Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Kaadhalin Litmus paritchai - Story  

Page 1 / 3
  RSS

Meena
(@meena)
Estimable Member Moderator
Joined: 2 years ago
Posts: 189
01/07/2020 5:59 am  

1

இடம்: பெங்களூர் சென்னை ஹைவே ரோட்...

 

சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்தவன் போன்ற தோற்றத்தில் இருந்த ஆர்யா தனது பைக்கில் அமர்ந்திருந்தான். சுங்கச் சாவடியில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அவனது வண்டி அந்த சுங்கச் சாவடியைக் கடந்தபோது  அந்த டோல் கேட்டில் பணிபுரியும் ஆட்களிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்துவிட்டான்.

டோல் கேட்டின் பணியாளர்கள் பேட்ரோல் போலிஸிடம் விஷயத்தைச் சொல்ல போலிஸ் ஜீப்பும் வந்துவிட்டது. வெள்ளை நிற சுமோவில் இருந்து இறங்கி வந்த சங்கர் என்ற போலிஸ்காரர், யாருப்பா பிரச்சனை பண்றது? என்று தமிழில் அங்கு பணி புரியும் ஊழியரிடம் கேட்டார். சாலையின் ஒரு ஓரத்தில் தனது பைக்கில் அமர்ந்தபடியே சண்டையிட்டுக் கொண்டிருந்த ஆர்யாவைக் கை காட்டினார் ஒரு ஊழியர். உச்சி வெயிலை அண்ணாந்துப் பார்த்தவர் தனது கைபேசியை பேன்ட் பாக்கெட்டில் இருந்து உருவியபடியே ஆர்யாவிடம் நடந்து சென்றார்.

ஹலோ மிஸ்டர்... நான் கேஸ் போடப்போறேன். பிரச்சனையை யார் முதல்ல ஆரம்பிச்சதுன்னு கோர்ட்ல பார்த்துக்கலாம்.- ஆர்யா சுங்கச் சாவடி ஊழியரிடம்.

என்ன சார்... என்ன சார் உங்க பிரச்சனை... உங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையா? தினம் டோல் கேட்ல பிரச்சனை பண்ண யாராவது ஒருத்தர் வந்திடுவீங்களா? - போலிஸ்காரர் ஆர்யாவிடம்.

அப்போது ஆர்யாவின் கைபேசி விவேக் காலிங் என்று அழைத்தது. கைபேசியை இயக்கி, சொல்லுடா விவேக். என்றான்.

மச்சி... எங்கடா போன? இப்ப எங்க இருக்க?- கைபேசியில் பேசிய விவேக்.

நானா? நான் எங்க இருக்கேன்? இரு கேட்டுச் சொல்றேன். என்று விவேக்கிடம் சொன்ன ஆர்யா சுங்கச்சாவடி ஊழியரிடம், சார் இது என்ன ஏரியா? என்று கேட்டான்.

என்னாது?? எனக்கு அப்பவே ஒரே டவுட்டு...- ஊழியர்.

இது என்ன ஏரியா சார்?- ஆர்யா.

அட... தண்ணி கேசு சார், நீங்களே கவனிச்சிக்கோங்க. இன்னிக்கி உங்களுக்கு சரியான ஆளு தான் மாட்டிருக்கான். ரேமான்ட்ஸ் கூலிங் கிளாஸ் போட்டிருக்கு பார்ட்டி. கழுத்துல பெரிய ஐ.டி கம்பெனியோட கார்ட் தொங்கவிட்டுருக்கான். அப்ப நான் கிளம்பட்டா?- ஊழியர் போலிஸ் காரரிடம்.

ம்... ம்... கிளம்பு. பையன் தமிழ்தான? நானே பார்த்துக்குறேன். - போலிஸ்காரர்.

நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்த கைபேசி இணைப்பை துண்டித்துவிட்டான் ஆர்யா. கைபேசி இணைப்பை துண்டித்துவிட்டு,

சார்... அவர் எங்க போறாரு? எனக்கும் அவருக்கும் தான சார் பிரச்சனை? அவர் பாட்டுக்க போயிட்டே இருக்காரு... என்று நகர ஆரம்பித்திருந்த சுங்கச் சாவடி ஊழியரைப் பார்த்து ஆர்யா கேட்க,

ஆர்யாவின் கைபேசி மீண்டும் அவனை அழைத்தது. விவேக் காலிங்... விவேக் காலிங்...

ஆர்யா அழைப்பை ஏற்று, என்னடா? எதுக்கு கால் பண்ணிட்டே இருக்க? கொஞ்ச நேரம் ஃபோனை ஆன் பண்ணி வைக்கக்கூடாதா டா... உடனே பத்து ஃபோன் போடு... இப்ப என்ன?

டேய் ஆர்யா, உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை தான? எங்கடா போன? நைட் எல்லாம் நான் உன்னை தேடிட்டே இருந்தேன் தெரியுமா? ஏன்டா எரும ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ண? எங்கடா இருக்க? சொல்லு டா... ப்ளீஸ்.

நான் எங்க இருக்கேன்... என்று யோசித்த ஆர்யா சற்று குழம்பியவனாய்,

தெரியல டா விவேக். என் பக்கத்துல ஒரு போலிஸ்காரர் இருக்காரு. அவ்வளவு தான் புரியிது. வாந்தி வர்ற மாதிரி இருக்கு... என்று சொன்னவன் குடம் குடமாக தனது பைக்கின் அருகேயே வாந்தி எடுத்தான்.

வாந்தி எடுத்ததால் ஆர்யாவினால் கைபேசியில் விவேக்குடன் இணைப்பில் இருக்க முடியவில்லை. இணைப்பு முன்பு போல துண்டிக்கப்பட்டது.

ஹலோ மிஸ்டர்... என்ன டரன்க் அன்ட் டிரைவ்வா? ஏறுங்க சார் ஜீப்ல.- போலிஸ்காரர்.

ம்?? என்று கேட்டது மட்டும் தான் ஆர்யாவிற்குத் தெரியும். ஏன் என்றால் ம் என்று கேட்டுவிட்டு மயங்கி விட்டான் ஆர்யா.

ஆனால் மயக்கத்தில் மட்டும் அவனது உதடுகள் மது... மது... என்று உளறின.

விவேக் காலிங்... விவேக் காலிங்... என்றது ஆர்யாவின் கைபேசி. ஆர்யா மயங்கி ரோட்டில் விழுந்து கிடந்ததால் காவல் துறை அதிகாரியே கைபேசி அழைப்பை ஏற்றார்.

சார்... சொல்லுங்க. நான் பேட்ரோல் போலிஸ் சங்கர் பேசுறேன். இந்தப் பையன் உங்க ஃப்ரண்டா?

போலிஸ்ஸா?

ஆமா சார்.

ஆக்சிடென்ட் பண்ணிட்டானா சார்...

இல்ல. ஆனா கேஸ் போடப்போறேன். டிரன்க் அன்ட் டிரைவ் கேஸ். என் பேரு சங்கர். ஓசூர் ஹைவேல இருக்கும் பி3 போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்திடுங்க. வந்து ஃபைன் கட்டி பைக்கையும் உங்க ஃப்ரண்ட்டையும் கூட்டிட்டுப்போங்க. சரியா?

ஓசூரா?? அங்க எப்படி சார்... அவ்வளவு தூரமாகவா பைக்ல போயிருக்கான்... நிஜமாகவே ஓசூரா சார்.

ஆமாங்க... நிஜமாகவே ஓசூர் தான் சார். நீங்க எங்க இருக்கீங்க?

ஓசூர் தாண்டி...

ஓ... நீங்க வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகிடுமே... பரவாயில்ல நான் ஸ்டேஷன்ல இருக்கேன் வந்திடுங்க.

சார்... சார்... ப்ளீஸ் ப்ளீஸ்... நாங்க ரொம்ப டீசென்ட் பீபிள் சார்.

அதை உங்க ஃப்ரண்ட் நடு ரோட்டுல வாந்தியெடுக்கிறதுக்கு முன்ன என்கிட்டச் சொல்லி இருந்தீங்கன்னா நம்புற மாதிரி இருந்திருக்கும்.

சார்... இது தான் சார் முதல் தடவையா அவன் குடிச்சிருக்கான். ஒரு லவ் மேட்டர்ல அப்செட் ஆகி...

ஆமா... சார் மது மதுன்னு தான் புலம்புறார். என்று போலிஸ் அதிகாரி சொல்லிக் கொண்டிருந்த போதே...

டேய் விவேக் என்னோட மூக்கு மேல விரலை வச்சி, நோ... எனக்கு நீ வேணாம். அமெரிக்காதான் வேணும்னு சொல்லிட்டா டா மச்சி. ஒரு சினிமா படத்துல கார்த்திக் மூக்கு மேல ரேவதி விரல்ல வச்சி சொல்வாங்கல? அது மாதிரி என் மூக்கு மேல விரல்ல வச்சி மது சொன்னா டா. என்றான் பாதி மயக்கத்தில் எழுந்து அமர்ந்த ஆர்யா.

சார்... சார்... ப்ளீஸ் சார்... நான். என்று விவேக் கைபேசியில் கெஞ்சிக்கொண்டே இருந்தான். ஆர்யாவின் புலம்பலையும் வேடிக்கை பார்த்த காவல் அதிகாரி விவேக்கிடம்,

சார். உங்க ஃப்ரண்ட் பத்திரமா இருப்பார். என்னோட ஜீப்புல தான் கூட்டிட்டுப் போறேன். பயப்படாம மெதுவா வந்து உங்க ஃப்ரண்டைக் கூட்டிட்டுப் போங்க. சரியா? நான் வச்சிடுறேன். என்று விவேக்கின் பதிலை எதிர்பார்க்காமல் இணைப்பைத் துண்டித்தார்.

ஆர்யாவின் கைபேசியை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். சுங்கச் சாவடி ஊழியர்கள் இருவரை அழைத்து, எப்பா பசங்களா, இந்தப் பையனை என்னோட ஜீப்புல ஏத்துங்க. என்றார்.

ஆர்யாவை ஜீப்பில் ஏற்றியதும் மிஸ்டர் லவ் குருவும் அந்த ஜீப்பில் ஏறிக்கொண்டார். மிஸ்டர் லவ் குரு ஒரு மாயாவி. யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார். விக்கிரமாதித்தனுக்கு ஒரு வேதாளம் இருப்பது போல மிஸ்டர் லவ் குரு ஆர்யாவின் வேதாளம்.

                    *  *  *

 

இடம்: போலிஸ் ஸ்டேஷன்...

சார் ஒரு டிரன்க் அன்ட் டிரைவ் கேஸ் விஷயமா வந்திருக்கேன் சார். சங்கர் சாரைப் பார்க்கணும்.- விவேக்.

தமிழா? அந்தாளுக்கு எப்படித்தான் தண்ணிகேஸா தினம் தினம் ஒண்ணு மாட்டுதோ? பேன்க் பேலன்லஸை ஏத்திட்டே போறார் மனுஷன்...- வாயிலில் நின்றுகொண்டிருந்த காவல் துறை அதிகாரி.

ஆமா சார் தமிழ்தான். சங்கர் சார்?- விவேக்.

உள்ளப் போங்க சார். உங்க ஃப்ரண்ட் உள்ளதான் இருக்கார். ஆமா, யாரு சார் அந்த மது? உள்ள வந்த நேரத்துல இருந்து சின்னக் குழந்தை மாதிரி அந்தப் பையன் மது மதுன்னு ஒரே புலம்பல் சார். பாவமா இருந்திச்சு... முதல் தடவை தண்ணியா?

ஆமா...

அதான... பார்த்தாலே தெரியிதே. பொண்ணு பேரைச் சொல்லி புலம்புனா முதல் தடவை தண்ணியாகத்தான் இருக்கும்... ஃப்ரண்ட்டை பத்திரமா பார்த்துக்கோங்க சார்... முதல் வேலையா டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போங்க. போதை தெளிய ஒரு நாள் ஆகும் போல... மதுன்னு பேச ஆரம்பிச்சார்னா தலையே வலிக்க ஆரம்பிக்குது சார்.

விவேக் தலையில் அடிக்காத குறையாக, எல்லாம் என் தலையெழுத்து... என்று கோபமாக புலம்பியபடி அந்த இடத்தைவிட்டு நகர்ந்து உள்ளே சென்றான்.

இருபது காவலர்கள் அந்த அறையில் இருந்தனர். ஆர்யா ஒரு ஓரத்தில் இருந்த பென்ச்சில் படுத்திருந்தான். டையை கையில் வைத்துகொண்டு சுற்றியபடியே அவனுக்கு மேலே சுழன்ற காற்றாடியைப் பார்த்து, என் மூக்கு மேல கைய வச்சி... என்று பேசிக் கொண்டிருந்தான் ஆர்யா.

விவேக் ஆர்யாவின் அருகே சென்று, டேய் எரும, போதையில வண்டிய எடுத்திட்டு நீ பாட்டுக்க கிளம்பிட்ட... என் உயிரே போயிடுச்சு மச்சி. என்று சொன்னவன் தன் மனோபலத்தை இழந்து கண்ணீர் வடித்தான். கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, குடிக்காத குடிக்காதன்னு சொன்னேனே டா. கேட்டியா? இவ்வளவு போதையில எப்படி டா இவ்வளவு தூரம் வண்டி ஓட்டின?? என்று அழுதுகொண்டே கேள்வி கேட்க,

டேய்... விவேக் வந்திட்டியா டா... என்னோட மூக்கு மேல...

தெரியும். இப்ப அதை விடுறியா இல்லையா? மது அப்படிச் சொன்னதை மறந்திடு ஆர்யா. அது ஒரு கெட்ட கனவு... என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே காவல்துறை அதிகாரி சங்கர், சார் கொஞ்சம் இங்க வாங்க. என்று விவேக்கை அழைத்தார்.

விவேக் வேகமாக சங்கரின் அருகே சென்று நின்றான்.

சார்... நீங்க தான் என்கூட ஃபோன்ல பேசுனீங்களா? என்று வார்த்தைகளில் மரியாதையை டன் டன்னாக நிரப்பிக்கொண்டு அதிகாரியிடம் கேட்டான் விவேக்.

ஆமா. நீங்க தான் விவேக்கா?

ஆமா சார். ஆர்யாவை கூட்டிட்டுப் போயிடலாமா சார்...

இன்னும் ஒரு மணி நேரத்துல நீங்க வரலைன்னா நாங்களே உங்க ஐ.டி கம்பெனி வாசல்ல அவனை விட்டுருப்போம்.

ஏன் சார்? என்ன ஆச்சு சார்?

பின்ன என்னங்க? என் மூக்கு மேல கைய வச்சின்னு ஆரம்பிச்சார்ன்னா முடிக்கவே மாட்டிக்கிறார். இங்க இருக்கிறவங்கல பாதி பேருக்கு தமிழ் தெரியாது. அதனால அவுங்க எல்லாரும் தப்பிச்சிட்டாங்க. மாட்டிக்கிட்டது என்னை மாதிரி நாலு பேர் மட்டும் தான். நான் - ஸ்டாப்பா பேசுறார்ங்க.

இவனைத் தேடுன கொஞ்ச நேரத்துல என் உயிரே போயிடுச்சு சார். பப்புல தண்ணியடிச்சிட்டு  வீட்டுக்கு வந்ததும் மௌனராகம் படம் பார்த்திட்டு ஒண்ணாதான் படுத்திருந்தோம் சார். நடு ராத்திரி எழுந்திருச்சு இதே மாதிரி புலம்புனான் சார்.

மது நோ சொல்லிட்டான்னு ஒரே புலம்பல்...

ஆமா சார். அப்புறம் நான் கண் அசந்த நேரமா பைக் எடுத்திட்டு கிளம்பிட்டான் சார்... நான் டாக்டர்கிட்ட போய் ஊசி போட்டப்பிறகுதான் சார் எனக்கே போதை தெளிஞ்சிருக்கு... அவனையும் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும் சார்.

ஓ...

ஒரு லவ் மேட்டர் சார். சின்ன பிரச்சனை தான் சார். சரியாகிடும். நான் கிளம்பவா சார். என்று விவேக் கேட்க,

ம்... அபராதம் கட்டிட்டு கிளம்புங்க.

சார். பத்தாயிரம் தான் கொண்டு வந்தேன். என்று விவேக் சொன்னபோது நான்காயிரம் வசூல் செய்ய நினைத்த அந்த காவல்துறை அதிகாரி பெருந்தன்மையாக,

பத்தாயிரம் போதும். தமிழ்ப்பசங்களா போயிட்டீங்க... அதனால அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் பரவாயில்லை. என்றார்.

சரி சார். அப்ப நாங்க கிளம்பலாமா சார்??

ம்... பைக்கை மட்டும் நாளைக்கு கோர்ட்ல இருந்து லீகலாக வாங்கிக்கோங்க. சரியா?.

கோர்ட்டா? அதுலாம்... கஷ்டமே சார்.- விவேக்.

அப்ப ஓசூர் 32 ஹைவே ரோட்ல ஒரு டோல் கேட் இருக்குல? அங்க வந்து நாளைக்கு பைக்கை எடுத்துக்கோங்க. வரும் போது... ஃபைன்னா...

வரும்போது ஒரு பத்தாயிரம் மட்டும் கொண்டு வர்றேன் சார்... என்கிட்ட அவ்வளவு தான் இருக்கு.

இப்போதும் நான்காயிரம் மட்டுமே கேட்க நினைத்த அந்த காவல்துறை அதிகாரி மனதின் சந்தோஷத்தை வெளிக்காட்டாமல்,

சரி... அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன். என்றார்.

பின்னர் விவேக் தான் அழைத்து வந்திருந்த கால் டாக்ஸியில் ஆர்யாவை ஏற்றிக்கொண்டு டாக்ஸி டிரைவரிடம்,கிளம்புப்பா.என்றான்.

டாக்ஸியின் மேல் பாகத்தில் மிஸ்டர் லவ் குரு பயங்கர யோசனையில் அமர்ந்திருந்தார். அவர் தீவிரமாக ஒரு விஷயத்தை தனது மனதில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார்.

மிஸ்டர் லவ் குரு ஆர்யாவின் வேதாளம் என்பதால் அவன் பின்னால் தொடர்ந்து கொண்டே இருந்தார்.

                                                     *  *  *


Meena
(@meena)
Estimable Member Moderator
Joined: 2 years ago
Posts: 189
01/07/2020 6:02 am  

டாக்ஸி கிளம்பும் போது அந்த டாக்ஸி டிரைவரிடம், சார்... டிரைவர் சார்... என்னோட மூக்கு மேல... என்னோட மூக்கு மேல விரலை வச்சி நோ... எனக்கு நீ வேணாம். அமெரிக்காதான் வேணும்னு சொல்லிட்டா டிரைவர் சார். ஒரு சினிமா படத்துல கார்த்திக் மூக்கு மேல ரேவதி விரல்ல வச்சி சொல்வாங்கல? அது மாதிரி என் மூக்கு மேல விரல்ல வச்சி மது சொன்னா சார். என்று தனது சொந்தக் கதையை சொல்ல ஆரம்பித்த ஆர்யா, தனது பெங்களூர் வீட்டின் வாசலுக்கு டாக்ஸி வந்து நின்ற பிறகும் நிறுத்தவே இல்லை.

வண்டியை பிரேக் பிடித்து நிறுத்தியதும் டாக்ஸி டிரைவர் விவேக்கிடம், சார்... நாம 60 கிலோமீட்டரை இரண்டு மணி நேரம் டிரைவ் பண்ணிட்டு வந்திருக்கோம் சார். இந்த ஸ்டியரிங்கை நான் தொட்ட நாள்ல இருந்து இது மாதிரி மெதுவா வண்டி ஓட்டினதே இல்ல சார். வண்டி இன்ஜினை ஸ்டார்ட் பண்ணும் போது, மது என்னோட மூக்கு மேலன்னு ஆரம்பிச்சார் சார். ஆனா... இப்ப வரை நிறுத்தல சார்... நேரா காது டாக்டர்கிட்டதான் போகணும். அதனால 1000 ருபீஸ் குடுங்க சார். என்றான் அழாத குறையாக.

விவேக் பல்லைக் கடித்துக்கொண்டு 1000 ரூபாயை டிரைவரிடம் கொடுத்ததும், சார்... யாரு சார் அந்த மது? ஏன் சார் இவரோட மூக்கு மேல அந்தம்மா கையை வைக்கணும்? என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு கிளம்பி விட்டான்.

யார் இந்த மது?

ஆர்யாவின் மூக்கு மேல் விரலை வைத்து நோ... எனக்கு நீ வேணாம். அமெரிக்காதான் வேணும்னு சொன்ன மது யாரு?

யார் இந்த மிஸ்டர் லவ் குரு?

யார் அந்த மாயாவி?

இந்த கேள்விகளுக்கு விடை தெரியவேண்டும் என்றால் நாம் மது- ஆர்யாவின் பள்ளிக்காலத்திற்குள் செல்ல வேண்டும். செல்வோமா?

                    *  *  *

             மது...

     மதுவின்   பள்ளிக்காலம்...

பாடப்புத்தகங்களின் பையை இரு தோள்களிலும் போட்டுக்கொண்டு சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டு வேகமாக வேன் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள் மதுமிதா. மதுமிதா என்னும் பெயர் அவளது பாடப்புத்தகங்களின் லேபிள்களில் மட்டுமே இருக்கும்.

மற்ற இடங்களில் எல்லாம் மது தான். மது மட்டும்தான் அவளது அடையாளம். அவள் எப்படி பெற்றோர்களின் சொல்பேச்சு கேட்பதில் அரைகுறையோ அப்படித்தான் அவளது பாடநூல்கள் இருந்த பொதிமூட்டையும் அவள் சொல்பேச்சை அரைகுறையாகக் கேட்டது. ஒரு தோளில் மட்டும்தான் இருப்பேன் என்று அடம்செய்து வழிநெடுகிலும் மற்றொரு தோளில் இருந்து சரிந்து கொண்டே வந்தது அந்தப் பொதிமூட்டை. பள்ளி வேன் வந்து நின்றதும் தடபுடலாக தனது சகல சொத்துக்களுடன் அதில் ஏறிக்கொண்டாள் மது. அவளது அவசரம் அவளுக்கு. முன் சீட்டில் உட்கார்ந்தவள் பின்னால் திரும்பி தனது அரட்டையடிக்கும் தோழிகள் கூட்டத்தின் இருப்பிடத்தைக் குறித்துக்கொண்டாள். ஆனால் பின் சீட்டில் பள்ளியின் கிளார்க் அக்காவைப் பார்த்ததும் தனது கூட்டத்தில் சென்று ஜோதியாய் கலப்பதை சிறிதுநேரம் ஒத்திவைத்தாள் மது.

பள்ளி வாகனம் அடுத்த நிறுத்தத்தில் நின்ற போது வேகமாக பின்வரிசையில் அமர்ந்திருந்த கிளார்க் விஷாலியின் அருகே போய் உட்கார்ந்து கொண்டாள் .

அக்கா நேத்து சொன்ன கதைய பாதியில விட்டுட்டீங்களே? என்று விஷாலியை தனது பை மூட்டைகளுடன் இடித்துக்கொண்டு அமர்ந்தபடியே கேட்டாள் மது.

எது? எந்தக் கதை?- விஷாலி.

உங்களோட ஃப்ரண்ட் லவ் கதை. அவுங்க டென்த் ஃஸ்டான்டர்ட் லவ் கதை..

ஓ... என்றவர் பலவிஷயங்கள் பேசி ரம்பம் போட்டுவிட்டு முன்தினம் பாதியில் நிறுத்தியிருந்த கதையை ஆரம்பித்தார், என்னோட ஃப்ரண்ட் ஒருத்தி ஸ்கூல் படிக்கும்போதே ஒரு பையனை லவ் பண்ணா.. என்னோடது கேர்ல்ஸ் ஸ்கூல். அவ லவ் பண்ண பையன் அவ வீட்டுக்கு எதிர் வீடு. அவ மேட்டர் எப்போ எங்களுக்கு தெரிஞ்சதோ அப்போதிலிருந்து நாங்க அவளை கௌதம்ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டோம்... என்ன புரியலையா?

இது என்ன அசட்டுத்தனமான கேள்வி? ப்ளஸ் ஒன் படிக்கும் பெண்ணுக்கு இது புரியாமல் இருக்குமா? என்று மனதில் நினைத்த மது, அதைச் சொல்லாமல், கௌதம்தான் அவுங்க லவ்வரா அக்கா? என்று அப்பாவி போல கேட்க, 

ம். ஆமா மது... ஆனா, ஸ்கூல் காம்பஸ்குள்ள மட்டும்தான் அப்படிக் கூப்பிடுவோம். இட்ஸ் ஃபன் யு நோ? என்றவர் சிக்னலில் பள்ளி வாகனம் பிரேக் போட்டு நின்றபோது தனது பேச்சை நிறுத்தினார். இரண்டு நிமிடங்கள் நின்ற வாகனம் அதற்கடுத்த நிமிடத்தில் நகர ஆரம்பித்தது. நின்றுவிட்ட இருவரது பேச்சுகளும் நகர ஆரம்பித்தன.

நாங்க எல்லோரும் சேர்ந்து அரட்டையடிக்கும் போது அவ மட்டும் தனியாக சில நேரம் சிரிப்பா. நான் அதை கவனிச்சிட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேன். ஆனா மத்தவங்ககிட்ட மாட்டிட்டானா அவளை அன்னிக்கு கேலிபேசியே தொலைச்சிக்கட்டிடுவாங்க. பயங்கரமா கலாய்ச்சிடுவாங்க. அப்பயெல்லாம் கொஞ்சம் பொறாமையாகக்கூட இருக்கும். அவளே எப்போதும் எங்க கூட்டத்தோட மெயின் டாப்பிக்கா இருந்ததால ரொம்பவே பொறாமையா இருக்கும் தெரியுமா? ஆனா அவ ஒரு நாள் ஸ்கூலுக்கு அழுது வீங்குன முகமா வந்தப்ப பொறாமை போய் பயம் வந்திடுச்சு.

ஏன்? அவுங்க வீட்டுல தெரிஞ்சிடுச்சா? செம அடியோ?

இல்ல.. பிரச்சனை அது இல்ல..

வேற??

ஒரு நாள் அவ என்கிட்ட வந்து விஷாலி அவன் என்கூட பேச மாட்டிக்கிறான். இனி ஜென்மத்துக்கும் என்னை அவன் பார்க்கவே மாட்டானாம்ன்னு சொல்லி அழுதப்ப காதல் பற்றி ரொம்ப ரொம்ப பயம் வந்திடுச்சு. அந்தப் பையன் அவளை டம்ப் (dump) பண்ணிட்டானாம்... அந்த இங்கிலிஷ் வார்த்தைக்கு எனக்கு அன்னிக்குதான் அர்த்தம் தெரிந்தது மது. அவ ப்ளஸ் ஒன்ல ஃபெயில் ஆகி, அதன்பிறகு பேரன்ட்ஸ் அவளை ஹாஸ்டல் சேர்த்து, பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. அதான் நான் லவ் மேரேஜ் பண்ணாம அரேன்ஜ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். உன்னோட ஃப்ரண்ட்ஸ் நிறைய பேர் லவ் பண்றதா திவ்யா மிஸ் சொன்னாங்க. திவ்யா மிஸ்தான உங்களுக்கு மேக்ஸ் எடுக்குறாங்க? என்கிட்ட ரொம்ப கம்ப்ளைன் பண்ணாங்க. ஜாக்கிரதை மது... பிரன்ஸிகிட்ட நியூஸ் போச்சுன்னா பத்து நாள் சஸ்பென்ட் தான். நீங்க டுவல்த்துல நல்ல மார்க் வாங்கணும் என்பதால் சார் இந்த விஷயத்துல ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருக்கார்.

                   *   *   *

 

ஏய் நம்ம திவ்யா மிஸ் நிறைய பேர் லவ் மேட்டரை கண்டுபிடிச்சிட்டாங்களாம்.- மது .

ஸோ வாட்? உனக்கு இப்ப தான் தெரியுமா? என்றாள் மதுவின் தோழி ஹரினி.

உனக்குத் தெரியுமா?

ம்... எப்பவோ.

என்கிட்ட ஏன் சொல்லலை? எத்தனை பேர் மாட்டுவாங்க தெரியுமா? அத்தனை பேரையும் சஸ்பன்ட் பண்ணப்போறாங்களாம். உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. என்னோட வீட்டுல தெரிஞ்சது அவ்வளவுதான். நான் தப்பே பண்ணாட்டியும் அம்மாக்கு தெரிஞ்சா என்னோட பேட்மிட்டன் கிளாஸ்தான் முதல்ல கட் ஆகும். ச்ச... என்னோட டைம்மே சரியில்ல... திவ்யா மிஸ் நாளைக்கே ரிப்போர்ட் பண்ணாலும் பண்ணலாம்.

திவ்யா மிஸ் ரிப்போர்ட் பண்ண மாட்டாங்கப்பா மது. யூ டோன்ட் வொரி அட் ஆல்.

ஹு செட் ஸோ? - மது.

என்னை நம்பு. திவ்யா மிஸ் மூச்சுவிட மாட்டாங்க..

எப்படிப்பா சொல்ற?

உனக்கு அவுங்க நடத்துற மேக்ஸ் புரியுமா?

புரியிற மாதிரிதான் இருக்கும்..

கரெக்ட்டா சொல்லு. புரியுமா புரியாதா?

புரியிற மாதிரி புரியாது..

எனக்கு அவுங்க மேக்ஸ் நடத்துனா.. புரியாத மாதிரிகூடப் புரியாது. what is “X” what is “X” ன்னு காட்டுக் கத்து கத்துனா எல்லோருக்கும் புரிஞ்சிடுமா? நம்ம பசங்க பாதி பேர் லவ் பண்ண ஆரம்பிச்சதே அந்த பி.டி.எஸ் மேக்ஸ் டியூஷன் சென்டர்லதான். அதான் நம்பிக்கையா சொல்றேன் அவுங்க பிரின்ஸிகிட்ட ரிப்போர்ட் பண்ண மாட்டாங்க. திவ்யா மிஸ் பிரின்சிபல்கிட்ட போனா.. எப்ப, எப்படி பசங்களோட பொண்ணுங்களுக்கு கான்டாக்ட் அதிகமாச்சு?ன்னு கேள்வி கேட்பார். ஸ்கூல்ல நான் நடத்தும் மேக்ஸ் புரியாம பசங்க டியூஷன் போனாங்க. பசங்க மேக்ஸ் டியூஷன் போனப்பதான் கான்டாக்ட்ஸ் அதிகமாகி லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என்று பிரின்சிபல்கிட்ட திவ்யா மிஸ் சொல்வாங்கன்னு நீ நினைக்கிற? நோ சான்ஸ். ஆனா மது... எனக்கு திவ்யா மிஸ் பத்தியெல்லாம் கவலையே இல்ல... என்னோட பயம் எல்லாம் வேற ஒண்ணைப் பத்திதான்.

ஹரினி ஒரு விஷயத்திற்கு பயந்தால் அது விஷயமல்ல. அதற்குப் பெயர் பூதம். டம்மிபூதம் இல்லை, நிஜமான பூதம் என்று அர்த்தம். ஹரினியின் பயத்தை புரிந்து கொண்ட மது அவளிடம், 

வேற எதைப் பத்தி கவலைப்படுற மேடம்? என்று தனது பயத்தை மறைத்துக் கேட்க,

இன்னைக்கு வெள்ளிக்கிழமை... இன்னும் இரண்டு நாள்ல திங்கட்கிழமை வருது. என்றாள் ஹரினி.

ஆமா. பூமி ஒழுங்காதான் சுத்திட்டு இருக்கு அதனால இன்னும் இரண்டு நாள்ல திங்கட்கிழமை தான வருது? என்று மது கேள்வி கேட்க,

ஜோக் பண்ணாத மது. திங்கட்கிழமை தான் வேலன்டைன்ஸ் டே மது. ரக்ஷக் தருண் உனக்கு கார்ட் கொடுத்திடுவானோன்னு தான் எனக்கு பயமா இருக்கு. ஐ லைக் ஹிம் யு நோ... என்று ஹரினியிடமிருந்து பதில் வந்தது.

பட் ஐ ஹேட் பாய்ஸ் யூ நோ. எங்க வீட்டுல இன்னும் ஐஞ்சு வருஷத்துக்கு நாங்க லவ் என்ற வார்த்தையை யூஸ் பண்ணவே கூடாது தெரியுமா? என்று மது சிரிக்காமல் படு சீரியஸாகச் சொன்னாலும் பூதம் பூதாகரமாக அவள் முன்னே நின்று ஹி... ஹி என்று சிரித்தது.

                     *  *  *

 

அம்மா ப்ளூடூத் ஆன் பண்ணியாச்சு.. நெட்ஃப்லிக்ஸ்ல எந்தப் படம்னு நானே செலக்ட் பண்ணிடவா?- என்று வரவேற்பறையில் இருந்து கத்தியபடியே மதுவின் தங்கை ஜான்வி, அடுக்களையில் சமையல் செய்யும் அன்னை வித்யாவிடம் கேட்டாள்.

ஏய் லூசு, அம்மாகிட்ட எதுக்கு கேட்குற? அம்மா வர்றதுக்கு முன்னே அலியா பட் படத்தைப் போடு. அவுங்க வந்தாங்கன்னா கமல் படத்தைப் போட்டுருவாங்க, ப்ளீஸ் ஜான்வி. கமல் தவிர அந்தப் படத்தில் நடிச்ச யாரையும் இதுக்கு முன்னே எந்தப்படத்திலயும் நான் பார்த்தது இல்ல. ஹீரோவை மட்டும் தெரிஞ்சிக்கிட்டு எப்படி படம் பார்க்கிறது?? நீயே சொல்லுப்பா... ஜானு... ஹீரோயின் யாருன்னே தெரியாம அந்த எயிட்டீஸ் (80’s) ஹீரோயினை எப்படிப்பா கண்ணக்கொண்டு பார்க்கிறது? நல்ல படங்களும் பார்க்கணும்தான்... அம்மா சொல்ற மாதிரி we should also watch good old movies... but... கமலுக்கு இப்ப என்ன வயசு?? அவருக்கு அறுபது வயசுப்பா... எனக்கு இப்ப என்ன வயசு?? எனக்கு பதினாறு வயசுப்பா... ஏதாவது மேட்ச் ஆகுதா? ஷாரூக்கான் பையன் நடிச்சப் படத்தை பத்து தடவை பார்க்கிற வயசு நமக்கு ஜானு. நாம படம் பார்க்கிறதே இந்த சாட்டர்டே மட்டும்தான், அதையும் எதுக்கு கெடுக்கிற ஜானு. நீ கத்தாம இருந்தா அம்மா ஒரு அரை மணி நேரம் லேட்டா வருவாங்கல? எதுக்கு கத்துற?

அம்மா நல்ல படமாதான் போடுவாங்கப்பா மது.

ஜானு... என்னோட கண்ணைப்பாரு..

மது... ஏன் இவ்வளவு டென்ஷன்??

ஜானு... ஐ செட் யு டு லுக் அட் மை ஐய்ஸ்...

ஜானு மதுவின் கட்டளைக்கு உடனே கீழ்ப்படிந்து மதுவின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள்.

ஷாரூக்கான் பையன் நடிச்சப் படத்தை பத்து தடவை பார்க்கிற வயசு நமக்கு ஜானு. இதை நீ மனசுல மனப்பாடமா வச்சிக்கணும். அம்மா நம்மள பிரைன் வாஷ் பண்ணப் பார்க்கிறாங்க ஜானு. நீ மசிஞ்சிடாத..

மது...

ஸே யெஸ்...

ஓகே... ஓகே யெஸ்... சினிமா விஷயத்துல நம்ம சாய்ஸ்தான்.- ஜான்வி.

இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்க்குறேன்...

சினிமா விஷயத்துல உன் சாய்ஸ் தான் மது. இப்ப சரியா சொன்னேன்னா?

200 பெர்சென்ட் ஜானு... இப்ப அலியா பட் படத்தைப்போடு ஜானு... சீக்கிரம்.

சரி... பொறுமையா இருப்பா. அலியா பட் படம் போடுறேன். என்ற ஜானு ரிமோட்டின் உதவியுடன் அலியா பட் படத்தை ஓடவிட்டாள்.

 படத்துல அலியா எத்தன லிப்லாக் பண்றா மது? பத்தா? பதினைந்தா? என்று தமக்கையிடம் சந்தேகமாய் வினவினாள் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜான்வி.

அவ்வளவு கம்மியாவா? - மது.

ஏய், நீ ரொம்ப மோசம்ப்பா..- ஜான்வி.

ஹி... ஹி... சும்மாதான் ஜானு. எனக்கே எத்தனை லிப்லாக்னு தெரியாது. அதைத்தான் நானும் பார்க்கணும்னு நினைச்சேன். மம்மி வர்றதுக்குள்ள ப்ளே பண்ணு ஜானு.

பொறு மது. சப்டைட்டில் செலக்ட் பண்ணிட்டு படத்தைப் ப்ளே பண்றேன்.

எதுக்கு சப்டைட்டில்? ஹிந்தி படம் எல்லாமே பாதி இங்கிலிஷ்லதான பேசுறாங்க. சப்டைட்டிலாம் வேணாம் ஜானு. படத்தை சீக்கிரம் ப்ளே பண்ணு. என்று மது சொல்லிக் கொண்டிருந்தபோது அவளது அன்னை அவள் அருகே வந்து அமர்ந்திருந்தார். அவள் அமர்ந்திருந்த சோபாவில் அவரும் கால் நீட்டி அமர்ந்துகொண்டார்.

அதிகாரமாக ரிமோட்டைக் கேட்டு அவர் கை நீட்டியபோது மதுவும் ஜான்வியும் சட்டெனக் கீழ்ப்படிந்து ரிமோட்டைக் கொடுத்தனர். ஹச். என்றுகூட இருவரும் சத்தம் எழுப்பவில்லை.

மது தொலைக்காட்சிப் பெட்டியின் திரையையே பார்க்க, ஜான்வி ரிமோட்டின் அசைவைப் பார்க்க, இருவரின் அன்னை வித்யா ஒரு அற்புதமான தமிழ்ப்படத்தை தேர்ந்தெடுத்து ஓடவிட்டார்.

ஆனால் படத்தின் டைட்டில் கார்ட் ஆரம்பித்த நொடியில் இருந்து மதுவின் இதயம் ஹாஃப்பாயிலாக மாறிவிட்டிருந்தது. பாதி வெந்து வேகாத நிலைக்குச் சென்றுவிட்டது. ஜான்வி ஜென் நிலையில் இருந்தாள். எல்லாம் புரிந்தும் புரியாத மனநிலை. கைமீறிப்போன விஷயத்தில் ஏற்படும் தெளிவு. இரு குமரிகளும் சப்தமின்றி பேச்சின்றி அமைதி நிலைக்குச் சென்றுவிட்டனர்.

இரு பெண்டிரும் ஊமையாய் இருக்க...  திரையில் பளிச்சிட்ட உருவம் மட்டும் நமோன் நம.. நமோன் நம. என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தார்.

(அந்த நபரை உங்களுக்குத் தெரிகிறதா? 1960ல் நீங்கள் பிறந்திருந்தால் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவீர்கள்.. இல்லையென்றால் கொஞ்சம் கஷ்டம் தான்...)

ஏனெனில் திரையில் திரையிடப்பட்ட படம் 1957ம் ஆண்டு வெளிவந்த மாயாபஜார் திரைப்படம். அதில் நமோன் நம... நமோன் நம என்று கர்ஜனையாய் கூறி அடிக்கடி சிரித்தவர் கடோர்கஜன்...

கலர் கலராக உடையணிந்து ஒல்லி அலியா பட்டின் லிப்லாக் பார்க்க நினைத்தவர்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் உடைகள் மங்கித் தெரிய... போட்டிருந்த நகைகள் டால்லடிக்க... முழங்கை, விரல்கள், கண்கள், கன்னங்கள் மட்டுமே தெரியும்படி உடையணிந்த குண்டுப் பெண்களைப் பார்த்தது பார்த்தபடி உறைந்து போய் அமர்ந்திருந்தனர். 

 

This post was modified 3 days ago by Meena

ReplyQuoteMeena
(@meena)
Estimable Member Moderator
Joined: 2 years ago
Posts: 189
01/07/2020 6:04 am  

     2

மது... அம்மாகிட்ட குட் இம்ப்ரூவ்மென்ட். எப்பவுமே நமக்கு ஹீரோயின்தான் தெரியாது. இப்ப ஹீரோகூட தெரியல. இந்த ஹீரோவுக்கு கமல் எவ்வளவோ பெட்டர்மா.. அவர் படத்துலயாவது கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸாவது இருக்கும். ஆனா இந்தப் படத்துல ஹீரோவும் ஹீரோயினும் லைட் யியர் (light year) டிஸ்டன்ஸ்ல நிற்கிறாங்கப்பா... அதுதான் என்னால தாங்க முடியல... கொஞ்சம் பக்கத்துல பக்கத்துல நின்னுருக்கலாம். ஆனா... இன்னொரு விஷயம்.. இந்தப் படத்தோட ஹீரோக்கு இப்ப ஒரு 105 வயசு இருக்காது?? கமல் இஸ் ஜஸ்ட் சிக்ஸ்டி யு நோ... இந்தப் படத்தோட ஹீரோக்கு கமல் 100டைம்ஸ் பெட்டர் மது.- ஜான்வி மதுவின் காதினில்.

மது ஒரு வார்த்தைகூட பேசவில்லை. துக்கம் அவளது தொண்டையை அடைத்தது. ஆனால் ஜான்வி விடவில்லையே...

எயிட்டீஸ் ஹீரோயின்ஸை திட்டுனீல? அதான் கடவுள் உனக்கு பனிஷ்மென்ட் கொடுத்திட்டார்.

மது ஜான்வியைப் பார்த்து முறைத்தபோதுகூட ஜான்வி அசரவில்லையே..

ஆமா மது அப்பவே கேட்கணும்னு நினைச்சேன்... இந்த ஹீரோ கையில ஏதோ வெப்பன் வச்சிருக்காரே... அது என்னப்பா? என்று கடோர்கஜன் கையில் இருந்த கஜாயுதத்தைப் பார்த்து ஜான்வி அக்கறையாகக் கேள்வி கேட்க,

வேணா.. நான் சரி கடுப்புல இருக்கேன் ஜானு. போயிடு. அன்ட் ஷட் அப். என்றாள் மது.

அதன்பிறகு ஜான்வி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பேசவேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றிய அனைவரும் பக்கம் பக்கமாக வசனம் பேசினார்கள். மூச்சு வாங்க மூச்சு வாங்க வசனம் பேசினார்கள். படம் முழுதும் நகைச்சுவையாக இருந்தபோதும் அலியாபட்டைப் பார்க்க முடியாத கோபத்தில் மதுவினால் சிரிக்க முடியவில்லை.

சிறிது நேரம் உம்மென்று இருந்த ஜான்வி படத்தின் காட்சிகள் நகர நகர படத்தோடு ஒன்றி சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அந்தப் படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியை குரங்காக நினைத்து வில்லன் மகன் பயப்படும்போது ஜான்வி சோபாவில் புரண்டு புரண்டு சிரித்தாள். அதுவரை அந்தப் படத்தை தனது அக்கௌன்ட்டில் வைத்திருந்த நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் சானல்காரன் மட்டும்தான் மதுவின் எதிரியாக இருந்தான்.

ஆனால் எப்போது ஜான்வி சோபாவில் சிரித்துப் புரள ஆரம்பித்தாளோ அப்போதே அவளும் அவளது எதிரியாகிப்போனாள். அவள் சிரித்து ரசித்துப் பார்ப்பதால் அடுத்த வாரமும் இதே போல ஒரு ப்ளாக் அன்ட் ஒயிட் படத்தை அம்மா தேர்ந்தெடுத்து விடுவாரே... அந்தக் காரணத்தால் மதுவிற்கு தங்கை மீது கோபம் கோபமாய் வந்தது.

அப்போது மதுவிற்குப் பொங்கிய கோபம் இரவில் இரண்டு மணிக்கு இரண்டு முறையும் நான்கு மணிக்கு ஒரு முறையும் பேய் அலறலாய் அலாரம் வைத்து ஜான்வியை  மூன்று நான்கு முறை எழுப்பிவிட்ட பிறகுதான் வடிந்தது. அதன்பிறகுதான் மதுவின் கண்கள் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றன.

மறுநாள் ஞாயிறு. அன்றைய இரவிலும் மது தனது அலாரம் சூழ்ச்சிகளை செய்யாமல் விடவில்லை. சனியன்று மதுவின் மேல் சந்தேகப்படாத ஜான்வி ஞாயிறு அன்று சிறியதாய் சந்தேகப்பட ஆரம்பித்தாள்.

                    *   *   *

 

மது இன்னும் கிளம்பலையா? மணி எட்டு ஆச்சு.- மதுவின் அன்னையின் குரல் அவரது படுக்கையறையில் இருந்து வந்தது.

நான் கிளம்பிட்டேன்மா..- தனது அறையில் இருந்து மது தனது அன்னையிடம்.

ஜான்வி வர்றியா இல்லையா? நைட்லாம் தூங்காம முழிச்சி உட்கார்ந்து உட்கார்ந்து பாட்டு கேட்க வேண்டியது.. காலையில ஸ்கூலுக்கு லேட்டா கிளம்ப வேண்டியது. - மது ஜான்வியிடம்.

மதூ... - ஜான்வி.

என்னடா ஜானு? என்று இரவு உடையுடன் தங்களது அறையில் கோபமாக நின்ற ஜான்வியைப் பார்த்து மது அன்பாய் கேட்டாள். 

நைட் எதுக்கு ரெண்டு மூனு அலாரம் வச்ச மது?

எனக்கு ஃபிசிக்ஸ் டெஸ்ட் இருந்திச்சிப்பா.

வேணா... பொய் சொல்லாத. நீ எழுந்திரிக்கவே இல்ல. காதுல ஹெட்ஃபோன் வச்சிருந்த. நான் தான் எழுந்திரிச்சி பேய் மாதிரி நைட் முழிச்சிட்டு இருந்தேன்.

என்ன, ரெண்டு பேரும் கிளம்பலயா? என்று அன்னை வித்யாவின் குரல் வரவேற்பறையிலிருந்து வந்தது.

நான் எப்பவோ ரெடி ஜானுதாம்மா லேட்.. என்று அவர்கள் அறையில் இருந்தபடியே குரல் கொடுத்தாள் மது.

இல்லமா... நானும் ரெடி. என்றபடியே அரைகுறையாய் குளித்து அரைகுறையாய் பல்தேய்த்து அரைகுறையாய் பவுடர் போட்டுக்கொண்டு வாசலுக்கு வந்து நின்றாள் ஜான்வி.

இந்தா ஸ்நாக்ஸ். மறந்திடாத மது. - வித்யா.

தாங்கம்மா. என்று தனது ஸ்நாக்ஸ் டப்பாவை கைநீட்டி வாங்கிக்கொண்ட மது, நீங்க கிளம்பல? என்று  தனது அன்னையிடம் கேட்டபோது,

இன்னும் டென் மினிட்ஸ்டா. ஹெல்மெட் தேடுறேன். நீ போ, உனக்கு ஸ்கூல் வேன் வந்திடும். என்றார் அவர்.

வழக்கமாக இருக்கும் உற்சாகம் அன்று துளிகூட மதுவிடம் இல்லை. ஏனென்றால் அன்று திங்கட்கிழமை.

ரக்ஷக் தருணின் பார்வையே இரண்டு மூன்று நாட்களாக சரியில்லையே? ஹரினி சொன்னது போல இன்று அவன் அவளிடம் கிரீட்டிங் கார்ட் நீட்டிவிட்டால்? அம்மாவிடம் விஷயம் சென்றுவிட்டால்... பேட்மிட்டன் கிளாஸ் நின்றுபோய்விடும் என்பது உறுதி. படுபாவி பேட்மிட்டன் சாம்பியன் ஆயிற்றே... அவன் இன்டோர் கோர்ட்டில் பலியாகக் கிடக்கும் காரணத்தால் விஷயம் வெளியே வந்தால் கண்டிப்பாக அம்மா இனி அவளை பேட்மிட்டன் வகுப்புகளுக்கு அனுப்ப மாட்டார். ஜோனல் மேட்ச் வரும் நேரம் பார்த்து இந்தப் பிரச்சனையா? என்று கோபம் வந்தது மதுவிற்கு.

சோம்பேறித்தனமாக தனது பொதி மூட்டையை எடுத்துக்கொண்டு வேன் நிற்கும் இடத்திற்கு நகர்ந்தாள் மது. ஜான்வி எப்போதும் போல மதுவின் நேற்றைய இரவு நேர அலாரம் சூழ்ச்சிகளை மறந்துவிட்டு அப்பாவியாய் மதுவின் சாப்பாட்டுப் பையையும் சேர்த்து எடுத்துக்கொண்டு அவளுடன் படிக்கட்டுகளைக் கடந்தாள்.

நானும் கிளம்பிட்டேன் மது. என்கூட வர்றீங்களா?  என்று அன்னை வித்யா கேட்டதும் ஜான்விக்கு யோசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல்,

இல்லம்மா, பேட்மிட்டன் பேக், ஸ்போர்ட்ஸ் யூனிஃபார்ம் பேக் வேற இருக்கு. வண்டியில இடம் இருக்காது. நாங்க வேன்ல போறோம். என்றாள் மது.

அம்மாவின் ஸ்கூட்டியில் அந்த இதமான மார்கழிக் குளிரில் ஜில்லென்றக் காற்று முகத்தில் அறைய, அம்மாவுடன் சின்னதாய் அரட்டையடித்துக் கொண்டே சென்றிட ஆசைதான் மதுவிற்கும். ஆனால் இப்போதெல்லாம் அன்னையுடன் பேசுவதைவிட ஹரினியுடன் ரகசிய பாஷைகள் பேசத்தான் மிகவும் பிடிக்கிறது.

 இந்த ஜானு லூசு அதைக் கெடுத்திடப்போகுது... என்று மனம் எச்சரிக்கை செய்ய ஜான்விக்கு முன்பாக அன்னையிடம் மறுப்பாய் பதில் தந்தாள் மது.

வேனில் போனால்தானே ஊர் கதைகள் பேசலாம். அதனால்தான் அவள் அன்னையிடம் மறுத்தது.

அதற்குமேல் மதுவின் அன்னை அவளை வற்புறுத்தவில்லை. தனது ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். ஆனால் மது கீழ்த்தளத்திற்கு வந்திருந்தபோது அவளது தந்தை அர்ஜுன் அவர்களைத் தொடர்ந்து வந்து அவளை அழைத்தார்.

மது.- மதுவின் தந்தை அர்ஜுன்.

அப்பா.- மது.

என்கூட கார்ல வந்திடுறீங்களா? என்றார் அர்ஜுன் தனது கார் சாவியைக் காட்டியபடி.

அப்பாவுடன் சென்றால் அந்த அதிகாலைக் குளிரில், காஃபி டேயில் ஒரு கூல் காபி கிடைக்கும். ஒரு கூல் காப்பிக்காக சரி என்று சொல்லத் தோன்றிய ஆவலை உடனே அடக்கி, இல்லப்பா ஹரினி எனக்காக ஸ்டாப்ல வெயிட் பண்ணுவா. நான் வேன்லயே போறேனே... என்றாள் மது.

ரகசிய பாஷைகள் இப்போதும் வென்றுவிட்டன.

ஓகே தென். பை. என்று சொன்னவர் மதுவின் கைகளை இரண்டு நிமிடங்கள் அழுந்தப் பற்றி விடுவித்து விட்டு, ஜான்வியிடம் ஒரு பை சொல்லிவிட்டுக் கிளம்பினார்.                            

            *   *   *

மதுவும் ஜான்வியும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். மது பதினோராம் வகுப்பு மாணவி. ஜான்வி ஒன்பதாம் வகுப்பு மாணவி.

மணி இப்போது 12.30. மதிய வேளை.

அன்று திங்கட் கிழமை.

ஆம். மதுவும் ஹரினியும் பயந்துகொண்டிருந்த அதே திங்கட்கிழமை தான்.

இன்னும் பத்து நிமிடத்தில் மதிய உணவு வேளைக்கு மணி அடித்துவிடுவார்கள். மதிய உணவை அந்த பெரிய திடலில் வைத்துதான் மாணவர்கள் சாப்பிடுவார்கள். கம்ப்யூட்டர் லாப்பில் ப்ராக்டிகல் வகுப்பை முடித்துவிட்டு ஹரினியும் மதுவும் மெல்ல நடைபாதையில் நடந்து வந்துகொண்டிருந்தனர். சாவதானமாக இருவரும் வகுப்பறை வாசலுக்கு வந்தார்கள். அனைவரது சாப்பாட்டுப் பைகளும் வகுப்பறையின் வெளியே இருக்கும் ஹுக்குகளில் தொங்க விடப்பட்டிருக்கும்.

மதிய உணவு வேளைக்கான பெல் அடித்தது. ஆனால் சாப்பாட்டுக் கூடையை எடுக்கவே பயமாக இருந்தது இருவருக்கும். ஏன் என்றால் இன்று வேலன்டைன்ஸ் டே. மதுவிற்கு தனது சாப்பாட்டுப் பையில் தனது வகுப்பு மாணவன் எவனும் கார்ட் வைத்திருப்பானோ என்ற பயம். ஹரினிக்கு தனக்கு யாரும் கார்ட் வைக்காமல் போய்விடுவார்களோ என்று பயம். இருவரும் அவரவர் பயத்தை மறைத்து உள்ளுக்குள் மென்று விழுங்கி பைகளை எடுத்துக்கொண்டு கிரவுன்டிற்கு வந்தனர்.

          *   *   *

                        

                    3

ஹப்பாடா.. பயந்த மாதிரி எந்த லவ் லெட்டரும் வரலப்பா... லன்ச் பேக்ல லெட்டர் இல்லைன்னதும் தான் உயிரே வந்துச்சு. - மது.

ஆமா மது எனக்கும் உன் லன்ச் பேக் பார்த்தபிறகுதான் உயிரே வந்திச்சு. நான் பயந்த மாதிரி உனக்கு எந்த லவ் லெட்டரும் வரல. எனக்கு யாரும் கார்ட் கொடுக்காட்டினாக்கூட பரவாயில்லப்பா.- என்று கூறி கண்ணடித்தாள் ஹரினி .

அட லூசு... ரக்ஷக்தருண் பைத்தியம் உனக்கு முத்திடுச்சு.- மது.

ஹி இஸ் கியூட்பா.

உன்னைத் திருத்தவே முடியாது. கம்ப்யூட்டர் லேப்ல ப்ரோகிராம்க்கு அவுட்புட் வந்ததா?

நான் வான்னு கூப்பிட்டேன். அது வர மாட்டேன்னு சொல்லிடுச்சுப்பா..

ஏய்...

அட நீ வேற... ப்ளஸ் ஒன்ல யாரும் படிக்கக்கூடாது தெரியுமோ. ஜாலியா சுத்தணும். ப்ளஸ் டூல மாடு மாதிரி... இல்ல இல்ல என்னோட அண்ணன் பைக் மாதிரி உழைச்சி உழைச்சி ஓடாகத் தேயணும்... இந்த ஜி.கேகூட உனக்கு இல்ல... ப்ரோகிராமுக்கு அவுட்புட் வரலைன்னு கவலைப்படுற.

ப்ச்... சொல்லு ஹரினி.. அவுட்புட் வந்ததா, இல்லையா?

என்னோட ப்ரோகிராமை எக்சிகியூட் பண்ணதும் கம்ப்யூட்டர் டென் மினிட்ஸ் புத்தரோட டிசைப்பிள் ஆகிடுச்சுப்பா... ஆமாம்ப்பா... சுற்றம் மறந்து சொந்தம் பந்தம் மறந்து தியான நிலைக்குப் போன புத்தர் மாதிரி என்னோட கம்ப்யூட்டரும் சுற்றம் மறந்து தியானம் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அமைதியா ஷட் டௌன் ஆகிடுச்சு.

ஹா... ஹா... எத்தினி ஃபார் லூப்(For Loop) முடிக்காமல் விட்ட?

யாருக்குத் தெரியும்?? ஆனா போன தடவைக்கு இந்த தடவை பெட்டர்..

அப்படியா? என்று கேட்ட மது அடுத்த பூமராங்கை எதிர்பார்த்தாள்.

ஆமாம்பா, போன தடவை நித்தியானந்தா நிலைக்கு போயிடுச்சு..

ஹா... ஹா... எப்படி?

ஸ்கிரின்ல பத்து நிமிஷம் அவுட்புட் non-stopஆக வந்துச்சு. கம்ப்யூட்டர் ஸ்கிரீன் நித்தியானந்தா மாதிரி, மைக்கேல் ஜாக்சன் மாதிரி டான்ஸ் ஆடுச்சுப்பா. திரும்ப ஒரு தடவை ப்ரோகிராமை ரன் பண்ணிக்காட்டட்டுமா சார்? ன்னு கேட்டதுக்கு நம்ம கம்ப்யூட்டர் சாரே பயந்து, no no just one time is enough ன்னு சொல்லிட்டாரு தெரியுமா?

இருவரும் கேலி பேசி நகைத்து சாப்பாட்டு வேலையை முடித்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்றபோது அங்கே நான்கு ஆசிரியர்கள் இருந்தார்கள்.

ஏய் இப்ப ஃபிசிக்ஸ் பீரியட் தான? - மது .

ஆமாப்பா.. - ஹரினி.

எதுக்கு நம்ம கிளாஸ்ல நாலு டீச்சர்ஸ் இருக்காங்க? ஏதாவது பிரச்சனையா இருக்குமோ? டீச்சர்ஸ் இல்லாத நேரத்துல பசங்க கத்தி கித்தி ரகளை பண்ணிட்டாங்களா? மொத்த கிளாஸும் கிரவுன்டுல ஓடணுமா? அப்படினாலும் நாலு டீச்சர்ஸ் எதுக்கு வந்திருக்காங்க?

நல்லவேளை நாலு பேருல கெமிஸ்டிரி மிஸ் இல்லைன்னு நினைச்சுக்கோ.

ஆமா... ஆமா நீ சொல்றதும் சரிதான். நல்லவேளை கெமிஸ்டிரி மிஸ் இங்க வரலை. என்றவள் மனதில் கெமிஸ்டிரி மிஸ் இல்லாத விஷயத்தை நினைத்து சந்தோஷப்பட்டு வகுப்பறைக்குள் தைரியமாகக் கால் பதித்தாள்.

இந்தப் பள்ளிக்குள் அவளுக்கும் கெமிஸ்டிரி டீச்சருக்கும்தான் ஆகவே ஆகாதே.

முக்கியமாக ஏதாவது பிரச்சனை என்று வந்துவிட்டால் மதுவுக்கும் அவருக்கும் ஆகவே ஆகாதே..

மது கிளாஸ் ரூமிற்குள்ளப் போகாத ஓடிடு... சிக் ரூமிற்குள் போய் படுத்துக்கோ... - யாரோ ஒரு புண்ணியவான். (சொல்றதைக் கேட்டுக்கோம்மா மது)

           *   *   *

 


ReplyQuote
Meena
(@meena)
Estimable Member Moderator
Joined: 2 years ago
Posts: 189
01/07/2020 6:08 am  

ஸ்டூடன்ஸ் உங்க கிளாஸ் பற்றி கம்ப்ளைன்ட் வந்திருக்கு. உங்க எல்லாருடைய பேக்கையும் செக் பண்ணதுல சில பூரூஃப் கிடைச்சிருக்கு. - கணித ஆசிரியை திவ்யா.

என்ன?? லன்சுக்கு போனப்ப.. பேக்கை செக் பண்ணாங்களா?

டிஸ்கஸ்டிங்...

என்ன?? எல்லோருடைய பேக்கையுமா? நாம எல்லோரும் மாட்னோம்டா... என்னோட பென் டிரைவ் எடுத்துப் பார்த்திருப்பாங்களா?

ரிடிகுலஸ்...

செத்தான்டா சேகரு...

கணித ஆசிரியை திவ்யா பேசிய பிறகு இது போன்ற பேச்சுக்குரல்கள் தான் அந்த வகுப்பறை முழுதும் கேட்டன.

லிஸன் ஸ்டூடென்ட்ஸ்... காம் டவுன்... - இயற்பியல் ஆசிரியை நர்மதா.

ஸைலன்ஸ். - கணித ஆசிரியை திவ்யா.

பின் டிராப் ஸைலென்ஸ்.- ஆங்கில ஆசிரியை மெர்சி.

அத்தனை ஆசிரியர்களும் கட்டளையிட்டப் பின் அந்த வகுப்பறையின் சலசலப்பு குறைந்து லேசான அமைதி வந்தது. ஆனால்...

மதுமிதா கெமிஸ்டிரி மிஸ் உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. நீயும் ஹரினியும் பிரின்சிபல் ரூமுக்குப் போங்க. என்று இயற்பியல் ஆசிரியை சொன்னபோது அந்த அறையின் சலசலப்பு துணிகொண்டு துடைத்தார்போல காணாமல் போனது. உண்மையில் பின் டிராப் ஸைலென்ஸ் வந்துவிட்டது.

பின் டிராப் என்ன... பெரிய பின் டிராப் ஸைலென்ஸ்? அது எல்லாம் ஒரு அமைதியா? இதுதான் அமைதி. கெமிஸ்டிரி மிஸ்... என்று சொன்னதும் அந்த வகுப்பறை மாணவர்கள் பேயறைந்த மாதிரி அமைதியானதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லைதான். ஏன் என்றால் அனைவருக்கும் தெரியுமே கெமிஸ்டிரி மிஸ்தான் அந்தப் பள்ளியின் துணை தலைமை ஆசிரியை என்று.

அப்புறம் இன்னொரு விஷயமும் இருக்குங்க... இந்தப் பள்ளியின் கெமிஸ்டிரி மிஸ்ஸுக்கும் மதுவுக்கும் ஆகவே ஆகாதுங்க.

             *   *   *

மதுவும் ஜான்வியும் பள்ளியில் இருந்து வேனில் வீடு நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தார்கள். வாகன நெரிசலில் மதுவின் பள்ளி வாகனம் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் தண்ணி லாரிகளின் ஹார்ன் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. மதுவின் மனதுக்குள்ளும் அந்த ஹார்ன் ஒலி போன்ற இரைச்சல்கள் அதிகமிருந்தன. அவளது பள்ளி நாட்களின் சரித்திரத்தில் இன்று தான் மிக மிக மோசமான திங்கட் கிழமை.

மதுவின் முகவாட்டத்தைப் பார்த்த ஜான்வியால் அமைதியாக இருக்கமுடியவில்லை. தனது நண்பர்களுடன் அமராமல் மதுவின் அருகே போய் அமர்ந்தாள்.

ஏதும் பிரச்சனையா? எல்லா டீச்சர்ஸ்ஸும் ப்ளஸ் ஒன்ல பிரச்சனைன்னு பேசிக்கிட்டாங்க. உன் பேருகூட அதுல அடிபட்டுச்சு? வீட்ல அம்மாகிட்ட சரி டோஸ் வாங்கப் போறன்னு நினைக்கிறேன் மது. வாட்ஸ் ஆப்ல இந்நேரம் விஷயம் தீ மாதிரி பரவியிருக்கும். - ஜான்வி.

நீ ஒண்ணும் சொல்ல வேணாம். வாயை மூடு. நீ இன்னிக்கி டென்னிஸ் கிளாஸ் கட் பண்ணல? பாதி நாள் டென்னிஸ் கிளாஸ் கட் பண்ணிடுவ... இன்னிக்கு மட்டும் ஏன் கட் பண்ணல? ஃப்ர்ஸ்ட் டிரிப்ல வீட்டுக்குப் போய் தொலைச்சிருக்க வேண்டியதுதான? எதுக்கு செகன்ட் டிரிப்ல என்னோட சேர்ந்து வேன்ல வந்து உயிரை வாங்குற? என்று ஜான்வியிடம் பொரிந்து கொண்டிருந்தாள் மது.

இன்னிக்கு நீ பிரின்சிபல் ரூமுக்குப் போனியாமே?

ஜானு...

இல்லப்பா... என் ஃப்ரண்ட் ரெஸ்ட்ரூம் போனப்ப உன்னை பிரின்சி ரூம்ல பார்த்தாளாம். அவதான் சொன்னா... எதுவும் பிரச்சனையில மாட்டிக்கிட்டியா?

ப்ச்.

ஜஸ்டின் பீபர் பாட்டை நோட்ல எழுதியிருந்தியா?

ப்ச்.

போன தடவை பேபி பேபி பாட்டை மேக்ஸ் நோட்ல எழுதி வச்சிதான நீ பிரின்சிகிட்ட மாட்டுன?

ஜானு... ப்ளீஸ். வில் யூ ஷட் அப்?

அப்ப மேட்டர் ரொம்ப பெருசா?

நீ இன்னும் ஒரு வார்த்தை பேசுன... அடிச்சிருவேன்...

மது... அம்மாக்கு எதுவும் தெரியாதுல? அம்மாவரை விஷயம் போகாதுல? இந்த சன்டே தான் அம்மா அலியா பட் முவி பார்க்கலாம்னு பர்மிஷன் கொடுத்திருக்காங்கப்பா.

ஜானு. என்று கோபம் விடுத்து லேசாக அழுகை குரலில் ஆரம்பித்த மது, அலியா பட் படம் இந்த வாரமும் போச்சே. என்ற கவலையில் தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள்.

மது அழுவதைப் பார்த்து விஷயம் பெரிதாகிவிட்டது என்று புரிந்துகொண்டாள் ஜான்வி.

மது... அம்மாக்கு தெரிஞ்சிடுச்சா?

ம். . . டீச்சர்ஸ் சொல்லிட்டாங்க.

அப்பாவுக்கு கால் பண்ணி சீக்கிரம் வீட்டுக்கு வரச்சொல்லட்டா? அப்பதான் அம்மா ரொம்பத்திட்ட மாட்டாங்க. அப்பாகிட்ட நீ உண்மையைச் சொல்லிட்டா, அப்பா ஒண்ணுமே சொல்லமாட்டார் மது.

தங்கையின் பாசத்தை நினைத்து மனம் நெகிழ்ந்து மேலும் இரண்டு சொட்டுகள் கண்ணீர் வடித்தாள் மது. தங்கை ஜான்வியின் மேல் காதல் பொங்கி வழிய ஆரம்பித்தது.

நீ அழுறதைப் பார்த்தா பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டன்னு நினைக்கிறேன். அதுக்குதான் அம்மா சொல்றதை அப்பா சொல்றதைக் கேட்டு நடன்னு நான் சொல்றேன். என்று ஜானு ஔவையாராக மாறி மார்டர்ன் ஆத்திச்சூடியில் பேச ஆரம்பித்த கணம் சற்றுமுன் அவள் மேல் பொங்கி வழிந்த காதலை நொடிப்பொழுதில் பிரேக்-அப் செய்துகொண்டாள் மது.

மது-ஜான்வி காதல் பிரேக் அப் ஆனது.

இந்த வாரம் அலியா பட் கேன்ஸலா? என்று அடுத்ததாக ஜான்வி சொன்னதும், அடக்கி வைத்திருந்த அழுகை சட்டென பீரிட்டு எழ... தனது பள்ளி சீருடையின் கோட்டில் கண்ணீரைத் துடைத்தபடி ஜான்வியிடமிருந்து முகத்தை மறைத்துக்கொண்டு அழுதாள் மது.

ஆதரவாக ஜான்வி அவளது தோள் மீது கைவைத்தபோது... தனது தோள்களில் இருந்த ஜானுவின் கரங்களைத் தட்டிவிட்டுவிட்டு ஜன்னல் ஓரமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மது. அவர்கள் இறங்கவேண்டிய பஸ் நிறுத்தம் வரும் வரை தலையை ஜான்வியின் பக்கமாய் திருப்பவேயில்லை அவள்.

ரக்ஷக் தருண் மேல் எழுந்த கோபம் ஜான்வியின் மேல் முழுதாய் பாய்ந்தது. எளியவரை வலியவர் அடக்கும் அடக்குமுறை முதலில் வீட்டின் மூத்தபிள்ளையிடமிருந்து தான் தொடங்குகிறது. மூத்தவள், இளையவளிடம் தனது கோபத்தைக் காட்டினாள். தனது கோபத்தை முழுதும் ஜான்வியிடம் காட்டினாள் மது.

இறங்கவேண்டிய பஸ் நிறுத்தம் வந்ததும் ஜான்வி வேகமாக தனது சாப்பாட்டுப் பையை எடுத்தக் கையோடு மதுவின் சாப்பாட்டுப் பையையும் எடுத்துக்கொண்டாள்.

லன்ச் பேக்கை கொடு. நானே தூக்கிட்டு வர்றேன். அம்மா திட்டுவாங்க. என்று சிடுசிடுத்தாள் மது.

இருக்கட்டும் மது. நீயே அழுது அழுது டயர்டா இருக்க, உன்னைப் பார்க்கவே ரொம்ப பாவமா இருக்குப்பா. நானே தூக்கிட்டு வர்றேன். என்றதும் மது ஒன்றும் பேசாமல் ஜான்வியை உரசிக்கொண்டே வீடு நோக்கி நடந்தாள்.

அழாதப்பா மது. ப்ளீஸ். அப்பா சீக்கிரம் வந்திருவார். நான் வீட்டுக்குப்போனதும் அப்பாக்கு கால் பண்ணித் தர்றேன். சரியாப்பா?- ஜான்வி.

ஜான்வியின் கரிசனத்தில் நெகிழ்ந்தாள் மது.

காதல் பிரேக்-அப் கேன்சல்டு. - ஒரு தோசை பார்சல் என்று ஹோட்டல் சமையற்கட்டு நோக்கி கத்தும் பேரர் போலக் கத்தியது மதுவின் மனசாட்சி.

வலியவரை எளியவர் தனது அன்பால் அடக்கும் தந்திரங்கள் வீட்டின் கடைக்குட்டியிடமிருந்துதான் தோன்றுகின்றன. ஜான்வி தனது அன்பால் மதுவின் கோபத்தை அடக்கினாள்.

ஏய்... ஃபிரீஜ்... (hey freeze) என்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கடந்து இருவரும் தங்களது குடியிருப்பிற்குச் சென்றனர்.

                *   *   *

                       

            4

வீட்டிற்குள் வந்ததும் வீட்டு வேலைக்காரப் பெண்மணி தட்டில் வைத்துக்கொடுத்த பிரியாணியை பாதி மென்றும் மெல்லாமலும் தின்று முடித்தாள் மது. மதுவிற்கும் ஜான்விக்கும் பொதுவாக ஒரு கைபேசி இருந்தது.

பள்ளியில் நடந்தவற்றை தந்தையுடன் கைபேசியில் மது பேசிய பிறகு ஜான்வி எப்போதும் போல அந்த செல்பேசியில் ஆங்கில பாப் பாடல்களை ஓடவிட்டாள். அந்த செல்பேசியில் இன்டர்நெட் வசதிகள் முடக்கப்பட்டிருந்தன.

கைபேசியில் பாடல் ஓடிக்கொண்டிருக்க ஒரு வீடியோ கேமை கணினியில் விளையாட ஆரம்பித்தாள் ஜான்வி. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்கள் இருவரும் பாடப் புத்தகங்களோடு உட்கார வேண்டும். அதுவரை ஆடலாம் பாடலாம், குட்டிக் கரணம் போடலாம். எதற்கும் தடையில்லை.

கைபேசியின் ஸ்பீக்கரில் ஜஸ்டின் பீபர் கொஞ்ச நேரம் கத்தினான், காதலில் கசிந்துருகினான். கிரிஸ்டினா பெரி கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே பாடினாள், சிரித்தபடியே பாடலால் காதல் செய்தாள். செலினா கோமெச் கொஞ்ச நேரம் போதையேறிய குரலில் கொஞ்சினாள், காதலும் காமமும் சரிவரக்கலந்து வந்தது அவளது குரலில். ஷான் கொஞ்ச நேரம் சில்மிஷம் செய்தா(ள்)(ன்).

அந்த குரல் ஆணா பெண்ணா என்பது கைபேசிக்கே தெரியவில்லை. (அதான், சில்மிஷம் செய்தா(ள்)(ன்). )  

ஒரு நிமிஷம் இருங்க... ஜான்வி என்னமோ ஷான் பற்றிப் பேசுறா... என்னன்னு கேட்டுட்டு வர்றேன்.

ஷான்... பேபி ஐ லவ் யு டுயூட். - ஜான்வி கணினியில் விளையாடும் போது தன்னை மறந்து பிதற்றினாள்.

ஜான்விக்கு அந்த ஷானை ரொம்பப் பிடிச்சிருக்காம். லவ் யூன்னு சொல்றாளே? அப்ப ஷான் என்பது ஆண்தானுங்க. சற்றுமுன் தந்த என்னோட ஸ்டேட்மென்ட்டை மாற்றிக்கிறேன்... ஷான் கொஞ்ச நேரம் சில்மிஷம் செய்தான்... 

ஆனால் ஒரு மணி நேரம் கடந்த பிறகு ஜஸ்டின் பீபர், ஷான், செலினா என அனைவரும் கப்சிப் என்று கைபேசிக்குள்ளே அடங்கிப் போனார்கள்.

ஜான்வி தனது ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களை மேஜையில் பரப்பியபடி நாற்காலியில் அமர்ந்துவிட்டாள். மது தனது சிறிய கட்டிலின் திவான் தலையணையில் முதுகைச் சாய்த்தபடி உட்கார்ந்து கணித பாடத்தின் வீட்டுப்பாடத்தை எழுத ஆரம்பித்திருந்தாள்.

எண்ணம், மனம் எல்லாம் வாசல் பக்கமாகவே இருந்தாலும் மதுவின் கைகள் தனது வேலையைச் செய்தன. மணி ஆறு நாற்பது ஆனது. மதுவின் அன்னையும் தந்தையும் ஒன்றாகவே வீட்டிற்குள் நுழைந்தார்கள். மதுவின் தந்தை எப்போதும் எட்டு மணிக்குதான் வீடு வருவார். ஆனால் அன்று அறுபது நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிட்டார்.

எல்லாப் புகழும் ஜான்விக்கே.

            *   *   *


ReplyQuote
Meena
(@meena)
Estimable Member Moderator
Joined: 2 years ago
Posts: 189
01/07/2020 6:13 am  

மது... மதூ...- சமையல்கார பெண்மணி வீட்டைவிட்டு கிளம்பிய இரண்டு நிமிடத்தில் மதுவின் அன்னை வித்யா.

வந்திட்டேன்மா. என்று கூறியபடியே தனது அறையில் இருந்து வெளியே வந்தாள் மதுமிதா. மதுமிதாவின் அன்னை சாப்பாட்டு மேஜையில் டீகப்புடன் அமர்ந்திருந்தார். மதுவின் தந்தை அவசரமாய் குளித்து முடித்து ஈரத்துண்டால் பின்னந்தலை முடியில் லேசாகப் பட்டிருந்த தண்ணீரை துவட்டியபடியே வித்யாவின் அருகே வந்து அமர்ந்துகொண்டார்.

வந்திட்டீங்களா? இப்ப எதுக்கு இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டீங்க? எப்போதும் போல டீ.வி முன்னாடி போய் உட்கார்ந்துக்க வேண்டியதுதான? உங்களுக்கு ஃபோன் போட்டு ஸ்கூல்ல நடந்ததை எல்லாம் ஒப்பிச்சி வச்சிட்டாளா? ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திட்டீங்க?

எனக்கு எதுவுமே தெரியாது வித்யா. வீட்டுக்கு சீக்கிரமா வர்றது தப்பா? என்று போலியாகச் சலித்தபடி தனது டீக்கப்பை எடுத்து டீயைக் குடிக்க ஆரம்பித்தார்.

அட... அட... ரியலி? என்ற வித்யா கோபமாக தனது டீக்கப்பை மேஜையில் வைத்தார்.

நிஜமா. என் ஃபோன்ல மதியத்தில் இருந்து சார்ஜே இல்ல தெரியுமா?

துளியும் ஜெர்க் ஆகாமல் பதட்டம் இல்லாமல் பிள்ளைகள் பொய் பேசக் கற்றுக்கொள்வதே தந்தைகள் சொல்லித்தரும் பாடம்தான்.

 அப்பாவின் பக்கம் திரும்பாமல் (அவரே அம்மாவை சமாளிக்க அரும்பாடுபடுகிறார் என்ற நல்லெண்ணத்தில்) அம்மாவின் அருகே போய் நின்றாள் மது.

எப்படி அன்று காலை அவள் பிரின்சிபல் அறையில் நின்றபோது அவளது அன்னையின் அருகே நின்றாளோ அதே போல் இம்மி பிசகாமல் முகத்தில் பயத்தை அப்பிக்கொண்டு இப்போதும் தனது அன்னையின் அருகே நின்றாள் மது.

ஆம், இன்று காலையில்தான் லவ் லட்டர்ஸ் விஷயமாக பிரின்சிபல் அறையில் தனது அன்னை முன்னே தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள் மது.

ஏன் என்றால் அவளது அன்னைதான் அந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை. அவளது அன்னை தான் கெமிஸ்டிரி மிஸ்.

 

                 *   *   *

மதுமிதா கெமிஸ்டிரி மிஸ் உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. பிரின்சிபல் ரூமுக்குப் போ. என்று அன்று மதியம் சாப்பாட்டு வேளை முடிந்து வந்த மதுவிடம் இயற்பியல் ஆசிரியை சொன்னபோது அந்த அறையில் உண்மையில் பின் டிராப் ஸைலென்ஸ் வந்துவிட்டது.

ஏன்னென்றால் மதுவின் அன்னைதான் கெமிஸ்டிரி டீச்சர் மற்றும் உதவி தலைமை ஆசிரியை. விஷயம் பிரின்சிபல் வரை சென்றுவிட்டது என்றால் அது நிச்சயம் பெரியதுதான் என்று புரிந்து கொண்ட மாணவர்கள் கப்சிப் என்றாகினர்.

மதுமிதா அன்ட் ஹரினி ரெண்டு பேரும் இப்பவே பிரின்சிபல் ஆஃபீஸுக்குப் போங்க.- சுத்தமான ஆங்கிலத்தில் ஆங்கில ஆசிரியை மெர்சி.

மாணவர்களின் உதடுகள் கப்சிப் என்று அடைத்துக் கொண்டன. மதுவின் இதயம் திடீரென்று நூறு டன் எடை கூடி கனத்துப் போய்விட்டது. அவள் அந்த பெரிய நடைபாதையில் நடந்தபோதும் தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்த போதும் அவளது இதயம் துடித்ததற்கான அறிகுறியே தெரியவில்லை. அத்தனை அமைதி அவளது இதயக்கூட்டிற்குள். அந்த பள்ளி வளாகத்தைப்போல அவளது இதயத்திற்குள்ளும் அமைதி பரவியிருந்தது.

கைவைத்ததும் கீச்சென்று சப்தமிட்ட தலைமை ஆசிரியரின் அறைக்கதவை மெல்லத் திறந்து கேன் ஐ கம் இன் சார்? என்று அனுமதி கேட்டவாறு லேசாகத் தெரிந்த கதவின் இடைவெளியின் ஊடே எட்டிப்பார்த்தார்கள் மதுமிதாவும் ஹரினியும்.

கம் இன். என்று தலைமை ஆசிரியரின் கணீர்க்குரலில் உடல் முழுதும் ஜில்லென ஆகிவிட மெல்ல அறைக்குள் நுழைந்தார்கள் இருவரும்.

அந்த அறையில் உதவி தலைமை ஆசிரியை வித்யா, தலைமை ஆசிரியர் ஜான் ஆப்ரஹாம் மற்றும் இரண்டு வகுப்பு ஆசிரியர்கள் இருந்தனர்.

திஸ் இஸ் மதுமிதா ரைட்?? வித்யா, இஸ் ஷி யுவர் டாட்டர்?? என்று ஆசிரியர் வித்யாவிடம் பிரின்சிபல் கேட்டபோது முகத்தை எங்கு வைத்துக்கொள்ளவென்றே தெரியவில்லை மதுவிற்கு.

யெஸ் சார். - வித்யா.

இஸ் ஷி இன்வால்டு இன் திஸ் ஸ்டுபிட் வேலென்டெயின்ஸ் டே பிஸ்னஸ்? ( Is She Involved in this stupid valentines day business?)- பிரின்சிபல்.

ஐ, திங்க் ஸோ. திவ்யா மிஸ் கம்ப்ளைன்ட் பண்ணாங்க சார்.- ஆசிரியர் வித்யா.

ஓ... மிஸ் திவ்யாவை கூப்பிடுங்க ப்ளீஸ்.

ஆசிரியை திவ்யா வந்ததும் விசாரணை ஆரம்பம் ஆனது.

என்ன ஆச்சு மிஸ் திவ்யா? வாட்ஸ் த ப்ராப்ளம்?

நீங்க சொன்ன மாதிரி லன்ச் ஹவர்ல எல்லா ப்ளஸ் ஒன் ஸ்டூடன்ஸ் பேக்கையும் செக் பண்ணாங்க சார். ப்ளஸ் ஒன் பேட்ச்ல மதுமிதா பேக்லதான் சார் லவ் லட்டர்ஸ் இருந்துச்சு.

வாட் டூ யூ மீன் பை லவ் லட்டர்ஸ்??

மதுமிதா பேக்ல மூனு லவ் லட்டர்ஸ் இருந்திச்சு சார். ஹரினிக்கு லவ் லட்டர்ஸ் வரல. பட் ரெண்டு பேரும் ரொம்ப கிளோஸ் ஃப்ரண்ட்ஸ்... அதான் விசாரிக்க ஈசியா இருக்கும்னு...

மதுமிதா மயக்கம் போடாத குறையாக நின்று கொண்டிருந்தாள். ஒரு லவ் லெட்டருக்கே இரண்டு நாட்களாகப் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தாள். அதனால் இப்போது, மூன்று லவ் லெட்டர்ஸா? என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் ஆம்புலன்ஸின் சைரன் போல அவளின் புத்திக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

ஹரினிக்கும் தான் மயக்கம் வந்தது.

லவ் லட்டர்ஸ் ஹரினிக்கு வரவில்லை என்றாலும் மதுவிற்கு வந்திருந்த மூன்றில் ரக்ஷக்தருணின் லவ் லட்டர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் என்ற அதிர்ச்சியில் அவளுக்கும் மயக்கம் வருவதுபோலத்தான் இருந்தது.

வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? என்று இருவரிடமும் கேட்ட தலைமை ஆசிரியர் ஜான், வேர் ஆர் த பாய்ஸ்? என்று ஆசிரியர்களிடம் அனல் குரலில் கேட்டார்.

மூன்று மாணவர்களும் வந்து சேர்ந்ததும் ஒரு மணி நேரம் அனைவரையும் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கினார். அதன்பிறகு, இதுதான் இறுதியான எச்சரிக்கை. என்று கண்டிப்பான குரலில் கூறி கண்டித்து அனுப்பினார் தலைமை அசிரியர் ஜான்.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று வகுப்பறைக்கு வந்தவர்களை மற்ற மாணவர்களின் கண்கள் நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தது. மதிய வேளையின் இரண்டு வகுப்புகளிலும் யாருக்கும் காட்டிக்கொள்ளாமல் ஊமையாய் அழுதுகொண்டே இருந்தாள் மது. அதன்பிறகு தனது கவலை மறந்து மதுவிற்கு ஹரினி ஆறுதல் சொல்ல கொஞ்சம் இலகுவான மனநிலைக்கு வந்துவிட்டாள் மது.  அன்றைய நாளின் கடைசி பீரியட்டின் ஆசிரியர் அன்று விடுப்பு எடுத்திருந்த காரணத்தால் மாணவர்கள் அனைவரும் நூலகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

பெயருக்கு என்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு மது ஹரினியிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

என்மேல ஒரு பெர்சென்ட்கூட தப்பில்ல ஹரினி. ஸ்டுபிட் தருண் பண்ண வேலையால நான்தான் எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன். நீ ஸ்டாராங்கா எவிடன்ஸோட சொன்னதாலதான் இன்னிக்கு தப்பிச்சிருக்கேன்..

விடுப்பா... அதான் அந்த தருணுக்கு வார்னிங் கொடுத்திருக்காங்கல, இதுவும் நல்லதுக்குதான். இனிமே திரும்பத் திரும்ப பிரச்சனை வராமல் இருக்கும். ஆனா ஒண்ணு மது...

என்ன ஹரினி.

இந்த தருண் உன்கிட்ட கார்ட் நீட்டுவான்னு நான் கெஸ் செய்திருந்தேன். ஆனா விநோத், கார்த்திக் பற்றி நான் கெஸ் பண்ணவே இல்லையே? இரண்டு பேரும் உன்னை இன்ஸ்டாவில் ஃபாலோ பண்றாங்கல?

ம். இன்னிக்கி முதல் வேலையா இன்ஸ்டா அக்கவுன்ட்டை கிளோஸ் பண்ணணும். ஆனா இப்பதான் எனக்கு 500 ஃபாலோயர்ஸ் சேர்ந்திருந்தாங்கப்பா. என் அம்மா ஃபோன்லதான் அக்கவுன்ட் வச்சிருக்கேன். பாஸ்வேர்ட்கூட அம்மாக்குத் தெரியும். அம்மாவுக்கு என்னோட ஃபாலோயர்ஸ் எல்லாரையும் தெரியும். லவ் லெட்டர் கொடுத்தது விநோத், கார்த்திக் என்று தெரிந்ததும் அம்மாவே என்னோட இன்ஸ்டா அக்கவுன்டைக் கிளோஸ் பண்ணிடுவாங்க. 500 ஃபாலோயர்ஸ்... இவனுங்க மூனு பேராலப் போச்சு. என்ற மதுவின் குரலில் பெருத்த ஏமாற்றம்.

ஒரே ஒரு காதல் கடிதம் வந்துவிட்டால் அம்மா பேட்மிட்டன் வகுப்பையே நிறுத்தி விடுவார் என்று பயந்தவளுக்கு மூன்று காதல் கடிதங்கள் வந்தால்... அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வது கஷ்டம் தானே?

1980- 2000 வரை, சிறார்களுக்கு பெற்றோரிடம் அடிவாங்குவது பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது.

ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் அதாவது 2000-2020 வரையிலான காலத்தில் பதின் வயதுடையவர்களுக்கு பெற்றோரிடம் திட்டுவாங்குவதே பெருத்த அவமானமாகக் கருதப்படுகிறது.

நீங்க இப்படி திட்டினது எனக்கு எவ்வளவு ஹர்டிங்கா (Hurting) இருந்திச்சு தெரியுமா? என்பதுதான் பிள்ளைகள் பெற்றோரிடம் பேசும் இப்போதைய பிரபலமான வசனம்.

எவன்டா அந்த hurting-ங்கிற வார்த்தையை நம்ம தமிழ் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தான்?? அவன் கையில் கிடைத்தால் பல பெற்றோர்கள் அவனுக்கு உப்பில்லாத உப்புமா செய்து கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். உப்புமா ஒரு தண்டனையா என்று யோசிக்க வேண்டாம்... உப்புமா பிடிக்காதவர்களுக்குத்தான் தெரியும் உப்பில்லாத உப்புமா எவ்வளவு பெரிய தண்டனை என்று.

மதுவும் அந்தத் திட்டுகளைத்தான் அவமானமாக நினைத்து இப்போது கவலைப்பட்டாள்.

வீட்டிற்குப் போனதும் அம்மா திட்டுவாங்களே? என்ற கவலைதான் இப்போது மதுவை பேயாய் பிடித்து உலுக்கியது.

அட விடு மதுக்கண்ணு, இதுக்கு போய் மூஞ்சியத் தூக்கி வச்சிக்கிட்டு... நாங்கலாம் ரெண்டு வௌக்கமாறு பிஞ்சாகூட அசரமாட்டோம்ல... ஐஞ்சு வயசுல இருந்து டிரைனிங் எடுக்குறோம்ல? வைரம் பாய்ஞ்ச உடம்புடா இது... ந்தில் வளையாதது ம்பதில் வளையாதுன்னு சொல்லிச் சொல்லி கேப்பில்லாம அடி வாங்கிருக்கோம் தெரியுமா மதுக்கண்ணு??- (1980- 2000 க்குள் பிறந்த பல அற்பப்பதர்களின் குரல்)

             *   *   *

           

                  5

மீண்டும்   மதுவின்   இல்லத்தில்...

மது சோம்பேறியாய் வகுப்புகளை கவனித்துவிட்டு சோம்பேறியாய் வேனிற்குப் புறப்பட்டாள். அணில் போல ஜான்வி உதவியதால் தனது வீட்டில் இப்போது தந்தையின் முழு பாதுகாப்பில் மது.

மதுவிடம் சுமார் பத்து கேள்விகள் கேட்டார் வித்யா. அனைத்திற்கும் நேர்மையாக பதில் தந்தாள் மது. மதுவின் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதை வித்யா கண்டுபிடுத்துவிட்டார்.

ஆனால் அவர் பள்ளியிலேயே ஒரு முடிவை எடுத்திருந்தார். இனி இது போன்ற பிரச்சனைகளில் மது சிக்காமல் இருக்க வேண்டும் என்பதை தலை வலிக்க வலிக்க யோசித்தவருக்கு அந்த முடிவுதான் சரியெனப் பட்டது. மதுவை பேட்மிட்டன் வகுப்பில் இருந்து நீக்க முடிவு செய்திருந்தார்.

அந்த தருண் பேட்மின்டன் சாம்பியன் தான?- மதுவின் அன்னை வித்யா மதுவிடம் தனது விசாரணையின் இறுதிக்கேள்வியைக் கேட்டார்.

அம்மா அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று யூகித்தவள் கண்கள் குளமாகிப்போயின.

மதுவின் வீட்டில் பெற்றோர் கறார் குரலில் பேசினால் அதில் உறுதி இரும்பு போல இருக்கும். அதை மதுவும் ஜான்வியும் மீறுவதில்லை. மீறிப் பழக்கம் இல்லை.

அன்னை வித்யா பேட்மிட்டன் பற்றிக் கேட்டதும் மகளின் வருத்தத்தை புரிந்துகொண்ட அவளது தந்தை,

அதுக்கு? அதுக்கு இப்ப என்ன? அவ பேட்மின்டன் கிளாஸ் போகத்தான் போறா. அதெல்லாம் நிறுத்த மாட்டேன். என்றார் திடமான குரலில் முடிவாக.

நீங்க கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா?- வித்யா.

வித்யா.. திஸ் இஸ் பாயின்ட்லெஸ்.. ஷி இஸ் எ கிட்... ( vidya this is pointless. she is just a kid.) 

அ-ர்-ஜு-ன். (இது வார்னிங் நம்பர் ஒன். மனைவி கணவனின் பெயரை அழுத்தம் திருத்தமாகச் சொன்னால் அது முதல் வார்னிங். இரண்டாவது மூன்றாவது எல்லாம் சொல்ல வேண்டுமா என்ன? அந்தச் செல்லப் பெயர்கள் வீட்டுக்கு வீடு மாறாது?)

ஆனால் மதுவின் தந்தை தனது எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தாமல் மதுவிடம் திரும்பி, ஆர் யூ இன்வால்டு இன் திஸ் மது? உனக்கும் இதுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கா?  I want an honest you know... என்று கேட்டார் இறுதியாய்.

நோ டாடி... சத்தியமா இல்ல. - உறுதியாய் உண்மையாய் மறுத்தாள் மது.

மதுவின் கண்களை ஆழமாகப் பார்த்த பெற்றோர்கள் நிம்மதியடைந்தனர். வித்யாவிற்கும் நிம்மதிதான். ஆனால் வரட்டுப் பிடிவாதம் பிடித்தபடி கோபமாக, நீங்களாச்சு... உங்க பொண்ணாச்சு... ஐ டோன்ட் கேர். என்று கத்திவிட்டு பெட்ரூமிற்குள் சென்று அடைந்து கொண்டாள்.

மது மெல்ல சாப்பாட்டு மேஜை அருகே இருந்த நாற்காலியில் தந்தையின் அருகே அமர்ந்தாள்.

ஹோம் வொர்க் இருக்குல? போ கண்ணா... போய் ஹோம்வொர்க் பண்ணு...

பேட்மிட்டன் கிளாஸ் கட்டாகிடுமோன்னு ரொம்ப பயந்தேன். தாங்க்யூ டாடி. என்று சொன்ன மதுவின் கண்களில் அத்தனை நன்றிகள் இருந்தன.

அர்ஜுன் மெல்லியதாய்ச் சிரித்தார்.

டாடி...

ம்??

அம்மாகிட்டப் போய் பேசவா?

எதுக்கு? நாளைக்குப் பேசு. இப்ப நீ போனா கத்துவா. ஸ்கூல்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசிருப்பாங்கல... அந்தக் கோபத்துல கத்துவா.. லீவ் ஹர் அலோன்.

அம்மாகூட நீங்க சண்டை போட்டா, நீங்க போய் சமாதானம் செய்வீங்கல? அப்படியே விடமாட்டீங்கல... அதே மாதிரிதான் நானும் சமாதானம் செய்யப்போறேன்... ஓகே?

ஓகே. என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அர்ஜுன்.

சொல்வதைச் சொல்லுமாம், செய்வதைச் செய்யுமாம் கிளிப்பிள்ளை. பிள்ளைகள் எப்போதும் பெற்றோர்களை பல விஷயங்களில் நகல் எடுக்கின்றனர். அதுவும் பெண் பிள்ளைகள் அப்பா எவ்வழியோ அவ்வழியேதான்.

இந்தக் கதையெல்லாம் விடுங்க இன்ஸ்டா அக்கௌன்ட் என்ன ஆச்சுன்னு 500 ஃபாலோயர்ஸ் கதி என்ன?? என்று நீங்க கேட்குறது கேட்குது... இன்ஸ்டா அக்கௌன்ட் இன்னும் நான்கு வருடங்களுக்கு பக்கவாதம் வந்து எந்த ஒரு அசைவும் இன்றிக்கிடக்கும் வாசகர்களே. புது டிரஸ் வாங்கியபோதெல்லாம் அதனை அணிந்து வலம் வரும் மதுவின் புகைப்படங்களை இனி அந்த 500 பேரும் பார்க்க முடியாது. மதுவின் புத்தாடைகளைப் பார்த்து அதேபோன்ற உடைகளை வாங்கிய தோழிகள் இனி அதேபோல ஃபிளிப் கார்டில் ஆர்டர் செய்ய முடியாது. ஜொல்லுவிட்ட பசங்க நாலைந்து வருஷத்துக்கு வேற மதுமிதாவைத் தேட வேண்டியதுதான். சிம்பிள்...

               *   *   *

 


ReplyQuote
Meena
(@meena)
Estimable Member Moderator
Joined: 2 years ago
Posts: 189
01/07/2020 6:14 am  

மதுவின் வீட்டில் ஒரே ஒரு விதிமுறைதான் இருந்தது. படிப்பு முடியும் வரை காதல் என்ற வார்த்தையை இரண்டு பெண் பிள்ளைகளும் உச்சரிக்கக் கூடாது என்பது தான் அது.

மதுவின் பெற்றோரின் திருமணம் காதல் திருமணம்தான். ஆனால் அவர்கள் தங்களது பிள்ளைகளிடம் பள்ளிப்பருவத்தில் வரும் காதலுக்கு தடா விதித்திருந்தனர். அவர்களைப் பொருத்தவரையில் 2000க்குப் பிறகு பிறந்த காதல் எல்லாம் காதலே இல்லை. 2000 வருடத்திற்கு முன்பாக காதலித்த காதலர்களின் காதல்தான் தெய்வீகக் காதல். அவர்கள் காதலித்த யுகத்தில் காதலித்தவர்கள் தான் ஜென் காதலர்கள் (உண்மைக் காதலர்கள்).

 ரோமியோ-ஜுலியட், அம்பிகாபதி - அமராபதி, அஜித்-ஷாலினி... போன்ற சென்ற நூற்றாண்டு காதலுக்குத்தான் நூற்றுக்கு நூறு மார்க் போடுவார்கள் மதுவின் பெற்றோர்கள். அந்த வரிசையில் அர்ஜுன்- வித்யா என்று தங்கள் பெயரையும் கடைசியாகச் சேர்த்திருந்தனர்.

இன்றைய காதலுக்கு அவர்கள் காதல் என்றே பெயர் வைக்கவில்லை. ஏன் எதற்கு என்பதன் காரணத்தை மதுவிடமே அவளது தந்தை ஒரு நாள் பகிர்ந்திருந்தார்.

 

முன்பு  ஒரு  நாள்...

அந்த நாள்கூட மதுவிற்கு நன்கு நினைவில் இருக்கும். பத்தாம் வகுப்பு விடுமுறை ஆரம்பித்த இரண்டே நாளில் மதுவின் தந்தையும் அவளும் அவர்கள் வீட்டு பால்கனியில் பேசிக் கொண்டிருந்தபோதுதான் மதுவின் தந்தை புதிதாக அவர்களது வீட்டில் கடைபிடிக்கப்போகும் காதல் தடா சட்டத்தைப் பற்றியும் அதன் காரணத்தையும் அவளிடம் கூறினார்.

காதலுக்கு தடை என்ற சட்டத்திட்ட மசோதா அன்றுதான் அவர்கள் வீட்டு பால்கனியில் விவாதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.

நான் சேது படம் பார்த்துட்டு உன் அம்மாவை லவ் பண்ணவன் மது. என்று மெல்ல சிரித்த முகமாய் ஆரம்பித்தார் அர்ஜுன்.

எங்க காலேஜ்ல எல்லோரும் ஸைட் அடிப்போம். லவ் பண்ணுவோம். இந்த காலத்து லவ்விற்கும் எங்க காலத்து லவ்விற்கும் ஒரே ஒரு வித்யாசம் தான். நாங்க யாரை ஸைட் அடிச்சோமோ அவுங்களைதான் லவ் பண்ணோம். யாரை லவ் பண்ணோமோ அவுங்களைதான் கல்யாணம் பண்ணோம். ஆனா... இந்த காலத்துல பசங்க பொண்ணுங்களை ஸைட் அடிக்கிற லிஸ்டு நான்-ஸ்டாப்பா போகுது. அதுல ஒன்றை லவ் பண்ண செலக்ட் பண்றான். ஆனா கல்யாணம்னு வரும்போது லவ் பண்ண பொண்ணையும் விட்டுட்டு ஸைட் அடிச்ச பொண்ணையும் விட்டுட்டு யு.எஸ்ல உட்கார்ந்துகிட்டு எனக்கு இப்ப முப்பதுதான ஆகுது... இன்னும் ஒரு வருஷம் கழிச்சி கல்யாணம் பண்றேன்னு அம்மாக்கு வாட்ஸ் அப் பண்றான்... அதான் இந்த காலத்துல பசங்க காதல்ன்னு சொன்னாவே எனக்கும் உன் அம்மாவுக்கும் அலர்ஜியா இருக்கு. என்று அவர் தரப்பு வாதங்களை விளக்கங்களைக் கூறினார் அர்ஜுன், மதுவின் தந்தை .

அந்த பால்கனியைவிட்டு வெளியேறியபோது மது தனது தந்தையிடம் சத்தியம் செய்யாத குறையாக இன்னும் ஐந்தாறு வருடத்திற்கு காதல் என்ற வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று உறுதியளித்திருந்தாள்.

ஆனால் மது தரப்பில் இருந்து ஒரு பாயின்ட்...

டாடி... நீங்க முதல் லிப்லாக் பார்த்தபோது உங்க வயசு 18. நான் முதல் லிப் லாக் பார்த்தப்போ என்னோட வயசு 11.

இதை மது தனது தந்தையிடம் சொல்லவில்லை... ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் நினைத்தாள்.

                *   *   * 

பால்கனி சத்தியம் முடிந்து ஒரு வருடம்கூட ஆகவில்லை... அதற்குள் முதல் சத்தியச் சோதனை வந்துவிட்டது மதுவிற்கு. ஒன்றிற்கு மூன்று லவ் லெட்டர்கள் ரூபத்தில் முதல் சத்தியச் சோதனை வந்துவிட்டது மதுவிற்கு.

நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு. என்று கோபமாகக் கத்திவிட்டுச் சென்ற அம்மாவை சரிகட்டுவதற்காக அன்னையின் அறைக்குள் சென்றாள் மது.

அம்மா. - மது.

வித்யா கட்டிலில் இருந்து சிறிதும் அசையவில்லை. பிடிவாதமாய் கட்டிலில் படுத்தபடியே கண்களை கஷ்டப்பட்டு மூடிக் கொண்டிருந்தாள்.

தருண் இஸ் எ ஃப்ளர்ட் யூ நோ... ஆனால் நான் ஃப்ளர்ட் இல்லம்மா. உங்களுக்குத் தெரியும்... நான் பசங்க பின்னாடி சுற்ற மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும்.

வித்யா மெல்ல கண்களைத் திறந்தாள். தன்னைத் தேற்றி ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். தனது தலையணையின் அருகே அமர்ந்திருந்த மகளை இறுகக் கட்டிக்கொண்டாள். மதுவும் அம்மாவைக் கட்டிக் கொண்டாள். உண்மையை உடைத்துப்பேசும் பிள்ளைகள் என்றுமே பெற்றோருக்கு ஒரு வரம். மதுவின் பேச்சில் இருந்த உண்மை வித்யாவின் கோபத்தைக் கரைத்தது.

அரை மணிநேரம் முன்பு மதுவை அம்மா மதூ என்று கோபமாக அழைத்த நொடி முதல் தனது பாடத்தில் கவனம் வைக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த ஜான்வி வீடே அமைதியானதும் வரவேற்பறைக்குச் சென்று வேவு பார்த்தாள். அங்கே ஆள் அரவம் இல்லை. அப்பாவைத் தேடினாள்.

அர்ஜுன் தொலைக்காட்சி பெட்டியை கண்ணால் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். அன்னையின் அறைக்குள் எட்டிப்பார்த்தாள்.

அறைக்குள் மது-வித்யாவின் கொஞ்சல் சீனை வேடிக்கை பார்த்தவள் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் அவர்களோடு சென்று ஒட்டிக்கொண்டாள்.

எங்கடா நீ இன்னும் வரலையேன்னு பார்த்தேன். - ஜான்வியிடம் கிண்டலாக வித்யா.

மது தள்ளிப்படு... எனக்கு இடமே இல்ல... என்று மதுவை இடித்துக்கொண்டு ஜான்வி சிணுங்கிய அதே நேரத்தில் ஜான்வியின் கையில் இருந்த கைபேசி ஜஸ்டின் பீபரின் பேபி பேபி ஓ பேபி பாடலைப் பாடி அந்த அறையின், அம்மா - மகள்களின் ரொமான்ஸ் சீனைக் கலைத்தது.

என்ன பாட்டு இது எப்பப்பாரு பேபி பேபின்னு... ஒரு பாப் பாட்டிலாவது இந்த பேபி இல்லாமல் இருக்கா? என்று அந்த பாடலைக் கேட்டதும் கறார் அன்னையாக மாறிவிட்ட வித்யா இரு பெண்களையும் கட்டிக்கொண்டபடியே சலித்துக்கொள்ள...

கெமிஸ்டிரி, ஃபிசிக்ஸ், மேக்ஸ் இப்படி எல்லா சப்ஜெக்ட்டிலும் X வருது... நாங்க கேட்டோமா? எதுக்கு எல்லாத்துலயும் X வந்து உயிரை எடுக்குதுன்னு நாங்க கேட்டோமா? அது மாதிரி ஜஸ்டின் பீபர், கேட், செலினா எல்லோரும் எதுக்கு பேபி பேபின்னு பாடுறாங்கன்னு கேட்காதீங்க.- ஜான்வி.

ஜானு...- வித்யா சலிப்பாக.

சரி.. சரி.. பேச்சைக் கொறச்சிக்கிறேன்..- ஜான்வி.

ம்மா..- மது.

என்ன மது?- வித்யா மதுவின் தலையை வருடியபடியே கேட்டார்.

நீங்க படிக்கும்போது இப்படி லவ் லெட்டர்ஸ் வருமா?

வித்யா அறையின் வாசலை எட்டிப்பார்த்தபோது,

அப்பா டி.வியில ஃபுட்பால் மேட்ச் பார்க்குறாங்க... இப்போதைக்கு வரமாட்டாங்க. நீங்க சொல்லுங்கமா... மது கேட்குறால? சீக்கிரம், சீக்கிரம் சொல்லுங்க. என்று ஜான்வி சுவாரசியமாகக் கேட்டாள்.

வரும்... லவ் லெட்டர்ஸ் வராமல் இருக்குமா? ஆனா ஒரே நாளில் மூனு லவ் லெட்டர்லாம் வராது.

ம்மா... ஐ ஆம் இன்னோசன்ட். அந்த லவ் லெட்டர்ஸை நான் என்கரேஜ் பண்ணவே இல்ல. தருண் இஸ் எ ஃப்ளர்ட். ஆல் த பாய்ஸ் ஆர் ஃப்ளர்ட்ஸ். (Tarun is a Flirt. All the boys are flirts...)

வித்யா மூச்சு விடவில்லை. அமைதியாக இருந்தாள்.

ம்மா... சொல்லுங்க. எனக்குத் தெரியணும், லவ் லெட்டர்ஸ் வருமா வராதா?- மது.

ப்ச்... என்று சலித்துக்கொண்டார் வித்யா.

ம்மா...  I want a honest answer you know... என்று தந்தையைப் போலவே மது அதிகாரமாய் சொல்லவும் வித்யா சிரித்துக்கொண்டே சொன்னார், அபவுட் வாட்?

லவ் லெட்டர்ஸ்...- மது.

சரி பதில் சொல்றேன்... திரும்பத் திரும்ப இந்த டாப்பிக் பத்தி இனி பேசக்கூடாது. ஃப்ர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் இதுதான். ஓகே? டீல்?

டீல்.

கசம் சே?- வித்யா. (சத்தியமாக என்று ஹிந்தியில் பொருள்)

வித்யா ஒரு ஹிந்தி பன்டிட். அதனால் பல நேரங்களில் சிறு சிறு ஹிந்தி வார்த்தைகள் சகஜமாகப் பேசுவார். பிள்ளைகள் இருவருக்கும் ஹிந்தி அத்துபடி. ஹிந்தி தெரிந்தபிறகு அலியா பட் படம் பார்க்க இன்னும் வசதியாக இருந்தது இருவருக்கும்.

கசம் சே மா.- மது.

ஓகே தென்... லவ் லெட்டர்ஸ் தானே? லட்டர்ஸ் வரும். வராம இருக்குமா? காலேஜ் படிக்கும்போதுதான் வந்திச்சு. ஸ்கூல்ல வரல. அந்த வயசுல அதாவது இருபது வயசுல எது கிரஷ்... எது உண்மையான புரிதல், எது இரண்டும்கெட்டான் கேஸ்ன்னு எங்களுக்குப் பிரிச்சிப் பார்க்கத் தெரிஞ்சது. அதனால அந்த மாதிரிப் பசங்ககிட்டயிருந்து பத்தடி விலகி இருந்தோம். என்னோட ஃப்ரண்ட் ஒரு பையனை ப்ளஸ் ஒன்ல இருந்து லவ் பண்ணா. இரண்டு பேரும் காலேஜ் முடிக்கிறதுக்கு முன்னேயே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா நாலே வருஷத்துல அவுங்க கல்யாணம் டைவர்ஸ்ல முடிஞ்சிடுச்சு. இரண்டு நாள் முன்னே அவளைப் பார்த்தேன்.. டைவர்ஸ்க்கு என்ன காரணம்னு கேட்டேன், ஐந்தாறு வருஷம் கழிச்சு நான் என்னவாக ஆகப்போறேன்னு முடிவு பண்ணாம... முப்பது நாற்பது வருஷம் சேர்ந்து வாழப்போற வாழ்க்கையை முடிவு செய்தது எவ்வளவு பெரிய மடத்தனம்னு லேட்டாதான் புரிஞ்சது வித்யா.ன்னு சொன்னா... அவ சொன்னது எவ்வளவு கரெக்ட் தெரியுமா மது... ப்ளஸ் ஒன் படிக்கும்போது இன்னும் ஐந்தாறு வருஷம் கழிச்சி நாம என்ன ஆகப்போறோம்னு தான் அவ முடிவு எடுத்திருக்கணும். அந்த நேரத்துல முதல் பத்து வருஷத்தைத் தாண்டி ஒரு பெரிய லாங் ஜம்ப் பண்ணி.. முப்பது நாற்பது வருஷம் வாழப்போகும் வாழ்க்கையை பற்றி யோசிக்கிறது எவ்வளவு பெரிய மடத்தனம்? நானும் உங்க அப்பாவும் ஒரு இன்டர் காலேஜ் மீட்டுல தான் முதல் முதலா பார்த்தோம். உங்க அப்பாவோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் எனக்குத் தெரிஞ்சவங்கதான். முதல்ல உங்கப்பா நல்லவர்ன்னு நம்பிக்கை வந்திச்சு. அதற்குப்பிறகு மூனு வருஷம் கழிச்சிதான் காதல் வந்திச்சு. என்ன ஆனாலும் வாழ்க்கையில எந்தக் கஷ்டம் வந்தாலும் இந்தப் பையன் சகிச்சிப்பான்னு ஒரு நம்பிக்கை வரணும்... போடி ன்னு அவன் என்றைக்குமே எதற்குமே கோபமா கத்த மாட்டான்னு நம்பிக்கை வரணும். அவன்கூட வாழும்போது போடா டாஷ்ன்னு நீ என்னைக்குமே சொல்லமாட்டேன்னு உனக்கும் நம்பிக்கை வரணும்... அதன்பிறகுதான் தைரியமா லவ் பண்ண ஆரம்பிக்கணும். கண்ணும் கண்ணும் பேசிக்கிட்டா மட்டும் பத்தாது. கொஞ்சம் மூளைகூடயும் பேசணும். 8 கிராம் கண்ணை நம்புற மாதிரி 3000 கிராம் மூளையையும் நம்பணும். கண்ணால ஸைட் அடிச்சா பத்தாது. மூளையாலும் ஸைட் அடிக்கணும்.

சூப்பர்மா, அப்புறம் அந்த இரண்டும் கெட்டான்னா என்ன அர்த்தம் மம்மி?- ஜான்வி.

ஏய் லூசு... அம்மா பேசி முடிக்கட்டும்.- மது.

பேசுறதுக்கு வேற எந்த லவ் மேட்டரும் என்கிட்ட இல்லப்பா. என்னோட லவ் ஸ்டோரியில அடுத்து என்ன ஆச்சுன்னு கேட்காதீங்க, சொல்லிச் சொல்லி வாயே வலிச்சிப்போச்சு.

சரி... இரண்டும் கெட்டான்னா என்ன அர்த்தம் மா??- மது.

ம்மா.. என்னைப் பார்த்துச் சொல்லுங்க, என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க, நான் தான ஃப்ர்ஸ்ட் அதைப் பற்றிக் கேட்டேன்?- ஜான்வி.

எந்த முடிவும் சரியா எடுக்கத் தெரியாத ஆளுங்க ஜானு. சரியாகச் சொல்லணும்னா... இந்த மாதிரி ஆளுங்களுக்கு முடிவே செய்யத் தெரியாது. இது சரி, இது தப்புன்னு முடிவே பண்ணத் தெரியாத கேஸ். என்ன பேசறோம்... எதுக்கு பேசுறோம்னு தெரியாமயே வெட்டிப்பேச்சு பேசுவாங்க... நம்ம எல்லோரும் இந்த ஸ்டேஜைக் கடந்துதான் வரணும். ஒரு குறிப்பிட்ட வயசுல அந்தப் பக்குவம் வந்திடும். வெட்டிப்பேச்சு பேசும் ரோமியோக்களை கண்டுபிடிச்சிடலாம்... என்றார் வித்யா ஜான்வியின் கண்களைப் பார்த்தவாறு.

புரியிதும்மா. ரெண்டும்கெட்டான்னா என்னன்னு இப்ப தெளிவா புரியிது. நம்ம மது மாதிரின்னு பளிச்சுன்னு சொல்லுங்களேன். நேத்துகூட ஹமாம் சோப் போடவா? டவ் சோப் போடவான்னு உங்ககிட்ட டவுட் கேட்டாளே??- கட்டிலில் மல்லாக்கப்படுத்தபடி ஜானவி.

அன்றைக்கு ஒரு நாள், மது உங்ககிட்ட வந்து அவளோட டம்மி கொறஞ்சிடுச்சா இல்லையான்னு கேட்டாளே?? டம்மி பெரிசா இருக்கா, ஆர்ம்ஸ் குண்டா இருக்கான்னு அவளைப்பற்றி அவளுக்கே தெளிவில்லாமல் கேட்டாளே... அதுதான ரெண்டும் கெட்டான் கேஸ்?? - கட்டிலில் மல்லாக்கப்படுத்து மதுவின் டம்மியையும் மதுவின் ஆர்ம்ஸையும் காட்டியபடி ஜானவி.

அதற்குப் பிறகுகூட ஜான்வி நிறைய பேசினாள்.. மதுவை வைத்து இரண்டும்கெட்டான்னுக்கு நிறைய விளக்கங்கள் கொடுத்தாள், உதாரணங்கள் கச்சிதமாகக் கொடுத்தாள். ஆனால் சத்தம் தான் வெளிவரவில்லை. மதுதான் ஜான்வியின் வாய்க்கு தலையணைகொண்டு பேபர்வெயிட் வைத்திருந்தாளே.. அதனால் சத்தமே கேட்கவில்லை.

இருவரின் சண்டையையும் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்த அன்னையின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

ஆனால் மது சீக்கிரமே வெட்டிப்பேச்சு பேச்சத் துடிக்கும் ரோமியோவை சந்திக்க நேர்ந்தது யார் செய்த குற்றம்?

காலம் செய்த குற்றமடி... அது காலம் செய்த குற்றமடி... ( அட போங்கப்பா இந்திய ஜனத்தொகை செய்த குற்றம்... 130 கோடி மக்கள் தொகையில் இளசுகளுக்கு பஞ்சமா என்ன?? அதுவும் இரண்டும் கெட்டான் இளசுகளுக்குப் பஞ்சமா என்ன?)

           *   *   *

 


ReplyQuoteMeena
(@meena)
Estimable Member Moderator
Joined: 2 years ago
Posts: 189
01/07/2020 6:15 am  

டேய், ஆர்யா எப்படி காம்ப்படிஷனுக்கு வர்றான்? பைக்லயே குட்ஷெப்பர்ட் ஸ்கூலுக்கு வந்திடுவானா இல்ல நம்மகூட ஸ்கூல் பஸ்ல வர்றானா?- விவேக்.

ஆர்யா தான் Y.M.J ஸ்கூல்லின் S.P.L (School people leader)

(ஆர்யா... ஒருவழியா நாயகன் பெயரை சொல்லியாச்சு. )

லைசென்ஸ் இல்லடா அவன்கிட்ட. எப்படி புல்லட்ல வருவான்? நம்மகூட பஸ்லதான் வருவான்.- ஷாம்.

இந்த இளவட்டங்கள் எல்லோருமே Y.M.J பள்ளி மாணவர்கள்.

டேய் எட்டு மணிக்கு ரெஜிஸ்டேரேஷன் கன்ஃபார்ம் பண்ணணும்டா... அந்த ஸ்கூல் வி.பி கத்துவாருடா.- விவேக் 

அதெல்லாம் எட்டு மணிக்கு ஆர்யா டான்னு வந்திடுவான். - ஷாம்.

டேய், நாம எட்டு மணிக்கு குட் ஷெப்பர்ட் ஸ்கூல்ல இருக்கணும்.- விவேக்.

அந்த ஸ்கூலுக்கு நான் வரலைன்னா கேட்குறீங்களாடா? எல்லா ப்ரைஸையும் அந்த ஸ்கூல் பொண்ணுங்களே வாங்கிடுவாங்க.. நமக்கு சோப்பு டப்பா மாதிரி ஒரு கப் கொடுப்பானுங்க. என்று இருவரிடமும் கோபமாக பேசியபடி வந்து நின்றான் சதீஷ்.

அதுவும் பார்டிசிபேஷனுக்கு.- ஷாம்.

ஆமா. பார்டிசிபேஷனுக்கு. என்று விவேக்கிடம் இருபாலகர்களும் சலித்துக் கொண்டிருந்த போது ஆர்யா அவனது பைக்கை அதிரடியாய் உறுமவிட்டு அவர்கள் முன்னே வந்து நிறுத்தினான்.

தனது பைக் சாவியை உருவி பேன்ட் பாக்கெட்டிற்குள் வைத்தவன் ஸ்கூல் பேக்கை எடுத்து தோளில் போட்டபடி தனது மூக்கோடு ஒட்டிக்கொண்டிருந்த கூலிங் கிளாஸை எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

விவேக் கிளம்பலாமா? மணி எழு இருபது. எட்டு மணி தான ரிப்போர்ட்டிங் டைம்.

ஆமா எட்டு மணி தான் ரிப்போர்ட்டிங் டைம்... வாடா வேமா.. உனக்குதான் வெயிட்டிங். சுப்பிரமணியன் சார் இன்னும் வரல.. அதனால் தப்பிச்ச, வா சீக்கிரம் பஸ்ல ஏறு. என்றவர்கள் வேகமாக பள்ளி பேருந்திற்குள் புகுந்து கொண்டார்கள். அவர்கள் நால்வரையும் சேர்த்து மொத்தம் இருபத்தைந்து மாணவர்கள் குட்ஷெப்பர்ட் பள்ளிக்கு போட்டிக்குச் செல்கின்றனர். ஆர்யா பேருந்தில் ஏறிய இரண்டே நிமிடத்தில் சுப்பிரமணியமும் வந்துவிட்டார்.

பள்ளியின் நூலக மேலாளர் சுப்பிரமணியன் மட்டுமே பள்ளி ஆசிரியர்கள் சார்பாக போட்டிக்கான கோஆர்டினேட்டராக அவர்களுடன் செல்கிறார். பள்ளிப் பேருந்து கிளம்பியதும் சுப்பிரமணியன் மாணவர்களின் ஐ.டியை சரிபார்த்துவிட்டு எந்தெந்த போட்டிகளில் எந்தெந்த மாணவர்கள் பங்குபெறுகிறார்கள் என்பதையும் சரிபார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

ஆர்யாவின் வகுப்பு மாணவிகள் இருவர் அழகாக பரதநாட்டிய உடையில் ஜொலித்தார்கள். ஆர்யா ஓரக்கண்ணால் பரதநாட்டியப் போட்டியில் பங்குபெறும் தனது வகுப்பு மாணவி ப்ரியாவைப் பார்த்து ரசித்துக்கொண்டான். அவளது கன்னங்கள் ஒப்பனையால் சிவப்பாக மின்னியன. உதடுகளைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் தலையைத் திருப்பிக்கொண்டான். மற்ற மாணவர்கள் முன்னே வெளிப்படையாய் ஸைட் அடிப்பது அவனுக்கே ரொம்ப அநாகரிகமாகத் தெரிந்தது.

மயில் போல உடையணிந்த இரண்டு எட்டாம் வகுப்பு மாணவிகள் சிரித்துக்கொண்டே பேருந்தில் வந்தனர்.

டேய் அந்தப் பொண்ணு டிரஸ்ல இருக்கிற மயில் இறகைப் பிச்சிக்கவா? கை பரபரன்னு இருக்குடா.- விவேக்.

அதை வச்சி என்ன பண்ணப்போற?- ஆர்யா.

மயில் இறகை புக்குல வச்சா குட்டி போடுமாம்டா..

அந்த டிரஸ்ஸை வாடகைக்கு விட்டவன் அதைத் துவைத்து எத்தனை நாள் ஆச்சோ... கம்முன்னு இரு... என்று கூறியபோதே அந்த மயில் வேடம் அணிந்திருந்த மாணவி உட்கார சிரமப்பட்டு மயில் இறகை ஒன்றாக குவித்து வைத்தபடி கஷ்டப்பட்டு உட்காருவதைப் பார்த்தான் ஆர்யா.

உடனே விவேக்கிடம், டேய் நாம முன் சீட்டுக்குப் போயிடுவோம். அந்தப் பொண்ணு உட்காரக் கஷ்டப்படுதுல? நம்ம சீட் கொஞ்சம் பெரிசு... என்றான்.

அந்த மயில் பொண்ணா?- விவேக்.

ஆமாடா..

சரி வா... நாலு பேருக்கு நல்லது செய்தா தப்பில்ல.. அதுவும் நாலு பொண்ணுங்களுக்கு நல்லது செய்தா தப்பில்ல. என்று சொன்னபடி ஆர்யாவுடன் இடம் மாறி உட்கார்ந்தான் விவேக்.

டேய் ... வா பேசாம... சின்னப்பொண்ணுங்கடா...

சின்னப் பொண்ணுங்கனாதான் நம்மை மரியாதையா பார்க்கும் ஆர்யா. நம்ம கிளாஸ் பொண்ணுங்களை எடுத்துக்கோ.. நம்மள கொசு மாதிரியாவது மதிக்குதுங்களா? தெனாவட்டா பார்க்குதுங்க.. அதுகதான் ஐன்ஸ்டீன் பேத்திக மாதிரியும், நாம என்னமோ படிக்காத அரசியல்வாதிங்க பசங்க மாதிரியும் நினைச்சிக்கிட்டு நம்மைப் பார்க்குதுங்க. சின்ன கிளாஸ் பசங்கதான் நம்மள ஜீனியஸ் மாதிரி பார்க்கும். போன எக்ஸாம்ல நான் காம்பஸ் யூஸ் பண்றதை என் பக்கத்துல உட்கார்ந்திருந்த எய்த் ஸ்டான்டர்ட் பொண்ணு எப்படி பார்த்துச்சு தெரியுமா?- விவேக்.

எப்படிப் பார்த்துச்சு?

நான் என்னமோ என் கையில டெலஸ்கோப் வச்சி வானத்துல இருக்கிற ஜுபிட்டரைப் பார்த்துப் பார்த்து என்னோட எக்ஸாம் பேப்பர்ல வரையிற மாதிரி பார்த்துச்சுப்பா... அவ்வளவு மரியாதை தெரியுமா? என்று விவேக் சொன்னபோது, இடம் மாறி உட்கார்ந்ததுக்கு தாங்க்ஸ் அண்ணா. என்று குறிப்பாக விவேக்கை அழைத்துச் சொன்னது மயில்.

அந்த சிறுமி அண்ணா என்றதும் அணுகுண்டே அவனது இதயத்தின் மத்தியில் டொம் டொம் எனத் தாருமாறாக வெடித்துக் கொண்டிருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், இட்ஸ் ஓகே. யு ஆர் வெல்கம். என்று சொன்னான் விவேக்.

ஆர்யா முன்சீட்டில் சாய்ந்தபடி முகத்தை மறைத்துக் கொண்டே சிரிக்க,

என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு? வெளிய வேடிக்கைப் பார்த்துட்டு வா... என்னையே எதுக்குப் பார்க்குற? என்று தனது பையால் ஆர்யாவின் தோளில் அடித்தான் விவேக். ஆர்யாவும் அதன்பிறகு விவேக் பக்கம் திரும்பாமல் சிரித்தபடி சன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்தான்.

பேருந்து போக்குவரத்து நெரிசலால் மெதுவாகத்தான் நகர்ந்து சென்றது. சுமார் அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு Y.M.J பள்ளிப்பேருந்து குட்ஷெப்பர்ட் பள்ளியின் வாசலில் சென்று நின்றது. ஆனால் வாசலின் பிரதான கேட் மூடப்பட்டு இருக்க, ஹார்ன் ஒலி எழுப்பினார் பேருந்து ஓட்டுநர். குட்ஷெப்பர்ட் பள்ளியின் வாயிலில் நின்றிருந்த காவலாளி வேகமாக பேருந்தின் அருகே வந்து நின்றார்.

எந்த ஸ்கூல்?- காவலாளி.

Y.M.J சார். ரிஜிஸ்டர் பண்ணிட்டோம்.- நூலக மேலாளர் சுப்பிரமணியன்.

ஆனால் ஃப்ன்ஷன் ஆரம்பிச்சிடுச்சே... கேட் எல்லாம் கிளோஸ் பண்ணச் சொல்லிட்டாங்களே?

இந்தா பாருங்க சார் இன்விடேஷன். கையில இன்விட்டேஷன் இருக்கே சார்... பயங்கர டிராஃபிக் சார், அதான் வர்ற லேட் ஆகிடுச்சு. நீங்க வேற பேசிகிட்டே இன்னும் லேட் பண்றீங்க.

அழைப்பிதழைப் பார்த்ததும் காவலாளி இரண்டு மனதாக மெயின் கேட்டைத் திறந்து விட்டார். பேருந்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. வாகனம் நிறுத்தும் இடத்திற்குச் செல்லவே ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது.

டேய் விவேக் நீ எந்தெந்த காம்பட்டிஷன்ல இருக்க?- என்று பேருந்தில் இருந்து இறங்கியபடியே விவேக்கிடம் கேட்டான் ஆர்யா.

பெயின்டிங் அன்ட் டம் ஷரட்ஸ். நீ எப்பவும் போல எலக்கூஷனா? - விவேக்.

ஆமாடா... என்னோட அக்காகிட்ட ஜெயிச்சுடுவேன்னு பெட் வச்சிருக்கேன்.

நீ தான் எப்பவுமே ஜெயிப்பீல? பின்ன என்ன பெட்?

ஃப்ர்ஸ்ட் பிரைஸ் ஜெயிச்சிடுவேன்னு பெட் வச்சிருக்கேன் விவேக்.

ஓ... அப்ப டஃப்பான பெட்தான். குட்ஷெப்பர்ட் ஸ்கூல் பொண்ணுங்க பேச்சுப் போட்டியில தான் எப்பவுமே டாப்பாச்சே. ஜெயிக்கிற பிள்ளைங்களா பொறுக்கி எடுத்து போட்டியில சேர்த்துவிடுறாங்க அவுங்க டீச்சர்ஸ். போன தடவை சாரல் 2லி2லி போனப்ப மதுமிதான்னு ஒரு பொண்ணு, ஸ்டேஜ்ஜையே அலற விட்டுருச்சு ஆர்யா. இந்த ஸ்கூலோட வி.பி பொண்ணாம் அது. நீ அந்தப் பொண்ணு பேசுறதை மிஸ் பண்ணிட்ட, ஜட்ஜ் எழுந்து நின்னு கிளாப் பண்ணாங்கன்னா பார்த்துக்கோ.

பசங்க எல்லோரும் சொன்னாங்கடா. நான் வேற போட்டியில இருந்ததால அந்தப்பொண்ணு பேசினதைக் கேட்க முடியல. இன்னிக்கு வாட்ச் பண்ணணும். அந்தப் பொண்ணாலதான் எனக்கு ஃப்ர்ஸ்ட் பிரைஸ் போச்சு. இந்த தடவை மிஸ் பண்ணக்கூடாது விவேக்.

என்னடா இவ்வளவு ஃபீல் பண்ற?

ஆமாடா... பொண்ணுங்ககிட்ட ஒரு தடவை தோக்கலாம்... ரெண்டு மூனு தடவை தோத்தா நம்ம பிரஸ்டீஜ் என்ன ஆகுறது?

நீ சொல்றதும் சரிதான் ஆர்யா. என்று பேசிக்கொண்டே வந்தவர்கள் அந்த பிரம்மாண்ட ஆடிட்டோரியம் முன்னே இருந்த வரவேற்கும் மேஜை அருகே சென்றனர். அங்கே பிற பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் பன்னீர் தெளித்து வரவேற்க காத்திருந்த  குட்ஷெப்பர்ட் ஆசிரியர்களிடம் தங்களது பெயர் பள்ளி விபரங்களைத் தந்தனர்.

Y.M.J ஸ்கூல்லா?- வரவேற்கும் குழு ஆசிரியர்.

ஆமாம் மேம்.- ஆர்யா.

அந்த சின்ன ரூம் தெரியிதுல? அங்க வி.பி இருப்பார். போய் அவரைப் பார்த்திட்டு மெயின் ஸ்டேஜுக்குப் போங்க.. சார் உங்களை பார்க்கணும்னு சொன்னார். சீக்கிரம் போங்க. சார் இன்னும் இரண்டு நிமிஷத்துல மெயின் ஸ்டேஜுக்குப் போகணும்.- வரவேற்கும் குழுவில் இருந்த குட்ஷெப்பர்ட் பள்ளி ஆசிரியர்.

ஆர்யாவின் பள்ளி கோஆர்டினேடராக வந்திருந்த நூலக மேலாளர் குட்ஷெப்பர்ட் பள்ளியின் பிரின்சிபல் அறை நோக்கி முன்னே செல்ல, அவரது பள்ளி மாணவர்கள் அவர் பின்னே வந்தனர். ஒரு நிமிடத்தில் இருபத்தைந்து மாணவர்களும், Y.M.J பள்ளி நூலக மேலாளரும் குட்ஷெப்பர்ட் பள்ளியின் பிரின்சிபல் அறையில் குழுமியிருந்தனர்.

                *   *   *

அவர்கள் உள்ளே நுழைந்ததும் குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரமாரியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

சார், நீங்க காம்ப்டிஷன் கலந்துக்கிறதா எங்களுக்கு மெயில் அனுப்பினீங்களா?- குட்ஷெப்பர்ட் பள்ளியின் பிரின்சிபல்.

ஆமா சார். போன வாரம் அனுப்பினேன்.- ஆர்யாவின் பள்ளி கோஆர்டினேடர் ( நூலக மேலாளர்).

ஒரு செல் நம்பர் தந்திருந்தோமே... அதுக்கு...

அதுக்கும் பேசினேன் சார்.

நீங்கதான் பேசுனீங்களா?

ஆமா சார். போன புதன் கிழமை பேசினேன் சார்.

ஓ...  புதன் கிழமை பகல் ஒரு மணிக்கா?- பிரின்சிபால்

ஆமா சார்.

இரண்டு செகன்டு பேசுனீங்கல?

ஆமா சார்.

டேய் லைப்ரரியன் ஏதோ சொதப்பிட்டாரு, மெயில் தப்பா அனுப்பிட்டாரு போல...- விவேக் ஆர்யாவின் காதினில்.

ஷ்.ஷ்..ஷ்.. பேசாத.- ஆர்யா.

சரி... போய் ஆடிட்டோரியத்துல உட்காருங்க. வெல்கம் ஸ்பீச் ஆரம்பிக்கப்போகுது. என்றார் தனது நாற்காலியில் இருந்து எழுந்தபடியே பிரின்சிபல். அவர் எழுந்ததும் நூலக மேலாளரும் எழுந்து பிரின்சிபலிடம் நன்றி என்று உரைத்துவிட்டு தனது மாணவர்களுடன் அறையில் இருந்து வெளியேறினார்.

            *   *   *

 


ReplyQuote
Meena
(@meena)
Estimable Member Moderator
Joined: 2 years ago
Posts: 189
01/07/2020 6:17 am  

குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்யாவின் பள்ளி மாணவர்களை அரங்கத்தில் அமரச் சொன்னார். ஆனால் போட்டியில் பங்கேற்கப்போகும் மாணவர்களின் விபரங்களைக் கேட்கவேயில்லை. எந்த போட்டிகள் எங்கு நடக்கும் போன்ற விபரங்களும், லாட் நம்பர் பெறுவதற்கான விபரங்களும் தரவில்லை. ஆர்யாவின் பள்ளி மாணவர்கள் தங்களை அழைத்து வந்த நூலக மேலாளரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

என்ன சார்... இன்னும் நம்மளுக்கு எந்த இன்ஸ்ட்ரக்ஷனும் கொடுக்கல? நம்மள ரிஜெக்ட் பண்றாங்க சார். - ஆர்யா.

நான் மெயில் அனுப்பினேனே? ஏதோ தப்பாயிடுச்சு போல... திரும்ப ஸ்கூலுக்குப் போயிடுவோமா? என்ற நூலக மேலாளர் மயில் வேடமிட்டு நின்று கொண்டிருந்த மாணவிகளைப் பார்த்து, பாவம் பசங்க ஏமாந்திடுவாங்க. என்றார்.

ஆர்யாவிற்கும் அந்த மாணவிகளைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அறிவியல் கண்காட்சிப் போட்டிக்காக வந்திருந்த மாணவர்கள் பேருந்தில் வரும்போதெல்லாம் விவாதித்துக்கொண்டும் ஒப்பித்துக்கொண்டும் வந்ததை நினைக்கையில் அவனது ஏமாற்றம் கூடியது. அவனது உழைப்பும் அதிகமே. நான்கு நாட்களாக பாடங்களை ஒத்திவைத்துவிட்டு இந்த போட்டிக்காகவே தயாராகிக் கொண்டிருக்கிறான்.

ஏதோ ஒரு வேகம் பிறக்க, சார் நாம போய் ஆடிட்டோரியத்துல முதல்ல உட்காருவோம் சார். என்ன ஆகுதுன்னு பார்ப்போம். என்றான் ஆர்யா. அனைத்து மாணவர்களும் அவ்வாறே சொல்ல கோஆர்டினேட்டர் அந்த பிரம்மாண்ட அரங்கத்திற்குள் மாணவர்களை அழைத்துச் சென்றார்.

அவர்கள் உள்ளே சென்று உட்கார்ந்த இரண்டு நிமிடங்களில் சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேடையேறி மைக் முன் நின்றார். சற்று முன்னர் நூலக மேலாளருடன் தனியறையில் பேசியபோது இருந்த கண்டிப்பும், கழுகுப் பார்வையும் இப்போது மைக் முன்னே நிற்கும் அதே குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் துளியும் இல்லை. அவரின் முகமெல்லாம் சிரிப்பும் பெருமையும் இருந்தது.

குட்மார்னிங் ஸ்டூடென்ட்ஸ்.- குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

இதைச் சொன்னதும்தான் மாணவர்கள் மத்தியில் எத்தனை கைத்தட்டல்?

கைதட்டி ஓய்ந்ததும், குட்மார்னிங் சார்... என்றது அந்த மாணவர் பட்டாளம்.

நான்தான் உங்க சிவப்பிரகாசம். என்று தலைமை ஆசிரியர் சொன்னதும் அரங்கம் மீண்டும் கைதட்டல்களால் அதிர்ந்தது.

Y.M.J மாணவர்கள் உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர். ஏன்னென்றால் இத்தனை மாணவர்களின் நாயகனான சிவப்பிரகாசத்தின் கோபத்திற்குதானே அவர்கள் ஆளாகிவிட்டிருந்தனர். Y.M.J தரப்பில் ஏதோ தவறு நடந்துவிட்டது உறுதி. ஆனால் போட்டியில் பங்குபெறுவார்களா? என்பதுதான் ஆர்யா மற்றும் அவனுடன் இருந்த சக மாணவர்களின் கேள்வியானது. மனம் திக் திக் என்று அடித்துக்கொண்டது.

டேய் காம்ப்படிஷன்ல கலந்துக்க விடலைன்னா.. O.D (on duty) போறோம், O.D போறோம்ன்னு நாம பண்ண அலப்பறைக்கு நம்ம கிளாஸ் பொண்ணுங்க கொசுவோட குட்டிமாதிரிகூட இனி நம்மள மதிக்காதுங்கடா...- விவேக்.

கொசுவோட குட்டியா? என்று ஆர்யா கோபமாகக் கேட்க,

சாரி சாரி.. கொசு முட்டைதான போடும்? நம்ம கிளாஸ் பொண்ணுங்க கொசுவோட முட்டை மாதிரிகூட இனி நம்மள மதிக்காதுங்கடா.- விவேக்.

ஆர்யா பற்களைக் கடித்துக்கொண்டே மேடையில் கண் பதித்தான். சிவப்பிரகாசம் சிரித்துக்கொண்டே மாணவர்களிடம் மைக்கில் நிறைய பேசினார். வேகமாக 20 நிமிடங்கள் முழுமையாய் முடிந்தபோது அவரது உரையும் முடிந்தது. பேசி முடித்தவர் கிளம்பும் முன் ஒரு பன்ச் வைத்தார்.

இன்னைக்கு போட்டியில கலந்துக்க வந்த அத்தனை ஸ்கூல்லோட கோஆர்டினேட்டரும் எழுந்து நில்லுங்க. ப்ளீஸ். - தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம்.

உடனே போட்டியில் பங்குபெற வந்திருந்த அனைத்து பள்ளியின் கோஆர்டினேட்டர்களும் எழுந்து நின்றார்கள்.

ஓகே... உங்க எல்லோர்கிட்டயும் ஒரு விஷயம் ஷேர் பண்ணணும். எதிர்காலத்துல இந்த மாதிரி நடக்கக்கூடாது என்பது தான் இதன் நோக்கம், அஜென்டா. நீங்க யாரும் தப்பா எடுத்துக்ககூடாது. எங்க பள்ளியின் மெயில்ல நாங்க கிளியரா சொல்லியிருந்தோம்... போட்டியில கலந்துக்க நினைக்கிற பள்ளிகள் 8337689902 என்ற நம்பருக்கு ஒரு கால் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணணும், மேலும் எங்களது மெயில் ஐ.டிக்கு ஒரு மெயில் அனுப்பணும்னு கிளியர் கட்டா சொல்லியிருந்தோம். போன்ல கான்டாக்ட் பண்ற டைம் காலை 9-11 என்றும் சொல்லியிருந்தேன். எல்லா ஸ்கூலும் அதை கடைப்பிடிச்சிருந்தாங்க.. ஒரு ஸ்கூலைத்தவிர. என்று சொன்னவர் சில நொடிகள் நிறுத்தினார்.

  “போன வாரம் நான் நம்ம ஸ்கூல் ஹாஸ்டலுக்கு கொஞ்சம் காய்கறி பர்சேஸ் பண்ண  ஒரு மணிக்கு கோயம்மேடு மார்க்கெட் போயிருந்தேன். அப்ப எனக்கு ஒரு கால் வந்தது. நல்லா கற்பனை பண்ணிப்பாருங்க ஒரு கையில தேங்காய் இன்னொரு கையில வெண்டைக்காயை அள்ளிட்டு இருக்கேன். அப்ப என்னோட செல்ஃபோன் அடிக்கிது...

மாணவர்கள் சிரித்தனர். ஆர்யா மற்றும் அவனது சக பள்ளி மாணவர்கள் சிரிக்கவில்லை. அவரது சொற்களின் தோட்டாக்கள் தங்களை நோக்கித்தான் பாய்கிறது என்று புரிந்து கொண்டார்கள்.

நூலக மேலாளர் நின்றபடியே தலைகுனிந்து கொண்டார்.

சிவப்பிரகாசம் பிரகாசமாய் தனது உரையைத் தொடர்ந்தார்.

என்னோட வைஃப்புக்குகூடத் தெரியும் இந்த டைம் நான் காய்கறி மார்க்கெட்டுல இருப்பேன் கூப்பிடக்கூடாதுன்னு...

மாணவர்கள் கெக்க புக்கவென சிரிக்க.. நூலக மேலாளர் இன்னும் நன்றாக குனிந்துகொண்டார்.

சரி... ஏதோ முக்கியமான ஃபோன் போலன்னு.. எடுத்தேன். பேசினவங்க எந்த ஸ்கூல் எதுன்னு சொல்லலை மெயில் அனுப்பியிருக்கோம் பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சிட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. சரின்னு காய் வாங்குறதைக் கன்டினியு பண்ணேன். ஃபோன் பண்ணவங்கதான் அரைவேக்காடா இருந்தா நாமும் அரைவேக்காடா இருக்கக்கூடாதுல்ல?

மாணவர்கள் மீண்டும் சிரித்தனர்.

மானம் போகுதுடா.. பாவம்டா லைப்ரரியன். அவருக்கு என்ன விபரம் தெரியும்? வேற டீச்சர்ஸ் இந்த வேலையை கரெக்டா செய்திருக்கலாம். பாவம்டா சார்...- விவேக்.

ஆமா ஆமா... ரொம்ப தான் மானம் மரியாதை போயிருச்சு. நல்ல வேளை ஸ்கூல் பேர் சொல்லலை.- ஆர்யா.

எந்த ஸ்கூல்னு நான் சொல்ல மாட்டேன். என்று அடுத்ததாக சிவப்பிரகாசம் சொன்னபோது அனைத்து கோஆர்டினேட்டர்களும் ஆர்யாவின் பள்ளி நூலக மேலாளரைப் பார்த்தனர். அவர்தான் குனிந்த தலை நிமிரவேயில்லையே? அதனால் எளிதில் கண்டு பிடித்துவிட்டார்கள்.

மே.. மே என்று இரண்டு தடவை கத்தினால்தான் ஆடு என்று கண்டுபிடிக்க முடியுமா? மே என்று ஒரு தடவை கத்தினால்கூடப் போதுமே அது ஆடு என்று கண்டுபிடிக்க.. அதுபோல சிவப்பிரகாசம் குறிப்பிடுவது Y.M.J பள்ளியைத்தான் என்று மற்ற மாணவர்கள் சிரமமே இல்லாமல் கண்டுபிடித்துவிட்டார்கள். அனைத்து மாணவர்கள் கண்களும் தலை குனிந்த நூலக மேலாளரிடம் இருந்தன.

ஆர்யா லைப்ரரியனையும் விவேக்கையும் பார்த்தான்.

ஸ்கூல் பேரையே அந்த சார் மைக்கில் சொல்லியிருக்கலாம்ல?- விவேக்

ஆர்யா முறைக்க அமைதியானான் விவேக்.

சரின்னு ஸ்கூலுக்கு வந்ததும் மெயில் செக் பண்னேன்... அதுல ஸ்கூல் பேரு மட்டும் இருக்கு, எந்தெந்த காம்ப்படிஷன்ல எந்தெந்த மாணவர்கள் கலந்துக்கிறாங்க அவுங்க பெயர் லிஸ்ட் என்ன? அப்படிங்கிற விபரம் எதுவும் இல்ல.- சிவப்பிரகாசம்.

அரங்கத்தில் பயங்கர அமைதி.

சரி. விபரம் தரல, ஓகே... எட்டு மணிக்கு ரிப்போர்டிங் டைம். ஒரு 7.30 மணிக்கு வந்திருந்தாங்கன்னா இதையெல்லாம் சால்வ் பண்ணிருக்கலாம். அதுவும் வரல.. அவுங்க வந்த டைம் 8.15.

இப்போது ஆர்யா தலைகுனிய மற்ற மாணவர்களும் அவனைப் பின்பற்றினர்.

டேய் அத்தனை பேரும் நம்மளதான்டா பார்க்கிறாங்க...- விவேக்.

தெரியும். கம்முன்னு இருடா. இப்ப நீ வாய மூடல, கொன்றுவேன்.- ஆர்யா

சரி. இப்ப நான் என்ன செய்யணும்? நீங்களே சொல்லுங்க. போட்டியை குறிச்ச நேரத்துல ஆரம்பிக்காம அவுங்க பிரச்சனையைப் பார்க்கட்டுமா? ஒரு அரை மணி நேரம் வேஸ்ட் ஆகலாம், பரவாயில்லையா? இல்ல டிஸ்குவாலிஃபை செய்து அனுப்பிடலாமா? நான் என்ன பண்ண? நீங்களே பதில் சொல்லுங்க. அவுங்களை போட்டியில கலந்துக்க விடலாமா, வேணாமா? சரின்னா கைதூக்குங்க. மெஜாரட்டி ஓட் வின்ஸ்.- சிவப்பிரகாசம்.

ஹும், ஹும். எனக்கு நம்பிக்கை இல்ல. இப்பவே நம்ம பஸ் டிரைவருக்கு கால் பண்ணி வண்டிய ஸ்டார்ட் செய்யச் சொல்லலாம்.- விவேக்.

விவேக் ப்ளீஸ், ஷட் அப்.- ஆர்யா.

சொல்லுங்க ஸ்டூடன்ட்ஸ், கமான், யாருல்லாம் யெஸ் சொல்றீங்களோ கை தூக்குங்க. என்று  சிவப்பிரகாசம் மீண்டும் சொன்ன நொடியில் மாணவர்கள் அனைவரும் ஒன்றாகக் கைத்தூக்கினர். பள்ளி வேறுபாடு இல்லாமல் வந்திருந்த அனைத்து பள்ளி மாணவர்களும் கைகளை உயர்த்தியிருந்தார்கள்.

ஓகே தென். இது தான் கடைசி வார்னிங். இதை எல்லா ஸ்கூலும் மனசுல வச்சிக்கோங்க. அவுங்க போட்டியில் கலந்துக்கலாம். நன்றி.- சிவப் பிரகாசம்.

முன்னூறு மாணவர்களின் அறுநூறு கைகளைப் பார்த்ததும் ஆர்யாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

மகிழ்ச்சியுடன் சேர்ந்து இன்னும் ஒரு உணர்ச்சியும் அவனது முகத்தில் ஒட்டிக்கொண்டது.

அவனுடன் வந்திருந்த அவனது வ.ங.ஒ பள்ளியின் அத்தனை மாணவர்களின் மனதிலும் அந்த உணர்வு இருந்தது.

 அதன் பெயர் என்ன?

              *   *   *

                 7

ஆர்யாவின் முகத்தில் இருந்த உணர்ச்சியின் பெயர் தீர்மானம். போட்டிகளில் வெல்லவேண்டும் என்ற தீர்மானம்.

விவேக் நாம எத்தனை பேர்? - ஆர்யா.

இருபத்தியஞ்சு.- விவேக்.

எத்தனை காம்ப்படிஷன் இருக்கு?

இருபது இருக்கும்டா.

நாம எத்தனையில கலந்திருக்கோம்?

மொத்தம் பதினைந்துல கலந்துக்குறோம்.

மீதி அஞ்சு?

அதுக்கு நாம் ரெடியாகலடா. யாரும் அதுல கலந்துக்கல.

என்னென்ன போட்டி அது?

இந்தா இன்விடேஷன்ல இருக்குல. ஸ்பீக் அவுட், கொலாஜ், சான்ட் டிராயிங், கிளாசிக்கல் சிங்கிங், ஹேர்டூ.

ஓகே.. மிச்சம் இருக்கும் அஞ்சுலயும் சேரணும்.

எதுக்கு? என்ன விளையாடுறியா ஆர்யா?

அப்பதான்டா திர்ட் ரன்னர்-அப் கப்பாவது கிடைக்கும். இருபத்தியஞ்சு ஸ்கூலும் நம்மளை வேடிக்கை பார்த்துச்சுல... முதல் பிரைஸை ஜெயிக்கத்தான் முடியாது, ஆனா நாம ஸ்டேஜ் ஏறி ரன்னர்-அப் டிராபியாவது வாங்கணும் விவேக்.- ஆர்யா.

ஆமா... ஆர்யா அண்ணா சொல்றது கரெக்ட். நாம அந்த அஞ்சையும் விடக்கூடாது. ப்ரியா நல்லா பாடுவா. யமுனை ஆற்றிலே சுப்பரா பாடுவா. நான் அவளுக்கு ஹேர்டூ பண்றேன்.. சாரோட ஃபோன்ல கூகிள் பண்ணிப் பார்க்கலாம். - மயில் மாணவி.

ஓகே... கொலாஜ்க்கு மெட்டீரியல்ஸ்?- விவேக்.

அவுங்களே கொடுப்பாங்க. சில மேகஸின்ஸ் அவுங்களே கொடுப்பாங்களாம். சிஸ்ஸர் ப்ளேடு மட்டும் பஸ் டிரைவரை வாங்கச் சொல்லலாம்.- மயிலின் தோழி ப்ரியா.

அடுத்த அரை மணி நேரத்தில் விடுபட்ட ஐந்து போட்டிகளுக்கும் தயாராகினர்.

                *   *   *

 

போட்டியின் பெயர் :  கொலாஜ்

ஆர்யா, விவேக் மற்றும் ஷாம் கொலாஜ்ஜில் பங்குபெற்றார்கள். விதிப்படி நால்வர் ஒரு குழுவில் இருக்கலாம். ஆனால் ஆள் பற்றாக்குறையால் இவர்கள் மூவராய் பங்குபெற்றார்கள்.

டேய் எதடா வெட்ட? என்று விவேக் கொடுக்கப்பட்டிருந்த மாத இதழைப் புரட்டியபடியே கேட்டான்.

அந்தக் கார் நல்லா இருக்கு. எலெக்டிரிக் கார், காற்று மாசு போன்ற ஐடியா வச்சி ஒரு கொலாஜ் செய்யலாம் ஆர்யா.- ஷாம்.

குட் ஐடியா.- ஆர்யா.

டேய் இந்த மாடல் அழகா இருக்காடா.. இதையும் சேர்த்து அந்த காரோடு ஒட்டிவச்சா... கிளாமரா இருக்கும்ல? எப்படி என் ஐடியா?- விவேக்.

சாரி. தாங்க்ஸ்.. .- ஆர்யா மற்றும் ஷாம்.

ரொம்பத்தான் பண்ணாதீங்கடா. என்ற விவேக் இரண்டே நிமிடத்தில்,

டேய் இந்தக் காரை டயரோட சேர்த்து வெட்டணுமா.. இல்ல டயர் இல்லாம வெட்டணுமா? என்று மீண்டும் கேள்வியின் நாயகனானான்.

என்னது காருல டயர் இல்லாம வெட்டப்போறியா? நீ ஆணியே புடுங்க வேண்டாம். சிஸ்ஸரைத் தொட்ட மொத டெட் பாடி நீதான்டி... ஷாம்கிட்டக் கொடு சிஸ்ஸரை. நீ நாங்க வெட்டிக்கொடுக்கிறதை ஒட்ட மட்டும் செய்.- விவேக்கிடம் பாய்ந்தான் ஆர்யா.

இரண்டு நிமிடங்கள், இரண்டே நிமிடங்கள் அமைதியாக இருந்த விவேக்,

ஆர்யா அந்த ஸ்கூல் பசங்க என்ன பண்றாங்கன்னு எட்டிப்பார்க்கவா? நமக்கு ஏதாவது ஹெல்ப்பா இருக்கும்ல? என்றான் ஆர்யாவிடம் மூன்றாவது நிமிடத்தில்.

எதுக்கு டிஸ்குவாலிஃபை ஆகி அந்த சிவப்பிரகாசம் சார் முன்னே திரும்பப் போய் நிற்கச்சொல்றியா? தலையை நிமிர்த்தின செத்த டா. அந்தப் பக்கம் பார்த்த... கண்ணை நோண்டிடுவேன்.- ஆர்யா.

சரி.. சரி... என்ற விவேக் ஒட்டும் வேலையைத் தொடர.. இருபது நிமிடங்கள் கரைந்து போயின.

டேய் இன்னும் ஐஞ்சு நிமிஷம் தான்டா இருக்கு.. - விவேக் ஷாமிடம்.

டேய் இன்னும் மூனு நிமிஷம் தான்டா இருக்கு.. வேமா வேமா வெட்டு ஷாம் எரும. - விவேக் ஷாமிடம் கோபமாக.

ஷாம் நிமிர்ந்து முறைக்கவும், சரி சரி டிஸ்டர்ப் பண்ணல... நீ அந்தக் பேட்டரி பிக்சரை நிறுத்தி நிதானமா அழகா வெட்டிக்கொடு செல்லம்.- விவேக்

ஷாம் மெல்ல நிதானமாக வெட்டவும்.. பொறுமையிழந்த விவேக், அவன் வெட்டிக்கொடுத்ததும் வேகமாக ஒட்டி முடித்தான்.

சில நொடிகளில் டைம் அவுட் என்று ஆசிரியர்கள் சொல்ல அரங்கை விட்டு வெளியேறினார்கள் மூவரும்.

இதுக்குதான்டா அந்த மயில் பொண்ணைக்கூட வச்சிக்கலாம், ஷாம் வேணாம்னு சொன்னேன்.. அவன் ரொம்ப ரொம்ப ஸ்லோ டா.. அவன் வெட்டுறதுக்குள்ள விடிஞ்சிடும்போல. இப்பப் பாரு ஒழுங்கா முடிக்கிறதுக்குள்ள டைம் அவுட்டாகிடுச்சு.

எதுக்கு? பேப்பரை வெட்டுறதுக்கு பதிலா அவ டிரஸ்ல இருந்த மயில் இறகை நீ வெட்டி வெட்டி விளையாடுறதுக்கா? சரியான டையத்துலதான் முடிச்சிருக்கோம். - ஆர்யா.

சரி சரி எப்படியோ நாம மூனு பிரைஸ்ல ஏதாவது ஒன்னு வாங்குனா சரிதான். மாஞ்சு மாஞ்சு வேலைப் பார்த்ததுக்கு பிரைஸ் கிடைச்சா போதும். என்னம்மா உழைச்சிருக்கோம்... என்று பெருமையாய் விவேக் சொல்ல,

மாஞ்சு மாஞ்சு நீ உழைச்ச?? என்று கேள்வி கேட்டான் ஆர்யா.

சரிரிரி.. நீங்கதான் மூளையக் கசக்கி உழைச்சீங்க. நீங்க படைப்பாளி நான் ஒட்டாளி.. என்று விவேக் பதில் தர,

ஆர்யாவும் ஷாமும் விவேக்கை துட்சமாகப் பார்க்க..

ஹி.. ஹி.. கை வலிக்க வலிக்க ஒட்டுனேன்லடா.. எவ்வளவு டேலென்டா ஒட்டுனேன்?என்றான் விவேக்.

அந்தப் பதிலைக் கேட்டதும் ஷாம் படுடென்ஷன் ஆகிவிட்டான்.

நீ டேலென்டா ஒட்டுன? முதல் நாலு படத்தை ஃபேவிகால்ல முக்கி எடுத்து வெட்டிக்கொடுத்த அந்த பேப்பரே கிழியிற மாதிரி ஆகல? நாலாவது படிக்கிற புள்ளக்கூட நாலு கார்னர்ல கொஞ்சமா ஃபேவிகால் தடவி அழகா அம்சமா சார்ட்ல ஒட்டும். இவன் ஒட்டுனான் பாரு ஆர்யா, ரோட்டுல செவத்துல போஸ்டர் ஒட்டுற மாதிரி ஃபேவிகால்லை அப்பி அப்பி... அவன் ஒட்டுன லெட்சணத்தைப் பார்த்து நீ மட்டும் திட்டல, நம்ம சார்ட்டே (Chart) ஃபேவிகால் நாத்தம் எடுத்திருக்கும். நீ திட்டிய பிறகுதான் ஒழுங்கா ஒட்டுனான். - ஷாம்.

ஷாம், ரொம்படா இது.- விவேக்

டேய் வாங்கடா போவோம்... இந்தச் சண்டை இப்பத் தேவையாடா? அடுத்து ஸ்பீக் அவுட் போட்டிக்குப் போகணும்.- ஆர்யா.

கொலாஜ் முடிந்து வேகமாக அடுத்தப் போட்டிக்கு தயார் ஆனார்கள் விவேக்கும் ஆர்யாவும். அடுத்த போட்டி ஸ்பீக் அவுட். ஒருவர் நடித்துக்காட்ட மற்றொருவர் அந்த ஆங்கில வார்த்தையை குத்துமதிப்பாகக் கண்டுபிடித்தால் கூடப் போதுமானது. அந்த ஆங்கில வார்த்தை பெரிய திரையில் காட்டப்படும். பதிலைக் கண்டுபிடிப்பவரிடம் திரை மறைக்கப்படும். பதிலைக் கண்டுபிடிப்பவர் ஒரு நாற்காலியில் திரைக்கு முதுகு காட்டியபடி அமர வைக்கப்படுவார்.

உதாரணமாக Happy என்று திரையில் தோன்றினால் ஒரு மாணவன் சிரித்த முகமாய் நடித்துக்காட்டியதும் அந்த வார்த்தையை நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாணவன் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இந்தப் போட்டி மேடையில் நடைபெறுவதால் மாணவர்கள் சரியாக கண்டுபிடிக்கும் போது ஆரவாரம் செய்து வேடிக்கை பார்க்கும் மாணவர்கள் கூட்டம், தவறாகக் கண்டுபிடிக்கும்போது உச்சுக் கொட்டிடும். ஓ... யே... என்று பலதரப்பட்ட சப்தங்களால் அரங்கமே சலசலக்கும்.

விதிகளைப் பற்றி அறிந்ததும் விவேக் இப்போட்டியில் இருந்து ஜகா வாங்கிட நினைத்து,

ஆர்யா போட்டி ரொம்ப டஃப்பா இருக்குல? அதை டீல்ல விட்டுருவோம் டா. என்று அமைதியாகச் சொல்லிப் பார்த்தான்.

அவனை நன்றாக முறைத்த ஆர்யா, நீ நடிக்கிற நான் கண்டுபிடிக்கிறேன். என்றான் திட்டவட்டமாய்.

கழுத்துக்கு வந்துவிட்ட கத்தியை எப்படியேனும் தூர எறிந்துவிட வேண்டும் என்ற ஆசையில் பேராசையில்,

டேய் வேணாம்டா. பெரிய ஸ்டேஜ்ல வச்சி நடக்குதுடா. கையெல்லாம் உதறும். ஆடியன்ஸ்ல நிறைய கர்ல்ஸ் இருக்காங்கடா... என்றான் குழந்தைபோல அழும்குரலில் விவேக்.

இன்னிக்கி காலையில மொத்த ஸ்டூடன்ஸ் முன்னே நம்ம எல்லோரோட மானமே போச்சு. இப்ப கை உதறுனா என்ன? கால் உதறுனா என்ன?- ஆர்யா.

கத்தி கழுத்தைவிட்டு நகரமாட்டேன் என்று சொல்லச் சொல்ல வீரம் சுரக்க ஆர்யாவிடம் கோபமாய், டேய்... வேணாம்டா. உனக்கு இன்னும் அரை மணி நேரத்துல பேச்சுப் போட்டி ஆரம்பிக்கதுல? அதுக்குப் படியேன். ஏன்டா என்னோட உயிர வாங்குற? இந்தப் போட்டியை டீல்ல விட்டுருறலாம். என்றான் விவேக்.

நீதான இப்ப ஃப்ரீயா இருக்க? மற்றவங்க எல்லாம் ஆளுக்கொரு போட்டியில இருக்காங்க. டம் ஷரட்ஸ்ல கலந்துக்கிட்டீல. அது மாதிரிதான் இதுவும். என்று நிதானமாய் எடுத்துச் சொன்னான் ஆர்யா.

ஆர்யா.. அது அட்வர்டைஸ்மென்ட் கண்டுபிடிக்கணும். இதுல இங்கிலிஷ் வேர்டைக் (word) கண்டுபிடிக்கணும். இரண்டுக்கும் ஹிமாலயாஸ் வித்தியாசம் இருக்குடா. இதெல்லாம் ஹாரிபாட்டர் புக்கை கரைச்சிக் குடிச்சவங்க கலந்துக்கிற கேம்டா. என்னோட இங்கிலிஷ் நாலெஜ் Humpty dumpty sat on a Wall... Humpty Dumpty had a great fall.. வரை தான்டா.. என்று விவேக்கும் ஆர்யாவிற்கு நிதானமாய் எடுத்துச் சொல்ல,

அதெல்லாம் முடியும்... நீ நடிக்கிற நான் கண்டுபிடிக்கிறேன். அவ்வளவுதான் பேச்சு முடிந்தது. என்று பேச்சை முடித்துக்கொண்டான் ஆர்யா.

ஆர்யா... ப்ளீஸ் டா.

நீ நடிக்கிற, நான் கண்டுபிடிக்கிறேன்.

திரும்பவும் முதல்ல இருந்தா? புரோட்டா கோட்டை யாருடா என்கிட்டக் கேட்காம அழிச்சது? அதெல்லாம் என்னால நடிக்க முடியாது. நான் மட்டும் முன்னூறு பேர் முன்னாடி ஆ ஊன்னு கத்திட்டு லூசு மாதிரி நடிக்கணும்.. ஊரே சிரிக்கணும்.. நீ ஜம்முன்னு சேர்ல உட்கார்ந்து கண்டுபிடிப்பியாக்கும்?

அப்ப நீ நடிக்க மாட்ட?

மாட்டேன். நீ நடி நான் சேர்ல உட்கார்ந்து கண்டுபிடிக்கிறேன். தெரியலைன்னா பாஸ் சொல்லப்போறேன்... அவ்வளவுதான? ஹி.. ஹி..

இதுதான்... இதுதான் உன்னை போட்டியில நான் நடிக்கச் சொன்னதுக்குக் காரணம். சேர்ல உட்கார்ந்துகிட்டு பாஸ் பாஸ்னு வெட்கமே இல்லாம சொல்வன்னுதான்... நான் கண்டுபிடிக்கிறேன், நீ நடின்னு சொன்னேன். ஜெயிக்கணும்னு டிரை பண்ணுடா லூசு.

இந்த லூசு, பக்கின்னு நம்ம கிளாஸ் பொண்ணுங்க மாதிரித் திட்டாதடா. பொண்ணுங்கதான் அவுங்களுக்குள்ள இப்படித் திட்டுவாங்க.

சரிடா எரும.

எருமையா?? என மனதில் சொல்லிப்பார்த்து ஒரு நிமிடம் எருமையின் கருத்த தேக்தை தனது தேகத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து, டேய் நான் எருமை கலர்லயா இருக்கேன்? நான் வீட்டிஷ் பிரௌன் டா... என்று மனதில் சொல்லியபடியே அதிர்ந்து நின்ற விவேக்கிடம், இந்த வாரம் தலைவர் படம் ஃப்ர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோ கட். என்று ஆர்யா சொன்னதும் வேறு வழியேயில்லாமல்,

சரி... சரி, ஆ ஊன்னு நடிச்சே தொலைக்கிறேன். என்று சம்மதித்தான் விவேக்.

ஒழுங்கா நடிக்கல ஸ்டேஜ்ல வச்சே மிதிப்பேன்... என்று கூறி ஆர்யா எச்சரிக்கை செய்தபோது வாய்க்குள்ளேயே புலம்பினான் விவேக்.

ஆம்பளப்புள்ளையா பொறந்தா ஒரு சினிமாவுக்காக, பப்புக்காக, ஒரு கோவா டூருக்காக, ஒரு பீட்சா பர்கருக்காக, தப்பில்லாத இங்கிலிஷல் ஒரு மெயில் எழுதுவதற்காக, வேலைக்குச் செல்லும் இடத்தில் ஒரே அறை எடுத்து ஒன்றாகத் தங்கினால் நாலு வாய் சோறு சமைச்சி வீடு பெறுக்க... என்று ஆயிரம் ஆயிரம் தேவைகளுக்காக காலம் முழுவதும் இப்படித்தான் ஃப்ரண்ட்கிட்ட அடிமையாகக் கிடக்கணும்... (இன்னும் நிறைய காரணங்கள் இருங்குங்க, ஆனால் அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லிங்க...)

 


ReplyQuote
Meena
(@meena)
Estimable Member Moderator
Joined: 2 years ago
Posts: 189
01/07/2020 6:18 am  

ஸ்பீக் அவுட் போட்டி விவேக்கை அதிகம் படுத்தியெடுக்காமல் இனிதே முடிந்தது.

தான் பங்குபெற்ற அனைத்து போட்டிகளும் முடிந்த பிறகு விவேக் பேச்சுப்போட்டிக்குச் சென்றிருந்த ஆர்யாவைத் தேடினான். ஆர்யா அந்த ஸ்கூல் கேன்டின்னில் லெமன் ஜுஸ் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தான். விவேக் ஆர்யாவின் அருகே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

என்னடா... எப்படிப்போச்சு உன் பேச்சுப்போட்டி?”- விவேக்.

ப்ச்... தள்ளி உட்காரு... எதுக்கு உரசுற?

நல்லா பேசுனியா?

ம்.

ப்ர்ஸ்ட் பிரைஸ் தட்டிருவியா?

வரும் வரும். செகன்ட் பிரைஸ் வந்திடும்.

அப்ப உன் அக்காகிட்ட பெட்டுல தோத்துட்டியா?? என்று கூறியபடியே சிரித்துக்கொண்டே தனது இடதுபுறம் திரும்ப, அங்கே மதுமிதாவும் அவளது தோழிகளும் கட்லட் சாப்பிட்டபடி அமர்ந்திருந்தனர். இரண்டு நிமிடங்கள் அந்த திசையில் தனது கண்ணின் லென்சுகளை ஃபோகஸ் செய்தவன் மீண்டும் ஆர்யாவின் பக்கமாகத் திரும்பினான். ஆனால் ஆர்யாவின் கண் லென்சுகள் மதுமிதாவின் மேல் இருந்த ஃபோகஸை எடுக்கவே இல்லை.

அடப்பாவி, இதுக்குதான் உரசாம தள்ளி உட்காரச் சொன்னானா? என்று மனதில் நினைத்தாலும் உடனே நண்பனை மன்னித்து அவன் செய்த பிழையை மறந்து,

டேய் ஆர்யா.. அது மதுமிதாதான? போன மாசம்தான்டா லோட்டஸ் காம்ப்டிஷன்ல பார்த்தேன்.. செம டேலென்ட்டா அந்தப் பொண்ணுக்கு. என்று விசாரித்தான் விவேக்.

ம். வெரி டாலென்டட் மதுமிதா.

அவகிட்ட தோத்துட்டியா?

ம். கிட்டத்தட்ட, ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு...

எப்படிடா அவகிட்டத் தோத்திட்டு அவளைப் புகழ்ந்து பேசுற? டேய் காலையில என்னமோ சொன்னியே? அது என்ன... ம் ப்ரஸ்டீஜ் போயிடும்னு சொன்ன? அந்த ப்ரஸடீஜ் குக்கர் இப்ப என்ன ஆச்சு டா?

திறமை எங்க இருந்தாலும் தட்டிக் கொடுக்கலாம் டா.

நீயும் தட்டிக்கொடு... குட் ஜாப்ன்னு சொல்லி தட்டிக்கொடு ஆனா எதுக்கு விழுந்து விழுந்து ஸைட் அடிக்கிற?

சும்மாதான் ஸைட் அடிக்கிறேன். ரொம்ப அமைதியா இருக்கால?

இப்ப அது ரொம்ப முக்கியமா? வா மெயின் ஸ்டேஜ் போகலாம். ரிசல்ட் சொல்லப்போறாங்க.

என்னோட காம்ப்படிஷன் எல்லாம் முடிஞ்சிடுச்சு. இப்ப நான் ரெஸ்ட் எடுக்கிறேன். நீ போகணும்னா போ. நான் பத்து நிமிஷம் கழிச்சிதான் வருவேன்.

உன்னோட கண்ணுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தா தேவலை.

ஆர்யா விவேக்கைப் பார்த்து முறைக்கவும்,

நைட்லாம் காம்ப்படிஷனுக்கு படிச்சிருப்பில டா. அதான் சொன்னேன். என்று பம்மினான்.

நீ கிளம்பு டா. நான் எனக்கு கட்லட் ஆர்டர் பண்ணப்போறேன். நிதானமா கட்லட் சாப்பிட்டதும் வர்றேன்.

அப்ப நீ வரமாட்ட? ஸ்கூல்விட்டு ஸ்கூல் வந்திருக்கோம்... வேணா, வா போலாம்.

ஏன் குட்ஷெப்பர்ட் பொண்ணுங்களை ஸைட் அடிக்கக்கூடாதுன்னு ஏதும் ரூல்ஸ் இருக்கா?

குட்ஷெப்பர்ட் பொண்ணுங்களை ஸைட் அடிக்கலாம் ஆனா... குட்ஷெப்பர்டோட வி-பி பொண்ணை ஸைட் அடிக்கக்கூடாது.

வி-பி பொண்ணா இருந்தா என்ன? பிரின்சி பொண்ணா இருந்தா என்ன? நான் ஸைட் அடிப்பேன். என்றவன் மதுமிதா கண்டுபிடிக்கும்வரை ஸைட் அடிப்பதை நிறுத்தவேயில்லை.

 

           *   *   *

ஒருவழியாக மதுமிதா கிளம்பும் வரை அவளை ஸைட் அடித்துவிட்டு ஆடிட்டோரியத்திற்கு வந்தான் ஆர்யா. அடுத்த ஒரு மணி நேரத்தில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

ஆர்யா மற்றும் அவனது பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்தபடியே நான்காம் இடத்தைப் பிடித்தார்கள். திர்ட் ரன்னர் அப் கப் அவர்கள் பள்ளிக்கு அந்த மாபெரும் மேடையில் வைத்து வழங்கப்பட்டது. அதை தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் கொடுக்கும் போது, சூப்பர் பாய்ஸ் அன்ட் கர்ல்ஸ். Y.M.J கீப் இட் அப். என்று சிரித்தபடியே மாணவர்கள் கையில் கொடுத்தது தான் ஆர்யாவையும் அவனது பள்ளி மாணவர்களையும் பரவசப்படுத்தியது.

மேடையில் இருந்து இறங்கி வந்ததும் Y.M.J மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகுழுக்கியபடி கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். ஆர்யா அமைதியாக அந்த பிரமாண்டமான அரங்கத்தில் Y.M.J மாணவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் நடு மயமாக உட்கார்ந்திருக்க, மயில் வேடமிட்டிருந்த சிறுமிகள் “East or West Y.M.J is the best. என்று கத்திக்கொண்டே இருந்தனர்.

Y.M.J கூட்டம் கும்மாளமிட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு வெகு அருகிலேயே தான் மதுமிதாவும் ஹரினியும் அமர்ந்திருந்தனர்.

என்னப்பா... ஓவர்ஆல் ஷீல்ட்டு நமக்குதான கிடைச்சிருக்கு... அந்த Y.M.J ஸ்கூல் பயங்கரமா சீன் போடுறாங்க?? என்று மதுமிதா ஹரினியிடம் கேட்டாள்.

ஆமா. மது நமக்கு தான் ஓவர்ஆல் ஷீல்டு. அந்த ஸ்கூலுக்கு திர்ட் ரன்னர் அப் கிடைச்சிருக்கு. அதுக்குதான் இந்த அலப்பறை..- ஹரினி.

ஏய் போட்டியில இருந்து மொத்தமா பிரின்சிபால் டிஸ்குவாலிஃபை செய்திருப்பாங்க, அதையும் தாண்டி வந்து ரன்னர் அப் வந்தது எவ்வளவு பெரிசு தெரியுமா? என்று சொன்னாள் மற்றொரு மாணவி சாருலதா.

“East or West Y.M.J is the best. என்று மீண்டும் மீண்டும் Y.M.J மாணவர்கள் கத்திக்கொண்டே இருந்தனர்.

இவுங்க ரௌடிசம் தாங்கலயே... என்று கூட்டத்தை மதுமிதா உற்றுப் பார்த்தபோதுதான் கூட்டத்தின் நடுவே இருந்த ஆர்யாவைப் பார்த்தாள்.

அவளும் மனதுக்குள் தனது தோழி சாருலதாவின் மெச்சுதலை ஆமோதித்தாள். ஆர்யா காட்டிய கெத்தை வேடிக்கை பார்த்தவளுக்கு சிரிக்கவா, கோபப்படவா என்றே தெரியவில்லை. தங்களது ரன்னர்-அப் கப்பை மேஜைமேல் வைத்துக்கொண்டு அதைச் சுற்றி நின்று மயில் வேடமிட்டிருந்த சிறுமிகள் கைதட்டிக் கத்திக்கொண்டிருக்க ஆர்யாவும் விவேக்கும் மந்தகாசமாய் சிரித்தபடி அனைவருக்கும் டிரீட் வைத்துக்கொண்டிருந்தார்கள். கேன்டீனில் இருந்து பப்ஸ், ஐஸ்கிரீம் என்று வாங்கி வந்து அனைத்து மாணவர்களும் பகிர்ந்து உண்டதை மதுமிதா வேடிக்கை பார்த்தாள்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுவை மது என்று மெல்ல அழைத்தாள் ஹரினி.

மது.- ஹரினி.

ம்??

அந்தப் Y.M.J பையன் ஆர்யா உன்னைப் பார்த்திட்டே இருக்கான்ப்பா..

ம்?? அப்படியா?

ஏய். நீ பார்க்கல? அவன் பார்த்ததை நீ பார்க்கல? மேடம் இவ்வளவு நேரம் குற்றாலத்துல தான இருந்தீங்க. ஆர்யா அருவி கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு.

அட போப்பா, நீ வேற... வேறப் பேச்சு பேசு. பேட்மிட்டன் கிளாஸுக்கு லேட் ஆச்சு. மணி மூனு.. போலாமா? பிரைஸ் கொடுத்துட்டாங்கல, வா போலாம். இந்த ஃப்ர்ஸ்ட் பிரைஸ் டிராஃபியை அப்பாகிட்ட முதல்ல காட்டணும். என்னோட டிராஃபியை எல்லாம் வைக்கிறது ஒரு ஷெல்ஃப் செய்யப்போறார் தெரியுமா? என்று பேச்சை மாற்றினாள் மதுமிதா.

அப்ப நிஜமாவே போலாம்கிறியா? ஆர்யா இன்னும் கொஞ்ச நேரம் ஸைட் அடிச்சிட்டுப்போட்டுமே? மத்தவங்க சந்தோஷத்தைக் கெடுக்குறது ரொம்ப ரொம்பத் தப்பு மா.

யேய்... என்று மது தனது பேக்கால் ஹரினியை மது அடிக்கவும், சரி சரி அடிக்காத. போலாம். என்று அந்த ஹரினி இடத்திலிருந்து எழுந்தபோது அந்த மயில் உடையணிந்த Y.M.J பள்ளி சிறுமிகள் அவர்கள் அருகே நின்று கொண்டிருந்தார்கள்.

ஹலோ.- மயில்கள்.

ஹலோ. திர்ட் ரன்னர் அப் போல? கங்கிராட்ஸ்.- மது.

ஆமா அக்கா.. நீங்க ரொம்ப நல்லா பேசுனீங்க.. நீங்க கலந்துகிட்ட பேச்சுப்போட்டியை நாங்க வேடிக்கை பார்க்க வந்தோம். எங்க ஸ்கூல் ஆர்யா அண்ணா பேசுறதைக் கேட்கத்தான் வந்தோம், அப்படியே நீங்க பேசுனதையும் கேட்டோம். ரெண்டு பேரும் சூப்பரா பேசுனீங்க.

தாங்க்ஸ். ஆர்யாவும் நல்லாதான் பேசினான்.- மது.

அக்கா எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?- மயில்கள்.

சொல்லுங்கப்பா.- மது.

உங்ககிட்ட ஃபோன் இருக்கா? என்னோட பேரன்ட்ஸ்க்கு ஒரு மிஸ்ட் கால் பண்ணணும். அப்பாவை கூப்பிட வரச் சொல்லணும்...

வீடு ரொம்ப தூரமா?

ஆமா. வரும்போது ஸ்கூல் பஸ்ல வந்தோம். போகும்போது அப்பா வர்றேன்னு சொன்னாரு, அதான் ஒரு கால் பண்ணி வருவாரா வரமாட்டாரான்னு கேட்கணும்.

சரி.. யார்கிட்டயும் எங்ககிட்ட ஃபோன் இருக்குன்னு சொல்லாதீங்க.- மது.

ம்... தாங்க்ஸ்க்கா.

இரு மயில்களும் தங்களது பெற்றோருக்கு கால் செய்து பேசி முடித்ததும், அக்கா அப்படியே எங்க கோஆர்டினேட்டருக்கும் அப்பா வர்றார்ங்கிற விஷயத்தை சொல்லிடுறோம். இந்த பெரிய கிரவுன்டல அவரை எப்படி நாங்க கண்டுபிடிக்கிறது?

ம். நம்பர் சொல்லுங்கப்பா. நான் டயல் பண்ணித் தர்றேன். சீக்கிரம்ப்பா நான் பேட்மிட்டன் கிளாஸ் போகணும்.- மது.

ஓகே.. ஓகே இதோ டூ மினிட்ஸ்க்கா. என்னோட டைரியில சார் நம்பர் வச்சிருக்கோம். இதோ எடுத்துட்டேன்.. - மயில்கள்.

                  *   *   *

                  8

மதுவும் ஜானுவும் தங்களது வேன் நிற்கும் இடத்தில் பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். மதுமிதாவுடன் இன்னும் இருபது மாணவ மாணவிகள் காத்திருந்தனர்.

வேன் டிராஃபிக்ல மாட்டிக்கிச்சாம். முதல் டிரிப்புக்கு போன வேன் வர இன்னும் அரை மணி நேரம் ஆகுமாம். என்றாள் மதுவின் அருகே இருந்த மாணவி.

மது, நாம அப்பாவுக்கு கால் பண்ணுவோமா?- ஜானவி.

இன்னும் அரை மணி நேரம்தான... வெயிட் பண்ணு ஜானு. அப்பாவுக்குதான் வெட்டி அலைச்சல்.- மது.

மது ஜானவியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆர்யாவும் விவேக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த தங்களது பள்ளிப் பேருந்தை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தனர்.

மது, அந்த அண்ணா செம போல்டுப்பா.

யாரு?

இப்ப நம்ம பஸ் ஸ்டான்டுக்கு பக்கமா நடந்து வந்துட்டு இருக்காரே... அவர்தான்.

ஓ... அப்படியா?

என்ன அப்படியான்னு கேட்டுட்ட? ஸ்பீக் அவுட் போட்டி ஆன் ஸ்டேஜ்ல நடந்தது. அந்த அண்ணா சூப்பரா ஆன்சர் கண்டுபிடிச்சாங்க. நீ இங்கயே வெயிட் பண்ணு. இதோ வந்திடுறேன்.- ஜான்வி.

ஒண்ணும் வேணாம். என் பக்கத்தை விட்டு நகர்ந்த... தொலைச்சிடுவேன்.- மது.

அடப்போ மது. நான் விஷ் பண்ணிட்டு வந்திடுறேன். உனக்கு என்ன வந்திச்சு?

ஆர்யாவை நான்தான் எலக்கியூஷன்ல ஜெயிச்சேன். நியாயமா பார்த்தா, நீ எனக்குதான் விஷ் பண்ணணும்.

நான் தான் உன் பிரைஸைப் பார்த்து ஸோ சுவீட் மதுன்னு சொல்லிட்டேனே? இப்ப ஆர்யா அண்ணாகிட்ட போய் விஷ் பண்ணிட்டு ஓடி வந்திடுறேன். பை மது..

ஜானு... எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற? எத்தனை பேர் பிரைஸ் வாங்கிருக்காங்க? இது ஒரு விஷயமா?

ஒரு போட்டியில சேர்ந்து முதல் பிரைஸ் வாங்குறது பெருசு இல்லப்பா. நாலு போட்டியில சேர்ந்து நாலுளையும் ஏதாவது ஒரு பிரைஸ் தட்டுறதுதான் பெருசு... அவுங்க பஸ்ல ஏறுறாங்க பாரு... உன்கூட பேசிட்டே அவுங்களை மிஸ் பண்ணப்போறேன்... அச்சோ.- என்ற ஜான்வி வேகமாக ஆர்யாவின் பள்ளிப்பேருந்து நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

பேருந்தின் முதல் படிக்கட்டில் விவேக்குடன் நின்றிருந்த ஆர்யாவும் விவேக்கும் தங்கள் முன்னே கங்கிராட்ஸ்ண்ணா. என்று கைநீட்டிய ஜான்வியைப் பார்த்து புன்னகைத்தபடி கைகுலுக்கினார்கள்.

எல்லா போட்டியிலயும் சூப்பரா பண்ணீங்க... இன்னும் பிரிபேர் பண்ணிருந்தீங்ன்னா சூப்பரா ஜெயிச்சிருப்பீங்க.- ஜான்வி.

ஆமா... ஆமா நிச்சியமா. என்று பின்னங்கழுத்தை தடவிக்கொண்டே ஸ்டைலாகச் சொன்ன விவேக்கின் பார்வை ஜான்வியிடம் இருந்தாலும் ஆர்யாவின் பார்வை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த மதுமிதாவிடம் இருந்தது. அதனைப் பார்த்த ஜான்வி, அது என்னோட சிஸ்டர் தான். உங்ககூட எலக்கூஷன் போட்டியில ஜெயிச்சது என்னோட சிஸ்டர் தான். என்றாள் ஆர்யாவிடம்.

உங்க சிஸ்டரா? நல்லா பிரசன்ட் பண்ணாங்க. என்றவன் மதுவை நோக்கியபடி சிரித்துக்கொண்டே அந்த பேருந்து படிக்கட்டில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

               *   *   *

 


ReplyQuote
Meena
(@meena)
Estimable Member Moderator
Joined: 2 years ago
Posts: 189
01/07/2020 6:20 am  

ஹாய்.- என்று கூறி மதுவின் முன்னே நின்றான் ஆர்யா.

ஹாய். என்றாள் மதுமிதா.

நல்லா பேசுன மதுமிதா.- சிரித்த முகமாய் ஆர்யா.

நீயும் நல்லா பேசுன. முதல் பிரைஸ் வராதோன்னு டவுட்டாவே இருந்திச்சு.- மது.

நோ, நோ எனக்கு டவுட்டே இல்ல. நீ தான் வாங்குவன்னு கன்ஃபார்மா நம்பினேன்.

நல்ல நல்ல பாயின்ட்ஸ் பேசுன ஆர்யா.

என்னோட பெயர்கூட தெரிஞ்சிருக்கே? பரவாயில்ல.

நீதான் Y.M.J க்கு பிரான்ட் அம்பாசிடர் ஆச்சே? உன் பேர் தெரியாம இருக்குமா? Y.M.J ஸ்கூல் S.P.L தெரியாம இருக்குமா?

ஹா... ஹா. என்று ஆர்யா சிரித்தபோது அவனது பள்ளிப் பேருந்து ஹார்ன் ஒலியெழுப்பியது.

உங்க பஸ்தான்... பஸ் கிளம்பப் போகுது போல... நைஸ் டு மீட் யு.

ஆமா... என் பஸ்தான். பை. அன்ட் நைஸ் டு மீட் யூ டூ.- ஆர்யா.

                  *   *   *

ஹார்ன் ஒலியெழுப்பியதும் ஆர்யாவின் பள்ளி மாணவர்கள் அனைவரும் அதில் ஏறிக்கொண்டார்கள். பேருந்து குட்ஷெப்பர்ட் பள்ளியில் இருந்து புறப்பட்டது. ஆர்யாவுடன் பேருந்தில் ஏறியதும் விவேக் ஆர்யாவைப் பார்த்து கெக்கபுக்கவென சிரித்தான்.

என்ன? சார் பார்வை, பரதநாட்டியம் ப்ரியாவை விட்டுப் பத்தடி விலகிருச்சு?

ப்ரியாவா யாரு?? நம்ம கிளாஸ் ப்ரியாவையாச் சொல்ற விவேக்?

ஏய்ய்ய்... வேணா ஆர்யா பொய் புழுகாத. காலையில பஸ்ல ஏறினப்போ வச்சக் கண் எடுக்காம சைட் வியுவில பார்த்திட்டு இருந்த... இப்ப மாத்திப் பேசுறியா?

அதச் சொல்றியா??

ஆமா சார். அதைத்தான்... அதையேத்தான் சொல்றேன்.

அது சும்மா டா. ஆனா மதுவோட அதைக் கம்பேர் பண்ண முடியாது. என்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷ் மதுதான். அவ அந்த ஸ்டேஜ்ல பேச ஆரம்பிச்சப்பவே நான் ஃப்ளாட் ஆகிட்டேன். நல்லவேளை நான் பேசின பிறகு அவ பேசினா, இல்லாட்டி செகன்ட் பிரைஸைக்கூட கோட்டை விட்டிருப்பேன்.

எனக்கு ஒண்ணு புரியல...

எது?

ஏன்டா இந்தப் பசங்க மட்டும் பொண்ணுங்களைப் பார்த்ததும் ஃப்ளாட் ஆகிடுறாங்க? படிச்ச மேக்ஸ் மறந்து போயிடுது, ஃபிசிக்ஸ் மறந்துபோயிடுது, இங்கிலிஷ் கிராமர்ல ஃப்ர்ஸ்ட் பெர்சன் சிங்குளர் (First person singular) , செகன்ட் பெர்சன் சிங்குளர்கூட(Second Person singular) மறந்து போயிடுது. நீ கூட இப்ப சொன்னீயே... மது முதல்ல பேசியிருந்தா கிளீன் பவுள்டு ஆகிருப்பேன்னு சொன்னல? அது ஏன்? பசங்க அவ்வளவு வீக்கா? பொண்ணுங்க பத்து பேரை ஸைட் அடிச்சாலும் அசராம நூத்துக்கு நூறு வாங்குறாங்க. பொண்ணுங்க அவ்வளவு ஸ்டாராங்கா டா?

ஓ... அதுவா... தெரியல விவேக். அவுங்களுக்கும் ஏதாவது ரியாக்ஷன் நடக்கும் மச்சி. வெளியே காமிக்க மாட்டாங்க. நாம ஓப்பன் புக். திறந்த புத்தகம். உள்ளதை உள்ளபடி வெளியே பளிச்சுன்னு காட்டுறோம். ஆனா பொண்ணுங்க அப்படி இல்ல. அதுதான் பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் டா.

சின்ன கரெக்ஷன் ஆர்யா. புத்தகம்னு பொதுவா சொல்லாத, நாம திறந்து வைத்த ஒரு குயர் அன்ரூல்ட் நோட். பொண்ணுங்க தான் பேனா. நம்ம மேல எதுனாலும் எவ்வளவுனாலும் அந்த பேனா எழுதலாம்.

ஹா... ஹா... பேனாவைப் பிடிச்சி எழுதுறவன் யாரு?

விதி ஆர்யா. விதி சார்தான் பேனாவை கையில வச்சிருக்கார். என்றான் விவேக் சிறிதும் யோசிக்காமல்.

ஹா... ஹா...

இதுல ப்யூட்டி என்னன்னா, ஹீரோபேனாவா இருந்தாலும் சரி, பார்பி பேனாவா இருந்தாலும் சரி, என்ன எழுதப்போகுதுன்னு பேனாவுக்குத் தெரிஞ்ச அளவுகூட அந்த அன்ரூல்டு நோட்டுக்குத் தெரியாது.

ஹா... ஹா... எக்ஸாக்ட்லி.

அது மட்டும் இல்ல சில நேரம் மேஜிக் இன்க் கூட அந்தப் பேனாவில் இருக்கும்டா. எழுதி முடிச்ச கையோட இன்க் மாயமா மறைஞ்சி போயிடும்.

டேய்... சும்மாயிரு. போதும் விவேக்.

நிஜமாதான் ஆர்யா. அந்த மேஜிக் இன்க் மாதிரி மூனு ஃபேஸ்புக் பொண்ணுங்க என்கிட்ட மாயமா மறைஞ்சிருக்காங்க. எனக்கு என்ன ஒரு வருத்தம்... முழு புக்கையும் எழுதி முடிச்சிட்டு மறைஞ்சிருக்கலாம்... பாதியில அம்போன்னு விட்டுட்டுப் போனதுதான் வருத்தமா இருக்கு ஆர்யா. அதுல ஒரு பொண்ணு அத்தியாயம் 1 எழுதியதோடு எஸ்ஸாகிடுச்சு.

ஹா... ஹா... யாரும் ஃப்ரண்டாகக்கூட டிக்ளேர் பண்ணலயா?- ஆர்யா.

விவேக் மௌனச் சாமியாராக இருந்தான்.

விவேக்கின் மௌனம் யெஸ், ஆம், என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். இருபது நிமிடங்கள் நகர்ந்திருந்த பேருந்தில் இருபது தத்துவங்களைச் சொல்லி முடித்து ஆர்யாவும் விவேக்கும் சிரித்து ஓய்ந்தனர்.

              *   *   *

சிரித்து ஓய்ந்தபிறகு பேருந்தில் இருந்தவர்களிடம் தனது தொலைநோக்கு பார்வையை செலுத்தினான் விவேக். அப்போதுதான் ஆர்யாவிடம் தனது அதிமுக்கியக் கேள்வியைக் கேட்டான். அத்தனை நேரம் கவனிக்காமல் விட்டுப்போன தனது கவனக்குறைவை(??) நினைத்தபடியே ஆர்யாவிடம் அக்கேள்வியைக் கேட்டான் விவேக்.

என்னடா மயில்களைக் காணோம்??- விவேக்.

விவேக் கேள்வி கேட்டதும் பேருந்தில் இருந்தவர்களை தானும் நோட்டம் விட்டான் ஆர்யா. விவேக்கின் கண்டுபிடிப்பு சரியென்றான பிறகு,

அதான, அந்த கர்ல்ஸ் எங்க? என்று விவேக்கிடம் சந்தேகமாய் கேட்ட ஆர்யா நூலக மேலாளரிடமும் அக்கேள்வியைக் கேட்டான்.

அவுங்க பேரன்ட்ஸ் வந்து கூட்டிட்டுப் போயிட்டாங்க. என்று நூலக மேலாளர் சுப்பிரமணியன் ஆர்யாவிடம் சொன்னதும்,

யார் சார் சொன்னா? நல்லா தெரியுமா சார் விட்டுட்டுப் போயிடப்போறோம். என்று அநியாயதிற்குப் பதறினான் விவேக்.

டேய் அசிங்கமா இருக்குடா, ரொம்பத் துள்ளாத... அவர்தான் சொல்றாருல? விடு.- மெல்லிய குரலில் விவேக்கை அடக்கியபடி ஆர்யா.

அந்தப் பொண்ணுங்க பேரன்ட்ஸ்கூடப் போறதா எனக்கு கால் பண்ணாங்க. அந்தப் பொண்ணுங்களோட அப்பாவும் என்கூட பேசிட்டார். நம்ம பிரின்சியோட ஃப்ரண்ட் தான அவரு... அதான் அவர், என் பொண்ணுங்களை நானே கூட்டிட்டுப் போகவான்னு கேட்டதும் சரின்னு சொல்லிட்டேன்.- லைப்ரரியன்.

பொண்ணுங்க உங்களுக்கு கால் பண்ணாங்களா? அவுங்க எப்படி பேரன்ட்ஸக் கான்டாக்ட் பண்ணாங்க? பொண்ணுங்களுக்கு செல்ஃபோன் அலோ பண்ணீங்களா? சார், இது ரொம்ப ஓவர் சார்.- விவேக்.

ச்ச ச்ச அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, நீ வேற தேவையில்லாம இன்னொரு பிரச்சனை உண்டு பண்ணிடாத. குட் ஷெப்பர்ட் ஸ்கூல் பிள்ளைங்க ஃபோன் கொடுத்தாங்களாம்.

ஓ...- விவேக்.

ஓ...- ஆர்யா.

ஆனால் ஆர்யா என்று சொன்னதும் ஒரு நிமிடம் யோசித்தான். மதுவும் அந்த மயில்களும் பேசிக்கொண்டு நின்றது அவனது நினைவில் வந்தது. உடனே விவேக் காதினில், டேய் மயில் பொண்ணுங்க மதுகூடதான பேசிட்டு இருந்தாங்க? என்றான்.

ஓஓஓஓஓ... - விவேக்.

                 *   *   *

 

சார் உங்க ஃபோன் கொடுங்க சார். நானும் என்னோட அப்பாகிட்ட இன்ஃபார்ம் பண்ணணும். என்னோட வீட்டுலயும் தேடுவாங்க சார். என்றான்  விவேக் நூலக மேலாளரிடம்.

ஆர்யாவினால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. முன்சீட்டில் தூங்குவது போல சாய்ந்துகொண்டு சிரித்துக்கொண்டே இருந்தான்.

எதுக்கு? நீ தான் பஸ்ல இப்ப நம்ம ஸ்கூலுக்குப் போகப்போறீல?- நூலக மேலாளர்.

அதைத் தான் சார் இன்ஃபார்ம் பண்ணணும். அந்தப் பிள்ளைங்க எல்லாம் சொல்லிருக்காங்கல.. அது மாதிரி நானும் என்னோட அம்மாகிட்டச் சொல்லணும். லேட் ஆகிடுச்சுல? அம்மா தேடுவாங்க...- விவேக்.

ஆர்யா தனது சிரிப்பை உதடுகளுக்குள் புதைத்துக்கொள்ள அரும்பாடுபட்டான்.

அப்படியா? இரு தர்றேன்.- லைப்ரரியன்

நேரமாச்சு சார்.. குடுங்க.. ப்ளீஸ்.- விவேக்.

இருப்பா லாக் எடுத்திட்டு தர்றேன். என்று தனது கைபேசியில் லாக் எடுத்துவிட்டு விவேக்கிடம் அதனைக் கொடுத்தார்.

விவேக் அதை வாங்கிக்கொண்டு தனது சீட்டில் நன்றாக சாய்ந்தபடி அமர்ந்துகொண்டு தனது அம்மாவின் கைபேசி எண்ணை தட்டச்சு செய்வதுபோல நடித்தான்.

டேய் வேமா மது நம்பரை என் நம்பருக்கு மெசேஜ் பண்ணுடா... லாக் விழுந்துடப்போகுது.- மேலாளர் பார்த்துவிடுவாரோ என்ற பதட்டத்தில் ஆர்யா.

இருடா... லாக் விழுந்தாலும் பாஸ்வேர்டா அவர் பெயரை வச்சிருக்கப்போறார். அவர் பெயரை டைப் பண்ணி லாக் எடுத்துட்டு நம்ம வேலையை பார்க்கப்போறோம். எதுக்குப் பயப்படுற? நான் தான் அவர் எத்தனை கீஸ் அழுத்தினாருன்னு எண்ணி வச்சிருக்கேன்ல... எனக்கு கன்ஃபார்மா தெரியும். அவர் பேர்தான் பாஸ்வேர்ட். யூ டோன்ட் வொரி Yaar.- விவேக்.

பள்ளியின் பேருந்து பள்ளிக்குள் நுழைந்ததும் தனது பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான் ஆர்யா.

தாங்க்ஸ் விவேக், ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் விவேக், உனக்கு டிரீட் தர்றேன், எவ்வளவு அறிவாளித்தனமா மதுமிதா நம்பர் எடுத்துக்கொடுத்திருக்க? நீ கிரேட்டா, நாலு தடவை ஃபோன் லாக் விழுந்த பிறகும் புத்திசாலித்தனமா பாஸ்வேர்ட் கண்டுபிடிச்சி திறந்திட்டியே... நீ நண்பேன்டா, மது என்னோட கேர்ள்ஃப்ரண்ட் ஆகிட்டானா... நீ என்னோட குலதெய்வம்டா விவேக்., இப்படியெல்லாம்கூட நீ என்னைப் போற்றிப் புகழ வேண்டாம் டா. - தன்னிடமே புலம்பலாய் விவேக் .

 டேய் வர்றியா என்னோட பைக்லயே வீட்ல விட்டுருறேன், ஷேர் ஆட்டோவில் போகாத. இந்த ஒரு வாக்கியத்தைதான் டா எதிர்பார்த்தேன், ஆனா பஸ்ல இருந்து இறங்குனதும் மாயக்கண்ணனா மறைஞ்ச பாரேன்... அப்போ தான்டா என்னால கன்ட்ரோல் பண்ண முடியல.- மீண்டும் தன்னிடமே புலம்பலாய் விவேக்.

மது ஃபோன் ஃஸ்விட்ச் ஆஃப்ன்னு வர... - இதுவும் விவேக், புலம்பலாய் அல்ல கோபமாய்.

                  *   *   *

 


ReplyQuotePage 1 / 3
Share: