வணக்கம் நட்புக்களே ❤️❤️❤️❤️❤️❤️ நான் உங்கள் மேகலா அப்பாதுரை... நிறைய பேருக்கு என்னை தெரியும்ன்னு நினைக்கிறேன். தெரியாதவங்க இனிமே தெரிஞ்சுக்கோங்க...
சகாபத்ததில் எழுதவேண்டும் என்பது எனது நீண்ட நாளைய விருப்பம். 😍😍😍😍😍😍😍😍😍அது இன்று நிறைவேறி இருக்கிறது. தமிழ் நாவல் வரலாற்றில் புது முயற்சியாய் கவிதை வடிவில் ஒரு கதையை கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இது ஏற்கனவே சங்ககாலம் முதல் இருப்பது தான் என்றாலும் எனக்கு புதிய முயற்சி தானே...
நாம் படிக்கும் நாவலை கவிதை வடிவில் கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதே இது.
🌹🌹🌹ரசிகையின் கவிஞன்✍️✍️✍️
ஒரு கவிஞனுக்கும் அவனது ரசிகைக்கும் இடையே நடக்கும் உணர்சி மிகு போராட்டமே கதை. இதில் பெரிசா கருத்தெல்லாம் இல்லீங்க... ஒன்லி காதல்... காதல்... காதல்... வாங்க ரசிக்கலாம் ரசிகையையும், அவளது கவிஞனையும்.
இவர்கள் தினமும் வருவார்கள் உங்களைக் காண வரவேற்க காத்திருங்கள்...
ரசிகையின் கவிஞன் ✍️✍️✍️
1
தமிழே.....
ஆம் இப்படித்தான் தொடங்கத்
தோன்றியதெனக்கு....
இன்று முதன் முதலாய்
உன் கவிபடித்தேன்...
உன் வார்த்தைகளில் தான்
எத்தனை லயங்கள்..
உந்தன் பேனா முனையிலிருந்து
வெளிவரும் மையில்
கவிதையென்னும் கூர்மையான
ஆயுதம் படைக்கிறாய்....
வீரியம்மிக்க வார்த்தைகளைக் கொண்டு
சமூகத்தின் மீது
அஹிம்சை போர்த் தொடுக்கிறாய்....
கடவுளுக்கும் கவிபடைக்கிறாய்...
காதலிக்கும் கவிபடைக்கிறாய்...
உன் கவிதைகளை கண்டபின்
உன் காதலி
நானாயிருக்கக் கூடாதாவென
ஏக்கங் கொள்கிறேன்...
மரபுக்கவிதையாய் இருந்தவள்
புதுக்கவிதை புனைகிறேன்....
எழுத்தென்றாலே
எட்ட நின்றவளை
கவிஞியாக்கிய பெருமை
உன்னையே சாரும்...
கவிஞனே....
எனக்காய் ஒரு காதல் கவி
படைப்பாயா....?
2
பேரன்பே....
இன்று உன் காதல் கவி படித்தேன்...
நீ யாருக்காய் எழுதினாயோ....
அதை எனக்கே எனக்காய்
எழுதியதாய் அகமிழ்ந்து
ஆழ்ந்தேன் அதனுள்...
உந்தன் எழுதுகோலாய்
நானிருக்க கூடாதா...
உந்தன் விரல்களோடு
உறவாடியபடியே
இருந்திருக்கலாமே என்ற
எண்ணம் தோன்றுவதை
தவிர்க்க முடியவில்லை...
மீண்டும் மீண்டும் படிக்கிறேன்
தொள்ளாயிரத்து
முப்பத்துதேழாவது தடவையாய்....
அப்படி என்னத்ததான் படிக்கிற
என்ற என் தாயின் கேள்விக்கு
பதிலளிக்க முடியவில்லை என்னால்...
தனியாய் சிரித்த என்னை
பைத்தியமே என்று
திட்டிவிட்டு சென்ற
தங்கையின் கன்னத்தில்
முத்தமிட்டதில் - அவளோ
அதிர்ச்சியின் உச்சத்தில்....
உன் கவியோடு
புழக்கடை மாமர ஊஞ்சலில்
தஞ்சமடைகிறேன்
செவ்வெறும்பு என்னை
கடித்ததைக்கூட அறியாமல்....
என்ன மாயம் செய்தாயடா...
எந்நேரமும் உனை பற்றியே
சிந்தித்து சித்தம் கலங்கி
நிற்கிறேன்.....
கவிஞனே....
உன் கவிதையாய் நான் மாறவா...
3
அன்பனே...
உன் கவி கண்டு பித்தான நான்
உனைக் காண துடிக்கிறேன்.
நீ எப்படி இருப்பாயென
யோசித்து யோசித்து
பைத்தியமாகிக் கொண்டிருக்கிறேன்.
நீ மணமானவனா?
இல்லையா?
நினைக்கும் போதே
நெஞ்சு வெடித்துவிடும் போல் உள்ளது.
உனக்கு மணமாகியிருக்க
கூடாதென ஊர்
எல்லைச்சாமியிடம்
நேர்த்திகடன் வைத்தேன்.
என் எண்ணங்களை
வண்ணங்களாக்கி
உனக்கொரு - கவிதை
வரைந்தனுப்பி இருக்கிறேன்...
உன் பதிலுக்காய்
காத்திருக்கையில்
என் நகங்கள் முழுக்க
மூன்றாம் பிறைகளாய் தரையில்....
மீண்டும் ரசிக்கலாம்...
Wow 😍😍😍😍arumai arumai arumai.... super..... kalakunga ma...... waiting for next ud
அன்புடன்
இந்திரா செல்வம்
அருமை சிஸ்... ரொம்ப எதார்த்தமான எளிமையான வார்த்தை கோர்ப்போடு தெளிவான கவிதை நடை...
க்யூட் பிரஷன்டேஷன்....
வாழ்த்துக்கள்.....
சூப்பர் மேகிம்மா... கவிதை நடையில் காதலின் கரு....முகமறியா பேனாக்காதலனை உருகி தவித்து தன் கவி மூலம்...கொண்டு வரும் ரசிகையின் காதல்...அற்புதம்.... நானும் காதல் கவிஞனை அறிய காத்திருக்கேன்......