Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

உள்ளம் உருகுதடி கண்ணம்மா ❤  

  RSS

அருண் தே கோ
(@arunmozhi)
New Member Registered
Joined: 1 year ago
Posts: 2
19/11/2020 4:45 pm  

கசங்கிய காகிதமாய் வாடிய மலராய் வேரறுந்த கொடிபோல் துவண்டு கடக்கிறாள் அவள்.. கண்ணிலிருந்து கோடாய் கண்ணீர் என்ன செய்து நிறுத்துவது எங்கிருந்து இத்துணை நீர் வருகிறது இப்படியே வற்றிவிடாதா என்ற எண்ணம் மட்டும் தான் இப்போது அவளிடம் ...  அவனிடம் கண்ணீரை மறைத்து அப்படியே கடத்தியவளுக்கு அவன் உறங்கிய பின் மடை திறந்த வெள்ளம் போல் வழிகிறதே.. என்ன பாவம் செய்தேன் நான் இப்படி ஒரு வாழ்க்கை என்று மனம் நொடியில் நினைக்க வைத்து விட்டதே..  இதோ  அவன் தேவையை முடித்து கொண்டு அணைத்து கொண்டு படுத்திருக்கிறான்  என்னை சுத்தபடுத்திக்கொள்ள கூட விடாது அணைத்து கொண்டு உறங்கும் இவனிடம் காதல் இருக்கிறதா இல்லையே காமத்தை கொண்டு அணைத்து கிடப்பவனிடம் என்னத்தை நான் எதிர்பார்க்க.. 

திருமணம் முடிந்த மறுநாளே வாழ்க்கையே வெறுத்து போனதே என்னத்தை சொல்லி ஆற்ற..  ஆசையோடு கூட வேண்டிய கூடல் ஐயோ உடலெல்லாம் கூசி போயிற்றே இதற்கு தான் திருமணமா இருமனம் புரிதலோடு கூடுவது தானே திருமணம்.. இதற்கு பெயரே வேறுதானே தெரியாத இவனுக்கு..  ஏதேதோ எண்ணத்தின் சுழற்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மங்கையின் தேகத்தில் ஊர்கிறது அவனின் தடித்த விரல்கள் இதோ மீண்டுமாய் ஒரு கூடல் அவனது ஆசையில் ஆசை தீர கூடுகிறான் அவனுக்கு தீராத ஆசைதானே மீண்டுமாய் அவனுக்கு இசைந்து போகிறேன்..

மங்கையின் செவிகளில் விழுகிறது மூச்சு வாங்கும் சத்தம் எல்லாம் முடித்து கொண்டு பக்கத்தில் படுத்து காது மடலை உரசி கொண்டு சொல்கிறான்  அவன் ஹே கொடி உன்மேல தனி வாசம் வருது டி இதுவரை யார்கிட்டயும் இப்படி உணர்ந்ததே இல்லையே.. ஒருவேளை இந்த பூ அலங்காரம் புதுசா வர வாசம் எல்லாம் சேர்ந்து உன் மேல வீசுதோ.  இதை கேட்டு அவள் வெடித்து தான் சிதற வேண்டும் ஆனால் இல்லையே அதிர்ச்சியாய் ஒரு பார்வை அவனிடம் அதையும் நொடியில் மீட்டுக்கொண்டவள் பார்வையை விடாமல் சுத்தும் அந்த காத்தாடி மேல் பதித்து கொண்டு அவன் முகத்தை பாராமல் சொல்கிறாள்..  எனக்கு பாத்ரூம் போகணும் ப்ளீஸ் கைய கொஞ்சம் எடுக்குறீங்களா.. 

தான் கூறியதற்கு அவளிடம் பெரிதாய் கோபத்தை எதிர்பார்த்த கரிகாலன் அவள் கேட்ட விதத்தில் தானாய் கைகளை விலக்கி கொண்டு கொடியை கையில் அள்ளி கொண்டு குளியலறை நோக்கி சென்றான்.. 

தான் தூக்கி கொண்டால் வேண்டாமென்று மறுப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு மீண்டும் ஏமாற்றமே அவனிடம் குழந்தையாய் ஒட்டிக்கொண்டாள் அன்னக்கொடி..  குளியலறையில் விட்டவன் அங்கே நிற்க ஒரு நொடி கொடியவள் தடுமாறி போக அதே நொடி பொழுது தான் தன்னை மீட்டு கொண்டவள் சுத்தம் செய்ய தொடங்கிவிட்டாள்.. 

சத்தியமாய் இதை சுத்தமாக எதிர்பார்க்காதவன் தலை சுற்றி தான் போனான்..  வெற்றுடம்போடு நின்று கொண்டு தன் முன் அவள் சுத்தம்படுத்திக்கொள்ள கூச்சம் கொண்டு வெளிய போ என்றாவது சொல்வாள் என்று எதிர்பார்த்த கரிகாலனுக்கு இப்போதும் ஏமாற்றமே..  இரவில் இருந்து அவனும் பார்க்கிறான் தானே ஆசையோடு ஒரு பார்வை இல்லை தாபத்தோடு ஒரு ஏக்கமில்லை என்னவேனாலும் செய்துக்கோடா என்பது போல் இருப்பவளிடம் என்ன சொல்வது வேண்டாமென்று மறுத்தாலாவது சண்டை பிடிக்கலாம் என்னவேனாலும் செய் நான் எதுவும் கேக்க போறதில்லைனு இருப்பவளிடம் என்ன சொல்வது.. இப்போது அவன் தான் கதவை சாத்தி கொண்டு வெளியில் சென்றான்..

தன்னை சுத்தப்படுத்தியவள் அப்படியே நீருக்கடியில் நின்றுவிட்டாள் அவன் போனதை உணர்ந்து...  தண்ணீரோடு கண்ணீரும் கலந்து போக கல்லாய் தன்னை மாற்றி கொண்டு தன் மனதை மரத்து போக வைக்கும் எண்ணம் போல..

இரண்டு மாதம் முன்பு வரை எத்துணை மகிழ்ச்சி அம்மா அப்பா இல்லை தான் ஆனா எல்லா சொந்தமும் இருக்கிறது போல நினைத்து  வளர்ந்தோமே...   படிக்காமே இருந்திருக்கலாம் இப்படி வேளைக்கு போகாம இருந்திருக்கலாம் இவன் கண்ணுல சிக்காமா இருந்துருக்கலாம் இப்போ இவனுக்கு பொண்டாட்டியா ஆகாமே இருந்துருக்கலாம் எத்துணை லாம் போட்டாலும் நடந்ததை மாத்த முடியாதே..

உள்ளே சென்றவள் நேரம் கடந்தும் வெளியில் வரவில்லையே என்று தாழ் போடாத கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற கரிகாலன் கண்டது நீருக்கடியில் மடிந்து அமர்ந்திருந்தவளை தான் அவளை கொடுமை படுத்தவென மணந்து கொண்டவன் அனைத்தையும் மறந்து பைப்பை அடைத்துவிட்டு துவாலை எடுத்து அவளுக்கு சுத்தி மீண்டும்  அள்ளிக்கொண்டான் கைகளில்...

அவன் தூக்கி கொண்ட உணர்விருக்கிறது தான் ஆனால் புது பெண்ணுக்குரிய கூச்சமில்லையே அவனுக்கான பொருளை அவன் அள்ளி கொள்கிறான் என்கிற எண்ணம் மட்டும் தானே இவளுள்.. 

இதோ கட்டிலில் கிடத்தி அவள் உடலெல்லாம் மீண்டும் முத்தத்தால் குளிப்பாட்டி கொண்டு நிற்கிறான்..  ஹே கொடி பசிக்கிது சாப்பிடலாமா..  இதுவரை எல்லாம் என்னை கேட்டு தான் செய்தியாடா என்ற கேள்வி அவள் கண்களில் தெரிய அதை படித்தவன் போல் எல்லாம் உன்னை கேட்டுட்டு செய்ய முடியாது டிரஸ் எதுவும் மாத்த வேண்டாம் இந்த என் ஷர்ட் இதை போட்டுக்கோ நான் போன் பண்ணி சாப்பாடு கொடுத்தனுப்பா சொல்றேன்.. அப்பறம் சாப்டுட்டு தெம்பா உன்னை கவனிக்கிறேன்..  கண்ணடித்து இவன் கூற இப்போதும் ஒரு வெற்று பார்வை மட்டும் தான் அவளிடம்..

அவள் அன்னக்கொடி நேற்றுவரை அவள் அன்னக்கொடி சக்திவேல் இன்றிலிருந்து அன்னக்கொடி கரிகாலன்.. 

கரிகாலன் கால் போன போக்கில் இல்லை இல்லை கார் போகும் போக்கில் போகும் மனிதன்..  பாட்டன் சேர்த்த சொத்தே பத்து தலைமுறைக்கு இருக்க சொத்தை சேர்ப்பது நீங்களாய் இருங்கள் அதை அழிப்பது நானாய் இருக்கிறேன் என்ற சிறந்த கொள்கையோடு வாழ்பவன்..  ஒற்றை மகனை பெற்றதால் அவனை தடுப்பார் யாருமில்லை..  அம்மா சுகந்தி அவர்களின் பகட்டான வாழ்க்கைக்கு எப்போதும் அவர்கள் இருக்குமிடம் லேடீஸ் கிளப்பில் தான்..  அப்பா சுந்தரமூர்த்தி இன்று விரல் விட்டு என்ன கூடிய முக்கிய தொழிலதிபர்களில் இவரும் ஒருவர்.. 

ஹே கொடி வாவா சாப்பாடு வந்துட்டு என்று வேலையாள் கொண்டு வந்து கொடுத்த டிரேயை அவள் முன் நீட்ட மீண்டும் ஒரு அதிர்ச்சி அதுவும் ஒரே நொடி தான்..  அவள் அமர்ந்திருந்த இடத்தில் அவளுக்கு தேவையான பால் மற்றும் சில காலை உணவுகளை வைத்தவன் அவனுக்கு தேவையான மதுபானத்தை கையில் எடுத்து கொண்டு அவள் அருகில் அமர்ந்தபடி அப்படியே பாட்டிலோடு உள்ளுக்குள் சரிக்க.. பெண்ணவள் மனது உடைந்தே போனது.. எதுவும் பேசாமல் சில நொடி மௌனம் மீண்டும் இரவெல்லாம் இவன் படுத்திய கொடுமைக்கு சாப்பிடாமல் இருக்க முடியாதே உடல் அசதி போக்க உண்டுதானே ஆக வேண்டும் என்று மனதால் இவள் நினைத்து உணவை பார்த்த படி இருக்க..

மடித்திருந்த கால்களில் கோலம் போட்ட படியே அவள் காதை உரசி உறைய வைக்கிறான் சாப்பாடா பாத்துட்டே இருந்தா பசி தீராது இப்போ அப்படித்தான் இருக்கு எனக்கு அதனால சாப்பிட்டு உடம்புல தெம்பு ஏத்து உங்கிட்ட என் பசி தீரவே தீராது போல என்ற கூறி அவன் எழுந்து செல்ல..  அன்னக்கொடி தன்னிலை எண்ணி வெட்கிப்போனாள்..

கைகள் உணவை அள்ளி பருகினாலும் நினைவெல்லாம் நேற்று நடந்த திருமணத்தில் தான் இருந்தது... 

இரவு ஏழு மணி அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பிய அன்னக்கொடி கண்டது அவள் வீட்டில் அமர்ந்திருந்த கரிகாலனை தான்   அவனை கண்டதும் தானாய் உதடு சுளித்து அவள் உள்ளே செல்ல நினைக்க அவளை கண்டவன் ஒரே எட்டில் அவள் கைகளை பற்றிக்கொண்டு..  என்ன டி நீ பாட்டுக்கும் போற ஏன் உன் முன்னாடி ஆறடி ஆம்பளை உக்காந்திருக்கது தெரியலையா என்று கைகளை அழுத்த அந்த அழுத்தத்தில் வலி பிறக்க டேய் கைவிடுடா பொறுக்கி யார்வீட்ல வந்து யார் கைய பிடிக்கிற என்ற வேகத்தில் அவள் கைகள் தானாய் அவன் கன்னத்தை பதம் பார்க்க..  அவளை அடித்து கொல்லும் வெறி அவனுக்குள் ஆனாலும் அதை மறைத்து கொண்டு   ..  எனக்கு சொந்தமான பொருள் மேல நான் கை வைக்கிறேன் என்று அவள் அசால்ட்டாக குண்டை தூக்கி போட.. மீண்டுமாய் அவள் இதழ்கள் வளைகிறது..

அவனிடம் கையை உறுவிக்கொண்டவள்..  அத்தை மாமா என்று சத்தமிட அவர்கள் அப்போது தான் உள்ளிருந்து  வெளியில் வந்தார்கள் அவர்கள் முகத்தை கண்டே இவளுக்கு புரிந்து போனது இவன் வந்திருப்பது இவர்களுக்கு தெரியுமென...  அத்தை இவனை வெளில போக சொல்லுங்க என்று நகர்ந்தவள் அவள் அத்தை சொன்ன வார்த்தைகளில் உறைந்து நின்றாள்..

அன்னம் எத்துணை வருஷம் நாங்க உனக்கு சோறு போடுறது இனி நீ இங்க இருக்க வேண்டாம் போய்டு என்று துளியும் இரக்கமற்று கூற அவரை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தவள் தன் மாமனை பார்க்க அவரோ என் மனைவி சொல்வதே வேதவாக்கு என்று மௌனம் காக்க.. அமைதியாக உள்ளே சென்றவள் சில துணிப்பை அவள் தாய் தந்தை புகைப்படம் அதை எடுத்தவளின் கண்கள் குளமாயின அதை உள்ளே இழுத்து கொண்டவள் இதர சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியில் வந்தவள் கிளம்ப எத்தனிக்க.. 

அன்னம் நில்லு என்ற அத்தையின் குரலில் அவர் இங்கே இருக்க சொல்ல போகிறார் என்ன சொன்னாலும் இருக்க கூடாது போய்டணும் என்று நினைத்து கொண்டு திரும்பாமல் நிற்க நீ இவர் கூட போ என்று கரிகாலனை நோக்கி கை நீட்ட அவரை அடித்து கொல்லும் வெறி பிறக்க திரும்பியவள் வெளில போக சொல்றிங்க போறேன் ஆனால் நான் யார்கூட போகணும்னு நீங்க சொல்ல கூடாது என்று மீண்டுமாய் நடக்க.  அவள் கரங்களை வலிய கரங்கள் முரட்டு தனமாய் பிடிக்க அவனை அடிக்க முடியாமல் கைகளில் இருந்த பைகள் தடுக்க அவன் விழிகளை நேருக்கு neraai பார்த்து என்னவென்று புருவம் உயர்த்த..

அந்த பார்வையில் சிறிது தடுமாறிய கரிகாலன் ரசனையோடு அவளை பார்த்து கொண்டு இனி நீ எங்க போனாலும் எனக்கு மட்டும் தான் சொந்தம் உன் வீட்டு ஆளுங்களுக்கு அம்பதாயிரம் ஒருலட்சமில்லா முழுசா ஒரு கோடி கொடுத்திருக்கேன் இந்த கொடிய எனக்கு சொந்தமாக்கிக்க என்று அவன் இகழ்ச்சியோடு கூற..  முழுதாய் செத்தே போனாள் அன்னக்கொடி..  தானாய் வலுக்கட்டாயமாய் குனிந்த தலையை உயர்த்தி யார்கிட்ட பணம் கொடுத்தாயோ அவங்களே உனக்கு சொந்தமாகிகோ என்ற வார்த்தையோடு தன் அத்தையை இவள் முறைக்க....

வாய்மூடுடி எடுப்பட்ட சிறுக்கி உன்னை இதுவரை படுச்சு ஆளாக்கி வளத்து விட்டோம்ல அதுக்கு தான் இந்த பணம் தம்பி இனி அவளாச்சும் நீங்களாச்சும் என்று அன்னக்கொடி அத்தையான வானதி கூறிட மனைவியின் வார்த்தையை கேட்டு அவளது கணவர் கோபாலன் கூட ஒன்றும் கூறாமல் நிற்க..  தன் எந்த நிலைக்கு தள்ளப்பட்டுளோம் என்பது இப்போது தான் அன்னக்கொடிக்கு புரிந்தது.. 

இப்படியும் மனிதர்களா என்ற ஆற்றாமையோடு கரிகாலனை உற்று பார்த்தவள் உன்னோடு நான் வரேன் என்னை பணம் கொடுத்து வங்கிட்ட இப்போ எனக்கு பேர் என்ன தெரியுமா அதை வார்த்தையால என்னால சொல்ல கூட முடியாது ஆனாலும் நீ அவங்களுக்கு கொடுத்த பணத்தோடு சேர்த்து எனக்கும்  இன்னொன்னு கொடு என்று கூறியவள் அவன் முகத்தை பார்க்க.. கரிகாலனோ நீ சொல்லு என்பது போல் அவள் கைகளை விடாமல் பிடித்து கொண்டு பார்க்க ஒரு நிமிஷம் கையை விடு என்று கூற அவள் குரலில் என்ன உணர்ந்தானோ சட்டென அவள் கரங்களை விடுவித்தவன் அவளையே பார்க்க.. 

அங்கிருந்த சிறிய டேபிள் மீது தனது..   தந்தை புகைப்படத்தை எடுத்து வைத்தவள்..  தனது கைப்பைக்குள் இருந்த தனது தாயியின் திருமாங்கல்யத்தை எடுத்து பார்த்தவள் கண்களின் விடாத கண்ணீர் தான் அது ஒரு எழுப்பவுன் தாலி சரடு அதை  கைகள் வைத்து பார்த்தவள் கரிகாலனை திரும்பிப்பார்க்க அவள் என்ன செய்கிறாள் என்று விடாது பார்த்தவன் அவள் தன்னை பார்க்கவும் தானாய் அவள் முன்பு போய் நிற்க அவன் கைகளில் அந்த பொன் தாலியை கொடுக்க..  அவனோ இதெல்லாம் எதுக்கு என்பது போல் ஒரு பார்வை பார்க்க..  அவனை கண்டு வெட்கி போனவள் தன் வெட்கம் விட்டு உதிர்த்துவிட்டால் இதை என் கழுத்துல போட்டுட்டு எங்க வேணாலும் கூப்பிட்டு போ என்று..

அவளை மேலும் கீழுமாய் பார்த்தவன் என்ன தாலி மேஜிக்கா என்று உதடு வளைத்து நகைக்க..  உன்னை எப்போவோ தூக்க வேண்டியது டி உன்னை ஒரே நாள்ல விட கூடாதுனு தான் இப்போ விடாம காலம்பூரா என்கூட இருக்கணும்னு தன் உனக்காக இவளோ செலவு..  அதை தாண்டி ஒன்னுபோறதா இந்த சங்கிலிய போட்டாலும் போடலானாலும் உன்னை விடமாட்டேன் என்னை அவமான படுத்துனதுக்கு காலம்புர உன்னை கொடுமைப்படுத்துவேண்டி என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி இவன் உறும..  அவனை உற்றுப்பார்த்தவள் இனி உயிருள்ள ஜடம் மட்டும் தான் நான் ஆனால் இதை மட்டும் என் கழுத்துல போட்டுட்டேன் என்ற கெஞ்சலோடு அவனை பார்க்க.. அவள் கண்களில் என்ன கண்டனோ அந்த எட்டு மணி இரவு நேரத்தில் இருவருக்கும் திருமணமா என்று அறியமுடியாத உறவுக்குள் நுழைந்தனர்..

அவளை அழைத்து கொண்டு அவன் முன்னே நடக்க ஒரு வார்த்தை யாரும் சொல்வார்களா என்ற நப்பாசையோடு ஒருமுறை திரும்பி பார்க்க விட்டது  தொல்லை என்பது போல் மாமன் அத்தை முகத்தை திருப்பி கொள்ள அவனோடு சேர்ந்து நடந்தால் இவள்.. டிரைவர் வைத்து கொள்வது இவனுக்கு பிடிக்காது என்பதால் தானே அவளது பொருட்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்தவன் அவளுக்கு கதவை திறந்துவிட்டு அவர செய்து நேராய் அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு பயணமானான்....

ஓய் கொடி வெறும் தட்ட எவளோ நேரம் வெறிச்சு பார்ப்ப என்று குளறியபடி அவள் முன் இருந்த தட்டை எடுத்து கீழே போட்டவன் அவள் அணிந்திருந்த தனது சட்டையை இழுத்து கிழித்தவன் அவளிடம் மீண்டும் மூழ்க தொடங்க..  தனக்குள் சுற்றும் நினைவலைகளை ஒதுக்கி வைத்தவள் அவனுக்கு சொந்தமான பொருளாய் அவனுக்கு இசைந்து போனாள்..  மது நெடி இவளுக்கு ஏறி உண்டஉணவு குமட்டி கொண்டு வர அவனை உதறி தள்ளி பாத்ரூம் சென்றுவிட..  தனது தீராத ஆசையை தட்டிவிட்டு போன அன்னக்கொடியின் மேல் கொலைவெறியானான் கரிகாலன்..  போதையின் உச்சத்தில் இருந்தவன் மீண்டுமாய் சில பாட்டில்களை உள்ளுக்குள் சரித்து படி அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தவன் அறையில் இருந்த சோபாவில் அமர்ந்திருக்க.. துவண்டு போய் வந்த அன்னக்கொடி நேராய் கட்டிலில் சென்று படுக்க இவனுக்குள் அவளின் மீது வெறியேற அவளை முறைத்தபடியே அமர்ந்திருந்தான்..  இதை அறியாத கொடி உறங்கியே போனாள்..


Quote
அருண் தே கோ
(@arunmozhi)
New Member Registered
Joined: 1 year ago
Posts: 2
21/11/2020 7:30 pm  

UUK-2

 

உறக்கம் கலைந்து கண்ணை திறந்தவள் கண்டது எங்கோ செல்ல தயாராகிக்கொண்டிருந்த கரிகாலனை தான்..  நேற்று இரவு இந்த வீட்டுக்குள் வந்தது... அவளுக்கு அது மட்டும் தான்  தெரிகிறது இன்று மணி என்ன என்று கூட தெரியவில்லை கண்களை சுழற்றி அறையை நோட்டமிட அறைக்குள் கடிகாரம் இருப்பது போல் தெரியவில்லை.. சுற்றி வந்தவள் மீண்டும் கண்டது சிவப்புநிற ட்ஷிர்ட் அணிந்து இருந்த கரிகாலனை தான்..  அவனை முதல் முறை கண்டதும் இதுபோன்ற சிவப்பு நிற ஷர்ட் தானே..

இரண்டு மாதத்திற்கு முன்பு அன்னக்கொடி தனது அத்தை மகன் ரஞ்சித் உடன் அங்கு மால் ஒன்றிற்கு சென்றிருக்க அங்கே தான் முதலில் கரிகாலனை சந்தித்தால்..  மாதம் ஒருமுறை இப்படி அன்னக்கொடியை வெளியில் அழைத்து செல்வது ரஞ்சித்திற்கு பிடித்தமான ஒன்று சிறு வயதிலிருந்து உடன் வளர்ந்தவள் மீது அவனுக்கு அன்பையும் தாண்டி ஒரு உன்னதமான ஒரு உணர்வு   உண்டு.....

இருவரும் புட் கோர்டில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருக்க ரஞ்சித் போன் வந்திருப்பதாக கூறி எழுந்து சற்று தள்ளி செல்ல அன்னக்கொடி அவனை எதிர்பார்த்து வெளியில் பார்த்தபடி அமர்ந்திருக்க அவளுக்கு முன் இருக்கையில் வந்து அமர்ந்தான் அவன்...

ஹே மேன் இது ரீசெர்வ்ட் சீட் எழுந்து வேறெடத்துல உக்காரு என்று அன்னக்கொடி கூறிட அவளை மேலும் கீழும் பார்த்தவன் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி அவளையே பார்க்க அவனது பார்வையை சந்திக்க விரும்பாதவள் முகத்தை திருப்பி கொண்டு ரஞ்சித்திற்காக காத்திருக்க...  அவளை மீண்டும் பார்த்தவன் திஸ் ஐஸ் மை கார்டு காண்டாக்ட் மீ குவிக்லி..  உன் ஸ்ட்ரக்சர்க்கு கண்டிப்பா டபுள் பேமெண்ட் தான் என்று இவன் கூற கொதித்தெழுந்தால் அன்னக்கொடி...

சொல்லிவிட்டு அவன் தனது கருப்பு கண்ணாடியை மாட்டிக்கொண்டு  எழுந்துக்கொள்ள டேய் என்று கத்திவிட்டாள் அவள்..  என்னடா உன் மனசுல என்ன நினைக்கிற யாருன்னே தெரியாத பொண்ணுகிட்ட இப்படிதான் பேசுவியா என்று கேட்க அவனது கருப்பு கண்ணாடியை சற்று இறக்கி அவளை சற்று  உதடு வளைத்து பார்த்தவன் இவளது சத்தத்தில் மற்றவர்கள் பார்வை தங்களை மொய்ப்பதை உணர்ந்து அதை விரும்பாதவன் அவளை சற்று நீங்கி யாருனு தெருஞ்சுகிறதுக்கு தான் கூப்பிடுறேன் வந்துட்டு போடி என்று பல்லை கடித்து கொண்டு பேச நொடியில் அன்னக்கொடி கை அவனது கன்னத்தை பதம் பார்த்திருந்தது.. 

செல்ல செல்வமாய் வளர்ந்தவன் இதுவரை யார் முன்பும் தலை குனிந்து நிற்காதவன் ஒரு பெண் தன்னை அடித்து அவமானபடுத்த பாம்பென சீறிக்கொண்டு அவளை பார்க்க  அதற்குள் ரஞ்சித் வந்துவிட அன்னக்கொடியை அடிக்க ஓங்கிய அவனது கையை பிடித்திருந்தான்..  ஹே மிஸ்டர் கைய ஓங்குராரத்துக்கு முன்ன யோசிச்சு செய்யணும் எதுக்கு இப்போ என் அன்னத்தை நீ அடிக்க போற என்று இவனும் குறையாத வேகத்தில் கேட்டிட..  நான் யாருனு தெரியுமாடா கேகே (KK) டா என்மேல கை வச்சுட்டீங்களா இனி உங்க நிம்மதி பறிபோயிடும்டா என்று கூறியவன் சற்றும் நிற்காமல் சென்றுவிட்டான்.. 

என்ன மலரும் நினைவுகளா கொடி என்று கேட்டுக்கொண்டு கரிகாலன் அவள் சுற்றியிருந்த போர்வையை விளக்க நொடியில் நிகழ்ந்தது புரியாமல் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் குழம்பிய அன்னக்கொடி அவனது செயலில் அனிச்சையாக இவள் விலகி செல்ல ஏனோ இப்போது அவனுக்கு கோபம் வரவில்லை மாறாக ஒரு வெற்றி புன்னகை தான்.. என்ன கொடி எதோ இப்போதான் உன்னை நான் முதல் தடவை பாக்குறது போல பதறுற என்று கேட்டு சாவகாசமாய் கட்டிலில் அமர்ந்தவன்..  மறுமுனையில் அமர்ந்திருந்தவளை கை நீட்டி அழைக்க இரவில் அவனுக்கு இசைந்தவளால் ஏனோ இம்முறை ஒன்ற முடியவில்லை..

நேற்று நடந்த தாக்கம் அவனது பொருள் அவன் உடமை அவன் தொடுகிறான் என்ற உணர்வில் ஏதேதோ தனக்கு தானே சொல்லிக்கொண்டவளால் இப்போதும் அப்படியே கூறி தனது மனதை சமன் செய்து கொண்டு அவன் அருகில் செல்ல இயலவில்லை..  அவள் அருகில் வராதது சற்று கோபத்தை தூண்ட கட்டிலில் அமர்ந்தபடியே அவளை நெருங்கியவன் பெயரில் மட்டும் கொடி இல்லாமல் அவளே கொடி போல் இருக்கவும் அள்ளி மடியில் அமர்த்திக்கொண்டான்..  அவனை விட்டு விலக நினைக்க அமிலமென விழுந்தது அவனது வார்த்தை டபுள் பேமெண்ட் கொடுப்பேன்னு சொன்ன அப்போ அப்படி அறஞ்ச என்று கூறியவன் இன்று வாங்கிய அறையென எண்ணி கன்னத்தை தடவியபடி ஒரு கையால் அவள் இடையை இறுக்கி கொண்டு கோபத்தோடு பேச அவனது கோபத்தில் நொடிபொழுது கொடியின் மனம் தூக்கி போட எப்படி இவனை விலகுவது என்று அமர்ந்திருக்க மீண்டும் தொடர்ந்தான் கரிகாலன்..  அன்னைக்கு வந்திருந்தா ஒரே நைட்ல அனுப்பிருப்பேன் ஆனால் இப்போ உனக்காக முழுசா ஒரு கோடி செலவு செய்திருக்கேன் அதுனால இரவு பகல் பார்க்க உன்னோடு இருக்கலாம் என்று கூறிட..  அன்னக்கொடி உடல் கூசி போனது.. 

அவளது கழுத்து வளைவில் அழுந்த முத்தமிட்டவன் வந்து உன்னை கவனிக்கிறேன் இப்போ லீனா வைட்டிங் என்று கூறி அவளை விலகிட தீயை தலையில் கொட்டியது போல் உடல் எரிய அமர்ந்திருந்தாள் அன்னக்கொடி..  அவன் ஏதேதோ எண்ணத்தில் தன்னை அழைத்து வந்தவன் தான் ஆனால் அதற்கு முன் தனது தாயின் தாலியை அணிவித்து தானே அழைத்து வந்தான் வந்தவன் அதற்கு பின் கூட இப்படி செல்ல வேண்டுமா அப்போ நைட் என்கிட்ட நடந்துக்கிட்டது மனைவின்ற உரிமைல இல்லையா என்று இவள் மனம் நினைக்க.. அவள் மனமோ எள்ளி நகையாடியது அவன் அழைத்து வந்ததே அவளோடு கூடல் கொள்ள தானே என்று..ஏனோ இதை புரியாதவள் மூளை மறந்து போனது போல.. இல்லை வேண்டாமென்று அவளே ஒதுக்கி கொண்டாலோ.. . அவனுக்கு அது வெறும் தங்கச்சங்கிலி மட்டும் தான் இவளும் அவனை கணவனாக ஏற்றுக்கொண்டு வரவில்லை அவனோடு வரவேண்டிய சூழ்நிலையில் தன் வாழ்க்கை தள்ளப்பட்டது என்பதை தற்காலிகமாக மறந்து போனாள் பெண்ணவள்...

எத்துணை நேரம் அங்கே இருந்தாலோ மெதுவாய் தன்னை மீட்டு கொண்டு எழுந்தவள் தனது கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து சார்ஜில் போட்டுவிட்டு குளிக்க சென்றாள்..  பட்டதெல்லாம் கரையென்றால் தண்ணீரோடு கரைந்து போக கூடும் அவனோடு கூடிய உடலை என்ன செய்தால் தகும் என்ற வேதனையோடு தண்ணீரில் நின்றவள் குளித்து முடித்து வெளியில் வர அவளது கைபேசி அலறியபடி இருந்தது..

அந்த பிரத்தியேகமான அலைபேசி ஓசையிலே புரிந்து போனது அழைப்பது யாரென்று..  அவள் உடை மாற்றி கொண்டு அலைபேசியை சென்று கையில் எடுக்கும் வரை அது அலறிக்கொண்டு தான் இருந்தது..  கையில் எடுத்தவள் மீண்டும் சில பல அழைப்புகளுக்கு பின் தான் அழைப்பை ஏற்றால்.. அதற்குள் அவன் முன் அழுதுவிட கூடாது என்பதற்காக வந்த அழுகையை உள் வாங்கி கொண்டு அவனிடம் பேச..  அன்னம் எங்க இருக்க சொல்லு நான் வரேன் எதுவா இருந்தாலும் வீட்ல வச்சு பேசிக்கலாம் நீயா எதுவும் பண்ணிருக்க மாட்டான்னு எனக்கு தெரியும் என்று ரஞ்சித் இவளை பேச விடாது அவனே பேச மீண்டும் அழுகை இவளிடம் முட்டிக்கொண்டு வர சிறிது நேர அமைதிக்கு பின்...

எங்க வர சொல்லுற ரஞ்சி என்று உள்ளுக்குள் சென்ற குரலை  வரவழைக்கப்பட்ட உறுதியோடு கேட்டிட..  என்ன அன்னம் எங்கன என்ன கேள்வி இது நம்ம வீட்டுக்கு தான் நைட் ல இருந்து விடாம உன் நம்பர்க்கு கால் பண்ணிட்டு இருக்கேன்..  நீ எங்கன்னு அம்மா அப்பா கிட்ட கேட்டா எதுவுமே சொல்லமாற்றங்க யாரோ ஒருத்தன் வந்து கூப்பிட்டான் அவன் கூட நீ போய்ட்டானு அம்மா சொல்ராங்க அதெல்லாம் நான் நம்பள என் அன்னம் என்னை விட்டு என்கிட்ட சொல்லாம எங்கயும் போகமாட்டா வந்துடுவான்னு சொல்லிட்டு உனக்காக நைட் ல இருந்து காத்திருக்கிறேன் அன்னம் நீ எங்க இருக்கன்னு சொல்லு நான் வரேன்..  ரஞ்சி உங்க அம்மா சொன்னது உண்மை எனக்கு எனக்கு கல்யாணம் ஆகிட்டு இனி நான் அங்க வரமாட்டேன் இனி எனக்கு கால் பண்ணாதே என்று கூறியவள் மொபைலை அணைத்துவிட்டு முட்டி கொண்டு வந்த அழுகையை மீண்டும் தொடர அவளை தேற்றுவோர் யாருமில்லை.. 

சிறிது நேரத்துக்கு பின் கதவு தட்டும் ஓசை கேட்க தன் சஞ்சலங்களை ஒதுக்கிவிட்டு கதவை திறக்க அவ்வீட்டு வேலையாள் செல்வி  நின்றிருந்தார்..   அம்மா ஐயா உங்களுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னாங்க என்று ஒரு டிரேயை நீட்ட அதை மறுக்காமல் வாங்கி கொண்டவள்..  அம்மா மணி என்ன ஆகுது என்று கேட்டிட அவளை கனிவோடு பார்த்தவர் மணி அஞ்சாகுது கண்ணு போய் சாப்டு என்று கூறி நகர்ந்தவர் மனதில் இம்புட்டு அழகான பொண்ணு இவன் கிட்ட வந்து  மாட்டிக்கிச்சே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.. 

நேற்று இப்பெண்ணை அவன் அழைத்து வரும் போது தான் அவள் முகத்தில் எத்துணை துயரம் அனுபவமிக்க அவருக்கு பார்த்ததும் புரிந்ததே இவன் வழக்கமாக அழைத்து வரும் பெண்களை போல் இப்பெண்ணை அழைத்து வரவில்லையென்று.. 

ஆமாம் கரிகாலன் குணமே அதுதானே குடித்தால் பெண்கள் தேவை, மகிழ்ச்சியாக இருந்தால் பெண்கள் தேவை, கோபமாக இருந்தால் பெண்கள் தேவை  மொத்தத்தில் அவனுக்கு பெண்கள் அவனின் தேவைக்கான வடிகால்..  எத்துணை குடி போதையில் இருந்தாலும் மற்ற பெண்களிடம் உறவு கொள்ளும்போது உறை அணியாமல் யாருடனும் கூடாதவன் அன்னக்கொடியிடம் தான் தன் சுயத்தை மறந்து அவளிடம் மயங்கி போனான்..

அது தனக்கு அவள் சொந்தமான பொருள் என்பதால இல்லை தன் மனைவி என்பதால என்பது அவனறிந்த உண்மை மட்டுமே.. 

எப்போதும் பெண்களை அழைத்து வந்தால் கீழே உள்ள அறைக்கு  செல்பவன் இன்று நின்று சமையல் அம்மாவை அழைத்து அறையில் பால் பழம் வச்சுட்டு புல்லா  நல்லா நறுமணமான ரூம் ஸ்ப்ரேயை அடிக்க சொல்லுங்க இன்னும் பத்தே நிமிசத்துல நடக்கணும் அவனின் பேச்சை கேட்டு கொண்டிருந்த அப்பெண்மணி தம்பி எந்த ரூம்ல என்று மெதுவாய் கேட்க அவரை நிதானமாய் பார்த்தவன் என் ரூம்ல என்று அழுத்தமாய் கூறியவன் அன்னக்கொடியை அழைத்து கொண்டு தனது அறைக்கு சென்றவன் அறையோடு இருந்த மற்றொரு அறைக்குள் அவளை அழைத்து சென்றவன் அங்கிருந்த சோபாவில் அமர அன்னக்கொடிக்கு தான் உடம்பெல்லாம் தகித்தது..

என்ன இவன் இப்படி பேசுறான் ஏன் ஏன் அப்போ உண்மையிலே அவன் நெனச்சதை சாதிச்சுக்க தான் என்னை அழைத்து வந்தானா என்ற யோசனையில் நிற்க சோபாவில் அமர்ந்து அவளையே பார்த்திருந்தவனால் ஏனோ இவளின் மனதை அத்துணை துல்லியமாக படிக்க முடிந்தது..  வேலை செய்றவங்கள்ட்ட பயந்து பயந்து பேசணும்னு இல்லை அண்ட் நீ கொடுத்த தங்கச்சங்கிலி உனக்கு போட்டுவிட்டுடேன் எப்படியும் உனக்கு எதிர்பார்ப்பு இருக்கும்ல அதான் intha பால் பழமெல்லாம் மத்தபடி எனக்கு எப்படி இருந்தாலும் ஓகே தான் என்றவன்..  அவளை பார்த்து கண்ணடிக்க இவனின் பேச்சுக்கு எவ்விதமாக எதிர்வினை காட்டுவது என்பது புரியாமல் விழித்தவள் அப்படியே நிற்க... .. 

அலைபேசி எடுத்து அழைத்தவன் சொன்ன வேலையை முடித்துவிட்டார்களா என்பதை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டு வெளியில் சென்றவன் நிதானமாய் ஒரு குளியல் போட்டு வெறும் துவலையோடு வந்தவன் அறைக்குள் அவளை தேட அவளோ இவன் செல்லும்போது எந்த இடத்தில் நின்றானோ அங்கேதான் இப்போதும் நின்றிருந்தாள்..  அவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ அவளை பின்னோடு அணைக்க மின்சாரம் பயந்தது போல் துள்ளி விலகினால் அன்னக்கொடி..  இவனது கிறக்கம் நொடியில் கோபத்தை உண்டாக்க..  ஹே நீ எனக்கு எனக்கு மட்டும் சொந்தமானவ டி மறந்துடாத இந்த இந்த விலகல் என்னை மூர்க்கனா மாத்திடும் என்னை கோபப்படுத்தி பார்க்காத அது  உனக்கு நல்லதில்லை என்று கூறிட அவனது கோபத்தில் உடல் நடுங்கி போனால் அன்னக்கொடி..

மீண்டும் அவளை நெருங்கியவன் கைகளில் ஏந்திக்கொள்ள முதலில் போல் இப்போது அவனை அவள் விலகவில்லை..  ஆணி அடித்தது போன்ற அவனின் பேச்சில் சமைந்து போனால் பெண்ணவள் எனக்கு சொந்தமான அவன் எந்த விதத்தில் சொல்கிறான் தனக்கு அணிவித்த தாலியை வெறும் தங்கச்சங்கிலி என்று சொன்னவன் அப்போ அப்போ அந்த பணத்துக்காக தான் இப்படி..  இந்த முறைல என்கிட்ட நெருங்கினா அதுக்கு என் பேர் என்ன என்றவளின் மனம் ஊமையாக உள்ளுக்குள் கண்ணீர்வடிக்க..  அவளை அப்படியே அவள் வீட்டிலிருந்து அழைத்து வந்தவன் அவளை சுத்தப்படுத்திக்கொள்ள ஏன் உணவு கூட அளிக்காமல் அவளை நெருங்கிட பெண்ணவளின் மனம் எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நொடியில் மனதை சமன் செய்திருந்தால்..

 

 


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 153
22/11/2020 10:56 am  

Kathai oda arambamey romba ganama serious eruku... Next next epadi pogum nu oru ethirparpu eruku.. Waiting for your next episode


ReplyQuote
Subha Mathi
(@subhamathi)
New Member Registered
Joined: 2 days ago
Posts: 2
26/11/2020 1:51 pm  

Little confused 🤔🤔... takkunu next episodes post pannunga sis...I like the story...moves

 


ReplyQuote


Share: