Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

நல்லதோர் வீணை செய்தேன் - கதை  

  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Estimable Member Admin
Joined: 1 year ago
Posts: 158

Quote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Estimable Member Admin
Joined: 1 year ago
Posts: 158
13/05/2019 9:31 pm  

நல்லதோர் வீணை - 3 டீஸர்

“ஆரி நாங்க எல்லாரும் கல்யாணத்துக்கு முகூர்த்த புடவை எடுக்க கடைக்கு போறோம் நீ செவ்வந்திய கூட்டிட்டு வந்திரு… நாங்க முன்னவே போயி செலக்ட் பண்ணிட்டு இருக்கோம்” என கூறிய மித்ரா அனைவருடன் கிளம்பியது அவர்கள் இருவருக்கும் தனிமை வேண்டியே…

 

ஆர்னவ் தன் அன்னை கூறியதை பல்லை கடித்துக்கொண்டு கேட்டவன் தலையை மட்டும் ஆடியப்படி சரி என்றான்… இத்திருமணம் முடியும் வரை, தான் இதையெல்லாம் சகித்துதான் ஆகவேண்டும் என்றதோடு அவன் வரவேற்பு அறையில் செவ்வந்திக்காக காத்திருக்க…

 

அவளோ அவன் பொறுமையை சோதிக்கும் பொருட்டு அவளும் வந்தபாடில்லை மிகுந்த சினத்தோடு அவன் படக்கென்று இருகையிலிருந்து எழ அவனது வருங்கால மனைவியோ “ பெரியம்மா… நான் ரெடி போலாமா” தன் சேலையை சரி செய்துகொண்டே வந்தவள் திரும்பி பார்க்க அங்கு ஆர்னவின்றி வேறு யாரும் இல்லாமலிருக்க அப்படியே நின்றாள் தன் உடையை கூட சரி செய்ய மறந்தவளாக

 

அர்னாவைக் கண்டு மிரண்டவள் சுற்றும் முற்றும் தன் பார்வை சூழலவிட ஆர்னவின் பார்வை அவளை துளைத்தெடுத்து அவன் பார்வை விலகிருக்கும் அவள் மார்பு சேலை மீது பட ஒரு நிமிடம் தள்ளாடித்தான் போனான் … அவன் பார்வை வேறெங்கோ செல்ல அதை கவனித்தவள் வேகமாக சேலையை இழுத்து மார்பை மறைத்தாள்..

 

அவளது செயல் அவனை அவமானப் படுத்தியதுப் போலிருக்கே ‘ஆமா இவ பெரிய ரம்பை, மேனகை அப்படியே இவங்க அழகுல மயங்கிட்டாலும் வேனுனே இப்படி உடம்பை காட்டுரா அப்பதானே பணக்காரனா பார்த்து வலச்சி போடமுடியும்’தன் மனதில் செவ்வந்தி மீது தப்பான எண்ணத்தை திணித்தவன்

 

கோபமாக அவளை பார்த்து“ ஏய் என்ன??? யாரை தேடுற” தான் கேட்டதற்கு அவளிடமிருந்து இன்னும் பதில் வராமலிருக்க

 

“ஹேய் உன்னைத்தான் கேக்குறேன் இங்கிலீஷ் தான் தெரியாது தமிழும் தெரியாதா” என்க

 

அவன் அதட்டலில் நெஞ்சம் படபடக்க நின்றிந்தவளுக்கு வார்த்தை வெளியே வராமல் தொண்டைக் குழியில் சிக்கிக்கொள்ள… ஆர்னவ் தன் பொறுமையை இழந்துக் கொண்டிருந்தான்…

 

அவளோ மிக சிரமப்பட்டவளாய் “ இல்… இல்ல சார் பெரியம்மா… அப்புறம் வீட்டுல யாரும் இல்லை அதான்”….வார்த்தையை ஒவ்வொன்றாக கூர்ந்து பேசியவளை முறைத்து பார்த்தவன் அவள் முடிக்கும் முன்பே “ ஏன் என்னலாம் பார்த்தா உன் கண்ணு மனிஷனா தெரியில்லையா” தன்னை அவள் கண்டு கொள்ளவில்லை என்ற கோபம்...

 

தன் அன்னையிடம் கோபத்தை காட்ட முடியாமல் தவித்தவன் தன்னை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியதற்கு காரணமான செவ்வந்தி மீதே அவனது முழு கோபமும் திரும்பியது“ உன்ன கடைக்கு வரசொன்னங்க கிளம்பி போ” என்றவன் முன்னே நடக்க அவளுக்கோ தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை எப்படி போறது என்று நினைத்தவள் அங்கையே நிற்க..

 

ஆர்னவ் செவ்வந்தி வராமல் இருப்பதை பார்த்து எரிச்சலடைந்தவன் அவளை சோடக்கிட்டு அழைத்து என்ன என்று கேட்ட

 

“இல்ல சார் பெரியம்மா கார்ல போறதா சொன்னாங்க அதான் சார் எப்படி போறதுன்னு தெரியல”ஒரு வாரு தன் தாயகத்தை விடுத்து விஷயத்தை கூறியவளைப் பார்த்தவன்

 

தெனாவட்டாக கார் மீது சாய்ந்து கையை மார்புக்கு குறுக்காக கட்டியபடி அவளை மேலும் கீழும் பார்த்தவன் வேண்டுமென்றே“ஏன் மேடம் கார்ல தான் பொறந்து வலந்தது எல்லாம் கார்ல தான் போவீங்களா…. சோச்சோ…. ஹ்ம்ம் சாரி மேடம் கார்ளாம் வராது நீங்க நடந்து போலம் இல்ல பஸ்ல போலம்… வீட்டு வேலைக்காரி உனக்குகலாம் என்னடி தகுதி இருக்கு என்கூட கார்ல வர… உன்னக்குலாம் கார் ஒன்னுத்தான் கேடு… ” கோபத்தோடு மொழிந்தவன் தன் குல்ஸை அணிந்துக்கொண்டு காரில் ஏறி அமர…

 

செவ்வந்தியின் காதல் இதயம் கீறல் பட்டு ரத்தம் கசிய முதல் முறையாக தன் ஏழ்மையை நினைத்து வருந்தினாள்…

 

ஒரு நிமிடம் அவளை பார்த்தவன் “ பஸ்கு காசு இருக்கா…. இல்லனா நான் தரேன்” என்று தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து இருவது ரூபாயை எடுத்து கொடுத்தவன் “சீக்கிரம் பஸ் புடிச்சி போய்டு” என்றப்படி அவள் கையில் பணத்தை திணித்துவிட்டு விடைபெற்றான்…

 

செவ்வந்தியின் கண்களில் இப்பவோ அப்பவோ என விழ தயாராக இருந்த கண்ணீர் அவள் கன்னத்தை நினைக்க அவளது மனமோ அவன் இயல்பே அதுதான் விட்டுச்செல் புதிதாகவா அவமானம் படுகிறோம் என்று எடுத்துரைக்க தான் நிற்பது போது இடம் என கருத்தியவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு பேருந்து நிறுத்ததிற்கு சென்றாள்…

 

வீணை மீட்டும்…


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Estimable Member Admin
Joined: 1 year ago
Posts: 158

ReplyQuote
(@vidya)
Eminent Member Registered
Joined: 8 months ago
Posts: 24
19/05/2019 8:18 pm  

Ivan aadhiyave minjidivan polaye.... mithra padicha ponnu .... sevvandhi epadi avana samalikka pora.... avana patriya ella visayamum avaluku theriyum pothu ena pana poranu theriyala....... anyways story semma.... waiting for the next episode eagerly pa.....


ReplyQuote
Dhivya Bharathi
(@dhivya-bharathi)
New Member Writer
Joined: 1 year ago
Posts: 4
22/05/2019 5:02 pm  

நல்லதோர் வீணை செய்தேன்: 4 டீஸர்😉

 

பெரியம்மா" என்ற கேவளின் ஊடே அழைத்த செவ்வந்தி மித்ராவின் காலில் விழுந்து அழ அவளை எழுப்பி விட்ட மித்ரா “ என்ன செவ்வந்தி இது… காலுலலாம் வந்து விழுந்துகிட்டு எழுந்திரி!!!....இப்போ எழுந்துரிக்க போறியா இல்லையா…. எங்க இருந்து கத்துகிட்டே இந்த புது  பழக்கத்தை” மித்ரா செவ்வந்தியை கடிந்து பேச … அதையெல்லாம் உணரும் நிலையில் அவளில்லை கண்களை அழுந்த துடைத்தவள் “ நீங்க இல்லன்னா அப்… அப்பவே உயிரோடவே பாதிருக்க முடியாது பெரியம்மா… ரொம்ப நன்றி பெரியம்மா…  எனக்குன்னு இருக்குற ஒரே ரத்த சொந்தம் அவர் மட்டும்தான் பெரியம்மா… நீங்க இல்லன்னா என்னோட அப்பா… ” 

 

மேலே பேசமுடியமல் அவள் அழ மித்ரா  அவளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு ஆதரவாய் அணைத்து “அதுலாம் ஒன்னுமில்ல செவ்வந்தி…. அப்பாக்குதான்   இப்போ ஒன்னுமில்லனு டாக்டர் சொல்லிட்டாங்களே அப்புறம் எதுக்கு அழுக” 

 

"உன்கிட்ட நான் முன்னாடியே சொல்லிற்கேன்.... உனக்கு ஒரு கஷ்டம்னா அது எங்களுக்கும்னு"மித்ரா கூறுவது புரிந்தாலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் உதவும் தண்மை யாருக்கும் இல்லை என்பதை உணர்ந்தவளாய்

 

“இருந்தாலும் பெரியம்மா…. நீங்க இல்லன்னா “ இது எப்படி சாத்தியம் என்றவளைப் பார்த்து

 

“அப்படியா அப்பன்னா இந்த நன்றிய நீ எனக்கு சொல்ல கூடாது .. அத உன் புருஷன்கிட்ட சொல்லு”தன்னை புரியாமல் பார்க்கும் செவ்வந்தியின் வெள்ளந்தி மனதை உணர்ந்தவர் 

 

“என்ன புரியலையா” மித்ராவின் கேள்விக்கு தெரியவில்லை என்று தலையாட்ட 

 

அவளை பார்த்து சிரித்த மித்ரா “நீ நன்றி சொல்லனும்னா உன்னோட  புருஷன் ஆர்னவ்கு நன்றி சொல்லு அவன் தான் எல்லாம் பார்மல்டீசும் கூட இருந்து பாத்துக்குட்டான்” மித்ரா கூறுவதை நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் செவ்வந்தி அவள் அறிந்த ஆர்னவ்  இதையெல்லாம் செய்யமாட்டானே செய்தாலும் நமக்காக அவன் இறங்கி வந்து தானாக உதவி செய்கிறான் என்றால் 

 

உண்மையாகவே தன்னை அவன் மனைவியாக ஏற்றுக்கொண்டானோ அதை நினைத்து மனம் பூரித்தவள் அவனின் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியும் உண்டானது…  

 

இருந்தாலும் தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள “பெரியம்மா உண்மை… உண்மையாவா அவரா எனக்கு உதவி”அவள் முடிக்கும் முன்னவே மித்ரா அவளை தடுத்து “உண்மையா இல்லையான்னு உன் புருஷன் கிட்ட கேட்டுக்கோ”என்று கூறிவிட்டு“இன்னும் கல்யாணத்துக்கு ஒரு வாரம்தான் இருக்கு அழுது வடியாம கல்யாண பொண்ணு மாதிரி நடந்துக்கோ”மித்ரா கூறியதைக் கேட்டு வெக்கம் மேலிட மனம் முழுவதும் அவள் காதலனே நிறைந்திருந்தான்….

 

மாயாண்டியின் உடல் நிலை சற்று தேறி வர செவ்வந்திக்கு உதவியாக அல்லியும் அங்கு வந்து சேர்ந்தாள்… மருத்துவமனைக்கு வந்து செவ்வந்தியை “ அக்கா” என்றழைத்து அனைத்துக் கொண்ட அல்லி “ அக்கா அப்பா எப்படி இருக்கு நல்லார்க்குதா” அல்லி மாயாண்டியின் நலம் விசாரிக்கும் பொருட்டு செவ்வந்தி அவளை அழைந்துக் கொண்டு தன் தந்தையை காணச் செல்ல அவரைப் பார்த்து நன்றாக இருப்பதை உணர்ந்தவள் 

 

“செவ்வந்திக்கா உனக்கு கல்யாணம் முடிக்குறதா அப்பா சொல்லிட்டு இருந்திச்சி… எனக்கே உன்மேல கோவம் நீ வந்தப்பக் கூட இதப்பத்தி ஒரு வார்த்தக் கூட சொல்லையேனு… இருந்தாலும் எனக்கு சந்தோஷம் நீ நம்ப பெரியைய்யா மகனையே மணமுடிக்குறது”என்க

 

செவ்வந்தி “இல்ல அல்லி எனக்கே தெரியாது இது அவசரமா முடிவு பண்ண கல்யாணம்… பெரியம்மாவும் பெரியைய்யா தான் முடிவு பண்ணாங்க”… என்றவள் முகத்தில் ஏதோ புதிதாக மாற்றம் தெரிய அதை கவனித்த அல்லி “அக்கா இங்க பாரு… என்னைய நிமிர்ந்து பாரேன்”… அவள் தடைப்பற்றி நிமிர்த்திய அல்லி செவ்வந்தியின் முகம் அந்திவானமாய் சிவந்திருப்பதை பார்த்து “அக்கா உன்முகம் இப்போ ரொம்ப சிவந்து அழகா இருக்கு… மாமாவ பத்தி பேசுனதும் உனக்கு வெக்கம் வருதா… ஆனாலும் அக்கா நீ ரொம்ப குடுத்து வச்சவ… நீ ஆசைப்பட்ட மாதிரியே மாமாவே உனக்கு கணவரா வரபோராரு…. நீ என்கிட்ட சொன்ன மாதிரி இல்லக்கா மாமா ரொம்ப நல்லவரு”

அல்லி கூறியதை அமோதித்தவளின்  மனசாட்சி ஆம் அவர் நலவர்தான் நான் நினைத்ததுப் போலில்லை  உண்மையாகவே மாறிவிட்டார் போலும் அவள் மனம் முழுவதும் தன்னவனிடம் சிக்கிக்கொண்டது அல்லி கூறுவதும் உண்மைதான் எப்பொழுதும் தன்னை வெறுத்து ஒத்துக்குபவன் இப்போது காட்டும் கரிசனம் தான் என்ன… “ஒருவேளை கடமைக்காக செய்கிறாரோ” என்று நினைக்க தோன்றினாலும் “ இல்லையே அப்படி கடமைக்காக என்றாலும் புடவை எடுத்துக் கொடுப்பது அப்புறம் இப்படி எனக்காக லட்சம் கணக்கில் செலவு செய்வது

 

ஹும்ஹும் நினைச்சமா இது கரிசனமுமில்லை கடமையுமில்லை …. உண்மையவே அவரு என்ன பிடிச்சிதான் செய்றாரு” அவனைப் பற்றியும் அவனது செயலைப்  பற்றியும் முழுமையாக  அறியாதவள் அவன் தன்னை மனவியாக ஏற்றுக்கொண்டான் என்பதை நினைத்து அவள் மனம் தப்பாக தூபம்போட்டது…எந்த இரு காரணத்தை தவிர்த்தாலோ அதுவே அவள் வாழ்க்கையை நிர்ணயிக்கப்போவதை அறியவில்லை

 

“தனிமையில் துணைவரும்

யோசனை.

நினைவினில் மணக்குது

உன் வாசனை.

எல்லாமே ஒன்றாக மாறுதே

மனந்திட சேவல் கூவுதே”

 

உண்மையை அறிந்தாள் அவள் நொருங்குவதோடு மட்டுமின்றி அவளது மனமும் சேர்ந்து நொருங்குவதென்று உறுதியாகும் பட்சத்தில்  அவள் காதல் கைசேருமா அல்லாது கானல் நீராய் கரையுமா!!

 

வீணை மீட்டும்....


ReplyQuote
(@pragadeesh)
Eminent Member Registered
Joined: 1 month ago
Posts: 20
23/05/2019 12:52 am  

Nice ud sis 👍  👍 


ReplyQuote
(@vidya)
Eminent Member Registered
Joined: 8 months ago
Posts: 24
02/06/2019 10:24 am  

Superb episode n waiting for the next episode eagerly pa...... sevvandhi konja naal venumna ooduva... aana aarnav semaya matti kitan....

 


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Estimable Member Admin
Joined: 1 year ago
Posts: 158

ReplyQuote
(@pragadeesh)
Eminent Member Registered
Joined: 1 month ago
Posts: 20
13/06/2019 3:05 pm  
  1. Nice ud sis 🤩  🤩  😎 


ReplyQuote
(@vidya)
Eminent Member Registered
Joined: 8 months ago
Posts: 24
13/06/2019 6:38 pm  

Interesting.....sema..... waiting for the next episode eagerly pa......


ReplyQuote
Dhivya Bharathi
(@dhivya-bharathi)
New Member Writer
Joined: 1 year ago
Posts: 4

ReplyQuote
(@vidya)
Eminent Member Registered
Joined: 8 months ago
Posts: 24
16/06/2019 5:56 pm  

Wife nalum harassment thapu nu foreign la valanthavanuku theriyala.... sevvandhi ya pola pala per irukanga than real life la but this is too much..... anyway nicely episodes but konjama kuttiya irunthathu da..... expect a next update eagerly pa....


ReplyQuote
Dhivya Bharathi
(@dhivya-bharathi)
New Member Writer
Joined: 1 year ago
Posts: 4
18/06/2019 5:38 pm  

Hai vidya sis romba nalachi sorry sis comment panna mudila... How r u?? Ama sis too mucha panran ... Idhu tesear sis... Naan ud podala nalaiku potruven


ReplyQuote
(@vidya)
Eminent Member Registered
Joined: 8 months ago
Posts: 24
18/06/2019 5:58 pm  

Fine pa....... busy with wk da..... but enna busy naalum always waiting for stories....


ReplyQuote
Share:

Don`t copy text!
  
Working

Please Login or Register