Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

காதல் சர்வாதிகாரி  

Page 4 / 5
  RSS

Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 153
21/11/2020 5:57 am  

Eniyanum, sandhiyavum manam vittu pesanum.. Emotions a super a capture panreinenga


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
22/11/2020 5:23 am  

@vaniprabakaran

நன்றிகள் சிஸ்


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
22/11/2020 5:30 am  

சர்வாதிகாரம் 26

 

இனியன் தேவ சுந்தரியின் வீட்டிற்கு வந்த போது நேற்றை விடவும் கூட்டம் அதிகமாக இருந்தது. வாசற்படியிலேயே அமர்ந்திருந்த மேகலை இவனை கண்டதும் தன் கண்களை துடைத்துக் கொண்டு இவனருகே ஓடி வந்தாள்.

"நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு தேங்க்ஸ் ஸார்.." என்றவள் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

"என்னன்னு சொல்லும்மா.." என்றான் இனியன் தயக்கமாக.

தன் இடுப்பில் சொருகியிருந்த செல்போனை எடுத்தவள் அதிலிருந்த மெஸேஜை அவன் பார்க்கும்படி நீட்டினாள்.

அவன் அதிலிருந்த மெஸேஜை படித்தான். "அடுத்த குறி நீதான். தேவ சுந்தரியை விடவும் அதிகமா துடிதுடிச்சி நீ சாக போற.." அதிலிருந்ததை படித்தவன் அதிர்ச்சியோடு மேகலையை பார்த்தான். இது போன்ற மிரட்டல் செய்திகள் இன்னும் சில அதில் இருந்தது.

"இது என் சித்தி நம்பர்தான் ஸார்.. கொலைக்காரன் அவங்க ஃபோனை எடுத்துட்டு போனதை கூட நான் கவனிக்கல.. ஆனா நேத்து நைட் இப்படி ஒரு மெஸேஜ் வரவும் நான் ரொம்ப பயந்துட்டேன் ஸார்.. என்னை எப்படியாவது காப்பாத்துங்க ஸார்.." என்றாள்.

"நம்பர் மூலமா ஃபோன் இருக்கற இடம் கண்டுபிடிச்சி அவனையும் அரெஸ்ட் பண்ணிடுவோம்.. நீங்க எதுக்கும் பயப்படாதிங்க.. எப்படி கொலை நடந்ததுன்னு கொஞ்சம் நீங்க விவரமா சொல்றிங்களா.?" என்றவன் அங்கேயிருந்த சிமெண்ட் பெஞ்சின் மீது அமர்ந்தான்.

"நேத்தே ஒரு போலிஸ்க்கிட்ட விவரமா சொல்லிட்டேனே ஸார்.?" கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் அவள்.

"ஆனா இந்த கேஸ்க்கு இப்ப நான்தான் இன்சார்ஜ்.. நீங்க சொன்ன தகவல் எனக்கு போதுமானதா இல்ல.. இப்ப நான் கேட்கற கேள்விக்கு யோசனை பண்ணி கரெக்டா பதில் சொல்லுங்க.." என்றான்.

மேகலை அவனை தயக்கமாக பார்த்துக் கொண்டே அவனருகே அமர்ந்தாள்.

"கொலை நடந்தபோது நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க.?"

அவள் உதட்டை கடித்தபடி தரையை பார்த்தாள். "நேத்து பூசாரி வரப்போறதா சித்தி சொன்னாங்க.. பூஜை பொருட்களை வாங்கி வந்து வைக்க சொன்னாங்க.. நானும் எல்லா பொருளையும் வாங்கி வந்து வச்சிட்டேன்.. ஆனா அதுக்கப்புறம் எனக்கு பயங்கர தலைவலி ஸார்.. அதனால என் ரூம்ல ரெஸ்ட் எடுக்க போயிட்டேன்.. அப்படியே தூங்கியும் போயிட்டேன். திடீர்னு எங்க சித்தி கத்துற சத்தம் கேட்டுதான் எழுந்து வெளியே ஓடி வந்தேன். ஹால்ல எங்க சித்தி பிணமா இருந்தாங்க.. நான் ஹாலுக்கு வந்த அதே நேரத்துல பூசாரி வீட்டை விட்டு ஓடிட்டான்.." என்றவள் பொங்கி வரும் அழுகையோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"அவனை சீக்கிரம் கண்டுபிடிச்சி ஜெயில்ல போடுங்க ஸார்.." என்றாள்.

"இந்த வீட்டுல வேற யாரும் அந்த பூசாரியை பார்க்கலையா.?" என இனியன் கேட்ட அவள் விசித்திரமாக அவனை பார்த்தாள்.

"இந்த வீட்டுல வேற யாரும் இல்ல ஸார்.. நானும் எங்க சித்தியும் மட்டும்தான் குடி இருந்தோம்.." அவள் சொன்னதை ஆச்சரியப்பட்டான் அவன்.

"பெரிய அரசியல் கட்சி தலைவி இவங்க.. உங்க வீட்டுல ஒரு வேலைக்காரங்க கூடவா இல்ல.?" ஆச்சரியத்தோடு கேட்டான் இனியன்.

"எங்க சித்தி தனிமை விரும்பி சார்.. அதனால வேலைக்காரங்க கூட இல்ல.. எல்லா வேலையும் நான்தான் பார்ப்பேன்.. என்னோட ஒரே துணையும் அவங்கதான்.. இப்ப அவங்களும் இல்ல.." என்றவள் கண்ணோரம் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்.

அவள் அழுவது கண்டு அவனுக்கு மனம் வருந்தியது. "அழாதிங்க.." என்றான்.

"எங்க சித்தி பசங்க அவங்களுக்கு லீவ் கிடைக்கலன்னும் அதனால எங்க சித்தியோட இறுதி சடங்குல கூட அவங்களால கலந்துக்க முடியாதுன்னும் சொல்லிட்டாங்க.."
அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென இனியனுக்கு தெரியவில்லை.

அதே நேரத்தில் போஸ்ட் மார்டம் முடித்த தேவ சுந்தரியின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதை கண்டதும் மேகலை ஓவென அழுதபடி பிணத்தருகே ஓடினாள்.

இனியன் பெருமூச்சோடு எழுந்து நின்றான்.

தனது ஃபோனை எடுத்து ஒரு எண்ணுக்கு அழைத்தான். "ஹலோ சார்.. தேவ சுந்தரியோட ஃபோன் இப்ப எங்கே இருக்குன்னு தெரியணும்.. நம்பர் சொல்றேன்.. அதை ட்ரேஸ் பண்ணி சொல்றிங்களா.?" என்றான்.

"சொல்லுங்க சார்.." என எதிர் முனையில் பதில் வந்ததும் தேவ சுந்தரி ஃபோன் நம்பரை சொன்னான் இனியன்.

சில நிமிட அமைதிக்கு பின்னர் எதிர்முனையில் சலசலப்பு கேட்டது. "சார்.. இந்த நம்பர்ல இருந்து ஒரு மெஸேஜ் மட்டும் இன்னைக்கு போயிருக்கு சார்.. அதுவும் தேவ சுந்தரி வீட்டுல இருந்துதான் சிக்னல் காட்டுது.. இப்ப ஃபோன் டெத் சார்.. மறுபடியும் ஆன் பண்ணாதான் இடம் தெரியும்.."

"சரிங்க சார்.. ஃபோன் எங்கே இருக்குன்னு தெரிஞ்சதும் எனக்கு தகவல் சொல்லுங்க சார்.." என்றவன் தன் ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

இந்த கொலையின் மூளைக்காரன் அந்த கூட்டத்தில்தான் இருக்கிறான் என்பது இனியனுக்கு புரிந்து போனது. அவனை எப்படி கண்டுபிடிப்பது என்ற யோசனையோடு கூட்டத்தை பார்த்தான்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தேவ சுந்தரிக்கு இறுதி சடங்குகள் நடைப்பெற்றது. ஊரிலிருந்து வந்திருந்த பெரியவர்கள் சிலர் யாரோ ஒரு இளைஞனை முன் நிறுத்தி அனைத்து காரியத்தையும் செய்தனர்.

கட்சி தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு தேவ சுந்தரி பிணத்திற்கு மாலை அணிவித்தனர். பெண்கள் பலரும் ஒப்பாரி பாடிக் கொண்டிருந்தனர்.

சந்தேகப்படும்படி யாராவது மேகலையை நெருங்குகிறார்களா என கவனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் இனியன்‌.

அவனது கவனத்தை கலைக்கும் விதமாக அவனது ஃபோன் ஒலித்தது. சந்தியாதான் அழைத்திருந்தாள்.

"சொல்லு சந்தியா.. ஏதாவது முக்கியமான விசயமா.?" மேகலையின் மீது இருந்து பார்வையை விலக்கி கொள்ளாமல் கேட்டான்.

"சாப்பிட்டியா இனியா.?" அக்கறையோடு கேட்டாள் சந்தியா.

அவள் இப்படி கேட்டதும் அவனுக்கு பசியின் நினைவு வந்தது. இன்னும் மதிய உணவு உண்ணவில்லை அவன்‌.

அவளின் குரலில் இருந்த கனிவு வயிற்று பசியை அதிகப்படுத்தியது. மேகலையை விட்டு போக முடியாத சூழலால் அவன் இப்போதைக்கு சாப்பிட முடியாது.

"சாப்பிட்டேன் சந்தியா.. நீ சாப்பிட்டியா.?" என்றான்.

"ம். சாப்பிட்டேன் இனியா.. பத்திரமா இரு.." என்றாள் தயக்கத்தோடு அவள்.

'என்ன வாழ்க்கைடா இது.? விலகி இருக்கற வரை நல்லவளா இருக்கா.. நெருங்கினா தள்ளி போடான்னு சொல்லி எதிரியாகுறா.. நிலவை ஏக்கத்தோடு பார்க்கற சின்ன புள்ளையை விட அதிக கஷ்டத்தை அனுப்பவிக்கிறேன் நான்..'

"சரி சந்தியா.. எனக்கு வேலை இருக்கு.. அப்புறம் பேசுறேன்.." என்றவன் ஃபோனின் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.

தொண்டர்கள் படை சூழ சொந்தங்களின் கண்ணீரோடு தேவ சுந்தரி இறுதி பயணத்தை தொடங்கினாள். அவளின் உடலை எரிவூட்டி விட்டு திரும்பியபோது அந்த வீட்டின் வாசலிலேயே இனியனுக்காக காத்திருந்தான் தேவன்.

"ஸார்.. காளியை பிடிச்சாச்சி.." என்றான் அவன் அருகே வந்தவுடன்.

"சூப்பர் தேவன்.. உங்களோட திறமையை நான் கூட சாதாரணமா நினைச்சிட்டேன்.. நீங்க ஒரு சிறந்த வீரர்ன்னு நிருப்பிச்சிட்டிங்க.." என இனியன் சொல்ல அவன் வெட்கத்தில் சிவந்த முகத்தோடு இனியனை பார்த்தான்.

"நான் பிடிக்கல சார்.. உங்க அப்பாதான் பிடிச்சி கொண்டு வந்து ஒப்படைச்சாரு.."

"ஓ.." என்ற இனியன் உதட்டை கடித்தபடி வானம் பார்த்தான்.

"காளி உயிரோடு இருக்கானா..?" என்றான் சந்தேகத்தோடு.

"உயிர் மட்டும்தான் இருக்கு சார்.. ஹாஸ்பிட்டல்ல மயக்கமா இருக்கான்.."

இனியனுக்கு சிரிப்பு வரும் போல இருந்தது. ஆனால் தேவன் முன் சிரித்து வைத்தால் பைத்தியமென நினைப்பானோ என நினைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கிருந்த மொத்த கூட்டமும் கலைந்து போனது.

"இனி இங்கே நமக்கு வேலை ஏதும் இல்ல சார்.. நாம கிளம்பலாம்.." என்ற தேவன் அங்கிருந்து கிளம்ப அவனை கை பிடித்து நிறுத்தினான் இனியன்.

தேவனை அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குள் சென்றான்.

ஓரிரு சொந்தங்கள் மட்டும் அந்த வீட்டில் இருந்தது.

"இனி இந்த வீட்டுல நீ இருக்க வேணாம்.. உன் ஊருக்கே கிளம்பு.." மேகலையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஒரு கிழவி.

"நான் எங்கே பாட்டி போவேன்.? எனக்கு ஊருல யாருமே இல்ல.." மேகலை கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள்.

மேகலையிடம் வெள்ளை வேட்டி பெரியவர் ஒருவர் நெருங்கினார். "தேவ சுந்தரிக்கு நீ வாரிசு கிடையாது மேகலை.. அவளோட புகுந்த வீட்டு ஆளுங்க நாங்க இத்தனை பேர் இருக்கும்போது ரத்த சம்பந்தம் இல்லாத உனக்கு இந்த வீட்டுல வாரிசு உரிமை கிடைக்காது.. புரிஞ்சிக்க.." என்றார்.

"என்னங்க சொல்றிங்க நீங்க.? நான் எப்ப வாரிசு உரிமை கேட்டேன்.? எங்க சித்திக்கு நீங்க இத்தனை பேர் புகுந்த வீட்டு சைட்ல இருந்தாலும் இத்தனை நாளுல ஒரு ஆள் வந்து பார்த்திருப்பிங்களா.?" அழுகையோடு கேட்டாள் அவள்.

"உன் அழுகையையும் சீனையும் நிறுத்து மேகலை.. தேவ சுந்தரியோட பெரிய பையன் லைன்ல இருக்கான். நீயே பேசு.." என்று ஃபோனை நீட்டினார் ஒரு மொட்டை மனிதர்.

"அண்ணா இங்கே என்னதான் நடக்குது.?" சிறு கோபத்தோடு கேட்டாள் மேகலை.

"மேகா நான் இந்த சொத்து எல்லாத்தையும் விக்க போறேன். அதுக்கு என் பெரியப்பாதான் உதவியா இருக்க போறாரு.. கொலை நடந்த வீட்டுல நீ இருக்கறதும் நல்லது இல்ல.. நீ ஊருக்கே கிளம்பு.."

"ஆளாளும் ஊருக்கு கிளம்புன்னு சொன்னா நான் என்ன செய்வேன்.? ஊருல எனக்கு யாரும் கிடையாது அண்ணா.. சித்தி இல்லன்னா நான் அனாதை‌.."

"அதேதான். நீ இப்ப அனாதை.. புரிஞ்சிக்கிட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பு.." என்றவன் ஃபோனை துண்டித்துக் கொள்ள அவள் கண்ணீரோடு ஃபோனை வெறித்தாள்.

அவள் கையிலிருந்த ஃபோனை பிடுங்கி கொண்டார் மொட்டை மனிதர்.

மேகலை சுவற்றில் மாலை போட்டு போட்டோவாக இருந்த தேவ சுந்தரியை பார்த்தாள்.

"என் லைஃப் எந்த அளவுக்கு பலவீனமா இருந்திருக்கு.? ஒத்தை ஆள் போன உடனே என் மொத்த வாழ்க்கையும் முடிஞ்சி போச்சி.." என்றவள் தனது ஃபோனை இறுக்கி பிடித்தபடி வெளியே நடந்தாள்.

தேவன் இனியனின் தோளை பிடித்து உலுக்கினான். "என்ன சார் நடக்குது இங்கே.? பத்தே நிமிசத்துல ஒரு பொண்ணை அனாதையாக்கி தொரத்தி விட்டுட்டாங்க.." என அதிர்ச்சியோடு அவன் சொல்ல இனியன் கேட்டை தாண்டி போய் கொண்டிருந்த மேகலையை நோக்கி ஓடினான்.

இருளில் தன்னை தொலைக்கும் வழி தெரியாமல் நடந்துக் கொண்டிருந்தவளின் கையை பற்றி நிறுத்தினான். "எங்கே போறிங்க.? உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு.." என்றான்.

மேகலை முகத்தை துடைத்துக் கொண்டு அந்த வீட்டை திரும்பி பார்த்தாள். "இந்த வீட்டை விட பெரிய ஆபத்து ஏதும் இருக்காது சார்.. கொலைக்காரன் கூட சுலபமா கொன்னுடுவான். ஆனா இவங்களை எதிர்த்திட்டு இங்கேயிருந்தா இவங்க கொஞ்சம் கொஞ்சமாக பேசியே கொன்னுடுவாங்க.. என்னால இவங்களை எதிர்க்கற அளவுக்கு தைரியம் ஏதும் இல்ல சார்.‌." என்றவளை அங்கு வந்த தேவன் பரிதாபத்தோடு பார்த்தான்.

"எங்கே போறிங்கன்னு சொன்னா மறுபடியும் ஏதாவது டீடெயில்ஸ் தேவைப்பட்டா வந்து கேட்டுப்போம்.." என்றான் தேவன் கடமையே கண்ணாக.

"எனக்கு எங்கே போறதுன்னு தெரியல சார்.. எனக்கு இந்த வீட்டை விட்டா வேற எங்கேயும் நிற்க நிழல் கூட கிடையாது.. தேவ சுந்தரி அம்மாவை விட்டா சொந்தம்ன்னு சொல்லிக்க ஒரு நாய் பேய் கூட கிடையாது.." அவள் சொல்ல சொல்ல அவள் மீது இனியனுக்கு பரிதாபம் அதிகமாகி கொண்டே இருந்தது.

"நீங்க ஹாஸ்டல்ல தங்ககிக்க நான் ஏதாவது ஏற்பாடு செய்யட்டா..?" தேவன் நல்ல மனிதனாக கேட்டான்.

"இல்ல தேவன்.. யாரோ இவங்களுக்கு கொலை மிரட்டல் விட்டிருக்காங்க.. இவங்க ஹாஸ்டல் சேர்ந்தா அது அவனுக்கு ஈஸியா ஆகிடும்.."

"ஆனா காளியைதான் பிடிச்சாச்சே சார்.."

இனியன் தலையை இடம் வலமாக ஆட்டினான். "காளிக்கு பின்னணி யாருன்னு தெரியும் வரை இந்த பொண்ணை நாமதான் பத்திரமா பார்த்துக்கணும்.."

"ஓ.. ஓகே சார்.. நம்ம ஸ்டேசன் கூட்டிட்டு போயிடலாம் சார்‌.. நம்ம லாக்அப்பை விட பத்திரமான இடம் எங்கேயும் இருக்காது.. ஒரு பெட்ஷீட்டும் கொசுவர்த்தியும் நான் போய் வாங்கிட்டு வரேன்.." என தேவன் கிளம்ப அவனை கை பிடித்து நிறுத்தினான் தேவன்.

"உங்க மூளைக்கு அவார்ட் தரணும் தேவன்.. எந்த தப்பும் செய்யாத பொண்ணை லாக்அப்ல வச்சா என்னாகும் தெரியுமா.? போலிஸ் அநியாயம் ஒழிகன்னு பதாகை ஏந்திய மனுசங்க ஊர்வலம் போவாங்க.. பத்திரிக்கையோட முதல் பக்கத்துல நம்ம இரண்டு பேர் போட்டோவும் கலர் போட்டு இதுதான் காவல்துறையான்னு கேட்பாங்க.." என்றவன் மேகலை பக்கம் திரும்பினான்.

"உங்களுக்கு ஓகேன்னா எங்க வீட்டுல வந்து தங்கிக்கிறிங்களா.? எங்க வீட்டுல ஒரு லேடி போலிஸ் உண்டு. உங்களுக்கு காவலா இருப்பாங்க.." என இனியன் சொல்ல அவனை ஓரடி பின்னால் இழுத்தான் தேவன்.

"சார் நீங்க இந்த பொண்ணை கரெக்ட் பண்ண பார்க்கறிங்களா.?" என்றான் அதிர்ச்சியோடு. இனியனும் அதே அதிர்ச்சியோடு அவனை திரும்பி பார்த்தான்.

"ஏன்ய்யா உனக்கு இப்படி புத்தி போகுது.? ஏற்கனவே ஏன்டா ஒருத்தியை கட்டினேன்னு அழறேன்.. அதுவுமில்லாம இந்த பொண்ணை பார்த்தா எனக்கு பாவமா இருக்குய்யா.."

"நல்லா சமாளிக்கறிங்க சார்.." என தேவன் முனகினான்.

சந்தியா வீட்டின் வாசலிலேயே நின்றுக் கொண்டிருந்தாள்.

இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. இனியனுக்கு வேலை முடிந்து வெகு நேரம் ஆகியிருக்கும் என்பதை அறிவாள் இவள். இனியனுக்கு இரண்டு மூன்று முறை போன் செய்து பார்த்தாள். அவன் போனை எடுக்கவேயில்லை.

"சந்தியா இங்கே கொஞ்சம் வா.." உள்ளிருந்து மகேஷின் குரல் ஒலித்தது. வீட்டிற்கு செல்லலாம் என திரும்பியவள் இனியனின் பைக் வரும் சத்தம் கேட்டதும் ஆவலோடு அங்கேயே நின்று திரும்பி பார்த்தாள்.

இனியன் பைக்கை சந்தியாவின் அருகே நிறுத்தினான்.

"இனியா.. ஏன் லேட்‌..?" என கேட்டவள் அதன் பிறகே அந்த பைக்கிலிருந்து கீழே இறங்கிய கன்னியை கண்டாள்.

Word count 1360

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE
COMMENT
SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
23/11/2020 3:44 am  

சர்வாதிகாரம் 27

மேகலையை புதிராக பார்த்தபடி நின்றிருந்த சந்தியாவின் அருகே வந்தான் இனியன்.

"இவங்க தேவ சுந்தரியோட அக்கா பொண்ணு.. கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுலதான் தங்க போறாங்க.." என அவன் சொன்னபோது அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் உண்டானது.

அதை அவள் கேட்க முயலும் முன் இனியனே "இரண்டு பேரும் இழவு வீட்டுல இருந்து வந்திருக்கோம்.. குளிக்கணும்.. என் நைட் டிரஸ், சோப், ஷாம்பெல்லாம் எடுத்துட்டு வா.. நான் தோட்டத்து பாத்ரூம்ல குளிச்சிட்டு வரேன்.." என்றவன் சட்டையின் பட்டனை கழட்ட ஆரம்பித்தான்.

சந்தியா சட்டென அவனின் கையை பிடித்தாள்.

"லூசு.. நான் குளிக்கும் முன்னாடி என்னை தொட கூடாது.." என்றவன் ஓரடி பின்னால் தள்ளி நிற்க முயன்றான்.

"அதுக்காக நீ இந்த பொண்ணு முன்னாடியே சட்டையை கழட்ட போறியா.?" என அவள் தன் பொறாமையை மறைத்தபடி கேட்க, அவன் திரும்பி பார்த்து விட்டு அசடு போல சிரித்தான்.

"சாரி.." என்றவனின் கன்னத்தில் லேசாக சிவந்திருந்ததை கண்டு சந்தியாவுக்கும் வெட்கம் தோன்றியது.

"சீக்கிரம் என் டிரெஸை எடுத்துட்டு வந்து கொடு.. அப்படியே இந்த பொண்ணுக்கும் உன் டிரெஸை கொடு.." என்றவன் தோட்டத்தை நோக்கி நடந்தான்.

மேகலை பைக்கின் அருகிலேயே தயங்கியபடி நின்றுக் கொண்டிருந்தாள். அழுததால் வீங்கிருந்த அவளது முகம் கண்டு சந்தியாவிற்கு பரிதாபமாக இருந்தது. ஆனால் அவள் ஏன் இந்த வீட்டிற்கு தங்க வந்தாள் என்ற கேள்வி ஆயிரம் சந்தேகத்தை தந்தது.

"இங்கேயே இருங்க.. வரேன்.." என்றவள் வீட்டிற்குள் சென்றாள்.

"இனியன் வந்துட்டானா.?" மகேஷ் டிவியில் ஏதோ சேனலை மாற்றிக் கொண்டே கேட்டான்.

"வந்துட்டார் மாமா.. குளிக்காம உள்ளே வரக்கூடாதுன்னு தோட்டத்து பாத்ரூம்க்கு குளிக்க போயிருக்காரு.." என பதிலை சொல்லி விட்டு நடந்தாள்.

இனியனுக்கு தேவையான உடையையும் அந்த பெண்ணிற்கு தேவையானதையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அந்த பெண்ணிடம் உடைகளை தந்தவள் தோட்டத்து குளியலறைக்கு சென்றாள்.

"இனியா.. இனியா.." என அழைத்தவள் கதவை தட்டும் முன்பே கதவை திறந்தான் இனியன். தண்ணீர் துளிகள் சொட்டும் ஈர கரம் ஒன்று கதவு இடுக்கின் வழியே வெளி வந்தது.

சந்தியா அவனது கரங்களை காணாத பொக்கிஷம் போல பார்த்துக் கொண்டிருந்தாள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றால் காதல் வந்த கண்ணிற்கு கண்டதெல்லாம் அழகு எனும் கணக்காக அவனது கரம் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது எனும் சீரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தாள் அவள்.

"சந்தியா.. சீக்கிரம் டிரெஸை கொடு.." இனியன் அவளது சீரிய ஆராய்ச்சியை தனது குரலால் கலைத்து விட்டான்.
அவனது கரத்தில் உடைகளையும் மற்ற பொருட்களையும் வைத்தாள்.

அவன் கதவை சாத்திக் கொண்ட பின் அந்த கதவின் மீதே முதுகு சாய்ந்து நின்றாள்.

"சந்தியா.." என்றான் அவன்.

"ம்.." என்றவள் அவனின் குரலில் உள்ள காந்தத்தை ஆச்சரியத்தோடு உணர்ந்து கொண்டாள்.

"என்னோடு சேர்ந்து குளிக்க வரியான்னு உன்னை கேட்க சொல்லுது என் மனசு.." என அவன் சொல்ல அவளுக்கு நாணத்தால் மொத்த உடலும் சிவந்ததை போல இருந்தது.

அவனுக்கு என்ன பதிலை சொல்வது என குழம்பி போய் நின்றாள் அவள்.

"உன்னை டிஸ்டர்ப் பண்ண நினைக்கல சந்தியா.. ஆனா சில நேரத்துல இந்த மனசு என் பேச்சை கேட்கவே மாட்டேங்குது..‌ உன்னை என்னைக்குமே என்னால மறக்க முடியாது.. உன்னாலயும் என்னை என்னைக்குமே மன்னிக்க முடியாதுன்னு தெரியும்.." கடைசி வார்த்தைகளை சோகத்தோடு சொன்னான் அவன்.

தனது காதலை அவனிடம் சொல்லி விட அவளது உள்ளம் துடித்தது. ஆனால் அவன் நம்ப மறுப்பான் என நினைத்து உதட்டை கடித்தபடி அமைதியாக நின்றுக் கொண்டாள்.

"இப்ப கூட நீ இங்கேயே நிற்கறதை பார்த்து நீ எனக்காகதான் காத்திட்டு இருக்கன்னு மனசு சந்தோசத்துல துள்ளி குதிக்குது.. ஆனா மூளை சொல்லுது நான் கூட்டி வந்த பொண்ணு கூட நான் ஏதாவது கொஞ்சி பேசிடுவேனோன்னு நினைச்சி சந்தேகப்பட்டுதான் நிற்கறன்னு.."

அவன் சொன்னது அவளுக்கு சற்று அதிர்ச்சியை தந்தது. அன்று ரியாவுடன் சேர்த்து வைத்து பேசியதற்கே கொலை காண்டு ஆனவன் இன்று தான் ஏதாவது சந்தேகம் கொண்டு விட்டால் மிருகமாகவே ஆகி விடுவேனே என்று நினைத்து பயந்தாள்.

அவன் குளித்து முடித்து தலை துவட்டும் சத்தம் கேட்டு சட்டென கதவை விட்டு ஒதுங்கி நின்றாள் அவள். இனியன் டவலால் முகத்தை துடைத்தபடியே வெளியே வந்தான்.

வாசலில் நின்றவளின் மீது தன் விரலில் இருந்த தண்ணீரை உதறினான். அவள் பொய்யாய் முகம் சுளித்தபடி முகத்தை திருப்பினாள்.

"சாரி.. எப்பவும் ரியா மேல தண்ணீர் உதறி உதறி அதே பழக்கம்.." என்றவன் தன்னிடமிருந்த டவலில் அவள் மேல் இருந்த நீர் துளிகளை துடைத்து விட்டான்.

ரியா என்ற பெயர் சந்தியாவிற்கு தடுமாற்றத்தை தந்தது.

ஆனாலும் அவளால் அதை புரிந்துக் கொள்ள முடிந்தது. சிறு வயதிலிருந்து இருவரும் ஒன்றாய் சேர்ந்து வளர்ந்து உள்ளனர். அவர்களுக்குள் இருக்கும் பாசத்தை சந்தேகம் எனும் பெயரில் கேவலப்படுத்துவது எவ்வளவு தவறான விசயம் என்று புரிந்துக் கொண்டாள்.

அவளின் முகத்தில் இருந்த தண்ணீரை துளிகளை துடைத்தவன் அவளின் முகத்தின் அழகில் மயங்கி நின்று விட்டான். அவளும் அவனைதான் பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அவன் தன்னை ஆழ்ந்து பார்ப்பதை கண்டவள் தன்னால் முகம் சிவந்தாள். அவன் தன்னையும் மறந்து அவளது உதடு நோக்கி குனிந்தான்.

தோட்டத்தின் மற்றொரு மூலையில் இருந்த குளியலறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு இருவருமே தங்களின் மாய உலகிலிருந்து வெளி வந்தனர். மேகலையை கண்டதும் சந்தியா இனியனை விட்டு ஓரடி தள்ளி நின்றாள்.

"சாரி.." மெல்லிய குரலில் சொன்னவன் வீட்டை நோக்கி நடந்தான். அவனது சாரி அவளுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தந்தது.

தனது உடையை சரி செய்தபடியே சந்தியாவின் அருகில் வந்தாள் மேகலை. "தேங்க்ஸ்.. உங்க டிரெஸ் எனக்கு ரொம்ப கரெக்டா இருக்கு.." என்றாள்.‌ அவள் அதிக நேரம் அழுதிருந்ததால் அவளது குரலில் இருந்த கரகரப்பு சந்தியாவுக்கு பரிவை அதிகப்படுத்தியது.

"உள்ளே போகலாம் வாங்க.." அவளின் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.

"நீங்க போங்க.. நான் ஒரு அஞ்சி நிமிசம் கழிச்சி வரேன்.. எங்க வீட்டை தவிர வேற எங்கேயும் நான் போனதே இல்ல.. புதுசா ஒரு வீட்டுக்கு வர ஒரு மாதிரியா இருக்கு.."

"நானும் உங்க கூடவே இருக்கேன்.." சந்தியா ஆறுதல் குரலில் சொன்னாள்.

"இல்ல பரவால்ல.. நீங்க போங்க.. ஒரு அஞ்சி நிமிசம் தனியா இருக்க ஆசைப்படுறேன்.. எனக்கு எல்லாமுமா இருந்த எங்க சித்தி திடீர்ன்னு செத்துட்டாங்க.. நானும் ஒரே நாளுல அனாதையா ஆகிட்டேன்.. ஒரு அஞ்சி நிமிசம் கழிச்சி வரேன்.. நீங்க போங்க.." என்றாள்.

அதன்பிறகும் அவளை வற்புறுத்த விருப்பமில்லாமல் வீட்டிற்குள் சென்றாள் சந்தியா.

மேகலை முகத்தை மூடியபடி அருகேயிருந்த சுவரில் சாய்ந்து நின்றாள்.

'சித்தி.. என் வாழ்க்கை நிஜமாவே இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில்தான் இருந்ததா.? அண்ணன் கூட என்னை அனாதைன்னு சொல்லிட்டான். நான் வளர்ந்த வீட்டுல இருந்தே என்னை துரத்திட்டாங்க.. பிச்சைக்காரி மாதிரி ஆதரவு தேடி வேற வீட்டுக்கு வந்திருக்கேன் நான்..' மனதுக்குள் சித்தியோடு பேசியவளின் கன்னத்தில் சூடான கண்ணீர் வழிந்தது.

ரகு அப்போதுதான் தனது அறையிலிருந்து வெளியே வந்தான். வந்தவனின் கண்களில் இனியன் தென்பட்டானோ இல்லையோ ஆனால் அவனது வாசம் ரகுவின் நாசியில் துளைத்து விட்டது.

கண்களை மூடி வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தவன் "சேன்டிம்மா உன் புருசனை வேற சோப் மாத்த சொல்லு.. இல்லன்னா ஆம்பளன்னு கூட பார்க்காம நானே அவர் மேல பாஞ்சிடுவேன்.." என்றான்.

அவன் இதை சொல்லி முடித்ததும் பாத்திரம் ஒன்று தரையில் விழுந்து உருளும் சத்தம் கேட்டது. திடுக்கிடலோடு கண் விழித்து பார்த்தான் ரகு. சக்தி அதிர்ச்சியோடு நின்றிருக்க அவளது கால் அருகே பூக்கள் நிரம்பியிருந்த பாத்திரம் ஒன்று உருண்டபடி இருந்தது. சக்தியின் நேர் எதிரே அமர்ந்திருந்த மகேஷ் கீழே சிந்திய பூக்களை பார்த்து விட்டு சலிப்புடன் ரகுவை பார்த்தான்.

"இந்த பூக்களை அள்ளி வைக்கிற வேலையையும் இவ என் தலையிலதான் கட்ட போறா.." மகேஷ் சோகமாக ரகுவிடம் சொன்னான்.

ரகு அவர்கள் இருவரையும் கண்டு தன் கரங்களால் முகத்தை மூடிக் கொண்டான்.

"உன் பிரெண்டை விட நீ நல்லாதான் வெட்கப்படுற.. உனக்கு என் மேல இப்படி ஒரு ஆசை இருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா அவ பின்னாடி சுத்தாம உன்னை தேடி பிடிச்சி உன் பின்னாடியே சுத்தியிருப்பேன்.." இனியன் சொன்னது கேட்டு "வ்வேக்.." என்றாள் சந்தியா.

ரகு முகத்தை மூடியிருந்த கைகளிலிருந்து விரல்களை மட்டும் நகர்த்தி தன் எதிரே நின்றிருந்த இனியனையும் அவன் பின்னால் நின்றிருந்த சந்தியாவையும் பார்த்தான்.

திடீரென கேமரா ஃப்ளாஷ் ஆகும் சத்தம் கேட்டது. சக்தி தன் கையிலிருந்த போனை பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.
"ம்மா.. என்னை போட்டோ எடுத்திங்களா.? அதை அழிங்க.." என்றான் ரகு.

"இதை அருணாவுக்கு அனுப்ப போறேன்.." என்றவள் போனோடு இருக்கையில் அமர்ந்தாள்.

"அருணாவுக்கா..? அம்மா.. ப்ளீஸ் வேணாம்.. அவ கிண்டல் பண்ணுவா.." கெஞ்சினான் அவன்.

"ஆம்பள பசங்க வெட்கப்படுவது அபூர்வமான ஒரு விசயம்.. இந்த மூவ்மென்ட் போனா வராது.." என்ற சக்தியின் முன்னால் கையெடுத்து கும்பிட்டபடி பல்லை காட்டினான் ரகு.

"அந்த போட்டோவை அழிச்சிடுங்க.. நான் வேணா தினம் அரை மணி நேரம் உங்க முன்னாடி வந்து வெட்கப்பட்டு காட்டுறேன்.." என்றான்.

அவனது கெஞ்சல் முகம் கண்டு சக்திக்கு சிரிப்பு வந்தது. அவள் கலகலவென சிரித்தபோது சிறு குழந்தைகளின் கிண்கிணி சலங்கையாக மற்றொரு சிரிப்பு குரல் கேட்டது. அனைவரும் திரும்பி பார்த்தனர்.

மேகலை அவர்களின் பார்வையை கண்டு சட்டென சிரிப்பை அடக்கிக் கொண்டாள். அவர்கள் தவறாக எண்ணி விடுவார்களோ என நினைத்தவளின் முகத்தில் பயம் குடி புகுந்தது.

"யார் இந்த பொண்ணு..?" ரகுதான் முதலில் கேட்டான்.

அவனுக்கு பார்த்த முதல் கணமே மேகலையை பிடிக்காமல் போய் விட்டது.

"இவங்க மேகலை.. தேவ சுந்தரியோட அக்கா பொண்ணு.. கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுலதான் தங்க போறாங்க.." என்று விளக்கம் சொன்னான் இனியன்.

"ஏன் அவங்களுக்கு வீடு இல்லையா‌‌.?" மீண்டும் ரகு கேட்டான்.

இனியன் நடந்த அனைத்தையும் விளக்கமாக சொன்னான். மேகலையின் கதையை கேட்டு சந்தியாவுக்கும் பரிதாபமாகவே இருந்தது.

ஆனால் ரகுவுக்கு சந்தேகம் மட்டுமே தோன்றியது.

"அங்கே போலிஸ்ன்னு நீங்க மட்டும்தான் இருந்திங்களா.?" என்றான் இனியனிடம்.

"இல்ல.. என்னோடு தேவன் இருந்தாரு.. அப்புறம் செக்யூரிட்டிக்காக வந்த போலிஸ் நிறைய பேர் இருந்தாங்க.." இனியன் விளக்கம் சொன்னான்.

"ஆனா அத்தனை பேருக்கும் வராத கருணை உங்களுக்கு மட்டும் ஏன் வந்தது.? ஏதாவது வேற ஒரு பெண் போலிஸோடு இவங்களை அனுப்பி இருக்கலாமே.. இல்லன்னா இவங்களை ஹாஸ்டல்ல விட்டுட்டு துணைக்கு இரண்டு பெண் போலிஸை விட்டுட்டு வந்திருக்கலாமே.?" தன் மனதில் இயல்பாய் தோன்றிய கேள்விகளை கேட்டான் ரகு.

Word count 1082

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE
COMMENT
SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
24/11/2020 4:40 am  

சர்வாதிகாரம் 28

சக்தியும் மகேஷும் மேகலையை நோட்டமிட்டனர்.‌ அவள் தரையை மட்டுமே பார்த்தபடி இருந்தாள்.

"ஏற்கனவே கல்யாணம் ஆனவர் ஒரு வயசு பொண்ணை வீட்டுக்கு கூட்டி வந்தா இது சரியா வருமா.?" என்றான் ரகு.

அவனுக்கு சந்தியாவின் வாழ்க்கை மீது அதிக அக்கறை இருந்தது

ரகுவை முறைப்போடு பார்த்தான் இனியன்.

"நீங்க தங்க எத்தனையோ இடம் இருந்தாலும் இங்கே ஏன் தங்கியிருக்கிங்க.? கல்யாணமான ஒரு பொண்ணு இருக்கற வீட்டுல ஒரு வயசு பையன் தங்கலாமா..?" என்றான்.

அவனது ஒற்றை கேள்வி அங்கிருந்த மொத்த பேரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. ரகு முகம் கறுத்து விட்டது.

சந்தியா கண்களில் கண்ணீர் திரள ஆரம்பித்து விட்டது.

ரகுவை நேர் கொண்டு பார்க்க கூட அவளால் முடியவில்லை. தரை பார்த்து நின்றவளின் கண்களில் கண்ணீர் சிந்தியது.

"டேய்.. பைத்தியமாடா நீ.? ரகுகிட்ட மன்னிப்பு கேளுடா.." என்றாள் சக்தி.

"இந்த வார்த்தை அவருக்கு வலிச்ச மாதிரிதான்ம்மா ரகுவோட கேள்விகள் என்னையும் கஷ்டப்படுத்தி இருக்கும்.. அத்தனை போலிஸ்கிட்டயும் தேவ சுந்தரி கேஸை தரல.. எனக்குதான் தந்தாங்க. நான் அந்த கொலைக்கான பிண்ணனியில் இருப்பவனை கண்டு பிடிக்கணும். அவனோட அடுத்த குறி இந்த பொண்ணுதான்.. இந்த பொண்ணுக்கு கொலை மிரட்டல் இருக்குன்னு தெரிஞ்சும் நான் எப்படி அசால்டா இவங்களை ஹாஸ்டல்ல விட்டுட்டு வர முடியும்..?" என்றவன் ரகுவின் அருகே வந்தான்.

"இந்த பொண்ணோட வீட்டுல நடந்ததை உங்ககிட்ட தெளிவாதான் சொன்னேன்.. ஒரு நாளுல நீங்க எப்படி அனாதை ஆனிங்களோ அதே போலதான் இந்த பொண்ணும் ஒரே நாளுல அனாதை ஆகிட்டா.. உங்களுக்காகவது லவ்வர், பிரெண்ட், பிரெண்ட் குடும்பம்ன்னு இருக்கு.. ஆனா இவங்களுக்கு அப்படி யாருமே கிடையாது.. அப்பா அம்மா பாட்டி தாத்தா இத்தனை பேர் இருக்கற வீட்டுக்கு இந்த பெண்ணை கூட்டி வரது தப்புன்னு எனக்கு தோணல.. அதனால்தான் கூட்டி வந்தேன்.. இந்த பொண்ணை நான் இங்கே கூட்டி வந்தது தப்பா இருந்தா அதை என் பொண்டாட்டி மட்டும் சொல்லட்டும்.." என்றவன் சந்தியா பக்கம் பார்த்தான்.

"இந்த பொண்ணு வீட்டுல தங்கறதுல உனக்கு ஏதும் பிரச்சனையா சந்தியா.?" என்று கேட்டான் அவன்.

அவன் தனது வேலை சம்பந்தமாக அவளை அங்கு அழைத்து வந்திருக்கும் போது அதற்கு தடை சொல்வது தவறென்றே சந்தியாவுக்கு தோன்றியது. இல்லை என தலையை ஆட்டினாள் தரையை பார்த்தபடியே.

"எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லு சந்தியா.." அவனது வழக்கமான அதட்டல் இன்று வார்த்தைகளில் வந்து விட்டது.

அவசரமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். "எ.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.." என்றாள்.

மற்ற அனைவரையும் பார்த்தான் இனியன். "பிரச்சனை முடிஞ்சது.. அவ்வளவுதான்.. இனி புதுசா எந்த கேள்வியும் கேட்காதிங்க.." என்றவன் சந்தியாவை பார்த்தான்.

"இந்த பொண்ணுக்கு கெஸ்ட் ரூமை காட்டு.. அப்படியே சாப்பாடு எடுத்து வை.. பசிக்குது.." என்றவன் தனது அறையை நோக்கி நடந்தான்.

சந்தியா மேகலையின் அருகே வந்தாள். "ஒரு நிமிஷம்.. ப்ளீஸ்.." என்றவள் ரகுவின் அருகே ஓடி வந்தாள்.

ரகுவின் கையை பற்றியவள் "சாரி ரகு.. அவன் சொன்னது எதையும் மனசுல வச்சிக்காத.. ப்ளீஸ்.. இனியனுக்கு அவனோட வேலை எவ்வளவு முக்கியம்ன்னு நம்ம எல்லோருக்குமே தெரியும்.. அவன் வேலை டென்சன்ல ஏதோ அப்படி பேசிட்டான்.. அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கறேன்.." என்றாள். அவளது குரல் கரகரத்து போயிருந்தது.

சக்தி அவர்கள் இருவரையும் ஆதுரத்தோடு பார்க்க அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் மகேஷ்.

"சின்ன பசங்க விளையாட்டுல நாமதான் குறுக்க போகாம இருந்துக்கணும்.." என்றான்.

சக்தி புரிந்தவளாக தலையசைத்தாள்.

ரகு அவளது கன்னத்தை கிள்ளினான். "இதையெல்லாம் யாராவது பெருசா எடுத்துப்பாங்களா.? இனியனை பத்தி எனக்கும் நல்லா தெரியும்.. நாம சீண்டாத வரை அவரும் நம்மள சீண்ட மாட்டாரு.. நான்தான் தேவையில்லாம வார்த்தையை விட்டுட்டேன் போல.. அவரை பார்த்து சாரி கேட்டுக்கிறேன் விடு.. நீ இது எதையும் நினைச்சி குழப்பிக்காத.." என்றான்.

தனது அறைக்கு சென்ற இனியன் பாதியிலேயே திரும்பி வந்தான். ரகுவிடம் அப்படி பேசியது தவறோ என அவன் மனம் பரிதவித்தது. மனம் கேட்காமல் திரும்பி வந்தவன் சந்தியாவும் ரகுவும் பேசிக் கொண்டிருந்ததை கண்டு மனம் நெகிழ்ந்தான்.

ரகுவின் அருகே வந்தவன் "நீ ஓவர் நைட்டுல ஹீரோவாக டிரை பண்ணாத.. தப்பு என் மேலதான்.. இன்னும் கொஞ்சம் சொல்லி புரியவைக்காம எடுத்த உடனே வார்த்தையை விட்டது நான்தான்.. தப்பெல்லாம் என் மேலதான்.. சாரி.." என்றான்.

ரகு புரிந்துக் கொண்டவனாக தலையை அசைத்தான்.

அவனது தோளில் தட்டி தந்துவிட்டு அறைக்கு திரும்பினான் இனியன்.

சந்தியா இனியனின் முதுகை பார்த்துக் கொண்டிருக்க அவளின் முன்னால் தனது கையை ஆட்டினான் ரகு.

"கனவு உலகத்துல இருந்து வெளியே வாங்க மேடம்.. உங்க ஆளு அவர்தான் ஹீரோன்னு ப்ரூப் பண்ணிட்டு போறாராம்.." என்றான்.

அவனை பார்த்து பல்லை காட்டினாள் சந்தியா. "அவங்க ரொம்ப நேரமா நிக்கறாங்க.. நான் அவங்களுக்கு ரூம் காட்டிட்டு வரேன் இரு.." என்றவள் மேகலையின் அருகே வந்து அவளின் கை பிடித்து கெஸ்ட் ரூம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள்.

"இந்த ரூம்ல நீங்க தங்கிக்கோங்க.. உங்களுக்கு ஏதாவது வேணும்ன்னா என்னை கேளுங்க.. ஒரு அஞ்சி நிமிசம் கழிச்சு டைனிங் ரூமுக்கு வாங்க.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்றவள் திரும்பி நடந்தாள்.

"மேடம்.." என்றாள் மேகலை.

திரும்பி பார்த்தாள் சந்தியா.

"ரொம்ப தேங்க்ஸ்.." என்றாள். சந்தியா சிறு புன்னகையோடு திரும்பி வந்தாள். அவளது கை மீது தன் கையை வைத்தாள்.

"உங்களோட இழப்பு திரும்பி வராத ஒன்னுதான்.. ஆனா போனதையே நினைச்சிட்டு இல்லாம இனி நடக்க போறதை நினைங்க.. நாங்க எல்லோரும் உங்களுக்கு துணையா உண்டு.. நீங்க எதுக்கும் கவலைபடாதிங்க.. என் புருசன் சீக்கிரமாவே கொலைக்காரனை பிடிச்சிடுவாரு.." என்றாள். அவள் என் புருசன் என்றதில் அழுத்தம் அதிகமாகவே இருந்தது.

"தேங்க்ஸ்.." என்றாள் மேகலை மீண்டும். "என் பேர் மேகலை.. நீங்க மேகான்னே கூப்பிடுங்க.." என்றாள்.

"நான் சந்தியா.. நீங்களும் என் பேரை சொல்லியே கூப்பிடுங்க.." என்றாள்.

இனியன் தனது போனுக்கு சார்ஜரை போட்டு விட்டு வெளியே வந்தான்.

சந்தியா இரண்டு தட்டுகளில் சுட சுட உணவை பரிமாறினாள்.

"அம்மா நீ சாப்பிட வரலையா.?" என்றான் இனியன் நாற்காலியில் அமர்ந்தபடியே.

"அவங்க எல்லோரும் சாப்பிட்டுடாங்க.." என்ற சந்தியா அங்கு வந்தமர்ந்த மேகலையின் முன்னால் தட்டை நகர்த்தி வைத்தாள்.

இனியன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சந்தியாவை பார்த்தான். "பாட்டி எங்கே.?"

சந்தியா கால் பெருவிரலால் தரையை தேய்த்தாள்.

"தாத்தா இன்னும் இரண்டு வாரத்துல ரிலீஸ் ஆக போறாரு.. அப்புறம் பாட்டியால வெளியே அதிகம் சுத்த முடியாதாம்.. அதனால இப்பவே கோவில் கோவிலா சுத்த போயிருக்காங்க.."

"இந்த வயசான காலத்துல தனியா ஏன் போனாங்க..?" பாட்டி மீது உள்ள பாசத்தில் கேட்டான் இனியன்.

"தனியா போயிருக்காங்க.. ஆனா தனியா சுத்த மாட்டாங்க.. ஏற்கனவே கோவில்களை சுத்திட்டு இருந்த சுந்தரம் தாத்தா இப்ப பழனியில இருக்காராம்.. பாட்டியும் அங்கே போன பிறகு இரண்டு பேரும் சேர்ந்து திருப்பதி போறாங்க.. அப்புறம் அப்படியே கோவிலா கோவிலா சுத்த போறோங்க.." என்றவள் அவனது தட்டில் குழம்பையும் பொரியலையும் வைத்தாள்.

மேகலைக்கு தயக்கத்தோடு பரிமாறியவள் "சாரி இது நான் செஞ்ச சமையல்.. அவ்வளவா டேஸ்ட் இருக்காது.. நீங்க வரிங்கன்னு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா மல்லியக்காகிட்ட சேர்த்து சமைக்க சொல்லி இருப்பேன்.." என்றாள்.

"பரவாலைங்க.. எனக்கு இந்த சாப்பாடே ஓகே.." என்ற மேகலை ஒரு வாய் உண்டு விட்டு உதட்டை கடித்தாள்.

வழக்கம் போல் சமையலின் ருசி தலைகீழ்தான். அடுத்த வாய் அள்ளி சாப்பிட அவளால் முடியவில்லை. எதிரில் அமர்ந்து சாப்பிட்ட இனியனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

மனைவி சமையலுக்காக தவம் கிடப்பவனுக்கு அவள் சமைப்பது அமிர்தம்தானே.? ரசித்து ருசித்து அவன் சாப்பிட்ட அந்த நொடியில் அவன் மீது பெரும் மதிப்பு கொண்டு விட்டாள் மேகலை.

இனியன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு மேகலையை‌ பார்த்தான். அவள் அவனது பார்வையை உணர்ந்து சட்டென தலை குனிந்து சாப்பிட தொடங்கினாள்.

"நீ சாப்பிட்டியா சந்தியா.?" என்றான் மனைவியை பார்த்து.

"சாயங்காலத்துல இருந்து உனக்காக வாசல்லயே தவம் கிடந்தா.. அதனால அவ இன்னும் சாப்பிடல.." என்று குரல் தந்தாள் சக்தி.

"உட்கார்ந்து நீயும் சாப்பிடு.." என்றான் இனியன். அவள் அமைதியாக தரை பார்த்தாள். உணவு இருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தான். அனைத்தும் காலியாக இருந்தது.

சந்தியா தரை பார்த்து நின்றுக் கொண்டிருக்கும் போதே சட்டென சாப்பிட்டு விட்டு எழுந்து நின்றான். அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள் மேகலை. அவளை விட்டால் இன்னும் நான்கு மணி நேரத்திற்கு அந்த உணவில் கோலம் போடுவாள். ஏனெனில் அந்த அளவிற்கு இருந்தது அந்த உணவின் ருசி. இவன் எப்படி இவ்வளவு வேகமாக இந்த உணவை சாப்பிட்டான் என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தவள் அவன் கிச்சனுக்குள் புகுந்து அடுப்பை பற்ற வைத்ததும் அவனை கண்டு மனதுக்குள்ளேயே விசிலடித்தாள்.

"இனியா எனக்கு பசிக்கல.." என்று சிறு குரலில் சிணுங்கினாள் சந்தியா.

அவன் சட்டென அவனது கையை அவளது வயிற்றில் வைத்து பார்த்தான். சந்தியா மூச்சி விட மறந்து விட்டாள். அவனது ஸ்பரிசம் பட்டதும் உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு ஓடியது அவளுக்கு.

"வயிறு காலியா இருக்கு.. இரு நான் உனக்கு உப்மா செஞ்சி தரேன்.." என்றவன் ரவையை தேடி எடுத்தான்.

"உப்மாவா.?" சந்தியா குரலில் இருந்த ஏமாற்றம் கண்டு சிரித்தான் அவன்.

"நான் செய்ற உப்மா ருசியில் பிரியாணி தோத்துடும்.." என்றவன் பத்து நிமிடத்தில் ஆவி பறக்கும் உப்மாவை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தான்.

சந்தியாவை அமர வைத்து உப்மாவையும் பரிமாறினான்.

எதிரில் அமர்ந்திருந்த மேகலை உப்மாவின் வாசனையில் நாக்கில் எச்சில் ஊறியபடி அமர்ந்திருந்தாள். அவளது பார்வையிலேயே அவள் எந்த அளவிற்கு உப்மா மீது காதல் கொண்டு விட்டாள் என்பதை சந்தியாவும் புரிந்து கொண்டாள்.

"அதை வச்சிட்டு உப்மா சாப்பிடுங்க.." என்றவள் இனியன் கையில் இருந்த கரண்டியை வாங்கி அவளுக்கும் உப்மாவை பரிமாறினாள்.

இனியன் சமையலை சொல்லவா வேண்டும்.? சுவை அள்ளியது. சந்தியாவின் அருகே அமர்ந்து கன்னத்தில் கை வைத்தபடி அவள் சாப்பிடுவதையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் இனியன்.

"உப்மா எப்படி.?" என்றான்.

"சூப்பர்.." என்றவளுக்கு அவனது பார்வையை கண்டே கன்னம் சிவந்து போனது.

"சூப்பர்ன்னு நீ சொன்னா எப்படி நம்புறது.? நான்தான் அதை சொல்லணும்.." என்றபடி அவளருகே வந்த ரகு சந்தியா தட்டில் இருந்த உப்மாவை எடுத்து சாப்பிட்டு விட்டு தன்னை மறந்து உச்சு கொட்டினான்.

"நீங்க மட்டும் பொண்ணா இருந்திருந்தா.." அவன் பாதி சொல்லும்போதே குறுக்கிட்டாள் சந்தியா.

"நீ இவரையே கல்யாணம் பண்ணி இருப்ப.. சரியா.?" என்றாள்.

தனது உளறலை நினைத்து அவன் முகம் சிவக்க இனியன் விசிலடித்தான்.

"நீங்களும் பொண்ணா இருந்திருந்தா நானும் உங்களையே கட்டியிருப்பேன்.. என்னம்மா வெட்கப்படுறிங்க.?" என்றான் இனியன்.

இருவருக்கும் இடையில் அமர்ந்திருந்த சந்தியாவுக்குதான் அவர்களது கொஞ்சல் கண்டு புல்லரித்தது.

அவர்களது கொஞ்சலை பார்த்தபடியே உப்மாவை சாப்பிட்ட மேகலை அந்த உணவின் ருசிக்கு விழுந்து விட்டாள்.
ஒரு ஆண் மகனால் இப்படி கூட சுவையாக சமைக்க முடியுமா என ஆச்சரியப்பட்டாள்.

அவனது ஒவ்வொரு செய்கைக்கும் தன்னை அறியாமலேயே அவள்  அவன் மீது நேசம் கொண்டதை அந்த நொடியில் அவள் உணரவேயில்லை.

Word count 1124

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE
COMMENT
SHARE


ReplyQuote
Firoza Nazeer
(@firoza645)
Active Member Registered
Joined: 5 months ago
Posts: 5
24/11/2020 11:32 am  

Aiyo, Iniyan Sandhya onnu serathukulla innoru problema?🙄


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 153
24/11/2020 2:55 pm  

Light a enaku kuda megalai mela doubt a eruku Raghu mathiri... Raghu and Iniyan jodi yosichu pakarein sama comedy 🤣 🤣 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
25/11/2020 5:03 am  

சர்வாதிகாரம் 29

இனியனுக்கு அதிக களைப்பாக இருந்தது. பகலெல்லாம் கால் கடுக்க நின்று மேகலையை கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது அலுப்பு தட்டியது.

தூங்க செல்ல நினைத்து அறை நோக்கி நடந்தவன் "இனியா.." என மகேஷ் அழைக்கவும் அங்கேயே நின்றான்.

"என்ன அப்பா.?"

"அந்த காளி எப்படி இருக்கான்..?" தனது பின்னங்கழுத்தை வருடபடி தயக்கமாக கேட்டான் மகேஷ்.

"மயக்கமாதான் இருக்கானாம் அப்பா.. தேங்க்ஸ்.." என்றான் இனியன்.

"எதுக்குடா தேங்க்ஸ்.. என் மகன் நீ.. உனக்கு உதவி செய்யுறதுக்கு தேங்க்ஸ் எதிர்ப்பார்ப்பேனா நான்.?" என கேட்டபடி மகனை தன்னோடு அணைத்துக் கொண்டான் மகேஷ்.

அவனை திருப்பி அணைத்த இனியன் "தேங்க்ஸ் அதுக்கு இல்லப்பா.. அவனை கொல்லாம எங்ககிட்ட ஒப்படைச்சதுக்கு.." என்றான்.

மகேஷ் சின்ன சிரிப்போடு இனியனின் தோளில் தட்டி தந்தான்.

இனியன் அறை கதவை திறந்த போது சந்தியா வழக்கம் போல இருள் நிறைந்த வானை ரசித்தபடி ஜன்னலோரம் நின்றிருந்தாள். வழக்கம் போல அவனது கண்ணுக்கு பேரழகியாகவே தெரிந்தாள்.

கட்டிலில் வந்து அமர்ந்தவன் தயக்கமாக சந்தியாவை பார்த்தான்.

"அந்த பொண்ணை இந்த வீட்டுக்கு கூட்டி வந்தது உனக்கு பிடிக்கலையா சந்தியா.?" என்றான்.

அவள் நின்ற இடத்திலிருந்தே திரும்பி பார்த்தாள்.

"இல்ல.. ஏன்..?"

"இல்ல ரியா எனக்கு ஃபோன்ல முத்தம் தந்ததுக்கே அந்த கத்து கத்தின.. இப்ப அமைதியா இருக்கியா..? அதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு.. உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணாததால நீயும் என்னை கண்டுக்க கூடாதுன்னு விட்டுட்டியா.? இல்ல என் மேல புதுசா நம்பிக்கை ஏதும் வந்துடுச்சா.?" என்றான்.

சந்தியா அவனருகே வந்து அமர்ந்தாள்.

"என் புருசனுக்கு எவளோ ஒருத்தி முத்தம் தந்தா நான் கத்ததான் செய்வேன்.? மேகலை தூரமா இருந்து பேசிக்கிற வரை எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஏனா எனக்கும் கூட நண்பன் ஒருத்தன் இருக்கான்.. எடுத்ததுக்கெல்லாம் நான் சந்தேகப்பட மாட்டேன்.. ஆனா அவ உன்கிட்ட வழிஞ்சிட்டு நின்னாலோ இல்ல நீ ஏதும் அவக்கிட்ட கொஞ்சிட்டு நின்னாலோ அப்புறம் நான் யாரை வெட்டுவேன்னு எனக்கே தெரியாது.."

"ம்ம்.." என்றவன் அவள் உறங்க செல்வதை பார்த்தபடி அமர்ந்திருந்தான். காதலை காட்ட மாட்டேன் ஆனால் பொசசிவ்னெஸ் மட்டும் இருக்கும் என்ற சந்தியாவின் குணத்தை ரியா நிகழ்விலேயே தெரிந்து விட்டிருந்த இனியனுக்கு இந்த முறை அவள் பேசியது ஏதும் அதிசயமாக தோன்றவில்லை.

சந்தியாவோ தனது காதலை அவனிடம் எப்படி சொல்வதென யோசித்துக் கொண்டிருந்தாள். இப்போது சொன்னால் மேகலையின் மீது கொண்ட கடுப்பில் சொல்வதாக நினைப்பானே என எண்ணி குழம்பினாள்.

மேகலை வீட்டை விட்டு கிளம்பிய பிறகு தன் காதலை சொல்லலாம் என முடிவெடுத்துக் கொண்டாள்.

"அந்த பொண்ணு எப்ப நம்ம வீட்டை விட்டு போவா.?" இனியன் பக்கம் திரும்பி படுத்தபடி கேட்டாள் சந்தியா.

"கொஞ்ச நாள் ஆகும்.. கொலைக்காரனை கண்டு பிடிக்காம அவங்களை வெளியே அனுப்ப முடியாது.." என்றான்.

"ம்ம்.." என்றவள் கண்களை மூடி கொண்டாள். இனியன் அரை விளக்கு ஒளியில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"தூங்கு இனியா.. உனக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்கும்.." கண்களை மூடியபடியே சந்தியா சொன்னாள்.

அவன் கூரையை பார்த்தபடி அமைதியாக படுத்தான்.

மறுநாள் காளி கண் விழித்தபோது தான் சிறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியோடு எழுந்து அமர்ந்தான்.

ஆங்காங்கே கன்னி போன காயங்கள் மகேஷின் கை வண்ணத்தை எடுத்து சொல்லின. நேற்று மதிய வேளையில் மேம்பாலம் ஒன்றின் கீழ் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததும் சற்று நேரத்தில் ரவுடி மகேஷ் வந்து பின்னியெடுத்ததும் அவன் நினைவில் வந்து போயின.
அவனுக்கு எதிரே கையை கட்டியபடி நின்றிருந்தனர் இனியனும் தேவனும்.

இனியனை கண்டதும் பழைய நினைவில் காளி பின்னால் நகர்ந்து அமர்ந்தான். இனியனை பார்ப்பதை தவிர்த்தான். முன்பை விட கம்பீரம் அதிகம் கொண்டிருந்தான் இனியன். அப்போதாவது சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தான். இப்போது இவனுக்கு என சட்டபடியே துப்பாக்கி இருந்தது.

"எதுக்கு சார் நான் இங்கே இருக்கேன்.?" தேவனிடம் கேட்டான் காளி.

"தேவ சுந்தரியை கொன்னா இங்கேதான் இருக்கணும்.. கொலை செஞ்சதுக்காக உனக்கு கோல்டு டிராபி தந்து ஐநாவுலயா உறுப்பினர் ஆக்க முடியும்.?" என்ற தேவன் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"இப்ப சொல்லு.. ஏன் தேவ சுந்தரியை கொலை செஞ்ச..?" என்றவன் போனில் இருந்த ரெக்கார்டரை ஆன் செய்தான்.

"கொலையா.? நானா.? நான் எந்த கொலையும் செய்யல சார்.. சாமி மேல ஆணை.‌." என அவன் சொல்ல அவனை நக்கலாக பார்த்தான் தேவன்.

"நீ இல்லன்னு சொல்லிட்டா நாங்க நம்பிடுவோமா.? கொலைக்காரனுக்கு கடவுள் துணை ஒன்னுதான் கேடா.?" என்றவன் அவனது தலையில் தட்டினான்.

"சார் தேவையில்லாம மேல கை வைக்காதிங்க.. நேத்து அமைதியா தூங்கிட்டு இருந்தவனை இவங்க அப்பா அடிச்சி உதைச்சி போட்டுட்டாரு.. இப்ப நீங்க நான்தான் கொலை செஞ்சேன்னு என் மேல வீண் பழி போடுறிங்க.."

"டேய் நீயா உண்மையை ஒத்துக்கிட்டா அடி கம்மியாகும்.." என்றான் தேவன்.

"நான் ஹியூமன் ரைட்ஸ் கமிசனுக்கு போக போறேன் சார்.. ஒரு அப்பாவியை அடிச்சி உதைச்சி பொய் பழி சுமத்துறதுக்கு நீங்க இரண்டு பேரும் தண்டனை அனுபவிக்க போறிங்க.." என்றான் காளி.

'இவன் இவ்வளவு வாய் பேச மாட்டானே.? எங்கேயோ ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே..' குழம்பிய இனியன் "தேவ சுந்தரியை ஏன் கொலை பண்ண..?" என்றான்.

"என்ன சார் வம்பு பண்றிங்க.?" என்றவன் "நான்தான் கொலை செஞ்சங்கறதுக்கு உங்ககிட்ட என்ன ஆதாரம் இருக்கு.?" என்றான் கோபத்தோடு.

தேவன் அவனது தலையில் இரண்டு தட்டு தட்டினான்.

"கொலைகாரனுக்கு ஆதாரம் தந்தாதான் பதில் சொல்லுவிங்களா.?" என்றவன் தன்னிடமிருந்த போட்டோ ஒன்றை அவனிடம் நீட்டினான்.

"இது நீதானடா.?" என்றான்.

"சார் இது நான்தான்.. ஆனா ஒத்தை போட்டோவை காட்டி கூடவா கொலை பழி சுமத்துவிங்க நீங்க.?"

இனியன் கோபத்தோடு தேவனை பார்த்தான். "யோவ் அந்த சிசிடிவி வீடியோவை காட்டுயா.." என்றான். அந்த ரெக்கார்டரை இதுவரை இவர்களே பார்க்கவில்லை. அதை பார்க்க கூட நேரம் போதாமல் சுற்றி கொண்டிருந்தனர் இருவரும்.

தேவன் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சிசிடிவி ரெக்கார்ட்டரை இயக்கினான். அமைதியாக இருந்த வீட்டிற்குள் பூசாரி வேசத்தில் காளி செல்வதும் சற்று நேரத்தில் பதட்டத்தோடு திரும்பி ஓடி வருவதும் அதில் தெரிந்தது.

காளி தன் வியர்த்த முகத்தை துடைத்துக் கொண்டான்.

"நல்லா பாருங்க சார்.. இதுல என் கையில கத்தி ஏதும் இருக்கா.?" என்றான்.

இனியனுக்கு அவன் கையில் கத்தி இல்லாதது சந்தேகத்தை தரவில்லை. அவன் வீட்டிற்குள் சென்ற இரண்டாம் நிமிடத்திலேயே வெளியே வந்து விட்டதுதான் சந்தேகத்தை தந்தது.

தேவ சுந்தரி படு கொலை செய்யப்பட்டு இறந்து போனாள்.

அவளை ஆங்காங்கே குத்தி கொல்லவே சில நிமிடங்களுக்கு மேல் பிடிக்கும். அப்படி இவனே குத்தி கொன்றிருந்தாலும் இவன் மீது ரத்த கறைகள் இருந்திருக்கும். எந்த கறையும் இல்லாமல் அவ்வளவு சீக்கிரத்தில் கொலையையும் செய்துவிட்டு கத்தியையும் மறைத்து வைத்து விட்டு எப்படி ஒருவனால் திரும்பி வர முடியும் என்று குழம்பினான்.

"கத்தியை வீட்டுல மறைச்சி வச்சிட்டு வந்துட்டியாடா.?" என கேட்டு லத்தி ஒன்றை கையில் எடுத்தான் தேவன்.

"தேவன் ஒரு நிமிசம்.." அவனை தடுத்தான் இனியன்.

"இந்த வீடியோ பாருங்களேன்.. இவன் போய் இரண்டே நிமிசத்துல திரும்பி வந்துட்டான்.. இவன் மேல ரத்த கறைகளும் இல்ல.. எங்கேயோ ஏதோ இடிக்குது தேவன்.."

என்றவன் தேவன் கையிலிருந்த லத்தியை வாங்கியபடி காளியின் அருகே சென்றான்.

"உண்மையை சொல்லு.. நீ ஏன் பூசாரி வேசம் போட்டு வீட்டுக்குள்ள போன.? உனக்கும் அந்த குடுகுடுப்பைகாரனுக்கும் நடுவுல என்ன சம்பந்தம்.?" என கேட்டவன் லத்தியை ஒரு சுழட்டு சுழட்ட, காளி பயந்து போய் ஓரடி பின்னால் நகர்ந்தான்.

இனியன் மீது அவன் கொண்ட பயம் இத்தனை வருடங்கள் கடந்தும் மறைய மறுத்தது.

"உண்மையை சொல்லிடுறேன் சார்.. என் கூட ஜெயில்ல இருந்த ராமன் மூலமா பூச்சி தகவல் சொன்னான்.. தேவ சுந்தரி வீட்டு அட்ரஸ் தந்து அங்கே குறிப்பிட்ட நாளுல திருட போனா நிறைய பணம் கிடைக்கும்ன்னு சொன்னான்.. நானும் திருடலாம்ன்னுதான் அங்கே போனேன்.. ஆனா பூச்சி பின்னாடி வேற ஒருத்தர் இருக்காங்க சார்.. திருடி வந்த பொருளை முழுசா இவங்ககிட்ட தந்தா எனக்கு ஒரு கோடி ரூபா தரேன்னு சொன்னாங்க சார்.. அதை நம்பிதான் திருட போனேன்.. இத்தனைக்கும் திருட சொன்னவங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது சார்.." என்றவனின் கெஞ்சல் குரலில் உண்மை இருக்கிறாதா என குழம்பினான் இனியன்.

"யாருய்யா இவனை பெயில்ல எடுத்தது.?" என்றான் சந்தேகத்தோடு.

தேவன் அவசரமாக தன்னிடமிருந்த பைலை புரட்டினான்.

"சார்.. இவனை பெயில்ல எடுத்தது பூச்சின்னுதான் போட்டிருக்கு.." என்றான்.

"பூச்சி என் பிரெண்ட் சார்.. ஆனா அவன் என்னை பெயில்ல எடுக்கல சார்.. அவன் மூலமா திருட சொன்னவங்கதான் சார் பெயில்ல எடுத்தாங்க.. பூச்சி ஒரு ஒன்னாம் நம்பர் கஞ்சன் சார்.. பத்து பைசா அவனுக்காகவே செலவு பண்ண மாட்டான்.."

"இது எதுவும் சரி வராது தேவன்.. மத்த ஆபிசர் கொலைக்காரன் இவன்னு சொன்னவுடனே நேரடியாக இவனை பிடிக்கறதுலயே நாம குறியா இருந்திருக்க கூடாது.. முதல் ஸ்டெப்ல இருந்துதான் போயிருக்கணும்.." என்றான் இனியன்.

"எனக்கு இதுதான் சார் முதல் கேஸ்.. அதான் சார் நான் தடுமாறிட்டேன்.." என்றான் தேவன்.

"எனக்கும் இதான்ய்யா முதல் கேஸ்.. இனி எந்த கேஸ் நமக்கு கை மாறி வந்தாலும் சரி.. அந்த கேஸ் லாஸ்ட் ஸ்டெப்ல இருந்தாலும் சரி.. நாம முதல் ஸ்டெப்ல இருந்துதான் போகணும்.." என இனியன் சொல்ல, இனியனின் உள்ளங்கையில் தன் கையை வைத்தான் தேவன்.

"ஓகே சார்.." என்றான்.

"இவன் இங்கேயே இருக்கட்டும்.. வாங்க சார் நாம நம்ம வேலையை பார்க்கலாம்.." என்ற தேவன் இனியனுக்கு முன்னால் நடந்தான்.

இனியனின் மேஜை மீது பைலிலிருந்தவற்றை எடுத்து வைத்தான்.

"கொலை நடந்துருக்குன்னு முதல் தகவல் சொன்னது மேகலை சார்.. அங்கிருந்த சிசிடிவி ரெக்கார்ட் இது சார்.. இன்னும் பாரன்சிக் ரிப்போர்டும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டும் வரல சார்.. இது தேவ சுந்தரியோட எதிரிகள் லிஸ்ட் சார்.. இது தேவ சுந்தரியோட பர்சனல் பயோ சார்.." என்றான்.

"பாடி எரிஞ்ச இடத்துல இன்னும் நாலு பாடியை எரிச்சி இருப்பாங்க.. ஆனா இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரல.. சரி.. இங்கே இருப்பதையாவது பிரிச்சி மேயலாம் வாங்க‌‌.." என்றவன் தன் அருகே இருந்த ஒரு பேப்பரை கையில் எடுத்தான்.

தேவ சுந்தரியின் பர்சனல் பயோடேட்டாவை படித்து முடித்தவன் "தேவன் இதுல தேவ சுந்தரிக்கு ஒரே வாரிசு மேகலைன்னு போட்டிருக்கு.." என்றான் ஆச்சரியத்தோடு.

"வாவ்.. தெரிஞ்சிருந்தா நீங்க அவங்களை உங்க வீட்டுக்கு கூட்டி போகும் முன்னாடியே அந்த பொண்ணை என் தங்கச்சியா தத்து எடுத்திருப்பேனே.?" என்றான் தேவன்.

"ஏன்ய்யா உன் புத்தி இப்படி போகுது.?"

"சார் அந்த தேவ சுந்தரியோட சொத்து மதிப்பு பார்த்துட்டு அப்புறமா இதை சொல்லுங்க.. ச்சே ச்சே.. எப்படிப்பட்ட கோடிஸ்வரியை ஹாஸ்ட்ல்ல தங்க சொல்லிட்டேனே.." சலித்துக் கொண்டான் தேவன்.

இனியனும் சொத்து மதிப்பை பார்த்து விட்டு தேவனை பார்த்தான். "எப்படியா இப்படி.?" என்றான்.

"எல்லாம் பொது மக்கள் காசு சார்.. கட்சி வளர்ச்சி நிதி, கவர்மென்ட் கான்ட்ராக்ட் கை மாத்தி விடும்போது வாங்கிய லஞ்சம், எதிர் கட்சியை திட்டும் போது தன் கட்சிக்கிட்ட வாங்கிய கூலி இன்னும் பல பல சார்.."

"அப்புறம் ஏன்ய்யா இவங்க இவ்வளவு அசால்டா இருந்தாங்க.?" தலையை பிடித்தபடி கேட்டான்.

"எல்லாம் விதி சார்.. சிசிடிவி கேமராக்களையும், ஏழெட்டு பாதுகாப்பு உள்ள கதவையும் நம்பியவங்க கேன தனமா பூஜை, பூசாரின்னு சொன்னதையும் நம்பிட்டதால வந்த விளைவு சார்.." என தேவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மற்றொரு காவலர் உள்ளே வந்து போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டையும் பாரன்சிக் ரிப்போர்ட்டையும் தந்து சென்றார்.

Word count 1179

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE
COMMENT
SHARE

வணக்கம் நட்புக்களே.. என் முதல் நாவல் காதலிக்க கற்றுக் கொள் கண்மணி இதழில் வெளியாகி இன்னையோடு அஞ்சி வருசம் ஆகுது. நானும் ஒரு எழுத்தாளராகி அஞ்சி வருசம் ஆகுது.


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 153
26/11/2020 5:46 am  

Vazhthukal saki.. Ungal ezhuthu payanam thodara vazhthukal.. Etho twist eruku nu ninaikarein intha case la.. Waiting for next episode


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
26/11/2020 6:52 am  

@vaniprabakaran

நன்றிகள் சிஸ்


ReplyQuote
Page 4 / 5
Share: