Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

என்னுள் புதைந்த காதல்  

  RSS

Shalu
(@shalu-shara)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 10
29/04/2020 7:47 am  

சகாப்தத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. எனது "என்னுள் புதைந்த காதல் " கதையை இங்கு பதிவிடுகிறேன் தங்களது கருத்துக்களை எதிர்பார்த்திருக்கிறேன் நண்பர்களே...

 

😊😊😊

அத்தியாயம் 1

பைக்கின் சத்தம் கேட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்த காருணிகா எதுவும் பேசாமல் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

அதை சைடு மிரரில் பார்த்துக் கொண்டு இருந்த மித்ரன் யோசனையுடன் பைக்கைக் கிளம்பினான்.

சாலையில் போய்க் கொண்டு இருந்த அப்போதும் எந்தவித சம்பாஷணைகளும் அவர்களுக்குள் இல்லை.

மித்ரன் அவ்வப்போது மிரரில் காருணிகாவின் பிம்பத்தை பார்த்தவாறே ஓட்டிக் கொண்டு இருக்க
அதை சட்டை செய்யாமல் அவனது பின்னால் அமர்ந்தவாறு சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் காருணிகா.

' நேத்து நடந்த சண்டைய இன்னும் ஞாபகம் வச்சுருக்காப் போல ' என்று அவளை எவ்வாறு சமாதானம் செய்யலாம் என தீவிரமாக யோசித்துக் கொண்டே அவன் பைக்கை செலுத்த

பின்னால் இருந்த காருணிகா
" என்ன கண்ணாடி வழியா பாக்காம ரோட்ட பாத்து வண்டி ஓட்டுனா நல்லா இருக்கும் "என்று அவனிடம்  கோபக்குரலில் கூற

தன்னை கண்டு கொண்டாளே என்று வெட்கத்தில் வண்டியை வேகமாக ஓட்டி அவளது கல்லூரி இருக்கும் இடத்திற்கு கூட்டி வந்தான்.

அவள் அவனிடம் எதுவும் சொல்லாமல் திரும்ப
மித்ரனோ " காரு சாரிடி நேத்து நடந்ததுக்கு ஓராயிரம் தடவை சாரி கேட்டாச்சு இன்னும் கோபம் போகலயா ஏன்டி இப்படி பண்ற ?"
என்று அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்க

காருணிகாவின் முகம் ரத்தச் சிவப்பானது.

" இப்படியே தப்பு பண்ணிட்டு சாரி கேட்டுட்டே இருக்கியே எப்போதான் திருந்தப் போற நீ ?"
என்று புருவம் உயர்த்திக் கேட்க

" இது தான் லாஸ்ட் இனிமேல் எந்த தப்பும் நடக்காது நம்பு" என்று அவளை சமாதானம் செய்தான் மித்ரன்.

" இனிமேல் இப்படி நடந்துச்சு என்ன மறந்துரு " என்று கறாராக கூறினாள்.

" அப்படிலாம் சொல்லாத. சரி எப்பவும் வீட்ல இருந்து வரும் போது என்னைப் பாத்து க்யூட்டா ஸ்மைல் பண்ணுவியே அது இன்னைக்கு பாக்காம ஒரே கஷ்டமா இருக்குடி ப்ளீஸ் ஸ்மைல் பண்ணேன் "
என அவளது கைகளை மிருதுவாக பிடித்துக் கெஞ்ச

அவளோ " முடியாது போ உனக்கு பனிஸ்மெண்ட் அதுதான் நா இன்றைக்கு முழு நாளும் உன்னைப் பாத்து சிரிக்கவே மாட்டேன் " என உறுதியாக கூற

"ஏன் டி என்ன இப்படி கொல்ற. உன்ன" என்று அவளை ஒரு மரத்தின் பின்னால் இழுத்துக் கொண்டு சென்றான்.

" மித்ரன் என்ன பண்ற ?"
என அவனை கோபமாக பார்க்க

"ஓஓ முழுப்பேர் சொல்லி கூப்புட்ற அளவுக்கு கோபமா என்மேல " என்று அவளது இதழை ஒரு விரலால் வருட
ஆரம்பித்தான்.

காருணிகா அவனது தீண்டலில் சிலிர்த்து அவனது கண்களைப் பார்க்க அப்பார்வையில் கிறக்கமடைந்த மித்ரன் தாமதிக்காமல் அவளது இதழெனும் பூவில் தேனீடுக்க முனைந்தான்.

அறிவிப்பில்லாத அந்த இதழ் அணைப்பில் திக்குமுக்காடிய போதும்
காருணிகாவும் அவனுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மித்ரனின் கைகள் அவளது கன்னத்தை தாங்கியபடி அவனது இதழ் அவளது இதழை தன்னுள் புகுத்திக் கொண்டது.

அந்த இதழணைப்பின் கால அளவை அதிகரிக்க அவனுக்கும் ஆசை தான் ஆனால் அவன் அவளது அதரங்களை விடுவித்தான்.

காருணிகா இப்போது கண்களைத் திறந்து பொய்க்கோபத்தால் அவனது கைகளில் கிள்ளினாள்.

" ஸ் ஆ வலிக்குதுடி  "என்று கத்த

"நல்லா வலிக்கட்டும் " என்று அவனை மீண்டும் கிள்ளினாள்.

அவளது கைகளை பற்றி தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு
அவளது அழகான வதனத்தை ரசனையுடன் பார்த்தான்.

காருணிகா சற்று உயரம் குறைவு...
வெளிர் நிற தேகம்..
வில் போல் வளைந்த புருவங்களினூடே ஒற்றையாய் பொட்டு..
இவளுக்கு மூக்கின் மேல் கோபம் வரும் என்பதை எடுத்துச் சொல்லியது போல் கூர் நாசி...
மென்மையான இதழ்கள் ..
அழகே உருவான தனது காதலியை
மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

காருணிகாவிற்கும் அதே நிலை தான்.
மித்ரன்
காருணிகாவை விட இரண்டி உயரம்...
கூர் கண்கள்..
சின்ன நாசி...
ட்ரிம் செய்த மீசை மற்றும் தாடி...

ஆணழகனாய் இருந்தவனை விழி விரியாமல் பார்த்தாள்...

" காரு உனக்கு காலேஜூக்கு டைம் ஆச்சு  நீ கிளம்பு ஈவ்னிங் பாக்கலாம்" என அவளை  கல்லூரிக்கு முன்னால் கூட்டி வர

காருணிகா கல்லூரிக்குள் செல்லப் போனவள் திரும்பி

" மித்து " என்க

மித்ரன் திரும்பியதும்

அவன் கேட்ட அந்த புன்னகை முகமாய் நின்றவளை பார்த்து இவனும் புன்னகைத்தான்.

" லவ் யூ மித்து " என்று கத்தி விட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள் காருணிகா.

அந்த சந்தோஷத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்து கல்லூரியை விட்டு சென்றான் மித்ரன்.

                                          - தொடரும்..

 

This topic was modified 2 months ago by Shalu

Shalu
(@shalu-shara)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 10
01/05/2020 7:19 am  

என்னுள் புதைந்த காதல்

அத்தியாயம் 2

பைக்கில் செல்லும் போது மித்ரன்  முந்தைய தினம் காருணிகா சண்டையிட்டதைப் பற்றி அசை போட ஆரம்பித்தான்...

முந்தைய தின இரவு மித்ரனும் அவனது நண்பர்களும் அவனுக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியை சோமபானம் அருந்தி கொண்டாடிக் கொண்டு இருந்தனர்..

அப்போது காருணிகா மொபைலில் அழைக்கவே அவளிடம் குடித்து விட்டு பேசுவதை நினைத்தாலே சற்று கலக்கமாக இருந்தது...

அவள் குடிக்க வேண்டாம் என்று சத்தியம் எல்லாம் செய்ய சொல்லவில்லை.. ஆனால் மித்ரன் மட்டும் அல்ல யார் மது அருந்தினாலும் அவளுக்குப் பிடிக்காது... அதையும் மித்ரனிடம் கூறி இருந்தாள்..

ஆனால் மித்ரன் காருணிகாவிடம் வலிய சென்று இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக கூறி இருந்தான்...

ஆனால் இப்போது குடித்துக் கொண்டு இருப்பது தெரிந்தால் அவளின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று இவனால் கணிக்க முடியவில்லை...

மொபைலை ஆன் செய்தவன்
" ஹலோ என்ன காரு என்று குழைந்தான்...

என்றும் இல்லாமல் இன்று அவனது பேச்சில் மாறுதல் தெரிய
காருணிகா : மித்து என்ன ஆச்சுடா ஒரு மாதிரி பேசற என்று சந்தேகமாக கேட்க

" ஒருவேளை கண்டுபிடிச்சுட்டாளோ ?? " என்று கதிகலங்கி இருக்க

" மித்து என்னடா பேசாம இருக்க "
என்று அவனை சத்தமாக அழைக்க

" ஆஆ கேக்குது காரு.... அதுலாம் ஒன்னும் இல்லையே  நான் நல்லா தான் இருக்கேன்... " என்று தட்டுத் தடுமாறி கூற...

அவள் அதை நம்பும் தருவாயில்
" டேய் மித்ரன் சீக்கிரம் வாடா தேர்ட்  ரவுண்ட் ஸ்டார்ட் ஆகிருச்சு "என்ற நண்பனின் குரலில் விழி பிதுங்கி நிற்க...

மறுமுனையில் நிசப்தமாக இருக்க மித்ரன் தலையில் அடித்துக் கொண்டு திரும்பி நண்பனிடம்
" பாவிப்பயலே ஏன்டா உனக்கு இப்போ திருப்தியா " என்று அவனை கழுவி ஊற்றி விட்டு

" காரு.... என்று கெஞ்சலுடன் அழைக்க ஆனால் அவள் தான் எப்போதோ அழைப்பைத் துண்டித்து விட்டிருந்தாள்...

மித்ரன் : ச்ச.... அவகிட்ட பண்ண ப்ராமிஸ கூட என்னால காப்பாத்த முடியல... அந்த அளவுக்கு நா control ஆ இல்லை.... இதுக்கு
மேல குடிக்கத் தோனும்... எனக்கு " என்று தன்னையே கடிந்து கொண்டு நண்பர்களிடம் விடைபெற்று விட்டு தனது வீட்டிற்கு சென்றான் ..

இவ்வாறு ஆரம்பித்த சண்டை தான் இன்று காலை ஒரு முடிவிற்கு வந்தது...

மித்ரன் பணக்கார வீட்டு பையன் தான் ஆயினும் அவன் எந்தவொரு தகுதியும் பார்க்காமல் நண்பர்களுடன் பழகுவான் அந்த குணமே அவனது நண்பர்களுக்கு அவனிடம் பிடித்தமாக இருக்க அவர்களும் அவனுக்கு எந்த நிலையிலும் உறுதுணையாக இருந்தனர்...

அவன் தனது குடும்ப சூழ்நிலை மற்றும் செல்வநிலை ஏகத்துக்கும் நன்றாகவே இருக்க தனது சுயத்தை தேடி வாழ்வில் முன்னேறிக் கொண்டு இருந்தான்...

சொந்த காலில் நிற்க முயற்சி செய்து கொண்டு இருந்தான்...

MBA முடித்து ஒரு பிரபலமான ஐடி கம்பெனியில் திறம்பட வேலை பார்த்து வருகிறான்....

அவனது வாழ்வில் கிடைத்த பொக்கிஷமாக கருதுவது அவனது காருணிகா தான்....

கல்லூரியில் தனது வகுப்பில் அமர்ந்து இருந்த காருணிகாவின் நினைவுகள் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது அவளது செல்ல மித்ரன் தான்...

கனவில் கூட நினைத்துப் பார்த்திராத அந்த குணாளனை தான் காதலனாக பெற்றது அவள் செய்த முன்ஜென்ம பாக்கியமாக தோன்றிற்று காருணிகாவிற்கு...

காதலிக்கு காதலை மட்டும் அளிக்காமல் தந்தையாகவும் , தோழனாகவும் திகழ்பவனை எந்த பெண்ணிற்கு தான் பிடிக்காது அவ்வாறான குணநலன்கள் மித்ரனிடம் இயற்கையாகவே இருக்க....

அவனை எவ்வாறு தொலைக்க நினைப்பாள்...

அவனது பாசத்திலும் காதலிலும் தனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று நினைத்துப் பார்க்கும் போது  அவளுக்கு தன்னை எண்ணியே கர்வமாக இருக்கும்...

இப்படியாக தனது மனதை கவர்ந்து சென்ற மணாளனை நினைத்துக் கொண்டு இருந்த காருணிகாவை புஜங்களில் இடித்து அழைத்தாள் அருகிலிருக்கும் தோழி தமயந்தி...

" ஏய் காருணிகா என்னடி கண்ணை தொறந்துட்டே தூங்கிட்டு இருக்கியா... "

காருணிகா : ஏன்டி...     

" பக்கி நம்ம ரம்பம் ரெக்கார்ட் நோட்  submit பண்ணுங்கனு சொல்லி அரை மணி நேரம் ஆச்சு நீ பாட்டுக்கு எதையும் கண்டுக்காம எதையோ யோசிச்சுட்டே இருக்க அப்படி என்னதான்டி யேசிக்கற " என்று சலித்துக் கொண்டாள்...

உடனே காருணிகா
" நா என்னோட மித்துவ பத்திதான்டி யோசிச்சுட்டு இருக்கேன்... என்று புன்னகை தவழ கூறினாள்...

"ஆரம்பிச்சுட்டியா...   " என தமயந்தி அவளை முறைத்துப் பார்த்தாள்...
       
                                          - தொடரும்...
அவர்களது காதல் கதையை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

 

This post was modified 2 months ago 3 times by Shalu

ReplyQuote
Shalu
(@shalu-shara)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 10
03/05/2020 8:06 am  

என்னுள் புதைந்த காதல்

அத்தியாயம் 3

மித்ரன் தனது வேலை விஷயமாக நண்பனுடன் ஒரு கம்பெனிக்கு  பயணமாகிக் கொண்டு இருந்தான்.

அந்த நேரத்தில் சிக்னல் விழுந்து விட அவனும் அவனது நண்பனும் பேசிக் கொண்டு இருந்தனர்...

அப்போது அவனது பைக்கிற்கு அருகில் நின்று இருந்த ஸ்கூட்டியில் ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்து இருந்தனர்...

அந்த ஆண் பின்னால் திரும்பி பெண்ணிடம் சுவாரசியமாக பேசிக் கொண்டு இருக்க அவர்களை எதேச்சையாக பார்த்தான் மித்ரன்.

முடியை போனிடெய்ல் போட்டு இருந்தாள்...அவள் தலையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டு இருந்ததால் அதுவும் அவளது தலை அசைவிற்கு ஏற்ப அசைந்தது.

காதில்  வளையம் தொங்க , கழுத்தில் ஐடி கார்டுடன் இருந்தவளை அவளது இயற்கையிலேயே சுண்டி இழுக்கும் வெண்மை நிறத்திற்கும்

எந்தவித செயற்கையான ஒப்பனையும் இல்லாமல் புதிதாய் மலர்ந்த  செந்நிற பூவைப் போய் சிவப்பு வண்ண சுடிதாரில் துறு துறுவென இருந்தவளை,

மித்ரன் கண்கொட்டாமல் பார்க்க பச்சை வண்ணம் மிளிர்ந்ததால் அவளை பார்ப்பதை தற்சமயம் கை விட்டு விட்டு தனது வேலைக்கான இண்டர்வியூவிற்கு சென்று விட்டான்...

ஆனால் அவனது மனக்கண்ணில் அவனவளின் முகம் மட்டும் ஆணி அடித்தாற் போல் ஒட்டிக் கொண்டது.

அலுவலகத்தை அடைந்ததும்
தீபன் , மச்சி போய் இண்டர்வியூல என் பேர காப்பாத்துற மாதிரி பதில் சொல்லு சரியா வெற்றியுடன் திரும்பி வா

மித்ரன் : கண்டிப்பா மச்சி...

என்று தனது பைலை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்தவன்
" மச்சி..... வேலை கிடைச்சுருச்சுடா... என தீபனை அணைத்துக் கொள்ள அவனும்
" மச்சி சூப்பர்டா சூப்பர்டா.... என நண்பனுக்கு வாழ்த்து தெரிவித்தான்..

" டேய் ட்ரீட் வைடா.. என்க...
மித்ரன் : கண்டிப்பா வச்சுரலாம் வா என்று இருவரும் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றனர்..

உள்ளே நுழைந்ததும் தீபன் ஒரு டேபிளை தேடி அமர்ந்தான்..

மித்ரனும் அவனது அருகில் செல்ல அப்போது அவன் காலையில் பார்த்த அந்த பெண்ணும் அவளுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவனும் ஒரு டேபிளில் அமர்ந்து உணவுண்டு கொண்டு இருந்தனர்..

அவனது மனம் கவர்ந்தவளை கண்களில் நிரப்பிக் கொண்டே சென்று அமர்ந்தான்...

அவர்கள் இருவரும் உணவை ஆர்டர் கொடுத்து விட்டு அமர  அந்த ஆண் மொபைல் பேச செல்ல அங்கு அந்த பெண் வந்து அவர்களின் இருக்கையில் அமர்ந்தாள்.

தீபன் குழப்பமாக பார்க்க மித்ரன் அவளின் இந்த செய்கையை எதிர்பார்க்காததால் ஒரு கணம் திடுக்கிட்டான்...

அவள் தீபனிடம் " உங்க ப்ரண்ட் கிட்ட தான் நா பேசனும் "என்று மித்ரனிடம் திரும்பி

" நானும் காலைல இருந்து பாத்துட்டு இருக்கேன் நீங்க என்ன வச்ச கண் வாங்காம பாத்துட்டு இருக்கிங்க... உங்களுக்கு என்ன தான் ப்ராப்ளம் " என்று கேட்க அவர்களுக்கு தனிமை அளித்து விட்டு வேறு ஒரு டேபிளிற்கு சென்ற தீபன் அங்கு அமர்ந்து உண்ண ஆரம்பித்து விட்டான்...

மித்ரன் , உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா? "

அந்த பெண் நாம இவன இவ்ளோ திட்டிட்டு இருக்கோம் இவ என்னடான்னா பேர் என்னனு கேட்டுட்டு இருக்கான் என்று அவனை உள்ளுக்குள் வறுத்தெடுக்க அதை எதையும் சட்டை செய்யாமல் மித்ரன் அவளுடைய பெயரைக் கேட்டு மன்றாடிக் கொண்டு இருந்தான்...

" இங்க பாருங்க மிஸ்டர் ...
"மித்ரன் என்று அவனது பெயரைக் கூற
" ஓகே மிஸ்டர் மித்ரன்... நீங்க இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல என்ன முழுங்குறா மாதிரி பாக்கறது சரியில்லை "
என்று அவனை எச்சரிக்க

மித்ரன் : இன்னும் நீ உன் பேர சொல்லல என அவன் தன் பிரச்சனையிலேயே குறியாய் இருக்க
அவளோ இடியட் என்று திட்டி விட்டு அகன்றாள் .
அவளுடன் வந்தவன் அவளை காருணிகா என்று அழைத்ததை கேட்ட மித்ரன் கண்டு கொள்ளாமல் விடுவானா....

                                      - தொடரும்...

 

This post was modified 2 months ago by Shalu

ReplyQuote
Shalu
(@shalu-shara)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 10
05/05/2020 12:09 pm  

அத்தியாயம் 4

மித்ரன் அவளது பெயரை எத்தனை முறை சொல்லிப் பார்த்தான் என்பது அவனுக்கேத் தெரியாமல் போனது...ஏனெனில் அந்த அளவிற்கு அவளது பெயரை மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டு இருந்தான்.

அருகில் வந்த நண்பனின் முறைப்பை ஏற்றுக் கொண்டு ," சாரிடா மச்சி... வா சாப்பிடலாம் " என்று அவனை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான் ..

தீபன் ,  டேய் அந்த பொண்ண உனக்கு முன்னாடியே தெரியுமா.. ?என்று நண்பனைக் கூர்மையாகப் பார்த்தவாறு கேட்டான்.

மித்ரன் , தெரியாதுடா..  என்று சர்வ
சாதாரணமாக கூறினான்.

தீபன் , அப்பறம் ஏன்டா பேர் கேட்ட  ? என்று ஆயாசமாக கேட்டான்.

மித்ரன் , அது காலைல பாத்தேன் பிடிச்சது சோ பேர் கேட்டேன் என்று நண்பனுக்கு பதில் அளித்தவன் உணவுண்ண ஆரம்பித்தான்.

தீபனும் அதற்கு மேல் எதுவும் வினவாமல் உணவுண்டான்.

நண்பனுடன் உணவுண்ண வந்த காருணிகாவின் மனதை  மித்ரனின் குறும்பு பேச்சு அசைத்துப் பார்க்க உணவுண்ணப் மிடிக்காமல் நண்பனையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டாள்..

அதைப் பார்த்து ஏன் என்று கேட்டான் நண்பன்.

காருணிகா , இல்ல மூட் அவுட் அதுதான்...
என்று சமாளித்தாள்.

நண்பன் , யாரு அவன் உன்கிட்ட இப்படி வந்து உரிமையா பேசறான் என்றதும்

காருணிகா , தெரிஞ்சவன் தான் என்று கூறி மழுப்பி விட்டாள்.

இருவரும் தத்தமது  வீட்டிற்கு செல்ல காருணிகாவிற்கு மட்டும் தான் ஏன் அவனை தெரியாது என்று கூறாமல் தெரிந்து வைத்துள்ள ஆள் தான் என்று கூறினோம் எனத் தன் மனதை பலவாறு கேட்டுப் பார்த்தாள்.

ஆனால் அவள் மனது அவளுக்கு பதில் உரைக்காமல் சண்டித்தனம் செய்தது.

சரி இதை இத்தோடு விட்டு விடலாம் என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு உறங்கிப் போனாள்.

காருணிகாவின் தந்தை கோபாலன் பேங்க்கில் வேலை சொய்பவர்.தாய் ஶ்ரீ கீதா  வீட்டையும், அவர்களது மக்கட் செல்வங்களை திறம்பட வளர்ப்பவர்... வீட்டு நிர்வாகம் முழுவதும் அவரிடமே..

கண்டிப்பானவர்கள் அல்ல.. அவர்கள் பிள்ளைகளுக்கு அந்த வயதிற்கேயான சுதந்திரம் அளித்துள்ளார்கள்.. யாரும் அதை தவறான வழியில் உபயோகித்தது இல்லை... என்ற நம்பிக்கையில் இருவரும் நிம்மதியுடன் உள்ளனர்.

காருணிகாவின் இரு தங்கைகள் காதம்பரி பத்தாம் வகுப்பு ,சுதாகரி பன்னிரண்டாம் வகுப்பு. தம்பி வளவன் எட்டாம் வகுப்புப் படிக்கிறார்கள்.

காருணிகாவின் மனம் சற்று அமைதி அடைந்தாலும் தன்னிடம் வந்து உரிமையாய் பேர் கேட்ட அப்புதியவனின் ஞாபகம் அவளுக்கு வந்து கொண்டு தான் இருந்தது.

இரவில் தாய் வந்து அவளை எழுப்பி
, சாப்பிடாம வெறும் வயித்தோட தூங்காதனு எத்தனை தடவ சொல்றது வந்து சாப்பிடு.. என்று அவளை அழைத்துச் சென்றார்.

இவளும் , சரிம்மா என்று தாயுடன் சென்று குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருக்க
அங்கு இருந்த அவளது இரு சகோதரிகள் சண்டை இட ஆரம்பித்தனர்.

தந்தை அவர்களை அடக்க வழி இல்லாது திணற தாய் சமையலறையில் இருந்து சட்னி எடுத்து வந்தவர் அவர்கள் இருவரையும் பார்த்து , அப்படி என்ன தான் ரெண்டு பேரும் சண்டை போடுவீங்களோ தெரில உங்களோட தினமும் எனக்கு டென்ஷன் தான்.உங்கள விட சின்ன பையன் அவனே சமத்தா சாப்பிட்டுட்டு இருக்கான் நீங்க மட்டும் ஏன் இப்படி வாலுத்தனம் பண்றிங்க ?
என்று அவர்களை அதட்டினார்.

சுதாகரி , அம்மா ! இவ என்ன ஸ்கூல்ல மிஸ்கிட்ட மாட்டி விட்டுட்டா... என்று அக்காவை பற்றி கோள் சொன்னாள் தமக்கை.

ஶ்ரீ கீதா , ஏன் காதம்பரி அப்படி பண்ண ? என்று இரண்டாம் மகளிடம் கேட்டார்.

காதம்பரி , அம்மா இவ மிஸ் என்ன கூப்பிட்டு இவ டெஸ்ட் ஒழுங்கா எழுதறது இல்லைனு சொன்னாங்க. அதுக்கு நான்  அவ வீட்ல படிக்கறதே இல்லனு உண்மையதான் சொன்னேன் என்று பதில் உரைத்தாள்.

ஶ்ரீ கீதா , ஆமா காது நானும் இவள கவனிச்சேன்.பப்ளிக் எக்ஸாம் எழுதப் போறோம்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம இருக்கா.. படிக்கறதே இல்ல இனிமே உன்ன நல்லா அடி குடுத்து படிக்க வைக்கனும்.
என்று சின்ன மகளிடம் கூறினார்.

இவர்களது சண்டையைப் பார்த்து சிரித்து விட்டாள் காருணிகா...

இருவரும் அக்காவை முறைத்துக்கொண்டே உணவுண்டு முடித்தனர்.
ஆனால் இவற்றில் எல்லாம் கலந்து கொள்ளாமல் இருந்தார் கோபாலன்.

வளவனும் இவர்களுக்கு இதை தவிர வேறு வேலை இல்லை என்பதை அறிந்து இருந்தவன் உணவருந்தி விட்டு உறங்கச் சென்று விட்டான்.

கோபாலன் இந்த நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பது தானே என்று ஒதுக்கி விட்டு தானும் தூங்கச் சென்றார்.

ஶ்ரீ கீதா சமையலறையை ஒழுங்குபடுத்தி விட்டு அவரும் சென்று விட தங்கைகள் மற்றும் தம்பிக்கு இரவு வணக்கத்தைத் தெரிவித்து விட்டு தனது கைபேசியுடன் தனது அறைக்குச் சென்றாள் காருணிகா.

வழக்கம் போல் நண்பர்களுடன் அரட்டை அடித்த பின்னர் அவள் உறங்கச் செல்லும் போது மணி பன்னிரெண்டு ஆகி இருந்தது.

அடுத்தநாள் ஞாயிறு என்பதால் அரக்கப்பரக்க எழுந்து கல்லூரி செல்லத் தேவையில்லை என்ற காரணமே அவள் உறக்கத்தைத் தாமதம் ஆக்கியது.

மித்ரனும் தனது நண்பர்களுடன் ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கி இருந்தான்.
அவனுடன் சேர்ந்து நான்கு பேர் இருந்தனர். நால்வரும் சரிசமமாக தங்களது வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

மித்ரனுக்கு  தூங்கா இரவாகிப் போனது ஏனெனில் கனவில் அவனது காருணிகா வந்து அவனை இம்சித்துக் கொண்டு இருந்தாள்.

"அவளது கண்களின் ஈர்ப்பு விசையில் காந்தமென சென்று ஒட்டிக் கொள்ளலாம்"
என்று பலவாறு அவளது நினைவு அவனை ஆட்கொண்டு இருந்தது.

காலை சூரியன் உதயமானதும் காருணிகா உற்சாகமாக எழுந்தாள்.

தங்கைகள் இன்னும் எழுந்து கொள்ளாமல் இருக்க தாய் சமையலறையில் இருந்தார்.

தந்தை வழக்கம் போல் நண்பர்களைப் பார்க்கச் சென்று விட தாயிடம் சென்று காலைத்தேநீருக்காக நின்றாள்.

ஶ்ரீ கீதா அவளைப் பார்த்ததும் ,
என்னடி இன்றைக்கு லேட்டா எழுந்திருச்சிருக்கியே ? என்று கேட்டுக் கொண்டே கையில் தேநீர்க்கோப்பையைக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டவள் , நேத்து ப்ரண்ட்ஸ் கூட சேட்டிங்மா அதான் லேட்டா தூங்கிட்டேன் காலையில் எழுந்திரிக்க முடியல என்று உண்மையைக் கூறினாள்.

மகளிடம் ஶ்ரீ கீதாவிற்கு பிடித்தது இந்த குணமே ஆகும் .. அவள் சிறு விஷயத்தில் கூட பொய் கூற மாட்டாள்.

அதனாலேயே அவளுக்கு மதிப்பு அளிப்பார்.
ஶ்ரீ கீதா , சரி நீ போய் டீ குடி.. என்று மகறை அனுப்பி விட்டு காலை உணவை தயாரித்தார்.

அவள் தேநீரின் சுவையை ரசித்து உள்வாங்கிப் பருகிக் கொண்டு இருக்கும் போதே வளவன் அரைத் தூக்கத்துடன் வந்தான்.

அவனைப் பார்த்த காருணிகா ,
டேய் வளவா என்னடா நீ என்ன விட லேட்டா எழுந்திருக்கியே என்று தம்பியிடம் கேட்டாள்.

வளவன் , நேத்து நைட் முழுதும் ஹோம்வொர்க் பண்ணி முடிச்சேன் அக்கா அதுதான் லேட் என்று அருகில் அமர்ந்தான்.

காருணிகா ,அதான் விஷயமா .. ஓகேடா என்று அவனுடன் பேசிக் கொண்டே தேநீரைப் பருகி முடித்தாள்.

அப்போது தான் தங்கைகள் இருவரும் தங்கள் அறையில் இருந்து வந்தனர்.

வளவன் , பாருக்கா நம்மள விட லேட்டா எழுந்திரிக்கவும் இரண்டு ஜீவன்கள் இருக்காங்க என்று சிரித்தான்.

அவனை முறைத்துக் கொண்டே இருவரும் தேநீர் கேட்க அவர்களைத் திட்டியவாறே கையில் தேநீரைத் திணித்தார் ஶ்ரீ கீதா.

இவங்க ரெண்டு பேரும் நைட் முழுதும் வீடியோ கேம்ஸ் விளையாட்றாங்க இருங்க உங்களை அப்பாகிட்ட சொல்றேன் என்று மிரட்டி விட்டு சென்றார்.

விடுமுறை நாள் என்பதால் தங்கள் மீது தாய்க்கு கருணை இருக்கும் என்று நினைத்தவர்கள் இப்போது அவர் இப்படி கூறியதும் பேயறைந்தது போலானார்கள்.

இப்போது காருணிகாவும், வளவனும் வாய் விட்டே நகைத்து விட்டார்கள்.

அவர்களை அடிக்கக் கூட வழி இல்லாமல் இருவரும் கோபித்துக் கொண்டு அறைக்குச் சென்று விட்டனர்.

காருணிகாவிற்கு தங்கைகளின் வருத்தம் என்னவோ செய்ய அவர்களை வெளியே எங்காவது அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தவள் தாயிடம் அனுமதியும் பெற்றாள்.

ஆனால் சென்ற  இடத்தில் அவளுக்கேத் தெரியாமல் ஒரு இனிமையான நிகழ்வு நடந்தது.
                               - தொடரும்

 


ReplyQuoteShalu
(@shalu-shara)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 10
08/05/2020 8:20 am  

அத்தியாயம் 5

காதம்பரியும், சுதாகரியும் தங்களது கைகளைக் கோர்த்துக் கொண்டு முன்னே நடந்து செல்ல அவர்களுக்குப் பின்னால்
காருணிகாவும் , வளவனும் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

பெரிய மாலிற்கு  சென்று அங்கு இருந்த விளையாட்டுப் பிரிவிற்குள் புகுந்தவர்கள் நன்றாக விளையாடினர்..

விளையாடி முடித்ததும் பசி எடுக்கவே அங்கேயே உணவு உண்ண முடிவெடுத்து, அங்கு இருந்த டேபிளின் அருகில் சென்று தத்தமது இருக்கைகளில் இடம் பிடித்துக் கொண்டனர்.

காருணிகாவும் , வளவனும் அருகருகே அமர்ந்து கொள்ள காதம்பரியும் , சுதாகரியும் அவர்களுக்கு நேரெதிரே அமர்ந்து கொண்டனர்.

காருணிகா , " என்ன சாப்பிடறீங்க?
என்று மூவரிடமும் கேட்டாள்.

காதம்பரி , அக்கா எனக்கு பிட்சா வேணும்கா என்று கூற
சுதாகரி ," எனக்கு பிரைடு ரைஸ் வேணும் "  என்று தனக்குப் பிடித்த உணவை கூறினாள்.

" வளவா உனக்கு ? என்றதும்
வளவன் " அக்கா எனக்கு நூடுல்ஸ் போதும் " என்றான்.

காருணிகா தங்கைகள் மற்றும் தம்பிக்கான  உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு தனக்கும் சேர்த்து நூடுல்ஸ் என்று கூறினாள்.

உணவு வரும் வரை காத்திருக்க வேண்டும் ஆதலால் மூவரும் அதற்கு முன்னதாக சூப் வகைகளை ஆர்டர் செய்து குடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது பின்னால் இருந்த டேபிளில் யாரோ இருவர் வந்து அமர்வது போல் அரவம் கேட்க காருணிகா அதை கண்டு கொள்ளவில்லை.

பின்னால் அமர்ந்து இருந்த இரண்டு பேர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான்.

" டேய் மித்ரா என்னடா அன்னைக்குப் பாத்த
பொண்ணைப் பத்தி இவ்ளோ பேசறியே அந்தப் பொண்ண மறுபடியும் பாத்தியா ?
என்று கேட்டான்.
இப்போது மித்ரனின் குரல் காருணிகாவின் செவிகளை வந்தடைய ஆரம்பித்தது.
" இல்லடா தீனா. அந்தப் பொண்ணால ரொம்ப டிஸ்டர்ட் ஆகி இருக்கிறேன்.சில நிமிஷம் தான் அவளோட நான் பேசி இருக்கேன். ஆனா அவ என்ன ரொம்ப பாதிச்சுட்டா.மறுபடியும் அவளப் பாக்கனும்னு தோனுதுடா.பட் எப்படினு தான் தெரியலே. "என்று வருத்தத்துடன் கூறினான்.

காருணிகா அவன் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள்.

" அன்னைக்கு சிக்னல்ல  அவளப் பாக்கும் போதே ஒரு சந்தோஷம்.அவளோட அந்த மலர்ச்சியான முகத்தைப் பார்த்த போது எனக்குள்ள ஒரு துணிவு வந்துச்சு.ஒரு எனர்ஜி வந்துச்சு . அந்த ரெஸ்டாரெண்ட்ல பாத்த அப்போ அவ கண்ணில் தெரிந்த அந்த குறு குறுபார்வை எப்போடா என்மேல  காதல் பார்வையா மாறும். அதுவும் எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும் அவளோட காதல்.
என்று தனது நண்பனிடம் காருணிகாவினால் தன்னிடம் ஏற்பட்ட மாற்றத்தை கூறிக் கொண்டு இருந்தான்.

இதைக் கேட்டுக் கொண்டு இருந்த காருணிகாவின் மனதில்  இனிமையான அதிர்வு ஏற்பட்டது.

தன்னை ஒருநாள் பார்த்து விட்டு தன் மேல் இந்த அளவு காதல் கொண்டுள்ளவனை நினைத்து அவளுக்கு ஆச்சர்யம் தான்.

அந்த ஆச்சர்யம் விரைவில் காதலாக மாறப் போவதை அறியாமல் உணவுண்டு முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

மித்ரனும், தீனாவும் தாமதமாகத்தான் அங்கிருந்து கிளம்பினர்.

உடன்பிறந்தோருடன் வீட்டிற்கு வந்தவள் தாய் தந்தைக்கு வாங்கி வந்த பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தன் அறைக்குச் சென்றாள்.

காதம்பரியும் , சுதாகரியும் வழக்கம் போல் வீடியோ கேம்ஸ் விளையாடலாம் என்று நழுவப் பார்க்க
" அங்கே எங்கப் போறிங்க? ஒழுங்கா இன்றைக்கு ஹோம் முடிச்சுட்டு தான் தூங்கவே போகனும் " என்று அவரது கண் பார்வையில் அவர்களை உட்கார வைத்தார்.

வளவன் ஏற்கனவே வீட்டுப்பாடம் முடித்து விட்டதால் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் அமர்ந்து கொண்டான்.

அறையில் இருந்த காருணிகாவோ ,
மித்ரன் கூறிய வார்த்தைகளையே மனதிற்குள் ஓட விட்டாள்.

அவளுக்கு இப்போதும் புதிரான விஷயம் என்னவென்றால் ஒரே சந்திப்பில்  அவனை எப்படி நாம் அவன் என்மேல் இந்த அளவு  காதல் கொண்டான். என்பது மட்டுமே..

காருணிகா , அப்படி என் மேல் இவ்வளவு லவ் வர்ற அளவுக்கு நான் என்ன செஞ்சேன் ? இதுக்கு உன்னைத் தவிர வேற யாராலும் பதில் சொல்ல முடியாது  அதை நான் விரைவிலேயே உன்னிடம் கேட்பேன் "என்று நினைத்தவள் அவனையே நினைத்துக் கொண்டு உறங்கினாள்.

அடுத்த நாள் காலையில் ,
" அம்மா என் லன்ச் பேக் எங்கே ?  என் யூனிபார்ம்  எங்கே  ? என்று கேட்டுக் கொண்டு இருந்த மகள்களை அதட்டி உருட்டி அனைத்தையும் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தார் .

கோபாலனின் முகம் சற்று களைத்திருந்ததை பார்த்தவர்
" என்னங்க ஆச்சு ரொம்ப டயர்ட் ஆ தெரியுறிங்க ? என்று கனிவுடன் கேட்டார் ஶ்ரீ கீதா.

"லைட்டா பீவர் மா . பேங்க்குக்கு கால் பண்ணி லீவ் சொல்லிட்டேன்.எனக்கு ஒரு காபி மட்டும் கொண்டு வாம்மா. என மனைவியிடம் கூறினார்.

ஶ்ரீ கீதாவும்
" சரி நீங்க போய் ரெஸ்ட் எடுங்க காபி கொண்டு வரேன் என்று கூறிவிட்டு அதை தயார் செய்ய கிளம்பினார்.

காருணிகாவும் , வளவனும் தயாராகி அவர்களும் கல்லூரிக்கும், பள்ளிக்கும் கிளம்பினர்.

தனது நண்பர்கள் அவர்களது வேலைக்குச் சென்று விட்டனர்.தான் மட்டும் அவ்வறையில் இருந்து தனது வேலைக்குக் கிளம்பி கொண்டு இருந்தவன் தனது மொபைல் போனில் வைத்திருந்த ரிங்டோனின் சத்தம் கேட்டதும்
அதை எடுத்துப் பார்த்தான்.

அவனது தாய் மீனாட்சி தான் அழைத்து இருந்தார்.

மித்ரன் அட்டெண்ட் செய்து காதில் வைத்தான்.

"மித்ரா எப்படிப்பா இருக்கே ?"
என்று பாசமாக கேட்டார்.

மித்ரன் ," அம்மா..... நான் சூப்பரா இருக்கேன் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் எனக்கு வேலைக் கிடைச்சுருச்சு. என்று உற்சாகமாக கூறினான்.

அவனது தாயும் மகிழ்ச்சி அடைந்தார்.
"சந்தோஷமா இருக்குப்பா.உங்க அப்பா கிட்டயும் இத சொல்லிடறேன் . அப்பறம் உனக்குப் பொண்ணுப் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நானும் அப்பாவும் முடிவு பண்ணிட்டோம் என்றார்.

மித்ரன் தாய் கூறிய இந்த தகவலை கேட்டவுடன் காருணிகாவைத் தான் நினைத்தான்.

" அம்மா நீங்க ஏன் என் கல்யாணம் செய்து வைக்க  இவ்வளவு அவசரப் பண்றீங்க? என்றான் .

" ஏன்டா எங்களுக்கு உன் கல்யாணத்தை சீக்கிரம் பாக்கனும்னு ஆசை இருக்கக் கூடாதா ?" என்றார்.

மித்ரன் " சரிம்மா நான் கல்யாணம் பண்ணிக்குறேன் ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் இந்த கம்பெனில நல்ல நிலைமைக்கு வந்ததும் கல்யாணம் பண்ணிக்கிறேன் "எனவும்

" நான் இதுக்கு ஓகே சொல்றேன் ஆனா உனக்கு பொண்ணு பாக்குறதை நிறுத்த மாட்டேன் " என்று கூறி வேலையைப் பற்றியும் அவனது இருப்பிடம் பற்றியும் விசாரித்து அது அவனுக்கு சௌகரியமாக இருக்கிறதா என்றும் கேட்டுவிட்டு போனை வைத்தார்.

மித்ரன் தாய் கூறியதை எல்லாம் யோசித்தவன் இதற்கு ஒரே வழி காருணிகாவிடம் தனது காதலை சொல்லி
அவளிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று முடிவுடன் அவளைப் பார்க்கச் சென்றான்.

ஆனால் அவளைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாதல்லவா..! இருந்தாலும் குருட்டு தைரியத்தில் அவளைத் தேடத் தொடங்கினான்.

தனது கல்லூரிக்கு நேரம் ஆனதால் வேக நடைப் போட்டு சென்று கொண்டு இருந்தவள் மித்ரனின் பார்வைக்குக் கிடைத்தாள்.

முகத்தில் தெரிந்த பரபரப்பையும் மீறி அவளது தெளிந்த வதனம் அவனைப் பித்துக் கொள்ளச் செய்தது.

அவளிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு விசை உள்ளது. அதுவும் அவள் தனக்கானவள்  என்பதை அந்த ஈர்ப்பு விசையின் மூலம் அறிந்து கெண்டவன் அடுத்த நொடி அவளின் முன்னால் போய் நின்றான் .

                                           - தொடரும்

 


ReplyQuote
Shalu
(@shalu-shara)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 10
11/05/2020 2:16 pm  

அத்தியாயம் 6

தன் முன்னால் வழிமறித்து நின்ற மித்ரனை விழி விரியப் பார்த்தாள் காருணிகா...

அவனோ வேகமாக நடந்ததால் அவளது முகத்தில் முத்து முத்தாய் படிந்திருந்த வியர்வையில் கூட அவன் கண்களுக்கு அழகாக தெரிந்தாள்.

அவளையே பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தவனை " ஹலோ வழியை விடுங்க " என்றாள் மிரட்டும் குரலில்...

அதைப் பார்த்து மேலும் ரசித்தவன் " உங்கிட்ட கொஞ்சம் பேசனும் " என்றான் சாதாரணமாக...

அதற்கு காருணிகா " ஆமா யார் நீங்க ? திடீர்னு இப்படி வழி மறிச்சு வந்து என்கிட்ட பேசனும்னு சொல்றிங்க... யாராவது பாத்த என்ன தான் தப்பா நினைப்பாங்க " என்று பொரிய ஆரம்பித்தாள்.

மித்ரன் துளியும் சட்டை செய்யாமல் " சரி அப்போ வா அந்த மரத்து நிழல்ல நின்னுப் பேசலாம்... உனக்கும் காலேஜூக்கு டைம் ஆச்சுல்ல.. " என்றான்...

காருணிகாவிற்கு காதில் புகை வராத  குறைதான்...
" என்ன நானும் சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு அதைக் காதுலயே வாங்காம ஏதேதோ பேசற ?" என்று திட்ட ஆரம்பித்தாள்.

மித்ரன் " காருணிகா நீ வந்து என்கூட ஒரு பைவ் மினிட்ஸ் பேசினாப் போதும்.. அத விட்டுட்டு நீ என்னத் திட்டிட்டு இருந்தா உனக்கு தான் காலேஜூக்கு லேட் ஆகும் பரவாயில்லனா.. திட்டு " என்று கைகளைக் கட்டிக் கொண்டு அவளை ஏறிட்டான்.

அவளும் அவன் கூறியதில் இருந்த நிதர்சனத்தை உணர்ந்தவள் " சரி வாங்க  " என்று மரத்தின் அருகில் சென்றாள்.

காருணிகா அவனைக் கேள்வியாய்ப் பார்த்தாள்.. அதை புரிந்து கொண்டவன்
" நாம ஒரு தடவை மீட் பண்ணி இருக்கோம் ஞாபகம் இருக்கா...?" என்று அவளையேக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

காருணிகா அவன் கேட்டதும் சிறிதும் யோசிக்காமல் " மீட் பண்ணோமா? சாரி மறந்து போச்சு... " என்றாள்.

அவளது இந்த வெடுக்கென்ற பதிலாள் முகம் சுருங்கினாலும் உடனே சமாளித்துக் கொணடவன் " ஓஓ சாரி உங்கள  டிஸ்டர்ப் பண்ணதுக்கு.. உங்களுக்கு காலேஜூக்கு டைம் ஆச்சு.. போங்க " என்று அவளிடம் கூறியவன் அதற்கு அங்கு நிற்கப் பிடிக்காமல் வந்தவழியே திரும்பி சென்றான்..

இதில் திகைத்து நின்றவள் , ச்ச... மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டோமே... அவனப் பாத்தா தப்பான பையன் மாதிரி தெரில.. ஆனாலும் ஏன் அப்படி சொன்னோம்... அவன் நம்மள எவ்ளோ லவ் பண்றான்னு அவன் வாயால சொன்னத நாமக் கேட்டோமே ..  என்று சிந்தித்தவாறே கல்லூரி நோக்கி நடந்தாள்.

அன்றைய நாள் முழுவதும் மித்ரனின் நினைவு மட்டுமே அவளுக்கு இருந்தது... பாடத்தில் கவனம் செலுத்தவே முடியவில்லை.. தோழியருடன் கூட அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லை...

கடைசியாக அவனது சோக முகம் அவளுக்கு ஞாபகம் வந்து கொண்டு அவளது மனதைப் படுத்தி எடுத்திக் கொண்டு இருந்தது.

அவன் என்ன கூற வந்தான் ? என்று கூட கேட்காமல் திட்டி போக வைத்த தனது முட்டாள் தனத்தை எண்ணி அவளுக்கே கோபம் வந்தது .

ஒருவேளை அவனது காதலைத் தெரிவிக்க வந்திருப்பானோ ? என்று நினைத்தாள்...

அவனது கண்களில் பொய் இல்லை.. அவளது கண்களைப் பார்த்துப் பேசிய அவனது கண்ணியம் அவளை வெகுவாக ஈர்த்தது.

தள்ளி நின்று பேசிய சுபாவமும் அவளுக்குப் பிடித்துத் தான் போனது.. ஆனால் இவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்த காருணிகாவிற்கு அவனது மேல் காதல் வந்ததா ? என்றால் அவளது பதில் தெரியவில்லை என்பது தான்...

பார்த்தவுடன் காதலா ?... அவனை எளிதில் நம்பலாமா ? வேண்டாமா ? என்று மனதில் பட்டிமன்றம் நடத்திப் பார்த்தாள்...

இதை இப்படியே விட்டு வைப்போம்.. அவனை என்றைக்காவது சந்தித்தால் அப்போதும் அவனது சுபாவம் இது என்றால் அப்போது யோசித்துக் கொள்ளலாம் என்று கல்லூரி முடிந்து வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

வீட்டினுள் வழக்கம் போல் இரு தங்கைகளின் கூச்சல் தான் அதிகயாய் கேட்டது.. இடையில் தாயின் கண்டிப்புக் குரலும் கேட்டது...

" அம்மா.. இவ என்ன இன்னைக்கும் மாட்டி விட்டுட்டாம்மா.. "என்று சுதாகரி வழக்கம் போல் அக்காவைப் பற்றி புகார் வாசித்தாள்...

காதம்பரி , அம்மா நானா போய் அவளோட மிஸ்கிட்ட மாட்டி விடல.. அவங்க மிஸ் தான் இன்னைக்கும் என்ன கூப்பிட்டு கேட்டாங்க.. நான் ஆமான்னு சொன்னேன் இதுல என்மேல எந்த தப்பும் இல்ல... இதுக்கு தான் எங்க ரெண்டு பேரையும் ஒரே ஸ்கூல்ல சேக்காதீங்னு சொன்னேன் கேட்டிங்களா " என்று தாயை குற்றம் கூறினாள்.

ஶ்ரீ கீதா " கத்தாதீங்கனு இப்போதான் சொன்னேன் அப்பா ரூம்ல தூங்கிட்டு இருக்காரு.. அவர் வந்து திட்டுனா தான் அடங்குவிங்களா ?" என்று கேட்டார்..

அப்பா என்றதும் அவர்கள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்..

காருணிகா வீட்டிற்குள் நுழைந்தவள் இந்த களேபரத்திலும் வளவன் அவன் பாட்டிற்கு ஹோம் வொர்க் செய்து கொண்டு இருந்ததைத் தான் பார்த்தாள்.

" வளவா.. வீட்ல ஒரு பிரளயமே நடந்துட்டு இருக்கு.. அது எதையும் கண்டுக்காம நீ ஹோம் வொர்க் பண்ணிட்டு இருக்க...உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா  " என்று கேட்டவாறு வந்தாள்.

வளவன் , இது டெய்லியும் நடக்குறது தானேக்கா... எனக்கே போர் அடிக்குது.. என்றான்..

அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தனர் காதம்பரியும் , சுதாகரியும்..

அவளது பேச்சுக்குரல் கேட்டதும் கையில் காபியுடன் வந்தார் ஶ்ரீகீதா..

அதைப் பார்த்ததும் கை, முகம் கழுவி விட்டு காபியை எடுத்துக் கொண்டாள்.

"அப்பா எங்கம்மா.. இன்னும் வொர்க் முடியலயா ?" என்று கேட்டவளிடம்

" அவர் ஆபிஸ் போகலடி... காய்ச்சல் அதுதான் லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்குறாரு.. " என்று கூறினார்.

" அச்சச்சோ... இப்போ காய்ச்சல் குறைஞ்சுருச்சா.. ?"
என்று  விசாரித்தாள்.

ஶ்ரீகீதா "இப்போ கொஞ்சம் பரவாயில்லை.. நாளைக்கு ஆபீஸூக்கு கிளம்பிருவாரு என்று கூறியதும் ,

" சரிம்மா என்று அவளது அறைக்குச் சென்று உடை மாற்றியவள் அங்கேயே அன்றைய பாடத்தை எடுத்து மேலோட்டமாக பார்க்க ஆரம்பித்தாள்...

ஆனால்  மித்ரனுடனான காலையில் நடந்த  சந்திப்பு அவளது கவனத்தை மீண்டும்  சிதறடித்தது...

புத்தகத்தில் மனம் போகவில்லை.. அப்படியே மூடி  வைத்தவள் மித்ரன் கூற வந்ததை செவி மடுத்திருக்கலாமோ ?" என்ற நினைப்பும் அவளைத் தொற்றிக் கொண்டது.

மித்ரனுக்கோ காருணிகா முகத்தில் அடித்தாற் போல் பேசியது நினைத்து வருத்தமாக இருந்தது...

ஆனாலும் ஒரு நாள் மட்டுமே யதேச்சையாக சந்தித்தப் பெண்ணைத் தனியாக அழைத்துப் பேசுவது என்பது அநாகரிகமாக தோன்றியது அவனுக்கு...

அது தன் தவறு தான்.. காருணிகா பேசியது சரியே என்று நினைத்தாலும் அவனது காதல் அப்படியே தான் இருந்தது...

அவனது அருகில் வந்த அவனது நண்பன் நிவாஸ் " டேய் மச்சி என்னடா ஏதோ யோசனை பண்ணிட்டு இருக்க ?" என்று கேட்டான்.

மித்ரன் "ஒன்னும் இல்லடா... வேலைரைப் பத்திதான் யோசிச்சுட்டு இருந்தேன் "

" ஏன் வேலைக்கு என்ன  ?" என்று நிவாஸ் கேட்டான்.

" கஷ்டமா இருக்குடா" என்றான்..

" பர்ஸ்ட் அப்படிதான்டா இருக்கும் போகப்போக ஈசியா தெரியும்... அது பத்தி கவலைப்படாம வந்து சாப்பிடு வா.. " என்று
நண்பனை அழைத்தான்..

அவனும் சாப்பிட சென்றான்... அங்கு மற்ற மூவரும் " என்னடா இரண்டு பேரும் ரகசியம் பேசிட்டு வர்றீங்களா ?" என்க...

மித்ரன் " இல்லடா சும்மா தான்.. என்று உண்ண ஆரம்பித்தான்.

ராகேஷைப் பார்த்து
" டேய் நீயாடா சட்னி அரைச்சது.. இவ்ளோ டேஸ்ட்டா இருக்கு... " என்று பாராட்டினான்.. அதில் உச்சிக் குளிர்ந்தவன்
" ஆமாடா.. அம்மா தான் ரெசிபி சொன்னாங்க... இனிமே பாரு சமையல்ல தூற் கிளப்பிடலாம்.. "
என்றான் ராகேஷ்..

அதைக்கேட்ட விஷ்னுவும்,தயாவும்
" டேய் தூள் லாம் போடாதீங்கடா அப்பறம் தும்மல் தான் வரும்.. என்றார்கள்..

உடனே நிவாஸ் தலையில் அடித்து விட்டு
"அடேய் கோபம் வர்றா மாதிரி காமெடி பண்ணாதீங்கடா.. ஒழுங்கா சாப்பிடுங்க.. ". என்று அவர்களை அதட்டினான்...

இவ்வாறாக இரவு நேரம் கழிய மித்ரன் தான் அடுத்து எப்போதும் காருணிகாவைப் பார்க்கக் கூடாது என்று நினைத்து இருந்தான்...

ஆனால் அவனது எண்ணத்தை மாற்றும் வகையில் நடந்தது அடுத்த சம்பவம்...

- தொடரும்...

 


ReplyQuote
Shalu
(@shalu-shara)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 10
22/05/2020 8:19 pm  

அத்தியாயம்  7

அடுத்த நாள் மித்ரனிடம் வந்த நிவாஸ் ," டேய் இன்னைக்கு எனக்கு லீவ் தான்... சோ நான் லன்ச் செஞசுக்குறேன்.. அப்போ வைக்குற குழம்பையே டின்னருக்கு வச்சுப்போம். " என்று அவனிடம் தெரிவித்தான்.

" ஓகே மச்சி.. அவனுங்க எங்க ?"என்று சட்டைக் கையின் பட்டனை போட்டுக் கொண்டே கேட்டான்.

" அவனுங்களுக்கு நெக்ஸ்ட் வீக் புது ப்ராஜெக்ட் ஸ்டார்ட் ஆகுதாம் அதுதான் அதப் பத்தி டிஸ்கஸ் பண்ணனுன்னு சீக்கிரம் வர செல்லிட்டாங்க.. நீ வா ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம் " தான் அழைக்காவிட்டால் நண்பன் காலை உணவைத் தவிர்த்து விடுவான் என்று அவன் கிளம்பும் நேரத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்னரே அனைத்தையும் தயார் செய்து விட்டான்.

"அவனுங்க மூனு பேரும் சாப்பிட்டானுகளாடா ?"என்றவாறே தனது தட்டில் இட்லியை வைத்துக்கொண்டு அதில் சட்னியை ஊற்றினான்.

" கேன்டின்ல சாப்பிட்டுக்கிறேன்னு சொன்னானுங்கடா " என்று அவனது அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

மித்ரன் சாப்பிட்டு முடித்ததும் ,
" டேய் அம்மா எனக்கும் போன் பண்ணாங்கடா ?"என்றதும் நிவாஸை கேள்வியாய்ப் பார்த்தான்.

" நீ ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற உண்மைலயே வேலை விஷயமாவா இல்ல லவ் பண்றியானு கேட்டாங்கடா " என்றான் நிவாஸ்..

அதைக் கேட்டதும் மித்ரனுக்கு காருணிகாவின் ஞாபகம் தான் வந்தது.
சடுதியில் தலையை உலுக்கி அதை மறக்கடிக்க முயன்றவன் " இல்லடா அப்படி எதுவும் இல்ல... வேலை விஷயம் தான்னு சொல்லிடு "

" அம்மாகிட்ட வேணும்னா இந்தப் பொய்யை சொல்லிடறேன்.. நீ எங்கிட்ட உண்மைய சொல்லு இப்போ " என்று மித்ரனை கூர்மையான பார்வை பார்த்தான்.

நண்பனிடம் உண்மையை மறைக்க முடியாது என்று உணர்ந்து கொண்டவன்
" லவ் தான்டா பட் அவளுக்கு என்ன பிடிக்கலனு நினைக்குறேன் " என்று தான் அவளிடம் பேசச் செல்லும் போது நடந்த உரையாடலையும் அவளது செய்கையையும் நண்பனிடம் கூறி முடித்தான் .

மித்ரன் கூறியதை கவனமாக கேட்ட நிவாஸ் ," ஏன்டா பாத்த ஒரே நாள்ல லவ்வானு அவளுக்கு குழப்பமே வந்து இருக்கும்.. பர்ஸ்ட் அத தெளிய வை.. ஏன்னா கண்டதும் காதல்ல அவளுக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம் " என்று புரியும்படி அறிவுரை அளித்தான்.

நிவாஸின் அறிவுரையில் சற்றுத் தெளிவு பெற்றவன் இப்போது உற்சாகமாக ," நான் மறுபடியும் அவள மீட் பண்ணுனா அவளுக்கு என் லவ்வ சொல்லிப் புரிய வைக்க முடியுமாடா ?" என்று நிவாஸிடம் கேட்டான்.

" அதத் தானடா சொல்லிட்டு இருக்கேன் " என்று அவனிடம் இன்னும் பல அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தான் .

மித்ரனும் பைக்கில் ஏறி அமர்ந்து அலுவலகம் நோக்கி விரைந்தான்.

அந்த நேரத்தில் காருணிகா தனது தோள் பையில் இருந்து எதையோத் தேடிக் கொண்டே நடந்து வந்து கொண்டு இருந்தாள்.

அதனால் அவள் எதிரில் வந்த காரைப் பார்க்கவில்லை..ஆனால் மித்ரன் பார்த்து விட்டான்.

சிறிதும் தாமதிக்காமல் காருணிகாவை அக்காரில் அடிபடாமல் இழுத்து அணைத்துக் கொண்டான்.

திடீரென்று நிகழ்ந்த இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தவள் மித்ரனின் அணைப்பு இன்னும் அவளை நடுங்க வைத்தது.

மித்ரன் அவளது நடுக்கத்தைக் குறைக்க எண்ணி அவளது தலையை வருடினான்.

அதில் நடுக்கம் குறைந்தது காருணிகாவிற்கு.. ஆனால் அவனது அணைப்பு அவளுக்கு இனம் புரியாத அழகான உணர்வை கொடுத்தது.

அவனின் அணைப்பில் மித்ரனுக்கு அவள் மீதான அக்கறை இருந்தது...அதை காருணிகாவால் உணர முடிந்தது....

சில நொடிகள் கழித்து அவளைத் தனது அணைப்பில் இருந்து விடுவித்தவன் ,
" என்னம்மா நீ இவ்ளோ அஜாக்கரதையாவா இருப்ப.. அந்த கார் மட்டும் உன்ன இடிச்சு இருந்துச்சு.. அவ்ளோதான்.. இனிமே கவனமா இருக்கனும் ... நானே உன்ன காலேஜ்ல ட்ராப் பண்ணவா ?" என்று அவளது முகம் பார்த்துக் கேட்டான்..

காருணிகா அவனது கண்களை சில கணங்கள் பார்த்தவள் ,
" இல்ல வேணாம்.. காலேஜ் பக்கம் தான்.. பைவ் மினிட்ஸ்ல போய்டுவேன் தாங்க்ஸ்.. " என்றவள் அவனை நிமிர்ந்து பாராமலேயே அவனைத் தாண்டிச் சென்றாள்..

மித்ரனுக்கு முன்னால் நடந்து சென்றதால் அவளது புன்னகை நிறைந்த முகத்தை அவனால் பார்க்க முடியாமல் போயிற்று..

- தொடரும்

 


ReplyQuote
Shalu
(@shalu-shara)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 10
02/06/2020 7:20 pm  

அத்தியாயம் 8

மித்ரன் அவளது அழகு முகத்தை இன்றும் பார்த்து விட்டு ஆபிஸிற்கு செல்வதால் உற்சாகமாகவே இருந்தான்..

காருணிகாவினைத் தான் அணைத்தவுடன் அவள் நடுங்கினாளேத் தவிர , பயத்தில் அவனை விட்டு விலகவில்லை. 

அப்படி என்றால் அவனது அணைப்பு அவளுக்கு 

அருவருப்பாக இல்லை..  

 

அவன் தலையைத் தடவிக் கொடுத்ததும் அவனுள் புதைந்து கொண்டாளே.. அதற்கு பெயர் காதலில்லாமல் வேறு எதுவும் இல்லையே.. 

 

இப்போது மித்ரனுக்கு சிறிது நம்பிக்கை உண்டானது. காருணிகா தன்னை காதலிப்பாள் என்பது உறுதி ஆயிற்று .. மகிழ்ச்சியாக ஆபிஸிற்கு சென்றான்.

 

வழக்கம் போல் வகுப்பறைக்குள் நுழைந்த காருணிகாவின் முகத்தில் இருந்த பிரகாசம் தோழி தமயந்திக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.

 

" என்னடி இன்னைக்கு உன் முகத்துல ஒரு தேஜஸ் தெரியுது ? என்ன ஹாப்பி நியூஸ்னு சொல்லு ?" என்று அவளிடம் வினவினாள்.

 

அவள் அப்படிக் கேட்டதும் தான் காருணிகாவிற்கு தான் இன்று அதிகப்படியான சந்தோஷத்தில் இருக்கிறோம் என்று தெரிந்தது.

தமயந்தியிடம் "ஹேப்பி நியூஸ்லாம் ஒன்னும் இல்ல.. என்னனு தெரில.. ரொம்ப ப்ரஷ்ஷா ஃபீல் பண்றேன் " என்று அவளிடம் கூறினாள்.

 

தமயந்தி " ஓ. புரிஞ்சுருச்சு.. நம்ம பி . எஸ் மேம் வரல அதத் தெரிஞ்சுட்டு தான இவ்ளோ ஹேப்பியா இருக்க "என்று அவளாகவே தோழியின் சந்தோஷத்திற்குக் காரணம் இதுதான் என்று கணித்து விட்டாள்.

 

அது தவறு என்று கூறாமல் காருணிகாவும் ,

"ஆமாம்டி… ஸ்டாப் ரூம் க்ராஸ் பண்ணிதான வந்தேன் .. அங்க மேம் பேசிட்டு இருந்தத கேட்டேன்.. விஷயம் தெரிஞ்சுருச்சு செம்ம ஹாப்பியா இருக்கு.. " என்றவாறு தோழியிடம் உண்மையைக் கூறாமல் சமாளித்து விட்டாள்.

 

அதன் பிறகும் தமயந்திக்கு சந்தேகம் வராமல் போகவே காருணிகா அவளிடம் இருந்து தப்பித்து விட்டோம் என்று நிம்மதியாக இருந்தாள்.

 

ஒரு பாட ஆசிரியை வராததால் கேன்டினில் தோழிகள் படையெடுத்துக் சென்றனர்.. அனைவரும் தங்களுக்கு வேண்டிய நொறுக்குத் தீனிகளை வாங்கியவர்கள் தக்க இடம் பார்த்து அங்கு அமர்ந்தனர்.

 

அப்போது அவர்களது தோழி ஒருத்தி ,

"நேத்து எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு தீபா  இருக்காள்ல.. அவ திடிர்னு யாரோ ஒரு பையன மேரேஜ் பண்ணிட்டு வந்து நின்னாளாம்..அவங்க பேரண்ட்ஸூக்கு செம்ம ஷாக்கு… ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ளயே சேர்க்கல.. வெளிய அனுப்பி விட்டுட்டாங்க.. " என முந்தைய நாள் தனது வீட்டின் அருகில் நடந்த நிகழ்வைக் கூறினாள்.

 

தமயந்தி " ஆமாம் இப்போல்லாம் லவ் பண்ணி வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிடறாங்க.. அப்பறம் கொஞ்ச நாள் ஆனா அவங்களே சேர்த்துக்குவாங்கனு கொஞ்சம் பேர் இப்படி தான் பண்றாங்க. வீட்ல எடுத்து சொல்லிப் புரிய வைக்கலாம்ல.. "என்று தான் நினைத்ததைக் கூறினாள்.

 

காருணிகா "லவ் பண்றது தப்பே இல்ல.. ஆனா வீட்ல முடிஞ்ச அளவுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைச்சு பேரண்ட்ஸ் சப்போர்ட்டோட லவ் பண்றவங்களும் இருக்காங்க.. நல்ல நிலமைக்கு வந்துட்டு அப்பறம் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இருக்கவங்களும் அதிகம் தான்.. "என்று தனது மனதில் தோன்றியதையும் மறுக்காமல் கூறினாள்.

 

தமயந்தி "நீ சொல்றதும் கரெக்ட் தான் காருணிகா… " என்று அவளை ஆமோதித்தாள்… 

 

ஆனால் காருணிகாவிற்கு , இதில் மித்ரன் எந்த வகையில் சேருவான் ? என்று கேள்வி எழுந்தது. இருவரும் விரும்ப ஆரம்பித்தப் பிறகு வீட்டில் கூறாமல் திருமணம் செய்து கொள்ளலாம் .. பிறகு அவர்களை சமாதானப்படுத்தலாம் என்று முடிவெடுத்து விட்டாள் என் செய்வாள் அவள்… அப்போது அவளது தாய் , தந்தை தான் நினைவில் வந்து போயினர்… 

 

இவர்களிடம் பொய் சொல்லி திருமணம் செய்வதா ????எனத் தோன்றிற்று அவளுக்கு.. ஆனாலும் மித்ரனின் காதலையும் உதற முடியவில்லை…

 

இந்த நேரத்தில் தான் மித்ரனின் தாய் மீனாட்சி அவனது கணவரும் , மித்ரனின் தந்தையுமான கிருஷ்ணனிடம் அவன் கூறியதை அப்படியே வார்த்தைப் பிறழாமல் கூறினார்.

 

கிருஷ்ணன் " அவன் இப்போ தானே வேலையிலயே சேந்து இருக்கான்.. எப்போ அதுல நல்ல பொசிஷன்ல வருவான்.. நம்ம எப்போ அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறது.. உடனே அவன வர சொல்லு.. மித்ரன்கிட்ட நான் பேசறேன் "என்று மனைவிக்கு கட்டளை பிறப்பித்து விட்டு தனது கம்பெனிக்குச் சென்றார்.

 

- தொடரும்..


ReplyQuoteShalu
(@shalu-shara)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 10
15/06/2020 10:52 pm  

அத்தியாயம் 9

மித்ரன் தனது அலுவலகத்தில் வேலைகளை செய்தவாறே இருக்க மனம் தனது மனம் கவர்ந்தவளை நினைத்துப் பார்த்தது.

 

காருணிகாவை நினைத்தாலே அவனுக்கு புதுவித உற்சாகம் பிறப்பதை அவனால் உணர முடிகிறது.

 

அவளுடைய அந்த பளிங்கு முகம் பூவாற் புன்னகைக்கும் போது அவனுக்கு அதில் தொலைந்து போய்விட வேண்டும் என்று தோன்றியது.

 

காதலைச் சொல்லும் முன்னரே அவள் மேல் தான் கொண்ட இந்த அளவில்லா அன்பை நினைத்தால் அவனுக்கே வித்தியாசமாக இருந்தது.

 

அப்போது அவனது மொபைல் ஒலிக்க அதில் தனதா தாய் அழைப்பது தெரிய அட்டெண்ட் செய்து பேசினான்.

 

"ஹலோ அம்மா.." என்று உற்சாகமாக பேசினான்.

 

" வேலைல இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல சாரிப்பா " என்று வருந்தினார்.

 

மித்ரன் " அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. நீங்க சொல்லுங்க என்ன விஷயம் ?" என்று கேட்டான்.

 

" அது உன் கல்யாணம் விஷயமா உங்க அப்பா பேசனுமாம் நீ ஃப்ரீயா இருக்கும் போது அவருக்கு கால் பண்றியாப்பா ?" என்று எதிர்பார்ப்புடன் கேட்டார்.

 

தனது திருமணம் பற்றி பேச தந்தை கேட்கிறார் என்றால் அவனுக்கு திருமணம் ஆவது உறுதி என்பது அவனுக்குத் தெரிந்தது தான்.

 

ஏனெனில் அவனது தந்தை சற்று பிடிவாதமானவர்.. 

" ம் சரிம்மா நான் நைட் கால் பண்ணிப் பேசறேன் .. " என்றதும் 

" சரிப்பா நீ வேலை பாரு நான் உங்க அப்பாகிட்ட சொல்லிடறேன் " என்று கூறிவிட்டு வைத்தார்.

 

தந்தையிடம் தனது காதல் விஷயத்தைக் கூறலாமா ? வேண்டாமா ? என்று மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டவன் கூறி விடலாம் என ஒரு வழியாய் முடிவெடுத்து விட்டான்.

 

காருணிகா கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தவள் வீடே அமைதியாக இருந்தது கண்டு ஒரு கணம் திகைத்து விட்டாள்.

 

" நம்ம வீடா இது ?" என்று உள்ளே வந்தவளை வரவேற்றது.யாருமில்லாத ஹால் தான்..

 

" அமமா என்றவாறு சமையலறைக்குள் வந்தாள்.

 

அங்கு மாலை சிற்றுண்டி தயாரித்துக் கொண்டு இருந்த ஶ்ரீகீதா " ம்  வா காருணிகா.. காலேஜ் இப்போதான் முடிஞ்சுச்சா ?" என்று மகளிடம் கேள்வி கேட்டவாறே அவளுக்காக காபி தயாரிக்க ஆரம்பித்தார்.

 

காருணிகா " ஆமாம்மா..அப்பறம் வீடு ஏன் இவ்ளோ அமைதியா இருக்கு.. யாரும் வீட்ல இல்லயா ?" என்று சுற்றும் முற்றும் தேடியவாறே கேட்டாள்.

 

" எல்லாரும் வீட்லதான் இருக்காங்க .. உங்க அப்பாவுக்கு பீவர் கொறைஞ்சு இருக்கு.. ஆனா தலைவலி விட்டபாடில்லை.. இவங்க வழக்கம் போல டிவிய சத்தமாப் போட்டுட்டு கேம் விளையாண்டுட்டு இருந்துதுங்க.. அதுதான் கத்திட்டாரு.. ரூமுக்கு போய்ட்டாங்க. வளவன் ஸ்பெஷல் க்ளாஸ் முடிஞ்சு இன்னும் வரல. " என்று கூறிவிட்டு அவளிடம் காபிக் கோப்பையைக் கொடுத்தார்.

 

இவளும் கைகளைக் கழுவிக் கொண்டு அந்த காபியை வாங்கியவள் தங்கைகள் அறைக்குச் சென்றாள்

அங்கு உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டு இருந்த தங்கைகளைப் பார்க்கும் போது இவளுக்கு சிரிப்பு பீறிட்டது.

 

ஹா ஹா.. என்று வாய்விட்டே சிரித்து விட்டாள்.. அவளை முறைத்த சின்ன தங்கைகள் " அக்கா சிரிக்காத.. " என்று அவளை மிரட்டினர்.

 

அவளும் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு 

" ஓகே ஓகே சிரிக்கல.. எக்ஸாம் ஆ படிங்க.. படிங்க " என்று தங்கைகளைத் தொந்தரவு செய்யாமல் தனது அறைக்குச் சென்றாள்.

 

அவளுக்கு இன்றைய நிகழ்வும் கல்லூரியில் தோழிகளுடனான உரையாடலும் மனதிற்குள் வந்து போனது.

 

மித்ரனிடம் இது பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தனது அன்றாட வெலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

 

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மித்ரன் மாகம் கழுவி உடை மாற்றி விட்டு தனது மொபைலில் 

தந்தைக்கு அழைப்பு விடுத்தான்.

கிருஷ்ணன் அதை அட்டெண்ட் செய்து

" ஹலோ. என்றார்.

 

" அப்பா.. என்கிட்ட பேசனும்னு கால் பண்ண சொன்னதா அம்மா சொன்னாங்க.. என்ன விஷயம் ?" என்று தந்தை கூறப்போகும் விஷயம் என்னவென்று தெரிந்தாலும் தெரியாதது போல் கேட்டான்.

" அதுதான் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டியே  எப்போ கல்யாணம் பண்ணிக்கறதா நினைச்சுருக்க?" என்று கேட்டார்.

 

தந்தையின் இந்த தடாலடியான கேள்வியில் சற்று திணறினாலும் சமாளித்துக் கொண்டு

" ஒரு வருஷம் போகட்டும்ப்பா.. நானே உங்ககிட்ட வந்து என் கல்யாணத்தப் பத்திப் பேசறேன் " என்றான் உறுதியாக.

 

அந்த உறுதி கிருஷ்ணனுக்கு புரிந்தது.. மகன் கூறுவது போல் காத்திருப்போம் என்று அவரும் சரி என கூறினார்.

 

அடுத்த நாள் காருணிகாவிடம் தனது காதலைத் தெரிவிக்க எண்ணி அவள் அன்றாடம் வரும் வழியில் அவளுக்கு முன்னாலேயே போய் காத்திருந்தான் மித்ரன்.

- தொடரும்


ReplyQuote
Share: