Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

[Solved] தீயை தீண்டிய தென்றல்  

  RSS

(@sai-lakshmi)
Active Member Writer
Joined: 3 months ago
Posts: 8
24/07/2019 4:38 pm  

ஓம் சாய் ராம்!!! 

வணக்கம். என்னுடைய பெயர் தனலெட்சுமி. நான் உங்களின் புது தோழி, உங்களுடன் என்னை அறிமுகப்படுத்தி கொள்வதில் மகிழ்ச்சி.. அதற்கு நித்யா மேடம்மிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

நானும் உங்களுடன் கதைகள், கவிதைகள், பாடல்கள், பிடித்தவை, பிடிக்காதவை என இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களின் பெண்ணான நேரத்தில்... உங்களுக்கு பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லையென்றாலும் தவறுகள் இருப்பினும், தோழாமையுடன், உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். இவ்வாய்பினை அளித்த நித்யா மேடமிற்கு என்னுடைய நன்றிகள். 

 

கதையை பற்றி ஒரு முன்னோட்டம் பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்!!! 😁😍😉😑😎

தீயைதீண்டியதென்றல்!!! 

                           சாய்லட்சுமி

ஹாய்.. என்று அவன் அழைப்பதற்குள்.. உங்களிடம் நான் பேச விரும்பவில்லை என அவனை திரும்பி பார்க்காமல் அகல்விழி கூறினாள்.

 

மேடம்க்கு என் மேல் என்ன கோபம்? என அவளது அருகில் சென்று அமர, அவள் நகர்ந்து உட்கார்ந்தாள், இதுவும் கூட நன்றாகத்தான் இருக்கிறது என்று, எழுந்து அவளது அருகில் மண்டியிட்டு அமர்ந்தான்.

 

யாரையும் பார்க்க எனக்கு பிடிக்கவில்லை என்று முகத்தை திருப்பி கொண்டவளின், அருகில் மீண்டும் வந்தமர்ந்தான். பாண்டியன். எதிரியை கூட, ஓட விட்டு, சாகடிப்பதில் வல்லவனான பாண்டியன், அவளின் முகசினுங்கலுக்கு மண்டியிட்டான்.

 

என்ன கோபம் என்று சொன்னால் தானே தெரியும்? என கேட்க, உடனே எழுந்தவளின் கை பற்றினான். பதிலுக்கு அவள் கைகளை உருவி கொள்ள வில்லை என்பதே ஆச்சரியமான உண்மை.

 

ஏன் என்று உங்களுக்கு தெரியாதா? இல்லை தெரியாதது போல நடிக்குறீங்களா? என்றவளது கேள்வியில் கோபம் எத்தணிக்க, அவனுக்கு புரிந்துவிட்டது.. நேற்று அவன் செய்த செயலால் வந்த வினை என்று..

 

என்னவென்று எனக்கு தெரியவில்லை..? தங்களுக்கு எதுவும் தெரிந்தால் சொல்லுங்கள் என்றவுடன் தன் கைகளை உருவி கொள்ள, அவனும் எழுந்து கொண்டான்.

என் மேல் தான் தவறு, நீங்கள் பெரிய இடத்து பையன். அதுவும் பாரின் வரை சென்று படித்து வந்தவர், உங்களுக்கு இதலாம் சாதாரணம் என பேசி கொண்டே அவளிருக்க, அக்கம் பக்கம் பார்த்தவன் யாருமில்லை என்றதும் வள வளத்து கொண்டிருந்தவளை பிடித்து திருப்பி, உதட்டோடு உதடு வைத்து அழுத்தமாக முத்தம் பதித்தான் பாண்டியன்.

இருபத்தி ஒன்பது வருடமாக கட்டி காப்பாற்றிய தன் ஆண்மையை அவனின் தேவதையான காற்றின் மூலமாக அவனுள் கலந்த காரிக்கைக்கு இன்று முதன் முதலாக பரிசாய் தன் காதல் முத்தங்களை வெறித்தனமாக இல்லாமல் அதிரடியாய் அச்சிட்டான் அவளது இதழில்...

தேன் குடித்தால் எப்படி தித்திக்குமோ! அது போல அவளது உதட்டின் சுவை அவனை தித்திக்க வைக்க, அதனால் இறுக பற்றியிருந்த அவளது இடையினை தன்னோடு சேர்த்து மேலும் இறுக்கி கொண்டான். தாங்காத தாபம் கொண்டோ, இல்லை இவள் எனக்கானவள் என்ற இன்பம் கொண்டோ அவளை விடுவித்து, முகம் பார்த்து தன் காதலை அவளிடம் தெரிவித்தான் அந்த அழகிய மன்மதன்.

எந்த பெண்ணிற்கும் என் மனம் அனுமதி கொடுக்கவில்லை. ஏனெனில் அம்மாவாகவும், தங்கையாகவும் மிற்ற பெண்களை பார்க்க எண்ணிய என் மனது, உன்னை பார்த்த பொழுது தான் உரிமையுடன் உறவாடி கொள்ளவும், மனைவியாய் ஏற்று கொள்ளவும் துடித்தது. அன்றிலிருந்து தான் தெரிந்து கொண்டேன் என் இதய துடிப்பு நீ என்று.. என அவளை தன்னோடு அனைத்து கொள்ள, அவளால் இந்த இன்ப அவஸ்தை ஏற்று கொள்ள முடியாமல் அசைவின்றி நின்று கொண்டிருந்தாள் அகல்விழி.

அதனால் அவளை தன்னிலிருந்து பிரித்தவன், என்னவாயிற்று என்னை பிடிக்கவில்லையா? என குனிந்திருந்த அவளது முகம் நிமிர்த்தி கேட்க, சட்டென்று அவனுடைய பாதங்களில் விழுந்து, தவமிருந்து பெற்ற வரமான அவனுடைய காதலுக்கு தன் கண்ணீரை தான் அந்த பேதை பெண்ணால் காணிக்கையாக முடிந்தது.

ஹே.. என்னவாயிற்று, என பதறி விலகியவனின் முகம் பார்த்து என்ன மன்னிச்சுடுங்க... "நம்மை காக்கும் சாமியிடம் வரத்தை தான் கேட்கனும், அந்த சாமியையே கேட்க கூடாது. அது போல தான் வரமாக, எனக்கும் இந்த ஊருக்கும் பல நன்மைகளை செய்த உங்களை, யாரும் இல்லாத அன்னாடங்காட்சியான நான் உங்களுக்கு துனணவியாவதா? என அவளின் நிலையை ஆழகாக அவள் எடுத்து கூற,

சக்திகேற்ற.. சிவனாய்.. அவனுடைய பதிலாய், "எனக்கு மனைவி என்று நீ கிடைப்பாய் என நினைத்தேன். ஆனால் நான் கடைசி வரை அனாதையாகவும், சான்யாசியாகவும் தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்று நீ சொல்கிறாய்! என அவன் நடக்க ஆரம்பிக்கவும் ஓடிச் சென்று அவனது கை பிடித்தாள் அகல்விழி.

எதற்காக என்னை தடுக்கிறாய்? என்று வெறப்பாக பேச, அவளிடம் எதுவும் பதில் இல்லை.

ஓ.. இருட்டுன்னா உனக்கு பயம்ல. அதனால் தான் அன்று போல் இன்றும் என் துணையை எதிர்பார்க்கிறாயா? என அவளை மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்கினான்.

இல்லை..என்று அவள் பதில் சொன்னவுடன், ஓ.. நான் தனியே செல்வதால் உடன் வருகிறாயா? எனக்கு இருட்டை பார்த்து பயம் கிடையாதுமா, அதனால் நீ துணைக்கு வர வேண்டாம், என உல்லாசமாக சிரித்து கொண்டு சொல்லியவன் முகம் பார்க்க முடியாமல் தவித்தாள் பாண்டியனின் விழியாள்.

நான் உங்களுக்கு துணையாக மட்டுமல்ல, துணைவியாகவும் வாழ்க்கை முழுவதும் வர ஆசை படுகிறேன் என்று தன் விரல்களை கோர்த்தபடி அவள் பேசி கொண்டிருக்க,

நிஜமாக தான் சொல்கிறாயா? என அவளது முகம் நிமிர்த்தி கேட்க, அவனது காந்த பார்வையும், மூறுக்கு மீசையும் , அவனது பரந்த நெஞ்சத்தின் அருகாமையும் தன் மேனியை சலனம் கொள்ள செய்ய, அதனால் அங்குள்ள மரத்தின் அருகாமையை நாடினாள். அகல்விழி.

அவளது விலகலில் தன்னை தொலைத்தவன், கண் இமைக்காமல் அகல்விழியை பார்க்க.. நாணம் கொண்டு,
அவனை திரும்பி பார்த்த பார்வையில்.. பனிசாரல் தன் மேல் தூறுவது போல, அவ்வளவு குளிர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவித்தான். தன் விருவிருப்பான நடையினை மறந்தவனாய் அடி மேல் அடி வைத்து..மரத்தை கட்டி கொண்டு நின்றவளை பிடித்து திருப்பி,

என்னை விட்டு பிரியமாட்டாய் அல்லவா என்னுயிர் இருக்கும் வரை.. என்று அவளை பிரிய முடியாமல் அவளது விழிகளுள் பார்த்து கேட்டவனின் இதழில் கை வைத்தவள்,

என்ன கேள்வி இது! காலம் முழுவதும் உங்கள் காலடியில் கிடக்க தான் ஆசை படுகிறேன், இனி மேல் இது மாதிரியான கேள்வியெல்லாம் கேட்காதீங்க.. என்னால் தாங்க முடியாது என்று அவனது நெஞ்சில் உரிமையுடன் சாய்ந்து கொண்டாள் பாண்டியனின் கண்ணம்மா!!!

இவ்வளவு நாள் தூரத்திலிருந்து அவனை பார்த்து காதல் கொண்ட மனது, தன்னுடைய நிலைமையை எண்ணி, எட்டி நின்றது மனதால், அவன் தன்னை விரும்பினான் என்று தெரிந்தும் சந்தோஷம் கொள்ள முடியாமல், அவனுக்கு தான் படிப்பிலும், தகுதியிலும் இணையானவள் இல்லை என்று ஒதிங்கிட நினைத்தாள். அவன் தன் காதலை நேரிடையாக தெரிவித்ததும், தன்னுடைய விலகலை ஏற்று கொள்ள முடியாமல் அவன் அடைந்த துயரத்தை கண்டு தன் காதலை அவனிடம் மனம் திறந்தாள்.

எந்த பெண்ணாலும் ஈர்க்க முடியாத, தன்னையும், தன் மனதையும், முதன் முதலில் காற்றில் மிதந்து வந்து காரிகையாய் ஈர்த்தாள். அன்றிலிருந்து அவளை கண்டு கொள்ள, தவமாய் தவமிருந்து முகம் பார்த்து, பேசி பழகி, அவள் தன் மேல் கொண்டுள்ள அபிப்ராயம் இவற்றையெல்லாம் உணர்ந்து பூரித்து, இன்னாளில் அவன் மனதை அவளிடம் தந்துவிட்ட திருப்தியில் எதிர்காலத்தை நினைத்து மனதின் ஓரத்தில் முதன் முதலாக அச்சம் கொண்டான் யாருக்கும் அஞ்சா நெஞ்சினன்.

நம் எண்ணங்கள் போல் தான் வாழ்க்கையாம், அது போல அவனின் அடிமனதில் அவள் தன்னை பற்றி முழுவதுமாக தெரிந்தால் பிரிந்து சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையே, அவனிடமிருந்து அவளை பிரிக்குமோ! என்னவோ?
காலம் கடந்து வாழ்க்கை நம்மளுக்கு உணர்த்தும் ஒரு சில நிகழ்வுகள் ரணமாய் இருப்பதுடன் மிகுந்த வேதனையும் கொடுக்கிறது.

தன் நெஞ்சில் புதைத்திருந்த அவளது முகத்தை நிமிர்த்தி வழிகளுக்குள் பார்த்தவனுக்கு இதலாம் புதிதாக தென்பட்டது. யார் இந்த தேவதை, எனக்கே எனக்காக பிறந்திருக்கும் என்னவள்!!! என ஆசையாக அவளது நெற்றியில் முத்தம் பதித்து, மெல்லியதாக கண்ணங்களில் இருபுறத்திலும் முத்தம் கொடுத்துவிட்டு, உதட்டினை பார்வையிட, அவனுடைய ஆளுகையை தாங்காத பெண் உள்ளம், திரும்பி நின்றது. எதையும் பட்டென்று யோசித்து, சட்டென்று முடிக்கும் பலம் கொண்ட பாண்டியனுக்கு இந்த மாதிரி நிமிடங்கள் நீளாதா?
என கோடி ஏக்கங்கள் தோன்றின.

அவனுடைய உயரத்திற்கு அவள் தன் நெஞ்சம் வரை வளர்ந்திருப்பதை அளவிட்டவன், லேசாக குனிந்து, அவனது இரு கைகளுக்குள் அவளை பிடித்து இறுக்கி கொண்டான். இத்தனை நாள் பின்புறமாக தரிசித்த அவளுடைய தேகத்தில், முதுகு புறத்தின் நடுவில் ஒரு மச்சத்தினை அந்த இரவின் மடியில் நிலா வெளிச்சத்தில் கண்டவன், நொடி நேரம் தாமதியாமல் தன் இதழ்களை அதில் ஒட்டி எடுத்தான். அவனுடைய ஒவ்வொரு செய்கையும், அவளை அனு அனுவாய் சாகடிக்க... பிளீஸ்.. என்று முனங்கினாள். அதில் மேலும் இதம் கொண்டவன்.. சாரி.. கண்ணம்மா.. என்று தன்னில் பிரித்து நிறுத்தியவன் அவளை கைகளில் ஏந்தி நடக்க துவங்கினான் ஆசை காதல் நாயகன் பாண்டியன்.

அவளும் உரிமையுடன் தன் கைகளை அவனது கழுத்தில் மாலையாக்கிக் கொண்டாள்.
"எவ்வளவு தூரம் என்ன தூக்கி சுமப்பீங்க.. என கேள்வியுடன் அவனை நோக்க,... 

 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 

This topic was modified 3 weeks ago by Sai Lakshmi
This topic was modified 3 weeks ago by Nithya Karthigan

(@sai-lakshmi)
Active Member Writer
Joined: 3 months ago
Posts: 8
25/07/2019 6:28 pm  

தீயை தீண்டிய தென்றல்!!!
                             சாய்லட்சுமி♥️

அடுத்த முன்னோட்டத்துடன் வந்துள்ளேன். 

       

 

           "அன்று மாலையில், இதமான காற்று மேனியை வருட, அதனை ரசித்து கொண்டிருந்தவன், அவளின் வரவிற்காக காத்திருந்தான். தன் கை பேசியின் அழைக்க, அதனை எடுத்து காதில் வைக்க, மறு முனையில் மாலதி தான் அழைத்திருந்தாள்.

அண்ணா! அன்றைக்கு அக்பர் நஸீம் ரவுடி வீட்டிலிருந்து அழைத்து வர பட்ட பெண்கள், உங்களிடம் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள் என தெரிவித்தது, அவர்கள் ஐந்து பேரையும் பேச வைக்க ஸ்பீக்கரை அழுதினாள் மாலதி.

அண்ணா! என்ற அழைப்பில் பெரிதும் மகிழ்ச்சி கொண்டவன், சொல்லும்மா! என்ன விஷயம் எதுவாக இருந்தாலும் என்னிடம் தெரிவிக்கலாம். சொல்ல கூடாத விசயம் என்றால் மாலதி அக்காவிடம் சொல்லுங்கள்..என ஒரு தகப்பனாக, தாயாகவும் அவர்களுக்கு விளங்கினான் பாண்டியன்.

ரொம்ப நன்றின்னா! நாங்க டெய்லி அனுபவித்த வலியை என்னவென்று சொல்ல, நகரத்தில் கூட இருந்திடலாம் ஆனால் அந்த அக்பர் நஸீமிடம் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.

இப்போது நாங்க நிம்மதியாக மூச்சு விட முடிகிறது, இந்த ஒரு மாதத்தில் தான் புதிதாய் பிறந்தது போன்று எங்களுக்கு புது வாழ்க்கையை கொடுத்த உங்களுக்கு காலம் முழுவதும் நாங்கள் நன்றியுடன் இருப்போம் என ஐந்து பெண்களும், ஒன்று சேர கூறினார்.

எங்களை மாதிரி நிறைய பெண்கள் அங்கு சிக்கியுள்ளனர், அவர்களை எல்லாம் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறியவுடன், யானை பலம் வந்ததை போல, இன்னும் இரண்டே நாளில் அவர்களும் உங்களுடன் இருப்பார்கள் என போனை கட் செய்தான். ருத்திரமூர்த்தியாய் மனம் கொதிகலனுடன் அமர்ந்திருக்க, தூரத்தில் வந்து கொண்டிருந்தவள், அவனை கண்டதும் அங்குள்ள செடிகளின் நடுவே நின்றுவிட்டாள் அகல்விழி.

காதலை இருவரும் பறி மாறி கொண்ட வேளையிலிருந்து, அவன் அருகில் சென்றாலே, மெழுகாய் உருகும் தன் மேனியையும், மனதையும் கட்டுபடுத்த முடியாமல், அவனிடம் சரணடையவும் முடியாமல் இன்பமான அவஸ்தையை உணர, அவனும் தன் ஈர்க்கும் வழியால் முழுங்கி விடுவது போல, தினமும் அவளை கவனித்து கொண்டு தான் இருந்தான்.

அங்கே நின்று கொண்டிருந்தால் எப்படி? இங்கு வந்தால் என்ன? என அவன் கால் மேல் கால் போட்டு, அங்குள்ள மரத்தின் மீது சாய்ந்து கொண்டு, பந்தாவாய் கூற,

ஏற்கனவே, அவனிடம் மயங்கி இருந்தவளின் மனதை மேலும் அவனது நடவடிக்கைகள் தூண்டி விட, தன்னவன் என்ற பெருமையே அவளிடம் கொள்ளை சந்தோஷத்தை கொடுத்தது. அவனுடைய கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல், அவனையே அடி கண்களால் அவள் நோட்டமிட,

ஏ! பாம்பு, பாம்பு என கத்தி கொண்டு, அவளது காலுக்கடியில் கை காட்டவும் பதறி அடித்து கொண்டு, அவனது மார்ப்பில் மூச்சிரைக்க ஓடி வந்து இளைப்பாறினாள். பூ குவியல் தன் மீது விழுந்தது போன்று சுகமாய் அதனை அனுபவித்து கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்தவள், நறுக்கென்று, அவன் கைகளில் கிள்ளினாள்.

ஏ! வலிக்குதுடின்னு சொல்ல மாட்டேன், நீ கிள்ளியது எறும்பு கடிதத்தை போல இருந்தது. அதற்கு பதிலாக நாலு அடி வேனாலும் அடித்து கொள், உன் உதடுகளால் மட்டும், ஏனெனில் அது இன்பமான துன்பம்! என அவனது இதயத்தை தொட்டு காட்ட, அவள் வெட்கம் கொண்டு கைகளால் தன் முகத்தை மறைத்தாற் போன்று உட்கார்ந்திருந்தாள்.

என்ன பேச்சையே காணோம், உன்னிடம் சொன்ன பொய்யிற்காக, வேறு ஏதும் பலமான தண்டனை கொடுக்க போகிறாயா? அப்படி கொடுப்பதாக இருந்தால், இப்போதே, கொடுத்துவிடும்மா. ஏனெனில் இரண்டு நாள்கள் நான், சென்னை செல்கிறேன் என கூறவும், அவன் பக்கம் திரும்பி அவனது முகத்தையே, கேள்வியாக நோக்கி கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

ஹே.. ஏன் இந்த கண்ணீர், பாண்டியனின் மனைவி அழுவதா? என அவளது கண்ணங்களை பற்றி, கண்ணீரை துடைத்து, இன்னும் இரண்டே நாள் தான் வந்துவிடுவேன். அது வரை உன்னை நினைவில் வைத்து கொண்டிருப்பதை போல, எங்கே மச்சான்னுக்கு ஒரு நச்சென ஒரு முத்தம் கொடு என சிரிப்புடன் கூறினான்.

அழுத முகம் இப்போது நாணத்தால் சிவந்து விட, அதனை வாஞ்சையுடன் பார்த்து கொண்டிருந்தவன், அவளை அள்ளி எடுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டான் பாண்டியன்.

நான் என்ன சின்ன குழந்தையா? மடியில் உட்கார வைத்து கொள்ள, யாரேனும் பார்த்து விட்டால் என்ன செய்வது? என அவன் அருகாமையில் இருந்து அவள் விடுபட, நெளிந்து கொண்டிருக்க, அவளுடைய சிகப்பு கலர் அணிந்திருந்த தாவணியையும், அவளையும் ஒரு சேர, இன்று பார்த்தில் மகிழ்ச்சி கொண்டான்.

சின்ன பிள்ளையை தான் மடியில் இருத்தி கொள்ள வேண்டும் என்றில்லை. என் உயிரானவளை தினமும், நெஞ்சில் கூட தூக்கி சுமப்பேன். நீ என் முதல் பெண் குழந்தை அல்லவா? என்று பாண்டியன் கூறவும்,

நீங்கள் போய் தான் அகனுமா? எ.. என்னால் உங்களை பிரிந்திருக்க முடியாது என்று தாவணியின் முனைப்பை திருகி கொண்டு பேசி கொண்டிருந்தவளின், வயிற்று அருகே தன் கைகளால் வளைத்தவன் , அவனின் மடி மீது அமர்ந்திருந்த அவளின் தலை முடியை தன் மற்றொரு கரத்தால் விலக்கி கண்ணங்களில் முத்தமிட்டு, அவளது தோழில் முகத்தை பதித்தான்.

இந்த மாதிரி என்ன தேடவும் ஆள் இருக்கிறது என்பதே, பேரின்பமாக இருக்கிறது, பிறந்ததிலிருந்தே இன்று வரை உறவுகளுக்காக ஏங்கினேன். கிடைத்தது. ஆனால் நான் இன்று வரையிலும் ஆனாதை தான். உன்னால் ஒரு குடும்பம் எனக்கு கிடைக்கிறது. யூ ஆர் மை லைப்.. என சிரிக்க, அவனது சிரிப்பும் கூட அவ்வளவு மயக்கத்தை கொடுத்தது.

யாருக்கும் எட்டாத உயரத்தில் இருந்து கொண்டு, தரையில் கிடைக்கும் என்னை தன் உயிராக நினைக்கும் அவனது, குணத்தை எண்ணி வியந்தாள். அப்படி என்ன தான் இருக்கிறது என்னிடம் என யோசித்து கொண்டிருந்தவளின் கண்ணங்களை தன் ஒற்றை விரல்களால் வருடினான்.

என்ன மேடம்.. என்ன யோசனை எதுவாக இருந்தாலும் தயங்காமல் நீ என்னிடம் சொல்லலாம்? உனக்கு இல்லாத உரிமையா? என அவள் தன்னிடம் மனம் விட்டு பேசுவதற்கு ஊக்க படுத்தினான்.

இல்லை.... என்னிடம் அப்படி என்ன இருக்கிறது என்று, உங்கள் உயிராய் நினைக்க காரணம்? என திக்கி கொண்டு அவள் கேட்க நினைத்த கேள்வியை கேட்டுவிட, விழுந்து விழுந்து சிரித்தான். அதனால் அவளுக்கு மெல்லியதாக கோபம் எட்டி பார்க்க, தன் சிரிப்பினை கட்டுபடுத்தி கொண்டு,

உன்ன பார்த்தவுடனே என்று.., டிரைக்டர் வியூ பார்ப்பது போல கைகளை வைத்து கொண்டு பேச ஆரம்பிக்க, திரும்பி அவனது முகத்தை ஆர்வத்துடன் கவனிக்கலானாள் அகல்விழி.

உன்ன பார்த்தவுடன், எப்படியாவது கரைட் பன்னி, மெட்டரை முடிச்சிடலான்னு தோனுச்சு. நீயும் தான வந்து என் வலையில் சிக்கின, அதனால் இங்கு அக்கம், பக்கம் யாரும் இல்லை.. இன்னும் என்ன தாமதம் வா!!! என்னை கட்டிகொள் என பேசவும், எழுந்து நின்றாள் அகல்விழி.

ஏன்! என்னை விட்டு செல்கிறாய்..
மானே.. இங்கு நீயும், நானும் மட்டும் தானே இருக்கிறோம் என அவள் கைகளை பற்றி கட்டிகொள்ள, அவனை தள்ளிவிட்டு ஓடினாள். ஓரே எட்டில் துரத்தி பிடித்தவன், அவளை நகர முடியாதபடி இருக்கமாக கட்டி கொண்டான் பாண்டியன்.

என்ன பட்டுகுட்டி! மச்சான் சொன்னதை நினைத்து பயந்துட்டியா? என குனிந்து அவளது காதோரமாக கிசு கிசுக்க, அவனது நெஞ்சில் தன் பிஞ்சு கைகளால் குத்தினாள். அதனால் அவன் இன்னும் சந்தோஷம் கொள்ள, அவனை அடித்ததில் அவளுக்கு தான் கை தான் வலித்தது.

கைகளை பற்றி அதில் முத்தமிட்டவன், அவளது கைகள் இரண்டையும் விடுத்து, இடையோடு சேர்த்து தன்னுள் பூட்டி கொண்டான். ஒரு கையால் அடங்கி கொண்டதை போன்ற அவளது இடையை மென்மையாக பற்றி கொண்டவன், தன் மற்றொரு கரத்தால் கண்ணீரை துடைத்து, அவளது இதழோடு இதழ் பதிக்க நினைத்து விலகினான்.

மயிலிறகை போன்ற பட்டு போன்ற தலைமுடி, பிறை போன்ற நெற்றி, அடர்த்தியான நேர்த்தியான புருவங்கள், கிளி மூக்கு, ஆப்பிள் கண்ணங்கள், ரோஜா பூ போன்ற உதடு.. புதைகுளி போன்று விழுந்தால் எழ முடியாத கழுத்தின் அழகான வளைவுகள், என தன் ஒற்றை விரல்களால் அவளது மேனியில் கோலம் போட்டு கொண்டிருக்க, அடுத்து அவன் வர்ணிப்பதற்குள் அவனது கைகளை பற்றி, நிமிர்ந்து பார்த்தவளின் கண்களுக்குள் பார்த்தவன், சட்டென்று திரும்பி, தன்னை பின்னாலிருந்து தாக்க வந்தவனின் கைகளை பிடித்து ஒடித்தான்.

அவனை தொடர்ந்து இருபது பேர் படையெடுத்து, ரவுண்டாக அவ்விருவரையும் அவர்கள் வளைக்க, சுற்று முற்றும் பார்த்த பாண்டியன், சட்டென்று அவளது இடுப்பில் கை வைத்து, தொடங்கி கொண்டிருந்த மரத்தின் வேரினை பற்றி, அவ்வளையத்தை விட்டு அவளோடு பறந்து, அடுத்த மரத்தின் அருகில் வந்து நின்றான். அவளை அந்த மரத்தின் கிளைகளில் மேலேற்றி அமர்த்தினான். பின்னர் மரத்திலிருந்து குதித்தவன், தன்னுடைய துப்பாக்கியை உபயோகிக்கலாம் என தன் முதுகு புறத்தில் கை வைக்க,

அகல்விழி தன்னை பார்த்து கொண்டிருப்பதால் வேண்டாம் என நினைத்து கொண்டான் பாண்டியன்.

ஏய்! மாப்பிள்ளை சட்டைக்கு பின்னாடி பெரிய அருவாள் வச்சுருக்கான் போல மாப்பு, என ஒருவன் குரல் கொடுக்க, அவனை தொடர்ந்து நம்மையெல்லாம் போட்டு தள்ளிருவான் போல டா! என்று மற்றொருவன் கூற, மீதியிருந்த நபர்கள் சிரித்தனர். அக்கூட்டத்தை பார்த்து பாண்டியன் குரல் கொடுத்தான்.

எவனுக்காவது நெஞ்சுல தைரியமிருந்த என்ன தொடுங்கடா! பார்ப்போம் என்று அவன் கூறி முடிக்கவும், அவனை நோக்கி வந்த இரண்டு பேரையும், அங்குள்ள மரத்தின் கொப்பினை தன் கைகளால் பலமாக உடைத்தவன், அவர்களது தலையில் அடிக்க, அந்த இடத்திலே அவ்விருவர் பிளாட்....

அதை தொடர்ந்து வந்த, நான்கு பேரின் கைகளையும், ஒன்றாக பிடித்து, அவர்களை மரத்தின் மீது சாய்த்து, தன் யானை பலம் கொண்ட கால்களால் மிதிக்க, அவர்களின் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது. அடுத்த நபர்கள் அவனை எப்படி தாக்கலாம் என யோசித்து கொண்டிருக்க, அதில் மறைந்திருந்து ஒருவன், மரத்தின் கிளைகளில் உட்கார்ந்திருந்த அகல்விழியின் கழுத்தில் கத்தி வைத்து பாண்டியனை நோக்கி கத்தினான். அவன் திரும்பி பார்த்த சமயமாக மீதியிருந்திருந்தவர்களில் ஒருவன் பாண்டியன் மீது மண்ணை தூற்றினான்.

அதனால் கண்களை தடவி கொண்டிருந்தவனை நோக்கி ஒருவன் கத்தியோடு குத்த வரவும், என்னங்க... என்று குரல்...T

 

hank  u  for, your valuable comments.dear friends!!! ❤️♥️🌹💝💖💐


(@sai-lakshmi)
Active Member Writer
Joined: 3 months ago
Posts: 8
11/08/2019 6:39 pm  

ஹாய்... பிரண்ட்ஸ்.. ஐ எம் சாய்லட்சுமி. எல்லோரும் எப்படி இருக்கீங்க? I hope you're well. I'm sharing my writings to u... 

தீயை தீண்டிதென்றல் 

                 சாய்லட்சுமி 💖 

 

அடுத்த முன்னோட்டம் :

தன் அறையை அடைந்தவள், எங்கு சென்றிருப்பான், தன்னை தேடிக் கொண்டிருப்பானோ? என கண்ணாடி முன் நின்று யோசித்துக் கொண்டிருக்க, அங்கு பட்டுவேட்டி சட்டையில் பந்தாவாக நின்று கொண்டிருந்தான் பாண்டியன்.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியினால் சட்டென்று திரும்பி பார்க்க, ஒரே எட்டில் அவளை அடைந்து , தூக்கி சுற்றினான். "அய்யோ.. என்னதிது கீழே இறக்கிவிடுங்க" என்று அவனை கெஞ்சிக் கொண்டிருந்தாள். பாண்டியனின் கண்ணம்மா.

நாளை மறுநாள் நமக்கு கல்யாணம் அல்லவா? அதனால் அதற்கான பாடம் எடுக்க வந்தேன் என்று கீழே இறக்கி விட்டவன், அவளை இடையோடு பிடித்துக் கொள்ள, அவனது அருகாமையால்.. இன்ப அவஸ்தையில் சிக்குண்டாள்.

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்கள் கிளம்புங்கள். யாராவது வந்து விட போகிறார்கள்? என்று கதவை நோக்கி அவனை தள்ளினாள் ஜஸ்வர்யா தேவி.

"உன் உதடுகள் தான் வேண்டாம் என்கிறது! ஆனால் கண்கள் என்னை அழைக்கிறதே? என்றவன், வேண்டாம் என்று கூறிய உதடுகளை தன் விரல்களால் வருடி சமாதானம் செய்தான். இந்த மகாராணியின் அறைக்குள் அனுமதியின்றி யாரேனும் உள்ளே வர முடியுமா? என சங்க கால அரசர் போல அவன் பேசி நடித்து காட்ட, அதனை மையலாக பார்த்த, அவளது  கண்களின் பாஷைகள் வேறு, மோகம் என்ற போர்வையை அவன் மீது போற்றி விட்டு செல்ல..

"கருமையான கூந்தல்
பிறைநிலா போன்ற நெற்றி
காந்தம் போன்ற கண்கள்
ஆப்பிள் போன்ற கண்ணங்கள்
குடைமிளகாய் போன்ற மூக்கு
செரி பழம் போன்ற இதழ் என்று ஒவ்வொன்றாக தன் விரல்களால் வர்ணிக்க ஆரம்பிக்க, மந்திரத்திற்கு கட்டுண்டவள், போல அவனது காதல் யுத்தத்திற்கு உடன்பட ஆயத்தமாகினாள் ஜஸ்வர்யா தேவி.

விரல்களால் நடத்திய வருடல்களை விடுத்து, இதழோடு இதழ் வருடி, அவளது வெட்கங்கள், அச்சங்கள், துக்கங்கள் எல்லாம் மொத்தமாக திருடிக் கொண்டிருந்தான். இதழ் தீண்டிய திருடலில் போது முழுசமுத்திரத்தையும் கடந்து பின்பு தான் மூச்சுவிட்டான் எனலாம். மீண்டும் பயணம் செய்ய விரும்பிய இதழோ.. அவளது முகத்தில் ஊர்வலம் நடத்த, மீசை எண்ணும் முட்கள் அந்த அழகிய ரோஜாவை காயம் செய்ய, அதனை வாரமாய் நினைத்து சுகமாய் அவள் அனுபவிக்க, அவளுக்கு மேலும் தன் இதழ்களால் வரத்தை வழங்கிக் கொண்டிருந்தான். இருவரது இன்பமயமான நேரத்தை கலைக்கும் விதமாக கதவு தட்டபடும் ஓசை கேட்டு, அவளை பிரிய மனமில்லாமல் விலகினான்.

தன் இதழ் தீண்டிய தீண்டலால் மோகன நிலையில் இருந்த பாவையவளின் முகம் தாமரை பூவைப் போன்று, அங்காங்கே சிவந்து அழகாக காட்சியளிக்க, மீண்டும் பலமாக கதவு தட்டும் ஓசை கேட்டு, அவளது கண்ணங்களை தட்டி, மோகன நிலையில் இருந்த மங்கையை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தான்.

கண்களை திறந்தவளின் முன்பு இந்திரன், சந்திரன் மற்றும் நவீன கால எந்திரன் போன்று காட்சியளித்த அழகனை கண்டவள், அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நாணம் கொண்டு உரிமையாய் அவனது தோழில் முகம் புதைத்தாள்.

கண்ணம்மா! கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. யாரேன்று பார்த்துவிட்டு வா என்க! யாராக இருந்தாலும் இருக்கட்டும் என சொல்லமாக சினுங்க, அவளது நெற்றியில் வாஞ்சையுடன் முத்தம் மிட்டான்.

சற்று நேரத்திற்கு முன்பு யாராவது வந்துவிடுவார்கள் என்று என்னை விரட்டுவதில் கூறியாக இருந்தாய்... என கூறவும்... "பெண்கள் வேண்டாம் என்றால் வேண்டும் என்று தான் அர்த்தம்" என்றாள்.

அப்போ.. வேண்டும் என்றால்? என்று அவன் கேள்வி எழுப்ப, அவனது முகம் பார்த்து நீங்கள் எப்போதும் எனக்கு... எனக்கு.. என்று தலை குணிந்தவளின், முகம் நிமிர்த்தி எதிர்பார்ப்புடன் காத்திருந்தவனிடம் "வேண்டும்" என்றாள்.

நான் எப்போதும் உனக்கே உனக்கு மட்டும் தான் என்று எழுந்தவன் கதவை திற என்று கை காட்டினான். வேண்டா வெறுப்பாக கதவை திறக்க, அங்கு பூவாயி நின்றிருந்தார்.

என்னம்மா! இவ்வளவு நேரம், நான் பயந்துட்டேன் என்று அவளை உச்சியிலிருந்து பாதம் வரை கவனிக்க, ஐஸ்வர்யாவின் விழிகள் கள்ளத்துடன் அங்குமிங்கும் அசைந்தன.

என்னமா! உடம்பு சரியில்லையா? என அவளது கன்றிருந்த முகத்தை பார்த்து கேட்க, அதெல்லாம் இல்லை, கொஞ்சம் களைப்பாக இருந்தது தூங்கி விட்டேன்! என தட்டு தடுமாறி பொய் கூறினாள்.

சரிம்மா! என்றவர், கையிலிருந்த பால் மற்றும் பழங்களை கொண்டு அறைக்குள் நுழைய, அவர்களை தடுத்து, அதனை பெற்று கொண்டு பூவாயியை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு, கதவை சாத்தினாள். 

அவளை  பின்னாலிருந்து கட்டிக் கொண்டவன் படுக்கையை அடைந்ததும் விடுவித்து, ஊரையே உள்ளடக்கியபடி இருந்த அவளது அறையில், மின்விளக்கிற்கெல்லாம் விடுதலை கொடுத்து ஆங்காங்கே மட்டும் மெழுகுவர்த்தியை ஏற்றியவன், பின்பு நிதானமாக நடந்து வந்து அவளது  படுக்கையில் கால்களை நீட்டி சாய்வாக அமர்ந்தான் பாண்டியன்.

அந்த பாலை எடுத்து கொடுப்பது என்றவுடன், அதனை எடுத்து நீட்டியவளிடம்.. நீ குடித்துவிட்டு எனக்கு கொடுத்தால் பாதாம்பால் குடித்த மாதிரி இருக்கும் என்று ஐஸ் வேறு வைத்தான்.

அந்தபுரத்திற்கு வந்திருக்கும் இளவரசர் போன்று இருந்த அவனது நடவடிக்கையை ரசித்தவள், புருஷன் பருகிய மீதி பாலை தான் பொண்டாட்டி குடிக்கனும் என்று சொல்வார்கள் என்றாள்.

அவளது வார்த்தையை தட்டாது பாலை பாதி குடித்து அவளிடம் கொடுக்க, அவனை ரசித்து பார்த்தபடி மீதியை மங்கையவளும் பருகினாள்.

வெட்டி வைக்கப்பட்டிருந்த பழங்களை எடுத்து அவனிடம் நீட்டிய கைகளை பற்றி இழுக்க, அவனது நெஞ்சில் தெப்பென்று விழுந்தாள் ஜஸ்வர்யா தேவி.

"எப்படி இருக்கிறது என் ஏற்பாடு? என்று மீசையை முறுக்கியவனை பார்த்து மெல்லியதாக
சிரித்தவள், நாளை மறுநாள் தான் நமக்கு முதலிரவு என்று சொல்லி சிரித்தாள்.

அதனால் தான் ஒரு ஒத்திகை பார்க்க வந்திருக்கிறேன். பாடத்தை ஆரம்பிப்போமா? என அவளது கன்னங்களை ஈரமாக்கினான் தன் இதழால்...

என் உடலும், உயிரும் உங்களுக்கே சொந்தம்...என்று அவளது சம்மதத்தை தெரிவிக்க தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான் பாண்டியன்.

இப்போது இது வேண்டாம் கண்ணம்மா. உடலாலும், உள்ளத்தாலும் நீ இன்னும் கொஞ்சம் வளர வேண்டும், நிறைய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும், இந்த அரண்மனையை ஆளும் திறமையையும், தகுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உனக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது... இருபத்தியோர் வயது வரை உனக்காக காத்திருப்பேன் என்று ஊமார வாக்களித்தான், ஆனால் பின்னாளில் அவளாலே வாக்கு தவற போகிறான் என்று தெரியாமல்... இந்த நிமிட சந்தோஷதை அனு அனுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்!!!! சென்ற பதிவிற்கு லைக்ஸ் அன்ட் கமெண்ட்ஸ் செய்த என் அன்பானவர்களுக்கு  நன்றிகள்!!!

 

This post was modified 6 days ago by Sai Lakshmi

(@pragadeesh)
Trusted Member Registered
Joined: 3 months ago
Posts: 81
12/08/2019 1:53 am  

Nice update,ud konjam sikkirama poduka sis..


ReplyQuote
(@sai-lakshmi)
Active Member Writer
Joined: 3 months ago
Posts: 8
13/08/2019 3:12 am  

😊 😎  ❤️  🌹  🥀  🌺 ஆகஸ்ட் 30 post pannalanu irugen sis... 😍 Thanks for ur valuable comments.... 

 


ReplyQuote
Share:

error: Content is protected !!
Don`t copy text!
  
Working

Please Login or Register