Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

செங்கா  

Page 7 / 8

Subha Mathi
(@subhamathi)
Estimable Member Registered
Joined: 2 months ago
Posts: 103
 

Ponna va...nenchu senga ku ok solla yosikkarana.... Athiyan 🤔🤔🤔nice sis 😍😍


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 6 months ago
Posts: 221
Topic starter  

செங்கா 31

விஷ்வா யோசனையோடு அதியனை பார்த்தான்.

"நீயும் செங்காவும் சொந்தக்காரங்களா.? ஆனா ஏன்டா இதை எனக்கு இவ்வளவு நாள் சொல்லல.?" என்று கேட்டான் அவன்.

அதியன் அவனை எரிச்சலோடு பார்த்தான்.

"நாங்க சொந்தக்காரங்க இல்ல.. என் தம்பியும் உன் தங்கச்சியும் லவ் பண்றாங்க.. அந்த வகையில் பார்த்தா செங்கா எனக்கு தங்கச்சிதான் ஆகறா.. அதனால நடக்காத ஒன்னை பத்தி பேசுறதை விட்டுட்டு உன் வேலையை போய் பாரு.." என்றான் அதியன்.

"என் தங்கச்சியை உன் தம்பிக்கு கட்டி தரதா நான் எப்ப சொன்னேன்.? அவங்க இரண்டு பேரும் கட்டிக்க போறது கிடையாது.. இதனால உனக்கும் செங்காவுக்கும் நடுவுல எந்த பிரச்சனையும் இல்ல.." கோபத்தோடு விஷ்வா சொல்ல அவனை வெறுப்பாக பார்த்தான் அதியன்.

"ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்புமா இருக்காதடா.. என் தம்பியும் நல்ல பையன்தான்.. அவனும் ரக்சனாவும் ரொம்ப வருசமா லவ் பண்றாங்க. பாவம் அவங்களை பிரிச்சி வைக்காத.. இன்னைக்கு வந்த மச்சினியோட ஆசையை பார்க்கற நீ ஏன் உன் கூட பிறந்தவ காதலை பத்தி யோசிக்க மாட்டேங்கற.?"

விஷ்வா சோர்வாக வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

"ரக்சனா கல்யாணத்தை பத்தி நாங்க இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியாதுடா.. அவ என் தங்கைதான். ஆனா ரத்த சொந்தம் நாங்க இல்ல. உன்னை நம்பி இந்த உண்மையை சொல்றேன். ப்ளீஸ்.. ரகசியமா வச்சிக்க. அவளோட பேரண்ட்ஸ் வேற.. இதை சொல்ல கூட எனக்கு மனசு வரல. அந்த அளவுக்கு நான் அவ மேல பாசம் வச்சிருக்கேன். இந்த உண்மை வெளி உலகத்துக்கு தெரியறதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்ல.. அவளை பெத்த அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவங்க. அது வெளியே தெரிஞ்சா எல்லாரும் அவளை கிண்டல் பண்ணுவாங்க. ரக்சனாவை என் கூட பிறந்தவளா நினைச்சிட்டு இருக்கேன் நான். ஆனா அவ வேற வீட்டு பொண்ணுங்கற உண்மையை என்னால ஏத்துக்க முடியல. அவளோட அப்பா ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும்போதும் எங்க அவக்கிட்ட உண்மையை சொல்லி அவளை தன்னோடு கூட்டிட்டு போயிடுவாரோன்னு ரொம்ப பயமா இருக்கும். நேத்து அவளுக்கு தான் யாருங்கற உண்மை தெரிஞ்சிடுச்சி . அவ எங்கே எங்களை விட்டுட்டு அவளோட பயாலஜிக்கல் பேரண்ட்ஸ்க்கிட்ட போயிடுவாளோன்னு ரொம்ப பயமா இருக்கு.." என்றவன் தலையை பிடித்தபடி தரையை பார்த்தான்.

அவன் சொன்ன விசயம் அதியனுக்கும் அதிக அதிர்ச்சியை தந்து விட்டது.
விஷ்வா ரக்சனா மீது கொண்ட பாசம் எந்த அளவிற்கானது என்பதை அதியன் அறிவான். சின்ன வயதிலிருந்தே விஷ்வாவிற்கு ரக்சனா என்றால் உயிர்.
அவளுக்கு காய்ச்சல் வந்தால் இவனுக்கும் காய்ச்சல் வரும். உடன் பிறந்தவர்கள் பலருக்கும் உள்ள ஒற்றுமை இது என இவ்வளவு நாள் எண்ணி வந்த அதியனுக்கு அவள் இவனது சொந்த தங்கை இல்லை என்று விசயம் மிகவும் ஆச்சரியத்தை தந்தது.

"செங்கா மேல இருக்கற பாசத்துல நீ இப்படி ஒரு பொய்யை சொல்றியா.?" என சந்தேகமாக கேட்டான் அவன்.

விஷ்வா அவனை நிமிர்ந்து பார்த்தான். அவனது கண்கள் கலங்கி இருந்தது.

"இது பொய்யா இருக்கணும்ன்னுதான் நானும் ஆசைப்படுறேன் அதியா. ஆனா உண்மையை மாத்துற சக்தி என்கிட்ட இல்ல. நேத்து உண்மை தெரிஞ்ச நேரத்துல இருந்து ரக்சனா யோசனையாவே இருக்கா. அவளோட நினைப்புல என்ன ஓடுதோன்னு நினைக்கும்போது ரொம்ப பயமா இருக்கு.." என்றான் அவன். அவனை பார்க்கும்போது அதியனுக்கு பாவமாக இருந்தது. அவன் அருகே சென்று அவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
"அவ அப்படியெல்லாம் உன்னை விட்டுட்டு போக மாட்டாடா.. அதுவும் இல்லாம அப்படி போனாதான் என்ன.? அவ பெண்பிள்ளைதானே.? அவளை நாளைக்கு கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்பி வைக்கதானே போறிங்க.? அப்படி புருசன் வீட்டுக்கு போறதுக்கு பதிலா இப்படி அவளோட பேரண்ட்ஸ் வீட்டுக்கு போயிருக்கான்னு நினைச்சிக்க.." என்றவனை விலக்கினான் விஷ்வா.

"அவளை கல்யாணம் பண்ணி நாங்க எந்த வீட்டுக்கும் அனுப்ப போறது இல்ல. எவனா இருந்தாலும் அவளை கட்டிக்கிட்டு வீட்டோட மாப்பிள்ளையா வரட்டும்.." என்று அவன் கோபமாக சொல்ல அதியனுக்கும் கோபமாக வந்தது.
"தங்கச்சி பாசத்துல கண் மண் தெரியாம உளறாதே. என் தம்பி வீட்டோட மாப்பிள்ளையா வர மாட்டான். நீயும்தான் கல்யாணம் பண்ணிக்க போற. அதுவும் பசங்க இல்லாத வீட்டுல பொண்ணு கட்ட போற.. அவங்க வீட்டுக்கு நீ வீட்டோட மாப்பிள்ளையா போவியா.?" என்றான் கைகளை கட்டியபடி.
"வீட்டோட மாப்பிள்ளையா போக மாட்டேன். ஆனா அவங்களை என்னோடு கூட்டி வந்து வச்சிக்குவேன்..:" என அவன் சொல்ல அதியனுக்கு இன்னும் கடுப்பாக இருந்தது.

"தேவையில்லா விசயத்தை பேசுறதுக்கு பதிலா மரியாதையா போய் செங்காகிட்ட உன் காதலை சொல்லி உன் லைப்பை காப்பாத்திக்கற வழியை பாரு.." என்றான் விஷ்வா.

இல்லையென தலையசைத்தான் அதியன். "எனக்கு என் தம்பி லைப் ரொம்ப முக்கியம். நீ அவனுக்கும் ரக்சனாவுக்கும் கல்யாணம் பண்ணி வை. அப்புறம் நான் செங்காகிட்ட பேசறேன்.." என்றான் பிடிவாதமாக.

விஷ்வா அவனை முறைத்தான். "பாசத்துல ரொம்ப பொங்கற போல.. ஆனா இன்னும் வேலைக்கு கூட போகாத உன் தம்பிக்கு நீ கேட்டன்னு உடனே என் தங்கச்சியை கட்டி வைக்கிற அளவுக்கு முட்டாள் இல்ல நான். அதுவும் இல்லாம என் தங்கச்சி கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணினா நேரா எங்கிட்டயே வந்து சொல்வா.. உன் தம்பியை மாதிரி தூதூ விட மாட்டா.." என்றவன் எழுந்து நடந்தான்.

"என் தம்பி ஒன்னும் தூதூ விடல. நானேதான் கேட்கறேன். என் தம்பிக்கு நாளைக்கே வேலைக்கு ஏற்பாடு பண்றேன். மரியாதையா அவனுக்கு உன் தங்கச்சியை கட்டி வை.." என்று அதியன் சொல்ல வாசற்படி அருகே சென்ற விஷ்வா அங்கேயே நின்று திரும்பி பார்த்தான்.

"வேலையை வாங்கி கொடு.. ஆனா உங்க அப்பா அம்மாவை வந்து சம்பந்தம் பேச சொல்லு. வருங்காலத்தில உண்மை தெரிஞ்ச பிறகு கிரிஸ்டியானிட்டி பொண்ணு எங்களுக்கு ஒத்து வராதுன்னு எதாவது சொல்லி வச்சாங்கன்னா அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன். கேர்ஃபுல்." என்றவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

அதியன் சென்றவனின் முதுகை பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்தான். 'கிருஸ்துவ பெண்..!? செழியா உனக்கு சோதனை மேல சோதனைடா. எப்படிதான் அம்மா அப்பாக்கிட்ட சம்மதம் வாங்க போறியோ.?' என்று பெருமூச்சு விட்டான்.

ரக்சனா உண்மையில் விஷ்வாவின் தங்கை இல்லையெனில் இனி தனது ஆசைக்கும் எந்த தடங்கலும் இல்லை என்பது அவனுக்கு புரிந்தது. இருண்ட உலகம் ஒன்றில் மெல்லிய ஒளிக்கற்றை ஒளிர ஆரம்பித்ததை போல மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு.

செங்கா சீனுவை திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் சொல்லியது இவனுக்கு வருத்தமாக இருந்தது. 'ஏன் இப்படி அவ லூசு மாதிரி பண்ணுறா.?' என்று மனதோடு புலம்பினான்.

தன் ஃபோனை எடுத்து பொன்னாவிற்கு அழைத்தான்.

"ஹலோ பொன்னா.. கேட்கறனேன்னு தப்பா எடுத்துக்காத.. உன் சிஸ்டர் ஃபோன் நம்பரை எனக்கு மெஸேஜ் பண்றியா.?" என்றான் தயக்கமாக.

எதிர் முனையில் மௌனம் விளையாடியது.

"ஹலோ.. பொன்னா.." என்றான்.

"ஏய்.. கழுதை உனக்கு போன் வந்திருக்கு.." என்று செங்கா மறுமுனையில் கத்துவதை கேட்டவன் "செங்கா.. நான் உன்கிட்டதான் பேசணும்.. ப்ளீஸ் ஃபோனை தந்துடாத.." என்றான் அவசரமாக.

மறுமுனையில் மீண்டும் மௌனம் தொடர்ந்தது.

"செங்கா.. நீ ஏன் சீனுவை கட்டிக்கறதா சொன்னன்னு தெரியல. அதுக்கு நான் காரணமா இருந்தா சாரி.." என்றான்.

எதிர்முனையில் செங்கா செருமிக் கொள்வது கேட்டது. "நீ காரணம் இல்ல. எனுக்கு என் மாமனை புடிச்சிருந்திச்சின்னு கேட்டன்.." என்றாள் உணர்ச்சிகளற்ற குரலில்.

அதியன் அவள் சொன்னதை கேட்டு நெற்றியை தேய்த்தான். "உனக்கு நிஜமா உன் மாமாவை பிடிச்சிருக்கா.?" என்றான் அழுத்தமாக.

அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின்னர் "ஆமா.." என்றாள்.

"அப்படின்னா என்னை பிடிக்கலையா.?"

"உனுக்குதான் என்னை புடிக்கல.." அவள் சட்டென இப்படி சொல்லவும் இவனுக்கு வருத்தமாக இருந்தது.‌

"எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா.?" என்றான் மீண்டும் அவன். அவன் சொன்னது அவளுக்கு ஆச்சரியத்தை தந்து விட்டது போலும். சில நொடிகள் எந்த சத்தமும் வரவில்லை எதிர் பக்கத்தில் இருந்து.

"உனக்கு என்னை பிடிச்சிருக்கா செங்கா.?" என்றான் அவன் மீண்டும்.

"புடிச்சிருந்தா மட்டும் என்ன செய்றது.? இது ஒத்து வராத ஒன்னுன்னு எனுக்கு இன்னைக்குதான் புரிஞ்சது. நான் வேற நீ வேற. இரண்டு பேருக்கும் நடுவுல ஓராயிரம் வித்தியாசம். மலைக்கும் மடுவுக்கும் நடுவுல வித்தியாசம் இருந்தா பரவால்ல. ஆனா இது மலைக்கும் பள்ளத்துக்கும் நடுவுல இருக்கற வித்தியாசம். என் வாழ்க்க வேற. உம்படைய வாழ்க்க வேற. இரண்டும் ஒன்னு சேர்ந்தா ஊர் சிரிக்கும். அதனால நீ உம்படைய வேலையை பாரு. நான் என் வாழ்க்கையை பாக்கறன். என் போனு நம்பரு கேட்டு பொன்னாளுக்கு போனு பண்ணாத.." என்றவள் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

அவள் இப்படி சொல்லி விட்டு போனை வைத்தது அதியனுக்கு குழப்பத்தை மட்டும் அதிகப்படுத்தியது.

அவள் சொன்னது அனைத்தையும் மீண்டும் மீண்டும் யோசித்தான். இரவு தூங்கும் போது வந்த கனவில் கூட அவளின் வார்த்தைகளைதான் யோசித்தான்.

மறுநாள் விடிந்ததும் தனது பயண பையை எடுத்து கொண்டு தனது அறையை விட்டு வெளியே வந்தான் அதியன்.

ரக்சனா அப்போதுதான் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள்‌. வராண்டாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து காப்பியை பருகியபடியே ஃபோனில் பொன்னாவுக்கு காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்த விஷ்வா இரு திசையில் இருந்து வந்த அதியனையும் ரக்சனாவையும் மாறி மாறி பார்த்தான்.

"இரண்டு பேரும் சேர்ந்து எங்கேயாவது ஷாப்பிங் போக போறிங்களா.?" என்றான் யோசனையோடு.

இல்லையென தலையசைத்தபடி ரக்சனாவை பார்த்தான் அதியன்.

"என் பிரெண்ட் வீட்டுக்கு போறேன் அண்ணா நான்.." என்றாள் ரக்சனா.

விஷ்வா ஃபோனை நாற்காலியில் வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

"இங்கே பாரு ரக்சனாம்மா. நான் உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கேன். அதே அளவுக்கு உன் காதலையும் கூட மனசார மதிக்கிறேன். ஆனா கல்யாணம் பண்ணும் முன்னாடி செழியனோடு சேர்ந்து அடிக்கடி ஊர் சுத்தாத. இதனால உனக்குத்தான் நாளைக்கு பிரச்சனை வரும்.." என்றான் மென்மையான குரலில். இரவெல்லாம் யோசித்து பார்த்ததில் ரக்சனாவுக்கு செழியனை திருமணம் செய்து வைப்பதில் தான் தடை சொல்வதில் நியாயம் இல்லையென்றே அவனுக்கு தோன்றியது. அவர்களது காதலை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள உடனே மனம் வரவில்லை என்றாலும் கூட அவர்களின் காதலை ஒதுக்கி தள்ளி அவனுக்கு மனம் வரவில்லை.

ரக்சனா அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள். "இல்ல அண்ணா.. அப்படி ஊர் சுத்த மாட்டேன் நான்.." என்றவள் அவனை விட்டு விலகி நின்றாள்.
"சீக்கிரம் வந்துடுறேன் அண்ணா.." என்றவள் வெளியே நடந்தாள்.

வாசல் கேட்டை தாண்டி கண் மறையும் தூரம் வந்தவள் அங்கே பைக்கில் அமர்ந்திருந்த செழியனின் அருகே வந்தாள். "நான் சொல்ற அட்ரஸ்க்கு போ.." என்றவள் பைக்கின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.

அதியனின் தோளில் இருந்த பையை பார்த்த விஷ்வா "டூர் எங்கேயாவது போக போறியாடா.?" என்றான்.

அவன் தன் தங்கையோடு பேசியதை கேட்டதிலேயே புத்தி தெளிந்த அதியன் "ஒரு சின்ன வேலை. அதான் வெளியூர் போறேன். ஆபிஸை இரண்டு வாரத்துக்கு நீ பார்த்துக்க.." என சொல்லி நண்பனின் தோளில் தட்டி தந்தான்.

"நான் எப்படிடா ஒருத்தனும் பார்த்துக்க முடியும்.?" என்று சிணுங்கலாக கேட்டவனின் கன்னம் கிள்ளியவன் "நீ ஹாஸ்பிட்டல்ல இருந்தபோது நானே ஒருத்தனும் பார்த்துக்கிட்டேன் இல்லையா‌.? இப்ப நீ பார்த்துக்க.. பிசினஸ் பார்ட்னர்ஸ்ன்னா ஈக்வெல் ரைட்ஸ் மட்டுமில்ல ஈக்வெல் வொர்க்கும் இருக்கணும். உனக்கு ஹெல்ப் பண்ண செழியன்கிட்ட சொல்லி இருக்கேன். அவனை திட்டாம முறைக்காம அன்பா நடத்தி வேலை வாங்கு. டாடா.." என்றவன் காயத்ரியிடம் சொல்லி கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

"எங்கே போறேன்னு சொல்லாமலேயே போறானே.." என்று குழம்பினான் விஷ்வா.

"ஒரு வாரத்துக்கு நானும் ஆதிவாசியா வாழ போறேன்.." என்று காற்றோடு சொல்லியபடி காரை ஸ்டார்ட் செய்தான் அதியன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1187
LIKE
COMMENT
SHARE
FOLLOW


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 6 months ago
Posts: 221
Topic starter  

செங்கா 32

ரக்சனா சொல்லிய வீட்டின் முன் தன் பைக்கை நிறுத்தினான் செழியன்.

"இது யாரோட வீடு பேபி.?" என்று கேட்டபடி பைக்கிலிருந்து இறங்கினான் செழியன்.

அவன் பக்கம் திரும்பி நின்றாள் ரக்சனா. "உன்கிட்ட ஒரு உண்மையை சொல்லணும் செழியா நான்.." என்றாள் தயக்கமாக.

"சொல்லு பேபி.." என்றவன் கண் முன் தெரியும் வீட்டை யோசனையோடு பார்த்தான்.

"நான் ஒரு தத்து குழந்தைன்னு சொன்னா நீ நம்புவியா.?" என அவள் கேட்க இவன் ஆச்சரியத்தோடு இவளை பார்த்தான்.

"ஆமா செழியா நான் ஒரு தத்து குழந்தை.. காயத்ரி அம்மா என்னோட சொந்த அம்மா இல்ல.. விஷ்வா அண்ணா என் கூட பிறந்தவன் இல்ல.." என்றாள் சோகம் நிரம்பிய குரலில்.

"தத்து குழந்தையா நீயா.? நிஜமாவா.? ஆனா எப்படி.? விஷ்வா அண்ணாவும் காயத்ரி அம்மாவும் உன் மேல உயிரா இருக்காங்களே.." என்றவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"சாரி பேபி.. உன்னை குப்பை தொட்டியில் வீசிட்டு போனவங்களுக்கு உன்னோட அருமை தெரியல.. நீ அதை நினைச்சி கவலைப்படாத.. நான் எப்பவும் உனக்காக உன் கூடவே இருப்பேன்.." என்றான்.

அவனை விட்டு விலகி நின்றவள் "என்னை குப்பையில் போட்டுட்டு போகல செழியா.." என்றாள் சோகமாக.

"ஓ.. அவங்க உன் அம்மாக்கிட்ட தத்து தந்துட்டு போயிட்டாங்களா.?" என்றான் வருத்தமாக. "ஆனா நீ கவலைப்படாத பேபி.. உன்னை அவங்க விட்டுட்டு போனா என்ன.? உனக்கு நாங்க இத்தனை பேர் இருக்கோம் இல்லையா.?" என்றான்.

"இப்ப விசயம் அவங்க என்னை தத்து தந்தது இல்ல.. ஏன் தத்து தந்தாங்கங்கறதுதான்.. இது என்னை பெத்த அம்மா அப்பா வீடு. இப்ப நான் அவங்களை பார்க்கலாம்ன்னு வந்திருக்கேன்.. ஆனா தனியா போய் அவங்களை மீட் பண்ண தயக்கமா இருக்கு. அதனாலதான் உன்னை துணைக்கு கூட்டி வந்திருக்கேன்.." என்றாள் அந்த வீட்டை பார்த்துக் கொண்டே.

"தயக்கமா இருந்தா வேணாம் பேபி.. அவங்க ஏதாவது உன் மனசு வருத்தபடும்படி சொல்லிட போறாங்க.. நீ வா நாம திரும்பி போயிடலாம்.." என்றான்.

ரக்சனா மறுத்து தலையசைத்தாள். "என் கேள்விகளுக்கு அவங்க விடை சொல்லணும் செழியா.. எனக்கு உண்மையை தெரிஞ்சிக்கற ரைட்ஸ் இருக்கு.." என்றாள்.

அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தினான் செழியன். "இந்த ரிஸ்க் தேவையா பேபி.? இருக்கறதை அப்படியே விட்டுடேன்.. இவங்களை போய் பார்த்து ஏன் தேவையில்லாத டென்சனை விலை கொடுத்து வாங்கணும்.?" என்றான் கவலையோடு.

அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்ட ரக்சனா "அதுக்குதான் உன்னை கூட்டி வந்திருக்கேன் செழியா.. நீ எனக்கு துணையா வந்தா என்னால இதை மேனேஜ் பண்ண முடியும்.. " என்றாள். செழியன் அவளை பெரமூச்சோடு பார்த்தான். அவளது மன நிலை அவனுக்கும் புரிந்தது.

"சரி வா போகலாம்.." என்றவன் அவளது கையை பற்றினான். சாத்தி இருந்த கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே நுழைந்தனர் இருவரும். யாரும் கண்களில் தென்படவில்லை.

"இது என்ன பேய் பங்களாவா.? யாரையும் காணோம்.?" என கேட்டான் செழியன்.

"யாரது.?" என்று ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையில் இருவரும் திரும்பி பார்த்தனர். பூங்கோதை ஒரு அறையின் வாசலில் நின்றிருந்தாள். செழியனின் முதுகு பக்கம் நின்றிருந்த ரக்சனாவை கண்டதும் அவளது முகம் புன்னகையின் வசமானது. ஆனால் உடனே சோகமாகி விட்டாள். ரக்சனா அவளை கண்டதுமே புரிந்துக் கொண்டாள் தன்னை சில நாட்களாக பின்தொடரும் பெண்மணி இவள்தான் என்று. தன் முகத்தின் சாயலில் இருந்தே அவள்தான் தன் தாயென புரிந்துக் கொள்ள முடிந்தது அவளாலும்.

"இப்ப எதுக்கு நீ என்னை பார்க்க வந்திருக்க.? நான் ஒரு பைத்தியம்.. என் பக்கத்துல வராம அப்படியே திரும்பி போயிடு.." என்று சொன்ன பூங்கோதை முகத்தை மூடிக் கொண்டு திடீரென அழ ஆரம்பித்து விட்டாள்.

அவளது பேச்சை கேட்டு செழியன் குழம்பினான். "இவங்க ஏன் இப்படி பேசறாங்க.?" என்றான் ரக்சனாவிடம்.

"அவங்க மனநலம் பாதிக்கப்படவங்கன்னு அம்மா சொன்னாங்க செழியா.." என்றாள் மெல்லிய குரலில் ரக்சனா.

செழியன் பரிதாபமாக பூங்கோதையை பார்த்தான்.

"யார் வந்திருக்காங்க.?" என கேட்டபடி ஒரு அறையிலிருந்து வந்தார் லாரன்ஸ். சட்டையின் மேல் பட்டனை போட்டபடி வந்தவர் ரக்சனாவை கண்டதும் ஒரு கணம் அதிர்ந்து நின்று விட்டார். ஆனால் சட்டென சுதாரித்துக் கொண்டார்.

"ரக்சனா.." என்றவர் பூங்கோதை பக்கம் பார்த்தார். "நீ உள்ளே போ.." என்றார். பூங்கோதை சிறு குழந்தையின் ஏமாற்ற முகத்தோடு உள்ளே திரும்பி போனாள். அவள் திரும்பி நடந்த போதுதான் அவள் காலில் இருந்த சங்கிலியை பார்த்தனர் ரக்சனாவும் செழியனும்.

"எதுக்கு அவங்களை சங்கிலியில் கட்டி வச்சிருக்கிங்க..?" ரக்சனா கோபமும் ஆதங்கமுமாக கேட்டாள்.

பூங்கோதை நின்று திரும்பி பார்த்தாள். ரக்சனா கண்களில் கண்ணீர் தத்தளித்தது. லாரன்ஸ் தன் நெற்றியை தடவிக் கொண்டார்.

"நீ உள்ளே போ கோதை.." என்றார் இம்முறை அதட்டலாக. அவள் உதடு பிதுங்கி அழும் நிலையானாள். அழுகை வெளிக்காட்டாமல் அப்படியே உள்ளே நடந்து போனாள்.

"இப்படி வந்து உட்காரு ரக்சனா.." என்றபடி இருக்கையில் அமர்ந்த லாரன்ஸ் தன் முன் இருந்த இருக்கையை அவர்களுக்கு கை காட்டினார்.

ரக்சனா சிவந்து போன முகத்தோடு அவர் முன்னால் வந்து அமர்ந்தாள். செழியன் அவரை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே ரக்சனா அருகில் அமர்ந்தான்.

"எதுக்காக நீ இங்கே வந்திருக்க.? காயத்ரி உன்கிட்ட உண்மையை சொல்லிட்டதா போன்ல சொன்னாங்க. ஆனா அதுக்காக நீ இங்கே தேடி வர வேண்டிய அவசியம் என்ன.? உன் வீடு அதுதான்னு நானே முடிவு பண்ணிட்ட பிறகு உனக்கு இங்கே என்ன வேலை.?" என்றார் புருவம் உயர்த்தி. அவர் பேசிய தோரணை செழியனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

"உங்ககிட்ட உரிமை கொண்டாட வரல நானும்.." என்ற ரக்சனாவுக்கு அதை சொல்லும்போதே குரல் உடைந்து விட்டது.

"எதுக்காக அவங்களை இப்படி சங்கிலியால கட்டி வச்சிருக்கிங்க.?" என்றாள் உதட்டை கடித்தபடி.

லாரன்ஸ் அவளை யோசனையோடு பார்த்தார். "அவ பைத்தியம். சங்கிலியால கட்டி வைக்கலன்னா எங்காவது ஓடிடுவா.. இவளாலதான் விஷ்வாவும் அவனோட காதலியும் ஆக்‌ஸிடென்ட் ஆனாங்க. இது உனக்கு தெரிஞ்சிருக்காது. அதனாலதான் இப்ப நானே சொல்றேன்.. இவளால மத்த மனிதர்கள் செத்து போனா வருசம் முழுக்க குற்ற உணர்ச்சியோடு நான்தான் வாழணும்.." என்றார் எந்திர குரலில்.

அவர் சொன்ன விசயம் கூட அவ்வளவாக ரக்சனா மூளையில் உரைக்கவில்லை. ஆனால் அவர் வேண்டா வெறுப்பாக தன்னிடம் பேசுவதுதான் அவளுக்கு அதிக கஷ்டத்தை தந்தது. செழியன் அவளது மனநிலை புரிந்தவன் போல அவளது கையை தன் கையோடு பற்றிக் கொண்டான்.

"என்னை.. என்னை ஏன் தத்து தந்திங்க.?" என்றாள் கலங்கும் கண்களோடு.
லாரன்ஸ் தன் தலையை கோதியபடி இருக்கையில் சாய்ந்தார். "பசியில அழுற உனக்கு என்னால பசி தீர்க்க கையாளாகலன்னு தத்து கொடுத்துட்டேன்.. எனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு வருங்காலத்துல அம்மா எனும் கதாபாத்திரத்தோடு தேவை தேவைப்படும்ன்னு உன்னை காயத்ரிக்கிட்ட தந்துட்டேன் போதுமா.?" என்றார் கோபமாக.

"நீ என்ன நினைச்சிக்கிட்டு இதை கேட்கறன்னு தெரியல ரக்சனா.. ஆனா நான் உன்னை தத்து தந்தது முழுக்க உன் நன்மைக்குதான். பைத்தியக்காரியோடு வாழ எனக்குதான் தலையெழுத்து.. காரணம் காதல்... ஆனா உனக்கு என்ன தலைவிதின்னு நினைச்சேன்.. ஒரு டம்ளர் மாட்டு பாலை வாங்கி உன் பசி தீர்க்க என்னாலயும் முடியும். ஆனா இவ பைத்தியம் முத்தி போகும் சமயத்துல உன்னை கழுத்தை நெரிச்சி கொன்னுட்டா அப்ப நான் என்ன செய்வேன்னு யோசிச்சேன்.. பார்த்த நொடியில உன் அம்மா மேல பாசம் வந்துடுச்சி உனக்கு.. நீ என்னை இத்தனை வருசமா அங்கிள்ன்னு கூப்பிடும்போது எனக்கு பாசமே இல்ல.. வலியே இல்லன்னு நினைச்சியா நீ.?" என கேட்டவர் தலையை கோதியபடி எழுந்து நின்றார்.

"உன்னை என் பொண்ணுன்னு எல்லார் முன்னாடியும் சொல்லணும்ன்னு எனக்கும் ஆசைதான் ரக்சனா. ஆனா உன்னை ஒரு பைத்தியக்காரியோட மகளா இந்த சமுதாயத்து முன்னாடி அறிமுகப்படுத்துவதில் எனக்கு துளியும் விருப்பம் இல்ல.. நீ போய் உன்னோட வாழ்க்கையை பாரு.. நான் என் வாழ்க்கையோடு வாழ்ந்துக்க பார்க்கறேன்.. எப்போதாவது மீட் பண்ணா அங்கிள் நல்லா இருக்கிங்களான்னு கேளு. அது போதும்.." என்றவர் தனது கோட்டை கையில் எடுத்தார்.

"நீ இப்ப கிளம்பலாம். எனக்கு வேலை இருக்கு.." என்றார் உணர்ச்சியற்ற குரலில். ரக்சனாவுக்கு அவர் தன்னை வலுக்கட்டாயமாக வெளியே துரத்துவதை போல இருந்தது. கண்கள் கலங்கியது. செழியன் அவளை எழுப்பி நிறுத்தினான். லாரன்ஸை முறைத்தபடியே அவளை தன்னோடு சேர்த்து வெளியே அழைத்து வந்தான்.

அந்த வீட்டின் கதவை வெளியே பூட்டினார் லாரன்ஸ். "இன்னொரு முறை இங்கே வராதே ரக்சனா.." என்றவரை முறைத்தாள் அவள்.

"அவங்களை வீட்டிலயே வச்சி பூட்டிட்டு போக போறிங்களா.? பாவம் அவங்க.." என்றாள் அவரச குரலில்.

"எனக்கு வேலை இருக்கு ரக்சனா.. இவளுக்கு தேவையான சாப்பாடு இவ பக்கத்துல இருக்கு. இவளோட ரூம்லயே தனி பாத்ரூம் இருக்கு. அவ மேனேஜ் பண்ணிப்பா.." என்றவர் கேட்டை திறந்து ஓடிவந்த டிரைவரை கண்டதும் "ஏன் லேட்டு.? சீக்கிரம் போய் காரை எடு.." என்றார்.

ரக்சனா அவரை கோபத்தோடு பார்த்தாள். சங்கிலியில் கட்டி இருக்கும் பூங்கோதையின் முகம் அவளது கண்களை விட்டு மறைய மறுத்தது.
லாரன்ஸ் அவர்கள் இருவரையும் வெளியே அனுப்பி விட்டு கேட்டையும் பூட்டிட்டு விட்டு அங்கிருந்து சென்றார். ரக்சனாவுக்கு அவர் மீது ஆத்திரமாக வந்தது.

"இவர் ரொம்ப ஓவரா பண்றாரு.. உன்கிட்ட கொஞ்சம் நல்லபடியா பேசியிருக்கலாம்.." என்றான் செழியன் கோபத்தோடு. ரக்சனா இவ்வளவு அடக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னதில் உருண்டது. கண்ணீரை துடைத்துக் கொண்டு அந்த வீட்டை பார்த்தாள்.

"பாவம் அவங்க.." என்றாள். அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்ட செழியனுக்கும் பூங்கோதையை பற்றி நினைக்கையில் பாவமாகதான் இருந்தது. ரக்சனாவின் கவலை அவனை மேலும் பாதித்தது.

"எனக்கு அவங்களோடு பேசணும் செழியா.." என்றாள் அழுகை நிறைந்த குரலில்.

செழியன் சுற்றும் முற்றும் பார்த்தான். காம்பவுண்ட் சுவரின் மீது ஏறினான்.

மேலே இருந்தபடி இவளுக்கு கை தந்தான். முதலில் ரக்சனா குழம்பி போனாள். பின்னர் அவனது கையை பற்றிக் கொண்டாள்.

இருவரும் அந்த சுவரை தாண்டி குதித்தனர். வீட்டை நோக்கி நடந்தனர். பூட்டிய கதவை தட்டி பார்த்தான் செழியன்.

"இதை எப்படி ஓபன் பண்றது.?" என குழப்பமாக கேட்டவன் ரக்சனா தந்த ஹேர்பின்னை முயற்சித்து பார்த்தான். ஆனால் கதவு திறக்கவில்லை.
வளைந்த பின்னை கீழே எறிந்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அவளை அழைத்துக் கொண்டு நடந்தான். ஒவ்வொரு ஜன்னலாக திறக்க முயற்சித்தான். ஆனால் எதுவும் திறக்கவில்லை. சமையலறை பக்கம் வந்தவன் கம்பி கதவையும் அதன் வெளியே தொங்கிக் கொண்டிருந்த பூட்டையும் கண்டு உற்சாகமடைந்தான். கல் ஒன்றை எடுத்து வந்து வெளிபக்க பூட்டை உடைத்தான். உள்பக்க பூட்டை திறக்கதான் வெகுநேரம் எடுத்து விட்டது இருவருக்கும்.

அந்த கதவினை திறந்த செழியன் ரக்சனாவை பார்த்து கட்டை விரலை உயர்த்தி காட்டினான். இருவரும் புன்னகைத்தபடி அந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.

சாரி மக்களே.. உங்க நாயகனும் நாயகியும் நாளைக்கு எபில வருவாங்க..✌️
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

word count 1102
LIKE
COMMENT
SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 6 months ago
Posts: 221
Topic starter  

செங்கா 33

செழியனும் ரக்சனாவும் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். பூங்கோதை இருந்த அறை நோக்கி ஓடினாள் ரக்சனா.

பூங்கோதை இருந்த அறையின் கதவை படபடவென தட்டினாள். பூங்கோதை கதவை திறந்து இவளை பார்த்தாள்.

"ரக்சனா.." பூங்கோதையின் குரலில் குழப்பம் இருந்தது.

ரக்சனா அறைக்குள் ஓடினாள். கட்டிலோடு இணைந்திருந்த சங்கிலியை பார்த்தாள். அதை திறக்கும் வழி தேடினாள். சாவி கண்ணுக்கு கிடைக்கவில்லை.

"இதை எப்படி உடைக்கிறது.?" செழியனிடம் வருத்தமாக கேட்டாள்.

செழியன் யோசனையோடு கிச்சனுக்கு ஓடினான். அங்கிருந்த அலமாரிகள் அனைத்தையும் திறந்து பார்த்தான். ஒரு சுத்தி ஒன்றை தேடி எடுத்துக் கொண்டு பூங்கோதை இருந்த அறைக்கு வந்தான். பூங்கோதையின் கால் விலங்கை உடைத்தான்.

"இப்படி ஏதும் பண்ணாதிங்க.. நான் பைத்தியம்.. என்னால எல்லாருக்கும் ஆபத்து மட்டும்தான் வரும்.." என்றாள் அழுகையோடு பூங்கோதை.

ரக்சனா அவளருகே வந்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

"உங்களால யாருக்கும் ஆபத்து வராது அம்மா.." என்றாள்.

பூங்கோதை மறுத்து தலையசைத்தாள். "நான் அம்மா இல்ல.. நான் ரொம்ப பைத்தியம்ன்னு லாரன்ஸ் சொல்லி இருக்காரு.. சாக்லேட்காக நான் உன்னை வித்துட்டதா சொல்லி இருக்காரு அவரு.." என்று முகம் மூடி அழுதாள்.

பூங்கோதை சொல்லியது கேட்டு ரக்சனாவுக்கும் அழுகை வந்தது. "அப்படியெல்லாம் ஏதும் இல்ல அம்மா.. நான் உங்க பொண்ணு.. நீங்க பைத்தியம் இல்ல.." என்றாள்.

செழியன் அவர்கள் அருகே வந்து நின்றான். "அடுத்து என்ன பண்ண போறா.?" என்றான்.

"தெரியல செழியா.. இவங்களை பார்த்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு.. சின்ன குழந்தை மாதிரி இருக்காங்க இவங்க.." என்றவளின் கண்களை துடைத்து விட்டான்.

"முதல்ல இவங்களை இங்கிருந்து வெளியே கூட்டிப் போகலாம்.." என்ற செழியன் அவர்கள் இருவரையும் அந்த வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

செங்கா தன் வீட்டு வாசலில் கட்டிலை குறுக்காக நிறுத்தி கட்டில் மேல் சட்டத்தின் மேலே ஏறி நின்றாள். மேலே இருந்த சிமெண்ட் அட்டை கூரையை யோசனையோடு பார்த்தபடி தன் இடது கையில் இருந்த பெயிண்ட் டப்பாவில் மூழ்கி இருந்த பிரஷை எடுத்து அந்த உள் கூரையில் வண்ணம் தீட்ட ஆரம்பித்தாள்.

வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை அவளுக்கு. அதனால்தான் அந்த கூரையை வண்ண மயமாக்க முடிவு செய்தாள். வீட்டின் சுவர்களுக்கு பூசி முடித்த பெயிண்ட்களில் மீதியானதையெல்லாம் தேடி எடுத்து வந்து வைத்துக் கொண்டு வண்ணம் பூச ஆரம்பித்தாள்.

"கட்டில் புரட்டி விட்டுட போகுது கழுதை.." என்று உள்ளே நின்றபடி கத்தினாள் பொன்னா.

செங்கா தான் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு அவளை பார்த்தாள்.
"கட்டிலும் பெரட்டாது.. காலும் பெரட்டாது.. உன்னை மாதிரி ஒதவாத எருமை இல்ல நான்.." என்று சொன்னவள் மீண்டும் வண்ணம் தீட்டுவதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கட்டிலை நகர்த்தி போட்டுக் கொண்டாள். கைகள் வேறு வலித்தது. அவ்வப்போது கைகள் இரண்டையும் உதறிக் கொண்டாள்.

பொன்னா சூடாக காப்பி போட்டு எடுத்து வந்து சகோதரியிடம் நீட்டினாள்.
"இந்தாடி.. இதை குடிச்சிட்டு வேலையை பாரு.. உழைக்கற புள்ளைக்கு காப்பி கூட போட்டு தரலன்னு வருங்காலத்தில சொல்லாம இரு.." என்றாள் கிண்டலாக.

செங்கா கட்டிலின் மேல் இருந்து கீழே தொப்பென குதித்தாள். பொன்னாவின் கையில் இருந்த காப்பியை வாங்கிக் கொண்டாள்.

"அப்பனும் அம்மாளும் வய காட்டுல இருக்காங்க.. அவுங்களுக்கு சோறு கொண்டு போ.." என்றவள் காப்பியை ஒரே விழுங்கில் குடித்து விட்டு டம்ளரை பொன்னாவை நோக்கி வீசினாள்.

"நீ எல்லாம் மனுசியா.? சுடு காப்பியை கூட ஒரேடியா குடிக்க உன்னாலதான் முடியும்.." என்று திட்டிய பொன்னா செங்கா தூக்கி வீசிய டம்ளரோடு வீட்டுக்குள் நடந்தாள்.

பொன்னா தன் தாய் தந்தையருக்கு பிற்பகல் உணவை எடுத்துக் கொண்டு வயலுக்கு சென்ற நேரத்தில் அவர்கள் வீட்டின் முன்னால் வந்து காரை நிறுத்தினான் அதியன்.

செங்கா திரும்பி பார்த்தாள். அதியன் காரிலிருந்து இறங்கினான். இவளை பார்த்தான். 'ஹாய்' என்று கை காட்டினான். செங்கா அவனை  குழப்பமாக பார்த்தாள். "இவன் ஏன் இங்கே வந்திருக்கான்.?" என்று யோசித்தபடி கட்டிலை விட்டு கீழே இறங்கி நின்றாள்.

அதியன் நெருங்கி வந்தான்.

"செங்கா நான் உன்னை பார்க்கத்தான் வந்தேன்.." என்றான்.

செங்கா தன் உடையில் ஒட்டியிருந்த வண்ணப்பூச்சுகளை பார்த்தாள்.
"என்னையா.?" என்றாள் குழப்பமாக.

"உன்கிட்ட பேசணும் செங்கா.. நான் உன்னை பிடிக்கலன்னு.." அதியன் முழுசாக சொல்லு முன் அவனை கை காட்டி நிறுத்தினாள் செங்கா.

"உனக்கு என்னை புடிக்கலன்னாதான் என்ன.? புடிச்சாதான் என்ன.? இருக்கற வேலையை வுட்டுட்டு நான்தான் அன்னைக்கு பைத்தியம் மாதிரி எதையோ கேட்டுட்டன்.. நீ அதையெல்லாம் பெருசா எடுத்துக்காத.." என்றாள்.

அதியனுக்கு அவள் சொன்னது வருத்தத்தை தந்தது. ஏதோ ஒரு விரக்தியில் அவள் பேசுவது போல தோன்றியது.

"செங்கா எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.." என்றான் அதியன்.
செங்கா அவனை பெருமூச்சோடு பார்த்தாள்.

"உனுக்கு ஆரம்பமே புரியலப்பா.. எனுக்கு இது ஒத்துவராது. இது புரிஞ்சிக்காம நான்தான் முந்திரி கொட்டை மாதிரி கேட்டுட்டன். எனுக்கு அதோ தெரியுதே அந்த காடும் மலையும் மட்டும்தான் ஒலவமே. உனுக்கு என்னை புடிச்சிருக்குதுன்னு உன்னை கட்டிக்க முடியாது என்னால.. இன்னும் நல்லா சொல்லணும்ன்னா நான் ஒரு காட்டெரும மாதிரி. யார் கைக்கும் சிக்காம கரடு கரடா சுத்திட்டு இருக்கணும். நான் ஒரு காட்டு சன்னாசி.. இதை மறந்துட்டு உன்கிட்ட வந்து உனுக்கு என்னை புடிச்சிருக்கான்னு கேட்டுட்டன். ஆனா இப்ப புத்தி வந்துடுச்சி. அதனால இதை பத்தி யோசிச்சி கொழம்பாம நீ போய் உம்படைய வேலைய பாரு.." என்றாள்.

அதியன் அவளை ஏமாற்றத்தோடு பார்த்தான். "பட் ஐ லவ் யூ.." என்றான்.
செங்கா வேறுபக்கம் முகத்தை திருப்பி கொண்டாள். அவன் இப்படி சொன்னது அவளுக்கு மனப்பாரத்தை தந்தது.

பெயிண்டால் நனைந்திருந்த கையினை பார்த்தவள் கையை திருப்பி புறங்கையால் தன் கண்களை துடைத்துக் கொண்டாள். அவன் பக்கம் திரும்பினாள்.

"எம்படைய வேர் முழுசா இந்த கரட்டு மண்ணுல பொதஞ்சி போச்சி.. அதோட ஆழம் ரொம்ப அதிகம். இதை வுட்டுட்டு வெளிய போக என்னால முடியாதுன்னு இப்பதான் புரிஞ்சுது எனுக்கு.. உனுக்கு நல்ல வாழ்க்கை இருக்கு. உனுக்கேத்த ஒருத்தியா உனுக்கு சமமான ஒருத்திய பார்த்து கட்டிக்க.. மரத்துக்கு மரம் கொரங்காட்டம் தாவிட்டு திரிஞ்சவளை கொண்டு போய் சபையில நிறுத்த பார்க்காத.. அப்புறம் மொத்த சபையும் உன்ன பாத்துதான் சிரிக்கும்.." என்றாள் வருத்தமாக.

அதியன் அவளது கையை பற்றினான். "இப்படி பேசாத செங்கா.. நீ எனக்கு சமமானவதான்.." என்றான்.

செங்கா தன் கையை உருவிக்கொண்டாள். "ஏதோ ஒரு மயக்கத்துல பேசற நீ.. நிசம் புரிய வரும்போது நீ வருத்தப்படக் கூடாதுன்னுதான் நான் இதை சொல்றன்..‌" என்றாள்.

"அதியன்.." என்று அழைத்த பொன்னாவின் குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர். பொன்னா காலி பாத்திரங்களோடு அங்கு வந்தாள். செங்கா அதியனை விட்டு ஓரடி விலகி நின்றாள்.

"நீங்க எப்ப வந்திங்க.?" என கேட்டாள் பொன்னா.

"இப்போதுதான்.." என்ற அதியன் செங்கா பக்கம் பார்த்தான்.

அவள் அதற்குள் அங்கிருந்து போய் விட்டிருந்தாள்.

"உள்ளே வாங்க.‌" என்று அழைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் பொன்னா.

"நீங்க வருவதா விஷ்வா சொல்லவே இல்ல.." என்றாள் குழப்பமாக.

அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்தவள் "கிரக பிரவேசத்துக்கு வந்த நீங்க உடனே கிளம்பி போனதுல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்ப வருத்தம்.." என்றாள்.

அதியன் ஏதும் பதில் சொல்லவில்லை. செங்கா எங்கிருக்கிறாள் என்று கண்களால் தேடினான்.

சூடான காப்பியை அவன் முன் நீட்டிய பொன்னா அவன் முன்னால் அமர்ந்தாள். "இவ்வளவு தூரம் வர காரணம் இருக்கணுமே.." என்றபடி அவனை சந்தேகமாக பார்த்தாள்.

"பாரஸ்ட் பத்தி ஒரு ஆராய்ச்சி பண்ண போறேன் நான். ஆராய்ச்சிக்கு எங்கே போகலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தபோதுதான் உங்க ஊர் நினைவுக்கு வந்தது. அதான் இங்கேயே புறப்பட்டு வந்துட்டேன்.." என்றான்.

"பாரஸ்ட் ரிசர்ச் எதுக்கு.?" பொன்னா தன் அடுத்த கேள்வியை கேட்டாள்.

"சும்மாதான்.." என்றவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு "செங்கா எங்கே.?" என்றான்.

"அந்த கழுதை இங்கே எங்கேயாவதுதான் இருக்கும்.." என்றவள் அவனது கேள்வியால் சந்தேகம் கொண்டாள்.

"நீங்க நிஜமா ரிசர்ச் பண்ண வந்திருக்கிங்களா.? இல்ல செங்காவை பார்க்க வந்திங்களா.?" பொன்னா நேரடியாக கேட்டு விடவும் அதியன் தடுமாறி விட்டான்.

என்ன சொல்வதென தெரியாமல் மொத்தமாக மறுத்து தலையை ஆட்டியவன் "அது.. நான் ரிசர்ச் பண்ணதான் வந்தேன்.." என்றான் தடுமாற்றமாக.

பொன்னா கண்களை சுழற்றினாள். "செங்கா.. ஏய் கழுதை.. உன்னை பார்க்கத்தான் இவர் வந்திருக்காரு.." என்று சொன்னவள் எழுந்து நின்றாள்.

"நைட் சமையல் களியும் கருவாட்டு குழம்பும்.. சாப்பிடுவிங்கதானே..?" என்றாள் அவனிடம் சந்தேகமாக.

அவன் உடனே சரியென தலையசைத்தான்.

பொன்னா வாசலுக்கு வந்து கூரையை பார்த்தாள். வண்ணங்களால் நிறைந்திருந்தது அந்த கூரை.

"இந்த கழுதைக்குள்ளவும் ஏதோ திறமை இருக்குதுதான் போல.." என்றாள் பொன்னா அந்த கூரையை வியந்து பார்த்தபடி. அந்த கூரையில்
நடு இரவில் நட்சத்திர குவியலை கொட்டி வைத்திருந்ததை போல வரைந்திருந்தாள் செங்கா.

பொன்னா வாசலோரம் இருந்த செடிகளுக்கு தண்ணீரை விட்டாள். வாசலின் ஓரத்து கயிற்றில் காய்ந்து கொண்டிருந்த கருவாடுகள் கோர்த்த கயிற்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள். சமையலறைக்குள் புகுந்து தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

அதியன் செங்கா எப்போது தன் கண் முன் வருவாள் என்று காத்திருந்தான். பொன்னா வீட்டில் இருந்த வேலைகளை படபடவென செய்துக் கொண்டே இருந்தாள். அவள் ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்கவில்லை.

அதியன் எழுந்தான். சமையலறைக்குள் நுழைந்தான். "உன் தங்கச்சி எங்கே.?" என்றான்.

"அவ இன்னுமா உங்களை வந்து பார்க்கல.?" என்று யோசனையோடு கேட்டாள்.

அவன் இல்லையென தலையசைத்தான்.

"அவ கோபமா இருக்கான்னு நினைக்கிறேன்.. அவளுக்கும் உங்களுக்கும் என்ன சண்டைன்னு தெரியல.. அவளுக்கு திடீர்ன்னு மூளை குழம்பிடுச்சி.. நீங்க இங்கிருந்து போன மறுநாள் சீனு மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறதா அத்தனை பேர் முன்னாடி உளறி வச்சா.. உங்க இரண்டு பேருக்கும் நடுவுல என்ன சண்டைன்னு கேட்டேன் அவகிட்ட. ஆனா அவ பதில் சொல்லல.. அவளுக்கு கோபம் வந்துட்டா சரியான ராங்கி ஆகிடுவா. எல்லாம் எங்க அப்பா தந்த செல்லம்.. ஆனா அவளுக்கு கோபம் வரும்படி நீங்க என்ன சொல்லி வச்சிங்க.? நீங்களாவது பதில் சொன்னாதான் நான் அவக்கிட்ட பேச முடியும்.." என்றாள் பொன்னா.

அதியன் தயக்கதோடு நடந்தது அனைத்தையும் சொன்னான். பொன்னா யோசித்தாள்.

"அவ பயப்படுறான்னு நினைக்கிறேன்.. உங்களை கல்யாணம் செய்துக்கிட்ட பிறகு தன்னால நகரத்துல நிலைச்சி வாழ முடியாதுன்னு நினைக்கிறா போல.‌. அவ பயமும் நியாயமானதுதான். விஷ்வாவை காதலிக்கும்போது முதல்ல எனக்கும் இந்த பயம்தான் வந்தது.." என்று பெருமூச்சு விட்டாள் பொன்னா.
அதியன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

"உனக்கு இப்படி எதுக்கு பயம் வந்தது.? சரி அதை விடு. உன் பயம் எப்படி போச்சின்னு சொல்லு.." என்றான்.

"இன்னும் முழுசா பயம் போகல அதியன். ஆனா கொஞ்சமா நம்பிக்கை வந்திருக்கு. எனக்கு துணையா விஷ்வா இருப்பாருன்னு நம்பிக்கை இருக்கு‌. அவரோட காதல் மேல இருக்கற நம்பிக்கை இது. அவரோட காதலுக்காக இந்த ரிஸ்கை எடுக்கலாம்ன்னு மனசுல ஒரு நம்பிக்கை வந்திருக்கு.." என்றாள் மென்மையாக.

"இதே நம்பிக்கை செங்காவுக்கு என் மேல வர நான் என்ன செய்யணும்.?" அதியன் ஆவலாக அவளிடம் கேட்டான்.

சிரிப்போடு அவனை பார்த்த பொன்னா "அதை உங்க பின்னாடி நிக்கறவக்கிட்ட கேளுங்க.." என்றாள்.

அதியன் திரும்பினான். செங்கா நின்றுக் கொண்டிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1148
LIKE
COMMENT
SHARE


ReplyQuote
NIVETHA
(@velavaa)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 134
 

Enna aachu sis ud podala nega 🙄 seekram vaga sis we are waiting for your arrival 🤩 

 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 6 months ago
Posts: 221
Topic starter  

செங்கா 34

ஒரு வாரமா யூடி தராதத்துக்கு சாரி மக்களே. எங்க பாட்டி போன வாரம் இறந்துட்டாங்க. அதனாலதான் ஒரு வாரமா என்னால யூடி தர முடியல.

செங்கா அதியனையும் பொன்னாவையும் பார்த்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

"இவன்தான் கற்பனை கோட்டை கட்டிட்டு இருக்கான். நீ ஏன் பைத்தியமாட்டம் ஒளறிட்டு இருக்க.?" என்று பொன்னாவிடம் கோபமாக கேட்டாள் செங்கா.
"அவன் இவன்னு என்னடி பேச்சு.. அவர்ன்னு பேசி பழகு.." கண்டிப்போடு சொன்னாள் பொன்னா.

செங்கா கசப்பாக சிரித்தாள். "உங்க இரண்டு பேருக்குமே நெசம் புரியல. நான் இப்புடிதான். அவரு இவருன்னு பேச வராது எனக்கு. அப்புடி பேசவும் புடிக்காது. என் இயல்ப மாத்த பாக்கறிங்க நீங்க. வெள்ளாடு கருப்பாதான் இருக்கும். டவுனுக்கு போனாலும் வெள்ளாடு வெள்ளையா மாறாது. என் பேச்சை மாத்திக்கிட்டு என் வாழ்க்கையை மாத்திக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு எனக்கு.? உங்க ஆசாபாசத்துக்காக நான் என் இயல்பை ஏன் மாத்திக்கணும்.?" என கேட்டவள் அங்கிருந்து வெளியே நடந்தாள்.
பொன்னா சோகத்தோடு அதியனை பார்த்தாள்.

"அவ பேசியதை மனசுல வச்சிக்காதிங்க.." என்றாள். அதியன் புரிந்தவனாக தலை அசைத்தான்.

"அவ காடும் மலையும் மட்டுமே உலகம்ன்னு நம்புறா.. மரம் மட்டைகளோட மனசை படிச்சவ அவ. ஆனா மனுசங்க மனசை படிக்க தெரியல.." வருத்தமா சொன்னாள் பொன்னா‌.

"நீ வருத்தப்படாதப்பா.. நான் அவக்கிட்ட பேசிக்கறேன்.. ஆனா உங்க அம்மா அப்பா என்னை பத்தி என்ன நினைப்பாங்கன்னுதான் தெரியல.." அதியன் குழப்பத்தோடு சொன்னான்.

பொன்னா செய்யும் வேலையை விட்டுவிட்டு இவனை பார்த்தாள்.

"எங்க அம்மாவுக்கு பையன் நல்லவனா இருக்கணும்.. ஆனா எங்க அப்பாவுக்கு பையனை செங்காவுக்கு பிடிச்சிருக்கணும். அவ்வளவுதான் அவளோட கல்யாணத்துக்கு அவங்க வச்சிருக்கும் கன்டிசன். நீங்க நல்லவரா செங்காவுக்கு பிடிச்சவரா இருந்தா எங்க அப்பாவும் அம்மாவும் உங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்க. என்னோட காதலையே எங்க அப்பா ஏத்துக்கிட்ட போது அவ காதலை ஏத்துக்க மாட்டாங்களா என்ன.?" என்றாள் நம்பிக்கையோடு.

அந்தி சாயும் வேளையில் செங்கா வயலை நோக்கி நடந்தாள். அவள் வயலுக்கு வந்ததை பார்த்த உடன் சாமிநாதன் தனது வேலையை அத்தோடு முடித்துக் கொண்டு மேட்டுக்கு ஏறி வந்தார். அவரை தொடர்ந்து கலையரசியும் வந்தாள்.
அப்பாவின் கையில் இருந்த மண்வெட்டியை வாங்கிக் கொண்டாள் செங்கா. வீடு நோக்கி நடந்தவரின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

"என்னடா ஆச்சு.? என்னமோ புதுசா பம்முற.?" சந்தேகமாக கேட்டார் சாமிநாதன்.

"விஷ்வா மாமா சேத்தாளி வூட்டுக்கு வந்திருக்கான்.." என்றாள் அவள்.

"அதியன் தம்பி வந்திருக்கா.? பொன்னா சாப்பாடு தண்ணி தந்தாளோ இல்லையோ.." என்று புலம்பிய கலையரசி அவர்கள் இருவருக்கும் முன்னால் வீடு நோக்கி நடந்தாள்.

சாமிநாதன் மகளை திரும்பி பார்த்தார். அவள் தரையில் இருந்த கற்களை அப்படியும் இப்படியும் தள்ளியபடி நிமிர்ந்து அப்பாவை பார்த்தாள்.

"எதுக்கு வந்திருக்காங்கன்னு உனக்கு தெரியுமா.?" என்றார் அவர் யோசனையோடு. அவள் தெரியாதென தலையசைத்தாள்.

அவர் அவளது தோளில் கை போட்டபடி தன்னோடு சேர்த்து அவளையும் அழைத்துக் கொண்டு நடந்தார்.

"நான் உங்க தாத்தா மாதிரி கிடையாது செங்கா. பொம்பள புள்ளைங்களா இருந்தாலும் நான் என் பொண்ணுங்களோட மனசை மதிக்கறேன். உனக்கு ஒருத்தனை பிடிச்சிருக்குன்னு சொல்லி நீ கூட்டி வந்தா அவன் நல்லவனா இருந்தா அவனுக்கும் உனக்கும் கல்யாணத்தை நடத்தி வைப்பேன். உனக்கு யாரையுமே பிடிக்கலன்னாலும் நான் உன்னை ஒருத்தனுக்கு வலுக்கட்டாயமா கட்டி வச்சி துரத்தி விட மாட்டேன். இது உன் வாழ்க்கை. உன் வாழ்க்கையோட மொத்த அதிகாரத்தையும் நான் உன் கையில தந்து ரொம்ப நாள் ஆச்சி. இதுக்கு மேல உன் வாழ்க்கையை ஆட்சி செய்ய வேண்டியது நீ மட்டும்தான். உனக்கு உதவி மட்டும்தான் நான் செய்ய முடியும். ஆனா காலம் முழுக்க உன்னோட ஒவ்வொரு நொடிகளையும் கவனத்தோடு பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உன்கிட்டதான் இருக்கு.." என்றார்.

செங்கா தரையை பார்த்தபடியே நடந்தாள்.

"மனசெல்லாம் குழப்பமாக இருக்குப்பா.." என்று சொன்ன செங்காவிற்கு உண்மையாகவே குழப்பமாகதான் இருந்தது.

"எதுவா இருந்தாலும் பொறுமையா முடிவு பண்ணும்மா.. உனக்கு வெட்டி முறிக்க இங்கே எந்த அவசர வேலையும் இல்ல.." சிரிப்போடு சொல்லிய சாமிநாதனை கண்டு அவளும் சிரித்தாள்.

அவளும் அப்பாவும் வீட்டிற்கு வந்தபோது அதியனோடு பேசிக்கொண்டு அமர்ந்திருந்தாள் கலையரசி.

சாமிநாதனை கண்டதும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றான் அதியன்.
"நல்லாருக்கிங்களா அங்கிள்.?" என்றான் அக்கறையோடு. செங்கா அவனை கண்டும் காணாதது போல தனது அறைக்குள் சென்று நுழைந்துக் கொண்டாள்.

"நல்லாருக்கேன்ப்பா.. இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க..ஏதாவது வேலையாப்பா.?" என்றார் சாமிநாதன்.

அதியன் பின்னந்தலையை தடவினான்.

"உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் அங்கிள்.." என்றான்.

சாமிநாதனை அவனை குறுகுறுவென பார்த்தார். "வாப்பா.. அப்படி ஓரமா போய் பேசலாம்.." என்று சொல்லி விட்டு வெளியே நடந்தார்.

வாசலின் ஒரு ஓரத்தில் கயிற்று கட்டிலை சாய்த்து விட்டு அமர்ந்தார் அவர். "இப்படி உட்காருப்பா.." என்றார் அதியனிடம்.

அதியன் அவர் அருகே அமர்ந்தான்.

"நீங்க என்ன பேச போறிங்க தம்பி.?" அவரே முதலில் ஆரம்பித்தார்.

"நா.. நான்.. எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி தரிங்களா.?" என்றான் சட்டென.

இவனது வேகம் கண்டு அவருக்கு சற்று திகைப்பாக இருந்தது.
"நான் நல்ல பையன்தான் அங்கிள்.. நல்லா படிச்சிருக்கேன்.. பிசினஸை நல்ல முறையில் ரன் பண்றேன்.. கெட்ட பழக்கம்ன்னு எனக்கு எதுவுமே இல்ல அங்கிள்.. இந்த மொத்த உலகத்தையும் சல்லடை போட்டு சலிச்சா கூட நீங்க என்னை மாதிரி ஒரு நல்ல பையனை பார்க்கவே முடியாது.." என்றான். 'உன்னை பத்தி நீயே ஏன்டா இவ்வளவு புகழ்ச்சியை அடுக்குற.? தற்புகழ்ச்சியில நீதான் மன்னனுக்கு எல்லாம் மன்னன் போல..' என்றது அவனது மனசாட்சி.

சாமிநாதன் அவனை யோசனையோடு பார்த்தார். "அப்புறம் ஏன் என் பொண்ணை பிடிக்கலன்னு சொல்லிட்டு போனிங்க.?" என்றார்.

அதியன் குழம்பினான். "நான் எப்ப அப்படி சொன்னேன்.?" என்றான்.

"நீங்க செங்காவை பிடிக்கலன்னு சொன்னதா அவதான் சொன்னா.." என்றார் அவர்.

அதியன் மறுத்து தலையசைத்தான். "நான் பிடிக்கலன்னு சொல்லவே இல்ல அங்கிள்.. அவ பிடிச்சிருக்கான்னு கேட்டா. ஆனா நான் பதில் சொல்லும் முன்னாடி அவளே எதையோ முடிவு பண்ணிக்கிட்டா.. இதுக்கு நான் என்ன பண்ண முடியும்.? ஆனா எனக்கு அவளை நிஜமாவே ரொம்ப பிடிக்கும்.." என்று சொன்னான் அவன்.

சாமிநாதன் பெருமூச்சி விட்டார். "எனக்கு சுத்தி வளைச்சி பேச பிடிக்கல தம்பி. அதனால நேராவே விசயத்துக்கு வரேன். ஆறு மாசம் முன்னாடி வரைக்கும் என் பொண்ணு இந்த கரடுகளை விட்டுட்டு ஒருத்தனை கல்யாணம் பண்ணுவான்னு நான் கற்பனையில் கூட நினைச்சது இல்ல. ஏனா அவ குணம் அப்படி. அவளை வீட்டுல கட்டிப்போட எங்களால முடியல. அவளோட ஆசையை கெடுக்க கூடாதுன்னு நான் ஆரம்பத்துல கொடுத்த செல்லம் இப்ப எங்களுக்கு எதிராவே திரும்பி நிற்குது. நானும் சாதாரண மனுசன்தான். எனக்கும் என் பொண்ணு நல்லபடியா கல்யாணம் பண்ணி நல்லபடியா வாழ்க்கை நடத்தி குடும்பமா வாழணும்ன்னு ஆசை இருக்கு. ஆனா இவளோட மனசை மாத்தும் வழிதான் எனக்கு தெரியல. ஆசைன்னா என்னான்னு தெரியாதுன்னு நினைச்ச என் பொண்ணு முத முறையா நீங்க அவளை பிடிக்கலன்னு சொன்னதை நினைச்சி அழுதா.. எல்லா தந்தைகளும் காதலுக்கு எதிரி இல்ல. நானும் உங்க வயசை கடந்து வந்தவன்தான். நானும் காதலிச்சி கல்யாணம் பண்ணவன்தான். உங்க மேல இருக்கற நம்பிக்கையை விட எனக்கு என் பொண்ணு மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு. என் பொண்ணு உங்க காதலுக்கு சம்மதிச்சிட்டா அப்புறம் உங்க அம்மா அப்பாவை வந்து பொண்ணு கேட்க சொல்லுங்க. நான் கல்யாணம் பண்ணி தரேன்.." என்றார்.

அவர் சொன்னது கேட்ட பிறகே அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனாலும் உடனடியாக சம்மதித்து விட்டாரே என்று சிறு பயமும் இருந்தது. அவரோ தன் மகளும் குடும்பமாக வாழ போகிறாள் என்ற சந்தோசத்தில் இருந்தார்.

"ஒரு சின்ன பர்மிசன் தரிங்களா அங்கிள்.?" தயக்கமாக கேட்டான் அதியன்.
"என்னப்பா.?" என்றார் அவர்‌.

"இந்த முறை செங்கா காட்டுக்கு போகும் போது நானும் அவளோடு போக உங்க சம்மதம் வேணும்.." என்றான்.

சாமிநாதன் அதிர்ச்சியோடு அவனை பார்த்தார். "என் பொண்ணை டவுனுக்கு கூட்டி போய் அவளுக்கு வாழ்க்கையை கத்து தருவிங்கன்னு பார்த்தா நீங்களும் காட்டுக்கு போறேன்னு சொல்றிங்க..?" என்றார் அவர் அதிர்ச்சி மாறாமல்.

"அப்படி இல்ல அங்கிள்.. அவளுக்கு என் மேல நம்பிக்கை வரணும்.. அதுக்காகதான் நான் அவளோடு சேர்ந்து அவளோட வாழ்க்கையை வாழ ஆசைப்படுறேன்.." என்றான்.

"என்னம்மோ பண்ணுங்க.." என்று சலிப்பாக சொல்லி விட்டு எழுந்து நின்றார் அவர்.

"உங்களுக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கையா அங்கிள்.? கேட்டவுடனே அவளோடு நானும் காட்டுக்கு போக சம்மதம் சொல்லிட்டிங்க.!?" என்றான் ஆச்சரியத்தோடு. 'இந்த கேள்வி இப்ப ரொம்ப முக்கியமா.?' என கேட்டது அவனது மனம்.

சாமிநாதன் சிரித்தார். "ஏன்ப்பா இப்படி ஆச்சரியப்படுறிங்க.? காட்டுல நீங்களும் என் பொண்ணும் தனியா ஒன்னும் இல்ல.. எத்தனையோ ஜீவராசிகள் இருக்கு.. சிங்கம் புலியே என் பொண்ணுக்கிட்ட தோத்துதான் ஓடும். அங்கே பாதுகாப்பு அவளுக்கு தேவையில்ல. உங்களுக்குதான் தேவை. அவளோட முழு பலமும் காட்டுலதான் இருக்கு. அதனால காட்டுக்குள்ள இருக்கும் போது எதையாவது ஏடாகூடமா பேசி அவளுக்கு கோபத்தை கிளப்பிடாதிங்க.. உங்களை அங்கேயே புதைச்சிட்டு வந்து அவரு அப்பவே கிளம்பிட்டாருன்னு இங்கே சொல்லிடுவா.." என்றார் அவனின் காதோரம்.
அவர் விளையாட்டாக சொல்லுகிறாரோ என்று எண்ணினான் அதியன். 'உன் மேல இருக்கற நம்பிக்கையோ இல்ல அவ மேல இருக்கற நம்பிக்கையோ.. அவரே பர்மிசன் கொடுத்த பிறகு எதுக்கு இப்படி கேள்வி கேட்டு உன் மனசுல இல்லாத கெட்ட எண்ணத்தை அவரே யோசிக்கும்படி பண்ற.?' அவன் மனம் மீண்டும் திட்டியது.

"ரொம்ப யோசிக்காதிங்க தம்பி.. என் பொண்ணு இத்தனை வருசமா காட்டுலதான் இருக்கா‌. எத்தனையோ இரவுகளில் என் பொண்ணு இப்ப என்ன பண்றாளோ.. எந்த மிருகத்திடமாவது மாட்டிக்கிட்டாளோ.. சட்டத்துக்கிட்ட இருந்து தப்பிச்சி நாட்டில இருந்து ஓடி வந்த ஏதாவது ஒரு சைக்கோ கொலைக்காரன் இந்த காட்டுக்குள்ள புகுந்து என் மகளை பார்த்துடுவானோ.. இப்படி எத்தனையோ பயம் இருந்திருக்கு.. அது முன்னாடி ஒப்பிடும்போது கட்டிக்க ஆசைப்பட்டு அவளோடு காட்டுக்குள்ள போற உங்களை நினைச்சி சந்தேகப்பட ஏதும் இல்ல. என் பொண்ணு ஒரு வாரத்துக்கு கொஞ்சம் பத்திரமா இருப்பான்னு சின்ன நம்பிக்கை வேணா இருக்கும்.." என்றார். அவரின் இத்தனை நாள் பயத்தை கேட்டவனுக்கு அவரை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

"தேங்க்ஸ் அங்கிள்.." என்று அவரை கட்டிக் கொண்டான். "நான் நிஜமாவே உங்களுக்கு ஒரு நல்ல மருமகனா இருப்பேன். உங்களோட மகனாவும் இருப்பேன்.." என்றான் அதீத சந்தோசத்தில்.

அவர் புன்னகையோடு அவனது முதுகை வருடி விட்டார். "சின்ன பிள்ளைங்க அவங்க ஆசைப்பட்ட மாதிரியே நல்லா வாழ்ந்தா எங்களுக்கும் சந்தோசம்தான்ப்பா.." என்றவர் வீட்டுக்குள் நடந்தார்.

அவரது நம்பிக்கையை பெற்று விட்டோம் என்ற சந்தோசம் அவனுக்கு அதிகமாக இருந்தது. தாள இயலா சந்தோஷத்தோடு விஷ்வாவுக்கு ஃபோன் செய்தான் அவன்.

"ஹலோ.." என்ற விஷ்வாவின் குரலில் சிறு கோபம் இருந்தது. ஆனால் அதை அறிந்துக் கொள்ளும் அளவுக்கு அதியனுக்கு பொறுமை இல்லை.

"நான் ஒரு வாரத்துக்கு செங்காவோடு சேர்ந்து காட்டுக்கு போக போறேன்.. அங்கிள் எனக்கு அனுமதி தந்துட்டாரு.. அவருக்கு என் மேல இவ்வளவு நம்பிக்கை இருக்கும்ன்னு நான் நினைச்சி கூட பார்க்கல.." பூரிப்போடு சொன்னான் அவன்.

"ரொம்ப ஆணவம் வேணாம்.. உனக்கு அவரை பத்தி இன்னும் முழுசா தெரியல அவ்வளவுதான். அப்பாவி போல இருக்கற அவர்கிட்ட நம்ம இரண்டு பேரோட ஜாதகமுமே இருக்கு.." என்றான் விஷ்வா.

"என்னடா சொல்ற நீ.?" என்று குழப்பமாக கேட்டான் அதின்.

"இந்த மூணு மாச கேப்ல நாலு வேற வேற இன்வெஸ்டிக்கேட்டர்க்கிட்ட விசாரிச்சிருக்காரு என்னை பத்தி. அவங்க என்னோடது மட்டுமில்லாம என் பிரெண்ட்ஸ் என் பேமிலின்னு மொத்த பேரோட லைஃப் ஹிஸ்ட்ரியுமே தேடி துருவி எடுத்து அவர்கிட்ட கொடுத்திருக்காங்க.. இல்லன்னா அவர் எனக்கும் புவிக்கும் அவ்வளவு ஈஸியா கல்யாணம் சம்பந்தம் பேசிடுவார்ன்னு நினைக்கிறியா.?" என்றான் அவன்.

விஷ்வா சொன்னது கேட்டு இவனுக்கு நெஞ்சம் குப்பென அடித்தது.

"இதென்ன புதுசா இருக்கு.?" என்றான் அதிர்ச்சியோடு.

"டேய்.. அவரு தன் வாழ்நாள்ல பாதியை நகரத்துலயும் பாதியை கிராமத்திலயும் வாழ்ந்திருக்காரு.. மனுசங்க மேல எவ்வளவு நம்பிக்கை வைக்கணும்.. மனுசங்களை எவ்வளவு தூரம் வரைக்கும் சந்தேகப்படணும்ன்னு அவருக்கு ரொம்ப நல்லா தெரியும்.. அதனால நீ உன்னை நினைச்சே ரொம்ப பெருமை பட்டுக்காத.." என்றான் எரிச்சலாக.

"ஏன்டா இப்படி எரிச்சலா பேசுற..? நல்லாதானே இருக்க.?" அதியன் குழப்பமாக கேட்டான்.

"நீயும் உன் தம்பியும் இருக்கற வரைக்கும் நான் எப்படிடா நல்லா இருப்பேன்..? உன் தம்பி அவனோட வருங்கால மாமியாரை இழுத்துட்டு ஓடிட்டான்டா.." என்றான் விஷ்வா எரிச்சல் நீங்காமல்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
Word count 1262
VOTE
COMMENT
SHARE
FOLLOW


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 6 months ago
Posts: 221
Topic starter  

செங்கா 35

விஷ்வா சொன்னதை கேட்டு குழம்பினான் அதியன்.

"அவன் எதுக்குடா காயத்ரிம்மாவை இழுத்துட்டு ஓடப்போறான்.? என் தம்பி ரொம்ப நல்ல பையன் பார்த்துக்க.. இப்படி அனாவசியமா பழி போடாதே.." என்றான்.

"உன் தம்பி பூங்கோதை ஆன்டியை இழுத்துட்டு ஓடியிருக்கான்.. அவங்க வீட்டுக்காரர் இங்கே வந்து என்கிட்ட கத்திட்டு இருக்காரு.. செழியன், ரக்சனா இரண்டு பேரும் சங்கிலியில் கட்டிப்போட்டு வச்சிருந்த அந்த ஆன்டியை சங்கிலியை உடைச்சிட்டு எங்கேயோ கடத்திட்டு போயிருக்காங்க.. இன்னும் அரை மணி நேரத்துல அவங்க மனைவி இருக்கற இடம் எங்கேன்னு தெரியலன்னா செழியன் மேல போலிஸ் கம்ப்ளைண்ட் தரப்போறதா சொல்லி மிரட்டிட்டு இருக்காரு.. அவனுக்கு எதுக்கு இந்த வேலை.? ஆரம்பிக்கும் முன்னாடியே இவன் இப்படி செஞ்சா அப்புறம் அவர் எப்படி ரக்சனாவை இவனுக்கு கல்யாணம் பண்ணி தருவாரு.? உன் தம்பி காலத்துக்கும் சன்னியாசிதான் பார்த்துக்க.." என அவன் சொல்ல இங்கே இவன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"இதை முதல்லயே தெளிவா சொல்லமாட்டியா.? மாமியாரை இழுத்துட்டு ஓடிட்டான்னு நீ சொன்னதும் நான் ஏதேதோ நினைச்சிட்டேன்.. பைத்தியக்காரா.." என்றான் அதியன்.

"உனக்கென்னடி.? ஜாலியா போய் மாமனார் வீட்டுல உட்கார்ந்திருக்க.. உன் தொம்பிக்காரன் லவ்வரோடு சேர்த்து மாமியாரையும் இழுத்துட்டு ஓடிட்டான்.. இங்கே லாரன்ஸ் அங்கிள்கிட்ட கண்டமேனிக்கு நான்தானே திட்டு வாங்கறேன்.?" என்றான் விஷ்வா கோபத்தோடு.

அதியன் சிரித்தான். "இங்க பாரு விஷ்வா.. உனக்காக நானும் நிறைய முறை ரிஸ்க் எடுத்திருக்கேன்.. என் தம்பிக்காகவும் நிறைய கவலைப்பட்டுட்டு இருந்திருக்கேன். ஆனா இனி எனக்கு உங்களை நினைக்க நேரம் இல்ல.. நீங்க இரண்டு பேருமே மீசை வச்ச ஆண்கள்தான். அதனால உங்க பிரச்சனையை நீங்களே பார்த்துக்கங்க.. அப்புறம் அந்த லாரன்ஸ் அங்கிள்கிட்ட சொல்லிடு.. என் தம்பி மேல அவர் கேஸ் தந்தா அப்புறம் அவர் காலத்துக்கும் தன் மனைவியையோ மகளையோ கண்ணுல கூட பார்க்க முடியாதுன்னு.. சங்கிலியில கட்டிப்போட்டு வைக்க மனுசங்க என்ன நாயா.? உன் பேச்சு திறமையை என்கிட்ட காட்டாம அவர்கிட்ட காட்டு.." என்றவன் ஃபோன் இணைப்பை துண்டித்தான்.

செழியனுக்கு அழைத்தான். அவன் இரண்டாவது ரிங்கிலேயே ஃபோனை எடுத்தான்.

"டேய்.. எங்கடா இருக்க.?" என்றான் அதியன் கோபமாக.

"போலிஸ் ஸ்டேசன்ல அண்ணா.." என்றான் அவன்.

"அதுக்குள்ள போலிஸ் உன்னை பிடிச்சிட்டாங்களா.?" பதட்டமாக கேட்டான் அதியன்.

"என்னை எதுக்கு பிடிப்பாங்க.? நான் வக்கில் லாரன்ஸ் மேல கேஸ் தர வந்திருக்கேன். அவர் தன் மனைவியை சங்கிலியில் கட்டிப்போட்டு ரூம்ல அடைச்சி வச்சிருந்தாரு.. அதனால்தான் அவர் மேல கேஸ் கொடுக்க வந்திருக்கோம் நானும் ரக்சனாவும்.." என்றான் செழியன்.

"அடப்பாவி இது என்னடா தனி ரூட்டு.?" என்று அதிர்ச்சியோடு கேட்டான் அதியன்.

"மனநலம் பாதிக்கப்பட்டவங்களை சங்கிலியால கட்டி வைக்க கூடாது அண்ணா.. ரொம்ப தப்பு.. அதுவும் இல்லாம அவங்க காலுல சங்கிலி இருந்ததை பார்த்ததும் ரக்சனா எப்படி அழுதா தெரியுமா.? பாவம் இல்லையா அவளும்.? அதனாலதான் கம்ப்ளைண்ட் தர வந்திருக்கோம்.." என்றான் அவன்.

"சரிடா.. எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க.." என்ற அதியன் அழைப்பை துண்டித்துக் கொண்டான். தம்பி தன் புத்தியை பயன்படுத்துகிறான் என்பது அவனுக்குள் சிறு நிம்மதியை தந்தது.

அவன் வீட்டிற்குள் வந்தபோது பொன்னா சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

"செங்கா.. களி துடுப்பு புதுசா வேணும்.." என்றாள்.

"வெட்டிட்டு வரேன்.." என்று தனது அறைக்குள்ளிருந்து கத்தினாள் செங்கா.

அதியன் பரிதாபமாக பொன்னாவை பார்த்தான். வேர்த்து போன முகத்தோடு வேலை செய்த களைப்போடும் நின்றுக் கொண்டிருந்தாள் அவள்.

"ஏன் நீ ஒருத்தியே எல்லா வேலையும் செய்யுற.? உன் தங்கச்சிகிட்ட சொன்னா அவளும் செய்வா இல்லையா.?" என்று கேட்டான் அதியன்.

"அட நீங்க வேற ஏங்க.? வெறகு வெட்டுறது, கல்லை புரட்டுறது, ஏர் ஓட்டுறதுன்னு ஏதாவது வேலை சொன்னா கூட அவ செய்வா. ஆனா இந்த சமையலை சமைக்கிறது.. வீட்டை பெருக்கறதெல்லாம் அவளுக்கு வராது.. எல்லா வேலையும் தெரியும். ஆனா செய்யமாட்டா.." என்றாள் வருத்தத்தோடு.
அதியன் பெருமூச்சி விட்டான். "எங்க வீட்டுல பெண் பிள்ளைகள் இல்ல. அதனால எங்க அம்மா எனக்கும் என் தம்பிக்கும்தான் வீட்டு வேலையை வைப்பாங்க.. நாங்க இரண்டு பேரும் செய்யாத வேலையே இல்ல.." என்றான் சோகமாக அவன்.

"நல்ல ஜோடிதான்.." கிண்டலாக சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் பொன்னா.

இரவு உணவு உண்ணும்போது அதியனை நிமிர்ந்து பார்க்க கூட மறுத்து விட்டாள் செங்கா.

"செங்கா.. நீ மறுபடியும் காட்டுக்கு போக போறியா.?" சாமிநாதன் சாப்பிட்டுக் கொண்டே கேட்டார்.

"ஆமா. நாளைக்கே போக போறேன். ஏன்.?" என்றாள் அவள் விசயம் புரியாமல்.

"இந்த தம்பியும் உன்னோடு காட்டுக்குள்ள வரப்போறாராம்.." என்று அவர் சொல்ல செங்கா சாப்பிடுவதை விட்டுவிட்டு அதியனை நிமிர்ந்து பார்த்தாள்.

"இவனுக்கு என்ன வேலை.?" என்றாள் கோபமாக.

"காட்டை பத்தி ஒரு ரிசர்ச் பண்ண போறேன்.." என்றான் அதியன்.
செங்கா அவனை முறைத்தாள்.

"உனக்குத்தான் காட்டை பத்தி ரொம்ப நல்லா தெரியுமே.. அதனால நீயே இவருக்கு காட்டை நல்லா சுத்தி காட்டு.." என்றாள் கலையரசி.

செங்கா நமட்டு சிரிப்போடு அதியனை பார்த்தாள். 'வாடி மாப்ளை.. காடுன்னா என்னன்னு உனக்கு தெளிவா புரிய வைக்கிறேன்..' என்றாள் மனதுக்குள்.

லாரன்ஸ் விஷ்வாவின் வீட்டில் கவலையோடு அமர்ந்திருந்தார்.

"காயத்ரி.. நீங்களாவது என்னை புரிஞ்சிக்கங்க.. என் பொண்டாட்டி இல்லன்னா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும்.." என்றார். இவ்வளவு நேரம் கோபத்தோடு செழியனையும் ரக்சனாவையும் திட்டி பார்த்தவருக்கு சரியான பதில் கிடைக்காததால் இப்போது கெஞ்சல் தொனிக்கு போய் விட்டார்.

"எங்களுக்கு நிஜமாவே ஏதும் தெரியாது அண்ணா.." காயத்ரி கவலையோடு சொன்னாள்.

சோகத்தோடு தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவர் வீட்டுக்குள் செழியன் நுழைவதை கண்டு கோபத்தோடு எழுந்தார்.

"எங்கடா கோதை.?" என கேட்டபடி கையை முறுக்கிக் கொண்டு அவனருகே சென்றார். அவனை அடிக்க கையை ஓங்கினார். செழியன் சட்டென அவரது கையை பிடித்துக் கொண்டான்.

"அடிக்கற வேலையெல்லாம் வேணாம் அங்கிள்.. அடியை அமைதியா வாங்கிக்கற அளவுக்கு நான் அவ்வளவு நல்லவன் இல்ல.." என்றான்.

அவனுக்கு பின்னால் வந்த ரக்சனா லாரன்ஸை முறைத்தபடியே அவரை கடந்து வீட்டுக்குள் வந்தாள்.

"எங்கடி போன இவ்வளவு நேரமா.?" கோபமாக கேட்டாள் காயத்ரி.

"பூங்கோதை ஆன்டி எங்கே.?" என்றான் விஷ்வா அவசரமாக.

"ஹாஸ்பிட்டல்ல.." என்றாள் ரக்சனா.

"ஹாஸ்பிட்டல் எதுக்கு.?" ரக்சனாவின் அருகே வந்து அவளை தன் பக்கம் திருப்பி நிறுத்தி கேட்டார் லாரன்ஸ்.

"நீங்க இதை கேட்கறதுக்கு பதிலா போய் உங்க பேர்ல நீங்களே ஒரு முன் ஜாமீன் எடுத்து வச்சிக்கிற வழியை பாருங்க.." என்றான் செழியன் கிண்டலாக.

விஷ்வா செழியனை புரியாமல் பார்த்தான்.

"மனநலம் பாதிக்கப்பட்ட பூங்கோதை ஆன்டிக்கு சரியான முறையில ட்ரீட்மெண்ட் தராம அவங்களை சங்கிலியால கட்டி வச்சதும் தனி அறையில அடைச்சி வச்சதும் ரொம்ப தப்பு. அதுக்காக நாங்க உங்க மேல கேஸ் கொடுத்திருக்கோம்.. போலிஸ் உங்களை அரெஸ்ட் பண்ண உங்க வீட்டுக்கு போய் இருக்காங்க.." என்றான் செழியன்.

"நீங்க இங்கே இருப்பிங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சிருந்தா நாங்களே அவங்களை கையோடு இங்கேயே கூட்டி வந்திருப்போம்.." என்றுச் சொன்னாள் ரக்சனா.

"ஏன்டி உனக்கு புத்தி இப்படி போகுது.?" காயத்ரி கோபத்தோடு கேட்டாள்.
"ஆன்டி நாங்க கரெக்டாதான் செஞ்சிருக்கோம். தப்பெல்லாம் இவர்க்கிட்டதான் இருக்கு.." என்றான் செழியன்.

லாரன்ஸ் செழியனையும் ரக்சனாவையும் முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

"அங்கிள் நில்லுங்க.. கோபத்துல எந்த முடிவும் எடுக்காதிங்க.." என்று அவர் பின்னால் ஓட முயன்றான் விஷ்வா.

விஷ்வாவை பிடித்து நிறுத்தினாள் செழியன். "விஷ்வாண்ணா அவரு சரணடைய ஸ்டேசன்க்கு போறாரு.. வக்கில் இல்லையா.? அதனாலதான் அவரே ரிஸ்கை கம்மி பண்ணிக்க பார்க்கறாரு.." என்றான்.

லாரன்ஸ் திரும்பி பார்த்தார். செழியனை ஆத்திரத்தோடு பார்த்துவிட்டு அங்கிருந்து போனார்.

விஷ்வா செழியனின் தோளில் ஒரு அடியை விட்டான். "ஏன்டா இப்படி தொல்லை மேல தொல்லை தர.?" என்றான் கோபமாக.

"உனக்கு மனசாட்சியே இல்லையா.? பாவம் தெரியுமா அந்த ஆன்டி.? ரக்சனாவை பார்த்ததும் அவங்க எப்படி அழுதாங்க தெரியுமா.?" என்றான்.
செழியன் சொன்னது கேட்டு ரக்சனா கண்ணீர் வடியும் தனது கண்களை துடைத்தாள். விஷ்வா அவளையும் செழியனையும் மாறி மாறி பார்த்தான்.

"சரி விடுங்க.. எல்லாம் சரியாகிடும்ன்னு நம்புவோம்.." என்றான் ஆறுதலாக.
நெற்றி சுடும் வெயிலை நிமிர்ந்து பார்த்து விட்டு அந்த அடர்ந்த காட்டிற்குள் காலெடுத்து வைத்தான் அதியன். செங்கா விசிலடித்தபடியே அவனுக்கும் முன்னால் நடந்தாள்.

அவளை போல வேகமாய் நடக்க அவனால் முடியவில்லை.

"மெதுவா போ செங்கா.." என்றான்.

செங்கா திரும்பி பார்த்தாள். "எனுக்கு மெதுவா நடக்க தெரியாது.." என்றாள்.
அதியன் அவளருகே ஓடினான்.

செங்கா அருகில் இருந்த செடி ஒன்றிலிருந்து நீண்ட குச்சி ஒன்றை உடைத்தாள்.

"இது எதுக்கு என்னை அடிக்கவா.?" பழைய நினைவில் கேட்டான் அதியன்.
குழப்பமாக அவனை பார்த்தவள் இல்லையென தலையசைத்தாள்.

"இது சும்மா.. ஈர காடு ஆச்சே.. ஏதாவது பூச்சு புழு இருந்தா அப்ப ஒதவுமேன்னு ஒடைச்சி வச்சிருக்கேன்.." என்றவள் ஆடி அசைந்தபடி நடந்தாள்.

"என்னா ரிசர்சை பண்ண போற நீ.?" நடந்துக் கொண்டே கேட்டாள் அவள்.
"செங்கா.." அவளின் கையை பற்றி நிறுத்தினான் அதியன்.

அவள் என்னவென்று அவனை பார்த்தாள். "நான் ரிசர்ச் பண்ண வரல.. உன்னோடு சேர்ந்து சுத்த ஆசைப்பட்டு வந்திருக்கேன்.. நான் உன்னை நேசிக்கிறேன்.. இது உனக்கு புரியல. உன்னோட நேசத்துக்காக நான் காத்திருக்கேன்னு உனக்கு புரியணும். அதை நீ புரிஞ்சிக்கணும்ன்னுதான் நான் இங்கே வந்திருக்கேன்.." என்றான்.

அவள் தலையை சாய்த்து அவனை பார்த்தாள். "என்னோடு நீ காட்டுக்கு வந்தா எனுக்கு உன் மேல நேசம் வருமா.? நெசமாலுமா.?" என்றாள் குழப்பமாக. அவன் சொல்ல வருவது அவளுக்கு உண்மையிலேயே புரியவில்லை.

அதியன் பெருமூச்சோடு அவளை பார்த்தான். "நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு கூடிய சீக்கிரம் புரியும்.." என்றவன் காட்டு திசையை நோக்கி அவளை திருப்பி நிறுத்தினான்.

"போகலாம் நட.." என்றான்.

செங்கா தோளை குலுக்கியபடி நடக்க ஆரம்பித்தாள்.

அவளை தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்த அதியன் மணி சத்தம் கேட்கவும் நின்றான்.

"கோவில் இருக்கா இங்கே.? மணி சத்தம் கேட்குது.." என்றான்.

செங்கா இல்லையென தலையசைத்தாள். "அது பசுமாட்டு கூட்டம்.. மாட்டு மணி சத்தத்துக்கும் கோயில் மணி சத்தத்துக்குமே வித்தியாசம் தெரியல.. நீயெல்லாம் என்னத்தை படிச்சியோ?" என்றாள் நக்கலாக.

அதியன் அவளை சந்தேகமாக பார்த்துவிட்டு சத்தம் வந்த திசையில் நடந்தான்.

"அட ஆர்வ கோளாறே.." என்று தாடையில் கை வைத்தபடி அவனை பார்த்தாள் செங்கா.

அதியன் சத்தம் வந்த திசை நோக்கி சற்று தூரம் நடந்ததுமே ஒரு மாட்டு மந்தையை பார்த்தான். அவைகளின் கழுத்தில்தான் மணிகள் கட்டி விடப்பட்டிருந்தது. துள்ளியோடிக் கொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டியின் கழுத்திலிருந்த மணிதான் இவ்வளவு நேரமும் ஒலித்துக் கொண்டிருந்தது.
மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்திற்கு அப்பால் வெண்மணல் திட்டு ஒன்று தெரிந்தது. கண்களை கொள்ளையடிக்கும் வெள்ளை மண்ணில் பச்சை செடிகள் ஆங்காங்கே வளர்ந்திருந்தது.

"வாவ்.. செங்கா இங்கே வந்து பாரேன்.. இந்த இடம் செம அழகா இருக்கு.." என்று அவளை அழைத்தான் ஆச்சரியத்தோடு.

"வெள்ளை மணல் திட்டு.. பச்சை செடிகள்.. ஓ மை காட்.. இந்த இடத்துலயே இருபது வருசம் வாழணும் போல இருக்கு.." என்றான் அடக்க முடியாத சந்தோசத்தில்.

"ஏய் மெண்டல்.."

செங்காவின் குரல் கேட்டு திரும்பி பார்த்தான்.

"அது மணல் இல்ல.. சுண்ணாம்பு திட்டு.. அந்த எடத்துல என்ன இருக்குன்னு அங்க இருபது வருசம் வாழ ஆசைப்படுற.?" என்று கேட்டவள் தனது வழியில் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அதியன் அந்த இடத்தை மீண்டும் பார்த்தான். சுண்ணாம்போ மணலோ யாருக்கு தேவை.. வெள்ளை நிறத்தில் கலந்திருந்த பச்சையின் வண்ண ஜாலம் அல்லவா அவனை மயக்கி விட்டிருந்தது.?

'திரும்பி போகும்போது இங்கே ஒரு போட்டோ எடுத்துட்டு போகணும்..' என முடிவு எடுத்துக் கொண்டவன் செங்காவை தொடர்ந்து ஓடினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1183
VOTE
COMMENT
SHARE
FOLLOW


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 6 months ago
Posts: 221
Topic starter  

செங்கா 36

காடுகளின் இடையே நடந்துக் கொண்டிருந்தான் அதியன். அடர்ந்த காட்டில் ஒவ்வொரு மரமும் அவனுக்கு அதிசயமாகவே தெரிந்தது. செங்காவிற்கு இணையாக அவனால் நடக்க முடியவில்லை. அங்கங்கே நின்று மரங்களை அண்ணாந்து பார்த்து வியந்துக் கொண்டிருந்தான். இவனது வியப்பு கண்டு செங்காவிற்கு ஆச்சரியமாக இருந்தது. 

 

பாறைகளை பார்க்கும் போதெல்லாம் வழியை விட்டுவிட்டு ஓடி சென்று பாறைகளின் மீது ஏறி நின்றான். மேலே நின்றபடி சுற்றிலும் இருந்த நிலப்பரப்பை பார்த்தான். அவனது செய்கைகளை காணும்போதெல்லாம் செங்கா நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

 

"என்னை வுடவும் பயங்கர பைத்தியமா இருப்பான் போலிருக்கே..!" என்று ஆச்சரியப்பட்டாள். 

 

"நீ இப்புடியே திரும்பி போறியா.?" என்றாள் அவனிடம்.

 

"ஏன்.?" என கேட்டவனை மேலும் கீழும் பார்த்தவள் "இன்னும் காட்டுக்குள்ளவே போகல.. அதுக்குள்ளயே நீ இவ்வளவு இம்சை பண்ற.." என்றாள் சலிப்பாக.

 

"காட்டுக்குள்ள போகலையா இன்னும்.? அப்படின்னா இதெல்லாம் என்ன.?" தன்னை சுற்றி இருந்த நிலங்களை சுட்டிக்காட்டி கேட்டான் அதியன்.

 

"இது சமநிலம்.. இதுல உன் கொரளி வித்தையை காட்டுனா போதுமா.?" என கேட்டவள் தனக்கு முன்னால் இருந்த சிறு திட்டை கை காட்டினாள். 

 

"இந்த திட்டுக்கும் அந்த பக்கம்தான் நிசமானே காடே இருக்கு.." என்றாள். 

 

அவன் அவள் கை காட்டிய மண் திட்டை நோக்கி நடந்தான். அவள் அவனது ஆர்வக்கோளாறை எண்ணி வியந்தபடி அவன் பின்னால் நடந்தாள்.

 

செங்கா கை காட்டிய மேட்டில் ஏறிய அதியன் அதற்கு அடுத்து தெரிந்த வானுயர்ந்த மலைகளை கண்டு சிலையாக நின்று விட்டான்.

 

"அதுதான் காடு... போலாமா.?" என கேட்ட செங்காவின் குரலில் கிண்டல் கொஞ்சமாக இருந்தது. 

 

"இ.. இந்த மலையில் எப்படி ஏறுறது.? செங்கோணமா இருக்கும் போல இருக்கே.." என்றான் அதியன் கவலையாக.

 

செங்கா இல்லையென தலையசைத்தாள். "செங்கோணம் இல்ல.. கொஞ்சம் சாய்வாதான் இருக்கும்.." என்றாள் யோசனையோடு.

 

"யாருக்காவது ஃபோன் பண்ணனும்ன்னா இப்பவே பேசிடு.. அப்பாறம் மேல ஏறினா டவரு கெடைக்காது.." என்றாள். 

 

யாருடனாவது போன் பேச வேண்டுமா என யோசித்தான் அதியன். செங்காவின் அருகில் மற்ற யாரும் நினைவில் வரவே இல்லை.

 

"இல்ல.. எல்லார்க்கிட்டயும் பேசிட்டேன்.." என்றான்.

 

"அப்ப சரி வா போவோம்.." என்ற செங்கா தனது பேக்கை தோள் மாற்றி போட்டுக் கொண்டு நடந்தாள்.

 

சிறு பள்ளத்தில் இறங்கி அந்த மலைக்கு செல்ல வேண்டியதாய் இருந்தது. செங்கா ஏதோ ஒரு இசையை விசிலாக அடித்தபடி அந்த பள்ளத்தில் இறங்கிய நேரத்தில் "செங்கா.." என்றொரு குரல் கேட்டது. 

 

இருவரும் நின்று திரும்பி பார்த்தனர். அருவி புன்னகையோடு அவர்கள் அருகே வந்தாள். 

 

"மறுபடியும் காட்டை காக்க வந்துட்டியா.?" என்றார் அவர்.

 

"இந்த காடு எனக்கு சொந்தம்.. இந்த மொத்த காட்டுக்கும் நான் சொந்தம். இதை வுட்டுட்டு நான் எங்க இருக்க முடியும்.?" என்று கேட்டாள் அவள்.

 

அவர் அதியனை யோசனையோடு பார்த்தார். "இந்த தம்பி யாரு.?" என்றார்.

 

"ஹலோ சார்.." என்று அவருக்கு கை தர சென்ற அதியனை விலக்கி தள்ளிவிட்டு முன்னால் நின்ற செங்கா "எங்கக்கா வூட்டுகாரனுக்கு சேத்தாளி இவன்.. காட்டை சுத்தி காட்டுன்னு சொன்னான். அதான் கூட்டியாந்தேன்.." என்றவளை முறைத்தான் அதியன். 

 

அருவி அதியனை பார்த்து புன்னகைத்தார். "செங்கா நல்ல பொறுப்பான பொண்ணுதான். நீங்க பயப்படாம இருக்கலாம்.." என்றவர் ரிங்கான தனது ஃபோனை பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்தார். 

 

"ஹலோ.." என்றவர் சில நொடிகளில் ஃபோன் இணைப்பை துண்டித்துக் கொண்டு ஃபோனை பாக்கெட்டில் வைத்தார். 

 

"அந்த பாட்டை வை.. இந்த பாட்டை காலர்டியூனா வைன்னு ஒரே தொல்லை.." என்றார் சலிப்போடு அவர்.

 

செங்கா அவரது பேண்ட் பாக்கெட்டில் தெரிந்த துப்பாக்கியை ஆர்வமாக பார்த்தாள்.

 

"துப்பாக்கியா யண்ணா அது.?" என்றாள்.

 

அவர் அந்த துப்பாக்கியை கையில் எடுத்து அவள் முன் காட்டினார். "அன்னைக்கு துப்பாக்கியை எங்கேயோ தொலைச்சிட்டேன் செங்கா. இதை மறுபடியும் செஞ்சேன்.." என்றார்.

 

அதியன் அந்த துப்பாக்கியை பார்த்தவுடனே புரிந்து கொண்டான் அதுவும் அன்றைக்கு செங்கா வைத்திருந்ததும் ஒரே மாதிரியான துப்பாக்கி என்பதை. 

 

'கேட்டு வாங்கினேன்னு சொன்னா.. இவரு தொலைஞ்சி போனதா சொல்றாரு.. அடிப்பாவி பிராடு..' அதியன் அதிர்ச்சியோடு செங்காவை பார்த்தான்.

 

"சரி வுடு யண்ணா.. அதான் புதுசா செஞ்சிக்கிட்டியே.. சரி நாங்க இப்படியே கெளம்பறங்க.. நீ பத்தரமா வூடு போய் சேரு.." என்ற செங்கா அதியனை தன்னோடு இழுத்துக் கொண்டு நடந்தாள்.

 

"நீ திருடியா.?" என்றான் அவன் கிசுகிசுப்பாக.

 

"நான் கேட்டேன்ப்பா. அவருதான் கொடுக்கல. அதான் ஆட்டைய போட்டுட்டேன்.. அவருக்கு இது தெரிஞ்சா மறுபடியும் கூட்டு சேத்த மாட்டாரு.. அவரு சரியான முள்ளான் மொகரை.. அதனால இதை அவுருக்கிட்ட சொல்லிப்புடாத" என்றாள்.

 

அதியனுக்கு அருவியை நினைத்து பரிதாபமாக இருந்தது. 

 

சிறிது தூரம் நடந்த அதியன் "எனக்கு ஏன் மூச்சு வாங்குது.?" என்றான் குழப்பமாக.

 

"மலையில ஏறினா மூச்சு வாங்கதான் செய்யும்.." என்ற செங்கா விசிலடித்தபடியே நடந்தாள்.

 

"உனக்கு ஏன் மூச்சு வாங்கல.?" அதியன் சந்தேகமாக கேட்டான்.

 

"சர்வீசும்மா.. அதிகம் பேசாம நட.. இல்லன்னா பேச்சுலயே களைச்சிடுவ.." என்றவள் வழியில் இருந்த ஒவ்வொரு செடியையும் கையில் பிடித்தபடி நடந்தாள். 

 

அதியன் சற்று நேரத்தில் தனது கையையும் காலையும் கீறிக் கொண்டான். "என்னவோ கடிக்குது செங்கா.." என்றான்.

 

"சுள்ளான் கடிக்கும்ப்பா.. காட்டுல இருக்கற வெள்ளை கொசு.." என்றாள்.

 

"உன்னை ஏன் கடிக்கல.?" அவன் மீண்டும் சந்தேகப்பட்டு கேட்டான்.

 

"தெரியலப்பா.. என்னை சுள்ளான் கடிக்கறதே இல்ல.." என்றவள் முன்னால் நடக்க இவன் முட்டியை பிடித்தபடி நின்றான்.

 

"கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்.." என்றவன் அங்கிருந்த கல் ஒன்றின் மீது அமர்ந்தான். 

 

"முட்டி செத்தவனே.." என்றபடி அவனருகே வந்து அமர்ந்தாள் செங்கா.

 

"உனுக்கு என்ன தலையெழுத்தா இப்புடி மூச்சி வாங்க கரடு ஏறணும்ன்னு.? வந்த வழியிலயே எறங்கி போனா எங்க ஊருக்கு போயிடலாம். அப்புறம் நீ ஊருக்கும் போயிடலாம். எனுக்குதான் எந்த வேலை வெட்டியும் இல்லாம காட்டாறாட்டம் சுத்தணும்ன்னு தலையெழுத்து. உனக்கு ஏன்.? நீ கெளம்பு.." என்றவள் இதை சொல்லிவிட்டு எழுந்து நின்றாள். 

 

அவளின் கையை பற்றினான் அதியன். அவள் அவனை திரும்பி பார்த்தாள். நெற்றியில் பூத்த ஒற்றை வியர்வையை துடைத்தபடி எழுந்தான் அதியன்.

 

"இதுநாள் வரைக்கும் உனக்கும் எனக்கும் தலையெழுத்து வேற வேற.. ஆனா இனி நம்ம இரண்டு பேருக்கும் ஒரே தலையெழுத்துதான்.. இதை நீயே சீக்கிரம் புரிஞ்சிப்ப.. நட.." என்றான்.

 

செங்கா அவனை வியப்போடு பார்த்தாள். "ஏன் இப்புடி சீனி சக்கரையாட்டம் பேசுற.?" என்றாள் உதட்டை கடித்தபடி.

 

அவளின் கன்னம் தட்டி சிரித்தான் அதியன். "அமைதியா நட.." என்றான்.

 

செங்கா திரும்பி நடக்க ஆரம்பித்தாள். யோசனையோடு மீண்டும் நின்றாள். அருகிலிருந்த மரம் ஒன்றின் அருகே சென்று ஒரு கிளையை உடைத்து சீவி எடுத்து வந்தாள். அதியனிடம் தந்தாள்.

 

"இதை ஊனிக்கிட்டே நட.. களைப்பு கம்மியா இருக்கும்.." என்றாள். 

 

'இப்பவே ஊன்றுக்கோலை கையில் பிடிக்க வேண்டியதா போச்சே..' என்று சலிப்போடு நினைத்தவன் அந்த கோலை கையில் வாங்கிக் கொண்டு நடந்தான். முன்பை விட சற்று பரவாயில்லை என்பது போல தோன்றியது.

 

'பாவி மகளே..! இதை முன்னாடியே வெட்டி தந்திருக்க கூடாதா.?' என்று அவளை மனதுக்குள் கருவினான். 

 

வழியோரத்தில் பாறாங்கல்லை பார்க்கும் நேரங்களிலெல்லாம் அமர்ந்தான் அதியன். செங்கா அவனை குறையாக சொன்னாள்‌. அவனால் அவளின் வேகத்திற்கு ஏற்றார்போல விடுவிடுவென மலையேறவும் முடியவில்லை. அவளின் திட்டுக்களுக்காக திரும்பி செல்லவும் மனம் வரவில்லை. 

 

"நானும் ஒருமுறை காட்டுக்கு டிரெக்கிங் போயிருக்கேன்.." என்றான் ஐந்தாவது இடத்தில் அமர்ந்தபோது.

 

"அப்பாறம் ஏன் இத்தனை தடவை ஒட்கார்ந்து எழற.?" சந்தேகமாக கேட்டாள் செங்கா.

 

"அவங்க மனுசங்களை போல நடப்பாங்க. அதனால அவங்க கூட நடந்த போது எதுவும் தெரியல. ஆனா நீ பிசாசு மாதிரி ஓட்டமா ஓடுற.. உன்னோடு நடந்தா நாலே எட்டுல மூச்சு வாங்கிடுது.." என்றான் சலிப்போடு.

 

பெருமூச்சோடு அவன் முன் அமர்ந்தாள் செங்கா. "மெதுவா நடந்தா எனுக்கு காலு வலிக்கும்ப்பா.. அதுவும் இல்லாம மெதுவா நடக்கவும் வராது எனுக்கு.." என்றாள் வருத்தமாக.

 

"எனக்காக கொஞ்சமா அட்ஜஸ்ட் பண்ணேன்.. இந்த ஒருமுறை மட்டும்.." என்றான் அதியன்.

 

'என் இயல்பை மாத்துற நீ..' என திட்ட நினைத்தவள் அவனது சோர்ந்து போன முகம் கண்டு சரியென தலையசைத்தாள்.

 

"சரி வா.. மொல்லமாவே நடக்கலாம்.." என்றாள்.

 

சீனு தனது தாத்தாவின் புகைப்படத்திற்கு மாலையை அணிவித்தான். ஊதுவத்தி ஏற்றினான். இரு கை கூப்பி கும்பிட்டு விட்டு வந்து இருக்கை ஒன்றில் அமர்ந்தான். 

 

"பாஸ்.." என்றான் அவனது அடியாட்களில் ஒருவன்.

 

"என்ன.?" என்றான் சீனு.

 

"நீங்க ஏன் உங்க அத்தையையும் மாமாவையும் அமைதியா விட்டுடிங்க.. பொன்னாவுக்கு இன்னும் கொஞ்ச நாளுல கல்யாணம் நடக்க போகுது.. ஆனா நீங்க இதுவரைக்கும் ஏதும் செய்யல.. கடைசி நேரத்துல தூக்கிட்டு வர ப்ளான் பண்ணி இருக்கிங்களா.?" என்றான் சந்தேகமாக.

 

"நான் இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுங்களை இந்த வீட்டுக்கு கூட்டி வந்து குடும்பம் நடத்தி இருக்கேன். ஆனா விருப்பம் இல்லாத ஒருத்தியை வலுக்கட்டாயமா இங்கே கூட்டி வந்ததை பார்த்திருக்கியா.?" என்று கேட்டான் சீனு. 

 

அடியாள் இல்லையென தலையசைத்தான்.

 

"என்னை விரும்புறவளை மட்டும்தான் நான் கூட்டி வந்து குடும்பம் நடத்தியிருக்கேன்.. ஆனா பொன்னாவை பார்த்ததும் மனசுல ஆசை வந்துடுச்சி. அதனாலதான் வழக்கத்தை மீறி அவளை வலுக்கட்டாயமா அடைய நினைச்சேன்.. இதையே காரணமா காட்டி எங்க குடும்ப மானத்தை கப்பலேத்திட்டு போன என் அத்தையை பழி வாங்க நினைச்சி கடத்தி வந்து கட்டி வச்சேன். ஆனா அது எல்லாத்தையும் செங்கா மாத்திடடா.. பொன்னாவோட உடம்பு எனக்கு தந்த கிக்கை விட செங்காவோட பார்வை தந்த கிக் அதிகம். செங்கா முன்னாடி ஒப்பிடும்போது பொன்னா மேட்டரே இல்லன்னு லேட்டாதான் புரிஞ்சது. லவ் கருமமெல்லாம் என் வாழ்க்கையில செட்டே ஆகாது. ஆனா எனக்கு செங்கா கிடைச்சா அது பேரதிஷ்டம்ன்னு எனக்குள்ள நானே நம்புற அளவுக்கு அவ என்னை மாத்திட்டா.. அவ எனக்கு கிடைச்சா ரொம்ப சந்தோசப்படுவேன். ஆனா கண்டிப்பா வலுக்கட்டாயப்படுத்த மாட்டேன்.." என்றான்.

 

அவன் சொன்னது கண்டு அடியாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

 

சீமா கன்ஸ்ட்ரக்சனின் நிறுவனர் தன் முன் இருந்தவர்களை கோபத்தோடு பார்த்தார். மூன்று மாதத்திற்கு முன்பு இவரது ப்ளானை மீறி விஷ்வா உயிர் பிழைத்து விட்டான். போனால் போகிறது என்று அந்த விசயத்தை விட்டுவிட்டார் இவர். ஆனால் இந்த மூன்று மாதங்களில் அதியனாலும் விஷ்வாவாலும் அவருக்கு பல கோடிகள் நட்டமாகி விட்டது. அதியன் விஷ்வாவின் நேர்மையால் பலரும் தங்களின் ப்ரோஜக்ட் விசயங்களுக்கு அவர்களைதான் அணுகினர். நம்பர் ஒன் இடத்தில் இருந்த சீமா கன்ஸ்ட்ரக்சன் இந்த மூன்று மாத இடைவெளியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. இதை சீமா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் அடியோடு வெறுத்தார். அவருக்கு பல நிறுவனங்கள் இருந்தது. அவருக்கு என்று பல தொழில்களும் இருந்தது. அனைத்திலும் அவரது பெயர்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் இந்த ஒரு தொழிலில் மட்டும் தனக்கு இப்படி ஒரு எதிரி இருப்பது இவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

 

"ஏற்கனவே நடந்த மாதிரி இதுவும் மிஸ்ஸானா அப்புறம் நான் உன்னை இந்த பில்டிங்கோட உச்சியில இருந்து கீழே தள்ளி விட்டுடுவேன்.." என்றார் கூலிப்படையை சேர்ந்த ஒருவனிடம்.

 

"இந்த முறை மிஸ்ஸாகாது சார்.. விஷ்வாவுக்கு இந்த முறை கண்டிப்பா மரணம்தான்.." என்றான் அவன்

 

அவர் யோசனையோடு மறுப்பாக தலையசைத்தார்.

 

"விஷ்வா வேணாம்.. அவனையே மறுபடியும் நாம டச் பண்ணா நம்மளை அவங்க மோப்பம் பிடிச்சிட சான்ஸ் இருக்கு.. இந்த முறை அதியனை போட்டு தள்ளிடு.. அவனை இங்கே காணோம். அவனோட லவ்வரை பார்க்க போயிருப்பதா அவனோட நிறுவனத்தை சேர்ந்த ஒருத்தன் செய்தி சொல்லி இருக்கான். அவன் எங்கே போயிருக்கான்னு தேடி பிடிச்சி வேலை முடிச்சி விட்டுடு.. யாரும் சீமா நிறுவனத்துக்கு போட்டியா வரவே கூடாது.." என்றார். 

 

"ஓகே சார்.." என்றவன் அங்கிருந்து கிளம்பி போனான்.

 

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

 

Word count 1182

 

VOTE

 

COMMENT

 

SHARE

 

FOLLOW

 

 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 6 months ago
Posts: 221
Topic starter  

செங்கா 37

அதியன் நடந்துக் கொண்டே இருந்தான். மூச்சிறைத்தது. செங்காவின் சோர்வில்லா நடையை கண்டு அவள் மனுசிதானா என்று சந்தேகப்பட்டான். செங்கா ஆரம்பத்திலிருந்து அப்படியேதான் சக்தியோடு இருந்தாள். அவள் முகத்தில் துளி கூட சோர்வு தென்படவில்லை. 

 

அதியன் கேட்டான் என்பதற்காக அவளும் மெதுவாகவே நடந்தாள்‌. ஆனாலும் அதியனால் முடியவில்லை. அந்த மலை செங்கோணம்தான் என்பது அவனின் மனதின் வாதமாக இருந்தது. 

 

செங்கா ஒரு இடத்தில் சுற்றி போவதை கண்டவன் நடையை மீதி செய்யலாம் என்றெண்ணி நேராக நடந்தான்.

 

"ஹேய்.. அந்த வழி இல்லப்பா.." என்று கத்தியபடி அவனருகே வந்து அவனது கையை பிடித்து நிறுத்தினாள் செங்கா. 

 

"நாம இப்ப உச்சிக்குதானே போகணும்.? அந்த வழியில போனா சுத்தி போகற மாதிரி இருக்கு. வா நாம இதுலயே போகலாம்.. செடிகள் கூட அதிகம் இல்ல.." என்றவன் அவளது கையை பற்றிக் கொண்டு நடந்தான்.

 

"யோவ் பட்டணம்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. இந்த வழியில போனா நமக்கு நேரம்தான் வீணாகும். நீ அமைதியா என்னோடு வா.. நான் உனுக்கு எந்த சேதாரமும் இல்லாம கூட்டி போறேன்.." என்றாள் செங்கா.

 

"இந்த ஒரு முறை நான் சொல்வதை நீ கேளு.. நீ என் பேச்சை கேட்டு என்னோடு நடந்து வா.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு நேராக நடந்தான்.

 

"இந்த வழி வேணாம் பட்டணம்.." என்று புலம்பிக் கொண்டே வந்தாள் செங்கா.

 

அரை மணி நேர பயணத்திற்கு பின் ஆளுயர புதர்கள் அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்தது. அதியன் செங்காவை பார்த்தான். அவள் சலிப்போடு நெற்றியை பிடித்தாள்.

 

"இந்த ஒரு புதரை தாண்ட முடியாமதான் நீ அவ்வளவு தூரம் சுத்தி போறியா.? நாம இந்த புதரையே பாலோவ் பண்ணி போகலாம். கண்டிப்பா ஏதாவது ஒரு இடத்துல வழி இருக்கும்.." என்றவன் மறுத்து தலையசைத்தவளை மீண்டும் தன்னோடு இழுத்துக் கொண்டு புறப்பட்டான். கால் மணி நேரம் நடந்த பிறகும் கூட அந்த புதர்கள் நீண்டுக் கொண்டேதான் சென்றன.

 

அதியனுக்கே சோர்வாக இருந்தது. ஆனால் அடுத்த சில நிமிடத்தில் அந்த புதர் வேலியில் குறுகிய சந்து ஒன்றை கவனித்து விட்டான் அதியன்.

 

"பார்த்தியா.? நான் முன்னாடியே சொன்ன மாதிரி வழியை கண்டுப்பிடிச்சிட்டேன்.." என்றவன் அந்த வழியில் நடக்க முயன்றான். செங்கா அவசரமாக அவனை பிடித்து நிறுத்தினாள்.

 

"இது முள் புதை.. இதுல சிக்கினா மகனே நீ அத்தோடு காலி.. அமைதியா என் கூட வா.. இன்னும் கொஞ்ச தூரம் நடந்தா சுலப பாதை கெடைச்சிடும்.." என்றாள் கண்டிப்பு நிறைந்த குரலில்.

 

அவளை கிண்டலாக பார்த்தான் அதியன்.

 

"இது முள் புதையா.? உன்னை நம்பி வந்தா நீ இப்படிதான் ஏமாத்துவியா.?" என கேட்ட அதியன் அவள் சொல்வதை பொருட்படுத்தாமல் அந்த புதரின் குறுகிய சந்தில் நுழைந்தான். அடுத்த நொடி மேலே நகர இயலாமல் என்னவோ அவனை பிடித்துக் கொண்டது. கீழே பார்த்தான். அவனது சட்டையிலும் பேண்டிலும் குட்டி குட்டியாக முட்கள் குத்தியிருந்தன. அவைகளிடமிருந்து தன்னை வெளியே இழுத்துக் கொள்ள முயன்றான். ஆனால் அந்த முட்கள் அனைத்தும் அரை வட்ட வடிவில் வளைந்திருந்த காரணத்தால் அவனால் அவைகளிடமிருந்து வெளி செல்ல முடியவில்லை. பரிதாபமாக முகத்தை வைத்தபடி செங்காவை பார்த்தான்.

 

"அது எல்லாம் கொக்கி முள்ளுங்க.. உன் துணி கந்தலானா மட்டும்தான் நீ வெளியவே வர முடியும்.. அதிகமா அசையாத.. அசைய அசையதான் முள்ளுங்க இன்னும் அதிகமா உன்னை சேதாரம் பண்ணும்.." என்று எச்சரிக்கை செய்தாள் செங்கா.

 

"இப்ப என்ன பண்றது.?" அவன் அப்பாவியாக கேட்டான். 

 

"ஒவ்வொரு முள்ளாதான் எடுக்கணும். பொறுமையா இரு. நான் எடுத்து விடுறன்.." என்றவள் தனது பேக்கை ஒரு ஓரமாக வைத்தாள். பாவடையை எடுத்து சொருகிக் கொண்டாள்.

 

அதியனின் உடையை பிடித்திருந்த ஒவ்வொரு முள்ளையும் விலக்கி விட்டாள். "என் பேச்சை கேட்காம வந்த.. இப்ப பாரு.. கொக்கி முள்ளுல மாட்டவே கூடாது தெரியுமா.?" என்றாள்.

 

"எல்லா சினிமாவிலும் பொண்ணுங்கதான் முள்ளுல மாட்டுவாங்க. இங்கே என் தலையெழுத்து நான் மாட்டியிருக்கேன்.." அதியன் புலம்பினான்.

 

"நானும்தான் மாட்டியிருக்கேன்ப்பா. ஒருமுறை துரத்தி வந்த யானைக்கிட்ட இருந்து தப்பிச்சவ தெரியாம இதே மாதிரி கொக்கி முள்ளு புதையில மாட்டிக்கிட்டேன். வெளியே வரவே இரண்டு மணி நேரம் ஆச்சி தெரியுமா.? யானை மறுபடியும் என் வழியில வந்துடுமோன்னு பயந்து அவசர அவசரமா வெளிய வர முயற்சி பண்ணேன். ஆனா எல்லாம் வீணாதான் போச்சி. அதுவும் இல்லாம அந்த முள்ளுங்க பண்ண வேலையால உடம்பெல்லாம் ஒரே கீறலுங்க. இங்க பாரு. என் மொவத்துல கூட கீறலோட தழும்புங்க இருக்கும்.." என்றவள் ஒவ்வொரு முள்ளாக விலக்கி விட்டதில் சலித்துப்போய் நின்று விட்டாள். 

 

"இந்த சட்டையும் பேண்டும் உனக்கு வேணுமா.?" என்றாள் யோசனையோடு.

 

"ஏன்.?" அவன் குழப்பமாக கேட்டான்.

 

அவள் சென்று தனது தோள்ப்பையில் இருந்த சிறு கத்தரிக்கோல் ஒன்றை எடுத்து வந்தாள். 

 

"இப்புடியே எடுத்துட்டு இருந்தா நெசமா ரொம்ப நேரம் ஆவும். அப்படியே எடுத்தாலும் கூட உன் சட்டையும் பேண்டும் எதுக்கும் உதவாத மாதிரி கந்தலா கிழிஞ்சி போயிடும். அதுக்கு இந்த கத்தரியை வச்சி வெட்டுனா வேலை சுலபமா முடிஞ்சிடுமேன்னு பார்க்கறன்.." என்றவள் அவனது சட்டையை வெட்ட ஆரம்பித்தாள்.

 

"போர் தவுசன் ருபி சட்டை வேஸ்டா போச்சி.." அவன் சொன்னதை கேட்டு ஆச்சரியத்தோடு நிமிர்ந்தாள் செங்கா.

 

"இதை ஏன் நாலாயிரத்துக்கு வாங்கின.? நானுறு ரூவாய்க்கு எங்கப்பன் எடுக்கற சட்டை கூட இதை வுட நல்ல அம்சமா இருக்குமே.." என்றவள் சட்டையின் மறுபக்கத்தையும் வெட்டினாள். 

 

"இந்த சின்ன கத்தரியால இந்த பேண்டை எப்படி வெட்டுறது.? கொஞ்சம் நேரமாவும் போல.." என்றவள் காலின் கீழ் பகுதியிலிருந்து பேண்டை கத்தரித்தாள். 

 

ஓரளவு கத்தரித்து முடித்தவள் கத்தரிக்கோலை அவன் கையில் தந்தாள். "மீதியை நீயே கத்தரிச்சிட்டு வெளியே வந்து சேரு.. நான் அந்த பக்கமா போறேன்.." என்றவள் தனது பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டு தூரமாக சென்றாள். 

 

அதியன் தன் கையில் இருந்த கத்தரிக்கோலையும் தூரத்தில் நடந்த செங்காவையும் மாறி மாறி பார்த்தான்.

 

"பாதியில விட்டுட்டு போயிட்டாளே.." என புலம்பியவன் மீதியை கத்தரிக்க ஆரம்பித்தான். கொஞ்சமாக அசைந்தால் கூட முட்கள் நறுக் நறுக்கென பிடித்து குத்தியது. பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு உடையை அங்கேயே விட்டுவிட்டு அவன் மட்டும் தப்பி வெளியேறினான். 

 

உடம்பின் பல இடங்களில் கொக்கி முள்ளால் ரத்த கீறல்கள் இருந்தது. ரத்தம் கசிந்த இடங்களில் எரிச்சலாக இருந்தது. புதரில் மாட்டி இருந்த சட்டையை வெளியே இழுத்து பார்த்தான். நான்கைந்து துண்டுகளாக கை வந்து சேர்ந்திருந்தது. பெருமூச்சோடு அதை அங்கேயே எறிந்தான்.

 

தனது பையிலிருந்த உடையை எடுத்து உடுத்திக் கொள்ளும் போதுதான் செங்கா அவனை விட்டுச் சென்ற காரணம் புரிந்தது. 

 

"இவளுக்கும் வெட்கம் மடம் நாணமெல்லாம் இருக்கத்தான் செய்யுது போல.." என்று கிண்டலாக சொன்னவன் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டு நடந்தான்.

 

நான்கைந்து மரங்களை தாண்டி சென்றான். செங்கா மரம் ஒன்றின் மீது சாய்ந்தபடி நின்றிருந்தாள். இவனை கண்டதும் இவனருகே வந்தாள். 

 

"வலி அதிகமா.?" என்றாள் அவனை மேலும் கீழும் சோதித்தபடி. அவனது அரைக்கால் சட்டைக்கும் கீழே முட்டியிலிருந்து ஷு வரை இருந்த மேனி பகுதியில் குத்தியிருந்த முட்களால் நான்கைந்து இடங்களில் ரத்த துளிகள் சிவப்பாக தெரிந்தது.

 

அவன் முன் அமர்ந்த செங்கா தனது தாவணி முந்தானையால் அவனது கால் பகுதியில் இருந்த ரத்த துளிகளை துடைத்தாள். 

 

"காலெல்லாம் முள் குத்தியிருந்தா அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா.?" என்றாள் நிமிர்ந்து பார்த்து.

 

"என்ன.?" என்றான் அதியன் புருவம் உயர்த்தி.

 

"அந்த அளவுக்கு நீ அந்த புதருல பெரண்டு எழுந்திருக்க. அமைதியா நின்னிருந்தா இப்படி முள் பிடிச்சிருக்காது.." என்றவள் மற்ற ரத்த துளிகளையும் துடைத்து விட்டுவிட்டு பெருமூச்சோடு எழுந்து நின்றாள்.

 

"உன் காலை பார்த்தியா என்ன நெறம்ன்னு..? ஐஸ் பொட்டியில வச்ச தக்காளி மாதிரி இருக்க நீ‌‌.. நெறம் கூட நமக்குள்ள ஒத்து வரல.. நீ ஏன் என் கூட சுத்துற.? ஊருல உனுக்கு வேற பொண்ணே கெடைக்கலையா.?" செங்காவின் குரலில் சிறு சலிப்பு இருந்தது. அவன் எதற்காக தன் பின்னால் சுற்ற வேண்டும் என்று குழம்பினாள்.

 

"இந்த நிறம் நிரந்தரம் இல்லையே.. நானும் வெயில்ல வேலை செஞ்சா உன் கலருக்குதான் வருவேன். ஆனா காதல் நிரந்தரம் ஆச்சே.." என்றவனை கண்டு நெற்றியில் அடித்து கொண்டாள் செங்கா.

 

"உனுக்கு பைத்தியம் முத்தி போச்சி.. உனுக்கு பட்டாதான் புத்தி வரும்.. வா வந்து இந்த தடத்துல நட.." என்றவள் செடிகளின் இடையே நடக்க ஆரம்பித்தாள்.

 

அதியன் அவளை பின்தொடர்ந்து நடந்தான். செங்கா தன் கையிலிருந்த குச்சியை வைத்து முன்னால் தட்டிக் கொண்டே நடந்தாள். 

 

பத்து நிமிட பயணத்திலேயே ஒற்றையடி பாதை ஒன்றை கண்டுபிடித்து அதில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் செங்கா. 

 

"இதுதான் வழியா.?" என கேட்டவன் ஆளுயர புதர்களை திரும்பி பார்த்தான்.

 

"ஆமா.." என்றவள் வழியில் இருந்த படி போன்ற உயர பாறைகளின் மீது ஏற ஆரம்பித்தாள். 

 

"ச்சே.. இன்னும் பத்து நிமிசம் நடந்திருந்தா சரியான வழியில் போயிருக்கலாம். இப்படி டைம் வேஸ்ட் பண்ணிட்டேனே.." என புலம்பியவனை திரும்பி பார்த்து அவன் நெஞ்சின் மீது கை வைத்து அவனை நிறுத்தினாள் செங்கா. 

 

அதியன் அவளது முகத்தை நெருக்கத்தில் கண்டதும் மூச்சி விட மறந்து போனான். செங்காவும் தான் சொல்ல வந்ததை மறந்து போனாள். அவனது முகத்தை ஆராய்ந்தாள். அவனது கண்களில் தனது எண்ணத்தை தொலைய செய்தாள். 

 

அவனின் கண்மணிகளில் தெரிந்த தன் பிம்பம் கண்டவள் தன் கண்களை மூடி திறந்தாள். "அந்த வழியை எப்புடி தப்பா தேர்ந்தெடுத்தியோ அப்புடிதான் இப்ப என்னையும் நீ தேர்ந்தெடுத்துருக்க.. இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தா உனுக்கு புடிச்ச மாதிரி உன் அளவுக்கு அழவா இருக்கற பொண்ணை நேசிச்சி கட்டிக்கலாம். என் பின்னாடி வந்து உன் வாழ்க்கையை தொலைக்காத.." என்றாள் வருத்தம் நிறைந்த குரலில்.

 

அவள் சொன்னது புத்தியில் உறைக்க சற்று நேரம் பிடித்தது அதியனுக்கு. 

 

அவள் அவனை விட்டுவிட்டு திரும்பி நடக்க முயல உடனே அவளை பிடித்து தன் பக்கம் திருப்பினான் அதியன்.

 

"உன் கண்ணோட்டம் ரொம்ப தப்பா இருக்கு செங்கா. உன்னை நீயே ஏன் குறைவா மதிப்பிடுற.?" என்றான் சிறு கோபத்தோடு.

 

செங்காவிற்கு கண்கள் கலங்கியது. "நான் எமனையே பலகாரம் செய்யுற ஆளு. ஆனா நீ எனக்குள்ள பலவீனத்தை தந்துட்ட.. உன்னை பார்க்கற ஒவ்வொரு தடவையும் நீ ஒசத்தி நான் தாழ்த்தினேதான் தோணுது. உன் முன்னாடி என்னால சமமா நிக்க முடியாதோன்னு மனசுல பயமா இருக்கு. எனுக்கு படபடன்னு இங்கிலீசு பேச வராது. தலையை பின்னி பூ வச்சிக்க புடிக்காது. தரையை கூட்டுற மாதிரி அழவா சேலை கட்ட புடிக்காது. கணுக்காலுக்கு கீழ துணி மோதுனாவே எனுக்கு ஒரு மாதிரியா இருக்கும். உனுக்கு இது புரியவே மாட்டேங்குது. இரண்டு பேரும் கட்டிக்கிட்டு ஊருக்குள்ள நடந்தா நல்ல பொருத்தன்னு ஊரே சொல்லணும். அத வுட்டுட்டு இந்த பையனுக்கு என்ன கண்ணு அவுஞ்சி போச்சான்னு உன்னைய திட்ட கூடாது.." என்றவள் தனது புறங்கையால் தன் கண்ணோரத்தை துடைத்துக் கொண்டாள்.

 

அதியனுக்கு அவள் சொன்னது ஆச்சரியத்தை தந்தது. அவள் தன்னை காதலிக்கும் காரணத்தால்தான் இப்படி ஒப்பீடு செய்து பார்த்துக் கொண்டிருக்காள் என்பது புரிந்தது. அவளும் தன்னை காதலிக்கிறாள் என்ற ஒரு விசயமே அவனுக்குள் பலபல மகிழ்ச்சியை தந்தது. அவளுக்குள் இருக்கும் ஒப்பீட்டை எப்படி மாற்றுவது என்பதுதான் அவனுக்கு புரியவில்லை. 

 

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

 

Word count 1154

 

VOTE

 

COMMENT

 

SHARE

 

FOLLOW

 

 


ReplyQuote
Subha Mathi
(@subhamathi)
Estimable Member Registered
Joined: 2 months ago
Posts: 103
 

Nice ...sis 🤩🤩senga & athiyan love..p😘😘oongothai ku enachu🙄🙄 waiting for more episodes sis 😊😊 


ReplyQuote
Page 7 / 8
Share: