Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

இதயம் கேட்கும் காதல்  

  RSS

ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 75
13/09/2019 9:36 am  

இதயம் கேட்கும் காதல் இந்த கதையில பயணிக்க போற கதாப்பாத்திரங்களை தான் இப்ப நம்ம பார்க்க போறோம்.. சரி வாங்க அவங்களை அறிமுகம் செய்து வைக்கிற...

இவள் தான் ஷெஹனாஸ் (Shehnaaz). இவள் பார்க்க அழகில்லை தான். (இந்த இடத்தில எந்த மாதிரி அழகில்லை கருப்பா செகப்பா இல்லை ஒல்லியா குண்டா  அப்படி எல்லாம் நான் குறிப்பிடுல. உங்களுக்கு எப்படி தோனுதோ அப்படி கற்பனை பண்ணிக்கோங்க ப்பா). ஆனால் இவள் மனசு ரொம்ப அழகுப்பா. ஆனா இவள் அம்மா தான் இவளை திட்டிக்கிட்டே இருப்பாங்க. ஆனா அவள் பெரிசா எடுத்துக்க மாட்டா. வலி மனசுல இருந்தாலும் அதை வெளியே காமிச்சிக்க மாட்டா.

இவர் தான் உஸ்மான்(Usman) . நம்ம ஷெஹனாஸ் அப்பா. ரொம்ப நல்லவர்.    தன் பிள்ளைகள் சந்தோஷத்திக்காக எல்லாமே செய்ற ஒரு அன்பான தந்தை.

இவங்க தான் ஆயிஷா(Ayeesha). நம்ம ஷெஹனாஸ் அம்மா . இவங்களும் நல்லவங்க தான் . ஆனா ஷெஹனாஸை மட்டும் திட்டிக்கிட்டே இருப்பாங்க. அவள் தோற்றம் தான் அதுக்கு காரணம்.

இவன் ரஸாஹ்( Razak). நம்ம ஷெஹனாஸ் அண்ணா. தான் தங்கச்சிக்கு ஒன்னுனா சும்மா இருக்க மாட்டான். தான் தங்கச்சிக்காக என்ன வேணாலும் செய்ற ஒரு அண்ணன். அவ தங்கச்சி மேலே அவ்வளவு பாசம்.

இவள் ரக்ஷனா (Rakshana) . ஷெஹனாஸ் அண்ணி . ரஸாஹ் மனைவி. இவளும் ரொம்ப அன்பா இருப்பாள் எல்லார்கிட்டயும். அதுவும் ஷெஹனாஸ் மேலே ஒரு தனி பிரியம் இவங்களுக்கு. அதே மாதிரி மாமியார் செல்லம் இவள்.

இவள் ஷெரின் (Sherine) . ஷெஹனாஸ் நெருங்கிய தோழி.

நியாஸ் (Niyaz) இவனுக்கு அழகு பணம் இது  மட்டும்  தான் முக்கியம். அதை தவிர்த்து வேறு எதுவும் அவனுக்கு பெருசில்லை

இவன் சித்தீக் ( Siddique).  ரொம்ப நல்லவன். பார்க்க அழகா இருப்பான். அதேமாதிரி மனசும் அழகு. இவன் சொந்தமா உருவாக்குன ஒரு சிறிய சாம்ராஜ்யம் தான் பிஸ்மி software கம்பெனி.  இவனுக்கு கல்யாணமான இரண்டு வருஷத்துல ஒரு குழந்தை பொறந்த அடுத்த நொடியே மரணத்தை தழுவிட்டா இவன் மனைவி  தமீஸ் ( Thameez) .  இவங்க ரொண்டு பேருக்கும் பிறந்தவ தான் நம்ம குட்டி தேவதை(அச்சோ இதை மட்டும் ஷெஹனாஸ் முன்னாடி சொல்லாதிங்க அப்புறம் சண்டைக்கு வந்துடுவா 😜😜😜) ராஹிலா (Rahila).  அவன் மனைவி போன பிறகு அவனோட சந்தோஷமும் போய்டுச்சு. ராஹிலா பார்த்து அப்ப அப்ப சந்தோஷமா இருப்பான். அவ்வளவு தான்.

இவங்க லியாக்ஹத் (Liyakhath) - ஆரிஃபா ( Aarifa) . நம்ம சித்தீக் அப்பா அம்மா. ரொம்ப நல்லவங்க. அவங்க ரெண்டு பேருக்கும்  இருக்க ஒரே கவலை சீத்தீக் இப்படி இருப்பது தான்.

என்னப்பா எல்லாரையும் பார்த்துட்டிங்களா. இவங்க தான் நம்ம கூட பயணிக்க போறாங்க இந்த கதையில. ஹப்பாடா எப்படியோ எல்லாரையும் ஒரு சின்ன intro கொடுத்தாச்சி. நம்ம வேலை முடிஞ்சிடிச்சி நாம கிளம்புவோம்.

Kk frds bye ... Story koodiya sikrathula aarambiduva frds... Athu varikum wait pannuga. 

Bye👋👋👋
Stay tuned❤️❤️

 

This topic was modified 1 month ago by ஷமீம் பானு

ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 75
18/09/2019 12:41 pm  

❤️ 02 ❤️

" எருமை மாடு இன்னிக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு கச்சேரி 😡😡.." ன்னு புலம்பிட்டே அங்கேயும் இங்கேயும் நடந்துட்டு இருக்கா நம்ம ஷெஹனாஸ்.

" ஹே யாருக்கு கச்சேரி வைக்க போற?.." ன்னு ஆயிஷா கேட்கிறாங்க

" வேற யாரு எல்லாம்  உன் அருமை புத்திரன் ரஸாஹ் தான் வரட்டும் அவனை இன்னிக்க்கி 😠😠..." ன்னு ஷெஹனாஸ் தான் கையை முறிக்கிறா.

" ஏம்மா இவ்வளவு கோபம் உன் அண்ணன் மேலே?🤔🤔..." ன்னு அண்ணி ரக்ஷனா கேக்குறாங்க.

ஆனா அவ எதுவுமே சொல்லாமா அங்கேயும் இங்கேயும் தான் அண்ணனை திட்டிக்கிட்டே நடந்துட்டு இருக்கா.

" அப்பா கிட்டயாது சொல்லுமா ஏன் அண்ணா மேலே இவ்வளவு கோவமுன்னு 🙂🙂.." அப்பா உஸ்மான் பொறுமையா கேட்கிறாரு

அதுக்கு அப்பாவை பார்த்து முறைக்கிறா😠😠  நம்ம ஷெஹனாஸ்

உஸ்மானும் அமைதியா நாற்காலில உட்கார்ந்துட்டாரு😳😳

அப்போ ரஸாஹ் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வரான். உள்ள வந்ததும்  அவன் ஷெஹனாஸ் பண்றதை பார்த்துட்டு ரக்ஷனா கிட்ட என்னன்னு செய்கையில கேட்கிறான்.

அவள் , " எனக்கு தெரியலை " ன்னு தலையை ஆட்டுறா. அப்ப தான் அவனுக்கு நியாபகம் வருது ஷெஹனாஸ் இன்னிக்கி ஷாப்பிங் போகனும் அவன் கிட்ட சொன்னது இப்ப தான் அவனுக்கு நியாபகம் வருது.

அவன் வந்ததை பார்த்த ஷெஹனாஸ் ஓடி போய் நங்கு நங்குன்னு அவன் மண்டையில நாலு கொட்டு கொட்டுறா.

"ஏய் விடுறி வலிக்குது.." ன்னு கத்துறா ரஸாஹ்.

ஆனா ஷெஹனாஸ் கொட்டுறதை விட்டுட்டு அவன் காத பிடிச்சி திருகுறா கோபமா.

" ஹே செல்லம் ஸாரி டா மறந்துட்ட😕😕..."  ன்னு சொன்னதும்

" என்னது ஸாரியா😈😈.." ன்னு இன்னும் காதை பிடிச்சி திருகிறா..

" ஹே நீ என்ன சொன்னாலும் செய்ற😔😔..." ன்னு அவ காலுல விழாத குறையா கெஞ்சுறான்.

" அப்படியா சரி அப்ப நூறு தோப்புக்கரணம் போடு உன்ன விட்டுற.." ன்னு சொல்றா

"என்னது நூறு தோப்புக்கரணமா??🤤🤤🤤..." ன்னு கண்ணை விரிக்கிறான்.

" நீ போட்டு தான் ஆகனும்..." ன்னு கறாரா சொல்றா

வேற வழியில்லாம அவனும் தோப்புக்கரணம் போட ஆரம்பிக்கிறான்.

அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல போனா கண்டிப்பா நமக்கும் சேர்த்து பாட்டு விழும் நல்லா தெரியும் அதனால அவங்க அமைதியா இருந்துட்டாங்க எல்லாரும்.

ரஸாஹ் எல்லாரையும் பாவமா பார்த்துட்டே தோப்புக்கரணம் போட ஆரம்பிக்கிறான். ஷெஹனாஸ் அவன் போடுறதை எண்ண தொடங்கிட்டா.

"ஏய் போதும் டி அவனை விடு .." ஆயிஷா சொல்றாங்க

" அதெல்லாம் முடியாது  ஷாப்பிங் போகனும் வான்னு சொன்ன அவன் வரலை அதனால அவன் தோப்புக்கரணம் போட்டு தான் ஆகனும் இப்ப தான் இருபதே வந்திருக்கு போட்டு தான் ஆகனும்..."

" ஏன்டி நீ தான் தண்டத்துக்கு வீட்டுல உட்கார்ந்து இருக்க என் புள்ளை அப்படியா? அவன் வேலை செஞ்சிட்டு வரான். அவனை எதுக்கு தொல்லை பண்ற .." ஆயிஷா திட்டுறாங்க.

ஆனா ஷெஹனாஸ் அதையெல்லாம் காதுல வாங்காம , "நீ போடு யார் என்ன சொன்னாலும் இன்னிக்கி நான் உன்ன விடுறதா இல்ல..." ன்னு அண்ணனை பார்த்து முறைக்கிறா.

"சரி போடுறேன் என் தலையெழுத்து 🤦" ன்னு அவன் சொல்லிட்டு மறுபடியும் ஆரம்பிக்கிறான்.

"ஹான் அது..."

இவங்க ரெண்டு பேரோட செல்ல சண்டையை ரக்ஷனாவும் உஸ்மானும் ரசிச்சுட்டு இருக்காங்க. ஆனா ஆயிஷாக்கு மட்டும் பிடிக்கலை.

" ஏன்டி உன் தேவைக்கு நீ தான் போய் வாங்கனும் அவன் வேலைக்கு போய்ட்டு வரான். நீ வீட்டுல சும்மா தானே இருக்கே. நீயே போய் வாங்கிக்க வேண்டியது தானே. வீட்டுல ஒரு வேலையும் செய்றது இல்லை தின்னுட்டு தின்னுட்டு போந்தாக்கோழி மாதிரி உடம்பை மட்டும் வளர்ந்து வச்சியிருக்க. ஒழுங்கா நீயே போய் வாச்கிக்கோ..." ஆயிஷா ரொம்ப அவளை திட்டுறாங்க.

இதை கேட்டுட்டு இருந்த ரஸாஹ் கோவம் வந்து "அம்மா போதும் எனக்கும் என் தங்கச்சிக்கும்  ஆயிரம் இருக்கும் எங்களுக்கு நடுவுல நீங்க வராதீங்க.." ன்னு ரஸாஹ் ஆயிஷா கிட்ட சொல்றான்.

"ஆமாடா அவ சும்மா தானே இருக்கா.." ன்னு ஆயிஷா சொன்னதும்

" ஏன் ஆயிஷா! ஷெஹனாஸ் tnpsc எழுதி அதுல செலக்ட் ஆனா போக வேண்டாம் சொன்ன சரின்னு அமைதியா இருந்துட்டா  rrb எழுதினா அதுலயும் செலக்ட் ஆனா அந்த வேலைக்கு போக கூடாது சொல்லிட்ட சரி விட்டுட்டா pg படிக்கிறன்னு கேட்டா அதுவும் வேண்டாம் சொல்லிட்ட எல்லாமே பண்ணது நீ பழி அவ மேலையா?..." கோபமா உஸ்மான் ஆயிஷா கிட்ட கேட்க அவங்க எதுவும் சொல்லாம அமைதியா இருக்காங்க.

" இப்படியே அவளுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து வச்சிட்டிங்க.." ன்னு ஆயிஷா சொல்லிட்டே சமையல் செய்ய போய்ட்டாங்க.

ஆனா ஷெஹனாஸ் தான் பாவம் கண்ணு கலங்குறதை யாருக்கும் தெரியாம மறைச்சிட்டு தான் அறைக்கு போய்ட்டா.

ரக்ஷானாக்கு ஆயிஷா மேலே ரொம்ப கோபம் . ஆனா அவள் அமைதியா இருக்கா. ரஸாஹ் தன் தங்கச்சி படுற கஷ்டத்தை பார்த்து தன்னால எதுவுமே செய்ய முடியலையே வருத்தப்படுறான். உஸ்மானும் கவலைப்படுறாரு.

💔💔💔

தான் அறைக்கு வந்த ஷெஹனாஸ் தொழுறா. தொழுகையில அல்லாஹ்கிட்ட தன்னோட கஷ்டத்தை சொல்றா.

Whatsappla "நாளைக்கு பார்க் வா உன் கிட்ட நான் பேசனும்" மெசேஜ் அனுப்பிட்டு  அழுதுட்டே தூங்கிடுறா.

💔💔💔💔

" டேய் என்ன டா ஷெஹனாஸ் மெசேஜ் பண்ணி இருக்காளா?..." ன்னு பரத் கேட்கிறான்.

" ஆமாடா அந்த நாய் தான்டா முதல்ல இவளை கழட்டி விடனும்..." ன்னு நியாஸ் சொல்றா.

" டேய் அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணுது டா..." ன்னு ராகுல் சொல்றான்.

" டேய் எங்க வீட்டுல ஒரு பொண்ணு பார்த்து பேசிட்டாங்க டா அவ ரொம்ப அழகா இருக்கிறா..." ன்னு நியாஸ் சொல்றது கேட்டு எல்லாரும் அதிர்ச்சி ஆகுறாங்க.

"என்னடா சொல்ற அப்ப நீ அவளை லவ் பண்ணலையா?..." ன்னு அரவிந்த் கேட்கிறான் அதிர்ச்சியா.

" அவளை லவ் பண்றதா ச்சி அது எனக்கு அசிங்கம். அவளை மாதிரி அழகே இல்லாதவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணா என்ன சுகத்தை அனுபவிக்க முடியும் அதுவும் அவள் மிடில் கிளாஸ் குடும்பம். எங்க வீட்டுல ஒரு பொண்ணு பார்த்து இருக்காங்க அப்ப்பா செமயா இருக்கா பொண்ணு அதுமட்டுமில்ல பொண்ணு பணக்காரி.." ன்னு சொன்னதும் தான் பரத் ராகுல் அரவிந்த் மூனு பேருமே அவன் கேவலமான புத்தியை புரிஞ்சிக்கிட்டாங்க.

" டேய் நீ பண்றது தப்புடா அந்த பிள்ளை ரொம்ப நல்லவ அழகை காரணம் காட்டி அவளை வேண்டாம் சொல்லாத..." ன்னு அவன் நண்பர்கள் எல்லாருமே அவனுக்கு எடுத்து சொல்றாங்க ஆனா அவன் புரிஞ்சிக்கவே இல்லை அப்ப அவங்க மூனு பேருமே எங்க மூஞ்சில முழிக்காதன்னு சொல்லிட்டு போற்டுறாங்க. ஆனா அவன் அதை பத்தியெல்லாம் கவலைபடாம அலட்சியமா இருக்கான்.

ஷெஹனாஸ் ராகுல் அரவிந்த் பரத் ஷெரின் இவங்க எல்லாருமே tenth லருந்து பெஸ்ட் பிரண்டஸ். நியாஸ் கல்லூரில படிக்கும் போது இவங்க கூட பிரண்டா ஜாயின் பண்ணிக்கிட்டான். ஆனா நியாஸ் ஷெஹனாஸ் கிட்ட டைம் பாஸ்க்கு பழக ஆரம்பிச்சான். ஆனா ஷெஹனாஸ் அதை வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டு அவன் மேல லவ் இருக்கிறதா நினைச்சிட்டு இருக்கா.

பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு....

💔💔💔💔

தான் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வரான் சித்தீக். வந்ததும் தன்னோட செல்ல மகள் ராஹிலா கூட விளையாடுறான். என்ன தான் அவன் சிரிச்சு விளையாடினாலும் அவன் முகத்துல இருக்கிற பழைய சந்தோஷம் அவன்கிட்ட இல்லை.

இதையெல்லாம் பார்த்துட்டு இருந்த சித்தீக் அப்பா அம்மா லியாக்ஹத் ஆரிஃபா ரெண்டு பேருக்கும் கவலை . அவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கனும் ஆசைபடுறாங்க காரணம் ராஹிலா. அவளுக்கு அம்மா வேண்டும் நினைக்கிறாங்க.

சித்தீக் சாப்பிட்டு முடிஞ்சதும் இதை பத்தி சொல்றாங்க, " யோசிச்சு சொல்றேன் மா " சொல்லிட்டு ராஹிலாவை அம்மாகிட்ட கொடுத்துட்டு தான் அறைக்கு போறான்.

அங்கே போனதும் தமீஸ் போட்டோவை பார்த்து, " உன்னை நான் எப்படி டி மறப்பேன். உன்கூட ரெண்டு வருஷம் வாழ்ந்திருக்க..."  புலம்புறான். அப்படியே தூங்கிட்டான்.

அவனுக்கு தெரியலை தமீஸ் அவனை நேசிக்கிறதை விட  இன்னும் அதிகாமா நேசிக்கற ஒரு பொண்ணு இருக்கான்னு. தமீஸை நேசிச்சதை விட ஒருபடி மேல் தான் இன்னும் ஒரு பொண்ணை நேசிக்கபோறோம்ன்னு. அந்த பொண்ணை கூடிய சீக்கிரம் அதுவும் நாளைக்கே பார்க்க போறோம் கனவுல கூட நினைச்சு பார்த்து இருக்க மாட்டான் நம்ம சித்தீக்.

❤️ தொடரும்❤️

வணக்கம் நண்பர்களே...

    இந்த கதையில நான் எழுத்து நடையை கொஞ்சம் மாத்தியிருக்கேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க... நல்லா இருந்துச்சுனா இந்த எழுத்து முறையே இல்லனா மாத்திக்கலாம்...

  உங்க கருத்துக்களை சொல்லுங்க பிரண்டஸ்...❤️❤️

Stay tuned for next epi💓💓

 


ReplyQuote
ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 75
27/09/2019 9:35 am  

Hello frds sorry for late upload.. exams iruthathala ud poda moodila... Ini weekly once or twice varum❤️

❤️02 இதயம் கேட்கும் காதல்❤️

காலையில் மூன்று மணிக்கெல்லாம் முழித்து கொண்டா ஷெஹனாஸ். எழுந்து பல்லு விளக்கிட்டு உளு செய்துட்டு தஹஜ்ஜித் தொழுறாள்.

அவங்க வீட்டில் ஒரே அறை தான் அதனால உஸ்மான் மாடியில் தனியா அவங்க ரெண்டு பேருக்கும் அறை கட்டி கொடுத்துட்டாரு.

ஷெஹனாஸ் தொழுது முடிச்சதும் அவள் அறையும் வாசலையும் பெறுக்கி விட்டு நாற்காலியில் அமர்ந்து அந்த பொழுதை ரசிக்கிறாள். அந்த நிமிடம் முழுக்க நியாஸ் மட்டும் தான் இருக்கான்.

பாவம் அவளுக்கு தெரியலை அவனால நாம ரொம்ப அழ போறோம். அது தெரியாம அந்த பொழுதை நியாஸோட நினைவுகளோட ரசிக்கிறாள்.

💖💖💖💖

"ரஸீமா எழுந்திரி டைம் ஆயிடுச்சு தொழுக போனும்ல " ன்னு ரஸாஹ்கை எழுப்பிட்டு இருக்காள் ரக்ஷனா.

"அம்மு இரண்டு நிமிஷம் டி ப்ளீஸ் " , ன்னு சொல்லி அவள் மடியிலே தலை வச்சி படுத்துக்கிறான்.

" கொன்றுவ ராஸ்கல் எழுந்துரு டா பக்கி " ன்னு அவன் தலை மூடியை பிடிச்சு ஆட்டுறா.

" ஸ்ஸ்ஸ் ஆஆஆ ஹே ராட்சஷி விடுறி வலிக்குது " , கொஞ்சுறான்.

" இப்ப எழுந்துக்க போறியா இல்லை ஷெஹனாஸை கூப்பிடவா?.." ன்னு மிரட்டுறா.

" என்னது ஷெஹனாஸ்ஸா அல்லாஹ் ஆத்தி அவள் வந்தா கொதிக்கிற தண்ணிலே எடுத்து வந்து மூஞ்சில ஊத்துவா அதுக்கு இவளே மேல்😳😳😳..." மனசுல நினைச்சிட்டு எழுந்து தொழுகைக்கு கிளம்புறான்.

அவன் எழுந்து போறதை பார்த்து தனக்குள்ள சிரிச்சிட்டு , " அந்த பயம் இருக்கட்டும் " ன்னு அவன் கிட்ட சொல்ல அவளை பார்த்து செல்லமா முறைச்சிட்டே அவளை தன் பக்கம் இழுத்து " love you டி பொம்மை " ன்னு அவள் நெற்றியில் இதழ் பதிக்க , " போதும் தொழுகைக்கு நேரமாவது கிளம்பு " ன்னு சொல்றா அவளை பார்த்து செல்லமா முறைச்சிட்டே தொழு பள்ளிவாசலுக்கு போறான் ரஸாஹ்.

💖💖💖💖

சித்தீக் தொழு பள்ளிவாசலுக்கு போறான். தொழுது முடிச்சதும் அங்கே ஹஜ்ரத் அவன்கிட்ட "அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).." ன்னு ஸலாம் சொல்றாரு.

" வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) " ன்னு பதில் ஸலாம் சொல்லிட்டு , " என்ன ஹஜ்ரத் எப்படி இருக்கிங்கே? ரொம்ப நாளா மசூதிக்கே வரலை ? " ன்னு ஹஜ்ரத் கிட்ட விசாரிக்கிறான்.

" அல்ஹம்துலில்லாஹ் நான் நல்லா இருக்கேன் ப்பா. ஊருக்கு போய் இருந்தேன் அதான் இங்க வர முடியலை " ன்னு சொல்றாரு.

" அப்படியா ஹஜ்ரத் சரி " ன்னு சிரிச்சிட்டே சொல்றான் சித்தீக்.

"உன் கிட்ட ஒரு விஷயம் பேசனும் சித்தீக் பேசலமா?" ன்னு ஹஜ்ரத் கேட்கிறாரு.

" பேசலாம் ஹஜ்ரத் " ன்னு சொல்றான்.

" நான் சொல்றேன் தப்பா எடுத்துக்காதப்பா நீ இன்னொரு திருமணம் செய்து கிட்டா என்ன? " ன்னு சொன்னதும் சித்தீக் முகம் மாறிடிச்சி. அதை ஹஜ்ரத் கவனிக்காமலும் இல்லை. அவரே மறுபடியும் பேச ஆரம்பிக்கிறாரு.

" இங்க பாரு சித்தீக் நீ உன் மனைவியை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் தெரியும். அவளை உன்னால மறக்க முடியாது தெரியும். ஆனா உன் கடைசி காலத்துக்கு ஒரு துணை தேவை. என்னதா நம்ம பிள்ளைங்க பார்த்துக்கிட்டாலும் நம்ம துணை பார்த்துக்கிற மாதிரி வராது. கொஞ்சம் யோசிப்பா ", ன்னு ஹஜ்ரத் பொறுமையா அவனுக்கு எடுத்து சொல்றாரு.

அவனும் " யோசிக்கிற ஹஜ்ரத் " ன்னு சொல்றான்.

"அப்ப சரிப்பா நான் கிளம்பிற எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு " சொல்லிட்டு அவர் கிளம்பிட்டாரு.

சித்தீக் வீட்டுக்கு வரான். தான் அறையோட சின்ன பால்கனில உட்கார்ந்து ஹஜ்ரத் சொன்னதை யோசிக்க தொடங்குறான்.

எவ்வளவு தான் யோசித்தாலும் அவன் மனசு முழுக்க அவன் மனைவி தமீஸ் மட்டும் தான் இருந்தாள்.

"போன வருஷம் இந்த நேரம் நீ என் கூட இருந்த எவ்வளவு சந்தோஷமா இருந்த ஆனா இன்னிக்கி நீ என்கூட இல்ல . உன் கூட வாழ்ந்த வாழ்க்கையை நான் எப்படி தமீஸ் மறப்பேன். என்னை விட்டு ஏன்டி போன. நம்ம ராஹிலாவை விட்டு ஏன்டி போன . போனவ என்னையும் உன்கூடவே சேர்த்து அழைச்சிட்டு போய் இருக்கலாம்ல. இப்ப உன்ன மறந்து வேற ஒரு பொண்ணை கட்டிக்கனுமா? எப்படி தமீஸ் என்னால முடியும்? அப்ப உன் கூட வாழ்ந்த வாழ்க்கை பொய்யா? நம்ம காதல் பொய்யா?.." ன்னு மனசுக்குள்ள அவனே புலம்பிட்டு இருக்கான்.

அதையெல்லாம் நினைத்தவன் மனம் வலித்தது. அதற்கு மருந்தாக ஷெஹனாஸ் இருக்கிறான்னு அவனுக்கு யார் சொல்வா?...

சித்தீக் ராஹிலா கூட விளையாடுறான். ராஹிலாவும் மழலை சிரிப்போட தான் அப்பாவோட விளையாடுறாள்.

💖💖💖💖

" டேய் எருமை மாடு நேத்து நீ ஷாப்பிங் கூட்டிட்டு போகலை அதுக்கு தண்டனையா இன்னிக்கு எனக்கும் அண்ணிக்கும் சேர்த்து ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா " ன்னு ஷெஹனாஸ் சொல்றாள்.

" வாங்கிட்டு வரேன் டா "

"ம்ம்ம் சரி. அப்பா நான் இன்னிக்கி பார்க் போய்ட்டு வரேன்ப்பா " ன்னு அப்பா கிட்ட பர்மிஷன் கேட்கிறாள்.

" சரிடா போய்ட்டு வா பார்த்து பத்திரமா போ சரியா " , உஸ்மான் சொல்றாரு.

"சரிப்பா "

அவள் பத்து மணி போல பார்க் கிளம்புறாள். அதை பார்த்துட்டு இருந்த ஆயிஷாக்கு கோபம் வருது. ஆனாலும் அமைதியா இருக்காங்க.

" ஏன்டி இப்ப parkku போய் தான் ஆகனுமா?.." ன்னு கேட்கிறாங்க ஆயிஷா.

" ஆமா போய் தான் ஆகனும்.இப்ப என்ன அதுக்கு?..." ன்னு நிக்காம சொல்லிட்டு கிளம்பிடுறா.

" எப்படி போறா பாருங்க. இதுவரைக்கும் இவளுக்கு பத்து மாப்பிள்ளை பார்த்தாச்சு ஆனா ஒன்னும் அமையலை. வரவேன் எல்லாம் பொண்ணு அழகா இல்லை பொண்ணு இப்படி இருக்காள் அப்படி இருக்காள் ஏதாவது குறை சொல்லிட்டு போய்டுறாங்க. இதை வச்சிட்டு எனக்கு தான் கஷ்டமா இருக்கு . எந்த வேலையும் செய்றது கிடையாது ... எல்லா என் தலையெழுத்து " ன்னு தலையில அடிச்சிட்டு அவங்க சமையல் பண்ண போறாங்க.

இதை கேட்ட உஸ்மானுக்கு கோபமும் வருத்தமும் ஒன்னா வர அமைதியா அல்லாஹ் கிட்ட "என் மகள் வாழ்க்கை எப்படியாவது சரிசெய்து விடு அவள் படுற கஷ்டத்தை பார்க்க முடியலை " ன்னு துஆ கேக்குறாரு.

ரக்ஷனா மனசுல , " எனக்கு குழந்தை பொறந்தா ஷெஹனாஸ் மாதிரி தான் வேணும் " ன்னு நினைக்கிறா. " அவ நல்ல மனசுக்கு அவ ராணி மாதிரி இருக்க போறாள். அதை பார்த்து நீங்க பொறாமை பட தான் போறிங்க அத்தை " ன்னு மனசுல சொல்லிட்டு தான் வேலையை பார்க்க போறா ரக்ஷனா.

💔💔💔💔

Park ku வரா ஷெஹனாஸ். அங்கே இருக்க ஒரு இடத்தில அமர்ந்து இருக்காள். அங்க விளையாடுற குழந்தைகளை சிரிச்சிட்டே பார்த்துட்டு இருக்காள். அந்த சிரிப்பு இன்னும் கொஞ்ச நேரத்தில தன்னை விட்டு போக போது தெரியலை அந்த பேதைக்கு.

அங்க சலிப்போட நியாஸ் வரான். அவளை பார்த்து சிரிச்சுட்டு "ஹாய் " ன்னு சொல்லறா.

அவளும் அழகா சிரிச்சிட்டே " ஹாய் நியாஸ் " சொல்றா.

" உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.." - ஷெஹனாஸ்

" நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லனும் ஆனா நீ முதல்ல சொல்லு " - நியாஸ்

" இல்ல நீ சொல்லே!..." - ஷெஹனாஸ்

" இல்ல பரவாயில்லை நீயே சொல்லு .." - நியாஸ்

" சரி அ...அது என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ?.." ன்னு கேட்டதும் அவன் பலமா சிரிக்கிறா.

ஷெஹனாஸ் புரியாம அவனை பார்க்கிறாள்.

அவன் சிரிச்சிட்டே, " உன்னலாம் நான் கல்யாணம் பண்ணி என்ன பண்ண ? உன்கிட்ட என்ன இருக்கு நான் கல்யாண பண்ண ? அழகு இருக்கா ? இல்ல பணமாது இருக்கா ? எதுவுமே இல்லாத உன்னை நான் கல்யாணம் பண்ணி கொண்டு என்ன சுகத்தை அனுபவிக்க முடியும் சொல்லு? .. ஹான் இன்னும் ஒன்னு சொல்ல மறந்துட்ட எனக்கு வேற பொண்ணோட நிச்சயம் ஆயிடுச்சு. அடுத்த மாசம் கல்யாணம் வந்துடு மறக்காம. அவள் உன்னை விட ரொம்ப அழகு அதுமட்டும் இல்ல பணக்காரி கூட " ன்னு நியாஸ் சொல்லிட்டே ஷெஹனாஸ்ஸை ஒரு அலட்சிய பார்வை பார்க்கிறான்.

அவள் வலியை வெளியே காமிக்காம " உன்னை போம் நான் கல்யாணம் பண்ணிக்கனும் நினைச்ச பார்த்தியா ? என் புத்தியை செருப்பால அடிச்சிக்கனும். என் அன்புக்கு காதலுக்கும் தகுதி இல்லாதவன் நீ. என் மூஞ்சில கூட முழிச்சிடாதே !😠😠😡😡 " ன்னு திட்டிட்டு எழுதந்து போறாள்.

அவளால கொஞ்ச கூட நடக்க முடியலை. அவன் சொன்னது மட்டும் தான் அவன் காதுல கேட்டுட்டே இருக்கு. அவள் இதயத்தை யாரோ கடப்பாரை வச்சு குத்துற மாதிரி இருக்கு அவளுக்கு. அவள் மனசு கொஞ்சம் லேசாக்க கடற்கரைக்கு போலாம் முடிவு பண்ணி போறாள்.

அவள் வாழ்க்கைக்கான மாற்றங்கள் அங்க தான் தொடங்க போதுன்னு அவளுக்கு தெரியலை.

பார்ப்போம் இந்த மாற்றங்கள் அவள் வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றி அமைக்க போதுன்னு.

💔💔💔💔

அந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் சற்று கம்மியாக இருந்தாலும் கடற்கரையின் அழகும் அலைகளின் விளையாட்டின் ரம்மியும் குறையவில்லை. இருக்காதா என்ன மெரீனா கடற்கரையின் அடுத்த நீண்ட கடற்கரை என பெயர் பெற்றது அல்லவா நம் சில்வர் பீச்.

அந்த கடற்கரையை ரசிக்க கூட மனசு இல்லாம மணல்ல நடந்து போய் அலைகளை பார்த்த மாதிரி உட்கார்ந்து கொள்கிறாள்.

அவள் மனம் அவன் சொன்னதை நினைத்து அழுது கொண்டு இருக்கு. அது கண்கள் வழியாகவும் வழிந்தது.

எத்தனை மணிநேரம் அப்படி இருந்தாள் என்பது அவள் உணரவில்லை.

அப்போ அவள் மேல் பிஞ்சு கைகள் படுவது போல் உணர திரும்பியவள் ஒரு குழந்தை தவழ்ந்த படி அவள் பின்னால் இருந்து கை வைத்து அழைத்தது.

" யார் குழந்தை இது ? அல்லாஹ் இது என்ன குழந்தையை தனியா விட்டு பெத்தவங்க எங்க போனாங்க?.." ன்னு மனசுல நினைச்சிட்டே அந்த குழந்தையை தூக்கி கிட்டா. அந்த குழந்தையோட பெத்தவங்களை தேடுறா.

" அம்மு உங்க பெயர் என்ன ? உன் அம்மா அப்பா எங்கே ? நீ எப்படி தவழ்ந்து வந்த ? உனக்கு கை கால் வலிக்குமே செல்லம் ? எப்படி டா வந்திங்க? .." ன்னு அந்த குழந்தையை கேட்கிறா.

அந்த குழந்தை , " உ உஉ " ன்னு அதுக்கு தெரிஞ்ச மொழியில சிரிச்சிட்டே ஷெஹனாஸ் கிட்ட பேசிட்டு இருக்கு.

ஷெஹனாஸ் அந்த குழந்தையோட சிரிப்புல தன்னையே மறந்துட்டு குழந்தையே பார்த்துட்டு இருக்காள்.

அப்ப ஒரு ஆண் குரல் " excuse me " ன்னு பாஸ்கர் கூப்பிட்ட பிறகு தான் தன்னிலை வராள் ஷெஹனாஸ்.

" என்ன வேண்டும் ?.." ன்னு கேக்குறா.

" இவள் என் நண்பன் குழந்தை " ன்னு சொன்னது தான் தாமதம் ஷெஹனாஸ் திட்ட ஆரம்பிச்சிட்டா.

" ஏன்டா மங்குஸ் தலையா உன் குழந்தையா இருந்தா இப்படி விட்டு இருப்பியா ? மூஞ்ச பாரு சேவிங் பண்ண மலகுரங்கு மாதிரி. உன்ன சொல்லக்கூடாது. உன்ன நம்பி தான் குழந்தையை குடுத்தாப்பாரு உன் நொண்ப அவனை சொல்லனும் " ன்னு அவள் திட்டுறா. அவன் திருதிருவென முழிக்கிறான். பாவம் என்ன பண்ண முடியும்?.

" கடவுளே இவள் சரியான லம்பாடி பொம்பிளையா இருப்பா போல " ன்னு வடிவேலு பாணியில மனசுல நினைச்சிட்டு இருக்கப்ப " ஹலோ excuse me இவள் என் மகள் " ன்னு சித்திக் குரல் கேட்டதும் அவன் பக்கம் திரும்பி , " நான் எப்படி நம்புறது ? " ன்னு நம்பாம கேட்கிறா.

" அல்லாஹ் மேலே ஆனையா இவள் என் மகள் தான். அவள் பெயர் ராஹிலா " ன்னு சித்திக் சொல்றான்.

" அல்லாஹ் சாட்சியா சொல்றதால நம்புற இந்தாங்க " ன்னு அவள் குழந்தையை கொடுக்கிறப்ப

" அம்மா..." ன்னு ராஹிலா ஷெஹனாஸை அழைக்கிறாள்.

எல்லாருமே என்ன சொல்றதுன்னு தெரியாம ஒருத்தர்க்கு ஒருத்தர் பார்க்கிறாங்க. ராஹிலா மறுபடியும் " அம்மா " ன்னு கூப்பிடுறா.

" அம்மு உன் அம்மா வீட்டுல இருக்காங்க டா " ன்னு சொல்றாள் ஷெஹனாஸ்.

அப்புறம் குழந்தையை அவன் கொடுக்கும் போது, " ஒரு வேண்டுகோள் "

"என்ன?.." ன்னு தான் புருவத்தை உயர்த்தி கேட்கிறான்.

" குழந்தையை தயவுசெய்து இந்த மஷ்ரூம் தலையா கிட்ட மட்டும் குடுக்காதிங்க..." ன்னு சொல்றா.

பாஸ்கர் தன்னை தான் சொல்றாள் புரிஞ்சிக்கிட்டு ஷெஹனாஸ்ஸை முறைக்கிறான். அவளும் அவனை பார்த்து முறைச்சிட்டு "சரிங்க நான் வரேன். ராஹிலா செல்லம் நான் போய்ட்டு வரேன் " ன்னு அவள் போய்டுறா.

ஆனா பாஸ்கர் பார்த்து சித்தீக்கு சிரிப்பு வருது. அவன் வாய்விட்டே சிரிக்க ஆரம்பிச்சிடுறான். அவன் சிரிக்கிறதை பார்த்து ராஹிலாவும் சிரிக்க ஆரம்பிச்சிட்டா.

கொஞ்ச நேரம் கடுப்பான பாஸ்கர் அப்புறம் சிரிக்கிற சித்தீக் பார்த்து கண்ணு கலங்குறான். அவன் கண்ணு கலங்குறதை பார்த்தவன் , " மச்சி ஸாரிடா " ன்னு சொல்றான்.

" டேய் சித்திக் நீ இப்படி சிரிச்சு எத்தனை மாசம் ஆகுதுலே?..." ன்னு சொன்ன அப்ப தான் அவனும் உணருறான்.

" ம்ம்ம் ஆமாம் டா "

" அந்த பொண்ணுக்கு தான்டா நன்றி சொல்லனும் உன்னை சிரிக்க வச்சதுக்கு " ன்னு அவன் சொன்னதும்.

" அந்த பொண்ணு மனசு அழகு பாஸ்கர். யாரோ ஒருத்தர் குழந்தையை கூட தான் குழந்தை மாதிரி பார்த்துக்கிற மனசு யாருக்கும் வராது.. அதைவிட அவள் துறுதுறுன்னு இருக்க அந்த கண்ணு ஏதோ .. சரி வா பாஸ்கர் போலாம்..." ன்னு அவன் அலைகள் கிட்ட போய் கொஞ்ச நோரம் விளையாடுறான்.

பாஸ்கர் ஒன்னும் புரியலை . "இந்த மாதிரி இவன் பேசி எவ்வளவு நாள் ஆகுது. அந்த பொண்ணால இந்த மாற்றமா? இல்லை வேற எதனால இந்த மாற்றம் ஒன்னும் புரியலை. ஆனா ஒன்னு மட்டும் எனக்கு புரியுது.  அந்த பொண்ணால மட்டும் தான் சித்திக் பழையபடி பார்க்க முடியும். பேசாம இவங்க ரெண்டு பேருக்கும் திருமணம் செஞ்சு வச்சா எப்படி இருக்கும்?  கடவுளே இவங்களை எப்படியாவது சேர்த்து வச்சிடு ப்பா உனக்கு புண்ணியமா போகும் " தன்னோட கடவுள்ட்ட வேண்டுறா.

சித்திக் ரொம்ப நாள் கழிச்சு சந்தோஷமா தன் மகளோட விளையாடுறான். அதை பார்த்து பாஸ்கர் மனம் சந்தோஷ படுது.

ஷெஹனாஸ் மனசுல இப்ப பெரிய குழப்பம் ,  " அந்த குழந்தை ஏன் என்னை அம்மான்னு கூப்பிட்டா ? அந்த குழந்தைக்கும் எனக்கும் என்ன சம்மதம் ? அவள் ஏன் என்னை அம்மா அழைச்சா ?  இது எதனால நடந்துச்சி? என் மனசு ஏன் அந்த குழந்தைக்கு அம்மாவா மாறனும் துடிக்குது ? அல்லாஹ் இது என்ன சோதனை ? எனக்கு ஒன்னு புரியலை " ன்னு மனசுல நினைச்சிட்டே நடக்கிறாள். 

அவள் தான் அந்த குழந்தைக்கு கூடிய சீக்கிரம் தாயா மாற போறான்னு தெரியலை.

சித்திக் - ஷெஹனாஸ் இவங்க ரெண்டு பேரும் எப்படி சேர போறாங்க . சேருவாங்களா ? இல்லையா ? அப்படி சேர்ந்தா ஷெஹனாஸ் வாழ்க்கை எப்படி மாற போது ? சித்திக் ஷெஹனாஸை தன் மனைவியா ஏத்துக்குவானா?   பார்ப்போம் இனி வரும் அத்தியாயங்களில்.

❤️ தொடரும் ❤️

Stay tuned frds💕

 


ReplyQuoteஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 75
01/10/2019 9:58 am  

❤️ 03 ❤️

 

தன் மனதில் குழப்பங்கள் பல எழுந்தவாறே தன்னோட வீட்டுக்கு வந்து சேருரா ஷெஹனாஸ்.

அவள் வீட்டுக்கு வர மணி ரெண்டு மணியாகுது. அவள் வந்ததும் , " ஷெஹனாஸ் வா வந்து சாப்பிடு " ன்னு ஆயிஷா அவளை சாப்பிட அழைக்கிறாங்க.

" வேண்டாம் மா பசிக்கில " ன்னு சொல்றா.

" ஏய் என்னாச்சு டா உன் முகமே சரியில்லை " ன்னு உஸ்மான் கேக்க ராஹிலா தன்னை அம்மா அழைச்சதை சொல்லலாமா வேண்டாமா ? ன்னு யோசிக்கிறா ஷெஹனாஸ்.

" ஷெஹனாஸ் என்னாச்சு ?.. " ன்னு ரக்ஷனா கேக்க

" அ...அது ..." ன்னு திரும்ப அதை பத்தியே யோசிக்கிறா.

" அம்மு என்னாச்சு டா " ன்னு ஆயிஷா அன்பா கேக்குறாங்க.

அதுக்கும், " ஒ...ஒன்னுமில்லை " ன்னு சொல்லிட்டு சமையலறைக்கு போய் தண்ணீர் குடிக்கிறா. அப்பக்கூட குழப்பமாவே இருக்கா.

" என்னங்க இவள் எவ்வளவு கேட்டும் எதுவுமே சொல்ல மாட்டுறா ?.." ன்னு ஆயிஷா வருத்தப்படுறாங்க.

" விடுமா ரஸாஹ் வரட்டும் அதுவரை நாம அமைதியா இருப்போம் " சொல்றாரு உஸ்மான்.

அவங்களும் அமைதியா போறாங்க. ஷெஹனாஸ் தான் அறைக்கு . கட்டில்ல உட்கார்ந்த உடனே அவளுக்கு ராஹிலா தன்னை அம்மா அழைச்சது தான் அவள் கண்முன்ன வந்து வந்து போகுது.

ரக்ஷனா ஷெஹனாஸ் செயலை பார்த்து குழம்பி போய் ரஸாஹ் அழைக்கிறாள்.

" ஹலோ ..." - ரக்ஷனா

" சொல்லு குட்டி என்ன விஷயம் இந்த நேரத்திக்கு நீ எப்பவுமே பேச மாட்டியே ? என்னடா விஷயம் ?.." ன்னு அவன் தன் வேலையை செய்துக்கிட்டே கேட்கிறான்.

அவள் ஷெஹனாஸ் பற்றி சொல்ல அவன், " சரிமா நான் இப்ப வரேன் "

" ம்ம்ம் சரிங்க சீக்கிரம் வாங்க அவ சாப்பிட கூட இல்லை "

" ஹே என்ன சொல்ற ? ..."

" ம்ம்ம் ஆமா . எல்லாருமே சொல்லியும் சாப்பிடலை. கொஞ்சம் சீக்கிரம் வா "

" சரிடா நான் கிளம்பிட்ட.. " ன்னு சொல்லி கைபேசியை அணிச்சிட்டு அவன் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிட்டு வீட்டுக்கு வரான்.

அவன் வீட்டுக்கு வந்தவுடனே ஒரு தட்டுல சாப்பாடு போட்டு தண்ணீரையும் எடுத்துக்கொண்டு ஷெஹனாஸ் அறைக்கு போறான்.

அங்க ஷெஹனாஸ் எதையோ யோசிச்ச மாதிரி கட்டில்ல அமர்ந்து இருக்காள்.

" பப்பு என்ன யோசிச்சிட்டு இருக்க?..." ன்னு ஷெஹனாஸ்யிடம் சொல்லிட்டே அவள் பக்கத்துல உட்கார்ந்து கொள்றான்.

" அண்ணா... நீ எப்ப வந்த ?..." ன்னு கேட்கிறாள்.

" இப்ப தான் வந்தேன். இந்தா சாப்பிடு " ன்னு அவளுக்கு ஊட்டி விட ஆரம்பிச்சான்.

அவளும் சாப்பிட்டுட்டே , " அண்ணா நான் இன்னிக்கி கடற்கரைக்கு போனன்னா அங்கே..." ன்னு அங்க நடந்ததை சொல்ல ரஸாஹ்க்கும் ரக்ஷனாவும் ஒருத்தர்க்கு ஒருத்தர் பார்த்து கொண்டனர்.

"அண்ணா ஏன்னா அந்த குழந்தை என்னை அம்மான்னு கூப்பிட்டாள்?.."

" ஏய் பப்புமா ! நீ பார்க்கிறதுக்கு அந்த குழந்தையோட அம்மா மாதிரி இருந்திருப்ப இல்லையா முதல்வாட்டி அந்த குழந்தை பேசியிருக்கும்... இல்லையா அப்பா கூட வந்திருக்கிறதால அம்மா நினைப்பு வந்து கூட அம்மான்னு சொல்லியிருக்கும்... "

" இல்லை ண்ணா எனக்கு அந்த குழந்தை கூப்பிட்டது அந்த குழந்தைக்கும் எனக்கும் ஏதோ சம்மதம் இருக்கு தோனுது ரஸாஹ்.."

" ஹே பப்புமா அப்படியெல்லாம் இல்லைடா நீ எதையும் கற்பனை பண்ணாத... அதை விடு மனசை போட்டு குழப்பிக்காத சரியா" ன்னு அவள் தலையை வருடி

" ம்ம்ம் சரி ரஸாஹ்..." ன்னு தலையை ஆட்டுறாள்.

" இந்தா சாப்பிடு . " என்று அவளுக்கு ஊட்டி விடுறான் ரஸாஹ். அவளும் அமைதியாக சாப்பிடுறாள்.

சாப்பிட்டு முடித்ததும் " அண்ணா கொஞ்ச நேரம் உன் மடியிலே படுத்துக்குவா ?..." ன்னு ரஸாஹ்கிட்ட கேட்கிறாள்.

"ம்ம்ம் படுத்துக்கோ டா..." ன்னு சொன்னவுடனே அவன் மடியில் படுத்துக்கிறாள்.

அவள் தலையை வருடிவிடுறான். அந்த வருடல் அவளுக்கு சுகம் தர ஷெஹனாஸ் தூங்கி விடுறாள்.

அவள் தூங்கியதை பார்த்தவன் அவளை அழகாக கட்டிலில் உறங்கவைத்து விட்டு ரக்ஷனாவை பார்த்தான்.

" நாங்க எவ்வளவு சொன்னோ தெரியுமா சாப்பிடுன்னு நான் மாட்டேன் ஒரே பிடிவாதமா மறுத்துட்டா ஆனா நீங்க ஊட்டிவிட்டதும் ஒரு வார்த்தை கூட சொல்லமா சாப்பிடுறா "

" எனக்கு அவளுக்கும் ரெண்டு வயசு தான் வித்தியாசம். சின்ன வயசுல இருந்து அவள் சாப்பிடுறதுக்கு கொஞ்சம் அடம்பிடிப்பாள். அம்மா அப்பாவால சமாளிக்க முடியாது. அப்புறம் நான் அவளுக்கு ஊட்டிவிடுவேன் அமைதியா சாப்பிடுவாள். அதுக்கப்புறம் நான் ஊட்டிவிட்டா தான் சாப்பிடுவாள். மதியானம் மட்டும் அவள் சாப்பிட்டுக் கொள்வாள். மத்த நேரத்துல நான்தான் அவளுக்கு ஊட்டிவிடுவேன். இப்ப தான் ரெண்டு வருஷமா நான் வேலைக்கு போறதால அப்புறம் கல்யாணம் ஆனதால அமைதியா இருக்காள். எத்தனை நாள் ஆகுது தெரியுமா ? அவளுக்கு ஊட்டி விட்டு . இன்னிக்கி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ரக்ஷனா.."

இரண்டு பேரும் கீழே செல்ல ஆயிஷா, " என்னடா அவள் சாப்பிட்டா போல.."

" ம்ம்ம் ஆமா ம்மா சாப்பிட்டா.."

" ஆமா அவள் ஏன் சாப்பிடலை?..." - உஸ்மான்

அவளை ராஹிலா அம்மா அழைத்த விஷயத்தை சொல்ல , " அட கிறுக்கு இதுக்கு தான் இவள் இவ்ளோ யோசிச்சிட்டு இருந்தாளோ?..." ஆயிஷா தலையில் அடித்து கொள்ள

" என்ன பொண்ணுப்பா போ..." - உஸ்மான்.

" சரிப்பா நான் அறைக்கு போறேன். நிறைய வேலை இருக்கு..." ன்னு தான் அறைக்கு போறேன்.

" ம்ம்ம் சரிப்பா ..."

அவன் அறைக்கு போக ரக்ஷனாவும் அவன் பின்னே போகிறாள்.

தங்கள் அறைக்கு வந்த பின் ரக்ஷனாவை கவனித்தவன் அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.

" ஏய் பொம்மை அப்படி என்ன யோசனை?.." ன்னு அவளை பார்த்து கேட்கிறான். துணியை மாத்திகிட்டே.

" ரஸீ அப்ப என்னால தான் நீயும் ஷெஹனாஸ் ஒன்னா முன்ன மாதிரி இருக்க முடியலையா?..." அவள் சொல்ல வந்ததை புரிந்துகொண்டவன் சிரித்துக்கொண்டே அவளை தன் பக்கம் இழுத்து

" ஷனாமா நாங்க ரெண்டு பேரும் அப்படி சொன்னோமா?.. நாங்க அந்த தருணங்களை மிஸ் பண்றோம் அவ்வளவு தான் டா. இதுலாம் வாழ்க்கையில சகஜம். எல்லாத்தையும் கடந்து போறது தான் டா வாழ்க்கை. நீ எங்களுக்கு தொந்தரவா இருக்கேன். அப்படிலாம் நாங்க சொன்னோமா? ஷனா. நீயா ஏன்டி எதையாவது நினைச்சு மனசை போட்டு குழப்பிக்கிற. இதை மட்டும் ஷெஹனாஸ் கேட்டா உன்னை முட்டி போட வச்சுடுவா எருமை. நீ என் தேவதை ஷனா.... " ன்னு அவள் நெற்றியில் இதழ் பதிக்க

" மன்னிச்சிடு ரஸீ .." ன்னு அவள் பாவமா சொல்ல

" மன்னிக்க முடியாது 😏..." ன்னு செல்லமா முறைச்சிட்டே திரும்பிக்கிறான்.

" முடியாதுன்னா போடா😛..."

"என்ன முடியாது டா வா?... உன்னை...😈..." ன்னு அவளை முறைக்கிறான்.

" வவ்வவே !..😜.." ன்னு அவனுக்கு பழிப்பு காட்டி ஓடுறாள்.

" உன்ன..." அவளை விரட்டி பிடிக்க ஆரம்பிக்கிறான்.

ஒருவழியாக அவளை பிடிச்சு தன்மேல் போட்டு , " நீ தான் டி என் வாழ்க்கை அதை புரிஞ்சிக்கோ சரியா. இப்பன்னு இல்லை எப்பயுமே நீ எனக்கு கிடைச்ச தேவதை டி உன்னை எப்படி டி நான் அப்படி நினைப்ப . உன்னால எப்படி அப்படி நினைச்சு பார்க்க முடியுது ரக்ஷனா. ரொம்ப கஷ்டமா இருக்குடி எனக்கு. இன்னொரு முறை இந்த மாதிரி பேசாதடி. மனசுக்கு கஷ்டமா இருக்குடி... " அவன் வருத்தமா சொல்ல ரக்ஷனா அழ ஆரம்பிக்கிறாள்.

"ஏய் பொம்ம இப்ப எதுக்குமா அழுகுற?.." ன்னு பதட்டமா கேட்கிறான்.

" நான் சொன்னது இவ்வளவு வலிக்கும் தெரியாது ரஸாஹ் இனி நான் உன் மனசு கஷ்டப்படும் படி பேச மாட்டேன் மன்னிச்சிடு ரஸாஹ் 😭😭 " ன்னு அழுறா.

" என் லூசு பொண்டாட்டி இதுக்கு எதுக்கு அழுற? நீ யார் மனசையும் கஷ்டப்படுத்தவில்லை சரியா..." ன்னு அவளை சமாதானம் செய்றான். ஆனா அவளை அழுகை மட்டும் நின்றபாடு இல்லை.

அவளோட கன்னத்தை ஏந்தி அவளோட செவ்விதழில் முத்தமிடுறான். கொஞ்ச நேரத்திற்கு அப்பறம் விடுறான்.

" இதுக்கப்புறமும் அழுதுட்டு இருந்த அப்பறம் நான் கரன்டி இல்லை சொல்லிட்டேன்.." அவள் காதுக்கிட்ட போய் சொல்றான்.

அவள் சிரித்துக்கொண்டே அவனை செல்லமாக இரண்டு அடி கொடுத்து விட்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

தன் அறையில் ஜன்னல் அருகே கைகளை கட்டியவாறு நின்றுகொண்டு வெளியில் வேடிக்கை பார்த்தபடி இன்று நடந்தவற்றை யோசித்து கொண்டு இருந்தான் சித்திக்.

"இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ.." ன்னு காலையில் ஹஜ்ரத் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

கண்கள் மூடி கொண்டு யோசித்தவனுக்கு ஷெஹனாஸ் முகம் மனத்திரையின் முன் வர திடுக்கிட்டு கண்ணை திறந்தான் சித்திக்.

"எனக்கு ஏன் காலையில கடற்கரையில பார்த்த அந்த பொண்ணு கண்முன்ன வரா? அதுவும் கல்யாணம் யோசிச்சதும் அவள் ஏன் வராள்? அல்லாஹ் எனக்கு ஒன்னுமே புரியலை... யார் அவள் ? ராஹிலா ஏன் அம்மான்னு கூப்பிட்டா அந்த பொண்ணை? அல்லாஹ் எனக்கு எதுவும் புரியலை!!... இதுக்கு நீ தான் ஒரு தீர்வு சொல்லனும் !..." ன்னு தொழுகை விரிப்பை எடுத்துட்டு தொழ போறான் சித்தீக்.

தொழுதுட்டு சாப்பிட உட்கார்ந்தவன் கிட்ட , " நேத்து ராத்திரி நாங்க சொன்னது ..." ன்னு அம்மா கேட்கிறாங்க.

" நான்தான் சொல்றேன் சொன்னல கொஞ்ச நாள் பொறுங்க ... " ன்னு சாப்பிடாம எழுந்து போறான்.

" அப்பு சாப்பிட்டு போடா செல்லம். கொஞ்சமாவது சாப்பிடு டா. மதியம் கூட ஒழுங்கா சாப்பிடலை . அம்மா அதை பற்றி பேச மாட்டேன்ப்பா " ன்னு சமாதானம் பண்றாங்க.

"அம்மா விடுங்க எனக்கு சாப்பிட பிடிக்கலை ... " ன்னு சொல்லிட்டு எழுந்து தான் அறைக்கு போய்ட்டான் ராஹிலாவை தூக்கிட்டு.

ராஹிலாவை பார்த்து , " குட்டிமா பால் குடிச்சிட்டு அப்பா கதை சொல்லுவேனா அதை கேட்டுட்டு சமத்தா தூங்குவிங்கலா! சரியா..." ன்னு செல்ல மகள்கிட்ட சொல்ல அவள் , "அம்மா..." ன்னு அழைக்கிறாள்

அப்படி அழைச்சதும் சீத்திக் என்ன சொல்றதுன்னு தெரியாம , " ஏன்டா உனக்கு அப்பா வேண்டாமா ? உன் அம்மா தான் அல்லாஹ் கிட்ட போய்ட்டாலே மா நான் எப்படி மா உன் அம்மாவை அழைச்சிட்டு வர முடியும்? உனக்கு அம்மாவா அப்பாவா நான் இருக்கேன்மா ! உன் அம்மா இப்படி நம்மலை அநாதையா விட்டு போவான்னு நான் எதிர்பார்க்கலேயே!..." ன்னு அழுறான்.

ராஹிலா என்ன புரிஞ்சுது தெரியலை அவளுக்கு அப்பாவோட கண்ணீரை துடைச்சு விட்டு முத்தம் கொடுக்கிறாள்.

தன் மகளோட அன்புக்கு அடிமையானவனா தன் கண்ணீரை துடைச்சிட்டு அவளுக்கு கதை சொல்ல ஆரம்பிக்கிறான். அவளும் அதை கேட்டுட்டு மழலை சிரிப்போடு சமத்தா தூங்குறாள்.

ராஹிலா தூங்குனதும் அவளை கட்டில்ல தூங்கவச்சிட்டு நாலு பக்கமும் தலையணையால வேலி போட்டுட்டு பால்கனிக்கு போறான்.

அந்த இரவோட நிலவை பார்த்துட்டு இருக்கான்.

அதேநேரம்...

ஷெஹனாஸ் இரவில் அந்த நாற்காலியில் அமர்ந்துட்டு நிலாவை பார்க்கிறாள். "இந்த நிலவு மாதிரி நாமே ஏன் அழகா இல்லை? ஏன் யாருக்கும் என்னை பிடிக்க மாட்டேன்து? நான் ஏன் அசிங்கமா பிறந்தேன்? " ன்னு மனசுக்குள்ளேயே கேட்டுக்கிறாள்.

அவளுக்கு அழுகை அடக்க முடியலை . "என் வயசுல இருக்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு ஆனா எனக்கு மட்டும் ஏன்? யாரும் மனசை பார்த்து நேசிக்க மாட்டாங்கலா? அல்லாஹ் எனக்கானவன் எங்க இருக்கானோ என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துடு.." ன்னு அழுதுட்டே நிலவை பார்த்துட்டு இருக்காள்.

அவளுக்கு தூக்கம் வர மாட்டேன்து . அவளால தாங்கிக்க முடியலை நியாஸ் பண்ணது. அழ முடியாம ரொம்ப தவிச்சிட்டு இருக்காள்.

அதேநேரம்...

சீத்திக் மனசுல , " இப்ப நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணா வரவள் எப்படி இருப்பாள்? என் ராஹிலாவை கொடுமை பண்ணா நான் என்ன பண்ணுவ? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு!!.." ன்னு மனசுல நினைச்சிட்டு இருக்கான் . அவனுக்கு தூக்கம் வர கதவை மூடிட்டு வந்து படுத்துக்கிறான். அழகா தூங்கிட்டு இருந்த ராஹிலாவை ரசிச்சுட்டே தூங்கிட்டான்.

ஷெஹனாஸ் தூக்கம் வரலை . மனசும் நிம்மதி இல்லாம இருக்கு. ரொம்ப உடைச்சு போய் இருக்காள். நியாஸ் தனக்கு கொடுத்த வலியை மறக்க முடியாம தவிக்கிறாள். எப்படியோ அவளுக்கு தூக்கம் வர தூங்கிட்டா.

ஷெஹனாஸ் சித்தீக் இருவரின் வாழ்வில் இருக்கும் இருள் நீங்குமா? பார்ப்போம்.

❤️ தொடரும் ❤️

stay tune 💕

 


ReplyQuote
ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 75
01/10/2019 10:00 am  

❤️ 04 ❤️

அழுது கொண்டு எப்போது தூங்கினோம் என்று அறியாமலே தூங்கிவிட்ட ஷெஹனாஸ், காலை ஃபஜர் தொழுகைக்கான பாங்கை கேட்டதும் விழிக்கிறாள்.

தன் வேலைகளை முடித்து விட்டு கீழே சென்று காலை உணவை முடித்துவிட்டு , நாளிதழை எடுத்து படிக்க தொடங்கினாள்.

படித்து முடித்தவுடன் அதில் ஒரு விளம்பரத்தை பார்த்து மனம் அதிலே இருக்க, யோசனையில் மூழ்கினாள்.

தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்தவள் தன் சர்டிபிகேட் எல்லாம் எடுத்து கொண்டு தன் தந்தையிடம் வெளியே செல்வதாக சொல்லிவிட்டு சென்றாள்.

இவள் என்ன செய்கிறாள் என்பது யாருக்கும் புரியவில்லை. அவள் தன் தந்தையிடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றாள்.

ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையம் வரை சென்றவள் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து கொண்டு கேப்பர் மலையில் இருக்கும் பிஸ்மி software கம்பெனிக்கு சென்றாள்.

பிறந்தது முதல் இன்று வரை தன் தந்தையிடமோ அண்ணனிடமோ சொல்லாமல் எதையும் செய்ததில்லை. இன்று முதன்முறையாக துணிந்து வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளாள். காரணம் அவள் அம்மா ஆயிஷா தான்.

அழகில்லாமல் பிறந்து விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவளை ஒதுக்கி வைத்துவிட்டது மட்டுமல்லாமல் காரணமின்றி திட்டி கொண்டிருக்கும் இடத்தில் இருக்க பிடிக்காமல் எடுத்த முடிவு தான் வேலைக்கு செல்வது.

இறங்கும் இடம் வந்து விட ஆட்டோவிற்கு காசு கொடுத்து விட்டு அந்த கம்பெனிக்குள் நுழைந்தாள்.

சித்தீக் , தன் அறையில் பாஸ்கருடன் அமர்ந்து நேர்காணலை கவனித்து கொண்டு இருந்தான்.

கடைசியாக ஷெஹனாஸ் உள்ளே செல்ல , சித்தீக் பாஸ்கர் இருவருக்குமே சற்று அதிர்ச்சி. ஆனால் ஷெஹனாஸ் அதை எதுவும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அவர்கள் அமர சொல்லும் வரை காத்திருந்தாள்.

பிறகு சித்தீக், "உட்காருங்கள்" என்று விட்டு ஒருசில கேள்விகள் கேட்டான். பிறகு பாஸ்கர் பாடம் சம்பந்தமாக கேள்விகள் கேட்க அதற்கும் சரியாக விடையளித்தாள்.

உங்களை நாங்க assistant manager போஸ்ட் கொடுக்கிறோம். காரணம் உங்களோட திறமை. 12000 உங்களோட சம்பளம் இன்றிலிருந்து நீங்க வேலையில சேரலாம் என்று பாஸ்கர் சொல்ல , " நன்றி அப்பறம் ஒரு சின்ன வேண்டுகோள்" என்றவுடன் பாஸ்கர் திருதிருவென முழிக்க தொடங்கி விட்டான்.

சித்தீக், " என்ன ?" என்று கேட்க , " நான் இந்த புர்காவோட தான் வேலை செய்வேன் " என்றதும் தான் பாஸ்கர் இயல்பு நிலைக்கு திரும்பினான்.

" that's ur wish " என்று சித்தீக் கூற மகிழ்ச்சியாய் " நன்றி " என்று கூறிவிட்டு அவளுக்கு ஒதுக்கிய அறையை காண்பித்து அவளுக்கு எல்லாம் கற்று கொடுத்து விட்டு வந்தான் சித்தீக்.

தங்களை இணைக்கும் பாலம் இது தான் என்பதை அறியாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி இருந்தனர் இருவரும்.

"மாமா ஷெஹனாஸ் எங்க போறேன் சொல்லிட்டு போனாளா?.." என்று ரக்ஷனா கேட்க

" இல்லை மா அவள் எதுவும் சொல்லவில்லை ஏன் மா? எங்காவது வெளியே போகனுமா ? .." என்று உஸ்மான் கேட்க ரக்ஷனா திருதிருவென விழித்தாள் என்ன சொல்வதென்று தெரியாமல்.

" ஒன்னுமில்லை இல்லை மாமா சும்மா தான் " என்று சமாளித்து விட்டு தன் அறைக்கு வந்தவள் அமைதியாக படுத்துக்கொண்டாள்.

"தன் மகள் எங்கே சென்றிருப்பாள் ? எங்கே போனாலும் நம்மிடம் சொல்லாமல் செல்ல மாட்டாளே ? " என்று நினைத்து கொண்டு ஷெஹனாஸ் அலைபேசியில் அழைத்தார் உஸ்மான்.

வேலையில் மூழ்கி இருந்தவளை தன் அலைபேசி அடிக்க அதை எடுத்து " சொல்லுங்கப்பா " என்று கூற

" எப்படா வீட்டுக்கு வருவ?.." என்று கேட்ட தன் தந்தையிடம்

" அப்பா நான் வேலையில சேர்ந்திட்ட சாய்ங்காலம் 5 மணிக்கு தான் விடுவாங்க நான் 6 மணிக்கெல்லாம் வீட்டிலே இருப்பேன் .." என்று கூறியதை கேட்ட உஸ்மான்,

" அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப சந்தோஷம் டா சரி நீ வேலையை கவனி நான் அப்புறம் பேசுறேன். ." என்றுவிட்டு அலைபேசியை வைத்தார்.

தன் அப்பா தன் மனதை புரிந்து கொண்டதை நினைத்து மனம் மகிழ்ந்தது ஷெஹனாஸிற்கு. தன் கண்ணீல் துளிர்ந்த நீரை துடைத்து கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

பாங்கு சத்தம் கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் உழு செய்துவிட்டு லுஹர் அங்கேயே தொழுது கொண்டு இருந்தாள்.

பாஸ்கர் அவளிடம் முக்கியமான விஷயம் பேச வந்தவன் அவள் தொழுதுட்டு இருப்பதை பார்த்து அமைதியாக சென்றுவிட்டான்.

சிறிது நேரம் கழித்து வந்தவன், " ஷெஹனாஸ் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்? "

" ம்ம்ம் சொல்லுங்க சார்.."

" அது நேத்து நாம சந்திச்சது நியாபகம் இல்லையா? " என்று கேட்டவனை பார்த்து

" அதெல்லாம் நியாபகம் இருக்கு .. அலுவலக நேரத்தில personal விஷயங்களை பேசறது பிடிக்காது அது மரியாதையாவும் இருக்காது அதான் காட்டிக்கலை " என்று கூறியதை கேட்டு பிரமித்து போனான்.

பிறகு "சரி இந்த files எல்லாம் சரிபார்த்து கோடிங்ஸ் எல்லாம் சரியா இருக்கானு பார்த்து நாளைக்குள்ள என்னோட table ku அனுப்பிடுங்க "

" ம்ம்ம் சரிங்க சார் " என்று வாங்கி கொண்டாள்.

" சரி நான் என் table ku போறேன் " என்று விட்டு சென்றான்.

அவளும் அதை வாங்கிவிட்டு தன் வேலைகளை தொடர்ந்தாள்.

தன் வேலைகளை கவனித்து கொண்டிருந்தவன் அலைபேசி சிணுங்கி அதை எடுத்து காதில் வைத்தவாறு, " அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சொல்லுங்க ப்பா" என்றான்.

" வ அலைக்குமுஸலாம் (வரஹ்) நம்ம ஷெஹனாஸ் வேலையில சேர்ந்திருக்கிறாள் ரஸாஹ் "

" என்னப்பா சொல்றிங்க நிஜமாவா "

" ம்ம்ம் ஆமா டா "

" ஏன்ப்பா இந்த திடீர் முடிவு அவளுக்கு?.."

" எல்லாம் உன் அம்மாவால தான் . எப்ப பார்த்தாலும் அவளை திட்டிட்டே இருந்தால்? என்ன பண்ணுவா வீட்டிலே இருக்க பிடிக்காம இந்த முடிவை எடுத்திருக்கிறாள்"

" அதுக்கு நம்மகிட்ட கூட சொல்லாமலா?.."

" சொல்லிட்டு போயிருந்தால், உன் அம்மா விட்டுவிடுவாளா?"

" விட மாட்டாங்க "

"அதுக்கு தான் "

"ம்ம்ம்ம்"

"சரிப்பா நான் அப்புறம் பேசுறேன்"

" சரிப்பா " என்று அலைபேசியை வைத்தான்.

தன் தங்கை சிறு வயதில் இருந்து பட்ட துன்பங்கள் அவன் கண்முன்னே வந்து சென்றது. அவள் எடுத்த முடிவு சரிதான் என்பது அவனுக்கு புரிய தன் தங்கையிடம் பேச அலைபேசியில் தொடர்ப்பு கொண்டான்.

" அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சொல்லு ரஸாஹ் "

" வ அலைக்குமுஸலாம் (வரஹ்) சாப்பிட்டியா ?.."

" அ..அது இல்லை.."

" ஏன் இன்னும் சாப்பிடலை? "

" சாப்பாடு எடுத்துட்டு வரலை "

" ஆபீஸ் எங்க இருக்குனு சொல்லு நான் வாங்கிட்டு வரேன் சாப்பிடும்"

" அதெல்லாம் வேண்டாம் ரஸாஹ் நான் பார்த்துக்கிறேன், அப்புறம் அண்ணி காலையிலருந்து சரியில்லை எதையோ சொல்லனும் நினைக்கிறாங்க ஆனா சொல்ல முடியாம தவிக்கிறாங்க அதேமாதிரி ரொம்ப அசதியா இருக்காங்க என்னன்னு பாரு உடனே அரை நாள் விடுப்பு எடுத்துட்டு கிளம்பிற இல்லன்னு வை அவ்வளவு தான்"

"சரி கிளம்புற "

"அது சரி எனக்கு வேலை இருக்கு நான் அப்றம் பேசுறேன் " என்று அலைபேசியை துண்டித்து விட்டு தன் வேலைகளை தொடர்ந்தாள்.

ரஸாஹ் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான்.

" என்னப்பா சீக்கிரம் வந்துட்ட? " என்று ஆயிஷா கேட்க

" சும்மா தான் ம்மா"

" ரக்ஷனா எதுவுமே சாப்பிடலை இன்னும் கேட்டா வேண்டாம் சொல்றாள் என்னன்னு பாரு? " என்று ஆயிஷா சொன்னதும் , " ம்ம்ம் சரிம்மா.."என்று விட்டு தன்னறைக்கு சென்றான்.

உறங்கி கொண்டிருந்தவளின் அருகே சென்று அவள் தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டு ரக்ஷீ என்று அழைக்க அவள் மெல்ல கண்களை திறந்து பார்த்தவள் அவறை அருகில் அமர சொல்லி அவன் மடியில் படுத்து கொண்டாள்.

" ஏய் பொம்மை எழுந்தீடு "

" ம்ஹூம் போ " என்று அவன் வயிற்றில் முகம் புதைத்து கொண்டாள்.

" என்ன இவள் இப்படி எல்லாம் பண்றவள் கிடையாதே! வாலு தனம் பண்றவள் வித்தியாசமால இருக்கு?.." என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தான்.

பிறகு, " ஏய் எழுந்து சாப்பிடும் " என்றவுடன் அவள் வேண்டாம் என்று சிணுங்க அவன் சற்று அதட்டி ஊட்டிவிட்டான்.

அவள் சாப்பிட்டு முடித்ததும் அவன் நெஞ்சில் புதைந்து கொண்டு அவள் சட்டையில் கோலமிட்டவாறே பேச தொடங்கினாள்.

" ரஸீ .. " என்று சிணுங்கி கொண்டே அவனுள் இன்னும் புதைந்தவளை வித்தியாசமாக பார்த்தவன்.

" ஏய் என்னடி இன்னிக்கி ரொம்ப வித்தியாசமா நடந்துக்கிற அப்றம் எதுக்கும் நான் பொறுப்பு ஆகமாட்டேன் சொல்லிட்டேன் " என்று அவள் காதில் சொல்ல

" இன்னும் பத்து மாசத்துக்கு என் பக்கத்தில வந்த மவனே நம்ம புள்ள உன்னை உண்டில்லைன்னு பண்ணிடுவான் சொல்லிட்ட"

" ஏய் என்ன " என்று சொல்லவந்தவன் அவள் சொன்னதின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் "பொம்மை உண்மையாவா?...." என்று கண்ணீர் பொங்க கேட்டவனிடம் , " ம்ம்ம் ஆமாம் " என்று கூறி அவனுள் புதைந்து கொண்டவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

" இன்னும் கன்பார்ம் பண்ணனும் டா "

" ம்ம்ம் சரி வா டாக்டர்கிட்ட போவோம் " என்று விட்டு இருவரும் வெளியே செல்வதாக சொல்லிவிட்டு சென்றனர்.

இருவரின் எதிர்ப்பார்ப்பும் பொய் ஆகாமல் ரிப்போர்ட் பாசிட்டிவ் ஆக வர ரஸாஹ்யின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

வீட்டிற்கு வந்தவர்கள் நற்செய்தியை சொன்னவுடன் அனைவரின் முகத்திலும் சந்தோஷம் பொங்க அதை ரக்ஷனா பெற்றோருக்கும் சொல்ல அவர்களும் மகிழ்ச்சியுடன் தன் மகளை பார்க்க வந்தனர்.

" ரஸீ ஷெஹனாஸ் எப்ப வருவா?"

" அவள் வேலையில சேர்ந்திட்டாள், ஆறு மணிக்கு வந்திடுவாள்.."

" சரி நீ போய் கூடிட்டு வா அவள் மதியானம் சாப்பிட்டு இருக்க மாட்டாள் பசியில இருப்பாள் வரும் போது அவளை சாப்பிட வாங்கி கூடு புரியுதா? "

" நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சியா பொறந்து இருக்க வேண்டியது என்ன ஒரு பாசம் " என்று அவள் நெற்றியில் செல்லமாய் முட்ட

" போதும் போய் அவளை அழைச்சிட்டு வா "

" சரி போறேன் "

ஷெஹனாஸ் அழைத்து அவள் ஆபீஸ் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அவளை அழைத்து கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்று அவளுக்கு பிடித்த உணவை வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தான்.

அவள் சாப்பிட்ட உடன் தான் அப்பாவாகிய விஷயத்தை சொல்ல அவள் மகிழ்ச்சியாய் , " டேய் எருமை வண்டியை வீட்டுக்கு விடுடா சீக்கிரம் நான் அண்ணியை பார்த்தே ஆகனும் " என்று சொன்னவளை.

ஏய் இரு போலாம் "

"சீக்கிரம் எடு பக்கி..."

"அடியேய் இருடி..."

அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டில் இருந்தார்கள். ஓடி சென்று தன் அண்ணியை அணைத்து கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவள் , மண்டியிட்டு அமர்ந்து அவள் வயிற்றில் கைவைத்து, " ஹே குட்டி பாப்பா அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நீங்க உள்ளே என்ன பண்றிங்க ? சமத்தா இருக்கனும் அம்மாக்கு எந்த தொல்லையும் கொடுக்கக்கூடாது சரியா. அம்மாவை நல்லா பார்த்துக்கனும் , அம்மா சொல்றதை கேட்கனும் அம்மா அப்பா குர்ஆன் ஓதும் போது நல்ல புள்ளையா கேட்கனும் புரியுதா? .. " என்று குழந்தையுடன்   பேசியவளை

" ஹே குழந்தைக்கு மூனு மாசத்துல இருந்து தான் பேசுறது கேட்கும் " என்று அவள் தலையில் செல்லமாய் கொட்டினான் ரஸாஹ்.

" எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா அல்ஹம்துலில்லாஹ் " என்று தன் அண்ணனை அணைத்து கொண்டாள்.

அவளின் இந்த மகிழ்ச்சியை கண்ட ரஸாஹ் ரக்ஷனா இருவருக்கும் மனம் மகிழ்ந்தது.

அண்ணி நான் அப்றம் வரேன் என்று விட்டு சென்றாள் ஷெஹனாஸ்.

" நமக்கு குழந்தை வரது நம்மல விட அதிகமா சந்தோஷம் படுறால ரஸீ"

" ம்ம்ம் ஆமா... பார்க்கிறதுக்கு தான் வளர்ந்த மாதிரி இருக்காள் ஆனா இன்னும் குழந்தை தான் ..."

" உண்மை தான் ரஸீ  இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை எப்படியாவது அமையனும் அல்லாஹ் தான் அதுக்கு ஒரு வழி பண்ணணும் " என்றவளுக்கு தெரியவில்லை அல்லாஹ் அவள் வாழ்க்கைக்கு தேவையான வழியை காட்டிவிட்டான் என்று.

பார்ப்போம் அந்த வழி இவர்களை இணைக்குமா ? இல்லையா ? என்பதை.

❤️ தொடரும் ❤️

💖 staytuned guys💖

 


ReplyQuote
ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 75
02/10/2019 3:04 pm  

❤️ 05 ❤️

தன் அண்ணி கருவுற்ற விஷயத்தை கேள்வி பட்டு எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்த ஷெஹனாஸ் அல்லாஹ்விடம் தொழுது நன்றி செலுத்தினாள்.

பிறகு தன் தந்தையிடம் சென்றவள், " அப்பா என்கூட கடைக்கு வர முடியுமா? " என்று கேட்வளிடம் , " ம்ம்ம் போலாம் டா " என்றார்.

" ஏய் கழுதை எங்க போய் ஊர் சுத்திட்டு வர?" என்று அம்மா ஆயிஷா கோபிக்க

" வேலைக்கு போய்ட்டு வரேன் போதுமா?" என்றாள் முறைத்தப்படி

" யாரை கேட்டு நீ வேலைக்கு போற?..."

" யாரை கேட்கனும் ?..." என்று கடுமையுடன் கேட்டவளை ,

" என்னை கேட்கனும்..."

" எதுக்கு கேட்கனும்? கேட்டா வேண்டாம் தானே சொல்ல போறிங்க அப்பறம் எதுக்கு கேட்கனும்? உங்க கிட்ட பேச எனக்கு விருப்பமில்லை. அப்பா வாங்க ப்பா போலாம்..." என்று எரிச்சலாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தாள் , ஷெஹனாஸ்.

உஸ்மான் எதுவும் சொல்லாமல் அமைதியாக தன் மகளை அழைத்து கொண்டு சென்றார்.

" அப்பா முதல்ல பூங்காக்கு போங்க ப்பா உங்க கிட்ட பேசனும் " என்று சொன்னவளை அமைதியாக தன் வண்டியை பூங்காவிற்கு செலுத்தினார்.

" எதுக்கு மா எப்ப பார்த்தாலும் ஷெஹனாஸை திட்டிக்கிட்ட இருக்கிங்க? அவள் அப்படி என்ன தான் பண்ணா உங்களுக்கு?..." என்று ரஸாஹ் கோபமாக கேட்க

" அழகில்லாமல் பொறந்து என் உசுர எடுத்துட்டு இருக்கா. அவள் வயசு பிள்ளைகள் எவ்வளவு அழகா இருக்காங்க சீக்கிரமா கல்யாணமும் ஆயிடுச்சு ஆனா இதுக்கு அப்படியா? இது எப்ப பொறந்திச்சோ அப்போதில் இருந்து இப்போ வரைக்கும் எனக்கு பிரச்சினை தான்  ச்சே..." என்று எரிச்சல் பட்டவரை

" நீங்களெல்லாம் என்ன ஜென்மமோ?? " என்று ரஸாஹ் கோபப்பட

" ஏய் ரக்ஷனா அவளை உன் பக்கத்தில கூட வர விடாத .." என்று மிரட்டியவரை ரக்ஷனா பேச முனைந்தவளை தடுத்து தான் பேசினான்.

" அம்மா இது எங்க குழந்தை எங்களுக்கு தெரியும் உங்க வேலை என்னவோ அதை பார்த்துட்டு போங்க" என்று ரஸாஹ் கடுமையாக சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான் ரக்ஷனாவை அழைத்து கொண்டு.

பூங்காவிற்குள் சென்றவர்கள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்கள் இருவரும்.

அமைதியாக இருந்த தன் மகளின் தலையை மெல்ல வருடியபடி , " உன் மேல எந்த கோபமும் இல்லை டா அப்பாவுக்கு, நீ எந்த தப்பும் பண்ண மாட்ட டா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு டா, புரியுதா?..." என்று  பொறுமையாக சொன்னவரை அணைத்து கொண்டு, " ஐ லவ் யூ ப்பா😘😘" என்று  கூறி தன் கண்களை துடைத்து கொண்டாள்.

" ம்ம்ம் சரிடா  இதுக்கு தான் கடைக்கு போலாம் சொன்னியா? "

" இல்லை ப்பா அண்ணிக்கு ஒரு சில பொருட்கள் வாங்கனும் அதுக்கு தான் "

" அப்படியா டா சரி வா "

தன் அண்ணிக்கு தேவையானதை தேடி தேடி கவனமாக ஒவ்வொரு பொருட்களையும் வாங்கினாள். பிறகு அக்பர் கடைக்கு சென்று ஒரு கிதாப்கள் வாங்கி கொண்டு கூடவே பழங்கள் என வாங்கி கொண்டு வந்து சேர்வதற்கு மணி எட்டானது.

ஷெஹனாஸ் தான் வாங்கி வந்த பொருட்களை எடுத்து கொண்டு ரஸாஹ் அறைக்கு சென்றாள்.

" ஹே எங்க போயிருந்த?" என்று ரஸாஹ் கேட்க

" சும்மா தான் கடைக்கு போயிருந்தேன்" என்று தான் வாங்கியதை எல்லாம் ரக்ஷனாவிடம் கொடுத்தாள்.

பிறகு அந்த அறையில் அல்லாஹ்வின் வாசகங்களை மாட்டினாள். தினமும் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு கால அட்டவணையாக மாற்றி விட்டாள். அது மட்டுமல்லாமல் அவளுக்கு தேடி தேடி வாங்கிய துணிகளை அவளிடம் நீட்டி , " அண்ணி இந்த டிரஸ் உங்களுக்கு கொஞ்சம் comfortable ஆ இருக்கும் அதனால தூங்கும் போது இதை போட்டுக்கோங்க இதாங்க " என்று நீட்டியவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக வாங்கிக்கொண்டாள் ரக்ஷனா.

" அண்ணி நீங்க ஏன் இன்னும் சாப்பிடலை ? " என்று கேட்டு கொண்டே அவளுக்கு ஊட்டி விட ரக்ஷனா கண்கள் கலங்க பார்த்து கொண்டு இருந்தாள் , ஷெஹனாஸை.

" அண்ணி ஏன் இப்ப அழுறீங்க?.."

" ம்ஹூம் ஒன்னுமில்லை " என்று ஷெஹனாஸ் நெற்றியில் முத்தமிட்டாள்.

அவளும் சிரித்துக்கொண்டே , " அண்ணி சாப்பிடுங்க " என்று ஊட்டிவிட்டாள்.

இருவரின் அன்பை கண்டு மனம் நிறைந்தது ரஸாஹ்கிற்கு.

"ரஸாஹ் என்னை மன்னிச்சிடு " என்று கூறியவளை புரியாமல் , " எதுக்கு??" என்று கேட்டான்.

" உன்கிட்ட சொல்லாமல் நான் வேலைக்கு சேர்ந்தேன் அதுக்கு தான்"

" ஹே லூசு அதெல்லாம் ஒன்னுமில்லை நீ தப்பு பண்ண மாட்ட அதை எனக்கு நல்லா தெரியும் "

" ம்ம்ம் சரி எனக்கு வேலை இருக்கு நான் அப்புறம் வரேன் " என்று சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்துவிட்டு தன் அலுவலக வேலையில் ஈடுபட்டாள்.

" ஏய் பொம்மை நான் இன்னிக்கி ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்று ரக்ஷனாவிடம் மகிழ்ச்சியாக சொல்லி கொண்டு இருக்க ஆனால் அவள் எதையோ யோசித்த வண்ணம் இருந்தாள்.

" ரக்ஷனா "

"...."

" ஏய் ரக்ஷனா " என்று சற்று அதட்டி கூப்பிட அவள் மிரண்டு விட்டாள்.

" ஹே அம்மு ஒன்னுமில்லை ஏதோ யோசிச்சிட்டு இருந்தியே அதான் கொஞ்சம் அதட்டுன " என்று அவன் பதட்டமாக கேட்க

" ம்ஹூம் ஒன்னுமில்லை ரஸீ லவ் யூ லவ் யூ சோ மச்❤️❤️❤️" என்று அவனை அணைத்து கொண்டாள்.

" லவ் யூ டூ 😘.."

" யா அல்லாஹ்!! என்ன கொடுமை இது இவ்வளவு தப்பு இருக்கு இந்த ரெண்டு filesla, இது யாரு பண்ணியிருப்பா?. " என்று யோசித்து கொண்டே பாஸ்கரை அழைத்தாள்.

" சொல்லுங்க ஷெஹனாஸ் "

" ஹான் ஹலோ அண்ணா நீங்க கொடுத்த ரெண்டு filesum நல்லா பார்த்துட்ட எல்லா கோடிங்ஸீம் தப்பா இருக்கு எனக்கு இந்த கோடிங்ஸ் பண்ணவங்களோட முழு விவரம் அப்பறம் இதுக்கு முன்ன அவங்க பண்ண கோடிங்ஸ் இதெல்லாம் உடனே என் மெயில்க்கு அனுப்பிறிங்களா? அப்றம் கூடவே நம்ம கம்பெனி முழு விவரமும் அனுப்பிடுங்க ..." என்று மூச்சு விடாமல் தான் சொல்ல வந்ததை சரியாக சொல்லிவிட அங்கு அவனுக்கோ சாப்பிட்டு கொண்டு இருந்தவனுக்கு என்ன சொல்வதென்று அமைதியாக இருந்துவிட்டு பிறகு , " சரி அனுப்பி வைக்கிறேன்" என்று விட்டு அலைபேசியை வைத்தவன் தன் அறைக்கு விரைந்தான்.

"இந்த கோடிங்ஸ் பண்றவங்க தான் எப்பயும் பண்றாங்க என்றால் கண்டிப்பா நம்ம கம்பெனி நஷ்டத்தில தான் போய்ட்டு இருக்கும் யா அல்லாஹ் அப்படி எதுவும் நடக்கக்கூடாது "என்று அவள் அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டிருக்கவும் பாஸ்கர் அவள் மெயிலுக்கு மொத்த விவரமும் அனுப்பவும் சரியாக இருந்தது.

அவள் அதை எல்லாம் எடுத்து படிக்க படிக்க அவள் தலையே சுற்றியது ஷெஹனாஸிற்கு. பிஸ்மி சாப்ட்வேர் கம்பெனி தொடங்கி நான்கு ஆண்டு ஆகுது. இதுவரை மூன்று assistant manager மாறியிருக்காங்க என்னையும் சேர்த்து. இரண்டாவதா வந்த assistant manager வேலையில சேர்ந்திலிருந்து நம்ம கம்பெனி கொஞ்சம் நஷ்டத்தில போகுது அதுவும் ஒரு வருஷமா? இதை எப்படி ஒன்னுமே புரியலையே! யா அல்லாஹ் " என்று மனதில் நினைத்து கொண்டு பாஸ்கருக்கு அழைக்க

அவன் அழைப்பை ஏற்று , " ம்ம்ம் சொல்லுங்க ஷெஹனாஸ் "

தனக்கு எழுந்த அத்தனை சந்தேகங்களையும் தெளிவாக அவன் முன் எடுத்து வைக்க பாஸ்கருக்கு தலையே சுற்ற ஆரம்பித்து விட்டது. " ஷெஹனாஸ் நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா வர முடியுமா? இதை நாம நேர்லை பேசிக்கலாம் "

" ம்ம்ம் சரிங்க அண்ணா " என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்தவள் தொழுதுவிட்டு தூங்கினாள்.

ஷெஹனாஸின் புத்தி கூர்மை பாஸ்கருக்கு சற்று பிரமிக்க வைத்தது. அதைவிட அவள் சொன்ன விஷயத்தை பற்றி மனம் சிந்திக்க தொடங்கியது. உடனே சித்தீக் அழைத்தான்.

" என்னடா இந்த நேரத்தில அழைச்சி இருக்கேன் என்ன விஷயம் ? " என்று சித்தீக் கேட்டு கொண்டே ராஹிலாவை தூங்க வைத்தான்.

ஷெஹனாஸ் சொன்னதை எல்லாம் அவன் சொல்ல , " ஹே என்ன சொல்ற உண்மையாவா? "

" ம்ம்ம் ஆமா , நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாவே வந்திடு புரியுதா மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்"

" ம்ம்ம் சரி மச்சான் "என்று விட்டு அலைபேசியை வைத்தவன் ராஹிலாவை தூங்க வைத்துவிட்டு தொழுதுவிட்டு தூங்கினான்.

பார்ப்போம் நஷ்டத்திற்கு காரணமானவர்கள் யாரென்று?

தொடரும்

staytune frds

 


ReplyQuoteShare:

error: Content is protected !!

Please Login or Register