Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

எரிமலை எப்படி.....!  

  RSS

ravishankarq
(@ravishankarq)
New Member Registered
Joined: 1 month ago
Posts: 2
14/10/2020 4:49 pm  

எரிமலை எப்படி….!

---சௌந்த்ரா ரவி

 

(முன் குறிப்பு: இந்த கதையை உணர்ந்து கொள்ள நாற்பது நாற்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் எங்கள் கல்லூரியில் நடைபெற்ற சில நிகழ்வுகளுடன் கற்பனையையும் சேர்த்து புனையபட்ட ஒரு நவீனம்)

 

 

அத்தியாயம் 1

அந்த திருமணத்தில் பெரிய வீட்டுத்திருமணங்களில் காணப்படும் அர்த்தமில்லாத அசட்டுத்தனங்கள் நிறைந்திருந்தன. ஆழமில்லாத வேடிக்கைகளும் கலந்திருந்தன. ஆமாம். அது சேலம் நகரித்திலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய  பெரிய மனிதர்களில் ஒருவர் வீட்டு திருமணம்தான். பிரபல தொழிலதிபரும் “எஸ்வி இண்டஸ்ட்ரீஸ்” நிறுவனருமான சுகவனேஸ்வரரின் மகளது திருமணம்.

சிரிப்பு முகமூடி போட்டுக்கொண்டு, தனது தொழில்முறை நண்பர்களை. நண்பர்களா, அல்லது போட்டித்தொழில் நடத்துபவர்களா, அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருக்கும் சுகவனேஸ்வர் ஒருபுறம். பிள்ளை வீட்டுக்காரரா, பெண்வீட்டுக்காரரா என்று பிரித்து பார்க்க முடியாதபடி, மணமகனின் அம்மா, அதே சமயத்தில் சுகவனேஸ்வரரின் தமக்கை, விழாவிற்கு வந்திருந்த பெண்களை வரவேற்றுகொண்டிருப்பது மறுபுறம். மணமேடையில் ஒருபுறம் புரோகிதர்களும், மறுபுறம் இயக்கத்தலைவர்களும் அம்ர்ந்திருக்கும் அரிய காட்சி. மந்திரங்கள் வாழ்த்துரைகள் என்ற ஒலிகளின் இடையில் 25 வயதான ராஜேஷ், 22 வயதான கலாவை தனது மனைவியாக்கிக் கொண்டான்.

‘ தம்பி என்னோட பையன் உன்னிடமே வளர்ந்தவன். உன்னுடைய மாப்பிள்ளை என்பதைவிட உன்னுடைய மகன் என்றே நீ எண்ண வேண்டும்.’

‘ என்னிடம் வளர்ந்தவன் என்று சொன்னது தப்பு. அவன் இந்த ஊர்ல வள்ர்ந்தான். அவனை யாராவது வளர்த்தாங்கன்னு சொன்னாகூட அவனுக்கு பிடிக்காது. அவனேதான் வளர்ந்தான்’ என்று பதில் சொன்னார் சுகவனேஸ்வர்.

‘என்ன இருந்தாலும் அவன் உன் கம்பெனில வேலை பாக்கறானில்லே!

‘இன் ஜீனிரிங்க் படிச்ச அவனுக்கு சேலத்திலயா வேலை கிடைக்கறதா கஷ்டம். நான் இல்லேன்னா எத்தனையோ பேர்’ அவருடைய வார்த்தைகளில் முழுமையான மகிழ்ச்சி இருந்த்தாக சொல்ல முடியாது.

‘இருந்தாலும் சொல்றேன் அவனுக்கு நீதான், உனக்கு அவந்தான் எல்லாம்’

‘அப்படி ஒரேடியா சொல்லிடாதே. எனக்கு இன்னொரு பொண்ணும் இருக்கா. அவளுக்கும் கல்யாணமாகும். எனக்கு இன்னொரு மாப்பிள்லையும் கிடைப்பார்.

அந்த இன்னொரு பெண் !

‘ஏய் அமரா, உன்னைதாண்டி சீக்கிரம் இங்கவாடி’ மாடியில் உள்ள அறையில் குமரிபெண்களின் கும்மாளம்.

‘ என்னடி! கேட்டுக்கொண்டே வந்த அமரா அழகாகவே இருந்தாள். வயதில் அக்கா கலாவிற்கு இளையவளாக இருந்தாலும், அழகில் அவளுக்கு சற்றும் குறையாமலே இருந்தாள்.

அதற்குள் மற்றொருபெண்,’ ஏய் உனக்கு லைன் கிளியர் ஆயிடிச்சி நீதான் இனிமே கதாநாயகி. அதனாலே எங்களுக்கு ட்ரீட் தரனும். நாமெல்லாம் இன்னிக்கி ஃப்ர்ஸ்ட் ஷோ போறோம்.’

‘என்ன விளையாடரீங்களா. இன்னிக்கு எப்படி போகமுடியும். இங்க வேலை இருக்குமேடி’

‘என்னடி பெரி…ய்ய வேலை. உனக்கா கல்யாணம் ஆச்சி, உங்க அக்காக்கு தானே. அதெல்லாம் எனக்கு தெரியாது நாமெல்லாம் இங்கிருந்து கிளம்பி சினிமாக்கு போறோம்.

‘இருநாலும் சாயங்காலம் நான் இங்கிருந்தா நல்லாயிருக்குமேன்னு பார்த்தேன். அப்பா ஒருத்தரா எப்படி சாமளிக்க முடியும் எவ்வளவு வேலை செய்ய முடியும்’

‘எதுக்கடி ஒருத்தரா சமாளிக்கனும். சொந்தம் விட்டுபோகதபடி உன் அத்தைவீட்டிலேர்ந்தே முதல் மாப்பிள்ளை வந்தாச்சு. அவ்ங்க பார்த்துக்க மாட்டங்களா. கவலைபடாதே எல்லாம் பாத்துப்பாங்க. அதைதவிர பணம்கொடுத்து செய்து கொள்ள வசதியிருக்கு’

‘ சரி எங்கப்பாகிட்ட சொல்லிட்டு இங்கயே டிபன் சாப்டுட்டு போலாண்டி’.

அந்த தோழி சொன்னமாதிரி பணம் செலவழிந்துகொண்டிருந்துதான் இருந்தது. தண்ணீராக!.  இல்லை இல்லை, தண்ணீரை சேலம் மக்கள் சிக்கனமாகத்தான் செலவழிப்பார்கள். ஆனால் செல்வந்தர் வீட்டு கல்யாணமாயிற்றே. பணத்தின் மதிப்பு மிகவும் குறைந்துவிட்டதோ என்று தோன்றுமளவுக்கு பணம் அங்கு செலவழிந்து கொண்டிருந்தது. பெரிய இடத்து திருமணங்களில் என்ன நன்மை, தீமை இருக்கிறதோ, ஒன்று மட்டும் நிச்சியம். அதிகமான ஆட்களுக்கு உழைக்க வாய்ப்பும். உண்ண உணவும், செலவழிக்க காசும் கண்டிப்பாக கிடைக்கும். அந்த வேலையை செய்ய அத்தனை பேர், இந்த வேலையை செய்ய இத்தனைபேர், சமையல் வேலைக்கு இத்தனை பேர், மண்டப அலங்கார வேலைகளுக்கு இத்தனைபேர், வருபவர்களை கவனித்து உபசரித்து அனுப்ப இவ்வளவு பேர், இதர வேலைக்கு இவ்வளவு என்று தாராளமாக செலவழித்தால் செய்வதற்கு ஆடகளும் கிடைப்பார்கள்.

அந்த அளவு வசதி மிக்கவர் தான் சுகவனேஸ்வர்  சேலத்தில் உள்ள மில்களுக்கு தேவையான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் எஸ் வி இண்டஸ்ட்ரீஸ்,  200 ஆட்களை நிரந்தரமாக வேலையில் அமர்த்தி இருக்கும் நிறுவனம் அதைத் தவிர மரவனேரியில் ஏரியாவில் பங்களா.  மதுரையில் எஸ் வி இண்டஸ்ட்ரீஸின் கிளை. அதைத்தவிர அசையும் அசையா சொத்துக்கள் பல.  இவை அனைத்தும் சுய சம்பாத்தியம் தான்.

அவருடைய கம்பெனியை அவரை இதுவரை நிர்வகித்து வந்தார் தொழிலாளர் பிரச்சினை இரண்டு பெண்கள் திருமணம் மற்றும் செல்வந்தர்களுக்கு உரிய பிரச்சனை,  இளவயதில் மனைவியை இழந்த சோகம் இத்தனையும் மீறி அவர் துடிப்போடும் சுறுசுறுப்போடு இருப்பது அவர் உடல் வாகு அவருக்கு உற்சாகம் தருவது போல் தனது முதல் பெண்ணிற்கு பொருத்தமாக சொந்தத்திலேயே தகுதியான மாப்பிள்ளை அமைந்தது தான்.  அதைத்தவிர கலாவும் ராஜேஷும் உள்ளூர அன்பு கொண்டிருந்தது முக்கியமான காரணம் இந்தத் திருமணத்தின் மூலம் தனது கம்பெனிக்கு நேரடியான வாரிசை தேர்ந்தெடுத்து விட்டதாகவே எண்ணினார் ஏற்கனவே இதே கம்பெனியில் தொழில்நுட்பம், நிர்வாகம் ஆகியவற்றை அறிய அங்கேயே வேலை செய்பவன் தான் ராஜேஷ் இருப்பினும் திருமணத்தின் மூலம் கம்பெனியின் முழுப்பொறுப்பையும் அவனிடமே சிறுக சிறுக அளித்துவிடலாம் என்று எண்ணியிருந்தார்.

(தொடரும்)


Quote
Share: