Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

[Closed] நிழல்நிலவு - கதை  

Page 1 / 5
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 393

Nimmi Dana, uma sundaram, Afrin Zahir and 3 people liked
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 393

Thanammal R, Afrin Zahir, Ahi Gokul and 1 people liked
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 393Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 393

Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 393
16/05/2019 7:08 pm  

முழு த்ரெட்டும் கன்டென்ட் இல்லாம வெறும் லிங்க்கா இருக்க முடியாது என்பதற்காக சின்ன முன்னோட்டம் கொடுத்திருக்கேன் ஃபிரண்ட்ஸ்... படுச்சு பாருங்க... முழு எபி இன்னும் சில மணி நேரங்களில் போஸ்ட் செய்கிறேன்...

நிழல்நிலவு - 37 முன்னோட்டம்

"ஓஓஓஓ!!!!" - வாயை குவித்து அடிவயிற்றிலிருந்து உற்சாகமாக கூச்சலிட்டாள் மிருதுளா.

 

உற்சாகத்திற்கு காரணம் அந்த வாட்டர் ஸ்கூட்டர் மட்டும் அல்ல... அதில் அவர்கள் வந்திருந்த இடம். சிலிக்கா ஏறி கடலோடு கலக்கும் முனை... அதை டால்பின் சைட் என்றும் கூறுவார்கள்.

 

அதிகாலையில்தான் அந்த பகுதியில் டால்பின்கள் விளையாடுமாம்... அதனால்தான் விடிவதற்கு முன்பே இழுத்துக் கொண்டு வந்துவிட்டான். இந்த காட்சியை - இந்த விதத்தில் - இவனோடு அனுபவிப்பதற்கு தூக்கம் என்ன... எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம் என்று தோன்றியது அவளுக்கு.

 

டால்பின் சைட்டிலிருந்து அவர்களுடைய பயணம் அடுத்த ஊரை நோக்கியிருந்தது. அங்கே தான் அந்த சம்பவம் நடந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில்... என்ன நடந்தது என்று புரிந்துகொள்ளக் கூட முடியாத வேகத்தில் திடீரென்று நடந்து முடிந்துவிட்டது அந்த சம்பவம்.

 

அவன்... அந்த புதியவன் தனியாக நின்றுக் கொண்டிருந்த மிருதுளாவை நோக்கித்தான் வந்தான். மிகவும் சாந்தமாக... சாதாரணமாக... அவனைப் பார்த்தால் வித்தியாசமாக எதுவும் தோன்றாததால் அவளும், அவன் அருகில் நெருங்கி வரும் வரை எந்த சலனமும் இல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

பில் செலுத்திவிட்டு நகர்ந்த அர்ஜுன் அந்த புதியவனைக் கண்டதும் அரை நொடிப்பொழுதில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணித்து விருட்டென்று இருவருக்கும் இடையில் புகுந்தான். இறுதியில் அர்ஜுன் ஹோத்ராவின் உடலை தோட்டா துளைக்க தடுமாறி தரையில் விழுந்தான்.

 

பதறி தவித்த மிருதுளா "யாராவது ஹெல்ப் பண்ணுங்க..." என்று கத்தினாள்.

Share your comments here

This post was modified 7 months ago 7 times by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 393
17/05/2019 3:40 am  

நிழல் நிலவு - 37 ம் அத்தியாயத்தின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள். உங்களுடைய கருத்துக்களை கமெண்ட்ஸ் திரியில் குறிப்பிடுங்கள்.

நிழல் நிலவு - 37

 

Share Your Comments Here

 

This post was modified 7 months ago 2 times by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 393
18/05/2019 2:08 am  

நிழல் நிலவு -38 முன்னோட்டம்

கதவில் தொங்கி கொண்டிருந்த பூட்டை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றாள் மிருதுளா. கண்களில் கண்ணீர் மட்டும் கரகரவென்று வழிந்துக் கொண்டிருந்தது.

 

"இட்ஸ் ஓகே... இங்கதான் பக்கத்துல எங்கேயாவது போயிருப்பாங்க... நாம வெயிட் பண்ணலாம்..." - அவளை தோளோடு அணைத்து தேற்றினான் அர்ஜுன்.

 

அவளுடைய முகம் தெளியவில்லை. தாயை பார்க்க வேண்டும் என்று ஆசையோடு ஓடி வந்தவள் இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் துவண்டு போனாள்.

 

"யாரு நீங்கல்லாம்... என்ன விஷயமா வந்திருக்கீங்க?" என்று கன்னட மொழியில் தூரத்தில் வரும் போதே குரல் கொடுத்துக் கொண்டு வந்த வீட்டு ஓனர், அருகில் வந்ததும் மிருதுளாவை அடையாளம் கண்டுகொண்டார்.

 

"அடடே... நீ அந்த அம்மாவோட பொண்ணுதானே?" - ஆர்வமும் நிம்மதியும் இருந்தது அவர் குரலில்.

 

"ஆமாம் ஐயா... அம்மா எங்க போயிருக்காங்க?" என்றாள் கன்னடாவை உடைத்துக் கோர்த்து.

 

அவர் முகத்தில் அதிர்ச்சி... "என்னம்மா இப்படி கேட்கற! அப்போ உனக்கும் தெரியாதா?" என்றார்.

 

வீட்டிற்குள் நுழைந்ததும் மிருதுளாவின் பதட்டம் மேலும் அதிகமானது. போட்டது போட்டபடி என்பார்களே. அப்படித்தான் இருந்தது அந்த வீடு. சமைத்த உணவு பாத்திரத்திலேயே பூசணம் பூத்துக் கிடந்தது. துவைத்துப்பிழிந்த துணி காய வைக்காமல் வாலியிலேயே முருகலாகக் இருந்தது. பீரோ திறந்து கிடந்த விதத்தில் அவசரமாக துணிமணிகளை பையில் அள்ளி திணித்திருப்பதை ஊகிக்க முடிந்தது. யாருக்கோ... எதற்கோ பயந்து, பேய் துரத்துவது போல் அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடியிருப்பது புரிந்தது.

 

தன் மனதில் தோன்றியதை வாய்விட்டுக் கூறியபடி மிருதுளாவை திரும்பிப் பார்த்தான் அர்ஜுன். துக்கத்துடன் சுவற்றில் சாய்ந்து நின்றவள், 'இல்லை என்பது போல் குறுக்காக தலையை அசைத்தாள். பேய் துரத்தி ஓடவில்லை... பேய் போல் ஒருவரை துரத்திக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் என்றாள்.

 

அவன் புரியாமல் பார்த்தான். "அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஆனா அவர் மேல பைத்தியம்" - அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.

 

"யார் மேல?" - சட்டென்று அடுத்த கேள்வியை கேட்டான். பெற்ற மகளை விட அப்படி யார் மீது ஒரு பெண் பையித்தியமாக இருக்க முடியும்!

 

அவனுடைய கேள்விக்கு மிருதுளா உடனே பதில் சொல்லவில்லை. ஓரிரு நொடிகள் மெளனமாக நின்றவள் பிறகு, "என்னோட அப்பா மேல" என்றாள். தொடர்ந்து "இது புதுசு இல்ல... அவர் எங்கேயாவது இருக்காருன்னு நியூஸ் வந்தா இப்படித்தான்... எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு அவரை தேடி ஓடிடுவாங்க" என்றவள், "ஆனா நா காணாம போய்ட்டேங்கறதைக் கூட பொருட்படுத்தாம அவரை தேடி ஓடியிருக்காங்கங்கறதை தான் நம்ப முடியல... அதுவும் ஒரு மாசம்..." என்று வெகுவாய் குழம்பினாள்.

 

Share Your Comments Here

 

This post was modified 7 months ago 2 times by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 393
18/05/2019 12:48 pm  

Dear Readers,

Here is next episode of my story Nizhal Nilavu... Enjoy Reading...

நிழல் நிலவு - 38

Share your comments here

 

This post was modified 7 months ago by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 393
19/05/2019 3:15 am  

நிழல் நிலவு - 39 முன்னோட்டம்

மறுநாள் காலை மிருதுளா கண்விழிக்கும் போது எங்கிருக்கிறோம் என்பதை உணரவே சில நொடிகள் பிடித்தது. அந்த அளவிற்கு ஆழ்ந்து உறங்கியிருந்தாள். எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு அறையிலிருந்து அவள் வெளியேறிய போது அர்ஜுன் ஹெட்போனை மாட்டிக் கொண்டு லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.

 

இரவு மிருதுளா உறங்கச் செல்வதற்கு முன் அவன் படுக்கவில்லையா என்று கேட்ட போது தனக்கு வேலை இருப்பதாகவும் முடித்துவிட்டு படுப்பதாகவும் கூறியவன் படுக்கவே இல்லை என்று அவன் அமர்ந்திருந்த நிலையிலேயே தெரிந்தது.

 

"தூங்கவே இல்லையா?" - வருத்தத்துடன் கேட்டபடி அருகில் வந்து அவன் தோள் தொட்டாள்.

 

"ப்ச்... கொஞ்சம் வேலை..."

 

'கொஞ்சம் வேலையா! இப்படி கூட ஒரு மனிதன் வேலை செய்வானா! அப்படி என்னதான் வேலை! துப்பாக்கி பிடிக்கிற கை லேப்டாப்பில் என்ன செய்துகொண்டிருக்கிறது!' என்கிற சிந்தனையுடன் கணினி திரையைப் பார்த்தாள்.

 

நூற்றுக்கணக்கான ஆடியோ பைல்கள் வரிசைகட்டி நின்றன. அதை ஒவ்வொன்றாக கேட்டு ஏதோ கோட் வர்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான்.

 

"குண்டடி பட்டு ரெண்டே நாள் தான் ஆச்சு... அந்த ரெண்டு நாளும் தொடர்ந்து ட்ரைவ் பண்ணிக்கிட்டிருக்கீங்க. வீட்டுக்கு வந்த பிறகாவது ரெஸ்ட் எடுக்கக் கூடாதா? வொய் டூ யு டூ திஸ்?" - கடுமையான கோபம் வெளிப்பட்டது அவளிடம்.

 

உருட்டி விழிக்கும் அந்த நீள்வட்ட கண்களையும், துடிக்கும் செரிப்பழ இதழ்களையும் ரசனையுடன் பார்த்தவன், "ப்ரிட்டி.." என்றான் கிறக்கமாக.

 

"வாட்! வாட் டிட் யு ஸே!" - அவளால் நம்பவே முடியவில்லை. சரியாகத்தான் கேட்டோமா என்று கூட தோன்றியது. ஆனால் அவனுடைய சிவந்த... சோர்ந்த... விழிகளில் தெரிந்த குறும்பும் நெருக்கமும் அவளுக்கு உண்மையை உறக்கக் கூறியது.

 

"திரும்ப கேட்கணுமா?" - தடித்த அவன் இதழ்களில் மென்புன்னகை எட்டிப்பார்த்தது.

 

************

 

அர்ஜுன் தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்த போது இரண்டு கைகளிலும் பீங்கான் கப்புகளோடு அவன் முன் வந்து நின்றாள் மிருதுளா.

 

"க்ரீன் டீ... ம்ம்... குடிங்க" - தனக்கு ஒன்றை வைத்துக் கொண்டு அவனிடம் ஒன்றை நீட்டினாள்.

 

சட்டென்று இறுகிய அர்ஜுனின் முகம் உடனே இயல்பாக மாறியது. ஒரு நொடி தான் என்றாலும் அவனிடம் தோன்றி மறைந்த மாற்றத்தை கவனித்துவிட்டாள் மிருதுளா.

 

காரணத்தை அவள் யோசிப்பதற்கு முன்பே, "சா...ரி..." என்று ராகம் போட்டபடி எழுந்தவன், அவள் நெற்றியோடு நெற்றியை லேசாக முட்டி, "நாட் இன் மூட்" என்றான்.

 

'சமையலில் யாரையும் நம்புவதில்லை என்றானே!' என்கிற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

 

Share Your Comments Here

 

This post was modified 7 months ago 4 times by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 393
19/05/2019 3:42 pm  

Dear Readers,

"Nizhal Nilavu" episode 39 updated. Link is given below. Please login to read the update.

நிழல் நிலவு - 39

Share Your Comments Here

 

This post was modified 7 months ago by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Page 1 / 5

Share:

Please Login or Register