Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

எந்தன் நேசம்  

Page 4 / 8
  RSS

Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
01/09/2020 7:34 am  

அத்தியாயம் 25

சீனு தலையில் கொட்டிய ரத்தத்தோடு அங்கேயே விழுந்தான். கலையின் அப்பா மகேஷை பின்தொடர்ந்தது வந்திருந்தார். சீனுவின் நிலை கண்டு அவனருகே ஓடினார்.

"எதுக்குடா இப்படி என் பேரனை கொல்ல பார்க்கற..?"
மகேஷ் அவர் சொல்வதை கேட்காதவனாக சீனுவை நெருங்கினான். கலை அப்பாவை தூரம் தள்ளிவிட்டு அவனை தூக்கினான்.

"ஏன்டா நாயே.. உன்கிட்ட பணம் இருந்தா உனக்கு மசியற ஆயிரம் பேரை தாலிகட்டி வப்பாட்டியா கூட வச்சிக்க.. எதுக்குடா அநியாயமா ஒரு அப்பாவி பொண்ணை உன் காதல் வலையில் விழ வச்சி அவ வாழ்க்கையை நாசகதி பண்ண பார்க்கற..?" என்றவன் அவனது முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். சீனுவின் மூக்கு உடைந்தது. ரத்தம் கொடகொடவென கொட்டியது.

"பாவி பயலே.. எதுக்குடா இப்படி என் பேரனை அடிக்கற..? ஏற்கனவே உன்னால்தான் என் பொண்டாட்டி செத்துபோனா.. இப்போ என் பேரனையும் கொல்ல பார்க்கறியேடா.." என்றவரை திரும்பி பார்த்து முறைத்தான் மகேஷ்.

அவரை நெருங்கி வந்தவன் அவரின் காலின் கீழே கிடந்த உருட்டு கட்டையை கையில் எடுத்து தன் கண்களில் பட்ட பொருட்கள் அனைத்தையும் உடைத்து தள்ளினான்.

கண்ணாடி பொருட்கள் சில்லுசில்லாக உடைந்து சிதறியது.

"உன் பொண்டாட்டியை நான் கொன்னேனா..?" என்றான் மீண்டும் சீனுவை நெருங்கி அவனை ஒற்றை கையால் சுவற்றில் அடித்தபடி. சீனுவின் முதுகு சுவரில் மோதவும் அவன் "அம்மா.."என கதறினான். அதை கண்டு கலை அப்பாவிற்கு கால் நடுங்க ஆரம்பித்து விட்டது.

"அந்த கழுதை அவ காதலிச்சவனை இழுத்துட்டு போக நீதானடா முக்கிய காரணம்..? அவளால்தான்டா எங்க வீட்டோட மொத்த மான மரியாதையும் போச்சி.. அவளாலதான்டா என் பொண்டாட்டி செத்து போனா.." என்றார் அவர் தனது குரலிலிருந்த நடுக்கத்தை மறைத்தபடியே.

மகேஷ் சீனுவை மற்றொரு முறை சுவற்றில் ஓங்கி அடித்தவன் மறுநொடி கலை அப்பாவின் எதிரில் நின்றான்.

தனக்கு முன்னால் எரிமலையாக நின்றவனை கண்டு பயத்தில் ஒரு அடி பின்னால் நகர்ந்தார் அவர்.

"இந்த நாய் பணத்தை வச்சிக்கிட்டு அப்பாவி பெண்களை ஏமாத்தி தன் வலையில் விழ வைக்கிறான்.. உனக்கு இந்த கருமத்தால போகாத மான மரியாதை கலை காதலிச்சதால போயிடுச்சா..?"

"என் பேரனை தேடி அவளுகளாதான் வராளுங்க.. இதுல அவன் மேல் என்ன தப்பிருக்கு..?" என்றவரை நோக்கி தன் மடக்கிய விரல்களை நீட்டினான். அவர் பயந்து கண்களை மூடவும் அவனது கை அவருக்கு பின்னாலிருந்த சுவற்றில் மோதியது.

அவர் சில நொடிகள் கழித்து கண்களை திறந்தார். அவனது கை தன் முகத்தை உரசியபடி சுவரில் மோதியிருப்பதை பார்த்தார். அவனை பயம் நிறைந்த கண்களோடு பார்த்தார்.

"கலைக்கு நீதானே அப்பா..? இத்தனை வருசத்துல நீ பெத்த பொண்ணு செத்துட்டாளேன்னு ஒரு செகண்டாவது வருத்தப்பட்டிருப்பியா..? அவ எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா..? அவளை கொல்ல ஆள் அனுப்பி வச்சியே.. நீயெல்லாம் மனுசன்தானா..?"

"அவளாலதான் என் பொண்டாட்டி செத்து போனா.. அவ என் குடும்ப கௌரவத்தை கெடுத்தவ.. அவளை நீ கொன்னுட்டங்கற ஒரே காரணத்துக்காகதான் நான் உன்னை இவ்வளவு நாள் சும்மா விட்டு வச்சிருக்கேன்.. இல்லைன்னா அந்த நாதாரிங்களுக்கு தங்க இடம் தந்ததுக்காகவே உன்னையும் கொல்ல சொல்லி ஆள் வச்சிருப்பேன்.."

மகேஷ் அவரை பார்த்து கிண்டலாக சிரித்தான். அவரை விட்டு விலகி நின்றான். "உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது.. என்னை கொல்ல எவனும் இங்கே பிறக்கல.." என்றவன் அருகே அரை மயக்கத்தில் விழுந்து கிடந்த சீனுவின் கழுத்தில் தன் காலை வைத்து மிதித்தான். சீனு வலியில் துடியாய் துடித்தான். கலை அப்பா அவனருகே ஓடி வந்தார்.

"என் பேரனை விட்டுடா பாவி.." என்றார்.

"உன் பேரன் இதுக்கும் மேலயும் பொம்பள புள்ளைங்ககிட்ட அவனோட பண பலத்தை காட்டி ஏமாத்தி மயக்கினான்னு தெரிஞ்சது நீயே இவனுக்கு கொள்ளி வைக்க வேண்டி வரும்.. நான் ஒரே விசயத்தை திருப்பி திருப்பி சொல்ல மாட்டேன்.. அதனால் இவனை கட்டிப்போட்டு வைப்பியோ.. கையையும் காலையும் உடைச்சி வைப்பியோ தெரியாது.. ஆனா இவன் இதுக்கும் மேல ஒரு பொண்ணுக்கிட்ட கூட தன்னோட முகத்தை காட்ட கூடாது.." என்றவன் தனது காலை சீனுவின் கழுத்திலிருந்து எடுத்தான்.

அங்கிருந்து வெளியேற நடந்தான் மகேஷ். அவனெதிரே அழகான நான்கு பெண்கள் வந்தனர். சீனுவை கண்டதும் அதிர்ச்சியோடு தங்களது வாய் மீது கை வைத்தனர்.

அவர்களை மேலும் கீழும் பார்த்தான் மகேஷ்.
"உங்களை விமர்ச்சிக்க வேணா எனக்கு உரிமையோ தகுதியோ இல்லாம இருக்கலாம்.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் கேளுங்க.. வெளியே நடமாடுற பெண்கள் அனைவரும் எனக்கு சகோதரிகள் மாதிரி.. எனக்கு பிறவாத பெண் குழந்தைகள் மாதிரி.. அவங்களை யாராவது ஒருத்தரை உங்க காதலன் திரும்பி பார்த்தாலும் அடுத்த செகண்டே நான் இவனை கொன்னுடுவேன்.. அதுக்கு எனக்கு உரிமையும் தகுதியும் இருக்கு.." என்றவன் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தான். அந்த வீட்டில் வேலை பார்ப்பவர்கள் அவனை வாய் திறந்து பார்த்தனர். அவன் அவர்களை கண்டுக் கொள்ளாமல் வெளியே நடந்தான்.

அந்த வீட்டை தூரமாக வந்த பிறகு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான். தனது அலைபேசியில் சாமிநாதனை அழைத்தான். சாமிநாதன் ஒரு மலை கிராமத்தில் தன் குடும்பத்தோடு இருக்கிறான். மின்சார வசதி இல்லாத அந்த கிராமத்தில் விவசாயம் மூலம் சம்பாதித்து ஊருக்கே சூரிய ஒளி மின்சாரம் அமைத்து தந்திருக்கிறான் சாமிநாதன். சாமிநாதனுக்கு இரட்டை பெண் குழந்தைகள். ஒருத்தி பொன்னா.. மற்றொருத்தி செங்கா.. கிராமத்து வாழ்க்கையில் ஊறி போயிருந்தான் சாமிநாதன். அவனது சொர்க்கமே அந்த கிராமத்து குடிசை வீட்டில்தான் இருக்கிறது.

"மகேஷ் நல்லாருக்கியாடா..? ஏன்டா ஒரு வாரமா ஃபோன் பண்ணல..? செங்கா கூட உன்னை ரொம்ப கேட்டா தெரியுமா..?"

மகேஷ் கலகலவென சிரித்தான். "செங்கா என்னை கேட்டா.. இதை நான் நம்பணும்..? அந்த ஆதிவாசி பொண்ணுக்கு நான் கூட நினைவில இருக்கேனா..?" என்றான் கிண்டலாக. பொன்னா தினம் இரண்டு மைல் கரட்டு வழி பாதையில் நடந்து சென்று பள்ளி பேருந்து ஏறிக் கொண்டிருக்காள்‌.

ஆனால் செங்காவிற்கு காடும் மலையும்தான் பள்ளிக்கூடம். கட்டுச்சோறு கட்டிக் கொண்டு காட்டிற்குள் அவள் சென்றால் மீண்டும் வீடு திரும்ப ஒரு வாரம் ஆகும். அவளை தனது வழிக்கு கொண்டுவர முயன்ற கலை தனது முயற்சியில் தோற்றதால் கடைசியில் அவள் வழிக்கே சென்று விட்டாள்.

செங்கா காட்டின் மீது கொண்ட காதலால் மகேஷ் அவளை காட்டுவாசி, ஆதிவாசி என கிண்டலாக அழைப்பான்.

"என் பொண்ண ஆதிவாசின்னு சொல்லாத.." என்றான் சாமிநாதன். அவனது குரலில் உரிமையுடனான கோபம் இருந்தது.

மகேஷ் அதிகமாக சிரித்தான் இப்போது. "உன் மாமனார் வீடு வரைக்கும் வந்தேன்டா.. உனக்கு மாப்பிள்ளை முறையாக வேண்டிய சீனு ஆறு கல்யாணம் பண்ணியிருக்கான்.. அவனுக்கு செங்கா நல்லா செட் ஆவா.. ஏழாம் தாரமா கட்டி வைக்கிறியா..?"

"நாசமா போனவனே வாயில அடிடா.. என் பொண்ணுங்க மகாராணி வாழ்க்கை வாழ பொறந்தவங்கடா.." என்ற சாமிநாதன் சட்டென தனது பேச்சை நிப்பாட்டினான்.

"என்ன சொன்ன..? கலை வீட்டுக்கு போயிருந்தியா..?" என்றான் தயக்கமாக. மகேஷ் நடந்தது அனைத்தையும் சொன்னான். இவன் சொன்னதை கேட்டு விட்டு சாமிநாதன் பெருமூச்சு விட்டான்.

"இதை கலைக்கு சொல்ல வேண்டாம்.. தேவையில்லாம மனசை கஷ்டபடுத்திப்பா.." என்றான் மகேஷ். சாமிநாதன் யோசனை செய்துவிட்டு "சரி.." என்றான்.

"சக்தி எப்படி இருக்கா..? கலை நேத்து ராத்திரி கெட்ட கனவு கண்டு எழுந்தா.. சக்திக்கு என்னவோ கெட்டது நடக்க போகுதுன்னு உளருனா.. நீ சக்தியை எதுக்கும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்க.." இந்த முறை மகேஷ் கவலையோடு பெருமூச்சு விட்டான். அவர்களது நட்பிற்கு இடையே இருந்த பாசம் கண்டு சற்று ஆச்சரியமாகவும் இருந்தது அவனுக்கு.
"நேத்து நைட் அவளை கத்தியால் வெட்டிடாங்க.. கையில் பெரிய வெட்டா விழுந்துடுச்சி.."

"எப்படிடா..?" அதிர்ச்சியோடு கேட்டவனிடம் நடந்தது அனைத்தையும் சொன்னான் மகேஷ். அதை கேட்டு கவலை கொண்டான் சாமிநாதன்.

"இதுக்கும் மேலயாவது அவளை பத்திரமா பார்த்துக்கடா.. அவளுக்கு அவ அப்பாவையும் உன்னையும் விட்டா வேற யாருமே கிடையாது.."

"இதுக்கும் மேல இப்படி நடக்காதுடா.." என உறுதி அளித்தான் மகேஷ். சற்று நேரம் தாங்கள் பேச வேண்டிய அனைத்தையும் பேசி முடித்து விட்டனர் இருவரும்.

மருத்துவமனை அறையில் சக்தியும் குமரனும் பொதுவான பல விசயங்களை பேசியபடி அமர்ந்திருந்தனர். சக்தி தயக்கமாக குமரனை பார்த்தாள்.

"ஸார்.. மூர்த்தி உங்களுக்கு நிச்சயம் பண்ண பெண்ணை கட்டிக்கிட்டதால்தான் உங்களுக்கு இவ்வளவு கோபமா..?"

குமரன் அவளை பார்த்தார். அவரது கண்களில் வலி தெரிந்தது. "நானும் மூர்த்தியும் ஒரே வயிற்றில்தான் பிறந்தோம்.. எங்க மாமா மகளான மகேஷோட அக்காவை எங்க அம்மா எனக்கு நிச்சயம் பண்ணாங்க.. ஆனா அவங்க இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் காதலிச்சதை அதுக்கப்புறம்தான் சொன்னாங்க... எங்க அம்மா நிச்சயம் பண்ணதை மாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. ஆனா மூர்த்தி மகேஷோட அப்பாவுக்கு வலது கையா இருந்தான். அதனால் அவரு எங்களுக்கு சொல்லாம அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு.. காதலிப்பவங்களை பிரிக்க நமக்கென்ன உரிமை இருக்குன்னு நானும் அதை அப்பவே மறந்துட்டேன்.. ஆனா மூர்த்தி எங்க அம்மா மேல பகையோடு இருந்திருக்கான்.. நான் போலிஸ் டிரெயின்க்காக வெளியூர் போயிருந்தபோது எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சி.. ஆனா அவன் எங்க அம்மாவை கண்டுக்காம விட்டுட்டான்.. சொந்த மகன் உள்ளூர்ல இருந்தும் தன் வீட்டுல பார்த்துக்க கூட ஆள் இல்லாம அனாதையா செத்துட்டாங்க என் அம்மா.."என்றவர் தன் கண்களோரம் துளிர்த்த நீர் துளியை இவள் காணாதவாறு துடைத்துக் கொண்டார்.

சக்தி என்ன சொல்வதென தெரியவில்லை. "ஸாரி ஸார்.." என்றாள் யோசித்து விட்டு.

அவர் தலையசைத்தபடி நிமிர்ந்தார். "அவனுக்கு கடவுள் தண்டனை தருவார் சக்தி.. அவன் தன் வாழ்க்கையில் நிறைய தப்பு பண்ணிட்டான்.. உன்னை விஷம் கொடுத்து கொல்ல பார்த்தானே அந்த ஒரு தப்பே அவனை ஒருநாள் இல்லன்னா ஒருநாள் கொல்ல போகுது.."

சக்தி தனது வெட்டு விழுந்த கையை பார்த்தாள். காயம் பட்ட இடம் சுரீர் சுரீர்ரென வலித்தது. அவளது பார்வை குடிக் கொண்ட இடத்தை பார்த்த குமரன் அவளது தோளில் அன்பாக தட்டி தந்தார். "வீரர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் ரொம்ப சகஜம்.. எனக்கெல்லாம் வீர தழும்பு எத்தனை இருக்கு தெரியுமா..?" என்றார் சிரிப்பு நிறைந்த குரலில்.

சக்தியும் நிமிர்ந்து பாரத்து கண்களால் சிரித்தாள்.

"நானும் வீரமானவன்னு இப்போதாவது ஒத்துக்கிட்டிங்களே.."

"நீ வீரமான பொண்ணுதான்.. ஆனா அவசர புத்தி அதிகமாச்சே.." என்று அவர் சொல்ல சக்தி சிரிப்போடு உங்களை திருத்தவே முடியாது என நினைத்தபடி தனது தலையை ஆட்டினாள்.

சக்தியின் அலைபேசி ஒலித்தது. அவள் எடுத்து பார்த்தாள். வனஜா அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

"சக்தி.. உன் ஆளு மகேஷ் அந்த பெரிய வீட்டு சீனுவை அடிபின்னி எடுத்துட்டானாம்.."

சக்தியின் முகத்தில் உடனே கவலை குடி கொண்டது. 'இவன் ஒருநாள் கூட என்னை நிம்மதியா வாழ விடமாட்டானா..?'

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..


Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
02/09/2020 6:32 am  

ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
02/09/2020 6:33 am  

அத்தியாயம் 26

வனஜா சொன்னதை கேட்டு சக்திக்கு கோபம் வந்தது. மகேஷின் மீது ஆத்திரமாக இருந்தது. ஆனாலும் அவன் சீனுவிற்கு நல்ல புத்தி புகட்டியதற்காக அவனை மனதின் ஒரு ஓரத்தில் மெச்சினாள்.

"உங்களுக்கு இதை யார் இதை சொன்னாங்க அக்கா..?"

"எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு சீனுவோட வீட்லதான் வேலை செய்றா.. அவ சொல்லிதான் எனக்கு நடந்தது தெரியும்.. சீனுவோட வீட்டுல இருந்த பொருட்களை கூட அடிச்சி நொறுக்கிட்டானாம் மகேஷ்.."

"கலையோட அப்பாவையும் அடிச்சிட்டானாக்கா..?" கவலையோடு கேட்ட சக்தியை குழப்பமாக பார்த்தார் குமரன்.

"மகேஷ் அவரை அடிக்கல சக்தி.. ஆனா சீனுவுக்கு அடி கொஞ்சம் அதிகம்தானாம்.. அவங்க எவ்வளவு அடி வாங்கினாலும் கண்டிப்பா மகேஷ் மேல கம்ப்ளைண்ட் தர மாட்டாங்க.. அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்..!"
"சரிக்கா மீதியை நேர்ல பேசிக்கலாம்.." என்றவள் தொடர்பை துண்டித்துக் கொண்டாள்.

வனஜாவுடன் பேசி முடித்து விட்டு குமரனை பார்த்தாள்.

"என்ன சக்தி ஆச்சி..?"

"மகேஷ் சீனுவை அடி்சிட்டானாம்.."

"யார் சீனு..?"

சக்தி சீனு யாரென்றும் இதுவரை அவன் செய்த விசயங்களையும் சொன்னாள். குமரனுக்கு மகேஷ் செய்தது சரியென்றே தோன்றியது.

"நம்மால் செய்ய முடியாத ஒரு விசயத்தை அவனாவது செஞ்சிருக்கானே..!"என பெருமூச்சி விட்டபடி சாய்ந்து அமர்ந்தார் அவர். குமரன் அதைதான் சொல்வாரென ஏற்கனவே ஊகித்துதான் வைத்திருந்தாள் சக்தி. ஆனாலும் இந்த முறை அவருக்கு எதிராக அவள் எதுவும் சொல்லவில்லை. சீனுவின் கொட்டத்தை அடக்க தனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தினாள்.

"எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு சக்தி.. நான் கிளம்பறேன்.. நீ ரெஸ்ட் எடு.. நான் டைம் கிடைக்கும்போது வந்து பார்க்கறேன்.." என்றவர் கிளம்பி சென்றார்.

சக்திக்கு மகேஷ் செய்தது சரியென தெரிந்தும் அதை அவனிடம் காட்டிக்கொள்ள விருப்பமில்லை. அதனால் மகேஷ் வந்த உடனே அவனிடம் தனது வழக்கமான சண்டையை ஆரம்ப்பித்துவிட்டாள்.

"உனக்கு எப்படி சீனுவை பத்தி தெரியும்..?" என்று முறைப்போடு கேட்டவளை பதிலுக்கு முறைத்தான் மகேஷ்.

"அவன் என்ன ஆப்பிரிக்காவில் இருக்கானா..? இதே ஊர்ல ஒருத்தன் உன் கண் முன்னாடி தப்பு செஞ்சிட்டு இருந்திருக்கான்.. அவனை நீயும் எதுவும் செய்யாம இருந்திருக்க.."

"அவன் தப்பே செஞ்சிருந்தாலும் அவனை அடிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு..? நீயும் ஒரு ரவுடிங்கறதை மறந்துடாத.. இன்னும் சொல்ல போனா அவனை விட நீதான் ரொம்ப கெட்டவன்.."

"சும்மா பேசணும்னு பேசாத சக்தி.. அவன் பண்ண அயோக்கிய தனத்துக்கு நான் அவனை உயிரோடு விட்டுட்டு வர ஒரே காரணம் உனக்காக மட்டும்தான்.. அவனும் நீயும் ரொம்ப உறவுன்னு கூட கேள்விப்பட்டேன்.. போய் அவன்கிட்ட சொல்லி வை.. இனி தேவையில்லாம எவக்கிட்டயாவது வம்பு வச்சிக்கிட்டான்னா அவனை பார்த்த இடத்துலயே புதைச்சிடுவேன்.. அதுமட்டுமில்ல.. தேவையில்லாம நீயும் அவனும் நெருங்கி நின்னதாக கேட்டேன்னு வச்சிக்கோ யோசிக்காம அவனை கொன்னுடுவேன்..."

சக்தி புருவம் நெரித்து அவனை பார்த்தாள். "ரியாவை உனக்கு தெரியுமா..?"

மகேஷ் அவளை ஆழமாக பார்த்தான். "உனக்கு எதுக்கு அந்த விசயம்..? நான் கேட்டேனா அந்த பொம்பள பொறுக்கி உன்னை ஏன் கட்டி அணைச்சான்னு‌‌..?"

'இவனெல்லாம் மனுச வகையறாவே கிடையாது.. நான் என்ன கேட்டேன்..? இவன் எதுக்கு அதை இ‌‌‍‌ப்படி ‍‍ திசைமாத்தி கேட்டு என்னையே குறி வைக்கிறான்..?'

"ஏன் பதில் ஏதும் பேச மாட்டேங்கற..? குற்ற உணர்வு உள்ளுக்குள்ள கொல்லுதோ..?" என கேட்டவனை நோக்கி நெருங்கி வந்து நின்றாள்.

"நீயா கற்பனை பண்ண எதுக்குமே நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.. நீ ஒரு ரவுடி.. அவன் ஒரு பொறுக்கி.. நீங்க உங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டா எங்களுக்கேதும் நஷ்டம் கிடையாது.."

மகேஷ்க்கு சிரிப்பு வந்தது. தாமரை இலை கூட தண்ணீரோடு ஒட்டிவிடும்.. ஆனால் சக்தியை போல எதிலும் ஒட்டாமல் வாழ யாராலும் முடியாது என நினைத்தான்.

"உனக்கு எதுவும் நஷ்டம் கிடையாது சொல்லிட்ட இல்ல..? அதே போல‌ எப்போதும் நடந்துக்க.. எப்போதும் நீ சொல்வ.. இந்த முறை நான் சொல்றேன்.. உனக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இனி கிடையாது.." என்றவன் அந்த அறையை விட்டு சென்று விட்டான். அவனது வெற்று கோபம் விரைவில் தீர்ந்து விடும் என்பதை அறிந்திருந்தவள் கொஞ்ச நாட்களுக்காவது இவன் தொல்லையிலிருந்து சற்று தள்ளி இருக்கலாம் என முடிவெடுத்தபடி கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

மகேஷ் தனது வீட்டிற்கு வந்தவுடன் மூர்த்தி அவனை தேடி வந்தான். "சக்தி எப்படி இருக்கா..?"

"அவ சாகாம இருக்கான்னு கவலையா..?" என மகேஷ் கேட்க மூர்த்திக்கு முகம் வாடிவிட்டது‌.

"என்னை மன்னிச்சிடு மகேஷ்.. இவ்வளவு நாளா முட்டாள் தனமா இருந்துட்டேன்.. சக்தி என்னை செத்தாலும் மன்னிக்க மாட்டான்னு தெரியும்.. ஆனா நீயாவது என்னை மன்னிச்சிடு.." என்றவன் அதன்பிறகு அவன் கண்ணிலேயே படவில்லை.

சக்தியின் கையின் காயம் குணமாக இரு வாரங்களுக்கு மேலானது. அவளது அப்பாதான் அருகிலிருந்து அவளை கவனித்து கொண்டார்.

சக்தி தனது கையின் காயம் முழுமையாக குணமான பிறகு ஸ்டேசனுக்கு வந்தாள். அங்கு அவளுக்கு முன் மகேஷ் நின்றுக் கொண்டிருந்தான். 'அன்னைக்கு பெரிய இவனாட்டம் சொன்னவன் இன்னைக்கு எதுக்கு எனக்கு முன்னாடி வந்து நின்னுட்டு இருக்கான்?' என நினைத்தபடி அவனருகே சென்றாள்.

"இங்கே என்ன பண்ற..?" அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை தன்னோடு ஒரு ஓரமாக அழைத்து சென்றான் மகேஷ்.

"நான் ஒரு வேலையா வெளியூர் போறேன்.. திரும்பி வர இரண்டு வாரத்துக்கு மேல ஆகும்.. உனக்கு ஏதாவது உதவி வேணும்ன்னா மறக்காம என் செல்லுக்கு கூப்பிடு.. எங்க மாமா இதுக்கு மேல உன் பக்கத்துல கூட வர மாட்டாரு.. அதனால் நீ அவரை நினைச்சி பயப்பட வேண்டாம்.."

அவன் சொல்லிவிட்டு விலகி செல்ல அவனை கை பிடித்து நிறுத்தினாள் சக்தி. ஆயிரம் சண்டை வந்தாலும் அவன் மீது கொண்ட அக்கறை ஏன் குறைவதில்லை என அவளுக்கே தெரியவில்லை.

"எங்கே போற..?"

"சும்மா ஒரு பிரெண்டை பார்க்க.." என்றவன் அந்த நண்பன் சாமிநாதன் என்பதை அவளிடம் சொல்லவில்லை.

சாமிநாதனை பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் அவனை பார்த்துவிட்டு வரலாம் என கிளம்பினான் மகேஷ்.

"பத்திரமா போய்ட்டு வா.." என்றவளிடம் சரியென தலையசைத்து விட்டு கிளம்பினான் மகேஷ்.

மகேஷ் சென்று இரண்டு நாட்கள் கழித்து சந்தியா சக்தியை தேடிக் கொண்டு அவளது வீட்டிற்கு வந்தாள். சக்தியும் அப்போதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள். வாசலருகே வந்து நின்று "அத்தை.." என சந்தியா குரல் கொடுக்க சக்தியின் அப்பா சக்தியை சந்தேகமாக பார்த்தார்.

"யார் உன்னை அத்தைன்னு கூப்பிடுறது..?"

"தெரியலப்பா.." என்றவள் வாசலுக்கு வந்து பார்த்தாள்.

சந்தியா தன் கால்விரலால் தரையில் கோலம் போட்டபடி சக்தியை பார்த்தாள். சக்தி தன் நெஞ்சுக்கு நேராக கையை கட்டியபடி அவளை பார்த்தாள்.

"என்னை உள்ளே கூப்பிட மாட்டிங்களா அத்தை..?" என தயக்கமாக கேட்டாள்.

சக்தி வாசற்படியிலிருந்து விலகி நின்றாள். சந்தியா ஆர்வத்தோடு சுற்றி பார்த்தபடியே உள்ளே நுழைந்தாள்.

"யார்ம்மா இந்த பொண்ணு..?" கேட்டார் அப்பா.

"மூர்த்தியோட பொண்ணுப்பா.. மகேஷ்க்கு அக்கா பொண்ணு.." அப்பா சந்தியாவை நன்றாக பார்த்தார்.

"பொண்ணு நல்ல லட்சணமா இருக்கா.. நம்ம இனியனுக்கு கூட நல்லா பொருத்தமா இருப்பா.."

சக்தி பதட்டத்தை மறைத்தபடி அப்பாவை பார்த்தாள்.

"தேவையில்லாம எதையும் பேசாதிங்க அப்பா.." என்றவள் சந்தியாவிடம் திரும்பினாள்.

"இங்கே எதுக்கு வந்த..?"

"சும்மாதான்.. உங்க கை குணமாகிடுச்சான்னு பார்த்துட்டு போக வந்தேன் அத்தை.."

சக்திக்கு அவள் அத்தை என கூப்பிடும் போதெல்லாம் புது மாதிரியாக இருந்தது.

"எதுக்கு என்னை அத்தை அத்தைன்னு கூப்பிடுற..?" என அதட்டலாக கேட்டாள்.

"நீங்க என் மாமாவோட ஆள்தானே..!? அதனால்தான்.."

"உன் மாமனை போலவே நீயும் வில்லங்கம் பிடிச்ச ஆள் போலிருக்கு.." என சலித்துக் கொண்டாள் சக்தி.

"விடும்மா.. கூப்பிட்டுட்டு போகட்டும்.. இனியனுக்கு இந்த பொண்ணை கட்டி வச்சா.." அப்பா பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை இடை நிறுத்தினாள் சக்தி.

"அப்பா.. நீங்களும் உங்க பங்குக்கு என்னை பழிவாங்காதிங்க.."

"யார் அத்தை அந்த இனியன்..?" என கேட்டவளை கை சைகை காட்டி அமர சொன்னாள் சக்தி.

"உட்காரு.‌‌. சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்.. நீயெல்லாம் இங்கே சாப்பிடுவியா‌‌..? இல்ல உங்க தாத்தா மாதிரி தீட்டு பார்ப்பியா..?"

"நான் உங்க வீட்டுல சாப்பிடுவேன் அத்தை.. நீங்களும் நாங்களும் ஒன்னுக்குள்ள ஒன்னு‌‌.. நமக்கென்ன தீட்டு..?" என அவள் கேட்க சக்திக்கு நெற்றியில் அறைந்துக் கொள்ள தோன்றியது. 'அவங்க மாமனை போல அதே ஆளை மயக்கற பேச்சு..'

சக்திக்கு சமையலறைக்கு சென்று அன்று இரவுக்கான உணவை எடுத்து வந்து சாப்பிடும் மேஜை மீது வைத்தாள்.

சந்தியா முதல் ஆளாக சாப்பிட எழுந்து வந்தாள். அப்பா சந்தியாவின் அருகே அமர்ந்தார். அவளை தலை முதல் கால் வரை ஐம்பதாவது முறையாக பார்த்தார்.

"வேணும்ங்கற அளவுக்கு நீயே போட்டு சாப்பிடு.." என்றவள் தட்டு ஒன்றில் தனக்கான உணவை பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். சந்தியா உணவை ஒரு வாய் உண்டு விட்டு ஆச்சரியத்தோடு உச்சுக் கொட்டினாள்.

"அத்தை.. சாப்பாடு சூப்பரா இருக்கு.. உங்க‌ கைமணம் செம.. உங்க சமையலோட ருசிக்காகவே நான் எங்க மாமாக்கிட்ட அடம் பிடிச்சி உங்களை உடனே கல்யாணம் பண்ணிட்டு வர சொல்ல போறேன்.."

சக்தியின் அப்பா பொங்கி வந்த சிரிப்பை அடக்க தண்ணீரை குடித்தார்.

"இது எங்க அப்பா செஞ்சது.. எனக்கு சமைக்க அவ்வளவா தெரியாது.." சக்தி சொன்னதை கேட்டு அவளை ஆச்சரியமாக பார்த்தாள் சந்தியா.

"பரவால்ல அத்தை.‌. நான் உங்களுக்கு சமைக்க கத்து தரேன்‌.."

"உனக்கொரு விசயம் தெரியுமா..?"

"என்ன அத்தை..?"

"உனக்கு உன் மாமனை விடவும் வாய்க்கொழுப்பு அதிகம்.." சக்தி இப்படி சொல்லவும் சந்தியாவிற்கு முகம் வாடி விட்டது.

ஆனால் அதுவும் ஒரு நொடிதான்.. மறு நொடியே அவளுக்கு பழிப்பை காட்டி விட்டு சக்தியின் அப்பாவிடம் திரும்பினாள்.

"தாத்தா சமையல் சூப்பர்.. நான் உங்ககிட்ட ஜூனியரா சேர்ந்துக்கட்டா..?"

அப்பா சக்தியின் முகம் கோபத்தில் சிவப்பதை கண்டு சிரித்தபடியே சந்தியாவிடம் சரியென தலையாட்டினார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க.. 

 


Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
03/09/2020 6:19 am  

அத்தியாயம் 27

சந்தியா அநியாயத்திற்கு வாயாடிக்கொண்டிருந்தாள். சக்தி அவளது செய்கைகளையும் அவளது ஓயாத பேச்சுக்களையும் பொறுத்துக் கொண்டிருக்க படாதபாடுப்பட்டாள். சக்தியின் அப்பாவிற்கு சந்தியாவை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் இருவரும் தங்களது சொந்த கதைகளை பேச ஆரம்பித்தனர்.

தாங்கள் இருவரும் பிறந்தது முதல் நடந்த சாதாரண விசயங்களை கூட பெரிய உலக அதிசயம் என வியந்து பேசினர்.

"இருட்டாக போகுது.. நீ வீட்டுக்கு கிளம்பு சந்தியா.." என சக்தி சொல்ல இருவரும் ஒருசேர அவளை திரும்பி பார்த்தனர்.

சந்தியா முகம் வாடியபடி எழுந்து நின்றாள். "நான் இங்கே இருப்பது அத்தைக்கு பிடிக்கல... நான் கிளம்பி போறேன் தாத்தா..." அவளது குரலில் இருந்த சோகம் கேட்டால் யாராக இருந்தாலும் ஏமாந்து போய் விடுவார்கள்.

"உனக்கு ரொம்ப கல் மனசு சக்தி.." என்றார் அப்பா. "நீ நாளைக்கு சக்தி வேலைக்கு போன பிறகு வீட்டுக்கு வாம்மா.. நாம இரண்டு பேரும் பேசிட்டு இருக்கலாம்." என்றார் சந்தியாவிடம்.

சந்தியாவின் முகம் உடனடியாக புன்னகையோடு மின்னியது. "நான் நாளைக்கே வரேன் தாத்தா.." என்றவள் சக்தியை பார்த்தாள். " நான் வாரேன் அத்தை.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் சென்ற பிறகு தன் அப்பாவை முறைத்தாள் சக்தி. "நீங்க ஏன் இப்படி நடந்துக்கறிங்க? அவ மூர்த்தியோட பொண்ணு.. மறந்துட்டிங்களா..? அவக்கிட்ட போய் இனியனை பத்தி சொல்றிங்க..? அந்த வீட்டுல யாருக்காவது இனியனை பத்தி தெரிஞ்சா என்னவாகும்ன்னு உங்களுக்கே தெரியும்தானே..?"

"நீ எதுக்கெடுத்தாலும் பயப்படுறத நிறுத்து சக்தி.. என் பேரன் ஒன்னும் குழந்தை இல்ல இன்னும்.. உன்னோட பாதுகாப்பு வளையத்தை விட்டு அவனை அவனோட சொந்த உலகத்துல வாழவிடு.. இவ்வளவு நாளா உன்னோட பயத்துக்காகவே நானும் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு என் பேரனை பிரிஞ்சி இருந்துட்டேன்.. ஆனா இனிமேலும் அப்படியே இருக்க முடியாது.. வயசான காலத்திலாவது என்னையும் என் பேரனையும் சேர்ந்து வாழ விடு.. அவனை ஊருக்கு வர ஆசைப்படுறான்.. அவனுக்கு சம்மதம் சொல்லு.."

சக்தி அதிர்ந்து போய் அப்பாவை பார்த்தாள்.. "நான் அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டேன்ப்பா.. நீங்க இதை இதோடு விட்டுடுங்க.." அப்பா மறுத்து பேச இடம் தராதவளாக கோபத்தோடு தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.

சக்திக்கு தன் அப்பாவிடம் முகத்தை திருப்பிக்கொண்டு வந்து இப்படி கெட்ட மகளாக இருக்க விருப்பம் இல்லைதான். ஆனால் அவள் மனதில் ஏற்கனவே பல குழப்பம் இருந்தது. கோபத்தில் அப்பாவிடம் ஏதாவது வார்த்தையை விட்டுவிடுவோமோ என பயந்தே அவள் விலகி வந்துவிட்டாள்.

இவ்வளவு நாட்களாக இனியனை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பதே சிறந்தது என முடிவெடுத்து அவனை மறைத்து வந்தவளுக்கு இது வரை இல்லாத அளவிற்கு இப்போதுதான் அதிக பயம் வந்து சேர்ந்தது. இனியனை பற்றி மகேஷ்க்கு தெரிந்தால் என்னவாகும் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது. ஜென்மத்துக்கும் தன்னை வெறுத்து விடுவான் அவன் என நினைத்து பயந்திருந்தாள் சக்தி. முத்து இன்னும் அதிகமாக தன்னையும் இனியனையும் வெறுப்பார் என கவலைப்பட்டாள். இத்தனை வருடங்கள் கழித்து தோளுக்கு மேல் வளர்ந்த மகனை ஊருக்கு வரவழைத்தால் ஊரார் என்ன சொல்வார்களோ என பயந்தாள். மகேஷை பற்றி எதுவுமே தெரியாத இனியன் நடந்ததை அறிந்தால் தன்னை வெறுத்து விடுவானோ என பயந்தாள். இது அனைத்தையும் விட மகேஷ் நடந்ததை தெரிந்துக் கொண்டால் தனது சொந்த வீட்டற்கே பகையாளி ஆகி விடுவானே என் பயந்தாள்.

சந்தியா தனது வீட்டை நெருங்கி விட்டிருந்தாள். 'சக்தி வீட்டு தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இந்த சாதிங்கற ஒன்னு மகேஷ் மாமா வாழ்க்கையில தடையா இல்லாம இருந்திருந்தா இந்த தாத்தா இன்னேரம் எனக்கும் தாத்தாவா இருந்திருப்பாரு.. சக்தி அத்தை கூட இருந்திருந்தா எங்க மாமாவும் ரவுடியா மாறாம சாதாரண மனுசனா இருந்திருப்பாரு..' அவள் யோசித்துக் கொண்டே நடந்ததில் அவளுக்கு பின்னால் சத்தமில்லாமல் நடந்து வந்த ரகுவை கவனிக்க மறந்து விட்டாள்.

"என்னை பத்திதான் நினைச்சிட்டு இருக்கியா..?" திடீரென யாரோ தனக்கு மிக அருகிலிருந்து கேட்கவும் துள்ளி விழுந்தாள் சந்தியா.

ரகுதான் தனக்கு பின்னால் இருந்துள்ளான் என அறிந்ததும் அவனை கோபத்தோடு பார்த்தாள் சந்தியா.

"எதுக்கு என்னை இப்படி சுத்தி வர ரகு..? எனக்குதான் உன்னை பிடிக்கலன்னு ஏற்கனவே சொல்லிட்டேன் இல்ல.. இன்னொரு தடவை என் பின்னாடி நீ வந்தா நான் என் மாமாகிட்ட உன்னை பத்தி சொல்லிடுவேன்.. அதனால மரியாதையா என் பின்னாடி சுத்துறதை இன்னையோடு விட்டுடு.." அவனை எச்சரித்துவிட்டு திரும்பி நடக்க முயன்றாள் அவள். ஆனால் அவள் அடியெடுத்து வைத்து நடக்க முயலும் முன்பே அவளது கையை பிடித்து நிறுத்தினான் ரகு.

"இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் வேற யார்க்கிட்டயாவது வச்சிக்க.. ஒருத்தன் ரொம்ப நாளா உன் பின்னாடி சுத்தினால் உனக்கு திமிரு அதிகம் ஆகுதோ..? உன் மாமான் பெரிய ரவுடியா வேணா இருக்கலாம்.. ஆனா நான் அவனையே கதற விடுறேன் பாரு.." என்றவன் அவளது வாயை பொத்தி தன்னோடு இழுத்தி சென்றான்.

அவனின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றாள் அவள். ஆனால் அவன் வலுவாக அவளை பிடித்திருந்தான். சந்தியாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது. இருளான நேரம் என்பதால் அந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டம் ஏதுமில்லை. சந்தியாவிற்கு பயத்தில் கண்ணீர் வந்தது. ஆனால் அவன் அவளது பயத்தை பற்றியோ அவளது கண்ணீரை பற்றியோ கவலைப்படாமல் அவளை தன்னோடு இழுத்து சென்றுக் கொண்டிருந்தான்.

பொன்னி சந்தியாவை எதிர்பார்த்து வாசலிலேயே காத்திருந்தாள். அவள் ஆயிரம் முறை தடுத்து நிறுத்தியும் கூட கேட்காமல் சக்தியின் வீட்டிற்கு சென்றிருந்தாள் சந்தியா. வீட்டில் இருப்போர் அவள் வீட்டில் இல்லாததை அறியும் முன்பே திரும்பி வந்துவிடுவதாக பாட்டியிடம் சொல்லி சென்றிருந்தாள். ஆனால் இன்னும் வந்து சேரவில்லை என்பதால் பொன்னி கவலைப்பட ஆரம்பித்துவிட்டாள்.

நதியோர கிராமம் அது. சுற்றிலும் மலைகள் வானுயரத்திற்கு காம்பவுண்டை கட்டி வைத்திருந்தன. கிராமத்தில் மொத்த வீடுகளே பத்தே பத்துதான். ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் பகலில் சூரிய வெளிச்சை சேமித்து வைத்திருந்த விளக்குகள் மொத்த கிராமத்திற்கும் வெளிச்சத்தை தந்துக் கொண்டிருந்தன.

மகேஷ் அந்த கிராமத்தின் ஒரு குடிசை வீட்டின் முன் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான். அவனருகே அமர்ந்து வானில் தெரிந்த நிலவை ரசித்துக் கொண்டிருந்தான் சாமிநாதன்.

"இந்த கிராமத்து வாழ்க்கையிலதான்டா சொர்க்கமே இருக்கு.."

"எனக்கு என் ஆள் சக்தி எங்கே இருக்காளோ அங்கேதான் சொர்க்கம் இருக்கு.." சாமிநாதன் அவனை திரும்பி பார்த்தான். நிலவொளியில் அவனும் நிலவைதான் ரசித்துக் கொண்டிருந்தான்.

"இங்கேயே என்னை இந்த டார்ச்சர் பண்றியே.. அங்கே அவளை எவ்வளவு டார்ச்சர் பண்றியோ..? சும்மா அவளையும் கட்டாயப்படுத்தாதடா.." என்ற சாமிநாதனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள் கலை.

"நான் எங்கே அவளை கட்டாயப்படுத்துறேன்.. அவளோட சம்மதம் வேணும்தான் இவ்வளவு நாள் காத்திருக்கேனே தவிர ஒருநாள் கூட அவளை கட்டாயப்படுத்தி அவளை என் கூட வாழ வைக்கணும்ன்னு ஆசைப்படல.. அவ திமிர் பிடிச்சவ.. என்னோட காதல் எத்தனை பிடிவாதமானதுன்னு தெரிஞ்சிருந்தும் என்னை பிரிச்சி வச்சி வாழுறா.."

"அவளுக்கு திமிர் ரொம்ப அதிகம் மகேஷ்.." என்றாள் கலை.

"பிரண்டுக்கு சப்போர்ட் பண்ண பிரெண்டை பார்த்திருக்கேன்.. ஆனா உன்னை மாதிரி ஒரு பிரெண்டை பார்த்ததே இல்ல கலை.." என்றான் சாமிநாதன் கிண்டலாக.

"எனக்கும் அவளை பிடிக்கும் நாதா.. ஆனா அவ அவளுக்குன்னு தனி ரூட் போட்டு வச்சி வாழறா.. யார் சொல்றதையும் கேட்கறது இல்ல.. அவங்க அப்பாவுக்கு கூட மகேஷை ரொம்ப பிடிக்கும்.. ஆனா அவர் சொல்றதை கேட்பாளா இவ..? இதையெல்லாம் கூட விட்டுடு.. ஆனா மனுசங்க யாரையாவது புரிஞ்சிக்கறாளா..? என்னை புரிஞ்சிக்காம போய்ட்டாளே.. எனக்கு அந்த கோபம்தான் இன்னுமே தீரல.. நான் ஓடி வந்ததாலதான் எங்க அம்மா செத்துட்டதா சொல்றாளே.. அவங்களோட சாதி அந்தஸ்து வெறியில என்னை சாகடிச்சிருந்தா இதே மாதிரி எனக்கு சப்போர்ட் பண்ணி ஒரு வார்த்தை பேசியிருப்பாளா..? அவ கூடவே பழகுன நான் கெட்டவ.. காதலிச்சவன் கூடவே வாழ்ந்து சாகணும்ன்னு முடிவு பண்ணி எல்லாவித எதிர்ப்பையும் தாண்டி காதலன் கை பிடிச்ச நான் கெட்டவ.. ஆனா வெத்து கவுரவுத்துக்காக செத்துப்போன எங்க அம்மா நல்லவங்களாம்.. காதலிச்சவனை ஏமாத்திட்டு அவன் கண் முன்னாடியே அவனை விட்டு விலகி வாழும் அவ நல்லவளாம்.."

கலை சக்தி மீதிருந்த கோபத்தை வார்த்தைகளால் கொட்டிக் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் அப்படிதான் சக்தியை கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பாள்‌. அதனால் சாமிநாதனும் மகேஷும் அவளது கோப வார்த்தைகளை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

"சரி விடு.. டென்ஷன் ஆகாத.. அவளுக்கு உன்னோடு நட்பு பாராட்ட கொடுத்து வைக்கல அவ்வளவுதான்.." என்று அவள் தோளில் தட்டி சமாதானம் படுத்தினான் சாமிநாதன்.

"அவ மேல இருக்கற கோபம் எத்தனை வருசமானாலும் குறையவே மாட்டேங்குது நாதா.. அவளை நேர்ல பார்க்கனும்னு எவ்வளவு ஆசை தெரியுமா எனக்கு..? ஆனா அவளோடு வெத்து வீராப்பும் அவளோட கண்ணோட்டமும் கொஞ்சம் கூட மாறவேயில்ல.‌. அதனாலயே அவளை பார்க்கனும்ங்கற ஆசையை தள்ளி வச்சிருக்கேன்.. அவ ஒவ்வொரு முறை மகேஷை வெறுத்து ஒதுக்கும் போதும் அவ என்னையும் மறைமுகமா வெறுத்து ஒதுக்கற மாதிரிதான் இருக்கு.. எல்லோரையும் ஒதுக்கி வச்சிட்டு அவ அப்படி என்ன பெருசா வாழ்ந்துட்டா..? ஒரு கஷ்டத்துல பங்கெடுத்துக்க நட்பு இல்ல.. வேதனையில தோள் சாய்து ஆறுதல் சொல்ல மகேஷ் இல்ல.. இப்படி வாழறத்துக்கு பதிலா கொஞ்சம் கெட்டவங்களா வாழறதால் ஒன்னும் குறைஞ்சிட போறதில்லையே.."

அவளது பேச்சு மகேஷுக்கு பிடித்திருந்தது. வாழ்க்கை பற்றிய கலையின் எண்ணம் அவனுக்கு பிடித்திருந்தது. சொந்த வீட்டு மனிதர்களாக இருந்தாலும் தனது காதலுக்கு எதிரியாக வந்துவிட்டால் அவர்களை எதிர்த்து போராடுவதில் தப்பில்லை என்பதுதான் மகேஷின் யோசனையும் கூட. வீட்டாட்கள் காதலுக்கு சம்மதம் சொல்ல இருபது வருடங்களாக கூட ஆகலாம்.‌. இல்லை கடைசிவரை வெறுத்து கொண்டே கூட அவர்கள் இருக்கலாம்.. ஆனால் அதற்கு பதில் காதலித்தவர்கள் திருமணத்தை முடித்துக் கொண்டு வாழ ஆரம்பித்தால் அந்த பெற்றோரின் வெறுப்புக்கு அவர்களின் காதல் பாதுகாப்பு போர்வையாகி விடாதா..? என எண்ணும் அவனுக்கு சக்தியின் நியாயமும் அவள் சொல்லுகிற வெற்று சாக்கும் சிறிதும் பிடிக்கவில்லை.
பொன்னா மகேஷின் கைபேசியோடு வீட்டிலிருந்து வெளியே வந்தாள். பாவாடை சட்டை, இரட்டை சடையென அவனெதிரே வந்து நின்றாள். தனது கைப்பேசிக்கு சார்ஜர் போட்டிருந்தான் மகேஷ்.

"மாமா.. உங்க ஃபோன் ரிங்காகுது.." என அவனிடம் நீட்டி விட்டு தனது பள்ளிப் பாடத்தை படிக்க சென்றாள் அவள்.
அம்மா அழைத்திருந்தாள். தனக்கு எவ்வித சூழலிலும் ஃபோன் செய்ய கூடாது என அம்மாவிடம் சொல்லி வைத்திருந்தான் மகேஷ். அம்மாவும் இத்தனை நாட்களாக அவனை போனில் அழைத்ததே இல்லை. அதனால் இந்தமுறை வந்த இந்த அழைப்பு முக்கியமானதாகதான் இருக்கும் என யூகித்து அழைப்பை ஏற்று ஃபோனை காதில் வைத்தான்.

"சந்தியா இன்னும் வீட்டுக்கு வரல மகேஷ்.." அம்மா பதட்டமாக கூற மகேஷ் பதறிப்போய் எழுந்து நின்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க.. comment பண்ணுங்க.. share and follow பண்ணுங்க..


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
04/09/2020 8:07 am  

அத்தியாயம் 28

மகேஷ் பதட்டமாக அம்மாவை கேட்டான். "சந்தியா வீடு வரலன்னா என்ன அர்த்தம்..?"

"நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம சக்தி வீட்டுக்கு போறேன்னு போனா மகேஷ்.. ஆனா இன்னும் வீடு வந்து சேரல.. உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும்ப்பா.. என்ன பண்றதுன்னே தெரியல.. நீ சக்திக்கு போன் பண்ணி சீக்கிரம் அவளை அனுப்பி வைக்க சொல்லுப்பா.."

அம்மா சக்தியை வெறுக்கவில்லை என்பதை மகேஷ் இன்றுதான் புரிந்து கொண்டான். எப்போதும் அப்பாவுக்கு பரிந்து பேசுபவள் இன்று சந்தியாவை சக்தி வீடு வரை அனுப்பியதிலிருந்தே அவனுக்கு புரிந்து போனது அம்மாவின் குணம்.‌

"நான் அவளுக்கு போன் பண்றேன் அம்மா.." அவன் அழைப்பை துண்டித்துக் கொண்ட பிறகு சாமிநாதன் அவனின் தோளை தொட்டான். "என்னடா ஆச்சி..?''

"சந்தியா சக்தி வீட்டுக்கு போயிருக்காளாம்.. இன்னும் வீடு வந்து சேரலன்னு அம்மா சொல்றாங்க.."

"சக்தி வீட்டுக்கா..? சந்தியாவுக்கு அவளை பிடிச்சிருக்கு போல..''

மகேஷ் முகத்தில் புன்னகை அரும்பியது. "சக்தி எங்க வீட்டுக்கு வந்த போது அவளை அத்தைன்னு கூப்பிட்டா சந்தியா.."

''அப்படின்னா உங்க வீட்டுல உன் பக்கமும் ஒரு ஆள் இருக்கு.."

"ம்.. சந்தியா எப்போதும் என் பக்கம்தான்.." என்றவன் சக்திக்கு ஃபோன் செய்தான்.

சக்தி ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்ததில் தலைவலிதான் கடைசியாக மிஞ்சியது. தலைவலிக்கு மாத்திரை ஒன்றை தேடி எடுத்து விழுங்கி விட்டு தனது அறைக்குள் வந்தாள். ஃபோன் சத்தமிட்டது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என நினைத்தபடி ஃபோனை எடுத்தாள். மகேஷின் அழைப்பை கண்டதும் குழப்பமாகவே அதை ஏற்று காதில் வைத்தாள்.

"ஹலோ.. மகேஷ்.. " என்றாள் தயக்கமாக.

"நானேதான்.. அங்கே சந்தியா வந்திருக்காளா.‌.? அவளை சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பி போக சொல்லு.. அங்கே எங்க அம்மா அவளை காணோம்ன்னு பயந்துட்டு இருக்காங்க.."

"அது.. சந்தியா ரொம்ப நேரம் முன்னாடியே இங்கிருந்து கிளம்பி போய்ட்டாளே.."

''ஆனா அவ இன்னும் வீடு போய் சேரல சக்தி.."

''அவ கிளம்பின நேரத்துக்கு எப்பவோ வீடு போய் சேர்ந்திருக்கலாம்.. ஒருவேளை பிரண்ட்ஸ் யாரையாவது பார்க்க போய்ட்டாளோ என்னவோ..?"

"அவ அப்படி எங்கேயும் சொல்லாம போகமாட்ட.. நான் வேற எங்கேயாவது விசாரிக்கறேன்.." என்றவன் தொடர்பை துண்டித்து கொள்ள சக்தி தன்  தலைவலி இன்னும் அதிகமானதை உணர்ந்து கட்டிலில் அமர்ந்தாள்.
'எங்கே போயிருப்பா இவ..'

மகேஷ் சந்தியாவின் தோழிகளுக்கு ஃபோன் செய்து அவள் அங்கு வந்துள்ளாளா என விசாரித்தான். ஆனால் எங்குமே அவள் சென்றதற்கான தடம் தெரியவில்லை.

பொன்னி பதட்டம் குறையாமல் சந்தியாவை எதிர்பார்த்து வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக அந்த பக்கம் வந்த முத்து அவளை கவனித்து விட்டார்.

"இங்கே என்ன பண்ற..? எதுக்கு இப்படி வாசலையே பார்த்துட்டு இருக்க..?" என்றார் சந்தேகமாக.

"சும்மாதான்.." என்றவளின் குரலை வைத்தே அவள் எதையோ மறைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் முத்து. என்னவாக இருக்கும் என யோசித்தார்.

மாலையிலிருந்தே சந்தியா கண்களில் தென்படாததுதான் உடனடியாக நினைவிற்கு வந்தது.

"சந்தியா எங்கே..?" பொன்னியின் கைகால்கள் அனிச்சையாக நடுங்கின. முத்துடன் அவள் வாழும் வாழ்க்கை சர்க்கஸில் உயரத்தில் கட்டிய கயிற்றில் நடப்பது போல என்பதை அறிவாள். கரணம் தப்பினால் மரணம் என்ற வாழ்விது. அதனால் நெஞ்சுக்குள் வருடக்கணக்கில் ஊறிவிட்ட பயம் இன்று வரையிலும் வளர்ந்துக் கொண்டிருந்ததே தவிர குறையவில்லை.

"சந்தியா எங்கேன்னு கேட்கிறேன் இல்ல.." அவர் அதட்டிய அதட்டலில் பொன்னிக்கு மொத்த உடம்பும் சிலிர்த்து விட்டது.

"ச..சக்தி வீட்டுக்கு போயிருக்கா..." அவள் சொன்னதை புரிந்து கொள்ள முத்துவிற்கு சில நொடிகள் பிடித்தது. அதை அவர் புரிந்து கொண்ட மறு வினாடி பொன்னியின் கன்னத்தில் பளீரென ஒரு அறை விழுந்தது. பொன்னி கண்ணீர் தழும்பும் கண்ணீரோடு அவரை பயந்து பார்த்தாள்.

"அவ எதுக்கு அங்கே போயிருக்கா..? அவளா போனாளா..? இல்ல நீ அனுப்பி வச்சியா..?"

"அவ.. அவளேதான் போனா.. நான் வேணாம்ன்னுதான் சொன்னேன்.. ஆனா அவதான் என் பேச்சை கேட்காம போயிட்டா.."

முத்து மீண்டும் கோபத்தோடு தன் கையை ஓங்கினார்.

அதற்குள் பொன்னி கையிலிருந்த ஃபோன் ஒலிக்கவும் அந்த போனை பிடிங்கி அழைப்பை ஏற்று பேசினார்.

"அம்மா.. சந்தியா அங்கிருந்து கிளம்பி ரொம்ப நேரம் ஆயிருச்சாம்.. அவளோட பிரண்ட்ஸ்க்கு ஃபோன் பண்ணி கேட்டுட்டேன்.. அவ அங்கே எங்கேயும் வரலன்னு சொல்லிட்டாங்க.. நீங்க பக்கத்துல விசாரிச்சி பாருங்களேன்.." மகேஷ் சொல்ல சொல்ல முத்துவிற்கு இங்கே கோபம் அதிகமாகி கொண்டிருந்தது. எங்கோ இருக்கும் அவனுக்கு தெரிந்தது கூட வீட்டில் உள்ள தனக்கு சொல்லாமல் விட்டுவிட்டாளே என மனைவி மீது ஆத்திரம் கொண்டார்.

"அம்மா.. அம்மா.." பொன்னி பதில் ஏதும் பேசாததால் மகேஷ் மறுமுனையில் கத்தினான்.

"என் முதுகுக்கு பின்னாடி எனக்கு தெரியாம எல்லோரும் அந்த சக்தியோடு உறவு கொண்டாடிட்டு இருக்கிங்களா..?" என்று கர்ஜித்தார் முத்து.

மகேஷ்கும் கோபம் வந்தது. "நீங்க மனுசனா இருந்தா உங்ககிட்ட நான் பதில் பேச முடியும்.. உங்க சம்மதம் இல்லாம என்னோடு வாழ வரமாட்டேன்னுட்டா அவ.. அவ கூட கொஞ்சுரியா..? கெஞ்சுரியான்னு நீங்க வேற அப்பப்ப கடுப்பேத்துறிங்க.. நான் என்ன மனுசனை மாதிரி தெரியறனா இல்ல மாடு மாதிரி தெரியறனா..?"

"இந்த உதவாத பேச்செல்லாம் என்கிட்ட நீ பேசாத.. என் பேத்தி எங்கன்னு சொல்லு.. அவ மட்டும் பத்திரமா எனக்கு கிடைக்கல உங்க எல்லோரையும் வெட்டி கொன்னுடுவேன்.." அவர் இப்படி சொல்லவும் மகேஷ் கோபத்தோடு அழைப்பை துண்டித்துக் கொண்டு நெற்றியை பிடித்தபடி அருகிருந்த கட்டிலில் அமர்ந்தான்.

"என்ன ஆச்சி மகேஷ்..?" கவலையோடு கேட்டாள் கலை.

"சந்தியா காணாம போயிட்டா.. எங்க அப்பா கத்துறாரு.. பிரச்சனை பெருசாகும்ன்னு மனசு சொல்லுது.." என சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான் அவன்.

"கவலைபடாம இருடா.. பிரண்ட்ஸ் வீட்டுக்கு எங்கேயாவது போயிருப்பா.. வீட்டுக்கு வந்துடுவா.." என்று ஆறுதல் கூறினான் சாமிநாதன்.

இல்லையென தலையசைத்தபடி எழுந்தான் மகேஷ்.‌ "ஏதோ சரியில்லன்னு மனசு சொல்லுது.. நான் இப்பவே ஊருக்கு கிளம்பறேன்.." என்றவன் மறுநொடியே வீட்டிற்குள் நுழைந்து தனது பயண பேக்கை தேடி எடுத்தான்.

"அதுக்குள்ள ஊருக்கு கிளம்பறிங்களா மாமா..? ஆனா இன்னும் செங்காவை நீங்க பார்க்கவே இல்லையே..!?" என்றாள் பொன்னா.

"நான் இன்னொரு நாள் வரேன்.. மாமாவுக்கு அவசர வேலை வந்துடுச்சி.. செங்கா வந்தா சொல்லிடு.." என்றவன் வெளியே வந்தான்.

"இந்த இருட்டுல ஊருக்கு கிளம்பறியா..? காட்டு பாதையில் நிறைய மிருகம் வரும்டா.." என்று எச்சரித்தான் சாமிநாதன்.

"நான் பார்த்துக்கறேன்.. நான் ஊருக்கு போய் ஃபோன் பண்றேன்.. வரேன்டா.‌.. வரேன் கலை.." என்றவன் தனது வாகனம் நின்றிருந்த இடம் நோக்கி ஓடினான். வாகனத்தின் பின் இருக்கையில் பேக்கை வீசியவன் வண்டியை இயக்கி கிளம்பினான்.

காட்டு பாதை வளைந்து நெளிந்து சென்றது. பாதையின் இருபுறமும் இருந்த மரங்களில் சில்வண்டுகள் "ங்கொய்" என சத்தமிட்டுக் கொண்டிருந்தன. இந்த பாதையில் நிறைய முறை அவன் யானைகளையும் மலைப்பாம்புகளையும் மற்ற விலங்குகளையும் பார்த்து கடந்து சென்றிருக்கிறான்.

அவற்றை போல இன்று எதுவும் குறுக்காக வந்து தனது பயணத்தை தாமதப்படுத்தி கூடாதென வேண்டிக்கொண்டு வாகனத்தின் வேகத்தை குறைக்காமல் சென்றான். இதே வேகத்தில் சென்றால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஊருக்கு சென்று விடலாம் என உணர்ந்து ஆக்ஸிலேட்டர் மீதிருந்த காலை எடுக்காமல் சென்றான்.

வெகுநேரம் மகேஷ் ஃபோன் செய்வானோ என காத்திருந்தாள் சக்தி. ஆனால் அவன் ஃபோன் செய்யவே இல்லை. 'அந்த பெண் வீடு வந்திருப்பாள்.. அதனால்தான் அவன் ஃபோன் பண்ணல.. கொஞ்சம் எனக்கும் தகவல் சொன்னா குறைஞ்சா போயிடுவான்..?' மகேஷை திட்டிவிட்டு உறங்கி போனாள் சக்தி.

நடுஇரவில் வீட்டின் கதவை யாரோ ஓங்கி தட்டும் சத்தம் கேட்டு எழுந்து வந்து கதவை திறந்தாள் சக்தி. வெளியே முத்து எரிமலையை போல கொதித்து போய் நின்றிருந்தார். அவர் சந்தியாவின் தோழிகள் வீடுகளுக்கு சென்று அவளை பற்றி விசாரித்து விட்டுதான் இங்கு வந்திருந்தார்.

அவசரத்தில் இங்குதான் முதலில் வர நினைத்தார். ஆனால் சக்தியை குறை சொல்ல வலுவான ஆதாரம் தேவைப்பட்டது அவருக்கு. ஒருவேளை சந்தியா அவளது தோழிகளின் வீட்டிலிருந்து இவர் இங்கு வந்து தனது வீரத்தை காட்டிய பிறகு அவரது முடிவு தவறானது என சக்தி சொல்லி காட்டிவிட கூடாதென கவனமாக இருந்தார். அதனால்தான் அவர் இங்கே வர நடுநிசி ஆகிவிட்டது.

முத்துவின் பின்னால் நான்கைந்து ஆட்கள் கையில் உருட்டு கட்டைகளோடு நின்றிருந்தனர். சக்திக்கு இப்படி இவர்களை எதிர்கொள்வது சலிப்பை தந்து விட்டது.

"உங்களுக்கு என்ன வேணும்..?" என்றாள் அதிகார குரலில்.

அவளின் குரல் கேட்டு பின்னால் நின்றிருந்தவர்களின் முகத்தில் சிறு தயக்கம் தோன்றியது. ஆனால் முத்து அப்படியே நின்றிருந்தார்.

"என் பேத்தி சந்தியா எங்கே..? அவளை நீ எங்கே மறைச்சி வச்சிருக்க..?"

"அவளை மறைச்சி வச்சி நான் என்ன பண்றேன்..? அவ அப்பவே கிளம்பி போயிட்டா.."

தான் அழைத்து வந்த ஆட்களை பார்த்தார் முத்து.

"இவ வீட்டுக்குள்ள போய் தேடி பாருங்கடா.."

சக்தி வாசற்படியை மறித்து நின்றபடி முத்துவை முறைத்தாள். "உங்க கண்ணுக்கு நான் விளையாட்டு பிள்ளையா தெரியறனா..? இந்த வீட்டுல உங்க பேத்தி கிடையாது.. அவளை மறைச்சி வைக்கிறதால எனக்கு எந்த லாபமும் கிடையாது.. அதனால் அந்த பொண்ணை எங்கே தேடணுமோ அங்கே போய் தேடுங்க.. ஊருல உங்க பையனை மாதிரி வேற யாராவது ரவுடித்தனம் பண்ண நினைச்சி அந்த பொண்ணை கூட்டிட்டு போயிட்டாங்களோ என்னவோ..!?"

"உன் திமிர் எப்பவுமே குறையாது இல்ல..? சந்தியாவை நீதான் கடத்தி வச்சிருக்க.. நாங்க அவளுக்கும் மகேஷ்க்கும்  கல்யாணம் செய்ய முடிவு பண்ணது தெரிஞ்சிதான் நீ அவளை கடத்திருக்க.."

மகேஷ் தன் ஊருக்குள் நுழையாமல் நேராக சக்தியின் வீடு நோக்கிதான் தனது வாகனத்தை ஓட்டினான். சக்தியின் வீடு கண்களில் பட்டதும் வாகனத்தின் வேகத்தை குறைத்தவன் அவள் வீட்டின் முன்னால் தனது தந்தை ஆட்களோடு நிற்பது கண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு கோபத்தோடு இறங்கினான்.

சக்திக்கு முத்து சொன்ன இந்த தகவல் சற்று தடுமாற்றத்தை தந்து விட்டது. 'மகேஷ்கும் சந்தியாவுக்கும் கல்யாண செய்ய முடிவு பண்ணியிருக்காங்களா‌‌..? ஆனா இதை ஏன் மகேஷ் என்கிட்ட சொல்ல..? அந்த பொண்ணு சந்தியா கூட என்னை அத்தைன்னுதானே கூப்பிட்டா..!?' சக்தி குழம்பி போய் நின்றாள்.

"மரியாதையா தள்ளி நின்னுடு.‌. நான் என் பேத்தியை கூட்டிப் போறேன்.."

சக்திக்கு கோபம் எல்லை மீறி விட்டது. "யோவ்.. என்னை பார்த்தா உனக்கு ரவுடி மாதிரியும் கடத்தல்காரி மாதிரியும் தெரியுதா..? பைத்தியாமாயா நீ..? அந்த பொண்ணை எங்கே போய் தேடணுமோ அந்த இடத்துல தேடி கண்டுபிடின்னா இங்கே வந்து இந்த நேரத்துக்கு வம்பு பண்ணிட்டு இருக்க.. உன் மிரட்டலை கண்டு பயப்பட நான் ஒன்னும் பழைய சக்தி கிடையாது.‌. நீ தர விஷத்தை குடிச்சிட்டு பயந்து போய் விலகி நிற்க நான் அந்த அப்பாவி சக்தி கிடையாது.." 

ஏதோ விழுந்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார் முத்து. அவர் அழைத்து வந்த ஆட்களின் பின்னால் அதிர்ந்து போய் நின்றிருந்தான் மகேஷ். அவன் காலடியில் அவனது செல்போன் விழுந்து கிடந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..


Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
04/09/2020 8:08 am  

அத்தியாயம் 29

சக்தியும் முத்துவும் மகேஷை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களது அதிர்ச்சியை விட மகேஷ்குதான் அதிக அதிர்ச்சியாக இருந்தது.

அவன் தன் கையிலிருந்து கீழே விழுந்த கைபேசியை எடுத்துக் கொண்டு சக்தியின் அருகே வந்தான்.

"சந்தியா இங்கேயிருந்து போகும்போது நேரம் என்னன்னு தெரியுமா..?"

முத்து அவனை நெருங்கி அவனது கையை பிடித்தார். "அவ பொய் சொல்றா.. நீ வந்ததை பார்த்துட்டு உனக்கும் எனக்கும் நடுவுல சண்டை வரணும்ங்கற  ஒரே காரணத்துக்காக ‌இப்படி சொல்லியிருக்கா.."

மகேஷ் அவரை சாந்தமாக பார்த்தான். அவனது பார்வை கண்டு சக்திக்கே பயமாக இருந்தது. "சந்தியா கிடைக்கட்டும்.. அப்புறம் இதை பத்தி பேசிக்கலாம்.." என்றவன் சக்தியின் பக்கம் திரும்பினான்.

"ஒரு சின்ன பொண்ணை ராத்திரி நேரத்துல தனியா அனுப்பியிருக்கியே.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..?"

"அவ இப்படி தொலைஞ்சி போவான்னு எனக்கெப்படி தெரியும்..?" அவளும் பதிலுக்கு கேட்டாள்.

"உன் மேல செம கடுப்புல இருக்கேன்.. இருந்தாலும் இப்போதைக்கு சந்தியாவை கண்டுபிடிக்கறது எனக்கு ரொம்ப முக்கியம்.. அவ எந்த டைம்முக்கு இங்கிருந்து கிளம்பினான்னு சொல்லு.."

அவள் நேரத்தை யோசித்து சொன்னாள்.‌ "உன்னை அப்புறம் வந்து கவனிக்கிறேன்.. இரு.." என்றவன் தன் வாகனத்தை நோக்கி நடந்தான்.

சக்தியும் மகேஷின் பின்னால் ஓடினாள். "நானும் உதவிக்கு வரேன்.."  மகேஷ் வாகனத்தின் அருகே நின்றான். அவளை பார்த்தான். அவனது பார்வை கூறும் செய்தியை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"நான் ஏற்கனவே பயங்கர குழப்பத்துல இருக்கேன்.. இதுல உன்னால வர டென்ஷன் எனக்கு வேண்டாம்..  நீ இங்கேயே இரு.. நான் அவளை கண்டுப்பிடிச்சிக்கறேன்.." என்றவன் தனது வாகனம் ஏறி கிளம்பி சென்றான்.

முத்து அவளருகே வந்தார். "உன் வாயை வச்சிக்கிட்டு உன்னால சும்மா இருக்க முடியாதா..? இவ்வளவு நாள் இருந்த பயம் விட்டு போயிடுச்சா..? நீ சாகாம போனதுதான் என் மிக பெரிய தோல்வி.. நல்ல வேளை உன் வயித்துல இருந்த குழந்தை செத்துச்சி‌‌.. இல்லன்னா அதை வச்சி இன்னேரம் என் குடும்பத்தை இரண்டு துண்டாக்கி இருப்ப இல்ல..? உன் சாதி புத்தி உன்னை விட்டு போகுமா.‌? அடுத்தவனை ஏமாத்தி வாழுற பொழப்புக்கு பதிலா நீ செத்துப்போகலாம்.."

சக்திக்கு ஆத்திரமாக வந்தது. சுய மரியாதை 'உனக்கு சூடு சுரணை இருக்கிறதா.‌?' என கேட்டது. சாதியின் பெயரை சொல்லி அவர்கள் வீழ்த்தும் ஒவ்வொரு முறையும் வீழ்ந்ததற்காக அவளுக்கு இப்போது தன் மீதே பரிதாபமாக இருந்தது. தான் சுயக்கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்களுக்கு பயந்து கிடந்தது இப்போது அவளுக்கு புரிந்து போனது.

"உன் மிரட்டலை வேறெங்காவது வச்சிக்க.. நான் இனி உங்க யாருக்கும் பயப்பட மாட்டேன்.. நல்லா ஞாபகம் வச்சிக்க.. இனி உங்களோட எந்த சிறு வார்த்தையும் இனியும் என்னை பாதிக்காது.. இவ்வளவு நாள் உன் குடும்பம் பிரியாம இருக்க நான் பட்டபாடு எல்லாம் வீண் என ஆன பிறகும் நான் ஏன் இன்னும் அதே பைத்தியகாரத்தனத்தோடு இருக்கணும்..? என் பொறுமையை இது வரைக்கும் பார்த்த இல்ல.. இனி என் ருத்ர தாண்டவத்தை பார்க்க போற நீ.. ஏன்டா இவக்கிட்ட வம்பு வச்சிக்கிட்டோம்ன்னு நீ கதற போற.." என்றவள் தனது வீட்டிற்குள் புகுந்து கதவை சாத்தினாள்.

வனஜா நல்ல தூக்கத்தில் இருப்பாள் என்பதை அறிந்தே சக்தி அவளுக்கு அந்த நடு இரவில் ஃபோன் செய்தாள்.

"ஹலோ சக்தி..."

"வனஜாக்கா.. ஒரு பொண்ணு மிஸ்ஸிங்க்.. எழுந்து வாங்க.. கண்டுபிடிக்க போகணும்.."

"யார் சக்தி..?"

"மகேஷோட அக்கா பொண்ணு சந்தியா.. நேத்து சாயங்காலம் என் வீட்டுக்கு வந்தா.. ஆனா திரும்பி போற வழியில் எங்கேயோ மிஸ் ஆகியிருக்கா.. கம்ப்ளைண்ட் பண்ண முடியாது.‌. அதனால் பர்சனலா அந்த பெண்ணை கண்டுபிடிக்க உதவி செய்றிங்களா..?"

எதிர்முனையில் சிறிது நேரம் மௌனம் நிலவியது. "சரி சக்தி.. இன்னும் இரண்டு மணி நேரத்தில விசயத்தை கண்டுபிடிக்க பார்க்கறேன்.." என்ற வனஜா தொடர்பை துண்டித்து கொண்டாள்.

மகேஷ் பைத்தியம் பிடித்தவன் போலாகிவிட்டான். சந்தியா சிறு பெண்.. இந்த நேரத்தில் எங்கு இருக்கிறாளோ.. யாரோடு இருக்கிறாளோ.. என்ற யோசனை அவனை பயம் கொள்ள செய்திருந்தது.

சந்தியாவின் தோழிகள் வீடுகளுக்கு சென்று அவளது சமீபத்திய நடவடிக்கையில் ஏதேனும் மாறுபாடு இருந்ததா.. அவளை யாராவது வம்புக்கு இழுத்தார்களா என விசாரித்தான். அவன் சந்தியாவின் தோழிகள் பலரிடம் விசாரித்த பிறகே ரகுவை பற்றிய தகவல் கிடைத்தது. ரகு யாரென விசாரித்துக் கொண்டு ரகுவின் வீட்டிற்கு சென்றான் மகேஷ்.

ரகுவின் அம்மாதான் அவனை எதிர் கொண்டாள். ரகு மாலையிலிருந்து வீடு வரவில்லை என்ற தகவல் மட்டும்தான் கிடைத்தது. அவனது ஃபோன் ஸ்விட்ச் ஆஃபாக இருந்தது.

சந்தியா காணாமல் போனதற்கு ரகுதான் காரணம் என உறுதியாக புரிந்துக் கொண்டான் மகேஷ். ரகுவின் நண்பர்களின் விலாசத்தை வாங்கி கொண்டு ரகுவின் வீட்டை விட்டு சென்றான்.

அதிகாலை மணி நான்கை தாண்டிவிட்டிருந்தது.
ரகுவின் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று மகேஷ் விசாரித்ததில் அவனுக்கு கிடைத்த தகவல் ஒன்றுதான்.

ரகுவை போலவே அவனது நண்பர்களும் காணவில்லை.

'சந்தியா குட்டி.. உனக்கு ஒன்னும் ஆகியிருக்க கூடாது.. கடவுளே..! நான் எத்தனை பேருக்கு மறைமுகமாக உதவி செஞ்சிட்டு இருக்கேன்.. இதுதான் அதற்கான கூலியா..? என் வீட்டு பொண்ணுக்கு எதுவும் ஆகாம பார்த்துக்க.. அவ சின்ன பொண்ணு.. இத்தனை தடிமாடுங்க சேர்ந்து அவளை கடத்தி வச்சிருக்காங்களே.. அவளை பத்திரமா என்கிட்ட ஒப்படைச்சிடு கடவுளே.. அந்த தடிமாடுங்க அத்தனை பேருக்கும் உன் சார்ப்பா நான் பொங்க வைக்கிறேன்..'

ரகுவின் நண்பர்கள் பட்டியலில் இருந்த கடைசி நண்பனின் வீட்டு கதவை தட்டினான் மகேஷ். தூக்க கலக்கத்தோடு ஒரு வாலிபன் வந்து கதவை திறந்தான். இவனை கண்டதும் அவன் மொத்த தூக்கமும் தெளிந்து போனது.

"மகேஷ் ஸார்.." என்றான் குழப்பமாக.

"உன் பிரெண்ட் ரகு எங்கன்னு உனக்கு தெரியுமா..?" அவசர தொனியில் கேட்டான் மகேஷ்.

"ரகுவா‌‌..? எதுக்கு ஸார் கேட்கறிங்க..? எனக்கும் அவனுக்கும் சண்டை.. அதனால் அவனை பத்தி எதையும் என்கிட்ட கேட்காதிங்க.."

மகேஷ் அவனது சட்டையை பிடித்து அவனை கதவோடு வைத்து நெருங்கினான். "எங்க வீட்டு பொண்ணு சந்தியாவை காணல.. அவளை உன் நாதாரி பிரெண்ட் ரகுதான் கடத்தி போயிருக்கான்.. அவன் இருக்கற இடத்தை இப்போ நீ சொல்லல உன்னை நான் இங்கேயே கொன்னு புதைச்சிட்டு போயிடுவேன்‌‌.."

அந்த பையனின் கண்களில் மிரட்சி தெரிந்தது. "ஸார் எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ஸார்.. ரகுவுக்குதான் சந்தியான்னா பிடிக்கும்.. அவளையே சுத்தி சுத்தி வந்திட்டு இருப்பான். ஆனா சந்தியாவுக்குதான் அவனை சுத்தமா பிடிக்காது.. அவனை விரட்டி அடிச்சிட்டே இருப்பா‌‌.."

"இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும்.. இப்போ அவன் எங்கேன்னு மட்டும் எனக்கு சொல்லு.." அவனது குரலில் அவசரம் மட்டுமே இருந்தது.

அந்த பையன் தயங்கி நின்றான். "அவனும் எங்க ப்ரெண்ட்ஸும் எப்பவும் இந்த ஊரை தள்ளி இருக்கற புளியந்தோப்புக்கு நடுவுல இருக்குற ஓட்டு வீட்டுலதான் இருப்பாங்க.." அவன் சொல்லி முடித்த வினாடி மகேஷ் அவனது சட்டை காலரை பிடித்து இழுத்துக் கொண்டு தனது வாகனத்தை நோக்கி நடந்தான்.

"என்னை ஏன் ஸார் கூட்டி போறிங்க..? எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு முதல்லயே சொல்லிட்டனே.. அவன் பண்ண தப்புக்கு எதுக்கு என்னை இழுத்துட்டு போறிங்க..?"

மகேஷ் அவனை காரின் முன் இருக்கையில் தள்ளி விட்டுவிட்டு அவனை பார்த்தான். "நான் பயங்கர டென்சன்ல இருக்கேன்.. உன்னை கையை காலை உடைச்சி கூட நான் உன்னை என்னோடு இழுத்துட்டு போயிடுவேன்.. அந்த நாய் என் கையில் கிடைக்கற வரைக்கும் நீ என் கூட தான் இருந்தாகணும்.. இதை மறுத்து பேச ஆசை பட்ட உன் வாயில் ஒரு பல்லு கூட இருக்காது.. முழுசாத்தையும் தட்டி உன் கையில் கொடுத்துடுவேன்.."

அந்த பையன் பயந்து போன முகத்தோடு ஒடுங்கி போய் அமர்ந்தான். மகேஷ் காரை கிளப்பிய வேகத்தில் அந்த பையன் மூச்சி விட கூட பயந்து போய் விட்டான்.
அந்த பையன் சொன்ன புளியந்தோப்புக்குள் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான் மகேஷ். அவனை தொடர்ந்து இறங்கினான் அந்த பையன்.

தூரத்தில் ஒரு ஓட்டு வீடு தெரிந்தது. வீட்டின் முன்னால் ஒரு குண்டு பல்பு அரை மஞ்சளாக எரிந்துக் கொண்டிருந்தது.‌ மொத்த இடமும் நிசப்தமாக இருந்தது. மகேஷும் அந்த பையனும் நடக்கும் போது காய்ந்த இலைகள் உடையும் சத்தம் மட்டும் தெளிவாக கேட்டது‌. மகேஷ்கு சிறு சந்தேகம் வந்தது.

"நிஜமாவே இந்த இடம்தானா..?" என்றான் அருகில் வந்து கொண்டிருந்தவனிடம்.

"இந்த இடம்தான் ஸார்.. நான் கூட நிறைய நாள் நைட்ல இங்கேதான் தூங்கியிருக்கேன்.."

மகேஷ் வீட்டை நோக்கி நடந்தான். தூரத்திலிருந்து ஒரு நாய் குரைத்தபடியே ஓடி வந்தது. அந்த பையன் விசிலடித்தவுடன் அந்த நாய் அவனருகே வந்து தன் வாலை ஆட்டியது.
"இது நாங்க வளர்க்கற நாய்.." என்றான் அவன்.

"அதுக்கு இருக்கற நல்ல குணம் கூட உங்களுக்கு இல்ல.. வந்து உன் பிரெண்டை காட்டு.. ரகுன்னு பேர் வச்சவன் இன்னையோட சாகப்போறான்.." மகேஷ் சொன்னதில் அந்த பையன் பயந்துபோய் மிடறு விழுங்கினான்.

இருவரும் வீட்டின் அருகே சென்றனர். அந்த பையன் வீட்டை திறந்தான். வீடு வெறிச்சோடி கிடந்தது. மகேஷ்க்கு ஆத்திரமாக வந்தது. அந்த பையனை தூக்கி சுவற்றில் வீசினான். அந்த பையன் முனகியபடியே இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.

"எங்கடா அவங்க..? இங்கே இருப்பாங்ன்னு நீதானே சொன்ன..? அதுக்குள்ள அவங்க எங்கே போனாங்க‌.?"

"இந்த வீட்ல இருப்பாங்கன்னுதான் நானும் நினைச்சேன் ஸார்.." தயங்கி தயங்கி சொன்னான் அவன்.

"யாரது..?" யாரோ வெளியிலிருந்து குரல் கொடுக்க இருவரும் வீட்டிலிருந்து வெளியே வந்தனர். வயதான ஒருவர் கையில் பேட்டரி லைட் ஒன்றை பிடித்தபடி இவர்களை பார்த்தார்.

"இவர் இந்த இடத்தோட வாட்ச்மேன் ஸார்.." என்றான் அந்த பையன் சின்ன குரலில்.

மகேஷ் அந்த முதியவரிடம் வந்தான். "இந்த வீட்டுல இருந்த பையன் ரகு எங்கன்னு தெரியுமா..?"

அவர் அவனை மேலும் கீழும் பார்த்தார். அவன் யாரென தெரிந்ததும் அவரது கண்களில் சிறு பயம் குடி கொண்டது.
"ரகுவுக்கு காலையில கல்யாணம்.. அதனால் எல்லோரும் மலை சிவன் கோவிலுக்கு போயிருக்காங்க.."

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
19/09/2020 6:31 am  

அத்தியாயம் 30

முத்து வீட்டிற்கு வந்ததும் தூக்கமில்லாமல் கவலையோடு காத்திருந்த பொன்னி எழுந்து ஓடி வந்தாள்.

"என் பேத்தி கிடைச்சாளா..?" என்றாள் கண்ணீரை துடைத்துக் கொண்டே‌.

"நான் அந்த சக்தியை விசாரிக்கும் முன்னாடி உன் பையன் வந்துட்டான்.. அவன்தான் சந்தியாவை தேடி போயிருக்கான்.." என்றவர் அசதியோடு அமர்ந்தார்.

இவர்கள் பேசிய அரவம் கேட்டு அரை தூக்கத்தோடு எழுந்து வந்தான் மூர்த்தி.

"இந்த நேரத்துக்கு ஏன் நீங்க இரண்டு பேரும் விழிச்சிட்டு இருக்கிங்க..?" என அவன் கேட்க, தன் அருகேயிருந்த பூ ஜாடியை எடுத்து அவன் மீது வீசினார் முத்து. அரைதூக்கம் நொடியில் தெளிந்ததில் நகர்ந்து நின்றான் மூர்த்தி. பூ ஜாடி அவனை உரசியபடி சென்று அவன் பின்னாலிருந்த சுவற்றில் மோதி சுக்கல் நூறாய் உடைந்தது.

"நீ பெத்த பொண்ணு நேத்து ராத்திரியில் இருந்து காணாம போயிட்டா.. ஆனா நீ எதுவும் தெரிஞ்சிக்காம நிம்மதியா படுத்து குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்க.. நீயெல்லாம் ஒரு அப்பன்..!?"

மூர்த்தியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. "சந்தியா எங்கே..?'' என்றான் அவசரம்.

"நேத்து சாயங்காலம் சக்தி வீட்டுக்கு போனவ அதுக்கப்புறம் வீடு வந்து சேரல.."

மூர்த்தி வியர்த்த தன் முகத்தை துடைத்துக் கொண்டான்.

"அவ ஏன் சக்தி வீட்டுக்கு போனா‌‌..? ஏன் திரும்பி வராம போனா..?" அவன் குழப்பமாக கேட்டான்.

"உன் மகளுக்கு அந்த சக்தியை ரொம்ப பிடிச்சி போச்சாம்.. அதான் உறவு கொண்டாட அவ வீடு வரைக்கும் போயிருக்கா.. ஆனா போனவ திரும்பி வரல.. அவளை கேட்டா அந்த பொண்ணு எப்பவோ திரும்பி போயிட்டான்னு சொல்றா‌‌.. அவளை நல்லா மிரட்டி கேட்கும் முன்னாடி உன் மச்சான்காரன் வந்து சேர்ந்துட்டான்.. எங்கயோ நாசமா போகட்டும்ன்னு நான் வீடு வந்து சேர்ந்துட்டேன்..''

மூர்த்தி தனது சட்டையில் அவிழ்ந்திருந்த பட்டன்களை போட்டுக் கொண்டு கிளம்பினான். வாசலில் சென்று செருப்பு போட்டவனை பின்னால் சென்று கை பிடித்து நிறுத்தினார் முத்து.

"எங்கே போற..?"

"அந்த சக்தியை கொன்னுட்டு என் பொண்ணை கூட்டி வர போறேன்.. அவதான் என் மேல் இருக்கற பழைய பகையை ஞாபகம் வச்சி இன்னைக்கு என் பொண்ணை பழி வாங்க பார்க்கறா.. அவளை கொல்லாம என் ஆத்திரம் தீராது.."

"நீ அன்னைக்கே அவளை கொன்னிருந்தா நமக்கு ஏன் இன்னைக்கு இந்த நிலமை வர போகுது..? இந்த லட்சணத்துல நாம அவளுக்கு விஷம் தந்ததை மகேஷ் முன்னாடியே சொல்லிட்டா.. அவனை இனி எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல.."

முத்து சொன்னதை கேட்டு பொன்னி அதிர்ந்து போய் அவரை பார்த்தாள்‌. 'அந்த பொண்ணுக்கு விஷம் தந்தாங்களா..?'

"நீங்க எதுக்கும் கவலை படாதிங்க மாமா.‌‌. அவளை இன்னைக்கு இரண்டு கூறாக்காம விட மாட்டேன்.." என்றவன் அங்கிருந்து வேகமாக கிளம்பினான்.

முத்து உள்ளே வந்து அமர்ந்தார். பொன்னி அவரருகே வந்து நின்றாள். "சக்தியை நீங்க கொல்ல பார்த்திங்களா..?" என்றாள் இன்னமும் கூட தன் காதில் விழுந்ததை நம்ப முடியாதவளாக.

முத்து அவளை இளக்காரமாக பார்த்தார். "ஆமா.‌. அதுக்கு இப்ப என்னங்கற..?" பொன்னிக்கு அவர் மீது ஆத்திரமாக வந்தது. ஆனாலும் வாழ்நாளெல்லாம் அடக்கி வைக்கப்பட்ட மனதின் தைரியம் இன்று ஒரு நொடி கோபத்திற்காக வெளி வர தயங்கியது. அவளது இயலாமையை நன்கு புரிந்து வைத்திருந்த முத்து அவளை மேலும் இளக்காரமாக பார்த்து விட்டு உறங்க சென்றார்.

"சந்தியாவை கண்டு பிடிக்க போகலையா..?" என்றாள் தயக்கமாக பொன்னி.

"அதான் என் பையன் போயிருக்கானே.‌. கண்டிப்பா அவளை கூட்டி வந்துடுவான்.‌. நீ போய் தூங்கு.." அவரது சமாதான வார்த்தைகளை கேட்கையில் பொன்னிக்கு சிரிப்புதான் வந்தது.

மகேஷ் அந்த வாட்ச்மேனை சந்தேகமாக பார்த்தான்.

"என்ன சொன்ன..?"

"விடியற்காலையில ரகுவுக்கு கல்யாணம்ன்னு அவங்க பேசிக்கிட்டத கேட்டேன் தம்பி.. மத்தபடி சத்தியமா வேறெதுவும் எனக்கு தெரியாது.." என்று பயத்தோடு கூறினார் அவர்.

மகேஷ்க்கு கோபம் எல்லை மீறி விட்டது. அவன் அழைத்து வந்திருந்த அந்த பையன் பயத்தோடு அவனருகே வந்தான்.

"அந்த கோவில் இங்கே பக்கத்துலதான் இருக்கு.. உடனே கிளம்பினால் அவன் கல்யாணத்தை தடுத்து நிறுத்திடலாம்.."

அவனை இழுத்துக் கொண்டு கிளம்பினான் மகேஷ்.

சக்தி அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தாள்.

அவளது மனம் சந்தியாவை நினைத்து கவலை கொண்டிருந்தது.

மணி நான்கை கடந்துக் கொண்டிருக்கையில் சக்தியின் போனுக்கு அழைத்தாள் வனஜா.

"சொல்லுங்க அக்கா..''

"அந்த பொண்ணை ரகுன்னு அவளோடு படிக்கிற ஒருத்தன் கடத்திட்டு போயிருக்கான்.. இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த பொண்ணு கழுத்துல அவன் கட்டாய தாலி கட்டப் போறதா தகவல் வந்திருக்கு.. அவன் கல்யாணம் பண்ணிக்க இருக்கற கோவிலோட பூசாரி மூலமா தகவல் கிடைச்சிருக்கு.. நீ உடனடியாக போனா அந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்‌‌.."

"நன்றிக்கா..'' என்றவள் தன் வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

மூர்த்தி சக்தியின் வீட்டருகே தனது காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான். அதே நேரத்தில் சக்தி தனது வீட்டிலிருந்து வெளியே வந்து தனது வாகனத்தில் ஏறி கிளம்பினாள்‌.

'இந்த நேரத்துக்கு எங்கே போறா இவ..? நீ எங்கே போனாலும் உனக்கு சாவு என் கையில்தான் இன்னைக்கு..' மூர்த்தியும் தனது காரில் ஏறி புறப்பட்டான்.

சந்தியா தனது கைகள் வலிப்பதை உணர்ந்து கண்களை திறந்தாள். அவளது கைகள் முதுகு பின்னால் கட்டப்பட்டிருந்ததால்தான் இப்படி வலிக்கிறது என்பதை உணர்ந்தவளுக்கு அப்போதுதான் முழு அதிர்ச்சியாக இருந்தது. கத்த நினைத்தவள் தன் வாயை கட்டியுள்ளதை அப்போதுதான் கண்டாள்‌.

சந்தியா தான் எங்கிருக்கிறோம் என புரிந்துக் கொள்ள முயன்றாள். தன்னை சுற்றி இருந்த நான்கு சுவரையும் பயத்தோடு பார்த்தாள்‌. அறையின் கூரையில் எறிந்துக் கொண்டிருந்த விளக்கு அவளை மேலும் பயமுறுத்தியது‌.

அறையின் வெளியே யாரோ பேசும் குரல் கேட்டு தன் செவிகளை கூர்மை படுத்தினாள் சந்தியா.

"அந்த பொண்ணு உன் கூட விரும்பிதானே வந்திருக்கா..?"

"ஆமாண்டா.. இதையே எத்தனை முறைதான் சொல்றது..? அவளும் நானும் உயிருக்குயிரா நேசிக்கறோம்.. அவளோட மாமனுக்கு பயந்துதான் இப்படி திருட்டுதனமா கல்யாணம் பண்ண வேண்டியதிருக்கு.." இப்போது பேசுவது ரகு என புரிந்து கொண்டவளுக்கு அவன் சொன்ன திருமணம் என்ற சொல் அவளது வயிற்றில் புளியை கரைத்தது.

"முகூர்த்த நேரம் வர போகுது ரகு.."

அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் ரகு. இவள் மிரண்டு போய் பார்ப்பது கண்டு சிரிப்போடு அவளருகே வந்தான்.

"இன்னைக்கு நமக்கு கல்யாணம்.." என்றவன் கிண்டலாக சிரித்தான். "காதலுக்கே ஓகே சொல்ல மாட்டேன்னல்ல இப்போ பாரு நேரா கல்யாணத்துக்கே கழுத்தை நீட்ட போற.. இப்போ கை கட்டை அவிழ்த்து விட போறேன்.. வாய் கட்டையும்தான்.. ஏதாவது சத்தம் நினைச்ச இதோ பார் கையிலேயே வச்சிருக்கேன் கத்தியை ஒரே குத்தா குத்திடுவேன் பார்த்துக்க.."

அவளது கையின் கட்டை அவிழ்த்து விட்டான். அவள் கண்ணீரை சிரித்தபடியே துடைத்து விட்டவன் அவளது வாய் கட்டையும் அவிழ்த்து விட்டான்.

சந்தியா பயத்தோடு பின்னால் நகர்ந்து அமர்ந்தாள்.

"என்னை எதுவும் பண்ணிடாத.. விட்டுடு.. ப்ளீஸ்.. எங்க மாமாவுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னுடுவாரு.."

அவன் இதை கேட்டு பைத்தியக்காரன் போல சிரித்தான்.

"உன் மாமன் ஊர்ல இல்லன்னு தெரிஞ்சிதான் நான் இந்த ஏற்பாடே செஞ்சேன்.. இன்னைக்கு நமக்கு கல்யாணம் முடிஞ்சபிறகு நீயே என்கிட்ட சரணடைய போற.. இன்னைக்கு ஊரை விட்டு இப்படியே ஓட போற நாம ஆறு மாசம் கழிச்சிதான் ஊர் திரும்ப போறோம்.. அப்போ நீயே என் உயிருக்காக உன் மாமன்கிட்ட கெஞ்சுவ.. லாஜிக் இல்லாம பேசுறனேன்னு நினைக்கற இல்ல..? பாரம்பரியமும் மாங்கல்யமும் உனக்கு அந்த பக்குவத்தை தந்திடும் பாரேன்.‌."

சந்தியாவிற்கு இன்னும் அதிகம் பயமாக இருந்தது. அவனது கண்களிலிருந்த பயம் அவனுக்கு சந்தோசத்தை தந்தது.

"இதோ இந்த புடவையை கட்டிக்கிட்டு தலை சீவி பூ பொட்டோடு வெளியே வா‌‌.. கல்யாண முகூர்த்ததுக்கு நேரமாச்சாம்..!"

சந்தியா முடியாதென தலையசைத்தாள். "நானே உனக்கு புடவை கட்டி விடட்டா..?" சந்தியா மறு நொடியே அவன் கையிலிருந்த புடவையை வாங்கிக் கொண்டாள்.

ரகு சிரித்தபடியே எழுந்து வெளியே சென்றான். சந்தியா கையிலிருந்த புடவையை கண்ணீரோடு பார்த்தாள்‌.

'என்னை யாராவது காப்பாத்துங்களேன்.. மாமா.. அத்தை..' என உள்ளுக்குள் வேண்டியவளுக்கு கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது.

கை நடுங்க புடவையை கட்டிக் கொண்டவள் தலை சீவி பூ முடிந்துக் கொண்டாள்.

கதவு படீரென திறந்தது. ரகு பட்டு வேட்டி சட்டையோடு உள்ளே வந்தான்.

"ஏன் இன்னும் பொட்டு வைக்கல.." என்றவன் அருகிருந்த பொட்டை எடுத்து அவளுக்கு வைத்து விட்டான்.

"என்னை விட்டுடேன் ரகு.." என்று கெஞ்சினாள் அவள்.

அவளது கண்ணீர் வடிந்த கன்னங்களை துடைத்து விட்டவன் அவளது முன்னால் தன் இடையிலிருந்து உருவிய கத்தியை காண்பித்தான். "நீ தேவையில்லாம பேசினால் இந்த கத்தி தேவையோடு உன்னை குத்திடும்.. கருத்தா பொழைச்சிக்க பாரு.. கத்தி வச்சி என் கத்திக்கு வேலை வச்சிடாத.. என்ன புரிஞ்சதா..?" சந்தியா பயத்தோடு தலையசைத்தாள்.

அவளது கை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் ரகு. வானம் கொஞ்சமாக வெளுக்க தொடங்கியிருந்தது. மங்கல் வெளிச்சத்தில் தன் முன் நின்றிருந்த ரகுவின் நண்பர்களை பார்த்தாள். ஒரு முகம் கூட அவளுக்கு தெரிந்த முகமாக இருக்கவில்லை.

"ஏன்டா அந்த பொண்ணு முகம் வாடியிருக்கு..?" என்று கேட்டான் அவன் நண்பன் ஒருவன்.

"அவங்க அப்பா நினைவு வந்துடுச்சாம்ப்பா.." என உச்சு கொட்டினான் ரகு.

"கவலைபடாத பாப்பா.. கொஞ்ச நாள் கழிச்சு எல்லோரும் சமாதானம் ஆகிருவாங்க.." என ஆறுதல் சொன்னான் ஒருவன்.

ரகு அவளின் தோளில் கை போட்டபடி அவளின் பின்னால் நின்றான். அவளது இடுப்போரத்தில் ஏதோ ஒன்று கூராக குத்தியது. அது அவன் கையிலிருக்கும் கத்தி என்பதை உணர்ந்தவளுக்கு கண்கள் தாண்டி வர முயன்ற கண்ணீர் பயத்தில் அப்படியே உறைந்து போனது.

"முகூர்த்த நேரத்துக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம் வாங்க.."

அருகிலிருந்த கோவிலை நோக்கி நடந்தனர் அவனின் நண்பர்கள். அவன் சந்தியாவை நடத்தி கூட்டிச் சென்றான்.

கோவில் சன்னதிக்குள் நுழைந்தவளுக்கு ஏனோ ஜெயிலுக்குள் நுழைவதை போல் பயமாக இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
20/09/2020 5:54 am  

சந்தியாவின் பயம் கண்டு உள்ளுக்குள் சிரித்தான் ரகு.

அவனது ரகசிய சிரிப்பு கண்டு அவளுக்கு மேலும் பயமாக இருந்தது.

சக்தி மலையின் அடிவாரத்தில் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினாள். நூறு படிகளை கொண்டிருந்த அந்த கோவிலை அண்ணாந்து பார்த்தாள்.

அரை வெளிச்சத்தில் கோவில் தெரிந்தது. கோவிலினுள் மணி சத்தம் கேட்டது. சடசடவென படிகளை ஏறினாள்.

மூர்த்தி தனது காரிலிருந்து கீழே இறங்கி சக்தியை தேடினான். சக்தி பாதி படிகள் ஏறி விட்டிருந்தாள்.

'இவ எதுக்கு இங்கே வந்திருக்கா..? சாமி தேடி வந்தியா சக்தி..? நான் உன்னை சாமிக்கிட்டயே அனுப்பி வைக்கிறேன்..' என்றெண்ணியவன் அவளை தொடர்ந்து மலைபடிகளை ஏறினான்.

கோவிலின் பின்னால் இருந்த குறுக்கு பாதை அருகே மகேஷ் தனது காரை நிறுத்தினான்.

"இதுதான் ஸார் அந்த மலை சிவன் கோவிலுக்கு போற வழி.. கோவிலுக்கு முன்னாடி ஒரு வழி இருக்கு.. ஆனா முன்பக்கம் இருக்கற பாதைக்கு போக நமக்கு லேட்டாகும்.. ஆனா இந்த குறுக்கு பாதையில் போனா கொஞ்சம் சீக்கிரம் போயிடலாம்.." தான் இழுத்து வந்த அந்த பையன் சொல்லவும் தன் காரிலிருந்து கீழே இறங்கினான் மகேஷ். அந்த பையனும் அவனோடு இறங்கினான்.

கோவிலை நோக்கி வேகமாக ஓடினான் மகேஷ். அவனை பின்தொடர்ந்து அந்த பையனும் ஓடினான்.

சந்தியாவின் இடுப்பில் இன்னும் கூட அந்த கத்தி குத்தியபடிதான் இருந்தது. அதனால் அவளால் அவனை மீறிவிட்டு எதையும் செய்ய இயலவில்லை.

கோவில் அர்ச்சகர் அவளை வருத்தமாக பார்த்தார்.

"சாமி.. அந்த தாலியை எடுத்து கொடுங்க.. டைம் ஆகுது இல்ல.." என்றான் ரகு. அவர் எதுவும் பேச முடியாமல் கடவுள் முன்னால் பூசை செய்து வைக்கப்பட்ட தட்டை எடுத்து வந்தார். தட்டிலிருந்த தாலியை எடுத்து அவனிடம் நீட்டினார். அவன் தன் கையிலிருந்த கத்தியை தனது இடுப்பில் சொருகி கொண்டு தாலியை கையில் வாங்கினான்.

சந்தியா ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள். தனது வாயை திறந்து கத்தியழ நினைத்தாள். ஆனால் அவன் அவளை நெருங்கி அவளது காதில் "ஏதாவது சத்தம் போட்ட.. நீ பொணமாதான் இங்கிருந்து போவ.. பார்த்துக்க.." என்றான் ரகசியமாக. அவன் கண்களில் கோபம் நெருப்பாக இருந்தது. அதுவே அவளை அதிகம் பயமுறுத்தி விட்டது.

"டைம் ஆச்சிடா.. தாலியை கட்டு.." என்றனர் அவனது நண்பர்கள்.

அவன் தாலியோடு அவளை நெருங்கினான்.

"நிறுத்துப்பா.." என ஒரு குரல் கேட்டதும் சந்தியா சராலென திரும்பி பார்த்தாள். சக்தி அவர்களை நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்தாள்.

சந்தியா அவளை நோக்கி ஓட முயன்றாள்‌. ஆனால் அதற்குள் ரகு அவளை கை பிடித்து தன் அருகே இழுத்து அவளை தனது கையின் வளையத்திற்குள் வைத்துக் கொண்டான். அடுத்த நொடியே சந்தியாவின் முதுகில் கத்தியை பதிய வைத்தான். "என்னை விட்டு போக ட்ரை பண்ண கத்தி முதுகுக்கு உள்ளே இறங்கிடும்.."

சக்தி அவர்களை நெருங்கி வந்து நின்றாள். "சந்தியா நீ இந்த பக்கம் வா‌‌.." என்றாள். சந்தியாவின் கன்னம் தாண்டி வழிந்தது கண்ணீர். மௌனமாக முடியாதென தலையசைத்தாள்.

"இந்த பொண்ணும் நானும் காதலிக்கறோம்‌‌.. இப்போ கல்யாணம் பண்ணிக்க இங்கே வந்திருக்கோம்.. நீங்க அமைதியா திரும்பி போங்க.‌. எங்க விசயத்துல தலையிடாதிங்க.." ரகு சொன்னதை சக்தியால் நம்ப முடியவில்லை.

சந்தேகத்தோடு சந்தியாவை பார்த்தாள். அவள் எதுவும் பேசாமல் தலை குனிந்தாள். அவனது ஒரு கையின் அணைப்பை கண்ட சக்தி அவனது மறு கை செய்திருக்கும் சூழ்ச்சியை அருகிருக்கும் நிலை கண்ணாடியின் மூலம் கண்டுபிடித்து விட்டாள்.

சக்தி தன் முகத்தில் புன்னகையை வரவைத்துக் கொண்டு அவனை பார்த்தாள். "நீங்க காதலிக்கறதை என்கிட்ட சொல்லியிருக்க கூடாது..? நானே கூட கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே.. என்ன இருந்தாலும் இவ எங்க வீட்டு பொண்ணுப்பா.. எங்களுக்கு தெரியாம கல்யாணம் செய்யலாமா..? சரி விடு.. நடந்தது நடந்திருச்சி.. நீ தாலியை கட்டுப்பா.." என்றவள் அவர்களை மேலும் நெருங்கினாள். 
ரகு அவள் சொன்னதை கேட்டு ஆச்சரியத்தோடு அவளை பார்த்தான். அவள் அவனது கையிலிருந்த தாலியை கையில் வாங்கி அதை ஒரு நொடி பார்த்துவிட்டு அவனிடம் நீட்டினாள்.

"நல்ல நேரம் முடியும் முன்னால கட்டிடுப்பா.."

அவன் தன் கையிலிருந்த கத்தியை தன் இடுப்பில் சொருகி கொண்டு சந்தியாவை விட்டு சற்று விலகி நின்றான். சக்தி தந்த தாலியை கையில் வாங்க முயல சக்தி நொடியும் தாமதிக்காமல் அவனது அடி வயிற்றில் ஓங்கி ஒரு உதை விட்டாள். அவன் இரண்டடி தள்ளி விழுந்தான். சக்தி சந்தியாவை தன் அருகே இழுத்துக் கொண்டாள். அவளை தன் முதுகின் பின்னால் தள்ளி விட்டுவிட்டு ரகுவை ஆக்ரோஷமாக பார்த்தாள். அவன் கையை துடைத்துக் கொண்டே எழுந்து நின்றான்

"ஏன்டா பன்னாடை..? பொம்பள புள்ளைங்க உன் கண்ணுக்கு அவ்வளவு இளக்காரமாவா தெரியிறாங்க..?" என்றவள் மீண்டும் அவனை நோக்கி பாய்ந்தாள்.

அவன் சற்று பின் வாங்கினான். பிறகு உடனடியாக தன் இடுப்பிலிருந்த கத்தியை கையில் எடுத்தான். அவளை நோக்கி கத்தியோடு பாய்ந்தான். இம்முறை அவள் நகர்ந்து நின்றாள்.

சக்தியை தொடர்ந்து வந்த மூர்த்தி கோவிலினுள் தன் மகளுக்கு திருமணம் நடப்பதை கண்டு அதிர்ந்து போனான்.

சக்தி அந்த கல்யாணத்தை தடுக்க முயலும்போதுதான் அவளின் நல்ல குணத்தை முதல் முறையாக புரிந்துக் கொண்டான் அவன். ஆனால் அவளே மறுபடி அவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கையில் குழம்பி போய் விட்டான். தன் மகளின் கண்களிலிருந்து கொட்டும் கண்ணீரை கண்டு ஏதோ ஒரு வில்லங்கம் உள்ளதென்பதை புரிந்து கொண்டவன் பொறுமை காக்க முயன்றான்.

ரகு தன் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்த பிறகுதான் மூர்த்திக்கு விசயம் புரிந்தது. சந்தியாவை சக்தி அவளது முதுகு பின்னால் நகர வைக்கும்போது அவர்களை நோக்கி சென்றான். சக்தி ரகுவிடம் சண்டை போட மூர்த்தி தன் மகளை தன் அருகே இழுத்து வைத்து கொண்டான்.

சந்தியா அந்த இடத்தில் சக்தி வந்து காப்பாற்ற வேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாளே தவிர தன் தந்தை அந்த இடத்திற்கு வர வாய்ப்பு உண்டு என கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. ஆயிரம் இருந்தாலும் அப்பா இல்லையா..? இதுவரை தன்னை கவனித்து கொள்ளவில்லை என்றாலும் கூட இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் மூர்த்தியை பார்க்கவும் சட்டென அவனது கை அணைப்பிற்கு சென்று விட்டாள்.

சக்தி சந்தியா பாதுகாப்பாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

ரகுவின் நண்பர்கள் நடப்பதை குழப்பமாக பார்த்தனர். முதலில் சக்தியின் மீது கோபம் கொண்டவர்கள் ரகுவின் கையில் கத்தியை கண்டதும் தங்களின் நண்பன் மீதுதான் ஏதோ தவறென்று புரிந்து கொண்டனர். இருந்தாலும் நடந்ததை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் உள்ள ஒருவன் முன்னால் வந்து நின்றான்.

"என்ன ஆச்சி மேடம்..?" என்றான் தயக்கமாக.

"உன் பிரென்ட் எங்க வீட்டு பொண்ணை கடத்திட்டு வந்து கட்டாய தாலி கட்ட பார்க்கிறான்.." என அவள் சொல்ல நண்பர்கள் ரகுவை நம்பாமல் பார்த்தனர்.

"ரகு.. அந்தப் பொண்ணும் உன்னை லவ் பண்ணுதுன்னுதானே எங்ககிட்ட சொன்ன..?" ஒருவன் கோபமாக கேட்டான்.

"இப்ப இல்லன்னா என்னடா..? கல்யாணம் முடிஞ்ச பிறகு காதலிப்பா.. இதெல்லாம் ஒரு மேட்டரா..? நீங்க என்னோட பிரெண்ட்ஸ்தானே.. வந்து எனக்காக சப்போர்ட் பண்ணுங்க.."

அவனது நண்பர்கள் அவனை கோபம் பொங்க பார்த்தனர்.

"நாங்க நண்பர்கள்தான்.. ஆனா தப்புக்கு கூட துணை போற பாவிகள் இல்ல.. அந்த பொண்ணை உண்மையா காதலிக்கிறேன்னு சொன்ன.. இப்படி வலுக்கட்டாயமாக அவளை அடைய நினைக்கிறதுதான் உன் உத்தம காதலா..?" என கேட்டான் ஒருவன்.

"நான் உண்மையா காதலிக்கறதாலதான் தாலி கட்ட இங்கே கூட்டி வந்தேன்.. இல்லன்னா இவளை வேறெங்காவது கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணாமலயே குடும்பம் நடத்த ஆரம்பிச்சிருப்பேன்.."

அவன் சொன்னதை கேட்டு சக்திக்கு சிரிப்புதான் வந்தது.

"நீங்களே எப்படி இப்படி நியாயம் தர்மம் வகுத்துகிறிங்க..? அவ இஷ்டம் இல்லாம நீ அவளை எந்த விதத்துல அடைய முயற்சி பண்ணாலும் அது தப்புதான்.." என்றவள் அவனது இடுப்பில் ஒரு உதை விட்டாள்.

அவளது உதையில் கீழே விழுந்தவன் உடனடியாக எழுந்து நின்றான். "நான் அவளை எவ்வளவு நேசிக்கறேன்னு உங்க யாருக்கும் புரியல.." என கத்தினான் அவன்.

அவனது கத்தல் சத்தம் கேட்டு சந்தியா மூர்த்தியின் கையை இறுக்க பற்றிக் கொண்டாள். அவன் அவளது தலையில் வருடிவிட்டு அவளை இயல்பான சூழ்நிலைக்கு கொண்டு வர முயன்றான்.

"உன் காதல் பொய்யானது.. காதலை கட்டாயமா வர வைக்க கூடாது.." என சக்தி சொல்ல, அவன் தலையசைத்தான்.

"நோ.. உங்க யாருக்கும் புரியல.. அவ என் ஹார்ட் பீட்.. அவ இல்லைன்னா என்னால வாழவே முடியாது.." என கத்தி சொன்னான். சந்தியாவை தலை சாய்த்து பார்த்தான்.

"சந்தியா நீன்னா எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா..? உனக்கேன் அது புரியவே மாட்டேங்குது..? நீ இல்லன்னா நானும் இருக்க மாட்டேன்.. நீ என் கூடவே இருக்கணும்.. எப்போதும் என் கூடவே இருக்கணும்‌‌.. நான் செத்தா கூட என் கூடவே சேர்ந்து சாகணும்.."

சந்தியா பயத்தோடு மூர்த்தியின் நெஞ்சில் தன் முகத்தை புதைத்தாள். மூர்த்தி ரகுவை ஆத்திரத்தோடு பார்த்தான்.

"உனக்கு என் கையால்தான் சாவு.." என்றான் கர்ஜனையோடு. இவனது கர்ஜனை கேட்டு சந்தியா மேலும் பயந்தது அவள் உடல் நடுக்கத்தில் தெரிந்தது. அதனால் மூர்த்தி மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

"அமைதியா சரணடைஞ்சிடு ரகு.. அந்த கத்தியை கீழே போட்டுட்டு கையை பின்னாடி கட்டு.. உனக்கு அதுதான் பெஸ்ட்.." என்றாள் சக்தி.

ரகு அவளை ஆச்சரியமாக பார்த்தான். "என்னோட காதல் யாருக்கும் புரியல..." என வருத்தம் நிரம்பிய குரலில் சொன்னவன் கத்தியை தூரமாக எறிந்தான்.

சக்தி அவனது அருகில் சென்றாள். அவள் அருகில் வரும்வரை பொறுத்திருந்தவன் அவள் தன் பக்கத்தில் வந்தவுடன் கண் இமைக்கும் நேரத்தில் தன் இடுப்பில் சொருகியிருந்த மற்றொரு கத்தியை எடுத்து அவளது கழுத்தில் வைத்தான்.

"நான் அவளை நேசிக்கிறேன்.. எனக்கும் அவளுக்கும் இப்பவே இங்கேயே கல்யாணம் நடந்தாகணும்.. இல்லன்னா இங்கே எத்தனை கொலை நடக்கும்ன்னு எனக்கே தெரியாது.." என மிரட்டியவன் அவளது கழுத்தில் கத்தியை சற்று பலமாக அழுத்தினான்.

சக்திக்கு அந்த நேரத்தில் சிரிப்புதான் வந்தது. முன்பு ஒருநாள் மூர்த்தியின் கத்தி அவளது கழுத்தை பதம் பார்க்க முயன்றது. இன்று அவனது மகளுக்காக போராடுகையில் ஒரு கத்தி கழுத்தை பதம் பார்க்க வந்ததை நினைத்தாள்.

வாழ்வில் தான் சந்திக்கும் விந்தையான விசயங்களையும் விந்தையான மனிதர்களையும் நினைத்து வியந்தாள்.
அவளின் வியப்பை இன்னும் அதிகப்படுத்துவது போல அந்த கோவிலின் உள்ளே நுழைந்தான் மகேஷ்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க...


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
21/09/2020 6:07 am  

அத்தியாயம் 32

மகேஷ் கோவிலுக்குள் நுழைந்ததும் அவன் கண்களில் முதலில் தெரிந்தது சக்தியின் கழுத்தில் இருந்த கத்திதான்.

"நீ ஒரு உதவாக்கரைன்னு இன்னொரு முறை நிருப்பிச்சிருக்க.." என்று சக்தியை திட்டினான் அவன்.

சக்திக்கு கோபம்தான் அதிகமானது. "எப்போதும் என்னையே குறை சொல்லிட்டு இருக்காத.. உன் வீட்டு பொண்ணை கூட்டிட்டு கிளம்பிட்டே இரு.. எனக்கு என் பிரச்சனையை சமாளிக்க தெரியும்.."

"நீ பிரச்சனையை சமாளிக்க போறியா.. அறிவுக்கெட்டவளே.. நான் பார்க்கும் போதெல்லாம் எதாவது ஒரு பிரச்சனையோடுதான் இருக்க.. உன்னை போலிஸ்ல எடுத்தவன்தான்டி உலகமகா முட்டாள்.."

"இங்கே என்ன படம் காட்டுறிங்களா இரண்டு பேரும்..?" என ரகு எரிச்சலாக கேட்டான்.

"உனக்கும் இதுக்கும் சம்மந்தம் கிடையாது.." என்ற சக்தியின் கழுத்தில் கத்தியை அழுத்தினான். ரத்தம் ஒரு துளி கசிந்தது. சக்தியின் வலி நிறைந்த முகம் காணுகையில் மகேஷிற்கு மனம் வலித்தது.

நொடி கூட யோசிக்காமல் தன் பேண்டின் பின் பக்கம் சொருகியிருந்த துப்பாக்கியை கையில் எடுத்தான் மகேஷ்.

ரகுவை பார்த்து தன் துப்பாக்கியை குறி வைத்தான்.

ரகு அவனது செயல் கண்டு பயந்து விட்டான். ஆனாலும் அதற்குள் தோற்றுவிட அவனின் வீராப்பு இடம் தரவில்லை. அதனால் சக்தியின் கழுத்தில் கத்தியை இன்னும் சற்று அழுத்தினான்.

"நான் சாகும் முன்னாடி இவங்களை கொன்னுடுவேன்.. அதனால் துப்பாக்கியை தூர எறிஞ்சிடுங்க.." என்றான் அவன்.

மகேஷ் சக்தியின் கழுத்திலிருந்து வெளியே கசியும் ஒவ்வொரு துளி ரத்தமும் தன் இதயத்திலிருந்து வழிவதை போல் உணர்ந்து நின்றான். சக்திக்கு ரகுவின் கத்தியை கண்டு பயமல்ல.. மகேஷ் தன்னை இப்படி திட்டுக்கிறானா என்ற கோபத்தில்தான் இருந்தாள். இப்போது அவன் கையில் துப்பாக்கியை எடுத்து விடவும் அவளுக்கு கோபம் இன்னும் அதிகமானது.

ரகுவின் கத்தி பிடித்த கையை தன் கையால் பற்றினாள் சக்தி. ரகு யோசிக்க கூட நொடி நேரமில்லை. அவனது கையை வளைத்து முறுக்கி அவனது கையிலிருந்த கத்தியை கீழே விழ வைத்தாள்.

ரகுவை கையை முறுக்கி அவன் முதுகுபுறம் வளைத்து அவனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபிறகு மகேஷை பார்த்தாள். "என்னை குறை சொல்லவே உங்க அம்மா உன்னை பெத்து விட்டுருக்காங்களா..? ரவுடி உனக்கு இருக்கற அறிவை விட போலிஸ் எனக்கு ரொம்பவே அறிவு இருக்கு.. ஒரு செகண்ட் யோசிக்க கூட இடம் தராம நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்க.. ஆள பாரு.. பண்ணுற அட்டகாசத்தை பாரு.." ரகுவை விடுவித்து தூர தள்ளினாள்.

மகேஷ் அவள் திட்டியதை சட்டை செய்யாமல் ரகுவின் அருகே சென்றான். ரகு எழ நினைக்கையில் அவனை பின் முதுகில் ஒரு தட்டு தட்டி அவனை மண்டியிட வைத்தான்.

அவனது பின்னந்தலையில் தன் துப்பாக்கியை குறி வைத்தான்.

சக்தி தன் கையிலிருந்த கைவிலங்கை எடுத்துக் கொண்டு அவர்களின் அருகே வந்தாள்.

மகேஷின் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி கொண்டு அவனது கையில் விலங்கை மாட்டினாள்.

மகேஷ் அவளை புரியாமல் பார்த்தான். "நீ லூஸா..? எதுக்கு எனக்கு விலங்கு மாட்டியிருக்க..? தப்பு செஞ்ச அவனை விட்டுட்டு என்னை ஏன் அரெஸ்ட் பண்ற..?"

அவனை அமைதியாக பார்த்தாள் சக்தி. "கையில் ஆபத்தான ஆயுதம் வச்சிருக்க.. பொது மக்களுக்கு உன்னால ஆபத்து வரலாம்.." என்றவள் அவனை எழுப்பி நிறுத்திவிட்டு ரகுவின் அருகே வந்தாள்.

"எனக்கு விலங்கு.. அவனுக்கு என்ன மாலை போட்டு மரியாதை செய்ய போறியோ..?" புருவம் உயர்த்தி கோபமாக கேட்டான் மகேஷ்.

சக்தி அவனை கிண்டலாக பார்த்தாள். "அப்படி கூட செய்வேன் உனக்கென்ன..?" மகேஷ்க்கு ஆத்திரமாக வந்தது.

அவளை கடித்து குதறுபவனை போல பார்த்தான்.

அவள் முகத்தில் இருந்த கிண்டல் மாறாமல் ரகுவை எழுப்பி நிற்க வைத்தாள். அவன் தன் உதட்டோரம் கசிந்துக் கொண்டிருந்த ரத்தத்தை துடைத்தபடியே அவளை முறைப்போடு பார்த்தான். சக்தி அவனை பார்த்தபடியே அவனது அடி வயிற்றில் ஒரு குத்து விட்டாள்.

"உனக்கு பொம்பள புள்ளைங்கன்னா அவ்வளவு இளக்காரமாடா பரதேசி நாயே..?" என்றவள் அவன் உடம்பிலிருக்கும் மொத்த சக்தியும் மடியுமாறு அவனை அடித்துத் துவைத்தெடுத்தாள். அவளது அடியின் பலம் கண்டு மகேஷும் மூர்த்தியும் கூட பயந்து போயினர். ரகு மயங்கி கீழே விழுந்த பிறகே அவனை விலக்கி நிறுத்தினாள் சக்தி.

"மரியாதையா ஸ்டேசனுக்கு வாங்க.." என்றவள் ரகுவை இழுத்துபிடித்தபடி மகேஷை பார்த்தாள். 'மரியாதையா வரணுமா..?' என அவளை மனதுக்குள் கரித்துக் கொட்டியபடியே அவளோடு நடந்தான் மகேஷ்.

சந்தியாவின் அருகே நின்றாள் சக்தி. "ஒரு கம்ப்ளைண்ட் லெட்டர் எழுதி தரணும்.. அப்புறமா ஸ்டேசனுக்கு வரியா..? இல்ல நீயும் உன் மாமன்கிட்ட அடி வாங்க பயந்தவங்களை போல இப்படி எதுவும் நடக்கல.. நீங்க பொய் கேஸ் போடுறிங்கன்னு சொல்ல போறியா..?" என்றாள்.

மகேஷ் அவளை உதடு சுழித்து நக்கலாக பார்த்தான். அவனை கொல்ல வேண்டும் போல இருந்தது சக்திக்கு.

அவனது பற்கள் அனைத்தையும் தட்டியெடுத்து அவனது கையில் தர நினைத்தவளின் கையை தொட்டாள் சந்தியா.

சக்தி அவளை திரும்பி பார்த்தாள்.

"என்னை சரியான நேரத்துக்கு வந்து காப்பாத்தியதற்கு தேங்க்ஸ் அத்தை.. கம்ப்ளைண்ட் தர வரேன்.. வீட்டுக்கு போய் இந்த டிரெஸ்ஸை மாத்திட்டு வரட்டுமா அத்தை..?" சந்தியா இன்னும் பயத்திலிருந்து விடுபடவில்லை. ஆனாலும் சக்திக்கு தனது நன்றியை தெரிவிக்க வேண்டுமென தனது பயத்திலிருந்து வெளிவந்து அவளிடம் பேசினாள்.

சக்திக்கும் அவளை பார்க்க பாவமாகதான் இருந்தது. அதனால் அவளது தலையை பரிவோடு வருடிவிட்டாள்.

"வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு கூட வா.." என்றவளை மூர்த்தி ஓர கண்களால் பார்த்தான். அவனது மனதில் ஓடுவதை சக்தியால் கணிக்க முடியவில்லை.

மகேஷ் பின்தொடர ரகுவை இழுத்துக் கொண்டு தனது வாகனத்தை நோக்கி நடந்தாள் சக்தி. மகேஷ் தனது மாமாவை திரும்பி பார்த்தான். "என் கார் கோவில் பின்னாடி இருக்கற மெயின் ரோட்டில் இருக்கு.. அதை வீட்டுக்கு எடுத்துட்டு போயிடுங்க.." என வேண்டா வெறுப்பு குரலில் சொல்லிவிட்டு சக்தியோடு கிளம்பினான்.

ஸ்டேசன் லாக்கப்பில் மகேஷையும் ரகுவையும் ஒன்றாக அடைத்தாள் சக்தி.

"இதெல்லாம் ரொம்ப ஓவர் சக்தி.. இவனும் நானும் ஒரே லாக்கப் ரூம்ல இருக்கணுமா..? இவன் ஒரு கடத்தல்காரன்.."

"நீ ஒரு கொலைகாரன்.. துப்பாக்கியோடு நாட்டுக்கே தீமை விளைவிக்கிற தீவிரவாதி.."

மகேஷ் ஆச்சரியத்தோடு தன் வாய் மீது கை வைத்தான்.

"நான்.. தீவிரவாதி..? நல்லா இருடி.. உன்னை மாதிரி நாலு போலிஸ் இருந்தா நாடும் கூட நல்லாருக்கும்.."

"டி போட்ட கொன்னுடுவேன் பார்த்துக்க.."

"என் பொண்டாட்டியை நான் டி போடுறேன்.. அதுல உனக்கென்னடி வருத்தம்..?" என அவன் கேட்க அவள் எழுந்து வந்து லாக்கப் ரூமின் கதவிலிருந்த கம்பிகளின் மீது லத்தியால் தட்டினாள்.

"இன்னொரு முறை தேவையில்லாத வார்த்தை நீ பேசினால் நான் உன்னை அந்த செகண்டே கொன்னுட்டுதான் அடுத்த வேலையை பார்க்க போவேன்.."

"பயந்துட்டேன் செல்லக்குட்டி.." என்றவன் பின்னால் நகர்ந்து ரகுவின் அருகே அமர்ந்தான். அவனின் தலையில் ஒரு தட்டு தட்டினான்.

"ஏன்டா எருமை எங்க சந்தியாவை கடத்திட்டு போன..?"

"கல்யாணம் பண்ண.." என்றான் அவன் முறைப்போடு.

அவன் தலையில் மீண்டும் ஒரு அடியை விட்டான் மகேஷ்.

"அவ சின்ன பொண்ணுடா.. அதுவும் அவ விருப்பம் இல்லாம அவளை கடத்திட்டு போயிருக்கியே.. உன்னை சாகடிக்கிற அளவுக்கு கடுப்புல இருக்கேன் நான்.. ஆனா இங்கே என் ஆளு என் மேல செம காண்டுல இருக்கா.. அவக்கிட்ட வாங்கி கட்டிக்க கூடாதுன்னு அமைதியா இருக்கேன்.."

"அவங்களை நீங்க லவ் பண்றிங்களா..? இந்த வயசிலயா..? கள்ள காதலா..?"

அவனை மீண்டும் அடித்தான் மகேஷ். "நல்ல காதல் பரதேசி.. அழியாம வாழும் காதல்.. சேராம வாழும் காதல்.."

'ஒன் சைட் லவ்வுக்கு இவ்வளவு பில்டப்பா..?' என கேட்க நினைத்த ரகு அவனது அடிக்கு பயந்து அமைதியாகவே இருந்துக் கொண்டான்.

சந்தியாவை வீட்டிற்கு அழைத்து வந்தான் மூர்த்தி. அவளை கண்டதும் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் பொன்னி‌.

"உனக்கொன்னும் ஆகலியே.." என்றவளிடமிருந்து விலகி நின்றாள் சந்தியா.

"எனக்கொன்னும் இல்ல பாட்டி.. சரியான நேரத்துக்கு அத்தை வந்து காப்பாத்திட்டாங்க.."

"யாரு அந்த அத்தை..?" என்று கர்ஜித்த முத்து அருகிலிருந்த மரநாற்காலியை எடுத்து வீசினார். அது தரையில் மோதிய சத்தம் கேட்டு பயந்து போய் பொன்னியின் அருகே நெருங்கி நின்றாள் சந்தியா.

"நான் இத்தனை வருசமா அரும்பாடுபட்டு சேர்த்து வச்ச கௌரவத்தை அவ அழிக்க இருக்காளா..? அதுக்கு நீங்க எல்லாரும் உடந்தையோ..?"

சந்தியா பயத்தோடு முத்துவை பார்த்தாள். "அவங்கதான் என்னை காப்பாத்தினாங்க.. அவங்களும் மாமாவும் லவ் பண்றாங்க.. அவங்க சேர்ந்து வாழ கூட உரிமை இல்லையா..?"

முத்துவிற்கு ஆத்திரம்தான் அதிகமானது. "அவ போலிஸ்காரி.. அவளோட வேலை உன்னை காப்பாத்துறதுதான்.. அதுக்காக அவளை நம்ம நடுவீட்டுல உட்கார வச்சி மருமகள்ன்னு சேவை பண்ண முடியாது.."
சந்தியாவிற்கு முத்துவின் வாதம் பிடிக்கவில்லை. அவளின் மனசாட்சி அமைதியா வாயை மூடிக்கொள்ள மறுத்து விட்டது.

பொன்னியிடமிருந்து விலகி நின்றாள். "எனக்கு அவங்களை பிடிச்சிருக்கு.. எனக்கு அவங்கதான் அத்தை.. நான் குளிச்சிட்டு வெளியே போகப்போறேன்.. என்னை கடத்திட்டு போனவனை பத்தி கம்ப்ளைண்ட் கொடுக்க போலிஸ் ஸ்டேஷன் போகணும்.." என்றவள் தன் அறையை நோக்கி நடந்தாள்.

"உன் மானத்தை நீயே வாங்கிக்காத.. இப்படி ஒருத்தன் உன்னை ஒருநாள் முழுக்க கடத்திட்டு போய் வச்சிருந்தாங்கற விசயம் வெளி ஆளுங்க காதுக்கு போனா உன் வாழ்க்கைதான் நாசமா போகும்.." என்றார் முத்து கோபமாக.

சந்தியா அதே இடத்தில் நின்று திரும்பி பார்த்தாள். "என்ன செஞ்சா என் வாழ்க்கை நாசமா போகும்.. எதை செய்யலன்னா இந்த சமுதாயம் நாசமா போகும்ன்னு தெரியற வயசு வந்துடுச்சி தாத்தா எனக்கு.. அதனால் என் விசயத்துல இனி நீங்க எப்போதும் தலையிடாதிங்க.."
முத்து கோபமாக பொன்னியின் அருகே வந்து அவளது கன்னத்தில் பளீரென ஓர் அறையை விட்டார்.

"என்னடி வளர்த்தி விட்டுருக்க அவளை..? உன் வளர்ப்புல ஒன்னு கூட சரியில்ல.. அவன் காதலிச்சவதான் வேணும்ன்னு இன்னமும் வேற கல்யாணமும் பண்ணாம இந்த ஊருல என் பேரையும் கெடுத்துக்கிட்டு என் உயிரை வாங்குறான்.. இவ என்னடான்னா இந்த வயசுலயே அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்னை இவ்வளவு எதிர்த்து பேசுறா.. என்னை பார்த்தா உங்களுக்கு எப்படிடி இருக்கு..? ஒழுங்கா ஒரு புள்ளை வளர்க்க தெரியலன்னா நீ இந்த வீட்டுல இருந்துதான் என்ன ப்ரயோசனம்..?" என்றவர் மீண்டும் கையை ஓங்க அவரது கை அந்தரத்திலேயே தடுத்து நிறுத்த பட்டது. தன்னையே தடுத்து நிறுத்துவது யார் என திரும்பி பார்த்தார். சந்தியா அவரது கையை தடுத்து நிறுத்தியிருந்தாள்...

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..

 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
22/09/2020 6:02 am  

அத்தியாயம் 33

தன் கையை தாங்கி பிடித்த சந்தியாவை அதிர்ச்சியோடு பார்த்தார் முத்து.

"என்னை தடுத்து நிறுத்துறியா நீ..? உனக்கெப்படி இவ்வளவு தைரியம் வந்துச்சி..?"

"அநியாயம் நடக்குற இடத்துல தட்டிக் கேட்குற அளவுக்கு நியாயம் தெரிஞ்சிருந்தா போதும்.. இங்கே தப்பு என் மேலன்னா என்கிட்ட நேரா பேசுங்க.. அதை விட்டுட்டு பாட்டியை அடிக்கற உரிமை உங்களுக்கு கிடையாது.."

"என் பொண்டாட்டியை அடிக்க எனக்கு உரிமை இல்லையா..?" என கர்ஜித்தார் அவர்.

"பொண்டாட்டியா இருந்தாலும் கூட உங்களுக்கு அடிக்க உரிமை கிடையாது.. இதுதான் நிஜம்.. அவங்க உங்க பொண்டாட்டி.. உங்க அடிமை கிடையாது.."

முத்து அதற்கும் பொன்னியைதான் முறைத்து பார்த்தார்.

"என்னடி.. புள்ளையை எனக்கு எதிரா வளத்தி விட்டுருக்கியா..?" என்றவர் தன் கையை உருவிக் கொண்டார். சந்தியாவின் கன்னத்தில் பளீரென ஒரு அறை விட்டார். சந்தியா நான்கடி தள்ளி கீழே விழுந்தாள்.

கன்னத்தை பிடித்தபடி தாத்தாவை பார்த்தாள். அவர் கண்களை உருட்டி அவளை முறைத்தபடி அருகே வந்தார்.

"என்ன பார்க்கற..? உன்னை அடிச்சிட்டேன்னு பார்க்கறியா..? உன் பெண் திமிரை உன்னோடு வச்சிக்க.. இந்த வீட்டுல நான் வச்சதுதான் சட்டம்.. இந்த வீட்டுல யாரா இருந்தாலும் நான் வச்ச சட்டத்தைதான் கேட்டு நடக்கணும்.." என்றவர் மீண்டும் தன் கையை ஓங்கிக் கொண்டு அவளை நெருங்க அவர்கள் இருவருக்கும் இடையே ஓடி வந்து நின்றான் மூர்த்தி.

"என் பொண்ணு இவ.. இவளை நானே இதுவரைக்கும் கை நீட்டி அடிச்சதில்ல..உங்க வீட்டோட மாப்பிள்ளையா நான் இருக்கற ஒரே காரணத்துக்காக நீங்க என்னையும் என் பொண்ணையும் கேவலமா நடத்த வேண்டாம்.."

முத்து அதிர்ச்சியோடு அவனை பார்த்தார். "நீயா என்னை எதிர்த்து பேசுற..? நான் செஞ்சதை நீயும் தப்புன்னு சொல்ல வரியா..? உன் மாமன்டா நான்..! என் பையன் மேல வச்ச பாசத்தை விட நான் உன் மேல வச்ச பாசமாதான்டா அதிகம்.."

மூர்த்தி வேதனையோடு சிரித்தபடியே தன் மகளை எழுப்பி நிறுத்தினான். "நீங்க என் மேலதான் ரொம்ப பாசம் வச்சிங்க.. அதனாலதான் நீங்க பெத்த மகனோட காதலை ஏத்துக்க மனம் வரலனாலும் என்னோட காதலை ஏத்துக்கிட்டிங்க.. அதுக்காக நான் காலம் முழுக்க உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன்.. ஆனா அதுக்காக என் பொண்ணை நீங்க அடிக்கறதை பார்த்துட்டு அமைதியா இருக்கணுமா..? ஏற்கனவே நான் சக்திக்கும் அவளோட குழந்தைக்கும் பண்ண பாவத்துக்குதான் என் பொண்டாட்டியை இழந்துட்டேன்.. இனியும் முட்டாள்தனமா நடந்து என் பொண்ணையும் நான் இழக்க தயாரா இல்ல.."

முத்து அவனை அதிர்ச்சியோடு பார்த்தார். அவன் சொன்ன வார்த்தைகளில் ஒன்றை கூட அவரால் நம்ப முடியவில்லை.

மூர்த்தி தன் மகளின் கண்ணீர் வடியும் கண்களை துடைத்து விட்டார். "நீ ரெடியாகி வாம்மா.. நான் உன்னை ஸ்டேஷனுக்கு கூட்டி போறேன்.. அப்படியே உன் டிரெஸையெல்லாம் பேக் பண்ணிக்க.. நாம இந்த வீட்டுல இதுக்கு மேல இருந்தா மரியாதையே கிடையாது.. நாம நம்ம வீட்டுக்கே போயிடலாம்.."

முத்துவிற்கு அவனது முடிவு அதிர்ச்சியை தந்துவிட்டது.

அவன் மீது அவர் வைத்த பாசம் அதிகம். ஆனால் அவன் நொடியில் அதை குப்பையில் எடுத்து வீசி செல்வானென அவர் நினைத்து பார்க்கவே இல்லை.

சந்தியா தனது அறைக்கு சென்ற பிறகு மூர்த்தியை தன்னோடு ஒரு ஓரமாக இழுத்து சென்றார் முத்து.

"நீ சுலபமா தூக்கி எறிஞ்சிட்டு போற அளவுக்கு இல்ல நம்மோட உறவு.. நான் பண்ண எல்லா தப்புக்கும் நீயும் உடந்தையா இருந்திருக்க.. நீ பண்ண எல்லா தப்புக்கும் நான் காரணமா இருந்திருக்கேன்.. நாம இரண்டு பேரும் எப்பவும் பிரிய முடியாத அளவுக்கு தப்பை பண்ணியிருக்கோம்.. நீ வீணா உன் வாழ்க்கையை கெடுத்துக்காத.. அமைதியா என் யோசனைக்கு கட்டுப்பட்டு போ.. சந்தியாவுக்கும் மகேஷ்க்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கிறதுதான் இருக்கற ஒரே நல்ல முடிவு.. நீயே நல்லா யோசனை பண்ணி பாரு.. உன் பொண்ணு இப்படி ஒரு நிலமையில சிக்கி வந்த பிறகும் யார் அவளை கட்டிப்பா..?"
மூர்த்தி அவரிடமிருந்து விலகி நின்று அவரை வியப்பாக பார்த்தான்.

"நீங்க திருந்தவே மாட்டிங்களா மாமா..? அவ சின்ன பொண்ணு.. அவ வாழ்க்கையை இவ்வளவு ஈஸியா முடிக்க பார்க்கிறிங்க.. மகேஷ்க்கும் சந்தியாவுக்கும் இடையில் இருக்கற வயசு வித்தியாசம் தெரியுமா..? அவளோட எதிர்கால லட்சியம் ஆசையெல்லாம் உங்களுக்கு ஒரு விசயமே இல்லையா..?"

மூர்த்தி விலகி நடக்க அவனின் கை பிடித்து நிறுத்தினார் முத்து.

"நான் சொல்றதுல இருக்கற லாபத்தை மட்டும் நீ பாரு.. இந்த மொத்த சொத்துக்கும் நீயும் உன் மகளுமே வாரிசா இருப்பிங்க.. இது என்ன கொஞ்ச சொத்தா இல்ல கொறைஞ்ச சொத்தா..?"

மூர்த்தி அவரின் கையை பட்டென தட்டி விட்டான். "உங்க புத்தி எப்போதும் மாறாது இல்ல..? இவ நான் பெத்த பொண்ணு.. உங்களை போல அத்துவான காட்டுல விட்டுட்டு போக நான் இவளை பெத்துக்கல.. இனியும் உங்களோடு இருந்தா அது எனக்கும் நல்லதும் இல்ல.. என் மகளுக்கும் நல்லது இல்ல.."

அவன் விலகி நடந்தான். அவன் இரண்டடி நடக்கும் முன்பே அவனின் முன்னே வந்து நின்று அவனை நிறுத்தினார்.

"நீ நினைக்கற மாதிரி விரும்பிய நேரத்தில் விலகி போக இது ஒன்னும் அவ்வளவு சுலபம் இல்ல.. நீ சக்திக்கு என்ன பண்ணன்னு நான் மகேஷ்கிட்ட சொன்னா என்னவாகும் தெரியுமா..? உன்னை அவன் உயிரோடு விடுவான்னு நினைக்கிறியா நீ..? அவனோட குழந்தையை அழிச்சிருக்க நீ.. உன்னோட பொண்ணை அவன் சும்மா விடுவான்னு நினைக்கிறியா..? உனக்கு இப்போ ஒரே ஒரு வழிதான் இருக்கு.. உன் பொண்ணை அவனுக்கு கட்டி வச்சி அவனை உன் பக்கம் வளைச்சி போடுற வழியை பாரு.. உனக்கு மூளை இருந்தா யோசிச்சி பாரு.. நான் சொல்ல வரது உனக்கே புரியும்..."

மூர்த்திக்கு அவரை மறுத்து பேச ஆசைதான். ஆனால் அவர் வார்த்தைகளில் உள்ள உண்மை அவனுக்கு நன்றாக புரிந்தது. மகேஷ்க்கு நடந்த உண்மை தெரிந்தால் நிச்சயம் உயிரோடு விட மாட்டான். அவன் கையில் அடிப்பட்டு சாகுவதற்கு பதிலாக முத்துவின் வழியில் செல்வதே சரியென பட்டது அவனுக்கு. அருகிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனது முகத்தில் ஓடிய யோசனை அவரை நிம்மதி பெருமூச்சி விட வைத்தது. மூர்த்தி சொத்துக்கு செவி சாய்க்கவில்லை என்றாலும் கூட உயிர் மீது உள்ள பயத்தில் தன் வழிக்கு வந்துவிட்டு அவருக்கு சந்தோசமே.
சக்தி தனது இருக்கையில் அமர்ந்து தனது பணியை கவனித்துக் கொண்டிருந்தாள். மகேஷ் லாக்கப்புக்குள் இருந்தபடியே அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

"நீங்க அவங்களை எத்தனை வருசமா விரும்புறிங்க..?" என்றான் ரகு. அவனது குரல் கேட்டு திரும்பியவன் அவன் தன் முதுகு பின்னால் நிற்பது கண்டு ஒருநொடி திகைத்து ஓரடி பின்னால் தள்ளி நின்றான்.

"ஏன்டா எருமை.. நீ இருக்கற இடத்துல இருந்தே அதை கேட்க கூடாதா..? ஒரு நிமிஷத்துல என்னையே திடுக்கிட வச்சிட்டியே.."

"நீங்க ரவுடியா.." அவன் இளக்காரமாக கேட்க அவனது தலையில் தட்டினான் மகேஷ்.

"நீயெல்லாம் என்னை எடைப்போடக்கூடாது.. நீ பண்ண மொள்ளைமாறி தனதுக்கு என்னையவே கிண்டல் பண்றியா..? அப்படியே இடுப்பெலும்புல ஒரு மிதி விட்டேன்னு வச்சிக்க அப்படியே பூமிக்குள்ள புதைஞ்சி போயிடுவ பார்த்துக்க.." அவன் பல்லை கடித்துக்கொண்டு பேச ரகு சற்று பயந்து விட்டான்.

அவனை பயத்தோடு பார்த்தபடி ஒரு ஓரமாக சென்று அமர்ந்தான். "உங்க காதல்மட்டும் உசத்தின்னு நினைக்கிறதை நிறுத்துங்க ஸார்.. நீங்க இவங்களை எவ்வளவு விரும்புருங்களோ அதை விட அதிகமா நான் சந்தியாவை விரும்பறேன்.."

மகேஷ்க்கு கோபத்தில் கை நரம்புகள் முறுக்கேறியது.

அவனை அங்கேயே கொன்று விடும் கோபத்தோடு அவனருகே சென்று அவனது சட்டையை பிடித்தான். "நான் அவளை பைத்தியமா விரும்பறேன்.. ஆனா ஒரு செகண்ட் கூட அவளோட விருப்பம் இல்லாம அவளை தொடவும் நினைக்கல.. அவ விருப்பம் இல்லாம அவளை என் சொந்தமாக்கிகவும் நினைக்கல.. உன்னோட அகங்காரத்துக்கும் என்னோட காதலுக்கும் முடிச்சி போட நினைக்காத.."

"அங்கே என்ன சத்தம்..?" என்றபடி எட்டிப்பார்த்தாள் சக்தி. மகேஷ் ரகுவை சட்டையை பிடித்து மிரட்டிக் கொண்டிருப்பதை கண்டதும் அவளுக்கு கோபம்தான் வந்தது.

"உன் ரவுடியிசத்தை போலிஸ் ஸ்டேசன்லயே காட்ட ஆரம்பிச்சிட்டியா..? உன்னையெல்லாம் திருத்த ஆண்டவனால கூட முடியாது.."

மகேஷ் அவனை விட்டுவிட்டு அவளருகே வந்தான். "உன் கண்ணுக்கு நான் மட்டும் எப்பவும் கெட்டவனா தெரியறேன் இல்ல..? ஏன் சக்தி என் பக்கத்து நியாயத்தை எப்பவுமே கேட்க மாட்டேங்கற..?" அவன் அதை கேட்கையில் அவனது குரலில் இருந்த சோகம் ரகுவிற்கும் புரிந்தது. சக்திக்கும் புரிந்தது. ஆனால் அதை அவனிடம் ஒப்புக் கொள்ளதான் அவளுக்கு மனம் வரவில்லை.

"இன்னும் சந்தியா இங்கே வரல.. ஏற்கனவே நான் அந்த டென்சன்ல இருக்கேன்.. நீயும் என்னை டென்சனாக்காத மகேஷ்.. அந்த பையன் பண்ண தப்புக்கு நான் கோர்ட்டுல தண்டனை வாங்கி தருவேன்.. நீ உன் சொந்த விருப்பு வெறுப்பை காட்ட இது ஒன்னும் உன்னோட மாந்தோப்பு இல்ல.."

மகேஷ் திருப்பி பேச முயலும்முன் சக்தியின் மேஜையிலிருந்த மகேஷின் போஃன் சத்தமிட்டது. சக்தி அதை கையில் எடுத்துக் கொண்டு மகேஷின் அருகே வந்தாள். போஃனை ஸ்பீக்கரிவ் வைத்து அவனருகே நீட்டினாள். "இப்படியே பேசு.." என்றாள் மெல்லிய குரலில்.
பல்லிலித்து அவளை பார்த்தபடியே "ஹலோ.." என்றான் போனில்.

"நான் அம்மா பேசுறேன் மகேஷ்.." என்ற அம்மாவின் குரலில் பதட்டம் அதிக அளவில் இருந்தது.

"என்னம்மா..?"

"சந்தியா போலிஸ் ஸ்டேசன் வரமாட்டா மகேஷ்.." பொன்னி சொன்னதை கேட்டு சக்தியும் மகேஷும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.

"ஏன் அப்படி சொல்றிங்கம்மா..?" சந்தேகமாக கேட்டான் மகேஷ்.

பொன்னி வீட்டில் நடந்த பிரச்சனையை விலாவாரியாக சொன்னாள். ஆனால் மகேஷ்க்கும் சந்தியாவிற்கும் முத்து திருமணம் செய்ய நினைத்துள்ளதை அவள் சொல்லாமல் மறைத்து விட்டாள். அவள் சொன்னதை கேட்டு மகேஷ்க்கும் சக்திக்கும் கோபம் வந்தது.

"உங்க அப்பா இந்த பக்கம் வராரு.. நான் போஃனை வைக்கிறேன்.." என்றவள் போஃனை வைத்துவிட மகேஷ் கோபத்தோடு தனக்கு முன்னால் இருந்த கம்பியில் தன் கையை குத்தினான். கை முட்டியில் அடிப்பட்டதில் அவனது கையிலிருந்து உடனடியாக ரத்தம் கொட்டியது.

"நீ என்ன லூஸா..?" என கேட்டப்படியே கதவை திறந்துக் கொண்டு உள்ளே பாய்ந்து வந்தாள் சக்தி. தனது கைக்குட்டையை எடுத்து அவனது கையை சுற்றி கட்டிட்டாள்.

"இவனை இதுக்கு மேல நீ எதுவும் செய்ய முடியாது.. கம்ப்ளைண்ட் இல்லாத கேஸ் இது.." மகேஷ் சொன்னதை கேட்டு எரிச்சலுடன் புரிந்ததென தலையசைத்தாள் சக்தி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..


ReplyQuote
Page 4 / 8
Share: