Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

காற்றில் உன் வாசம்  

Page 1 / 2

Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

                                அத்தியாயம்-1

                       காற்றில் உன் வாசம்
       
           அழகான காலை வேலை குயில் கூவும் சத்தம் இளந்தென்றல் வீச தன் அறையின் திரைச்சீலையை திறந்து பார்த்தால் நம் கதையின் நாயகி சாய்பிரியா...  
     
வழக்கத்தை விட சூரியன் பிரகாஷமாய் இருப்பதாய்  தோன்றியது ப்ரியாவுக்கு அதற்கான காரணம் தான் புரியவில்லை ஒரு வேலை 'அதுவும் ஒரு காரணமோ ' என்று மனதில் நினைத்து கொண்டால் (என்னவா இருக்கும் 🙄🙄🤔🤔) . 

ஒரு பெருமூச்சை விட்டு விட்டு தன் அறையில் உள்ள கட்டிலை பார்த்தால் அதில் தன் கணவனும் 5 வயது குழந்தையும்  தூங்கி கொண்டிருந்தனர்.
      

'அழகான குழந்தை அன்பான கணவன் ஆனால் எல்லாம் விதி ' என்று தன் மனதில் நினைத்து கொண்டு காலை கடன்களை  தொடங்குவதற்கு அறையை விட்டு வெளியேறினால் பிரியா .
        
 மணி காலை 5.30 பிரியா தன் அறையிலிருந்து ஹாலை தாண்டி வாசலுக்கு வந்தால்.    
            

இன்னும் சரியாக விடியாத காலை பொழுது மார்கழி மாதம் என்பதால் குளிரும் கூடியிருக்க அந்த காற்றை இழுத்து வெளியிட்டள். 
           

அதன் பின் வாசலை பெருக்கி  தண்ணீர் தெளித்து கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் ஒரு பூசணி பூவை சொருகினாள்.
          

பின் அதை கோலத்தின் நடுவில் வைப்பதற்கும் அந்த தெருவில் இருக்கும் கோவிலில் பஜனை சத்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது.
 
         தொடரும்.....

 

With love,
Punitha Karthikeyan


Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

 

 

 

 

 

 

 

                           காற்றில் உன் வாசம் 

                               அத்தியாயம் -2

 

நேரம் காலை 6 மணி .....
 
       கடிகாரத்தின் அலார சத்தத்தில் வீட்டில் உள்ள அனைவரும் அடித்து பிடித்து கொண்டு எழுந்தனர்.  
       

        கடந்த ஒரு மாத காலமாக பழகிய ஒன்று தான் என்றாலும் காலை 6 மணிக்கு எழுவது சற்று கடினமாகதான் இருந்தது.(என்ன கொடுமை sir இது ???🙄🙄🙄😳😳)... 

     எல்லாரும் தங்கள் காலை கடன்களை முடித்து கொண்டு ஹாலுக்கு வரவும் சாய்ப்ரியா குளித்துவிட்டு தன் ஈரக்கூந்தலை   நுனியில் முடிச்சிட்டு மல்லிகை சரத்தை சூடி நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு கையில் பூக்கூடையுடன் வெளியில் வந்தால்.  
       

       அனைவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது. அனைவரின் பார்வையையும் உணர்ந்த சாய்ப்ரியாவின் பார்வை ஹாலில் உள்ள டீப்பாய் மீது சென்றது.  

    அங்கு ஒரு ட்ரேயில் 6 கப்புகளில் அவரவருக்கு தேவையானா காபி,பால்,டீ இருந்தது.அதனுடன் ஒரு நோட்புக் பேனாவும்  இருந்தது.பின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சாய்ப்ரியா. 
          

(என்னடா நடக்கு இங்க அலாரம் கேட்டு எழுந்து வந்தா  காபி குடிங்கனு கூட சொல்லாம இந்த பிரியா பிள்ள பாட்டுக்கு வெளில போயிட்டு ஒரு மரியாதை இல்ல இவளை என்ன பண்ற பாரு...கொஞ்ச பொறுங்க ஏதோ சத்தம் கேக்கு..............அடப்பாவிகளா இதுங்களுக்காக  நான் சப்போர்ட் பண்ணா  இதுங்க பாட்டுக்கு காபிய உரிஜிட்டு இருக்குதுங்க ....அடபோங்கடா😏😏.....ஆமா நானும் எல்லாரும் எல்லாரும்னு சொல்ற யாருனு தான கேக்குறீங்க வாங்கப்பா ஒரு intro பாத்திருவோம்).
       

       அந்த நீண்ட ஹாலில் இருந்த சோபாவில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார் வீட்டின் தலைவர்   வேதநாயகம் ,"Vedha group of companies" இவருக்கு சொந்தமானதுதா ஆனால் அத சத்தமாக்கூட சொல்லமுடியாது அது அவரோட இடதுபுறம் இருக்கும் அவரின் மனைவி சகுந்தலா தேவி கு தெரிந்தால் சாமி ஆடிவிடுவார்...இவரின் உழைப்பால் no.1 company ஆக இருக்கிறது இதுவரை எந்த கம்பெனியும் இவர்களின் இடத்தை பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை சுருக்கமா சொன்ன வெளில புலி வீட்டில் எலி ...

சகுந்தலா தேவி குடும்பத்தை பற்றிய கவலையே இல்லாத குடும்ப தலைவி(இவரைப் பற்றி கதையில தெரிந்துகொள்ளலாம்..)

வேதநாயகத்தின் வலதுப்புறம் அவரின் செல்லமகள் அவ்வீட்டின் கடைக்குட்டி மித்ரா தேவி  பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் சின்னக்குட்டி வீட்டின் கடைக்குட்டி. அதிக குறும்பும் அதிக பிடிவாதமும் இவளின் சிறப்பு..இது எங்க போய் முடியுதுனு பாக்கலாம்..

             தனி சோபாவில் கம்பிரமாக அமர்ந்து காபி அருந்ததுகிறாரே Mr.மித்ரேந்திரன்IPS அவர்களே நம் கதையின் நாயகன் வேதநாயகத்தின் மூத்த மகன். நேர்மையான காவல் அதிகாரி இவருடைய சட்டம் 'குற்றத்தை ஒப்பு கொள் அல்லது உன்னை சுட்டுகொள்'. (இப்போ புரியுதா நம்ம ஹீரோவோட கேரக்டர்🙀🙀 ).

ஹீரோவின் எதிர் சோபாவில் தன் அண்ணனுக்கு  நிகராக கம்பிரமாக அமர்ந்திருப்பவர் Mr. அரவிந்த்மித்ரன் IPS வேதநாயகத்தின் இரண்டாவது மகன். அண்ணனை பின் பற்றி காவல்துறையில் சேர்ந்தான்.இவனுக்கு சட்டத்திட்டம் எல்லாம் கிடையாதுங்க தப்பு செஞ்சா உலகத்துல வாழ தகுதி இல்லனு நினைக்கிற ஆளு(நல்ல அண்ண நல்ல தம்பி 🙄🙄😅😅).

இந்த வீட்டுக்கு தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ஹாலின் ஒரு ஓரத்தில் கூடை ஊஞ்சலில் ஆடிக்கொண்டே  டீ குடிக்குறாரே இவர்தாங்க வேதநாயகத்தின் மூன்றாவது பையன் Mr.பிரகாஷ்மித்ரன் M.E final year படிக்கிறான்.அம்மாக்கு தப்பாமல்   பிறந்த பிள்ளை.

தொடரும்.....

( அப்பாடி    ஒரு வழியா  intro முடிந்தது....இனி டைரக்டா  கதைக்குள்ள போய்டலாம்.... ஹீரோயின் intro இப்போ இல்லைங்க So wait and see....).....😊😊😊😊

 

This post was modified 8 months ago by Punitha Karthikeyan

With love,
Punitha Karthikeyan


ReplyQuote
Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

                             அத்தியாயம் -3 

                        காற்றில் உன் வாசம் 

நேரம் காலை 6.10  மக்களே 
  
       சாய்ப்ரியா கோவிலின் உள்ளே சென்று தான் கொண்டு வந்த பூக்கூடையை ஐயரிடம் கொடுத்துவிட்டு  பஜனை நடக்கும் இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டால்.   
     
       அப்போது சரியாக அனைவரும் ஆண்டாளின் திருப்பாவை முடித்து வாரணம் ஆயிரம் பாட ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர்.  
        
      அப்போது ஒரு மாமி " ஏய் பொண்ணுகளா நன்னா பகவானை சேவிஜிண்டு பாடுங்கோ டி அப்போதா நல்ல மாப்ள கிடைப்பான் புரியறதா???.... அம்மாடி பிரியா   நீந்தான் நன்னா படுவியே நீயே ஆரமிச்சி வைமா " என்று கூறிட அவரது வார்த்தையை தட்ட முடியாமல் தன் இனிய குரலில் பாட தொடங்கினாள்,

 
              
           மாப்பிள்ளை அழைப்பு 

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து, 
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும், 
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

                        நிச்சயதார்தம் 

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு, 
பாளை கமுகு பரிசடைப் பந்தற் கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர் 
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!  

           பெரியோர்களின் அனுமதி 

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியுடுத்தி மண மாலை,
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!   

                    
                      காப்பு கட்டுதல்

நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

                         பிடி சுற்றுதல் 

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,
சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள,
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும் 
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!

                        பாணி க்ரஹணம் 

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத,
முத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்!

                              ஸப்தபதி 

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து,
காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்!

                       அம்மி மிதித்தல் 

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மை உடையவன் நாராயணன் நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்!

                      பொறி இடுதல் 
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன்  அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

                 மஞ்சள் நீர் தெளித்தல்

குங்குமம்  அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம் செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங்கானைமேல்,
மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

                    பாராயண பலன்

ஆயனுக் காகத்தான் கண்டகனாவினை,
வேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே!!

என்று முடித்ததும் அனைவரும் அவளின் தேன் குரலில் இவ்வுலகை சற்று  மறந்துதான் போயினர்.
  
           கோவில் மணி ஓசையில் முதலில் சுயநினைவுக்கு வந்த மாமி " டி கொழந்த என்னமா பாடுற சாச்சாத்  அந்த ஆண்டாளே நேருல வந்து பாடுனாப்ல இருந்தது நன்னா இருடி  குழந்தை  நன்னா இரு " என்று கூறி கண்கலங்கினார்.

           பிரியா தன் மனதில் 'உங்க வாக்கு பழிக்கட்டும் மாமி'' நினைத்து கொண்டு வெளியில் "தேங்க்ஸ் மாமி " என்றாள்.  

        அதற்கு அந்த மாமி சிரித்துவிட்டு " சரி டி  பொண்ணுங்கள வந்து மஞ்சள் குங்குமம் எடுத்துகோங்கோ என்றார்.

          எல்லாரும் எடுத்து சென்ற பின் ப்ரியாவும் எடுத்துக்கொண்டு தனது பூக்கூடையை வாங்கிவிட்டு அந்த பெருமாளை  நோக்கி கைக்கூப்பி "பெருமாளே எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் தைரியத்தை கொடுப்பா " என்று மனம் உருக வேண்டி நின்றாள்.  

         கோவிலில் இருந்து வீடு வந்ததும் பிரசாத கூடையை பூஜை அறையில் வைத்து விட்டு அங்கு இருந்த சிவன் விக்ரகத்தை பார்த்தபடி உறைந்து நின்றாள். எத்தனை  முறை அந்த விக்ரகத்தை பார்த்த போதும் கைக்கூப்பி நிற்பாலே  தவிர எதையும் வேண்டிக்கொண்டதே இல்லை. அதற்கான காரணம் அந்த சிவனின் முகத்தை பார்த்தாலே மனதில் நிம்மதி மட்டுமே இருப்பதாய்  தோன்றும் பிறகு என்ன வேண்டி கொள்வது. இப்போதும் அப்படியே தோன்றிட ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு வெளியேறினால்.

           அங்கு ஹாலில், டீபாய்மீது இருந்த நோட்புக்கை எடுத்து பார்த்தால் அதில் இன்றைக்கான உணவு பட்டியல்  இருந்தது.
       
        ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு சமையலறைக்குள் சென்றால்.அங்கு கோவிலுக்கு செல்லும் முன் வைத்துவிட்டு சென்ற ட்ரேயும் கப்புகளும்  அடுக்கி  வைக்கப்பட்டிருந்தது. இதுவே ஒரு மாதத்திற்கு முன்னர் ஒவ்வொரு அறையாக சென்று கதவைதட்டி அவர்களுக்கு விருப்பமான பானத்தை தரவேண்டும் அதுவும் 8 மணிக்கு முன்னர் செல்லக்கூடாது.அதையும் மீறி 8 மணிக்கு ஒரு வினாடி குறைவாக  சென்று நின்றாள் கூட அந்த நாள் ஏன் தன் வாழ்வில் வந்தது என தோன்றும் அளவுக்கு நிகழ்வுகள் நடைதெறியிருக்கும். ஆனால் இன்று!!!!

        'எல்லாம் அவள் செயல்' என்று நினைத்து கொண்டு காலை சமையலை தொடர்ந்தால் பிரியா. கை பாட்டுக்கு அதன் வேலையை செய்ய மனம் தன் ஓரகத்தியின்  நினைவில் லயித்தது. சின்ன பட்டாம்பூச்சி போல் அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலையை செய்து கொண்டிருப்பாள் அவளின் ஒவ்வொரு செயலிலும் ஒரு நேர்த்தி இருக்கும் ,ஆனால்   பயந்த சுபாவம் கொண்டவள் அதனாலே இந்த வீட்டில் சிலர் அவளை மதிக்கமாட்டார்கள்.

       தனக்கு ஓரகத்தி என்றாலும் ஒரு குட்டி தங்கை போல் எப்போவும் தன்னை அக்கா அக்கா என்று சுற்றி கொண்டே இருப்பாள்.அவள் தான் இந்த 8 மணி செய்தியை கூறியவள்.இன்று அவளாலே எல்லாம் மாறியிருக்கிறது.

       ஆனால் மாறி என்ன புண்ணியம் இந்த மாற்றத்துக்கு காரணமானவள்  'ஐயோ அதை நினைத்தாலே மனம் பதைக்கிறதே.. கடவுளே ஏன் அந்த குழந்தைக்கு இவ்ளோ கஷ்டத்தை கொடுக்கிறாய்' என்று அவள் நினைக்கவும்  ரெண்டு சொட்டு கண்ணீர்
அவள் கலந்து வைத்த காபியில் விழவும் அரவிந்த் கிட்சேனுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

         அரவிந்த் , அண்ணி
       
         பிரியா , ம்ம்

        அரவிந்த் ,ஆபீஸ் சீக்கிரம் போகணும் அண்ணி  சோ சாப்பாடு வேண்டாம். வெளியில சாப்பிட்டு கொள்கிறேன்  என்றான் தயங்கி தயங்கி.

        பிரியா எதுவும் பேசவில்லை அவள் கண்கள் மட்டும் இன்று வெள்ளிக்கிழமை என்ற செய்தியை தொக்கி நின்றது.(சமயலறையில காலெண்டர் இருந்ததுப்பா ஹி ஹி ஹி😜😜😝😝).... 

          அரவிந்த் , சரி அண்ணி நான் வீட்டுலையே சாப்பிட்டுட்டு கிளம்புறேன் என்று கூறி வெளியேறினான். 

           பின்னர் அந்த வீட்டின் வேலையாட்கள் வரவே மீதி வேலைகளை அவர்களிடம் கொடுத்து விட்டு தன் மகளுக்கு சத்துமாவு கஞ்சி எடுத்து கொண்டு அவளின் அறைக்கு சென்றாள்.

         அங்கு அயர்ந்து தூங்கும் குழந்தையை  பார்த்து ' நீ மட்டும் தான் செல்லம் இந்த வீட்டுல அதிர்ஷ்டக்காரி ' எந்த சலனமும் இல்லாமல்  தூங்கும் தன் மகளை திஷ்டி கழித்தால் பிரியா.பின் அவளை எழுப்பி முகம் கழுவி பல் துலக்கி விட்டு கஞ்சியை குடிக்கசெய்தால்

             பின் குழந்தையுடன் சேர்ந்து   கிளாஸ் time table படி புக்ஸ் எல்லாம் எடுத்து வைத்து ஹோம்ஒர்க் சரி பார்த்து diary யில் கையெழுத்திட்டு நிமிரும் போது மணி 7.30 ஆகியிரசென்றாள்.                

                   இங்கு இவர்கள் இவ்வளவும் செய்திருக்க அதே அறையில் இவர்களை ஏக்கத்துடன் பார்த்திருந்தான் மித்ரேந்திரன். அவனது பார்வையை உணர்ந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தன் மகளை குளிக்க அழைத்து சென்றால் பிரியா.

   மித்ரேந்திரனோ ' எவ்ளோ இனிமையாக சென்றது எங்கள் வாழ்க்கை அந்த ஒரு நாள் எங்கள் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம் ' என்று நினைத்துக்கொண்டு 'எல்லாம் விதி' என்று மனத்தை தேற்றி கொண்டு கிளம்பி பூஜை அறைக்கு சென்றான்.

          அங்கு அவனுக்கு முன்பாக வீட்டில் உள்ள அனைவரும் இருந்தனர். ப்ரியாவும் குழந்தையும் மட்டுமே இல்லை.அதை கவனித்த சகுந்தலா தேவி மித்ரனிடம்( இனி மித்ரன் கூப்பிடலாம்ப்ப்பா மித்ரேந்திரன் ரொம்ப length ஆஹ் இருக்கு ஹி ஹி ஹி 😜😜😜  .....சரி வாங்க ரெண்டுபேரும் என்ன பேசுறாங்கனு கேப்போம் )..

         சகுந்தலா , மித்ரா

         மித்ரன் , சொல்லுங்க

         சகுந்தலா , இன்றைக்கு என்ன கிழமைனு நியாபகம் இருக்கா ??

        மித்ரன் , இருக்கு என்றான் ஒருவித வெறுப்புடன்.

        சகுந்தலா , ம்ம் அப்போ உன் மனைவி எங்க??என்றாள் உள்ளடக்கிய கோபத்துடன்.

      மித்ரன் , பாப்பாவை ரெடி பண்ணிட்டு இருக்கா வந்திருவாங்க என்றான் அவருக்கும் சற்று சளைக்காத கோபத்துடன்.  

      சகுந்தலா , ஓஹோ  என்றாள் அவன் கோவத்தை உணர்ந்து.

       அப்போது ப்ரியாவும் குழந்தையும் பூஜை அறைக்குள் நுழைந்தனர்.எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு குழந்தையை மித்ரனிடம் நிற்க வைத்து விட்டு அங்கு சிவன் விக்ரகம் முன் இருந்த விளக்கை ஏற்றினாள் பின் கற்பூர ஆரத்தி எடுத்தபின்  எல்லாரிடமும் நீட்டினாள்.அனைவரும் கும்பிட்டதும் கற்பூர தட்டை கீழே வைத்துவிட்டு  இரு கை கூப்பி கண்மூடி நின்றாள்.  

         ஒவ்வொருவரும் ஒரு வேண்டுதலை முன்னிறுத்தி வேண்டி கொண்டிருந்தனர்.

     சகுந்தலா , கடவுளே நான் செய்யவேண்டிய பூஜையை, நான் ஆழ வேண்டிய சொத்தை இன்னொருத்தி கைல கொடுக்குற மாதிரி ஆகிடுச்சே  ஆனால் நான்  சும்மா இருக்கமாட்ட எப்படியாவது திரும்ப எல்லாத்தையும் அவகிட்ட இருந்து பறிப்ப அதுக்கு நீ தான்  துணையா இருக்கனும்...           

       வேதநாயகம்  , ஐயா எம்பெருமானே இப்போது தான் வீடு வீடா இருக்கு இதே நிலை தொடர நீதாய்யா  துணையா இருக்கனும்....  

         மித்ரன் , ஈஸ்வரா எனக்கு உன்ன பாத்திடே இருக்கணும்னு மட்டும் தான் தோணுது அதுலையே என் மனசு நிம்மதி ஆகிடுது ......( இத எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே....🤔🤔🤔🤔🤔🤔).

        அரவிந்த் , பரமேஸ்வரா என் மனைவியை நல்ல படிய என்கிட்ட சேர்த்திருப்பா......

        மித்ரா தேவி , யாரு எப்டியோ போகட்டும்   எனக்கு என்னோட விதுன் வேணும் அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்.  

        குழந்தை , எனக்கு சாக்லேட் வேணும் மம்மி கிட்ட சொல்லுங்க  சிவா god (so  ஸ்வீட்.....🌹🌹🌹💗💗..... குழந்தை குழந்தைதான் எந்த கள்ளம் கபடமும் இல்லாத தூய உள்ளம் அவங்களுக்கு தான் இருக்கு....இவங்கள பார்க்கும் போது தான் நாமளும் குழந்தையாவே இருந்திருக்கலாம்னு தோணுது...).         

      பிரகாஷ் , எனக்கு உன் மேல நம்பிக்கை கிடையாது சோ டாட்டா என்று அவன் நினைத்து முடிக்கவில்லை பிரியா தன் உடம்பை முறுக்கி கொண்டு 'ஹேய்' என்று சத்தமிட்டாள்.

         அனைவரும் அவளை நிமிர்ந்து பார்த்தனர். ப்ரியாவின் கண்கள் சிவந்து கைகளை முறுக்கி குலவை விட்டுக்கொண்டிருந்தால். அவளுக்கு அருள் வந்திருப்பது புரிந்தது.

பிரியா , ஹேய் வேதநாயகம் இங்க வா

வேதநாயகம் , அம்மா தாயே என்று பணிந்துநின்றார்.

பிரியா  , வேதநாயகம் நான் யாருனு தெரியுதா?? என்றாள் ஆவேசத்துடன்.

வேதநாயகம் , தெரியுது தாயி என் குலதெய்வம் 'பெரியாச்சி அம்மன்' என்றான்..

'பெரியாச்சியா' என்று சற்று நடுக்கத்துடன் ப்ரியாவை  பார்த்தால் சகுந்தலா தேவி.

தொடரும்......

 

 

 

 

With love,
Punitha Karthikeyan


ReplyQuote
Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

                      அத்தியாயம் - 4 

                 காற்றில் உன் வாசம் 

               

     'பெரியாச்சியா' என்று சற்று நடுக்கத்துடன் ப்ரியாவை பார்த்தால் சகுந்தலா தேவி.

      பிரியா , என்னை உனக்கு நியாபகம் இருக்கா ?? வேதநாயகம் என்றாள் கோபம் குறையாத குரலில்.

      வேதநாயகம் , ஆத்தா உன்னை எப்படிம்மா மறப்பேன் எனக்கு புள்ள  இல்லாம பத்து வருஷமா தவிச்சிட்டு இருக்கும் போது என் அம்மா உடம்புல நீ இறங்கி அருள் வாக்கு சொன்னியம்மா அதுபடி நாங்க உன் சன்னதிக்கு வந்து உன்னை கும்பிட்டோம் அதுக்கு அப்பறம் தான எனக்கு முத்து முத்தா நாளு பிள்ளைங்க பொறந்தது நானும் வாழ்க்கையில முன்னுக்கு வந்த உனக்கு சேரவேண்டியதை மாசம் மாசம் கோவிலுக்கு கொண்டு வந்து என் கையாலையே கொடுத்துட்டிருக்க என்றார் கண்ணில் நீர் வழிய.

     பிரியா , அந்த நினைப்பு உன் பொண்டாட்டிக்கு இல்லையே என்றாள் சகுந்தலாவை பார்த்து. ந் 

      அவ்வளவுதான் சகுந்தலா தேவிக்கு சர்வமும் அடங்கி போனது.அதன்பின் ப்ரியாவை ஒரு பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். 

       எல்லாருக்கும் ஓரளவு விஷயம் தெரியும் என்பதால் அனைவரும் அமைதியாக ப்ரியாவை பார்த்த வண்ணமே இருந்தனர்.

         வேதநாயகம் , ஆமா தாயீ அவள் ஏதோ பேரப்பிள்ளைங்க ஆசையில கொஞ்சம் தப்பா  என்று அவர் முடிக்கவில்லை பிரியா ஆக்ரோஷத்துடன் கத்தினாள்

     ஹேய் , ம்ம்ம் இனி ஒரு தடவை நான் கொடுத்த உயிரை அழிக்கணும்னு நினைச்சீங்க உன் குடும்பமே திசை தெரியாம போயிடுவீங்க ஹேஹேய்ய்ய்ய்ய்...... என்றவள் மயங்கி சரிந்தாள். 

       எல்லாருக்குமே அதிர்ச்சிதான் என்ன நடக்கு இங்க யாரு உயிரு யாரு அழிக்க நினைச்சாங்க இத்தனை வருஷமா வராத பெரியாச்சிம்மா இப்போ வந்தது எதுக்கு அதுவும் ப்ரியாவுக்கு எப்படி வந்தது.

       ஆனால் அதை யோசிக்க இது நேரம் அல்ல ப்ரியாவை பார்க்கலாம் என்று எண்ணி அவளை நெருங்கினர்.

          குழந்தையோ பிரியாவை தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தாள். 

           குழந்தை ,  அம்மா அம்மா எழுந்திரும்மா என்று   ப்ரியாவின் கன்னத்தை தட்டி கொண்டிருந்தாள்.

       அதை பார்த்த மித்ரன் தன் மனதில் ' இவள் இவ்வளவு ஆக்ரோஷமா ஆடியிருக்கா நானே கொஞ்சம் பயந்திட்ட  ஆனால் குழந்தை தைரியமா அவளை எழுப்பிட்டிருக்காளே !!!!....

       அதன்பின் ப்ரியாவை எழுப்பி சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் வெளியில் வந்தனர்.

         யாரும் யாரிடமும் பேசவில்லை. சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விட்டனர். வேதநாயகம் தான் என்ன நடத்தியிருக்கும் என்று யோசனையில் ஆழ்ந்தார்.சகுந்தலா வேறு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று கதவை சாற்றி கொண்டது இன்னும் கலக்கத்தை தந்தது.

         தற்செயலாக மாடியில் உள்ள அந்த அறையை பார்த்தார் அவர் மனதில் ' ஒரு வேலை இதற்கும் பெரியாச்சியம்மா சொன்னதுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ??? அப்படி இருக்க வாய்ப்பு இருக்கா ??? ஆத்தா என்னம்மா இது தெளீவா இருந்த மாதிரி இருந்தது ஆனால் ஏதோ குழப்பம்  இருக்குற மாதிரியும் தெரியுதே அது என்ன என்று சிந்திக்கலானார்.

         அவரின் சிந்தனையை கலைக்கும் விதமாய் பிரியா தொண்டையை செருமிக்கொண்டு வந்தாள்.அவளது கையில் சுகர் மாத்திரையும் தண்ணீரும் இருந்தது.அதனை டேபிள் மேல் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்பி சென்றாள்.அதனை பார்த்த

      வேதநாயகம் , அம்மாடி பிரியா என்ற குரலில் திரும்பிப்பார்த்தால் பிரியா.

        வேதநாயகம் , இன்னும் எத்தனை நாளைக்கும்மா இப்படி யாருக்கூடையும் பேசாம இருப்ப ?? என்றார் சிறு வேதனையுடன்.

        பிரியா , உண்மை தெரியிர  வரைக்கும்  என்றாள் கோவத்துடன்.

         இதற்குமேல் அவர் என்ன பேசுவார் இந்த நிலைமைக்கு அவரும் ஒரு காரணம் அல்லவா  அதனால மௌனமாக நின்றார்.

        ப்ரியாவும் அவரின் பதிலை எதிர் பாராமல் தன் அறைக்கு சென்று கார் சாவியையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

நேரம் காலை 10 மணி
கமிஷனர் ஆபீஸ்

கமிஷனர்  Mr. விஜய ராகவன் முன் மித்ரனும் அரவிந்தும் அமர்ந்திருந்தனர். ஏதோ சீரியஸான விஷயம் போலும் மூவர் முகமும் தீவிர சிந்தனையில் இருந்தது. கமிஷனரே முதலில் பேசினார்.

      கமிஷனர் , இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க ரெண்டு பேரும்.

      மித்ரன் , ஒருவேளை நம்மளை divert பண்ணக்கூட இப்படி செஞ்சிருக்கலாமே sir.

     அரவிந்த் , maybe இருக்கலாம் sir but கொஞ்சம் carefulla இருக்குறது better sir.

      மித்ரன் , I think he is right sir.....

     கமிஷனர் , ஓகே  கைஸ் ஒன்னு பண்ணலாம் இதுல வர டைம்  அன்ட் லொகேஷன்  வித் கிரைம் செக் பண்ணுங்க எதுவுமே நடக்கலான ஜஸ்ட் லீவ் இட் பட் வெரி careful கைஸ் ....... என்று எச்சரித்தார்.

( என்னடா நடக்கு தலையும் புரியல வாலும் புரியல....வாங்க கொஞ்சம் நம்ம காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றி பாப்போம் என்ன நடந்ததுன்னு..... டொய்...... டொய்...... டொடொய்.....)

நேரம் காலை 9.15
கமிஷனர் ஆபீஸ்

ஏதோ தீவிர ஆலோசனையில் இருந்தனர் மித்ரன் மற்றும் அரவிந்த். அப்போது

மித்ரன் ,  என்ன அரவிந்த் சாந்தி நகர் கேஸ்ல  ஒரு சின்ன தடையும் கூட கிடைக்கல.

அரவிந்த்  , அதைதான் நானும்  யோசிச்சிட்டிருக்க போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் வந்ததும் ஏதாவது கிடைக்குதான்னு பார்ப்போம். 

மித்ரன் , எனக்கு அவனோட மனைவி மேல தான் டவுட்...பார்க்கலாம்..

அப்போது  ஒரு கான்ஸ்டபிள் அனுமதி கேட்டு உள்ளே வந்தார்.அவர்கள் இருவரையும் கமிஷனர் அழைப்பதாக கூறினார்.பின் இருவரும் கமிஷனர் அறைக்கு சென்றனர்.இருவரும் சலூட் அடித்து அமர்ந்தனர். 

அவர்கள் முன் இருந்த டேபிள் மீது ஒரு வட்டமான கருவி இருந்தது.அதனை சுட்டி காட்டிய கமிஷனர் , இது என்ன கருவினு கெஸ் பண்ணமுடியுதா கைஸ். 

மித்ரன் , நோ ஐடியா சார். 

அரவிந்த் , ஏதோ அறை எண் 305 ல் கடவுள் படத்தில வர device மாதிரி இருக்கு sir.

கமிஷனர் , அரவிந்த் be சீரியஸ்.

அரவிந்த் , Ok sir..... 

மித்ரன் , சார் அரவிந்த் சொல்றதும் கரெக்ட் தான அதே மாதிரிதா இருக்கு. 

கமிஷனர் , என்ன மித்ரன் தம்பிக்கு சப்போர்ட்டா ??......

மித்ரன் , அப்படி இல்ல சார். 

அரவிந்த் , அப்போ நீங்களே சொல்லுங்க 

கமிஷனர் , ஹ்ம்ம் கொஞ்சம் கொழுப்பு அதிகமான மாதிரிதான் தெரியுது.

அரவிந்த் , ஆமா சார் டெய்லி வாக்கிங் போங்க குறைச்சிரும் சார்..

கமிஷனர் & மித்ரன் , அரவிந்த் .... 

அரவிந்த் , சாரி சார் (minds voice : ரெண்டு பேரும் சேர்ந்து முறைக்குறாங்களே நான் என்ன பண்ணுவ .....ஐயோ ஐயோ....😱😱😱😥😥). 

கமிஷனர் , நீ எல்லா எப்படிய்யா IPS பாஸ் பண்ண ??  

அரவிந்த் , எல்லா படிச்சி தான் என்று கூற மித்ரன் அவனை நன்றாக முறைப்பது தெரிந்தது. 

( Aravinth mind voice : ஆத்தி இவன் வேற முறைக்கானே தெரியாமல வாய விட்டுட்டோம் தனியா ரூம் போட்டு அட்வைஸ் பண்ணுவானே  ..... சாமீ என்ன காப்பாத்துப்பா உனக்கு 100 தேங்காய் உடைக்கிறேன்...)  

மித்ரன் ,  நீங்க சொல்லுங்க சார்.  

கமிஷனர் , மொத்தத்துல தம்பிய விட்டு தரமாட்ட.....anyway விசயத்துக்கு வருவோம்  இது என்ன device னு எனக்குமே தெரியல

(aravinth  mind voice : adapaaviiiiiii)     

கமிஷனர் , காலையில என்னோட சன் யாரோ ஒரு தாத்தா கொடுத்ததா சொல்லி என்கிட்ட தந்தான்.அத வாங்கி பார்த்த எனக்கு பெரிய ஷாக்.   

(Aravinth mind voice : அச்சோ electricity பாஸ் ஆச்சா ??? எவ்ளோ வோல்ட்?????ஹாஸ்பிடல் போகலையா ????....🤔🤔) 

கமிஷனர் , அந்த device டைம்னு display ஆகுது அதுல நான் சும்மா ஒரு நேரம் type பண்ண எனக்கு மூணு விஷயம் display ஆச்சு.  

மித்ரன் , வாட் display ???? 

அரவிந்த் , என்ன படம் சார்.   

கமிஷனர் அவனை முறைத்துவிட்டு தொடர்ந்தார் , First , time கேட்டுச்சு அப்பறம் லொகேஷன் கேட்டுச்சு odaney andha area la நடந்த incidents display ஆகுது.  I was really scared guys  என்று முடித்தார்.

மித்ரன் , This is unbelievable sir     

அரவிந்த் , என்ன incident sir.. 

கமிஷனர் , என் பையன்  என்கிட்ட இந்த device கொடுத்த  time , லொகேஷன் என்னோட வீடு கொடுத்தேன் அப்படியே டிஸ்பிலே ஆச்சு எனக்கு ஒன்னும் புரியல....இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ????

( இதுதாங்க நடந்துச்சு......இது என்ன device,priya ஏன் யார்கிட்டயும் பேசமாட்டேன்றாங்க , பெரியாச்சி சொன்ன உயிர் யாரு , அந்த அறை யாரோடது , அரவிந்த் மனைவி யாரு , சகுந்தலா தேவி ஏன் பெரியாச்சி சொன்னதை கேட்டு பயந்தாங்க இன்னும் இன்னும் நெறைய மர்மங்களை பத்தி அடுத்தடுத்த அப்டேட்ல சொல்ற அதுவரைக்கும் பை பை......😊😊😊😊🌹🌹🌹🌹🌹........)

தொடரும்.......

 

This post was modified 8 months ago by Punitha Karthikeyan

With love,
Punitha Karthikeyan


ReplyQuote
Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

                        அத்தியாயம் -5

                   காற்றில் உன் வாசம் 

நேரம் காலை 9 மணி    
S.M. Hr. Sec. School ,   

பள்ளி வளாகத்தினுள் ப்ரியாவின் கார் நுழைவதை பார்த்த வாட்ச்மேன் அவளுக்கு  புன்னகை தவழும் முகத்துடன் சல்யூட்  அடித்தார் .

அவரின் அருகில் வண்டியை நிறுத்திய பிரியா அவரின் வணக்கத்தை ஏற்று  கொண்டதை போல் புன்னகையுடன் தலையசைத்தாள். 

பின் அவரிடம் , குழந்தை வந்திட்டாளா ரமேஷண்ணா.  

ரமேஷ் ,  ஓஹ் அப்போவே வந்திருச்சு கார்டன்ல விளையாடிட்டு இருக்கும்மா.

பிரியா , சரிண்ணா அப்பறம் இந்தாங்க என்னோட ரூம் சாவி ரூமை ஓபன் பண்ணி என்னோட டேபிள்ல மீட்டிங் சர்குலர் இருக்கு அதை நோட்டீஸ் போர்டுல போட்டுருங்க நான் பாப்பாவை பார்த்திட்டு வந்திரேன் என்றவள் காரை கிளப்பி சென்று பார்க்கிங்கில் விட்டுவிட்டு கார்டெனுக்கு சென்றாள் . 

அங்கு குழந்தை கார்த்திகேயனுடன் விளையாடி கொண்டிருந்தாள். 

கார்த்திகேயன் M.P.Ed முடித்துவிட்டு S.M. பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிகிறான். ப்ரியாவும் கார்த்திகேயனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் பின் வேறு கல்லூரியில் பயின்றதால் இருவரும் வேறு வேறு வழியில் சென்றனர்.

அதன்பின் இருவரும் சந்தித்தது S.M. பள்ளியின் இன்டெர்வியூவில் தான். இன்டெர்வியூக்காக தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைத்தவனுக்கு அதிர்ச்சியாக தன் பள்ளி தோழி தலைமை ஆசிரியர் இருக்கையில் இருப்பதை கண்டு வியந்தான்.

ஆனால்  ப்ரியாவோ எதையும் கண்டுகொள்ளாமல் இன்டெர்வியூவை தொடர்ந்தாள்.கார்த்திகேயனும் நல்லவிதமாக இன்டெர்வியூவை முடித்துக்கொண்டு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டெரை பெற்றுக்கொண்டான். 

அதன்பின்னே பிரியா அவனிடம் இயல்பாகபேசினால்.ஏற்கனவே அவளின் குணத்தை பற்றி  அறிந்திருந்ததாள்  கார்த்திக்கும் சகஜமாக பேசினான். பின் இருவரின் நட்பும் மேலும் வளர்ந்தது. 

( சரி சரி வாங்க வாங்க கதைக்குள்ள போகலாம்......😊😊😊😊)  

பிரியா , பாரதி என்றழைத்தால் தன் மகளை.

அம்மாவின் குரலை கேட்டு வேகமாக ஓடிவந்தாள் பாரதி. 

பிரியா , மெதுவா வாங்க குட்டி

பாரதி , அம்மா அம்மா கார்த்திக் அங்கிள் எனக்கு பாயசம் கொடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு இந்தாங்க நீங்களும் சாப்பிடுங்க  என்று கையில் இருந்த பாயாசத்தை ஊட்டி விட்டால் அன்பு மகள். அதை சாப்பிட்ட பிரியா , என்ன விசேஷம் கார்த்திக் பாயாசம் எல்லாம் தூள் பறக்குது.

கார்த்திக் , ஒரு விசேஷமும் இல்ல இனிப்பா சாப்பிடணும் போல இருக்குனு நைட் புனிதாகிட்ட சொன்னேன் காலையில பாயாசம் செய்து கொடுத்திட்டாள்   என்றான் லேசாக சிரித்தவாறு.

பிரியா , சரி சரி வழியாத கேட்டதை செய்து தர பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்  என்றவள் , ஆமா நிஷா குட்டி எங்க ?? என்று வினவினாள்.

கார்த்திக் , அதை ஏன் கேக்குற ?????

பிரியா , சரி கேக்கல விடு என்றாள் நமட்டு சிரிப்புடன்.

கார்த்திக் , மொக்க போடாத சொல்றத கேளு

பிரியா , சரிங்க ஆஃபீஸ்ர் என்றவள் தன் உதட்டின்மீது விரல் வைத்து நின்றாள்.

கார்த்திக் , அது அந்த பயம் இருக்கனும்....அவங்க அம்மா பாயசம் செய்து கொடுத்ததும் அவங்க அம்மா முந்தானைய பிடிச்சிட்டு சுத்திட்டே இருந்தா  நான் கூப்பிட்டு பார்த்தேன் வரலை சரின்னு  அம்மாக்கூடவே வரட்டும்னு வந்திட்டேன் என்றான்.

பிரியா , சரி சரி அவங்க வரட்டும்.....இப்போ மெயின் கேட் போகலாம் ஸ்டூடெண்ட்ஸ் வர ஆரம்பிச்சிட்டாங்க போகலாம் என்றாள்.

கார்த்திக் , ஓகே ஓகே.....

பின் பாரதி குட்டியை பியானோ வகுப்பில் விட்டுவிட்டு மெயின் வாசலுக்கு சென்றனர்.அங்கு அவர்கள் செல்லவும் புனிதாவும் நிஷாக்குட்டியும் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

புனிதா , குட் மார்னிங் மேம்.....

நிஷாகுட்டி , குட் மார்னிங் மேம்....

பிரியா , குட் மார்னிங் என்று இருவருக்கும் பொதுவாக சொன்னவள் பின் நிஷாகுட்டியை பார்த்து , பியானோ கிளாஸ்க்கு டைம் ஆச்சுல்ல சீக்கிரம் போங்க என்றாள்.

நிஷாகுட்டி , ஓகே மேம் என்றவள் அங்கு இருந்து வேகமாக ஓடினாள்.

அவள் போவதை பார்த்த
புனிதா , ஓகே மேம் நானும் கிளாஸ்க்கு போறேன் 10th கு மேக்ஸ் கிளாஸ் இருக்கு.

பிரியா , ஓகே யூ கேர்ரி ஆன்  என்றாள் .

அதன்பின் ப்ரியாவும் கார்த்திக்கும் மாணவர்களின் ID card,uniform,shoe check செய்து அனுப்பினர்.

கூட்டுப்பிராத்தனைகாண மணி அடிக்கவும் மாணவர்கள் அனைவரும் தங்கள் வகுப்புகளில் இருந்து வரிசையாக வெளியில் வர ஆரம்பித்தனர்.

அனைவரும்  ஒன்றாக கூடியதும் தமிழ் தாய் வாழ்த்து  ஆரம்பமானது . அது முடிந்த  பின் அன்று பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும்  அவர்களுக்கான பரிசு பொருள் வழங்கப்பட்டது.

பின்னர் ஒரு மாணவன் முன் வந்து திருக்குறளும் அதற்கான பொருளையும் கூறினான். அதன்பின் ஒரு மாணவி முன் வந்து ஆங்கில பழமொழியும் அதற்கான பொருளையும் கூறினாள்.

அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் அந்த வாரம் முழுவதும் நடந்த போட்டிகள் பற்றிய அறிவிப்பும் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

கடைசியாக தலைமை ஆசிரியருக்கான உரையை தருவதற்காக பிரியா மைக் முன் நின்றாள்.

பிரியா , ஹாய் பிரெண்ட்ஸ் ( என்னது பிரெண்டா ????? ஐயோ ஐயோ இந்தமாதிரி எனக்கு ஒரு HM கிடைக்காம போயிட்டாங்களே.........கிடைச்சிருந்தா ???🤔🤔....ஒன்னும் பண்ணிருக்கமாட்ட.....(என்னோட mind voice ).....🙄🙄போடி.....)
     
           குட் மார்னிங் இந்த வாரம் எல்லாருக்கும் நல்லா போயிருக்கும்னு நினைக்கிற சோ நெஸ்ட் வீக் இதைவிட பெட்டெரா போகணும்னு எல்லாரும் முயற்சி பண்ணுவோம்.அப்புறம் இந்த வீக் Prize winners,participants எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...ஹ்ம்ம் one Important announcement students half yearly exam start ஆக போகுது so prepare panna start பண்ணுங்க அதுலயும் Best கொடுப்பீங்கனு நம்புற.....Apart from studies, half yearly holidays முடிந்ததும் pongal celebrations இருக்கு அதுக்கான student's circular இன்றைக்கு unga class ku வந்திரும்  class teachers அதை   class notice boardla பின் பண்ணிருங்க  மற்ற  details staff meetingla discuss பண்ணலாம்  then staff cirucular already notice boardla இருக்கு check பண்ணிக்கோங்க ..... ஓகே நௌ திருக்குறள் அண்ட் ப்ரொவெர்ப் சொன்ன மாணவர்களுக்கு ஒரு சின்ன பரிசு கொடுத்திரலாம் நன்றி என்று அத்துடன் தன்  உரையை முடித்து கொண்டாள்.

பின் பரிசு வழங்கப்பட்டதும் தேசிய கீதம் முடிந்து மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர். அவர்களை ஒழுங்கு படுத்தி அனுப்பிய கார்த்திகேயன் kinderguarden Gate நோக்கி சென்றான்.

அப்பள்ளியில் kinderguarden மாணவர்களுக்கு 10.30 மணிக்கு தான் வகுப்புகள்  ஆரம்பமாகும் என்பதால் அவர்களை பார்ப்பதற்குத்தான் கார்த்திக் அங்கு செல்கிறான்.

தன் அறைக்கு  சென்ற ப்ரியாவை  அவளுக்கான பணிகள் அவளை உள் வாங்கிக்கொண்டது.

(S.M.Hr Sec.School kindergarten to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் கல்விக்கூடமாகும். 6 gate கொண்ட கட்டிடம் அது.

மெயின் கேட் - for Staffs and parents
Kindergarten gate - for kinterguarten students
Primary gate - for primary students
senior gate - for 6 to 8 std students
Super senior gate - for 9 to 12 std students
Vehicle gate - for staff and students vehicle

காலை நேரம் அனைவரும் மெயின் கேட் வழியாக மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க படுகிறது. மாலை நேரம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேட் வழியாக செல்லலாம் அதுவும் பெற்றோர்களுடன் செல்லும் மாணவர்களுக்கு தனியாக பாஸ் காண்பிக்க வேண்டும் இல்லையேல் செல்ல அனுமதி இல்லை.
Vehicle வைத்திருக்கும் மாணவர்கள் தங்களின் டோக்கனை கொடுத்துவிட்டு செல்லவேண்டும்..இது ஆசிரியர்களுக்கும்  பொருந்தும். 

ஆனால் kinderGuarten மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 1மணி  வரை தான் பள்ளி வேலை நேரம் என்பதால் அவர்களுக்கு இந்த நிபந்தனைகள் கிடையாது.அதுமட்டும் இல்லாமல் அவர்களின் குடும்ப உறுப்பினர் மட்டுமே அழைத்து செல்ல முடியும் அதுக்கும் பாஸ் வேண்டும்.Van,auto எதற்கும்  அனுமதி கிடையாது.இதற்கு ஒப்பு கொண்டால் மட்டுமே இப்பள்ளியில் பயில Seat கிடைக்கும்.

கொஞ்சம் கண்டிப்பு என்றாலும் பள்ளியின் பெயரும் , புகழும் , மாணவர்களின் நன்னடத்தையும் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் அதற்கு ஒப்பு கொள்கின்றனர் .)
 
பிரியா இங்கு வேளையில் மூழ்கி இருக்க அவளை கொள்வதற்கான வேலைகளும் அதிவேகமாக நடந்துகொண்டிருந்தது.

அவர் போனில் கொடுத்த அறிவுரைகளை பெற்றுக்கொண்ட அந்த கும்பல் அவளுக்காக அந்த ஆளில்லாத சாலையில் காத்திருந்தது.

ப்ரியாவுக்கு என்ன ஆகும் அடுத்த update ல சொல்ற.......

தொடரும் .......

 

 

With love,
Punitha Karthikeyan


ReplyQuote
Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

                        அத்தியாயம்-6

                காற்றில் உன் வாசம் 

                         

கமிஷனர் ஆபீஸ் ,

மித்ரனும் அரவிந்தும் அந்த device -ஐ வைத்து கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.

மித்ரன் , என்ன பண்ணலாம் அரவிந்த்.

அரவிந்த் , ஹ்ம்ம் டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்...

மித்ரன் , ஹ்ம்ம் ஓகே என்று கூறி அந்த device-ஐ  கையில் எடுத்தான்.

அதை  அவன்  கைகளில்  எடுத்ததும் அறையை  ப்ரகாஷமாக மாற்றியது அதில் இருந்து வந்த வெளிச்சம்.

நேரம் என்ற வார்த்தை தோன்றியது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

மித்ரன் அதன் கீழே காலையில் பிரியாவிற்கு அருள் வந்த அந்த நேரத்தை பதித்தான்.

பின், இடம் என்ற வார்த்தை தோன்றியது அதற்கு மித்ரன் தன் வீட்டு  முகவரியை பதித்தான்.

அப்போது அவர்கள் முன் ஒரு திரை தோன்றியது.அதில் இன்று காலை நடந்த அத்தனையும் கண்முன் விரிந்தது.ஆனால்.......

அரவிந்த் , என்ன அண்ணா இது எல்லாமே இருக்கு பட் யாரோட முகமும் கிலேயரா இல்ல அண்ணி முகம் கூட சுத்தமா தெரியலையே என்றான் அதிர்ச்சியுடன்.

மித்ரன் , ஆமா அரவிந்த் குரல் மட்டும் தா தெளீவா கேக்குது....ஓகே எதிர்காலத்தை பற்றி கொடுத்து பார்க்கலாம்.

அரவிந்த் , ஓகே அண்ணா

மித்ரன் மறுபடியும் அதை இயக்கினான்.
இப்போது  பிரியா பள்ளியில் இருந்து வரும் நேரமும் ,முதல் முதலில் தாங்கள் இருவரும் சந்தித்த இடத்தின் பெயரையும் கொடுத்தான். அதனை பார்த்த
அரவிந்த் , அண்ணா அண்ணி எப்படி அங்க வருவாங்க ஸ்கூல் முடிந்ததும் கோவிலுக்குத்தான போவாங்க ஆனா நீங்க ??? என்று கேள்வியாக முடித்தான்.

மித்ரன் , எனக்கே தெரியலடா நான் சும்மாதான் கையை  வைச்சேன்  எதுவோ ஒன்னு என்னை  இயக்குன மாதிரி இருந்தது முடிச்சதும்தான் நானே கவனிச்சேன் அது எனக்கே ஷாக்காத்தான் இருக்கு என்று இவன் முடிக்கவும் காட்சிகள் திரையில் விரியவும் சரியாக இருந்தது.

அதில் ஏதோ ஒரு கும்பல் ஒரு பெண்ணை தாக்குவது போலவும் பின் அப்பெண்ணை ஒரு ஆண் கொலை செய்ய வருவது போலவும் அதை இன்னொரு பெண் தடுப்பது போலவும் காட்சிகள் தோன்றி மறைந்தது.

அங்கிருந்த இருவருமே உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தனர்.

அரவிந்த் , என்னண்ணா இது யாரு இந்த பொண்ணு என்ன நடக்குது ஒன்னும்புரியல.....

மித்ரன்  , அரவிந்த் எனக்கு பயமா இருக்கு ப்ரியாவுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு....என்றான் சிறு நடுக்கத்துடன்...

அரவிந்த் , ஐயோ அண்ணா அதெல்லாம்  ஒன்னும் ஆகாது அண்ணி எதுக்கு அங்க வரப்போறாங்க இந்த device ஏதோ தப்பா காட்டுது...

மித்ரன் , இல்லடா இதுல ஏதோ இருக்கு என்னமோ நடக்க போகுதுனு என்னோட உள் மனசு சொல்லுது... இப்போ டைம் என்ன ????

அரவிந்த் , டைம் ஒன்னு தான் ஆகுது நாலு மணிக்கு தான் ஸ்கூல் விடும் எல்லாம் முடிச்சிட்டு அண்ணி கிளம்ப எப்படியும் 6 மணி ஆகிடும். ஆனால் நீங்க கொடுத்த டைம் 5 மணி எப்படி அண்ணா..... நான்தான் சொல்றன்ல இதையெல்லாம் நம்பாதீங்க pls....

மித்ரன் , இல்ல அரவிந்த் என்னால அவ்ளோ ஈஸியா எடுத்திக்க முடியாது....இப்போவே அவளுக்கு கால் பண்ணி carefull - ஆ  இருக்க சொல்லு என்றான்.

அவனின் தவிப்பை புரிந்து கொண்ட அரவிந்த் தனது போனை எடுத்து ப்ரியாவுக்கு கால் செய்தான்.ஒன்று அல்ல ஐந்து முறை கால் செய்து விட்டான் ஆனால் ப்ரியாவின் மொபைல் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

அரவிந்த் , அண்ணா சுவிட்ச் ஆஃப் ன்னு வருது

மித்ரன் , கார்த்திக்கு கால் பண்ணு

அரவிந்த் , கார்த்திக்கு கால் பண்ண அதுவும் சுவிட்ச் ஆஃப் என்று வர அதையும் தன் அண்ணனிடம் கூறினான்.

மித்ரன் , ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் புனிதாவுக்கு கால் பண்ணிப்பாரு

அரவிந்த் , அண்ணா.......அது....

மித்ரன் , என்ன அதுவும் சுவிட்ச் ஆஃப்- ஆ ??????

அரவிந்த , இல்லை என்கிட்ட அவங்க நம்பர் இல்ல என்றான் தலையை குனிந்தவாறு...

மித்ரன் புனிதாவிற்கு கால் செய்தான் அரவிந்தை யோசனையாக பார்த்தவாறு.
கடைசி ரிங்கில் காலை எடுத்தாள் புனிதா.

புனிதா ,  ஹலோ

மித்ரன் , ஹலோ நான் மித்ரன் பேசுறேன்

புனிதா , தெரியுதுண்ணா சொல்லுங்க

மித்ரன் , அது ப்ரியாக்கு கால் பண்ண சுவிட்ச் ஆப் னு வருதா அதா அவகிட்ட கொஞ்சம் பேசணும் என்றான் தயங்கியவாறு....

புனிதா , அண்ணா இது லஞ்ச் ஹவர்  kindergarten students கு leaving time so gate ல இருப்பாங்க அதா சுவிட்ச் ஆஃப் பண்ணிருப்பாங்கண்ணா என்றாள்.

மித்ரன் , ஓகே மா thanks நான் வச்சிரேன்....

புனிதா , சரிண்ணா

போனை கட் செய்துவிட்டு யோசனையாக அமர்ந்திருந்தான் மித்ரன். அவனை பார்த்த அரவிந்த் , என்ன ஆச்சுண்ணா???

மித்ரன் , லஞ்ச் டைம் அதான்  சுவிட்ச் ஆஃப் பண்ணிருக்கா  வேற ஒன்னும் இல்ல.....ஆமா உங்கிட்ட எப்படி  புனிதாவோட நம்பர்  இல்லாம போச்சு என்றான் கேள்வியுடன்.

அரவிந்த் ,  அது அண்ணிதான் delete பண்ண சொன்னாங்க....அப்பறம் அவங்ககூட பேசக்கூடாதுனு சத்தியம் வாங்கிட்டாங்க என்றான் வருத்தத்துடன்.

மித்ரன் , ஹ்ம்ம்......அப்போ பிரியா என்கிட்ட சண்டை போட்ட மாதிரிதான் எல்லாமே நடந்து இருக்கு...... வீட்டுல நடக்குற எதுவுமே எனக்கு தெரியறது இல்லை எனக்கும் தெரிஜிக்கணும்னு தோன்றவும் இல்லை ஹ்ம்ம் என்றான் பெருமூச்சியுடன்..

அரவிந்த் , அண்ணா......

மித்ரன் , உண்மைதான் அரவிந்த்..... கொஞ்சம் நான் குடும்பத்தையும் கவனிச்சிருந்தால் இன்னைக்கு உன் வாழ்க்கை கேள்விக்குறியா  இருந்திருக்காது. இப்போதுதான் ப்ரியாவோட கோவம் எனக்கு புரியுது....

அரவிந்த் புரியாமல் பார்க்க மித்ரன் தொடர்ந்தான் , இன்றைக்கு காலையில ப்ரியா  அருள் வந்து பேசிட்டிருக்கும் போது அம்மாவை கவனிச்சியா??? அவங்க முகமே சரியில்ல  அவங்களுக்கும்  இதுல சம்பந்தம் இருக்கு......அதுமட்டும் இல்ல என்று நிறுத்த

அரவிந்த் , இன்னும் என்னண்ணா????

பிரியா , மித்ராவுக்கும் ப்ரகாஷுக்கும் கூட ஏதோ சம்பந்தம் இருக்கு அவங்க முகம் கூட ஏதோ வித்தியாசமா இருந்தது  என்றான்.

அரவிந்த் , உங்களுக்கு இன்னைக்கு தான் அவங்கமேல doubt வந்திருக்கு ஆனால் அண்ணி என்கிட்ட முதலையே சொல்லிட்டாங்க என்றான் .

மித்ரன் , என்ன சொன்னா ???  என்று வினவினான் ஆச்சரியத்துடன்.

அரவிந்த் , ஹ்ம்ம் பிரச்சனை முடிஞ்ச மறுநாள் சொன்னாங்க 'கூட பிறந்திட்டா  அவங்கள முழுசா நம்பிரணுமா??'அப்படினு சொன்னாங்க... எனக்கும் குழப்பம்தான் ஆனால் மித்ரா, பிரகாஷோட நடவடிக்கைய பார்க்கும் போதும் எனக்கு doubt வந்திட்டு என்றான்....

மித்ரன் , ஹ்ம்ம் பிரியா எல்லாரையும் correct - ஆ கணிச்சி வச்சிருக்கா  ஆனால் நாந்தான் எதையும் புரிந்துகொள்ளாமல் அன்னைக்கு உனக்கு என்ன தெரியும் கல்யாணத்திற்கு அப்பறம் ரொம்ப மாறிட்டேன்னு சண்டை போட்டுட்டேன்  ஹ்ம்ம் இப்போ பார்த்த நாந்தான் ரொம்ப மாறியிருக்க....ஏன் பாரதிக்குட்டிக்கூட என்ன வெறுக்குற அளவுக்கு நடந்திருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாயிருக்கு  என்றான் வருத்தத்துடன்.

அரவிந்த் , என்னண்ணா சொல்றீங்க ??

மித்ரன் , ஹ்ம்ம் ஆமாடா ..... அதைப்பற்றி இன்னொரு நாள் சொல்றேன் இப்போ டைம் ஆகிட்டு ப்ரியாவுக்கு கால் பண்ணி அலெர்ட்டா இருக்க சொல்லு என்றான் .

அரவிந்த் ப்ரியாவுக்கு கால் செய்ய முதல் ரிங்ளையே எடுத்துவிட்டால்.

அரவிந்த் , ஹலோ அண்ணி

பிரியா , ஹ்ம்ம் எனக்கு meeting இருக்கு என்ன விஷயன்னு சீக்கிரம் சொன்னா நல்லா இருக்கும் என்றாள் வேண்டா வெறுப்பாக.

அரவிந்த் , sorry அண்ணி but விஷயம் கொஞ்சம் important என்றவன் கமிஷனர் ஆஃபீசில் நடந்ததை ஒன்று விடாமல் கூறினான் பின்  அண்ணி please கொஞ்சம் carefull - ஆ  இருங்க என்று முடிக்கவும் பிரியா காலை கட் செய்தாள். அரவிந்த் போனை கையில் வைத்துக்கொண்டு முழித்து கொண்டிருந்தான்.

மித்ரன் , என்ன கட் பண்ணிட்டாளா ??? அரவிந்த் ஆமாம் என்று தலையசைக்கவும் ஒரு பெருமூச்சை வெளியிட்டவன்  ஒரு முடிவோடு பைக் சாவியை கையில் எடுத்தான் பின் அரவிந்தை பார்த்து
நீ gh ல போய் postmartem ரிப்போர்ட் வாங்கிட்டு வந்திரு நான் கிளம்புறேன் என்று கூறி வெளியில் சென்றுவிட்டான்.
அரவிந்தும் அவனது பணியை செய்ய கிளம்பினான்.

          மித்ரன் தனது 'royal enfield' பைக்கை செலுத்தி கொண்டிருந்தான். ஆனால் அவனது மனமோ 8 வருடங்களுக்கு முன் ப்ரியாவை முதல் முதலில் சந்தித்த நாளுக்கு சென்றது.

8 வருடங்களுக்கு முன்........

தொடரும்.........

This post was modified 8 months ago by Punitha Karthikeyan

With love,
Punitha Karthikeyan


ReplyQuote
Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

                   அத்தியாயம் -7 

              காற்றில் உன் வாசம் 

 

8 வருடங்களுக்கு முன்......

bungalow nagar     

காலை   6 மணி   மார்கழி மாதம் அந்த தெருவில் இருக்கும்  பெருமாள் கோவிலில் சுப்ரபாதம் ஒலித்து கொண்டிருந்தது. தெருவில் உள்ள பெண்கள் அனைவரும் அவர்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தனர்.

அந்த பெரிய வீட்டு வாசலில் 45 வயது மிக்க ஒரு பெண் கோலமிட்டு கொண்டிருந்தார் அவள் பெயர் வள்ளி. அந்த வீட்டுக்கு அவள் வரும்போது அவருக்கு வயது 10. தாய் தந்தை இல்லாமல் அனாதையாக ஒரு வேலை உணவுக்காக வீட்டு வாசலில் கையேந்தி நின்றவரை வீட்டுகுள் அழைத்து சென்று பசித்த வயிறுக்கு உணவளித்து உடுக்க உடை கொடுத்து தங்குவதற்கு வீடும் வேலையும் கொடுத்துவர் காமாட்சியம்மாள்.
   அங்கே வள்ளியை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாரே அவர் தான் காமாட்சியம்மாள் வயது 60 . பட்டு சேலையை கிராமத்து பாணியில் கட்டி கழுத்தில் தங்க தாலியுடன் வைர அட்டிகை அணிந்து கையில் கல் பதித்த  தங்க வளையல் காலில் தண்டை நெற்றியில் ஒரு ரூபாய் அளவில் பொட்டு நெற்றிவகுட்டில் குங்குமம்  வைத்து , பார்த்தால் கையெடுத்து கும்பிடும் அம்மன் போல் தோற்றம் கொண்ட அவருக்கு மனமும் அப்படியே.

( இனி நாம காமாட்சியம்மாளை பாட்டி என்றே அழைப்போம்..... 😃😃😃) 

வள்ளி , ஏன்ம்மா நான் ஒன்னு சொன்னா கோபப்படமாட்டீகளே?? என்றாள் பீடிக்கையுடன் . 

பாட்டி , என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு என்னனு சொல்லு முதலா என்றார்.

வள்ளி , அதுவந்தும்மா..... உங்களுக்கு 60 வயசு ஆச்சு இன்னும் வீட்டு வேலையெல்லாம் பார்க்குறீங்க ஆனால் உங்க மருமக 8  மணிக்கு முன்னாடி எழுந்திக்கிறதே இல்ல நீங்களும் என்னனு கேக்கமாட்டேங்குறீங்க அவங்களும் இதுதான் சாக்குன்னு இருக்காங்க அப்பறம் எப்படி பொறுப்பு வரும் என்றாள் ஆதங்கத்துடன்.

பாட்டி , அடியே!! நான் எதையும் கவனிக்காம இல்ல அவள் செய்யுறதுக்குத்தான் இன்னும் இந்த வீட்டோட பொறுப்பை அவள்கிட்ட கொடுக்காம இருக்க அவளோட பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி மருமகள் வந்ததும் என் பேத்தி கிட்ட தான் இந்த வீட்டோட பொறுப்பையும் இந்தா இருக்கு பாரு கொத்துச்சாவி இதையும் ஒப்படைப்பேன் அதுக்கு அப்பறம் தான் இந்த உயிர் என்னோட உடம்பை விட்டு போகும் என்றார் கலங்கிய குரலில்.

வள்ளி , ஐயோ ஆத்தா என்ன நீ நல்ல நாள் அதுவுமா இப்படி பேசுற....நான் ஒரு லூசு உனக்கு தெரியாத விஷயமா ஏதோ ஒரு ஆதங்கத்தில கேட்டுட்டேன் என்ன மன்னிச்சிரு  நீ கலங்காத ஆத்தா எனக்கு கஷ்டமா இருக்கு என்றாள் விழிநீருடன் .

பாட்டி , அடி கூறுகெட்டவளே நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன் அதுக்கு நீ ஏன்  அழுற ??? போ போய் எல்லாருக்கும் காபி போடு என்று அனுப்பி வைத்தாள்.

ஆனால் பாட்டியின் மனதில் வேறு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. ( வாங்க என்ன ஓடுதுனு கேப்போம் .... ஒட்டு கேக்கபோறணு சொல்லு ( என்னோட மைண்ட்  வாய்ஸ் ).... ஹி ஹி ஹி...😜😜😜)

பாட்டி மனதில் , வள்ளி சொல்றதும் உண்மைதான் தன் மருமகள் சகுந்தலா தேவி இந்த வீட்டிற்கு ஏற்றவள் இல்லை என்பதை அவள் இந்த வீட்டில் காலடி வைத்த அன்றே தெரிந்து கொண்டார்.

     பொதுவாக பாட்டி சகுனம் பார்ப்பவர் அல்ல.. ஆனால் சகுந்தலா தேவிக்கும் தன் மகனுக்கும் கல்யாணம் ஆன நாளில் நடந்த அனைத்தும் நினைவில் வந்தது.

காமாட்சி அம்மாளின் கணவர் மித்ரேந்திர ராஜா ( இனி நாம் இவரை தாத்தா என்றே அழைப்போம் ) பெரிய ஜமின் குடும்பம் அவரோடது. ஏகப்பட்ட சொத்துக்கள் கொண்டவர்.  தயாளு குணமும் எதிர்பவரை தன்  பார்வையால் பொசுக்கும் சிவனையும்  போன்றவர் . அவர்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி அவருக்கு இரு அண்ணன்மார்கள். இருவரும் இப்போது உயிரோடு இல்லை. அவர்களின் குடும்பமும்  தாத்தாவை நம்பியே இருந்தது.

      தாத்தா தன் 25  வயதில் காமாட்சி பாட்டியை கரம் பிடித்தார். வந்த ஒரு வருடத்திலே மாமியாரின் மனதில் இடம்பிடித்தார் காமாட்சி பாட்டி. வீட்டின் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு  ஒய்வு எடுத்து கொண்டார் காமாட்சி பாட்டியின் மாமியார் .அதன்பின் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தாத்தா அந்த முடிவை எடுத்தார்.

தாத்தா ,  காமாட்சி நமக்கு இந்த ஒரு குழந்தை போதும்மா....ஏன் என்று விழிகளிலால் கேட்டவரிடம்....உன்னோட பிரசவ வலியை பார்க்கும் போது எனக்கு உயிர் போயி திரும்ப வந்த மாதிரி இருந்ததும்மா போதும் இனி உனக்கு அந்த வலி வேண்டாம் என்று முடித்து விட்டார்.அதை கேட்ட காமாட்சி பாட்டி பெருமையாக உணர்ந்தார்.

( தாத்தா நீங்க ரொம்ப கிரேட் தாத்தா.....💗💗💗💗🌹🌹🌹🌹🌹🌹😭😭)

அதன்பின்  குழந்தைக்கு வேதநாயகம் என்று பெயரிட்டு நல்லமுறையில் வளர்த்தனர். வேதநாயகத்திற்கு 20 வயது நடக்கும் பொழுது அனைத்து சொத்தையும் தாத்தா மீது எழுதி வைத்துவிட்டு அவரின் அம்மாவும் அப்பாவும் இயற்கை எய்தினர் . அதில் பொறாமை கொண்ட அவரின் அண்ணன்மார்கள் அவரையும் காமாட்சி பாட்டியையும் கொல்ல முயன்றனர். ஆனால்  அந்த முயற்சி அவர்களையே காவு வாங்கியது.

வேதநாயகத்திற்கு 23 வயது இருக்கும்பொழுது சில பொறுப்புகளை ஒப்படைத்தார் தாத்தா. தனக்கு கிடைத்த சிறு பொறுப்பையும் பெரியதாக கருதி அதில் சாதித்தும் காட்டினார் வேதநாயகம்.

   தன் மகனின் வெற்றியை கண்ட தாத்தா இன்னும் சில பொறுப்புகளை கூடுதலாக கொடுத்தார். அதிலும் தன் திறமையை காட்டினார் வேதநாயகம்.
   தன் மகனை நினைத்து பெருமை கொண்ட பெரியவர் தன் குடும்பம் இத்தனை காலம்  பாதுகாத்து வந்த மூன்று பொக்கிஷங்களை  தன் மகனிடம் ஒப்படைக்க நினைத்தார்.

ஆனால் காமாட்சியம்மாளோ அதற்கு சம்மதிக்கவில்லை . பெரியவர் காரணம் கேட்டதற்கு , நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் தானே எல்லா பொறுப்பையும் நம்மகிட்ட கொடுத்தாங்க நீங்க ஏன் அவசர படுறீங்க ??? பெரியவங்க அப்படி செஞ்சதுல ஏதாவது காரணம் இருக்கும் நீங்க எதுவா இருந்தாலும் யோசிச்சு செய்ங்க என்று கூறிவிட்டார் .

  ஆனால் பெரியவர் வேறு மாதிரி யோசித்தார்.

வெயிட் வெயிட்....... அந்த 3 பொக்கிஷம் என்ன என்னன்னு சொல்லுறேன்.

1. நவரத்தினங்கள் பதித்த தங்க  திரிசூலம்
2. நவரத்தினங்கள் பதித்த வெள்ளி வீச்சரிவாள்
3. மரகத லிங்கம்

     இந்த 3 பொக்கிஷமும் அவர்களின் பூஜை அறையில் தனி தனி பெட்டகத்தில் இருக்கிறது.

    இப்போ வாங்க தாத்தா என்ன முடிவு எடுக்குறாங்கனு பார்க்கலாம்.

     ஒரு நல்ல நாளில் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து பூஜைகள் செய்து வீச்சரிவாள் அடங்கிய பெட்டகத்தின்  சாவியை வேதநாயகத்திடம் ஒப்படைத்தார் மித்ரேந்திர ராஜா .

       பாட்டிக்கு இதில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது. அவரின் வருத்தத்தை பார்த்த தாத்தா , என்னவென்று கேட்க அதற்கு பாட்டியோ , இப்போவும் சொல்ற நீங்க அவசர பட்டுடிங்கனு தோணுது..

தாத்தா , சாவி மட்டும் தான் கொடுத்திருக்க அதுல என்ன இருக்கு ??????

பாட்டி , எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கே நான் ஏன் பயப்படுறேனு புரியலை இதுக்குமேல நான் என்ன சொல்றது.

தாத்தா , எனக்கு புரியுதும்மா கருப்பனோட அருள் இல்லாத வேதநாயகத்து கிட்ட பொறுப்பை கொடுக்குறது சாமீ குத்தம்ன்னு 
நீ நினைக்கிற சரிதானா ????

பாட்டி , ஆமா என்றார் இன்னும் தெளியாத பயத்துடன் .

தாத்தா , எனக்கு அடுத்து அவனுக்குதான அருள்  வரும் என்றார் .

பாட்டி , இது நம்ம பரம்பரையில யாராவது ஒருத்தருக்கு தான் வரும் அதுல சந்தேகம் இல்லை ஆனால் அது நம்ம குடும்பத்தில யாருக்குனாலும் வரலாம் என்றார் கோபத்துடன்.

தாத்தா ,   நீ என்ன சொல்லவரா காமாட்சி 

பாட்டி , உங்க அப்பாவுக்கு வந்த அருள் உங்க  அண்ணன்களுக்கு வராம ஏன் உங்களுக்கு வந்தது ?????

தாத்தா , அது அது அவங்க குடி அது இதுன்னு சுத்தம் இல்லாம இருந்தாங்க ஆனால் நான் அப்படி இல்லை.

பாட்டி , ஹ்ம்ம் சுத்தமா இருக்கனும் அப்போதுதான்  அருள் வரும் என்றார் கவலையுடன்

தாத்தா , அப்போ நம்ம பையன் சுத்தம் இல்லனு சொல்றியா?? என்றார் காட்டமாக

பாட்டி , என்னோட புள்ளைய நானே அப்படி சொல்லுவேனா ??? உங்களுக்கு அருள் எந்த வயசுல வந்துச்சு?? சொல்லுங்க

தாத்தா , 20 வயசுல வந்துச்சு என்றார் யோசனையாக 

பாட்டி , ஹ்ம்ம் நம்ம பையனுக்கு 23 வயசு ஆச்சு இன்னும் எந்த அறிகுறியும் இல்லை அதுதான் எனக்கு பயமா இருக்கு

தாத்தா , இல்லம்மா நீ  தேவை இல்லமா பயப்படுற விடும்மா என்றார்

பாட்டி , இல்லைங்க நீக்க பொறுப்பை கொடுத்திட்டீங்க அதனால உங்களுக்கு அருள் நிக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு.... 5 வருஷத்துக்கு அப்பறம் இந்த வருஷம் தான் திருவிழா நடக்க போகுது சாமீ உக்கிரமா வரும் எனக்கு அதை நினைச்சாதான் பயமா இருக்கு..

தாத்தா , ஹ்ம்ம் எனக்கும் ஏதோ தப்பு பண்ண மாதிரி தோணுது பார்ப்போம் என்ன நடக்குனு என்றார் கலக்கத்துடன்

பாட்டி , ஹ்ம்ம் அந்த பெரியாச்சியும் கருப்பனும்   தான் நமக்கு துணையா இருந்து காக்கணும் என்று வேண்டிக்கொண்டார் .

காமாட்சியம்மாள் நினைத்தது போலவே தான் நடந்திருந்தது. வேதநாயகத்திற்கு சில தீய பழக்கங்கள் இருந்தது. கல்லூரியில் படிக்கும் போது சில கூடா நட்பாள் புகை பிடிக்க கற்று கொண்டார். அதன் பின் தொழிலை கையில் எடுத்ததும் சில business பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அங்கு அவர் கற்றுக்கொண்டது குடிப்பழக்கம்.

இப்படியிருக்க திருவிழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்க அனைவரும் கிளம்பி அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலிக்கு சென்றனர்.

கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
வெள்ளி வீச்சரிவாளையும் , தங்க திரிசூலத்தையும் அம்மனின் பாதத்தில் வைத்துவிட்டு பெரியாச்சி அம்மனை வணங்கி நின்றார் மித்ரேந்திர ராஜா.

     ஒரு கையில் ஆயுதத்தையும் இன்னொரு கையில் குழந்தையும் மடியில் ஒரு பெண்ணின் உடலை கிழிப்பதுபோலவும் காலில் ஒரு ஆணினை ஆக்ரோஷமாக  மிதித்திருப்பது போலவும் இருந்த அந்த  அன்னையின் கண்ணில் கருணை மட்டுமே இருந்தது .

அதனை கண்டா தாத்தாவின் கண்ணில் கண்ணீர் கொட்டியது.

திருவிழா நாளும் வந்தது.......

அம்மனுக்கு அலங்காரம் முடிந்து அன்னை ஜொலித்தால்.......

மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு ஆரத்தி எடுக்க காமாட்சியம்மாளுக்கு அருள் உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்தார்.
அவரை பார்த்த மக்கள் கன்னத்தில் போட்டுகொண்டு ஆத்தா மகமாயி பெரியாச்சியம்மா என்று பக்தி மிகுதியில் ஆர்ப்பரித்து கொண்டிருந்தனர்.

அப்போது பூசாரி திரிசூலத்தை கொண்டுவந்து காமாட்சியம்மாளிடம் கொடுத்தார். அவரோ  இன்னும் அதிகமாக அருள் வந்து ஆடினார். அதே ஆக்ரோஷத்துடன் கருப்பசாமி சிலை இருந்த இடம் நோக்கி ஆடிகொண்டே சென்றார்.அவரின் பின் பூசாரி வெள்ளி வீச்சரிவாளோடு சென்றார். 
    அங்கு கருப்பசாமிக்கு பூஜை நடக்க தாத்தாவுக்கு அருள் வரும் என்று ஊர் மக்கள் எதிர் பார்க்க, தாத்தாவோ தன் மகன்  வேதநாயகத்துக்கு  அருள் வரும் என்று எதிர் பார்க்க ஆனால் நடந்தது..........

தொடரும்..........

   

 

With love,
Punitha Karthikeyan


ReplyQuote
Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

                       அத்தியாயம்-8

                காற்றில் உன் வாசம் 

                கருப்பசாமிக்கு பூஜை நடக்க தாத்தாவுக்கு அருள் வரும் என்று ஊர் மக்கள் எதிர் பார்க்க, தாத்தாவோ தன் மகன்  வேதநாயகத்துக்கு  அருள் வரும் என்று எதிர் பார்க்க ஆனால் நடந்தது..........

              உறுமி  முழங்க மணி சத்தங்கள் ஒலிக்க மேளதாளங்களின் ஓசைகளுக்கு நடுவில் ஹெய்யய்யய்யய் என்ற சத்தத்துடன் முன்னாடி ஆடிக்கொண்டிருந்த காமாட்சியம்மாளின் காலில் வந்து விழுந்தான் வீரசிம்மன்.

              வீரசிம்மன்மீது அருள் ரொம்ப உக்கிரமாக வந்து ஆடிக்கொண்டிருந்தார். முதன் முதலில் அருள் வருவதாலோ  5 வருடத்திற்கு பின் கொடுக்கின்ற திருவிழா என்பதாலோ அருள் நிக்கவே இல்லை. உடம்பை குலுக்கி கையை நெட்டி முறித்து ஆடுவதுலே ஊர் மக்களுக்கு புரிந்து விட்டது வந்திருப்பது கருப்பசாமி என்று . ஆனால் அதனை அவரே கூறவேண்டும் அப்போதுதான் சாமியின் வீச்சரிவாளை அவரிடம் கொடுத்து சாமக்கொடையின்  போது வேட்டைக்கு அனுப்ப முடியும். இல்லையேல் ஏதாவது அசம்பாவிதம் நேரக்கூடும் என்று அவ்வூர் மக்களால் நம்பப்படுகிறது.

           ஆனால் அவருக்கு  அருள் நிற்பதுக்குண்டான அறிகுறி எதுவும் தென்படவில்லை . நேரம் ஆக ஆக அதிகரித்ததே தவிர நிற்கவில்லை. ஒருவரும் வீரசிம்மனிடம் நெருங்க முடியவில்லை அவரும் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை .தாத்தாவிற்கு  தான்  ஏதோ தவறு செய்த உணர்வு ஏற்பட்டது.

          யாரும் எதிர்பார்க்கா நேரம் தாத்தா வீரசிம்மனின் காலில் விழுந்தார்.

ஐயா கருப்பு என்னை மன்னிச்சிருய்யா பெரிய பாவத்தை பண்ணிட்டேன்  உன் அருள் இல்லாத ஒருத்தன்கிட்ட உன்னோட பொக்கிஷத்தை ஒப்படைச்சிட்ட அதுக்காக என்னை மன்னிச்சிருய்யா என்னோட அண்ணன் மகனாயிருந்தாலும்  வீரசிம்மன் எனக்கும் மகன்தான் அவனுக்கு எதுவும் வராமல் நீந்தாய்யா பாத்துக்கணும் என்றார் கண்ணில் நீருடன்.

           அந்த வார்த்தைகளை கேட்ட கருப்பசாமியின் ஆக்ரோஷம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது. ஆனால் தாத்தா பேசிய வார்த்தைகள் மேளச்சத்தத்தில் யாருக்கும் கேட்காமல் போனது.

             அதன் பின் பூசாரி வந்து வந்திருப்பது யாரு என்று கேட்க 'கருப்புசாமி டா இந்த ஊரை காக்குறவன் டா' என்று வீரசிம்மன் கூற அப்போதுதான் தாத்தாவிற்கு மனம் தெளீந்தது மக்களுக்கும் அந்த வார்த்தையில் திர்ப்தி ஏற்பட்டது. பின்னர் சாமக்கொடைக்காக பூஜைகள் நடந்தது.

       வீரசிம்மன் கையில் தீப்பந்தமும் வீச்சரிவாலும் கொடுக்கப்பட்டது கழுத்து நிறைய மலைகளோடு பெரியாச்சி விபூதி பூசி ஆசி வழங்க  சாமி வேட்டைக்கு கிளம்பியது.மேளதாளங்களும் உறுமியும் விண்ணை பிளக்கும் அளவுக்கு சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. சாமி வேட்டைக்கு  சென்று வரும் வரை மேளச்சத்தங்கள் கேட்டு கொண்டே இருக்கவேண்டும்.

( அது ஏன்னா சாமிக்கு முழுசா அருள் இருக்கனும் இல்லனா உயிருக்கு ஆபத்தாகிடும். அருள் குறையும் போது மேளச்சத்தத்தை கேட்டாள் அருள் அதிகம் ஆகும்னு சொல்லுவாங்க .....வேட்டைக்கு போற சாமீ நல்லபடியா திரும்பி வந்தாதான் ஊருக்கு நல்லது. அதுமட்டுமில்லை கருப்பசாமி ஒரு நாள் வேட்டைக்கு சென்று வருவது தினந்தோறும் ஊரை சுற்றிவந்து அந்த ஊரையே காக்கும் என்றுகூறுவர்.)

வேட்டைக்கு சென்ற சாமீ  பெரும்  குரலோடு கத்திகொண்டே கோவிலுக்குள் இருக்கும் கருப்பசாமி சிலையின் முன் நின்று ஆடியது . பின் பூசாரி பூ கட்டி போட்டு எடுக்க சொல்ல நல்ல பூவையே கருப்பசாமி கொடுத்தார். இப்பொழுது தான் ஊர் மக்கள் சந்தோசமாக உணர்ந்தனர்.

திருவிழா முடிந்த சந்தோஷத்தில் ஊர் மக்கள் பெரியாச்சியாக இருக்கும் காமாட்சியம்மாளிடம் குறி கேட்க வரிசையில் நின்றனர்.

அப்போது ஒரு பெண் தன் சேலையின் முந்தானையை முன்ன நீட்டி , ஆத்தா எனக்கு 5 வருஷமா பிள்ளை இல்லம்மா நீந்தான் தஞ்சம்னு வந்திருக்க தாயீ என் வயித்தில ஒரு முத்த குடும்மா என்று கண்ணீர் மல்க கையேந்தி நின்றாள்.

அதற்கு பெரியாச்சியோ , உன் புருஷனுக்கு பெண் குழந்தை பிறந்தாள் கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவான். அதுக்கு ஏன் நான் உன் வயித்தில ஒரு உயிரை கொடுக்கணும்.

அப்பெண்ணோ பக்கத்தில்  இருக்கும் தன் கணவனை பார்க்க அவனோ தலை குனிந்தான்.பின் அப்பெண் பெரியாச்சியிடம் , ஆத்தா எனக்கு நீ பிள்ளையை கொடு அதை நான் உன் பொறுப்புள  விடுற நீயே பாத்துக்கோ என்றாள்  தீர்மானத்துடன்.

பெரியாச்சியோ , ஹா ஹா ஹா என்று சிரித்துவிட்டு இந்த வார்த்தைக்காக தான் காத்திருந்த உன் வாயால சொல்லிட்ட அடுத்த வருஷம் உன் வீட்டுல தொட்டில் ஆடும் தைரியமா போ என்று கூறி விபூதி பூசிவிட்டால்.

அதன்பின் , மித்ரேந்திர ராஜா வர அவரை பார்த்த பெரியாச்சி , என்னய்யா நீ செஞ்ச தப்ப கருப்பு காலுல விழுந்து மன்னிப்பு கேட்டு உன் பாவத்தை போக்கிட்ட ஆனால் உன் மகன் பண்ணப்போற தப்பு 25 வருஷம் உன் குடும்பத்தை மட்டும் இல்லாம இந்த உயிரையே நாசமாக்க போகுதே என்ன செய்யப்போற என்றார் கோவமாக .

தாத்தா , ஆத்தா என்னம்மா சொல்ற நீதாம்மா எல்லாரையும் காப்பாத்தணும் என்று அவளின் காலில் விழுந்தார் .

பெரியாச்சி , உன் மகனுக்கு சீக்கிரம் கல்யாணத்தை முடி இதுக்கு ஒரே தீர்வு அதுமட்டும் தான் .

அவரும் சரி என்றார் .

பின்னர் திருவிழா முடிந்து வீடு திரும்பியதும் வீச்சரிவாள் இருந்த பெட்டகத்தை  வீரசிம்மனிடம் ஒப்படைத்துவிட்டார் தாத்தா. அதனை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதினார் வேதநாயகம்.அதிலிருந்து அவர் தந்தையிடம் சரியாக பேசுவது இல்லை..

வேதநாயகத்தின் கல்யாண பேச்சு தொடங்கியது. தாத்தா அவருக்கு பெண் பார்க்க ஆனால் வேதநாயகமோ தன் தோழனின் தங்கையான சகுந்தலா தேவியை தான் கல்யாண செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்க பெரியவரும் வேண்டாவெறுப்பாக  சம்மதம் தெரிவிக்க கல்யாண வேலைகள் தொடங்கியது .

கல்யாணத்தை பெரியாச்சியம்மன் கோயிலில் நடத்த முடிவு செய்ய அதற்கு வேதநாயகம் ஒப்புக்கொள்ளவில்லை. தந்தைக்கும் மகனுக்கும் நடந்த போராட்டத்தில் மகனே ஜெயிக்க கல்யாணம் மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. சரி கோவிலுக்கு சென்று பத்திரிக்கை வைத்து கும்பிடலாம் என்று நினைத்து ஏற்பாடுகள் நடக்க கடையிலிருந்து பத்திரிக்கை வாங்க சென்ற   தாத்தா காலில் காயத்தோடு வந்து நின்றார். தாத்தா எல்லாரையும் சமாதான படுத்த பாட்டி மட்டும் ஏனோ எதையும் ஏற்க மறுத்தார் .

        கல்யாண நாள் மணமேடையில் வேதநாயகமும் சகுந்தலா தேவியும் அமர்ந்திருக்க ஐயர்  மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பக்கத்தில் வீரசிம்மனின் மகன் ஆருத்ரமித்ரன்( வயது 4) அவனது தாய் அவனை சமாதானப்படுத்த கையில் கொடுத்திருந்த ஜூஸ் அக்னியில் கொட்டிவிட அக்னி அணைந்தது. அதனை பார்த்தவர்கள் அபசகுனம் என்று கூற தாத்தா அனைவரையும் சமாளித்தார். ஆனால் பாட்டி மட்டும் தன் மனதில் 'இன்னும் என்னலாம் நடக்க போகுதோ' என்று கலக்கம் அடைந்தார்.

      அதன்பின் ஐயர் தாலியை கேட்க காமாட்சியம்மாளின் தங்கை விசாலாட்சி மஞ்சள் வைக்க எடுத்து சென்றதால் அதை கொண்டு வர காமாட்சியம்மாள் சென்றாள். ஆனால் அங்கோ விசாலாட்சி தாலிக்கு மஞ்சள் வைக்க வந்தவர் மின்விசிறியை போட்டுவிட்டு பின் வைக்கலாம் என்று நினைத்து தாலியை தாம்பாளத்தில் வைத்து விட்டு அந்த அறையில் இருந்த மின்விசிறியை போட ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டார். நல்லவேளையாக அவருக்கு எதுவும் ஆகவில்லை ஆனால் கையை அசைக்க முடியவில்லை. கையை தூக்க முயல அந்த சமயம் தான் காமாட்சி உள்ளே வந்தார் நடந்ததை கேட்டதும் பெரியதாக அதிர்ந்தார்.

விசாலாட்சி , அக்கா ஏதோ தப்பா தெரியுதுக்கா கல்யாணத்தை பேசாமல் நிறுத்திரலாம் நம்ம புள்ள வாழ்க்கை யோசிக்காத அக்கா என்றார் கலக்கத்துடன்.

காமாட்சி , இல்லை விசாலாட்சி ஒரு பொண்ணுக்கு  மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போச்சுன்னா ஊரு தப்பா பேசும் அவளோட வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிடும் அதுமட்டும் இல்ல நம்ம பரம்பரைக்கே அந்த பொண்ணோட  பாவம் வந்து சேரும் நீ கவலைப்படாத எல்லாத்தையும் அந்த பெரியாச்சியும் கருப்பனுக்கு பாத்துப்பாங்க வா இப்போ மணமேடைக்கு போவோம்  என்று சமாதானப்படுத்தி கூட்டிச்சென்றார்.

கல்யாணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது  பெரியவர்களின் மனம் மட்டும் கலக்கத்துடனே இருந்தது.

இவர்களின் திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடம் கடந்த நிலையில் சகுந்தலா தேவியின் மொத்த சுயரூபமும் வெளியில் வந்தது.

வீட்டு வேளைகளில் எதிலும் கலந்துகொள்ளமாட்டாள் ஆனால் மத்தவர்களை வேலை வாங்குவாள். காலையில் நேரம்கழித்து எழுபவளுக்கு bed  காபி வேண்டும் இல்லையேல் வீடு ரெண்டாகும். வீட்டிற்குள் நுழைந்த சிறிது நாளில் தன் அண்ணன் குடும்பத்தையும் வீட்டிற்குள் கொண்டுவந்துவிட்டால். ஆனால் வீட்டிலுள்ள யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதுவே அவர்களுக்கு வசதியாகி போனது தன் கணவனின் கையிலிருந்த சில பொறுப்புகளை தன் அண்ணனுக்கு வாங்கித்தந்தால் சகுந்தலா தேவி.

வீட்டில் யாராவது குறை கூறினாலோ அல்லது திட்டினாலோ வேதநாயகத்திடம் திரித்து கூறி வீட்டில் ஒரு ப்ரெளயத்தையே உண்டு பண்ணிவிடுவாள் சகுந்தலா. அதனால் அனைவரும் அவளிடம் பேசவே யோசிப்பார்கள்.

ஆனால் இவர்களால் என்ன முயன்றும் வீட்டு நிர்வாகத்தில் மட்டும் எதுவும் செய்யமுடியவில்லை அதற்கு காரணம் காமாட்சியம்மாள். அவர்களின் ஜம்பம் காமாட்சியம்மாளிடம் பலிக்காமல் போனது.  வேதநாயகத்திடம் மாமியார் கொடுமை என்று கூற நினைத்து அம்மா என்று பேச்சு ஆரம்பித்தாலே அவர்களை அனுசரித்து போ என்று விலகிடுவான். அது அண்ணன் தங்கை இருவருக்கும் பெரும் அடியாகவே இருந்தது . சரி கொஞ்ச நாள் போகட்டும் என்று விட்டு விடுவர். ஆனால் வேதநாயகமோ மற்ற விஷயத்தில் எப்படியோ அன்னை விஷயத்தில் அவர்கள் என்ன முயன்றும் மாறவேயில்லை.

சகுந்தலா தேவிக்கும் காமாட்சியம்மாளை கண்டால் சிறிது பயம்தான். இவள் காலையில் நேரம் கழித்து எழுவதை பார்த்துகொண்டே இருந்த காமாட்சியம்மாள்  முதலில் சொல்லி பார்த்தார் பலன் இல்லை. சரி வெள்ளி கிழமை மட்டும் எழுந்துகொள்ள சொன்னார் புண்ணியம் இல்லை. பிறகு ஒரு நாள் தன் மகனின் கையாலே ஒரு வாலி தண்ணீரை ஊற்ற வைத்தார். அதிலிருந்து அவளுக்கு அவரின் மேல் சிறிது பயம் தான் . அவள் கணவன் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தால் இவரோ மகன் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார். அதிலும் ஒரு வருடம் ஆகியும் பிள்ளை இல்லை தன்னை ஒதுக்கி வைத்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துவிட்டால் பின்னர் தன் திட்டம் எப்படி பழிக்கும் என்ற பயம் வேறு அதனால அவரிடம்  சற்று அடங்கியே இருந்தார். 

கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்த 10 வருடத்திற்குள் வீரசிம்மனின் மனைவி ராதிகாவிற்கு இரண்டு முறை கர்ப்பம் தரித்து பின் கலைந்துவிட்டது.

அப்படி இருக்க ஒரு நாள் வெள்ளிக்கிழமை பூஜை நடக்கும் பொழுது காமட்சியம்மாளுக்கு அருள் வந்து தன் சன்னதிக்கு வந்து பொங்கல் வைக்க சொன்னார் பெரியாச்சியம்மா.

மறுவாரமே சென்று பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.எல்லாம் நல்லபடியாக முடிந்து வீடு திரும்பி ஒரு மாதத்தில் சகுந்தலா தேவி கற்பமுற்றாள். அதிலிருந்து சில நாட்கள் கழித்து ராதிகாவும் கறகற்பமுற்றாள்.  

       ஒரு மாத இடைவெளியில் வேதநாயகம்- சகுந்தலா தேவிக்கு ஒரு ஆண் குழந்தையும் , வீரசிம்மன்-ராதிகாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

ஆண் குழந்தைக்கு மித்ரேந்திரன் என்றும் பெண் குழந்தைக்கு புனிதமித்ரா என்றும் பெயரிட்டனர்.
அதன்பின் இரண்டு இரண்டு வருட இடைவெளியில் அரவிந்தமித்ரன் மற்றும் பிரகாஷ் மித்ரன் பிறந்தனர்.

ஐந்து வருடங்கள் முடிந்த நிலையில் பெரியாச்சியம்மனை வழிபட சென்ற ராதிகா விபத்தில் இறந்துவிட மனைவி இல்லாத வீட்டில் வாழ விரும்பாத வீரசிம்மன் அதே ஊரில் உள்ள தங்களுக்கு சொந்தமான   வேறு வீட்டிற்க்கு சென்றுவிட்டார் .

பெரியவர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் அவரை தடுக்கவும் இல்லை .

அடுத்த 5 வருட இடைவெளியில் மித்ரா தேவி பிறந்தாள்.

20 வருடங்கள் முடிந்த நிலையில் கோவில் திருவிழா நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு எடுத்து பெரியாச்சியிடம் குறி கேட்க அம்மன் இந்த வருடமும்  உத்தரவு தரவில்லை. பெரியவர்களுக்கு அதில் பெரும் வருத்தமே 20 வருடங்களாக பெரியாச்சியம்மன் உத்தரவு தரவில்லை இந்த வருடமாவது தரும் என்ற நம்பிக்கையில் வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அடுத்துவந்த 10 வருடமும் உத்தரவு தரவில்லை கோவிலை புதுப்பிக்க கேட்டதுக்கும் அனுமதி  தரவில்லை.

இந்த 30 வருடங்களில் நடந்ததை வீட்டு வாசலிலே நின்று நினைத்து பார்த்துக்கொண்டிருந்த பாட்டியை யாரோ தொட்டு அழைக்க திரும்பி பார்த்தார் பாட்டி. வேற யாருங்க நம்ம ஹீரோ தான்.

மித்ரன் , என்ன பாட்டி வாசல்ல நின்னு கனவு கண்டுட்டு இருக்கியா ???

பாட்டி , வாய்யா என்ன ஓடிட்டு வந்திட்டியா ?????

மித்ரன் , அட பாட்டி அது ஓடுறது இல்ல jogging  சரி அதை விடு இங்க ஏன் நிக்கற ???

பாட்டி , அது என்னவொய்யா என் வாயில நுழைய மாட்டேங்குது... சும்மாதாய்யா நிக்குறேன் ஏதோ பழைய நியாபகம் வாய்யா உள்ள போவோம்.

மித்ரன் , என்ன தாத்தா கூட duet பாடுநீயா??? என்றான் கிண்டலாக.இருவரும் பேசிக்கொண்டே ஹாலுக்கு வந்திருந்தனர்.

பாட்டி , இந்த வயசுல நான்  எங்கய்யா பாடப்போறேன் நீந்தான் ஒரு நல்ல பொண்ண காதலிச்சு duetu பாடணும் என்றார் சிரிப்புடன் .

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தார் சகுந்தலா தேவி வந்தவர் , அவன் எதுக்கு யாரையோ காதலிக்கனும் அவனுக்காக சின்ன வயசுல இருந்தே என் அண்ணன் பொண்ணு நீலவேணி காத்திருக்கும் போது  என்றார். அதற்கு

பாட்டியோ சற்றும் யோசிக்காமல் எதுக்கும்மா உன்னை மாதிரியே 8 மணிக்கு எழுந்திருக்கவா????? என்றார்.

அவ்வளவுதான் சகுந்தலாவின் வாய் தானாக மூடிக்கொண்டது.அதனை பார்த்து சிரித்த மித்ரன் தன் அம்மாவிடம் , அம்மா நான் எப்போவும் அப்பா பண்ண தப்ப பண்ணமாட்டேன் பாட்டி பார்க்கிற பொண்ண மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன் ஒருவேளை காதல் கீதல்னு வந்தாகூட பாட்டிகிட்ட தான் first சொல்லுவேன் என்றான்.

சகுந்தலா , அப்போ சின்ன வயசில இருந்து நீந்தான் வேணும்னு ஒருத்தி சுத்திட்டு இருக்காளே அவளுக்கு என்ன பதில் சொல்றது??

மித்ரன் , நீங்க என்ன பதில் வேணுனாலும் சொல்லிக்கோங்க ஆனால் அந்த fraud ஓட மகளை ஒரு நாளும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என்றான் கோவமாக

பாட்டி , அய்யா வார்த்தை தப்பா இருக்கு பெரியவங்கள மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்றார் கண்டிப்புடன்.

மித்ரன் , மன்னிச்சிருங்க பாட்டி அவரு கம்பெனியில பண்ண குளறுபடியை பார்த்ததும் tension ஆகிட்டு அதுக்கு இவங்களும் கூட்டு அதான் இனி அப்படி பேசமாட்டேன் என்று கூறியவன் மாடி ஏறி தனது அறைக்கு சென்றுவிட்டான்.

ஹாலில் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் சகுந்தலா தேவி முகத்தை தொங்கப்போட்டு கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். காமாட்சியம்மாள் ஒரு சிரிப்புடன் பூஜை அறைக்கு சென்றார் .

தன் அறைக்கு சென்ற மித்ரனோ மிகுந்த கோவத்தில் இருந்தான். விஸ்வநாதன் ( சகுந்தலாவின் அண்ணன் ) கம்பெனியில் செய்த குளறுபடியை நினைத்து எரிச்சலாக வந்தது. விஸ்வநாதன் கோடிக்கணக்கில் திருட்டும் செய்திருந்தார். அவரை போலீஸில் ஒப்படைக்க மித்ரன் வீட்டில் உள்ளவர்களிடம் கூற சகுந்தலா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை பெரியவர்களும் குடும்பம் மனம் போகும் என்று கூறிவிட  வீட்டை விட்டு மட்டும் அனுப்பினர்.

இதையெல்லாம் நினைத்து கொண்டிருந்த மித்ரனுக்கு கோபம் அதிகமானதே தவிர குறையவில்லை. அவன் மனதில் , இந்த ஆளு செஞ்சது மன்னிக்கவே முடியாதது மன்னிக்கவும் கூடாது இதுல இந்த ஆளு பொண்ண நான் கல்யாணம் பண்ணனுமா no never என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் கைபேசியின் மணியோசை கேட்க அதனை எடுத்து பார்த்தவனின் முகம் புன்னகையை வெளியிட்டது உடனே காலை atten செய்து காதில் வைத்தான். 

மித்ரன் , ஹலோ சோடாபுட்டி என்றான் சிரிப்புடன்

சோடாபுட்டி , என்னை அப்படி கூப்பிடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன் கேட்கமாட்டியா?? என்றது எதிர்முனை கோவமாக.

மித்ரன் , அப்படித்தான் கூப்பிடுவ என்ன பண்ணுவ??? 

சோடாபுட்டி , எங்க அம்மா , அப்பா எனக்கு புனிதமித்ரான்னு பெயர் வச்சிருக்காங்க நீ என்னடான்னா சோடாபுட்டினு கூப்பிடுற பக்கி என்றாள் புனிதமித்ரா.

அட ஆமாங்க வீரசிம்மனின் மகள் புனிதமித்ராவே தான். மித்ரன் , புனிதா இருவருக்கும் ஒரே வயது என்றாலும் அண்ணன் தங்கை போலவே பழகினர். மித்ரா தேவியை விட புனிதாவின் மிதே அதிக பாசம் இருப்பதாக தோன்றும் மித்ரனுக்கு அதனாலே  புனிதாவிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வான். அவளும் அண்ணன்,தங்கை   என்ற பந்தத்தை தாண்டி  இன்னும் ஏதோ சம்மந்தம் இருப்பதாகவே தோன்றும்.

சரி வாங்க என்ன பேசுறாங்கனு கேட்போம்...😃😃😃

மித்ரன் , சரிங்க  புனிதா மேடம் இனி புனிதானே கூப்பிடுறேன்... என்ன காலையிலே கால் பண்ணிருக்க என்ன விஷயம் ????

புனிதா , அது அந்த பயம் இருக்கட்டும்.... இன்னைக்கு காலேஜ் last day ல என்ன pickup drop pickup பண்ணிறிய plsss அண்ணா.

மித்ரன் , ஓஹ் ஹோ இதுக்குத்தான் எனக்கு கால் பண்ணியா??? உங்க அண்ணன்  ஒருத்தன் இருக்கானே அவனை கூட்டிட்டு போகவேண்டியதான?? 

புனிதா ,  அது இல்லடா அண்ணனுக்கு ஏதோ important operation இருக்குதாம் அதாண்டா pls என்று கெஞ்சினாள் .

மித்ரன் , ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி அதுயென்ன pickup drop pickup ??? என்றான் கேள்வியாக

புனிதா , தேங்க்ஸ் டா.....வீட்டுலேருந்து pickup பண்ணிக்கோ அப்பறம் காலேஜ்ல drop பன்னிரு அப்பறம் theatre ல இருந்து pickup பண்ணிக்கோ அவ்ளோதான் என்றாள் கூலாக .

மித்ரன் , ஓஹ் ஹோ அப்படியா மேடம்..... சரிங்க மேடம் வரேன் மேடம்.... நீங்க படத்துக்கு போறது அப்பாக்கு தெரியுமா மேடம் ??? இல்ல என்று இழுத்தான்.

புனிதா , சொல்லிட்டேன் சொல்லிட்டேன் போதுமா ????

மித்ரன் , சரி கோபப்படாத செல்லக்குட்டி போன தடவை மாதிரி வெளில யாராவது பார்த்து அப்பாகிட்ட சொல்லிட்டா நமக்குத்தான் கஷ்டம் அதுக்குத்தான்டா  கேட்ட என்றான் வாஞ்சையாக.

புனிதா , சரி சரி நான் சொல்லிட்டேன் நீ கவலைப்படாத சீக்கிரம் வந்திரு என்றாள்

மித்ரன் , ஓகே டா நீ கிளம்பி இரு வந்திறேன் நீ லேட் பண்ணிராத சரியா ??? என்று கேள்வி கேட்டவன் அதற்கான பதில் சுப்ரபாதமாக ஒலித்ததும் காலை வைத்துவிட்டான் .

பின் மித்ரன் குளித்து கிளம்பி கிழே செல்ல தாத்தா அவனுக்காக dining table லில் காத்திருந்தார். அவனை  பார்த்ததும் ,

ஐயா வாய்யா சாப்பிடலாம் என்றழைத்தார் .
அவரை பார்த்து சிரித்தவன் அவர் அருகில் அமர்ந்தான்.

வள்ளி வந்து காலை உணவை பரிமாற இருவரும் சாப்பிட ஆரமித்தனர்.

தாத்தா , ஐயா மித்ரா படிப்பு முடிய போகுது அடுத்து என்னய்யா பண்ணபோற என்றார் கேள்வியாக .

மித்ரன் , தாத்தா நான் IPS பரீட்சை எழுதப்போறேன் அதுதான் என்னோட கனவு என்றான் கண்ணில் கனவு மின்ன .

தாத்தா , நல்லதுய்யா நீயாவது சொத்து சுகம்னு யோசிக்காம உன் கனவு பற்றி யோஷிக்குறியே சந்தோசம் ராசா என்றார் கண்ணீருடன்.அதனை பார்த்த மித்ரன் பதற  அப்போது அங்கு வந்த

பாட்டி , என்னங்க புள்ளை சாப்பிடும்போது என்ன பேசுறீங்க என்று அதட்டவும் தன் கண்ணீரை துடைத்து கொண்டார்.

பாட்டி , ராசா நீ வருத்தப்படாதய்யா அந்த மனுஷன் ஏதோ நினைப்புல சொல்லிட்டாரு நீ போலீஸ்காரனா ஆகப்போறேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோசம்... எங்க ஐயா கூட போலீஸா ஆகணும்னு ஆசைபட்டாரு ஆனால் அவரு ஐயா அதுக்கு சம்மதிகளை சொத்து பத்து இருக்கும்போது நீ மத்தவங்களுக்கு சம்பளம் கொடுக்காம ஐஞ்சுக்கும் பத்துக்கும் வேற ஒருத்தன் கையை எதிர்பார்க்க போரியான்னு சொல்லி அனுமதிகளை.... நீ சந்தோசமா பரீட்சை எழுதுய்யா அந்த பெரியாச்சி துணை இருப்பா என்றார்.

இதை அனைத்தையும் கேட்டு கொண்டே வந்த சகுந்தலாவும் வேதநாயகமும் dining டேபிள் லில் அமர்ந்தனர்.

சகுந்தலா , ஏன் அத்தை என் பையனுக்கு மட்டும் என்ன தலை எழுத்தா சொத்து இருக்கும் போது எதுக்கு வேலைக்கு போகணும் என்றார் கோவமாக .

பாட்டி , சொத்து இருந்து என்ன புண்ணியம் சுலபமா ஏமாத்திறாங்க அதுவே கூட பதவி இருந்தாள்  கிட்ட நெருங்க முடியுமா??? அதுவும் இல்லாமல் புள்ளைங்க ஆசையை பெத்தவங்க நிறைவேத்தனும் அதைவிடுத்து தடையா இருக்க கூடாது புரியும்னு நினைக்கிறேன் என்று பதில் கொடுத்தவர் மித்ரன் தட்டு காலியாவதை  பார்த்து 'ஐயா இட்லி வச்சிக்க என்றார்' .

இனி சகுந்தலா அங்கே வாய் திறப்பாரா ??வாய்ப்பே இல்லை என்றுதான் நமக்கு தெரியுமே.

மித்ரன் , எனக்கு போதும் பாட்டி நீங்க சாப்பிடுங்க புனிதா கால் பண்ணிருந்தாள் அவளை காலேஜ்கு கூட்டிட்டு போகணுமாம் so  நான் கிளம்புறேன் என்று கூறியவன் கை கழுவி விட்டு பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டு தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

வெளியில் வந்ததும் தன் bike ஐ எடுக்க எதிரில் அரவிந்தும் பிரகாஷும் வந்தனர்.

மித்ரன்  , என்னடா exam  முடிஞ்சிட்டு அதனால கிரிக்கெட் விளையாட ஆரமிச்சிட்டீங்களா ???

அரவிந்த் & பிரகாஷ் , ஹி ஹி ஹி......

மித்ரன் , சரி சிரிச்சது போதும் உள்ள போங்க ஈவினிங் வந்து உங்கள கவனிக்கிறேன் என்று கூறியவன் பைக்கின் ஹாண்ட்பேரை  முறுக்க அந்த 'royal enfield' வண்டி பறந்தது .

தன் IPS கனவை பற்றி சிந்தித்து கொண்டு  இருந்தவனின்  வாழ்க்கையை மாற்றப்போகிற தேவதையை இன்று சந்திக்க போகிறான் என்பதை தெரியாமலே  அவன் மனது வானில் சிறகின்றி பறந்து கொண்டிருந்தது என்ன காரணம் என்று அறியாமலே......

காற்றில்  வாசமாக மித்ரனின் தேவதை வருவாள் அடுத்த அத்தியாயத்தில்......

தொடரும்.......

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மக்களே , பெரியாச்சியம்மன் கருப்பசாமி கோவில் திருவிழாவில் நடக்கும்  அத்தனையும் உண்மை கலந்த எனது கற்பனையே பிழை இருந்தால் மன்னிக்கவும்.

கூடிய விரைவில் பெரியாச்சியம்மனின் வரலாறை பதிப்பிக்கிறேன்... அது முழுக்க முழுக்க உண்மை சம்பவமாக இருக்கும்.

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி மக்களே...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 

 

With love,
Punitha Karthikeyan


ReplyQuote
Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

                       அத்தியாயம்-9

                 காற்றில் உன் வாசம் 

மித்ரன் புனிதாவின் வீடு நோக்கி தன் 'royal enfield' பைக்கில் சென்று கொண்டிருந்தான்.அவன் மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோசம் , ஏதோ ஒரு பரபரப்பு இருந்தது. அதை இன்னதென்று வரையறுக்க அவனால் முடியவில்லை. ஆனால் மனதிற்கு பிடித்தமானதாக இருந்தது. தனக்கு சந்தோசம் தரக்கூடிய ஏதோ ஒன்று நடக்கபோகிறது என்று அவனது மனது அடித்து சொன்னது.

( என்ன இந்த பையன் இப்போவே இப்படி உருகுறான் இது சரியில்லையே.... எல்லாம் காதல் படுத்துற பாடு.... 😃😃😃🙀🙀)

புனிதா வீட்டின்முன் தனது பைக்கை நிறுத்திய மித்ரன் காதில்  'என்ன ஆச்சு உங்களுக்கு, இங்க எதுக்குவந்தீங்கயாரு உங்களை இப்படிபண்ணாங்க' என்ற இனிய குரல் விழ சட்டென திரும்பி பார்த்தான்.

அங்கே ஒரு பெண் முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தாள். மித்ரன் எட்டி எட்டி பார்த்தும் அவள் முகம் தெரியவில்லை. சரி அங்கு போய் பார்ப்போம் என்று நினைத்து பைக்கில் இருந்து கீழே இறங்கினான்.

( அப்போ நீ இன்னும் பைக்ல இருந்து கிழ இறங்களையா ????😡😡 இறங்காம தான் குதிச்சியா பக்கி ??..... இப்போவே இப்படியா ?? கடவுளே இந்த பாவியை ரட்சியும் ......🙀🙀🙀)..

பைக்கில் இருந்து மித்ரன் இறங்கும் பொழுது அவனின் புத்தகம் ஒன்று கீழே விழுந்தது அதனை அவன் கவனிக்கவில்லை . இறங்கிய மித்ரன் அந்த பெண்ணை நோக்கி இரண்டு அடி நடந்திருப்பான் திடிரென்று அவனது மூளை ,'டேய் மித்ரா என்னடா பண்ற  நில்லுடா...  இதுக்கு முன்னாடி பெண்ணையே பார்த்தது  இல்லையா ??' என்று மண்டையில் நங்கென்று தட்ட சடன் பிரேக்குடன் நின்றது அவனது கால்கள்.

ச்சை , என்ன இது பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பார்த்தமாதிரி நான் அந்த பொண்ணை பார்த்ததும் பின்னாடியே  போறேன் (பட்டிகாட்டனாச்சும் மிட்டாய் கடையை பார்த்தான் ஆனால் நீ இன்னும் அவளை பார்க்கலைப் பக்கி....😂😂😂😂)   நல்ல வேளை நம்ம மூளை நம்மளை ஸ்டாப் பண்ணிட்டு இல்லனா அசிங்கமா போயிருக்கும் என்று நினைத்தவன் திரும்பி போக நினைக்க அவனின் மனமோ,' இப்போ ஏன் திரும்பி போற நீ என்ன அந்த பொண்ணுகிட்ட ஐ லவ் யூ என்றா சொல்லப்போற சும்மா முகத்தை தான  பார்க்கப்போற அதெல்லாம்  ஒன்னும் தப்பு இல்லை' என்றது.

அய்யய்யோ இப்போ யாரு பேச்சை கேக்குறது என்று குழம்பியவனை யாரோ அழைக்கும் குரல் கேட்டு நிமிர்ந்தான். பார்த்தவனின் விழி  பார்த்தபடியே இருக்க அவனின் மனமோ ,

       இந்திரையோ இவள் சுந்தரியோ
      தெய்வரம்பையமோகினியோ                

 

       இந்திரையோ இவள் சுந்தரியோ
        தெய்வரம்பைய மோகினியோ

 

                 மனம் முந்தியதோ 
                  விழி முந்தியதோ
          கரம் முந்தியதோ எனவே

 

          உயர் சந்திரசூடர்குறும்பல
          ஈசர்சங்கணி வீதியிலேமணி     

 

                                                                                     பைந்தொட                               

 

      நாரிவசந்த ஒய்யாரிபொன் பந்து
                 கொன்டாடினளே 
     
                மனம் முந்தியதோ
                 விழி முந்தியதோ
           கரம் முந்தியதோ எனவே

என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தது.

தன் முன் ஒரு தளிர் கரம் அசைவதை உணர்ந்து சுயநினைவுக்கு வந்தான் மித்ரன் .

அவன்முன் அந்த முதுகு காட்டி நின்றிருந்த பெண் அதாங்க மித்ரனின் தேவதை  கையை அவனின் முகத்திற்கு நேராக அசைத்துக்கொண்டிருந்தால் அவளது கையில் ஒரு நாய்க்குட்டி இருந்தது. அதன்  காலில் அடிபட்டு  ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த

மித்ரன் , என்னங்க என்னாச்சு என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு. அப்பெண்ணோ தன் முகத்தில் விழுந்த முடியை தன்  உதட்டால் ஊதிவிட்டால் அதிலிருந்து வந்த காற்று அவளின் முடியை மட்டும் அல்ல மித்ரனையும் சேர்த்தே  அசைத்தது. பின் அந்த பெண் மித்ரனை பார்த்து , எவ்ளோ நேரம் கூப்பிடுறேன் உங்களுக்கு காது கேக்காத என்றாள்.

மித்ரன் , ஹி ஹி என்று அசடு வழிந்துவிட்டு , பாப்பா பப்பிக்கு என்ன ஆச்சு ??? என்றவன் பாப்பாவில் சற்று அழுத்தத்தை கூட்டினான். அப்போதுதானே அவள் பெயர் கிடைக்கும். பாப்பா என்று கூப்பிட்டாள் கோவப்பட்டு பெயரை சொல்லிவிடுவாள் என்ற எண்ணம் தான்.

ஆனால் அவளோ  விடாக்கண்டி போல , அதுவாடா பப்பிய கார்ல போன ஒரு idiot அடிச்சிட்டு போய்ட்டா பாவம்டா  பப்பி கத்திட்டே இருக்கு... பப்பிய கொஞ்ச பிடிடா இதோ வரேன்டா  என்று மூச்சுக்கு நூறு டா போட்டவள்  அவனது கையில் பப்பியை கொடுத்துவிட்டு பக்கத்தில் நின்றிருந்த அவளது vesba urban club 125 நோக்கி நடந்தாள்.

(நம்மாளு என்ன பண்றான்....பாவம் பிளான் எல்லாம் நல்லாத்தான் போட்டப்படி ஆனால் எல்லாம் விதி.....ஹா ஹா ஹா ஹா 😂😂)

அடிங்க நாம இவளை வெறுப்பேத்துனா இவ நம்மள டா சொல்லி காண்டு ஏத்துறாளே.... சரியான வில்லியா இருப்பா போலையே .... இப்போ எப்படி இவளோட பெயரை கண்டுபிடிக்கிறது என்ற  யோசித்து கொண்டிருக்க அப்பெண் கையில் ஒரு first aid box உடன் திரும்பி வந்தாள்.

வந்தவள் பப்பியின் காயத்திற்கு மருந்திட்டு கொண்டிருந்தாள்.அவள் கை மருந்திட்டு கொண்டிருக்க மித்ரன் அவளின் அழகை வர்ணித்து  கொண்டிருந்தான் . (மனசுல தாங்க ....)

பிறை போன்ற நெற்றி, வில் போன்ற வளைந்த புருவங்கள் த்ரெட்டிங் செஞ்சிருப்பாளோ அழகா வளைஞ்சிருக்கு ( இப்போ இந்த research ரொம்ப முக்கியம் தான்....😱😱) புருவத்தின் மத்தியில் வெள்ளை நிற கல் பொட்டு அதற்கு மேல் சிறியதாக குங்கும கீற்று , செதுக்கி வைத்தது போல் நாசி, தேன் போன்ற உதடு , இடைவரை நீண்ட கூந்தல் இரண்டு பக்கமும் முடி எடுத்து கிளிப் மாட்டி மல்லிகை சரத்தை தொங்கவிட்டிருந்தாள்,   வெள்ளை நிற long skirt அதே வெள்ளை நிறத்தில் சிகப்பு பூக்களை அங்கு அங்கே தெளித்தார் போன்ற மேல் சட்டை கழுத்தை சுத்திய துப்பட்டா ஆனால்.....
( என்னடா ஆனால் இவ்வளவு நேரம் வர்ணிச்ச இப்போ என்ன .....நீ வர்ணிச்சது மட்டும் அவளுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்  மகனே....😳😳🤔🤔)

ஆனால் இந்த கண்ணு மட்டும் ஏன் இப்படி முட்டை மாதிரி இருக்கு ஒரு வேளை சின்னப்பிள்ளையா இருக்கும் போது ரெண்டு முட்டையை முழிங்கிட்டாலோ ??( ரொம்ப முக்கியமான doubt தான் அவளுக்கு தெரிஞ்சது நீ காலி தம்பி...😃😃😳😳) ...... கண்ணை  உருட்டி உருட்டியே நம்மள உள்ளே இலுக்குறாளே 'முட்டைக்கன்னி' என்று அவன் நினைத்து முடிக்கவும் அவள் நிமிரவும் சரியாக இருந்தது.

அப்போது ஒரு கார் அவர்கள் அருகில் வந்து நின்றது . அதிலிருந்து இறங்கியவனை பார்த்த அப்பெண் அவன் அருகில் சென்று அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

அதனை பார்த்த மித்ரன் அதிர்ச்சியில் தனது  கன்னத்தை பிடித்து கொண்டு நின்றான்.

தொடரும்......

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எதுக்கு அந்த பொண்ணு அறைஞ்சது?? வந்த அந்த ஆள் யாரு??...... மித்ரன் அந்த பொண்ணோட பெயரை கண்டு பிடிப்பானா ??  அடுத்த u.d  ல soldra.....

அதுவரைக்கும் டாட்டா.....😀😀😀🙏🙏🙏

This post was modified 8 months ago by Punitha Karthikeyan

With love,
Punitha Karthikeyan


ReplyQuote
Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

                  அத்தியாயம் -10

              காற்றில் உன் வாசம் 

காரிலிருந்து இறங்கிய புதியவனை அந்த vesba பெண்  அறைந்ததில் அந்த புதியவன் மட்டும் இல்லை மித்ரனும் அதிர்ந்தான். 

அந்த புதியவனோ , ஏய் அறிவிருக்கா?? எதுக்கு இப்போ அடிச்ச ???? என்றான். 

vesba பெண் , உனக்கு முதல்ல அறிவு இருக்கா ?? எதுக்கு குட்டி நாயை அடிச்ச?? என்றாள் அவனுக்கும் சற்று சளைக்காத கோவத்தில். 

புதியவன் , கேவலம் ஒரு தெரு நாய்க்காக என்னையே அடிச்சிட்டல உன்னை என்ன பண்றனு பாரு என்றான்.   

vesba பெண் , என்னது கேவலம் தெருநாயா ???? இந்த வார்த்தை சொன்னதுக்கே உன்ன கொன்னுருக்கணும் பெரியப்பா முகத்துக்காக உன்ன சும்மா விடுறேன் இல்லைனா இப்போ நீ ஜெயிலில் கம்பிதான் எண்ணிட்டு இருந்திருக்கணும் என்றாள் ஏளனமாக. 

புதியவன் , ஏய் என்ன டி ரொம்ப பேசுற போனாப்போகுது சித்தி பொண்ணாச்சேன்னு அமைதியா இருந்தா  அதிகாரம் பண்ணிட்டு இருக்க ??? பொண்ணா லக்ஷணமா வீட்டுல அடக்கஒடுக்கமா இல்லாமல் இப்படி ரோட்டுல திரிஞ்சிட்டு கண்டதுக்காக என்னை அடிக்கிற idiot என்றான் எரிச்சலுடன்.

Vesba பெண் , விதுன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்று கத்தினாள். 

அதுவரை காருக்குள்  ஓட்டுனர் இருக்கையில் ஓட்டுனர் உடையில் இருந்த பெரியவர் நிலைமை கை  மீறுவதை உணர்ந்து வேகமாக இறங்கி வந்தார் . 

வந்தவர் , பாப்பா கோவப்படாதீங்க ஏதோ சின்ன பையன் தெரியாம பண்ணிட்டான் எதுவாயிருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் பாப்பா என்றார் பணிவுடன். 
அதுவரை கோபத்துடன் கத்திக்கொண்டிருந்தவள் அவர் வந்து சொன்னதும் 

vesba பெண் , சாரி சந்தானம் தாத்தா நீங்க முன்னாடி போங்க நான் என்னோட வண்டியில வரேன் என்றாள் சற்று கோபம் தணிந்தவளாக. 

சந்தானம் , சரி பாப்பா என்றவர் கையோடு விதுனையும் அழைத்து சென்றார்.தணியாத கோபத்துடன் விதுனும் அவருடன் சென்றான். 

இதுவரை நடந்ததை பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்த மித்ரன் அந்த vesba  பெண் தனது அருகில் வருவதை பார்த்து , என்ன என்றான் கேள்வியாக. 

vesba பெண் , ஹ்ம்ம் பப்பி என்றாள். 

மித்ரன் , என்னது ??? என்றான் கேள்வியாக .  

vesba பெண் , உங்க கையில பப்பி இருக்கு அதை என்கிட்ட தாங்க என்றாள் . 

மித்ரன் , ஓ சாரி இந்தாங்க என்றவன் அவளது கைகளில் பப்பியை கொடுத்தான். 

அதை வாங்கியவள் , என்னோட பெயர் பாப்பா இல்லை என்றவள் நிறுத்த "சாய்ப்ரியா" என்று முடித்தான் மித்ரன் . 

பக்கத்தில் கேட்ட  ஹாரன் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்த மித்ரன் தன் மனதிற்குள் , எவ்ளோ அழகான நாட்கள் ஆனால் அவளுடைய குணம் அறிந்தும் தப்பாக பேசிவிட்டோமே என்னை மன்னிப்பாளா என்னோட சபி என்று வருந்தி கொண்டிருந்தான். 

அதே நேரம் அங்கு பள்ளியில் ப்ரியாவுக்கு 
CEO ஆபீஸில் இருந்து மெயில் வந்திருந்தது . மாலை 3.30 மணிக்கு meeting என்று. 

கணக்கு பிரிவின் சம்மந்தமான meeting என்பதால் புனிதாவும் உடன் சென்றாள். மீட்டிங் முடிவதற்கு 4.30 மணி ஆனதால் புனிதாவை அவளது வீட்டில் விடுவதற்காக புனிதாவின் தந்தை வீட்டிற்கு முன் காரை நிறுத்தினாள் பிரியா.

புனிதாவின் அண்ணன் வெளிநாட்டில் செட்டில் ஆனதால் தந்தையை தனியாக விட மனமில்லாமல் தந்தை வீட்டிலே தங்கிவிட்டால் புனிதா. கார்த்திகேயனுக்கு யாருமில்லா  காரணத்தால் அவனும் சம்மதித்துவிட்டான். 

கார் வீட்டின் வாசலில் நிற்கவும் இறங்கிய புனிதா , உள்ள வாங்க mam என்றாள் .

அவளை முறைத்த பிரியா , இது ஸ்கூல் இல்ல வீடு இங்க madam தேவையில்லை என்றாள் .. 

அதற்கு புனிதா சிரித்துவிட்டு , சரி டி நிறைய பேசாத உள்ள வா என்றாள். 

சற்று தயங்கிய பிரியா , இல்லை டி  இன்னொரு  நாள் வரேன் என்று தயங்கி தயங்கியே கூறினாள் . 

புனிதா , எதுக்கு தயங்குற என்னாச்சு? நான் கூப்பிடலனாலும் நீயே உள்ள போயிருப்ப இப்போ என்ன?? என்றாள் . 

பிரியா, சற்று யோசித்தவள் மதியம் அரவிந்த் கால் செய்து கூறிய விஷயத்தை கூறினாள் . 

பின்னர் , எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் இப்போ இருக்குற நிலைமையில எது வேணுனாலும் நடக்கலாம்  புனி என்றாள். 

புனிதா , ஹ்ம்ம் எனக்கும் மித்து அண்ணா கால் பண்ணாங்க அவங்களோட குரலே சரியில்லை ஹ்ம்ம் நீ முதல்லயே சொல்லிருந்தாள் நான் கார்த்திக் கூட வந்திருப்பேன்ல சரி நீ கிளம்பு என்றாள். 

பிரியா , மா ....... மித்ரன் உனக்கு கால்  பண்ணாறா???  என்றாள் 

பிரியா எதையோ கூறவந்து மறைத்தது போல் இருந்தது புனிதாவுக்கு பின்னர் நம்மகிட்ட எதை மறைக்கப்போறா நம்மளோட கற்பனையா இருக்கும் என்று அதை  விடுத்து ப்ரியாவிடம் ,'ஆமா கால் பண்ணாரு first உனக்கு தான் பண்ணிருக்காரு நீ எடுக்கலைனு எனக்கு பண்ணாங்க' என்றாள். 

பிரியா , ஓஹ் ஹோ சரி டி நான் கிளம்புறேன் என்று காரை start செய்தால். புனிதாவும் சரி என்று கூற வண்டி கிளம்பியது. 

வண்டி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அப்போது மணி 5 .அந்த தெருவின் வளைவில் திரும்பும் போது ஒரு பெண்ணை ஒரு கும்பல் வேனுக்குள் ஏற்ற முயல்வது தெரிந்தது.வண்டியை அவர்களின் அருகில் சென்று நிறுத்தினாள். அப்போது தான் தெரிந்தது அது மித்ரா தேவி என்று.காரின் டாஷ்போர்டில் இருந்த தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிழே இறங்கினாள். 

ப்ரியாவின் வண்டி அவர்களின் அருகில் வரும்போதே கவனித்துவிட்ட கும்பல்  மித்ராவை வேகமாக வேனில் ஏற்றிவிட்டு இவளிடம் திரும்பியது. 
பிரியா அவர்கள் முன் துப்பாக்கியை நீட்டி 'ஒழுங்கா அந்த பெண்ணை  என்கிட்ட ஒப்படைச்சிருங்க இல்லை ஒருத்தனும் உயிரோட இருக்கமாட்டீங்க' என்றாள் ஆவேசத்துடன். 

முதலில் அவளை பார்த்து பயந்தாலும் அவளால் என்ன செய்துவிடமுடியும் என்று தோன்ற அந்த கும்பலில் ஒருவன் , இந்தாம்மா என்ன பூச்சாண்டி காட்டுறியா ?? பேசாம போயிடு அதுதான் உனக்கு நல்லது என்று மிரட்டினான். 

அப்போது பிரியா மேல் நோக்கி சுட்டாள் , என்ன டா சுட மாட்டேன்னு நினைச்சீங்களா??? கொன்றுவேன் மரியாதையா அவளை இறக்கிவிடுங்க என்றாள். அதே சமயம் இன்னொரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது.. 

பிரியா சுதாரிக்கும் முன்பே அவளை பிடித்து அவளது கையிலிருந்த துப்பாக்கியை பிடிங்கினான் அந்த கும்பலின் தலைவன். 

தலைவன் , ஏய் ! நீ என்ன எத்தனை தடவை அடிச்சாலும் சாகாமல் திரும்ப திரும்ப பொழச்சி வந்திட்டே இருக்க ஹான் .... என்றான்.

ப்ரியா , உன்னால என்னை ஒன்னும் பண்ணமுடியாது டா என்றாள் கோவமாக .

தலைவன் , என்னடி திமிரா?? உன்னோட ரெண்டு கையையும் நாலு பேரு பிடிச்சிருக்காங்க நான் இப்போ இந்த கத்தியால குத்த போறேன் இனி எப்படி பேசுறேன்னு பார்க்கிறேன் என்று கூறியவன் கத்தியை கொண்டு அவளை குத்த போக அப்போது எங்கிருந்தோ ஒரு கட்டை பறந்து வந்து அவன் கையை தட்டிவிட கத்தியை கீழே போட்டான். 

எல்லாரும் கட்டை வந்த திசை நோக்கி பார்க்க அங்கே கார்த்திகேயன் பைக்கில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். 

கார்த்திக் , ஏன்டா எத்தனை தடவை அடிவாங்கினாலும் திருந்தமாட்டியா ??விடுங்கடா அவளை என்றவன் வேக எட்டுக்கள் வைத்து அவர்கள் அருகில் வந்தான். 

கார்த்திக்கை பார்த்த அந்த கூட்டத்தின் தலைவன் சற்று நடுங்கித்தான் போனான். பின்னர் தையிரியத்தை வரவழைத்து கொண்டு தன் சகாக்களிடம் ,'அவனையும் பிடிங்க டா இன்னைக்கு ரெண்டு பேரையும் போட்டு தள்ளிருவோம்' என்று கட்டளையிட அவனை அடிக்க சென்றவர்கள் அடிவாங்கி தரையில் உருண்டனர். 

அப்போது வேனில் இருந்த மித்ரா கீழே இறங்க அவளை கடத்த வந்த கும்பல் அவளை அடிக்க வர அதை பார்த்த பிரியா அவர்களை தடுக்க அப்போது அந்த கூட்டத்தின் தலைவன் கீழே கிடந்த கத்தியை எடுத்து கொண்டு ப்ரியாவை குத்த வேகமாக ஓடி வந்தான். 

அப்போது எங்கிருந்தோ வந்த புனிதா அவனை தடுக்க அவளை தள்ளிவிட்டு விட்டு ப்ரியாவின் வயிற்றில் கத்தியால் குத்தினான்.

புனிதா , ஐயோ ப்ரியாயாயாயா ...........

கார்த்திக் , ப்ரியாயாயாயா...........   

மித்ரா , அண்ணிணிணிணி...........   

இந்த காட்சியை தான் ப்ரியாவை தேடி பள்ளிக்கு சென்று அதன்பின் CEO ஆபீஸ் சென்று கடைசியாக இங்கு வந்த மித்ரன்  கண்ணில் விழுந்தது மித்ரனை பார்த்த அந்த கும்பல் ஆளுக்கு ஒரு திசையில் ஓட ,

பிரியா , மாமாமாமாமமாமா........என்று கத்தினாள்.

மித்ரனுக்கு ஒரே ஒரு நொடி அதிர்ச்சி பின்னர் வேகமாக அவள் அருகில் சென்றவன் அவளை தன் கைகளில் அள்ளி எடுத்தான்.
பின்னர் அவளை ப்ரியாவின் காரில் படுக்க வைத்து கார்த்திக்கை வண்டியை எடுக்க சொன்னான். 

வண்டியில் ஏறும் முன் புனிதாவை ஒரு பார்வை பார்த்தான். அதில் மித்ராவை அழைத்து செல் என்ற கட்டளை  பொதிந்திருந்தது. 

வண்டியில் ஏறிய மித்ரன் ப்ரியா மயக்கத்திற்கு செல்வதை உணர்ந்து அவளை மடியில் கிடைத்தி அவளது  கன்னத்தை தட்டினான் அவனது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது .
மிகவும் சிரம பட்டு கண்களை திறந்தாள் 
பிரியா ,    மா.....மா மா....மா நா....ன்.....என்.....னை..........

மித்ரன் , என்னடா என்று பதிலளித்தவன் கார்த்திக்கை பார்த்து , வேகமா போடா இரத்தம் ரொம்ப வருது என்றான். கார்த்திக்கின் நிலையோ இன்னும் மோசமாக இருப்பதை உணர்ந்தான்.
அப்போது பிரியா மித்ரனின் சட்டையை பற்றி இழுக்க என்ன என்று கேட்டான். 

பிரியா , மா.......மா.....மா......மா...நா....ன்....... என்று அவள் ஏதோ சொல்ல தவிக்க அதை புரிந்துகொண்ட 

மித்ரன் , எனக்கு தெரியும் டா நீ...நீ....... "சாய்பிரியா இல்லை சாய்லக்ஷ்மி" என்று அவன் கூறவும் ஹாஸ்பிடல் வாசலில் கார் நிற்கவும் சரியாக இருந்தது. 

ஸ்ட்ரெச்சரில் அவளை படுக்கவைத்து அவளுடன் மித்ரனும் கார்த்திக்கும் சென்றனர். 

மனநிம்மதியுடன் கண்களை மூடினாள் "சாய்லஷ்மி".  

தொடரும்......

With love,
Punitha Karthikeyan


ReplyQuote
Page 1 / 2
Share: