Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications

[Closed] நிழல்நிலவு - கதை  

Page 3 / 8
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
19/06/2019 2:00 pm  

எவ்வளவு முயன்றாலும் பதிவுகள் கொடுக்கும் இடைவெளி அதிகமாகிவிடுகிறது... ஏதாவது ஒரு வேலை இடையூறு வந்து கொண்டே இருக்கிறது. நேற்று இரவு கண்விழித்து அவசரமாக எழுதினேன் 😰 😰.  குறைகள் இருந்தால் குறிப்பிடுங்கள் நன்மக்களே...  🥂  🥂  🥂 

 

இணைப்புகள் கீழே

நிழல் நிலவு - 46

கமெண்ட்ஸ் பதிவிட 

This post was modified 10 months ago 7 times by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
27/06/2019 4:05 am  

அன்பு தோழமைகளுக்கு,

நிழல் நிலவு அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள்.

நிழல் நிலவு - 47

Comments

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
03/07/2019 3:45 am  

அத்தியாயம் - 48

சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி இடமும் வலமுமாக தலையை ஆட்டியாட்டி உமிழ்ந்த காற்றில் அறையே குளிர்ந்திருந்தாலும் அவள் மட்டும் கொட்டும் வியர்வையில் குளித்திருந்தாள். மங்கலான வெளிச்சத்தில் மூழ்கியிருந்தது அந்த அறை. அங்கே நடுநாயமாக போடப்பட்டிருந்த மர மேஜையின் ஒருபுறம் மிருதுளா அமர்ந்திருக்க மறுபுறம் மூத்த காவல் அதிகாரி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு பக்கத்தில் அவளை அழைத்து வந்த துணைக் காவல் ஆய்வாளர் நின்றுக் கொண்டிருந்தாள். அவர்களுடைய கூர்மையான பார்வை மிருதுளாவை குத்தி துளைத்தது.

 

"ஜஸ்ட் ஃப்யூ குவஸ்டின்ஸ்... பதில் சொல்லிட்டா போயிகிட்டே இருக்கலாம். இல்லன்னா கஷ்ட்டமாயிடும். புரியுதா?" - ஆழ்ந்து ஒலித்த அவருடைய குரல் அவளை அச்சுறுத்தியது.

 

மிரண்டு போனவளாக மேலும் கீழும் தலையை அசைத்தாள்.

 

"ஹூ இஸ் அர்ஜுன் ஹோத்ரா?" - அழுத்தம் திருத்தமாகக் கேட்டார்.

 

பதில் சொல்ல முடியாமல் எச்சிலை கூடி விழுங்கிய மிருதுளாவின் விழிகளில், 'பிரபஸரை விசாரிக்க என்று அழைத்து வந்துவிட்டு அர்ஜுனை பற்றி கேட்கிறார்களே!' என்கிற கலவரம் தெரிந்தது. அதை கவனமாக கணக்கில் எடுத்துக் கொண்டவர், விலகாப் பார்வையுடன் அவளை பார்த்தார்.

 

உறுமீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல் அவர் தன்னுடைய பதிலுக்காக காத்திருப்பதை புரிந்துக் கொண்ட மிருதுளா, "ஃப்ரண்ட்" என்றாள் மெல்லிய குரலில்.

 

அவருடைய புருவம் ஏறி இறங்கியது. மீசையை நீவியபடி அவளை பார்வையால் அளவெடுத்தார். பிறகு,

 

"வாட் இஸ் ஹிஸ் பிசினஸ்?" என்றார்.

 

என்ன பதில் சொல்வதென்று ஒரு நொடி தயங்கி யோசித்த மிருதுளா, "மைனிங்" என்றாள்.

 

"ஆங்!!" - அவள் கூறியது கேட்கவில்லை என்பது போல் காதில் ஒற்றை விரலைவிட்டு ஆட்டிவிட்டு, அவளை நேராக பார்த்து, "என்ன சொன்ன?" என்றார்.

 

அவருடைய உடல்மொழியும் பார்வையும் அவள் அடிவயிற்றை தடதடக்கச் செய்தது.

 

"மை... மைனிங்... ஐ மீன்... ஒரு... மைனிங் கம்பெனிக்கு ஒர்க் பண்ணறார்" - தடுமாற்றத்துடன் பதிலளித்தாள்.

 

"எனக்கு தெரிஞ்சு அனந்தப்பூர்ல எந்த சுரங்கமும் இல்லையே! வீட்டுக்குள்ளேயே எதுவும் சுரங்கம் தோண்டுறீங்களா என்ன?" - கடுகடுவென்று மாறியது அவர் முகம்.

 

"இல்... இல்ல சார்... அவர் ஒரிசால உள்ள கம்பெனில ஒர்க் பண்றார்"

 

"அப்போ அனந்தப்பூர்ல என்ன வேலை?"

 

"அது... அவர்... வந்து..." - தனக்காகத்தான் அவன் இங்கு வந்து தங்கியிருக்கிறான் என்பதை சொல்ல முடியாமல் தவித்தவளுக்கு இன்னொரு சந்தேகமும் எழுந்தது.

 

'உண்மையிலேயே அவளுக்காகத்தான் இங்கு தங்கியிருக்கிறானா!' - குழப்ப மேகம் சூழ்ந்து அவள் கண்ணை மறைத்தது. பிரபஸரை என்ன செய்தானோ என்கிற எண்ணம் மேலெழ துக்கம் நெஞ்சை அடைத்தது.

 

"ஸ்பீக் அவுட் மிருதுளா. இங்க என்ன அசைன்மென்ட்காக வந்திருக்கான்" - விழிகளை உருட்டி அதட்டினார். அவர் கண்களில் தெரிந்த வெறியைக் கண்டு மிருதுளா நடுங்கிப்போனாள். அவர் அர்ஜுனை வேட்டையாட துடிப்பதை புரிந்து கொண்டவளின் மனம் பதறியது.

 

"இல்ல சார். அப்படி எதுவும் இல்ல" என்று பயத்துடன் படபடத்தாள். அந்த நொடி அவளுக்கு அனைத்தையும் விட அவன் மட்டுமே பெரிதாக தோன்றினான். ஆபத்து அவனிடம் நெருங்குவதை அவளால் அனுமதிக்க முடியவில்லை. ஆனால் இது சரியா? அவள் செய்வது நியாயமா? - மனசாட்சி குத்தியது. காதல் கொண்ட மனம் அதை கடந்து செல்ல உந்தியது. முன்னுக்குப் பின் முரணாக போராடிய உணர்வு பிரவாகத்தில் தத்தளித்தவள், தனக்குள் ஒரு மாயையை உருவாக்கிக் கொண்டாள். பிரபஸர் எங்கோ நலமாக இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டாள். ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் அவள் தனக்குள் உருவாக்கிக் கொண்ட அந்த எண்ணத்தை, மீண்டும் மீண்டும் அசைபோட்டு நம்பிக்கையாக உருவேற்றி, அதையே பற்றுக்கோளாக பிடித்துக் கொண்டு தன்னைத்தானே தேற்றி கொண்டாள்.

 

ஆனால் அவளுடைய நம்பிக்கையை உடைத்து, பற்றுக்கோலை பானத்துறும்பாக மாற்றியது, அடுத்து அந்த அதிகாரி அவள் மீது எடுத்துவைத்த குற்றச்சாட்டு.

 

"நேற்றையிலேருந்து பிரபஸர் மிஸ்ஸிங். நீதான் அவரை கடைசியா பார்த்திருக்க. உனக்கு தெரியாம அவர் எங்கேயும் போயிருக்க முடியாது. சொல்லு..."

 

"சார் நான் பிரபஸரை பார்க்கவே இல்ல. நா போனப்ப அவர் வீட்லேயே இல்ல" - தவிப்புடன் மறுத்தாள் மிருதுளா.

 

"நீ எவ்வளவு பெரிய பிரச்சனையில இருக்கன்னு உனக்கு புரியல" என்று அவளை ஒரு விதமாக பார்த்தவர், "பேசலைன்னா உன்னால இங்கிருந்து போக முடியாது" என்றார்.

 

அச்சுறுத்தி அவள் உறுதியை குலைத்துவிடும் நோக்கில் அவர் பேசிக் கொண்டிருக்க அவளோ மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

அதில் ஆத்திரமடைந்தவர், "ஷட் அப்..." என்று அங்காரத்துடன் மேஜையை ஓங்கி அடித்தார்.

 

விக்கித்துப்போன மிருதுளா மூச்சைப் பிடித்துக் கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தாள். பிடிபட்ட பறவை போல் படபடத்தது நெஞ்சம். அகல விரிந்த அவள் விழிகளில் திரண்ட கண்ணீர் கரைபுரள நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

 

சற்று நேரம் அவளை வெறித்துப்பார்த்த அந்த மூத்த மனிதர், "கொன்னுட்டியா?" என்றார் அமைதியாக.

 

திக்கென்றிருந்தது அவளுக்கு. 'கொலையா! அவளா!' - நெஞ்சுக்குழிக்குள் கட்டை விழுந்தது போன்ற உணர்வில் சுவாசம் சீரற்று போக வாயை திறந்துத் திறந்து மூடினாள். விழிகளில் தொக்கி நின்ற கண்ணீர் தடையை உடைத்துக் கொண்டு பெருகியது.

 

"என்ன மோட்டிவ்?"

 

"நோ..."

 

"எப்படி பண்ணின?"

 

"கடவுளே!"

 

"பாடியை எப்படி டிஸ்போஸ் பண்ணின?"

 

"இல்ல... இல்ல... நா எதுவும் பண்ணல" - கதறிவிட்டாள்.

 

ஓரிரு நொடிகள் அவளுக்கு அவகாசம் கொடுத்தவர், "அப்போ வேற யார் பண்ணினது?" என்றார் நிதானமாக.

 

நிலைகுலைந்து போய் குலுங்கி கொண்டிருந்தவள், சட்டென்று நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தாள். 'அர்ஜுனை பற்றி எதுவும் தெரிந்திருக்குமோ!' - அந்த நேரத்திலும் அவளுக்கு அவனை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம்தான் எழுந்தது. விட்டுக்கொடுக்கவே முடியவில்லை.

 

"எனக்கு எதுவும் தெரியாது" - பட்டென்று கூறினாள். பிரபஸருக்கு செய்யும் துரோகம்தான். ஆனால் அவனுக்கு எதிராக சிந்திக்கக் கூட முடியவில்லையே! என்ன சுழல் இது! அவளுடைய மனிதம் எங்கு தொலைந்துபோனது! குற்றவுணர்வு அறுத்தது.

 

"அர்ஜுனை எப்படி தெரியும்?"

 

அவள் பதில் சொல்லவில்லை.

 

"நீ பிரபஸரை பார்க்க போனப்ப அர்ஜுன் எங்க இருந்தான்?"

 

"ஐ டோண்ட் நோ" - கண்ணீர் வற்றிப்போனவளின் குரலில் ஒருவித பிடிவாதம் தெரிந்தது.

 

புருவம் நெரிய அவளை வெறித்துப்பார்த்த அதிகாரி, "போலீஸ்காரனோட கடினமான பக்கத்தை பார்க்க விரும்புற இல்ல?" என்றார் கண்கள் பளபளக்க.

 

அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவனை காட்டிக்கொடுக்க முடியாது. குற்ற உணர்ச்சியிலிருந்தும் தப்பிக்க முடியாது. நடப்பது நடக்கட்டும். பழியும் பாவமும் அவள் மீதே விழட்டும்... இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.

 

அப்போது அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. தணல் போல் செக்கச்சிவந்த முகத்துடன் அர்ஜுன் உள்ளே நுழைந்தான். அவனைத் தொடர்ந்து, கருப்பு பேண்ட்டும் வெள்ளை சட்டையும் அணிந்து கையில் கத்தை காகிதத்தை கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரும் உள்ளே நுழைந்தார்.

 

காவல்துறை அதிகாரியின் கவனம் அவர்களுக்கு பின்னால் நின்ற காக்கிச்சட்டையின் மீது கண்டிப்புடன் படிந்தது.

 

"என்கொய்ரி போயிட்டு இருக்கும் போது என்ன இடையில" - அதட்டினார்.

 

"சார் ப்ளீஸ் வெயிட் அவுட் சைட். டென் மினிட்ஸ்ல முடிஞ்சிடும்" - விசாரணையில் உடன் இருந்த துணை ஆய்வாளர் அவர்களை வெளியே அனுப்ப முயன்றாள்.

 

"எங்ககிட்ட பேப்பர்ஸ் இருக்கு. ஆர்டர் இல்லாம அவங்களை நீங்க இங்க கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது. அனுப்புங்க" - வழக்கறிஞர் வாதம் செய்தார்.

 

அவரை ஏற இறங்க பார்த்த காவல்துறை அதிகாரி, "உங்க டியூட்டியை செய்யுங்க... ஆனா என்னோட டியூட்டியை டிஸ்டர்ப் பண்ணாம செய்யுங்க" என்று என்று கடுப்புடன் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

 

"இன்னும் சில கேள்விகள் கேள்விகேட்கனும். பதில் கிடைச்சதும் அனுப்பறேன்" - அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மிருதுளாவின் பக்கம் திரும்பி, "கெட் அப்" என்றான் அர்ஜுன். குரலில் ஒருவித அதட்டல் இருந்தது. அது தனக்கானது என்பதை புரிந்துக் கொண்ட அதிகாரி, "யு காண்ட் டூ திஸ்" என்றார் கோபத்துடன்.

 

"ஐ கேன் " - சீற்றத்துடன் முறைத்தான் அர்ஜுன். அவன் கண்களில் தெரிந்த அக்கினி அவரை நிதானிக்கச் செய்தது.

 

"இது நம்ம கடைசி சந்திப்பா இருக்கப்போறது இல்ல அர்ஜுன். சீக்கிரமே உன்ன தேடி வருவேன்" என்றார் சவால் போல.

 

"வெயிடிங்" - எள்ளல் தெறித்தது அவன் குரலில்.

 

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Sinthu Ratna, Riy Raj, antany thilsiya and 20 people likedNithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
03/07/2019 3:49 am  

சைட்ல ஏதோ காண்ஃப்ளிக்ட். இவ்வளவு நேரம் போராடிட்டு இங்கேயே எபிஸோடு போட்டுட்டேன். படிச்சுட்டு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க. கீழையே கமெண்ட் பண்ணுங்க. தேங்க்ஸ்...

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
11/07/2019 5:13 pm  

ஹாய் ஃபிரண்ட்ஸ், எப்படி இருக்கீங்க? அடுத்த எபிசோட் போட்டுட்டேன். கதை வாசிக்கிறவங்க லாகின் பண்ணி வாசிங்க. அப்போதான் கமெண்ட் அண்ட் லைக் போட முடியும். லிங்க் இங்க கொடுத்திருக்கேன்.

 

லாஸ்ட் எபிசோட்ல பதினெட்டு லைக் வந்திருந்தது. லைக் பண்ணின அனைவருக்கும் நன்றி. ஆனா இது போதாது. இன்னும் அதிகமா எதிர்பார்க்கறேன். ஜஸ்ட் ஒரு கிளிக்.. ரொம்ப கஷ்ட்டமான வேலை இல்ல... சோ எல்லாரும் கண்டிப்பா பண்ணிடுவீங்கன்னு நினைக்கிறேன். முடிஞ்சவங்க கமெண்ட் பண்ணுங்க.

 

உங்களோட இந்த பழக்கம் சகாப்தத்தின் மற்ற புது ரைட்டர்ஸை என்கரேஜ் பண்ண உதவும். அதனாலதான் குறிப்பிட்டு சொல்லறேன்.வேற எதுவும் இல்ல...

 

என்ன ஃபிரண்ட்ஸ் மறக்காம லைக் பண்ணுவீங்களா? கமெண்ட் பண்ணுவீங்களா? பார்க்கலாம்...

லாகின் லிங்க் இங்க

 

அத்தியாயம் - 49

திறமையானவனை பெண்ணுக்குப் பிடிக்கும். பாதுகாப்பானவன் அவள் மனதில் ஆழப்பதிவான். இவன் இருக்கும் வரை என்னை அசைக்க முடியாது என்கிற நம்பிக்கையை கொடுப்பவனிடம் அவள் சரணடைய தயங்குவதில்லை. சரணடைந்துவிட்டால் அவனை நம்பி எந்த எல்லைக்கும் செல்வாள். மிருதுளாவும் நம்பினாள்.

 

வெளிப்படையாக எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், அர்ஜுன் தன்னை தேடி வருவான் என்கிற எண்ணம் அவள் ஆழ்மனதில் இருந்தது. அவன் வந்து நின்றான். அவளுக்கு ஆதரவாக அதிகாரியிடம் நெஞ்சை நிமிர்த்தி முறைத்தான். அந்த ஒரு கணத்தில் எல்லாவற்றையும் மறந்து பூரித்தது அவள் மனம்.

 

அர்ஜுனை பார்க்கும்வரை மிருதுளாவிற்கு ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. குழப்பங்கள் இருந்தன. பயங்கள் இருந்தன. ஆனால் ஆனால் அவனை பார்த்த நொடியில் அனைத்தும் மறந்து போனது. அந்த அளவிற்கு அவள் மனதையும் அறிவையும் அவன் முழுமையாக ஆக்கிரமித்தான்.

 

இனி என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்கிற துணிவு பிறந்தது. விருட்டென்று எழுந்து அவனிடம் நெருங்கி அவன் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

 

அவள் உடலில் மிச்சமிருந்த நடுக்கத்தை உணர்ந்த போது அவளை இங்கு வர விட்டிருக்கக் கூடாது என்று எண்ணினான் அர்ஜுன். தன் அலட்சியத்தை வெறுத்தான்.

 

"இது நம்ம கடைசி சந்திப்பா இருக்கப்போறது இல்ல அர்ஜுன். சீக்கிரமே உன்ன தேடி வருவேன்" என்று அவர் சவால்விட்ட போது, "வெயிடிங்" என்று எள்ளலாக கூறிவிட்டு அவளை அங்கிருந்து வெளியே அழைத்து வந்தான்.

 

உடன் வந்த வழக்கறிஞருக்கு கண்ணசைவில் விடைகொடுத்துவிட்டு, மிருதுளாவோடு காரில் ஏறி கதவை அடைத்தவன், ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தபடி அசைவற்று அமர்ந்திருந்தான்.

 

இந்த விசாரணையின் பின்னணி அவனுக்கு தெரியும். மிருதுளாவின் மீதான சந்தேகத்தினால் அவள் இங்கு அழைத்துவரப்படவில்லை. இது அவனை சிக்க வைக்கும் முயற்சி. நிச்சயம் அவனைப்பற்றிய கேள்விகள் எழுந்திருக்கும். மிருதுளா உண்மையை பேசியிருந்தால் அவன் இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்பான். அவள் தனக்கு எதிராக பேசவில்லை என்பதில் அவனுக்கு நெகிழ்ச்சிதான்... ஆனால் அதுவே மனதை கனமாய் அழுத்தவும் செய்தது.

 

மிருதுளாவின் பார்வை அவனிடமே இருந்தது. பாறையில் செதுக்கிய சிற்பம் போலிருந்தது அவனுடைய பக்கவாட்டுத் தோற்றம். இறுகிய தாடையும், கழுத்தில் புடைத்திருந்த நரம்பும் அவனுடைய டென்ஷனை எடுத்துக் கூறியது. சில நிமிடங்கள் அப்படி இறுக்கமாக அமர்ந்திருந்தவன், பிறகு தானாகவே அவள் பக்கம் திரும்பினான்.

 

"ஆர் யு ஓகே?" - குரலிலும் முகத்திலும் எந்த உணர்வும் இல்லை. ஆனால் கண்களில் சின்ன கலக்கம் தெரிந்தது. அது தன் மீதான அக்கறை என்பதில் அவளுக்கு ஆனந்தமே. ஆனால் அந்த ஆனந்தத்தை முழுமையாக அவளால் அனுபவிக்க முடியவில்லை. உள்ளே ஒருபக்கமாக ஒதுங்கியிருந்தாலும், அந்த கவலை மனதை புழுவாக அரித்துக் கொண்டிருந்தது.

 

"அர்ஜுன்..." - மேலே பேச தயங்கினாள். அவன் அவள் தொடர்வதற்காக காத்திருந்தான்.

 

"நீங்க... பிரபஸரை ஒன்னும் பண்ணிடலல்ல?" - குரலில் சின்ன நடுக்கம் தெரிந்தது.

 

அழுந்த மூடிய உதடுகளுக்குள் அடைபட்டுக் கிடந்தன அவன் உணர்வுகள். கண்களில் வெறுமையை தேக்கி ஓரிரு நிமிடங்கள் அவளை வெறித்து நோக்கியவன் பிறகு எதுவுமே சொல்லாமல் காரை கிளப்பினான்.

 

மிருதுளாவின் சஞ்சலப்பட்டிருந்த மனம் அன்று இரவு அவளை உறங்கவிடவில்லை. கேள்விகள் உள்ளத்தை வண்டாய் குடைந்தன. எழுந்து வெளியே வந்தாள். விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. முதல் நாளை போலவே அர்ஜுனின் படுக்கை காலியாக இருந்தது.

 

'இன்றும் கேரேஜிற்கு சென்றுவிட்டானா!' - ஒருவித திடுக்கிடலுடன் அவள் எண்ணிப்பார்க்கும் போதே, வாசலில் அவளுக்கு முதுகுகாட்டி, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்தபடி அவன் நின்றுக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.

 

உடனே அவனிடம் சென்று, "இங்க என்ன செய்றீங்க?" என்றாள் மெல்ல.

 

அவள் வந்ததையே உணராதவன் போல் அசையாமல் நின்றவன் சில நொடிகளுக்குப் பிறகு, "கனெக்டிங் டாட்ஸ்" என்றான் ஆழ்ந்த குரலில்.

 

நட்சத்திரங்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி ஏதாவது ஒரு உருவத்தை கண்டுபிடிப்பது போல் ஏதேதோ சம்பவங்களை தொடர்புபடுத்தி எதற்கோ விடை தேடுகிறான் என்று அவளுக்கு புரிந்தது. அவனோடு பழகிய சில மாதங்களில் அந்த அளவுக்கேனும் அவனை அவளால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது.

 

சற்றுநேரம் அவனையுடைய சிந்தனையில் குறுக்கிடாமல் அமைதியாக நின்றவள், பிறகு "நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே?" என்றாள்.

 

அவள் எதைப்பற்றி பேசுகிறாள் என்று அவனுக்கு புரிந்தது. தலையை திருப்பி எதிர்பார்ப்பு நிறைந்த அவள் முகத்தை சில நொடிகள் பார்த்தவன், தன் கைகளை முகத்துக்கு நேராக உயர்த்திப் பார்த்து, "இந்த கைல அவரோட ரெத்தம் இல்ல" என்றான் உள்ளடங்கிய குரலில்.

 

சட்டென்று பிறந்த விடுதலை உணர்வுடன் ஆசுவாசமாக மூச்சுக்காற்றை வெளியேற்றியவள், அவன் கைகளை பிடித்து அதில் முகம் புதைத்து, "எனக்கு தெரியும். நீங்க எதுவும் பண்ணியிருக்க மாட்டீங்க" என்றாள்.

 

கைகளில் ஈரத்தை உணர்ந்த அர்ஜுனின் உடல் விறைத்து நிமிர்ந்தது. மெல்ல கைகளை அவளிடமிருந்து உருவிக் கொண்டான். அவன் கைகளில் பிரபஸரின் ரெத்தம் இல்லை என்பது உண்மை தான். ஆனால், அந்த கைகள் ரெத்தம் தோய்ந்த கைகள் தானே? - மனம் சஞ்சலப்பட்டது.

 

"போ... போய் தூங்கு" - அவள் முகத்தை பார்க்காமல் கூறினான்.

 

உணர்ச்சிவசத்தில் இருந்த மிருதுளாவும் அவனிடம் தெரிந்த மாற்றத்தை உணரவில்லை. "நீங்களும் வாங்க. ரொம்ப டைம் ஆச்சு" என்றாள் மூக்கை உறிஞ்சியபடி. அழுகையாலும் உறக்கமின்மையாலும் அவள் கண்கள் சிவந்துவிட்டது.

 

தனக்கு உறக்கம் வரவில்லை என்று கூறி அவளை உள்ளே அனுப்பிவிட்டு சூழ்ந்திருந்த இருளில் தனித்து நின்றான் அர்ஜுன்.

 

அவனுடைய கடந்தகாலமும் எதிர்காலமும் ஏற்றுக்கொள்ளாத நிகழ்கலாம் அவள். இருள் சூழ்ந்த தனிமைக் காடாக இருந்த அவன் உலகத்தில் அழகிய மின்மினி பூவாய் ஒளிர்பவள். அவளை பிரியும் நிலை எண்ணிப் பார்க்கவே முடியாத சூனியம். ஆனால் அந்த சூனியம் தன்னை நெருங்கி கொண்டிருப்பது போல் உணர்ந்தான் அர்ஜுன்.

 

கடந்த பத்து நாட்களாக வடநாட்டின் முக்கிய நகரங்களில் சில முக்கிய நபர்கள், தொழிலதிபர்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஊடகங்களை பொறுத்தவரை ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு காரணம்... ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. காவல்துறையும் அதைத்தான் பதிவு செய்தது. மக்களும் அதைத்தான் நம்பினார்கள். ஆனால் பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா? - அர்ஜுனுக்கு சந்தேகம் வந்தது. உல்ஃப் நாட்டைவிட்டு செல்லவில்லை என்று நம்பினான். ப்ளூ ஸ்டாரை தொடர்பு கொண்டான். விபரம் கேட்டான். அவருக்கும் விஷயம் தெரிந்திருக்கவில்லை. அப்போதுதான் எதிர்பாராமல் இன்னொரு செய்தி அவன் செவிக்கு வந்தது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கோர்த்தாவின் ஆட்கள். இது பெரிய அதிர்ச்சி அவனுக்கு.

 

கோர்த்தாவின் அடுத்த தலைவன் அவன்தான் என்பது ராகேஷ் சுக்லாவின் வாய்மொழி. பெருந்தலைகள் அனைவருமே அதை ஆமோதித்தார்கள். ஆனால் கோர்த்தாவில் உள்ள முக்கிய நபர்களையே அவனுக்கு தெரிந்திருக்கவில்லையே! அப்படியென்றால் எத்தனை மேலோட்டமாக அங்கு இருக்கிறான்! அல்லது அப்படி இருக்க வைக்கப்பட்டிருக்கிறான்! உண்மை தகித்தது. கொதித்துப்போனான்.

 

ராகேஷ் சுக்லாவின் இன்னொரு கபட முகத்தை கண்டு கொண்டவன் அவரிடமே பாய்ந்தான்.

 

"கோர்த்தா கடல் மாதிரி ஆழமானது அர்ஜுன். இங்க எனக்கே தெரியாதவங்ககூட எனக்காக வேலை பார்க்கறாங்க. எல்லாரையும் உனக்கு தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்ல. கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பது நம்ம ஆளுங்க. உல்ஃப் இங்கதான் இருக்கான். அவனை பிடிக்க என்ன செய்யணுமோ செய்" என்று கூறி பேச்சை கத்தரித்தார். அவனுக்கு அடுத்த அசைன்மென்ட் வந்து சேர்ந்தது.

 

உல்ஃப் தான் இந்த கொலைகளை செய்கிறான் என்றால் அவனுக்கும் கோர்த்தா பிளாக் குழுவிற்கும் தொடர்பு இருக்கிறது. அவர்களில் முக்கியமான ஆள் அவன் கண் எதிரிலேயே இருக்கிறான். நூலை கட்டி பறக்கவிடும் பட்டம் போல் அவரை விட்டு வைத்திருந்தான். இப்போது நேரம் வந்துவிட்டது. தூக்கிவிட்டான்.

 

முப்பத்தியாறு மணிநேரம் பிரபஸரை மயக்கத்திலேயே தன் வீட்டு கேரேஜில் வைத்திருந்தவன் இப்போதுதான் இருளில் பதுங்கி வந்த ஒரு கருப்பு காரின் டிக்கியை நிரப்பி அனுப்பினான். இனி ப்ளூ ஸ்டார் பார்த்துக்கொள்வார். விஷயத்தை மட்டும் வாங்கி அவனுக்கு அனுப்புவார்.

 

இது ஒன்றும் பெரிய அசைன்மென்ட் அல்ல. நகத்தை கடித்து துப்புவது போல் அசால்ட்டாக செய்து முடிக்கக் கூடியது. ஆனால் இதில் மிருதுளா இடையிட்டுவிட்டாள். அவரை கடத்தும் நாள் அன்று அவர் மிருதுளாவிற்கு போன் செய்யவில்லை என்றால், அவள் அங்கு வந்திருக்கவில்லை என்றால் இந்த பிரச்சனையே எழுந்திருக்காது. இப்போது காவல் விசாரணையை அவள் சந்திக்கும்படி ஆகிவிட்டது. அது அவனுக்கு பெரிய மனஉளைச்சல். அதுமட்டும் அல்ல...

 

அவள் அவனை பாதுகாக்க முயன்றிருக்கிறாள்! அது சாதாரண செயல் அல்ல. உண்மையை பேசவைக்க எவ்வளவு அழுத்தம் கொடுப்பார்கள் என்று அவனுக்கு தெரியும். அதுவும் மிருதுளா போன்ற பெண்களை பார்வையாலேயே நிலைகுலைய செய்துவிடுவார்கள். அப்படி இருந்தும் அவள் அமைதியாக இருந்திருக்கிறாள் என்றால், அவளுடைய அன்பு ஆழமானது. அவனுக்காக எதையும் செய்யக் கூடியது.

 

இதைத்தான் அவன் எதிர்பார்த்தான். திட்டமிட்டுத்தான் அவளை இந்த நிலைக்கு கொண்டுவந்தான். ஆனால் இவற்றையெல்லாம் செய்திருக்க வேண்டாமோ என்று குழப்பமாக இருந்தது. இந்த உண்மையெல்லாம் ஒருநாள் அவளுக்கு தெரியவரும். இதுமட்டும் அல்ல... இன்னும் அவனுக்குள் மறைந்திருக்கும் அத்தனை உண்மைகளும் பெரும் சீற்றத்துடன் வெளிப்படும். அவற்றையெல்லாம் அவள் தாங்குவாளா? தாங்கி அவனோடு இணைந்திருப்பாளா? - எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருந்தது. சிந்தனையோடு வெகுநேரம் வெளியே நின்றுக் கொண்டிருந்துவிட்டு உள்ளே வந்தான்.

 

கட்டிலில் கால்களை மடக்கி சுருண்டு படுத்திருந்தாள் மிருதுளா. அவளை பாக்கும் போதே அவன் மனம் கனிந்தது. கட்டிலுக்கு அருகில் சேரை இழுத்துப் போட்டு அவள் முகத்தை பார்த்தபடியே அமர்ந்துவிட்டான்.

 

மறக்காதீங்க... லைக் அண்ட் கமெண்ட்...  😊  👍  👍  👍 

 

 

 

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nimmi Dana, Sinthu Ratna, uma sundaram and 50 people liked
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
17/07/2019 2:35 pm  

டியர் ஃபிரண்ட்ஸ்,

லாஸ்ட் டைம் என்னை ரொம்ப சந்தோஷப்படுத்தீட்டிங்க... 😘 😘 😘 😘 கிட்டத்தட்ட 40 லைக்ஸ் 40 கமெண்ட்ஸ்... வழக்கத்தை விட அதிகமா வந்திருந்தது. லைக் அண்ட் கமெண்ட் பண்ணின அனைவருக்கும் நன்றி...  🌺  🌺  🌺  🌺 

 

இன்னிக்கும் லாகின் பண்ணி படிங்க. மறக்காம லைக் பண்ணுங்க... நீங்க லைக் பண்ணினாதான் ஸ்டோரி பிடிச்சிருக்குன்னு நான் எடுத்துப்பேன்.... எனக்கு மட்டும் இல்ல... சகாப்தம்ல வர எல்லா ஸ்டோரிக்கும் லைக் கொடுத்து அந்த ஸ்டோரி கூட நீங்க எவ்வளவு கனெக்ட் ஆயிருக்கீங்கன்னு காட்டுங்க. சரியா ஃபிரண்ட்ஸ்? சகாப்தம்னா லைக்ஸ்... மறக்கக் கூடாது... ok?  👍  👍  👍  👍  👍 

 

இப்போ நெஸ்ட் எபி அப்டேட் பண்ணிட்டேன்.... ஹாப்பி ரீடிங்...  🌻  🌻  🌻 

 

நிழல்நிலவு - 50

அன்று காலை கண்விழித்ததுமே அவள் மனம் அவனைத் தேடியது. அவசரமாக குளியலறைக்குள் சென்று திரும்பி, படுக்கையறையிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். சமையலறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான் அர்ஜுன். பூனை போல் மெல்ல நடந்துச் சென்று, ஒருபக்க தோளை தட்டிவிட்டு மறுபக்கம் அவன் முகத்தை பார்த்து பளீரென்று சிரித்தாள்.

 

"குட் மார்னிங்" - அவனும் மலர்ந்த முகத்துடன் அவளை வரவேற்றான்.

 

"நைட் ரொம்ப நேரம் தூங்கலையே! எப்போ வந்து படுத்தீங்க?" - சமையல் மேடையில் தாவியேறி அமர்ந்தபடி கேட்டாள்.

 

"அவள் கையில் காபி கப்பை கொடுத்தவன் அவளுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல், "டிபன் என்ன பண்ணலாம்? பிரெட் ஆம்லெட் ஓகேவா?" என்றான்.

 

அவன் இரவெல்லாம் உறங்கவே இல்லை என்பது அவளுக்கு புரிந்தது. சட்டென்று முகம் வாடியது. அவளுடைய வருத்தம் அவன் மனதை இதமாய் வருடியது. மலர துடிக்கும் புன்னகையை உதட்டில் அடக்கி அவள் முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியோடு நெற்றி ஒற்றினான். இமைகள் தானாய் மூடிக் கொள்ள நாசியில் அவளுடைய நறுமணத்தையும், மனதில் அக்கணத்தின் அற்புத உணர்வையும் ஏற்றி கொண்டு கண்விழித்து, "ஐம் ஆல்ரைட் ஸ்வீட்டி" என்றான் குழைவாக. அந்த கணத்தில் அவள் உலகம் வெகுவாய் சுருங்கிவிட்டதாய் தோன்றியது. அவனுக்கு மட்டுமே அவள் உலகத்தில் இடமிருந்தது.

 

இனிய உணர்வை மனதில் தாங்கியபடி இருவரும் இனைந்து காலை வேலைகளை முடித்தார்கள். மிருதுளா கல்லூரிக்கு தயாரானாள். வழக்கம் போல் அவனே அவளை அழைத்துச் சென்றான். கல்லூரி பார்க்கிங்கில் அவள் காரிலிருந்து இறங்கிய போது, "இங்கதான் இருப்பேன்..." என்றான் அர்ஜுன்.

 

முதல்நாள் அவன் அங்கே இல்லாததால் இன்று அவள் பயப்படுவாளோ என்கிற அக்கறையோடு அவன் கூறியது அவளுக்கு பிடித்திருந்தது.

 

"ஐ நோ..." - அவன் கையை அழுத்திப் பிடித்துத் தன் நம்பிக்கையை அவனுக்கு உணர்த்திவிட்டு கீழே இறங்கி வகுப்பறையை நோக்கி நடந்தாள்.

 

சில மணிநேரங்கள் கூட கழிந்திருக்காது. மீண்டும் பரபரப்புடன் அர்ஜுனைத் தேடி ஓடிவந்தாள். தூரத்தில் அவளை பார்த்ததுமே விஷயம் ஏதோ முக்கியமானது என்பதை புரிந்துக் கொண்டவன் அடியை எட்டிப்போட்டு அவளை நோக்கி நடந்தான்.

 

"என்ன ஆச்சு?"

 

"ஐ காட் எ கால்"

 

"யார்கிட்டேருந்து"

 

"அம்மா"

 

"வாட்!"

 

"ப்ராமிஸ்... எனக்கும் நம்ப முடியலதான்... ஆனா உண்மை... நானே பேசினேன்"

 

"என்ன சொன்னங்க?"

 

"ரொம்ப அவசரமா பேசினாங்க. என்னை உடனே இந்த அட்ரஸுக்கு வர சொன்னாங்க" - ஒரு பேப்பரை அவனிடம் நீட்டினாள்.

 

"சரி வா போகலாம்" - பேப்பரை வாங்கிப் பார்த்தவன் உடனடியாக புறப்பட எத்தனித்தான்.

 

"அர்ஜுன்" - அவள் தயங்கினாள்.

 

"என்ன?" - புருவம் சுருக்கினான்.

 

"தனியா வர சொன்னாங்க"

 

"ஓ!" - அவன் முகம் மாறியது.

 

"ஏதோ பிரச்சனையில் இருக்காங்கனு நினைக்கிறேன்" - சமாதானம் செய்ய முயன்றாள்.

 

"நீ போயி காப்பாத்த போறியா?" - வெடுவெடுத்தான். மிருதுளா பேச்சிழந்தாள்.

 

"உனக்கே லைப் த்ரெட் இருக்கு. இது உனக்கு வெட்டின குழியா கூட இருக்கலாம். நீயா போயி விழறேன்னு சொல்றியா? உன்ன அனுப்பி வச்சுட்டு, நா கைய கட்டிக்கிட்டு நிக்கணுமா? வாட் யு திங் அபௌட் மீ... ம்ம்ம்?" - பற்கள் நறநறக்க அடிக்குரலில் சீறினான்.

 

"அம்மாவே சொன்னாங்க அர்ஜுன்"

 

"யாராவது அவங்கள அப்படி பேச வச்சிருக்கலாம்"

 

"ஐயோ!"

 

"எஸ்... அவங்க கடத்தப்பட்டிருக்கலாம். சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம். உன்ன கூப்பிட சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம்"

 

"அர்ஜுன்!!!" - பயந்துவிட்டாள் மிருதுளா.

 

"இதெல்லாம் என்னோட கெஸ்சிங் தான். ஆனா இதெல்லாம் நடந்திருந்தா ஐ ஒன்லி கேன் ஹெல்ப் யு... அண்ட் யுவர் மாம்... ஒருவேளை அப்படி எதுவும் நடக்கலைன்னா, உன்ன உங்க அம்மாகிட்ட ஒப்படைச்சுட்டு நா கிளம்பிடறேன். என்ன பிரச்சனை இதுல?" - பிசிறுதட்டாமல் அறிவுறுத்தினான். அதுதான் சரியென்று அவளுக்கும் தோன்றியது.

 

"யு ஆர் ரைட் அர்ஜுன். உடனே கிளம்பலாம்" - பதட்டத்துடன் அவனை அவசரப்படுத்தினாள். இருவரும் ஏறிக்கொள்ள அதிகபட்ச வேகத்தில் பறந்தது அர்ஜுனின் கார்.

 

மிருதுளா குறிப்பிட்ட முகவரியில் இருந்த ஊர் அனந்த்பூரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில்தான் இருந்தது. முக்கால் மணிநேரத்தில் இலக்கை அடைந்துவிட்டார்கள். அது ஒரு சிறு நகரம்... ஓரளவுக்கு மக்கள் புழக்கம் இருக்கும் பகுதியில்தான் அந்த முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் சுற்றிக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக பெரிய மெக்கானிக் ஷெட்டிற்கு பின்னால் முளைத்திருந்த ஒரு புது குடியிருப்பில் ஆங்காங்கே சில வீடுகள் இருப்பதை கண்டுபிடித்து அந்த ஏரியாவிற்குள் நுழைந்து, வீட்டு எண்ணை கண்டுபிடித்து, வாசலில் நடுநாயமாக காரை கொண்டுச் சென்று நிறுத்தினார்கள்.

 

காரிலிருந்து இறங்குவதற்கு முன்பே ஜன்னல் திரைச்சீலையின் வழியே இரண்டு உருவங்கள் தெரிவதை கவனித்தாள் மிருதுளா. ஒரு பெண் ஒரு ஆண்... அவள் கவனம் கூர்மையானது. உள்ளே பரபரப்பு தெரிந்தது. சிந்தனையுடன் கீழே இறங்க எத்தனித்தாள்.

 

"ஸ்டே..." - உத்தரவிட்டான் அர்ஜுன். அப்போதுதான் அவள் கவனம் அவள் பக்கம் திரும்பியது. கண்களில் வேட்டை மிருகத்தின் பளபளப்பும் முகமெல்லாம் தணலின் தகிப்புமாக மிரட்டினான்.

 

அவள் மேலே யோசிப்பதற்குள் "மிருதூ..." என்கிற அலறலுடன் வெளியே ஓடிவந்தாள் அவள் தாய்.

 

விருட்டென்று காரிலிருந்து இறங்கி குறுக்கே வந்து, கால்களை அகட்டி, இடுப்பில் கைவைத்து, மலை மனிதன் போல் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான் அர்ஜுன்.

 

முதலில் திகைத்து பின்வாங்கிய அந்த பெண்மணி, பிறகு சுதாரித்துக் கொண்டு, "அர்ஜுன், என் பொண்ண விட்டுடு" என்றாள் பெண் புலியின் சீற்றத்துடன்.

 

கடகடவென்று சத்தமாக சிரித்தான் அவன். ஆக்ரோஷ சிரிப்பு... அசுர சிரிப்பு...

 

மிருதுளா மிரட்சியுடன் காரிலிருந்து இறங்கினாள். தாய்க்கும் மகளுக்கும் குறுக்கே அகழியாய் விரிந்து நின்ற அந்த ஆணவக்காரன் உரத்தக் குரலில் பேசினான்.

 

"நீ வித்தைக்காரி ஷோபா... ஆனா நா வித்தனுக்கும் வித்தன்... விட்டுடுவேனா?"

 

'ஷோபாவா! இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா!' - மிருதுளா திகைத்து நின்றாள்.

மகளிடமிருந்த அதே திகைப்பும் மிரட்சியும் ஷோபாவிடமும் தெரிந்தது. ஏழு ஆண்டுகளாக எந்த எமனுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறாளோ அந்த எமன் அவள் எதிரில்... பாசக்கயிறை சுழற்றியபடி கர்ஜிக்கிறானே! மிரட்சியில்லாமல் போகுமா? அத்தனை மிரட்சியிலும் அவனுடைய பிரதான குறியாக தன் கணவனை கட்டாயப்படுத்தி பின்வாசல் வழியாக வெளியே தள்ளி கதவை அடைத்துவிட்டு அடிவயிறு தடதடக்க அவன் எதிரில் வந்து நின்றாள். அவள்தான் ஷோபா...

 

"மிருது... வந்துடு... என்கிட்ட வந்துடு..." - வறண்டுபோன நாவை முயன்று பிரித்து மகளோடு பேசினாள்.

 

என்ன நடக்கிறது என்றே புரியாமல் மூளை மரத்துப்போய் நின்றுக் கொண்டிருந்த மிருதுளா, "அம்மா இது..." என்று ஏதோ விளக்கம் கூற முற்பட, அவளை இடைமறித்து அதட்டி, "வாடி இந்த பக்கம்" என்று கத்தினாள் தாய். அவள் உடல் வெளிப்படையாக நடுங்கியது.

 

அப்போது கூட தாயின் பயம் தேவையற்றது என்றே எண்ணினாள் மிருதுளா. இருவரும் பரிச்சயமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் பிரச்சனை இருந்தாலும் அதை தன்னால் தீர்க்க முடியும் என்று நம்பினாள்.

 

இருவரையும் சமாதானம் செய்ய அவளால் முடியாதா என்ன? எதிர்பாராமல் சந்தித்த அதிர்ச்சியில் இருவரும் கத்திக் கொள்கிறார்கள். இடையில் அவள் வந்தால் அனைத்தும் மாறிவிடப்போகிறது... - அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தாயை நோக்கி ஒரு அடியெடுத்து வைத்தாள் மிருதுளா.

 

"ஸ்டே... ஸ்டில்... ஹனி..." - இடையிட்ட அவன் குரலில் தேங்கினாள்.

 

"குட்" - பாராட்டினான் அர்ஜுன். அவன் குரலிலிருந்த குழைவிலும் அதற்கு மகள் கட்டுப்படும் விதத்திலும், வயிற்றுக்குள் ஐஸ் கட்டியை வைத்துக் கட்டியது போல் விதிர்விதிர்த்துப்போனாள் ஷோபா.

 

"அர்ஜுன்... வேண்டாம்... அவ சின்ன பொண்ணு. விட்டுடு" - எச்சரித்தாள்.

 

"சின்ன பொண்ணா!" - மிருதுளாவின் அருகே சென்று கீழிருந்து மேல்வரை மோப்பம் பிடித்தான்.

 

"அர்ஜுன்!!!!" - கண்கள் சிவக்க கிறீச்சிட்டாள் அந்த தாய்.

 

"ரிலா...க்...ஸ் தோழி... வி ஆர் ஃபிரண்ட்ஸ். நா என்ன பண்ணிடப் போறேன் உன் பொண்ண? வி லைக் ஈச் அதர்... இல்ல ஹனி?" - மிருதுளாவை தோளோடு அணைத்து, அவள் முகத்திற்கு வெகு அருகே தன் முகத்தைக் கொண்டு சென்று புருவம் உயர்த்தினான்.

 

அவனுடைய செயலில் மிருதுளாவே சற்று முகம் சுளித்து பின்வாங்க முயன்றாள். அவன் பிடி இறுகியது.

 

"அர்ஜுன் ப்ளீஸ்" - மெல்லிய குரலில் அவனை கட்டுப்படுத்த முயன்றாள் மிருதுளா.

 

"ஹூ - ஆம் - ஐ - டு - யு?" - ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாக உச்சரித்து, தீவிர பார்வையுடன் அவளை நோக்கினான்.

 

"யு நோ மீ வெரி வெல். காம் டௌன் ப்ளீஸ்..." - தாயின் காதில் விழாமல் முணுமுணுப்பாக கூறி அவனை சமாதானம் செய்துவிட முனைந்தாள்.

 

அவனிடம் மகள் காட்டும் நெருக்கத்தில் தவித்துப்போன தாய், "நோ... மிருது... வேண்டாம் டா... வந்துடு அம்மாகிட்ட" என்று கெஞ்சினாள்.

 

"ஆன்சர் - மீ - டார்லிங்... நான் யார் உனக்கு?" - அழுத்தம் திருத்தமாக பிடிவாதத்துடன் கேட்டான். அவள் மீது அவன் கொண்டிருந்த ஆளுமை தாயின் கெஞ்சலைக் கூட தள்ளிவைக்கும் அளவிற்கு தீவிரமாய் இருந்தது. அதன் பலன், அவள் பார்வை அர்ஜுனிடமே நிலைத்திருந்தது.

 

"ஹி இஸ் நாட் எ குட் மேன்..." - அலறினாள் ஷோபா... தாயின் பெருங்குரல் ஒரு பக்கம் எச்சரித்துக் கொண்டிருந்தாலும்,

 

அவன் கேட்ட கேள்விக்கு, "மை லவ்" என்று நிதானமாக பதிலளித்தாள் மிருதுளா.

 

"அவன் பாவி... நம்பாத..." - அழுதாள் தாய்.

 

"ஹாங்??? காதுல விழா..." - வேண்டுமென்றே காதை குடைந்தான் அந்த கபடன்.

 

தாயின் அழுகை ஒருபக்கம்... அவனுடைய ருத்ராவதாரம் இன்னொரு பக்கம்... மிருதுளா உடைந்தாள்.

 

"உன்ன கொன்னுடுவான்டி..." - "மை லவ்..." - தாயும் மகளும் ஒரே நேரத்தில் உறக்கக் கத்தினார்கள். இருவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அர்ஜுன் என்னும் மனிதனுக்குள் தாண்டவமாடிக் கொண்டிருந்த அசுரன் திருப்தியுடன் நிமிர்ந்தான்.

 

"ஐயோ கடவுளே!" - தலையில் அடித்துக் கொண்டாள் ஷோபா.

 

"கேட்டியா ஷோபா? ஐம் யுவர் டாட்டர்ஸ் லவ். ஷி லவ்ஸ் மீ..." - கொக்கரித்தான்.

 

"மிருது, அவனை நம்பாத. உன்ன ஏமாத்துறான். அவன் உன்ன கொன்னுடுவான். ப்ளீஸ் வந்துடு டா செல்லம்..." - கூக்குரலிட்டாள்.

 

"பகவான் எங்க ஷோபா?" - அர்ஜுன்.

 

அவனுக்கு பதில் சொல்வதை தவிர்த்து மக்களிடம் பேசினால் ஷோபா... "பெரிய கொலைகாரன் அவன்... ஏழு வருஷமா என்னை துரத்திக்கிட்டு இருக்க எமன்..."

 

"அம்மா... நீங்க நினைக்கற மாதிரி இல்ல... அர்ஜுன்... அர்ஜுனும் என்னை லவ் பண்றார். நா கன்வெண்ஸ் பண்றேன் ம்மா... ப்ளீஸ் ஸ்டே காம்" - தாயிடம் நெருங்க முயன்றாள் மகள். அர்ஜுன் ஹோத்ராவின் வலிய கரம் அவளை வன்மையாக பற்றித்தடுத்தது.

 

கையே உடைந்துவிடும் போல் தோன்றியது. தன் வலியை காட்டிக் கொண்டால் தாயின் பதற்றம் மேலும் அதிகமாகும் என்று எண்ணிய மிருதுளா பல்லை கடித்து வலியை சகித்துக் கொண்டு, "ப்ளீஸ்" என்று அவனை கெஞ்சுதலாகப் பார்த்தாள். அவன் முகத்திலோ கோபம் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.

 

"பகவான் எங்க?" - மீண்டும் கேட்டான்.

 

"ஐயோ! அவனை அவனை நம்பாதேயேன்" தவித்தாள் தாய்.

 

"நாங்க வரும் போது உள்ள இருந்த மாதிரிதானே இருந்தது."

 

"அவர் இல்ல..." - அழுகையை நிறுத்திவிட்டு திடீரென்று சீறினாள்.

 

"இந்த தடவையும் உன்ன விட்டுட்டு ஓடிட்டானா? பின்பக்கமா எகிறி குதிச்சு ஓடுறது பழகிடிச்சு போலருக்கு?"

 

"அவர் யாருங்கறதை மறக்காத அர்ஜுன்" - எச்சரித்தாள்.

 

"நெவர்..."

 

"ம்மா ப்ளீஸ்..." - மிருதுளா தாயிடம் கெஞ்சினாள்.

 

"ஐயோ... மிருது... அவனைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? அவனுக்கு கல்யாணம் ஆயிடிச்சு. சொன்னானா உன்கிட்ட?"

 

"வா...ட்...!" - அதிர்ச்சியில் அவள் இதயம் நின்றே போனது.

 

"ப...க...வான் எங்க ஷோ...பா...???" - பூமி அதிர உறக்கக் கத்தினான். கட்டுக்கடங்கா கோபத்தில் அவன் உடல் நடுங்கியது. மிருதுளாவை பிடித்திருந்த பிடியில் அவள் கை இற்றுப் போனது.

 

"நோ... நாட் பாஸிபிள்..." - தலையை குறுக்காக அசைத்தாள் மிருதுளா. தாயை நம்ப மறுத்தாள். 'இருக்காது... இருக்க முடியாது... இது எப்படி சாத்தியம்!' - அலறியது அவள் உள்ளம்.

 

"குழந்தை கூட..." என்று ஷோபா ஆரம்பிக்கும் போதே மிருதுளாவின் தலை பயங்கர சத்தத்துடன் காரில்சென்று மோதியது.

 

அவள் முடியை கொத்தாகப் பிடித்தது இழுத்து மோதியிருந்தான் அர்ஜுன். கோரமான அலறலுடன் அவள் கண்கள் மேல்நோக்கி செருக அவள் நெற்றி பிளந்து ரெத்தம் வழிந்தது.

 

"ஐயோ!!!" என்று அலறி துடித்த அவள் தாய் அருகில் வருவதற்குள் மிருதுளாவை காருக்குள் தள்ளி கதவை அடைத்துவிட்டு விஸ்வரூபமெடுத்து நிமிர்ந்து நின்றான் அந்த ராட்சசன்.

 

"விட்டுடு அர்ஜுன்... நீ என்ன சொன்னாலும் செய்றேன். என் பொண்ண தயவு செஞ்சு விட்டுடு" - கையெடுத்து கும்பிட்டு கதறும் ஷோபாவை துச்சமாக பார்த்தான் அர்ஜுன்.

 

அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்ட ஷோபா, "அது எங்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்... பார்சனலா உனக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல... அதை ஒரு பிசினெஸா பார்க்காம ஏன் எங்களை இப்படி துரத்தர? நீ பண்ணாத எதை நாங்க பண்ணிட்டோம்... ப்ளீஸ் விட்டுடு..." - பயனில்லை என்று தெரிந்தும் தன்னிலை விளக்கம் கொடுக்க முயன்றாள்.

 

"எக்ஸ்சாக்ட்லி ஷோபா. இதுவும் அசைன்மென்ட் தான். எனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். ஏழு வருஷமா முடிக்க முடியாம இழுத்துகிட்டே இருக்கே!" - தோளை குலுக்கினான்.

 

நிராசையுடன் தலையை குறுக்காக அசைத்தாள் ஷோபா.

 

"பகவானை வர சொல்லு. கூட நீயும் வா.. என் வீட்டுக் கதவு எப்பவும் உங்களுக்காக திறந்தே இருக்கும். எனக்கு தேவை நீங்க ரெண்டு பேரும் மட்டும்தான்" - சிரித்தான். அந்த சிரிப்பில் தெரிந்த துஷ்ட்டன் ஷோபாவை உறைந்து போகச் செய்தான்.

 

"ஒருவேளை நீங்க வராம... வேற ஏதாவது பிளே பண்ண ட்ரை பண்ணினா... பார்த்திருப்பியே... உன் பொண்ண நா எவ்...வ...ளவு லவ் பண்றேன்னு... டெயிலி இப்படி லவ் பண்ணிகிட்டே இருப்பேன். புரியிதுல்ல... புரியும்... வி ஆர் ஃபிரண்ட்ஸ் ரைட். பகவானை கேட்டதா சொல்லு... பார்க்கலாம்..." - அவன் பேச்சில் எத்தனை எள்ளல் இருந்ததோ அதைவிட ஒருமடங்கு அதிகமாக கோபம் இருந்தது.

 

கார் ரிவர்ஸ் எடுத்து திரும்பும் போது ரெத்தம் வழிந்த முகத்தோடு அரைமயக்க நிலையில் கார் சீட்டில் கிடந்த மிருதுளா முயன்று நிமிர்ந்து தாயின் முகத்தை பார்த்தாள். பரிதவிப்புடன் ஒன்றோடொன்று இணைந்திருந்த இருவர் பார்வையையும் வலுக்கட்டாயமாக அறுத்துவிட்டது மகளின் அந்த பயணம்.

 

மறக்காதீங்க... சகாப்தம்னா லைக்ஸ்...  👍  👍  👍 

 

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
18/07/2019 12:13 pm  

ஃபிரண்ட்ஸ்,
31 லைக்ஸ் தான் இன்னைக்கு வந்திருக்கு... ஆனா கமெண்ட்ஸ் பிண்ணிட்டிங்க...  😍 😍 😍 😍 ரொம்ப சந்தோஷம்... படிச்சிட்டு அப்படியே போகாம சிரத்தை எடுத்து நேரத்தை செலவு பண்ணி என்கூட கமெண்ட்ஸ் மூலம் பேசி அனைத்து தோழிகளுக்கும் நன்றி...  😘  😘  😘 

 

இன்னிக்கு அப்டேட் போட்டே ஆகணும்னு எழுதி அப்டேட் பண்ணறேன். என்ஜாய் ரீடிங்...

 

லாகின் லிங்க் இங்க... Click here to Login

 

அத்தியாயம் - 51

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் சீறிப்பாய்ந்த அவன் கார் மெக்கானிக் ஷெட்டை கடந்ததும் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டது. கல்லில் செய்த சிலை போல் ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தபடி சாலையை வெறித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவன் வெளியேற்றிய மூச்சுக்காற்றின் வெப்பம் கார் ஏசியின் குளிர்நிலையோடு போர் புரிந்தது.

 

சில நொடிகள் அப்படி அசையாமல் அமர்ந்திருந்தவன் பிறகு மெல்ல அவள் பக்கம் திரும்பினான். கைக்குட்டையை சுருட்டி நெற்றியில் அழுத்தியபடி சீட்டில் கண்மூடி தளர்ந்துக் கிடந்தாள். அவன் உதடுகள் அழுந்த மூடின. எதுவும் பேசாமல் டேஷ்போர்டை திறந்து முதலுதவி பெட்டியை எடுத்து, இயந்திர மனிதன் போல் எந்த உணர்வுகளும் அற்றவனாக அவள் விளக்கி காயத்தை ஆராய்ந்து சுத்தம் செய்தான்.

 

வெட்டி வீசப்பட்ட கொடி போல் நினைவற்று கிடந்தவள் மெல்ல இமை பிரித்தாள். உயிரற்ற விழிகளால் அவனை ஏறிட்டாள். அவனுடைய பற்றற்ற தோற்றம் அவள் நெஞ்சை அறுத்தது. உடலில்பட்ட காயம் வலிக்கவில்லை. ஆனால் அவன் காட்டிய அந்நியத்தனம் அவளை கொன்றது. அவன் கையை விலக்கிவிட்டு நேராக எழுந்து அமர்ந்தாள்.

 

ஒரு நொடி அவளை வெறித்துப் பார்த்த அர்ஜுன் மீண்டும் தன் வேலையை தொடர முயன்றான். ஆனால் அவள் ஜன்னல் பக்கம் தலையை திருப்பிக் கொண்டாள். விட்டுவிடக் கூடியவனா அவன்? வலுக்கட்டாயமாக அவள் முகத்தைப் பற்றி தன் பக்கம் திருப்பினான்.

 

"அசையாத" - அடிகுரலில் ஆணையிட்டான்.

 

அவளுக்கு ஆத்திரம் பொங்கியது. உடலில் எஞ்சியிருந்த மொத்த சக்தியையும் திரட்டி திமிறினாள். அவன் பிடியில் அழுத்தம் கூடியது. பற்கள் நறநறக்கும் சத்தம் அவளுக்கு கேட்டது. அவன் முரட்டுத்தனத்தில் தாடையெலும்பு உடைந்துவிடும் போல் தோன்ற போராடும் திராணியற்று அடங்கிப்போனாள் அந்த பாவை. தோல்வியின் துயரம் கண்களில் கண்ணீராய் பெருகியது.

 

அவளுடைய காயமோ கண்ணீரோ அவனை எந்தவிதத்திலும் பாதித்ததாக தெரியவில்லை. கடிவாளம் கட்டிய குதிரை போல் கர்மமே கண்ணாக அவள் நெற்றிக்காயத்துக்கு கட்டுப் போட்டு முடித்துவிட்டு காரை கிளப்பினான். வீடு வந்து சேரும் வரை இருவருக்கும் இடையில் இருப்புத் திரையாக விரிந்திருந்தது மௌனம்.

 

அர்ஜுனின் கார் கேரேஜிற்குள் நுழையும் போது அங்கே இன்னொரு கார் நின்றுக் கொண்டிருந்தது. வந்திருப்பது யார் என்று அவனுக்குத் தெரியும். இன்ஜினை அணைத்துவிட்டு அசையாமல் அமர்ந்திருந்தான். அவனை பொருட்படுத்தாமல் தன் பக்க கதவை திறந்து கொண்டு கீழே அடியெடுத்து வைத்த மிருதுளாவின் கால்கள் வலுவிழந்து தடுமாறின. கார் கதவை பற்றாக பிடித்து தடுமாற்றத்தை சமாளித்தாள்.

 

அர்ஜுனின் கண்கள் நேர் நோக்கி இருந்தாலும் பார்வை வட்டம் விரிந்தே இருந்தது. அவளுடைய துன்பம் அவன் கவனத்தில் பதியாமல் இல்லை. ஆனாலும் தாங்கிப்பிடிக்க அவன் விழையவில்லை. அவளுக்கு வலித்தது. கூர்முனை கொண்ட ஏதோ ஒன்று உள்ளே பாய்வது போல் இருந்தது. விரிந்துக்கிடக்கும் பாலை மணல் போல் துக்கம் நெஞ்சம் முழுக்க பரவியிருந்தது. அவன் பக்கம் திரும்பிக் கூட பார்க்கப் பிடிக்காதவளாக, நிதானமாக அடியெடுத்துவைத்து உள்ளே சென்றாள்.

 

ஹாலில் அமர்ந்திருந்த டேவிட் அவள் வரவை உணர்ந்து மகிழ்ச்சியாக எழுந்தவன், அவளைப் பார்த்ததும் சட்டென்று நின்றான்.

 

அவளுடைய சோர்ந்த நடையும் நெற்றிக்கட்டை மீறி வெளியே கசிந்திருக்கும் ரத்தமும் அவனை பதட்டமடையச் செய்தது.

 

"மிருதூ!!! என்ன ஆச்சு? அர்ஜுன் எங்க???" - இரண்டே எட்டில் அவளை நெருங்கி தோளோடு அணைத்துப் பிடித்தான்.

 

வறண்ட பாலைவனத்தில் ஓர் ஈச்சமரத்தை கண்டது போல் அவன் நிழலில் சற்று ஆசுவாசமடைந்த மிருதுளா தன்னியறியாமல் அவன் தோளில் தலை சாய்த்து கண்மூடினாள்.

 

"முக்கியமான அசைன்மென்ட்டை கவனிக்கிறதுக்காக உன்ன வர சொன்னேன். நாட் ஃபார் திஸ் புல்ஷிட்" - கணீரென்று ஒலித்த பெருங்குரலில் உடல் தூக்கிப்போட மெல்ல விலகினாள் மிருதுளா. டேவிட்டிடம் கூட எதுவும் சொல்லா தோன்றாதவளாக படுக்கையறையை நோக்கி நடந்தவள், வாயிலில் நின்று திரும்பிப் பார்த்தாள்

 

"சாரி டேவிட், லாஸ்ட் டைம் உன்கிட்ட சொல்லாமலே கிளம்பர சூழ்நிலை. திரும்ப உன்ன பார்த்ததுல சந்தோஷம்" - முணுமுணுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

 

திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டே நின்ற டேவிட், அவள் உள்ளே சென்று மறைந்ததும் அர்ஜுனிடம் திரும்பி, "வாட்ஸ் திஸ் மேன்?" என்றான் அதிருப்தியுடன்.

 

"அதைப் பற்றி விசாரிக்க நீ இங்க வரல. வந்த வேலையை மட்டும் பாரு" என்று வெடுவெடுத்துவிட்டு முகம் கொடுக்காமல் சமையலரைப் பக்கம் சென்று பாத்திரங்களை உருட்டினான்.

 

அவன் பின்னாலேயே சென்ற டேவிட், "ஐ நோ... நீதான் என்னவோ பண்ணியிருக்க" என்றான் கோபத்துடன்.

 

கையிலிருந்த பார்த்திரத்தை பொட்டென்று கீழே போட்டுவிட்டு, "அதுக்கு? என்ன பண்ண போற? வான ஃபைட்? கம்... பார்த்துடலாம் வா... " - கண்கள் சிவக்க அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினான் அர்ஜுன்.

 

நண்பனின் விளிம்புநிலை மனநிலையை புரிந்துக் கொண்ட டேவிட், "ரிலாக்ஸ் அர்ஜுன். நீதானே என்னை கூப்பிட்ட? என்ன ஆச்சு உனக்கு?" என்று தன்மையாக பேசினான்.

 

வேக மூச்சுகளை வெளியேற்றி கண்களை மூடி தளர்ந்து போய் டைனிங் டேபிள் சேரில் அமர்ந்தான் அர்ஜுன். அவனுக்குள் ஏதேதோ சிந்தனைகள்... கோபம்... ஆத்திரம்... வெறுப்பு... என்று எல்லாம் சேர்ந்து அவனை மேலே மேலே அழுத்த எண்ணம் குலைந்து போனவனாக திடீரென்று ஆவேசத்துடன் எழுந்து மேஜையிலிருந்த பொருட்களையெல்லாம் விசிறியடித்தான். ஆக்ரோஷம் அகோரமாய் ஆட்கொண்டிருந்தது அவனை.

 

இப்போது மட்டும் எதிரியென்று யாரேனும் அவன் கையில் சிக்கினால் வெற்று விரல்களாலேயே அவன் நெஞ்சை பிளந்துவிடுவான்.

 

டேவிட் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான். இந்த அளவுக்கு நிதானமிழந்த அர்ஜுனை அவன் பார்த்ததே இல்லை.

 

"அர்ஜுன்..." - தயக்கத்துடன் அழைத்தான்.

 

அவன் பதில் சொல்லவில்லை. "கம்... லெட்ஸ் ஹேவ் எ ட்ரிங்" - நண்பனின் மனநிலையை மடைமாற்ற முயன்றான்.

 

"வாட்???" - புரியாதவன் போல் புருவம் சுருக்கினான் அர்ஜுன். அப்போதுதான் டேவிட்டின் மூளைக்கு உரைத்தது. அர்ஜுன் மது அருந்த மாட்டான்.

 

"ஓ சாரி... ஓகே வா... ஏதாவது விளையாடலாம். மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். கார்ட்ஸ் ஓகேவா?"

சில நொடிகள் மெளனமாக நின்ற அர்ஜுன், "இல்ல..." என்று தலையை குறுக்காக அசைத்துவிட்டு மீண்டும் சமையலறையில் பாத்திரங்களை உருட்ட துவங்கினான்.

 

"எனக்கு வேலை இருக்கு" - பிரிட்ஜை திறந்து காய்கறிகளை அள்ளிப்போட்டு கழுவி கரடுமுரடாக வெட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்தான்.

 

டேவிட் அவனை புதிராகப் பார்த்தான். அங்கு இன்னொருவன் நிற்கிறான் என்கிற நினைவே இல்லாதவன் போல் சூப்பை தயார் செய்து ரொட்டியை வாட்டி எடுத்து வெண்ணையை தடவி தட்டில் அடுக்கி எடுத்துக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான். அவன் செல்வதை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தான் டேவிட்.

 

******************

"மிருதுளா, கெட் அப்" - உரத்த குரலில் அவள் உறக்கத்தை களைத்தான்.

 

மிருதுளா கண்விழித்தாள். ஆனால் தலை பாரம் நிமிர முடியவில்லை. மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். கையிலிருந்த ட்ரேயை டீப்பாயில் வைத்துவிட்டு அவளை தூக்கி அமரவைக்க முயன்றான் அர்ஜுன். அவன் பிடியிலிருந்து விடுபட முயன்று தோற்றவளின் வாயிலிருந்து, "விடு..." என்கிற ஒற்றை வார்த்தை மட்டும் வெறுப்புடன் வெளிப்பட்டது.

முள் தைத்தது போல் ஒரு கணம் அவன் பிடி தளர்ந்தது. தளரமட்டும்தான் செய்தது. மொத்தமாக மொத்தமாய் விட்டுவிடவில்லை. மறுகணமே சுதாரித்துக் கொண்டு பிடியில் அழுத்தத்தைக் கூட்டி அவளை பிடிவாதமாக தூக்கி நிமிர்த்தி அமரவைத்து அவள் கையில் சூப்பை திணித்தாள்.

 

உடனே ஆவேசத்துடன் அதை தூக்கியெறிந்தாள் மிருதுளா. அவன் முகம் கறுத்தது. தாடை இறுக அவளை வெறித்துப் பார்த்தபடி ஓரிரு நொடிகள் நின்றவன், "திஸ் இஸ் த லாஸ்ட் டைம். இன்னொரு தடவ இதை ரிப்பீட் பண்ணின..." என்று கர்ஜனையாய் துவங்கியவன் வாக்கியத்தை முடிக்காமல் மீண்டும் சமையலறைக்கு போய் இன்னொரு கப்பில் சூப்பை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.

 

அவள் மறுக்கத்தான் செய்தாள். ஆனால் அவனுடைய முரட்டுப்பிடிவாதம் அவளை வலுவிழக்கச் செய்தது. உணவும் மருந்தும் எடுத்துக் கொண்ட பிறகு மிருதுளா உறங்கிவிட்டாள். மணிக்கணக்காக தனிமையில் மௌனமாக அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

 

அன்று இரவு அர்ஜுன் டேவிட்டோடு பேசினான். உல்ஃப் எங்கு இருக்காலாம்? அடுத்து யாரை குறிவைத்திருக்கலாம்? அதை தாங்கள் எப்படி முறியடிக்கலாம் என்றெல்லாம் தங்களுக்கு கிடைத்திருக்கும் குறிப்புகளையும் செய்திகளையும் தொகுத்து விவாதித்து ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்து அடுத்த அசைன்மென்ட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டார்கள். நள்ளிரவு வரை நீடித்த அந்த மீட்டிங்கை முடித்துக் கொண்டு டேவிட்டை ஹாலில் படுக்க சொல்லிவிட்டு, படுக்கையறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாழிட்டான் அர்ஜுன் ஹோத்ரா.

 

இன்னிக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட். சோ கமெண்ட்ஸ் ரிப்ளை வந்து பண்ணறேன்... நீங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் மறக்காதீங்க...  👍  👍  👍  👍 

This post was modified 9 months ago by Nithya Karthigan
This post was modified 8 months ago by Meena

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
19/07/2019 11:58 am  

ஹாய் ஃபிரண்ட்ஸ்,

நேத்து ஒரே நாள்ல கிட்டத்தட்ட 40 லைக்ஸ் 30 கமெண்ட்ஸ் கொடுத்து என்னை சர்ப்ரைஸ் பண்ணீட்டிங்க...  😀 😀 😀 அதனால நானும் உங்கள சர்ப்ரைஸ் பண்ண எபிஸோடோடு வந்துட்டேன்.  🌹  🌹 🌹  என்ஜாய் ரீடிங் டியூட்ஸ்...  👍  👍  👍  👍 

லாகின் லிங்க் இங்கே

கமெண்ட்ஸ் அண்ட் லைக் பண்ணின அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி...  🌺 

 

கண்டிப்பா கமெண்ட் ரிப்ளைபண்ணறேன்... நேத்து வெளியே போயிட்டு வந்து எபி எழுத தான் டைம் இருந்தது... வருத்தப்படாதீங்க...

 

இன்னிக்கும் லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸை அள்ளிக் கொடுத்து என்னை சர்ப்ரைஸ் பண்ணுங்க... நானும் உங்கள சர்ப்ரைஸ் பண்றேன்... டீல்?  🍻   🍻  🍻  🍻 

 

அத்தியாயம் - 52

கதவை தாழிட்டு திரும்பிய அர்ஜுன் ஹோத்ராவின் பார்வை, அடிபட்ட மயில் போல் மெத்தையில் உணர்வற்று கிடந்தவள் மீது படிந்தது. கால்கள் வேரூன்றி போனவனாக ஓரிரு நிமிடங்கள் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன் பிறகு குளியலறைக்குள் சென்று இலகுவான இரவு உடையில் திரும்பினான். கட்டிலுக்கு அருகே சைட் டேபிளில் இருந்த தண்ணீர் குடுவையை எடுத்து தொண்டையில் சரித்துக் கொண்டு, மெத்தையில் அமர்ந்தான். போர்வையை அவள் மீது இழுத்து போர்த்திவிட்டு அதிலேயே தன்னையும் புதைத்துக் கொண்டு அவள் அருகில் நெருங்கிப் படுத்தான்.

 

திடுக்கிட்டு எழ முயன்றாள் மிருதுளா. பின்னாலிருந்து அவள் வயிற்றை வளைத்துப் பிடித்து அனாசயமாக அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன், "ஷ்ஷ்ஷ்... காம் டௌன்..." என்றான் சன்னமான குரலில்.

 

"அர்ஜுன்...!" - மிருதுளாவின் பதட்டம் நடுங்கும் அவள் குரலில் தெரிந்தது.

 

பகலெல்லாம் உறங்கிவிட்டதாலோ என்னவளோ உறக்கம் வராமல் விழித்துத்தான் கிடந்தாள் மிருதுளா. அர்ஜுன் உள்ளே வந்தது அவளுக்குத் தெரியும். அவள் அறையில் இருக்கும் போது அவன் உள்ளே வருவதும் போவதும் சகஜம் தான் என்பதால் அவள் அதை பெரிதாக எண்ணவில்லை. உறங்குவது போல் கண்களை மட்டும் மூடிக் கொண்டு அசையாமல் படுத்திருந்தாள். அவன் போர்வையை போர்த்திவிட்ட போது கூட அவளுக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. போர்த்திவிட்ட பிறகு வெளியே சென்றுவிடுவான் என்றுதான் நினைத்தாள். ஆனால் இது பெரிய அதிர்ச்சி. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படி செய்வான்? - கொதித்துப் போனாள்.

 

அவனிடமிருந்து விடுபட திமிறியபடி, "ஐம் நாட் யுவர் டாய்... விடுங்க என்னை" என்றாள் கோபத்துடன்.

 

வலிமையான அவன் கரங்களும் தூணை ஒத்த கால்களும் அவள் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, சுலபமாக அவள் பின்னங்கழுத்தில் முகம் புதைத்தான். அவள் இதயம் வெடித்துவிடுவது போல் அடித்துக் கொண்டது. பீதியோ பயமோ அடிவயிற்றில் பந்தாய் சுருண்டது. நெஞ்சுக்குழிக்குள் சுரந்த ஒரு விசித்திர உணர்வு அவள் புலன்களை கட்டுப்படுத்த முயல அதிலிருந்து மீண்டு அவள் அவனை எதிர்க்க முயன்றாள்.

 

"யு ஆர் மேரீட் அர்ஜுன்" என்று அதீத பதற்றத்துடன் நிதர்சனத்தை அவனுக்கு நினைவுபடுத்தினாள்.

 

அவனோ செவிப் புலனற்றவன் போல் முன்னேறி அவள் செவிமடலில் இதழ்பதித்தான்.

 

அவள் உடல் வெடவெடத்தது. அவமானம்... தோல்வி... ஏதேதோ எதிர்மறை உணர்வுகள் அலைபோல் மேலெழ, "ஐயோ அர்ஜுன்... ஏன் இப்படி என் பார்வையில ரொம்ப தாழ்ந்து போறீங்க?" என்று வெடித்து பீறிட்ட குமுறலுடன் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

ஒரு கணம் அசைவற்று போனவன், உடனே சுதாரித்து, "பிகாஸ் தட்ஸ் ஹௌ ஐ ஆம்" என்றான். கதறியழுதாள் மிருதுளா. தான் அப்படித்தான் என்று எத்தனை சுலபமாக கூறிவிட்டான்!

 

"இல்ல அர்ஜுன்... நா இன்னமும் உங்கள நம்பறேன். உங்ககிட்ட சரியான காரணம் இருக்கும். இந்த மாதிரி பண்ணாதீங்க. எனக்கு உங்கள நெகட்டிவா பார்க்க வேண்டாம்... ப்ளீஸ்..." - அவள் உடல் குலுங்கியது.

 

சட்டென்று உறைந்து போனான் அர்ஜுன். மரக்கட்டை மனிதன் போல் அவளை இறுக்கிப் பிடித்திருந்த நிலையிலேயே அசைவற்றிருந்தான். தன் உணர்வில் ஆட்பட்டு உழன்றுக் கொண்டிருந்தவள் அவனிடம் தெரிந்த மாற்றத்தை உணர்ந்து கொள்வதற்குள் அவன் மீண்டுவிட்டான்.

 

இறகு போல் எடையற்றிருந்தவளை லாவகமாக தன் பக்கம் திருப்பி விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் பார்த்தான். முகமெல்லாம் சிவந்து வீங்கி கண்ணிமைகள் தடித்து யாரோ போல் இருந்தாள். அவன் உதடுகள் அழுந்த மூடின.

 

ஒற்றை விரலால் மென்மையாக அவள் நெற்றி கட்டை வருடியபடி மெல்ல பேசினான்.

 

"என்னை நம்ப வேண்டிய நேரம் முடிஞ்சிடிச்சு ஹனி. இனி என்னோட கொடூரத்தை சாத்திக்கிற மனநிலையை வளர்த்துக்க" - பிசிறற்ற குரலில் அவன் கூறிய விதம் அவளுக்குள் கூர் ஈட்டியாய் பாய்ந்தது.

 

சகித்துக் கொண்டு, "யு காண்ட் ஹர்ட் மீ" என்றாள்.

 

காயம்பட்ட அவள் நெற்றியில் முத்தமிட்டு, "இதை மறந்துட்டியா?" என்றான் இறங்கிய குரலில். எவ்வளவு முயன்றும் அந்த நேரத்தில் அவன் குரலில் வெளிப்பட்ட வலியை அவனால் தவிர்க்க முடியவில்லை.

 

மிருதுளாவின் கண்கள் கலங்கின. இதழ்கள் துடித்தன. அவ்வளவுதான்... அவளை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அர்ஜுன். சற்று ஓய்ந்திருந்த அழுகை மீண்டும் பெருகியது. மார்பில் உணர்ந்த அவள் கண்ணீரின் ஈரம் அவன் இதயத்தை சுட்டது. கேசம் கோதி முதுகை வருடி அவளை மௌனமாய் ஆறுதல்படுத்தியவன், அவள் ஸ்பரிசத்தில் தானும் சற்று இறுக்கம் தளர்ந்தான். எவ்வளவு நேரம் கழிந்ததோ... மிருதுளாவின் மெல்லிய குரல் மீண்டும் ஒலித்தது.

 

"நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா?" - ஏக்கமும் தவிப்புமாகக் கேட்டாள்.

 

அவன் மீது அவள் கொண்டிருக்கும் நம்பிக்கை இன்னும் முழுதாக மரித்துப் போகவில்லை என்பதற்கு சான்றானது அவள் கேட்ட கேள்வி.

 

"எதையும் யோசிக்காத. தூங்க ட்ரை பண்ணு"

 

"முடியில அர்ஜுன்" - பரிதாபமாக கூறினாள்.

 

அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

 

"என்னை யூஸ் பண்ணிக்கிட்டிங்களா அர்ஜுன்? எல்லாமே நடிப்பா? எனக்கு அப்படி தோணலையே அர்ஜுன். இப்போ... இது... நம்மளோட இந்த டைம்... இது எ...ப்...படி நடிப்பா இருக்க முடியும்? பாருங்க-பாருங்க... நா இதை சொல்லும் போது உங்ககிட்ட அதிர்வு தெரிஞ்சுதே... நீங்க ஃபீல் பண்ணுனீங்களா? ட்ரு ஃபீல் அர்ஜுன். நமக்குள்ள டெவலப் ஆயிடிச்சு..." - பித்துப்பிடித்தவள் போல் புலம்பினாள்.

 

"ரிலாக்ஸ் பேபி... நீ ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு இல்ல"

 

"ஐம் நாட்"

 

"ஷோபாவோட பொண்ணு வீக்கா இருக்க முடியாது" - அதை சொல்லும் போது அவன் குரலில் உணர்வுகள் அற்றுப் போனது.

 

மிருதுளா மௌனமானாள். சில நொடிகள் தான்... மீண்டும் அடுத்த கேள்வியை கேட்டாள். "அம்மாவ எப்படி தெரியும்? என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?"

 

சற்று இளகிய அர்ஜுனின் உடல் மீண்டும் விறைத்தது. இரும்பு மனிதன் போல் இலக்கமற்று மாறினான். அதை அவளும் உணர்ந்தாள்.

 

"பேசி தீர்த்துக்கலாம் அர்ஜுன். நா உங்க பக்கம் இருக்கேன். அவங்ககிட்ட பேசறேன். என்ன நடந்ததுன்னு சொல்லுங்க... ப்ளீஸ்..." - அப்படி ஆரத்தழுவிய நிலையில் அவள் கேட்கும் போது சாதாரண மனிதனாக இருந்தால் அனைத்தையும் கொட்டித் தீர்த்திருப்பான். ஆனால் அவன் இரட்டை பயிற்சி பெற்ற போராளி. அவ்வளவு எளிதில் நிலையிழந்துவிடுவானா என்ன?

 

"எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு. என் பக்கம் என்னோட வைஃப் நிப்பா. நீ பகவானோட பொண்ணு. எனக்காக சிரமப்பட வேண்டாம்" - ஓங்கி உச்சந்தலையில் அடித்து அவளை நிலையிழக்க வைத்தான்.

 

பிரமை பிடித்தவள் போல் சில நொடிகள் அசையாமல் இருந்தவள், திடீரென்று ஹிஸ்டீரியா நோயாளி போல் பயங்கர சத்தத்துடன் அவனிடமிருந்து விலகி ஓடிவிட துடித்தாள்.

 

அவன் விடவில்லை. அவள் அழுதாள்... கத்தினாள்... அடித்தாள்... பற்களால் அவன் தோளை அழுந்த பற்றிக் கடித்தாள். அவன் அசையவில்லை...

 

தன் நீண்ட கைகளாலும் கால்களாலும் அவளை பின்னி தன்னோடு இறுக்கிப் பிடித்துக் கொண்டான். மலைப்பாம்பிடம் சிக்கிய இரை போல் துள்ளி துடித்து துவண்டு அவனுக்குள் அடங்கினாள் மிருதுளா. இதயம் மட்டும் வலிக்க வலிக்க துடித்தது. கண்ணீர் நிற்காமல் கசிந்தது. வெகுநேரம் அந்த சித்திரவதையை அனுபவித்து அப்படியே கண்ணயர்ந்தாள். அதன் பிறகும் கூட அவன் உறங்கவில்லை... உறங்க முடியவில்லை... அவள் கண்ணீரில் கரைந்து போய்விட்டது அவன் உறக்கம்.

 

மறக்காதீங்க ஃபிரண்ட்ஸ், லைக் பட்டன் கீழ தான் இருக்கு... ஜஸ்ட் ஒரு க்ளிக்... கமெண்ட் பாக்ஸ் கூட கீழ தான் இருக்கு... ரெண்டு வார்த்தை...ஓகே...

லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்...

This post was modified 8 months ago by Meena

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


josephine mary, Nimmi Dana, Mangai Raja and 100 people liked
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
22/07/2019 7:19 pm  

ஹாய் ஃபிரண்ட்ஸ்,

லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் எகிறியிருக்கு லாஸ்ட் எபிஸோட்ல. அதுவே என்னை ரெஸ்ட் எடுக்க விடாம லேட்டாப்பை எடுக்க வச்சிடிச்சு...

 

எழுதி முடிச்சு உடனே பதிவு பண்ணறேன். இன்னைக்கு இந்திராவுக்கு முன்னாடி நீங்க தான் படிக்க போறீங்க...

 

ஸோ... சொன்னபடியே திங்கள் கிழமை அப்டேட் கொண்டு வந்துட்டேன். லேட் ஆயிடிச்சு... ஆனாலும் 12 மணிக்குள்ள பதிவு பண்ணிட்டேன்.... 😀 😀 😀

 

லாஜிக்ஸ் ஸ்பெல்லிங்ஸ் மிஸ்டேக்ஸ் இருந்தா நாளைக்கு எடிட் பண்ணுவேன்... இப்போதைக்கு இந்த குட்டி பதிவை என்ஜாய் பண்ணுங்க... நாளைக்கு திரும்ப மீட் பண்ணலாம்...

அத்தியாயம் - 53

முதல் நாள் நடந்ததெல்லாம் கனவோ என்று கூட தோன்றியது மிருதுளாவுக்கு. பாறையை வைத்துக் கட்டியது போல் கணக்கும் தலை மட்டும் சாட்சி கூறவில்லை என்றால் அனைத்தையும் கனவென்றே அவள் நம்பியிருக்கக் கூடும். ஆனால் அத்தனையும் உண்மை... பொட்டில் அறைந்தது போல் கூறினானே! அவன் பக்கம் நிற்க அவனுடைய மனைவி இருக்கிறாளாம். ம-னை-வி!!! - அந்த நினைவே உயிர்வரை சென்று வலித்தது. அயர்வுடன் கண்களை முடித்த திறந்தாள். குளியலறை கதவு திறக்கும் ஓசையில் உடல் பதறியது. வெளியே ஓடிவிடலாமா... - அவள் முடிவெடுப்பதற்குள், ஈரத்தலையும் வெற்று மார்புமாக இடுப்பில் சுற்றிய தூவாலையோடு வெளியே வந்தான் அர்ஜுன்.

 

முதுகிலும் கழுத்துப்பகுதியிலும் நகக்கீறல்கள் ரெத்தமாய் சிவந்திருந்தன. தோள்பட்டையில் பட்டிருந்த பல் தடம் கன்றி போயிருந்தது. மனம் உறுத்த உதட்டை கடித்துக் கொண்டு பார்வையை தாழ்த்தினாள் மிருதுளா.

 

இதற்கெல்லாம் அவள் வருந்தலாமா? இந்த காயம் அவளை பாதிக்கலாமா? எவ்வளவு பெரிய துரோகத்தை செய்தவன்! அவனுக்காக ஏன் அவள் மனம் தவிக்கிறது? எதற்கு உதவும் இந்த பலவீனம்? - கழுவிறக்கமும் கோபமும், அவள் உள்ளத்தில் காற்றும் நெருப்புமாக ஒன்றையொன்று ஆதிக்கம் செய்ய போராடிக் கொண்டிருந்தது.

 

"இதுதான் லாஸ்ட் டைம். இன்னொரு தரம் இப்படி பண்ணின..." - அவனுடைய கர்ஜனையில் பார்வையை உயர்த்தினாள் மிருதுளா. முகம் ஜிவுஜிவுக்க தோள்பட்டை காயத்தில் மருந்தை பூசியபடி கண்ணாடியில் அவளை பார்த்து பல்லை கடித்தான் அர்ஜுன்.

 

ஆத்திரம் பொங்கியது அவளுக்கு. "என் தலையில இருக்க காயத்தைவிட இது ஒன்னும் பெருசு இல்ல" - வெடுக்கென்று கூறிவிட்டு எழுந்து வெளிவராண்டாவிற்கு வந்தாள். அவள் முதுகை வெறித்து நோக்கினான் அர்ஜுன்.

 

கொஞ்சம் கூட குற்றவுணர்வில்லாமல் அவன் நடந்துகொள்ளும் விதத்தை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உள்ளம் கொதித்தத்து. கோபத்தில் உடல் நடுங்கியது. மேல்மூச்சு வாங்க வேகமாக வெளியே வந்து பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள்.

 

வெளியே தண்டால் (புஷ் அப்ஸ்) எடுத்துக் கொண்டிருந்த டேவிட் மிருதுளாவை கண்டதும் எழுந்து அவள் அருகில் வந்தான். அவள் கவனம் அவன் பக்கம் பிறழவில்லை. கடுகடுத்த முகத்துடன் கைவிரல்களை பிசைந்தபடி நிலத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பெருமூச்சுடன் இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் அருகே அமர்ந்தான் டேவிட்.

 

இரவு முழுவதும் அவன் உறங்கவே இல்லை. அவன் கண் எதிரிலேயே அர்ஜுன் மிருதுளாவின் அறைக்குள் உரிமையோடு நுழைந்த போது நெஞ்சுக்குள் ஆணி அறைந்தது போல் இருந்தது அவனுக்கு.

 

தெரிந்த விஷயம்தான்... அவர்களுடைய பழக்கம் வலுப்பெற்றிருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான்... ஆனாலும் வலித்தது. வலியென்றால் சாதாரணமானதல்ல... மோசமான வலி. தாங்க முடியாமல் எழுந்து வெளியே ஓடியவன் விடியற்காலையில்தான் வீடு திரும்பினான்.

 

மிருதுளாவின் அழுகையும் சத்தமும் ஓய்ந்துவிட்ட நேரம் அது. இரவு நடந்த எதைப்பற்றியும் அவன் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவள் தலையில் இருந்த காயமும் முக வாட்டமும் அவனை உறுத்தி கொண்டே இருந்தது. இப்போதும் உறுத்தி கொண்டிருக்கிறது...

 

"ஆர் யு ஓகே?" - தாழ்ந்த குரலில் அக்கறையோடு கேட்டான்.

 

அந்த கேள்வியும் அக்கறையும் அர்ஜுனின் அன்பை நினைவுறுத்தி அவள் வலியை இரட்டிப்பாக்கியது. 'முன்பெல்லாம் அவனும் இப்படித்தானே அடிக்கடி கேட்பான்!' - பதில் சொல்ல முடியாமல் உதடுகளை அழுந்த மூடிக் கொண்டாள்.

 

"என்ன பிரச்சனை மிருது? என்கிட்ட சொல்லக்கூடாதா?" - ஒரு நண்பனாக கூட அவள் இதயத்தில் தான் இல்லையோ ஏக்கமும் தவிப்புமாகக் கேட்டான் டேவிட்.

 

மிருதுளாவின் பார்வை உயர்ந்தது. அவனுடைய கண்களில் தெரிந்த அன்பு அவளை அசைத்தது. ஜீவனற்ற புன்னகையை அவனுக்கு பதிலாகக் கொடுத்தாள்.

 

"அர்ஜுனா?" - அவள் நெற்றி காயத்தை நோக்கியபடி கேட்டான்.

 

பதில் சொல்லும் அவகாசத்தை அவளுக்கு கொடுக்காமல் அங்கே வந்து சேர்ந்த அர்ஜுன், காபி கப்பை அவள் எதிரில் வைத்துவிட்டு, டேவிட்டை பார்த்து, "என்ன காலையிலேயே விசாரணை?" என்றான் கண்டிக்கும் தொனியில்.

 

வாய்திறந்து எதுவும் சொல்லாமல் தோளை குலுக்கினான் டேவிட்.

 

"காபியை குடிச்சுட்டு உள்ள வா. காயத்துக்கு ட்ரெஸிங் மாத்தணும்" - தன்னிடம் தான் பேசுகிறான் என்று தெரிந்தும் மறுமொழி கூறாமல் அழுத்தமாக அமர்ந்திருந்தாள் மிருதுளா.

 

அர்ஜுனின் தாடை இறுகியது. உதாசீனத்தை அவனால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. அதிலும் இப்போது, டேவிடிற்கு எதிரில்.... - பல்லை கடித்தான்.

"உன்கிட்ட தான் பேசிக்கிட்டிருக்கேன் மிருதுளா" - குரலை உயர்த்தாமல் உறுமினான்.

 

அதற்குமேல் அவனை அலட்சியப்படுத்தவும் முடியாமல் அடங்கிப் போகவும் முடியாமல், "என்ன வேணும் உங்களுக்கு?" என்றாள் எரிச்சலுடன்.

 

"எழுந்து உள்ள வா. கட்டுப்பிரிச்சு மருந்து போடறேன்"

 

"அதை உங்க மனைவிக்கு போயி பண்ணுங்க" - அவள் யோசிப்பதற்குள் வார்த்தைகள் சீற்றத்துடன் வெளியேறிவிட்டன.

 

டேவிட் அதிர்ச்சியோடு இருவரையும் மாறிமாறி பார்க்க அர்ஜுனின் முகத்திலோ ரௌத்திரம் தெறித்தது.

 

அழுத்தமான காலடிகளுடன் உள்ளே சென்றவன் சில நொடிகளிலேயே திரும்பி வந்தான். கையில் மெடிக்கல் கிட் இருந்தது.

 

இரக்கமற்ற அரக்கன் போல் அவளிடம் நெருங்கியவன் அவள் சுதாரிப்பதற்குள் தலைகட்டை முரட்டுத்தனமாக பிய்த்து எறிந்தான்.

 

"ஸ்ஸ்... ஆ..." - வலியுடன் தடுமாறி எழுந்தவளை மீண்டும் சேரில் பிடித்து தள்ளினான்.

 

"அர்ஜுன் என்ன பண்ற நீ?" - பதற்றத்துடன் குறுக்கே பாய்ந்தான் டேவிட்.

 

அவன் டி-ஷர்ட்டை கொத்தாக பிடித்து அவனை இழுத்துச் சென்று சுவற்றோடு அழுத்தி, "எல்லை மீறாத" என்று எச்சரித்து உதறிவிட்டு மீண்டும் அவளிடம் வந்தான்.

 

மிருதுளா மிரட்சியுடன் எழுந்துவிலகினாள். "டோன்ட் டச் மீ" - பதட்டத்தில் கத்தினாள். அது இன்னும் அவனை மூர்க்கனாக்கியது.

 

"யாருக்கு வேணும் உன்னோட ஒப்பீனியன்? நா என்ன வேணாலும் செய்வேன்" - ஆக்ரோஷத்துடன் சூளுரைத்தவன், பஞ்சை பிய்த்து ஆன்டிசெப்டிக் லோஷனில் தோய்த்து எடுத்துக் கொண்டு அவளிடம் நெருங்கினான். பயந்து பின்வாங்கினாள் மிருதுளா.

 

இடையில் புகுந்து தடுக்க முயன்ற டேவிட்டை இழுத்து கீழே தள்ளிவிட்டு ஒருகையால் மிருதுளாவின் முடியை கொத்தாக பற்றி அவளை அசையவிடாமல் பிடித்துக் கொண்டு, மறுகையால் அவள் காயத்தை தேய்த்து சுத்தம் செய்தான். அவன் செயலில் இளக்கமில்லை... மென்மையில்லை... வெறுப்பும் கோபமும் மட்டுமே விரவியிருந்தது.

 

வலியில் துடித்து அலறினாள் மிருதுளா. "இப்படி என்னை சித்திரவதை படுத்தறதுக்கு ஒரேடியா கொன்னுடலாம்" என்று அழுதபடி அவன் கையை விளக்க முயன்றாள். கண்களில் கண்ணீர் பெருகியது.

 

"அஃப்கோர்ஸ் ஆப்டர் யுவர் பேரன்ட்ஸ் ஹனி..." - 'நிச்சயமாக, உன் பெற்றோருக்கு பிறகு அன்பே' - நக்கலும் வெறுப்புமாக கூறினான்.

 

சுருக்கென்றது அவளுக்கு. அவளை கொல்வேன் என்று கூறியதற்காக அல்ல... அவளுடைய பெற்றோருக்கு பிறகு என்கிறானே! அப்படியென்றால்??? - முதுகுத்தண்டு சில்லிட்டு போவது என்பார்களே. அப்படித்தான் இருந்தது அவளுக்கு. அவனை பார்த்தபடியே உறைந்து போனாள். காயத்தின் வலி கூட அவள் புத்தியில் உரைக்கவில்லை. பெற்றோரின் பாதுகாப்பு பெரும் பயமாய் அவளை பீடித்துக் கொண்டது.

 

கீழே விழுந்த டேவிட் வேகமாக எழுந்து அவர்களிடம் நெருங்கினான். மிருதுளா வெறிபிடித்த அர்ஜுனின் பிடியில் நன்றாக சிக்கியிருந்தாள். அவளை விடுவிக்க முயன்று ஏதேனும் செய்தால் அது அவளுடைய வலியை இன்னும் தான் அதிகமாக்கும் என்பதை உணர்ந்து, "விட்டுடு அர்ஜுன்.... பாவம்" என்று வாய்விட்டு கெஞ்சினான்.

 

"இவ என்னோட பணயக்கைதி. எப்போ விடணும் எப்போ பிடிக்கணும்னு எனக்கு தெரியும். யு பெட்டர் ஷட்அப்" - நண்பனிடம் சீறினான்.

 

"ஐ காண்ட் மேன். என்னால முடியாது. அவ எனக்கு பிடிச்ச பொண்ணு. நா எப்படி அமைதியா போக முடியும்?" - குரலை உயர்த்தினான் டேவிட்.

 

எதிர்பார்த்தபடியே அர்ஜுன் மிருதுளாவை விட்டுவிட்டு டேவிட்டிடம் பாய்ந்தான். அதுதான் சந்தர்ப்பம் என்று உணர்ந்து அவனை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டு, "ஓடிடு மிருதுளா... ரூம்குள்ள ஓடி கதவை சாத்திக்க... ஓடு..." என்று கத்தினான்.

 

அவள் நினைத்திருந்தால் அப்போது தப்பித்திருக்கலாம். வீட்டைவிட்டு ஓடியிருக்கலாம். அப்படி அவள் ஒட்டியிருந்தால் அர்ஜுன் அவளை தேடி போவான் என்பது வேறு கதை. ஆனால் மிருதுளாவிற்கு அந்த யோசனை எழவே இல்லை. அங்கிருந்த பதட்டமான சூழ்நிலை அவளை யோசிக்கவும் விடவில்லை. டேவிட் சொன்னபடியே அறைக்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டாள்.

 

அர்ஜுன் கட்டுப்பாடிழந்து முழு மிருகமாக மாறிவிட்டான். அந்த வீடு போர்க்களமாக மாறியது. யார்யார் மீதோ இருந்த கோபத்தையெல்லாம் டேவிட்டிடம் காட்டினான். டேவிட்டும் அவனை எதிர்க்கவில்லை. அவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மட்டுமே முயன்றான். தொழில் முறை ஃபைட்டர் என்பதால் அது அவனுக்கு சிரமமாகவும் இல்லை.

 

நடந்த யுத்தத்தில் டேவிட் சோர்வடையவும் அர்ஜுனின் கோபம் தணியவும் சரியாக இருந்தது. இருவருமே தளர்ந்து இரு பக்கம் தரையில் சாய்ந்து கிடந்தார்கள். எவ்வளவு நேரம் கழிந்ததோ... டேவிட்தான் முதலில் எழுந்து அர்ஜுனிடம் வந்தான்.

 

"பெட்டர் நௌ?" என்று கை நீட்டினான்.

 

அவன் கையை பிடித்து எழுந்தபடி, "யு ஓகே?" என்றான் அர்ஜுன்.

 

அவ்வளவுதான்... அதற்கு மேல் அவர்களுக்குள் எந்த பிணக்கும் இல்லை... பகையும் இல்லை. இருவரும் இயல்பாக அவரவர் வேலையை பார்க்க துவங்கினார்கள். ஆனால் இருவர் மனதிலுமே மூடிய கதவிற்கு பின்னால் மிருதுளா என்ன செய்து கொண்டிருப்பாளோ என்கிற கவலை இருந்தது.

 

லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் மறக்காதீங்க.... ஓகே...

 

This post was modified 8 months ago 2 times by Nithya Karthigan
This post was modified 8 months ago by Meena

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 440
23/07/2019 7:19 pm  

சொன்னபடியே இன்னைக்கும் அப்டேட் கொடுத்துட்டேன்... நீங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் மறக்காதீங்க...

 

லாகின் இணைப்பு இங்கே 

 

அத்தியாயம் - 54

என்ன முயற்சி செய்தும் அவளை பற்றிய எண்ணங்கள் அவனைவிட்டு விலக மறுத்தன. எந்த வேலையில் ஈடுபட்டாலும் கவனம் சிதறியது. அவளுடைய அழுகையும் கூக்குரலும் காதுக்குள் பேரிரைச்சலாய் ஒலித்துக் கொண்டிருந்தது. நெஞ்செல்லாம் பிசைவது போலிருந்தது. ஓரளவுக்கு மேல் அந்த கனத்த உணர்வை தாக்குப்பிடிக்க முடியாத அர்ஜுன், நேராக சென்று படுக்கையறை கதவை படபடவென்று தட்டினான்.

 

"மிருதுளா... மிருதுளா... கதவை திற... மிரு...து...ளா..." - கத்தினான்.

 

டைனிங் டேபிள் சேரில் அமர்ந்து தன்னுடைய காயங்களுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்த டேவிட் அர்ஜுனின் சத்தம் கேட்டு, "ஐயோ கடவுளே!" என்று அரக்கப்பரக்க ஓடிவந்தான்.

 

"எ... என்ன... என்ன ஆச்சு?" - பதட்டத்துடன் கேட்டான்.

 

"எனக்கு உள்ள போகணும். டிரெஸ் சேன்ஜ் பண்ணனும். கதவை திறக்க சொல்லு" - எறிந்துவிழுந்தான்.

 

"சரி சரி.... நீ உட்காரு... நா பேசிக்கிறேன்" - மெல்ல கூறினான். இதையும் தவறாக புரிந்துக் கொண்டு சண்டையை வேறுபக்கம் திருப்பிவிடுவானோ என்கிற சின்ன பதட்டம் அவனுக்கு இருந்தது. அதற்கு தகுந்தாற்போல் அர்ஜுனும் அவனை முறைத்துத்தான் பார்த்தான்.

 

"அர்ஜுன்... ஐம் யுவர் ஃபிரண்ட்... ஆஃப்டர் ஆல்... ப்ளீஸ்... கொஞ்சம் எனக்கு ஆக்ஸஸ் கொடு. இதை சரி பண்ணிடலாம்" - அவனுடைய மனநிலையை நன்றாக புரிந்துக் கொண்டு நிதானத்துடன் அவனுக்கு எடுத்துக் கூறினான்.

 

கண்களை மூடி ஆழ மூச்செடுத்து தலையை குறுக்காக ஆட்டினான் அர்ஜுன்.

 

"இதை சரி பண்ண முடியாது டேவிட். யாராலயும் முடியாது. இது இப்படித்தான்..." - வேதனையுடன் கூறிவிட்டுச் சென்று சோபாவில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். நண்பனை பின் தொடர்ந்து சென்று அருகில் அமர்ந்தான் டேவிட்.

 

"ஏன் இப்படி நம்பிக்கை இல்லாம இருக்க? வி கேன் டூ இட் மேன்"

 

அர்ஜுன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. நிலத்தில் பார்வையை பதித்தபடி அமைதியாகவே அமர்ந்திருந்தவன் பிறகு நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான்.

 

"எனக்கு பயமா இருக்கு டேவிட். நானே... இந்த கையாலேயே... அவளை கொன்னுடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்கு" - அவன் கைகள் நடுங்கியது.

 

மிருதுளாவின் மீது அர்ஜுனுடைய உணர்வுகள் வெளிப்படுவதும் அதற்கு தானே துணை நிற்பதும் டேவிடின் மனதை வெகுவாய் காயப்படுத்தியது. ஆனாலும் அவன் நண்பனுக்காக நின்றான்.

 

நடுங்கும் அவன் கைகளை பற்றி அழுத்தினான்.

 

"நீ அப்படி செய்ய மாட்ட அர்ஜுன். உன்னால முடியாது" என்று அவனுக்கு தைரியம் கொடுத்தான்.

 

அர்ஜுன் உதட்டை கடித்து உணர்வுகளை விழுங்கிக்கொண்டு கரகரத்த குரலில் மேலும் பேசினான்.

 

"அவகிட்ட சொல்லு... நா கோவமா இருக்கும் போது வாயை திறக்க வேண்டாம்னு சொல்லு. என்னை மிருகமாக்க வேண்டாம்னு சொல்லு..." என்று கூறிவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

 

நண்பனின் மனநிலை டேவிடிற்கு நன்றாக புரிந்தது. தவிர்க்க முடியாத தவிப்பையும் தடுமாற்றத்தையும் உணர முடிந்தது. தன்னுடைய சுய விருப்பங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையே முடிவாக மனதில் ஏற்றுக் கொண்டு மிருதுளாவை தேடித் சென்றான்.

 

***********************

 

அர்ஜுனின் கார் ஊரை விட்டு வெகுதூரம் தள்ளி வந்துவிட்டது. சில மணிநேரங்கள் பயணம் என்று கூட சொல்லலாம். சாலையோரம் ஒரு தொலைபேசி பூத் கண்ணில்பட்டது. காரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று ஒரு நம்பரை டயல் செய்தான். அடுத்த முனையில் ப்ளூ ஸ்டார் எடுத்தார்.

 

"என்னால முடியில... இந்த அஸைன்மென்டை சீக்கிரம் முடிக்க என்ன பண்ணணுமோ பண்ணுங்க. நா இதுலேருந்து வெளியே வரணும். ஐ காண்ட் டேக் திஸ் ஸ்ட்ரெஸ் எனிமோர்" - படபடத்தான்.

 

ஓர் அழுத்தமான மௌனத்துடன் அவன் சொன்னதை உள்வாங்கி கொண்டவர் , "என்ன பிரச்சனை?" என்றார் மெதுவாக.

 

ஒரு நொடி அர்ஜுன் மௌனமானான். வார்த்தைகளை தேடி சின்ன தயக்கத்துடன் பதில் சொன்னான். "நா என்னோட கட்டுப்பாட்டை இழந்துக்கிட்டிருக்கேன். அது எனக்கு நல்லது இல்ல"

 

"நல்ல விஷயம். உனக்கே உன்னோட பிரச்சனை புரியுது. அப்போ சால்வ் பண்றதும் ஈஸி தான் இல்லையா?"

 

"இல்ல... கண்டிப்பா இது ஈஸி இல்ல. நா ரொம்ப டேஞ்சரஸ் ரூட்ல போயிட்டு இருக்கேன். என்னாலையே என்னை கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு ரொம்ப அக்ரஸிவா போயிட்டு இருக்கேன். ஜஸ்ட் டேக் மீ அவுட் ஃப்ரம் திஸ் ஹெல்... ப்ளீஸ்..." - வெளிப்படையாகவே கெஞ்சினான்.

 

சற்று நேரம் ப்ளூ ஸ்டாரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. உணர்வுகளின் பிடியில் ஆட்பட்டு தன்னிலையிழந்திருந்த அர்ஜுன் மெல்ல நிதானத்திற்கு வந்து, "ஏதாவது சொல்லுங்க" என்றான்.

 

"நீ நீயா இல்ல... ஏன்?" - அழுத்தமாக கேட்டார்.

 

"ஏன்னா எனக்கு பீலிங்ஸ் இருக்கு... எமோஷன்ஸ் இருக்கு..."

 

"புல்ஷிட்... நீ ஒன்னும் டீனேஜ் பையன் இல்ல. வெல் ட்ரைன்ட் ரிசோர்ஸ். உன்னோட பீலிங்க்ஸை உன்னால கட்டுப்படுத்த முடியாது?" - இதையெல்லாம் என்னிடம் கொண்டுவர வேண்டுமா என்பது போல் கடுகடுத்தார்.

 

"அங்க உட்கார்ந்துகிட்டு சொல்றது ரொம்ப ஈஸி... இங்க வந்து என்னோட இடத்துல நின்னு பாருங்க தெரியும்" - அவனும் கடுப்படித்தான்.

 

"உன்னோட இடத்துக்கு நீ மட்டும் தான் சரியான ஆள். அதனால தான் உன்ன அந்த வேலைக்கு அசைன் பண்ணியிருக்கோம். ஆபரேஷனை ஆபரேஷனா பாரு. டார்கெட்டை டார்கெட்டா பாரு. பீலிங்ஸ் அண்ட் எமோஷன்ஸுக்கு அங்க ஒரு வேலையும் இல்ல"

 

"ஓ காட்! யு காண்ட் அண்டர்ஸ்டாண்ட் மீ"

 

"எனக்கு ரொம்ப நல்லா புரியுது அர்ஜுன் ஹோத்ரா. நாம வாழற இந்த நிழல் உலகத்துல ரெண்டே வர்க்கம்தான்... 'ப்ரே அண்ட் ப்ரடேட்டர்'... நீ இரையா இருக்க போறியா இல்ல வேட்டையாட போறியா? முடிவு பண்ணு..."

 

அவர் சுலமபாக கூறிவிட்டார். ஆனால் தன்னையே அந்த இரண்டாகவும் உணர்ந்த அர்ஜுன் அவருக்கு மறுமொழி கூற முடியாமல் தடுமாறினான்.

 

"எழுவருஷமா தோண்டிகிட்டு இருக்கற சுரங்கம் இது. தங்கம் கிடைக்கற நேரத்துல பூகம்பத்தை கிளப்பாத. மிருதுளாகிட்டேருந்து விலகு. டார்கெட்டை போக்கஸ் பண்ணு. உன்கிட்டேருந்து அதை மட்டும் தான் நா எதிர்பார்க்கறேன்" - அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

 

ஆத்திரத்துடன் ரிசீவரை தங்கியில் ஓங்கி அடித்துவிட்டு பூத்திலிருந்து வெளியேறினான் அர்ஜுன்.

 

*********************

 

புத்தி பேதலித்தவள் போல் சுவற்றில் தெரிந்த ஒற்றை புள்ளியை வெறித்தபடி அசையாமல் அமர்ந்திருந்தாள் மிருதுளா. ஏமாற்றம் வலி பதட்டம் அழுகை அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு 'ஏன்?' என்கிற கேள்வி மட்டுமே அவளை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. எங்கோ யாரோ 'மிருதுளா... மிருதுளா...' என்று அவள் பெயரை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். இல்லை... கத்திக் கொண்டிருந்தார்கள். கூடவே தடதடக்கும் சத்தம் வேறு. என்னவென்று அவள் புத்திக்கு உரைக்கவே வெகுநேரம் பிடித்தது. செக்கு மாடு போல் அந்த ஒற்றை புள்ளியையே சுற்றிக் கொண்டிருந்த எண்ணங்கள் நிகழ்வுக்கு மீண்ட போது டேவிடின் குரலும் கதவு உடைபடும் சத்தமும் செவியை பிளக்க அவசரமாக எழுந்து ஓடி கதவைத் திறந்தாள்.

 

"என்ன பண்ணிட்டிருந்த இவ்வளவு நேரம்?" - அவன் முகத்தில் பதட்டமும் குரலில் உள்ளடக்கிய கோபமும் தெரிந்தது.

 

அதை பொருட்படுத்தி பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. "வேர் இஸ் ஹி?" - அவ்வளவு ரணகளத்திற்குப் பிறகும் அவளிடமிருடந்து எழுந்த முதல் கேள்வி அர்ஜுனைப் பற்றியதாகவே இருந்தது.

 

"வெளியே போயிருக்கான். நீ ஓகே தானே?"

 

"ம்ம்ம்..." - தலையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.

 

"என்ன நடக்குது டேவிட்? எனக்கு சொல்லு ப்ளீஸ்..." - அவளுடைய கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்து அவள் காயத்திற்கு இதமாக மருந்து பூசி கட்டு போட்டபடி,

 

"ஆர்த்தியை எப்படி தெரியும் உனக்கு?" என்றான்.

 

மிருதுளாவின் முகம் ரெத்தப்பசையற்று வெளிறியது. 'அதுதான் அவள் பெயரா! உண்மையாகவே அவனுக்கொரு மனைவி இருக்கிறாளா!' - நூல் நுனி அளவேயானாலும் அவன் மீதான நம்பிக்கை அவளுக்கு அற்றுப்போகவில்லை என்பதற்கு இன்னொரு சாட்சியாக அதிர்ந்தது அவள் மனம்.

 

அதிர்ந்த விழிகளோடு அவனை வெறித்து நோக்கினாள். "அர்... அர்ஜுன்... நிஜமாவே... ம்...மேரீடா?" - உதடு துடிக்கக் கேட்டாள்.

 

"எஸ்... ஆனா அது உனக்கு எப்படி தெரிஞ்சுது?" - வறண்ட குரலில் கேட்டபடி குளியலறைக்குள் சென்று கைகழுவிவிட்டு திரும்பினான்.

 

"என்னோட அம்மாவை சந்திச்சோம்" - மெல்ல முணுமுணுத்தாள்.

 

"வாட்! ஷோபாவையா!"

 

சட்டென்று எழுந்தாள் மிருதுளா. "உனக்கும் தெரியுமா! எல்லாமே தெரியுமா! நீயுமா நடிச்ச?" - அவள் குரல் நடுங்கியது.

 

"நோ... நா எப்பவும் நடிக்கல... குறிப்பா உன்கிட்ட..." - உறுதியாக மறுத்தான் டேவிட்.

 

"பொய்..." - மறுப்பாக தலையசைத்தாள். "ஒரு நாள் கூட நீ உண்மையை சொல்லல... அர்ஜுன் என்னை ஏமாத்தறது தெரிஞ்சும்... நீ வாய் திறக்கல. ஓ காட்! இங்க எல்லாமே பொய்... டிராமா... எப்படி நம்பினேன்!" - அழுதாள்.

 

"மிருது ப்ளீஸ்" - அவளை சமாதானம் செய்ய முயன்று அவள் கையை பிடித்தான்.

 

"ப்ளீஸ் டோண்ட் டச்.." - வெடுக்கென்று கையை உருவிக் கொண்டு விலகினாள்.

 

"மிருது..."

"வேர் இஸ் ஷி நௌ?"

 

ஒரு நொடி மௌனமான டேவிட், "நோ மோர்..." என்றான் கனத்த குரலில்.

 

மிருதுளா திகைத்துப் போய் அசைவற்று நின்றுவிட்டாள்.

 

"என்ன! என்ன சொன்ன?" - சரியாகத்தான் கேட்டோமா... அல்லது வேறு யாரையும் சொல்கிறானா! அதிர்ச்சியும் குழப்பமுமாக பார்த்தாள்.

 

"ஆர்த்தி இப்போ உயிரோட இல்ல..." - தெளிவாக கூறினான் டேவிட்.

 

விடுதலை உணர்வு... நிம்மதி... முதல் நொடி அவள் உணர்ந்த உணர்வு இதுதான். மறுநொடியே அதிர்ந்தாள். அத்தனை பெரிய ராட்சசியா அவள்! ஒரு பெண்ணின் மரணத்தில் நிம்மதியை உணரும் ராட்சசி! - மனசாட்சி உலுக்க கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

 

'ஓ - மை - காட்!!!' - தளர்ந்து அமர்ந்தாள். சுயநல பிண்டமாக தன்னை உணர்ந்தாள்.

 

சற்று நேரம் தன்னைத்தானே சாடியபடி அமர்ந்திருந்தவளுக்கு திடீரென்று அந்த சந்தேகம் வந்தது. சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

"என்னோட அப்பா... அவர்... அவருக்கு இதுல... டேவிட்... அப்படி ஒன்னும் இல்லைல?" - தடுமாறினாள்.

 

டேவிடின் முகம் கருங்கல் போல் இறுகியது.

 

"ப்ளீஸ் சொல்லு..."

 

"பகவான், ஷோபா ரெண்டு பேருமே சேர்ந்து பண்ணின ஆப்பரேஷன். அர்ஜுனுக்கு வச்ச குறி... ஆர்த்தியை முடிச்சிடிச்சு"

 

பகீரென்றது அவளுக்கு. என்ன உளறுகிறான் இவன்!

 

"நோ... இல்ல... இல்ல டேவிட்... நீ தப்பா சொல்ற. இதுல ஏதோ கம்பியூஷன் இருக்கு. அம்மா ரொம்ப பயந்தவங்க. இதெல்லாம்... இதெல்லாம்... நோ..." - கடுமையாக மறுத்தாள்.

 

டேவிட் அவளை வெறுமையாக பார்த்தான். இதற்கு முன் அவனிடம் அந்த பார்வையை அவள் சந்தித்ததே இல்லை.

 

"டேவிட்!!"

 

"அர்ஜூன்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இரு மிருதுளா. அவன் காயம்பட்ட புலி. ஆர்த்தியை பற்றி பேசறதை தவிர்த்துடு... ஒரு ஃபிரண்டா என்னோட அட்வைஸ் இது" - சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அதை ஜீரணிக்க அவளுக்கு தனிமையையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான் டேவிட்.

 

This post was modified 8 months ago by Meena

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Page 3 / 8
Share: