Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Thodarum Marmangal 05  

  RSS

Puthiyavan
(@puthiyavan)
Active Member Writer
Joined: 2 years ago
Posts: 12
10/12/2019 4:02 pm  

தொடரும் மர்மங்கள்! 05

 

மாலை 6 மணி 8 நிமிடம்: (6:08 PM)

புதியவன் மலையடிவாரத்தில் இருந்து கீழே இறங்கினான். ரோட்டை தொட்டவுடன் மலையின் மேல் இருக்கும் அந்த உருவம் புதியவனின் கண்ணில் புலப்பட்டது.

வினிதாவின் காரும் சாலையில் வந்துகொண்டிருந்தது. புதியவன் அந்த உருவத்தை கீழ இருந்து யார் என்று பார்க்க முற்பட்டான். இருளில் அந்த உருவம் கண்ணுக்குத் தெரியவில்லை.

யாரது? யாரது? என்ற சப்தத்தை எழுப்பினான்.
அதனை சுதாரித்துக்கொண்ட அந்த உருவம் பாறையை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியது.

புதியவன் அந்த உருவத்தை துரத்த முற்படும்போது வினிதாவின் காரின் முன்பக்க டயர் பஞ்சராகி சத்தத்தை எழுப்பியது.

ஜூர்க்-யான காரை வினிதா நிறுத்த முற்பட்டுக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் எதிர்திசையில் மலையிலிருந்து உருண்டு வந்த பாறையும் அவள் கண்ணுக்கு தென்பட்டது.

புதியவன் அந்த உருவத்தை துரத்துவதற்கு பதிலாக சத்தம் கேட்ட வினிதாவின் காரின் பக்கம் ஓட்டத்தை எடுத்தான்.

அவனின் மற்றொரு பார்வையும் மலையிலிருந்து உருண்டு வரும் பாறையை நோக்கியே இருந்தது. சிறிது தவறினால் பாறையில் அவனும் அடிப்பட்டு இழக்க வேண்டியதுதான் என்ற நிலைமை?

ஒருவழியாக காரை நிறுத்திய வினிதாயும், காரை நோக்கி ஓடிவந்த புதியவனும் பாறை இடமிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தார்கள். அந்தப் பாறையின் வேகம் அதிகமானதால் மற்றொரு பாறையில் பட்டு ரோட்டை கடந்து நேராக பள்ளத்தாக்கில் விழுந்தது.

காரில் இருந்த வினிதாவும், அலறிக் கொண்டிருந்த அவளது தோழிகளும் காரில் இருந்து கீழே இறங்கினார்கள்.

புதியவன்: என்ன ஆச்சு? யாருக்கும் எதுவும் அடிப்பட்டு இருக்கிறதா?

வினிதா: இல்லை சார்! அனைவரும் நலமாக இருக்கிறோம். முன்பக்க டயர் மட்டும்தான் பஞ்சர் ஆகிவிட்டது.

புதியவன்: நல்லது மா! ஸ்டெப்னி இருக்கிறதா?

வினி: இருக்கிறது சார்.

புதியவன்: சரி பின்பக்க கதவை ஓப்பன் செய்யுங்கள். நான் மாற்றி தருகிறேன்.

வினி: ரொம்ப நன்றி சார்!

வினிதா புதியவனுக்கு ஸ்டெப்னி மாற்றுவதற்கு உதவினாள். புதியவனும் புதிய டயரை மாற்றிவிட்டு பஞ்சரான டயரை காரின் பின் பக்கம் எடுத்து வைத்தான்.

வனிதா அவன் கையிலிருந்த கரைகளை கழுவுவதற்கு தண்ணீரை எடுத்துக் கொடுத்து உதவினாள்.

பிறகு அங்கிருந்து வாகனம் புதியவனை ஏற்றுக்கொண்டு கிளம்பியது. வாகனத்தின் முன்பக்கம் இருந்த வனிதா புதியவனுக்கு வழியவிட்டு பின்பக்கம் ஏறிக்கொண்டாள்.

காரில் ஏறிய புதியவன் வினிதா மற்றும் அவளின் தோழியுடன் உரையாடலை தொடங்கினான்.

புதியவன்: உங்களுக்கு எல்லாம் எந்த ஊரு மா? என்ன காலேஜ் டூரா?

வினிதா: ஆமா சார்! எங்களுக்கு பொள்ளாச்சி.
என் பெயர் வினிதா. இவள் என் அக்கா வனிதா.
இது என் தோழிகள் அனிதா, திவ்யா, ஜென்னி.

அனைவரும் புதியவனுக்கு ஹாய் சொல்லி அறிமுகமாகிக் கொண்டார்கள்.

உங்கள் பெயர் என்ன சார்?

என் பெயர் புதியவன் மா. உங்க எல்லாரையும் சந்தித்ததில் சந்தோசம்.

வினி: ஆமா சார் எங்களுக்கும் தான். சரியான நேரத்தில் வந்து உதவி செய்தீர்கள்.

புது: சரி எல்லோரும் வயநாடுக்கு தானே போறீங்க?

ஆமா சார்!

புது: இங்கிருந்து 5KM தான் நான் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சிட்டி இருக்கு. அங்கு தங்குவதற்கு நிறைய ஹோட்டல்கள் கிடைக்கும்.

நீங்கள் எத்தனை நாள் டூர் ப்ளான் பண்ணி இருக்கிறீங்க?

வினி: நாங்கள் நான்கு நாட்கள் தங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

புது: சரி மா! உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்றால் நீங்கள் நான் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் தங்கிக் கொள்ளுங்கள். அது நல்ல வசதியாக தான் இருக்கும். நான்கைந்து அறைகளை கொண்டது.

(புதியவன்: இதனைக் கூறும் போது புதிய வனுக்கு மனதில் தோன்றியது. இவர்களுக்கு நடக்க இருந்தது விபத்தல்ல? அது கண்டிப்பாக ஒரு கொலை முயற்சி. அந்தக் கருப்பு உருவத்தை கண்டிப்பாக இவர்கள் பார்த்து இருக்க வாய்ப்பும் இல்லை. அதை நாம் மட்டுமே பார்த்தோம். நமக்கு இதுவரை கதையும் புலப்படவில்லை. இவர்களைப் பின்தொடர்ந்தால் நமக்கு கதையும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் இவர்கள் வெளியில் தங்குவதற்கு பதிலாக நம்முடனே வைத்துக்கொண்டால் இவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.)

(வினிதா: புதியவன் அதனைக் கூறி முடித்தவுடன் வினிதாவின் பார்வை அனிதாவை உற்று நோக்கியது. கண் ஜாடையில் டேப்பை எடுத்து புதியவனை பற்றிய தகவலை அரிய கூறினாள். அனிதாவும் அவளின் சைகைகளை புரிந்துகொண்டு புதியவனை பற்றிய தகவல்களை ஆன்லைனில் இருந்து பெற்றுக்கொண்டாள்.)

வினி: ரொம்ப நன்றி சார்! உதவியும் செய்துவிட்டு தங்க இடமும் தருகிறேன் என்று கூறுகிறீர்கள். உங்களைப் போன்ற மக்களை சந்திப்பது மிகவும் அரிது. அங்கு வந்து தங்குவதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் என் நண்பர்களிடம் ஒருவார்த்தை கேட்டுக்கொள்கிறேன்.

புது: சரி மா உங்கள் விருப்பம்!

வினி: என்னடி சொல்றீங்க நம்ம சார் கூடிய போய் தங்கிகலாமா?

கண்டிப்பாக போய் தங்கிக் கொள்ளலாம் டி!

அனிதா: நம்ம சார் இயக்குனர் ஆச்சே? அவரோட தங்கினால் நிறைய கதை கேட்டு நேரத்தை ஓட்டிக் கொள்ளலாம்? 

புதியவனின் பார்வை அனிதா பக்கம் திரும்பியது. என்னடா இது! நம்ம இயக்குனர் என்று அறிமுகம் செய்யவில்லை? இந்தப் பெண்களுக்கு எப்படி தெரிந்தது என்றும் மனதில் நினைத்துக்கொண்டே திரும்பினான்.

சரி மா! நான் என் பெயரை மட்டும் தானே கூறினேன். நான் இயக்குனர் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்.

அதற்கு அனிதா பதில் சொல்வதற்கு முன்பே வினிதா முந்திக்கொண்டாள்.

நீங்கள் சொல்லவில்லை என்றால் என்ன? உங்கள் கையில் உள்ள டைரியும், பேனாவும் அவளுக்கு காட்டிக் கொடுத்து இருக்கும். ஒன்று நீங்கள் எழுத்தாளர் அல்லது இயக்குனர் என்ற முடிவிற்கு வந்து இருப்பாள்.

காரில் உள்ள அனைவரும் சிரிப்பு சத்தம் ஒலிக்க கெஸ்ட் ஹவுஸ் வந்தடைந்தது.

புதியவனுக்கு வினிதாவின் பதில் ஏற்றுக்கொள்ள அளவுக்கு இல்லாததால் அவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

----------------------------------------------------------------------------

வினிதாவின் குழுவிற்கு அவர்களை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதிவேலை அரிய படமா?

புதியவனுக்கு அவன் எதிர்பார்க்கும் கதை கிடைக்குமா?

இவர்களுடன் சேர்வதால் அவனுக்கும் பாதிப்பு ஏற்படுமா?

என்ற நிறையத் திருப்பங்களுடன் தொடரும் மர்மங்கள்!


Quote
Topic Tags
Share: