Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

ஆழியின் காதலி - விபா  

Page 1 / 2
  RSS

visha bala
(@viba)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
28/07/2020 9:01 pm  

வணக்கம் நட்புக்களே.. நான் எழுதுவதற்குப் புதியவள்.. சகாப்தத்திற்கு மிகவும் புதியவள்..

படிக்கத் தெரிந்தது முதல் கதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன்.. இரும்புக் கை மாயாவியிலிருந்து ஆரம்பித்து, இப்பொழுது நிறைய எழுத்தாளர்களின் கதைகள் படித்து.. கடைசி இரண்டு மாதங்களாக எழுதவும் செய்கிறேன்.

இதோ இங்கு என் முதல் கதையான ஆழியின் காதலியை பதிவிடுகிறேன்.. படித்துப் பாருங்கள்.

உங்களது கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் -விபா 


Quote
visha bala
(@viba)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
28/07/2020 9:03 pm  

 

ஆழியின் காதலி-1 

 

அன்று சென்னை மட்டுமல்ல,ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சிக்குளாகி இருந்தது.

 

இந்தியாவின் பிரபல கடல் ஆராய்ச்சி நிறுவனமான அர்னவ் கடல் ஆராய்ச்சி கழகத்தின் நீர்மூழ்கிக்கப்பல் இந்திய பெருங்கடலில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது கரையுடனான அதன் சிக்னலை இழந்துவிட்டுருந்தது.

 

அந்தக் கப்பல் எந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது என வெளிப்படையாக தெரியாவிட்டாலும்,அதன் ஆராய்ச்சியினால் அர்னவ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய பலன் கிடைத்திருக்கும்.

 

இப்பொழுது அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி வேலவமூர்த்தி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

 

"எங்க கம்பெனி குமரிக்கண்டம் பற்றிய முக்கியமான ஆராய்ச்சியில ஈடுபட்டிருந்தது.ஆனால் அசம்பாவிதமாக இன்னைக்கு காலைல எங்க நீர்மூழ்கி கப்பல் கரையுடனான சிக்னலை முழுவதும் இழந்துடுச்சு."

 

"சார் அப்போ அந்தக் கப்பல்ல இருந்தவங்க என்ன ஆனாங்க?"நிருபர்.

 

"அவங்கள பற்றி எந்த தகவலும் இதுவரைக்கும் எங்களுக்கு கிடைக்கல..ஆனா கூடிய சீக்கிரம் ஏதாவது விவரம் தெரியவரும் னு நம்பறோம்"வேலவமூர்த்தி.

 

"அதெப்படி சார் கப்பலை முழுசா தொடர்புகொள்ள முடியலன்னு அதிகாரப்பூர்வமா சொல்லிடீங்க.அப்பறம் எப்படி மறுபடியும் அவங்க தொடர்பு கொள்ளுவாங்கனு நம்பறீங்க?"நிருபர்

 

"லுக் மிஸ்டர்,கடைசி வரைக்கும் நாங்க அந்த கப்பல் அவ்வளோதான் ..அதுல இருந்தவங்க எல்லாரும் இறந்துட்டாங்கனு முடிவெடுக்கல..அவங்களுக்கு இடையில ஏதாவது ஆபத்து வந்திருக்கலாம்..இப்போ கூட அவங்களுக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டுதான் இருக்கோம்."வேலவமூர்த்தி.

 

"சார்,அப்போ அந்தக் கப்பல்ல நம்ம நாட்டோட மூத்த அறிவியலாளர் குருநாதன் இருந்ததா ஒரு தகவல் வந்துருக்கு.அவர் அந்தக் கப்பல்ல தான் இருந்தாரா?"மற்றோர்  நிருபர்.

 

"உங்களுக்கு யார் இந்த மாதிரி தகவல்களை பரப்பறதுனு தெரியல.அவர் எங்க கப்பல்ல இல்ல.எனக்கு இன்னும் நிறைய மீட்டிங் இருக்கு.அதனால நாம பேட்டியை இதோட முடுச்சுக்கலாம்.:வேலவமூர்த்தி.

 

சார் சார் என மேலும் கேள்விகள் கேட்பதற்காக அவரை நிருபர்கள் பின்தொடர்ந்து செல்ல..வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டார் அவர்.

 

அர்னவ் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்றவர்,அதன் தலைமை நிர்வாகி அர்னவிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

 

"அர்னவ் நிலைமை ரொம்ப கையைமீறி போயிட்டு இருக்கு.அந்த சைன்டிஸ்ட் நம்ம கப்பல்ல இருந்தார்னு ப்ரஸ்க்கு சந்தேகம் வந்துடுச்சு.இன்னும் நம்மளோட கடல் ஆராய்ச்சி எதுக்காகன்னு உண்மைய கண்டுபுடுச்சுட்டாங்கன்னா அது நமக்கு ரொம்பவே ஆபத்தாகிடும்."என்றார்.

 

அதற்கு அர்னவ்,"எப்படி..எப்படி அங்கிள் அவங்களுக்கு குருமூர்த்தி பற்றி தெரிஞ்சுது?எனக்கு இங்க என்ன நடக்குதுனே தெரியல..இப்படித்தான் நேத்து அந்தக் கப்பல்ல இருந்து நாம தேடற அந்த பொருள் கிடைச்சுட்டதா தகவல் வந்துச்சு.

 

ஆனா அடுத்த கொஞ்ச நேரத்துல கப்பலோட சிக்னல் சுட் ஆகிடுச்சு..இப்போ அங்க என்ன நடந்ததுனே  தெரில..

 

கடைசியா நாம அவ்வளோ ரகசியமா வச்சிருந்த குருநாதனோட பயணம் பற்றிய தகவல் எப்படி வெளிய கசிஞ்சது?"அர்னவ்.

 

"அதுதான் எனக்கும் ஒரே அதிர்ச்சியா இருக்கு.நானே களத்துல இறங்கினாதான் எல்லாம் சரிப்பட்டு வரும்"அர்னவ்.

 

"ஹே அர்னவ்..என்ன சொல்ற நீ?அப்போ நீயே அங்க போய் பார்க்க போறியா?நடக்கற விஷயமா இது?"வேலவமூர்த்தி.

 

"இல்ல அங்கிள் நானே நேர்ல போய் பார்த்தா தான் எனக்கு என்ன நடந்ததுன்னு புரியும்..இங்க கைய கட்டிக்கிட்டு உட்கார்ந்து இருந்து எந்த பிரயோஜனமும் இல்ல."அர்னவ்.

 

"இங்க பாரு அர்னவ்,நான் இந்த கம்பெனியோட போர்டு மெம்பெர் மட்டும் இல்ல..உன் அப்பாவோட நெருங்கிய ஸ்நேகிதனும் கூடத்தான்..அதனால தான் மறுபடியும் சொல்றேன்.. ரிஸ்க் எடுக்காத..அங்க ஏதோ மிஸ்டேரியஸா இருக்கு.இதுக்கு நாம வேற ஏதாவது வழி செய்யலாம்"வேலவமூர்த்தி.

 

"நீங்க என் அப்பாவோட  சிநேகிதன் மட்டுமில்ல அங்கிள் என்னோட கார்டியன் கூடவும் தான்.அப்பா போனதுக்கு அப்பறம் இந்த கம்பெனியை நீங்க இல்லாம என்னால தனியா சமாளிச்சுருக்கவே முடியாது.

 

ஆனால் இந்த ஒரு விசயத்துல மட்டும் என்னால உங்க பேச்சை கேட்க முடியாது.நான் போகறது னு முடிவெடுத்துட்டேன்."அர்னவ்.

 

"சோ நீ என்பேச்சை  மீறி அங்க போகறதுன்னு முடிவெடுத்துட்ட?சரிஆனா நீ திரும்பி வரவரைக்கும் நம்ம கம்பெனிய யார் பார்த்துக்கறது?

 

இங்க இன்னும் எத்தனை ரெசெர்ச் நடந்துட்டு இருக்கு?அதுமட்டுமில்லாம கப்பல் மூலமா எவ்வளவோ ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரங்கள் பண்ணிட்டு இருக்கோம்?இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் மாதிரி அவசரப்படற?"வேலவமூர்த்தி.

 

"ஏன் அங்கிள் நம்ம கம்பெனிய நான் வரவரைக்கும் நீங்களும்,ராகேஷும் பார்த்துக்க மாட்டேங்களா?என்னடா,நீ எதுவும் பேசாம வேடிக்கை பார்த்துட்டு இருக்க?அவருக்கு எடுத்துச் சொல்லுடா.."அர்னவ்.

 

"இல்ல அர்னவ்.இந்த விஷயத்துல நான் எடுத்துச் சொல்லவேண்டியது அப்பாக்கு இல்ல.உனக்கு தான்..ஆனால் நீ ஒரு முடிவெடுத்துட்டா உன்ன யாராலயும் தடுக்க முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும்.

 

அதனால நானும் உனக்கு துணையா கூட வரலாம்னா ,நான் படிச்சது பிசினஸ்.எனக்கு கடல் பத்தியோ,இந்த ஆராய்ச்சி பத்தியோ எதுவும் தெரியாது.அதனால நீயே என்ன கூட்டிட்டு போகமாட்ட.

 

சோ,நீ தகுந்த பாதுகாப்போடு கடலுக்குள்ள போவேன்னு எனக்கு வாக்கு குடுக்கணும்."என்றான் வேலவமூர்த்தியின் மகன் ராகேஷ்.

 

"கண்டிப்பா நான் பக்காவான பாதுகாப்போடு தான் போவேன்..கவலைப்படாத டா.."அர்னவ்.

 

"அப்படினா..நீ என்ன சொல்ல வர?"வேலவமூர்த்தி.

 

"இந்த முறை நான் போகப்போற கப்பல் வெறும் ஆராய்ச்சி கப்பலா மட்டும் இருக்காது..போர்க்கப்பலாவும் இருக்க போகுது.அதுமட்டுமில்லாம நான் நம்ம விக்கியயும் கூட கூட்டிட்டு போகப்போறேன்."அர்னவ்.

 

"என்ன சொல்ற நீ?அவன கூட கூட்டிட்டு போடறதுக்கு நீ தனியாவே போய்டலாம்.அவன் கூட வந்தா ஒரு வேலை உருப்படியா செய்யவும் மாட்டான்..செய்ய விடவும் மாட்டான்.."வேலவமூர்த்தி.

 

அங்கிள்..அவன் ஜாலியா பேசி வாயடிச்சுட்டு இருக்கறதால உங்களுக்கு அப்படி தெரியுது..ஆனா அவன் வேலையில ரொம்பவே ஸ்மார்ட்.

 

அதனால நீங்க ரெண்டு பெரும் கவலையே படாதீங்க.எல்லாம் நான் பார்த்துக்கறேன்."அர்னவ்.

 

"அப்போ நீ போகறதுன்னு முடிவெடுத்துட்ட?சரி அப்போ நீ இல்லாதப்போ கம்பெனிய அப்பா பார்த்துக்கணும்னா அவர் பேர்ல நீ பவர் ஆப் அட்டர்ணி  எழுதி குடுக்கணும் ல?"ராகேஷ்.

 

"கண்டிப்பா செய்யணும் ராகேஷ்..அதுக்கான பேப்பர்ஸ் எல்லாம் நாளைக்கு என் கைல இருக்கணும்.எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் நான் கிளம்பனும்"அர்னவ்.

 

அவனிடம் சரியென உரைத்து விட்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்த அப்பாவும் மகனும் மர்மமாக ஒருவரைப் பார்த்து மற்றவர் சிரித்துக் கொண்டனர்.

 

 

 

 

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 3 years ago
Posts: 604
29/07/2020 2:06 am  

@viba

வாழ்த்துக்கள் விபா, சகாப்தத்திற்கு உங்களை வரவேற்கிறேன்..

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
visha bala
(@viba)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
29/07/2020 2:56 am  

@nithya-karthigan நன்றி சகி..


ReplyQuotevisha bala
(@viba)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
29/07/2020 9:07 pm  

ஆழியின் காதலி-2 

 

அழலவன்  தன் செங்கதிர் கொண்டு இந்த ஞாலமதில் பகலதுவை வரைய.. உறக்கத்தில் இருந்து எழுந்ததும் மிகுந்த உற்சாகத்துடன் சாமினி தன் தந்தை இளந்திரையனை  நோக்கி ஓடி வந்தாள்.

"ஐயனே.., ஐயனே... எங்கு இருக்கிறீர்கள்?" எனத்தேடிக் கொண்டே வந்தவள், தன் தந்தையைக் கண்டதும்.." ஐயனே இன்று அதிகாலை வேளையில் நான் ஒரு கனவு கண்டேன்".

"அப்படியா தாயே அந்த கனவினால் தான் நின் பொன் வதனம் இன்னும் பேரெழிலுடன் விளங்குகின்றதோ ?" என்றார் அவர்.

"ஆம் ஐயனே, ஆனால் தாங்கள் இன்னும் என் கனவு என்னவென்பதை கேட்கவே இல்லையே?" எனது தனது மகள் அலுத்துக்கொண்டதும்,

"ஹா ஹா..நான் கேட்டால் தான்  விளம்புவாயோ?சரி இப்பொழுது கேட்கிறேன், கூறு பார்க்கலாம்." என்று அவள் கூறபோகும் விடயமறிய விரும்பினார் அவர்.

"ஐயனே...நான் பௌர்ணமி இரவில் ஒரு நாள் கந்தர்வ வனத்திற்கு தனியாக நடந்து சென்றேன்.. கூதைக்  காற்று மேலுடல் தழுவிட, நம் கயாகர மூப்பரைப் பார்க்கச் சென்ற பொழுது அவர் சற்று இடர் கொண்ட மனதுடன் இருக்கக் கண்டேன்.

ஆனால் பதிலேதும் பேசாமல் அவர் அருகே யான் அமர்ந்து இருக்க, பின்பு அவரே எம் முகத்தைப் பார்த்து "வா சாமினி..இங்கு இருக்கும் கருங்குளத்தின் நீர் பெருகிக்கொண்டே வருகிறது .இது எனக்கு சற்று கவலை அளிக்கிறது தாயே.

ஆம்... நம் ஆழிக்கு எதோ ஆபத்து வருவதைப் போல் தோன்றுகிறது" என வருத்த மொழி விளம்பினார்.

அதைக் கேட்ட என் மனம் விண்டு விடும் போல் ஆனது. உடனே ஐயத்துடன் நான்.."ஏன் மூப்பரே நம் இனத்திற்கு ஏற்கனவே இழைந்து கொண்டிருக்கும் அநீதிகளும்.. தொடந்து கொண்டிருக்கும் சாபமும் போதாதா? மற்றுமொரு ஆபத்தை எங்காங்கிலும் நம் மக்கள் தாங்கிடுவர்?" என  வினவிட,

"கவலை கொள்ளாதே மகளே..அதி ஆபத்து நெருங்குகையில் தான் தர்ம வீரனும் தலை தூக்குக்குவானென அவர் கூறிக்கொண்டு இருக்கையில்,

அப்பொழுது அங்கு நீறணிக்கடவுளைப் போல் ஒரு சுந்தர புருடன் வினோதமான நாவாயினில் வந்திறங்க, அவனைக் கண்டதும்  அவ்வளவு உவகை நம் மூப்பருக்கு.

அதைக் கண்ட எனக்குச் சற்று பொறாமையாகக் கூட இருந்தது.என்னைக் கண்டு கூட நம் மூப்பருக்கு இவ்வளவு உவகை வர வில்லையே என்று .

