Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

யக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்  

  RSS

Ramcharan sundar
(@ramcharan)
Eminent Member Writer
Joined: 9 months ago
Posts: 31
13/10/2019 6:01 am  

யக்ஷன்

தனிமையில் ஒரு ராஜாங்கம்

 

குறிப்பு: இந்த கதையின் நாயகன் பெயர் திருநாவுக்கரசு. இந்த கதையை படிக்கும் பொழுது அவன் நிலையில் இருந்து உணர்ந்து படிக்கவும்.

எழும்பூர், கிரீன் வேஸ் ரோடு, தேதி ஆகஸ்டு, 20 2006, அன்று காலை 8.30 மணி வேளையில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.

‘வங்கக்கடலில் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் தமிழக கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும், அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த நிலைமை ஒரு வாரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது, செய்திகள் வாசிப்பது ஆல் இந்தியா ரேடியோ’ என்று ஒரு டீக்கடை ரேடியோ ஒலித்துக் கொண்டிருக்க, அந்த டீக்கடையின் எதிர்புறத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முற்பட்டுக் கொண்டிருக்கும் போது

‘தம்பி கொஞ்சம் சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணுப்பா, எம்பொண்ணு பிரசவ வலியால ரொம்ப துடிக்க ஆரம்பிச்சுட்டா சீக்கிரமா அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போகணும்’ என்று ஒரு நடுத்தர வயது பெண்மணி கூற,

‘நானும் ஸ்டார்ட் பண்ண டிரை பண்ணிட்டுதாமா இருக்கேன், மழை நல்லா பெய்யுது அதனாலதான் இன்ஜின் சூடேரமாட்டேங்குது, கொஞ்சம் பொறுத்துக்கோங்கம்மா உடனே கிளப்பிடறேன்’ என்றான் அந்த ஆட்டோ டிரைவர்.

ஒரு வழியாக ஆட்டோவை ஸ்டார்ட் செய்து கிளப்பினான்.

‘அய்யோ அம்மா ரொம்ப வலிக்குதும்மா’ என்று பிரசவ வலியால் ஒரு பெண் ஆட்டோவினுள் துடித்துக் கொண்டிருக்க,

‘கொஞ்சம் பொறுத்துக்கோம்மா ஆஸ்பத்திரி சீக்கிரமா வந்திடும்மா’ - அந்த நடுத்தர வயது பெண்மணி.

ஆட்டோ டிரைவர் வண்டியை ஜி.எச் (G.H) ஆஸ்பிட்டல் இருக்கும் ரோட்டில் ஓட்டிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது

‘அம்........ ..... அம்மா ஏற்கனவே ம்ம்.......................நமக்கு கஷ்டங்கள் அதிகம் அதோடு சேர்த்து இந்த குழந்தையும் நமக்கு தேவைதானா?’ என்று வலியும் வேதனையும் கலந்து அவள் அவளுடைய தாயிடம்(அந்த நடுத்தர வயது பெண்மணி) கூறினாள்.

இதை காதில் வாங்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர் அவள் பக்கம் திரும்பி ‘என்னம்மா இப்படி பொறக்கப் போற குழந்தையை போய் பாரம்னு சொல்றீங்க, இந்த குழந்தை பொறக்கப்போற நேரத்துல பாருங்க மழையே பெய்யாத நம்ம சென்னையில மழை பெய்யுது, இந்த குழந்தை பொறக்கும் போது ஊருக்கே நல்லது நடக்குது உங்க குடும்பத்துக்கு நடக்காதா?’ என்று அந்த பெண்ணை பார்த்து வண்டியை ஓட்டிக்கொண்டே பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று அந்த பிரசவப் பெண்ணின் தாய் ‘அய்யோ யாரோ ஆட்டோக்கு முன்னாடி ரோட்டை கிராஸ் பண்ணறாங்க. பாத்து ஓட்டுங்க’ என்று அலறினாள். அவன் சட்டென்று திரும்பி ஆட்டோ பிரேக்கை அழுத்தினாலும், ஆட்டோ வந்த வேகத்தில் மழை பெய்த வழுவழுக்கும் தார் ரோட்டில் சறுக்கிக் கொண்டு அந்த நபர் மீது மோதியது. ஆட்டோவில் இடிப்பட்ட அந்த நபர் ரோட்டோரம் இருந்த விளக்கு கம்பத்தில் தலையை வேகமாக மோதி கீழே விழுந்தான். தலையிலிருந்து இரத்தம் வழிந்து ரோட்டோரம் தேங்கியிருந்த மழை நீரில் கலந்து கொண்டிருந்தது. உடனே அங்கே கூட்டம் கூடி அந்த ஆட்டோ டிரைவரை மக்கள் சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.

‘அய்யோ அவரை விட்டிருங்க எம்பொண்ணை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்’ என்று அந்த பிரசவ பெண்ணின் தாயார் கத்த, அந்த கற்பமுற்ற பெண்ணோ வலியால் துடிக்க. ‘டேய் அவனை விடுங்க அடிப்பட்ட ஆளை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணுவோம்’ என்று அங்கு கூடியிருந்த மக்களில் ஒருவன் கூற அனைவரும் அடிபட்ட அந்த நபரை தூக்கிக் கொண்டு ஜி.எச் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஜி.எச் மருத்துவமனை, கருத்தரங்குகூடம்(Seminar Hall )

‘டியர் ஸ்டுடெண்ட்ஸ் நீங்க எம்.பி.பி.எஸ் பைனல் இயர் படிச்சிட்டு இருக்கீங்க, இன்னும் கொஞ்ச நாள்ல அதிகாரபூர்வமா டாக்டர்ன்ற பட்டத்தை வாங்கப் போறீங்க, அதுக்கு முன்னாடி ஒரு ஆஸ்பிடலோட பங்ஷன்ஸ், திடீர்னு ஒரு ப்ராப்லம் வந்தா அதை எப்படி பேஸ் பண்றதுன்னு போன்ற விஷயங்களை தெரிஞ்சுக்கரதுக்காகதான் இந்த 15 டேஸ் ட்ரய்னிங் ப்ரோக்ராம். மொதல்ல நாம ஐ.சி.யு வார்டுக்கு போகலாம், அங்கே தான் நிறைய விஷயங்கள் கத்துக்க
வேண்டியிருக்கு, எந்த நிமிஷமும் உயிர் போற சூழ்நிலையிலதான் ஐ.சி.யு வார்டுக்கு நிறைய கேசஸ் வரும், அப்போ பதட்டபடாம அந்த நோயாளிக்கு தேவையான ட்ரீட்மென்டை கொடுக்கணும், ட்ரீட்மென்ட் கொடுக்கும்போது அவங்களுக்கு மனசுல தைரியம் வரமாதிரி, பேச்சு கொடுத்துக்கிட்டே இருக்கணும், இதுவே நோயாளியை பாதி குணமாக்கும், ஏன்னா நிறைய ஐ.சி.யு வார்டுக்கு வர கேசஸ் எல்லாம் பாதி மென்டல் ஸ்ட்ரெஸ்னால பிழைக்க மாட்டோம்னு நம்பிக்கை இழந்து செத்துறுவாங்க,..... சரிவாங்க எல்லாரும் போகலாம்’ என்று தன்னுடைய லெக்சரை அந்த கருத்தரங்குகூடத்தில் அமர்ந்திருக்கும் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தார் அந்த மருத்துவமனையின் டீன்(DEAN) ரங்கநாதன். அனைவரும் ஐ.சி.யுவிற்கு விரைந்தனர்.

ஐ.சி.யு வார்டிற்கு வெளியே

‘இந்த பகுதில அதிகமா கூட்டம் சேரக்கூடாது.....என்னோட இரண்டு, இரண்டு பேரா வந்து உள்ளே என்ன பண்றாங்கன்றதை பார்த்துட்டு போயிடுங்க’ -ரங்கநாதன்.

பிறகு அந்த மாணவர்களிலிருந்து இரண்டு பேரை மட்டும் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார்.

அங்கு ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. உடனே ரங்கநாதன் குறுக்கிட்டு ‘என்னாச்சு?’ என்று அங்கு ஒரு டாக்டரைப் பார்த்து வினவினார்.

‘ஆக்ஸிடன்ட் கேஸ், ஆட்டோக்காரன் ஒருத்தன் மோதி தலையில பலமா அடிப்பட்டிருக்கு’ என்று டாக்டர் ஒருவர் பதிலளித்தார்.

‘எங்கே அடிபட்டிருக்கு?’- டீன் ரங்கநாதன்.

‘தலையில அடிப்பட்டதுனால பிரைன்ல(BRAIN) ட்ரான்ஸ்வர்ஸ் பிஷேர்ஸ் (TRANSVERSE FISSURES) பாதிக்கப்பட்டிருக்கு, அதுக்கப்புறமா ஹெவி ப்ளட் லாஸ் இன் ஹெட் (HEAVY BLOOD LOSS in Head)’ - டாக்டர்.

'ஸ்ஸ்..................ப்ச்.............., சரி நான் கொஞ்சம் பாக்கறேன்’ என்று ரங்கநாதன் அந்த நோயாளியின் பக்கம் சென்று இ.சி.ஜி மானிடரை பார்த்தார். பக்கத்தில் அந்த இரண்டு மாணவர்களும் இருந்தனர்.

‘பரவாயில்லை பி.க்யு.ஆர்.எஸ் வேவ் (PQRS wave) நார்மலா தான் இருக்கு’ என்று கூறிவிட்டு நோயாளியின் அருகில் சென்று சட்டென்று டாக்டரை பார்த்து ‘பேஷண்ட்க்கு நினைவு திரும்பிடுச்சா? - ரங்கநாதன்

‘திரும்பிடுச்சு’ - டாக்டர்.

பிறகு டாக்டர் ரங்கநாதன் அந்த நோயாளியை பார்த்து ‘தம்பி உனக்கு ஒன்னும் ஆகலை, நீ பேச ஆரம்பிச்சா எல்லாம் சரியாயிடும், உன் பேரு என்ன சொல்லுப்பா?’ என்று கேட்டார். ‘ம்,,ம்,,,,,,ஆஷ்....’ என்று மெதுவாக கண்களை திறந்தான் (நோயாளி).

‘சொல்லுப்பா உன் பேரு என்ன?’ - ரங்கநாதன்.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு மாணவர்களும் அந்த நோயாளியை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஆஷ்...ம்,,ம்’ என்று எதையோ சொல்ல முற்பட்டான் அந்த நோயாளி.

‘ம்ம்.....சொல்லுப்பா, ரொம்ப ஈசியா மனச வெச்சுக்கோ, பேச ஆரம்பிச்சுட்டா எல்லாம் சரியாயிடும்.பேரு என்ன சொல்லு?’ - ரங்கநாதன் .

‘தி.....திருநா..........திருநாவுக்கரசு.....ம்’ - நோயாளி.

திடீரென்று திருநாவுக்கரசுக்கு மூச்சு அதிகமாக வாங்க ஆரம்பித்தது...

‘ஓ மை குட்நெஸ்’ என்று இ.சி.ஜி மானிடரை பார்த்தார் ரங்கநாதன்.

இ.சி.ஜி மானிடரில் பி.க்யு.ஆர்.எஸ் வேவ் நார்மலை விட அதிகமாக இருந்தது. திருநாவுக்கரசுக்கு இன்னும் அதிகமாக மூச்சு வாங்க ஆரம்பித்தது.

ரங்கநாதனுக்கும், டாக்டருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த இரண்டு மாணவர்களும் பதட்டத்துடன் காணப்பட்டனர்.

சட்டென்று திருநாவுக்கரசுவுக்கு மூச்சு வாங்குவது கொஞ்சம் கொஞ்சமாக நின்று கொண்டு வந்தது. இ.சி.ஜி மானிடரில் பி.க்யு.ஆர்.எஸ் வேவ் நார்மலை விட குறைய ஆரம்பித்தது.

உடனே ‘ஓகே ஜஸ்ட் இண்ட்யூஸ் ஹிஸ் ரிதமிசிட்டி பை ஷாக் ட்ரீட்மென்ட் (OK Just induce his rhythmicity by Shock Treatment), பப்பரை (Buffer) எடுங்க’ என்று இரண்டு பப்பரை அவன் மார்பினில் அழுத்தி ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தார் ரங்கநாதன். அவர் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும்பொழுது இ.சி.ஜி மானிடரில் நார்மலை தொட்டுவிட்டு கீழே இறங்கியது பி.க்யு.ஆர்.எஸ் வேவ். இப்படி அவர் செய்து கொண்டிருப்பதை அந்த இரண்டு மாணவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று இ.சி.ஜி மானிடரில் ஒரு கோடு மட்டும் தெரிந்தது.

‘சார் இனி ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து ப்ரோயோஜனம் இல்லை.

ஹி இஸ் டெட் (Dead)’ - டாக்டர்.

ஒரு வருடத்திற்கு பிறகு

செப்டம்பர் 7 2007, காலை 7.00 மணி, போலிஸ் ட்ரைனிங் கேம்பஸ், வண்ணாரபேட்டை

போலிஸ் கேம்பஸ் மைதனாத்தில் அனைத்து பயிற்சிகளையும் முடித்துவிட்டு எல்லா ட்ரைனீசும் ரெஸ்ட் ரூமிற்கு உடை மாற்றிக்கொள்ள சென்றனர். அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் குமாரும் அவருடைய அறைக்கு சென்றார். குமார் அவருடைய இருக்கையில் உட்காரும் பொழுது தொலைபேசியின் மணி ஒலித்தது. ரிசீவரை எடுத்துப் பேசத் தொடங்கினார்.

‘ஆமா நான் ட்ரெயினிங் ஆபிசர் குமார்தான் பேசறேன்’

..............................

‘ஓ அப்படியா, எந்த ஏரியா ?............

................................

‘சைதாபேட்டையா?’.....

..................

’ஆமாம். இன்னிக்குத்தான் எல்லாருக்கும் ட்ரெயினிங் முடியுது, நாளைக்கு தான் எல்லா ட்ரைனீசும் அவங்கஅவங்களுக்கு அலாட் பண்ண ஏரியாஸ்ல இன்ஸ்பெக்டரா சார்ஜ் எடுத்துக்கப் போறாங்க’

........................

‘சரி நான் யாருன்னு பாத்துட்டு இன்னிக்கே அனுப்பி வைக்கிறேன்’

........................

‘சரி’ என்று ரிசீவரை வைத்துவிட்டு மறுபடி நம்பரை டயல் செய்துவிட்டு ரிசீவரில்

‘ஹலோ, நான் குமார் பேசறேன்’

.......................

‘இராஜா, தமிழ் நாட்ல குறிப்பா சென்னைல எந்தெந்த ஏரியாவுக்கு யார்யாரை அலாட் பண்ணியிருக்காங்கன்ற லிஸ்ட் உங்ககிட்ட தானே இருக்கு’

.....................

அதுல சைதாப்பேட்டைக்கு யாரை அலாட் பண்ணியிருக்காங்க ?

....................

‘பேரு என்ன சொன்னீங்க...... அப்துல்ரஹீமா?’

‘சரி நான் பாத்துக்கறேன். தேங்க்ஸ்’.

ரிசீவரை வைத்துவிட்டு ட்ரைனீஸ் ஆஸ்டலை நோக்கிச் சென்றார்.

அங்கு ஒரு அறைக்குள் சென்று

‘அப்துல் ரஹீமின்றது யாரு?’ - குமார்

‘சார்’ என்று ஒரு இளைஞன் அவரை நோக்கி வந்தான். உன்னை சைதாப்பேட்டை ஏரியாவுக்கு அலாட் பண்ணியிருக்கோம், நீ இன்னைக்கே அந்த ஸ்டேஷனுக்கு போக வேண்டிய சூழ்நிலை’ - குமார்

‘ஓகே சார்’ - அப்துல்

‘நீ அங்கே போய் அந்த ஸ்டேஷனோட பழைய இன்ஸ்பெக்டர் முருகானந்தத்தை பாரு, மத்ததெல்லாம் அவரு பாத்துப்பாரு, நீ உடனே கிளம்பு’ - குமார்.

‘ஓகே சார்’ என்று அப்துல் ரஹீம் புறப்பட தயாரானான்.

கிளம்பும் பொழுது அனைவரிடமும் கூறிவிட்டு அவன் நண்பன் செல்வமிடம் சென்று ‘சரி நான் புறப்படறேன், நீ ஆந்திரா கேம்ப் தானே .... அப்புறமா உனக்கு எந்த ஏரியால அலாட் பண்ணியிருக்காங்கன்னு போன் பண்ணி சொல்லு’ என்று அவனிடம் கைகுலுக்கிவிட்டு கிளம்பினான்.

அவனுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் போது ‘எல்லாரையும் பிரிஞ்சு வந்தாச்சு, இனிமேல் நமக்கு புது இடம், புதுமனிதர்கள், புது சூழ்நிலைன்னு எல்லாமே புதுசுதான், கொஞ்சம் பேஸ் (Face) பண்றதுக்கு பயமா இருந்தாலும், பேஸ் பண்ணியே ஆகணும்னு கட்டாயமான சூழ்நிலை, நான் இன்ஸ்பெக்டர்ன்ற ஒருபெரிய பதவில போறேன் எனக்கு கீழே நிறைய கான்ஸ்டபிள்ஸ் வேலை செய்வாங்க அவங்க எல்லாரும் ஒத்துழைப்பாங்களா இல்லை என்னை ஏமாத்த நினைப்பாங்களா நான் எப்படி அலேர்ட்டா இருக்கப் போறேன், இப்போ எதுக்காக என்னை மட்டும் உடனடியா ஜாயின் (Join) பண்ண சொன்னாங்க, அங்க என்ன நடக்கப் போவுது?’ என்று அப்துல் சில மணிநேரம் சிந்தனையில் மூழ்கி இருக்கும் பொழுது, சட்டென்று ஒரு பிரேக்குடன் ஜீப் நின்றது. ‘சார் சைதாப்பேட்டை ஸ்டேஷன் வந்தாச்சு’ என்று ஜீப்பை ஓட்டி வந்த டிரைவர் கூற ‘ம்ம்........நான் நினைச்சுகிட்டு வந்ததுக்கெல்லாம் இன்னும் சில நிமிடங்கள்ள பதில் கிடைக்கப் போகுது’ என்று தனக்குள் பேசிக் கொண்டு டிரைவரை பார்த்து ஒரு புன்னகையை சிந்திவிட்டு ஸ்டேஷனை நோக்கிச் சென்றான். ஸ்டேஷனுக்கு வெளியே காவல் காத்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள்ஸ் அப்துலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் அவர்களைப் பார்த்துவிட்டு மனதை தைரியப்படுத்திக் கொண்டு ஸ்டேஷனுக்குள்ளே சென்றான். அங்கும் அனைவரது பார்வையும் அவன் மீது பதிந்திருந்தது.

ஒருவன் அப்துலையே விரைத்துப் பார்த்துக் கொண்டே அவன் முன் வந்து நின்று

‘நீங்க அப்துல் ரஹீமா?’

‘ஆமாம்’

‘நான் தான் முருகானந்தம்’

‘ஹலோ’ என்று இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

‘நான் இன்னைக்கே கன்னியாகுமாரிக்கு போறேன். என்னை அங்கேதான் ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க. அதுக்கு முன்னாடி உங்ககிட்ட எல்லா ரிகார்ட் டீடைல்ஸ், அப்புறமா எல்லாருக்கும் உங்களை இன்ட்ரொட்யூஸ் பண்ணி வைக்கறது போன்ற பார்மாலிடீஸ் எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்னு வரசொன்னேன்’ - முருகானாந்தம்.

‘ஓ அப்படியா, சரி’ - அப்துல்

அனைத்து பார்மாலிடீசையும் முடித்துக் கொண்ட பிறகு முருகானந்தம் அப்துலிடம்

‘நான் உங்களை இதுக்காக மட்டும் வர சொல்லலை, வேற ஒரு விஷயத்துக்காகவும்தான், இது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்’ என்று புதிராக கூறினான்.

அப்துல் அவனை கூர்மையாக கவனிக்கத் தொடங்கினான்.

‘அஞ்சு நாளைக்கு முன்னாடி நம்ம ஸ்டேஷன் எஸ்.ஐ இராவுத்தர் காணாமல் போயிட்டாரு, அதுக்கப்புறமா தாம்பரம் பய்பாஸ் ரோட்ல அவர் பிணம் கிடைச்சுது, அவர் இரவு நேரத்துல அந்த ரோட்ல இறந்ததுனால அவர் மேல அந்த பக்கம் வர லாரி பஸ் எல்லாம் ஏறி ஏறி அவர் உடம்பே அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி ரோடு மேல படிஞ்சிருந்தது, அப்புறமா போஸ்ட் மோர்டேம் (Post Mortem) செய்யருத்துக்காக அவர் உடம்பை எடுத்துட்டுப் போனாங்க. அவரு ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டார்ன்னு ரிப்போர்ட் வந்தது, ஏன் அவரு தாம்பரம் பய்பாஸ் ரோட்டுக்கு போனாருன்னு ஒரு கேள்வி எழுந்துச்சு நான் அவர பத்தின ரிபோர்ட்ட ஆராய்ச்சி பண்ணி பாத்ததுல டிபார்ட்மெண்ட்ல அவருமேல நிறைய ப்ளாக் மார்க்ஸ் இருத்திருக்கு, அவர் இரவு நேரத்துல தாம்பரம் பய்பாஸ் ரோட்ல வர வண்டிய எல்லாம் வழிமறிச்சு மிரட்டி பணம் வாங்கி இருக்கார்னு அவர்மேல கம்ப்ளைன் இருந்ததுனால அதிகார துஷ்ப்ரயோகம்ற பேர்ல ஸஸ்பெண்டும் ஆயிருக்காரு, இந்த ரீசனுக்காக தான் அவர் அங்க போயிருக்கனும்னு முடிவு பண்ணி அந்த கேஸ ஆக்சிடெண்ட் னு பைல் பண்ணி க்லோஸ் பண்ணிட்டேன். ஆனா நேத்திக்கு மறுபடி ஒரு போஸ்ட் மோர்டேம் ரிப்போர்ட் வந்துச்சு, அதிலே முதல்ல கொடுத்த ரிப்போர்ட் தப்பு, அவர் ஆக்சிடெண்ட்ல சாகல அவர் இரத்தத்துல சைனைடுன்ற விஷம் கலக்கப் பட்டிருக்குன்னு இன்னோரு ரிப்போர்ட் வந்திருக்கு, நான் ட்ரான்ஸ்பர் ஆகர காரணத்துனால அந்த ரிபோர்ட்டுக்கு இன்னும் ஆக்ஷன் எடுக்கலை. ஆனா போஸ்ட் மோர்டேம் செஞ்ச ஹாஸ்பிடலேருந்து “ஏன் அனுப்பின ரிப்போர்ட்க்கு இன்னும் எந்த ரெஸ்பான்சும் வரலை”ன்னு கேள்வி கேட்டுகிட்டே இருக்காங்க, நான் ட்ரான்ஸ்பர் ஆகப் போறதுனாலே இந்த கேஸ புது இன்ஸ்பெக்டர் பாத்துப்பாருன்னு சொல்லி சமாளிச்சுட்டேன். இனிமே உங்க கைல தான் இருக்கு’-முருகானந்தம்.

This topic was modified 9 months ago by Nithya Karthigan

Quote
Ramcharan sundar
(@ramcharan)
Eminent Member Writer
Joined: 9 months ago
Posts: 31
13/10/2019 6:28 pm  

யக்ஷன் நாவலின் டீசர் பார்த்துவிட்டு தங்கள் கருத்தை பகிரவும்...

This post was modified 9 months ago by Nithya Karthigan

ReplyQuoteRamcharan sundar
(@ramcharan)
Eminent Member Writer
Joined: 9 months ago
Posts: 31
11/02/2020 5:11 am  

‘சரி எப்படி அவர் உடம்புல விஷம் ஏறிச்சுன்ற டீடைல் எதாவது கொடுத்தாங்களா?’ -அப்துல்

‘ஆமாம், கொடுத்திருக்காங்க என் டேபிள் ட்ராயர்லதான் இருக்கு, ஏதோ கூர்மையான

ஆணி மாதிரி இருக்கு, அந்த கூர்மையான பகுதியில தான் விஷம் தடவப்பட்டிருக்கு, அதனோட பின் பக்கத்துல கூம்பு (Cone) வடிவத்துல நல்லா திடமான பேப்பர்ல செல்லோடேப்ல ஒட்டியிருக்காங்க, லாரி பஸ் எல்லாம் ஏறினதுனால கொஞ்சம் நசுங்கி இருக்கு, நீங்களே பாருங்க‘ என்று அந்த ஆயுதத்தை எடுத்து அப்துலிடம் நீட்டினான்.

ஆயுதத்தின் வடிவமைப்பு

 

‘அவர் ரோட்ல நின்னுட்டு இருக்கும் போது யாரோ இதுல விஷத்தை தடவி அவர் மேல அடிச்சிருக்காங்க, அவர் உடம்புல விஷம் ஏறிட்டதுனால அவர் நடு ரோட்லயே மயக்கமாயிருக்கணும், நம்ம ஊரு லாரி டிரைவர்கள் எல்லாரும் நைட்ல வேகத்துலதான் கான்சென்ட்ரேட் பண்ணுவாங்க ரோட்ல என்ன இருக்குன்னு கவனிக்க மாட்டானுங்க, அப்படியே அவர்மேல வண்டியை ஏத்தியிருப்பாணுங்க, இப்போ நமக்கு தெரியவேண்டியதெல்லாம் யாரு அவரை கொன்னாங்க, எதுக்காக கொன்னாங்கன்ற ரீசன் மட்டும்தான்’ என்று முருகானந்தம் அப்துலைப் பார்த்து கூறிவிட்டு, தன் பாக்கட்டிலிருந்து ஒரு சாவியை எடுத்து ‘நீங்க தங்கப்போற ரூம் சாவி. நீங்க தங்கப்போற இடம் மந்தவெளி போலீஸ் குவார்டர்ஸ், நான் அங்கதான் போறேன் நீங்களும் என்னோட வாங்க’ - முருகானந்தம், இருவரும் புறப்பட்டனர்.

மந்தவெளி போலீஸ் குவார்டர்ஸ்

‘சார் இது தான் நான் தங்கின ரூம், எல்லாம் வசதியா இருக்கான்னு பாத்துகோங்க, எதுனா ப்ராப்லம்னா குவார்டர்ஸ் செக்ரேடரி கிட்ட சொன்னா உடனே சரி பண்ணிடுவாரு. ஓகே சார். நான் புறப்படறேன்’ என்று தான் புறப்படுவதிலேயே ஆர்வமாக இருந்தார் முருகானந்தம்.

‘சரி ஓகே சார்’ என்று கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை சிந்தினான் அப்துல்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அப்துல்லின் லக்கேஜ்களை உள்ளே சில கான்ஸ்டபிள்ஸ் வைத்துவிட்டுச் சென்றனர். ‘சார் சாப்பாட்டுக்கு நீங்க கவலைபடாதீங்க மந்தவெளி பெட்ரோல் பங்க் பக்கத்துல கணேஷ்பவன்னு ஒரு ஹோட்டல் இருக்கு, நைட் அவனே சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுப்பான் டேக் கேர் அண்ட் ஆல் தி பெஸ்ட் ’ என்று முருகானந்தம் கிளம்பினார்.

அப்துல் அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் ‘ச்சே... எல்லாமே திடீர்னு மாறிபோச்சு, நேத்தி வரைக்கும் செல்வம் அப்புறம் மத்த ட்ரைனீஸ்னு கூட இருந்து ஜாலியா பேசி ஜோக் அடிச்சுட்டு இருந்த நான் இன்னிக்கு தனிமையா இருக்கேன்’ என்று மனதில் கூறிகொண்டே பெட் ரூமிற்குச் சென்றான். காலையில் உடற்பயிற்சி செய்த சோர்வு காரணமாக அப்படியே கண்களை மூடி உறங்கத் தொடங்கினான். அப்பொழுது பால்கனி வழியாக ஒரு உருவம் முகமூடி அணிந்து கொண்டு அப்துல்லின் ரூமிர்க்குள் குதித்தது. அப்துல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்த உருவம் தன்னுடைய கையில் கூர்ய ஆயுதத்தை ஏந்தியிருந்தது. அது அப்துல்லை நெருங்கியது. அந்த உருவம் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய டப்பாவை திறந்து அதிலிருந்து ஏதோ பிசுபிசுப்பான திரவத்தை அந்த கூர்ய ஆயுதத்தின் மீது தடவியது. அப்துல் எதுவும் அறியாது நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். சட்டென்று அந்த உருவம் அப்துல்லின் வாயை தன் கையால் அழுத்தி பிடித்து அப்துல்லின் வயிற்றில் சரக் என்று அந்த ஆயுதத்தை சொருகிவிட்டு பால்கனி வழியாக குதித்து ஓடியது. அப்துலோ வலி தாங்கமுடியாமல் எழுந்து வயிற்றை பிடித்து கொண்டு அலறினான். ஆனால் வயிற்றில் எந்த ஆயுதமும் இல்லை இரத்தமும் வழியவில்லை. அப்பொழுது தான் அப்துலுக்குத் தெரிந்தது அது வெறும் கனவு என்று. ‘அடச்சே வெறும் கனவா, நான் பயந்தே போயிட்டேன்’ என்று தனக்குள் பேசிக் கொண்டே கடிகாரத்தை பார்த்தான். மணி இரவு 8.00 ஆவுதே, சரியான பேய் தூக்கம் போட்டிருக்கேன் ‘என்று அப்துல் மனதில் சிந்தித்து கொண்டிருக்கும் போது ரூமில் ‘டப்..டப் டப்’ என்று சத்தம் கேட்டது திடீரென்று அப்துலுக்கு மனதில் பயம் வந்தது. அந்த சத்தம் மேலும் வலுக்க ஆரம்பித்தது. மனதை திடப்படுத்திக் கொண்டு அது என்ன சத்தம் என்ற ஆராய்ந்தான் அப்புறம் தான் தெரிந்தது யாரோ கதவை தட்டுகிறார்கள் என்று. ‘அட....ச்....சே.... ஐயோ அப்துல் மொதல்ல தூக்கத்திலேயிருந்து வெளியே வா, தேவையில்லாம சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்பட ஆரம்பிச்சுட்டேன்’ என்று தன்னை திட்டிக் கொண்டே கதவை திறந்தான். ‘சார் நான் கணேஷ் பவன்லேருந்து வரேன், முருகானந்தம் சார் ஏற்கனவே எங்ககிட்ட உங்களுக்கு நைட் சாப்பாடு தர சொல்லியிருந்தாரு, அதான் சாப்பாடு கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்.’ - கணேஷ் பவன் ஆள்.

‘சரி இப்படி டேபிள்ல வைச்சுட்டுப் போ’ - அப்துல்.

அவனும் சாப்பாட்டு பார்சலை டேபிளில் வைத்து விட்டுச் சென்றான்.

அப்துல் உணவருந்திவிட்டு மறுபடி படுக்கைக்கே சென்றான். இரவு நேரத்தில் வெளியே தவளைகள், மற்றும் சுவர்க்கோழி பூச்சிகள் கத்தும் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அப்துல் இன்னும் அந்த கனவு அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை, தூக்கம் வராமல் இராத்திரி சிந்தித்தப்படியே இருந்தான்.

‘நாளையிலிருந்து டியுட்டி ஜாயின் பண்ண போறேன். அதுக்குமுன்னாடியே நான் எந்த கேஸ டீல் பண்ணப்போறேன்னு தெரிஞ்சு போச்சு, அதுவும் வேற அது ஒரு மர்டர் கேஸ் யார் அவரை கொன்னாங்க. எதுக்கு கொன்னாங்க. கொலையாளி இப்போ எங்கே இருக்கான், அவனோட அடுத்த நோக்கம் என்ன?, நான் எப்படி இதை கண்டுபிடிக்கப்போறேன்?, ஏற்கனவே அந்த கனவுலேருந்து எனக்கு இங்கே தனியா இருக்கறத்துக்கு பயமா இருக்கு, ஒரு போலீசா இருந்துகிட்டு இது மாதிரி பயப்படக் கூடாது, இருந்தாலும் அந்த கொலையாளி நம்ம ரூம்லேயே மறைஞ்சுகிட்டு இருந்தான்னா? ஐயோ ஏன் இப்படி என் நினைப்பே என்னை பயமுறுத்துது...’. என்று சிந்தித்துக் கொண்டே தூங்கத் தொடங்கினான்.


ReplyQuote
Ramcharan sundar
(@ramcharan)
Eminent Member Writer
Joined: 9 months ago
Posts: 31
17/02/2020 4:46 am  

மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு யூனிபார்ம் அணிந்து ஸ்டேஷனுக்குச் செல்ல தயாரானான். வெளியே ஜீப் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது. அதில் ஏறி ஸ்டேஷனை நோக்கி பயணித்தான். ‘சே......நேத்தி இராத்திரி நான் பயந்ததெல்லாம் விடிஞ்சவொடனே எல்லாம் முட்டாள் தனமா தெரியுது’- அப்துல்

ஸ்டேஷன் வந்தது.

அப்துல் ஸ்டேஷனுக்குள் நுழைவதற்கு முன் ஸ்டேஷனுக்குள் கான்ஸ்டபில்ஸ் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. ‘ஏம்பா புதுசா வந்திருக்கற இன்ஸ்பெக்டர் என்னப்பா ஒரு ஆள் மாதிரியே இல்லை எதோ பால்வடி ஸ்கூல்லேருந்து வந்த மாதிரி இருக்கார், அவருக்கு யூனிபார்ம் போட்டா குழந்தைங்க பான்சி டிரஸ் காம்படிஷன்ல போட்டுட்டு வரும்ல அதுமாதிரி இருக்கும் பாரேன், இவரு போய் இன்ஸ்பெக்டரா ஆகி என்னத்த கழட்டப் போறாரு, இவரை சொல்லி ஒன்னும் ப்ரோயோஜனம் இல்லை இந்த மாதிரி ஆளுங்களை செலக்ட் பண்ணறாங்களே அவங்களை சொல்லணும்’-கான்ஸ்டபில்1.

‘ஆமாம்பா,..... சரி ஜீப் வந்து ஒரு நிமிஷம் ஆயிருக்கும் ஸ்டேஷன்கிட்ட வந்திருப்பாரு, அவரு காதுல விழுந்துட போகுது’ - கான்ஸ்டபில்2.

‘விழுந்தா அவரால என்னை என்ன பண்ண முடியும்?’- கான்ஸ்டபில்1.

சட்டென்று அப்துல் வருவதைப் பார்த்து அந்த இரண்டு கான்ஸ்டபில்சும் பேசுவதை நிறுத்தினர். அப்பொழுதுதான் அப்துல்லுக்கு புரிந்தது அவர்கள் தன்னை ஏளனமாக நினைக்கிறார்கள் என்று. அவர்கள் பேசியது மனதிலேயே ஓடிக்கொண்டிருக்க முகத்தில் சிறிய கலக்கம் உண்டாகியது. அவனுடைய சீட்டில் உட்கார்ந்தான். ‘எல்லாரையும் பார்க்கும் பொழுது என்னை ஏளனமா நினைச்சு கிண்டல் செய்யற மாதிரியே இருக்கே, எப்படி இவங்களுக்கு என்னோட சிரியஸ்னசை புரிய வைக்கப்போறேன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது டெலிபோன் மணி ஒலித்தது. மறுமுனையில் ஏ.சி (Assistant Commissioner) ‘யோவ்.. எஸ்.ஐ இராவுத்தர் கேஸ் என்னையா ஆச்சு, இன்னி வரைக்கும் எனக்கு உன்கிட்டேருந்து அந்த கேஸ பத்தி எந்த ரிப்போட்டும் வரலை’ - ஏ.சி.

‘சார், நான் இன்னிக்குதான் ஜாயின் பண்ணினேன்’ - அப்துல்

‘சின்ன குழந்தைங்க மாதிரி ரீசன் சொல்லாதே, சரி சார் உடனே ரெடி பண்றேன்னு பாசிடிவ்வா பதில்சொல்லிப் பழகு, சரி உன் பேரு என்ன?’ -ஏ.சி.

‘அப்துல் ரஹீம்’

‘ஓ முஸ்லீமா, நீயெல்லாம் கசாப்பு கடை வெச்சு பொழைப்ப தள்ள வேண்டியதுதானே ஏன்யா போலீஸ் வேலைக்கு வந்து தொலைக்கறீங்க, இந்த கேஸ்ல கொலை ஆகியிருக்கறது ஒரு முஸ்லீம்தான், உங்க ஆள்ன்றதுனால சின்சியரா டீல் பண்ணு’ என்று கரகரப்பான குரலில் ‘டொக்’ என்று ரிசீவரை வைத்தார். ஏ.சி. அவர் பேசியதை கேட்டு அப்துல்லின் கண்கள் கலங்கி இருந்தது.

‘சார் டென்ஷன் ஆயிட்டாருன்னு நெனைக்கிறேன்’ - கான்ஸ்டபில்1 .

‘சரியான ரெய்டு போலிருக்கு’ - கான்ஸ்டபில்2.

என்று இரண்டு கான்ஸ்டபில்சும் சிரித்து பேசிக்கொண்டிருப்பது அப்துல் காதில் விழுந்தது.

அப்துல் அவன் தலையை பிடித்துக்கொண்டு ‘நான் எப்படியாவது என்னுடைய சீரியஸ்னெஸ அவங்களுக்கு புரிய வைக்கணுமே. இனிமே இவங்க எல்லாரும் என்னை பார்த்து பயப்படுற மாதிரி செய்யணும், அதுக்கு நான் தைரியமா நடந்துக்கணும். அப்துல்....... இந்த வேலை இல்லைனா உலகத்துல எவ்வுளவோ வேலைகள் இருக்கு. கோழை மாதிரி ரொம்ப நாள் பொறுத்துக்கிட்டு வாழறதைவிட கொஞ்சநாள் வீரனா இருந்துட்டு போயிடலாம், நீ ஏன் பயப்படணும்? உயிர்தான் முதல், அப்புறந்தான் மானம் மரியாதையெல்லாம். பொறுமையா இருந்து என் மானம், மரியாதையை காப்பாத்திக்கணும்னு பார்த்தா நான் எளக்காரமா கருதப்படறேன், இப்போ நான் பொறுமையை தூக்கிப்போட்டுட்டு “பயங்கர கோபக்காரன், அவன் வந்தாலே பயமா இருக்கு”ன்னு இதே கான்ஸ்டபில்ஸ சொல்ல வைக்கணும், நான் கோபப்படணும்னா கொஞ்சம் சுயநலத்தை வளத்துக்கணும், அது எப்படி இவங்க எல்லாரும் என்னைப் பாத்து சிரிக்கலாம், நான் ஒரு இன்ஸ்பெக்டர், எனக்கு மரியாதை இல்லைனா மரியாதையை வர வெச்சுக்கணும். இப்போ என்ன பண்ணலாம்?’ என்று மனதினுள் சற்று முன்பு நடந்த சம்பவத்தை நினைத்து தனக்குள் கோபத்தை உருவேற்றிக் கொண்டிருந்தான்.

‘ஆள் காலி போலிருக்கு அநேகமா ரிசைன் பண்ணிட்டு போயிடும்னு நினைக்கிறேன்’ என்று ஒரு கான்ஸ்டபிள் இன்னொரு கான்ஸ்டபிளிடம் பேசிக் கொண்டிருக்க சட்டென்று அப்துல் தன் சீட்டிலிருந்து எழுந்து கையில் லட்டியை எடுத்துக் கொண்டு செல்லுக்குள் சென்றான். அங்கு ஒரு ரவுடி பெரிய உருவத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

‘ஓய் என்ன தப்பு பண்ணினே, சொல்லு’ - அப்துல்

அந்த தடியன் அவனை முறைத்தான். கான்ஸ்டபிள்ஸ் அனைவரும் லாக்கப் ரூமை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்துல் லட்டியை எடுத்து அவன் தலையில் ஒரே அடி அவன் தன் தலையை பிடித்து மீண்டும் முறைத்தான்.

‘என்னடா முறைக்கற?’ என்று அவன் முதுகிலேயே சரமாரியாக லட்டியால் அடிக்கத் தொடங்கினான் அப்துல்.

‘சார் ஈவ் டீசிங்’ -ரவுடி

‘ஏன்டா பொறுக்கி நாயே பொண்ணுங்களையா கிண்டல் அடிக்கற’ என்று கையில் இருந்த லட்டியை அவன் மீது விட்டெறிந்தான். அது அவன் தலையில் பட்டு தெரித்து வேறு எங்கோ போய் விழுந்தது. அவன் தலையை பிடித்துக் கொண்டு ‘ஐயோ’ என்று கதறினான்.

அவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த கான்ஸ்டபில்சின் முகத்தில் மௌனம் தெரிந்தது. அப்துல் அவன் கன்னத்தில் அறைந்து கொண்டே ‘எப்படிரா நீ பொண்ணுங்களை கிண்டல் அடிக்கலாம், நான் யாரு தெரிதுல்லே, இனிமே பொண்ணைப் பார்த்து கையெடுத்து கும்பிடணும்னுதான் உனக்கு தோணனும்’ என்று அவனை எட்டி உதைத்தான்.

‘சார், மன்னிச்சுக்குங்க’-ரவுடி.

‘என்னடா மன்னிக்கறது?’ என்று கான்ஸ்டபிள்ஸ் கிண்டல் அடித்ததையும் மற்றும் ஏ.சி திட்டியதை மனதில் நினைத்துக் கொண்டு சரமாரியாக அடிக்கத் தொடங்கினான். அந்த ரவுடிக்கு மூக்கு வாயிலிருந்து இரத்தம் கசிந்தது. அப்துல் கோபம் முடியும் வரை அவனை அடித்து நொறுக்கினான். பிறகு அப்துல் லாக்கப்பை விட்டு வெளியே வந்தான். முகத்தில் வெறி தெரிந்தது, கண்கள் சிவந்து இருந்தது, தலை முடி கலைந்திருந்தது. மூச்சு இறைத்துக் கொண்டே சீட்டில் உட்கார்ந்து சுற்றி முற்றி பார்த்தான். கான்ஸ்டபில்ஸ் அனைவரும் அவனை பதட்டத்துடன் மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தன்னை கிண்டல் அடித்த கான்ஸ்டபிலை கைசுடக்கி அவனிடம் வருமாறு செய்கை செய்தான். அப்போது அப்துலின் கண்களில் கோபம் தெரிந்தது. அந்த கான்ஸ்டபிலுக்கு மனதில் சிறு கிலி தட்டியது, வயிற்றில் எதோ கலக்கியது, அப்துலிடம் சென்று கொண்டிருக்கும் போது லாக்கப்பை பார்த்தான். உள்ளே அந்த ரவுடிக்கு சட்டை கிழிந்து, முகம் வீங்கி ஒரு ஓரமாக மூர்ச்சையாக இருந்தான். இதைப் பார்த்த அந்த கான்ஸ்டபிளுக்கு வயிறு மேலும் கலக்கியது. அப்துல் முன் ‘யெஸ் சார்’ என்று நின்றான்.

‘உன் பேரு என்ன?’ என்று உரத்த குரலில் கத்தினான் அப்துல்

‘ஏ...........ஏழு.........ஏழுமலை...’ என்று வாய் திக்கியவாறு கூறினான்.

‘என்ன உனக்கு திக்கு வாயா?’ -அப்துல்.

‘இல்லை சார்’ என்று பதட்டதுடன் கூறினான்.

இதை பார்த்து அப்துலுக்கு மனதில் சிறு சந்தோஷம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் ‘சரி இந்தா இருநூறு ரூபாய்’ என்று பாக்கேட்டிலிருந்து எடுத்து கொடுத்து ‘போய் நீ ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு ஒரு சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிட்டு வா’ என்றான்.

‘யெஸ் சார்’ என்று அதை பெற்றுக் கொண்டான் ஏழுமலை.

‘சிகரேட் இருக்கா?’- அப்துல்

‘இருக்கு சார், இந்தாங்க’ - ஏழுமலை

அப்துல் அதை வாயில் வைத்து பற்ற வைத்து உள்ளே புகை இழுத்து வெளியிட்டுக் கொண்டே ‘சரி போய் வாங்கிட்டு வா’ என்றான்.

ஏழுமலையும் தலையாட்டிக் கொண்டே சென்றான். மறுபடி அப்துல் வாயில் சிகரேட்டை இழுத்துவிட்டு மேலே பார்த்துக் கொண்டே நாற்காலியில் சாய்ந்து புகையை சிரித்துக் கொண்டே வெளியிட்டான். அந்த சிரிப்பில் ஒரு ஆண்மை இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு டெலிபோன் மணி ஒலித்தது. ரிசீவரை எடுத்தான் ‘அப்துல் இருக்காரா?’ மறுமுனையில்

‘அப்துல் ஸ்பீக்கிங்’ - அப்துல்.

‘டேய் நான் செல்வம் பேசறேன், இப்போ தான் போலீஸ் ட்ரயினிங் கேம்பஸ்ஸிலிருந்து உன் ஸ்டேஷன் நம்பரை வாங்கினேன். ஸ்டேஷன் எப்படிடா இருக்கு?, நான் விஜயவாடாவுக்கு இன்ஸ்பெக்டரா போயிட்டேன்’ - செல்வம்.

‘ம்...... ரொம்ப ஜாலியா இருக்கு’ - அப்துல்

‘எதுனா கேஸ் வந்துச்சா?’ - செல்வம்

‘ம்ம்..’ - அப்துல்

‘எனக்கும் வந்தவொடனேயே ஒரு கேஸ டீல் பண்ண சொல்லி பிரஷர், யாரோ காலேஜ் ஸ்டூடண்ட கொலை செஞ்சிருக்காங்க’ - செல்வம்.

‘இங்க கூட ஒரு மர்டர் கேஸ்தான், எங்க சப் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் கொலை ஆயிருக்கார்’ - அப்துல்.

’ஆனா என்னுது டிபரென்ட் ஆன கொலை கேஸ். காலேஜ் ஸ்டூடன்ட் உடம்புல சைனைடுன்ற விஷம் கலந்திருக்கு, அவன் உடம்புல ஏதோ கூர்மையான ஆயுத்ததுல அந்த விஷத்தை தடவி அவன் மேலே அடிச்சிருக்கான் அந்த கொலையாளி. அது வழியா விஷம் அவன் இரத்ததுல கலந்து அவன் இறந்துட்டான்’ - செல்வம்.

இதை கேட்டவுடன் அப்துலின் கண்கள் அகல விரிந்தது. ‘ஹலோ செல்வம் அந்த ஸ்டூடன்ட் பேரு என்ன?’ என்று கேட்டான்.

‘வேணுகோபால்’ - செல்வம்

‘டேய் இங்க அந்த சப் இன்ஸ்பெக்டரை கூட அப்படிதான் கொலை செஞ்சிருக்காங்க, எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு’ - அப்துல்.


ReplyQuote
Ramcharan sundar
(@ramcharan)
Eminent Member Writer
Joined: 9 months ago
Posts: 31
02/03/2020 5:16 am  

‘டேய் இங்க அந்த சப் இன்ஸ்பெக்டரை கூட அப்படிதான் கொலை செஞ்சிருக்காங்க, எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு’ - அப்துல்.

‘அப்படியா, ஏன் அப்படி இரண்டு பேரையும் இந்த முறையில கொன்னாங்க, அதுவும் இரண்டு பேருக்கும் சம்மந்தம் இருக்கற மாதிரி எனக்கு தெரியலை, மெட்ராஸ்ல இந்த சம்பவம் நடந்திருக்கு, அப்புறம் ரொம்ப தொலைவுல இருக்கற விஜயவாடாவிலேயும் நடந்திருக்கு’, என்று யோசித்தான் செல்வம்.

அங்கு கான்ஸ்டபில் சிக்கன் பிரியாணியுடன் வந்து கொண்டிருந்தான். உடனே அப்துல் ‘சரி செல்வம் இதபத்தி நான் டீட்டைலா பேசறேன், என் வீட்டு நம்பரை நோட் பண்ணிக்க’ என்று நம்பரை கூறிவிட்டு அப்துல் டெலிபோனை கட் செய்தான்.

‘சார், இந்தாங்க சார் பார்சல்’ - ஏழுமலை

‘இதை உள்ளே அடிவாங்கிட்டு படுத்திட்டிருக்கான் பாரு அவன்கிட்ட கொடு’ - அப்துல்.

அவன் உள்ளே இருக்கும் கைதியிடம் பார்சலை கொடுத்துவிட்டு மீண்டும் அப்துலிடம் வந்தான்.

‘ஏழுமலை, நான் பர்சனலா வெளியே போயிட்டு வரணும்னா.... நான் வண்டி எதுவும் வாங்கலை, வாங்கற வரைக்கும் பஸ்ல போறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும், அதனால நீ வண்டி வெச்சிருந்தினா..... எனக்கு கொடுப்பியா?’ - அப்துல்.

‘சரிங்க சார்’ - ஏழுமலை

‘ரொம்ப நன்றி, சரி அப்போ இன்னிக்கே உன் வண்டியை நான் எடுத்துக்கறேன்’ -அப்துல்.

உடனே ஏழுமலை முகத்தில் அதிர்ச்சியுடன் ‘அடப்பாவி “இல்ல பரவாயில்லை எனக்கு தேவைப்படும் போது கொடுத்தா போதும்” னு சொல்வான்னு நினைச்சா, சொதப்பிட்டானே.....’ என்று மனதில் பேசிக் கொண்டிருந்தான்.

‘என்ன ஏழுமலை மௌனமா இருக்கே?’ - அப்துல்.

‘ஆ.........ஒன்னுமில்லை சார்’ - ஏழுமலை.

‘சரி என்ன வண்டி வெச்சிருக்கே?’ - அப்துல்

‘காலிப்ளவர்’ - ஏழுமலை

‘என்னது காலிப்ளவரா?’ என்று அப்துல் திகைத்துப் போய் கேட்டான்.

‘ஆமா சார், அதான் ஹூடி பாபா………ஹூடி பாபா .........’ - ஏழுமலை

‘யோவ் அது காலிபர்(CALIBER), நான் என்னமோ பல்சர், பேசர் மாதிரி காலிப்ளவர்னு ஒரு பைக் வந்திருக்கோன்னு நினைச்சேன், சரிவண்டி சாவியை கொடு’ - அப்துல்.

உடனே ஏழுமலை வேண்டா வெறுப்பாய் வண்டி சாவியை எடுத்துக் கொடுத்தான்.

அன்றைய தினம் சாதாரணமாக கழிந்தது.

இரவு 8.00 மணி அப்துல் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். டெலிபோன் மணி ஒலித்தது.

‘டேய் அப்துல் நான் செல்வம்’

‘சரி சொல்லு’

‘அதான் அந்த கொலை கேஸ் விஷயம்’ - செல்வம்

‘ஓ........அந்த சைனைடு உடம்புல கலந்து.......’ - அப்துல்.

‘அதே தான்’ - செல்வம்

‘இரண்டு கொலையையும் ஒரே ஆள் தான் செஞ்சிருப்பானா?, இல்லை இந்த டெக்னிக் தெரிஞ்ச கொலைகாரனுங்க நிறையபேர் இருக்காங்களா? ஒன்னுமே புரியலையே, சரி உன் இடத்துல நடந்த கொலை என்னிக்கு நடந்ததா பதிவாயிருக்கு?’ - அப்துல்.

‘செப்டம்பர் 4, நடுநாத்திரி 2.00 மணிக்கு’ - செல்வம்.

இங்க செப்டம்பர் இரண்டாந்தேதி, கைரேகை எதுனா கிடைச்சுதா?’ - அப்துல் .

‘இல்லை, ஏன்னா ஆயுதம் அந்த பையன் மேலே பாய்ஞ்ச உடனேயே அவன் அதை எடுக்க முயற்சி செஞ்சுருக்கான், ஸோ அவன் கைரேகைதான் ஆயதத்துல பதிஞ்சிருக்கு’ - செல்வம்.

‘என்னடா இது மொட்ட தாத்தா குட்டையில விழுந்த கதை மாதிரி இருக்கே’ - அப்துல் .

‘உன்னால இந்த கேஸ தைரியமா டீல் பண்ண முடியுமா?’ - செல்வம்.

‘டேய் நான் முன்ன மாதிரி கிடையாது இப்போ என்னால எதையும் சாதிக்க முடியும்ற தைரியம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இருக்கு, உலகமே எனக்கு கீழேதான் இருக்குன்ற கர்வமும் கலந்திருக்கு. இந்த கேஸ நிச்சயமா சக்சஸ்புல்லா முடிச்சிடுவேன்’

- அப்துல்,

செல்வம் மௌனித்தான்.

‘ஹலோ செல்வம்’ - அப்துல்.

மறுபுறம் டிவி ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது, ஆனால் செல்வமிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

‘ஹலோ செல்வம்......... செல்வம்’ என்று அப்துல் கத்திக் கொண்டிருந்தான்.

‘அப்துல் கொஞ்சம் சன் நியூஸ பாரு’ - செல்வம்.

உடனே அப்துல் டிவி சேனலை மாற்றினான். டிவியில்

‘இன்று பிகார் நிதிதுறை அமைச்சர் பாட்னாவில் நடந்த அரசியல் மாநாட்டில் கொல்லப்பட்டார். நடந்த சம்பவத்தை பற்றி எங்கள் நிருபர் பாட்னா போஸீஸ் அதிகாரியை விசாரித்த போது’ என்று ஒரு பெண் செய்தியை வாசித்து கொண்டிருக்கும்போது டிவியில் வேறு கிளிப்பிங் மாறியது. அதில் ஒரு நிருபர் ஆங்கிலத்தில் ஒரு போலீஸ் அதிகாரியை விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் ஆங்கிலத்தில் பதிலளித்துக் கொண்டிருக்கும் போது கீழே அதனுடைய தமிழாக்கம் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

‘சார் இந்த சம்பவத்தை பற்றி உங்களால் விளக்கம் தர முடியுமா?’ - நிருபர்.

‘எங்ளுடைய நிதிதுறை அமைச்சர் பாஸ்கர யாதவ் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவருடைய நெற்றியில் எதோ ஒரு கூர்ய ஆயுதம் குத்தியது. ஆயுதம் அவர் நெற்றியில் ஏறிய உடனேயே அவர் மூர்ச்சையானார், கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஆயுதம் எங்கிருந்து வந்தது, யார் எய்தது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. நாங்கள் ஒவ்வொருவரையும் நன்றாக சோதித்துப் பார்த்துவிட்டுதான் மாநாட்டை விட்டு மக்கள் கூட்டத்தை வெளியேற்றினோம். சந்தேகத்தின் பெயரில் பிடித்து வைத்த சிலரை விசாரித்துப் பார்த்ததில் அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று தெரியவந்தது. நாங்கள் அந்த இடத்திலேயே ஒரு குழு அமைத்து யார் செய்திருப்பார்கள், எதற்காக செய்திருப்பார்கள் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் அதிகாரி ஒருவர் எங்களிடம் ஒரு கோணிப்பையையும், ஒரு பிவிசி பைப்பையும் கொடுத்து இவை மாநாடு நடந்த மைதானத்தின் ஒரு எல்லையில் இருந்ததாக கூறினார். அந்த கோணிப்பையை திறந்து பார்த்த போது உள்ளே நிதிதுறை அமைச்சரைக் கொல்ல பயன்படுத்திய ஆயுதத்தை போல் நிறைய ஆயுதங்கள் உள்ளே இருந்தது. அப்போது தான் எங்களுக்கு புரிந்தது இந்த ஆயுதத்தை கொலையாளி எப்படி பயன்படுத்தி இருப்பான் என்று. இந்த பைப்பின் உள்ளே இந்த ஆயுதத்தை பொருத்தி, தன் வாயினால் குறிவைத்து ஊதினால் ஆயுதம் குறிவைத்த இலக்கை நோக்கிப் பறக்கும்’, என்று அந்த ஆயுதத்தை பைப்பில் பொறுத்தி விளக்கினார்.

 

ஆயுதத்தின் மூன்று திசை பரிமாணம்(3D View)

‘இந்த சம்பவத்திற்கு காரணம் தீவிரவாதிகளாக இருக்குமோ?’ - நிருபர்.

‘இதுவரை இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்க வில்லை, என்னை பொருத்த-
வரை ஒரு தீவிரவாதி யாரேனும் அரசியல் தலைவர்களை கொல்ல இந்த முறையை பயன்படுத்தி இருக்க மாட்டான், இந்த மேடையை குண்டு வைத்து தகர்த்திருப்பான் அல்லது ராக்கேட் லாஞ்சர் போன்ற பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியிருப்பான்’ - அதிகாரி.

‘அப்போ யாரு இந்த கொலையை செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்’ - நிருபர்

‘இந்த மாதிரி ஆயுத்ததை ஆதி காலத்தில் காட்டில் வாழ்ந்த மனிதர்களும், மலைவாசிகளும் மிருகங்களை வேட்டையாடுவதற்கு மரக்கிளைகளில் கூர்ய ஆயுதங்களை செய்து மூங்கிலில் ஓட்டைபோட்டு பயன்படுத்தினார்கள், ஆனால் இன்று நாகரீகம் பெரிதும் வளர்ந்த காலம், இன்று சாதாரண குருவிக்காரன் கூட துப்பாக்கியைத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். இது மாதிரிகூர்ய இரும்பினால் ஆன ஆயுதத்தின் முனையில் விஷம் தடவி மனிதனை கொல்ல பயன்படுத்துவதற்கு நிறைய பயிற்சி இருந்திருக்க வேண்டும், ஒரு மனிதனால் சரியாக குறிப்பார்த்து இந்த ஆயுதத்தை ஒரு 50 அடி தூரத்தில் எய்துவது சாத்தியமில்லாத விஷயம், ஆனால் அந்த காலத்தில் மலைவாசிகள் மலை சரிவுகளில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ஆயுதத்தை எய்வார்கள் என்று வரலாறில் படித்திருக்கிறேன்’ - அதிகாரி.

‘இந்த கோணிப்பையில் கை ரேகை எதாவது பதிந்து இருக்கிறதா’? - நிருபர்.

‘இன்னும் தெரியவில்லை, அந்த பையை கைரேகை நிபுனரிடம் அனுப்பி இருக்கிறோம்’ - அதிகாரி.

‘சரி ஆயுதத்தின் முனையில் தடவிய விஷத்தின் பெயர் என்ன?’ - நிருபர்

‘சைனைடை பேஸ்ட் போல செய்து அதை ஆயுதத்தில் தடவியிருக்கிறார்கள், இந்த மாதிரி சைனைடு தடவிய ஆயுதத்தில் ஒருவனை குத்தினால் அது இரத்தத்தில் பட்டவுடன் நிமிடத்தில் இரத்தத்தில் கலந்து மூளைவரை சென்று உடனே மரணம் ஏற்பட்டு விடும்’ -அதிகாரி.

‘இந்த விஷம் எளிதாகக் கிடைப்பது கஷ்டம், பிறகு எப்படி இது ஒரு ஜெல் அல்லது பேஸ்ட் மாதிரிகிடைக்கும்?’ -நிருபர்.

‘இப்பொழுது தான் பணத்தைக் கொடுத்தால் எல்லாம் நடக்கிறதே, எதாவது கெமிக்கல் இண்டஸ்ட்ரியில் ஒரு ஏஜென்ட் மூலமா கள்ள மார்க்கேட்டில் நாம் எதிர்பார்த்த வடிவத்தில் கிடைக்கும்படி செய்து அதற்கு தக்க சன்மானத்தை பெற்றுக்கொண்டு வருவது ஒன்றும் நமக்குப் புதிதல்ல’ என்று அதிகாரி டிவியில் பேசிக் கொண்டிருக்கும் போது அப்துல் டிவி வால்யூமை குறைத்து விட்டு

‘செல்வம் இந்த கொலையாளி நேஷனல் கிரிமினல் போலிருக்கு,...... ஒருவேளை இது ஒருத்தன் கிடையாதோ ஒரு குரூப்பா செயல்படுராங்களோ?’ -அப்துல்

‘எனக்கு ஒன்னுமே புரியல நாளைக்கு விடிஞ்ச உடனேதான் என்ன இனிமேல் நடக்கப்போகுதுன்னு தெரியும், சரி நாளைக்குப் பார்க்கலாம்‘ என்று செல்வம் போனை கட் செய்தான்.


ReplyQuote
Ramcharan sundar
(@ramcharan)
Eminent Member Writer
Joined: 9 months ago
Posts: 31
17/03/2020 5:56 am  

‘எனக்கு ஒன்னுமே புரியல நாளைக்கு விடிஞ்ச உடனேதான் என்ன இனிமேல் நடக்கப்போகுதுன்னு தெரியும், சரி நாளைக்குப் பார்க்கலாம்‘ என்று செல்வம் போனை கட் செய்தான்.

மறுநாள் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்.

அப்துல் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஏழுமலை வேறொரு கான்ஸ்டபிலிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

‘வந்துட்டாரா புதியவரு’ -கான்ஸ்டபிள்.

‘டேய் கொஞ்சம் அடக்கி வாசி, பாக்கறதுக்கு அந்த ஆளு குழந்தை மாதிரி இருந்தாலும் அவர் சரியான கேடியா இருக்காரு, சைலன்டா இரு’ -ஏழுமலை. இவர்கள் பேசுவதை கேட்பது அப்துலுக்கு சந்தோஷத்தை கொடுத்தது இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் முகத்தில் ஒரு மிடுக்குடன் தன் சீட்டில் அமர்ந்தான். போன் அடித்தது.

‘யெஸ் அப்துல் ஸ்பீக்கிங்’ -அப்துல்.

‘யோவ் நான் ஏ.சி தங்கராயன் பேசறேன்.உடனே கமிஷனர் ஆபிசுக்கு வா’ -ஏ.சி

‘ஓகே சார்’ -அப்துல்

‘சே இப்போதான் சந்தோஷமா இருந்தேன் அதுக்குள்ளே சங்கடம் வந்திருச்சே’ என்று முனகிக் கொண்டே வெளியே சென்றான் அப்துல்.

‘சார்’ -ஏழுமலை.

‘என்ன?’ -அப்துல்

‘வந்தவொடனையே கிளம்பிட்டீங்களே, என்ன விஷயம் சார்’ -ஏழுமலை.

‘அது..... ஏ.சி ஏதோ மீட்டிங்னு வர சொன்னாரு’ -அப்துல்

‘சார் ஜீப்ல தானே போறீங்க’ -ஏழுமலை.

‘சே...சே....இல்ல, எல்லாம் நம்ம காலிப்ளவர்லதான் போறேன்’ என்று அப்துல் சிரித்துக் கொண்டு அவன் வண்டியை ஓட்டிச் சென்றான். ஏழுமலையின் கண்களில் இடியுடன் கூடிய மழை பொழியத் தொடங்கியது.

மீட்டிங்கில் கமிஷனர், ஏ.சி மற்றும் சில அதிகாரிகள் இருந்தனர். ‘யோவ் இராவுத்தர்கொலையை பத்தி ரிப்போர்ட் எங்கே’? - ஏ.சி.

‘சார் இன்னும் ரெடி பண்ணல’ -அப்துல்

‘யோவ் நேத்தி என்ன புடிங்கிட்டிருந்த, நேத்திக்கே போன் பண்ண சொன்னேன்ல’ - ஏ.சி

அப்துலுக்கு கோபம் லேசாக துளிர் விட்டது.

‘இதே மாதிரிகொலை நாலு இடத்துல நடந்திருக்கு, ஒன்னு தமிழ்நாட்ல, அப்புறம் ஆந்திரா, ஒரிசா அப்புறமா பீகார் நிதித்துறை அமைச்சர் கொல்லப்பட்டிருக்கார். இதுனா தெரியுமா உனக்கு?’ - ஏ.சி .

‘சார் மூணு இடத்துல நடந்தது தெரியும், ஒரிஸால தெரியாது, யாரு ஒரிஸால கொல்லப் பட்டிருகாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?’ -அப்துல்.

‘யாரோ ஒரு கடற்கரையோரம் இருக்கற லம்பாடி கும்பல்ல ஒருத்தன்,

சரி மூணு இடத்துல நடந்தது தெரியும்னு சொல்ற ஏன் ரிப்போர்ட் ரெடி பண்ணல?’ - ஏ.சி

‘சார் காலையில எழுதலாம்னு நினைச்சேன் வரும்போது நீங்க போன் பண்ணி கூப்பிட்டீங்க, அதான் இங்க வந்தேன்’ -அப்துல் கோபமாக கூறினான்.

ஏ.சி கமிஷனரிடம் திரும்பி ‘சார் பிகார்ல கிடைச்ச பேக்ல(bag) கைரேகை கிடைச்சிருக்கு, அதே மாதிரி ஒரிஸால லம்பாடி ஒருத்தன கொல்ல யூஸ் பண்ண ஆயுதத்திலேயும் கைரேகை பதிஞ்சிருக்கு, இரண்டு கைரேகையும் ஒத்துப் போகுதாம், மத்த இரண்டு இடத்துலே கைரேகை கிடைக்கலை, நாலு கொலையும் ஒருத்தன் தான் பண்ணியிருக்கான்றதை ஊர்சிதப்படுத்தரத்துக்கு முதல் கிடைச்ச இரண்டு கைரேகையும் ஒத்துப்போறதே காரணமா இருக்கு, ஆனா அந்த கைரேகை இந்தியாவிலே இருக்கற மொத்த கிரிமினல்ஸ் கைரேகையோட கம்பேர் பண்ணி பாத்ததுல எதொடையும் ஒத்துப் போகலை, ஸோ அவங்க கைரேகையை மட்டும் பேக்ஸ் அனுப்பி இருகாங்க, கொலை நடந்த அந்தந்த ஏரியா இன்ஸ்பெக்டர் முடிஞ்ச அளவுக்கு கிடைக்கற தடயங்களை வெச்சு கேஸ டீல் பண்ணட்டும்னு நேத்து நடந்த மீடிங்க்ல முடிவு பண்ணிருகோம், ஆனா இந்த அப்துல் புதுசு வேற யாரு கிட்டையாவது கொடுக்கலாம்றது என்னோட யோசனை’ -ஏ.சி.

‘சார் உங்க யோசனையை நீங்களே வெச்சிக்கோங்க’ என்று அப்துல் கோபமாக பேசினான். ‘ஹலோ ஒரு மேலதிகாரிகிட்ட இப்படியா பேசறது’ -கமிஷனர்

‘பின்ன என்ன சார் சும்மா என்னை இன்சல்ட்பண்றா மாதிரி பேசினா கோபம் வராம பின்ன என்ன வரும்’ -அப்துல்

‘சரி உன்கிட்ட இந்த கேஸ கொடுத்தா நீ எவ்வளவு நாள்ல முடிப்பே?’ - ஏ.சி.

அப்துல் யோசிக்காமல் ‘ஒருவாரம்’ என்றான்.

ஏ.சி சிரித்துக்கொண்டே ‘என்னது ஒரு வாரமா?’ என்று கேட்டான்.

‘அப்துல் ஒரு வாரம்னு தெரியாம சொல்லிட்ட...... இருந்தாலும் அதிலேயே விடாபிடியா இரு’ என்று மனதினுள் கூறிக்கொண்டே ‘ஆமா சார் ஒரு வாரம்’ -அப்துல்

‘சரி ஒரு வாரத்துக்கப்புறம் இந்த கேஸ நான் வேற யார்கிட்டயாவது ஹேண்ட் ஓவர் பண்ணலாமா?’ - ஏ.சி

‘ம்ம்’ என்று தலை அசைத்தான் அப்துல்.

‘சரி இந்தா கைரேகை வந்த பேக்ஸ் அப்புறம் அதோட டீடைல்ஸ். ஒரு வாரத்துக்கு அப்புறம் உன்னை பாக்கறேன்’ -ஏ.சி.

அப்துல் அதைப் பெற்றுக்கொண்டே எல்லாருக்கும் ஒரு சல்யூட் அடித்துவிட்டு ஸ்டேஷனுக்கு சென்றான்.

ஸ்டேஷனில் சீட்டில் யோசித்தபடியே அப்துல் அமர்ந்திருந்தான் அவன் முகத்தில் கொஞ்சம் கோபமும் கலந்திருந்தது.

ஏழுமலை அவனிடம் சென்று ‘சார் வண்டி எப்படி சார் போச்சு’? என்று கேட்க,

அப்துல் அவனை முறைத்தான்.

‘சார் என்ன டென்ஷனா இருக்கீங்க, ஏ.சி திட்டினாரா?’ - ஏழுமலை.

’நீ மூடிட்டு வேலைய பாரு’ -அப்துல்.

ஏழுமலைக்கு சுருக்கென்று உரைத்தது.

‘வண்டிய என்கிட்டே வாங்கினோம்ற நன்றியே இல்லியே, இந்த கேஸ்னாலேயே இவன் நாசமா போகணும்’ என்று மனதினுள் சபித்துக் கொண்டிருந்தான்.

‘என்னப்பா ஏழுமலை என்னவோ மனசுல உனக்கு நீயே பேசிக்கற மாதிரி தெரியுது’ -அப்துல்.

‘அது ஒன்னுமில்லை சார் இந்த கேஸ்னால நீங்க ஓகோன்னு வரணும்னு சாமிக்கு ஸோத்திரம் சொல்றேன்’ -ஏழுமலை.

‘அது’ என்று ஏழுமலையை திமிராக பார்த்து கூறிவிட்டு மறுபடி சிந்தனையில் ஆழ்ந்தான்.

இரவு நேரம் ரூமில் அப்துல் யோசித்துக் கொண்டே இருந்தான்... ‘எப்படி இந்த கேஸ மூவ் பண்றதுனே புரியலியே ம்ம்...........’ என்று சட்டென்று அவன்பெட்டியை திறந்து அட்லசை(Atlas) எடுத்தான் அதில் இந்தியா மேப்பை பார்த்தான்.

‘தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, பிகார் இந்த ஸ்டேட்லாம் பக்கத்து பக்கத்துல இருக்கு’ என்று யோசித்த படியே ஏ.சி தன்னிடம் கொடுத்த கொலைகளுக்கான டீட்டைல்சை பார்த்தான்.


ReplyQuote


Share: