Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications

[Closed] எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - கதை  

Page 1 / 8
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
17/09/2019 6:25 pm  

நிலா க்ரிஷ் எழுதும் எவனோ என் அகம் தொட்டுவிட்டான் கதை பகுதி...

This topic was modified 5 months ago by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nirmala Krishnan
(@nila-krishi)
Honorable Member Writer
Joined: 5 months ago
Posts: 526
18/09/2019 8:38 am  

ஹாய் பிரெண்ட்ஸ்,

                                   இது என்னுடைய முதல் கதை!!

             தலைப்பு : எவனோ என் அகம் தொட்டு விட்டான்!!!
             நாயகன் : ஆதித்யன்
             நாயகி : நித்திலா

                       நம் கதையின் நாயகன் ஆதித்யன் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் இளம் தொழிலதிபன்..கோபக்காரன்... நினைத்ததை அடைய நினைக்கும் பிடிவாதக்காரன்... இதுவரை அவன் எடுத்த காரியம் அனைத்திலேயும் வெற்றியை மட்டுமே சந்தித்தவன்....

                       நம் நாயகி நித்திலாவோ மென்மையானவள்...பெற்றவர்களின் பாசத்திற்க்கு கட்டுப்பட்ட செல்லப்பெண்...காதல் என்ற சொல்லின் மறு பெயர்,பெற்றவர்களுக்கு பிள்ளைகள் செய்யும் நம்பிக்கைத்துரோகம் என்று நினைப்பவள்....பெற்றவர்களுக்கு தெரியாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன் என்ற கொள்கையை உடையவள்....

                       இப்படிப்பட்ட நாயகியை பார்த்த உடனேயே காதலில் விழுந்து விடுகிறான் நம் நாயகன்....

                       இவனோ பிடிவாதக்காரன்...அவளோ காதல் என்ற சொல்லை கேட்டாலே காதைப் பொத்திக்கொள்பவள்...இவ்விருவரையும் வைத்து காதல் நடத்தும் நாடகமே "எவனோ என் அகம் தொட்டு விட்டான்..."!!!

                       உங்கள் அனைவருக்கும் இந்த கதை பிடிக்கும் என்று நம்புகிறேன்...

       காதல் + ரொமான்ஸ் + பாசம் இணைந்த கலவைதான் இந்த கதை....

                       அகம் தொட என்னுடன் இணைந்து பயணம் செய்யுங்கள்....!!!

                       கூடிய விரைவில் கதையுடன் சந்திக்கிறேன்...

 

                                                                 நன்றி!!!

This post was modified 5 months ago 5 times by Nirmala Krishnan

Jeevitha Jothi
(@gvtha)
New Member Registered
Joined: 5 months ago
Posts: 2
18/09/2019 1:42 pm  

@nila-krishi

உங்களின் கதை தொடர வாழ்த்துக்கள்.    அழகான தலைப்பு


Nirmala Krishnan
(@nila-krishi)
Honorable Member Writer
Joined: 5 months ago
Posts: 526
18/09/2019 1:51 pm  

@gvtha

மிக்க நன்றி!!!!


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
18/09/2019 2:19 pm  

Dear Friends,

Plz share your comments here எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - கமெண்ட்ஸ்  in comments thread...

Thanks 🙂

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nirmala Krishnan
(@nila-krishi)
Honorable Member Writer
Joined: 5 months ago
Posts: 526
20/09/2019 4:28 pm  

எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!!

அத்தியாயம் 1

ஆதவன் தன் செங்கிரணங்களால் பூமிக் காதலியை முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.நிலவும் நட்சத்திரங்களும் கதிரவன் வருகை அறிந்து,நாணி மேகத்துக்குள் முகம் புதைத்துக் கொண்டனர்.வானெங்கும் இரைகளைத் தேடும் பறவைகளின் "கீச் கீச்"ஒலி.அழகிய இளங்காலைப் பொழுது அழகாகப் புலர்ந்து கொண்டிருந்தது.

இக்காட்சியைக் காண்பதற்கு நித்திலாவிற்கு ஒரு போதும் சலிப்பதில்லை. நித்திலா, இவள்தான் நம் கதையின் நாயகி.பெயருக்கேற்ற குணத்தையும் , பிறை நெற்றியையும்,வில் போன்ற புருவங்களையும்,மை விழிக் கண்களையும் ,இடையைத் தொடும் நீண்ட கருங்குழலையும் கொண்டவள்.22 வயது நிரம்பிய எம்.காம் படிக்கும் மாணவி...!

"ஏய் நித்தி...!வந்து பால் குடி....!கல்லூரிக்கு நேரம் ஆகிறது பார்...!"என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.அவளது அம்மா மீனாட்சிதான் அழைத்துக் கொண்டிருந்தார்.
"உங்க மகளுக்கு அதிக செல்லம் கொடுத்துக் கெடுத்து வைச்சிருக்கீங்க...கூப்பிடுவது கூட காதில் விழாமல் நிற்கிறா பாருங்க...!" என்று கணவன் கிருஷ்ணனிடம் புகார் வாசித்தார்.

"விடுடி...!தினமும் நடப்பதுதானே!அவ காலைல எழுந்த உடனே மாடிக்குப் போய் ரசிக்கறதும் ... நீ அவளை திட்டறதும்... தினமும் நடக்கறதுதானே...!ஏதோ சின்னப் பெண் நம்ம வீட்ல இருக்கற வரைக்கும்தானே இப்படி இருக்க முடியும்...நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனா அவங்க வீட்டுப் பொண்ணா மாறிடப் போறா.....இங்க இருக்கற வரைக்கும் அவளை அவ போக்கில் விடு...!" என்று அன்பான அப்பாவாக தன் மகளுக்குப் பரிந்து கொண்டு வந்தார்.

அப்போதுதான் மாடியில் இருந்து இறங்கி வந்த நித்திலா, தந்தையின் பேச்சைக் கேட்டு, "என் செல்ல அப்பா...!"என்றபடி அவரைக் கட்டிக் கொண்டாள்.

"இப்படியே ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட்டு இருங்க...!நாளைக்குப் போற வீட்ல இப்படி நின்னு பராக்கு பாத்துகிட்டு இருந்தா...நாலு சாத்து..சாத்துவாங்க.....",என்றார் மீனாட்சி.
"அதெல்லாம் என் பொண்ணு பார்த்துக்குவா...! நீ போய் சமையலைக் கவனி...போ...போ...!",என்று மனைவியை விரட்டியவர், தன் மகளை பாசத்தோடு அனைத்துக் கொண்டார்.

"அப்படிச் சொல்லுங்க அப்பா...!",என்று தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த நித்திலாவை நோக்கி," சித்தி...நானு....!"என்றபடி ஓடி வந்தது அவர்கள் வீட்டுக் குட்டி வாண்டான,அதிதி.
"என் செல்லக் குட்டி !வாடா....!",என்றபடி அந்தக் குட்டியை அள்ளிக் கொண்டாள்,நித்திலா.

கிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியின் மூத்த மகள் தீபிகாவை, அவர்கள் சொந்த ஊரான கோவையிலேயே கட்டிக் கொடுத்திருந்தனர்.தீபிகாவின் கணவனான கேசவன் , ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.இவர்களின் செல்வப் புதல்விதான் 1 வயதே நிரம்பிய அதிதி குட்டி.கேசவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால் தாய் வீடு வந்திருந்தால் தீபிகா.

அடுத்த அரை மணி நேரத்தில் குளித்து முடித்துக் கிளம்பியவள் ,"அம்மா...! என்ன டிபன்?",என்றபடி உணவு மேசைக்கு வந்து அமர,

"இட்லி சுட்டு வைச்சிருக்கிறேன் பாரு....போட்டு சாப்பிடு....!"என்று சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தார் மீனாட்சி.

அவசர அவசரமாக இரண்டு இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டே, "வரேன் மா...பை ப்பா!", என்று கத்திக் கொண்டே வாசலுக்கு வந்தவள், தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தாள்.

அங்கு கல்லூரியில் இவள் ஸ்கூட்டியைக் கண்டவுடனேயே ,"ஹே....!!நித்திவந்தாச்சு......"
என்றபடி ஒரு பட்டாளம் இவளை சூழ்ந்து கொண்டது.

"நித்தி....!எக்ஸாம்க்கு படிச்சிட்டியா.....?",என்று கேட்ட நிவேதாவிற்கு ,

"ஏதோ படிச்சிருக்கேன் டி....!",என்று இவள் பதில் கூற , இவர்களுக்கு இடையில் வந்த சுமதி, "அவளுக்கென்ன....!அவதான் எப்ப பாரு பர்ஸ்ட் ரேங்க் வாங்கறா......அதெல்லாம் படிச்சிருப்பா....."என்க,

"உனக்கு அதுல ரொம்பவும் வருத்தம் போல.....வேணும்னா நீயும் படிச்சு பர்ஸ்ட் மார்க் வாங்கு......"என்றபடி நித்திலாவிற்கு பரிந்து கொண்டு வந்தாள் நந்தினி.

"அப்பா!!பிசாசுகளா....!உங்க பேச்சை அப்புறம் வைச்சுக்கலாம்....இப்ப எக்ஸாம் ஹாலுக்கு போற வழியைப் பார்ப்போம்....",என்று கல்பனா அதட்டல் போடா அனைவரும் தேர்வு அறையை நோக்கி நடந்தனர்.
பிறகு தேர்வு ஆரம்பம் ஆக,அனைவரும் அதில் கவனமாகி எழுத ஆரம்பித்தனர்.

 

* * *

சென்னை-

பணக்காரர்கள் மட்டுமே குடியிருக்கும் அந்தப் பகுதியில் ,வெள்ளைப் பளிங்கால் இழைக்கப்ட்ட அந்த மாளிகை மற்ற பங்களாக்களை விட கம்பீரமாக எழுந்து நின்றது.முன்புறம் புல்வெளியுடன் கூடிய தோட்டம் அமைக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் அழகாக இருந்தது அந்த மாளிகை.

வீட்டின் உள்ளே ,மாடியில் இருக்கும் தனது அறையில் பொறிக்கப்பட்ட ஆளுயர கண்ணாடியில் தெரிந்த தனது பிம்மத்தைப் பார்த்தபடி,கழுத்து டையை சரி செய்து கொண்டிருந்தான்...ஆதித்யன்.

ஆதித்யன்,"ஆதித்யா குரூப் ஆப் கம்பனிஸின் எம்.டி ...."ஆறடிக்கும் சற்று அதிகமான உயரமும் ,அதற்கேற்ற உடற்கட்டுக்கும் சொந்தக்காரன்.தீர்க்கமான பார்வையுள்ள கண்கள் எதிராளியின் மனதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விடும்.'நான் பிடிவாதக்காரன்' என்பதைக் காட்டும் அழுத்தமான உதடுகள்.ஆதித்யனுக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும்.மனதில் நினைத்ததை அடைந்தே தீரும் அழுத்தக்காரன்.

தனது செல்லை காதுக்கு கொடுத்தபடி மாடியில் இருந்து இறங்கி வந்த தன் மகனைக் கண்டதும் எப்பொழுதும் போல் அன்றும் கர்வம் கொண்டார்,சோபாவில் அமர்ந்து அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டிருந்த ஆதித்யனின் தந்தை மாணிக்கம்.

'இருக்காதா பின்னே'...!' சிறு சிறு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனமாக இவர் ஆரம்பித்த தொழில்....ஆதித்யன் கையிலெடுத்தப் பிறகு அசுர வளர்ச்சி அடைந்தது.அந்தத் தொழிலோடு தான் படித்த சிவில் இன்ஜினியரிங் படிப்புக்கும் ஏற்றவாறு கட்டுமான தொழிலையும் ஆரம்பித்தான்.இன்று தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ண கூடிய கோடிஸ்வரர்களில் இவனும் ஒருவன்.

"குட் மார்னிங் டாட்....!",என்றவனிடம், "குட் மார்னிங் ஆதி....!என்ன இன்னைக்கு சீக்கிரமாவே ஆபீஸ்க்கு கிளம்பிட்ட போல..?,என்று கேள்வி எழுப்ப,

"யா டாட்.....ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு...."என்று பதில் சொல்லியபடியே தன் மணிக்கட்டில் கட்டியிருந்த வாட்ச்சில் மணி பார்த்தான்.

"ரெண்டு பேரும் ஆரத்தி எடுத்துக்கோங்க....",என்றபடி பூஜை அறையில் இருந்து வெளியில் வந்தார் ஆதித்யனின் தாய்,லட்சுமி.

முகத்தில் மஞ்சள் மிளிர,பார்வையில் அன்பும் கருணையும் ததும்ப வந்த தாயைப் பார்த்து சிறு புன்னகையுடன் ஆரத்தியை எடுத்துக் கொண்டான்,ஆதித்யன்.

"என்ன லச்சு....?இன்னைக்கு உன் முருகன்ட்ட என்ன மனு போட்ட....?",என்று மாணிக்கம் தன் மனைவியை சீண்ட,

"எப்பொழுதும் போல் 'என் கணவனுக்கு நல்ல புத்தியைக் கொடு முருகா!' என்றுதான் வேண்டினேன்...",என்று அவர் பதிலுக்கு வாயாட,

'உங்களுக்குத் தேவையா' என்பது போல் பார்த்த மகனின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக படித்துக் கொண்டிருந்த நாளிதழில் தலையைப் புதைத்துக் கொண்டார்,மாணிக்கம்.

"நீ வாப்பா...சாப்பிடப் போகலாம்...",அன்பாக மகனை அழைத்தவர்,கணவரிடம் பார்வையை செலுத்தியபடி "சாப்பிட்டுட்டு பேப்பரை பாருங்க...அப்படி என்னதான் அந்த பேப்பரில் இருக்குமோ தெரியல...எப்ப பாரு அத வைச்சுகிட்டே உட்காந்து இருக்கீங்க..."என்று அதட்டியபடி சமையல் அறைக்கு சென்றார்.

"இதில்தான் எல்லாமே இருக்கு லச்சு...",என்றபடி மனைவியை பின் தொடர்ந்து டைனிங் டேபிளுக்கு சென்றவர்,அங்கு ஏற்கனவே உட்கார்ந்திருந்த மகனிடம் சென்று அமர்ந்து கொண்டார்.

எவ்வளவுதான் வேலைக்காரர்கள் இருந்தாலும் தன் மகனுக்கும் கணவனுக்கும் லட்சுமி மட்டும்தான் பரிமாறுவர்.அன்றும் அவர் பரிமாற இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.தந்தையும் மகனும் தொழில் விஷயத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க,அதைக் கேட்ட லட்சுமி,"அடாடா...சாப்பிடும் போதும் இந்தப் பேச்சுதானா....?வேற ஏதாவதுதான் பேசுங்களேன்...!",என்று அழுத்துக்கொள்ள,
"நான் என்ன பண்ணட்டும் லச்சு...?உன் மகன் பிசினெஸ்ஸை கையில் எடுத்த பிறகு, எனக்கு ரெஸ்ட் கொடுத்து வீட்ல உட்கார வைச்சுட்டான்...எப்படி பொழுதைப் போக்கருதுன்னே தெரியல...",என்று சலித்துக் கொண்டார்,மாணிக்கம்.

"பேசாமல் உன் மகனுக்குக் கல்யாணம் செஞ்சு வைச்சுடு....மருமகள் வந்து பேரப்பிள்ளைகள் பெத்து தந்தால்,அதுக பின்னாடி ஓடறதுலேயே நேரம் போய்டும்...",என்று கூறியபடியே அங்கு ஆஜர் ஆனார் மாணிக்கத்தின் தாய்,கமலாம்பாள்.

"சரியா சொன்ன கமலு...!எவ்வளவு நாள்தான் இந்த மூஞ்சிகளையே பாக்கறது...?,என்று தன் மனைவிக்கு ஒத்து ஊதியபடியே வந்தார் சுந்தரம்,மாணிக்கத்தின் தந்தை.

அனைவரும் ஆவலாக ஆதித்யனின் முகம் பார்க்க அவனோ,"நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே...இப்போதைக்கு கல்யாணப் பேச்சு எடுக்க வேண்டாம்னு...?இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்...",என்றான் சற்று கோபமாக.

"இப்பவே உனக்கு 28 வயசு ஆச்சு...இன்னும் ரெண்டு வருஷம்னா...எப்ப 30 வயசுல கல்யாணம் பண்ணிக்கிறாயா..?",அவன் அம்மாவும் சற்று கோபமாக கேள்வி கேட்க அவன் சற்று தளைந்து போனான்.

"ப்ளீஸ் மா...இன்னும் ஒரு வருஷம் பொறுத்துக்கோங்க...சிங்கப்பூர்ல ஒரு பிரான்ச் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்...அந்த வேலைகள் முடிஞ்ச பிறகு பார்க்கலாம்.."
"சரி!இன்னும் ஒரு வருஷம்தான் உனக்கு டைம்...அதுக்கு அப்புறம் நான் உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுவேன்...!",என்று முடித்து விட்டார் லட்சுமி.

எப்படியோ தப்பித்தால் போதும் என்று நினைத்தவன் ,"ஓகே!நான் ஆபீஸ்க்கு கிளம்பறேன்...பை மா...பை டாடி...பை காமலு..!",என்றபடி பாட்டியின் கன்னத்தைப் பிடித்து இழுத்துவிட்டு சென்றான்.

"டேய்!என் மனைவியை நான் மட்டும்தான் 'கமலுன்னு கூப்பிடுவேன்...உனக்கு அந்த உரிமையை இல்ல...",என்று அவனுடைய தாத்தா போர்கொடியைத் தூக்க,
"பாரு கமலு....!",என்று முறையிட்டத் தன் பேரனிடம் "நீ கிளம்பு கண்ணு...!உன் தாத்தாவுக்கு வயசு குறைஞ்சிருச்சுன்னு நினைப்பு...நான் பார்த்துகிறேன்...",என்று கொஞ்சியபடி அவனை வழியனுப்பி வைத்தார்,அவனது பாடி.

இதழில் உறைந்த புன்னகையுடன் தன் காரை கிளப்பிக் கொண்டு அலுவலகத்தை நோக்கி விரைந்தான்.

பல ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாய் விரிந்திருந்தது அவனுடைய அலுவலகம்.அந்த பெரிய கதவை ஒரு சல்யூட்டுடன் செக்யூரிட்டி திறந்து விட,அவனுடைய கார் வழுக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தது.

அலுவலகத்துள் நுழைந்த உடனேயே அவனுடைய முகம் சிறுது கடினத்தை தத்தெடுத்துக் கொண்டது.அனைவரும் கூறிய வணக்கங்களை சிறு தலையசைவுடன் ஏற்றுக் கொண்டு தனது அறையை நோக்கி விரைந்தான்.

உள்ளே நுழைந்தவனை அடுத்தடுத்து வேலைகள் ஆக்கிரமித்துக் கொள்ள,"குட் மார்னிங் ஆதி..!"என்ற கௌதமின் குரலில்தான் நிமிர்ந்தான்.

கெளதம்,ஆதித்யனின் உயிர் நண்பன்.சிறு வயதில் இருந்தே இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு உண்டு.ஆதித்யன் தனது தாத்தா பாட்டிக்குப் பிறகு நெருங்கிப் பழகும் ஒரே ஆள் கௌதம்தான்.

"குட் மார்னிங் டா...!",என்று கௌதமைப் பார்த்து புன்னகைத்தவன் ,"இன்னைக்கு மீட்டிங்கிற்கு எல்லாம் ரெடியா...?",என்று கேள்வி எழுப்ப, "எல்லாம் ரெடி!நீ வந்தா ஸ்டார்ட் பண்ணிடலாம்...எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..",என்று கூற,இருவரும் மீட்டிங் நடக்கும் அறையை நோக்கி நடந்தனர்.

ஆதித்யன் உள்ளே நுழையவும் அனைவரும் எழுத்து நின்றனர்.சிறு கையசைப்புடன் அனைவரையும் அமர சொன்னவன்,தன் பேச்சைத் தொடங்கினான்.

"ஹாய் கைஸ்...!இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசுவதற்காகத்தான் இந்த மீட்டிங் அரேஞ் செய்யப்பட்டிருக்கிறது.அமெரிக்காவில் இருக்கும் ஒரு நிறுவனம் சென்னையில் மால் கட்டுவதற்கான ப்ரொஜெக்ட்டை நம்மிடம் கொடுத்துள்ளது.அவங்க இன்னும் நிறைய பில்டிங்ஸ் இங்க கட்ட பிளான் போட்டு இருக்காங்க.நாம மட்டும் இந்த ப்ரொஜெக்ட்டை நல்லபடியா முடிச்சுக் கொடுத்தோம்னா...அவங்களுடைய மத்த எல்லா ப்ரொஜெக்ட்டும் நமக்கே கிடைக்கும்.உங்களுக்கு எல்லாம் என்னன்ன வேலை அலாட் பண்ணி இருக்குன்னு நம்ம ஜி.எம் கௌதமைக் கேட்டுக்கோங்க.நீங்க எல்லோரும் இந்த ப்ராஜெக்ட் வெற்றி பெற சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நம்பறேன்...!",கம்பீரமாக தன் பேச்சை முடித்தான் ஆதித்யன்.

"நிச்சயமாக சார்...!",ஊழியர்கள் அனைவரும் மறுமொழி கூற இனிதாக முடிந்தது அந்த மீட்டிங்.அதன் பிறகு அனைவரும் கௌதமிடம் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை கேட்டுக்கொண்டு அவரவர் இடத்திற்கு சென்றனர்.

கௌதமோடு தன் அறைக்கு வந்த ஆதித்யன்,"கெளதம்...! நீ அடிக்கடி பில்டிங் கட்டற இடத்துக்கு போக வேண்டி இருக்கும்...ஸோ,ஒர்க்கர்ஸ் எல்லாம் அவங்களோட வேலையை ஒழுங்கா பண்ராங்களான்னு மேற்பார்வை பார்க்கற பொறுப்பை உனக்கு நம்பிக்கையான ஆளிடம் கொடுத்திடு....",எனக் கூற ,அதை ஆமோதித்தவாறு கெளதம் தனது அறைக்குச் செல்ல, ஆதித்யன் தனது வேலைகளில் மூழ்கினான்.

அகம் தொட வருவான்....!!!

 

This post was modified 5 months ago by Nithya KarthiganNirmala Krishnan
(@nila-krishi)
Honorable Member Writer
Joined: 5 months ago
Posts: 526
26/09/2019 9:30 am  

ஹாய் பிரெண்ட்ஸ்,
                          சில பல காரணங்களால் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.இதோ உங்களின் அகம் தொட வந்து விட்டேன்...

 

                                                                             அத்தியாயம் 2

                    வாசலில் தன் ஸ்கூட்டியை நிறுத்திக் கொண்டிருந்த நித்திலாவின் காதில் கேசவனின் குரல் வந்து விழுந்தது.
                    'மாமா வந்திருக்கார் போல...' என்று எண்ணியபடியே உள்ளே நுழைந்தவள் கேசவனைப் பார்த்ததும்,"ஹாய் மாமா...பாரினில் இருந்து எப்ப வந்திங்க...?",என்று கேட்க,
                 "ஹாய் நித்தி.....!இன்னைக்கு காலையில்தான் வந்தேன்...உனக்கு எக்சாம்ன்னு சொன்னாங்க....எப்படி எழுதின...?",என்று விசாரிக்க,
                  "நல்லா எழுதியிருக்கேன் மாமா....",என்று உற்சாகமாக கூறியவள்,தீபிகா எங்கோ கிளம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து,"அக்கா....எங்கே கிளம்பிட்ட....",என கேட்க,"எங்க வீட்டுக்குத்தான் டி....என்னைக் கூட்டிட்டுப் போகத்தான் உன் மாமா வந்திருக்கார்....",என்றாள்.
               தன் மாமவைப் பார்த்தவள் குறும்பாக,"என்ன மாமா....!ஒரு வார சுதந்திரம் இன்றோடு முடிந்ததா...?",என சீண்ட,
             "ஹ்ம்ம்.....ஆமா நித்தி.....!இந்த ஒரு வாரம் ஜாலியா உன் அக்கா தொல்லை இல்லாம ஊர் சுத்திகிட்டு இருந்தேன்....இன்னையோட எல்லாம் முடிந்தது....",சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவன்,தீபிகா முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்.
              தன் கணவனைப் பார்த்து புசு புசுவென முறைத்தவள்,"நான் உங்களுக்குத் தொல்லையா....?நான் ஒன்னும் உங்க கூட வரல....இன்னும் ஒரு மாசம் என் அம்மா வீட்டிலேயே இருக்கேன்....நீங்க மட்டும் போய்ட்டு வாங்க...",என்ன பொரிந்து விட்டு தங்கள் அறைக்குள் சென்று விட்டாள்.
            "தீபுக் குட்டி...!அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடா...!நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்....",என்று கொஞ்சியபடியே பின்னால் ஓடினான் அவளது காதல் கணவன்.
             இதைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் அறைக்கு சென்று ஒரு சின்ன குளியலைப் போட்டு விட்டு,உடை மாற்றி புத்தம் புது மலராக வந்த நித்திலாவின் கையில், சுட சுட பட்டாணி அடை நிரம்பிய தட்டைக் கொடுத்தார் மீனாட்சி।
            "வாவ்...!சூப்பர் மா...!!இதுக்குத்தான் என் அம்மா வேணும்ங்கறது....",என்று தன் தாயைக் கொஞ்சியபடியே பட்டாணி அடையை உள்ளே தள்ள ஆரம்பித்தாள்.
             அதற்குள் கேசவனும் தீபிகாவும் கிளம்பி வர,அவர்களுக்கும் டிபன் பரிமாறப்பட்டது.சாப்பிட்டுவிட்டு இருவரும் கிளம்ப,சில பல அன்பு முத்தங்களுடன் அதிதி குட்டியை வழியனுப்பி வைத்தாள் நித்திலா.
              "நாளைக்கு எக்ஸாம் மா...நிறைய படிக்க வேண்டி இருக்கு....நான் படிக்கப் போறேன்...",என்று தன் தாயிடம் உரைத்து விட்டு அறைக்கு சென்றவள் அதன் பிறகு படிப்பில் மூழ்கினாள்.

।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

-ஆதித்யா குரூப் ஆப் கம்பெனீஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்க்ஷன்.....

                      அலுவலகத்தில் வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.அமெரிக்கா ப்ரொஜெக்ட்டை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று அனைவரும் தத்தம் வேலைகளில் மூழ்கியிருந்தனர்.
                  ஆதித்யன் இது சம்பந்தமான வேலையை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க சொன்னது நியாபகம் வர,கெளதம் தன் டேபிளில் இருந்த தொலைபேசியை எடுத்து,"சுமித்ரா....!என் கேபினுக்கு வாங்க....!",என்று அழைப்பு விடுத்தான்.
                 சிறுது நேரத்தில் ,"எக்ஸ்குயூஸ் மீ சார்...!",என்று யாரோ கதவை தட்ட நிமிர்ந்து பார்த்தால் சுமித்ராதான் நின்றிருந்தாள்.
               "வாங்க சுமித்ரா....!உட்காருங்க....",என்று அவளை அமர சொன்னவன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான்.
                பிறகு அவளைப் பார்த்து,"சுமித்ரா.....!அமெரிக்கா ப்ராஜெக்ட் சம்பந்தமா ஆஃபீசில நடக்கற வேலையை சூப்பர்வைஸ் பண்ற வேலை இனிஉங்களுடையது. இன்னையிலிருந்தே வேலையை ஆரம்பிச்சிடுங்க....தினமும் ஈவ்னிங் கிளம்பறதுக்கு முன்னாடி 'ப்ராஜெக்ட் எந்த நிலையில இருக்கு' அப்படிங்கறதை பத்தின ரிப்போர்ட் என் டேபிளுக்கு வரணும்....இப்போ நீங்க கிளம்பலாம்....",எனப் பேச்சை முடித்துக் கொள்ள,
              இவள் அவசரமாக,"ஐயோ சார்....!!இவ்வளவு பெரிய பொறுப்பை எதுக்கு என்கிட்ட கொடுக்கறீங்க...நான் வேலைக்கு சேர்ந்தே ஒரு மாசம்தான் ஆகுது...",என்று மறுக்க,
              "சோ வாட்?உங்க திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு...இந்த வேலையை நீங்கதான் செய்ய வேண்டும்...",என்ன முடிவாகக் கூறியவன் 'இனி நீ போகலாம்'என்பது போல் அவளை பார்க்க,அவளோ என்ன செய்வது என்று அறியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
              சிறிது குழப்பமும்...மிரட்சியுமாக விழித்தவளைக் கண்டு எப்பொழுதும் போல் இன்றும் அவளிடம் தாவிச் செல்லும் மனதை,அதன் தலையில் குட்டி அடக்கியவன், அவளை பார்த்து,"நீங்க போகலாம்...",என்று கண்டிப்பாகக் கூற,
              வேறு வழியில்லாமல்,"ஒகே சார்...!எதாவது சந்தேகம்ன்னா உங்ககிட்ட வரேன்...",என்று உரைத்து விட்டு பலியாடு போல் வெளியேறினாள்.
               உதட்டில் சிறு புன்னகையுடன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன்,தன் தலையை உலுக்கிக் கொண்டு வேலையில் ஆழ்ந்தான்.
                சுமித்ரா வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகிறது.முதல் நாளன்றே குழந்தைத்தனமாக...ஒன்றும் தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு அலுவலகத்தில் நுழைந்தவளைக் கண்டவனின் மனதில் தென்றல் அடிக்கத்தான் செய்த்து....இப்பொழுதும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் பூ பூக்கத்தான் செய்த்து...ஆனால்'இதுதான் காதலா...?'என்பதில் அவனுக்கு சந்தேகமாக இருந்தது.
                  எதோ அழகானப் பெண்ணைப் பார்ப்பதால் உண்டாகும் வயதின் மயக்கமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்....பார்ப்போம்....!!காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....!!இது வெறும் வயதின் மயக்கமா...?இல்லை...தீராத காதல் மயக்கமா...??என்று...!!!
                அவள் சென்றவுடன் ஆதித்யனிடம் இருந்து கௌதமிற்கு அழைப்பு வந்தது.வேலை நடக்கும் இடத்திற்கு சென்று வரலாம் என்று அழைத்திருந்தான்.
               இருவரும் சைட்டிற்கு சென்று அனைத்து வேலைகளும் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்து விட்டு...மணல்,செங்கல் மற்ற அனைத்துப் பொருட்களும் தேவையான அளவு கிடைக்கிறதா என்று விசாரித்து...தொழிலாளர்களையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்கி விட்டு அலுவலகம் திரும்பும் போது மாலை ஆகியிருந்தது.
              ஆதித்யன் தன் அறைக்குள் நுழைவதைக் கண்டு அவனுடைய செக்ரெட்டரி லீலா,பைலை எடுத்துக் கொண்டு அவன் பின்னாலேயே வந்தவள்,"சார்...கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ரிலேட்டடா ஒரு மீட்டிங் நாளைக்கு மறுநாள் கோவையில் நடக்க இருக்கு...அதுல உங்களை கலந்துக்க சொல்லி அழைப்பு வந்திருக்கு...",என்று கூற,
          "அப்படியா...!சரி...அட்டெண்ட் பண்ணுவோம்!அந்த அன்னைக்கு இருக்கற மற்ற ஒர்க்ஸ் எல்லாத்தையும் தள்ளி வைச்சிடுங்க...",என்றவன்,அவள் கொண்டு வந்திருந்த பைலை பார்த்து கையெழுத்திட ஆரம்பித்தான்.
             லீலா சென்றது கௌதமிற்கு போன் செய்து கோவை மீட்டிங் பற்றி கூறியவன்,தான் மட்டும் சென்று வருவதாகவும்...கெளதம் இருந்து மற்ற வேலைகளைக் கவனித்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டு,பிறகு எதோ நியாபகம் வந்தவனாய்,
           "டேய்...!என் செக்ரெட்டரி லீலா ரிசைன் பண்ராங்களாம்..."எனக் கூற,
           "அதுக்கு நான் என்னடா செய்ய முடியும்..?வேணும்னா போய் வழியனுப்பிட்டு வரவா..?",என்று கிண்டலாக கேட்க,
            "ப்ச்...அதுக்கு சொல்லலைடா...என் செக்ரெட்டரி போஸ்டுக்கு ஆள் வேணும்னு விளம்பரம் பண்ணிடு...அதுக்குதான் கூப்பிட்டேன்...",என்க,
             "சரி டா...!நான் பார்த்துகிறேன்..நீ போய் மீட்டிங்கை அட்டென்ட் பண்ணிட்டு வா...பை..!",என்று கூறி போனை வைத்தான்.

................................................................................................................................

               மறுநாள் காலையில் வழக்கம் போல் கிளம்பிய நித்திலா,தன் அம்மாவிடம்,"அம்மா..!இன்னையோட எக்ஸாம் முடிஞ்சுது...சோ,நாங்க எல்லாம் சேர்ந்து சினிமாவுக்கு போகிறதா பிளான் போட்டு இருக்கோம்...நான் வர்ரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்...அதுவரை அப்பாகிட்ட வம்பிழுக்காம அமைதியா இருக்கனும்...சரியா...?",என்று அவர் கன்னத்தை பிடித்து வம்பிழுத்துவிட்டு,இதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த தன் தந்தைக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி விட்டு,தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குள் கிளம்பினாள்.
              தேர்வு முடிந்தவுடன் தோழிகள் அனைவரும் ஏற்கனவே சொல்லி வைத்தது போல் சினிமாவுக்கு கிளம்பினர்.அது ஒரு நகைச்சுவை படம்.இவர்கள் அடித்த கும்மாளத்தில் தியேட்டர் முழுவதும் இவர்களைத் திரும்பிப் பார்த்தது.எதையும் கண்டு கொள்ளமல் சிரித்து கூத்தடித்து விட்டு ஐஸ்கிரீம் பார்லருக்கு கிளம்பி சென்றனர்.
            "அடுத்து எல்லாம் என்ன செய்ய போறிங்க டி...?",என்று நித்திலா பேச்சை ஆரம்பித்தாள்.
             "எனக்கு வீட்டில் மாப்பிளை பார்க்கறாங்க டி....நல்ல வரன் அமைஞ்சா டும் டும்தான்...",வெட்கப் பட்டுக் கொண்டே கூறிய நிவேதாவைப் பார்த்து,"ஹேய்...நம்ம குரூப்பில் முதல் கல்யாணம்....ஹேய்...!!,"என்று தோழிகள் கூட்டம் ஆர்ப்பரித்தது.
               "போதும் நிறுத்துங்க டி...ஹே சுமி!நீ உன் காதலை உங்க வீட்ல சொல்லிட்டாயா...?",என்று நிவேதா பேச்சை மாற்ற,
              "இன்னும் இல்லை டி...எங்க வீட்ல ஒத்துக்க மாதிரி தெரியல...யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு ரவி சொல்லறாரு...என்ன பண்றதுன்னே தெரியல...!",என்று சுமதி புலம்ப,
                இதைக் கேட்ட நித்திலாவிற்கு சுறு சுறுவென்று கோபம் ஏறியது."எப்படி டி...இப்படி வீட்டுக்குத் தெரியாம லவ் பண்றதும் இல்லாம...அப்பா அம்மாவுக்குத் தெரியாம கல்யாணமும் பண்ணிக்க மனசு வருது....அப்படி என்னதான் லவ்வோ...மண்ணாங்கட்டி...!",எனப் பொரிந்து தள்ளினாள்.
             "அதெல்லாம் உனக்கு தெரியாது டி...நீயும் லவ் பண்ணினாதான் அந்த உணர்வை உணர முடியும்...வேணும்னா நீயும் லவ் பண்ணிப் பாரு..",என சுமதி பதிலடிக் கொடுக்க,
              "லவ்வா...?",என் முகத்தை சுளித்தவள்,"இந்த ஜென்மத்தில் அது நடக்காது...அப்பா அம்மாவை மீறி ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்...",என உறுதியாகக் கூறினாள்.
                பாவம்!!அவளுக்குத் தெரியவில்லை...காதலிக்க மாட்டேன் என்று கூறுபவள்,ஒரு காலத்தில்....உயிரைக் கொடுக்கும் அளவிற்கு காதலிக்கப் போகிறாள் என்று...!!பெற்றோரை மீறி ஒரு விரலைக் கூட அசைக்க மாட்டேன் என்பவள்...ஒரு நாள்...அவர்களுக்குத் தெரியாமல் மலையையே புரட்டப் போகிறாள் என்பதையும் அவள் அறியவில்லை....!!!

                                                                                                                        அகம் தொட வருவான்....!!!


Nirmala Krishnan
(@nila-krishi)
Honorable Member Writer
Joined: 5 months ago
Posts: 526
29/09/2019 2:42 pm  

                                                        அத்தியாயம் 3

 

                       நித்திலாவின் வீட்டில் அவளுக்குத் திருமணம் செய்யும் பொருட்டு குரு பலன் வந்திருக்கிறதா எனக் கேட்பதற்காக ஜோசியரிடம் சென்றிருந்தனர் அவளது பெற்றோர்கள்.ஜோசியரோ,அவளது ஜாதபடி இன்னும் ஒரு வருடம் கழித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி விட்டார்.
                    அதுவரைக்கும் வேலைக்கு சென்று வரட்டும் என்று நித்திலாவுக்கு அனுமதி வழங்கியிருந்தனர்.நித்திலாவும் அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் மும்முரமாக வேலைத் தேடிக் கொண்டிருந்தாள்.
                   அன்று......தலைக்குக் குளித்துவிட்டு,கூந்தலை உலர வைத்தபடி அமர்ந்திருந்த நித்திலாவிடம் வந்த மீனாட்சி,"நித்தி.....!சம்மந்தி அம்மா....அதுதான் நம்ம தீபிகாவின் மாமியார் ராஜாத்தி அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்து இருக்காங்களாம்....நானும் உன் அப்பாவும் போய் பார்த்துட்டு வந்துட்டோம்...நீ இன்னைக்கு பிரீயா இருந்தா போய் பார்த்துட்டு வந்துடு...",என்க,
                "சரிம்மா......இப்போவே கிளம்பறேன்.....",என்றவள் வேகமாக சென்று உடை மாற்றிவிட்டு,உலர்ந்த கூந்தலை தளர பின்னலிட்டுக் கொண்டு கிளம்பினாள்.
                 இவள் மருத்துவமனை சென்றடைந்த நேரத்தில் தீபிகாவும் கேசவனும் அங்குதான் இருந்தனர்.அதிதி குட்டியை வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் விட்டுவிட்டு வந்திருந்தனர்.
                  இவளை பார்த்ததும்,"வா நித்தி.....!",என்று வரவேற்று அழைத்துச் சென்றனர்.
நித்திலாவின் மீது ராஜாத்திக்கு எப்பொழுதுமே ஒரு தனிப் பிரியம் உண்டு.
                 நித்திலாவைப் பார்த்ததுமே,"அடடே.....வா நித்தி....!",என்று புன்னைகையுடன் வரவேற்றார் ராஜாத்தி.
                 "அத்தை....!இப்போ உடம்புக்குப் பரவாயில்லையா.....?",என்று விசாரித்தபடி கட்டில் அருகே சென்று அவர் கையைப் பிடித்துக் கொண்டாள்.
                 "இதுதான் நீ உன் அத்தையைப் பார்க்க வரும் லட்சணமா.....?எனக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சவுடனே அலறி அடிச்சுட்டு ஓடி வந்து....இந்நேரம் சாத்துக்குடி பிழிஞ்சு தந்திருக்க வேண்டாமா....?",என அவர் அவளை சீண்ட,
                 "என்ன பண்றது அத்தை.....!இதுவே நீங்க இன்னொரு பிள்ளையைப் பெத்து வைச்சிருந்தீங்கன்னு வைச்சுக்கோங்க....நான் அவரைக் கட்டிக்கிட்டு இந்நேரம் உங்களுக்கு விழுத்திடுச்சுக்கிட்டு சேவகம் செஞ்சிருப்பேன்.....நீங்கதான் ஒரு பையனை மட்டும் பெத்துக்கிட்டு என்னை ஏமாத்திட்டிங்களே.....!",எனப் போலியாய் வருத்தப்பட,
                "ஏமாற்றுவானேன்....?அதுதான் நான் இருக்கேனே....?",என்ற குரல் அறை வாசலில் இருந்து வர அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.அங்கு வாசலையே இடித்துவிடும் உயரத்துடன் கம்பீரமான....வசீகரமான புன்னகையுடன் நின்றிருந்தான்,ஆதித்யன்.
                ஆம்.ஆதித்யன்தான்.....ஆதியின் அம்மாவிற்கு ராஜாத்தி அம்மாள் எதோ தூரத்து முறையில் ஒன்று விட்ட தமக்கை முறை.இரு குடும்பத்திற்கும் எந்தவொரு போக்குவரத்தும் பேச்சுவார்த்தையும் இல்லை.

               ஆதி மட்டும்....அவன் சிறு வயது விடுறையில் ஒரு பத்துநாள் ராஜாத்தி அம்மா வீட்டில் கொண்டாடினான்.அவனுக்குப் பிடித்த பலகாரம்  செய்து கொடுத்து அவனைப் பார்த்துக் கொண்ட பெரியம்மாவையும்....தன்னோடு இணைந்து விளையாடிய கேசவன் அண்ணாவையும் அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது.அவ்வப்போது அவன் பெரியம்மாவுடனும்.....கேசவனிடமும் போனில் பேசுவது உண்டு.எதாவது வேலையாக கோவை வந்தால் இவர்களை பார்க்காமல் செல்ல மாட்டான்.
               இன்று மீட்டிங்கை முடித்துவிட்டு கடைவீதியில் சுற்றிக்கொண்டிருந்தவன்,அவனது பெரியப்பா ராஜாத்தியின் கணவர் ரகுராமை சந்தித்தான்.அவர் விபரம் கூறவும் நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தான்.
              'யார் இவன்....?ஆள் பார்க்க கம்பீரமாக ஸ்மார்ட்டாக இருக்கிறான்....இந்த இடத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இங்க வந்து நின்னுக்கிட்டு இருக்கான்....கண்ணைப் பார்....எதிர்ல இருக்கிறவங்களை அப்படியே மயக்கிடும்....'என்று அவனை அளவிட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா.
              அவன் பார்வையிடலைக் கண்டு கொண்டதற்கு அடையாளமாக அவன் விழிகளில் மின்னல் தெறித்தது.ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி 'என்ன?' என்று கேட்டவனைக் கண்டு ஒரு கணம் மயங்கி நின்றவளை,"அடடே....!வாடா ஆதி....!எப்போ வந்த....?",என்ற ராஜாத்தியின் குரல்,மயக்கத்தைத் தெளிய செய்து இவ்வுலகிற்கு அழைத்து வந்தது.
              'சேச்சே......!ஒரு பையனை இப்படி பார்த்துகிட்டு இருக்கேனே....அவன் என்ன நினைப்பான்....!',என தன்னைத் தானே கடிந்துக் கொண்டவள் அவன் பேசுவதைக் கேட்பதில் தன் கவனத்தைத் திருப்பினாள்.
             "இன்னைக்கு காலையிலதான் வந்தேன் பெரியம்மா.....கடை வீதில பெரிப்பாவைப் பார்த்தேன்.....அவருதான் விஷயத்தை சொன்னாரு....இப்போ உங்களுக்கு பரவாயில்லையா....?டாக்டர் என்ன சொன்னாரு.....?",எனக் கேட்டவனிடம்,
             "அதெல்லாம் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டாருப்பா.....நாளைக்கு டிஸ்சார்ஜ் செஞ்சிடுவாங்கலாம்.....",எனக் தகவல் கூறினார் ராஜாத்தி.
திடீரென்று "நீங்க என்னை ஏமாத்திட்டிங்க பெரியம்மா....",எனத் தன் பெரியம்மாவின் மீது ஆதித்யன் குற்றம் சாட்ட,
              அவன் கூறியதைக் கேட்டு சிரித்துக் கொண்டே,"ஹா ஹா.....இன்னொரு பையனைப் பெத்துத் தராம நித்தியை ஏமாத்தினேன்.....உன்னை எப்படி ஏமாத்தினேன்னு அதையும் சொல்லிடு.....கேட்டுக்கிறேன்.....!',என்றவரிடம்,
              "நீங்க என் பெரியம்மாதானே....?",எனக் கேள்வி எழுப்பினான்.
              "ஆமா.....",
              "நான் உங்க பையன்தானே......?,
              "ஆமா....!",
              "நீங்க என்னை உங்க பையனாத்தானே நினைக்கறீங்க....?,
              "ஆமாம்டா.....!இதிலென்ன உனக்கு சந்தேகம்....?",என ராஜாத்தி கேட்க,
              "அப்படின்னா.....இந்தப் பொண்ணு....இவ்வளவு நேரம் 'என்னை ஏமாத்திட்டிங்க' அப்படின்னு உங்க மேல பழி போட்டுட்டு இருந்தாலே.....அப்போ நீங்க என்ன சொல்லியிருக்கணும்.....?,என ஆதித்யன் கேட்க,
              "என்ன சொல்லியிருக்கனும்.....",என அவர் திருப்பிக் கேட்க,
              "'இல்லைம்மா.....எனக்கு இன்னொரு மகன் இருக்கான்....அவன் பேரு ஆதித்யன்... சென்னையில பிசினெஸ் பண்ணிட்டு இருக்கான்.....'அப்படின்னு சொல்லியிருக்கணுமா.... இல்லையா? என்று அவரை மடக்க,
              "ஆமாம்ப்பா......சொல்லியிருக்கணும்தான்....சரி விடு!இப்போ ஒண்ணும் கெட்டுப் போகல.....ஏம்மா நித்தி....!கேட்டுக்கோம்மா......இதோ இவன்தான் என்னோட இன்னொரு பையன்....நான் ஒன்னும் உன்னை ஏமாத்தல.....!என்னோட பையனை காண்பிச்சுட்டேன்....இப்போ நீ என்ன பண்றதா உத்தேசம்....?",என ராஜாத்தி நித்திலாவிடம் குறும்பாக வினவ,
              அந்நேரம் அவளையும் அறியாமல் அவளுடைய பார்வை ஆதித்யனின் மேல் படிந்தது. அவனும் இவளைத்தான் குறும்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.அதோடு யாரும் அறியாமல் ஒற்றைக் கண்ணை சிமிட்ட வேறு செய்தான்.
அவனுடைய செய்கையில் விதிர்த்துப் போனவள்,"இல்லை.....அது வந்து.... விளையாட்டுக்கு.....",என்று திக்கித் திணற,
             "அடடா.....!எங்க நித்தியையே திணற வைச்சுட்டாயே....வெல்டன் ஆதி....!",என்று கேசவன் ஆதித்யனைப் பார்த்து சிரிக்க,
              "அது....அதெல்லாம் ஒண்ணுமில்லை....எனக்கு வேலை இருக்கு....!நான் கிளம்பறேன்....!",என்றபடி ஓடி விட்டாள் நித்திலா.
               அறையில் இருந்த நால்வரின் சிரிப்பொலியும் அவளை பின்தொடர்ந்தது.அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனை,"என்னப்பா ஆதி...வந்தவுடனே என் கொழுந்தியாக்கிட்ட வம்பிழுக்கற....?",என்ற கேசவனின் குரல் கலைத்தது.
அப்பொழுதுதான் தீபிகா அங்கிருப்பதைக் கவனித்த ஆதித்யன்,"ஹாய் அண்ணி.....!எப்படி இருக்கீங்க....?உங்க கல்யாணத்திற்கு என்னால வர முடியல....",எனத் தன் வருத்தத்தை தெரிவித்தான்.
              "பரவாயில்லை ஆதித்யன்....உங்களை பத்தி இவர் நிறைய சொல்லியிருக்காரு....வெரி பிஸி மேன் போல......!",என்ன சிரித்தாள் தீபிகா.
              "அப்படியெல்லாம் இல்லை அண்ணி.....",என்றவன் கேசவனைப் பார்த்து "அண்ணா....! உங்களுக்கு பொண்ணு பிறந்திருக்கறதா கேள்வி பட்டேன்.....எங்க அந்த குட்டி தேவதை...?"என்று வினவ,
               "அவளை வீட்ல விட்டுட்டு வந்திருக்கோம் டா....சரி... நீ வீட்டுக்கு வா....!,என அவனை அழைக்க,
                "இல்லைண்ணா.....நாளைக்கு காலையில கிளம்பணும்....இன்னொரு நாளைக்கு வரேன்....",என்றவன் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பி சென்றான்.

_அன்று இரவு.......

                  மெத்தையில் படுத்திருந்த நித்திலாவிற்கு உறக்கம் வருவதற்குப் பதிலாக,ஆதித்யனின் முகம்தான் வந்து போனது.ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி 'என்ன?' என்று கேட்ட அவன் முகமும்......குறும்புப் புன்னகையை சுமந்த அவன் இதழ்களுமே....அவள் மனதில் வந்து....அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.
                'யாராக இருக்கும்.....?அத்தைக்கு மகன் முறை போல....!எவ்வளவு உரிமையுடன் நடந்து கொண்டான்....!பேச்சிலேயே எல்லோரையும் கவர்ந்துவிடுவான்.....அத்தையோட வாயலையே அவரை மடக்கிட்டான்....',என்று ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தவள் பிறகு 'சே...என்ன நித்தி இது.....?நீ சரியில்ல.....யாரோ ஒருத்தனைப் பத்தி இப்படித்தான் யோசிச்சுகிட்டு இருப்பாயா..... பேசாம படுத்துத் தூங்கு.....!' என்று தன் மனதைக் குட்டி அடக்கியவள்,தூங்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றாள்.
               அங்கு......ஒரு உயர் ரக ஹோட்டல் ரூமில் மெத்தையில் படுத்திருந்த ஆதித்யனும் கிட்டத்தட்ட இதே நிலைமையில்தான் இருந்தான்.
             'எவ்ளோ அழகா இருந்தாள்.....!துறு துறுன்னு அங்கேயும் இங்கேயும் அலை பாய்ஞ்சுட்டு இருந்த கண்களாலேயே என்னை மயக்கிட்டா....இது என்ன நான்தானா....?ஒரு டீன் ஏஜ் பையன் மாதிரி மனசுக்குள்ள வர்ற இந்த குறுகுறுப்பு....நிச்சயமா இது வயசுக்குண்டான கவர்ச்சி இல்ல....!'
             'இப்படி பார்த்த உடனே ஒரு பொண்ண காதலிக்க ஆரம்பிச்சிடுவேன்னு....நேத்து வரைக்கும் யாரு சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன்....கண்டிப்பா இது காதல்தான்....நிச்சயம் அவள் என்னவள்தான்....!அவளை எப்படியாவது என்கிட்டே வர வைக்கணும்.....அவளைப் பத்தி எல்லா விஷயமும் கலெக்ட் பண்ணினத்துக்கு அப்பறம்தான் சென்னைக்குக் கிளம்பணும்....!',என்ற உறுதி ஆதித்யனுக்குள் உதித்தது.
              இதுதான் ஆதித்யன்.....!ஒன்றை மனதில் நினைத்து விட்டால்,அதை முடிக்காமல் விட மாட்டான்.
              இங்கு........இவன் 'அவள் என்னவள்.....!என்னிடம் வரவழைக்க வேண்டும்......!'என்ற எண்ணத்தில் தூங்காமல் புரண்டுக் கொண்டிருக்க......அவளோ.....ஒரு அந்நிய ஆடவனை மனத்தால் நினைப்பதும் தவறு என்ற எண்ணத்தில் ஆதித்யனின் நினைவை எளிதாக ஒதுக்கித் தள்ளி விட்டு நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்....!
              காதல் என்ற ஒன்று இருக்கிறதல்லவா।।।।!அது எத்தனை மாயங்களையும் செய்யவல்லது.....!இங்கு என்ன மாயம் செய்ய இருக்கிறதோ....!பார்ப்போம்......!!

।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

               அன்று காலை..........நித்திலா பரபரப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தாள்.அன்று அவளுக்கு ஒரு இண்டெர்வியூ இருந்தது.அதற்காகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
அழகிய வேலைப்பாடு அமைந்த இளஞ்சிவப்பு வண்ண சுடிதார் அணிந்து,தலைக்குக் குளித்து உலர வைத்தக் கூந்தலை தளர்வாக பின்னலிட்டு.....மிதமான ஒப்பனையோடு        தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
              அழகாக....அதே சமயம்,கண்ணனுக்கு உறுத்தாமல் தயாராகி வந்த மகளை பெருமைப் பொங்க பார்த்தார் மீனாட்சி.
              "இருடி.....!டிபன் ரெடி ஆகிருச்சு....சாப்பிட்டுட்டுப் போ.....!",என்ற தாயாரிடம்,
              "இல்லைம்மா......லேட் ஆகிடுச்சு.....நான் கிளம்பறேன்.....!",என்றபடி தன் கையில் வாட்சைக் கட்டிக் கொண்டிருந்தாள்.
               "சரி இரு.....!",என்றவர் சமையலறைக்கு சென்று இரு இட்லிகள் அடங்கிய தட்டுடன் வந்தார்.
               "நீ பாட்டுக்குக் கிளம்பு.....நாம் அப்படியே ஊட்டி விடறேன்....",என்றபடி மகளுக்கு ஊட்ட ஆரம்பித்தார்.
                  தன் அம்மா ஊட்டுவதற்கு வாகாக வாயைத் திறந்தபடி தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
                  "என்னடா நித்திம்மா.....!இன்டெர்வியூக்கு கிளம்பிட்டாயா....?ஆல் தி பெஸ்ட் டா கண்ணா....!",என்று வாழ்த்துக் கூறியபடி வந்த தன் தந்தைக்கு,
                 "தேங்க்ஸ் ப்பா....!நான் கிளம்பறேன்....",என்று இருவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு தன் வண்டியைக் கிளம்பினாள்.
                "பார்த்துப் போ....!நல்லபடியா அட்டெண்ட் பண்ணிட்டு வா....!",என்ற தன் தாய்க்கு ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்தபடி விரைந்தாள்.

                  காலையில் எழுந்த ஆதித்யன்,முதல் வேலையாக கௌதமிற்கு போன் செய்து அலுவலக நிலவரத்தை விசாரித்தான்.வேலை சம்பந்தமாக அவனுக்கு சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு,அனைத்தையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு போனை வைத்தான்.
                'இங்க ரூமலேயே இருக்கறதுக்கு பக்கத்தில இருக்கற மாலுக்கு போயிடு வருவோம்.....நாம் மால் கட்டறதுக்கு எதாவது ஐடியா கிடைக்கும்....',என்று எண்ணியவன் குளித்து முடித்துத் தயாராகி காலை உணவை உண்டுவிட்டுக் கிளம்பினான்.
                மாலின் கட்டிட அமைப்பு முறையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆதித்யனின் பார்வை வட்டத்தில் வந்து விழுந்தாள் நித்திலா.ஒரு டேபிளில் அமர்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் விழிகள் பளிச்சிட.....அவளை நோக்கி நடந்தான் ஆதித்யன்.
               "ஹாய் நித்திலா....!என்ன இந்த பக்கம்....?",என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள்,அங்கு ஆதித்யன் நிற்பதைக் கண்டு ஒரு சிறு முறுவலுடன்,
               "ஹாய் சார்.....!ஒரு இன்டெர்வியூக்கு வந்தேன்....",என்றாள்.
              "இன்டெர்வியூவா....?என்ன படிச்சிருக்க.....?", இயல்பாக அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தபடி கேள்வி கேட்டவனின் விழிகள் அவளை ரசனையுடன் அளவிட்டது.
                இதுவரை அவன் பார்த்துப் பழகியிருந்த பெண்கள் அனைவரும்,அரைகுறை ஆடையுடன்.....அதீத மேக்கப்புடனும்....உதட்டுச் சாயத்துடனும்தான் அவனுக்கு அறிமுகம் ஆகியிருந்தனர்.அணிந்திருக்கும் ஆடை எப்பொழுது கழண்டு விழுமோ என்ற ஐயத்துடன்தான் அது அவர்களது உடலைத் தழுவியிருக்கும்.
               இவளோ.......அவர்களுக்கு முற்றிலும் நேர்மாறாய் கண்ணியத்துடன் உடை அணிந்திருந்தாள்.துப்பட்டாவைக் கூட ஒரு வித நேர்த்தியோடு அவள் அணிந்திருந்த விதம் அவனைக் கவர்ந்தது.
              அவளைக் காதலுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன்,"சார்....!" ,என்ற பேரரின் அழைப்பில் தன்னை சுதாரித்துக் கொண்டான்.
              "ஒரு ஆப்பிள் ஜூஸ்!",என்று ஆர்டர் கொடுத்துவிட்டு, நித்திலாவிடம் திரும்பியவன், "சொல்லு.....!என்ன படிச்சிருக்க....?",எனத் திரும்பவும் ஆரம்பிக்க,
                அவன் தன்னை ஒருமையில் அழைப்பதைக் கவனித்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல்,"எம்.காம் சார்...!வீட்ல இருக்கறதுக்கு வேலைக்குப் போகலாம்ன்னு வேலை தேடிட்டு இருக்கேன்...",என்றாள்.
                 "ஓ....!அப்படியா...!",என்று சிறிது நேரம் யோசித்தவன் பிறகு,"என் ஆபிஸ்ல ஒரு வேலை காலியா இருக்கு...உனக்கு ஓகேன்னா...அந்த போஸ்ட்டை உனக்கே கொடுக்கறேன்...நீ என்ன சொல்ற...?",என்று தன் தாடையைத் தடவியபடிக் கேட்க,
                "என்ன போஸ்ட்...?",என்று ஆவலாக விசாரித்தாள் நித்திலா.
                "என் செக்ரெட்டரி...!",அவன் அசால்ட்டாக கூற,
                 "செக்ரெட்டரி போஸ்ட்டா....?,என்று விழி விரித்தாள் அவள்.
                  "ம்ம்...என் செக்ரட்டரி இன்னும் மூணு மாசத்தில ரிசைன் பண்ணப் போறாங்க....எப்படி இருந்தாலும் ஒரு ஆளைத் தேடணும்...உனக்கு ஓகேன்னா...எனக்கு ஒரு வேலை மிச்சம்....!",என்றவன் அவள் பதிலுக்காக அவளை நோக்கினான்.
                    "இல்ல சார்...!இது சரி வராது....அதுவும் இல்லாம என் படிப்புக்கும் செக்ரெட்டரி வேலைக்கும் சம்பந்தமே இல்லையே...!",என்று மறுத்தவளிடம்,
                    "அதனால் என்ன...?செக்ரெட்டரி வேலை என்ன பெரிய கம்ப சூத்திரமா...?கத்துக்கிட்டா போச்சு...!அதுதான் என் செக்ரெட்டரி ரிசைன் பண்றதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே...அதுக்குள்ள கத்துக்க மாட்டியா...என்ன...?",என்று விடாமல் வாதாடினான்.
                  "இருந்தாலும்....சென்னை வரைக்கும் அனுப்ப என் அம்மா அப்பா ஒத்துக்க மாட்டாங்க....",என்று தயங்க,
                   "கமான் நித்திலா...!வெளியே போனாதான் உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும்...உன் பேரெண்ட்ஸை உன்னால சமாளிக்க முடியாதா...?",என்க,
                    சிறிது மனம் தெளிந்தவள்,"ஒகே சார்...!நான் என் வீட்ல சொல்லிப் பாக்கறேன்...",என்றாள்.
                     "சொல்லிப் பார்க்க வேண்டாம்...சம்மதிக்க வை...!உன் திறமையை வளர்த்துக்க இது ஒரு சான்ஸா அமையும்ல...?",என்க,
                   "நீங்க சொல்றதும் சரிதான்...என் முடிவை நாளைக்கு சொல்றேன்...",என்றவளிடம்,
                  "எப்படி சொல்லுவ...?போன் நம்பர் வேணும்ல...?,என்றவன் அவளது கையில் இருந்த மொபைலைப் பிடுங்காதக் குறையாக வாங்கி,தன் நம்பரை 'ஆதி' என்ற பெயரில் பதிவு செய்தவன்,தனது மொபைலுக்கும் ஒரு மிசுடுகால் கொடுத்துக் கொண்டான்.
                   அவனது செய்கையை இமைக்காதுப் பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டவன்,"அது...வந்து...நான் இன்னைக்கு சாயந்திரமே சென்னைக்கு கிளம்பிடுவேன்...அதுதான்...",என்று அசடு வழிந்தபடியே செல்போனைக் கொடுத்தான்.
                "ம்ம்...சரி...!நான் கிளம்பறேன்..!",என்று விடைபெற்றுச் சென்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் எப்படியாவது அவளைச் சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது.
                அவள் தன் அருகில் இருந்தால் போதும் தன் மனதை புரிய வைத்துவிடலாம் என்ற நினைப்பில் அவன் இருந்தான்.ஆனால்....அவன் அறியமாட்டான் அல்லவா...?தன் மனதைப் புரிய வைப்பதற்கு அவன் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கும் என்பதை...!!

 

                                                                                           _அகம் தொட வருவான்......!!!

ஹாய் பிரெண்ட்ஸ்...
                                               உங்கள் கருத்துக்கள்தான் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டும்.படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்....


Nirmala Krishnan
(@nila-krishi)
Honorable Member Writer
Joined: 5 months ago
Posts: 526
02/10/2019 8:12 am  

ஹாய் பிரெண்ட்ஸ்....

                                     நான்காவது அத்தியாயத்தோடு உங்கள் அகம் தொட வந்து விட்டேன்....சென்ற அத்தியாயத்திற்கு லைக் போட்ட அனைவருக்கும் நன்றி...!இனிதான் கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கும்...ஸோ...மிஸ் பண்ணாம படிங்க...!படித்து விட்டு பிடித்திருந்தால் லைக் போடவும்....

 

                                                                             அத்தியாயம் 4

                                     "அம்மா.....!ப்ளீஸ் ம்மா...!இங்கிருக்கும் சென்னைதானே....பஸ் ஏறினா நம்ம ஊருக்கு வந்திடலாம்....",என்று தன் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் நித்திலா.

                                  சென்னையில் வேலை கிடைத்திருக்கும் விபரத்தை பற்றியும்....ஆதித்யனைப் பற்றியும் கூறியவள் சென்னை செல்வதற்காக தன் அப்பாவின் சம்மதத்தை வாங்கி விட்டாள்.அவள் அம்மாதான் ஒத்துக்கொள்ளாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்.அவரை சம்மதிக்க வைப்பதற்காகத்தான் தந்தையும் மகளும் களம் இறங்கியிருந்தனர்.

                             "நீ என்ன சொன்னாலும் சரி நித்தி....நீ சென்னைக்கு போறதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்...."

                            "அவதான் ஆசைப்படறால்ல.....என்ன....இன்னும் ஒரு வருஷம் வேலைக்கு போவாளா....?அவ்வளவுதான....போயிட்டு வரட்டும் விடு...."என்று தன் மகளுக்காக மனைவியிடம் சமாதானம் பேசினார் கிருஷ்ணன்.

  
                            "நீங்க பேசாதீங்க....அவ இங்கேயே எங்கேயாவது வேலைக்கு போறதுன்னா போகட்டும்.....இல்லைன்னா....வீட்லயே இருந்து சமையல கத்துக்கிட்டும்.....",என அவர் தன் கணவரின் மேல் பாய,

                           "அம்மா....சென்னைக்குப் போனா எனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்ல....வாரா வாரம்....சனி ஞாயிறு ஆனா கிளம்பி ஊருக்கு வந்திடப் போறேன்.....இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை...?ப்ளீஸ் ம்மா...ஒகே சொல்லுங்க....",என்று நித்திலா தன் அம்மாவுக்கு ஐஸ் வைக்க,

                            "நீ சொல்றது சரி வராது நித்தி....உன்னை இன்னொரு டிகிரி படிக்க வைச்சதுக்கே....நம்ம சொந்தக்காரங்க முணுமுணுத்துட்டு இருக்காங்க....இதுல சென்னைக்கு வேலைக்கு அனுப்பினா அவ்வளவுதான்.....",என்று மறுத்தவரிடம்,

                            "என்ன சொல்ற நீ...?நம்ம பிள்ளை மேல நமக்கு நம்பிக்கை இருக்கணும்....மத்தவங்க சொல்லுவாங்க அப்படிங்கறதுக்காக....அவ சந்தோஷத்தை கெடுக்க முடியாது....",என்று கோபமாக இடையிட்டார் கிருஷ்ணன்.

                        "சே சே....!நம்ம பொண்ணு மேல நம்பிக்கை இல்லாம எல்லாம் இல்ல.....வீணா ஏன் ஊர் வாயில அரைபடணும்னுதான் சொன்னேன்.....",தன் கணவரிடம் கூறியவர், நித்திலாவிடம் திரும்பி ,"நித்தி....நீ இன்னும் எங்களைப் பிரிஞ்சு இருந்ததே இல்லையேம்மா.....எப்படி ஹாஸ்டல்ல சமாளிப்ப...?" ,என்று ஒரு தாயாய் கவலைப்பட,

                      "அதெல்லாம் சமாளிச்சுக்குவேன் ம்மா....!லீவ்னா இங்கேதான வரப் போறேன்.....ப்ளீஸ் ம்மா...!ஒகே சொல்லுங்க...!",தன் தாயின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச, 

                         "சரின்னு சொல்லும்மா மீனு....வெளியில போய் இருந்து பார்த்தாதான...அவளுக்கும் நாலு மனுஷங்களைப் பத்தி தெரிய வரும்....போய் இருந்து பார்த்துட்டு வரட்டும்....",,கிருஷ்ணனும் தன் பங்கிற்கு மனைவியிடம் கெஞ்சினார்.

                               பாவமாக தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மகளையும்....கணவனையும் பார்க்கும் போது அவருக்கும் மறுக்கத் தோன்றவில்லை.

                         "அப்பாவும்...மகளும் சேர்ந்தா...நினைச்சதை சாதிச்சிடுவீங்களே....", என்று போலியாக அழுத்துக் கொண்டவர்,"சரி...போய்ட்டு வா...!ஆனா...லீவ் விடும் போது நீ இங்கே இருக்கணும்....",என்ற கண்டிஷனோடு ஒத்துக் கொண்டார்.

                         அதன் பிறகு அவள் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றன.

                         ஆதித்யனுக்கு விபரம் தெரிவித்து விடலாம் என்ற எண்ணத்தோடு அன்று இரவு அவனுக்கு போன் செய்தாள் நித்திலா.

                         அங்கு....தன் அறையில் படுக்கையில் படுத்தபடி தன்னவளின் நினைவுகளில் மூழ்கி இருந்தவனை,அவனது போனின் ஒலி எழுப்பியது. போனின் திரையில் 'நிலா' என்ற எழுத்து ஒளிர்வதைக் கண்டவனின் உள்ளம் குத்தாட்டம் போட,அதை எடுத்து "ஹலோ" என்றான்.

                         "சார்...!நான் நித்திலா பேசறேன்...சாரி சார்....இந்த நேரத்துல உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன்...." ,என்றாள் தயங்கியபடியே.

                        அவனோ.....'அதுதான் தினமும் என்னைத் தூங்க விடாம டிஸ்டர்ப் பண்றயே பேபி...!அப்படியே தூங்கினாலும்....கனவுல வந்து என்னை இம்சிக்கிற...!',என மனதுக்குள் நினைத்தபடி பெருமூச்சு விட,

                      அதற்குள் அவள் "ஹலோ...ஹலோ சார்...!",என்று இரண்டு முறை போனில் கத்தியிருக்க....தன்னை சுதாரித்துக் கொண்டவன்,

                       "ஹ்ம்ம்....நித்திலா!நான் லைன்லதான் இருக்கேன்.....என்ன விஷயம்னு சொல்லு...?"என்று அவன் ஊக்க,

                      "எங்க வீட்ல சென்னை வரதுக்கு ஒகே சொல்லிட்டாங்க சார்...நான் எப்போ வந்து ஜாயின் பண்ணிக்கிட்டும்...?",என்றாள்.

                     அவள் கூறிய விஷயத்தில் அவன் மனம் துள்ளியது.அந்த மகிழ்ச்சியோடே,"ஹோ...கங்கிராட்ஸ் நித்திலா...! ஒரு வழியா உங்க அம்மா அப்பாவை சம்மதிக்க வைச்சுட்ட...வெரி குட்...! நீ நாளைக்கே கூட வந்து ஜாயின் பண்ணிக்கலாம்....யுவர் அப்பாயின்மென்ட் ஆர்டர் இஸ் ரெடி...!",என்க,

                       "தேங்க் யூ சார்....தேங்க் யூ சோ மச்....!நான் நாளைக்கு மறுநாள் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்....",புதிதாக வேலைக்கு செல்லப் போகும் உற்சாகம் அவள் குரலில் தெறித்து விழுந்தது.

                         அவள் உற்சாகத்தில் தானும் மகிழ்ச்சியடைந்தவன்,"ஒகே நித்திலா...!நீ காலைல 9 மணிக்கு வந்திடு...மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்....",என்றான்.

                         "ஒகே சார்...பை...!",என்றபடி அவள் போனை வைத்துவிட,அன்று இரவு தூங்குவதற்க்கு வெகு நேரம் ஆனது ஆதித்யனுக்கு.

                        அடுத்த நாள் காலை...நித்திலாவின் வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

                        அன்று மதியமே அவள் சென்னை கிளம்புவதால் அதற்குத் தேவையான பொருட்களை எடுத்து வைப்பதிலும்....பேக்கிங் செய்வதிலும் நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

                         சென்னை வரை வந்து விட்டு விட்டு வருகிறேன் என்று கூறிய தந்தையையும் 'வேண்டாம் என்று மறுத்துவிட்டாள் நித்திலா.அவளை வழியனுப்புவதற்காக அவளுடைய பெரியம்மா கனகம் வந்திருந்தார்.வழியனுப்ப வந்தார் என்பதைவிட வம்பிழுக்க வந்தார் என்று கூறுவது பொருத்தம்.

                        "ஏன் தம்பி...!இவ்வளவு தூரம் பொண்ணை அனுப்பனுமா என்ன....?உலகம் ரொம்பவும் மாறிக் கிடக்குது...",என்று ஆரம்பித்தார்.

                        இவர் ஆரம்பித்த உடனேயே நித்திலாவுக்கு பக்கென்று இருந்தது.'ஐயோ...இந்த பெரியம்மா எந்த ஏழரையை இழுத்து விடப் போகுதுன்னு தெரியலையே....இதெல்லாம் வரலைன்னு யார் அழுதா...?' மனதுக்குள் புலம்பியபடியே கிளம்பிக் கொண்டிருந்தாள்.

                   "உலகம் எப்படி இருந்தால் நமக்கு என்ன அண்ணி....?நாம ஒழுங்கா இருந்தாலே போதும்....",என்று கிருஷ்ணன் பட்டும் படாமல் கூற,

                   ''விடுவேனா' என்பது போல் தன் கொளுந்தனாரை பார்த்த கனகம்,"அதுக்கு நாம ஒழுங்கா இருக்கணுமேப்பா....ஏதோ படிக்க வைத்தோமா......காலா காலத்தில் கல்யாணம் பண்ணினோமா அப்படின்னு இருக்கணும்.....அத விட்டுட்டு அங்க அனுப்பறேன்....இங்க அனுப்பறேன்னு பெண் பிள்ளையை அனுப்புவது நல்லாவா இருக்கு....?",என நீட்டி முழக்க,

                       "நம்ம பிள்ளைக மேல நமக்கு நம்பிக்கை வேணும் அண்ணி.....என் மகளுக்கு எது சரி...எது தப்புனு சொல்லிக் கொடுத்துதான் வளர்த்திருக்கிறேன்...."

                     அப்பொழுதும் நான் அடங்குவேனா என்பது போல், "நம்ம பொண்ணு நல்லா இருந்தாலும்....சுத்தி இருக்கறவங்க மனச கெடுக்கத்தான் பார்ப்பாங்க....",என விடாமல் வம்பிழுக்க,

                        உள்ளே சமையல் அறையிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த நித்திலாவின் தாய்க்கு கோபம் கோபமாக வந்தது. 'என் புள்ளைய பத்தி இவங்க பேசறாங்க....ஏதாவது வம்பிழுக்கறதுக்குன்னே வீட்டுக்கு வர வேண்டியது....", என்று பொரிந்துக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தார்.

                       கனகத்தின் பேச்சில் கிருஷ்ணனுக்கும் எரிச்சல் எட்டிப் பார்க்க, "நாம ஒழுங்கா  இருந்தா சுத்தி இருக்கறவங்க பத்தி என்ன கவலை அண்ணி.....அதுவும்  இல்லாம... என் மகளுக்கு... ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி...அவள பெத்தவங்களைப் பத்தியும்.. .நம்ம குடும்பத்தை பத்தியும் யோசிக்கணும்னு சொல்லிக் கொடுத்துதான் வளர்த்திருக்கிறேன்.....என் மகளுக்குத் தெரியும்... அவ அப்பா அவமேல எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்கிறார்னு... நம்ம குடும்பத்துக்கு களங்கம் விளைவிக்கிற மாதிரி அவ முடிவு இருக்காது..... எனக்கு அவ மேல முழு நம்பிக்கை இருக்கு...!",என்று முடித்து விட்டார்.

                        இதைக் கேட்டு கனகத்தின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே...."சரிப்பா...அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்....ஓரளவுக்குத்தான் நானும் எடுத்து சொல்ல முடியும்...",என்று அங்கலாய்த்தவாறே சென்று விட்டார்.

                        இதை அனைத்தையும் உள்ளே அறையில் அமர்ந்திருந்த நித்திலா கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவள் மனதிற்குள், 'நிச்சயமா அப்பா....உங்களுக்கும் அம்மாவுக்கும் அவமானம் தர்ற மாதிரியான எந்த விஷயத்தையும் பண்ண மாட்டேன்....', என்ற உறுதி எழுந்தது.

                      ஆனால்....அந்த உறுதியை குலைப்பதற்கென்றே  ஒருவன் பிறந்து வந்திருக்கிறான் என்பதை யார் அவளுக்கு சொல்வது....?காதல் நடத்தும் நாடகத்தில் அவளும் ஒரு பொம்மைதான் என்பதை அவள் அப்போது அறியவில்லை....!!

                       ஒருவழியாக பேக்கிங் அனைத்தையும் முடித்து பேருந்து நிலையத்திற்கு கிளம்பினர்.அவள் அக்காவும் நித்திலாவை வழியனுப்புவதற்காக வந்திருந்தாள்.

                     "ஆல் தி பெஸ்ட் டி....உடம்பை பார்த்துக்கோ....தனியா இருக்க போற...ஹாஸ்டல் லைப்..... ஜாலியா என்ஜாய் பண்ணு...." ஒரு பக்கம் அவள் அக்கா வலியுறுத்திக் கொண்டிருக்க....மறுபுறம் ,  "நேரத்துக்கு சாப்பிட்டுவிடு.....சென்னைக்கு போய் சேர்ந்ததும் போன் பண்ணு....கண்ட நேரத்துல வெளிய சுத்திகிட்டு இருக்காத....",என்று அவள் அம்மா அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.

                    இருவர் கூறுவதற்கும் தலையை தலையை ஆட்டியபடி நின்றிருந்தாள் நித்திலா.

                    அவள் மனது உற்சாகத்தில் மிதந்து கொண்டு இருந்தது.முதன் முதலாக எதிர் கொள்ளப் போகும் புது அனுபவம் எப்படி இருக்கும் என்ற கனவில் ஆழ்ந்திருந்தாள்.

                 "அடாடா...!ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க....எல்லாம் அவ பார்த்துக்குவா.....அம்மா....நித்தி!உன் பிரெண்ட் நந்தினிக்கு சொல்லிட்டாயா...?",தன் மனைவியையும் மூத்த மகளையும் அடக்கியவர் நித்திலாவிடம் கேட்க,

                    "ம்ம்....போன் பண்ணிட்டேன் ப்பா...அவ பஸ் ஸ்டாண்ட்க்கு வந்து என்னை பிக்கப் பண்ணிக்கறதா சொன்னா....."

                    நித்திலாவின் தோழி நந்தினி சென்னையில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு அருகில்தான்....நித்திலா வேலை பார்க்க போகும் அலுவலகம் இருப்பதால்...நித்திலாவும் அந்த ஹாஸ்டலிலேயே தங்கி கொள்வதாக ஏற்பாடாகி இருந்தது.

                     அதற்குள் பேருந்து கிளம்பவும்....நித்திலா தன் பெற்றோரிடம் கையசைத்து விட்டு பேருந்தில் ஏறினாள்.

                   "சென்னைக்கு போனதும் போன் போடு...!", என்ற அம்மாவின் குரலுக்கும்.... "பார்த்து போய்ட்டு வாடா...!", என்ற தன் தந்தையின் குரலுக்கும்....கண்ணீரோடு தலையசைத்தாள்.

                     அவள் அனுபவிக்கும் முதல் பிரிவுத் துயர்....! இனி அவள் வாழ்க்கையில் நடக்க போகும் ஒவ்வொரு விஷயமும்.... முதல் முறையாகத்தான் நடக்க போகிறது என்பதை அறியாமல்....பெற்றவர்களின் பிரிவை நினைத்துக் கண்ணீர் வடித்தாள் அந்தப் பேதை....! பிறகு காத்திருக்கும் புது வாழ்க்கையை எண்ணி தன் மனதைத் தேற்றிக் கொண்டாள்....

                     ஆனால்....காத்திருக்கும் அந்த புது வாழ்க்கை....அவளுக்கு பல திருப்பங்களை அள்ளி வீசப் போகிறது....என்பதை அவள் அறிந்திருக்கவில்லை....!

                    பேருந்து நகர்ந்தது.....சென்னையை நோக்கி...!!அந்தக் காரிகையின் வாழ்க்கையும் நகர்ந்தது....அடுத்தக் கட்டத்தை நோக்கி...!!!

                                                                                                  -அகம் தொட வருவான்.....!!!


Nirmala Krishnan
(@nila-krishi)
Honorable Member Writer
Joined: 5 months ago
Posts: 526
11/10/2019 2:49 pm  

 

அத்தியாயம் 5

நித்திலா சென்னை சென்று இறங்கிய போது....அவளை அழைத்துச் செல்வதற்காக...அவளது தோழி நந்தினி,பேருந்து நிலையத்திற்கே வந்திருந்தாள்.

"ஹே....நித்தி எரும....வெல்கம் டு சென்னை டி...!",என்று முதுகிற்குப் பின்னே ஒலித்த ஆர்ப்பாட்டமான குரலில் முகம் மலரத் திரும்பினாள் நித்திலா.

அவளது தோழி நந்தினிதான் வாயெல்லாம் புன்னகையாக நின்றிருந்தாள்.

"ஹாய்...!நந்தி குரங்கே....!எப்படி டி இருக்க...?",என்று ஓடிப் போய் தோழியைக் கட்டிக்க கொண்டாள் நித்திலா.

"சூப்பர் பா....!எப்படியோ உன் அம்மா முந்தானையை பிடிச்சிக்கிட்டு தொங்கறதை விட்டுட்டு இங்க வந்துட்ட....",என சிரிக்க,

"அதுதான் நீ இருக்கிறாயே.....உன் துப்பட்டாவை பிடிச்சுக்கலாம்னு வந்துட்டேன்....",எனக் கண்ணடித்தாள்.

"ஆக மொத்தம்....எதையாவது பிடிச்சுத் தொங்கறத மட்டும் விட மாட்ட....அப்படித்தானே.....?சரி சரி....வா....ஹாஸ்டலுக்குப் போய் பேசிக்கலாம்",என்றபடி தோழியை இழுத்துச் சென்றாள்.

தோழிகள் இருவரும் ஆட்டோ பிடித்து ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

வந்ததும் முதல் வேலையாக ஹாஸ்டல் வார்டனிடம் நித்திலாவை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவள்....பிறகு...அவளை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

நந்தினியின் அறை நான்கு பேர் தங்கக் கூடியதாக இருந்தது.ஏற்கனவே...இரு பெண்கள் அறையைப் பங்கு போட்டிருந்தனர்.நித்திலாவும் அவர்களுடன் தங்கி கொள்வதாக ஏற்பாடாகி இருந்தது.

அறைக்குள் நுழைந்ததும்,"ஹாய்....!வெல்கம் டு சிங்கார சென்னை...!",என்ற குரல் கோரஸாக ஒலித்தது.

"ஹே நித்தி...!இவங்களும் நம்ம பிரெண்ட்ஸ்தான்....இவ காவ்யா...!அண்ட் இவ வர்ஷினி....!நாம நாலு பேரும்தான் இந்த ரூமில் தங்கப் போறோம்...",என்று அறிமுகப் படுத்தி வைத்தாள் நந்தினி.

"ஹாய்...!",என்று பதிலுக்கு முறுவலித்த நித்திலாவை பார்த்ததுமே...மற்ற இரு பெண்களுக்கும் பிடித்துப் போனது.

நால்வரும் ஒத்த வயதினர் என்பதால்.....அவர்களுக்குள் நட்பு பாராட்டுவது கடினமாக இல்லை.

...........................................................................................................................................

அன்று காலை மிகுந்த உற்சாக மனநிலையோடு அலுவலகத்திற்கு கிளம்பினான் ஆதித்யன்.அன்றிலிருந்து அவன் தேவதை....அவனுடனேயே இருக்கப் போகிறாள் அல்லவா...!அந்த மகிழ்ச்சி.....அவன் முகத்திலும் பிரதிபலித்தது.

என்றும் கடுமையான முகத்துடன்...அலுவலகத்தில் வலம் வருபவன்....அன்று...உதட்டில் பூத்த சிறு புன்னகையோடு வந்து இறங்கினான்.

அனைவரும் சொன்ன 'குட் மார்னிங்கை' சிறு முறுவலோடும்...சின்ன தலையசைப்போடும்...ஏற்றுக் கொண்டு,தன் கேபினுக்கு விரைந்தவன்...முதல் வேலையாக கௌதமை வரச் சொன்னான்.

"ஹாய் டா ஆதி....!குட் மார்னிங்...!",என்றபடி வந்த கௌதமை "வெரி குட் மார்னிங் டா...!",என்ற விரிந்த புன்னகையுடன் வரவேற்றான் ஆதித்யன்.

வெகு உற்சாகமாக தன்னை வரவேற்ற தன் நண்பனை பார்த்தவன்,"என்னடா...!உன் முகத்துல 1000 வாட்ஸ் பல்பு எரியுது....சிரிக்கறதுக்கே கூலி கேட்கற ஆள் ஆச்சேடா நீ....",என்க,

அதற்கும் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தவனைக் கண்டு,"ம்ஹீம்....ஏதோ சரியில்ல....என்னடா மச்சான் மேட்டர்....?",எனக் கண்ணடிக்க,ஒரு கணம் ஆதித்யனின் மனதில் நித்திலாவின் முகம் மின்னி மறைந்தது.

"ஒரு மேட்டரும் இல்ல...சரி...என் செக்ரெட்டரி போஸ்டுக்கு ஆள் வேணும்னு விளம்பரம் கொடுக்க சொல்லிருந்தேன்ல...அதை கேன்சல் பண்ணிடு..."தன் கனவில் இருந்து வெளி வந்தவனாய் கூற,

"ஏன்டா...உனக்கு செக்ரெட்டரி வேண்டாம்னு முடிவு பண்ணிட்டயா....?", என்ற கௌதமிடம்,

"இல்ல டா....என் செக்ரெட்டரியா ஒரு பொண்ண நானே செலெக்ட் பண்ணிட்டேன்....ஸோ...நீ அத கேன்சல் பண்ணிடு....",

"என்ன....! ஒரு பொண்ண நீ செலெக்ட் பண்ணிட்டயா....?நம்பவே முடியலையே....?!!",என்று கெளதம் தன் தாடையைத் தடவ,

"ஆமா டா....ஒரு வகையில என் ரிலேட்டிவ் பொண்ணுதான்....",இதைக் கூறும் போதே அவன் முகம் மென்மையாக மாறியது.கெளதம் ஒரு மாதிரியாக தன்னைப் பார்ப்பதைக் கண்டு சுதாரித்துக் கொண்டவன்,. "ஒகே டா....லீவ் இட்....!அந்த R.V கம்பெனி ப்ராஜெக்ட் எந்த நிலைமையில இருக்குது....",என்று பேச்சை மாற்ற,அதன் பிறகு பேச்சு தொழிலுக்கு மாறியது.

"அல்மோஸ்ட் கம்ப்ளீட் டா....!அந்த சைட்டுக்கு போய் பார்க்கலாம்னு சொன்னாயே.....பதினோரு மணிக்கு கிளம்பலாமா...?"

"இல்ல....இன்னைக்கு வர முடியாது....நீ மட்டும் போயிட்டு வா....!", என்றவனின் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை வந்தமர்ந்தது.

அவனை வித்தியாசமாக பார்த்த கெளதம்,"ம்ஹீம்....!இன்னைக்கு நீ ஒரு மார்க்கமாத்தான் இருக்கற டா மச்சான்....ஒகே...!நீ என்னமோ பண்ணு....நான் போய் என் வேலையைப் பார்க்கறேன்...",என்றபடி கிளம்பினான்.

தன் முடியைக் கோதிக் கொண்டவன்,'சே..!கெளதம் பார்த்து கேட்கற அளவுக்கா என் முகத்தை வைச்சிருக்கிறேன்.....ஹ்ம்ம்....பேபி...!எல்லாத்துக்கும் நீதான் காரணம்....உன்னுடைய அழகான முகம் என் மனசுல தோணுனாவே நான் என் கண்ட்ரோல்லயே இருக்கறது இல்ல....இதுல...நீ என் பக்கத்துலயே இருந்தா அவ்வளவுதான்....",எனப் பெருமூச்சு விட்டவன்,

ரிசெப்ஷனுக்கு அழைத்து 'நித்திலா' என்று ஒரு பெண் வருவாள் என்றும்,அவள் வந்தால்...உடனே தன் கேபினுக்கு அனுப்பும் படியும் சொல்லிவிட்டு போனை வைத்தான்.

'பேபி...!எல்லாமே ரெடி....நீ வர்றது மட்டும்தான் பாக்கி....சீக்கிரம் வா...ஐ யாம் வெயிட்டிங் ஹியர் பார் யூ டியர்.....!' மனதுக்குள் அவளுடன் பேசிக் கொண்டிருந்தவனை வேலைகள் அழைக்க,ஒரு வழியாக அவள் நினைவுகளில் இருந்து பிரியா விடை பெற்று வெளியே வந்தவன்,அதன் பிறகு தன் அலுவலக வேலைகளில் மூழ்கினான்.

..............................................................................................................................................

ஒரு வழியாக....நந்தினியிடம் வழி கேட்டுக் கொண்டு...பேருந்து நெரிசலில் சிக்கித் தவித்து...நித்திலா...அலுவலகத்தை வந்தடைந்த போது மணி பத்தை தாண்டியிருந்தது.

'ச்ச்சே....முதல் நாளே லேட் ஆகிடுச்சு...',என்று சலித்தபடியே அலுவலகத்திற்குள் நுழைந்தவள்....ஒரு நிமிடம்...அதன் பிரம்மாண்டமான அமைப்பில் மயங்கிப் போய் நின்றாள்.

'ஹை...இவ்வளவு பெரிய ஆபிஸிலேயே ஒர்க் பண்ணப் போறோம்....அதுவும் M .D க்கு செக்ரெட்டரியா...சூப்பர் நித்தி...!', மனதிற்குள் வியந்து கொண்டே ரிசெப்ஷனுக்கு சென்றாள்.

"குட் மார்னிங் மேம்...!வாட் கேன் ஐ டூ பார் யூ...?,அழகாக சிரித்தாள் வரவேற்பறையில் இருந்த அந்தப் பெண்.

"குட் மார்னிங்...!ஐ யாம் நித்திலா...",அவள் முடிக்கும் முன்பே அந்தப் பெண்,

"வெல்கம் மேம்...நீங்க வந்தா உடனே கேபின்க்கு அனுப்ப சொல்லி M.D சொல்லியிருந்தாரு....நேரா போய்...ரைட் கட் பண்ணினா M .D யுடைய ரூம் வரும்...நீங்க போய் பார்க்கலாம்....",என்றாள்.

"தேங்க் யூ...!",என்று புன்னகைத்து விட்டு அந்தப் பெண் காட்டிய வழியில் சென்றாள் நித்திலா.

'ஆதித்யன் மேனேஜிங் டைரக்டர் ' என்ற பெயர் பலகைத் தாங்கிய கதவை,"எஸ்குயூஸ் மீ சார்...!",என்று ஒற்றை விரலால் நாசுக்காக தட்டி விட்டுக் காத்திருந்தாள்.

"யெஸ்....கம் இன்...!",என்று கம்பீரமாக ஒலித்தக் குரல் கேட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவளை,

"வாங்க மேடம்....!ஒரு வழியா பேரண்ட்ஸை சம்மதிக்க வைச்சு....சென்னை வரைக்கும் வந்தாச்சு...வெல்கம் டு அவர் ஆதித்யன் குரூப் ஆப் கம்பெனீஸ்....",என்ற குதூகலமான ஆதித்யனின் குரல் வரவேற்றது.

அவனைப் பார்த்து சிறு புன்னகையை சிந்தியவள்,"தேங்க் யூ சார்...நீங்க மட்டும் சொல்லலைன்னா...நான் சென்னை வர்ரதை பத்தி யோசிச்சுக் கூட இருக்க மாட்டேன்....தேங்க் யூ அகைன்....",என்றாள்.

அவளை ரசனையாகப் பார்த்தவன்,"உன் தேங்க் யூவை வேற விதத்தில...வேணும்ங்கற போது வாங்கிக்கறேன்....",என்றான் புரியாத குரலில்.

தன்னை ஒரு மாதிரியாக பார்த்தவளைக் கண்டு,"இல்ல...உன் தேங்க்யூவை வொர்க்கில் காண்பிக்க சொன்னேன்..."என்று சமாளித்தான்.

"ஷ்யூர் சார்....!என்னை நம்பி இவ்வளவு பெரிய போஸ்ட்டைத் தரும் போது....நிச்சயமா நல்லபடியாத்தான் செய்வேன்...."

"தென் நித்திலா....எந்த காலேஜ்ல படிச்ச அண்ட் எந்த ஏரியால இண்ட்ரெஸ்ட் இருக்கு...",

அவள்....அவள் படிப்பு பற்றிய விபரங்களை மும்முரமாகக் கூற ஆரம்பித்தாள்.ஆனால்....அந்தக் கள்வன் எங்கே அவள் கூறியதைக் கேட்டான்...?!!அவள் பேசப் பேசக் கூட இணைந்து கதை பேசிய அவள் விழிகளையும்....அவள் செயலுக்கு ஏற்றவாறு அபிநயித்த அவள்
இதழ்களையும்....நெற்றியில் தவழ்ந்த அவள் கருங்கூந்தலையும் தான்....அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.

அவன் மொபைல் ஒலித்ததில்...இவ்வுலகிற்கு வந்தவன்...நித்திலாவிடம்,"ஒன் மினிட்...",என்றபடி போனை எடுத்துப் பேசினான்.

மறுமுனையில் பேசியவருக்கு உரிய பதிலை அளித்துவிட்டு போனை அணைத்தவன்,மீண்டும் நித்திலாவைப் பார்த்து,"சொல்லு நித்திலா....எங்க படிச்ச...?",என மறுபடியும் ஆரம்பிக்க,

அவனைப் பார்த்து விழித்தவள்,"இவ்வளவு நேரம் அதைத்தானே சார் சொல்லிக்கிட்டு இருந்தேன்....",எனக் குழம்பவும்,

'அடேய் ஆதி...!அவ பேசும் போது அவ பேசறதைக் கேக்கணும்...அத விட்டுட்டு...இப்படி பேன்னு அவளையே பாத்துட்டு இருந்தா...இப்படித்தான் முழிக்கணும்....சரி...எப்படியாவது சமாளிப்போம்....',என்று மனதிற்குள் பேசிக் கொண்டவன்,

வெளியே,"ஒஹ்....யா..யா....!",என்று அசடு வழிந்து கொண்டிருந்தவன் கண்ணில்,அவள் கையில் இருந்த பைல் தென்பட,"நான் உன் சர்டிபிகேட்ஸை கேட்டேன்....",என்று ஒருவாறாக சமாளித்தான்.

மனதிற்குள் குழம்பியபடியே அவனிடம் தன் பைலை நீட்டினாள் நித்திலா.

அவள் சான்றிதழ்களைப் பார்த்தவன்,'பரவால்ல...நம்ம பேபி நல்லா படிக்கற பேபிதான் போல...',என நினைத்துக் கொண்டான்.

"ஒகே நித்திலா....ஆல் ஆர் வெல்....!நீ இன்னையில இருந்தே வேலையில ஜாயின் பண்ணிக்கலாம்....",என்றவன் தன் பழைய செக்ரெட்டரி லீலாவை அழைத்தான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் தன் முன் நின்றிருந்த லீலாவிடம்,"வாங்க லீலா...இவங்கதான் நித்திலா....என் புது செக்ரெட்டரி...!நீங்க ரிசைன் பண்றதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கல்ல....அதுக்குள்ள....உங்க வேலை எல்லாத்தையும் நித்திலாவுக்கு பழகிவிட்டுருங்க....உங்க கேபினுக்கு பக்கத்திலேயே இவங்களுக்கு டேபிள் ஏற்பாடு பண்ணியிருக்கு....தட்ஸ் ஆல்...யூ கேன் கோ...!",எனத் தலையசைத்தான்.

"தேங்க் யூ சார்...",என அவனிடம் விடைபெற்றவள்,நித்திலாவைப் பார்த்து சினேகமாக ஒரு புன்னகையை சிந்தி விட்டுச் சென்றாள்.

"அப்புறம் நித்திலா....எங்க தங்கியிருக்க...?எல்லாம் வசதியா இருக்கா....?",பொறுப்பாக அவளிடம் விசாரிக்க ஆரம்பித்தான் ஆதித்யன்.

"தளிர் லேடீஸ் ஹாஸ்டல் சார்....இந்த ஆபிஸில் இருந்து அந்த ஹாஸ்டல்தான் பக்கத்துல இருக்கு...அண்ட் என் பிரெண்டும் என்கூடதான் ஸ்டே பண்ணியிருக்கா...ஸோ...நோ ப்ராப்லம்...."

"ஓ...",என்று ஒரு நிமிடம் யோசித்தவன்,பிறகு,"ஒகே நித்திலா...!நீ போய் உன் வொர்க்ல ஜாயின் பண்ணிக்க....ஆல் தி பெஸ்ட்....",என்று புன்னகைத்தான்.

புன்னகையோடு அவனுக்குத் தலையசைத்து விட்டு வெளியேறினாள் நித்திலா.

அவள் சென்றதும் முதல் வேலையாக ஒரு புகழ் பெற்ற டிடெக்டிவ் ஏஜென்சிக்கு அழைத்தவன்....தளிர் ஹாஸ்டல் பற்றியும்....அதன் பாதுகாப்பு பற்றியும் விசாரிக்கச் சொன்னவன்...அதன் பிறகே...அலுவலக வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.

இதுதான் ஆதித்யன்....தன்னவளை அவள் அறியாமலேயே அவன் வட்டத்திற்குள் வரவழைத்து விட்டான்...அவள் வாழ்க்கையை அவன் எப்போதோ கையிலெடுத்துக் கொண்டான்...!இனி....அவள் வாழ்க்கையில்...அவன் அறியாமல்...அவனது அனுமதி இல்லாமல்....எதுவும் நடக்காது என்பதை அறியாதவளாய்...பட்டாம்பூச்சியாய் சுற்றிக் கொண்டிருந்தாள் நித்திலா.....!!

பார்ப்போம்...!!அந்த பட்டாம்பூச்சி....காதல் என்னும் வலைக்குள் விழுமா...?விழாதா...??என்பதற்கான பதிலைக் காலம்தான் சொல்ல வேண்டும்.....!!ஆனால்....இதில் என்ன ஆச்சரியம் என்றால்....அந்த வலையும் சுகமானதொரு வலையாக மாறிப் போகும்....!!அந்த ஒரு அதிசயத்தையும் காதல் நிகழ்த்தி வைக்கும்...!!!இதுதான் விந்தையிலும் விந்தை....!!!

 

                                                                                              அகம் தொட வருவான்....!!!

 

 


Page 1 / 8
Share: