Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

நிழல்நிலவு - கதை  

Page 4 / 7
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 255
25/05/2019 12:15 am  

ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

இன்னிக்கு திடீர்ன்னு கொஞ்சம் வெளியே போக வேண்டியதா போயிடிச்சு. லேப்டாப் ஓபன் பண்ணவே முடியல... இப்போதான் வந்தேன். உடனே அத்தியாயம் அப்டேட் பண்ண வந்துட்டேன்... தாமதத்திற்கு மன்னிக்கவும்...

 

இன்னிக்கு சில புது தோழிகள் கமெண்ட்ஸில் அறிமுகமாயிருக்கீங்க. கொஞ்ச நேரம் கழிச்சு கமெண்ட்ஸ் செக்ஷனுக்கு வரேன்... டின்னர் டைம் ஆச்சு... குட்டீஸுக்கு தோசை ஊத்தி கொடுக்கணும்... அதுவரைக்கும் எபிஸோடு வாசிச்சுகிட்டு இருங்க...

 

கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி...  😍  😍  😍 

நிழல்நிலவு - 41

Share Your Comments Here

 

 

 

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 255
25/05/2019 1:24 am  

Sumithra Ramalingam, Bhanu Devi, Vathany K Krishnamoorthi, Uma Manoj, Vidhya PriyaDharshini, Jothi Priya, Priyanga Ramesh, Ahi Gokul

அனைவருக்கும் நன்றி ஃப்ரண்ட்ஸ்...

 

வதனி கிருஷ்ணமூர்த்தி, உங்களிடம் என்னுடைய புத்தகங்கள் இருப்பதில் மகிழ்ச்சி... 😍 😍 😍 கட்டாயம் தொடர்ந்து படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...

 

பானு தேவி,
உங்களுடைய கமெண்ட், டைட்டிலில் வந்திருந்தது தோழி... அதற்கு கீழே கொஞ்சம் பெரிய பாக்ஸ்சாக இருக்கும் இடத்தில் டைப் செய்து "Add Reply" பட்டனை அழுத்துங்கள். உங்களுடைய முயற்சிக்கும் அன்புக்கும் எனது நன்றிகள்... இன்றும் உங்கள் கமெண்டை எதிர்பார்ப்பேன்...  😍  😍  😍 

 

வித்யா பிரியதர்ஷினி,
சகாப்தத்தில் ஒவ்வொரு கதைக்கும் உங்களுடைய ஆதரவு இருக்கிறது. நன்றி தோழி...  🌹  🌹  🌺  🌺 

 

சுமித்ரா ராமலிங்கம்,
நன்றி ப்பா... 😊  😊  😊 

 

ஜோதி பிரியா, நன்றி ப்பா... 😊  😊  😊 

 

அஹி கோகுல், நன்றி ப்பா...  😊  😊  😊 

 

ப்ரியங்கா, உமா, Episode Updated... Happy Reading...  👍  👍  👍 

 

This post was modified 2 months ago by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 255
30/05/2019 6:04 pm  

VERY SORRY FOR THE LATE UPDATE FRIENDS... PLEASE READ AND SHARE YOUR VIEWS...

நிழல் நிலவு - 42

 

CLICK HERE FOR COMMENTS 

 

This post was modified 2 months ago by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 255
04/06/2019 8:39 pm  

Dear friends,

Next episode updated and link given below.... Enjoy reading and share you views in comments thread.... 🙂

நிழல் நிலவு - 43

COMMENTS

This post was modified 2 months ago 2 times by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 255
09/06/2019 8:58 pm  

எபிஸோட் எப்படி வந்திருக்குனு தெரியல. குற்றம் குறையிருப்பின் பொறுத்தருளும் பெருமக்களே...  😎  😎 

சென்ற எபிஸோடுக்கு கமெண்ட் கொடுத்து லைக் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி... நன்றி... 

 

இணைப்பு இங்கே நிழல் நிலவு - 44

 

படித்துவிட்டு எப்படி இருந்ததென்று சொல்லுங்கள். கருத்து திரிக்கான இணைப்பு இங்கே... COMMENTS

 

மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் தோழிகளே. நன்றி... 🙂

 

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 255
16/06/2019 4:29 am  

Dear Friends,

Next episode posted. Enjoy Reading and share your comments...

நிழல்நிலவு - 45

COMMENTS

 

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 255
19/06/2019 2:00 pm  

எவ்வளவு முயன்றாலும் பதிவுகள் கொடுக்கும் இடைவெளி அதிகமாகிவிடுகிறது... ஏதாவது ஒரு வேலை இடையூறு வந்து கொண்டே இருக்கிறது. நேற்று இரவு கண்விழித்து அவசரமாக எழுதினேன் 😰 😰.  குறைகள் இருந்தால் குறிப்பிடுங்கள் நன்மக்களே...  🥂  🥂  🥂 

 

இணைப்புகள் கீழே

நிழல் நிலவு - 46

கமெண்ட்ஸ் பதிவிட 

This post was modified 1 month ago 7 times by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 255
27/06/2019 4:05 am  

அன்பு தோழமைகளுக்கு,

நிழல் நிலவு அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள்.

நிழல் நிலவு - 47

Comments

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 255
03/07/2019 3:45 am  

அத்தியாயம் - 48

சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி இடமும் வலமுமாக தலையை ஆட்டியாட்டி உமிழ்ந்த காற்றில் அறையே குளிர்ந்திருந்தாலும் அவள் மட்டும் கொட்டும் வியர்வையில் குளித்திருந்தாள். மங்கலான வெளிச்சத்தில் மூழ்கியிருந்தது அந்த அறை. அங்கே நடுநாயமாக போடப்பட்டிருந்த மர மேஜையின் ஒருபுறம் மிருதுளா அமர்ந்திருக்க மறுபுறம் மூத்த காவல் அதிகாரி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு பக்கத்தில் அவளை அழைத்து வந்த துணைக் காவல் ஆய்வாளர் நின்றுக் கொண்டிருந்தாள். அவர்களுடைய கூர்மையான பார்வை மிருதுளாவை குத்தி துளைத்தது.

 

"ஜஸ்ட் ஃப்யூ குவஸ்டின்ஸ்... பதில் சொல்லிட்டா போயிகிட்டே இருக்கலாம். இல்லன்னா கஷ்ட்டமாயிடும். புரியுதா?" - ஆழ்ந்து ஒலித்த அவருடைய குரல் அவளை அச்சுறுத்தியது.

 

மிரண்டு போனவளாக மேலும் கீழும் தலையை அசைத்தாள்.

 

"ஹூ இஸ் அர்ஜுன் ஹோத்ரா?" - அழுத்தம் திருத்தமாகக் கேட்டார்.

 

பதில் சொல்ல முடியாமல் எச்சிலை கூடி விழுங்கிய மிருதுளாவின் விழிகளில், 'பிரபஸரை விசாரிக்க என்று அழைத்து வந்துவிட்டு அர்ஜுனை பற்றி கேட்கிறார்களே!' என்கிற கலவரம் தெரிந்தது. அதை கவனமாக கணக்கில் எடுத்துக் கொண்டவர், விலகாப் பார்வையுடன் அவளை பார்த்தார்.

 

உறுமீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல் அவர் தன்னுடைய பதிலுக்காக காத்திருப்பதை புரிந்துக் கொண்ட மிருதுளா, "ஃப்ரண்ட்" என்றாள் மெல்லிய குரலில்.

 

அவருடைய புருவம் ஏறி இறங்கியது. மீசையை நீவியபடி அவளை பார்வையால் அளவெடுத்தார். பிறகு,

 

"வாட் இஸ் ஹிஸ் பிசினஸ்?" என்றார்.

 

என்ன பதில் சொல்வதென்று ஒரு நொடி தயங்கி யோசித்த மிருதுளா, "மைனிங்" என்றாள்.

 

"ஆங்!!" - அவள் கூறியது கேட்கவில்லை என்பது போல் காதில் ஒற்றை விரலைவிட்டு ஆட்டிவிட்டு, அவளை நேராக பார்த்து, "என்ன சொன்ன?" என்றார்.

 

அவருடைய உடல்மொழியும் பார்வையும் அவள் அடிவயிற்றை தடதடக்கச் செய்தது.

 

"மை... மைனிங்... ஐ மீன்... ஒரு... மைனிங் கம்பெனிக்கு ஒர்க் பண்ணறார்" - தடுமாற்றத்துடன் பதிலளித்தாள்.

 

"எனக்கு தெரிஞ்சு அனந்தப்பூர்ல எந்த சுரங்கமும் இல்லையே! வீட்டுக்குள்ளேயே எதுவும் சுரங்கம் தோண்டுறீங்களா என்ன?" - கடுகடுவென்று மாறியது அவர் முகம்.

 

"இல்... இல்ல சார்... அவர் ஒரிசால உள்ள கம்பெனில ஒர்க் பண்றார்"

 

"அப்போ அனந்தப்பூர்ல என்ன வேலை?"

 

"அது... அவர்... வந்து..." - தனக்காகத்தான் அவன் இங்கு வந்து தங்கியிருக்கிறான் என்பதை சொல்ல முடியாமல் தவித்தவளுக்கு இன்னொரு சந்தேகமும் எழுந்தது.

 

'உண்மையிலேயே அவளுக்காகத்தான் இங்கு தங்கியிருக்கிறானா!' - குழப்ப மேகம் சூழ்ந்து அவள் கண்ணை மறைத்தது. பிரபஸரை என்ன செய்தானோ என்கிற எண்ணம் மேலெழ துக்கம் நெஞ்சை அடைத்தது.

 

"ஸ்பீக் அவுட் மிருதுளா. இங்க என்ன அசைன்மென்ட்காக வந்திருக்கான்" - விழிகளை உருட்டி அதட்டினார். அவர் கண்களில் தெரிந்த வெறியைக் கண்டு மிருதுளா நடுங்கிப்போனாள். அவர் அர்ஜுனை வேட்டையாட துடிப்பதை புரிந்து கொண்டவளின் மனம் பதறியது.

 

"இல்ல சார். அப்படி எதுவும் இல்ல" என்று பயத்துடன் படபடத்தாள். அந்த நொடி அவளுக்கு அனைத்தையும் விட அவன் மட்டுமே பெரிதாக தோன்றினான். ஆபத்து அவனிடம் நெருங்குவதை அவளால் அனுமதிக்க முடியவில்லை. ஆனால் இது சரியா? அவள் செய்வது நியாயமா? - மனசாட்சி குத்தியது. காதல் கொண்ட மனம் அதை கடந்து செல்ல உந்தியது. முன்னுக்குப் பின் முரணாக போராடிய உணர்வு பிரவாகத்தில் தத்தளித்தவள், தனக்குள் ஒரு மாயையை உருவாக்கிக் கொண்டாள். பிரபஸர் எங்கோ நலமாக இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டாள். ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் அவள் தனக்குள் உருவாக்கிக் கொண்ட அந்த எண்ணத்தை, மீண்டும் மீண்டும் அசைபோட்டு நம்பிக்கையாக உருவேற்றி, அதையே பற்றுக்கோளாக பிடித்துக் கொண்டு தன்னைத்தானே தேற்றி கொண்டாள்.

 

ஆனால் அவளுடைய நம்பிக்கையை உடைத்து, பற்றுக்கோலை பானத்துறும்பாக மாற்றியது, அடுத்து அந்த அதிகாரி அவள் மீது எடுத்துவைத்த குற்றச்சாட்டு.

 

"நேற்றையிலேருந்து பிரபஸர் மிஸ்ஸிங். நீதான் அவரை கடைசியா பார்த்திருக்க. உனக்கு தெரியாம அவர் எங்கேயும் போயிருக்க முடியாது. சொல்லு..."

 

"சார் நான் பிரபஸரை பார்க்கவே இல்ல. நா போனப்ப அவர் வீட்லேயே இல்ல" - தவிப்புடன் மறுத்தாள் மிருதுளா.

 

"நீ எவ்வளவு பெரிய பிரச்சனையில இருக்கன்னு உனக்கு புரியல" என்று அவளை ஒரு விதமாக பார்த்தவர், "பேசலைன்னா உன்னால இங்கிருந்து போக முடியாது" என்றார்.

 

அச்சுறுத்தி அவள் உறுதியை குலைத்துவிடும் நோக்கில் அவர் பேசிக் கொண்டிருக்க அவளோ மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

அதில் ஆத்திரமடைந்தவர், "ஷட் அப்..." என்று அங்காரத்துடன் மேஜையை ஓங்கி அடித்தார்.

 

விக்கித்துப்போன மிருதுளா மூச்சைப் பிடித்துக் கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தாள். பிடிபட்ட பறவை போல் படபடத்தது நெஞ்சம். அகல விரிந்த அவள் விழிகளில் திரண்ட கண்ணீர் கரைபுரள நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

 

சற்று நேரம் அவளை வெறித்துப்பார்த்த அந்த மூத்த மனிதர், "கொன்னுட்டியா?" என்றார் அமைதியாக.

 

திக்கென்றிருந்தது அவளுக்கு. 'கொலையா! அவளா!' - நெஞ்சுக்குழிக்குள் கட்டை விழுந்தது போன்ற உணர்வில் சுவாசம் சீரற்று போக வாயை திறந்துத் திறந்து மூடினாள். விழிகளில் தொக்கி நின்ற கண்ணீர் தடையை உடைத்துக் கொண்டு பெருகியது.

 

"என்ன மோட்டிவ்?"

 

"நோ..."

 

"எப்படி பண்ணின?"

 

"கடவுளே!"

 

"பாடியை எப்படி டிஸ்போஸ் பண்ணின?"

 

"இல்ல... இல்ல... நா எதுவும் பண்ணல" - கதறிவிட்டாள்.

 

ஓரிரு நொடிகள் அவளுக்கு அவகாசம் கொடுத்தவர், "அப்போ வேற யார் பண்ணினது?" என்றார் நிதானமாக.

 

நிலைகுலைந்து போய் குலுங்கி கொண்டிருந்தவள், சட்டென்று நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தாள். 'அர்ஜுனை பற்றி எதுவும் தெரிந்திருக்குமோ!' - அந்த நேரத்திலும் அவளுக்கு அவனை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம்தான் எழுந்தது. விட்டுக்கொடுக்கவே முடியவில்லை.

 

"எனக்கு எதுவும் தெரியாது" - பட்டென்று கூறினாள். பிரபஸருக்கு செய்யும் துரோகம்தான். ஆனால் அவனுக்கு எதிராக சிந்திக்கக் கூட முடியவில்லையே! என்ன சுழல் இது! அவளுடைய மனிதம் எங்கு தொலைந்துபோனது! குற்றவுணர்வு அறுத்தது.

 

"அர்ஜுனை எப்படி தெரியும்?"

 

அவள் பதில் சொல்லவில்லை.

 

"நீ பிரபஸரை பார்க்க போனப்ப அர்ஜுன் எங்க இருந்தான்?"

 

"ஐ டோண்ட் நோ" - கண்ணீர் வற்றிப்போனவளின் குரலில் ஒருவித பிடிவாதம் தெரிந்தது.

 

புருவம் நெரிய அவளை வெறித்துப்பார்த்த அதிகாரி, "போலீஸ்காரனோட கடினமான பக்கத்தை பார்க்க விரும்புற இல்ல?" என்றார் கண்கள் பளபளக்க.

 

அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவனை காட்டிக்கொடுக்க முடியாது. குற்ற உணர்ச்சியிலிருந்தும் தப்பிக்க முடியாது. நடப்பது நடக்கட்டும். பழியும் பாவமும் அவள் மீதே விழட்டும்... இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.

 

அப்போது அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. தணல் போல் செக்கச்சிவந்த முகத்துடன் அர்ஜுன் உள்ளே நுழைந்தான். அவனைத் தொடர்ந்து, கருப்பு பேண்ட்டும் வெள்ளை சட்டையும் அணிந்து கையில் கத்தை காகிதத்தை கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரும் உள்ளே நுழைந்தார்.

 

காவல்துறை அதிகாரியின் கவனம் அவர்களுக்கு பின்னால் நின்ற காக்கிச்சட்டையின் மீது கண்டிப்புடன் படிந்தது.

 

"என்கொய்ரி போயிட்டு இருக்கும் போது என்ன இடையில" - அதட்டினார்.

 

"சார் ப்ளீஸ் வெயிட் அவுட் சைட். டென் மினிட்ஸ்ல முடிஞ்சிடும்" - விசாரணையில் உடன் இருந்த துணை ஆய்வாளர் அவர்களை வெளியே அனுப்ப முயன்றாள்.

 

"எங்ககிட்ட பேப்பர்ஸ் இருக்கு. ஆர்டர் இல்லாம அவங்களை நீங்க இங்க கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது. அனுப்புங்க" - வழக்கறிஞர் வாதம் செய்தார்.

 

அவரை ஏற இறங்க பார்த்த காவல்துறை அதிகாரி, "உங்க டியூட்டியை செய்யுங்க... ஆனா என்னோட டியூட்டியை டிஸ்டர்ப் பண்ணாம செய்யுங்க" என்று என்று கடுப்புடன் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

 

"இன்னும் சில கேள்விகள் கேள்விகேட்கனும். பதில் கிடைச்சதும் அனுப்பறேன்" - அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மிருதுளாவின் பக்கம் திரும்பி, "கெட் அப்" என்றான் அர்ஜுன். குரலில் ஒருவித அதட்டல் இருந்தது. அது தனக்கானது என்பதை புரிந்துக் கொண்ட அதிகாரி, "யு காண்ட் டூ திஸ்" என்றார் கோபத்துடன்.

 

"ஐ கேன் " - சீற்றத்துடன் முறைத்தான் அர்ஜுன். அவன் கண்களில் தெரிந்த அக்கினி அவரை நிதானிக்கச் செய்தது.

 

"இது நம்ம கடைசி சந்திப்பா இருக்கப்போறது இல்ல அர்ஜுன். சீக்கிரமே உன்ன தேடி வருவேன்" என்றார் சவால் போல.

 

"வெயிடிங்" - எள்ளல் தெறித்தது அவன் குரலில்.

 

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 255
03/07/2019 3:49 am  

சைட்ல ஏதோ காண்ஃப்ளிக்ட். இவ்வளவு நேரம் போராடிட்டு இங்கேயே எபிஸோடு போட்டுட்டேன். படிச்சுட்டு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க. கீழையே கமெண்ட் பண்ணுங்க. தேங்க்ஸ்...

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Page 4 / 7
Share:

error: Content is protected !!
Don`t copy text!
  
Working

Please Login or Register