அதைக் கண்ணுற்ற மூப்பர் சற்று மென்னகை புரிந்து விட்டு, "தாயே.. பொறு.  இத்துணை நாட்கள்  அனுபவித்துக் கொண்டிருக்கும்   நம் இனத்தின் சாபத்தைப் போக்கும் திண்மையுடையவன் இவ்வாலிபன் தான்." எனக் கூறிட மென்னதிர்வு என்னுள்.

"என்ன மூப்பரே, என்ன இயம்புகிறீர்கள்? நீங்கள் உரைப்பது உண்மை தானா? நம் இனத்திற்கு விடிவு பிறக்க போகின்றதா?" என நான் வினவிட,

"ஆம் தாயே.. இதோ இவர் மணிக்கட்டில் இருக்கும் மச்ச(மீன்) உருக்கொண்ட அகழெலி(மச்சம்)  கொண்டே உணர்ந்தேன்.

நம் மக்களின் துயர் களைய அந்த முக்கண்ணோன் அனுப்பிய தூதுவன் தான் இவர்" என விளம்பினார் ஐயனே."

என சாமினி கூறி முடிக்க ,"  இது மிக்க நல்ல சகுனமாகத் தான் தெரிகிறது தாயே.."என இளந்திரையன் சாதாரணமாக கூறினார்.

"என்ன ஐயனே நீங்கள்? நான் இவ்வளவு எடுத்து மொழிகிறேன் நீங்கள் மிக்க சாதாரணமாக அப்படியா எனக் கேட்டுச் சென்று விட்டீர்?" என சலித்துக் கொள்ள..

"அதுதான் நீ உரைத்தது நல் சகுனம் என்று விட்டேனே அம்மா பின் என்ன?" என்றிட,

"பின் என்ன என்றா வினவுகிறீர்?ஐயனே நான் கந்தர்வ வனத்திற்கு பௌர்ணமி இரவில் நடந்து சென்றேன்" என அழுத்திக் கூறிட,

அப்பொழுதுதான் அவள் சொன்னதின் அர்த்தம் முழுமையாய் விளங்கிட,அவள் தந்தை நீ கூறுவது மெய்யா தாயே? என ஆர்வ மிகுதியில் வினவுகையில் அவர் கண்கள் கரித்து சிறுதுளி நீர் கன்னம் வழிந்தது.

 

___________________________________________________________________________________________

 

சென்னையில்...

ராகேஷ், தன் தந்தை வேலவமூர்த்தியை மெச்சிக்கொண்டிருந்தான்.

"அப்பா நீங்க எவ்வளவு பெரிய புத்திசாலி.. ச்சே.. எப்படி இப்படி ஈஸியா அந்த அர்னவ் கிட்ட இருந்து பவர் ஆப் அட்டர்னி வாங்கறதுக்கு சம்மதம்  வாங்குனீங்க? ராகேஷ்.

"இது என்னோட எவ்வளோ நாள் திட்டம் தெரியுமா டா?

எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லாம ஏதோ அவன் அப்பன் வச்சிருந்த குறிப்ப வச்சு அந்தக் கடல் ல இப்படி ஒரு ரத்ன மணி கிரீடம் இருக்கு, அத எடுக்கறது தான் உன் அப்பாவோட வாழ்க்கை லட்சியமே னு சொன்னதும், பாசக்கார மகன் உடனே அதுக்கான ஆராய்ச்சியை தொடங்கிட்டான்.

நீயும் தான் இருக்கியே.. இன்னும் எதுக்கெடுத்தாலும் என் மூஞ்சியவே பார்த்துகிட்டு. நீ மட்டும் அந்த அர்னவ் மாதிரி திறமைசாலியா இருந்திருந்தா அவன் அப்பன் அந்த திவாகரன் செத்தப்பவே அந்த கம்பெனிய என் பேர்ல மாத்தி இருப்பேன்." வேலவமூர்த்தி.

"ஆமா.. வார்த்தைக்கு வார்த்தை என்ன மட்டம் தட்டலனா உங்களுக்கு தூக்கம் வராதே.  முதல்ல இத எப்படி சாத்தியப்படுத்துனீங்க னு சொல்லுங்க.. அப்பறம் பொறுமையா என்ன ரூம் போட்டு திட்டிக்கலாம்." ராகேஷ்.

அவனை ஒரு தீப் பார்வை பார்த்த வேலவமூர்த்தி.. "உனக்குத் தெரியுமா?அந்த கிரீடத்தை எப்படியாவது எடுத்துடனும் னு இந்தியாவிலேயே ரொம்ப புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சி செய்யற விஞ்ஞானி குருநாதன இதுக்குள்ள இழுத்துவிட்டதும் நான் தான்.

ஏன்னா இந்த முயற்சியில ஏதாவது ஆச்சுன்னா, கண்டிப்பா அர்னவ் மாட்டிப்பான். அப்படி இல்லாம அந்த கிரீடம் பற்றிய கதை உண்மையா இருந்து , அந்த கிரீடம் கிடைச்சுடுச்சுனா, எப்படியாவது அத எனக்கு சொந்தமாக்கிட்டு அவன் கதையை முடுச்சுடலாம் னு இருந்தேன்.

ஆனா எனக்கு அந்த சிரமம் வைக்காமலேயே அந்த குருநாதன காணோம்னு  கேள்வி பட்டதும் ஆடு தானாவே கடல்ல  கைமா ஆகறதுக்கு கிளம்புது.." எனக் கெக்கலிப்புடன் கூறினார்.

"ஆனா இன்னும் இது ஒன்னு தான் ப்பா புரியல , குருநாதன் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கறதா எனக்கு கூட தெரியாது. அப்பறம் எப்படிப்பா பிரசுக்கு விஷயம் தெரிஞ்சது." ராகேஷ்.

"போடா முட்டாள்.. அது எப்படி யாருக்கும் தெரியாம பிரஸ்க்கு தெரியும்? அவங்க என்ன தினமும் ஜோசியமா பார்த்துட்டு இருகாங்க.. அவங்களுக்கு இந்த விஷயத்தை சொன்னதே நம்ம ஆளுங்க தான்." எனவும் அதிர்ந்தான் ராகேஷ்.

 

"அப்பா..அப்பா.. நீங்க இருக்கீங்களே.. உங்கள புகழ எனக்கு வார்த்தைகளே இல்லப்பா. இப்போ வெறும் பேப்பர் ல மட்டும் தான் பவர் கிடைக்கப் போகுது. இன்னும் அதிகார பூர்வமா அந்த கம்பெனி நம்ம பேர்ல முழுசா கிடைச்சுட்டா.. ராஜ வாழ்க்கை தான்." எனக் குதூகலமான மகன் கூற,

"ஆமாண்டா குடுச்சுக் குடுச்சுத் தீர்க்க  அறுநூறு கோடி என்ன? அறுபதாயிரம் கோடி கிடைச்சாலும் உனக்கு பத்தாது." என வேலவமூர்த்தி கூறிட, கடுப்புடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான் ராகேஷ்.

மற்றொரு புறம் அர்னவ் விக்ரமிடம் எல்லா விஷயங்களையும் கூறவும் ,தாங்கள் செய்யப் போகும் கடல் பயணம் ஒரு சாகசமெனவே தோன்றிற்று விக்ரம்க்கு ..

"பாஸ் என்ன சொல்றீங்க? கடல்ல நாம மட்டும் தனியாவா? செம்ம ஜாலி தான் போங்க.." விக்ரம்.

"இங்க பாரு விக்கி நாம ஒன்னும் ஜாலி ட்ரிப் போகல. முக்கியமான ஆராய்ச்சிக்கு போறோம். அதைவிட முக்கியமா குருநாதன் சார கண்டுபிடிக்க போறோம். அதனால உன்னோட ஆர்வக் கோளாறுல  விஷயத்தை கடை பரப்பி காசுக்கு வித்தறாத  டா.." எனக் கொஞ்சம் திகிலுடன் அர்னவ் சொல்லிட,

"சே சே அப்படி எல்லாம் யார்கிட்டயும் சொல்லிட மாட்டேன் பாஸ். ஆனா நீங்க என்ன தான் என்ன அது இதுனு சொல்லி பயமுறுத்துனாலும் எனக்கு ரொம்ப ரொம்ப ஆர்வமா தான் இருக்கு. நான் இருக்கறப்ப நீங்க எதுக்கு கவலை படறீங்க?" விக்ரம்.

"ஆமா ஆமா.. நான் எதுக்கு டா கவலை பட? உன்னோட கேர்ள் ப்ரண்ட்ஸ் தா ரொம்ப கவலை படுவாங்க. மற்று நின் வரவு இங்கு வாழ்வாருக்குச் சொல்  னு சொல்லிட்டு நம்ம கூட வராம இருந்தாங்கன்னா போதும்." என விக்ரமை அர்னவ் கிண்டலடித்தான்.

"அட போங்க பாஸ்.. நீங்க வேற, இப்படி தான் நான் எல்லார் கிட்டயும் சகஜமா பேசறதை வச்சு எல்லா பொண்ணுங்களும் இவனுக்கு ஏற்கனவே ஆள் இருக்குனு  என்ன அண்ணனா பார்க்க ஆரம்பிச்சுடுச்சு." என மூக்கால் முராரி வாசித்தான் விக்ரம்.

உடனே கைதட்டி சிரித்த அர்னவின்  கைகளை விக்ரம் உற்று பார்க்க, தன் ஸ்மார்ட் வாட்சை மணிக்கட்டின் மீது சரிபடுத்திகக்கொண்டான் அர்னவ்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 


visha bala
(@viba)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
01/08/2020 7:46 pm  

காருக்கு வெளியில் போக்குவரத்து நெரிசலினால் அவ்வளவு இரைச்சல் இருந்தாலும், காருக்குள் பேரமைதி தான் நிலவியது.

 

வேலவமூர்த்தியின் பெயருக்கு பவர் எழுதி கொடுக்க வேண்டுமென அரன்வ் கூறியவுடன் அமைதியாகியவன் தான் எதோ யோசனையில் உழன்றவனாக மீண்டும் எந்தப் பேச்சும் எடுக்கவில்லை.

 

"என்ன விக்கி எப்பவும் எதாவது லொட லொடத்துட்டே வருவ?இப்போ என்னடானா ஒரே அமைதியாகிட்ட? வாட் ஐஸ் ஈட்டிங் யு மேன்?" அர்னவ்.

 

"நத்திங் பாஸ் இந்தக் கொரோனா பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்." விக்ரம்.

 

"அப்படி என்ன அது பத்தி இவ்வளவு சீரியஸா யோசிக்கற?" அர்னவ்.

 

"இப்போ இந்த கொரோனா வைரஸ் நம்ப உடம்புக்குள்ள போனா என்ன பண்ணும்?முதல்ல அது நம்ம உடம்புல ஏற்கனவே இருக்கற செல் மாதிரி தன்னை உரு மாத்திக்கும் அதனால நம்ம ரத்த வெள்ளை அணுக்களுக்கு அது வெளில இருந்து வந்து ஒரு புதிய வைரஸ் னு தெரியாது.

 

 

அதனால அத அழிக்கணும்னு நினைக்காது. ஆனா இந்தக் கொரோனா வைரஸ் ரத்த வெள்ளை அணுக்களைக் கொஞ்சமா கொஞ்சமா அழிச்சுகிட்டே தன்னையே நகலெடுக்கவும் ஆரம்பிச்சுடும். அதனால என்ன ஆகும்? நம்ப உடம்போட எதிர்ப்புத்திறனும் குறைஞ்சுடும்.. அந்த வைரஸோட எண்ணிக்கையும் அதிகமாகிடும்." விக்ரம்.

 

"ஆமா அது எனக்கும் தெரியும். அதுக்கு என்ன இப்போ?" அர்னவ்.

"ஹையோ இந்த மனுஷனுக்கு எப்படிச் சொல்லி புரியவைக்கிறது... அது உங்களுக்குப் புருஞ்சுடுச்சா ? அப்போ ஓகே பாஸ்" என விக்ரம் பல்லைக் கடித்துக் கொண்டே கூறினான்.

 

"ஏன் விக்கி உனக்குத் தெரிஞ்ச யாருக்காவது கொரோனா வந்துடுச்சா?" அர்னவ்.

 

"சே சே.. இல்ல பாஸ் உங்களுக்கு அந்த வைரஸ் பத்தி தெரிஞ்சுருக்கா னு பார்த்தேன். அவ்ளோ தான். ஆனா அந்த வைரஸ் மாதிரியே மனுஷங்கள்லயும் நிறையப் பேர் இருகாங்க. நமக்கு நல்லது செய்ற மாதிரி நம்ம கூடவே இருந்துக்கிட்டு குழி தோண்டறாங்க.

அந்த மாறி ஆளுங்க நம்மகிட்ட வராம இருக்க ஒரு vaccine கண்டுபிடிச்சாங்கன்னா பரவா இல்ல ." விக்ரம்.

 

"அதுக்குன்னு தனியா vaccine வேணுமா என்ன? முகத்தைப் பார்த்ததும் அடையாளம் கண்டு புடிக்க வேணாமா?" அர்னவ்.

"(ஆமாமா இவர் நல்லா அடையாளம் கண்டு புடிச்சுட்டார் போல) உங்கள மாதிரி எல்லாரும் கண்ணுலயே ஸ்கேன் மெஷின் வச்சிருப்பாங்கலா என்ன ? ஹி ஹி..." என்று விக்ரம் கூறிட அர்னவ் மென்னகை புரிந்தான். (விக்ரம் மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான்).

 

கார் நேராக அலுவலகத்தை அடைந்ததும் விக்ரமிற்குக் கால் வந்தது. அர்னவிடம் முன்னால் செல்லுமாறு கூறி விட்டு போன் எடுத்தவன்,

 

"ம்ம்..ம்ம்.. அப்படியா? சந்தோசம். இந்த விஷயத்தை நீயே பாஸ் கிட்ட சொல்லிடு. ஆனா நான் உனக்கு மிஸ்டு கால் கொடுக்கறேன் அதுக்கு அப்பறம் ." எனக் கூறி விட்டு அர்னவ் வை பின்தொடர்ந்தான்.

 

"அலுவலகத்தினுள் வேலவமூர்த்தியும் ராகேஷும் ஒரு முறைக்கு நூறு முறை டாகுமெண்ட்ஸ்ஸை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

 

"அப்பா எனக்கு ஒன்னு தான் இடிக்குது. அர்னவ் திரும்ப வரலைனா இந்தக் கம்பெனி உங்க கைக்கு வந்துடும், இதுக்கு நீங்களே பொறுப்பேத்துக்கலாம் னு போட்ருக்கீங்களே அத அர்னவ் படிச்சுட்டா என்ன பண்றது?" ராகேஷ்.

 

"டேய் இது எவ்வளவு முக்கியமான டாக்குமெண்ட். இத எந்த முட்டாளாவது படிக்காம கையெழுத்து போடுவானா டா? ஆனா அந்த அர்னவ் போடுவான். ஏன்னா அவன் என்ன அந்த அளவுக்கு நம்பறான்.

 

அது மட்டும் இல்லாம அவன் திரும்ப வரலைனா தான பிரச்சனையே?அவன் தான் திரும்ப வந்துடுவேன்னு அவ்வளவு நம்பிக்கையோட இருக்கானே?" வேலவமூர்த்தி.

 

"அப்போ அர்னவ் திரும்ப வந்துடுவானா ப்பா"? ராகேஷ்.

 

"ம்ம்.. வந்துடுவான். அவனோட பேருக்கு அர்த்தம் தெரியுமா?அர்னவ் னா ஆழிப் பெருங்கடல். அவன அந்தக் கடல் என்ன செய்யும்? ஆனா, அவன் திரும்பக் கரையில உயிரோட கால் வைக்க முடியாது.. நான் வைக்க விட மாட்டேன்." எனக் கூறிடும் பொழுது வேலவமூர்த்தியின் முகத்தைப் பார்க்க ராகேஷுக்கே சற்றுப் பயமாகத் தான் இருந்தது.

 

அர்னவும், விக்ரமும் அந்த அறைக்குள் நுழைய மற்ற இருவரும் பேச்சை மாற்றினர்.

 

"வா அர்னவ்.. உனக்காகத் தான் காத்துட்டு இருந்தோம். இதோ நீ கேட்ட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்கு. நீ கையெழுத்துப் போடறது மட்டும் தான் பாக்கி." என ராகேஷ் சொல்லி முடிப்பதற்குள் அர்னவ்வின் போன் சிணுங்கிட அதை எடுத்து பேசியவனின் முகமலர் விரிந்தது.

 

"அங்கிள், விக்கி.. நம்ம கப்பல் எந்த இடத்துல காணாம போச்சுன்னு எக்ஸாக்ட் ஸ்பாட் தெரிஞ்சுடுச்சு. நம்ம ராம் தான் இப்போ கால் பண்ணிணது. இத்தனை நாளா தேடிட்டு இருந்தவர்களுக்கு இன்னைக்குத் தான் தெரிஞ்சுருக்கு. வா விக்கி நாம உடனே நம்ப ரிசெர்ச் ஆபீஸ் க்கு போகலாம்."

 

என முன்னே நடக்க,விக்ரம் அவர்களைத் திரும்பிப் பார்த்து நக்கலுடன் சிரித்துக்கொண்டு கிளம்பினான்.

 

அவர்கள் அங்கிருந்து கிளம்பியதும் ராகேஷ் கோபத்தில் கத்து கத்தென்று கத்திக் கொண்டிருக்க வேலவமூர்த்தி அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தார்.

 

"என்னப்பா கடைசி நேரத்துல அவன் கையெழுத்து போடாம கிளம்பிட்டானேன்னு நான் இவ்வளவு கோபத்துல இருக்கேன். நீங்க இப்படி அமைதியா கண்ண மூடிக்கிட்டு உட்காந்து இருக்கீங்க?" ராகேஷ்.

 

"அர்னவ் சாகறதுக்கு முன்னாடி விக்ரம் சாகறதுக்கு என்ன வழினு யோசிச்சுட்டு இருக்கேன்." என்று வேலவமூர்த்திக் கூறிய உடனே திடுக்கிட்ட ராகேஷ்,

 

"என்னது விக்ரம் சாகணுமா? எதுக்காக?" என்றான்.

 

"நீ எதைத்தான் முழுசா கவனிச்சு இருக்க? அந்தக் கால் வரதுக்கு முன்ன விக்ரம் அவன் போன எடுத்து ஏதோ நோண்டினான்.. அதுக்கு அப்பறம் தான் அர்னவ் க்கு கால் வந்துச்சு.

 

அதுமட்டும் இல்லாம அவன் வெளில போறப்ப நம்மள பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சான் பார்த்தியா? அதுலயே அவன் தான் இத செஞ்சதுனு எனக்குத் தெரிஞ்ச்சுடுச்சு.

 

அந்த விக்ரம் க்கு முன்னாடியே இந்த விஷயம் தெரிஞ்சுருக்கணும். ஆனா சரியாய் இந்த நேரம் பார்த்து அர்னவோட கவனத்தைக் கலைக்கறதுக்காக இந்த நேரத்துல சொல்ல சொல்லிருக்கான்.

 

இதுக்கு முன்னாடி அர்னவ முடிக்கற விஷயத்துல அந்த விக்ரம் நடுவுல புகுந்து குழப்பி இருக்கான். அதெல்லாம் ஏதோ எதேச்சையா நடந்திருச்சு னு நினச்சேன்.

 

ஆனா இப்போ அவன் சிரிச்ச சிரிப்பு ல அவனுக்கு நம்ம மேல சந்தேகம் வந்துடுச்சு னு நல்லா புரிஞ்சுது. அதான் விக்ரம முதல்ல முடிக்கலாமா னு யோசிக்கறேன்." வேலவமூர்த்தி.

 

"அப்பா வேணாம் வேணாம். அர்னவ் கூட விக்ரம் இருந்தால் விக்ரமாதித்திய மகாராஜாவுக்கு, பட்டி துணை இருக்கற மாதிரி னு எனக்குப் புரியுது. ஆனால், இந்தக் கடல் ஆராய்ச்சிக்கு விக்ரமோட துணை கண்டிப்பா அர்னவ்க்கு வேணும்.

 

அவங்க அந்த ஆராய்ச்சி பண்ணி முடுச்சு அந்தக் கிரீடத்தை எடுத்துட்டு வந்ததுக்குப் பிறகு நாம அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா முடுச்சுடலாம்".ராகேஷ்.

 

"உனக்குக் கூழுக்கும் ஆசை,மீசைக்கு ஆசை இல்ல?" என வேலவமூர்த்திச் சொல்லவும்,

 

"ஹி ஹி.. நான் உங்க பையன் இல்லயா ப்பா?" என ராகேஷ் கூறினான்.

 

அங்குத் தலைமை ஆராய்ச்சியகத்தில்..

 

"கடலுக்குள்ள ஒரு 1500 நாட்டிக்கல் தொலைவுல ஒரு தனித்து விடப்பட்ட தீவு இருக்கு. அந்தத் தீவுக்கு ஒரு 15 நாட்டிக்கல் பக்கத்துல தான் நம்பக் கப்பல் காணாம போயிருக்கு." ராம்.

"அப்போ அந்தத் தீவுல யாரவது இருக்காங்களா?அது எந்த நாட்டோட தீவு?"vஅர்னவ்.

 

"அது நம்ம நாட்டுக்குச் சொந்தமான தீவு தான். ஆனா அங்க யாரும் இருப்பதற்கான சான்றுகள் இல்ல. அதே சமயம் அங்க போனவங்க யாரும் திரும்பி வந்ததுக்கான சான்றும் இல்ல" என ராம் கூறிட, அதிர்ச்சியுடன் திரும்பினான் விக்ரம்.

 

"அந்தத் தீவு பேரு என்ன சொன்னீங்க ?" விக்ரம்.

 

"நான் இன்னும் சொல்லலயே சார்" ராம் .

 

"மனசுல பெரிய சாமி பட விக்ரம்னு நினைப்பு? என்கிட்டயேவா? இந்த லொள்ளுலாம் வேண்டாம்" எனக் கடுப்புடன் விக்ரம் கூறிட,

 

"சாரி சார்.. அந்தத்தீவு பேர் அம்பரத் தீவு" என்றதும் தூக்கிவாரிப்போட்டது விக்ரமிற்கு.

 

விக்ரம் திடுக்கிட்டுப் போகவும், அதை மனதில் குறித்துக்கொண்ட அர்னவ் அந்த ராமிடம் மற்ற விவரங்களைச் சேகரிக்கும்படி பணித்துவிட்டு விக்ரமைக் கூட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

 

"என்னாச்சு விக்ரம்? கடலுக்குள்ள போகப் போறோம்னு சொன்னதும் சந்தோஷத்துல அந்தக் குதி குதிச்சி? இப்போ அந்தத் தீவுக்குப் போனவங்க யாரும் திரும்பி வந்தது இல்லனு தெரிஞ்சதும் பல்பு பியூஸ் போயிடுச்சி?" என அவன் பாணியிலேயே வினவிட, விக்ரமிற்குச் சிரிப்பு வந்து விட்டது.

 

"அது இல்ல பாஸ் அந்தத் தீவு பத்தி என் தாத்தா சொல்லிருக்காரு." என விக்ரம் கூறிட,

 

"என்னடா நீ.. தாத்தா, பாட்டி கதை எல்லாம் சொல்லிட்டு இருக்க? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு" என அர்னவும் சீரியஸாக வினவினான்.

 

"என் தாத்தா என்னோட சின்ன வயசுல ஒரு குட்டி புத்தகம் படிச்சுட்டே இருப்பார்.. அதுல என்ன தாத்தா இருக்குனு கேட்டதுக்கு.. இது அம்பரத் தீவு பற்றிய கதை" னு சொன்னார்.

 

அம்பரம் நா என்ன தாத்தா னு கேட்டதுக்கு, அப்படினா ஆகாயம்,கடல் அப்படினு அர்த்தம் சொன்னார்.

 

அதெப்படி தாத்தா ஒரே சொல்லுக்கு ரெண்டு பொருள் இருக்கும்?

 

அது மட்டும் இல்லாம ரெண்டும் எதிரெதிர் துருவம் மாதிரி இருக்கு?ஆகாயம் மேல இருக்கறது,கடல் கீழ இருக்கறது.ஒரே குழப்பமா இருக்குனு சொன்னேன்.

 

எல்லாக் குழப்பத்துக்கும் உனக்கு விடை கிடைக்கும் ஆனா இப்போ இல்ல, நீ பெருசானத்துக்கு அப்பறம் னு சொன்னார். அது மட்டும் இல்லாம அந்தத் தீவுக்கு ஒரு சாபம் இருக்கு. அது ஒரு அபூர்வ மனுஷன் மூலமா தீரும்.

 

அவன் சிவபெருமான் மாதிரி அழிக்கும் சக்தியும் கொண்டிருப்பான், விஷ்ணு மாதிரி காக்கும் சக்தியும் கொண்டிருப்பான். அவனுக்கு நான் உதவியா இருப்பேன் னு சொன்னார்.

 

நான் அப்போ அவர் ஏதோ வயசான காலத்துல உளர்றாருனு நினச்சேன்.

 

ஆனா அதே பேர் ல நிஜமாவே ஒரு தீவு இருக்கு, அதுவும் இத்தனை நாளா அந்தத் தீவு பத்தி யாருக்கும் தெரியல பாருங்களேன்" என விக்ரம் கூறிட,

 

"டேய் உனக்கு அங்க வரதுக்குப் பயமா இருக்குன்னா நேரா சொல்லிடு. ஆனா இந்த மாதிரி காக்கா வட சுட்ட கதை எல்லாம் என்கிட்ட சுடாத.

 

யார் வந்தாலும் வரலானாலும் நான் அங்க போகத்தான் போறேன்." என அர்னவ் உறுதிபடக் கூறினான்.

 

"இங்க பாருங்க பாஸ் நான் உங்கள அங்க போகவேணாம்னு சொல்லல. ஆனா அங்க ஏதோ மர்மம் இருக்குனு சொல்றேன்." என்று விக்ரம் கூறவும்,

 

"அது எப்படி மர்மம் இருக்குனு சொல்ற? அந்தக் காலத்துலயே இப்படி ஒரு தீவு இருக்குனு தெரிஞ்ச ஆளு அந்தப் புக்க எழுதி இருக்கலாம் இல்லையா?" அர்னவ்.

 

"இருக்கலாம் தான். ஆனா அத ஏன் என் தாத்தா நான் அங்க போவேன்னு அவ்வளவே உறுதியா சொல்லணும்? அதுமட்டும் இல்லாம ஏதோ மீன் மச்சம் இருக்கற ஒருத்தனால தான் அந்தத் தீவோட சாபம் தீரும்னும் சொன்னார்." விக்ரம்.

 

"என்னது மீன் மச்சமா?என்ன அது? யாருக்கு இருக்காம்?" எனக் கொஞ்சம் பரபரப்புடன் அர்னவ் வினவினான்.

 

"அது என்னனு முழுசா எனக்கு நியாபகம் இல்ல பாஸ். ஆனா, அந்த மீன் மச்சம் இருக்கறவன் தான் அந்தக் கடவுள் அம்சம். அவன் மூலமா தான் அந்தத் தீவோட சாபம் தீரப்போகுதுனு சொல்லிக்கிட்டு இருந்தார்.

 

என் அப்பா கூட ஏன் ப்பா இப்படிக் கண்ட புத்தகத்தைப் படிச்சுட்டு உளறிட்டு இருக்கீங்கன்னு கேட்டார்.

 

அதுக்கு அவர் இப்போ உனக்குப் புரியாது டா எல்லாம் நடந்து முடிஞ்சதும் தான் உனக்குப் புரியும். ஆனா அப்போ நான் உயிரோட இருக்க மாட்டேன்னு சொன்னார்." விக்ரம்.

 

"இப்போ உங்க தாத்தா உயிரோட இருக்காரா?" அர்னவ்.

 

"ஆமா பாஸ்,ஆனா படுத்த படுக்கையில இருக்கார். ஸ்ட்ரோக் வந்து ரொம்ப வருஷம் ஆச்சு." என விக்ரம் கூறிட, யோசனையில் ஆழ்ந்தான் அர்னவ்.

 

அவன் யோசனையைக் கலைக்கும் விதமாக அங்கு வந்தனர் வேலவமூர்த்தியும், ராகேஷும் .

 

"என்ன அவசரமா ரிசெர்ச் ஆபீஸ் க்கு போகணும் னு ஓடி வந்தீங்க இங்க வந்து பார்த்தா சும்மா வெளில நின்னு பேசிட்டு இருக்கீங்க?" என வினவியதும், ஏதோ கூறி சமாளித்தனர் இருவரும்.

 

விக்ரம் கூறிய விஷயங்கள் எதுவும் வெளி ஆட்களுக்குத் தெரிய வேண்டாமென நினைத்திருந்தனர் இருவரும்.

 

"அப்போ சட்டுனு வந்து அந்த டாக்குமெண்ட்ஸ் ல கையெழுத்து போட்டுட்டுப் போய்டலாம் ல?" ராகேஷ்.

 

"அதென்ன பவர் ஆப் அட்டர்னி தான? அதுக்கு என்ன அவசியம்?" விக்ரம்.

 

"அதுக்கு என்ன அவசரமா? அதான் அந்தத் தீவு எங்க இருக்குனு தெரிஞ்சுடுச்சுல அப்பறம் உடனே அர்னவ் அங்க கிளம்பனும்னு நினைக்க மாட்டானா?"

 

அதனால தான் உடனே இந்த வேலைய முதல்ல முடுச்சுடலாம் னு இருக்கேன்." ராகேஷ்.

 

"நான் அதுக்கென்ன அவசரம் னு கேக்கல. அதுக்கென்ன அவசியம்னு கேட்டேன். ஏற்கனவே உன் அப்பா போர்டு மெம்பெர். இதுல எதுக்குப் பவர் வேற தனியா எழுதி குடுக்கணும். அதுக்கு வேற ஒரு நேரம் உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ணனும்." விக்ரம்.

 

ஏற்கனவே குழப்பத்திலிருந்த அர்னவ், அதுவும் சரி தான் நம்ம ஷிப் ரெடியா இருக்கானு பார்த்துட்டு நான் கிளம்ப வேண்டிய ஏற்பாடுகளைப் பார்க்க போறேன் என அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

 

அவன் கிளம்பியதும் விக்ரமை பார்வையிலேயே பஸ்பமாக்கி விடுவதெனப் பார்த்தார்கள் தந்தையும் தனையனும்.

 

அவர்களை நோக்கி அதே நக்கல் சிரிப்பை மீண்டும் உதிர்த்து விட்டு நகர்ந்தான் விக்ரம்.

 

இவ்வளவு ஆர்வத்துடனும்.. ஆர்ப்பரிக்கும் மனத்துடனும் விக்ரமும் அர்னவும் கடல் பயணம் செய்யப் புறப்பட்டுக் கொண்டு இருக்கையில்,

 

அங்கே கடலுக்குள் அர்னவின் வருகைக்காகக் கையில் இந்திராயுதத்துடன் காத்திருந்தாள் நங்கை ஒருத்தி.

visha bala
(@viba)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
03/08/2020 7:33 pm  

ஆழியின் காதலி -  4

 

 

சூரியன் தன் ஆயிரம் கரங்கள் நீட்டி, இந்த பூமித் தாயை அணைக்க விரைந்து கொண்டு இருந்தான்.

 

பூமியின் முக்கால் பாகத்தை நிரப்பிய அந்த நீல நிறத் தேவதை நம் நாயகர்களின் கண்கள் முழுதும் நிறைத்து இருந்தாள்.

 

ஏதோ ஒரு தைரியத்தில் ஆபத்தான வேலை என்று தெரிந்தும் கிளம்பி வந்திருந்த இருவருக்கும் மனதில் பல்வேறு எண்ணங்கள். அதனுள் முதன்மையானது குருநாதனை கண்டுபிடிப்பது , அடுத்து அந்த ரத்ன மணி கிரீடத்தினை அடைவது. ஆனால் அவற்றுள் அதி முக்கியமானது இருவர் உயிரையும் காத்துக் கொள்வது.

 

இவற்றுள் அதிகப் பொறுப்பு அர்னவிற்கே இருந்தது. ஏனென்றால் இந்தக் காரியத்திற்குள் விக்ரமை இழுத்துவிட்டது அர்னவ் தான்.

 

இது என்னவோ ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட விஷயம் போல ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு விக்ரம் கூறினாலும் அர்னவினால் அதை முழுதாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

 

அதுமட்டுமல்லாமல் விக்ரம் எடுத்து வந்த அவன் தாத்தாவின் புத்தகம் முக்கால் வாசி சிதைந்து இருந்தது,அவன் தாத்தாவும் பேசமுடியாத நிலையில் இருந்தார்.

 

ஆனால் அதில் ஒரே ஒரு விஷயம் மட்டுமே அர்னவிற்குச் சற்று உறுத்தலாக இருந்தது.அது என்னவென்றால்.. அந்த மச்ச அகழெலி தான்..

 

ஏதோ ஒரு எழுத்தாளர் இந்தத் தீவினை பற்றித் தெரிந்து கொண்டு தன் கற்பனையின் உதவியால் ஒரு கதையை எழுதி இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும்.., இந்த மீன் மச்சம், அதுவும் சரியாக வலது கை மணிக்கட்டில் இருப்பது போல் எழுதி இருப்பது தான் புரியவில்லை. (அந்தப் புத்தகத்தின் சிதையாத பகுதியில் இதுவும் ஒன்று).

 

இவை அனைத்துமே தற்செயலா?அல்லது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட விதியா?தற்செயல் என்றால் ஏன் தன் தந்தை தனக்கு இப்படி ஒரு மச்சம் இருப்பதை வெளியே சொல்லக் கூடாதென, யாருக்கும் காண்பிக்கக் கூடாதெனக் கூறியிருக்கக் கூடும்? அந்த மச்சத்தினை மறைக்கும் விதமாகத் தன்னை வலது கையில் கடிகாரத்தைக் கட்டக் கூற வேண்டும்?

 

ஒருவேளை அவருக்கு இந்தத் தீவினைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்குமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவனை விக்ரமின் குரல் கலைத்தது...

 

"என்ன பாஸ்? ஏதோ படு தீவிரமா யோசிச்சுட்டு இருக்கீங்க?"

 

"ஒன்னும் இல்ல விக்கி. நாம புறப்பட்டு இருக்கற காரியம் தான்.. எல்லாம் நல்லபடியா முடியனுமே.. அது தான் எந்தெந்த விதத்துல நமக்கு ஆபத்து வரும்னு நினைச்சுட்டு இருக்கேன். முக்கியமா உன்ன பத்திரமா திரும்பக் கூட்டிட்டு போகணும்.

 

நாம கிளம்பி இருக்கறது ரொம்பச் சீக்ரெட்டான விஷயம், அதனால என்னால நிறைய ஆளுங்கள நம்மளோட பாதுகாப்புக்காகக் கூடக் கூட்டிட்டு வர முடில.. அந்த இடத்துக்கு நாம ரெண்டுபேர் போகறதுக்கே அனுமதி வாங்கறது கஷ்டமாகிடுச்சுனு வேலவமூர்த்தி அங்கிள் சொல்லிட்டாரு. எத்தனை பேர கூட்டிட்டு வந்தாலும் ஒவ்வொருத்தரோட உயிரும் ரொம்ப முக்கியம் இல்லையா? ஆனா இப்போ நாம எத யோசிச்சும் பிரயோஜனம் இல்ல. இந்த விஷயத்துல எத்தனை ஆபத்து வந்தாலும் நாம கண்டிப்பா ஜெயிக்கணும. எனக்கு ஜெயிப்போம்ன்னு நம்பிக்கை இருக்கு.."அர்னவ்.

 

"நீங்க கரையில இருக்கறத விடக் கடல்ல இருக்கறது தான் உங்களுக்கு ரொம்பப் பாதுகாப்புன்னு எனக்குத் தோணுது பாஸ்." விக்ரம்.

 

"ஏன் டா? ஏன் உனக்கு அப்படித் தோணுது? எதாவது சொல்லனும்னா அத என்கிட்டே நேரடியாவே சொல்லலாம் விக்ரம்.. ஏன் இப்படிச் சுத்தி வளச்சுப் பேசற?"அர்னவ்.

 

"சுத்தி வளைக்கமா நேரடியா சொல்லணும்னு தான் எனக்கும் ஆசை பாஸ்.. ஆனா அதுக்கு என்கிட்டே போதுமான ஆதாரம் இல்ல. நாம திரும்பச் சென்னை போகறதுக்குள்ள எல்லா ஆதாரமும் கிடைச்சுடும். அப்பறம் சொல்றேன்.. எல்லாத்தையும் முழுசா.." விக்ரம்.

 

"என்னமோ போ.. என் நினைப்பு முழுக்க இந்தக் கடல் மட்டும் தான் ஆக்கிரமிச்சு இருக்கு . வேற எதையும் எனக்கு யோசிக்கக் கூடத் தோணல.. ஆனா இந்தக் கடல் அனுபவம் நம்ம வாழ்க்கையில ரொம்பவே மறக்க முடியாததா இருக்கும் னு மட்டும் தோணுது.." அர்னவ்.

 

"ம்ம்..எனக்கும் அப்படித் தான் தோணுது பாஸ். சரி இன்னொன்னு கேட்கறேன் , இது எதுவுமே உண்மை இல்லனா?ஒருவேல யாரவது நம்மள ட்ரிக் ஆ இந்த ட்ராப் ல மாட்டி விட்ருந்தா? என்ன செய்யப் போறோம்?" விக்ரம்.

 

"நீ என்ன கேட்க வரேன்னு எனக்குப் புரியுது. யாரவது நம்ம வேலவமூர்த்தி அங்கிள ஏமாத்தி இந்த மாதிரி ஒரு பொக்கிஷம் இருக்குனு சொல்லி இருந்தா எனச் செய்றதுன்னு தான?

 

நான் அங்கிளோட பேச்சை மட்டுமே கேட்டு இந்த ரிஸ்க் எடுக்கல விக்கி.. என் அப்பாவோட டைரி ல இதைப் பற்றிய குறிப்பு இருந்துச்சு..

 

அது தான் எனக்கு இந்த ஆராய்ச்சியில் இறங்க ஒரு தூண்டுதலா இருந்துச்சு. அத நம்பித் தான் நான் குருநாதன் சார இங்க அனுப்பி வச்சேன்." எனக் கூறி விக்ரமிடம் தன் தந்தையின் டைரியைக் கொடுத்தான் அர்னவ்.

 

அதைப் படித்துப் பார்த்த விக்ரமிற்குத் தனது தாத்தா கூறிய கதையுடன் அந்த டைரி பெருமளவு ஒத்துப் போவதுபோல் இருந்தது. ஆனால் ஒரு பேச்சுக்கு கூட அந்த வேலவமூர்த்தித் தனக்குக் கெடுதல் நினைத்திருப்பான் எனக் கூறிட அர்னவிற்கு வாய் வர வில்லையே.. இப்படிப் பட்டவனை அழிக்கத் திட்டமிடுகிறார்களே என எண்ணிக் கொண்டிருந்தான்.

 

இருவரும் இவ்வாறு சிந்தித்துக் கொண்டு இருக்கையில் அவர்களது SONAR மிகப்பெரும் புயல் கடலில் தோன்றி இருப்பதை உணர்த்தியது.

 

ஆனால் அவர்கள் கடலினுள் 200 அடி ஆழத்தில் இருந்ததால் அலைகளின் கடினம் தங்களைப் பாதிக்காது என்றே நினைத்திருந்தனர். இருப்பினும் வந்திருக்கும் புயல் மிக மிக வலிமையுடையதாய் இருந்தது.

 

அவர்களால் கடலின் மேற்பரப்பில் தோன்றும் ஒவ்வொரு அலையையும் உணர முடிந்தது.

 

சற்று நேரத்தில் அவர்களது கப்பல் அந்தப் புயலில் சிக்குண்டு கடலின் மேற்பரப்புக்கு வந்து விட்டிருந்தது.

 

ஒரு நீர்மூழ்கிக்கப்பலுக்கு இப்படிப் புயலில் சிக்குறுவது மிகக் கடினமான சூழ்நிலை..

 

"ஹையோ என்ன பாஸ் இந்த நேரத்துல இப்படிப் புயல் வரும் னு யாருமே நம்மள எச்சரிக்கல? நாம எல்லா வெதர் ரிப்போர்டும் அலசி ஆராய்ஞ்சுட்டு தான இந்த டைம் ல பிரயாணம் செஞ்சா ரொம்பப் பாதுகாப்பா இருக்கும் னு பிளான் பண்ணி தான பண்ணினோம்..

 

ஆனா அந்த மகானுபவர் வடிவேலானந்தாவோட தத்துவம் இப்படிப் பொய்யா போச்சே பாஸ்.." என விக்ரம் புலம்பிட., (ஏதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்னு வடிவேலு சொன்னார் இல்ல., அதைத் தான் நம்ம விக்ரம் சொல்றார்).

 

."அடேய் நீ வேற.. நீயும் பயப்பட்டு என்னையும் பயமுறுத்தாத. கொஞ்ச நேரம் வாய் பேசாம இரு.. என்ன செய்யலாம் னு நான் யோசிக்கறேன்." எனக் கடு கடுத்தவன்..

 

"சரி இங்க பாரு நம்ம BALLAST (BALLAST என்றால் கப்பலை சமநிலையில் வைத்திருக்க நீர்மூழ்கிக்கப்பலின் அடிப்பாகத்தில் ஒரு சிறு பகுதியில் தேவையான அளவு நீரினை சேமித்து வைத்திருப்பார்கள். அந்த நீர், கப்பல் நீரினுள் மூழ்கத் தொடங்கியதுமே நிறைய ஆரம்பிக்கும். தேவையான அளவு வந்து விட்ட பிறகு அதன் வால்வு மூடிக் கொள்வது போல் அமைந்திருக்கும்) ல இருக்கற தண்ணி எல்லாம் வெளில போய்டுச்சுன்னு நினைக்கறேன்.

 

அதனால தான் நம்ம கப்பல் கடலுக்கு மேற்பரப்புள் இப்படி ஓர் பக்கமா செஞ்சுட்டு இருக்கு.. முதல்ல அந்த BALLAST ல தண்ணிய நிரப்பனும்"எனக் கூறி அந்த வேளையில் அவன் இறங்கிட,கப்பல் புயலின் தாக்கத்தால் அங்கும் இங்கும் தூக்கி எறியப்படாமல் கடலின் மேற்பரப்பிலாவது இருக்கும் படி அதனைக் கட்டுப் படுத்ததும் வேலை யில் இறங்கினான் விக்ரம்..

 

"பாஸ் நம்ம கப்பல் இப்போ 40 டிகிரி கோணத்துல சரிவா இருக்கு..இன்னும் நிறையத் தண்ணி ஒவ்வொரு பகுதியிலயும் நிரப்பனும்.இல்லனா இந்தப் புயல்ல நம்ம கப்பலோட சேர்ந்து நாமளும் காணாம போயிடுவோம்."விக்ரம்.

 

"டேய் அபசகுனமா பேசாத..இது ரொம்பக் கஷ்டமான ப்ரோசஸ் தான். ஆனா நம்மால இத கண்டிப்பா தாண்டி வர முடியும். நம்பிக்கையைக் கை விடாத."அர்னவ்.

 

"ஓகே பாஸ். we can do it. வெற்றி நமதே.." என்றான் விக்ரம்.

 

புயலின் வேகத்தினால் அந்தக் கப்பல் பூமி சுற்றும் வேகத்தினைக் காட்டிலும் அதிவேகமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நண்பர்கள் இருவரும் உயிர் பிழைத்தலைத் தாண்டியும்..தங்கள் கொண்ட லட்சியத்தினை அடைய வேண்டுமெனக் குறிக்கோளில் அதி தீவிரமாக இருந்ததால்.. அரும்பாடு பட்டு தங்களையும், கப்பலையும் காக்க போராடிக்கொண்டிருந்தனர்.

 

மிக நீண்ட இரவு பிரசவத்திற்காகக் காத்திருக்கும் அந்த ஒரு இரவு தான் என்பார்கள். இதுவும் அதுபோல ஒரு நீண்ட இரவாகத் தான் நீண்டது.

 

அந்த நீண்ட நெடும் இரவில் கருந்துளைக்குள்ளே புகுந்து விட்டதினைப் போல் காரிருளில் இரு உயிர்கள் உற்றார், சுற்றோர் என எவர் துணையும் இன்றி உயிர்வாழ்தலுக்கெனத் தங்கள் ஜீவமரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

முடியா இரவே..விடியாப் பகலே என்பது போல இது முடியவே முடியாதா என இருவரும் சலிப்படைந்து மனம் தளருகையில்.. ballast இல் தேவையான அளவு நீர் நிரம்பி கப்பலை கடலின் அடிப்பாகத்தினுள் செல்ல உதவியது.

 

கப்பல் மீண்டும் பாதுகாப்பாக 2oo அடிக்குக் கீழே கடலினுள் வந்துவிட இருவரும் சீராக மூச்சு விட்டனர்.

 

அதிலும் விக்ரமிற்குத் தான் உயிரோடு இருப்பதே சந்தேகமாகத் தான் இருந்தது.

 

"பாஸ் நான் உயிரோட இருக்கனா? என மணிக்கு ஒரு முறை கேட்டுக் கொண்டே இருந்தான். (மணிக்கு என்றால் ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறை அல்ல, ஒவ்வொரு வினாடிக்கும் ஒருமுறை).

 

முதலில் ஒரு பரிதாபத்தில் பொறுமையாகப் பதிலளித்து வந்த அர்னவ்.. இறுதியில் செம கடுப்பாகி..

 

"டேய் என்ன டா வேணும் உனக்கு? நீ இதுவரைக்கும் உயிரோட தான் இருக்க. ஆனா இன்னொரு முறை இதே கேள்வியைக் கேட்ட, நானே உன்ன கொன்னு கடல் குள்ள வீசிடுவேன்.

 

என்னமோ கப்பல் ல வந்த முதல் நாள் இப்போ தான் தாய் மடி வந்த மாதிரி இருக்கு. ஏன்னா,எல்லா உயிரும் முதன்முதலா கடல்ல தான உருவாச்சு, சோ நம்ம மூதாதையர்களும் கடல்ல தான் உருவாகி இருப்பாங்க னு தத்துவம் எல்லாம் பேசின?இப்போ ஒரு சின்னப் புயலுக்கு இப்படிப் பயப்படற?

 

இனி நீ வாயத் திறந்த அவ்வளோ தான் "என ஒரு கத்து கத்த.. விக்ரம் ,

 

"இது சின்னப் புயலா?உங்களுக்கே அநியாயமா இல்ல?உங்க அப்பா ஆசைக்காக நீங்க ரிஸ்க் எடுக்கலாம்.. ஏதோ நீங்க தனியா கஷ்டப்படுவீங்கன்னு ரிஸ்க் எடுத்து நானும் கூட வந்தா.., இப்படி மிரட்டறீங்க??.."என மனதிற்குள் தான் பேசிக்கொண்டான்..

 

"ஆத்தீ வாயத் தொறந்தா இந்த ஆளு வாயிலேயே வெட்டிப்புடுவாரூ என்ற நினைப்புடன்".

 

என்னதான் ஒரு போருக்குத் தேவையான ஆயுதங்கள் எடுத்து வந்திருந்தாலும் எதிரி யார் என்னவென்றே தெரியாத நிலையில் கடலில் அதுவும் இந்தப் பெரும்புயலில் இருந்து தப்பித்த பின்பு இது மிக ஆபத்தான காரியம். இதிலிருந்து தாங்கள் இருவரும் பிழைத்த மீள்வது அரிது என்று ரொம்பவே தோன்றத் தொடங்கி விட்டிருந்தது அர்னவிற்கு.

 

இப்படியே இன்னும் சிலநாட்கள் பயணித்த பின்பு,

 

திடீரென்று ஒருநாள்.. இரவா ,பகலா எனத் தெரியாத வேளையில் கடலின் தூரத்தில் ஏதோ ஒரு பொருள் இருப்பது போல அவர்களது SONAR காண்பித்தது.

 

அது என்ன பொருள் என்று எவ்வளவு முயன்றும் தெரியவில்லை. அருகே செல்லச் செல்ல.. அதன் ஒளி அந்தக் கருநீலக் கடலையே தங்க நிறமாக ஜொலிக்கச் செய்து கொண்டிருந்தது.

 

நண்பர்கள் இருவரும் தங்களது மூளை மரத்துப் போனது போல, ஏதும் செய்ய விழையாமல் சிலையெனச் சமைந்திருந்தார்கள்.

 

திடீரென அந்த நீர்மூழ்கிக்கப்பல் ஒரு இடத்தில் நின்றுவிட,அலாரம் பைத்தியம் பிடித்தது போல அலற ஆரம்பித்தது.

 

அந்த அலாரம் அடித்த ஒலியில் தான் சுயநினைவு கொண்டனர் இருவரும். இந்தச் சூழ்நிலையில் மீண்டும் புயலில் சிக்குண்டது விக்ரமிற்கு நினைவில் வந்துவிட,அதுவரை அவன் வாய்க்குப் போடப்பட்டிருந்த பூட்டுப் பயத்தினால் வெடித்துச் சிதறியது.

 

"டேய் இப்ப நீ வாய மூடல உன்ன கொன்னுடுவேன். அங்க என்னமோ வெளிச்சம் தெரியுது பாரு" என அர்னவ் அதட்டிட,

 

தைரியத்தை வரவழைத்து அந்தப் பொன்னொளி வெளிவந்த இடத்தினைக் கூர்ந்து நோக்கிட அங்கு இருந்தது.. அந்தக் கிரீடம் தான்.

 

ஆனால் அந்தக் கிரீடம் ஒரு பெண்ணின் கைகளில் இருந்தது..

 

இவ்வளவு அழகுடன்.. இவ்வளவு பேரெழிலுடன் ஒருத்தி இருப்பாளா? அவளுடைய மோகனப் புன்னகை தான் அந்த ரத்ன கிரீடத்திற்கே பொன்னொளியைப் பாய்ச்சியதோ என்றிருந்தது.

 

தகதகக்கும் இளசூரியன் கொண்டு படைத்தது போல் பொன்னிறமேனி..

 

இந்திர வில்லான வானவில்லே புருவங்களென..

 

அப்பப்பா பெண்களின் விழிகளை ஏன் வாளுடன் ஒப்பிடுகிறார்கள் என இப்பொழுது தான் தெரிகிறது..

 

அவள் விழிகளின் கூரிய முனை கொண்டு.. வைரம் பாய்ந்த இவ்வாலிபர்களின் இதயத்தினைக் கூறிடுகிறாளே..

 

அந்த வசீகர விழியின் வலையில் இருந்து எவரும் தப்பிவிடக் கூடாதெனக் கருங்கடலின் வர்ணம் குழைத்து அதனைக் கருவிழியினில் பூசி விழி வலைக்கு மேலும் வலுவூட்டி வைத்திருந்தாளோ??..

 

ஆஹா..இவ்வளவு அழகிய சரிவினை யாரும் கண்டிருக்க மாட்டார்கள்..ஆமாம் அத்துணைச் சீராக இருந்தது அவள் மூக்கின் சரிவு..

 

கடலின் நித்திலம் அனைத்தும் அவள் கன்னங்களிலே அடைக்கலம் என்பது போலப் பார்ப்பதற்கே தொடுவது போல எவ்வளவு மென்மை..

 

அந்த உதடுகள்..செம்பவளம் அனைத்தும் அந்த உதடுகளில் இருந்து தான் உருப்பெறுகிறதோ..

 

அவள் கன்னம் தழுவி,தோள்களில் விளையாடும் அந்தக் கார்மேகக் கூந்தலாய்ப் பிறந்திடும் வரம் கிடைத்திருக்கதோ எந்நேரமும் அவளை ஆரத்தி தழுவி மகிழ்ந்திருக்கலாமே?

 

எவ்வளவு மென்மையான குரல்வளை..அந்த அழகிய குரல்வழியிலிருந்து வரும் வார்த்தைகள் என்ன மதுர மொழி விளம்பப்ப்போகிறதோ ...

 

நீண்ட கைகளும்..மலர்க் காம்பினை ஒத்த விரல்களுமாக..அடடா ஒரு பெண் எவ்வாறு இவ்வளவு மென்மையாக இருக்க முடியும்?அழுந்தப் பற்றினால் கூடஒடிந்து விடுவதைப் போல..

 

இவர்களது கைக்காப்பு கூட அவள் இடையினைச் சுற்றி வளைத்து விடும்..மெல்லிடையாள் என்பதுவின் பொருள் இவளோ..??

 

அவளின் இடை தாண்டிய இருவரின் கண்களும் பேரதிர்ச்சியில் விரிந்தன..

 

இது என்ன மாயத் தோற்றம்? என ஒருவரை மற்றவர் திரும்பிப்பார்த்தும்,கண்களைக் கசக்கி விட்டுப் பார்த்தும் கூட அது மறைய வில்லை..

 

அப்படியென்றால்.. இது மாயத் தோற்றம் அல்ல..

 

இதுவரை கதைகளில் கேட்டது.. கற்பனையில் மட்டுமே உயிர்கொண்டிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த ஒன்று..

 

ஒன்று.. அல்ல ஒருத்தி. அவளா?அதுவா?யார் அது?....

 

 

 

 

 


ReplyQuote
visha bala
(@viba)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
04/08/2020 6:47 pm  

ஆழியின் காதலி - 

 

இதுவரை மனிதன் கண்களால் கண்டிராத உயிரினங்கள் கூட அவற்றின் எலும்புக் கூடுகள், சிதை படிமங்கள் மூலமாக இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது.

 

ஆனால் முழுவதும் கட்டுக்கதை என நம்பிக்கொண்டிருந்த ஒர் உயிரினம், கண்முன்னே வந்து நிற்கையில்.. நம் கண்களின் மீதே சந்தேகம் வந்துவிடுகிறது.

 

இதுவரை தங்கள் ஆராய்ச்சியில் எத்தனையோ உயிரினங்களை ஆராய்ந்து பார்த்திருந்த நண்பர்கள் இருவருக்கும், கடலுக்குள் உண்மையாகவே இப்படி ஓர் உயிரினம், அதுவும் தேவ கன்னிகை போன்ற உருவத்தில் இருப்பது பேரதிசயமாகவே தோன்றியது.

 

வார்த்தைகளே மறந்து விட்டிருந்த இருவருக்கும் சற்று நேரம் கழிந்த பின்பு தான் சுயநினைவே வந்தது.

 

அதிலும் முதலில் பேச ஆரம்பித்தது.. வேற யாருங்க? நம்ம விக்ரம் தானுங்க..

 

"பாஸ் நாம ஒன்னும் கனவு காணலையே? இப்படிப் பட்ட உயிரினம் இந்தப் பூமியில இருக்குதா என்ன???"

 

"டேய் கண்ணால பார்த்ததுக்கு அப்பறமும் ஏன்டா உனக்கு இந்தச் சந்தேகம்? கடல் கன்னி என்ற உயிரினம் நிஜமாவே இருக்காங்க போல இருக்கு. ஆனா முழு மனிதப் பெண்கள்ல கூட இவ்வளவு சௌந்தர்யமான பொண்ண நான் இதுவரைக்கும் பார்த்தது இல்ல விக்கி.." அர்னவ்.

"ஆமாம் பாஸ் நானும் கூட இவ்வளவு அழகான பொண்ண என் வாழ் நாள்ல பார்த்தது இல்ல" விக்கி.

 

"ஹோ நீயே இப்படிப்பட்ட அழகான பொண்ண பார்த்தது இல்லையா?அப்போ நிஜமாவே இவ பேரழகியாத் தான் இருக்கணும்."அர்னவ்.

 

"எந்த ரணகளமா இருந்தாலும்.. என்ன கலாய்க்கறது தான் , உங்களுக்குக் கிளுகிளுப்பா?" விக்கி.

 

"அட விடு டா..உன்ன நான் கலாய்க்காம வேற யாரு கலாய்ப்பாங்க. சரி, இவ்வளவு நேரம் அந்தப் பொண்ணு ரொம்பத் தூரமா இருந்த மாதிரி தான இருந்துச்சு.. நாமளும் அந்தப் பொண்ண பார்த்ததும் நம்ம கப்பலை நிறுத்தியாச்சு. ஆனா அவ நம்மள பார்த்து முன்னேறி வர மாதிரி இருக்கு இல்ல?" அர்னவ்.

 

"அட ஆமா பாஸ்.. ஒருவேளை அந்த ரத்ன மணி கிரீடத்தை நம்ம கிட்ட குடுக்கறதுக்காகத் தான் வராளோ? ஆனா அந்தக் கிரீடம் மீன் மச்சம் இருக்கற ஆளுக்குத் தான் சேரும்.. அதுவும் அந்த அம்பாரத் தீவு போன பின்னாடி தான் நான் அந்த ஆளையே கண்டுபிடிப்பேன்னு இல்ல என் தாத்தா சொன்னாரு?" விக்கி. (இன்னும் அர்னவ் தனக்குத் தான்அந்த மீன் மச்சம் இருக்குன்னு விக்ரம் கிட்ட சொல்லல).

 

"டேய் இன்னும் நீ உங்க தாத்தா சுட்ட வடையத் தான் திரும்பச் சுட்டுட்டு இருக்கியா?" அர்னவ்.

 

"ஆமாமா உங்க அப்பா சுட்ட வடையும் தான்.. அது தான் ரொம்ப விலாவாரியா டைரி ல எல்லாம் எழுதி வச்சுருந்தாரே மனுஷன்" எனச் சப்தமாக...அல்ல மெதுவாக வாய்க்குள் முனகிக் கொண்டான் விக்ரம்.

 

"என்னடா எதோ முணுமுணுக்கற ?"அர்னவ்

 

"அது ஒன்னும் இல்ல பாஸ்.. வந்து.. அய்யயோ டக்குனு பொய் சொல்ல வர மாட்டேங்குதே.. ஆஆஆஆங்.. அது... வந்து.. யார் சுட்ட வடையா இருந்தா என்ன.. இப்போ தான் அந்தக் கிரீடம் கிடைக்கப் போகுதேன்னு சொன்னேன் பாஸ்..ஹி ஹீ ஹி..." விக்ரம்.

 

"போதும் போதும்.. ரொம்பச் சிரிக்காத.. முதுகெலும்பு வரைக்கும் தெரியுது." என அர்னவ் மீண்டும் விக்ரமின் வாய்க்கு பூட்டு போட்டிட..

 

இருவரின் கவனமும் மீண்டும் அந்தக் கடல் கன்னிகையிடமே சென்றது.

 

எங்கோ ஒரு தூரத்தில் இருந்த பொழுது தேவதையைப் போல் தெரிந்தவள்.. அவர்கள் அருகினில் மெல்ல மெல்ல வந்திட.. இருவரின் ஆவலும் அவளது தரிசனத்தை அருகில் பார்த்திடத் துடித்தது.

 

அவள் அந்த ஆழ்கடலினுள் மிக லாவகமாக நீந்திவரும் அழகினை மெய் மறந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

 

அவள் வழியில் வரும் மீன்கள் எல்லாம் அவளுக்காக மரியாதையுடன் வழி விலகி பாதை அமைத்துக் கொடுத்தன.

 

சற்றுத் தூரம் வரை அவள் இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தனது மோகனைப் புன்னகை எனும் வலையில் அவர்களைக் கட்டி வைத்தவாறே வந்து கொண்டிருந்தாள்..

 

ஆனால் அருகே நெருங்க.. நெருங்க.. ஹையோ இதென்ன பயங்கரம்..

 

இருவரின் முகமும் பயத்தில் வெளிறிப் போனது..

பெரும்புயலில் சிக்கி மீண்டு எழுந்த போது கூட இனி ஆபத்தின்றி எளிமையாக அந்தக் கிரீடத்தினை அடைந்து விடலாம் என விக்ரமும் சரி அர்னவும் சரி நினைத்திட வில்லை.

 

இன்னும் பல ஆபத்துகளைக் கடந்திட வேண்டும் என்று தயார் நிலையில் இருந்தனர் என்றே கூறலாம்.

 

ஆனால் இப்படி ஒரு பயங்கரத்தை இருவரும் சற்றும் எதிர்பார்த்திட வில்லை. புயலில் சிக்குண்ட பொழுது, மீண்டு வர முடியும் என்ற சிறு நம்பிக்கை இருந்தது. ஆனால்.. இவளிடமிருந்து.. இதுவிடமிருந்து.. எவ்வாறு தப்பிப்பது..

 

முதலில் அவளது அழகினைக் கண்டு அதிசயித்து ப்ரம்மித்து நின்றார்கள் என்றால், இப்பொழுதோ அகோரமாய் மாறி அவர்களை விழுங்க வரும்.. இவளது பயங்கரத்திலிருந்து மீளும் வழி அறியாது திகைத்து நின்றிருந்தனர்.

 

அவளை முதன்முதலாய் அவளை அவ்வளவு தூரத்தில் கண்டவர்கள் அவளைச் சுந்தரத் தேவ மங்கையெனவே நினைத்து.. அவர்களது மூளையில் அவளைப் பற்றிய காதல் கவிதையினைப் புனைய ஆரம்பித்திருந்தனர்..

 

ஆனால் இப்பொழுதோ...அவளைப் பார்த்திடுகையில்.. அந்தச் சமுத்திர ராஜனும் சற்று நடுங்கித் தான் போவான்.. அந்தச் சூரியன் கூட மேகங்களுக்கிடையில் ஒளிந்து கொள்வான்.. வான் நிலவன் கூடத் தன கடல் காதலியை கொஞ்சிட அஞ்சுவான்.

 

ஏனெனில்..,

 

காண்பவரை அப்படியே தலைகுப்புற கவிழ செய்யும் அவளின் நயனங்களில் இப்பொழுதோ ரத்தவெறி குடி கொண்டிருக்கிறது.

 

மதுரமொழி கொண்டு விருந்து படைக்கும் என எண்ணி இருந்த அவளது பவளச் செவ்வாய்.., இப்பொழுது இவர்களது மரண அறிக்கையை விளம்பப்போகிறது.

 

அவளது வெண் சங்கு மென் கழுத்தும்.. தாகம்.. தாகம்... என்று இவர்களது ரத்தத்தினைப் பருகிடத் துடிக்கிறது..

 

அல்லி மலரின் தளிர் காம்பினை ஒத்த இவளது மென்கரங்களோ இப்பொழுது நீண்டு இவர்கள் இருவரின் குரல்வளையைப் பற்றிட முனைகிறது..

 

தூரத்தில் சிறிதளவு பொன் புள்ளியெனத் தோன்றியவள் இப்பொழுதோ இவர்கள் முன்பு பன் மடங்கு பெரியதாகி.. பெரும் கடல் அரக்கியெனவே தோன்றினாள் ..

 

கடலின் அந்தகாரத்தினுள் அழகிய மங்கையைக் கண்ட காளையர்கள், தாங்கள் நிறுத்தி வைத்திருந்த கப்பலினை அவள் உரு மாறத் தொடங்கியதும் பயத்தில் மீண்டும் இயக்க முனைந்தால் அது ஏதோ சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது போல் நின்ற இடத்தினை விட்டு நகர மாட்டேன் என்றிருந்தது.

 

அர்னவ், விக்ரமிடம்.. விக்கி கப்பல் நகர மாட்டேங்குது டா.." எனத் தயங்கிக் கொண்டே கூற,

 

"அய்யயோ என்ன பாஸ் இது பைக் ஸ்டார்ட் ஆகமாட்டேங்குதுனு சொல்ற மாதிரி ரொம்பச் சாதாரணமா சொல்றீங்க.. இந்தக் கப்பல் அதோட உச்சகட்ட வேகத்துல போனாலே இவ கிட்ட இருந்து தப்பிக்க முடியுமான்னு தெரியல..

 

இதுல கப்பல் நகர மாட்டேங்குதுனு வேற சொல்றீங்க.. நகருங்க நான் கொஞ்சம் பார்க்கறேன்." என விக்ரம் கூறவும்,

 

"என்னமோ பண்ணித் தொலை எப்படியாவது கப்பல் மூவ் ஆனா போதும்.." என அர்னவும் விலகிட,

 

பெரிய கமல் ஹாசன் இவரு.. "ராஜா கைய வச்சா.. எதுவும் ராங்காப் பூடாது.."னு வந்துட்டாரு..எனக் கப்பலே விக்ரமைப் பார்த்துக் காரித் துப்பியது..

 

முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவன் மூச்சு ஒரு கணம் நின்று பின்பு வெளிவந்தது.

 

கண் முன்னே அந்தப் பெரிய அரக்கி பெரும் வாளினை ஒத்திருந்த தனது வாலினைச் சுழற்றினாள், அவர்களது கப்பலை நோக்கி..

 

தனது தந்தையின் கனவையும் தனது கண்களிலேயே சுமந்த அர்னவ் நடக்கப் போகும் விபரீதத்தினை உணர்ந்து கண்களை மூடி அப்படியே நின்றிருந்தான்..

 

அர்னவே இந்த நிலைமையில் என்றால், விக்ரமைக் கேட்கவும் வேண்டுமா என்ன?

 

இரு கண்களையும் இறுக்கமூடிக்கொண்டு உலகிலுள்ள அனைத்துக் கடவுளையும் நினைத்துக் கொண்டிருந்தான்.

 

தங்களை எப்படியாவது காப்பாற்றிவிடச் சொல்லி அல்ல..

 

எந்தச் சக்தியாலும் தங்களைக் காப்பற்ற முடியாது என்பது தெரிந்தே இருந்தமையால்.. அவ்வாறெல்லாம் அவன் வேண்டிவிடவில்லை.

 

எப்படியாவது தங்களது இலட்சியத்தை உயிரைக் கொடுத்தாவது அடைந்துவிட வேண்டும் என்ற இவர்களது குறிக்கோள் அடுத்த ஜென்மத்திலாவது நிறைவேறிட வேண்டும் என்று தான்.

 

அந்த இறுதி நொடியில் விக்ரமின் எண்ணம் இதுவாக இருக்க.. அர்னவோ மானஸீகமாய்த் தன் தந்தையிடம் மன்னிப்பை வேண்டிக் கொண்டிருந்தான்.

 

"என்ன மன்னிச்சுருங்க அப்பா...ஒரு அப்பாவா நீங்க உங்களோட பணம்.. காசு.. சொத்து.. மட்டுமே எனக்கு விட்டுட்டு போகல. உங்களோட கனவையும் கூட என் கண்கள்ல விதைச்சுட்டு போனீங்க. ஆனா ஒரு மகனா நான் அந்தக் கனவை விளைவிக்காம கண்ணுக்குள்ளயே கருக்கிட்டேன்.

 

ஆனா உங்க மேல சாத்தியமா மறு பிறவி எடுத்து வந்தாவது நான் உங்க கனவை நிறைவேத்தலை நான் அர்னவ் இல்ல." என மனதுள் சூளுரைத்து முடிக்கும் தருவாயில், அந்தக் கடல் அரக்கியின் வால் இவர்களின் கப்பலைத் தட்டி உடைப்பெடுக்கச் செய்தது.

 

எஜமான விசுவாசம் சிறிதளவும் இல்லாத அந்தக் கப்பல் அவளது ஒரே தீண்டலில் உடைப்பெடுத்து விட, இருவரும் பொங்கிப் பிரவாகமெடுத்து வரும் கடலின் உவர் நீர் கொண்டு அடித்துச் செல்லப் பட்டனர்..

 

என்னதான் ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு எதற்கும் தயாராக இருந்தாலும்.. அது பயனற்ற ஒன்று என அறிந்தே இருந்தனர் இருவரும்.

 

பின்னே.. அவ்வளவு பெரிய கப்பலையே சுக்களாய்த் தட்டியவள் இவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு தப்பி விட விட்டுவிடுவாளா என்ன?

 

சொல்லி வைத்தாற்போல.. அவர்கள் கப்பலை விட்டு வெளியே கடல் நீர்ப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப் பட்டதும், இருவரின் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் அனைத்து உயிர்காக்கும் உபகரணங்களும் நீரினுள் கழன்று விழுந்தன.

 

இதை ஓரளவு எதிர்பார்த்திருந்த நண்பர்கள் இருவரும் ஒருவரைப் பார்த்து மற்றவர் மென்னகை புரிந்து கொண்டனர்.

 

அந்த இறக்கும் தருவாயிலும் அவர்களது தன்னிலை தவறி விட வில்லை..

 

கடல் நீர் மெல்ல மெல்ல அவர்களின் உடம்பில் எலும்பு வரை குளிரினைக் கடத்திட.. கடலின் மேற்பாகத்திற்கு வந்துவிட மேற்கொண்ட முயற்சியும் தோற்றுப் போனது அவர்களுக்கு.

 

எவ்வளவோ மூச்சடக்கிப் பார்த்தும் முடியாமல் இறுதியில் தளர்ந்து போன அவர்களின் இருவரின் காது, மூக்கு, வாய்.. என அனைத்திலும் நீர் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த.. பஞ்சு போன்ற நுரையீரல், நீரினை முழுதும் நிறைத்துக் கொண்டது..

 

உயிர்க்காற்றுக்குப் போராடி போராடி அலுத்து விட்ட இரு உயிர்களும்.. கடைசியில் நம்பிக்கையுடன் சேர்த்துத் தங்கள் சுய நினைவையும் இழந்து விட்டிருந்தது.

 

அந்த ஆழியிவள் தனது பிள்ளைகள் இருவரையும் ஆசையுடன் தன்னுள் உள்ளே.. உள்ளே.. மேலும் மேலும் கொண்டு சென்று கொண்டிருந்தாள்.

 

இந்தத் தருணத்திற்கெனவே காத்திருந்த அவள் அவர்களை நோக்கிச் சென்றிட.. யாரோ தன் பின்னால் நிற்கும் உணர்வில் விறுக்கென்று திரும்பியவள்.. வந்திருந்தவர்களைக் கண்டு கோபத்திலும் அசூசையிலும் கண்கள் சிவந்தாள்..

 

இந்த இருவரையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வந்திருந்தவர்களை நோக்கித் தனது இந்திராயுதத்தைச் சுழற்றினாள் அவள்.

 

 

 

 

 

 


ReplyQuotevisha bala
(@viba)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
05/08/2020 8:31 pm  

பஞ்சுப் பொதிகளாம் மேகக் கூட்டங்களுக்கு நடுவே மிதந்து மிதந்து செல்லுகையில்.. சிற்சில விண்மீன்கள் உடலில் அங்கும் இங்கும் உரசிட. .வானுலகை நோக்கி இனிய பயணம் இது.

 

சட்டென்று சூரியனின் அருகினில் வந்துவிட்டார்கள் போல.. தனது கதிர்கள் மூலம் சொர்கத்திற்குப் பொன்னொளி வீசிக் கொண்டிருந்தான் அந்த ஆதித்யன்.

 

பயத்தில் இருவரும் கண்களை இருக்க மூடி இருந்தாலும், பகலவனின் பட்டொளி, இமைகளைத் தாண்டி விழிகளைத் தொட்டது.

 

மிதந்து கொண்டு வந்தவர்கள் மெதுவாகத் தரையில் கிடத்தப்பட்டனர் போலும். ஆஹா என ஒரு பஞ்சு போன்ற மெத்தை.. இல்லை இல்லை.. இது பஞ்சு போல மிருதுவாக இல்லையே..

 

உடம்பெங்கும் ஏதோ நறநறக்கிறது. என்னவென்று கண் திறந்து பார்க்கலாம் என்றால், அதுவும் முடியவில்லை.

 

ஏதோ தவறென்று இருவருக்கும் தோன்றிட, ஒருசேர மேலே எழ எத்தனிக்கையில் கைகால்களைச் சற்றும் அசைக்க முடியவில்லை..

 

ஹையோ இதென்ன? சொர்கம் வந்தும் கூட யாரோ வலுக்கட்டாயமாக முகத்தைப் பிடித்து வாயைத் திறந்து எதையோ ஊற்றுகிறார்கள்?

 

இதுதான் அமிர்தமோ? "அடச்சே.. உயிர்காக்கும் அமிர்தம் இவ்வளவு கசப்பாகவா இருக்கும்?" என எண்ணி முடிக்கையில்,

 

விழிகள் பட்டென்று திறந்திட, சடாரென்று எழுந்த இருவரும் வயிறு புரட்ட வாயிலெடுத்தனர்.

 

வயிற்றில் இருக்கும் குடல் முதற்கொண்டு வெளியே வந்துவிடுமோ என்று ஐயுறும் அளவிற்குச் சென்றவர்கள்.. இறுதியாக மிகுந்த சோர்வுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

அப்பொழுது தான் அவர்களுக்குத் தெரிந்தது., தங்கள் இருப்பது சொர்கம் அல்ல என்று. (ரெண்டும் செத்துபோய்ட்டதா நினைச்சுட்டு இருக்குங்க).

 

அது மட்டும் அல்லாமல் அங்குத் தாங்கள் இருவரும் மட்டும் தனித்து இல்லை என்றும்...

 

அவர்களைச் சுற்றி ஒரு நூறுபேராவது நின்று கொண்டிருந்தார்கள்..

 

அதைப் பார்த்ததும் விக்ரமிற்கு ஒரு இமாலய சந்தேகம் உதித்தது..

 

"பாஸ் இந்த இடத்தைப் பார்த்தா சொர்கம் மாதிரி தெரியலையே?" எனக் கேட்டிட, கடுப்புடன் முறைத்த அர்னவ்..

 

"அடேய் இது சொர்கமே இல்ல டா.." என்றான்.

 

"எல்லாரும் செத்த பின்னாடி சொர்கத்துக்குத் தான வருவாங்க பாஸ்? ஹய்யயோ... அப்போ நாம சொர்கத்துக்கு வராம நரகத்துக்கு வந்துட்டமா?" என்று அதிர்ச்சியடைந்தான் விக்ரம்.

 

"அட லூசுப்பயலே.. நாம இன்னும் சாகவே இல்லடா.. உன்ன எல்லாம் எவன் டா என் ஆபிஸ் ல வேலைக்குச் சேர்த்தது.. ஒருவேளை மூக்கு வழியா உள்ள போன தண்ணி மூளையையும் கலக்கிடுச்சா?" என அர்னவ் விக்ரமை கடித்துக் குதற ..

 

இதற்கு மேல் தனக்கிருக்கும் சந்தேகங்களை அர்னவிடம் கேட்டால் அவன் அகோரி ஆகி ருத்ர தாண்டவம் ஆடி விடுவான் என்பதால், தனக்கு எதிரில் நிற்பவர்களிடம் தனது கேள்விக்கணைகளைத் தொடுப்பது தான் பாதுகாப்பானது என்று நினைத்து அவர்களிடம் பேச வாயைத் திறந்தான் விக்ரம்.

 

அதற்குள் முந்திக்கொண்ட அர்னவ்.. நீங்க எல்லாரும் யாரு? இது என்ன இடம்?நாங்க எப்படி இங்க வந்தோம்? என மயக்கத்தில் இருந்து எழும் எல்லோரும் கேட்கும் கேள்விகளையே அட்சரம் பிசகாமல் அப்படியே கேட்டான்.

 

"ஆமா என்ன கேள்வி கேக்க கூடாதுனு சொல்லிட்டு இவர் மட்டும் அடுக்கடுக்கா கேள்வி கேட்பாரு.." மைண்ட் வாய்ஸ் வேற யாரோடதும் இல்ல.. நம்ம விக்ரமோடது தான்.

 

அவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் ஒரு மார்கமாகப் பார்த்திட.. அர்னவிற்கே சற்று வயிறு கலங்கித் தான் போனது.

 

அவர்களில் தலைவரைப் போலிருந்த ஒருவர் மற்றவர்களைப் பார்த்திட, அவரைத் தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து களைந்து சென்றனர்.

 

"என் மனதில் உதித்த வினாக்களைத் தங்கள் நாவு உதிர்த்தது ஏனோ?" என அவர் ஒரு ஏளனத் தொனியுடன் வினவினார்.

 

அதைக் கேட்ட விக்ரம்.. "பாஸ் இவங்க என்ன மொழி பேசறாங்கனே புரியலையே? எனப் புலம்ப எத்தனிக்க..

 

"அடேய் அடேய் இது தமிழ் தான் டா.. ஆனா நாம மறந்து போய்ட்ட உண்மையான தமிழ்" என விளக்கினான் அர்னவ்.

 

பின்பு அந்தத் தலைவரிடம் திரும்பி,

 

"ஐயா இங்க பாருங்க, நாங்க கடல் ஆராய்ச்சி செய்றவங்க. எங்களுக்கு முன்னாடி கடல ஆராய்ச்சி செய்ய வந்தவாங்க கப்பலோட காணாம போய்ட்டாங்க. அவங்க கடைசியா அம்பாரத் தீவு பக்கமா தான் இருந்தாங்கனு எங்களுக்குத் தகவல் கிடைச்சுது. அதனால தான் நாங்க அம்பாரத் தீவைத் தேடி வந்தோம். சோ அந்தத் தீவ எப்படி அடையறதுனு எங்களுக்குச் சொல்லுங்க." என்னைக் கோரினான்.

 

"ஹ்ம்ம்... மரண அரசியின் பிடியினில் சிக்கி மீண்டெழுந்ததால் அந்தக்காலன் மீதான பயம் போய்விட்டதோ? நீங்கள் மீண்டும் உங்கள் தேயத்தை அடையும் வேலையைத் தொடர்கிறேன்." எனக் கூறிவிட்டு அவர்கள் தங்க ஒரு இடத்தினைக் காட்டுமாறு அங்கு ஏதோ வேலையிலிருந்த ஒரு பெண்ணிடம் பணித்து விட்டு அங்கிருந்து அகன்றார் அவர்.

 

அவள் அவர்களை மெல்ல ஒரு குகைக்கு வழிநடத்திச் சென்றாள்.

 

இவர்கள் இருவரும் பார்வையிலேயே வினா எழுப்பிட, "உங்கள் தேயத்திற்கு நீங்கள் திரும்பும் வரையில் உங்களது இருப்பு இங்கே தான் எனக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

 

அவள் அப்பால் சென்றதும் விக்ரம் மீண்டும் தன் ரேடியோவை ஸ்டார்ட் செய்தான்..

 

"பாஸ் யாரு இவங்க எல்லாரும்? பார்க்கறதுக்கு ஒரு மாதிரியா இருக்காங்க? பேசுனா இன்னொரு மாதிரியா இருகாங்க?" என அதிசயித்துடன் கேட்டான்.

 

"இவங்கள பார்த்த ட்ரைபல்ஸ் மாதிரி இருக்கு டா.. அதுதான் அவங்க பேச்சு, மொழி எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு" என இம்முறை சற்று பொறுமையுடன் பதிலளித்தான் அர்னவ்.

 

"அட இவங்க என்னதான் காட்டுவாசிகளோ.. இன்னும் குகைகள்லயே வசிச்சுட்டு இருக்காங்க. ஒரு குடிசை கூடக் கட்டிக்கத் தெரில." என விக்ரம் நொடித்துக்கொள்ள..

 

இவனை எல்லாம் திருத்தவே முடியாது எனத் தலையை அசைத்துக்கொண்டு குகையினுள் சென்றான் அர்னவ்.

 

"அவனைப் பின் தொடர்ந்த விக்ரம்.. "ஆனா இதுல எனக்கு ஒரே ஒரு சந்தோசம் பாஸ்.. கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கற மாதிரி, நாம தமிழ் பேசத் தெரிஞ்ச ட்ரைபல்ஸ் கிட்ட மாட்டிக்கிட்டோம்.." எனக் கூறி குதூகலித்தான்.

 

அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல், குகையின் சுவரில் சாய்ந்து கண்மூடி உட்கார்ந்திருந்தான் அர்னவ்.

 

"என்ன பாஸ் வந்ததுல இருந்து எதுவுமே பேச மாட்டேங்கறீங்க.." என விக்ரம் சலிப்புடன் கூற,

 

"அப்போ சந்தோஷத்துல துள்ளி குத்துச்சு ஆடட்டுமா?" எனத் தீயாய்க் காய்ந்தான் அர்னவ்.

 

அதற்குச் சிறு புன்னகையைப் பதிலாய் அளித்து விட்டு, "இங்க பாருங்க பாஸ்.. நாம சென்னையிலிருந்து கிளம்பறப்போவே நம்ம உயிர் பற்றிய நிச்சயம் இல்லாம தான கிளம்பினோம்? இப்போ ரெண்டு முறை நாம உயிர் பிழைச்சு வந்துருக்கோம். அதுவே ஒரு நல்ல விஷயம் தான?

 

இனிமே அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்காம இப்படிக் கோபமா உட்கார்ந்து இருந்தா யாருக்கு என்ன உபயோகம் சொல்லுங்க?" என விக்ரம் தன்மையுடன் வினவ..

 

அர்னவிற்குச் சுருக்கென்றது.. "ஆமாம் இவன் கூறுவதும் சரிதான். நடந்து முடிந்தற்காக வருந்துவதை விட இனி நடப்பதை எப்படி நல்லதாக முடிக்கலாம் என யோசிப்பதே புத்திசாலித்தனம் என எண்ணியவன்.,

 

"ஆமா விக்கி, இப்படிச் சோகமா உட்கார்ந்து யாருக்கு என்ன யூஸ்?ரிலாக்ஸா அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.

 

இப்போ நடந்த விஷயங்கள்னால மனசு என்னமோ மாதிரி ஆகிடுச்சுடா. அதான் தேவை இல்லாம உன் கிட்டயும் காஞ்சுட்டேன்.. "என மனமார உணர்ந்து கூறினான் அர்னவ்.

"ம்ம்.. இப்போ பேசினீங்களே இது தான் என் பாஸ். அத விட்டுட்டு என்னமோ கப்பலே கவுந்துட்டா மாதிரி.. ஹி ஹி.. கவுந்து தான் போச்சு.. அதுக்காக இவ்வளோ கவலை பட்டு என்ன ஆகப் போகுது?

 

இதோ இந்தத் தீவிலிருக்கறவங்க கிட்டயே நாம அந்த அம்பாரத் தீவுக்குப் போறதுக்கு வலி கேப்போம். அப்பறம் ஏதோ பெரிய பிஸ்தா மாதிரி 1500 நாட்டிக்கல் தொலைவுல இருக்கற நம்ம நாட்டுக்கு போறதுக்கு வழி பண்றேன்னு மிடுக்கா சொல்லிட்டு போனாரே, அவருகிட்டயே அந்தத் தீவுக்கும் போறதுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாம்.

 

ஆனா இந்தத் தீவு மக்கள்லாம் எப்படிப் பட்டவங்கனு தான் இன்னும் புரிஞ்சுக்க முடியயால. இப்போதைக்கு நரமாமிசம் சாப்பட்றவங்களா மட்டும் இருந்துடக்கூடாது பா.." எனக் கூறினான் விக்ரம்.

 

அவன் சொன்னதும் கடைசி வாக்யத்தைக் கேட்ட அர்னவ் சட்டென்று சிரித்து விட்டான்.

 

இவ்வாறு இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க, அங்கே இன்னொரு குகையில், அந்தத் தீவின் தலைவரும், இவர்களுக்குக் குகைக்கு வழிகாட்டிய பெண்ணும் பேசிக்கொண்டிருந்தனர்.

 

"என்ன ஐயனே.. இவர்கள் மெய்யாகவே அந்த மனிதரைத் தான் தேடிக்கொண்டு வந்தனரா?

 

அப்படியாயின் அவர்களிடம் நாமே மெய்யுரைத்திருக்கலாமே?" என வினவினாள்.

 

அதற்கு அவர்.. "அப்படி எடுத்த உடனே எதையும் விளம்பிட இயலாது கயா.. முதலில் அவர்களின் நோக்கம் என்னவென்பதை ஐயம் திரிபர நாம் உணர வேண்டும். அதன் பின்பே அவர்களிடம் மெய் புகல லாமா என்பதை யோசிக்க வேண்டும்" என்கிறார்.

 

"என்னவோ ஐயனே.. இப்படி ஒவ்வொருவராக வரும் மானிடர்களை அவளிடம் இருந்து காப்பதே நமக்குப் பெரும் பாடாக இருக்கிறது." எனப் பெரு மூச்சுடன் அந்தக் கயா கூறிட,

"நாம் அந்த மானுடர்களை மட்டுமா காப்பாற்றினோம்? அவர்களைக் காத்ததன் விளைவாக, நமது இனமும் அல்லவா அந்த அரக்கியிடம் இருந்து காக்கப் பட்டு வருகிறது?" என்று கூறியவாறே அங்கு உள்ளே நுழைந்தவன்.. சாமினி.

 

ஆம்.. இவள் தான் நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தவள்.

 

அங்குப் பேசிக்கொண்டிருந்தது அவளது தந்தை இளந்திரையனும் உற்ற தோழி கயாவும் தான்.

 

அவளும், அவளுடைய இனமும் தான் அந்தத் தீவை.. அது தான் அந்த அம்பாரத் தீவை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சாபம் தீரும் காலத்தினை எதிர்நோக்கி.. (இங்க நம்ப ஆளுங்க அம்பாரத் தீவுலயே இருந்துட்டு.. அந்தத் தீவுக்கு எப்படிப் போகணும்னு பிளான் பண்ணிட்டு இருக்குதுங்க).

 

"என்ன கயா? என்ன பேசிக்கொள்கிறார்கள் அவ்விருவரும்? எனச் சாமினி வினவிட,

 

"ம்ம்ம்.. அவர்கள் அம்பாரத் தீவிற்குப் போக வேண்டுமாம்.. அதுவும் படகு சம்பாதித்துக் கொண்டு. நம்மிடமே வழிமுறையும் கேட்டுக் கொண்டு அவர்கள் அம்பாரத் தீவினை அடைவார்களாம். இது தான் அவர்களின் வானாள் லட்சியமாம்.." என உரிய ஏற்ற இறக்கங்களுடன் கயா பகர்ந்திட..,

 

அம்மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

 

பின்பு சற்று நேரத்திற்குப் பின் குகையை விட்டு வெளியே வந்த மூவரும், பகலவன் தனது பணியை முடித்து விட்டுக் கடல் மடியில் தலைசாய்க்க இன்னும் சற்று நேரமே இருப்பதால்.. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கண்களை ஒருகணம் இறுக்க மூடிப் பின் திறந்து ஒரு வைராக்கியத்துடன் அங்கிருந்து பிரிந்தனர்.

 

அதில் கயா மட்டுமே அர்னவும், விக்ரமும் தங்கி இருந்த குகைக்குச் சென்று அவர்களுக்கு இரவுக்குத் தேவையான உணவினை வழங்கி விட்டு, எக்காரணத்தைக் கொண்டும் இரவில் குகையை விட்டு வெளியே வரக் கூடாதென்று பணித்து விட்டும், இரவில் மிருகங்கள் ஏதும் இவர்களைத் தாக்கி விடக் கூடாது என்பதற்காக,அவர்களுக்கு வெப்பமூட்ட பற்ற வைய்த்த தணலில் சில மூலிகைகளைப் போட்டு விட்டு, தான் மீண்டும் பகற்பொழுதில் வருவதாகக் கூறி அங்கிருந்து அகன்று விட்டாள்.

 

பின்பு எல்லோரையும் போல இளந்திரையன் முன்பு போய் நின்றிருந்தாள்.

 

அந்தத் தீவின் மக்கள் அனைவரும் கதிரவன் கண் சாயும் நேரம் எதிர்பார்த்து முகத்தில் இறுக்கத்துடன் அந்தக் கடல் நோக்கி நின்றிருந்தனர்.

******************************************************************************************


ReplyQuote
visha bala
(@viba)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
06/08/2020 8:31 pm  

ஆழியின் காதலி-7

 

புள்ளினங்கள் பூபாளம் வாசிக்க, மென் தென்றல் சிகை வருடி எழுப்பிவிட்டது நம் நாயகன் அர்னவை.

 

எழுந்ததும் சுற்றுப்புறம் உணர்ந்தவன், மெல்ல விக்ரமையும் எழுப்பி விட்டான்.

 

"விக்கி.. ஏய் விக்கி... அடேய் விக்ரம்.." என அர்னவ் ஒரு அடி வைத்துக் கத்தி எழுப்பிட, அலறிப்புடைத்துக் கொண்டு எழுந்தான் விக்ரம்.

 

"ஹையோ... ஹையோ.. அம்மாஆஆஆஆ...... காப்பாத்துங்க.... என்ன காப்பாத்துங்க....." விக்ரம்.

 

"டேய் எதுக்கு இப்படிக் கத்தற?" அர்னவ்.

 

"என்னது நான் கத்தறனா? காட்டு கத்து கத்தி என்ன இப்டி பயமுறுத்தி எழுப்பி விட்டுட்டு, எதுக்குக் கத்தறேன்னு என்னயே கேட்கறீங்களா?" விக்ரம்.

 

"நான் எங்க டா கத்தினேன்.. எவ்ளோ அழகா உன்ன என்னோட செல்லாக்குட்டி மாதிரி எழுப்புனேன்? நீ என்னடான்னா இப்படிப் பயப்படற போ.." என அர்னவ் சலித்துக்கொள்ள.. அதற்கு விக்ரம்,

 

"அடப் போங்க பாஸ்.. நாம இப்போ எங்க இருக்கோம்னே தெரியல. அதுவும் அந்தக் கடல் அரக்கி கிட்ட இருந்து தப்பிச்சு பிழைச்சு வந்துருக்கோம். அவ வேற மறுபடியும் எப்போ எந்த ரூபத்துல வந்து நம்மள தூக்கிட்டு போவாளோனு பயமா இருக்கு.. இங்க இன்னொரு பக்கம் இந்தக் காட்டுவாசிங்க.. அவனுங்க நம்மள என்ன செய்யக் காத்திருக்கானுங்கனு தெரில.

 

இதுல ராத்திரி எல்லாம் தூக்கம் வராத ஒருத்தன காலையில இப்படி அடிச்சு எழுப்பினா.. அவன் என்ன செய்வான் பாவம். இதுல செல்லாக் குட்டி மாதிரி எழுப்பினேன்னு சொல்றேங்க?" என்றான்.

 

"எதுக்கு விக்கி இப்படிப் பயந்து சாகற? இங்க பாரு சுத்தியும் எப்படிப் பறவைங்க சத்தம் கேட்குது.. இப்படிக் காலையில எழும்போது பறவைங்களோட சத்தம் கேட்டுச்சுனா.. நாம ரொம்ப ஆரோக்கியமான இடத்துல இருக்கோம்னு அர்த்தம் தெரியுமா?

 

அது மட்டும் இல்லாம இந்த மரம், செடி, கொடிங்களோட வாசம், கூடவே.. நம்மளோட கடல் அன்னை. இதத் தவிர வேற என்ன வேணும்?" என அர்னவ் இயற்கையை வர்ணித்துக் கொண்டிருக்கையில், இவன் நிஜமா சொல்றானா? இல்ல கலாய்க்கறானா எனப் புரியாத விக்ரம் மனதிற்குள் தன் தாத்தாவை திட்டிக்கொண்டு இருந்தான்.

 

"யோவ் குவாட்டர் கோவிந்தசாமி.. நீ மப்புல உளறினத எல்லாம் நம்பி நான் இந்த ஆளு கூடக் கடலுக்கு வந்து இப்படி இவரு உளறுறதயும் கேட்கவேண்டியதா இருக்கு. நான் ஒருவேளை திரும்ப உயிரோட ஊருக்கு வந்தேன்னா.. அந்த நாளு தான் உன் வாழ்க்கையோட கடைசி நாளுயா.." என்று கறுவினான் .

 

"என்ன டா.. என்னமோ சொல்றாப்டி இருக்கு?" அர்னவ்.

 

"அச்சச்சோ ஒன்னும் இல்ல பாஸ். விடிய வரைக்கும் இந்தக் குகையை விட்டு வெளில வர கூடாதுனு சொல்லிட்டு போச்சே அந்தப் பொண்ணு, அதான் இப்போ நாம வெளில போலாமா இல்ல வேணாமான்னு யோசிச்சேன்" என்று கூறி சமாளித்தான்.

 

"இருட்டுல இந்தக் காட்டுல நிறைய மிருகங்கள் வரும். அதனால தான் அந்தப் பொண்ணு நைட் டைம் ல வெளில வராதீங்கன்னு சொல்லிட்டு போச்சு. இப்போ தான் விடுஞ்சுடுச்சுல்ல? இனி என்ன பயம்? வா வெளில போவோம்." என்று அர்னவ் கூறி விக்ரமையும் வெளியே கூட்டிக்கொண்டு செல்ல எத்தனிக்கையில் அங்கு வந்தான் ஒருவன். மொட்டை ராஜேந்திரன் போல..

 

"யாரு பாஸ் இவன் ஷேவிங் பண்ணின ஓணான் மாதிரி இருக்கான்" என அர்னவ் காதைக் கடித்த விக்ரம், அந்த ஓணான் திரும்பி பார்க்கவும்.... கப்சிப் என்றானான்.

 

"இவனுங்க பேசறது தான் நமக்கு ஒன்னும் புரிய மாட்டிங்குது. ஆனா நாம மனசுக்குள் பேசறது கூட இவனுங்களுக்குத் தெளிவா கேட்குது.." விக்ரம்.

 

"நீர் மனதுக்குள் பேசுவதாக நினைத்து வாய் விட்டுத் தான் புலம்புகிறீர்." என்றான் வந்தவன்.

 

அதற்கு அர்னவ், "ஹா ஹா..இது தான் டா கரடியே காரித் துப்பின மொமெண்ட்.." எனக் கமெண்ட்டிட, அசடு வழிந்தது விக்ரமிற்கு.

 

"அது ஒன்னும் இல்லண்ணே நீங்க யாரு என்னனு தெரிலயா.. அதான் சும்மா ஒரு செல்லப் பேரு.."என இழுத்தான்.

 

"இது தான் உங்க ஊருல செல்லப் பேராக்கும்?"என அதற்கும் அர்னவ் கிண்டல் அடித்தான்.

 

"ஹையோ என்ன பாஸ் இப்படி எல்லாப்பக்கமும் கேட் போட்டா நான் என்ன செய்வேன்? அண்ணனே கண்டுக்கல. உங்களுக்கு என்னவாம்? கொஞ்சம் அமைதியா தான் இருங்களேன்" என அர்னவிடம் கூறி விட்டு அந்த மனிதனிடம் திரும்பியவன்..

 

"நீங்க சொல்லுங்கண்ணே,உங்க பேரு என்ன?" என விக்ரம் கேட்டான்.

 

"யாம் எல்லாளன். நீவிர்?" எனப் பதில் கேள்வியும் கேட்டான் அந்த எல்லாளன்.

 

"என் பேரு விக்ரம். இவரு அர்னவ்.அண்ணே.. இங்க குளிக்கப் புடிக்க எல்லாமே கடலுக்குள்ள தானா?" என விக்ரம் கேட்டதும், சற்றுப் பதறினார் போல,

 

"ஹ்ம்ம்..கடல் பக்கம் மட்டும் எக்காரணம் கொண்டும் நீங்கள் செல்லவே கூடாது. மெய் சுத்தம் செய்துகொள்ள அருகில் ஒரு சுனை உள்ளது. அங்கு அழைத்துப் போகத் தான் யாம் வந்தது. வாரும் செல்வோம்." என அருகிலிருந்த சுனைக்கு அழைத்துச் சென்றான் எல்லாளன்.

 

இருவரும் அங்குக் குளிக்க எத்தனிக்கையில் அவர்களுக்கான மாற்றுடையும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான்.

 

இருவரும் குளித்து முடித்ததும் மீண்டும் அதே குகைக்குப் போனவர்கள் அங்கு இவர்களுக்கான உணவு இருப்பதைக் கண்டு மகிழ்வுற்றனர்.

 

இருக்காதா என்ன? நடந்த அதிர்ச்சிகரமான அனுபவித்தினால் நேற்று அரைகுறையாகக் கூட உண்ணாதவர்களுக்குக் காலையில் எழுந்ததுமே பசிக்கத் தொடங்கியது. அதுவும் அருவி நீரில் ஆனந்தக் குளியல் போட்டவர்களுக்குப் பசி எனும் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

 

அங்கு இவர்களுக்கு உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் கயா..

 

"ஒரு அம்மா தான், தன் பிள்ளையோட பசியறிஞ்சு சாப்பாடு குடுப்பானு சொல்லுவாங்க.. ஆனா என் அம்மாக்கு அப்பறம் இவதான் என்னோட பசியறிஞ்சு சாப்பாடு போடறா.." என விக்ரம் உருகிட ..

 

அம்மாவையே அறியாத அர்னவோ, "சே அம்மா இல்லனாலும் கூட ஒரு தங்கச்சியவாவது அந்தக் கடவுள் கொடுத்துருக்கலாம். இப்படி என்ன பாசமா அவ பார்த்துக்கிட்டு இருந்துருப்பா.. என மனதிற்குள் கரைந்தான்.

 

இவ்வாறு இவர்கள் இருவரும் குகை வாயிலில் நின்று கொண்டு இவள் பரிமாறுவதையே பார்த்திருக்க, "பார்வையிலேயே பசியாறும் பழக்கம் இந்தப் பட்டினத்தில் இல்லை." என்று கயா சிறு சிரிப்புடன் கூறிட இருவரும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

"பட்டினம்?"என இருவரும் கேள்வியுடன் நோக்க..

 

"ம்ம்.. கடலோரம் இருக்கும் பகுதிகள் தான் பட்டினம். இதுகூடத் தெரியாதா தேயம் தாண்டி வந்தவர்களுக்கு?" எனப் பதிலுக்கு வினவினாள் கயா.

 

"இல்ல எங்க நாட்டுலயும் பட்டினம்னு எல்லாம் பேர் இருக்கு. அதுதான் அதிசயமா பார்த்தோம்" என அர்னவ் கூறினான்.

"ஓஹோ.. சரி சரி.. காலம் கழிக்காமல் விரைந்து வந்து பசியாருங்கள். எங்கள் ஐயா விரைவாக உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்." எனக் கூறியதும் இருவரும் வேக வேகமாக உண்ணத் தொடங்கினர்.

 

உணவு உண்டு முடித்ததும், அந்தத் தீவின் தலைவரிடம் சென்றார்கள்.

 

அவர்களைக் கண்டதும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்த அவர் எழுந்து, "வாருங்கள்.. இருவரும் பசியாறினீர்களா? உங்களுக்கு இவ்விடம் அவ்வளவு பிடித்தம் இல்லை போலத் தெரிகிறதே? தேவை ஏதேனும் இருக்கிறதா? என விசாரித்தார்.

 

"இங்க பாருங்க ஐயா.. எங்களுக்கு இந்த இடம் பிடுச்சுருக்குதா இல்லையான்றது விஷயமில்லை. நாங்க இங்கிருந்து கிளம்பறது தான் விஷயம்.

 

நாங்க இங்கிருந்து கிளம்பறதுக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொன்னீங்களே என்ன ஏற்பாடு செஞ்சிங்க?" என வினவினான் அர்னவ்.

 

"இல்லை மகனே.. எங்கள் மூப்பர் உங்களைப் பார்த்த பின்னர்த் தான் நீங்கள் இங்கிருந்து வெளியேறும் மார்க்கம் கண்டறிய இயலும். அவரும் பௌர்ணமி கழிந்த பின்னே தன் யோகத்திலிருந்து எழுவார். இன்னும் இரண்டு நாட்களில் பௌர்ணமி. அதன் பின்னரே உங்களது கேள்விக்குப் பதில் கிடைக்கும்" என்று கூறியதும்.. சற்று எரிச்சலுடன்,

 

"இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகுமா? என்ன ஐயா? நீங்க அவ்வளவு வீராப்போட சொல்லிட்டுப் போனதப் பார்த்து, நாங்க ஊருக்கு போறதுக்கு உடனே ஏற்பாடு செய்வீங்கன்னு நினைச்சோம். சரி அம்பாரத் தீவுக்குப் போறதுக்காவது வழி சொல்லுங்க. மத்தத நாங்க பார்த்துக்கறோம். உங்கள நம்பினா நாங்க இங்கயே இருக்க வேண்டியது தான்." என அர்னவ் கூறினான்.

 

"நீங்கள் கேட்டதும் மாயம் செய்து உங்கள் தேயத்தில் உங்களை உட்கார வைத்து விட முடியுமா? அப்படி நம்பிக்கை அற்றுப் போனவர்கள் அம்பரத்திற்கு மட்டும் ஏன் எங்களிடம் வழி கேட்க வேண்டும்? அதோ அப்படியே கடலில் இறங்கி செல்லவேண்டியது தானே?" என அருகிலிருந்த சாமினி வினவ..

 

"என்ன தாயே.. இப்படிப் பேசுகிறாய்? சற்று பொறுமையுடன் அவர்களுக்கு எடுத்துக் கூறலாம் இரு" என்று கூறிய அவள் தந்தையையும்.. "நீங்கள் அமைதியுடன் இருங்கள் ஐயனே.. இவர்களுக்கு நம் மீது நம்பிக்கை அற்றுப் போய் விட்டதாம்.

 

இதைக் கேட்டப் பின்பும் என்னால் பொறுமையைக் கைக்கொள்ள இயலாது." என்று அடக்கினாள்.

 

என்ன ஒரு பொண்ணு இந்தப் பேச்சு பேசறா? அதுவும் என்னையவே? காலேஜ்ல இருந்து என்னோட பிரண்டு இந்த விக்ரமே என்ன பார்த்த முதல் நாள்ள இருந்து இப்போ வரைக்கும் நான் சொன்னாலும் கேட்காம என்ன வாங்க போங்க னு கூப்படறான்.. ஆனா இவ பார்த்து ஒரு நாள் கூட இல்ல. அதுக்குள்ளே இவ்வளோ திமிரா பேசறா?" என்று ரோஷப்பட்டுக் கொண்டு விக்ரம் கையையும் பிடித்துக் கொண்டு கடலை நோக்கி விரைந்தான்.

 

"அய்யயோ என்னது இது? இவைங்க சண்டையில என்னையும் சிக்க வைக்கறாங்களே" என விக்ரம் நினைத்துக் கொண்டிருக்க அவர்களை மீண்டும் சாமினியின் குரல் இடைமறித்தது.

 

"அப்படியே அதோ சற்றுத் தொலைவில் பாறையில் அமர்ந்திருக்கிறாளே சமுத்திரா.. அவளிடம் வழி கேட்டால், உங்கள் தேயத்திற்கே உங்களை அழைத்துச் சென்றிடுவாள்., மிகப் பாதுகாப்பாக.." எனக்கேலி இழையோட கூறினாள்.

 

அவள் யாரை குறிப்பிடுகிறாள் என்று அவள் சுட்டிய பக்கம் உற்று நோக்கியவர்கள் அதிந்தார்கள்.

 

ஏனெனில் அங்கு இருந்தது.. அந்தக் கடல் அரக்கி.. "அவளுக்குச் சமுத்திரா என்றா பெயர் வைத்திருக்கிறார்கள் இவர்கள்?" என்று குழம்பிப் போய் நின்றனர் இருவரும்.

 

அவர்கள் அருகில் வந்த இளந்திரையன், அவர்கள் விழியினைப் பார்த்தே புரிந்து கொண்டவர்.. அவர்கள் கண்களின் கேள்விக்குப் பதிலுரைக்கலானார்.

 

"ஆம்..அவள் சமுத்திரா. இப்பொழுது உங்களுக்காகத் தான் அவள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறாள்." என்று கூறியதும்.. சற்று பயந்து தான் போனார்கள் இருவரும்.

 

அ ர்னவ் அமைதியாகிவிட,காற்றாகிப் போன குரலில் விக்ரம் இளந்திரையனை பார்த்து, "நாங்க இப்போ என்ன தான் செய்யறது?" என வினவினான்.

 

இளந்திரையன் பதிலுரைப்பதற்கு முன்னமே குறுக்கிட்ட சாமினி, "எங்கள் அய்யன் கூறும்படி பொறுமை கொண்டு காத்திருங்கள்.. மூப்பருக்காக. உங்களுக்கு வேறு வழியுமில்லை." என்று அலட்சியமுடன் அர்னவைப் பார்த்துக் கூறினாள்.

 

ஆனால் அர்னவோ சாமினியைத் தவிர்த்து இளந்திரையனிடம், "எங்களோட மனநிலை உங்களுக்குப் புரியுதா இல்லையானு தெரியல. ஆனா உங்க மூப்பர் கிட்ட சொல்லியாவது நாங்க இங்கிருந்து சீக்கிரம் கிளம்ப வழிய சொல்லுங்க ஐயா" என்று கூறிவிட்டுத் திரும்பியவனை இளந்திரையனின் குரல் தேக்கியது.

 

"எங்கள் மூப்பரை பௌர்ணமி கழிந்து தான் பார்க்கவியலும். அதுமட்டுமின்றி நாங்கள் அனைவரும் பௌர்ணமி அன்று இவ்விடத்தினை விட்டு வேற்றிடம் சென்று விடுவோம். ஆதலால் நீவிர் இங்குத் தனித்தே இருக்கும்படி நேரும் . எனவே சற்று அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி எக்காரணம் கொண்டும் கடல் பக்கமோ, அதி முக்கியமாக இத்தீவின் மேற்குப் பக்கமோ போக விழையவே கூடாது.

 

மற்றபடி அன்று உங்களுக்குத் தேவைப்படும் உணவனைத்தும் உங்கள் குகை வாசலில் இருக்கும். சுனையில் நீராடிவிட்டு இவ்விடமே இருங்கள். மீண்டும் கூறுகிறேன் கடலருகிலோ, தீவின் மேற்கு புறமோ மறந்தும் சென்று விடாதீர்கள்." என்று கூறி விட்டு அவர்கள் அங்கிருந்து அகல அனுமதித்தார்.

 

நாயகர்கள் இருவரும் சரி சரி என்று என்று தலையாட்டிவிட்டு சென்றனர். அர்னவ் மட்டும் சாமினியைப் பார்த்து முறைப்பைப் பரிசாக அளித்துவிட்டுச் சென்றான்.

 

பௌர்ணமி அன்று..

 

ஒருவிஷயம் செய்யாதே என்றால் தானே அதைச் செய்ய வேண்டும் என்று மனம் கூத்தாடும்.. அதன் படியே நண்பர்கள் இருவரும் அந்த ஆளரவமற்ற தீவில் அதன் மேற்கு திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்...

*******************************************************************************************


ReplyQuote
Page 1 / 2
Share: