பு அறையில் அமர்ந்து இருந்தனா்.
 

சிறிது நேர காத்திருப்புக்கு பின், மனயூவின் உதவியாளர் " சாா், உங்கள உள்ள கூப்பிடுறாரு" என்றாள் மேற்கத்திய வாசம் வீசும் 23 வயது மதிப்புத்தக்க இளம்பெண்.
 

சொல்லிய மாத்திரம் எங்கள் பதிலை சற்றும் எதிர்பாா்க்காதவாளாக கடந்து சென்றாள்.
 

நால்வரும் மனயூவின் அறைக்கு சென்றனா், 
 

"ஹலோ மிஸ்டா், மனயூ" என்றப்படியே கையை குலுக்கினாான் ஏசி குரு மூர்த்தி.
 

"யுவர் மோஸ்ட் வேல்கம்" என்றப்படியே மூவருரின் கையை குலுக்கினான் மனயூ.
 

மனயூ, 28 வயது மதிப்புத்தக்க இளைஞன், வட இந்தியர்களின் சாயல் சற்று தூக்கலாகவே அவன் முகத்தில் தெரிந்தது, சரளமான ஆங்கில உச்சரிப்பு, தமிழ் உச்சரிப்பிலும் பெரிதாக குறை ஒன்றும் இல்லை.
 

கோட், சூட் என்று அதிகார தோரணையில், எவ்வித சலனமும் இல்லாத, கிலின் சேவ் செய்யப்பட்ட முகம் என நிறுவனத்தின்  இயக்குனருக்குரிய தோற்றம்.
 

"உங்களுக்கே தெரியும், உங்க குரு பிரேஸ்வரா லகானி மகன் கொடூரமான முறையில கொல்லப்பட்டு இருக்காரு, லகானிய கொஞ்ச நாள்லா வேற காணோம், சோ உங்களுக்கு லகானி பத்தி எதாவது தெரியுமா மனயூ?" என்றான் குரு மூர்த்தி.
 

ஜோ தன் கேமராவில் அந்த அறையை முழுவதுமா வீடியோ எடுத்தாள், பின் மனயூ பேசுவதை வீடியோ எடுக்க  கேமரா வை ஸ்டான்ட்யில் வைத்து  வீடியோ எடுக்கலானாள்.

 
"சாா், ரொம்ப நல்லவரு", என்று முடிப்பதற்குள் யாதவ் குறுக்கிட்டு, 
 

"மிஸ்டா் மனயூ, உங்களை பத்தி சொல்லிட்டு அதுக்கு அப்பறம் பேசுங்க" என்றான் யாதவ் டிடெக்ட்டிவ் தோரணையில்,
 

"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பை அந்தேரில் தான், எங்க அப்பா சின்னவயசுலயே எங்களை விட்டு போயிட்டாரு, அம்மா தான்  என்னை வளா்ந்தாங்க, அம்மா  வீ.டி ரயில்வே ஸ்டேஷன்ல executive  டைரக்டர் ரா இருந்தாங்க, பணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நான் வாடாலா ல இருக்குற வித்யாலங்கர் காலேஜ் ல தான் M.E information technology படிச்சேன்,

 

எனக்கு பிடிக்கல அந்த துறையில வேலைப்பாக்க அதான், நான் National institute of photography காலேஜ்ல டிப்ளமோ கோர்ஸ்  படிச்சேன், அப்போ நடந்த ஒரு national wildlife photography contest ல நான் தான்  வின் பண்ணுனே,அப்போ தான் லகானி சாா் chief guest டா வந்து இருந்தாரு, அப்போ சார் கிட்ட ஜூனியர் ரா சேர்ந்துட்டேன்" என்று சொல்லி முடித்தார் மனயூ.
 

"ஒ, அப்புறம் பிரேஸ்வரா லகானி உங்ககிட்ட எப்படி நடந்துக்குவாரு" என்றாள் ஜோ.
 

"அதிகமாக பேச மாட்டாரு, அவர நான் ஒரு தடவ தான் கான்சேட் அப்புறம் பாத்து இருக்கேன், என்ன ஆறு மாசம்  கழிச்சி வந்து பாக்க சொன்னாரு, நானும் ஐப்பான் டோக்கியோ ல  ஒரு international wildlife photography contest நடந்துச்சினு அதுல கலந்துக்க போயிட்டேன்,மூன்று வாரம்  கழிச்சி நான் வின் பண்ணிட்டேன்  சொல்லுறதுக்காக வந்தப்போது அவர காணவில்லை னு சொன்னாங்க, நானே நியூஸில் தான் பாத்தேன்" என்றான் பவ்யமாக.

 
"உங்க அம்மா என்ன பண்ணுறாங்க மிஸ்டா் மனயூ" என்றான் திடீரென யாதவ் கேட்க.
 

மனயூவின் முகம் மாறி விட்டது,
 

"மனயூ சாாி," என்றான்  யாதவ் கம்மிய குரலில்.
 

"எங்க அம்மா இறந்துட்டாங்க, எனக்கு யாருமில்லை," என்றவன் கண்களை முடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.
 

சில மணி துளிகள் மெளனத்திலே கரைந்தது,
 

"மனயூ, ஆர் யூ ஒகே" என்றாள் ஜோ.
 

"யா, சாாி" என்றான் மனயூ டியூஸ்யூ பேப்பரை கசக்கிக்கொண்டு.
 

"ஒகே, லிவ் ட், நம்ம ஐஸ்கிரீம் சாப்பிட்டலாமா" என்றப்படியே லேண்ட்  லையனில் 5 ஐஸ்கிரீமை எடுத்து வருமாரு சொன்னான்  மனயூ.
 

"சாி, உங்க அப்பா பேரு என்ன,என்ன பண்ணுறாரு ?" என்று யாதவ் கேட்டு முடிப்பதற்குள்,
 

 ஐஸ்கிரீம் வந்து விட்டது, 
 

வேலைக்காரன் அனைவரின் முன்பும் ஐஸ்கிரீமை பரிமாறினான், 
 

அனைவரும் ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தனா், மனயூ மட்டும் ஐஸ்கிரீம் கோப்பையை இரு கைகளால் இறுகிப்பிடித்தப்படி சில மணித்துளிகள் இருந்தான், பின்பு அதை உண்ண ஆரம்பித்தான், அவன் கை ரேகை நன்கு அதில் அழுந்தி இருந்தது.
 

இதையெல்லாம், ஜோ கவனித்தப்படியே, "என்ன மனயூ, நீங்க ஐஸ்கிரீம் பிடிக்கிற தோரணையே வித்தியாசமா இருக்கு " என்றாள் ஜோ.
 

"இது  சின்ன வயசுல இருந்து பழக்கம், எனக்கு எப்போல்லாம் அதிகப்படியான கோபமோ, டென்ஷனோ  வரும் போது நான் ஐஸ்கிரீம் கொண்டுவர பொருள இப்படித்தான் பண்ணிட்டு சாப்பிடுவன்" என்றான் மனயூ யதார்த்தமாக.
 

"அப்போ எங்க மேல கோவம்னு சொல்லுங்க" என்றாள் ஜோ.
 

"நோ, நோ, அப்பிடி இல்ல ஜோ" என்றான் மன்யு
 

ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்து நால்வரும் கிளம்பினா்.
 

"ஜோ, நம்ப டீம் மெம்பெர்ஸ் ச வாட்ச்  பண்ணச்சொல்லு" என்றான் யாதவ்.
 

நால்வரும் அடுத்தக்கட்டமாக கொலை நடந்த வீட்டிற்கு சென்றனா்.
 

ஜோ எப்போழுதுமே தன் கேமராவில் அனைத்தையும் படப்பிடிப்பது வழக்கம், தொல்ஸ் மற்றும் யாதவ் நடந்த நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்வா்.
 

ஜோ வழக்கம்போல அனைத்தையும் படப்பிடித்துக்கொண்டு இருந்தாள்.
 

கொலை கீழ் தளத்தில் நடந்து உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.
 

அது டுப்லெஸ் ஹவுஸ்,  மேல் தளத்தில் உள்ள படுக்கையறையில் யாரு  சில நாட்கள்  வாழ்ந்திற்கான சாத்தியக்கூர்கள் இருந்தன,
 

ஒரு ஆணின் உடைகள்,(அதுவும் அது ஒரு சுற்றுலா விரும்பிகள் பயன்படுத்தும் உடைகள்) காலணிகள், சிகை சீர்த்திருத்தும் டிம்மர், ஆண்கள் பயன் படுத்தும் வாசனை திரவியம்  போன்றவைகள் இருந்தன. அனைத்தும் கலைந்து கிடந்தது, ஒரு travel bag கும் இருந்தது, 
 

ரேக்கில் நிறைய பட சிடிகள் இருந்தன, 2019 புது  டைரி மட்டும் ஷெல்பில் இருந்தது. அதை யாதவ் எடுத்து பார்க்கும் போது அதிலிருந்து ஒரு கவர் விழுந்தது, 
 

அதை பிரிப்பதற்குள் ஜோ "யாதவ், எங்க இருக்க போகலாம் வா" என்றாள் பலத்த குரலில்.
 

பழைய துணிகளை வைத்து இருக்கும் கூடையின் அடியில் ஒரு family pack ஐஸ்கிரீம் வாங்குன  ஸ்லிப்  ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தது, அதை தொல்ஸ் கவனித்து எடுத்து வைத்துக்கொண்டான். 
 

அன்று மதியம் 2:00 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தனா்.
 

அந்த தெருவில் உள்ள அனைவரிடமும்  விசாரணை நடத்தி முடிக்க மாலை 6:00 நெருங்கி விட்டது.
 

நால்வரும் ரொம்பவே கலைத்துப்போயிருந்தனா்,
 

ஒரு ஹோட்டலில் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு, ஒய்வு எடுப்பது என்றும் மறுநாள் பணியை தொடங்குவது என்றும் முடிவு எடுத்தனா்.
 

மறுநாள் காலை 9:00 மணியளவில், 
 
குரு மூர்த்தி தனக்கு மேலிடத்தில் கூட்டம் நடப்பதால் அடிக்கடி நேரில் சந்திக்க முடியாது என்றும் தகவல்களை போனில் பரிமாறி கொள்ளலாம் என்ற குறுஞ்செய்தியை மூவருக்கும் அனுப்பி இருந்தார்.
 

யாதவ், ஜோ மற்றும் தொல்ஸ் மூவரும் மட்டுமே ஒன்றாக இருந்தனா், 
 

ஜ லைட் ஏஜென்சியின் வரவேற்பு அறையில் தொல்ஸ், யாதவ் மற்றும் ஜோ விற்காக காத்துக்கொண்டு பேப்பர் படித்துக்கொண்டு இருந்தான்.
 

யாதவ் மற்றும் ஐோ இவரும் மெதுவாக பேசி கொண்டப்படி நடந்து வந்தனா், 
 

"ஹேய், தொல்ஸ்" என்றனா், இருவரும் சேர்ந்தப்படி.
 

"ஹலோ" என்றப்படி பேப்பரை மடித்து வைத்து எழுந்தான். 
 

"போலாமா", என்றப்படியே  discussion அறைக்கு சென்றனா்.
 

"ஜோ நேத்து எடுத்த வீடியோவ play  பண்ணு" என்றார், தொல்ஸ்.
 

ஜோவும் வீடியோவை  play செய்தாள், மூவரும் சிறிய கையேட்டை எடுத்துக்கொண்டு குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்தனா்,
 

இரண்டு மணி நேரம் அப்படியாகவே கழிந்தது,
 

வீடியோவை பாா்த்து முடித்தப்பின்,
 

மூவரும் மதிய உணவுக்காக தயாராகினா், 
 

மதியம் 3:30 மணி,
 

"பிரேஸ்வரா வ கடைசியாக  பார்த்தது மிஸ்டா் மனயூ தான் என்று மட்டும் தெரியுது" என்றான் யாதவ், 
 

"நம்ம வழி மாறி போயிட்டு  இருக்கமோனு  தோனுது யாதவ்" என்றாள் ஜோ.
 

"அப்படியா! இப்போ நீ தலைய சுத்தி மூக்கத்தொடு பாப்போம்" என்றான் யாதவ் சீரியஸாக.
 

"யாதவ், காமெடி பண்ணாத " என்றாள் ஜோ.
 

"கோவப்படாத ஜோ, பிரேஸ்வரா தான் இந்த கேஸ்சோட லீடு புரியுதா" என்றான் யாதவ்.
 

"கண்டிப்பா யாதவ், அவர்கிட்ட தான் ரேயாஸ் கொலைக்கான பதில் இருக்கு" என்றான் தொல்ஸ்.
 

"அப்பறம், ஐப்பான்  டோக்யோல  அந்த கான்சேட் நடந்துச்சானு கண்டுபிடிக்கனும், அப்புறம் லகானி chief guest டா participate பண்ணுன national institute of photography contest ட investigate பண்ணணும்" என்றான் தொல்ஸ் ஆவி பறக்கும் காபி கோப்பையை கையில் வைத்துக்கொண்டு.
 

"எனக்கு என்னமோ மனயூ, லகானிய பாலோ   பண்ணுன மாதிரி தோணுது  யாதவ், அவன் சொன்ன இடம் எல்லாம் உண்மையானு கண்டுபிடிக்கனும்" என்றாள் ஜோ.
 

"லகானி எப்போ காணா போனாரு னு தெரியுமா," என்றான் யாதவ்.
 

தெரியவில்லை என்பது போல் இருவரும் ஜோ மற்றும் தொல்காப்பியன் பார்த்துக்கொண்டனர்.
 

லகானி wife  என்ன பண்ணுறாங்க? என்றான் தொல்ஸ்.
 

லகானி wildlife photographer ரா இருக்குறதுக்கு முன்னாடி, fashion photographer ரா தான் இருந்து இருக்காரு, Revathy jewellery shop மாடலிங்  வோா்க் எல்லாம் லகானி தான் பாத்துக்கிட்டு  இருந்தாரு , அதுக்கு மாடலா இருந்த பென்சிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, இவங்கலோட ஒரே மகன் தான் ரேயாஸ்,  இரண்டு  வருசத்துக்கு அப்புறம் பெங்களூர் மாடலிங்காக போனப்போ நடந்த ரெயில் accidentல  பெனசி இறந்துட்டாங்களாம்.   இந்த விசயத்த எல்லாம் பெனிசியோட மேக்கப் மேன்   தன்வீர்கிட்ட நேத்தே போன்ல கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்  தொல்ஸ் என்றான் யாதவ். .
 

"அப்போ பென்சி உயிரோட இல்ல, அப்படி  தானே," என்றான் தொல்ஸ் இரு கைகளை பிசைந்தப்படி.
 

"ரேயாஸ், அவங்க  தாத்தா, பாட்டி கூட தும்பாயில தான் இருந்து இருக்கான், ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தான்
இந்தியாவே வந்து இருக்கான், சென்னையில பேமிலி யோட செட்டில் ஆகி
ஒரு வருஷம் தான் ஆகுது, சோ இங்க எதிரிங்கனு யாருமில்ல, அதுவும் அவங்க அப்பா காணம போனதுல இருந்து தான்  லகானியோட மகன் தான் ரேயாஸ் னு எல்லாருக்கும் தெரியும் தொல்ஸ், இது அவன் பி.ஏ ஜனனி கிட்ட இருந்த collect பண்ணுன information" என்றான் யாதவ் தெளிவான சிந்தனையோடு.

 
"பணத்துக்காக கொலை நடந்துருக்குமோ?, இல்ல லகானியோட மகனு தெரிஞ்சதும் லகானியோட எதிரிங்க இவன கொலை பண்ணிருப்பானோ" என்றாள் ஐோ.
 

"பணத்துக்காக கொலை நடக்கல ஜோ, பணத்துக்காக வந்தவனா இருந்தா திருடிக்கிட்டு போகத்தான் பாப்பான், தடுக்க வந்தாக்கூட பலத்த காயத்தை ஏற்படுத்திட்டு தப்பிச்சி போகத்தான் பாப்பான்" இப்படி கொடூரமா கொன்னு முகத்தை சிதைக்கணும்னு அவசியம் என்ன? சொல்லு, சோ பணத்துக்காக கொலை நடக்கல, ரேயாஸ்க்கும் எதிரிங்க இல்ல, லகானியோட எதிரினு நீ சொல்லுறது யோசிக்க  வேண்டிய விசியம்" என்றான் யாதவ்.
 

"சாி, லகானி, ரேயாஸ் குள்ள relationship எப்படி?" என்றான் தொல்ஸ்,
 

"ரேயாஸ் வளா்ந்தது, அவங்க அம்மாவோட அப்பா,அம்மா வீட்டுல, 1வயசுல அவங்க அப்பாவ பிரிஞ்சி  தூபாய் க்கு போனவன், 29 வயசுல, 29 வருசம் கழிச்சி  அவங்க அப்பாவ பாத்தவனுக்கு எப்படி பாசம் வரும்,  ஒரு தடவக்கூட வந்து பாக்கல னு அவனுக்கு அவன் அப்பாவ புடிக்காதுனு அவங்க பாட்டி சொன்னாாங்க,  காலையில வாட்ஸுப் வீடியோ கால்  பண்ணி அவுங்க பாட்டிக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன் " என்றான் யாதவ்.

 
"என்கூட தான இருந்த இத எல்லாம் எப்போ பண்ணுன" என்றாள் ஐோ,
 

"அப்போ நீ தூங்கிட்டு இருந்த செல்லம்" என்றான் யாதவ்.
 

"யாதவ் ஒரு வேளை, ரேயாஸ் லகானிய எதாவது பண்ணிருப்பானோ?" என்றான் தொல்ஸ்.
 

"இல்ல தொல்ஸ், ஒருத்தவங்கல புடிக்கலனா சுத்தமா விலக்கிப்போவாங்க,  அவங்க முகத்தை கூட  பார்க்க விருப்ப மாட்டாங்க, அதுவும் ரேயாஸ்  பி.எ ஜனனி சொல்லுறத வச்சி பார்த்தா,  ரேயாஸ் க்கு  கோவம்கூட வராதாம்" என்றான் யாதவ்.
 

இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது, ஜோவின் மெயிலிக்கு message வரும் சத்தம் கேட்கிறது.
 

ஜோ போனை எடுத்துக்கொண்டு அறைக்கு வெளியே உள்ள ஷோப்பாவில் வந்து அமர்ந்தாள்.
 

சிறிது நேரத்திற்கு பின் அறைக்குள் வந்த ஜோ, 
 

" யாதவ் நான் கொஞ்சம் information collect பண்ணிருக்கேன்" என்றாள் ஜோ, லப்டப்பை கையில் பிடித்த படியே.
 

"லகானி, லாஸ்டா attend பண்ணுன function National institute of photography  யோட silver jubilee National wildlife photography contest தான், அதுலத்தான் மனயூ வோட photograph win பண்ணி 2 lacks prize money வின் பண்ணிருக்கு, அப்போ மனயூவோட போட்டோல impress ஆகி லகானி தான் எனக்கு ஜீனியரா வரீயானு,  மனயூ வ பாத்து கேட்டு இருக்காரு, அதுக்கு அப்புறமா லகானி தமிழ்நாட்டுக்கு வந்துட்டாரு, போன்ல மட்டும் தான் இரண்டுப்பேரும் தொடா்புல இருந்துருக்காங்க" என்றாள் ஜோ.
 

"அது மட்டுமில்ல, அந்த function க்கு லகானி  லேட்டா தான்
 வந்துருக்காரு,அதுனால  function  midnight வரைக்கும் நடந்தது னு அந்த function யோட organizer மிஸ்டா் மோகன் அனுப்பிய மெயில் இது" என்றாள் ஐோ.
 

"அவரு இரண்டு நாளைக்கு முன்னாடியே வந்துட்டதாகவும், prize win பண்ணுறவங்களுக்கு costly camera வ present பண்ணுதாவும் சொல்லி இருக்காரு, ஆனா அன்னக்கி present பண்ணில, function முடிச்ச அடுத்த பத்தாவது நிமிசமே flight க்கு கிளம்பிட்டாதாகவும் அந்த organizer மிஸ்டா் மோகன் சொல்லிருக்காரு" யாதவ் என்றால் ஜோ. .
 

"அதுக்கு அப்புறம் 3 மாசம் சென்னையில தான் இருந்து இருக்காரு, அப்போ தான் மனயூ ஐப்பான் contest பத்தி பேசிருக்கனும், அதுக்கு அப்பறம் லகானி மிஸ்சிங்" என்றாள் ஐோ.
 

"நம்ம பக்கத்துல தான் இருக்கு ஜோ" ஆனா  எங்கயோ
 இடிக்குது என்றான் யாதவ்.
 

"ஜப்பான் contest பத்தின detail எடுத்தியா ஐோ," என்றான் தொல்ஸ்.
 

"ம், அது June 5, 2018 அன்றிலிருந்து  நடந்துருக்கு தொல்ஸ், அது 5 நாள் function 5 photo ஒவ்வருவரும்  கொடுக்கணும்,  5வது நாள் முடிவுல தான் யாரு வின் பண்ணிருக்காங்கனு தெரியும், national level prize win  பண்ணுன,எதாவது ஒரு certificate இருந்தா போதும் அந்த contest க்கு eligible, 3 மாதத்துக்கு மனயூ வாங்குன certificate வச்சி  participate பண்ணிருக்கான், அவன் வின் பண்ணுனது இந்தியா, ஐப்பான, ஏன் தமிழ் நியூஸ்,magazines லாம் வந்துருக்கு 3 மாசம் எல்லாம் மனயூவ பத்திதான் பேச்சி தொல்ஸ்" என்றாள் ஜோ.

 
"ம்,  நமக்குக்கூட நல்லா தெரியுமே தொல்ஸ்" என்றாள் ஜோ. 
 

"சோ, மனயூ statement clear னு சொல்லு" என்றான் தொல்ஸ்.
 

"அப்படித்தான் தொல்ஸ்" என்றாள் ஜோ.
 

"இருந்தாலும், உன் cousin பிரனய் மும்பையில போலீஸா தானே இருக்கான்.  நீ அவன விட்டு மும்பையில மனயூ வீட்டுக்கிட்ட விசாரிக்க சொல்லு" என்றான் யாதவ்.
 

"சாி, லகானி எங்க தங்கி இருந்தாரு" என்றான் தொல்ஸ்.
 

"அண்ணா நகா், apartmentல தனியாதான் பல வருசமா, இருந்துருக்காரு" என்றான் யாதவ்.
 

"அப்போ, ரேயாஸ் வீட்டுல மேல இருந்த dress இவரோடது இல்லையா?" என்றாள் ஜோ.
 

"அங்க இருந்த dress லகானியோட dress இல்ல யாதவ், வேற யாரோ வந்து தங்கி இருக்காங்க," என்றான் தொல்ஸ்.
 

இப்படி பேசியப்படியே, அன்றைய நாள் கழிந்தது.
 
 
மறுநாள் காலையில் ஏஜென்சியின் வரவேற்பு அறையில்,  20 வயது மதிப்புதக்க ஒரு இளைஞன் அமா்ந்து இருந்தான், 
 

யாதவை பாா்த்தும் எழுந்தான் அந்த இளைஞன், 
 

"யாருப்பா நீ, உன் பெயர் என்ன?எதுக்கு வந்த" என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, 
 

தொல்ஸ் வந்து யாதவ் தோளின் மீது கை வைத்து  "கூல் மிஸ்டர் யாதவ்", நான் தான்
வரச்சொன்னேன் நம்ம  கேஸ் ல  கொலையாளிய பாத்த ஒரே ஆள் இவன் தான் என்றான் தொல்ஸ்.
 

"சொல்லுப்பா, அன்னைக்கு என்ன நடந்தது" என்று கேள்வி கேட்டான் தொல்ஸ்.
 

"அய்யோ,எனக்கு ஒன்னுமே புரியல, புரியுற மாதிரி சொல்லுங்க தொல்ஸ்" என்றான் யாதவ்.
 

"நான் அந்த வீட்டுல இருந்து ஒரு ஐஸ்கிரீம் கடை பீல் எடுத்து வந்தேன், அது 31.12.2018 அன்னக்கி டேட்ல இருந்தது, 
 

அந்த கடையில போயி விசாரிச்சப்போ அன்னக்கி, ரேயாஸ் வீட்டுல இருந்து தான் இந்த ஜஸ்கிரீம் கடையிக்கு order பண்ணிருக்காங்க strawberry favor ice cream family pack எடுத்துட்டு வரச்சொல்லி, அப்போ எடுத்துட்டு போனது,இந்த பையன். பேரு தினேஷ்" என்று சொல்லி முடித்தான் தொல்ஸ்.

 
தெளிவடைந்தவன் போல யாதவ், தினேஷை கவனித்தான்.
 

"நாங்க அந்த ஏரியாவில இருக்குற எல்லா வீட்டுக்கும் ஐஸ்கிரீம்  குடுக்கமாட்டோம் சாா்,  டிவி ல வாரங்கனு  இவங்க வீட்டுக்கு மட்டும்தான் தருவோம், எங்க கடையில இருந்து 3வது வீடுதான் சார் இந்த வீடு.  எப்பவும் ரேயாஸ் சாா் மனைவிதான் வந்து வாங்குவாங்க, ஆனா, அன்னக்கி வேற ஒரு ஆள் இருந்தாரு, அவரு ஐஸ்கிரீம் கப் கையில புடிச்சி பாத்து இருங்கீங்களானு கேட்டார், இல்லனு  சொன்னேன், try பண்ணி பாருங்கனு சொல்லி, காச குடுத்துட்டு போயிட்டாரு சார்" என்றான் தினேஷ்.
 

"சாி, உங்க போன் நம்பர் குடுத்துட்டு போங்க " னு அனுப்பி வைத்தான் தொல்ஸ்.
 

யாதவ்  கவனிச்சிங்கள,  எங்கையோ க்கு வைக்கிற மாதிரி இருக்குல, 
 

அப்போ அவன் அங்க தங்கி, கொலை பண்ணிட்டு போயிருக்கான் னு உறுதி செய்தனா், யாதவும் தொல்ஸ்வும்.
 

ஐோ "யாதவ் இங்க வாங்க" என்றாள் சத்தமாக, 
 

"யாதவ் ஏற்கனவே உங்களுக்கு மனயூ அம்மாவோட போட்டோ  கிடைச்சிருச்சா, அந்த டைரிக்குள்ள எதுக்கு வைச்சிருக்கீங்க, என்கிட்ட சொல்லவே இல்ல, இப்போ பாருங்க பிரானைய  force பண்ணி போட்டோவும் detail வாங்கிருக்கேன்" என்றாள், ஜோ.
 

"ஜோ, என்ன சொல்லுற, நான் எந்த போட்டோவையும் collect பண்ணல,டைரி குள்ளவா? அது அந்த வீட்டுல, இருந்து எடுத்து வந்தது" என்றான் யாதவ்.
 

"சாி, நீ மனயூ அம்மா வ பத்தி சொல்லு" என்றான் தொல்ஸ்.
 

"அவன் சொன்னது, address எல்லாம், உண்மைதான் தொல்ஸ், ஒன்ன தவிர, அவங்க இயற்கையா சாகலை, அவங்கள கொன்னுட்டாங்க" என்ற ஐோ. மேசையின் மேல் இருந்த டம்பளா் தண்ணீரை குடித்து விட்டு, மீண்டும் தொடங்கினாள்.
 

"பிரனயோட friend வீர் சிங் இரயிவே போலீஸ் சா, இருக்காரு, அவரு தான் மனயூவோட அம்மா ஆனிய யாரோ குத்திட்டு ஒடியதையும், அப்போ பக்கத்தில ஒரு costly band camera gift coverல pack பண்ணி இருந்ததா  சொல்லிருக்காரு, அங்க camera  இருந்ததா, வீர் யாருகிட்டயும் சொல்ல, அவர் எடுத்து வச்சிக்கிட்டதாககவும் சொல்லிருக்காரு" என்றாள் ஜோ.

"அந்த gift  cover Famous creative world software shop போட signature cover னு சொல்லிருக்காரு, அங்க போயி கேட்டு பாத்தப்போ அது யாரோ ஒரு photograher அவங்க junior க்கு present பண்ண வாங்குறதா சொல்லிருக்காருனும் வீர் சொல்லுறாரு" என்றாள் ஐோ.
 

"ஆனி ய   hospital ல சேர்த்து இருக்காங்க, அப்போ தான் மனயூ அங்க வந்துருக்கான், ஆனி  எதையோ சொல்லிருக்காங்க, அப்பறம் செத்துட்டாங்க னு வீர் சொல்லிருக்காரு யாதவ்" என்றாள் ஜோ.
 

"அதுமட்டுமல்ல, மனயூ பைத்தியம் புடிச்சி மாதிரி நடந்துக்கிட்டதாகவும் அத நினைச்சா இப்பவும் பயமா இருக்குனு வீர் சொல்லிருக்காரு" என்றாள் ஐோ.
 

" என்ன சொல்லிருப்பாங்க ஜோ?" என்றான் தொல்ஸ்.
 

"தெரியல" என்றாள் ஐோ.
 

"அண்ணா நகர் பிளாட்ல தான் பதில் இருக்கு, come lets go" என்றப்படி யாதவ் வேகமாக கீழ் படிக்கட்டில் இறங்கி சென்றான்.
 

மூவரும் அண்ணா நகர் லகானி, வீடு இருக்கும் apartment சென்றனா், 
 

பலரும் தெரியவில்லை, தெரியவில்லை என்றே சொன்னார்கள்.
 

ஒரு 20 வயது மதிப்புத்தக்க அகல்யா மட்டும் எதையோ கவனித்தாக சொன்னாள்,
 

"சார், மணி 11 இருக்கும் எனக்கு தூக்கம் வரலனு வராண்டால நடந்துகிட்டு இருந்தேன், அப்போ ஒருத்தர் என்கிட்ட லகானி வீடு எதுனு கேட்டார், நான் வீட்ட காட்டுன, அவர் உள்ள போனாரு, இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்ட மாதிரி இருந்தது, 2 நிமிசம் கழிச்சி சத்தம் நின்னுடுச்சி, அப்பறம் நான் பயந்துக்கிட்டு போய்ட்டேன் சாா். காலையில வீடு lock ஆகி இருந்தது." என்றாள் அகல்யா.
 

"இந்த வீட்டோட master key இருக்கா" என்றாள் ஐோ அகல்யாவிடம், 
 

"ரமேஷ் அண்ணாகிட்ட இருக்கும்" என்றாள் அகல்யா.
 

"யாரு ரமேஷ்" என்றான் தொல்ஸ்.
 

"Security" என்றாள் அகல்யா,
 

ரமேஷிடம் master key வாங்கிய பின் வீட்டை திறந்தனா்.
 

வீட்டினுள் நீண்ட நாட்களாக பூட்டிக்கிடந்த  வாசம் வந்தது,
 

மேசையின் மேல், லகானியோட மனயூ அம்மா  திருமணக்கோலத்தில்   இருக்கும் போட்டோவும், அதில் rest in peace my dear dad presented by மனயூ என்று எழுதி இருந்தது,
 

"மனயூவோட அப்பா லகானியா?, ஆனி ய கொன்னது லகானியா?
இப்போ லகானி உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கா?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டு போனாள்  ஐோ,
 

லகானி மும்பை national institute of photography silver jubilee function க்கு, chief guest வந்துருக்காரு, அப்போதான்  ஆனி ய பாத்துருகனும், தனிமையில இருக்குற லகானி ஆனி ய   தன் கூட வந்துருக்க சொல்லிருக்கனும், ஆனி  மறுத்து இருக்கனும்,லகானி கொன்னுருக்கனும், அப்போ தான்  present பண்ண வாங்குன camera வ விட்டுடு போயிருக்கணும், சாக கிடந்த ஆனி தன்னை குத்துனது உன் அப்பானு சொல்லிருக்கனும், அப்பறம் அவங்க செத்து இருக்கனும், மனயூ லகானிய பார்க்க வந்துருக்கணும் என்று மூவரும் ஒரு முடிவுக்கு வந்தனா்.
 

அப்போ பெனசி செத்ததுக்கு அப்புறம் ஆனி ய கல்யாணம் பன்னிருக்காரு ஏதோ ஒரு காரணத்துனால அவங்க பிரிஞ்சிருக்காங்க என்றான் தொல்காப்பியன்.
 

குருமூர்த்தியிடம் நடந்ததை விவரித்து மனயூவை கைது செய்ய சொல்ல, குரு மூர்த்தியும் மனயூவை அவன் நிறுவனத்திலே வைத்து கைது செய்தான்.
 

மனயூவிடம் கொலைக்கான காரணத்தை கேட்க குரு தன் பாணியில் விசாரணையை தொடங்கினாா்.
 

மனயூ முதலில் தான் கொலை செய்யவில்லை என்று மறுத்தாலும் இறுதியில் ஒத்துக்கொண்டான், தான் எப்படி கொலை செய்தான் என்பதை சொல்லும் போது கொடூரமாக இருந்தது. போலீஸ் காவலில்  இருக்கும் போது அவன் அளித்த வாக்குமூலம்.

 
"தன் அப்பா யாரு என்று தெரியாமலே, சின்ன வயதில் இருந்து அதிக அவமானங்களையும், அசிங்களையும் தாங்கிய மனயூவிற்கு, ஒரே ஆறுதல் அவங்க அம்மா தான். சின்ன வயசுலே கோபம் வந்தா அவனுக்கு கொலைப்பண்ணும் தோணும்  அது நாளல ரொம்ப பயந்து இருக்கான் மனயூ, 
 

அவங்க அம்மா தவிர வேற யாருமேலயும் அன்பாவோ, மத்த உணா்வுகளுக்கு மதிப்பு கொடுக்காத மாதிரிதான் இருந்தருக்கான், தனக்கு ஏதோ பிரச்சினை இருக்குனு தெரிசும்,டாக்டா்கிட்ட போகாம இருந்து இருக்கான்,
 

அப்போ, அவனுக்கு relief குடுக்குறது ice cream and photography. 
 

அப்படியே போயிட்டு இருந்த போதுதான், அவங்க அம்மா செத்துருக்காங்க, சாகும் போது லகானி தான் உங்க அப்பானு சொல்லிடு செத்துட்டாங்க, தன் கோபத்தை காட்ட சாியான நேரத்தை எதிர்ப்பாா்த்துக்கிட்டு இருந்தவனுக்கு ஜப்பான் contest notification வந்தருக்கு கொலை பண்ணிட்டு  போலாமுனு plan பண்ணிருக்கான்,
 
லகானிய மீட் பண்ணும் போது, இந்த போட்டோவ குடுத்து இருக்கான், 
 

தன் மகன் தான் மனயூ தெரிஞ்சதும் லகானி இந்த விசியத்தை வெளியில சொல்லிடாதனு சொல்லிருக்காரு, 
 

இரண்டு பேருக்கும் நடந்த வாக்கு வாதத்துல மனயூ பக்கத்துல இருந்த பூ ஐாடையால் லகானியை தாக்கிருக்கான், மயங்கி விழுந்த லகானியின் மேல உக்காந்து கிச்சேனில் இருந்த கத்தியால் தன் கோபம் தீர குத்தி கொன்னுருக்கான், பின்ன dead body ய தன் காருல எடுத்துட்டுப்போயி ஏரிச்சி எலும்ப கூவம் ஆத்துல வீசிட்டு, 
 

ஐப்பானு போயிருக்கான், contest முடிஞ்சி வந்த மனயூ, எதும் தெரியாத மாதிரி இருந்துருக்கான்.
 

அப்போ தான், மனயூக்கு லகானி இன் மகன் ரேயாஸ் இருந்தே, தெரிய வந்துருக்கு.
 

தன் அம்மாவை கல்யாணம் பண்ணி பாதியிலே விட்டுப்போன கோவமும், தனக்கு கிடைக்காத லகானியின் மகன் என்ற பெயர்,புகழ், ரேயாஸ் கிடைச்சது தாங்கிக்க முடியல, 
 

மாடலிங் விசயமா பெங்களூரு போனவாங்க வீட்டுக்கு ரெண்டு நாள் கழிச்சி வந்துருக்காங்க. 
 

ரேயாஸ் வீட்டுல மனயூ போய் இரண்டு நாள் இருந்துருக்கான், மேல படம் பாத்துக்கிட்டு இருக்கும் போது ரேயாஸ் அவன் familyoda வந்துருக்காங்க பூட்டி இருந்த வீட்டுல டிவி சத்தம் கேட்டுருக்கு, 
 

யாரு மேலனு பாா்க்க போனப்ப  மனயூவ பாத்துருக்கான், இரண்டு பேருக்கும் நடந்த சண்டையில் முதல்ல ரேயாஸ்  குத்திக்கொன்றுக்கான், அடுத்து அடுத்து அவன் மனைவி, குழந்தைய கொன்றுக்கான், 
 

அப்புறமாதான் ஐஸ்கிரீம் order பண்ணிருக்கான், இருந்தாலும் கோபம் அடங்காத மனயூ மூன்று பேரு முகத்திலையும் ஆசிட் உதிருக்கன், அவங்க மூஞ்சி கொஞ்ச கொஞ்சமா சிதையுறத இரசிச்சிக்கிட்டே ஐஸ்கிரீம் சாப்பிட்டு இருக்கான், அப்புறம் அங்க இருந்து கிளம்பி அவன்  வீட்டுக்கு  போயிருக்கான்.
 

கடைசியா, நம்ம கூட பேசிருக்கான் னு சொல்லி முடித்தான் யாத்வ்.
 

பிரபல அரசு தரப்பு மனநல மருத்துவர் பத்மினி  ராஜசேகர் மன்யுவை பார்க்க வந்ததா குரு மூர்த்தி சொன்னாரு, பத்மினி கிட்ட கேட்ட மன்யு க்கு என்ன பிரச்னைனு தெரியும் என்றாள் ஜோ.

 
யாதவ் தன் மொபைலில் இருந்து பத்மினி ராஜசேகரனை தொடர்பு
கொண்டான். 
 

மறுமுனையில்,
 

"ஹலோ மிஸ்டர் யாதவ், வாழ்த்துக்கள் சாதுரியம் கொலையாளியை கண்டிப்புசிச்சதுக்கு," என்றாள் புன்னைகையோடு.
 

"தேங்க்ஸ் டாக்டர், என் டீம் தான் எல்லாத்துக்கும் காரணம்" என்றான் யாதவ் தன் அடக்கத்தோடு.
 

"மன்யுவை பதித்தான் கேக்க தான்  உங்களுக்கு கால் பண்ணுன பத்மினி" என்றான் யாதவ்.
 

"யாதவ், மன்யு ஒரு NPD  என்ற மனநல நோயால் பாதிக்கப்பட்டு இருக்காரு" என்றாள் பத்மினி.
 

"அப்போ மனயூவ சைகோ னு சொல்லுறீங்களா" என்றான் யாதவ்.
 

"ஆனா, மன்யு பார்க்க அப்படி தெரியலையே, soft டா தான இருக்காரு" என்றான் யாதவ்.
 
"ஆமா , சைகோ கொடூரமான தோற்றத்துல தான் இருக்கணும்னு அவசியம்  இல்ல, quite and sweet டா இருக்கலாம்" என்றாள் பத்மினி  .
 

சிறிது நேர அமைதிக்கு பின்,  
 

 "அந்த NPD பத்தி சொல்லுமுடியுமா பத்மினி" என்றான் யாதவ்.
 

நாசீசிச ஆளுமைக் குறைபாடு(Narcissistic personality disorder) னு சொல்லும்போது,பொதுவா மனுசங்க குள்ள நிகழக்கூடிய ஒரு பெர்சோனாலிட்டி டிசார்டர் தான்.

 

இந்தக் குறைபாடு உள்ளவங்க தங்களின் சுய உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவும், அதிகமாக பாராட்டுகளை விரும்புபவர்களாகவும், மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யாமலும் இருப்பார்கங்க.
 

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றியோ, வெற்றியை அடைவது பற்றியோ, அவர்களின் தோற்றத்தைப் பற்றியோ சிந்திப்பதில் நிறைய நேரம் செலவிடுவாங்க. 
 

"பாருங்க மிஸ்டர் யாதவ், மன்யு கும் தன்னை அழகா காமிச்சிக்கிறதுல அதிகம் கவனமா இருக்காரு, இரக்கமே இல்லாம கொலை பன்னிருக்காரு " என்றாள் பத்மினி. 
 
 
இந்த நடத்தை பொதுவாக ஒருவரின் இளமைக்காலத்தில் ஆரம்பித்து பல்வேறு சமூக சூழ்நிலைகளின் காரணமாக வெளிப்படுகிறது.
 

"இது எதுனால வருது பத்மினி" என்றான் யாதவ்.
 

NPD personality disorder கான காரணம் இன்னும் கண்டறியப்படல" என்றாள் பத்மினி.
 

இந்த குறைபாடு இருக்குறவங்களமருத்துவ  நிபுணர்கள் நேர்காணல் செய்வது மூலம் பாதிகப்பட்டுள்ளாரா என்பது கண்டுபுடிக்கமுடியும். இதற்கான சிகிச்சைகள் இன்னும் நன்கு ஆய்வு செய்யப்படல. 
 

சுமார் ஒரு சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் இந்த குறைபாட்டிற்கு பாதிக்கப்படுகின்றனர். இது பெண்களை விட ஆண்களில் அடிக்கடி வெளிப்படுகிறது மேலும் இது முதியவர்களைவிட இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது என்றாள் பத்மினி.
 

"இந்த பாதிப்பு இருக்குற மன்யு எப்படி இவ்வளவு பெரிய கம்பனிக்கு டைரக்டர் ரா இருக்க முடிச்சிச்சு  என்னால நம்பவே முடியல" என்றான் யாதவ்.
 

இந்த நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து விறுவிறுப்புடன் செயல்படுவாங்க, தங்களுக்கு அதிக பாராட்டுகள் வேண்டும் என விரும்புவாங்க, அலட்சியமாக இருப்பாங்க. அதேபோல் மற்றவர்கள் மீது அனுதாபம் இல்லாதவர்களாகவும் இருப்பாங்க.

 

நாசீசிச ஆளுமைக் குறைபாட்டிற்கான காரணங்கள் இன்னும் அறியப்படல.  வல்லுநர்களின் ஆய்வுப்படி சுற்றுச்சூழல், சமூக, மரபணு மற்றும் நரம்பியல் காரணிகளின் கலவையே இந்த personality disorder உருவாக்குவதாக நம்பப்படுகிறது.

 

சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகளும் இந்தக் குறைபாடு ஆரம்பிக்க காரணமாக கருதப்படுகிறது, என்று சொல்லி முடித்தாள் பத்மினி.

 

இந்த குறைப்பாடுதான் மனயூ கிட்டையும் பாா்க்குறோம், கோபம்,அங்காரம், புகழ் விரும்பி, இரக்கமற்ற கொலை செய்த பின் ரசிப்பது இப்படி எல்லாதையும் வச்சி பாக்கும்போது இதுவாதான் இருக்கும் என்றாள் பத்மினி.  தன் அறிவின் பிண்ணியில் இருந்து.

 

"டாக்டர் இப்போ மன்யுவை கிளினிக்கில் வச்சிருக்கப்போறிங்களா?" என்றான் யாதவ்.

 

"இல்ல யாதவ், கீழ்பாக்கத்துக்கு கூட்டிட்டு போக சான்ஸ் இருக்கு" என்றாள் பத்மினி.

 

"தேங்க்ஸ் பத்மினி. இவ்வளவு நேரம் என்கிட்ட இத  பத்தி பேசுனத்துக்கு" என்றான் யாதவ்.

 

"With My Pleasure" என்றாள் பத்மினி.    

 

போனின் இணைப்பை துண்டித்தான் யாதவ்,

 

மூவருக்கும் அதிர்ச்சியாகவும், ஆச்சிரியமாகவும் இருந்தது, இப்படியெல்லாம் மனுங்க இருக்காங்களா, யாரு எப்படினு கண்டுபிடிக்க முடியல, என்றப்படி பேசிக்கொண்டு இருந்தனா்.

 

நிழல் யூப்டியூப் சேனலில் ரேயாஸ் கேஸ்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் மக்கள்கிட்ட  கிடைச்சது,

 

சென்னை உயர் நீதிமன்றம் மன்யு வாக்கு மூலத்தின் அடிப்படையில், மன்யுவிருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 

 

மன்யு மனநிலை பாதிக்க பட்டு உள்ளதால் அவரை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கவும், நன்கு குணமடைத்தபின் சென்னை மத்திய சிறையில் அடைக்கவும் உத்தரவுவிட்டது.  

 

குருமூர்த்தி, யாதவ், ஜோ, மற்றும் தொல்காப்பியன் நால்வருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமே இருந்தது. 

 

மன்யு தான் ஒரு மனநல நோயாளி என்ற நிமிடத்திலே, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு  முயற்சி செய்தான், அதில் இருந்து மீட்டு .தற்பொழுது தனி அறையில் மன்யு அடைக்க பட்டுள்ளான். ஒரு முழுநேர மன நிலை நோயாளியாக. 

 

சைகோ கொலையாளிகள் உருவாகுவது இல்லை, உருவாக்க படுகிறார்கள் இந்த வன்மம் நிறைந்த சமூகத்தால்.

-மீனாக்ஷி சிவகுமார் 

 

This topic was modified 9 months ago 3 times by Nithya Karthigan

இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 2 years ago
Posts: 388
06/06/2019 4:49 am  

Good and interesting detective story but the typing mistakes disturbs the flow ..... 

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote
இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 2 years ago
Posts: 388
06/06/2019 4:49 am  

The last message was really true 

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuoteNithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
06/06/2019 2:37 pm  

ஹாய் மீனாக்ஷி,

இப்போதான் கதையை படிச்சேன்... நல்ல இருக்கு... சில இடங்கள்ல எதார்த்தமான டைலாக்ஸ் ரொம்ப அழகா வந்திருக்கு. உதாரணத்துக்கு, "கொலையை கண்டுபிடிக்க போகும் போது அந்த கொலையோட வாசனையை உணரணும்..." - இந்த டயலாக்... இது மாதிரி இன்னும் சிலது கூட ரொம்ப நல்லா இருந்தது....

 

"போலீசால் கண்டுபிடிக்க முடியாத கேஸ் டிடெக்டிவ் / கிரிமினல் லாயர் கைக்கு வரும்...." - நிஜமாவா? 

 

NDP - பற்றி சொன்னது அருமை... கொஞ்சம் ரிசர்ச் பண்ணியிருக்கேன்னு தெரியிது... அருமையான முயற்சி... வாழ்த்துக்கள் கண்ணா... தொடர்ந்து எழுது... 🙂

This post was modified 8 months ago by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Vanathi Karunagaran
(@vanathi)
Active Member Registered
Joined: 8 months ago
Posts: 5
06/06/2019 3:21 pm  

இன்னம் கொஞ்சம் சுருக்கமா எழுதியிருக்கலாம்... ஆனா படிக்கலாம்... நல்ல முயற்சி...


ReplyQuote
இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 2 years ago
Posts: 388
06/06/2019 5:16 pm  

Yes me too same feel

This post was modified 8 months ago by Nithya Karthigan

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote

Meenakshi Sivakumar
(@meenakshi-sivakumar)
Eminent Member Writer
Joined: 9 months ago
Posts: 20
08/06/2019 3:57 pm  

Thanks for your feedback. It was valuable for sure, I will enhance my writing ability.


ReplyQuote
Meenakshi Sivakumar
(@meenakshi-sivakumar)
Eminent Member Writer
Joined: 9 months ago
Posts: 20
08/06/2019 3:58 pm  

Thanks for your feedback. It was valuable for sure. I will enhance my writing ability.


ReplyQuote

Share: