Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

வியூகம் - கதை  

Page 6 / 7
  RSS

(@samrithi)
Eminent Member Registered
Joined: 6 months ago
Posts: 22
07/08/2019 8:44 am  

Hi sis epo tha unga viyugam story 1st time read pannen... Really amazing... Remba different ah suspense ah poguthu story... Nenga sonna antha eru nadukalukana palivangal India Pakistan Kula samipathula nadantha oru insitend ah yapakapaduthutu... Entha madhiri story elutha konjam aalnthu yochichu parvaiya viriva vachu eluthanum antha vithathula unga entha puthu muyarchi parattukuriyathu... Ungaludaiya mugangal story um paduchuruken athum remba different ah tha erunthatu... Entha story ungaluku remba Periya vetriya Thara my best wishes..


ReplyQuote
(@kukookutty)
Active Member Registered
Joined: 5 months ago
Posts: 13
07/08/2019 4:18 pm  

Hii mam.... story superb...onnum puriyala..but sema thirillinga irrukku ..all the best.

 

 

 


ReplyQuote
Indira selvam
(@indra-selvam)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 107
08/08/2019 1:24 am  
Posted by: Samri Thi

Hi sis epo tha unga viyugam story 1st time read pannen... Really amazing... Remba different ah suspense ah poguthu story... Nenga sonna antha eru nadukalukana palivangal India Pakistan Kula samipathula nadantha oru insitend ah yapakapaduthutu... Entha madhiri story elutha konjam aalnthu yochichu parvaiya viriva vachu eluthanum antha vithathula unga entha puthu muyarchi parattukuriyathu... Ungaludaiya mugangal story um paduchuruken athum remba different ah tha erunthatu... Entha story ungaluku remba Periya vetriya Thara my best wishes..

Nandri thozhi.... ithanai periya azhagana aazhamana comment kodhuthadharku nandri..... ungalathu vazhthuku nandri.... thodarnthu kadhaiyai padichi comment pannungal..... nandri

Anbudan,
Indira Selvam


Samri Thi liked
ReplyQuote
Indira selvam
(@indra-selvam)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 107
08/08/2019 1:25 am  
Posted by: Ahi Gokul

Hii mam.... story superb...onnum puriyala..but sema thirillinga irrukku ..all the best.

 

 

 

Onnum puriyalaya???? 🤔🤔🤔 

Anbudan,
Indira Selvam


ReplyQuote
(@jasha)
Active Member Registered
Joined: 1 year ago
Posts: 5
11/08/2019 9:44 am  

வியூகம் செம்ம இன்ட்ரஸ்ட்டிங் இந்துமா... மண்புழுவின் விளையாட்டில் விளைந்த விவசாய கருதது... ஐஸ்வர்யா மொபைல் பயன்பாடில்.. கொஞ்சம் நிமிர்ந்த பெண் இனம் மீண்டும் தலை குனிய செய்த செல்பேசி...

மீம்ஸ் சொல்லும் பூடக தகவல் பரிமாற்றம்... 

அன்னகூடையில் அடிதது கொண்டு கஞ்சி குடுக்கும் மாட்டினத்தோட மனித இன ஒப்பீட்டில் ஒரு கருதது கடை புன்னகையோடு... 

செல்வ செழிப்போடு அதில் பிண்ணிக்கிடக்கும் பயம் பாதுகாப்பையும் விரித்து சொன்ன வீரராகவன் இல்லம்...

உலக அரசியல்..உள்ளூர் அசட்டை உருபோட்டு உருபோட்டு வியூகம் அமைக்கும் விஷ்ணு... இவனின் பாதையோடு பயணிக்கும் கதைக்களம்..அருமை... அர்ஜுன்  இறுக்கம் தளர்த்த இடையிடும் கருவியாய்..

திரையரங்கு காட்சிகள் பச்ச சட்டை பகிர்வுகள் எல்லாவற்றிலும் எதையோ தேடி கண்டு கொள்ள ஆர்வபடுததிடும் அட்டகாச எழுதது...

சிறப்பான சீரான  நடையில்.....

சூப்பர் இந்துமா

This post was modified 6 days ago by Jasha Jasha

ReplyQuote
Indira selvam
(@indra-selvam)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 107
11/08/2019 10:25 am  
Posted by: Jasha Jasha

வியூகம் செம்ம இன்ட்ரஸ்ட்டிங் இந்துமா... மண்புழுவின் விளையாட்டில் விளைந்த விவசாய கருதது... ஐஸ்வர்யா மொபைல் பயன்பாடில்.. கொஞ்சம் நிமிர்ந்த பெண் இனம் மீண்டும் தலை குனிய செய்த செல்பேசி...

மீம்ஸ் சொல்லும் பூடக தகவல் பரிமாற்றம்... 

அன்னகூடையில் அடிதது கொண்டு கஞ்சி குடுக்கும் மாட்டினத்தோட மனித இன ஒப்பீட்டில் ஒரு கருதது கடை புன்னகையோடு... 

செல்வ செழிப்போடு அதில் பிண்ணிக்கிடக்கும் பயம் பாதுகாப்பையும் விரித்து சொன்ன வீரராகவன் இல்லம்...

உலக அரசியல்..உள்ளூர் அசட்டை உருபோட்டு உருபோட்டு வியூகம் அமைக்கும் விஷ்ணு... இவனின் பாதையோடு பயணிக்கும் கதைக்களம்..அருமை... அர்ஜுன்  இறுக்கம் தளர்த்த இடையிடும் கருவியாய்..

திரையரங்கு காட்சிகள் பச்ச சட்டை பகிர்வுகள் எல்லாவற்றிலும் எதையோ தேடி கண்டு கொள்ள ஆர்வபடுததிடும் அட்டகாச எழுதது...

சிறப்பான சீரான  நடையில்.....

சூப்பர் இந்துமா

நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியையும் படிக்க படிக்க என் இதழ்களில் புன்னகை மலர்ந்து சந்தோஷக்களிப்பில் முடிந்தது.அம்மாடி என்னம்மா ஊன்றி கவனிச்சிருக்கீங்க! ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி நீங்கள் சொன்னவிதம் என்னை அகமகிழச்செய்தது. நன்றி தோழி

Anbudan,
Indira Selvam


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 284
11/08/2019 11:33 am  
Posted by: Jasha Jasha

வியூகம் செம்ம இன்ட்ரஸ்ட்டிங் இந்துமா... மண்புழுவின் விளையாட்டில் விளைந்த விவசாய கருதது... ஐஸ்வர்யா மொபைல் பயன்பாடில்.. கொஞ்சம் நிமிர்ந்த பெண் இனம் மீண்டும் தலை குனிய செய்த செல்பேசி...

Wow.... superb.... thanks a lot jasha. Very good comment 😍😍😍💐💐💐

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 284
11/08/2019 11:35 am  
Posted by: Indira selvam

நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியையும் படிக்க படிக்க என் இதழ்களில் புன்னகை மலர்ந்து சந்தோஷக்களிப்பில் முடிந்தது.அம்மாடி என்னம்மா ஊன்றி கவனிச்சிருக்கீங்க! ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி நீங்கள் சொன்னவிதம் என்னை அகமகிழச்செய்தது. நன்றி தோழி

Yes Indira, almost every points mention pannittanga... ellame naanum rasichsdhu. Again story ah mind la konduvarudhu andha comment🌹🌹🌹

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Indira selvam
(@indra-selvam)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 107
13/08/2019 7:39 pm  

வணக்கம் தோழமைகளே.! 

  சாரி சொல்லி எனக்கே போர் அடிச்சிடுச்சு பா.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

வாட்டு டூ  ? நித்தியாவை வேற டிராக் பன்ன வேண்டியதாய் இருக்கு.🧐🧐🧐  

நிழல் நிலவு படிச்சிட்டு கொஞ்ச நேரம் கற்பனையிலும் இந்த அர்ஜுன் அடுத்து என்ன தான் செய்வான்னு யோசனையிலும் டைம் ஓடிடுது.

போதாததுக்கு இப்போ மிருதுளாவோட ஒரு கையில் மாத்திரை இன்னொருகை டேவிட் கிட்ட! இப்படி ஒரு சிச்சுவேஷன் ல என்னால எப்படி எழுத முடியும் நீங்களே சொல்லுங்க.?  

எப்படியோ தட்டுத்தடுமாரி இதோ ஒரு UD  போட்டுட்டேன்.

படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காம சொல்லும்.

சகாப்தம் லைக்ஸ் மறக்கப்புடாது ....  

அன்புடன்

இந்திரா செல்லம்

 

 

வியூகம் - 9         

 

 

வியர்த்த முன் நெற்றியை கைகுட்டையால் துடைத்தபடி அந்த கான்பிரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்த சிவபிரகாசம் அதிர்ச்சியில் உறைந்தார்.  உள்ளே அன்னிய நாட்டவர்கள் நான்கு பேர் அமர்ந்திருக்க அத்தனை பேருடைய கைகளிலும் கருப்பு நிற ஃபைல்.  இவரை பார்த்ததும் அதிலொருவர் முன்வந்து "ஹாய் மிஸ்டர் சிவபிரகாசம், ஹவ் ஆர் யூ டூயிங். சிவபிரகாசத்தின் கைகளை பிடித்து பலவந்தமாக குலுக்கினார் . “கமான்!" இயல்பாய் அவர் தோள் மீது கை போட்டு மெல்ல நடத்தி வந்து இருக்கையில் அமரவும்வைத்தார். ஏசி அரையிலும் அவரது வெள்ளை சட்டை தொப்பலாக நனைந்திருந்தது. ஆங்கிலம் பேச வராதது மட்டும்தான் அவரது பதட்டத்திற்கு காரணமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் இதற்கு முன்னும் இதேபோல் ஓர் சம்பவம் நடந்திருக்கிறது ..... அவரது மருத்துவமனையில்.

 

 

 

 நிவாரணம் மருத்துவக் கல்லூரியின் ஏகாதிபத்திய உரிமையாளர் சிவப்பிரகாசம் . தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய புள்ளிகளில் இவரும் ஒருவர். சிவப்பிரகாசத்தின் தந்தை தொடங்கியது இந்த நிவாரணம் மருத்துவமனை. அவருக்கு பிறகு நிவாரணம் சிவப்பிரகாசத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. தந்தை வழியில் சிவப்பிரகாசத்தால் மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அருகருகில் நிறைய புதுப்புது மருத்துவமனைகள் வந்து விட அவரும் வேறு வழியின்றி மருத்துவமனையின் பங்குகளை விற்று அதனை நிலை நிருத்த முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். அப்படி முதன்முதலில் நிவாரணம் மருத்துவமனையின் நாற்பது சதவிகித பங்குகளை பெற்றுக் கொண்டவர் வீரபத்திரரே. ஆனால் இப்போது இரண்டு வருடத்திற்கு முன் மீண்டும் ஓர் நெருக்கடி வர . மேலும் ஓர் இருவது சதவிகித பங்குகளை வேறு  சில  நபர்களுக்கு பிரித்து விற்றிருந்தார் சிவப்பிரகாசம்.

 

இப்போது மீண்டும் கடன் அதிகமாகிக் கொண்டே போனது..அந்தக் கடனை அடைக்க முடியாமல் அவர் தத்தளிக்கும் நிலையில் தான் அவர் இங்கே வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

 

ஆனால் இப்போது உலக சந்தையில் அவருக்கு அனுபவம் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தினால் வந்த பயம் தான் அவரை வியர்க்க விருவிருக்க செய்தது.

 

  பங்குச் சந்தை - ஓர் புதைகுழி, உள்ளே குதிக்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மறந்து விடக்கூடாது.   அதிலிருந்து மீண்டு வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உள்ளே மூழ்கி அழிபவர்கள் ஏராளம்.

 

தூண்டிலில் சிக்கப்போகும் மீனுக்கு தெரிவதெல்லாம் சின்னஞ்சிறிய புழுமட்டுமே! உள்ளேயிருக்கும் உயிர்கொல்லியான ஊசி தெரிவதில்லை. 

 

இந்தப்பங்குச்சந்தை முதலைகள் ,முதலில் சில பங்குகளை விற்று தொழிலை மேம்படுத்துங்கள் என்று தான் வருகிறார்கள். பிறகு மெல்லமெல்ல கடனாளியாக்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படியான பங்குகளை  விற்கவைத்து. கடைசியில் அந்த தொழில் அவருடையதே இல்லை என்றாக்கிவிடுகிறார்கள். 

 

இதில் கொடுமை என்னவென்றால். இந்த அயல்நாட்டு கம்பெனிக்களிடம் நமது பங்குகள் விற்கப்படுவதுதான்.

 

நம் நாடு நாம் உற்பத்தி செய்யும் பொருள் நம் வளர்ச்சி (be Indian buy Indian ) என்கின்ற விழிப்புணர்வு மக்களிடையேவந்த பிறகுதான் இப்படி ஒரு குறுக்குவழியை அரங்கேற்ற ஆரம்பித்து விட்டார்கள் . 

 

நம்மை வெறும் கண்துடைப்பிற்காக  வைத்துக்கொண்டு நம்மையே ஆட்சி செய்வார்கள். நம் உழைப்பையும் பணத்தையும் நம் வளத்தையும் சுரண்டிக்கொண்டு அதனை அவர்களது நாட்டிற்கு எடுத்துச்சென்று விடுவார்கள்.

 

 

அவர்கள் கீ கொடுத்தால் வேலை செய்யும் பொம்மை நாம் அவ்வளவே!!!!

இத்தனையும் தெரிந்துவைத்திருந்தும் வேறு வழியின்றி சிவபிரகாசம் அவர்கள் காண்பித்த காகிதத்தில் கையெழுத்திட்டு தானும் ஓர் பொம்மை யாக மாரிப்போனார். 

 

                          **********

 

 

அதே மாபெரும் கட்டிடத்தினுள் வேறொரு கான்பரன்ஸ் ஹாலில் தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் சி.இ.ஓக்கள் மற்றும் டீன்கள் குழுமியிருந்தார்கள். எல்லோரது இருக்கைக்கு முன்பும் ஓர் புத்தகம் இருந்தது.  அதில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு மார்கெட்டில் வந்திருக்கும் அதிநவீன ஸ்கேனரின் செய்முறை விளக்கம் மற்றும் நன்மைகள் தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அதனை சிலர் புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. அதற்குக் காரணம் அந்த அறையிலிருக்கும் கேமிராக்களும் வாய்ஸ் ரெக்கார்டர்களுமாகக்  கூட இருக்கலாம். கையில் எப்போதுமிருக்கும் ஆறாம் விரலான செல்போனும் அவர்களிடமிருந்து பரிக்கப்பட்டுவிட்டது .

 

 

நல்லவேளையாக அவர்களின் பொறுமையை அதிகம் சோதிக்காமல் விலையுயர்ந்த வெளிநாட்டு பூட்சின் சத்தம் எதிரொலிக்க  அந்த கான்பரன்ஸ் ஹாலினுள் பிரவேசித்தார் வீரபத்திர விநாயகன். உடனே அங்கிருந்த அனைவரின் கால்களுக்கு் கீழ் ஸ்பிரிங் புதைந்திருந்ததோ என்று சந்தேகம் எழும்பும்விதமாக அத்தனை பேரும் விருட்டென விரைப்புடன் எழுந்துநின்றனர்.

 

கஞ்சியிட்டு விரைத்திருந்த சட்டை சரசரக்க .நேர் கொண்ட பார்வையுடன். தன் நீளமான கால்களை எட்டிப் போட்டு நடந்தவரின் பார்வை அங்கே நின்றவர்களிடம் பட்டும் படாமலும் பட்டுத் திரும்பியது. லேசான தலையசைப்பிலேயே எல்லோரையும் கடந்து முன்னால் வந்து தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

 

அவரை தொடர்ந்து எல்லோரும் அமர்ந்து விட ஒருவர் மட்டும் முன்வந்து அவர்களின் புதிய தொழில் நுட்ப உபகரணத்தை பற்றிய விளக்க உரையை தக்க புகைப்படங்களுடன் தெளிவாக விளக்கினார்.  அவர் முடித்துக்கொண்டு அமரவும்.வீரபத்திரரின் பின்னால் நின்றுகொண்டிருந்த குரு முன் வந்து "நாளை உங்கள் மருத்துவமனைக்கு உபகரணங்கள் வந்து விடும் அதற்கான ஒப்புதல் படிவம் உங்கள் முன் இருக்கிறது கை எழுத்திட்டுவிடுங்கள்” என்றார்.... 

 

எல்லோரும் ஒரு வித அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை.  கையில் பேனாவை வைத்துக்கொண்டு கையெழுத்தை மறந்தவர்களாய் விழித்துக்கொண்டிருக்க. இது அத்தனையும் கவனித்துக்கொண்டிருந்த வீரபத்திரரின் கண்ணசைவில் , " ஐயாவுக்கு நல்ல நேரத்தில் நம்பிக்கையுண்டு அதனால் நல்ல நேரம் முடிவதற்குள் சீக்கிரம் கையெழுத்து போடுங்க." என்றான் குரு    "எங்களுக்கெல்லாம் நல்ல நேரம் முடியப்போகிறது தான்" என்று அங்கிருந்து ஒவ்வொருவரின் அவலக்குரலும் கடவுளுக்கு கேட்டிருக்குமோ என்னவோ வீரபத்திரனுக்கு தெளிவாக கேட்டது. ஓர் பெருமூச்சுடன் அவர் மணிக்கட்டை திருப்பிப்பார்க்க , ஏதோ பச்சை சிக்னலை பார்த்ததும் அவசரமாய் கியரை அழுத்தும் கால்களை போல,அத்தனைபேரும் கையெழுத்திட பேனாவை பேப்பரில் வைத்துவிட்டார்கள் . ஒரே ஒருவனை தவிர விஜயன் - டீன் ஆப் விவேக் குரூப் ஆப் ஹாஸ்பிடல்.    மேஜையில் வைக்கப்பட்டிருந்த கை எழுத்திடவேண்டிய காகிதத்தின் மேல் தன் உள்ளங்கையால் ஓங்கியடித்து "ஐ டோண்ட் வான்ட் டு டூ திஸ் " ஆவேசத்துடன் எழுந்து நின்றான். 

 

 

“இப்போ இந்த ஸ்கேனர்கான அவசியமென்ன?" கோபத்துடனே வெளிவந்தன வார்த்தைகள்.   

 

"அக்யூரசி, துள்ளியம் “ ஒற்றை வார்த்தையில் முடித்த குரு வின் பார்வையில் எள்ளல் இருந்தது.   

 

சிரு சருக்கல்தான் ,இருப்பினும் அதனை பின்தள்ளி

“ஒ.கே. அது ஏன் எல்லா ஹாஸ்பிடல்லயும் இருக்கனும்.? இஷ்டப்படறவங்க வாங்கிக்கட்டும் மத்தவங்க எல்லோரும் பேஷண்ட்சை அவங்ககிட்ட அனுப்புறோம் “ கையெழுத்திட முடியாது என்பதை சொல்லாமல் சொன்னான்.      

 

"உங்க மார்க்கெட் போயிடும் அஜய், இது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உலகம் அங்க இங்கன்னு அலைகழிக்க வைக்ககூடாது"   பொறுமையாகவே விளக்கினார் அவர்.

 

  "ஐ டோன்ட் வாண்ட் சச் எ மார்கெட் , அண்ட் ஆல்சோ நம்ம ஊர்ல நோய்களுக்கும் பஞ்சமில்லையே,இதுக்கு முன்னாடி இன்ஸ்டால் பண்ண மெஷினரீஸ் லோன் இன்னும் நிலுவைலதான் இருக்கு. இப்போ இந்த ஸ்கேனரின் அவசியமென்ன? எல்லா பிரச்சனைகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கலாம்தான். பட் அத்தியாவசியமில்லை.  "வீரபத்திர.ரின் கண்களை பார்த்து பேசியவன்.

 

அங்கிருந்தவர்களை பார்வையால் ஓர் முறை அலசி ""இவருக்கு ஏன் பயப்படறீங்க'வீ ஆர் டாக்டர்ஸ் !!  அண்ட் அல்டிமேட்லி வீஆர் காட்ஸ்" கொக்கரிப்புடன் அவன் முடிப்பதற்குள் டங்ங்......என்ற சத்தத்துடன் ஆக்ரோஷமாக எழுந்துநின்றார் வீரபத்திரர்.  அவர் அமர்ந்திருந்த இருக்கை அவருக்கு பின்னால் உருண்டு கொண்டிருந்தது. "வாட் டிட்யூசே? (நீ என்ன சொன்ன?) கடவுளா? ஓங்கி மேஜையை ஓர் அடி அடித்தவர் "அது என் கட்டுப்பாட்டில் இருக்கும்வரைதான், என்னை எதிர்த்தா?" கையை சொடக்கிட்டு வாயால் உப்ப்......என்று ஊதினார். பின் விரிவுரையாளரிடம் திரும்பி "இன்னும் டென்மினிட்ஸ் தான் டைம். ஆல்பேப்பர்ஸ் இன்மை டேபிள் "முடித்து விட்டு வெளியேறியவரின் குரோதப் பார்வை விஜயனை தழுவி பின் கதவின் வாயிலில் துப்பாக்கியுடன் நின்றவனிடம் சில நொடி நிலைத்து மீண்டது. 

           காலை பேப்பரை புரட்டிக்கொண்டிருந்த விஷ்ணுவின் புருவம் மேலேரியது" பிரபல விவேக்ஸ் குருப்ஆப் ஹாஸ்பிடல் சின் சிஇவோ விஜயன் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை. கடன் அதிகமானதால் மன உளைச்சலினால் தற்கொலை செய்திருக்கலாம் என்று வேண்டப்பட்ட வட்டாரம் தெரிவிக்க போலீஸ் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். "ப்...ச்... லெட் ஹிஸ்சோல் ரெஸ்ட் இன் பீஸ்" உள்ளுக்குள் வேண்டிக்கொண்டவன் தன் நோட்பேட் எடுத்தான். முன்னால் சில பக்கங்களை புரட்டினான்.அதில் அஜய் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருந்தது அதற்கு நேரே அவன் இறந்த தேதியை குறித்துக்கொண்டான் விஷ்ணு

 

 

This post was modified 4 days ago by Indira selvam

Anbudan,
Indira Selvam


ReplyQuote
(@jasha)
Active Member Registered
Joined: 1 year ago
Posts: 5
14/08/2019 7:46 am  

தூண்டில் புழுவை காணாத மீன்களின் நிலையாய் சேர் மார்கெட் நிலவரம்..

ஸ்கேனர் மிசினியரிஸ் வியாபார சந்தைபடுததுதல்.... 

நியூஸ் பேப்பர் பக்கங்களின் பகிரப்பட்ட பலிகளினூடே விஷ்ணுவின் வினைகள் என்ன வென்று ஊகத்தில் மீண்டும் எங்களுக்கு சஸ்பென்ஸ்  குறைக்கவே இல்ல...அருமை


ReplyQuote
Page 6 / 7
Share:

error: Content is protected !!
Don`t copy text!
  
Working

Please Login or Register