Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Tamil short story  


Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

                 தெற்றுப்பல் சிரிப்பு 
                             

நானும் பார்த்திட்டே இருக்க கூட கூட பேசிட்டே இருக்க என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல ஹான் ???? சற்று கோபத்துடன் கத்தினான் கார்த்திகேயன்.  

இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு இன்றைக்கு இவ்ளோ பேசுற நீங்க அன்றைக்கு கோவில்ல பார்த்ததும் வேண்டான்னு சொல்லிருக்கணும் இப்போ வந்து குறை சொல்லக்கூடாது என்றாள் அவனுக்கு இணையான கோபத்துடன் புனிதா.  

நீ இப்படியே பேசிட்டிரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் என்னோட இன்னொரு முகத்தை பார்க்கத்தான் போற என்று கூறியவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பினான். 

ஆமா இருக்குற ஒரு முகமே அகோரமா இருக்கு இதுல இன்னொன்னு வேற போடா என்றவள் தனது பணியை தொடர்ந்தாள். ஆனால் மனம் மட்டும் அன்று கோவிலில் நடந்த நிகழ்வுக்கு சென்றது.   

புனிதா M.E. படித்து முடித்து விட்டு ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராய் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டில் வரன் பார்த்து கொண்டிருந்த சமயம் அது. 

யாரை பார்த்தாலும் மனதில் பதிய மறுத்ததால் வேண்டாம் என்று கூறிக்கொண்டிருந்தாள் . சுருக்கமாக சொன்னால் பெற்றவர்களின் கோவத்திற்கு ஆளாகிக்கொண்டிருந்தாள் .  

பெற்றவர்கள் சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்வதில் புனிதாவிற்கு எந்த தடையும் இல்லை ஆனால் மனதிற்கு பிடிக்காதவனை கல்யாணம் செய்வதில் உடன்பாடு இல்லை.அவளின் ஆசிரியர் பணியும் ஒரு காரணமாக இருக்கலாம் ஏனோ அந்த வேலையின்மீது அதிக பற்று அவளுக்கு  ஆனால் அவளின் பெற்றவர்களுக்கு இந்த வேலை பிடிக்கவில்லை அதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் வரும் அதுவே இன்னும் தீர்ந்த பாடுயில்லை இதுல புதுசா மாப்பிள்ளை பார்க்க வேறு கிளம்பிருக்கிறார்கள் என்று கோவம் வேறு சேர்ந்து கொள்ள தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வராமல் இருந்தாள் . 

பள்ளியில் மட்டுமே  எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது குழந்தைகளின் கள்ளம் இல்லா உள்ளம் ,சிரித்த முகம் இவையெல்லாம் அவளின் மற்ற பிரச்சனைகளை பின் தள்ளிவிடும்.  குழந்தைகளுக்கும் இவள் என்றாள் இஷ்டம் என்றே சொல்லலாம். அதற்கு காரணமும்  இருந்தது அவள் பாடம் எடுக்கும் முறை, கணக்கை சுலபமாக சொல்லித்தரும் முறை, மாணவர்களிடம் பழகும் பாங்கு எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் அவளின் சிரிப்பு ஆமாங்க நீங்க நினைக்குறது கரெக்ட் தான் அவளின் தெற்றுப்பல் சிரிப்பு.

  அவளின் சிரிப்புக்கு பல விசிறிகள் உண்டு   ஆனால் புனிதாவிற்கு ஏனோ தன் தெற்றுப்பல் பிடிக்காது.அதற்கு காரணம் கேட்டாள் தெரியாது என்பாள்.  

சரிங்க மாப்பிள்ளை விஷயத்துக்கு வருவோம்.....  

ஒரு நாள் புனிதாவின் அம்மா அவளை பெண் பார்க்க வருகிறார்கள்  அதனால் நாளை அவளின் பள்ளி அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு வரச்சொன்னாள். ஆனால் புனிதாவின் மனமோ மற்ற நாட்களை போல் இல்லாமல் ஏதோ வித்யாசமாக இருந்தது. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினாள்.    

மறுநாள் கோவிலில் கார்த்திகேயனை சந்தித்தாள். அவனை மறுப்பதற்கான காரணம் எதுவும் இல்லை என்றே தோன்றியது.பின்ன இருக்காதா நல்ல உயரம் ,கட்டுமஸ்தான தோற்றம் மாநிறம் தன்  அம்மாவுக்கு கொடுத்த மரியாதை , நேரம் தவறாமல் வந்த அவனின் puctuality,  அவனின் சிரிப்பு எல்லாம் சேர்த்து அவளை சரி என்று சொல்லவைத்தது.  

அப்பறம் என்ன ஒரு வாரத்தில் நிச்சயம் ஒரு மாதத்தில் கல்யாணம் என்று முடிவாகியது.கல்யாணமும் முடிந்து புனிதா புகுந்த வீட்டிற்கும் வந்த மறுமாதமே கர்ப்பமுற்றாள். பின் சில பல காரணங்களால் தனிக்குடித்தனமும் வந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட  4 மாதங்களில் அவளின் தெற்று பல்லை பற்றி அவன் பேசாமல் இருந்ததே இல்லை. அவனுக்கு அந்த தெற்றுப்பல் ரொம்ப புடிக்கும் அவளை கல்யாணம் பண்ணுவதற்கு இதுவும் ஒரு காரணம்  என்று இத்தனை நாளில் தெரிந்திருந்தது. 

எல்லாம் நன்றாகத்தான் சென்றது பின் என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா??? 

இந்த புனிதா பிள்ள மாசமா இருக்குல அவளுக்கு புரோட்டா சாப்பிட ஆசை வரவே கார்த்திகேயனிடம் கேற்க அவன் ஜீரணம் ஆகாது என்று மறுக்க அப்படிஇப்படி என்று  பேச்சு முற்றிப்போய் கடைசியில் 

புனிதா , இப்போ நான் ஆசைப்பட்டது வாங்கி தரலான என் பிள்ளைக்கு காதுல ஊளை வரும்னு எங்க பாட்டி சொல்லுச்சு 

( ஆமாங்க இது கிராமப்புறங்களில் நம்பப்படுகிற ஒரு மூடநம்பிக்கை தான்....இது எந்த அளவுக்கு உண்மையுனு எனக்கு தெரியலைங்க......)  

புரோட்டா வேணுங்குற ஆசையில புனிதா இப்படி சொல்ல ஆனா நம்ம கார்த்திகேயன் சார் வேறமாதிரி எடுத்துகிட்டாரு.  

கார்த்திக் , அது என்ன என் பிள்ளை உன் பிள்ளைன்னு பேசுற என்றான் பாருங்கள் புனிதாவிற்கு எங்கையாவது போய் முட்டி கொள்ளலாம் போல் இருந்தது.  

( இதுதாங்க பிரச்சனை......😳😳😳🙄🙄🙄)   

புனிதா , இப்போ நான் என்ன கேட்டுட்டே ஒரு புரோட்டா தானே அதுகே இந்த அக்கப்போரா முடியலடா சாமி என்று வாய்க்கு வந்ததை புலம்பி கொண்டிருந்தாள். 

என்ன புலம்பிட்டு இருக்க என்று பின்னாடி குரல் கேக்க தூக்கிவாரி போட்டது புனிதாவிற்கு கிழே விழ இருந்தவளை தாங்கி பிடித்த கார்த்திகேயன் அவளின் கையில் ஒரு கவரை கொடுத்து ' இனி கேக்க கூடாது ' என்று கூறி ஹாலிற்கு சென்றான்.    

அதில் என்ன இருக்கு என்று பிரித்து பார்த்த புனிதாவின் முட்டைக்கண் இன்னும் பெரியதாகியது. காரணம் உள்ளே இருந்தது புரோட்டா .    

அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து கொண்டிருந்த கார்த்திகேயன் அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தி கொண்டு வந்து சோபாவில் அவளையும் உட்காரவைத்து தானும் அமர்ந்தான்.பின்  அவளின் விரலுக்கு சுளுக்கு எடுத்துக்கொண்டே   

கார்த்திகேயன் , இப்போ சந்தோசம் தான என்று கேட்டான்.   

புனிதா , ம்ம் என்று மட்டும் கூறினாள். 

கார்த்திக் , நீயும் கொஞ்சம் புரிஜிக்கனும் உன்னோட நல்லதுக்கு தான சொல்ற ..சரியா இனி புரோட்டா கேட்கக்கூடாது என்றான் அவளின் தெற்றுப்பல்லை சுண்டிவிட்டு. 

புனிதா , நான் ஒன்னு கேக்கலாமா ??

கார்த்திக் , கேளு 

புனிதா , உனக்கு என்னை பிடிக்குமா இல்ல என்னோட தெற்றுப்பல் சிரிப்பு பிடிக்குமா ?? 

கார்த்திக் ,  இதெல்ல ஒரு கேள்வி??  

புனிதா , பதில் சொல்லு 

கார்த்திக் , உன்னதாம்மா புடிக்கும் .... உன்னோட தெற்றுப்பல் ஒரு காரணம்தான்.  காதல் வரதுக்கு காரணம் தேவையில்லை. அன்றைக்கு நீ காரணம் கேட்டதுக்கு  சும்மாதான் உன் தெற்றுப்பல் சிரிப்பு பிடிக்கும்னு சொன்ன but உன்னோட தெற்றுப்பல்  பிடிக்கும். இந்த 5 மாசத்துல நான் உனக்கு எத்தனை முறை I love you சொன்னான்னு விரல் விட்டு எண்ணிரலாம். ஐ  லவ்  யு சொன்னாதான் காதல் இருக்குனு அர்த்தம் இல்ல அதே மாதிரி உன் தெற்றுப்பல் பிடிக்கும்னு சொன்னதால உன்ன பிடிக்கலைன்னா அர்த்தம் இல்ல புரியுதா ??? 

புனிதாவிற்கு தெளீவாக புரிந்தது என்னும் விதமாக தன் தெற்றுப்பல் சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள். 

கார்த்திக் , ஹ்ம்ம் குட் கேர்ள் , சரி சாப்பிடு புரோட்டா ஆறிடப்போகுது என்று கூறியவன்  அவனே ஊட்டியும் விட்டான். 

அதை சாப்பிட்ட புனிதா அவனை அணைத்துக்கொண்டாள்.  

இப்போது அவளுக்கு தன்னுடைய தெற்றுப்பல் சிரிப்பு தனக்கும்  பிடித்திருப்பதாய் தோன்றியது.

முற்றும்......
                   

This topic was modified 8 months ago 4 times by Punitha Karthikeyan

With love,
Punitha Karthikeyan


Quote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 3 years ago
Posts: 612
 

வாவ்... கியூட் ஸ்டோரி... 😀 😀 😀 கதாபாத்திரங்களின் பெயரே மிகப் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. கடைசியில் ஒரு பரோட்டாவுக்கு இத்தனை அக்கப்போரா என்று தான் எனக்கும் தோன்றியது... 🤣 🤣 🤣 

நல்ல ஃப்ளோ மா... தொடர்ந்து எழுதுங்க... 👍 👍 👍 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Punitha Karthikeyan
(@punithakarthikeyan)
Eminent Member Writer
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

@nithya-karthigan  

Thank u so much sagi.....😃😃😃

Kandipa eludhuren......🌹🌹🌹

With love,
Punitha Karthikeyan


ReplyQuote
Share: