Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications

[Closed] உள்ளூறும் உயிர் சுவையே - Tamil New Novel  

  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
14/02/2020 4:57 pm  

உள்ளூறும் உயிர் சுவையே

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Rudhi Venkat
(@rudhivenkat)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 90
14/02/2020 6:30 pm  

ஹாய் டியர்ஸ்😍😍 it's Ruthi venkat❤️.... எல்லாரும் எப்படியிருக்கிங்க??

இதோ அடுத்த கதையுடன்💘 "உள்ளூறும் உயிர்சுவையே "💘 வந்துவிட்டேன்😊...

இந்த கதைக்கும் உங்களது ஆதரவையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் 😍😍😍.......

 

💘நிக்-லயா💘 ....உங்களை சந்திக்க வந்து விட்டார்கள்❤️❤️


Rudhi Venkat
(@rudhivenkat)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 90
14/02/2020 6:34 pm  

அத்தியாயம்-1:

 

பன்னீரைத் தூவும் மழை
சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ
வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெந்நீல வானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்
அதன் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே, அன்பே....

 

 

"அன்பே" என்ற அந்த அழுத்த உச்சரிப்பில் மயிர்கால்கள் கூச்செரிந்தது அவளுக்கு. அதில் கையிலிருந்த பாத்திரத்தை நழுவவிட, பாத்திரத்தின் அதிர்வுடன் அவளும் சேர்ந்து அதிர்ந்து நின்றாள். அந்த அதிகாலை நான்கு மணி வேளையில் பாடல் மிருதுவான ஒலியில் ஒலித்துக்கொண்டிருக்க, பெண் இயந்திரம் தான் வேலை செய்கிறதோ எனும் அளவிற்கு, மெதுவாக பாத்திரங்களை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தவளை உலுக்கியது " அன்பே" எனும் அழுத்தமும் அதோடு மனதில் பேரலையை ஏற்படுத்திய அந்த குரலுக்கு சொந்தக்காரனின் காதலும், அது ஏற்படுத்திய நினைவலைகளும்.

 

 

 

"காதல்... அவனால் மட்டுமே இந்த அளவிற்கு காதலைப்பொழிய.. இல்லை இல்லை காதல் ஆழியாய் ஆக்கிரமிக்க முடியும்" என்பதை நினைத்து இப்பொழுதும் அவளது மனம் அரற்றியது.

 

 

"ஹ்ம்ம்...." ஒரு பெருமூச்சுடனே, உருளலுடன் கீழே விழுந்த பாத்திரத்தை குனிந்து எடுத்து மீண்டும் சுத்தப்படுத்தியவள்,அதிகம் சத்தமெழுப்பாது சமையலறையை சுத்தம் செய்து முடித்திருந்தாள்.

 

 

அடுத்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, அதில் லயித்தவாறே காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தாள். இந்த பழக்கத்தையும் ஏற்படுத்தியது அவனே.

 

 

"பாட்டு கேட்டுகிட்டே வேலை பாரு பப்ளி.. மனசு லேசாகி எப்பேர்பட்ட வேலையும் இலகுவாக செய்ய முடியும். அதுமட்டுமில்லாம உணர்வு நரம்புகளுக்கு தனி ஆவர்த்தனத்தை இசைதான் குடுக்கும்" தீவிரமாக ஆரம்பிப்பவன், காதல் குறும்புகளில் மூழ்கடித்து அவளை ஒருவழி ஆக்கிவிடுவான். அவ்வளவு குறும்பு செய்தாலும் வேலை மட்டும் முடிந்திருக்கும். அது அவன் மட்டுமே அறிந்த இரகசியம்.

 

"இருபத்தி நான்கு மணிநேரத்தில் அவனது நினைவில்லாமல் ஒரு நொடி கடந்திருக்குமா?" நினைத்துப்பார்த்தவளுக்கு பூஜ்ஜியம்தான் விடையாக கிடைத்தது.

 

 

"எங்கும் அவன் எதிலும் அவன்... நீ என்ன கடவுளா நிக்கி??" மனதில் நினைத்தவள்,
" ஆம் கடவுள்தான்... எனக்கு ஒரு வரம் கொடுப்பாயா? அந்த ஒருநாளை மட்டும் நம் காதல் அத்தியாத்திலிருந்து அழித்து விடேன். என் காதலனாக நீ எனக்கு திரும்ப கிடைத்து விடுவாய்"இறைஞ்சும் மனதோடு, இத்தனை சிந்தனைகளும் மனதில் ஓடிக்கொண்டிருக்க, குக்கர் எழுப்பிய சத்தம் அவளை நனவிற்கு கொண்டு வந்திருந்தது.

 

 

அதுல்யா... அதுல்யா தாமோதர் மோத்தி. வட இந்திய தந்தைக்கும் தென்இந்திய தாய் மீராவிற்கும் பிறந்த ஒரே செல்ல மகள். மாநிலம் வேறாக இருந்தாலும் மனமொத்து காதல் மணம் புரிந்து கொண்டவர்கள். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது, அதுல்யாவின் நான்காவது பிறந்தநாள் வரை.

 

 

சந்தோஷமாக தங்களது மகளின் பிறந்தநாளிற்கு கோவிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு, தாமோதரின் தாய் கங்காபாய் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் வீட்டிலிருந்து ஆட்கள் வந்து காத்திருக்கும் வரை. நான்கு ஆண்டுகளாக எட்டிக்கூட பார்க்காத உறவுகளை கண்டதும் அவரது மனம் தடம்புரண்டது. மனைவி குழந்தைகளை கூட கவனிக்காமல் அவர்களோடு கிளம்பிச் செல்ல, கணவனின் மனதை புரிந்தவராக, தனக்கு வேறொரு வாகனத்தை ஏற்படுத்திக்கொண்டு, புறப்பட்டுச்சென்றாள் மீரா.

 

 

 

அங்கு சென்று பார்த்த போதுதான் தெரிந்தது , தாமோதரின் அன்னையின் உயிர் பிரிந்து ஒருமணிநேரம் ஆகியிருந்தது. ஒருவழியாக அனைத்து காரியங்களும் முடிந்து, வீடு வந்த பிறகும் மனைவியிடமும் பிள்ளையிடமும் முகம் கொடுத்து கூட பேசவில்லை.

 

 

அவரது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து மீராவும் அவரை தொந்தரவு செய்யாது பிள்ளையை கவனித்து கொண்டாள்.
இரண்டு நாட்களில் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தார் அவர். மீராவிற்கும் அதுல்யாவிற்கும் அதில் சற்று நிம்மதி மீண்டது. சகஜமாக பேசினாலும், அதில் ஒரு மாற்றமாக அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று , உறவினர்களை சந்தித்து வந்தவர், மீராவையும் குழந்தையையும் அழைத்துச் செல்லவில்லை. மீராவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

 

"அன்னையை இழந்த துக்கத்தில் உறவுகளை பார்த்து மனதை தேற்றிக்கொள்கிறார்" என்று எண்ணியவளுக்கு, தனது வீட்டு உறவுகளின் ஞாபகமும் வந்தது. காதல் திருமணத்தால் இருவீட்டாரும் அவர்களை ஒதுக்கி வைத்திருந்தனர்.

 

 

அழகான கூட்டுக்குடும்பம் மீராவினுடையது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊரில் பிறந்து வளர்ந்தவர். தாமோதரின் குடும்பம் சென்னையில் இருந்தது. சென்னைக்கு படிக்க வந்தவர்கள் காதல் திருமணம் செய்துகொள்ள, இருவீட்டாரும் இவர்களை தலைமுழுகிவிட்டனர்.

 

 

இப்பொழுது தாமு மட்டும் சென்றுவர, மீராவிற்கும் தன் பெற்றோரை காண ஆசை எழுந்தது. இதுநாள் வரை எவ்வளவோ முயற்சி செய்தும், தாமோதரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் அவளது பெற்றோர். இவ்விடத்து நிலைமையும் அப்படியே.

 

 

எனவே இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள விரும்பியவளாக, அன்றைய இரவில் பேச்சை ஆரம்பித்தாள் மீரா.

 

 

"என்னங்க.. நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?" தயங்கி தயங்கி கேட்க,
"ம்ம்... சொல்லுடா" அரை தூக்கத்தில் பதிலளித்துக்கொண்டிருந்தான் அவளது கணவன்.

 

 

"இப்போ நீங்க உங்க உறவுகளோட சேர்ந்த மாதிரி நானும் எங்க அப்பா அம்மாவை பார்த்துட்டு வரட்டுமா?" என்றவளின் கேள்வியில் கோபமாக எழுந்தமர்ந்தான் அவன்.

 

 

"என்ன விளையாடறியா மீரு?? எத்தனை தடவை நாம போயிருப்போம் , அவங்க நம்ம எவ்வளவு அவமானப்படுத்தினாங்க? அதும் உங்கம்மா ஒருபடி மேல போய், என் பொண்ண பிரிஞ்சு நான் படற கஷ்டத்தை, உங்கம்மாவும் உன்னை பிரிஞ்சு கஷ்டப்படனுன்னு சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. கடைசி காலத்துல எங்கம்மா கூட நான் இல்லைன்னு இப்பவும் என் மனசு எவ்வளவு வேதனைப்படுது தெரியுமா?" என்றுவிட்டு படுத்துவிட, மீராவின் கண்கள் குளமாகியது.

 

 

"வேதனை எல்லாருக்கும் தான். இவருக்கு மட்டுங்கிற மாதிரி பேசறாரு" முணங்கியவளாக அன்றைய இரவை கண்ணீருக்கு இரையாக்கினாள் அவள்.

 

 

அதன்பின்பு இருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தகராறு ஏற்பட்டுக் கொண்டே இருக்க, விதி அதை விவாகரத்து வரை கொண்டு நிறுத்தியது. இவர்களால் பாதிக்கப்பட்டதென்னவோ அந்த பிஞ்சு உள்ளம் தான்.

 

 

விவகாரத்து முடிந்து மறுவாரமே தாமோதர் தனது உறவு பெண்ணை திருமணம் செய்திருக்க, மனதளவில் மரித்து போனாள் மீரா. அது அவளது சித்தத்தையும் கலக்கியது. அந்த அதிர்ச்சியில் அவளது பெற்றோரும் செய்வதறியாது திகைக்க, அவளை மீட்டெடுக்க முன்வந்தான் அவள்மேல் உயிரையே வைத்து அவளுக்காக இன்னும் திருமணம் முடிக்காமல் பிரம்மச்சரிய வாழ்க்கையை மேற்ககொண்டிருந்த அவளது மாமன்மகன் சுதர்சனம். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவனுக்கு மாமனும்- அத்தையுமே சகலமும்.

 

 

"அத்தை மீராவும், செல்லாவும்(அதுல்யா) இனி என் பொறுப்பு" என்றவன், அவர்களை தன்னோடு வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று விட்டான்.

 

 

கனடாவில் தான் அதுல்யாவின் இளமைப் பருவம் முழுவதும் கழிந்தது. தனது தந்தை கூட இந்த அளவிற்கு தனது அன்னையை விரும்பியிருப்பாரா? என்பதை வளர்ந்த பிறகு அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
கண்ணியம் தவறாது தனது தாய்க்கு தாயார் தாயுமானவனாய் கவனித்து, இதோ இன்று அவர்களிருவரையும் அடையாளம் காணும் அளவிற்கு அவரது சித்தத்தை தெளிவு பெற செய்திருந்தார்.

 

இத்தனை வேலைப்பளுவிலேயும் தான் பெறாத மகளின் மேல் அக்கறை காட்டவும் தவறவில்லை.

 

"செல்லா..." என்ற வார்த்தைக்கு மறுவார்த்தை அவரது வாயிலிருந்து வந்ததில்லை. மகளுக்கு அனைத்து வித சுதந்திரமும் கொடுத்து வளர்த்து வந்தார் அவர்.

 

 

"டாடி நீங்க ஏன் முதல்ல எனக்கு அப்பாவா வரலை" அன்னையை செய்த வாந்தியை சுத்தம் செய்துகொண்டிருந்த, அந்த தயாளனை பார்த்து கேட்டாள் அவரது ஆசை மகள்.
"செல்லா.. பழசை நினைக்ககூடாதுன்னு உனக்கு டாடி எத்தனை தடவை சொல்றது?" என்பவரின் பேச்சில், உலகம் மறந்துவிடும் அவளுக்கு.

 

 

இந்த சூழ்நிலையில் தான் தனது நர்சிங் படிப்பை இந்தியாவில் படிக்க ஆசைப்பட்டாள் அதுல்யா.

 

 

"இந்தியாக்கு போயே ஆகனுமாடா?" தந்தையின் கவலை குரலில் மனம் நெகிழ்ந்தவளாக,
"டாட்.. அன்னை தெரசா இருந்த ஊர் டாட். நானும் அவங்களைப் போலவே நர்சிங் எடுத்து தொண்டு செய்யனும் ஆசைப்படறேன். எப்படியும் இன்னும் நாலு வருஷத்துல நாம நம்ம சொந்த ஊருக்கு தானே திரும்பப்போறோன்னு தான சொன்னிங்க?" என்றாள் மகள்.

 

 

மகளின் அமைதியான குணத்திற்கு ஏற்ற படிப்புதான் என்றாலும், திருமணத்தைப்பற்றிய அவள் மதிப்பீடும், வளர்ந்த கலாச்சாரமும் அவரை யோசிக்க வைத்தது.

 

 

"இல்லடா இங்க நீ வளர்ந்த கலாச்சாரம் வேற? நான் அங்க கூட இருந்தா கொஞ்சம் நல்லாருக்குன்னு நினைக்கிறேன்டா செல்லா" மகளின் தாடையைப்பிடித்து கொஞ்ச, அவரின் கண்களில் அணிந்திருந்த கண்ணாடியை எடுத்து தனது டீ-ஷர்ட்டில் துடைத்து மீண்டும் அவருக்கு மாட்டிவிட்டவள்,

 

"ஹ்ம்ம்... இப்போ நல்லா பாருங்கப்பா. நான் நல்லா வளர்ந்துட்டேன். இப்பவாச்சும் என்னை வெளிஉலகத்தையும் பார்க்க விடுங்கப்பா. அதான் நீங்க சீக்கிரம் அங்க வந்துடுவிங்கதானே? முடிஞ்சா அம்மாக்கு அதுக்குள்ள இன்னும் நல்லாயிடுச்சுன்னா, அழகா ஒரு லவ் ப்ரப்போசலை பண்ணுங்க. ஆனால் நோ மேரேஜ்" என்ற மகளை செய்வதறியாது பார்த்தார் அந்த தந்தை. இரண்டு மனதாக தான் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.

 

 

ஆசையுடனும் மனதில் பல வித கற்பனைகளுடன், துள்ளலாக கல்லூரியில் நுழைந்தவளை,
"வர்றதுக்கு இவ்வளவு நேரமா பப்ளி" வாயிலிலேயை மறித்த ஒருவன், அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு கல்லூரியின் உள்ளே சென்றான். அந்த ஒருவன் நீரநிகேதன். லயாவின் காதல் கண்ணாளன்.

 

சுவையாகும்💘💘💘.......

 

 

Share: