Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

காதலிழையில்  

Page 6 / 7

Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

காதலின் இழையில் 25

யதிராவின் முகத்தை பார்த்தபடியே உள்ளே வந்தாள் கே.கே.

"இவன் சொல்ற எதையும் நம்பாத யதிரா.. ஹீ இஸ் எ பிராட்.. உன்னை ஏமாத்துறதை மட்டுமே தன் முழு நேர வேலையா வச்சிருக்கான்.." என்றவள் யதிராவின் அருகே வந்து அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.

சுபா கே.கேவை முறைப்பாக பார்த்தாள்.

"இதுல நீ தலையிடாத கே.கே.." என்றபடி அருகே வந்தான் முகில்.

"உன் நடிப்பு போதும் முகி.. உனக்கு உன் அக்காவும் உன் பேமிலியும்தான் முக்கியம்ன்னா நீ தாராளமா அவங்களோடு இருக்க வேண்டியதுதானே.? ஏன் இவளோட லைப்பை கெடுக்கற.? உன் கண்ணுக்கு இவ ஒரு கோல்டு டிக்கர் மாதிரி தெரிஞ்சதாலதானே இவக்கிட்ட உன் வொர்க்கை பத்தி சொல்லாம மறைச்ச.?" என்று கேட்டாள் கோபமாக.

யதிரா அதிர்ச்சியோடு கே.கே பக்கம் பார்த்தாள். "கோல்டு டிக்கர்ரா.?" என்றவளுக்கு கண்ணீர் அதிகமாக வழிந்தது.

"யதிம்மா.. இது அப்படி இல்ல.." என்று அருகில் வந்தவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் கே.கே.

"இனி யதிரா பக்கத்துல நீ வந்தா உன்னை நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது.." என்று விரல் நீட்டி எச்சரித்த கே‌.கே யதிராவை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

யதிராவுக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. கண்ணீர் சரம் சரமாக வழிந்தது.
கே.கே அவளை அங்கிருந்து வெளியே இழுத்துக் கொண்டு நடந்தாள்.
அலுவலக வாசலில் நின்றிருந்த தனது பைக்கில் ஏறியவள் யதிராவை அமர சொல்லி கை காட்டினாள். யதிராவுக்கு சுய நினைவே இல்லை. முகிலுக்கும் சுபாவுக்கும் இடையில் உள்ள உறவு மட்டும்தான் அவளின் நினைவு முழுக்க சுழன்றுக் கொண்டிருந்தது.

பைக் நின்றதும் தெரியாது. கே.கே பைக்கை நிறுத்திய இடத்தில் தான் இறங்கி நின்றதும் தெரியாது.

கே.கே தண்ணீர் பாட்டிலை யதிராவிடம் நீட்டினாள். யதிரா தண்ணீர் பாட்டிலை வெறித்து பார்த்தாள்.

"உன் முகத்தை கழுவிட்டு வா.." என்றாள் கே.கே.

யதிரா தன் முகத்தை தொட்டு பார்த்தாள். கண்ணீர் காய்ந்த கரைகள் கைகளில் பிசுபிசுத்தது. யதிரா தான் எங்கிருக்கிறோம் என்று பார்த்தாள். ஆள் அரவம் இல்லாத பாலம் ஒன்றின் கீழே இருந்தார்கள் இருவரும். 'அதுக்குள்ள இங்கே எப்படி வந்தோம்.?' என்று கேட்டது அவளது புத்தி.

கே.கே மீண்டும் தண்ணீரை நீட்டினாள். யதிரா முகத்தை கழுவி வந்தாள்.
தன் பைக்கில் சாய்ந்து அமர்ந்திருந்த கே.கே யதிராவை தன் அருகே வந்து அமர சொல்லி சைகை காட்டினாள். யதிரா முந்தானையில் முகத்தை துடைத்தபடி அவளருகே வந்து அமர்ந்தாள்.

"நான் கோல்டு டிக்கர் இல்ல.‌." என்றாள் தரையை பார்த்தபடி. இதை சொல்லும்போதே கண்ணீர் மீண்டும் தளும்ப ஆரம்பித்து விட்டது. அந்த வார்த்தை அவளை அதிகமாக பாதித்து விட்டது.

"நீ கோல்டு டிக்கர் இல்ல யதிரா.. முகில் ஒரு முட்டாள். பிராடு.. அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் உன்னை அழ வைக்கிறது மட்டும்தான்.. அவனோட அக்கா சொன்னான்னுதான் உன்னை விவாகரத்து செஞ்சிட்டு போனான்‌. ஆனா நீ அவன் திரும்பி வந்ததும் முழுசா நம்பி அவனை மீண்டும் ஏத்துக்கிட்ட.. அவன் இந்த மூணு வருசத்துல முப்பது கல்யாணம் செஞ்சி இருக்க கூட சான்ஸ் இருக்கு.. இதை நீ கொஞ்சம் கூட யோசிக்காம உடனே அவன் கை பிடிச்சிட்டு வந்துட்ட.. யார் வேணாலும் வந்து விளையாட உன் வாழ்க்கை என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கு.. உனக்கு ஏன் செல்ப் ரெஸ்பெக்டே இல்ல.? ஏன் சுய சிந்தனையே இல்ல.?" என்றாள் கோபத்தோடு.

அவள் கேட்க கேட்க யதிராவுக்கு கண்ணீர்தான் வந்தது. முகில் இப்படி ஒரு துரோகத்தை செய்ததை அவளால் நம்ப முடியவில்லை. அதே சமயம் தான் கண்ணால் பார்த்த விசயங்களை அவளால் மறக்கவும் முடியவில்லை.

சுபாவும் முகிலும் அருகருகே இருந்த காட்சியை நினைத்து பார்த்தவள் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி அழுதாள். கே.கே அவளது முதுகை வருடி விட்டாள்.

"இப்ப நீ அழறதால என்ன மாறிட போகுது.? ஒரு சீட்டருக்காக நீ உன் கண்ணீரை வேஸ்ட் பண்ணா அதை விட முட்டாள்தனம் வேற ஏதும் இல்லை‌. நீயும் ஒரு பொண்ணு.. தன்னம்பிக்கை உள்ளவள்.. உன்னை ஏமாத்தியவன் முன்னால நீ வாழ்ந்துக் காட்டணுமே தவிர இப்படி உடைஞ்சிப் போய் அழ கூடாது.." என்றாள்.

"என் மாமா இப்படி செய்வாருன்னு நான் நினைக்கவே இல்ல.." அழுதபடி சொன்னாள் அவள்.

கே.கே எழுந்து நின்றாள். யதிராவின் முன்னால் வந்தாள். யதிராவை தன் தோளில் சாய்த்து கொண்டாள்.

"ஏற்கனவே ஒருமுறை அக்காவுக்காக உன்னை விட்டு போனவன் மறுபடியும் உன்னை விட்டுட்டு போக மாட்டான்னு எப்படி நம்பின.?" என்று கேட்டபடி யதிராவின் தலையை வருடி தந்தாள்.

அவள் கேள்வியில் இருந்த நிதர்சனம் புரிந்ததும் நெஞ்சம் அதிகமாக வலித்தது. அண்ணனும் வைபவும் கேட்ட அதே கேள்விதான். ஆனால் அதன் முழுஅர்த்தமும் இன்றுதான் அவளுக்கு புரிந்தது. இப்படி ஒரு நாள் வருமென்று கனவிலும் நினைக்கவில்லை அவள்.

'இப்படி ஏமாந்து போறதுக்கு பதிலா செத்து போகலாம்..' என்று நினைத்து கண்களை துடைத்தபடி நிமிர்ந்தாள்.

"செத்து போ.. என்ன மாற போகுது.? முகில் மனசு மாறிட போறானா.? இல்ல நீ அனுபவிச்ச ஏமாற்றம் இல்லன்னு ஆகிட போகுதா.? நீ செத்தா இங்கே யாருக்கும் நட்டமே இல்ல.. இதை நீ புரிஞ்சிக்க.." என்றாள்.

"ஆனா இந்த ஏமாற்றத்தை தாங்கவே முடியல.." என்றவள் மீண்டும் முகத்தை மூடி அழுதாள். கே.கேவிற்கு முகில் மீது கொலைவெறி வந்தது. டிராமாவுக்காக ஒரு அறை தந்த இடத்தில் இன்னும் நான்கு அறை தந்திருக்கலாம் என்று கோபம் வந்தது.

யதிரா கால் மணி நேரம் கழித்து மீண்டும் முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். "எனக்குன்னு யாருமே கிடையாது.. என் அண்ணனுக்கும் என்னை பிடிக்கல.. என் மாமாவுக்கும் என்னை பிடிக்கல.. நான் இருக்கறதுக்கு பதிலா செத்தே போகலாம்.." என்று எழுந்தாள்.

கே.கே கோபத்தோடு அவளை பார்த்தாள். "லூசு மாதிரி யோசிக்காத.. அவங்களுக்கு உன்னை பிடிக்கலங்கறது மேட்டர் இல்ல.. உனக்கு அவங்களை சுத்தமா பிடிக்கலங்கறதுதான் மேட்டர்.. உன்னை பிடிக்காத ஒருத்தருக்காக அதுவும் உனக்கு பிடிக்காத ஒருத்தருக்காக உன் உயிரை விடுவதை போல கேவலமான செயல் வேற எதுவுமே இருக்காது.." என்றாள்.

யதிரா சோகமாகினாள். கே.கே சொன்னதன் அர்த்தம் புரிந்தது. அவள் சொன்னது மூளையின் சிந்தைக்கு சுளீரென ஒரு அடியை தந்து விட்டது.
முகத்தை துடைத்துக் கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று எதுவும் தோணவில்லை.

"நான் கே.கே.." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் கே.கே.
யதிரா நிமிர்ந்து அவளை பார்த்தாள். கே.கே அழகாய் இருந்தாள். அவளின் மையிட்ட கண்கள் யதிராவை விழியெடுக்காமல் பார்க்க சொன்னது.

"நான் கே.கே. என் பேரு கார்த்திகா. ஆனா எல்லோரும் கே‌.கேன்னு கூப்பிடுவாங்க.." என்றாள்.

யதிராவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. அவளின் மூளை இப்போது வரையிலும் கூட சிந்தனை செய்ய மறுத்துக் கொண்டிருந்தது.

"நான் முகியோட பிரெண்ட்.." என்று அவள் சொல்லவும் சட்டென எழுந்து நின்றாள் யதிரா.

"ஆனா இப்ப இல்ல.." என்று அவசரமாக சொன்னாள் கே.கே.

"நான் ஒரு பெமினிஸ்ட்.. அவன் உன்னை ஏமாத்துவதை பார்த்துட்டு அமைதியா இருக்க முடியல.. இதை உன்கிட்ட சொல்ல ஏற்கனவே நிறைய முறை டிரை பண்ணேன்.. உன்னை பாலோவ் பண்ணி கூட வந்தேன். ஆனா உன்கிட்ட சொன்னா நீ நம்பமாட்டியோன்னு அமைதியா இருந்துட்டேன்.." என்றாள்.

அன்று இவளை பேருந்தில் பார்த்தது யதிராவுக்கு நினைவு வந்தது.

"முகில் நல்லவனா கெட்டவனான்னு சொல்ல வரல நான்.. ஆனா நீ ஏமாறுவதில் எனக்கு விருப்பம் இல்ல.. பெண்களுக்கு அநியாயங்கள் நடந்தா கண்டிப்பா நான் தட்டி கேட்பேன்.. அதுக்கு தடையா யார் வந்தாலும் தூக்கி போட்டு மிதிப்பேன்னே தவிர பயப்பட மாட்டேன்.." என்றாள்.
அவள் சொல்வது யதிராவுக்கு முழுமையாக புரியாவிட்டாலும் கூட கே.கே ஏதோ ஒரு விதத்தில் தனக்கு தோள் தருகிறாள் என புரிந்தது.

"உன் வீட்டுக்கு போவதா இருந்தா அது உன் இஷ்டம்.. ஆனா உன் அண்ணன் உன்னை கால் கீழே இருக்கற செருப்பா கூட மதிக்க மாட்டான்.. உனக்கு ஓகேன்னா என் வீட்டுக்கு வரலாம். நான் தனியாதான் இருக்கேன். ஆனா உனக்கு முழு பாதுகாப்பு தர என்னால முடியும்.. நீ என்னை முழுசா நம்பலாம்.." என்றாள்.

யதிராவுக்கு பிறந்தகம் செல்ல மனம் வரவில்லை என்பது உண்மைதான். ஆனால் கே.கே மீதும் நம்பிக்கை வரவில்லை அவளுக்கு. முதல் முறையாக சந்தேகம் என்ற ஒன்று அவளின் மூளையில் வேலை செய்ய ஆரம்பித்தது.

"இரண்டு நாள் வந்து என்னோடு இரு.. அதுக்கும் மேல இருக்க உனக்கு பிடிச்சிருந்தா நீ என்னோடே இருக்கலாம்.. இல்லன்னா கிளம்பலாம்.. உன் லைப்பை முழுசா கன்ட்ரோல் பண்ண போறது நீதான்.." என்றாள் அவள்.

யதிராவுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. கே.கே பைக்கை ஸ்டார்ட் செய்ததும் அமைதியாக பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.

கே.கேவின் வீடு சிறு வீடு. ஆனால் இருவருக்கு தாராளமாக இருந்தது. அறை ஒன்றை கை காட்டினாள் கே.கே.

"பாத்ரூம் அது.. யூஸ் பண்ணிக்கோ.." என்றவள் எதிர் திசையிலிருந்த ஒரு கதவை கை காட்டினாள்.  "அது பெட்ரூம்.. நீ யூஸ் பண்ணிக்கோ.. லெஃப்ட் சைட் இருக்கறது என்னோட ரூம்.." என்றாள்.

யதிரா சரியென தலையசைத்தாள். குளியலறை சென்று முகத்தை சுத்தம் செய்து வந்தாள். கே.கே சூடான காப்பியை கொண்டு வந்து நீட்டினாள். 
யதிராவின் மனம் நெருப்பாக சுட்டது. காப்பியை குடித்தபோது தொண்டை வலித்தது.‌

குழப்பமும் ஏமாற்றமும் தந்த வேதனையில் அழுது ஓய்ந்தவள் அன்று இரவு தூங்கினாள் என்பதை விட அலுப்பில் மயங்கி போனாள் என்றே சொல்லலாம்.
யதிரா உறங்கிய பிறகு தனது அறைக்கு வந்தாள் கே.கே. முகிலுக்கு ஃபோன் செய்தாள்.

முதல் ரிங்கிலேயே ஃபோனை எடுத்தான் முகில். "அவ என்ன பண்றா.?" என்றான்.

"தூங்கிட்டாங்க.." என்று பெருமூச்சி விட்டாள் கே.கே.

"இது ரொம்ப ஓவர் சார்.." என்றாள் எரிச்சலோடு.

"பேர் சொல்லியே கூப்பிடு கே.கே. அதே நல்லாருக்கு.. ரொம்ப லோன்லியா பீல் பண்றேன்.. நீயாவது கொஞ்சம் உரிமை எடுத்துக்க.." என்றான்.

கே.கே நெற்றியை தேய்த்தாள். "ஏன் முகி இவ்வளவு ரிஸ்க்.? எந்த தடயமா இருந்தாலும் நான் கண்டுபிடிச்சி தர மாட்டேனா.? கொஞ்சம் டைம் தந்திருந்தா ஆகாதா.?" என்றாள் வருத்தமாக.

"இல்ல கே.கே.. என் அக்காவும் ரூபனும் ரொம்ப ஓவரா பண்ணிட்டாங்க.. அவங்க செஞ்சதுக்கான அத்தனை பலனையும் நான் திருப்பி தர போறேன்.. என் வழியில எத்தனையோ பிரச்சனைகள் வரும். அது எதிலேயும் யதிரா பாதிப்படைய வேண்டாம்னு நினைக்கிறேன் நான்.. அதுவும் இல்லாம என் யதிரா நான் விருப்பப்பட்ட மாதிரி மாறணும்.. அதுக்கு இது ஒரு சந்தர்ப்பம். அவ்வளவுதான்.." என்றவன் சொன்னதை கேட்டு கே.கே எரிச்சலானாள்.

"உன் ஆசைப்படியே யதிரா உன்னை விட்டு பிரிஞ்சிட்டா.. கூடிய சீக்கிரமே நீ எதிர்ப்பார்த்த அத்தனை கேள்வியையும் கேட்பா.. அவளை என்கிட்ட ஒப்படைச்சதுக்காக நீ எப்படி பீல் பண்ண போறேன்னு பாரு.. சாதாரண வாழ்வியல் இல்ல.. கோபத்தோட தேவையையும் வெறுப்போட தேவையையும் யதிராவுக்கு நான் கத்து தர போறேன்.. நீ என்னத்தை நினைச்சி அவளை விட்டு போனாலும் சரி.. ஆனா இனி நீ மறுபடியும் அவளோட காதலை பெறணும்ன்னா ரொம்ப கஷ்டப்பட்டே ஆகணும்.. நானும் மோசமானவ.. என் டிரெயினுங்கும் மோசமானது முகி.." என்று சொல்ல முகிலுக்கு எதிர்காலத்தை நினைத்து சற்று பயமாகதான் இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1121
LIKE
COMMENT
SHARE

நேத்து கதையை அப்டேட் பண்ண முடியாத அளவுக்கு ஒரு வேலை வந்துடுச்சிப்பா. சாரி நட்புக்களே


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

காதலின் இழையில் 26

முகில் தன் மடியில் படுத்திருந்த யதிராவின் தலையை வருடி விட்டான்.

"லவ் யூ யதிம்மா.." என்று அவளது காதோரம் கொஞ்சலாக சொல்லினான் முகில்.

தன் முகத்தை நோக்கி குனிந்தவனின் மூக்கோடு மூக்கை உரசியவள் "நானும் லவ் யூ.." என்றாள் சிணுங்கலாக. அவளுக்கு முத்தம் ஒன்றை தந்தான் அவன்.

'ஒருகணம் ஒருபொழுதும் பிரிய கூடாதே.. நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே..'

அலார சத்தத்தில் சடக்கென எழுந்து அமர்ந்தாள் யதிரா. 'கனவா இது.? விவஸ்தை கெட்ட கனவா இருக்கே..' என்று கனவை திட்டினாள்.

குக்கர் விசில் சத்தம் போட்டது. கொட்டாவி விட்டபடி படுக்கையறையிலிருந்து வெளியே வந்தாள். குக்கர் மீண்டும் விசிலடித்தது.

ஹாலில் டிவி சத்தமாக பாடிக் கொண்டிருந்தது. ரிமோட்டை எடுத்து சத்தத்தை குறைத்தாள். மீண்டும் குக்கர் சத்தமிட்டது. டிவி சத்தம் குறைந்ததும் கே.கே குளியலறையில் கத்தலாக பாடுவது கேட்டது.

யதிரா சென்று குளியலறை கதவை தட்டினாள். "கே.கே நிறைய விசில் வந்துடுச்சி.? குக்கர்ல என்ன வச்சிருக்க.?" என்றாள்.

கே.கே சட்டென பாட்டை நிறுத்திக் கொண்டாள். "குக்கர் அடுப்புல இருக்கா.? யதி நான் குளிக்க வந்து ஒன் ஹவர் ஆச்சி.." என்று கே.கே சொன்னதும் யதிரா அவசரமாக சமையலறைக்கு ஓடினாள். அடுப்பை அணைத்தாள். குக்கரின் விசிலை தூக்கி விட்டாள். அந்த மொத்த வீட்டையும் தன் வாசனையால் நிறைத்திருந்தது கே.கே பயன்படுத்தும் நறுமண திரவியம். ஆனால் அந்த நறுமணத்தை தாண்டி குக்கரின் தீய்ந்த வாடை நாசியில் வந்து மோதியது.
யதிரா சலித்துக் கொண்டாள். கே.கே உடம்பை சுற்றியிருந்த டவலோடு வந்து சமையலறையை எட்டிப் பார்த்தாள்.

"என்ன ஆச்சி யதி.?" என்றாள்.

யதிரா கோபத்தோடு இவளை திரும்பி பார்த்தாள். "கிச்சனுக்குள்ள வராதன்னு சொன்னா உனக்கு புரியவே புரியாதா.? உன்னால இன்னைக்கும் நாம ஹோட்டல்தான் சாப்பிட போறோம்.." என்றாள்.

"ஆர்வ கோளாறை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க செல்லம்.." என்றபடி வந்து அவளின் தாடையை பிடித்து கொஞ்சினாள் கே.கே.

யதிரா அவளது கையை தட்டி விட்டாள். "இந்த கொஞ்சலுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்ல.. எனக்கு வேலைக்கு போக டைம் ஆச்சி.. நான் குளிக்க போறேன்.." என்றவள் குளியலறை நோக்கி நடந்தாள்.

கே.கே தான் விட்ட இடத்திலிருந்து பாடலை மீண்டும் பாட ஆரம்பித்தாள்.
யதிரா தன் மீது விழுந்த ஜில்லென்ற தண்ணீரில் கனவால் கடுப்பாகி விட்ட தன் மனதையும் சேர்த்து குளிர்விக்க முயன்றாள்.

யதிரா முகில் மீது கொலைவெறியில் இருந்தாள். அலுவலகத்தில் நேற்று யாரும் பார்க்காத நேரத்தில் இவளுக்கு முத்தம் தந்து விட்டான் அவன். அப்போதே அவனை பிரித்து மேய்ந்திருப்பாள் அவள். ஆனால் நேரம் கெட்ட நேரத்தில் வந்த குருவால் இவளது எண்ணம் வீணாகி போனது.

யதிரா கே.கேவோடு வந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஆரம்பத்தில் அதிகம் அழுதுப் பார்த்தாள் யதிரா. அழுக அழுக சோகம் தீரவேயில்லை. கே.கே தினமும் இவளது சோகத்தில் பங்கு கொண்டு தேறுதல் வார்த்தைகளை சொன்னாள். ஆனால் எதுவும் மாறவில்லை.

இவள் பிரிந்து வந்து ஒரு வாரம் கடந்தபிறகு குரு இவளுக்கு ஃபோன் செய்தான். வேலைக்கு வர வேண்டும் என்று சொன்னான் அவன். மாட்டேன் என மறுத்தவளின் போனுக்கு டாக்குமெண்ட் ஒன்றை அனுப்பி வைத்தான்.

"எங்க கம்பெனியோடு மூணு வருசம் ஒப்பந்தம் போட்டுதான் உங்களை வேலைக்கு சேர்த்திருக்கோம்.. மூணு வருசம் முடியும் முன்னாடி நீங்க வேலையை விட்டு நிற்கறதா இருந்தா எங்க நிறுவனத்துக்கு நஷ்ட ஈடா ஒரு கோடி ரூபா செட்டில் பண்ணனும்.." என்றான் போனில்.

"இது ரொம்ப ஓவரா இருக்கு.. ஒரு கோடி ரூபா.?" என்றவள் அவசர அவசரமாக அந்த டாக்குமெண்டை படித்து பார்த்தாள். கடைசி பக்கத்தின் கீழ் கடைசியில் அவளது கையெழுத்தும் இருந்தது.

அதில் எழுதியிருந்ததை கண்டு அவளுக்கு கோபம் தலைக்கேறியது. அவளது கடைசி துளி பொறுமையும் அந்த நொடியில் மறைந்து போனது.

"நான் இந்த மாதிரி எந்த டாக்குமெண்ட்லயும் கையெழுத்து போடல.." என்றாள் ஆத்திரத்தோடு.

"அது உங்க கையெழுத்துதான் யதிரா.. நீங்க வீணா மறுப்பதால எதுவும் மாறிட போறது இல்ல.. எங்க நிறுவனத்தோட முக்கியமான பல டாக்குமெண்ட்ஸை நீங்க பார்த்திருக்கிங்க.. நீங்க எங்க நிறுவனத்தை விட்டு சட்டுன்னு விலகினால் அது மூலமா எங்களுக்கு பல சோதனைகள் வரலாம்.. நாளை காலையில் எட்டரைக்கு நீங்க ஆபிஸ்ல இல்லன்னா நாங்க உங்க மேல சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.. நீங்க எங்க எதிரி கம்பெனிக்கு கையாளா இருந்து எங்களை உலவு பார்க்க வந்ததா சொல்லி கேஸ் தருவோம்.. இதுக்கு மேல பேசுறதா இருந்தா நீங்க முகில்கிட்ட பேசிக்கோங்க.." என்றான் அவன்.

அன்று யதிராவுக்கு வந்த கோபம் கொஞ்ச நஞ்சமல்ல.

குரு ஃபோனை வைத்தபிறகு ஆத்திரத்தோடு இருக்கையில் அமர்ந்தவளின் முன்னால் வந்து அமர்ந்தாள் கே.கே.

"என்ன ஆச்சி.?" என கேட்டவளிடம் குரு போனில் சொன்னதை சொன்னாள் யதிரா.

"நான் மாமாகிட்ட போய் பேச போறேன்.. அவர் ஏன் என்னை இப்படி தொல்லை பண்றாரு.? அவருக்கு மனசாட்சியே இல்லையா.?" என புலம்பினாள்.

"முகி உன்னை டார்ச்சர் பண்ண பார்க்கறான்.. அவன் ஏற்கனவே உன்னை ஒரு முறை சரண்டரிங் மென்டாலிட்டி உடையவன்னு சொல்லி என்கிட்ட கேலி பேசி இருக்கான். இப்பவும் நீ சரண்டர் ஆகணும்ன்னுதான் நினைக்கிறான்.." என்றாள் கோபமாக.

சரண்டரிங் மென்டாலிட்டி என்ற வார்த்தை யதிராவை தாக்கி விட்டது. யதிராவின் வாடிய முகம் கண்டு பெருமூச்சி விட்டாள் கே.கே.

"அவன் சொன்னதும் பொய் இல்லன்னுதான் தோணுது யதி.. இப்பவும் உன் முன்னாடி நல்ல ஆப்சன் இருக்கு‌. ஆனா நீ முகில்கிட்ட போய் கெஞ்ச நினைக்கிற.. போட்டியிலயே கலந்துக்காம தோல்வியை ஒப்புக்கொள்வதை போல ஒரு முட்டாள்தனம் வேற ஏதும் இல்ல.. உன்னை உன் தன்மானத்தை அடமானம் வச்சி அவன்க்கிட்ட போய் கெஞ்சணும்ன்னு உனக்கென்ன விதி.? நீ நினைச்சி இறங்கினா அவனை உன் முன்னாடி சரணடைய வைக்கலாம்.. உனக்கு யார் வேணாலும் எதிரியா இருக்கலாம். ஆனா உனக்கு நீயே துரோகியா இருக்காத.." என்றாள்.

யதிரா முகத்தை மூடியபடி யோசனையில் ஆழ்ந்தாள். தன் முன் இருக்கும் வழிகள் என்ன என்னவென தேடினாள். வேலைக்கு செல்ல மறுத்தால் கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். அதற்கான பணமும் இவளிடம் இல்லை. கோர்ட் வரை செல்லும் அளவுக்கு இவளுக்கு தைரியமும் இல்லை. சரியென்று வேலைக்கு சென்றால் அங்கு முகிலை கண்டு மனமுடைந்தே சாக வேண்டும், நரக வேதனையை நொடிக்கு நொடி அனுபவிக்க வேண்டும். என்ன செய்வது என யோசித்தாள்.

"அவனையெல்லாம் ஒரு ஆளாவே மதிக்காத நீ.. நீயும் உன் எதிரியும் ஒரே பஸ்ல ஒரே சீட்டுல பக்கத்து பக்கத்துல உட்கார்ந்து பயணம் பண்ண வேண்டிய நிலமை வந்தா நீ பஸ்ஸை விட்டு கீழே குதிக்க முடியாது. அதே மாதிரிதான் இதையும் நினைச்சிக்க.. மூணு வருசமெல்லாம் ஒரு மேட்டரா.? கண்ணை மூடி திறக்கும் முன்னாடி ஓடிடும்.. அவனை எதிர்க்கவே உன்னால முடியலன்னா அப்புறம் நீ யாரைதான் எதிர்த்து வாழுவ.?" என்று கேட்டாள் கே.கே.

அவள் சொன்னது யதிராவுக்கு புரிந்தது. மூணு வருடம் நரகம்தான் என்றாலும் கூட அதை விட்டு தப்பி செல்ல இயலாத போது அதை எதிர்த்து போராடியபடி ஏன் வாழ கூடாது என்று நினைத்தாள்.

மனதை உறுதிப்படுத்திக் கொண்டு மறுநாள் அலுவலகம் சென்றவளுக்கு அடுத்த பரிட்சை காத்திருந்தது. அவள் இனி முகிலுக்கு பி.ஏ வாக வேலை செய்ய வேண்டும் என்று புது தகவலை சொன்னான் குரு.

யதிராவின் மனம் எரிமலையாக கனன்றது. முகிலின் முகத்திலேயே விழிக்க கூடாது என்று கங்கணம் கட்டியிருந்தவள் அவனுக்கு உதவியாளாக வேலை செய்ய நேர்ந்ததை எண்ணி விதியை நொந்தாள். ஓவியா தந்த பைல்களை வாங்கி கொண்டு ஓவியாவின் இருக்கையில் அமர்ந்தவள் முன் வந்து நின்றான் முகில்.

"இனி உன் சீட் என் ரூம்ல.." என்றான். யதிரா பற்களை கடித்தபடி எழுந்தாள்.
அவன் அனைத்தையும் வேண்டுமென்றே செய்கிறான் என புரிந்தது.
இந்த ஒரு வாரத்தில் கே.கே பலமுறை சொல்லியுள்ளாள் வெற்று கோபத்தால் நமது மனநிலைதான் பாதிக்கப்படும் என்று. அதனாலேயே பொறுமையை கடைப்பிடித்த யதிரா அமைதியாக இடம் மாற்றப்பட்ட கேபினுக்கு வந்து சேர்ந்தாள்.

தனது இருக்கையில் அமரும் முன் "நீ, வா, போன்னு அநாவசியமா பேசாதிங்க.. மரியாதையை தந்து வாங்கிகங்க.." என்றாள் எரிச்சலை அடக்கியபடி.

முகில் வியந்து பார்ப்பதை கண்டு கொள்ளவே இல்லை அவள்.

அதன்பிறகு இந்த இரண்டு மாதங்களும் அவளுக்கு சோதனை காலமாகதான் சென்றது. ஆரம்பத்தில் முகிலின் கண் முன் அமர்ந்தபடி அவளால் வேலையில் கவனம் செலுத்தவே இயலவில்லை. சிரமப்பட்டு தன்னை தானே தேற்றிக் கொண்டு அவள் வேலையில் மூழ்கினாலும் கூட அவ்வப்போது சுபா வந்து எரிச்சலை தந்து சென்றுக் கொண்டேயிருந்தாள்.

இந்த இரண்டு மாத காலமும் அவளின் ஒரே ஆறுதல் கே.கே மட்டும்தான்.
அவள் யதிராவின் பக்கபலமாக இருந்தாள். இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனர் இந்த நாட்களில். அவளும் முகிலும் முன்னாள் நண்பர்கள் என்பது பொறாமை தரும் அளவுக்கு கே.கேவோடு பழகி விட்டாள் யதிரா.

குளித்து முடித்து வெளியே வந்தவள் பூட்ஸை மாட்டிக் கொண்டிருந்த கே.கேவை பார்த்தாள்.

கே.கே இவளை நிமிர்ந்து பார்த்தாள். "வாவ்.. செம ப்யூட்டியா இருக்க நீ.." என்றாள். யதிரா குறும்பு சிரிப்போடு தனது அறைக்குள் நுழைந்தாள்.

இருபது நிமிட இடைவெளியில் தயாராகி வந்தவள் "கே.கே நான் செம கடுப்புல இருக்கேன்.. முகிலோட எதிரி நிறுவனம் எதுன்னு கண்டுபிடிச்சி அவங்களோடு நட்பு வச்சிக்கிட்டு இன்பர்மேசன் எல்லாத்தையும் கை மாத்தி விடலாம்ன்னு நினைக்கிற அளவுக்கு கடுப்பா இருக்கேன்.." என்றாள்.
கே.கே எழுந்து வந்து அவள் முன்னால் நின்றாள். தனது பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்தபடி அவளை தலை முதல் கால் வரை பார்த்தாள்.

"இவ்வளவு கடுப்பு ஏன்.? அதுவும் இந்த காலங்காலத்தாலயே..?" என்றாள் கண்களை சிமிட்டியபடி.

யதிரா கடுப்பின் காரணத்தை நினைத்து எரிச்சலடைந்தாள். நெற்றியை பிடித்தாள். " நேத்து மாமா எனக்கு முத்தம் தந்துட்டாரு.." என்றாள் பற்களை கடித்தபடி.

கே.கேவிற்கு முகில் மேல் ஆத்திரம் வந்தது. சிறிது பரிதாபமும் வந்தது.
"அவன் முத்தம் தர அளவுக்கு நீ ஏன் இடம் தர..?" பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைகளை மேலே எடுத்தவள் கைகளை கட்டியபடி இவளை பார்த்து கேட்டாள்.

யதிரா இடம் வலமாக தலையசைத்தாள். "நான் அவரோட முத்தம் வேணும்ன்னு ஆசைப்பட்ட மாதிரி நீ கேட்கற.." என்றாள்.

கே.கே முகத்தை சுளித்தாள். "அவன் முத்தம் தர வரும்போதே அவன் முகத்துல நச்சுன்னு ஒரு பஞ்ச் தராம அந்த முத்தத்தை அங்கே நல்லா என்ஜாய் பண்ணிட்டு இங்கே வந்து சீன் போட்டுட்டு இருக்க நீ.. அட்லீஸ்ட் முத்தம் தந்த பிறகாவது அவனுக்கு ஒரு உதையை தந்திருப்பியா.? ம்கூம். அதுவும் இல்ல.. நீ ஒரு ஒன்னாம் நம்பர் உதவாக்கரை.. சரண்டரிங் மென்டாலிட்டி உன் ரத்தத்திலயே ஊறி போச்சி.." என்று சலிப்போடு சொன்னவள் எதிர்ப்பார்த்திருக்கவே மாட்டாள் தான் சொன்னதில் ரோசம் வந்த யதிரா நேராக அலுவலகம் சென்றவுடன் முகிலுக்கு பன்ச் ஒன்றை தர போகிறாள் என்று.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1106
LIKE
COMMENT
SHARE


ReplyQuote
Subha Mathi
(@subhamathi)
Estimable Member Registered
Joined: 2 months ago
Posts: 107
 

Nice...intha k.k yaru..😉😉😉.pavam. yathira ku...oru support k.k mattum than.but mugilan romba kasta pathuturan 🙄🙄


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

கஆதலின் இழையில் 27

முகில் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்தான். நேற்றைய முத்தம் இன்றும் நினைவில் சிறு இதத்தை தந்தது. முத்தம் தர வேண்டும் என்று அவனும் நினைக்கவில்லைதான். யதிராவின் அருகாமை, யாருமற்ற தனிமை, அளவற்ற காதலை வெளிக்காட்ட இயலாத ஒரு சூழ்நிலை என்று அவன் தன் கட்டுப்பாட்டை மீறி விட்டான்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். சுபா நின்றுக் கொண்டிருந்தாள்.

"சௌந்தர்யா அண்ணி பேருல எழுபது லட்சம் பணம் டெபாசிட் பண்ண போறிங்களா.?" என்றாள் கையை கட்டியபடி.

முகில் திரும்பிக் கொண்டான். நிலை கண்ணாடியில் தெரிந்த சுபாவின் பிம்பத்தை பார்த்தான்.

"ஆமா.‌ ஏன்.?" என்றான்.

சுபா முகத்தில் கோபம் தென்பட்டது. "இது கொஞ்சம் கூட சரி கிடையாது. நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை அவங்க பேர்ல ஏன் போடணும்.? நீங்க இப்படியே உங்க அக்காவை பார்த்துட்டு இருந்தா நாளைக்கு நமக்குன்னு என்ன சேமிப்பு இருக்கும்.?" என்றாள் பற்களை கடித்தபடி.

முகில் கண்களை சுற்றியபடி இவள் பக்கம் பார்த்தான். "சுபா நீ தேவையில்லாததை யோசிக்கிற.. யதிராவை பிடிக்கல.. அவக்கிட்ட இருந்து விலக உன் உதவி வேணும்ன்னு தெளிவா சொல்லிதான் உன்னை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன். ஆனா என் மனசுல நீ இல்லவே இல்லன்னு தெரிஞ்ச பிறகும் கூட ஏன் இப்படி வீண் நம்பிக்கையோடு இருக்க.?" என்றான்.

சுபா அவன் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. "உங்க மனசுல நான் இப்ப இல்லங்கறது விசயமே இல்ல.. என் மனசுல நீங்க இருக்கிங்க. எனக்கு என் காதல் மேல முழுசா நம்பிக்கை இருக்கு. நீங்க ஒருநாள் கண்டிப்பா என் காதலை ஏத்துப்பிங்க. முட்டாள்தனமா உங்க அக்கா‌ பேர்ல பணத்தை டெபாசிட் பண்றதுக்கு பதிலா அதை வேறு எதாவது உருப்படியா பயன்படுத்துங்க.." என்றாள்.

முகில் அவளை இளக்காரமாக பார்த்து விட்டு வெளியே நடந்தான்.

"நான் சொல்றதை கொஞ்சமாவது கேளுங்க..‌ இந்த பணம் உங்களுக்கு ரொம்ப பெரிசு.. ஆனா உங்க அக்காவுக்கு இது சாதாரணம்.. அவங்க இதை எல்லாம் ஈஸியா காலி பண்ணிடுவாங்க.. நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் வேஸ்டாக வேணாம்.." என்றாள் வருத்தமாக.

முகில் உள்ளுக்குள் சிரித்தான். "எழுபது லட்சத்தை அவ ஏன் வேஸ்டா செலவு பண்ண போறா.? நீ சும்மா தொந்தரவு பண்ணாம இரு.." என்றான்.

சுபா நெற்றியை தேய்த்தாள். "உங்க அக்கா ஒரு கேம்ப்ளர்.." என்றாள். நடப்பதை நிறுத்திய முகில் அவளது கன்னத்தில் ஒரு அறையை விட்டான்.

"எங்க அக்காவை பத்தி இன்னொரு முறை தப்பா பேசின உன் பல்லை தட்டிடுவேன்.." என்றான் ஆத்திரமாக. கோபத்தில் சிவந்த அவனது முகம் கண்டு பயந்து போனாள் சுபா. ஆனால் அவளுக்குள்ளும் கோபம்தான் அதிகமாக வந்தது.

"உங்ககிட்ட ஆதாரத்தை காட்டுறேன் இருங்க.." என்றவள் தன் அடிப்பட்ட கன்னத்தை தடவிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

முகில் அவளை கண்டு மனதுக்குள் நகைத்தான். 'சுண்டெலி பெருச்சாளியை காட்டி தர நினைக்குதாம்..' என்றெண்ணியவனுக்கு சுபா என்ன மாதிரியான ஆதாரத்தை கொண்டு வர போகிறாள் என்று யோசனையாக இருந்தது.

தான் அறிந்த துரோகத்தின் வலியை யதிராவும் உணர வேண்டும் என்று நினைத்துதான் சுபாவின் துணையோடு யதிராவிடமிருந்து பிரிந்து வந்தான் முகில். நாடகம் என சொல்லிதான் சுபாவின் உதவியை நாடினான். ஆனால் அவள் அதுதான் சாக்கென்று முகிலை உடும்பு பிடி பிடித்துக் கொண்டாள்.

முகில் இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிற்கு திரும்பி வந்தபோது அதன் காரணம் அவனது கையில் உள்ள மந்திர கயிறுதான் என்று சௌந்தர்யாவிடம் சொன்னாள் அம்மா. ஒரு வாரம் முகத்தை தூக்கி வைத்திருந்த அப்பா அதன் பிறகு இவனோடு சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார். சௌந்தர்யா வழக்கம் போல தனது ஆளுமையை இவனிடமும் காட்டினாள். முகில் அவளது ஆளுமையின் கீழ் செயல்படுவதை போன்று பிம்பத்தை காட்டினான்.
நிறுவனம் சம்பந்தபட்ட பல விசயங்களுக்கும் அவன் அவளது அறிவுரையையே நாடினான். தன்னால்தான் அவனது நிறுவனம் வளர்கிறது என்று சௌந்தர்யா எண்ணும் அளவுக்கு அவளிடம் ஆலோசித்தான் முகில். மூன்று வருடங்களுக்கு முன்னால் வரை அது அவனது இயல்பு என்பதால் இப்போது இவன் நடிப்பதை நடிப்பு என்று சௌந்தர்யாவாலும் கண்டறிய முடியவில்லை.

"அக்கா சாப்பாடு எடுத்து வை.." என்று வந்து அமர்ந்தவனுக்கு உணவை பரிமாறினாள் சௌந்தர்யா.

"பணம் எப்ப டிரான்ஸ்ஃபர் ஆகும்.?" என்றாள் புருவம் உயர்த்தியபடி. எந்த பணத்தாலும் அவளை சரணடைய வைக்க முடியாது என்பது முகில் அறிந்ததே. அவளது கோபமும், திமிரும், மற்றவர்களை தன் காலின் கீழ் தூசாகவும் நினைக்கும் அவளது குணத்தை முகில் அடியோடு வெறுத்தான். ஆனால் அவளை அடங்கும் வழிதான் அவனுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

முகில் அலுவலகம் புறப்படுவதை வாசலின் ஒரு ஓரத்தில் நின்றபடி பார்த்தாள் சுபா. 'நான் சொன்னதை கே.கே கூட உடனே நம்பிட்டா.. ஆனா இந்த ஒல்லி பூசணிக்கா நம்ப மாட்டேங்குது..' என்று உள்ளுக்குள் எரிந்தாள். கே.கே முகிலின் முன்னாள் தோழியென்பதும், இன்னாளில் அவளுக்கு யதிரா மீது அளவில்லா பாசம் உள்ளது என்ற செய்தி அறிந்ததுமே சுபாவிற்கு கே.கே மேல் பயங்கர கோபம் வந்துவிட்டது.

கே.கே இவளிடம் பேச வந்தபோது "நீங்க எனக்குதானே பிரெண்ட்.? ஆனா ஏன் யதிராவுக்கு சப்போர்ட் பண்றிங்க.?" என கோபமாக கேட்டவளுக்கு கே.கே தன்னிடம் பழகியது அனைத்தும் நடிப்பின் காரணம் என்பது தெரியவில்லை.

"நீயும் நானும் பிரெண்டானது எதேச்சையானது சுபா. யதிராவோடும் அப்படித்தான். ஆனா நான் முகிலை வெறுக்கறேன். அதனால நான் யதிரா பக்கம்தான் இருப்பேன். நீயும் அவனை வெறுத்தா அப்ப சொல்லு.. நம்ம பிரெண்ட்ஷிப்பை கன்டினியூ பண்ணலாம்.." என்று சொல்லி விட்டு போய் விட்டாள் கே.கே.

சுபாவிற்கு கே.கே மேல் கோபம் வந்தது. அவள் முகிலை வெறுப்பது கண்டு கூட அவ்வளவு கோபம் வரவில்லை. ஆனால் அவள் யதிராவின் பக்கம் சென்றதுதான் அதீத கோபத்தை தந்தது. அதனாலேயே இன்று வரையிலும் கே.கேவோடு பேச மறுத்து பார்க்கும் இடமெல்லாம் அவளை முறைத்துக் கொண்டு திரிகிறாள்.

முகில் அலுவலகம் வந்தான். அனைவருக்கும்  எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவனும் பதில் வணக்கம் வைத்துவிட்டு துள்ளலோடு தனது அறைக்குள் நுழைந்தான். யதிரா தனது இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவள் இவனுக்கும் முன்னால் தினம் வந்தாக வேண்டும். இல்லையேல் தாமதமாக வரும் ஒவ்வொரு நாளுக்காகவும் இரண்டு நாட்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று சொல்லியுள்ளான் முகில்.

சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டவன் இருக்கையில் அமர்ந்து சட்டையின் கையை மேலே மடித்து விட்டுக் கொண்டான்.

அவன் தனது மேஜை டிராவில் இருந்த சில பைல்களை எடுத்து மேலே வைத்துவிட்டு கணினியை இயக்க ஆரம்பித்த நேரத்தில் யதிரா தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தாள்‌‌. தன் கையிலிருந்த பைலை அவன் முன்னால் வைத்தாள்.

"நீங்க கையெழுத்து போட வேண்டியதுதான் மட்டும்தான் பாக்கி சார்.." என்றாள்.

முகில் அந்த பைலை கையில் எடுத்த நேரத்தில் அவனது கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டாள் யதிரா.

முகில் கன்னத்தை தேய்த்தபடி கோபமாக நிமிர்ந்து பார்த்தான். யதிரா ஆத்திரத்தோடு நின்றுக் கொண்டிருந்தாள்.

"இந்த அறை நேத்து என்னை கிஸ் பண்ணதுக்காக.. இன்னொரு முறை என்னை டச் பண்ணா அப்புறம் என்ன நடக்கும்ன்னே தெரியாது.." என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

முகில் அவளை நக்கலாக மேலும் கீழும் பார்த்தான். "நான் என்னவோ இதுக்கும் முன்னாடி உன்னை டச் பண்ணாத மாதிரி பேசுற.. நீ என்னோட பிராப்பர்டிங்கறதை மறந்துட்டியா.?" என்றான் தன் உதட்டில் நக்கல் சிரிப்பை ஓடவிட்டபடி.

யதிரா பற்களை கடித்தாள்.

"உன்னை நான் கிஸ் பண்ணவுடனே நீயா எதையாவது ஓவரா கற்பனை பண்ணிக்காத.. சின்ன புள்ளைங்கள்ல புளி மிட்டாய் பிடிச்சிருந்ததுங்கறதுக்காக மறுபடியும் எப்போதாவது புளி மிட்டாயை பார்த்தா ருசிக்க ஆசைப்படுவோமே அந்த மாதிரிதான் இதுதான்.. அதுவும் இல்லாம உன் லிப்ஸ் ஒன்னும் அவ்வளவு டேஸ்டாவும் இல்ல.." என்றான் உதட்டை சுழித்தபடி.

யதிரா கண்களை மூடி கோபத்தை அடக்கினாள். 'கோபத்தை அடக்கி வச்சி நீ என்ன ஞானியாவா ஆக போற.?' மனதுக்குள் குரல் ஒன்று கேட்கவும் பற்களை கடித்தபடி கண்களை திறந்தவள் அவனது சுழித்த உதட்டின் மீது ஒரு குத்து விட்டாள். ரத்தம் சொட்டிய உதட்டை புறங்கையால் துடைத்தபடி எழுந்து நின்றான் முகில்.

"கட்டிய பொண்டாட்டியை கூட அவளுக்கு விருப்பம் இல்லாதபோது தொடக்கூடாது. இது சட்டம் சொல்றது. நான் உங்க பொண்டாட்டியும் இல்ல. கேர்ள் பிரெண்டும் இல்ல.. என்னை என் அனுமதி இல்லாம கிஸ் பண்ணா எது கொண்டு வேணாலும் அடிப்பேன் நான். சட்டபடியும் கூட நடவடிக்கை எடுப்பேன். அதனால இனி கேர்ப்புல்லா இருங்க.. உங்க சீண்டலை வேற யார்க்கிட்டயாவது வச்சிகங்க.. ஆனா என்கிட்ட வேணாம்.." என்றவள் முறைத்தவனை தானும் முறைத்துவிட்டு திரும்பினாள். ஆனால் சட்டென ஏதோ யோசனையில் மீண்டும் அவன் பக்கம் பார்த்தாள். தன் உதட்டை துடைத்துக் கொண்டிருந்த அவனது கையில் நறுக்கென கிள்ளினாள்.

"என்னை வா போ சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது. இன்னொரு முறை வா போன்னு ஒருமையில பேசினா அப்புறம் நானும் பார்க்கற இடத்துல எல்லாம் வாடா போடான்னு ஆரம்பிப்பேன்.. லாஸ்ட் வார்னிங் இது. இன்னொரு முறை பேசும் முன்னால யோசிச்சிட்டு பேசுங்க.." என்றவள் வெடுக்கென திரும்பி நடந்து சென்று தனது இருக்கையில் அமர்ந்தாள்.

'கே.கே எருமை மாடே..' என்று கே.கேவை மனதுக்குள் கருவியவன் எழுந்து பாத்ரூம் உள்ளே சென்று கதவை சாத்தினான். கன்னம் எரிந்தது. உதடும் ரத்த கசிவோடு எரிச்சலை தந்தது. கையை உதறிக் கொண்டான். அவள் கிள்ளிய இடம் நகம் பதிந்த தடத்துடன் சிவப்பாக கன்றிப்போய் இருந்தது.
அடிப்பட்டதை எண்ணி கோபம் இருந்தாலும் கூட ஒரு புறம் மகிழ்வாக இருந்தது.

'நான்தான் ஓவரா பண்ணிட்டேன் போல.. பூவாய் இருந்தவ எரிமலையா மாறும் அளவுக்கு கோபப்படுத்திட்டேன் போல.. ஆனாலும் லிப்ஸ் டேஸ்டாதான் இருந்தது. அதையாவது ஒத்துக்கிட்டு இருந்திருக்கலாம்..' என நினைத்தவன் கண்ணாடியை பார்த்து உதட்டில் இருந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டான். கன்னத்தில் இருந்த கை தடம் அதற்குள் மறைந்து போய் விட்டிருந்தது.

"இவ சாப்பிடுறாளா இல்லையா.? நாய் வாலையும் நிமிர்த்த முடியாது.. இந்த உதவாக்கரைக்கும் பலம் வரவழைக்க முடியாது.." என்று கண்ணாடியை பார்த்து திட்டினான்.

அவனது பாக்கெட்டிலிருந்த ஃபோன் ஒலித்தது. கே.கே அழைத்திருந்தாள்.
"ஹலோ.. சொல்லு கே.கே.." என்றான்.

"நாய் வாலை நிமிர்த்தலாம்.. ஆனா உன்னை மாதிரி உதவாக்கரைக்குதான் புத்தி வரவைக்க முடியாது.." என்று எதிர்முனையில் எரிந்து விழுந்தாள் அவள்.

முகில் பாத்ரூமை சுற்றம் முற்றும் பார்த்தான். "பாத்ரூம்ல கேமரா வச்சிருக்கியா.?" என்றான் அவசரமாக.

'யூரின் போக நினைச்சி ஜிப்பை கழட்ட இருந்தேனே..' என்று அவன் நெற்றியில் அடித்துக் கொண்ட வேளையில் "பாத்ரூம்ல கேமரா வைக்க நான் என்ன சைக்கோவா.?" என்று கோபமாக கேட்டாள் கே.கே.

முகில் பெருமூச்சி விட்டுவிட்டு ஜிப்பை கழட்ட நினைக்கையில் "உன் சட்டையில் உள்ள ஒரு பட்டன்லதான் மைக் இருக்கு.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1090
LIKE
COMMENT
SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

காதலின் இழையில் 28

முகில் தனது சட்டையில் உள்ள பட்டன்களை ஆராய்ந்தான். அனைத்து பட்டன்களும் கருப்பாகதான் இருந்தது. ஆனால் நான்காவது பட்டன் அதே கருப்பில் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தது. அந்த பட்டனை தொட்டு பார்த்தான்.

"டச் பண்ணாத.. சவுண்ட் ஒரு மாதிரி கேட்குது.." என்றாள் கே‌.கே.
முகில் கோபத்தோடு கண்ணாடியை முறைத்தான். "கே.கே நீ என் பிரைவஸியை நாசம் பண்ற.." என்றான் எரிச்சலோடு.

"பிரைவசியா.? உனக்கெதுக்கு அந்த கருமம்.? பொண்டாட்டியை விட்டு பிரிஞ்சிதானே இருக்க.? அதை விட்டா உனக்குன்னு இருக்கறது உன் வோன் பிரைவசி மட்டும்தான். ஆனா நீ ஒன்னும் மன்மதன் கிடையாது.. அப்படியே இருந்தாலும் கூட நான் என் வேலையில் பக்கா கிளீன்.. ஆணழகனே நேர்ல வந்தாலும் அவன் கண்ணை தவிர வேற எங்கயும் பார்க்க மாட்டேன்.." என்றாள்.

அவள் சொன்னது கேட்டு இடம் வலமாக தலையசைத்தான் முகில்.

"இது உன்னை கண்காணிக்க வச்ச மைக் இல்ல.. உன் வீட்டுல உள்ளவங்களை கண்காணிக்க வச்சது.. இவ்வளவு நாளா ஹால் வால்ல உள்ள ஹேங்கர்ல இருந்த சட்டையை உங்க அக்கா எடுத்து துவைச்சி மடிச்சி வச்சிருக்கா.. நீயும் எடுத்து மாட்டிட்டு வந்துருக்க.." என்று விளக்கத்தை சொன்னாள் கே.கே.
"ஹேங்கர்ல இருந்த சட்டையில் மைக் செட் பண்ணதை நீ என்கிட்ட சொல்லவே இல்ல.." என்று குறை சொன்னான் அவன்.

"நீ பேச்சை மாத்துறதை முதல்ல நிறுத்து.. யாரை கேட்டு நீ யதிக்கு கிஸ் தந்த.?" என்றாள் அவள் கோபமாக.

முகில் உதட்டை கடித்தான். யதிரா தந்த அடியால் காயம்பட்ட உதடு இவன் தீண்டியதும் அதிகமாக எரிந்தது.

"ஐ லாஸ்ட் மை கன்ட்ரோல்.." சிறு குரலில் சொன்னவனுக்கு தனது அவசரத்தை நினைத்து தன் மீதே கோபம் வந்தது.

"அவ இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கா. அதிகம் அழாம இருக்கா. ஆனா நீ ஏன் அவளை கஷ்டப்படுத்துற. அவளும் மனுசிதானே.? அவளோட பீலிங்க்ஸோடு விளையாட உனக்கு என்ன அவ்வளவு ஆசை.?" என கேட்ட கே.கேவின் குரலில் வருத்தம் அதிகமாக இருந்தது.

முகில் தலையை கோதியபடி அருகே இருந்த சுவற்றில் சாய்ந்து நின்றான்.

"அவ பீலிங்க்ஸோடு விளையாடியது தப்புதான் கே.கே.. ஆனா இன்னைக்கு அவ என்னை அடிச்சபோது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்தது தெரியுமா.? அன்னைக்கு வர்சன் முத்தம் தந்தபோது இதே மாதிரி இவ அடிச்சிருக்கணும்ன்னு பேராசைப்படுறேன் நான்.. ஆனா அன்னைக்கு மிஸ் ஆயிடுச்சி.. இனியாவது என் பொண்டாட்டியால் தன் சுய மரியாதையை காப்பாத்திக்க முடியுமேன்னு நினைச்சி  இப்ப எனக்கு சந்தோசமா இருக்கு.. இதுக்காக இன்னும் நாலு அறை கூட வாங்கிக்க தயார் நான்.. இது அவ மேல இருக்கற லவ் கிடையாது. என்னோட சுயநலம்.. என் பொண்டாட்டியை எனக்கு சொந்தமானவளை இனி எவனாவது தொட்டா அந்த இடத்துல இவ கண்ணை கசக்கிக்கிட்டு நிற்காம அவனை ஒரு கை பார்ப்பான்னு நம்பிக்கை. அவ தன்மானம் முதல் காரணமா இருந்தாலும் கூட என் பொசசிவ்னெஸோட வெளிப்பாடுதான் இந்த எண்ணம்.. இதை உன்கிட்ட சொல்ல எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் கிடையாது.. தன் பொண்டாட்டி தனக்கு மட்டும் சொந்தமா, தன்னோட தீண்டலை மட்டும் அனுமதிக்கணும்ன்னுதான் எந்த ஒரு ஆணும் விரும்புவான். நான் மட்டும் விதிவிலக்கா இருக்க முடியாது.." என்றான்.

எதிர்முனையில் கே.கே பெருமூச்சி விட்டாள். "முட்டாள்.. அவ இப்ப உன்னையும் அடியோடு வெறுக்கறா.." என்று நினைவுப்படுத்தினாள்.

முகில் சிரித்தான். "அவ எங்கே வெறுக்கறா.? சகிச்சிட்டு இருக்கா.. அவ்வளவுதான். அவளுக்கு இன்னும் அறிவே வளரல. 'மூணு வருசம் முன்னாடி ஏன்டா என்னை விட்டுட்டு போன.?'ன்னு என்கிட்ட வந்து கேட்கணும் அவ. உண்மை எது பொய் எதுன்னு உணரணும் அவ. 'ஏன்டா என்னை மறுபடியும் விட்டுட்டு போன'ன்னு கேட்டு சட்டையை பிடிக்கணும்.. 'உன் மனசுல என் மேல காதல் இருக்கும்போது எதுக்குடா என்கிட்ட பொய் சொல்லி விலகி இருக்க'ன்னு கேட்கணும்.. அவளோட வாழ்க்கைக்காவும், அவளோட காதலுக்காகவும் அவளே போராடணும்.." என்று அவன் சொல்ல கே.கே கலகலவென சிரித்தாள்.

"இத்தனையும் அவளே பண்றதுக்கு நீ என்ன ***க்கு  பூமியில இருக்க.?" என்றாள் எரிச்சலோடு.

"உனக்கு ருத்ரகாளியோட குணாதிசியத்துல ஒருத்தி வேணும்ன்னா அப்படி ஒருத்தியை தேடி கட்டியிருக்கணும்.. மனுசங்க என்ன எழவை பண்ணாலும் பொறுத்து போற பூமா தேவியை போல குணமுள்ள ஒருத்தியை கட்டி அவ வாழ்க்கையை இப்படி சின்னா பின்னமாக்க கூடாது.." என்றாள்.

"ருத்ரகாளியும் பூமாதேவியும் எல்லா பொண்ணுங்க நெஞ்சிலயும்தான் இருக்காங்க.. ஆனா நீங்கதான் ஒழுங்கா யூஸ் பண்றது இல்ல.. என் பொண்டாட்டி எனக்காக போராடணும்.. என் அக்கா மறுபடியும் என் மனசை மாத்தி யதிராவை விட்டு பிரிச்சி வைக்கிற ஒரு சூழ்நிலை வந்தாலும் அங்கே அவ இருக்கற எல்லோரையும் தூசா நினைச்சி மிதிச்சிட்டு என்னை அவ கூட இழுத்துட்டு போகணும்.. காலம் முழக்க அவ தன் காதலால் என்னை கன்ட்ரோல் பண்ணனும்ன்னு ஆசைப்படுறேன்.." என்றான்.

"மிட்டாய் மேல ஆசைப்படுற குழந்தையை போல நீ இப்படி கிறுக்குதனமா ஆசைப்படுற.. இது உன் லைஃப்.. அவளோட லைஃப்.. உங்க லைப்ல குறுக்க வர நான் விரும்பல.. என் வேலை இரண்டு காட்டெருமைகளை போலிஸ்ல பிடிச்சி கொடுக்கிறது மட்டும்தான்.. நான் என் வேலையை பார்க்கறேன்.. நீ என்னவோ பண்ணு.. ஆனா யதிராக்கிட்ட சும்மா சும்மா அடி வாங்கி சாகாத.. பாவம் என் பேபி, உன்னை மாதிரி ஒரு எருமையை அடிச்சா அவளுக்குதான் கை வலிக்கும்.. பட்டனை எடுத்துடாதே பேயே.." என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டாள்.

"கிறுக்காய் இருப்பதில் பெருமை கொள்கிறான் இந்த முகில்.." என்று சொன்னவன் சட்டை பட்டனை பார்த்தான்.

"என் பிரைவஸிக்கு வேட்டு வச்சிட்டா கே.கே. இன்னும் எத்தனை இடத்துல கேமராவும், மைக்கும் இருக்கோ..?" என புலம்பியபடி வெளியே நடந்தான்.
யதிரா இன்னமும் எரிமலையாகவே இருந்தாள். முகில் முத்தம் தந்ததை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவன் சற்று முன் பேசியது அவளின் எரிமலைக்கு இன்னும் அதிகமான எரிப்பொருளை தந்துக் கொண்டிருந்தது.

அறைக்குள் வந்த முகில் அவளை நக்கல் பார்வை பார்த்தபடி சென்று தனது இருக்கையில் அமர்ந்தான்.

யதிரா அவனது முகத்தையே பார்க்க கூடாது என்று எண்ணியபடி அமர்ந்து தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

முகில் நொடிக்கொரு முறை அவளை நிமிர்ந்து பார்த்தபடியே தனது வேலையை செய்தான். அவன் இப்படி பார்க்கும் ஒவ்வொரு முறையும் யதிரா எரிச்சலானாள். முள்ளின் மீது நிற்பது போலவே இருந்தது அவனோடு ஒரே அறையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும்.

எப்போது மதிய உணவுக்கான இடைவெளி வருமென்று காத்திருந்தாள். நேரம் கடந்ததும் சட்டென அந்த அறையை விட்டு வெளியேறி விட்டாள். முகில் அவளது பரபரப்பை கண்டு மனதுக்குள் நகைத்தான்.

கேன்டினில் உணவை வாங்கியவள் சுந்தரிக்கும் வேணிக்கும் இடையே இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.

"இன்னைக்கும் நீங்க சமைக்கலையா.?" என கேட்டாள் ஓவியா. அவளது டிபன் பாக்ஸில் இருந்த உணவில் பாதியை தனது தட்டில் கொட்டிக் கொண்ட வர்சன் அவள் யாரை கேட்கிறாள் என்று நிமிர்ந்து பார்த்தான்.

"யதி பேபி.. நீ ஏன் இப்படி கம்மியா சாப்பிட்டு அரை பட்டினி இருக்க.?" என்றான்.

ஓவியா அவனது முதுகில் அடி ஒன்றை தர, யதிரா அலுப்போடு கண்களை சுழற்றினாள். "நீயும் ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ற வர்சு.? உனக்குதான் உன் ஆள் இருக்கா இல்லையா.? பிறகேன் என்னை பேபின்னு கூப்பிடுற.?" என்றாள்.

"நானும் டார்ச்சர் பண்றேனா.? அப்படின்னா இன்னும் வேற யார் உன்னை டார்ச்சர் பண்றாங்க.?" என்று கிண்டலாக கேட்டான் அவன்.

யதிரா பரிதாபத்தோடு ஓவியாவை பார்த்தாள். உதட்டை கடித்தபடி கண்களை மூடி திறந்த ஓவியா இம்முறை கொஞ்சம் பலமான அடியை வர்சனுக்கு தந்தாள்.

"அவங்களை இனி நீ டிஸ்டர்ப் பண்ணா அப்புறம் நான் உன் பல்லை தட்டிடுவேன்.." என்றாள் கோபமாக.

வர்சன் அடிப்பட்ட தன் முதுகை கஷ்டப்பட்டு வருடி விட்டுக் கொண்டான்.

"எப்படி.. நேத்து செஞ்சி கொண்டு வந்திருந்தியே அதே மாதிரி அல்வா செஞ்சி தந்து என் பல்லை உடைக்க போறியா.? மடமடக்குன்னு கடிச்சி திங்கற மாதிரி ஒரு அல்வாவை என் வாழ்நாளிலேயே நேத்தேதான் சாப்பிட்டேன்.." அவன் கேலியாக சொல்லி சிரித்த நேரத்தில் அவனது தொடையில் இறங்கியது போர்க்-ஸ்பூன் ஒன்று.

"இவ என்னை கொல்ல பார்க்கறா.." என்று கத்தினான் வர்சன். கேன்டினில் அமர்ந்திருந்த பலரும் அவனது சத்தத்தால் இவர்களது மேஜையை திரும்பி பார்த்தனர். பின்னர் அவர்களுக்குள் எதையோ கிண்டலாக பேசி சிரித்துக் கொண்டனர்‌.

"ச்சே.. இந்த ஆபிஸ் லவ்வர்ஸ் டார்ச்சர் தாங்கல.." என்று சலித்து கொண்டாள் வேணி.

"உங்களுக்கு வயசாயிடுச்சி பாட்டி.. அதனால இப்படிதான் தோணும்.." என்று வம்பிழுத்தான் வர்சன்.

"போடா பொடிப்பையா.." என்று கையை அசைத்துவிட்டு அங்கிருந்து போனாள் வேணி.

யதிராவும் உணவை முடித்துக் கொண்டு எழுந்தாள்.

முகில் ஜன்னல் வழி தெரிந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கே வந்தான் குரு. யதிராதான் சீக்கிரத்தில் வந்து விட்டாள் போல என்றெண்ணி திரும்பியவன் குருவை கண்டதும் சிறு புன்னகை புரிந்தான்.

"சௌந்தர்யா அக்கா சைட்ல இருந்து ஏதாவது கண்டுபிடிச்சியா.?" என்றான் அவன்.

"இன்னும் இல்ல.. இனிதான் வலையை விரிக்க போறேன்.." என்றவன் வந்து தனது இருக்கையில் அமர்ந்தான்.

"பாவம்டா யதி.." என்றான் குரு.

முகில் கசப்பாக சிரித்தான். "எனக்கும் பாவமாதான் இருக்கு.. ஆனா என்ன செய்ய முடியும்.? என் பொண்டாட்டி என்னை மாதிரியே முட்டாளா இருக்கறதை என்னால ஏத்துக்க முடியல.. அவ சூழ்நிலைகளை கிரகிச்சி உண்மைக்கும் பொய்க்கும் இடையில இருக்கற வித்தியாசத்தை கண்டுப்பிடிக்கணும். இப்பவும் நான் அவக்கிட்ட பொய்தான் சொல்லிட்டு இருக்கேன். சும்மா ஒரு செகண்ட் ஒருத்தி வந்து என்னை தொட்டு பேசியதும் அதை நம்பிட்டு என்னை விட்டுட்டு போயிட்டா.. நடுவுல வாழ்ந்த இரண்டு மாசம் என்ன கணக்குல வந்தது.? இவக்கிட்ட சொல்லப்பட்ட பொய்கள் நிறைய முரண்பாடுகளை கொண்டது. அதையெல்லாம் கண்டுபிடிச்சி எதிர் கேள்வி கேட்கணும்.. அப்பதான் அவ முன்னேறினான்னு நான் நம்புவேன்.. அவ அப்படி ஒரு நாளில் வந்து என்னை வெறுக்கட்டும். நான் அன்னைக்கு அவ மன்னிப்பை கேட்டு என்ன வேணாலும் செய்றேன்.. ஆனா அது வரைக்கும் அவ பாவமும் கிடையாது.. எனக்கு புண்ணியமும் கிடையாது.." என்றான்.

"போடா முட்டாள்.. நீயும்தான் ஏமாந்த.. ஆனா நீ மட்டும் பிறக்கும்போதே புத்திசாலியா பிறந்த மாதிரி பேசுற.." என்று குரு சொல்ல இவன் பெருமூச்சி விட்டான்.

"ஒவ்வொரு பேரண்ட்ஸ்ம் தனக்கு கிடைக்காத அத்தனை சுகமும் தன் பிள்ளைகளுக்கு கிடைக்கணும்ன்னு நினைப்பாங்க.. அது போலதான் இதுவும்.. என்னவள் என்னை மாதிரி யார்கிட்டயும் ஏமாற கூடாதுன்னு ஆசைப்படுறேன்.." என்று சொன்னவனுக்கு தனது ஏமாற்றத்தை நினைத்து உள்ளம் வலித்தது.

"உன்கிட்ட அப்புறம் பேசுறேன்.." என்று விட்டு அங்கிருந்து சென்றான் குரு.

சிறிது நேரம் கடந்த பிறகு அந்த அறைக்குள் வந்தாள் யதிரா. தனது இருக்கையில் அவள் அமர்ந்த நேரத்தில் அவள் முன் வந்து நின்றான் முகில்.

"அடுத்த வாரம் நான் போக போற பிசினஸ் டிரிப்ல நீங்களும் வரணும் மிஸ் யதிரா.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1106
VOTE
COMMENT
SHARE
FOLLOW


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

காதலின் இழையில் 29

யதிரா அதிர்ச்சியோடு முகிலை பார்த்தாள்.

"நான் ஏன் டிரிப்புக்கு வரணும்.?" என்றாள்.

"ஏனா நீங்க என்னோட பி‌.ஏ.. நீங்க என் கூட வந்துதான் ஆகணும்.. டிரிப் ஒரு வாரம் இருக்கலாம்.. அதனால்தான் நான் இப்பவே சொல்லிட்டேன்.." என்றவனை கோபமாக பார்த்தாள் அவள்.

"நான் வர மாட்டேன்னு சொன்னா..?" என்று கேட்டாள்.

"கொஞ்சமாவது பொறுப்புள்ள ஸ்டாப்பா நடந்துக்கங்க.. உங்களுக்கு சம்பளம் தர கம்பெனி இது.. நியாயமா மனசாட்சிக்கு நேர்மையா உழைக்க பாருங்க.. உங்களை மாதிரியே எல்லோரும் ஒத்துழைப்பு தர மறுத்தா இருக்கற எல்லா கம்பெனியையும் இழுத்துதான் மூடணும்.. அப்புறம் இன்னும் இந்தியா வல்லரசு ஆகலன்னு புலம்பிக்கிட்டுதான் இருக்கணும்.." என்றான் மூக்கு சிவக்க.

'எங்கே ஆரம்பிச்சி எங்கே முடிக்கிறாரு இவரு.?' என்று பற்களை கடித்தாள் யதிரா.

"டிரிப்ன்னா எங்கே.?" என்றவளின் முகத்தை ஆராய்ந்தான் அவன்.

"ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுன்னு சுத்த நாம என்ன ஹனிமூனா போக போறோம்.?" என அவன் கேட்க, யதிரா கடுப்போடு எழுந்து நின்றாள்.

"தேவையில்லாத வார்த்தைகளை பேசுவதை நிறுத்துறிங்களா.?" என்றாள் எரிச்சலோடு.

"பின்ன என்ன.? என்னோட எல்லா செட்யூலும் நீங்கதான் பார்த்துக்கிறிங்க.. அப்புறம் என்கிட்ட என்ன ஊர்ன்னு கேட்டா கடுப்பாகாதா.?" என்றவன் "சி டாட்ன்னு ஒரு டாக்குமெண்ட் பைல் உங்களுக்கு அனுப்பி வச்சிருக்கேன்.‌. அதுல உள்ள எல்லா வொர்க்கையும் இந்த ஒரு வாரத்துல முடிச்சிடுங்க.." என்றவன் தனது வேலையை பார்க்க சென்றான்.

"ஒரு வாரம் எப்படி இவரோடு இருக்கறது.?" என புலம்பியவள் தான் பதிவு செய்து வைத்திருக்கும் அவனது தினசரி அலுவல்களை பார்த்தாள். புதிதாக நிறுவனம் ஒன்றை வாங்கும் விசயமாக அவன் ஹைதராபாத் செல்வது புரிந்தது. பக்கத்தில்தானா என்றெண்ணி சிறிது நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
சி டாட் பைலை ஓபன் செய்தவளுக்கு நிம்மதி அத்தோடு முடிந்து விட்டது. எக்கச்சக்கமான பைல்களும், அவள் முடிக்க வேண்டிய வேலைகளும் அதில் வரிசையாக இருந்தது.

"நாலு ஆள் செய்ய வேண்டிய வேலையை என் ஒருத்தியை வச்சே வாங்கிட்டு நாடு, வல்லரசுன்னு வெட்டி சீன் போடுறார் இவர்.." என்று புலம்பினாள். இவளை நிமிர்ந்து பார்த்த முகில் சிரிப்பை அடக்கிக் கொண்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

சௌந்தர்யா தனது போனிற்கு வந்த மெஸேஜை பார்த்தாள். எழுபது லட்சம் அவளது பேங்க் அக்கவுண்டில் வரவானதாக காட்டியது அந்த செய்தி.
சௌந்தர்யாவிற்கு சந்தோசமாக இருந்தது. நேற்று வரையிலுமே தம்பியின் மீது நம்பிக்கை இல்லாமலேயே இருந்தவளுக்கு இப்போது அவன் மீது அதிக நம்பிக்கை வந்துவிட்டது. தம்பி உண்மையிலேயே மனம் மாறி யதிராவை பிரிந்து வந்ததை இப்போது புரிந்துக் கொண்டவள் உடனே தன் நண்பன் ஒருவனுக்கு ஃபோன் செய்தாள்.

"சந்த்ரு.. கேம்ப்ளிங் கிளப் ஓபன் பண்ண பணம் கிடைச்சிடுச்சி.." என்றாள்.
எதிர் முனையில் இருந்தவன் "உண்மையாவா.? ஆனா நிறைய பணம் வேணுமே, சௌந்தர்யா.." என்றான்.

"எழுபது லட்சம் இருக்கு.." என்றவளுக்கு சொல்லும்போதே பூரிப்பாக இருந்தது.

"மறுபடியும் ரிஸ்க் எடுக்கணுமா சௌந்தர்யா.? ஏற்கனவே இப்படிதான் கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாயோடு நீயும் ரூபனும் சேர்ந்து கிளப் ஆரம்பிச்சிங்க.. ஆனா ஆரம்பிச்ச மூணே மாசத்துல எல்லா பணத்தையும் தொலைச்சிட்டிங்க.. இப்ப ரூபன் வேற உனக்கு எதிரியாகிட்டான்.. நீ கிளப் ஆரம்பிச்சே அவனே உன்னை போலிஸ்ல போட்டு தந்துடுவான்.." என்று எச்சரித்தான் அவன்.

"ரூபன்கிட்ட நான் பேசிக்கிறேன்.. நீ வாடகைக்கு நல்ல வீடா பாரு.. எல்லாமே ரொம்ப ரகசியமா இருக்கணும்.. இந்த முறை நான் மல்டி மில்லியனர் ஆகதான் போறேன்.. அதை யாராலும் தடுக்க முடியாது.." என்றவள் அவனுடனான இணைப்பை துண்டித்து விட்டு ரூபனுக்கு ஃபோன் செய்தாள்.
இரண்டாவது ரிங்கில் ஃபோனை எடுத்தான் அவன்.

"பேப்.. மறுபடி கிளப் ஆரம்பிக்கலாமா.?" என்றாள் கொஞ்சலோடு.

"நோ பேப்.. இரண்டரை வருசம் முன்னாடி எக்கச்சக்கமான பணத்தை லாஸ் பண்ணிட்டோம்.. மறுபடியும் கிளப் ஏதும் வேண்டாம்.. அதுவும் இல்லாம இப்ப ரெய்ட் ஓவரா நடக்குது.. ஈஸியா போலிஸ்ல மாட்டிப்போம்.." என்றான் அவன்.

"கோழையை போல பேசாத பேப்.. நாம நினைச்சா நிறைய சம்பாதிக்க முடியும்.. உன் பயத்தால நம்ம வருங்காலத்தை நீ டீல்ல விடாதே.. நீ இப்படி தயங்கினா நம்ம குழந்தைக்கு வருங்காலமே இருக்காது.." என்றாள் அவள்.
அறைக்குள் வந்த நீலாவை கண்டு நெற்றியை தேய்த்த ரூபன் அவளை பார்த்து புன்னகைத்தான். அவள் தான் புதிதாக முயற்சித்து செய்த பூண்டு அல்வாவை அவனிடம் நீட்டினாள்.

"பூண்டு அல்வா செஞ்சிருக்கேன்ங்க.." என்றாள்.

அவன் மறுத்து தலையசைத்தான்.

"பேப்.. ஏன் பதில் பேச மாட்டேங்கிற.?" என்று எதிர்முனையில் கேட்டாள் சௌந்தர்யா.

ரூபன் பதிலை சொல்லாமல் நீலாவை பார்த்தான் "ஒரு அர்ஜென்ட் கால்.. பேசிட்டு வந்துடுறேன்.." என்றான்.

"ஒரு ஸ்பூன் சாப்பிட்டு போங்க.." என்ற நீலா ஸ்பூனில் இருந்த அல்வாவை அவன் வாயில் ஊட்டினாள்.

ஒரு வாய் அல்வாவோடு நாற்காலியை விட்டு எழுந்தான் ரூபன். அறையை விட்டு வெளியே செல்வதாக கை சைகை காட்டி விட்டு வெளியே நடந்தான் அவன்.

மாடிக்கு செல்லும் படியில் ஏறினான்.

"பேப்.. என் கூட பேச கூட உனக்கு பிடிக்கலையா.?" என்று கேட்ட சௌந்தர்யா குரலில் சிறு அழுகை கலந்திருந்தது.

மொட்டை மாடிக்கு வந்த ரூபன் தன் வாயில் இருந்த அல்வாவை கீழே துப்பினான்.

"என் வாயில் பூண்டு அல்வா இருந்தது பேப்.. என் பொண்டாட்டிக்கு வேற வேல இல்லன்னு தினம் இப்படி எதையாவது செஞ்சி என் உயிரை எடுக்கறா.. எல்லாம் என் தலைவிதி.. அத்தனையும் உன்னால வந்தது. குற்ற உணர்வு கொல்லுதுன்னு சொல்லி பிரிஞ்சி போயிட்ட. ஐ ஹேட் ஹேர்.." என்றான் எரிச்சலோடு.

"பேப்.. இப்படி பேசாதே.. அவளோட அம்மா இறந்த பிறகு மொத்த சொத்தும் அவளுக்குதான் வர போகுது.. அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்க பேப்.." என்றாள் சௌந்தர்யா.

"அட்ஜஸ்ட் பண்ணி தொலைக்கிறேன்.. ஆனா நீ இப்படி நம்ம குழந்தைன்னு பேசிட்டு இருக்காத.. உன் புருசன் காதுல விழுந்தா அவன் எதாவது சந்தேகப்படுவான்.. ஏற்கனவே அவனுக்கும் எனக்கும் கொஞ்சமும் செட் ஆகாது.." என்றவன் அவள் போன் செய்ததன் காரணம் நினைவிற்கு வந்ததும் "கிளப் ஆரம்பிக்க நம்மகிட்ட பணம் ஏதும் இல்ல சௌ.." என்றான்.

"ஐ ஹேவ்.. அதுவும் எழுபது லட்சம்.." என்று சந்தோசத்தில் கூக்குரலிட்டாள் சௌந்தர்யா.

"அது பத்தாது பேப்.. ஒரு சுத்துக்கு கூட வராது.. இரண்டரை கோடியே பத்தாம போய்தான் மொத்தமா இழந்தோம்.. மறந்துட்டியா.? அது சரி உனக்கேது எழுபது லட்சம்.?" என்றான் சந்தேகமாக.

"என் குண்டு தம்பி வருமான வரித்துறைக்கிட்ட இருந்து கணக்கு காட்டாம இருக்க இதை என் அக்கவுண்ட்க்கு மாத்தி விட்டுருக்கான்..  அவன் இப்போதைக்கு இரண்டு மூணு வருசத்துக்கு இந்த பணத்தை யூஸ் பண்ண போறது இல்லையாம்.. அது மட்டுமில்லாம இனி மாசா மாசம் இப்படி பணத்தை என் அக்கவுண்டுக்குதான் மாத்தி விட போறான்.. நாம இதை யூஸ் பண்றதுதான் புத்திசாலித்தனம்.." என்றாள் சௌந்தர்யா.

ரூபன் யோசித்தான். "நாம ஏன் என் மதர் இன் லா சாகுற வரைக்கும் வெயிட் பண்ண கூடாது.?" என்றான்.

"பேப்.. ஐ காண்ட் வெயிட்.. இப்ப நீ வந்தாலும் வரலனாலும் நான் கிளப் ஓபன் பண்ணதான் போறேன்.. நம்ம கிளப் பிரெண்ட்ஸ் எல்லோரும் நீயும் நானும் எதிரின்னு நினைச்சிட்டு இருக்காங்க.. அவங்களுக்கு நம்ம லவ்வை ப்ரூஃப் பண்ணவாவது நீ என்னோடு சேர்ந்து கிளப் ஓபன் பண்ணுவன்னு நினைச்சேன்.. உனக்குன்னு தனி லைஃப் இருந்தா இனி நான் எப்போதும் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்.." என்றவள் அழுதபடி ஃபோனை வைத்தாள்.

ரூபன் சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான். (புகைப்பிடித்தல் அதை பிடிக்கறவங்களை விட பக்கத்துல இருப்பவர்களே ரொம்ப கேடு. அது மட்டுமல்ல இவங்க இரண்டு கேரக்டர்ஸை போல அடுத்தவங்களை கெடுத்து வாழ்வதும் கேடுதான்..)

புகையை இழுத்தவன் சௌந்தர்யாவுக்கு ஃபோன் செய்தான்‌. அவள் அழுததை இவனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

"ஹலோ.. நீ ஏன் எனக்கு மறுபடியும் ஃபோன் பண்ற.? ஐ ஹேட் யூ, யூ நோ தட்.." என்றவள் இந்த பக்கம் கண்களை கசக்கினாள்.

"சாரி பேப்.. மறுபடியும் ரிஸ்க் எடுக்கணுமான்னு யோசிச்சேன்.. நாளைக்கு எல்.எம் கிளப்க்கு வா. நேர்ல பேசிக்கலாம்.." என்றவன் ஃபோன் அழைப்பை துண்டித்து கொண்டு பயன்படுத்தி முடித்த சிகரெட்டை எறிந்துவிட்டு கீழே நடந்தான்.

"அல்வா எப்படி இருந்ததுங்க.?" முக மலர்ச்சியோடு கேட்டாள் நீலா.
"செம ஸ்வீட்ம்மா.." என்றவன் அவளது கன்னத்தை தட்டி விட்டு நடந்தான். அவனது பாராட்டில் பூரித்து போன நீலா தனது ஒரே அரண்மனையான சமையற்கட்டிற்கு சென்றாள்.

தனது வேலையில் மூழ்கிப்போயிருந்த இருந்த முகில் தனது ஃபோன் ஒலிக்கவும் எடுத்து பார்த்தான். கே.கே அழைத்திருந்தாள்.

இருக்கையிலிருந்து எழுந்தவன் ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான்.

யதிரா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தனது பணியில் மூழ்கினாள். வேலை செய்வது கூட அவளுக்கு கடினமாக இருக்கவில்லை. இவ்வளவு வேலை வரிசையில் காத்திருக்கிறது என்ற எண்ணம்தான் அவளின் மனதை வாட்டியது.

தனது அறையை விட்டு வெளியே வந்ததும் ஃபோனை காதில் வைத்தான் முகில். "சொல்லு கே.கே.. நான் உன் பிரெண்டை டிரிப்க்கு கூட்டி போறது நியாயம் இல்லன்னு சொல்ல போறியா.?" என்றான்.

"அது இல்ல.. உனக்கு நான் இப்ப ஒரு ஆடியோ அனுப்பி வைக்கிறேன்.. கேட்டு பாரு.. எந்தவிதமான எமோஷனல் மோடுக்கும் போகாதே.. இது நமக்கு கிடைச்ச சாம்பிள் மட்டும்தான்.." என்றவள் அழைப்பை துண்டித்துக் கொண்டாள். கே.கேவின் வர்ணனையை புரிந்துக் கொள்ள முடியாமல் நின்றிருந்த முகிலின் போனுக்கு வந்து சேர்ந்தது ஒரு ஆடியோ ஃபைல்.

சௌந்தர்யா அவளது நண்பனோடும், ரூபனோடும் பேசியதை கேட்டவனுக்கு ஒவ்வொரு வார்த்தையை கேட்கும்போதும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆடியோவை கேட்டு முடித்ததும் அவசரமாக கே.கேவிற்கு ஃபோன் செய்தான்.
"உன் அக்கா ஃபோனை ஹேக் பண்ணதுல கிடைச்ச முதல் உருப்படியான விசயம் இதுதான்.." என்று கசந்த குரலில் சொன்னாள் கே.கே.

"கே.கே.. இவங்க செய்றது அத்தனையும் தப்பு.. அவன் பணத்துக்காக இரண்டாவது கல்யாணம் பண்ணியிருக்கான்.. இவ இரண்டாவது புருசனோடு வாழ்ந்தபடியே அவனுக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கா.. இவனை மாதிரி ஆளை மீட் பண்ணதுக்கும், இவளை போல ஒருத்தியோடு பிறந்ததுக்கும் நான்தான் அவமானமா நினைக்கணும் போல.." என்றான் ஆத்திரத்தோடு.

"புருசனுக்கு துரோகம் செய்றதும், பணத்துக்காக பொண்டாட்டி கட்டிக்கறதும் சிலருக்கு பேஷனாவே மாறிட்டுச்சி.. அது அவங்க உரிமை.. அவங்களை பத்தி விமர்சனம் செய்ய நமக்கு உரிமை கிடையாது.. நாம நம்ம வேலையை பார்க்கலாம்.. என் ப்ளான் நல்லா வொர்க் அவுட் ஆகுது.. நீ பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணதும் உன் அக்காவோட சுயரூபம் வெளியே வர ஆரம்பிச்சிடுச்சி.. அவங்க இரண்டு பேரையும் கொலை கேஸ்ல உள்ளே அனுப்பும் முன்னாடி கேம்ப்ளிங் க்ளப் நடத்துறதுக்காக உள்ளே அனுப்பிடலாம்.. அவங்க இரண்டு பேரும் மனுசங்களோடு மனுசங்களா வெளியே நடமாடுவதை பார்க்கும்போது ரொம்ப கடுப்பா இருக்கு எனக்கு.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1085
VOTE
COMMENT
SHARE
FOLLOW


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

காதலின் இழையில் 30

கே‌.கேவோடு பேசி விட்டு தனது அறைக்குள் வந்தான் முகில். இதுவரை இல்லாத ஒரு உணர்வொன்றை அவனது முகத்தில் கண்டாள் யதிரா. தனது நாற்காலியில் சென்று அமர்ந்தான் அவன். 

 

சோகமும், அடக்க முடியாத கோபமும், வேதனையும், ஆத்திரமும் அவன் முகத்தில் ஒருசேர இருந்தது. 

 

'சௌந்தர்யா.. நீ விளையாட எங்க வாழ்க்கைதான் கிடைச்சதா.? கூட பிறந்தவன் வாழ்க்கையை பத்தி ஒரு செகண்ட் கூட யோசிக்க தோணலையா உனக்கு.? கட்டிய கணவனுக்கும் துரோகம் செய்ற.. கூட பிறந்தவனுக்கும் துரோகம் செய்ற.. இதுதானா நீ.? உன்னோட மைனஸ்  எதுவோ.. உன்னை அடிமையாக்கி வச்சிருக்கும் விசயம் எதுவோ.. ஆனா நீ ஏன் என் லைப்பை நாசம் செஞ்ச.? நான் எவ்வளவு கெட்டவன்னு உனக்கு தெரியல சௌந்தர்யா.. உன் கூட பிறந்தவன் எனக்கும் உன்னை போலவே மூளை வேலை செய்யும்ன்னு உனக்கு தெரியல போல.. நான் எப்பவும் அதே அப்பாவியா இருப்பேன்னு நினைச்சிட்ட நீ.. அப்பாவியா இருந்ததுக்கான தண்டனையை நான் அனுபவிச்சிட்டேன். ஆனா மோசமா செயல்பட்டதுக்கான தண்டனையை நீ அனுபவிக்க வேண்டுமா.?' என்று மனதுக்குள் கருவியவன் எதேச்சையாக பார்த்தபோது யதிரா அவனை கண்கொட்டாமல் பார்ப்பதை கண்டான். அவள் இவனது பார்வையை கண்டதும் சட்டென தலையை குனிந்துக் கொண்டாள்.

 

'யதிம்மா.. என் வாழ்க்கையே.! என் நேசமே! என் மனசுல அடிக்கற புயல் என்னன்னு உனக்கெப்படி சொல்வேன்‌.? போலி முகமூடி போட்டுட்டிருக்கும் இரண்டு பேர்தான் இதுவரைக்கும் நம்ம வாழ்க்கையை அரசாண்டிருக்காங்க.. அவங்க ஆட்சியில நீயும் நானும் கையாட்டி பொம்மைகள்.. அவங்க தங்களோட இஷ்டப்படி நம்ம வாழ்க்கையை சிதைச்சிட்டாங்க. இது உனக்கு தெரிய வரும்போது எப்படி இந்த துரோகத்தை நீ தாங்க போறன்னு தெரியல.. ஆனா அந்த துரோகத்தை தாங்கற அளவுக்காவது உன் மனசு கல்லா மாறட்டும் கண்ணம்மா..' அவளின் அலைபாயும் விழிகளை பார்த்தபடி தன் மனதிற்குள் சொன்னான் முகில்.

 

யதிராவின் கூந்தலின் பின்னல் காடுகளில் இருந்து விடுதலை பெற்று காற்றின் இசையோடு அவளின் கவிழ்ந்த முகத்தில் கவிப் பாடிக் கொண்டிருந்தன கேசங்கள். முன் ஓரத்து பற்களில் கடிபட்டு இன்னும் அதிகமாய் நிறத்தை சிவக்க வைத்துக் கொண்டிருந்தது அவளது அதரங்கள். அவளை அப்படியே பார்த்திருக்க சொன்னது அவனது இதயம்.

 

சௌந்தர்யா சொன்னது பற்றி யோசித்தான் ரூபன். சூதாட்ட விடுதி ஒன்றை திறப்பது அவனது ஆசையும் கூட. திறக்க இருக்கும் சூதாட்ட விடுதியை பற்றிய கனவும் கற்பனையும் அவனது மூளைக்கு போதையை தந்தது. சூதாட்டத்தை பற்றி நினைத்து பெருங்கனவு கண்டான். நண்பன் ஒருவனோடு ஆலோசித்து பார்க்கலாம் என நினைத்தவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பினான்.

 

ரூபன் அங்கிருந்து சென்ற பத்தாவது நிமிடத்தில் அவனின் வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தினாள் கே.கே. வாயிலிருந்த சூயிங்கத்தை மென்றவள் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது இருந்த தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். 

 

வீட்டின் காலிங்பெல்லை அடித்தான். முழுதாக ஒரு நிமிடம் முடிந்த வேளையில் கதவை திறந்தாள் நீலா.

 

"யார் நீங்க.?" என்றாள். 

 

"நான் யதிரா பிரெண்ட்.. அவளை பார்க்க வந்தேன்.." என்றவள் காலில் இருந்த ஷூவை கழட்ட மனமில்லாமல் நீலாவை தள்ளி நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

 

"யதிரா இங்கே இல்லையே.. நான் இதுக்கும் முன்னாடி உங்களை பார்த்ததே இல்லையே.. நீங்களும் யதிராவும் எப்படி பிரெண்ட்ஸ் ஆனிங்க.?" சந்தேகமாக கேட்ட நீலாவை வியப்போடு பார்த்தாள் கே.கே.

 

"மசாலா கொஞ்சம் வேலை செய்யுது போல.." என முனகியவள் "நானும் அவளும் காலேஜ்மேட்ஸ்.. அவளை கடைசியா பார்த்து ஒன்னரை வருசமாச்சி.! எங்கே அவ.?" என கேட்டாள். வீட்டை சுற்றிலும் நோட்டம் விட்டாள். 

 

"எங்கே போனா இவ.?" என கேட்டுக்கொண்டே சோஃபாவில் அமர்ந்தவளின் முன்னால் வந்து நின்றாள் நீலா.

 

"யதிரா இப்ப வீட்டுல இல்ல.." என நீலா சொல்லவும் சடக்கென எழுந்து நின்றாள் கே.கே. அவள் திடீரென எழுந்ததில் நீலா சற்று பயந்து விட்டாள்.

 

"எங்கே போனா அவ.?" என்று மூக்கு சிவக்க சிறு கோபத்தோடு கேட்டாள் கே.கே.

 

கே.கேவின் திடீர் திடீர் செய்கை நீலாவுக்கு பயத்தைதான் தந்தது. தனது பதற்றத்தை மறைத்தபடி ஓரடி பின்னால் தள்ளி நின்றாள் அவள்.

 

"அவ அவளோட புருசனோடு கிளம்பி போயிட்டா.." தயக்கமான குரலோடு நீலா சொல்ல கே.கே மீண்டும் பொத்தென சோபாவில் விழுந்தாள். கே.கேவை பார்க்க பார்க்க நீலாவுக்கு விசித்திரமாகவே இருந்தது.

 

"இவளை பார்க்கணும்ன்னு கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் டிராவல் பண்ணி வந்தா இவ அதுக்குள்ள எங்கயோ போயிட்டா.." என்று தன் நெற்றியை பிடித்தபடி சலித்துக் கொண்டவள் "வீட்டுக்கு வர விருந்தாளிக்கு குடிக்க டீ காபி தர பழக்கம் இல்லையா..?" என்றாள் நீலாவை பார்த்து.

 

நீலா நெற்றியில் அடித்தபடி சமையலறையை நோக்கி ஓடினாள். யோசனையோடு நின்றவள் தனது மாமியார் இருந்த அறையை எட்டி பார்த்தாள். அவளின் மாமியார் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அறைக்குள் நுழைந்தவள் மாமியார் நெற்றியில் இருந்த வியர்வையை பார்த்துவிட்டு ஏசியை இயக்கி விட்டு வெளியே நடந்தாள். "பாவம் அத்தை.." என்று வருத்தப்பட்டாள்.

 

நீலா ஹாலை விட்டு சென்றதும் எழுந்து நின்ற கே.கே தனது பேக்கை திறந்தாள். அதில் இருந்த பொருட்களை எடுத்து சோபாவின் மீது வைத்தாள். குட்டி குட்டியாக இருந்த மைக்குகளை ஹாலில் இருந்த பொருட்களின் மறைவில் மறைத்து வைத்தாள். பட்டன் கேமராக்களை கையில் எடுத்தவள் யோசனையோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். டிவியின் ஓரத்தில் ஒன்றை ஒட்டி வைத்தாள். 

 

"இப்படி திருட்டு தனமா உங்களை வாட்ச் பண்றது தப்புன்னு தெரியும்.. ஆனா இரண்டு குற்றவாளிகளை ஜெயிலுக்குள்ள அனுப்ப வேண்டிய வேலை இருக்கு. அதனாலதான் இப்படி பண்றேன்.. கில்டி பீலிங்கை விட ஏமாத்துக்காரங்க மேல இருக்கற கோபம்தான் அதிகமா இருக்கு.." என்று முனகியவள் மற்றொரு கேமராவை வீட்டு கதவின் மீது ஒட்டினாள்.

 

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

 

Word count 575

 

VOTE

 

COMMENT

 

SHARE

 

FOLLOW

 

சின்ன யூடிக்கு சாரி மக்களே.. கொஞ்சம் அதிகமான வேலை இருந்தது நேத்து. இருந்த கொஞ்ச டைம்ல இவ்வளவுதான் எழுத முடிஞ்சது. 


ReplyQuote
NIVETHA
(@velavaa)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 138
 

its ok sis 😊 nice epi


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

காதலின் இழையில் 31

நீலா காப்பியோடு திரும்பி வந்தாள்.  அவள் தந்த காப்பியை வாங்கி பருகினாள் கே.கே.

 

நீலாவின் முகத்தை பார்க்கும் போது கே.கேவிற்கு ரூபன் மீது கோபம் கோபமாக வந்தது. அப்பாவி தனத்தையே இயல்பாய் கொண்டிருக்கும் இவளுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய அவனுக்கு எப்படி மனம் வந்தது என யோசித்தாள். 'அவனுக்கு மனசாட்சிதான் சுத்தமாக இல்லையே' என்று அதன்பிறகே புரிந்துக் கொண்டாள்.

 

"இவ்வளவு தூரம் வந்ததுக்கு அவளோட ஃபோன் நம்பராவது கொடுங்க.." என்று காப்பியை குடித்து முடித்துவிட்டு கேட்டாள் கே.கே.

 

நீலா ஓடிச்சென்று தனது ஃபோனை எடுத்து வந்தாள். யதிராவின் ஃபோன் நம்பரை சொன்னாள். கே.கே அவள் சொன்ன நம்பரை தன் போனில் பதிந்துக் கொண்டாள்.

 

"தேங்க்ஸ்.." என்றபடி எழுந்தவள் தனது பேக்கை கையில் எடுத்தாள்.

 

"இருங்க.. சாப்பிட்டு போவிங்க.." என்றாள் நீலா.

 

அவளை பார்த்து புன்னகைத்தாள் கே.கே. "பரவால்லைங்க.. உங்க காப்பியே போதும்.. நல்ல டேஸ்டா இருக்கு.." என்று பாராட்டி விட்டு வெளியே நடந்தாள். 

 

மாலையில் வீடு வந்த முகிலின் முன் வந்து நின்றாள் சுபா. "உங்க அக்கா ஒரு கேம்ப்ளர்.. இதை நீங்க நம்பணும்ன்னுதான் இதை உங்க நம்பருக்கு அனுப்பி வைக்கிறேன்.." என்றவள் முகிலின் நம்பருக்கு சில போட்டோக்களை அனுப்பி வைத்தாள். 

 

முகில் தன் ஃபோனை கையில் கூட எடுக்கவில்லை. ஒய்யாரமாக நின்றபடி அவளை நக்கலாக பார்த்தான். "என் அக்காவை கெட்டவன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்.? இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சதுன்னா நீ இந்த வீட்டுல இருந்து துரத்தியடிக்கபடுவ.. தெரியும்தானே.?" என்றான் புருவம் நெரித்து. அவனது பார்வைக்கும் அவனது கேள்விக்கும் அவள் சிறிதும் பயப்படவில்லை.

 

"யாராலும் என்னை இந்த வீட்டிலிருந்து வெளியே அனுப்ப முடியாது.. உங்களுக்கு புத்தி வரணும்ன்னுதான் நான் இதை உங்க போனுக்கு அனுப்பி வச்சேன்.. சும்மா உங்க அக்காவுக்கே எல்லா காசையும் செலவு பண்ணிட்டு இருக்காதிங்க.. உங்களை எப்படி கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு எனக்கு தெரியும்.. கல்யாணம் நடக்கும் முன்னால் உங்க பிஸ்னெஸை பெரிசாக்கும் வழியை பாருங்க.. நாளைக்கு உங்க அக்கா வந்து நம்ம குடும்பத்தை ரன் பண்ண போறதில்ல.." என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள். 

 

"உன்னையெல்லாம் எவனாவது மெண்டல் கேஸ்தான் கல்யாணம் பண்ணுவான்.. மேரேஜ்க்கு முன்னாடியே இத்தனை ரூல்ஸ் போடுறவ கல்யாணத்துக்கு அப்புறம் பணத்துக்காக என்னை அடமானம் வைக்கவும் தயங்க மாட்ட.. புருசனை பணம் சம்பாதிச்சி மட்டுமே  தர மிஷினா நினைக்கற உனக்கெல்லாம் எவன் புருசனா வந்தாலும் அது அவனோட கெட்ட காலம்.." என்று முனகியவன் அவள் அனுப்பி வைத்தது என்னவென்று பார்த்தான்.

 

சௌந்தர்யா தனது நண்பர்களோடு அனுப்பி கொண்ட மெஸேஜ் சிலவற்றை போட்டோ எடுத்து வைத்து அதைதான் இவனுக்கு அனுப்பி இருக்கிறாள் சுபா. 'இதையெல்லாம் கே.கேவே ஈஸியா சேகரிப்பாளே..' என்று நினைத்தவன் "அக்கா.." என்று குரல் கொடுத்தான்.

 

"ஏன்டா..?" என்றபடி படியேறி வந்தாள் அவள். இவனது அறையின் கதவை திறந்து உள்ளே வந்தவள் "எதுக்குடா கூப்பிட்ட.?" என்றாள்.

 

"இந்த சுபா பொண்ணை ஏன் வீட்டுல வச்சிருக்க.. ரொம்ப நியூசென்ஸா இருக்கா.." என்றான் எரிச்சல் குரலில்.

 

"சின்ன பொண்ணுடா அவ.. அவளை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. கொஞ்ச நாளுல அவளே எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு அதுகேத்த மாதிரி நடந்துப்பா.. இன்னும் கொஞ்ச நாளுல அவளுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு இருக்கேன் நான்.. பொருத்தம் கூட பத்தும் பொருந்தி போவுது.. உங்க ஜாதகம் பொருந்தியது போல வேற ஏதும் பொருந்தியது இல்லன்னு நான் பார்த்த எல்லா ஜோசியக்காரங்களும் சொல்றாங்க.." என்றாள்.

 

முகிலுக்கு ருத்ர தாண்டவம் ஆட வேண்டும் போல இருந்தது. சிரமப்பட்டு தன் முகத்தில் கோபத்தை கொண்டு வராமல் இருந்தான்.

 

"அவ ஏதோ சரி இல்லக்கா.. உன்னை பத்தியே தப்பா சொல்றா.." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் சௌந்தர்யா.

 

"நீ கேம் விளையாடுற ஆள்ன்னு உளருறா.. உன் அக்கவுண்ட்ல பணத்தை போட்டு வைக்க கூடாதுன்னு மிரட்டலா சொல்றா.. உன்னை பத்தி அவ தப்பு தப்பாவே சொல்றாக்கா.." என்றவனை நம்பாமல் பார்த்தாள் அவள்.

 

அவள் கேள்வியை கேட்கும் முன் அவனே தன் ஃபோனை அவளிடம் காட்டினான். "இங்கே பாரு.. அவ சொன்னதை நான் நம்பலன்னு அவளே எனக்கு இந்த மெஸேஜை அனுப்பி வச்சா.." என்றான்.

 

அவனது ஃபோனை படக்கென பிடுங்கி பார்த்தாள் சௌந்தர்யா. அவன் சொன்னது அத்தனையும் உண்மை என்பது போல ஆதாரமாக இருந்தது அந்த செய்தி. ஆத்திரத்தோடு போனை அவனிடம் தந்துவிட்டு சுபாவை தேடி போனாள் அவள்.

 

"சுபா.." சௌந்தர்யாவின் கத்தலில் தனது ஃபோனை மேஜை மேல் வைத்துவிட்டு எழுந்து நின்றாள் அவள்.

 

"என்ன அண்ணி.?" என்றாள். கேள்வி கேட்டவளின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை தந்தாள் சௌந்தர்யா.

 

"என்னை பத்தி என் தம்பிக்கிட்ட என்னடி சொன்ன நீ.?" பற்களை அரைத்தபடி கேட்டாள்.

 

அவள் அறைந்ததின் காரணம் இப்போது சுபாவுக்கு புரிந்து போனது. எரியும் கன்னத்தை ஒரு கையால் பற்றியவள் மறுகையால் சௌந்தர்யாவிற்கு அறை ஒன்றை தந்தாள்.

 

சௌந்தர்யா அறைப்பட்ட தன் கன்னத்தை பிடித்தபடி அதிர்ச்சியோடு அவளை பார்த்தாள். 

 

"என்னை நீ யாருன்னு நினைச்ச.? என்னை அறையற அளவுக்கு நீ என்ன அவ்வளவு யோக்கியமா.? நீ ஒரு கேம்ப்ளர்ன்னு உன் தம்பிக்கிட்ட நான் சொன்னதையே உன்னால பொறுத்துக்க முடியலையோ.. உன்னோட மொத்த வண்டவாளத்தையும் நான் அவன்கிட்ட சொன்னா உன் கதி என்ன ஆகும் தெரியுமா.?" என்று கேட்டவளின் குரலில் நக்கல் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. அதை கண்டு சௌந்தர்யாவுக்கு ஆத்திரம்தான் அதிகமானது.

 

"நீ செஞ்ச எல்லாத்தையும் நான் அவன்கிட்ட சொன்னா அவனே உன் மேல கேஸ் தந்து உன்னை ஜெயில்ல போட்டுடுவான்.. தெரியுமில்ல.? உனக்கு இப்ப இருக்கற ஒரே ஆப்சன் அவன் உன் அக்கவுண்டுக்கு போடுற பணத்தையெல்லாம் அப்படியே என் அக்கவுண்டுக்கு மாத்தி விடுறதுதான்.. இல்லன்னா நீ ஜெயில்ல.. அவனோட பணம் மொத்தமும் என் கையில.. இதுதான் நடக்கும்.." என்று அவள் சொல்ல கே.கே ஷேர் செய்திருந்த வீடியோ லைவ்வை பார்த்துக் கொண்டிருந்த முகில் திரையில் இருந்த தன் அக்காவையும் சுபாவையும் ஆச்சரியத்தோடு பார்த்தான்.

 

"இதுக்கு இரண்டும் ஒன்னுக்கொன்னு சலச்சது இல்ல போல.." என்று கிண்டலடித்தாள் கே.கே. 

 

தனது காதில் இருந்த இயர்போனை அட்ஜஸ்ட் செய்துக் கொண்ட முகில் "இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கிட்டு சாகட்டும்.." என்றான் வெறுப்பாக.

 

"இல்ல முகி.. இதுல வேற ஏதோ இருக்கு.. சுபா இந்த அளவுக்கு தைரியமா மிரட்டுறான்னா அவக்கிட்ட வேற ஏதோ தடயம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.." என்றாள் கே.கே.

 

முகிலும் அதை யோசித்து பார்த்தான். "யதி அப்பா இறந்ததுக்கான ஆதாரம் ஏதாவது இவக்கிட்ட இருக்குமோ.?" என்றான் சந்தேகமாக.

 

"எனக்கும் நிச்சயமா தெரியல.. ஆனா ஏதோ இருக்குன்னு தெரியுது.. அதை வெளிக்கொண்டு வருவது இப்ப உன் கையில்தான் இருக்கு.. நீ பாசமா பேசுவியோ இல்ல மிரட்டலா பேசுவியோ ஆனா அவ வச்சிருக்கும் ஆதாரம் நமக்கு கிடைச்சே ஆகணும்.. நாட்கள் தள்ளி தள்ளி போக இதுல இறங்கி இருக்கற நமக்குதான் டேஞ்சர் வந்து சேரும். அதனால இதை சீக்கிரமா முடிக்கிற வழியை பாரு.." என்றாள் அவள்.

 

"என்னால முடிஞ்ச எல்லா முயற்சியையும் செய்றேன் கே.கே.." என்றவன் திரையை கவனித்தான்.

 

"மிரட்டுறியா சுபா.? உன்னை நம்பி வீட்டுக்குள்ள சேர்த்ததுக்கு நீ காட்டுற நன்றிக்கடன் இதுதானா.?" வருத்த குரலில் கேட்ட சௌந்தர்யாவின் நெஞ்செல்லாம் விஷம் என்பதை சுபாவும் புரிந்தே வைத்திருந்தாள். 

 

"உன் நடிப்புக்கு நான் மயங்க மாட்டேன்.. என் அக்காவுக்கு நன்றிக்கடன் செலுத்ததான் நீ என்னை உன் வீட்டுக்கு கூட்டி வந்திருக்க.. அவ மட்டும் தன் வாயை திறந்தான்னா உன் தம்பி உன்னை என்ன செய்வான்னு தெரியுமில்ல.?" என அவள் உதடு சுழித்து கேட்க சௌந்தர்யாவின் கண்கள் கோபத்தில் சிவந்தது.

 

"என்னையே மிரட்டற இல்ல..? உன்னை என் கூட பிறந்தவளா பார்த்ததுக்கு எனக்கு நல்ல பரிசு கிடைச்சிடுச்சி.." என்று சொல்லி தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

 

சுபா சிரித்தாள். "நல்லாதான் நடிக்கற.. நீ உன் கூட பிறந்தவனுக்கே ஒன்னுக்கு இரண்டு முறை துரோகம் பண்ணவ.. நான் எல்லாம் உன் லிஸ்ட்ல எந்த இடத்துல இருப்பேன்னு எனக்கே தெரியும்.." என்றவள் கட்டிலில் அமர்ந்தாள்.

 

"உன் பேச்சுக்கும் அழுகைக்கும் மயங்கற ஆள் நான் இல்ல.. நீ இங்கே உருட்டுறதை விட்டுட்டு போய் உன் தம்பிக்கும் எனக்கும் நடுவுல கனெக்சனை தர வழியை பாரு.." என்று விட்டு தனது ஃபோனை நோண்ட ஆரம்பித்து விட்டாள் சுபா.

 

சௌந்தர்யா அவளை ஆத்திரத்தோடு பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள். தனது ஃபோனை எடுத்துக் கொண்டு மாடிக்கு கிளம்பினாள். ரூபனுக்கு ஃபோன் செய்தாள்.

 

"பேப்.. நான் ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.." என்றாள் அழுகை குரலில்.

 

"என்ன ஆச்சி பேபி.?" அவன் பதட்டமாக கேட்டான்.

 

"முகி.. உன் அக்கா ஃபோன்ல இருந்து இப்ப கால் போயிட்டு இருக்கு.. இந்த லைனை கட் பண்ணு.. நான் சீக்கிரம் அதை கனெக்ட் பண்றேன்.." என்று முகிலிடம் சொன்ன கே.கே இணைப்பை மாற்றினாள். சௌந்தர்யா ஃபோன் அழைப்பை டிரேஸ் செய்தாள். ஆனால் அவள் சௌந்தர்யா போனை ஒட்டுக் கேட்கும் முன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

 

"இந்த கால் வேஸ்டா போச்சி.." என சலித்துக் கொண்டாள். 

 

"விடு கே.கே.. இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு மாட்ட போறா.." என சொல்லிவிட்டு போனை வைத்த முகில் அப்போது அறிந்திருக்க மாட்டான் சௌந்தர்யாவின் அடுத்த திட்டம் எவ்வளவு கொடூரமானது என்று.

 

"சரி.. நான் அப்புறம் பேசுறேன் முகி.. என் கேர்ள் பிரெண்ட்க்கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ற நேரம் வந்துடுச்சி.." என்றாள் கே.கே.

 

"அவ என் கேர்ள் பிரெண்ட்.." என முகில் சொல்ல சொல்லவே அந்த இணைப்பை துண்டித்துக் கொண்டாள் கே.கே.

 

சிந்தனையோடு சமையலறையில் நின்றுக் கொண்டிருந்த யதிராவின் பின்னால் வந்து நின்று அவளை அணைத்துக் கொண்டாள் கே.கே. 

 

"என்ன பேபி யோசனை.?" என்றாள் அவளது கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து தேய்த்தபடி.

 

"நான் ஹைதராபாத் போகணும் கே.கே.. அதுவும் ஒரு வாரம்.. இதை விட முக்கியமா இந்த ஒரு வாரமும் நான் என் ஹஸ்பண்டோடு ஒன்னா இருக்கணும்.." என்றாள் கவலையோடு.

 

கே.கே அவளை சோகத்தோடு பார்த்தாள். "அவன் உன் ஹஸ்பண்ட் இல்ல.. எக்ஸ் ஹஸ்பண்ட்.." என்று நினைவுப்படுத்தினாள்.

 

"ஏதோ ஒன்னு போ.. நான் என்ன பண்றதுன்னு கவலையில இருக்கேன். இந்த டிரிப் கேன்சல் ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கும்.." என்றாள் வருத்தமாக.

 

ஆனால் அவளும் அப்போது நினைக்கவில்லை அந்த டிரிப் கேன்சல் ஆக போகிறது என்று. 

 

மறுநாள் மதிய வேளையில் சுபா கார் ஆக்ஸிடென்டில் இறந்து போனாள் என்ற செய்தி வருமென அப்போது கே.கேவும் கூட யூகிக்கவில்லை.

 

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

 

Word count 1072

 

VOTE

 

COMMENT

 

SHARE

 

FOLLOW

 

 


ReplyQuote
Subha Mathi
(@subhamathi)
Estimable Member Registered
Joined: 2 months ago
Posts: 107
 

Acho...sis ena panraga indha rubhan & soundharya....🤔🤔subha va konnathu... soundarya va...sis🧐🧐 really epo onnu seruvanga sis mugilanum yadhiravum😘😘😘...semma sis😍😍


ReplyQuote
Page 6 / 7
Share: