Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

பண்ணையார் தோட்டம்  

  RSS

Karthikeyan Jayaraman
(@karthikeyan)
New Member Registered
Joined: 5 months ago
Posts: 4
26/10/2020 7:16 pm  

மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் இந்தக் கதை முறைப்படி மத்திய அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது


 


Quote
Karthikeyan Jayaraman
(@karthikeyan)
New Member Registered
Joined: 5 months ago
Posts: 4
26/10/2020 10:14 pm  

பிறகு பண்ணையார் குடும்பத்தில் கல்யாண வேலையை சிறப்பாகசெய்து முடிக்க வேண்டும் என்று பண்ணையாரும் அவர் பிள்ளைகளும் மற்றும் மருமகளும் கூடி முடிவு செய்தனர்

அதேபோல முத்தையாவின் வீட்டிலும் திருமணத்தை நமது கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் சிறப்பாக நடத்த வேண்டுமென்று முத்தையாவும் அவர் மகன் சங்கரும் மற்றும் ரேகா அவருடைய அம்மா லட்சுமி அம்மாள் கூடி பேசி முடிவு செய்தார்கள்  இப்படி பண்ணையார் வீட்டிலும் முத்தையா வீட்டிலும் கல்யாண கலை தெரிய ஆரம்பித்தது..

 

ஒருநாள் முத்தையா சங்கரை அழைத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டு மனம்விட்டு பேசினார்.

இதுவரைக்கும் உன்னை நான் கண்டித்தது மில்லை நீயும் என் மனம் வேதனை படும் அளவிற்கு எந்த காரியமும் செய்யவும் இல்லை எனக்கு நீ ஒரே பிள்ளை நீ பிறந்து சில நாட்களில் உன் அம்மா இறந்து விட்டால அன்று முதல் நான் உன்னை பாசமாக வளர்த்து வருகிறேன் நீயும் இந்த ஊரில் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்கிறாய் என்பது எனக்கு தெரியும் இருந்தாலும் நான் உன்னிடம ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்க போகிறேன் என்று சங்கரிடம் புதிராக சொன்னார் முத்தையா..

 

எனக்கு எல்லாமே நீங்க தான் பா நீங்க ஒரு வேலை சொன்னா அதை நான் என்றுமே தட்டியது இல்லை இருந்தாலும் நீங்கள் ஏதோ பெரியதாக என்மீது நம்பிக்கையடு கேட்கிறீர்கள் என்ன பொறுப்பு சொல்லுங்கள் அப்பா நான் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று உருக்கமாக சங்கர் முத்தையா விட சொன்னான்..

 

இது நாள் வரைக்கும் நீ சந்தோஷமாக என்னைப் பார்த்துக் கொண்டாய் அதேபோல உன்னை நம்பி வரும் ரேகாவை கண்கலங்காமல் அவளை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும்  இது மட்டுமல்ல அவளை நீ இராணி போல பார்த்துக் கொள்ள வேண்டும்  ஏனென்றால்  அவள் பாவம் சிறுவயதிலே அவள் தந்தை இறந்து விட்டான் அன்று முதல் லட்சுமி ரொம்ப கஷ்டப்பட்டு ரேகாவை வளர்த்து வந்தாள் அவள் கஷ்டப் பட்டதை நான் அன்று முதல் இன்று வரை கவனித்து வருகிறேன் .ரேகாவும்  பெரியவள் ஆகிவிட்டாள் .அவள் இவ்வளவு அறிவும் பண்பும்  ஒழுக்கமும் நிறைந்த பெண்ணாக இருக்கிறாள் .இப்படிப்பட்ட பெண்ணை வளர்ப்பதற்கு லட்சுமி கடுமையாக உழைத்து தன் காப்பாற்றினாள் மகளை வேலைக்கு எங்கும் அனுப்பாமல் பாசமாக வளர்த்து வருகிறாள் .அதேபோல ரேகா இன்னும் சில நாட்களில் இந்த வீட்டு மருமகளாக வரப் போகிறாள் அவளை நீ ராணி போல பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த ஊரே ரேகா மீது பொறாமை படவேண்டும் அந்த அளவிற்கு ரேகாவை சந்தோஷமாக நீ பார்த்துக் கொள்ள வேண்டும் .அப்போதுதான் நான் இந்த ஜென்மத்தை வரமாக நினைத்து என் ஆயுளை சந்தோஷமாக முடித்துக் கொள்வேன் இதுதான் என்னுடைய வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் என்று முத்தையா ஒரு கண்களில் பெரிய எதிர்பார்ப்போடு உணர்ச்சிபூர்வமாக சங்கரிடம் சொன்னார்...

 

எனக்கு புத்தி தெரிந்த நாள் முதல் எனக்கும் தெரியும் லட்சுமி அக்கா ரேகாவை கஷ்டப்பட்டு வளர்த்த அதை நானும் கவனித்திருக்கிறேன் அப்பா அதுமட்டுமல்ல .ரேகாவை நான் நேசிக்க காரணம் அவள் பட்ட கஷ்டத்தையும் துன்பத்தையும் நான் போக்க வேண்டும் லட்சுமி அக்காவையும் என் அக்காவை போல சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் இதுதான் என் ஆசையும் அதனால்தான் எனக்கு ரேகா மீது பாசம் ஏற்பட்டது அதுவே நான் விரும்புவதற்கு காரணமாக இருந்தது .ரேகாவை நீங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலே அவளை நான் சந்தோசமாக பார்த்துக் கொள்வேன் அப்பா என்று சங்கர் முத்தையா விற்கு ஆணித்தரமாக கூறினான்....

 

ஷங்கரின் பேச்சைக் கேட்டதும் முத்தையாவுக்கு பெரும் மகிழ்ச்சி  தனது மகனும் தன்னைப் போலவே இரக்க குணம் உள்ளவன் என்று நினைத்து சந்தோஷப்பட்டார் முத்தையா .பிறகு சங்கரை பார்த்து ஐயா. நீ இவ்வளவு நாள் எனக்கு மட்டும்தான் உழைத்தாய் இனி இரண்டு குடும்பத்திற்கும் சேர்த்து உழைக்க வேண்டும் .ஆகையால் நீ மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் அப்பொழுதுதான் எங்களை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள முடியும் .அதே போல ரேகாவை நீ வேலைக்கு எங்கும் அனுப்பக்கூடாது அவள் அம்மா வீட்டில் எப்படி இருந்தாரோ அதே போல இங்கும் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் அதனால் இனி விளையாட்டுத் தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு .கடுமையாக உழைப்பதற்கான வழியை பாரு என்று முத்தையா சங்கருக்கு கட்டளையிட்டார்..

.

தந்தை சொல்லே மந்திரம் என்று நினைத்து சங்கரும் தந்தை கூறியதை மனதில் வைத்துக் கொண்டு பொறுப்புடன் இனி நாம் விளையாட்டை சற்று நிறுத்திக் கொண்டு பொறுப்புடன் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கண்டு தந்தையிடம் விடைபெற்றுக்கொண்டு வேலைக்குக் கிளம்பினான் பண்ணையார் தோட்டத்திற்கு...

 

நமது பண்ணையார் குடும்பத்தில் வழக்கம்போல பரந்தாமன் தனது தம்பியின் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருந்தான் .அப்பொழுது அவனுக்கு ஒரு யோசனை வந்தது தம்பியை ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து விட்டாள் இந்த திருமணத்தை நிறுத்தி வடலாம் என்று யோசித்தான் பரந்தாமன். எந்த பிரச்சனையில் சிக்க வைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில். என்னங்க என்ற குரல் கேட்டது பரந்தாமனுக்கு பார்த்தால் சிரித்த முகத்துடன் அவன் மனைவி வந்தாள்.

கல்யாண வேலையை பத்தி யோசனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று புன்னகையோடு கேட்டாள்

ஆமாம் தம்பி திருமணமாச்சு இனி என் மூளைக்கு வேலை அதிகமாகவே இருக்கும் என்று அவள் இடுப்பை பற்றிக்கொண்டு சந்தோசமாக நடித்துக் கொண்டே சொன்னான் பரந்தாமன்

திருமணம் உங்கள் தம்பிக்கு உங்களுக்கு அல்ல ஒரே துடிதுடிக்க இருக்கிறீர்கள் கையை எடுங்கள் உங்க தம்பிங்க வரப்போறாங்க என்று கைகளை உதறிவிட்டு பரந்தாமன் மனைவி ஒரு பெரிய லிஸ்டே ஒன்று கொடுத்தாள்..

அதைப் பிரித்துப் பார்த்த பரந்தாமன் வரவு செலவு கணக்கு இருப்பதை புரிந்துகொண்டான் .பிறகு மனைவியை பார்த்து இது என்ன வரவு செலவு கணக்கு என்னிடம் கொடுக்கிற.

வரவு செலவு கணக்குதான் ஆனா வீட்டோட தில்லை .விவசாய கணக்கு நான் போட்டது இல்லை .உங்க அப்பா என்னிடம் சொல்லி போட்ட கணக்கு நான் இந்த வீட்டு மருமகளா வந்ததிலிருந்து உங்க அப்பா என்னிடம்தன் வரவு செலவு கணக்கை சொல்லி எழுதச் சொல்வார் என்னிடம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்துல எவ்வளவு வருமானம் கிடைக்கிறது எவ்வளவு செலவு செய்கிறோம் என்று தெரிஞ்சு கருத்துக்காக உங்க அப்பா என்னிடம் வரவு-செலவு கணக்கை சொல்லுவாரு .ஆனால் இந்த மூணு வருஷமா நீங்க விவசாயத்துல பொறுப்பேற்ற நாள் முதல் வரவு செலவு கணக்கு என்கிட்ட சொல்றத கிடையாது ஆனா இப்போ உங்க தம்பிக்கு திருமணம் நடக்கப் போகுது அதுக்கு நிறைய பணம் செலவாகும் அதனால நீங்க விவசாயத்துல வந்த பணத்தை அப்பாவிடமும் இல்ல நீங்களே பொறுப்பா வச்சுக்கிட்டு செலவு செஞ்சு கணக்கு உங்க தம்பி கிட்ட சொல்லுங்க ஏன்னா  இவ்வளவு நாளா இந்த வீட்டுக்கு நா மட்டும்தான் மருமகளா இருந்தேன் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு இன்னொருத்தி மருமகளாக வரப்போறா அவளுக்கு நம்ம வரவு செலவை முறைப்படி தெரிவிக்கணும் அதனாலதான் உங்க அப்பா எழுதி வைத்திருந்த இந்த வரவு செலவுக் கணக்கை உங்ககிட்ட கொடுக்கிறேன் .நீங்களும் இனிமேல் செய்யப் போகும் செலவு  .வரப்போற வரவு  எல்லாத்தையும் எழுதி வச்சுக்கங்க ஏன்னா இனிமே வரவு செலவு கணக்கை யாரு வேணாலும் கேப்பாங்க .இவ்வளவு நாளா இருந்தது போல  இனிமே இருக்காதீங்க மாமாவை போல யாருக்கும் தல குனிஞ்சு நிக்காம கம்பீரமாய் இருப்பதுபோல நீங்களும் யார் கேக்குற கேள்விக்கு பதில் தெரியாமல் நிறகக்கூடாது அதனாலதான் இந்த வரவு செலவு கணக்கை உங்ககிட்ட கொடுக்கிறேன் என்று பொறுப்போடும் சொன்னால் பரந்தாமன் மனைவி.

மாணவி சொன்ன யோசனைகளை கேட்ட பரந்தாமனுக்கு மேலும் மனக் கஷ்டம் ஏற்பட்டது . இவள் சொல்வது போல தம்பியின் மனைவி நிச்சயமாக வரவு செலவு கணக்கை நம்மிடம் கேட்பாள் என்ற எண்ணம் பரந்தாமனுக்கு ஆணித்தரமாக புரிந்தது பிறகு பரந்தாமனுக்கு தம்பியின் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் இல்லை என்றால் நமக்குத் தான் பிரச்சனை என்று உறுதியாக முடிவெடுத்தான் பரந்தாமன்..இனி நமக்கு நிம்மதியான உறக்கம் கிடையாது தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட்டால் தான் நிம்மதியாக இருக்க முடியும் .நிச்சயமாக இந்த கெட்ட காரியத்தை செய்வதற்கு நாம் இன்னும் அடிமட்டத்தில் இறங்கி யோசனை செய்து இந்த திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் .இதற்கு எந்த தடை வந்தாலும் அதை துணிச்சலோடு எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் பரந்தாமன்....

 

இனி திட்டத்தின் வடிவம் தொடரும்.....

 


 


ReplyQuote


Share: