Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

வியூகம் - கதை  

Page 1 / 10
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 3 years ago
Posts: 604
12/07/2019 6:20 pm  

தோழமைகளுக்கு வணக்கம்,
இந்திரா அடுத்த கதையோடு வந்துவிட்டார்.  😘 😘 😘 வியூகம்... மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கிறார். உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். தொடர்ந்து கதையை படித்து கமெண்ட் மற்றும் லைக் செய்து அவரை உற்சாகப்படுத்துங்கள்.  😊  😊  😊 

 

இந்த கதையை வெற்றிகரமாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள். இந்திரா...  🌻  🌻  🌻  🌻 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Nimmi Dana, Jasha Jasha, poornima rani and 3 people liked
Quote
இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 3 years ago
Posts: 398
12/07/2019 8:02 pm  

வணக்கம் தோழிகளே/ தோழர்களே ரொம்ப நாள் இடைவேளைக்குப் பிறகு ஒரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கேன். முகங்களுக்கு உங்களது ஆதரவில் திக்குமுக்காடிப் போனவள் நான் .... இதோ ஓர் புது களத்தில் நடை பெரும் கதையுடன் வந்திருக்கிறேன். இந்தக்களமும் எனக்கு பரிட்சயம் இல்லாத ஒன்று தான் ஆனால் எழுத முயற்சி செய்கிறேன். உங்களின் குறை நிறைக்களுக்காய் காத்திருப்பேன்

அன்புடன்

இந்திரா செல்வம்

அன்புடன்
இந்திரா செல்வம்

இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 3 years ago
Posts: 398
12/07/2019 8:03 pm  

வியூகம் - 1

டிங் .....டாங்.... டிங் ...... டாங் .....தேனுபுரீஸ்வரர் கோயில் மணியின் சத்தம் கேட்டு தான் மூழ்கியிருந்த புத்தகத்திலிருந்து கவனத்தை பிரித்தெடுத்து மணி கட்டை பார்த்தான் அனாமதேயன் - அவனது அடையாள அட்டையில் இருக்கும் பெயர் இதுதான் ... ஆனால் இவன் அடையாளப் படுத்திக்கொண்ட பெயர் மகாவிஷ்ணு.....விஷ்ணு என்று தான் மற்றவர்களால் அழைக்கப்படுபவன் .

 

"பர்பெக்ட் டைமிங்" என்று நினைத்தபடி எழுந்தவன் "அர்ஜுன் ,பிரேக்பாஸ்ட் டைம்" என்று உள்நோக்கி குரல் கொடுத்தான்.

 

தலை துவட்டியபடியேஅவசரஅவசரமாக டைனிங் ரூமினுள் நுழைந்த அர்ஜுன் தூவாலையை அருகிலிருந்த சேரில் விசிறி எரிந்து விட்டு "குட் மார்னிங் கண்ணா" என்றபடி விஷ்ணுவை நிமிர்ந்து பார்க்க அவனோ தூக்கி எரியப்பட்டிருந்த ஈரத் தூவாலையை பார்த்துக் கொண்டிருந்தான். முறைத்தான் என்று கூட சொல்லி விட முடியாது ஆனால் அதுவே அர்ஜுனை சேரில் உட்கார விடாமல் தடுத்தது. அவன் பார்வைக்கு விளக்கம் வேண்டியிருக்கவில்லை நிமிடத்தில் அந்த தூவாலை அங்கிருந்து அகற்றப்பட்டு பால்கனியில் இருந்த கொடியில்.தஞ்சம் புகுந்தது

 

காலை உணவை முடித்துக் கொண்டு அர்ஜுன் தனது பைக்கில் மெடிக்கல் காலேஜ் சென்று விட்டான் .விஷ்ணு மீண்டும் பத்திரிக்கையில் மூழ்கினான்.அவனது கையினில் மூன்று நிற மார்க்கர்கள் இருந்தன சிகப்பு, பச்சை , மற்றும் ஃபிளோரசன்ட். அன்று வந்த செய்தித்தாள் வார இதழ் என்று எல்லாவற்றிலும் செய்திகளை ரகம் பிரித்து அதற்கேற்ற வண்ணத்தை தீட்டினான் .

 

மதிய உணவிற்கு பின் காரை எடுத்தவன் நேரே மாயாஜால் மல்டிப்ளெக்ஸ்சில் நிறுத்தினான். அது ஒரு தமிழ் படம் தான் ஆனால் கூட்டமில்லை ,ஒருவேளை வார நாள் என்பதால் கூட இருக்கலாம். கூட்டமில்லாத இடத்தில் சென்று அமர்ந்தவன் அந்த தியேட்டர் முழுவதும் பார்வையால் ஒரு முறை அலசினான் .

 

ஆங்காங்கே ஜோடி ஜோடியாய் சிலர் ,சில கல்லூரி படிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் .... பாவம் கல்லூரியில் படிக்கச் சொல்லி கொடுமை படுத்துகிறார்கள் போலும். கல்லூரியின் அருமை பிற்காலத்தில் இவர்களுக்கு நிச்சயம் புரியும் ..ஆனால் அப்போது எதையும் மாற்ற முடியாதே |

 

கடைசி ரோவில் ஓர் வயதான தம்பதி. அவர்களும் இவனை போலவே சுற்றுச்சூழலை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.விஷ்ணுவின் கண்கள் அவர்களை சந்திக்கவும் அவர்கள் இவனை பார்க்கவும் சரியாக இருந்தது.. அவர்களது இதழ்களில் நட்பாய் புன்னகை மலர,இவனும் புன்னகைத்தான். அதன் பின் தேசிய கீதம் போடப்பட எல்லோரும் ஒற்றுமையாய் எழுந்து நின்று நாட்டுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

 

படத்தின் சென்சார் சர்டிபிக்கேட்டிலிருந்து உன்னிப்பாய் பார்க்கலானான். அதற்குப்பின் அவனது கவனம் சிறிதும் சிதறவில்லை . அந்த இருட்டிலும் கையிலிருந்த நோட் புக்கில் ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். இடைவேளையில் மீண்டும் அந்த திரையரங்கை அவனது கண்கள் வட்டமடித்தன.இப்போது ஓரிருவர் கூடியிருந்தனர். ஆனால் அவனது கண்கள் வலதுப்புற கடைசி ரோவில் அமர்ந்திருந்த பச்சை சட்டைக்காரனிடம்  ஓர்  வினாடி நின்று மீண்டது.

 

மீண்டும் படத்தில் சென்றது அவனது கவனம் ... படம் முடிந்து வெளியே வரும் பொழுது பக்கத்திலேயே நடந்து வந்த பச்சை சட்டை. "நாளை மாலை கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப்" போகிற போக்கில் சொல்லி விட்டு விஷ்ணுவை கடந்து வேகமாக சென்றும் விட்டான்.

 

காருக்கருகில் சென்றவனது கால்கள் நின்றன காரணம் அந்த வயதான தம்பதியினர் மிகவும் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள்

 

"படத்துல ஒரே சண்டை, பாக்க முடியல, அடிபடரது கெட்டவன் தான் இல்லைங்கல ஆனா அவனுக்கும் வலிக்கும் தானே?ஹீரோ கத்தி எடுத்து சதக் சதக் னு குத்துவதை பாக்க முடியல." என்றாள் அந்த வயதான அம்மா.

 

"இந்த கருமத்தை எல்லாம் பாத்துட்டு தான் சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம் வெட்டி கிட்டும், குத்தி கிட்டும் வாழ்க்கையை ஜெயில்ல கழிக்குதுங்க" என்றார் பெரியவர்.

 

“எவன் இந்த படத்துக்கு " U " சர்டிபிக்கேட் கொடுத்தது?" என்ற கேள்வி எழுப்பினாள் அந்த அம்மாள்

 

"காசு ,காசு கொடுத்தா நம் ஊர்ல எது வேணும்னாலும் கொடுப்பாங்க "

 

"என்னவோ போங்க இந்த நாடே கெட்டு போச்சு" என்ற பெருமூச்சுடன் அவர்களது இரு சக்கர வாகனத்தை நெருங்கினார்கள்.

 

அவர்களது வண்டிக்கு முன் இன்னொரு வண்டி நின்றிருந்தது. அதனை பார்த்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொன்டனர். இவர்களை கவனித்துக் கொண்டிருந்த விஷ்ணு அந்த வண்டியை தள்ளி வைத்து விட்டு இவர்களது வண்டியை எடுக்க உதவி செய்தான்

 

"ரொம்ப நன்றி தம்பி " என்று வாழ்த்தி விட்டு சென்றனர். விஷ்ணுவின் கார் வீட்டை நோக்கி சென்றது.

 

வியூகம் தொடரும்.......

This post was modified 1 year ago 2 times by Meena

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote
Megala Appadurai
(@megala-appadurai)
Trusted Member Writer
Joined: 2 years ago
Posts: 79
12/07/2019 9:35 pm  

வாழ்த்துகள் இந்திரா ஆரம்பமே நல்லாருக்கு..... அவனின் மக் பார்வையிலேயே அவனுக்கு பிடிக்காத தை சொன்னவிதம் அருமை.....இது போல்  படத்தைப் பார்த்துதான் இளையவர்கள் கெட்டுபோறாங்கங்கறது ரொம்ப சரி சூப்பர் ய்யா வாழ்த்துகள் 
இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 3 years ago
Posts: 398
13/07/2019 2:21 am  

Welcome maggi dear....(comment ku thank u sonna ஆள் veachi adipangalea....🤔🤔🤔🤔 ...) ok itheamadhiri mon to Friday ennoda epiku comment pottudanum ok... hmm.....🙂

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote
Megala Appadurai
(@megala-appadurai)
Trusted Member Writer
Joined: 2 years ago
Posts: 79
13/07/2019 10:39 am  

🤣🤣🤣🤣🤣🤣கரெக்டா என்னை புரிஞ்சு வெச்சிருக்கீங்க .... ஆள்வெச்செல்லாம் அடிக்கமாட்டேன்.... நேரடியா நானே களத்துல எறங்குவேன்..... டெய்லி எபியா 💃💃💃💃💃💃வாரே வா.... சூப்பரு 💕💕💕💕💕💕💕🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


ReplyQuote
இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 3 years ago
Posts: 398
13/07/2019 11:04 am  

டெய்லி ஒருepisode கொடுக்கனும்னு தான் நினைத்திருக்கிறேன் பார்க்கலாம் காலம் தான் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் பார்ப்போம்.... I will try my level best

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote
இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 3 years ago
Posts: 398
15/07/2019 5:09 pm  

 

வியூகம்    -  2    

 

ரேடியோவிலிருந்து பழங்காலத்து பாடல்கள் தவழ்ந்து வர , தலையசைத்து அதனை கேட்டபடியே  செடிகளுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தான்  விஷ்ணு

 

"ப்ரோ .நேத்து என்னோட அனாடமி கிளாஸ் பிரபசர் கொடுக்கச் சொன்னார்.  மறந்தே போயிட்டேன்" என்றபடி அர்ஜுன் ஒரு காகிதத்தை நீட்டியது தான் தாமதம்

 

"பளார் ..." அவனது கன்னம் சிவந்து விட்டது      

 

ஒரு வார்த்தை கூட பேசாமல் அவசரமாக  அந்த காகிதத்தை பிரித்து படித்தவனின் முகத்தில் அரைநொடிக்கும் குறைவாக ஓர் ரெளத்திரம் தோன்றி மறைந்தது ..

 

"இது தான் கடைசி இனி எதிலாவது காலதாமதம் இருந்தால் .....'!!" என்று அர்ஜூனின் கண்களை ஊடுருவிய விஷ்ணுவின் பார்வையில் வெளிரியது அவனது முகம் ...

 

சார்ஜில் போடப்பட்டிருந்தது செல்போன் ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது. குளியலறையிலிருந்து வெளியே வந்த விஷ்ணு செல்போனை கையிலெடுக்க அதில் தன்ஷிகா என்ற பெயர் மிளிர்ந்தது.... 

 

‘ இவள் ஏன் இப்போது அழைக்கிறாள்? இவளது அழைப்பு நேரம் இரவு தானே' என்ற சிந்தனை மனதில் ஓட தன்னிச்சையாய் விரல்கள் அழைப்பை ஏற்று போனை காதுக்கு கொடுத்தன ....   

 

“ ஹலோ ... - " என்றவனது குரலுக்கு   

 

 "ஹாய் ஹனி என்ன பண்ற?  என்னோட ஃபோன் எடுக்க ஏன் இவ்ளோ நேரம் ?" உரிமையாய் கேட்டவள் தன்ஷிகாதான்

 

 "ஹேட் எ பாத் " என்றான் சுருக்கமாக

 

 " ஓ ... அப்போ சார் ஃபிரெஷ்ஷா இருக்கீங்களா? அப்படியே கிளம்பி பீச் ஹவுஸ் வந்துடு"

 

 "ஃபார் வாட்? நான் ஈவினிங் வரேன்"

 

 "யூ நாட்டி... " என்று குழைந்தவள் " ஒரு பார்ட்டி  மா .. ..  நீ கண்டிப்பா வரணும்" என்றாள் ஏக்கமாய்  

 

 "நோ ஹனி... ஐஹேவ் அன் இம்பார்டன்ட் வொர்க்... ஐ வில் மீட்யூ இன் த ஈவினிங் அட் பாம்பே கிளப்" (எனக்கு முக்கிய வேலை இருக்கிறது அதனால் மாலை பாம்பே கிளப்பில் சந்திக்கலாம்)

 

அவனது மறுப்பால் உஷ்ணமானாள் தன்ஷிகா 

 

"வாட் ! !  யூ ஆர் சேயிங் நோ டு தன்ஷிகா?"  அவள் கத்திய கத்தலில் எரிச்சலடைந்து போனை காதைவிட்டு தூரமாக பிடித்தான் விஷ்ணு  அப்போதும் சத்தமாகவே கேட்டது. 

 

"கோ .... டூ ஹெல் "  என்ற அலரலோடு ஃபோன் துண்டிக்கப்பட்டது.

 

அந்த குரலுக்கோ பேசியவளுக்காகவோ எந்தவித உணர்வும் அவனது முகத்தில் தோன்றவில்லை போனை மறுபடியும் சார்ஜில் போட்டு விட்டு சமையலறையை நோக்கி நடந்தான்.

 

கம்பங்கூழ் ஓர் டம்ளரிலும் சின்னவெங்காயம் பச்சமிளகாய் - ஓர் தட்டிலும் டைனிங் டேபிள் மீதிருக்க முகம் சுளித்தான் அர்ஜுன்  "ப்ரோ!   மீ பாவம் ப்ரோ !  தினமும் சிறுதானியம் தான் பிரேக்பாஸ்ட்டா ?"    அவனது குமுறலை விஷ்ணு காதில் வாங்கியது போல் கூட தெரியவில்லை அவனது உணவில் கவனமாக இருந்தான் - 'சாப்பிடும் பொழுது பேச கூடாது'   இதுவும் இந்த வீட்டில் ஓர் எழுதப்படாத விதி ... ..   ஓர் பெருமூச்சுடன் சேரை இழுத்து போட்டு அமர்ந்தவன் வேண்டா வெறுப்பாக டம்ளரை வாயில் வைத்தான்.

 

அதற்குள் தன் உணவை முடித்துவிட்ட விஷ்ணு "சாப்பாட்டை  இஷ்டப்பட்டு சாப்பிடு இது கூட கிடைக்காதவர்கள் நாளுக்கு நாள் இங்கே அதிகமாகிக் கொண்டே போகிறார்கள், அது மட்டுமில்லாமல் வயிறு நிரம்ப சாப்பிடு காலை உணவு ராஜா மாதிரி சாப்பிடனும்" என்று தன்னுடைய உரையை முடித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான் விஷ்ணு

 

 'ம்க்கும்........ராஜாக்கள் கம்பங்கூழ்தான் குடிச்சாங்களாக்கும் 'உள்ளுக்குள் குமைந்தான் அர்ஜுன் ஆனால் எதுவும் பேசி விட முடியாது ஏனெனில் அவன் இன்னமும் சாப்பிட்டு முடிக்கவில்லையே!   

 

மாலை நான்கு மணி - கோழிப் பண்ணை  பஸ் ஸ்டாப் - பச்சை சட்டையை பார்த்து விட்டான் விஷ்ணு ,தியேட்டரில் பார்த்த ஆள் இல்லை  ஆனால் சட்டை பச்சை தான்.

 

அருகில் சென்றவன் "பஸ் ஏன் லேட்?" என்று கேட்டான்

 

  "தெரியலையே சார்" என்றான் பச்சை சட்டை

 

 "ஓ.கே சார் தாங்க் யூ" என்றவன் மீண்டும் அந்த பஸ் ஸ்டாப்பை அலசினான் அங்கே வேறு பச்சை சட்டையே இல்லை

 

பஸ் ஸ்டாப்பில் இருந்த சிமெண்ட் திட்டில் அமர்ந்து, ஓர் பழைய பாடலை முணுமுணுத்தபடி காத்திருந்தான். விட்டேர்த்தியாய் பார்ப்பது போல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் தூரத்தில் பஸ் ஸ்டாப்பை நோக்கி வந்து கொண்டிருந்த இன்னொறு பச்சை சட்டை பட்டுவிட்டது. அவனது கண்கள் பஸ் ஸ்டாப்பை அலசுவது தெரிந்தது.  பஸ் ஸ்டாப்பிற்குள் வரட்டும் என்று காத்திருந்தான்.

 

நல்ல வேளையாக வந்தவன் பஸ் ஸ்டாப் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான். விஷ்ணு பேசினால் கேட்கும் தூரத்தில் அமர்ந்திருந்தான். சரியாக உட்காருவது போல் பச்சை சட்டை  அருகில் நகர்ந்தவன்,” பஸ் ஏன் லேட்" என்று கேட்டான்

 

 "பஸ்ல ஸ்டாட்டிங் டிரபுள் சார், அதை எடுத்துட்டு போய் மார்டன் ஹாஸ்பிடல்ல தான் சேக்கனும் " என்று பதிலளித்தான் அந்த பச்சை சட்டை

 

“குட் ஜோக் “என்று முடித்துக் கொண்டவன் தன் கையில் மடித்து வைத்திருந்த நாளிதழை பிரித்துப் படிக்கலானான்.

 

சரியாக ஓர் நிமிடம் கடந்திருக்கும் "சார் விளையாட்டு செய்தி பேப்பர் தரீங்களா?" என்று கேட்டான் அந்த பச்சை சட்டை மறுக்காமல் இரண்டு பேப்பரை தன் பேப்பரிலிருந்து பிரித்துக் கொடுத்தான் விஷ்ணு. இருவரும் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே பஸ் வந்து விட்டது. இருவரும் பஸ்சில் ஏறினார்கள், மூன்று ஸ்டாப்பிங் கழிந்து ராஜகீழ்பாக்கம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டான் விஷ்ணு பச்சை சட்டைகாரனிடமிருந்து பேப்பரை வாங்காமலே . 

 

பைக் ஸ்டாண்டில் விட்டிருந்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு  மும்பை பார் நோக்கி விரைந்தான்.

 

வியூகம் தொடரும்.....

This post was modified 1 year ago by Meena

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuoteSubageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 141
16/07/2019 6:35 am  
  1. சூப்பர்... ரெண்டு epiyum  இப்பதான் படிச்சேன்... ரொம்ப குழப்பமா இருக்கு... so... வைட்டிங் next எபி எப்போன்னு? 

சுகீ


ReplyQuote
இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 3 years ago
Posts: 398
16/07/2019 6:42 am  

Thank u geetha.... I am happy to see ur comment....

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote
Page 1 / 10
Share: