Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை  

Page 3 / 4
  RSS

ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 88
06/09/2019 9:48 am  

❣️ கோபம் 19 ❣️

இருவரும் கண்விழித்தனர். சுரையாவின் மடியில் படுத்த படியே  அவளிடம் பேச தொடங்கினான்.

" உனக்கு பிடித்த நிறம் என்ன?..."

"எனக்கு மஞ்சள் நிறம்  தான் பிடிக்கும்... உனக்கு.....?"

" எனக்கு ரெட் கலர் பிடிக்கும்....."

" பசங்களுக்கு எப்போதும் புளு கலர் தானே பிடிக்கும்?.... "

" ஆமாம் பட் ரெட் கலர் எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடிக்கும்...."

" ஓஹோ அப்படியா....."

" உனக்கு பிடித்த ஹீரோ?...."

" யாரும் இல்லை..." என்றவுடன் அவன் ஆச்சிரியத்துடன் அவளை பார்த்தான்.

" யாரையும் பிடிக்காதா?..."

" ஆமாம்..."

" ஏன் அப்படி ?...."

"பிடிக்காது என்றால் விடு...." என்றாள் கடுப்புடன்.

அவன் புரிந்து கொண்டு அதற்கு மேல் அவன் பேசவில்லை. அவள் பேச தொடங்கினாள்..

" போர் அடிக்கிறது..."

" ஏதாவது விளையாடலாமா???...."

" என்ன விளையாடுவது?..."  என்று அவனை பார்த்து கேட்டாள்.

" 🤔🤔🤔..."

" என்ன யோசிக்கிறாய்??.... "

" சரி நாம் கேரம் விளையாடலாமா??....."

" ஹய் கேரம் விளையாடலாமே!!!!!....."

"சரி இரு நான் எடுத்து கொண்டு வரேன்..." என்று எழுந்து சென்று கேரம் பலகையை எடுத்து வர சென்றான்.

கேரமை எடுக்கும் போது அவன் அப்பா நிஜாம் யார் கூட விளையாட போகிறாய்?... என்று கேட்க சுரையாவுடன் தான் விளையாட போகிறேன் என்றான்.

அவன் வைத்து விட்டு செல் என்றார். இவன் புரியாமல் ஏன்? என்று கேட்டான். சொல்றேன் அல்லவா போ என்றார். அவன் கோபத்தோடு ஏன் என்று கேட்க. அவர் உன் மனைவி மேல் எனக்கு நம்பிக்கை இல்லை அதனால் தான் என்று வெளிப்படையாக கூற. அவன் பல்லை கடித்து கொண்டு அங்கு இருந்த பிளவர் வாஷை உடைத்தான்.

உடையும் சத்தத்தை கேட்டு வெளியே வந்து பார்த்தாள். அங்கு நடந்ததை அவள் கணித்து விட்டாள். அவள் சாகித்தை பார்த்து  நமக்கு விளையாட நிறைய விளையாட்டு இருக்கு இது வேண்டாம் வாங்க நாம உள்ளே போகலாம் என்று எல்லோரையும் எரிக்கும் பார்வையில் சொல்லிவிட்டு அவனை அறைக்கு அழைத்து சென்று விட்டாள்.

    சுரையா, சரி தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது நீ கிளம்பும் என்று அவன் பைக் சாவியை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவளின்  நெற்றியில் முத்தமிட்டு விட்டு  தன் கண்ணீரை துடைத்து கொண்டு சென்றான்.

     இவளும்  உள்ளேயே இருப்பது பிடிக்கவில்லை எனவே தன் பொழுதுபோக்காக விளையாடும் சுடோகு புத்தகத்தை எடுத்து கொண்டு ஹாலில் அமர்ந்து  அதை சிந்தித்து அதனை முடித்து கொண்டு இருந்தாள்.

     அப்போது அங்கு வந்த ரிஸ்வானா அவள் அருகில் சென்று சொடக்கு போட்டு ஓய் என்று அழைத்தாள். சுரையா அவளை ஒரு முறை முறைத்து விட்டு மேலும் தன் செயலில் ஈடுபட்டாள்.

     இதில் எரிச்சல் அடைந்த ரிஸ்வானா, ஏய் என்னடி கூப்பிட்டு கொண்டு இருக்கிறேன்? கண்டுகொள்ளாமல் உன் வேலை செய்து கொண்டு இருக்க? என்ன கொழுப்பு அதிகமாகிவிட்டதா? என்று அவள் முன் உட்கார்ந்து கேட்டாள்.

    சுரையா ஏதும் பேசாமல் எழுந்து உள்ளே செல்ல முயன்ற போது அவளை கீழே தள்ளி விட்டாள்.  சுரையா விழ போக மக்மூதா பிடித்து கொண்டாள்.

     பாபி(அண்ணி) உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை தானே என்று பதற்றத்தோடு கேட்டாள். சுரையா அதையெல்லாம் இல்லை விடு.

   ஏய் ச்சி நீயெல்லாம் ஒரு ஜென்மம்மா என்று அவளை கேவலமான பார்வை பார்த்தாள். அப்போது "அல்லாஹீ அக்பர்...." என்று பாங்கு கேட்டவுடன் மக்மூதா வா போய் தொழுகலாம் இவளை அல்லாஹ் பார்த்து கொள்வான் என்று அவளை அழைத்து சென்றாள்.

    போய் வுழு செய்து கொண்டு வா சேர்ந்து தொழுகலாம் என்று இருவரும் வுழு செய்துவிட்டு தொழுக சென்றனர். 

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

கல்லூரி....

   என்ன ரஸியா இவ்வளவு நாள் லீவு? என்று வகுப்பு ஆசிரியர் கேட்டவுடன். என் அக்கா கல்யாணம் சார் அதான் என்றாள். சரிசரி இனி லீவு போடுவதை தவிர்த்து கொள் என்றார். ம்ம்ம் ஒகே சார் என்று அமர்ந்தாள்.

    Ok students.  Last month from our class 10 students attend their interview in a tcs company. From out of 10 only 5 students are selected from that interview. Now i will read their names they should come infront and talk for few minutes.

The 5 students are....

5.  Vinoth
4. Suresh
3. Meena
2. Sumithra
1.  Rasiya

    எல்லாரும் பேசி முடித்து விட்டார்கள் கடைசியாக  ரஸியா பேச தொடங்கினாள். எங்கள் வீட்டில் அம்மா அப்பா அக்கா நான்கு பேர் மட்டுமே.  நாங்கள் ரிச் பேமிலி. நான் இன்னிக்கு இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் அக்கா தான். அவள் தான் எனக்கு எல்லாம் கற்று கொடுத்தது.

     அவள் எனக்கு அக்கா மட்டும் இல்லை இன்னொரு அம்மாவும். அவள் என்னிக்குமே அவளுக்கென்று எதுவும் வாங்கி கொள்ள மாட்டாள். எளிமையை மட்டுமே விரும்புகிறவள். எப்பவுமே லைபில் ஒரு லட்சியத்தோடு வாழனும். எந்த பிரச்சினை வந்தாலும் தைரியமாக எதிர்க்கனும். தோல்வி தான்  வெற்றிக்கு முதற்படி என்று அடிக்கடி சொல்வாள்.

     எனக்கு இன்டர்வியூவை எதிர்கொள்வது எப்படி என்று கற்று கொடுத்தது அவள் தான்.  அவளின் அறிவுரை மட்டுமே என்னை இங்கு கொண்டு வந்துள்ளது என்று நம்புகிறேன்.  கடைசியாக அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கு) என்று தன் பேச்சை முடித்து கொண்டாள்.

    மாணவர்கள் அனைவரும் அவளுக்கு கைதட்டினர். அவள் வகுப்பு ஆசிரியர் உன் அக்கா என்ன படித்து உள்ளார்கள்? என கேட்க . அவள் பிஎஸ்சி பி.எட் மேக்ஸ் என்றாள். ஒ மேக்ஸ் குட் செலக்ஷன். யூவர சிஸ்டர் நேம்? சுரையா என்றாள். ம்ம்ம் ஒகே என்றவுடன் வகுப்பு மணி அடித்தது வகுப்பு ஆசிரியர் சென்றனர். பிறகு எல்லாரும் இன்டர்வியூவில் செலக்ட் ஆனவர்களை வாழ்த்து தெரிவித்து கொண்டு இருந்தனர் மற்ற மாணவர்கள்.....

    எப்போதும் கலகல என பேசி ஆசிரியரிடம் திட்டு வாங்கும்  ரஸியா இன்று  மிகவும் அமைதியாக இருந்தது ஆசிரியர்க்கே ஆச்சரியம். என்ன ரஸியா அமைதியாக இருக்கிறாய்? என்றவுடன் அதையெல்லாம் இல்லை மேம் என்றாள்.

      அவளின் தோழி சுமித்ரா புரிந்து கொண்டாள் ரஸிமாவிற்கு அவளின் அக்கா நினைவு வந்து விட்டது.  ஏய் ரஸியா உண்மை சொல் உனக்கு உன் அக்கா நியாபகம் வந்துவிட்டது தானே என்று கேட்க. இல்லை அக்கா என்கிட்ட ஏதோ ஒன்று மறைக்கிறாள் என்பது மட்டும் எனக்கு புரிகிறது. ஆனால் என்ன என்பது தான் தெரியவில்லை என்றாள். சரிவிடு எல்லாம் சரியாகும் என கூற வீட்டிற்கு செல்வதற்கான மணி அடித்த உடன் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.

       ரஸியா நேராக தன் அக்கா வீட்டிற்கு சென்றாள். சுரையா ஹாலில் அமர்ந்து மக்மூதா உடன் பேசி கொண்டு இருந்தாள். சுரையா என்று அழைத்து கொண்டு உள்ளே சென்றாள். அவளை பார்த்தவுடன் ஏய் ரஸியா என்று கட்டிக்கொண்டாள்.

     அக்கா ஒரு ஹேப்பி நியூஸ் எனக்கு வேலை கிடைத்து விட்டது என்றவுடன். அல்ஹம்துலில்லாஹ் வீட்டுக்கு போய் தொழுது அல்லாஹ்க்கு நன்றி சொல் புரியுதா? என்றாள். ம்ம்ம் சரி சுரையா அப்ப நான் கிளம்புகிறேன் என்றவுடன் ஏய் சாப்பிட்டு போ என்றாள் மக்மூதா. இல்லை இன்னும் ஒரு நாள் வரேன் என்று விட்டு விடைபெற்றாள். 

    ரஸியா வீட்டிற்கு சென்று முதலில் தொழுது விட்டு  பிறகு அம்மா அப்பா இரண்டு பேரும் இங்கே வாங்க என்று அழைத்தாள். என்ன சொல்லு என்றார் அம்மா. அவள் எனக்கு வேலை கிடைத்து விட்டது என்றவுடன் இருவரின் முகத்திலும் நூறு வாட்ஸ் பல்ப் போல் மலர்ந்தது.

    எவ்வளவு சம்பளம் என கேட்டார் அப்பா. இவள் பிறகு சொல்வார்கள் என்று சொல்லி விட்டு தன் வேலைகளை கவனிக்க தொடங்கினாள்....

 


ReplyQuote
ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 88
06/09/2019 9:54 am  

❣️ கோபம் 20❣️

இப்போது தான் நம் வீடு நிம்மதியாக இருக்கிறது என்று மரியம் ரஹீமிடம் கூற. ம்ம்ம் ஆமாம் அந்த சுரையா போனவுடன் தான் வீடு வீடு மாதிரி இருக்கிறது. எப்போதும் ஏதாவது பிரச்சினை செய்து கொண்டு இருப்பாள். ஆனால் இப்போது அது இல்லை. நம் பேச்சை கேட்க மாட்டாள் என அவளை பற்றி இருவரும் வசை பாடி கொண்டு இருந்தனர். இதை கேட்ட ரஸியாவிற்கு கோபம் வந்துவிட்டது. அதை அடக்கி விட்டு படிக்க தொடங்கினாள்.

    காலையில் காயப்போட்ட துணியை எடுக்க மறந்துவிட்டேன். மழை வருவது போல் இருக்கிறது நான் போய் எடுத்து கொண்டு வருகிறேன் என்று மக்மூதாவிடம் கூறிவிட்டு மாடிக்கு சென்றாள் சுரையா.

    அவள் மாடிக்கு செல்வதற்கும் மழை வருவதற்கும் சரியாக இருந்தது. அவள் துணிகளை சீக்கிரம் எடுத்துக்கொண்டு  இருந்தாள்.

    காலை நடந்ததை நினைத்து வருந்தி கொண்டு இருந்தான் சாகித். மழை வந்ததால் கீழே செல்வோம் என்று திரும்பிய போது சுரையாவை பார்த்தவுடன் அவன் கவலைகளை மறந்து அவளை ரசிக்க தொடங்கினான்.  அவன் மெதுவாக அவளை நோக்கி நடந்து அவளை தன் பக்கம் திருப்பினான்.

    இவள் இவன் தான் உணர்ந்து அவனின் இழுப்பிற்கு அசைந்தாள்.  மழை அதிகமாக பொழிய தொடங்கியது அதனுடன் இவர்களும் காதலை பொழிய தொடங்கினர்.

உன்னோடு பேசிக்கொள்ள
வார்த்தைகள்
சேர்த்து வைத்து
முள்ளுக்குள்
திக்கி தவித்தேனே
உன் பேரை
மட்டும் தினம்
நெஞ்சுக்குள் சொல்லி சொல்லி
என் பேரை
இன்று மறந்தேனே
மஞ்சள் நிலவே
கொஞ்சல் மொழியே
வெட்கத்திமிரே சாய்க்காதே
ஆசைக்கனவே
மீசை புயலே
நித்தம் இசையில்
நீ கொல்லாதே

என் நெஞ்சு
சின்ன இலை
நீதான் என்
காதல் மழை
உன்னாலே நான்
நனைய வேண்டும்

என் நெஞ்சு
சின்னக் கொடி
நீதான் என்
காதல் செடி
உன்மீது
சுற்றிக்கொள்ள வேண்டும்

உன் மூச்சுக்காற்று பட்டு
பூக்கின்ற பூக்கள் எல்லாம்
உன்போலே வாசனைகள் வீசும்
உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள் அத்தனையும்
போதாது என்று மனம் ஏங்கும்
மின்னல் விழியே கன்னக்குழியே
குட்டிக்கவிதை நீதானே
முத்தத்தடமே சுட்டித்தனமே
மொத்த சுகமும் நீ என்பேனே

     சுரையா அவன் மார்பில் சாய்ந்து கொண்டு ஐ லவ் யூ சாகித் என்றாள். அவனும் அவள் நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூ ராட்சஷி என்று இறுக்கி அணைத்து கொண்டான்.

    சுரையா பேச தொடங்கினாள். என்னை விட்டு போக மாட்டீர்கள் தானே சாகித்.

"ஹேய் அம்மு நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நீ ஏன் இப்படி பேசுகிறாய்?"

" சின்ன வயதில் இருந்தே நான் எதுக்கும் ஆசை பட்டது கிடையாது. அப்படியே ஆசை பட்டாலும் நிலைத்தது இல்லை. நான் ஆசைபட்ட ஒரே விஷயம் நீ மட்டும் தான். எனக்கு நீ வேண்டும் கடைசி வரைக்கும்.  என் கூட இருப்பியா...."

இவள் இப்படி கேட்டவுடன் அவள் கன்னத்தை தன்  இரு கைகளால் ஏந்தி," உன் கூட நான் இருப்பேன். நீ மட்டுமே என் உலகம் புரிந்துகொள் செல்லம்..." என்று அவள் கண்களில் முத்தமிட்டு  தன் மீது சாய்த்து கொண்டான். 

    பிறகு அவள் விலகி கீழே இறங்க சென்றாள். அவன் , அவளை போக விடாமல் அவள் கைபிடித்து இழுத்து சுவற்றில் சாய வைத்து அவளின் இடுப்பை பிடித்து தன் மீது இறுக்கினான். அவள் ஹே மக்மூதா நீ எப்போது வந்தாய்? என்றவுடன் அவன் அவசரமாக விலகினான்.

    இவள் வவ்வ இப்போது என்ன பண்ணுவாய்? என்று கூறி விட்டு தன் அறைக்கு விரைந்தாள். அடிப்பாவி என்னை ஏமாற்றி விட்டாளே ராட்சஷி உன்னை..... என்று நினைத்தவாறு  அறைக்கு சென்றான்.

    தன் உடையை மாற்றி விட்டு தலையை துவட்டி கொண்டு இருந்தாள் சுரையா. சாகித் ஈரத்துடன் வந்தவனை இழுத்து உட்கார வைத்து டவலால் அவன் தலையை துவட்டி விட்டாள்.  அவள் துவட்டி விடுவதை ரசித்து கொண்டு இருந்தான். பிறகு அவளை தன் மடியில்  உட்கார வைத்து  இந்த காதல் தேவதையை அடைய ஏழு  மாதங்கள் ஆகிவிட்டது என்றான். அவன் தோல்களில் கைபோட்ட வண்ணம் ஓஹோ அப்படியா? ம்ம்ம் ஆமாம் டி என் பொண்டாட்டி....

     அவள் ஏதர்ச்சையாக நேரத்தை பார்த்து தொழுகைக்கு டைம் ஆகுது துணியை மாற்றிக்கொண்டு கிளம்பு என்றவுடன் ம்ம்ம் சரி என்று உடையை மாற்றிக்கொண்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டு நான் இஷா முடிந்து தான் வருவேன் யார் என்ன சொன்னாலும் கண்டுக்காமல் இருந்து கொள் புரிகிறதா? என கண்டித்து விட்டு சென்றான். இவளும் சரி என்றாள்.

      இவளும் வூழு செய்து விட்டு தொழுதாள். பிறகு குர்ஆன் ஓதிக் கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. "அல்லாஹீ அக்பர்...." என்ற பாங்கு கேட்டு இஷா தொழுகைக்கு  ஆயுத்தம்மானாள். தொழுகை முடித்துவிட்டு சாகித்தின் வருகைக்காக காத்திருந்தாள் சுரையா.

     சிறிது நேரத்தில் அவன் வந்தான். இருவரும் சேர்ந்து சாப்பிட்டு தன்னறைக்கு வந்தனர்.

சுரையா, " சாகித்...." என்று இழுத்தாள்.

"சொல்லு..."

" உங்களிடம் கொஞ்சம் பேசனும்.... பேசலாமா??..." என்று அவன் தோலில் சாய்ந்த படி கேட்டாள்.

"பேசலாம் தாராளமாக பேசலாம்...."

சின்ன வயதில் நான் தான் எங்கள் வீட்டில் ராணி. என்னை எல்லாருக்கும் அவ்வளவு பிடிக்கும் . அவ்வளவு செல்லம் எனக்கு மட்டும்.  நான் எப்போதும் என் தாத்தா பாட்டி கூட தான் எப்போதும் இருப்பேன். என் சித்தப்பா சித்தி ரெண்டு பேரும் என்னை  அவங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கொள்வார்கள்.

எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போய்டுவாங்க நான்  தாத்தா பாட்டி கூட தான் இருப்பேன். என்னை ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுவது அழைத்து வருவது என் தாத்தா இல்லை என் சித்தப்பா.

நான் பர்ஸ்ட் படிக்கும் போது என் ரஸியா புது ஆளா எங்க வீட்டில் சேர்ந்தா. எங்க சித்தப்பாக்கு ஒரு பொண்ணு ஒரு பையன். எங்க அத்தை மாமாக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. எல்லாம் வீட்டுக்கு வந்தா ரொம்ப ஜாலியாக இருக்கும். ஆனால் என் அம்மா அப்பா மட்டும் பணம் பணம் அது பின்னாடி போய்ட்டு இருப்பாங்க. 

இத்தனைக்கும் சொத்து நிறைய இருக்கு. இப்படியே நாட்கள் நல்லா போச்சு. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது  20.5 அன்னிக்கி நாகூர் போய்ட்டு வரேம் போனவங்க தான் எல்லாரும் என்று அமைதியி பின் அக்ஸிடட் ஆயிடுச்சி. மவுத் ஆகிட்டாங்க வீட்டுக்கு வந்தது என்று கூறிவிட்டு அழுதாள்.

அவளை ஆறுதலாக அணைத்து கொண்டான் சாகித். சிறிது நேரத்திற்கு பிறகு அப்படியே நாட்கள் நகர்ந்தது. ஐந்து வருஷத்துக்கு அப்புறம் அதாவது நான் டேன்த் படிக்கும் போது என் அப்பா அம்மா கிட்ட இந்த சொத்துக்காக தான் என் அம்மா அப்பா எல்லாரையும் கொன்றேன் என்று சொன்னார் அதை நான் கேட்டு விட்டேன். 

அப்புறம் ரொம்ப நாள் கழித்து தாத்தா ரூம்க்கு போனேன். அங்கே ஒரு டைரி இருந்தது. அதை  எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
உன் அப்பாவை மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. அவனை திருத்தும் பொருட்டு உன்கிட்டையும் ரஸியா கிட்டயும் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் துணையோடு நீங்கள் இருவரும் தான் அவனை திருத்தனும். அப்புறம் உன் பெயரில் இது போல் இரண்டு வீடுகள் இருக்கு என்று எழுதி இருந்துச்சு.....

 


ReplyQuote
ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 88
06/09/2019 10:06 am  

❣️ கோபம் 21 ❣️

அதே நேரம்...

     ஜரினா தன் அம்மாவிடம் ஏன் நீங்கள் சுரையாவின் நிக்காஹ்விற்கு வரவில்லை? சுரையா எவ்வளவு வருத்தப்பட்டாள் தெரியுமா? உங்கள் மேல் மிக கோபமாக இருக்கிறாள் என்று கூறினாள். ஏய் உனக்கு தெரியும் தானே நான் ஏன் வரவில்லை என்று அப்புறம் என்ன? என்று கேட்ட தன் தாயை முறைத்தபடி எப்படி இருந்தாலும் ஒரு நாள் உண்மை வெளியே வர தான் போகிறது? என்றாள்.

    அதுக்கு இல்லை ஜரினா அங்கே நான் வந்தால் சுரையாவின் அப்பாவிற்கு நீ யாரென்று தெரிந்து விடும் உன்னையும் உன் தம்பி தங்கையும் உயிரோட விடமாட்டான் அவன் என்றார் கண்ணீரோடு. அம்மா இப்போது ஆவது எங்களுக்கு உண்மையை கூறுங்கள் என்றாள் ஜரினா.

   ஒரு நிமிஷம் ஜாவித் ஃபரினா இரண்டு பேரும் இங்கே வாங்க என்று அழைத்தார் அம்மா இருவரும் வந்தனர். உங்கள் மூவரிடமும் ஒரு விடயத்தை சொல்கிறேன். ம்ம்ம் சொல்லுங்க அம்மா என்றான் ஜாவித்.

   நீங்கள் மூவருமே என்னுடைய பிள்ளைகள் இல்லை என்ற உண்மை உங்களுக்கு தெரியும் தானே. ம்ம்ம் தெரியும் மா என்றாள் ஃபரினா. இன்னுமொரு உண்மையையும் சொல்றேன் சுரையா உன் பெரியப்பா மகள். அதாவது சுரையா உன் அக்கா ரஸியா உன் தங்கை என்றவுடன். ஃபரினா அப்போ சுரையா என் சொந்த அக்காவா என்றாள் கண்கள் விரிய. ம்ம்ம் ஆமாம் என்றார் அம்மா. அம்மா நாங்கள் உங்களிடம் எப்படி வந்து சேர்ந்தோம் என்று ஃபரினா கேட்க. சொல்கிறேன் கேள் என்றார் அம்மா.

பதிமூன்று வருடங்களுக்கு முன்......

   அன்று வேலைகள் முடித்து விட்டு சற்று சோபாவில் உட்கார்ந்தார் கதீஜா(ஜரினாவின் வளர்ப்பு தாய்). அழைப்பு மணியை கேட்டு யாரென்று கதவை திறந்தார். அங்கு ஜரினாவின் அம்மா ஃபரிதா, ஜரினா, ஜாவித், ஃபரிதா உடன் பரபரப்புடன் வந்து சேர்ந்தார். அவரை பார்த்து ஏன் பதற்றமாக வருகிறாய்? என்று படபடப்புடன் கதீஜா கேட்க. உள்ளே போய் பேசலாம் என்று பிள்ளைகளை அழைத்து கொண்டு உள்ளே விரைந்தார் ஃபரிதா. அனைவரும்  உள்ளே சென்றனர். மூன்று குழந்தைகளும் விளையாட தோட்டத்திற்கு சென்றனர்.

   ஏய் ஃபரிதா உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி பதற்றத்தோடு வருகிறாய்? என கேட்டவுடன். நாளைக்கு நாங்கள் நாகூர்க்கு போறோம் அல்லவா எங்கள் உயிர்க்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது இருந்தாலும் போய் ஆக வேண்டிய கட்டாயம் அதனால் என் பிள்ளைகளையும் அண்ணன் பிள்ளைகளையும் பார்த்து கொள்வாய் அல்லவா? ஏய் அதெல்லாம் பார்த்து கொள்வேன் நீ ஏன் இப்படி பேசுகிறாய்? எனக்கொன்றும் புரியவில்லை என்றார் கதீஜா.

    எங்க அண்ணன் நாளைக்கு எங்கள் எல்லாரையும் குடும்பத்தோடு கொல்ல திட்டம் தீட்டி இருக்கான் தப்பிக்க முடியுமா முடியாதா என்று எங்களுக்கு தெரியவில்லை. தப்பித்து கொள்வோம் என்று நம்புகிறேன் இன்ஷா அல்லாஹ் மேலும் உனக்கே தெரியும் சுரையா ரஸியா இருவரும் எங்கள் வீட்டு செல்ல பிள்ளைகள் என்று அவர்கள் இருவருக்கும் துணையாக இவர்களை அவர்களிடம் தக்க நேரத்தில் நீதான் ஒப்படைக்க வேண்டும்.

   நாளைக்கு நாங்கள் எப்படி வேண்டுமானாலும் என்று ஃபரிதாவின் குரல் தழுதழுக்க போகலாம் அப்புறம் இன்னும் ஒரு விஷயம் இவங்க மூன்று பேருக்கும் டீசி வாங்கிட்டு வந்திருக்கிறேன் வேறு ஊரில் வேறு பள்ளியில் சேர்த்து விடு ஹாஸ்டல் என்றாலும் சிறப்பு. பிறகு ஜரினா பத்தாம் வகுப்பு முடித்தவுடன் சுரையா படிக்கும் பள்ளியில் சேர்த்து விடு சுரையா முகத்தை மறந்து இருப்பாள் அதுதான் நல்லது. ஜரினாவும் சுரையாவும் எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள். ஒன்றாக விளையாடுவார்கள் ஒரே தட்டில் சாப்பிடுவார்கள். இத்தனை சிறிய வயதில் ஒருவர் மேல் ஒருவர் அவ்வளவு பிரியம். எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை பிரிந்து . அதுபோல தான் ஜாவித் ஃபரினா. பிறகு அவர் கதீஜாவின் கணவர் மாலிக் அருகே சென்று எங்கள் பிள்ளைகளை பத்திரமாக பார்த்து கொள்வீர்கள் தானே என்று கண்ணீரோடு கேட்டார்.

    என்னமா இப்படி கேட்டு விட்டாய். எங்களுக்கு நிக்காஹ் முடிந்து ஐந்தாண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தைகள் இல்லை . இவர்களை எங்கள் பிள்ளை போல் பார்த்து கொள்வோம். நீ நிம்மதியாக செல். அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் என்று ஆறுதல் கூறினார். பிறகு ஃபரிதா மூவரையும் அழைத்து அம்மா போய்ட்டு வரேன் ஜரினா. அத்தை போய்ட்டு வரேன். நீங்கள் மூன்று பேரும் சமத்தா இந்த அம்மா அப்பா கூட இருக்கனும். இனி இவர்கள் தான் எல்லாம் உங்களுக்கு புரிகிறதா? என்று மூவரையும் கட்டி தழுவி முத்தமிட்டு சென்றாள்..

பிளாஷ்பேக் முடிந்தது...

   அன்று சென்றவர்கள் தான் என்ன ஆனார்கள் ஏதானர்கள் என்று இதுவரை ஒரு தகவலும் இல்லை. அவளும் நானும் கல்லூரியில் ஒன்றாக தோழியாக அறிமுகம் ஆகி உயிர் தோழிகள் ஆனோம். இன்று நான் இருக்கிறேன் அவளோ எங்கு இருக்கிறாள் என்பது கூட தெரியவில்லை என்று அழுதார் கதீஜா.

    ஜரினா ஜாவித் ஃபரினா மூவரும் அழுதனர். ஜாவித், அம்மா எனக்கு எப்போதும் ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும் சுரையாவிடம். அது இப்போது தான் புரிகிறது. ஜரினா, இன்று தன் மனதில் இருந்த வேதனையை கொட்டி தீர்த்தாள். ஒவ்வொரு நாளும் அந்த வீட்டுக்கு போகும் போது என் குடும்பம் இன்று இல்லாமல் போக இவர்கள் தானே காரணம் என்று கோபம் வரும் . ஆனால் சுரையாவிற்காக நான் பொறுத்துக்கொள்வேன்.

    அங்கு ஒவ்வொரு அறைக்கு செல்லும் போதும் ஒவ்வொரு நியாபகம். அப்போதே அவர்களிடம் உண்மையை சொல்லி விடலாமா என்று இருக்கும்  எனக்கு. இந்த விஷயம் சுரையாவிற்கு தெரியும். அவள் தக்க நேரத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுப்பாள். அதுதான் சரியான முடிவு என்று அழுதாள். அவளை ஆதரவாக அணைத்து கொண்டான் அவள் ஆருயிர் கணவன் அக்பர்.  விடுக்கா எல்லாம் சரியாகிவிடும் என்று அவளுக்கு ஆறுதல் கூறினான் ஜாவித்.
.
.
.
.

   சுரையா சாகித் தோலில் சாய்ந்த படி ஜரினாவை பார்க்கும் போது எனக்கு என் அத்தை மகள் ஜரினா தான் நியாபகம் வரும். ஜரினாவின் கையை பிடித்தால் எனக்கு என் அத்தை மகளின் ஸ்பரிசத்தை உணருவேன். ஏன் என்று எனக்கு தெரியாது என்று தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டு அவன் மடியில் கிடத்த அடுத்த நொடியில் உறங்கினாள் சுரையா.

   அவள் மனதில் உள்ள பாரத்தை இறக்கி விட்டாள். இனி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று அவனும் அவளை சரியாக படுக்க வைத்து விட்டு தானும் உறங்கி கொண்டான் அவளை அணைத்த படி. எப்போதும் இல்லாமல் கவலை அற்று உறங்கினாள் சுரையா தன்னவனின் நெஞ்சில்.

 


ReplyQuote
ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 88
06/09/2019 10:13 am  

❣️ கோபம் 22 ❣️

சாகித் விழித்தான். மணி 4 ஆயிற்று. அம்மு எழுந்திடு மா தஹஜ்ஜித் தொழுகனும் அல்லவா? என்றவுடன். அவள் சிறிது நேரம் கழித்து எழுந்திருக்கிறேன் என்றாள். அவள் வேண்டும் என்றே செய்கிறாள் என்பதை புரிந்துகொண்டு சரிசரி தூங்கு நான் மட்டும் தொழுகிறேன் என்று எழுந்தவனை கைபிடித்து இழுத்து கட்டிலித் அமர வைத்து அவளும் கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்து அவன் தோலில் சாய்ந்த படி எருமை என்னை எழுப்பி தொழுக சொல்லுவன்னு தான் நான் அப்படி சொன்ன நீ என்னவோ நான் மட்டும் தொழுக போறேன் சொல்ற பக்கி என்றாள்.

  நீ வேண்டும் என்று தான் செய்கிறாய் என்பது எனக்கும் தெரியும். அதனால் தான் நானும் அப்படி சொன்னேன் டி ராட்சஷி என்றவனை கண்கொட்டாமல் பார்த்தாள். ஏய் என்ன அப்படி பார்க்கிறாய்? என்றவுடன் ஒன்றும் இல்லை என்று குளியலறைக்கு ஒடினாள். பிறகு சிறிது நேரத்தில் வுழு செய்து  விட்டு சாகித் நான் தொழுதுட்டு வரேன் என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு சென்றான்.

   பிறகு இவள் தொழுது விட்டு வீட்டை பெருக்கி விட்டு வாசலையும் சுத்தம் செய்து முடித்து உட்காரவும் "அல்லாஹீ அக்பர்....."  ஸ்பூஹீ பாங்க சொல்லவும் இவள் வுழு செய்து விட்டு தொழுதாள். பிறகு குளித்துவிட்டு சமையலறைக்கு சென்று டீ போட்டு பிளாஸ்க்கில் மாற்றிவிட்டு தானும் டீ குடிக்க ஹாலில் சோபாவில் அமர்ந்தாள். குடித்து விட்டு தன் அறைக்கு சென்று துணிகளை ஊரவைத்தாள்.

   பிறகு சமையலறைக்கு சென்று காலை சிற்றுண்டி செய்து விட்டு மதியம் சாப்பாட்டையும் தயார் செய்து விட்டு வந்து அமர்ந்தாள்.

   சாகித் தொழுகை முடித்துவிட்டு வந்தான் மணி 7. அவனுக்கு ஒரு கப்பில் டீ எடுத்து கொண்டு அவனிடம் நீட்டினாள். அவனும் அதை வாங்கி கொண்டு குடித்துவிட்டு, நான் இன்றிலிருந்து ஆபீஸ் போறேன் என்றவுடன் சரி என்றாள். அவனின் முகத்தில் உள்ள டென்ஷன் கவனிக்க மறக்கவில்லை சுரையா.

  என்ன டென்ஷனா  இருக்கார்? என்ன ஆயிற்று ஒன்றுமே புரியவில்லை? என்று மனதில் யோசித்து கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கு மும்தாஜ் உட்கார்ந்து இருப்பதை கண்டு ஒரு கப்பில் டீ போட்டு கொண்டு அவர்முன் நீட்டினான்.

  அவர், உன்னை எந்த வேலையுய் செய்யாதே என்று எத்தனை தடவை சொல்வது என்று கோபத்தோடு கேட்க. சுரையா, எனக்கு பிடித்து இருக்கிறது நான் செய்கிறேன் என்று உள்ளே சென்று அனைவருக்கும் டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தாள். பிறகு சமையல் வேலை எல்லாம் முடிந்தது. காலை சேமியா உப்புமா மதியானத்துக்கு முருங்கை குழம்பு கேரட் பொறியல் செய்துவிட்டேன். வீட்டை பெறுக்கி விட்டேன்.  பாத்திரம் மட்டும் தான் கழுவனும் என்று விட்டு அறைக்கு சென்று விட்டாள்.

   அனைவரும் அவள் சென்றதை மட்டுமே ஆஆஆஆ என்று வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தனர். குளித்து விட்டு வெளியே வந்த சாகித் வேலைக்கு ரெடியாகினான். அவனுக்கு உதவியாக சுரையா தேவையானவற்றை செய்து கொண்டு இருந்தாள். சுரையா, அவனின் அழகில் மயங்கிய நிலையில் இருந்தாள்.

   டிபன் எடுத்து வை டைமாகுது என்று அவளை பார்க்க அவள் எதுவும் பதில் சொல்லாமல் இருப்பதை கண்டு அவள் பார்வையில் புரிந்து கொண்டு அவள் காதருகே சென்று என்னை சைட் அடிக்கிறியா? என்று கேட்டவுடன் தன்னிலை வந்து விலக முயற்சிக்க, அவன் அவளை தன் கைவளையத்தில் கொண்டு வந்தான்.

விடுங்க சாகித் என்றாள் கெஞ்சலோடு. இவ்வளவு நேரம் சைட் அடிச்ச? நான் எங்கே சை..ட் அடிச்ச. சும்..மா பார்த்தேன் உனக்கு டைம் ஆகிவிட்டது டிபன் எடுத்து வைக்கிறேன் என்று அவனிடமிருந்து விலகி சென்றாள்.

அவள் செல்வதை சிரித்த படி பார்த்துக்கொண்டு ஹாலிற்கு வந்தமர்ந்தான். அனைவருமே ஒன்றாக சேர்த்து சாப்பிட்டனர். பிறகு சாகித் போய்ட்டு வரேன் மா. யார் என்ன சொன்னாலும் கண்டுக்காமல் இருந்து கொள். உன்னை ஏதாவது சொன்னால் என்னிடம் சொல் என்று அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான். சிறிது நேரம் கழித்து நான் போய்ட்டு வரேன் என்று ஆபீஸ் சென்றுவிட்டான்.

ஆபீஸ்.....

   இவன் சென்றவுடன் உடன் வேலை செய்பவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு தன் இருக்கையில் வந்தமர்ந்தான்.

   என்ன மச்சி உன் முகத்தில் ஏதோ கவலை தெரியுதே என் கேட்ட ராமை இல்ல மச்சி காலையில் இந்த மேனேஜர் போன் பண்ணி வர சொல்லிட்டாரு டா. சுரையா கூட்டிட்டு பீச்சிற்கு செல்லலாம் என்று இருந்தேன் என்று வருத்தமாக கூறினான். டேய் விடுடா ஈவினிங் கூட்டிட்டு போ என்றான் வினோத்.

  அவகிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசனும் டா. முதலில் நாங்கள் இந்த வீட்டை விட்டு வெளியே போகனும் என்றவுடன் மூவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர். சாகித் புரிந்து கொண்டு நடந்ததை அனைத்தையும் விளக்கினான். இதை கேட்ட மூவரும் அமைதியாக இருந்தனர். ரமேஷ், யாருமே வா சிஸ்டர் பக்கம் பேசவில்லை? என்றவுடன். இல்லை என்றான் வலியுடன். அவளை திட்டும் போது மனசு வலிக்கிறது.  கேட்கலாம் என்று போனால் வேண்டாம் என்று தடுத்துறா.

   அவள் சும்மா இருக்க காரணமே நான் தான். எப்படியாவது அவளிடம் பேசி தனியாக போய்டனும். அவளை யாராவது ஒரு வார்த்தை தப்பா சொன்னாலும் எனக்கு தலைக்கு மேலே கோபம் வருகிறது என்றவுடன் நீ சொல்றது க்ரேட் தான் அப்படியே செய் என்றான் ராம்.

    சிறிது நேரத்திற்கு பிறகு மேனேஜர் அவனை அழைக்க அவன் உள்ளே சென்றான். அவனிடம் ஒரு பேப்பரை நீட்டினார் மேனேஜர் சுரேஷ். சார் இது என்னது என கேட்க  பிரித்து பாருங்கள் என்றவுடன் அவன் பிரித்து பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி அவனுக்கு assistant manager பதவிக்கு  promotion ஆர்டர் தான் அந்த பேப்பர்.

   பிறகு என்ன சாகித் மகிழ்ச்சியா? என கேட்டார் மேனேஜர். ரொம்ப தேங்க்ஸ். உன் அறிவுக்கு தகுதிக்கு கிடைத்த பரிசு என்றவுடன். எல்லாம் அல்லாஹ் வின் நாட்டம் சார். அவனால் தான் எனக்கு இந்த பதவி கிடைத்தது. சரி சாகித் வாங்க எல்லாருக்கும் ஒரு small introduction கொடுத்து விடலாம் என்று வெளியே வந்தனர்.

  மேனேஜர் அனைவரையும் நோக்கி , "hello guys attention pls . Yesterday Our assistant manager devanathan had got transfer. So our new assistant manager is our Sahith. From today he is assistant manager of this company."  என்றவுடன் அனைவரும் கைதட்டினர். பிறகு அவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. வினோத் ராம் ரமேஷ் மூவரின் மகிழ்ச்சிக்கும் எல்லை இல்லை என்றே சொல்லலாம். அத்தனை புன்னகை.

   சாகித் பள்ளிவாசல் சென்று இறைவனுக்கு நன்றி செல்லுத்தி விட்டு வந்தான். இவன் வேலைகளை முடித்து மக்ரிப் இஷா தொழுகை முடித்துவிட்டு ஸ்விட்ஸ் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

   பிறகு அனைவரிடமும் சொல்லி முடித்துவிட்டு சுரையா கிளம்பு நாம வெளியே போய்ட்டு வரோம் என்றவனை இந்த நேரத்தில் எதுக்கு நாளைக்கு போங்க என்றார் மும்தாஜ். சாகித் தன் அம்மாவிடம் எனக்கு இப்ப போகனும் அவ்வளவு தான். ஏய் என்ன நின்று கொண்டு இருக்கிறாய் கிளம்பு என அதட்டினான் சாகித். அவள் தயங்கிய படி அவள் கிளம்பி அவன் முன் நிற்க இருவரும் வெளியே சென்றனர்.

  இவர்கள் போவதை தடுத்து நிறுத்த முயற்சி செய்து தோல்வி அடைந்தார்கள் அனைவரும். மக்மூதா பிர்தவுஸ் இருவருக்கும் மகிழ்ச்சி.

   அவனுடன் பைக்கில் செல்வது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுக்கும் அவளுடன் செல்வதில் அவனுக்கு மகிழ்ச்சி. கண்ணாடி வழியாக அவளை ரசித்துக்கொண்டே வண்டியை செலுத்தினான்.

    பீச்சிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். அமைதியாக சிறிது நேரம் கழிக்க சாகித் அவளிடம் பேச்சு கொடுத்தான்.

" சுரையா நாம ரெண்டு பேரும் தனியாக சென்று விடுவோமா?.." என்றவுடன் அவள் கோபத்தோடு அவனை பார்த்து, ஏன்? என்றவுடன். உண்மையாக சொல்ல வேண்டுமானால் எப்போது நீதான் அந்த நகையை எடுத்தாய் என்று அனைவரும் கூறினார்களோ அன்றே உன்னை தனியாக அழைத்து சென்றிருப்பேன். தனியாக சென்றால் மட்டும் அந்த பெயர் என்னை விட்டு போய்விடுமா என்ன? என்று கேட்க.

  இல்லை என்றான். இந்த நகையை நான் எடுக்கவில்லை என்று நிருபித்து விட்டு நாம் அந்த வீட்டை விட்டு வெளியே போவோம். அதுவரை அங்கேயே இருப்போம் என்றவுடன் அவனும் சற்று யோசித்து விட்டு சரி நீ சொல்வது சரிதான் அப்படியே செய்வோம் என்றான். இவள் ," எனக்கு தனியாக போக விருப்பமில்லை அதனால் தான் இப்படி சொன்னேன். பிறகு கண்டிப்பாக உன் மனசு மாறும். அல்லாஹ் மாற்றுவான் " என்று மனதில் நினைத்த படி கடல் அலையை ரசித்து கொண்டு இருந்தாள். விதியை மாற்ற யாரால் தான் முடியும்.

சாகித் இந்த கடல் ஆழத்தை அளக்க முடியுமா? என்று கேட்டவளை சிறிது புன்னகை விட்டு முடியுமே என்றான். ஆனால் என் ஆழ் மனதில் இருக்கும் உன்னை அளக்க முடியாது. என் ஆழ் மனதில் நீதான் இருக்க. நீ மட்டும் தான்.

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்

உன்னை எந்தளவிற்கு லவ் பண்றேன்  சொல்ல முடியலை என்று தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்தாள். அவனிற்கு வார்த்தைகள் இல்லை. அவளை தன் நெஞ்சோடு பொருந்தி கொண்டு ஐ லவ் யூ சுரையா. இருவரும் இணைந்து அந்த கடலை ரசித்தபடி தன் காதலையும் சேர்த்து ரசித்து கொண்டு இருந்தனர்.

  சிறிது நேரம் அவள் அலைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள் சுரையா. பிறகு சாகித்தும் அவளுடன் இணைந்து கொண்டான்.

  பிறகு இரண்டு மணிநேரம் கழித்து அங்கிருந்து கிளம்பினர் ஒரு ஹோட்டலில் டின்னரை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர மணி 11 ஆனது. அன்றைய பொழுது சுரையாவிற்கு நன்றாக அமைந்தது. அவன் நெஞ்சில் நிம்மதியாக உறங்கி போனாள் சுரையா.

   சாகித் இருக்கும் போது சுரையாவை சீண்டாதவர்கள் அவன் இல்லாத நேரத்தில் அவளை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. அவளை திட்டிக்கொண்டே இருந்தார்கள். சுரையா, சாகித்திற்காக அனைத்தையும் பொறுத்து கொண்டு இருந்தாள். இப்படியே ஒரு மாதமும் கழிந்தது

 


ReplyQuoteஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 88
07/09/2019 5:24 pm  

❣️ கோபம் 23 ❣️

அன்று எப்போதும் போல் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருந்தாள் சுரையா. எப்போதும் இல்லாமல் ரிஸ்வானா அவளருகில் வந்து ஏய் எனக்கு கால் வலிக்கிறது கொஞ்சம் அமுக்கி விடு என்றாள் வஞ்சக சிரிப்புடன். சுரையாவிற்கு கோபத்தோடு என்னது உன் கால்களை பிடித்து விடனுமா? என்றாள். ஆமாம் என ரிஸ்வானா கூற. அடச்சி பே என்னால் உன் கால்களை அமுக்கி விடமுடியாது வேறு யாரிடமாவது போய் கேள் என்று விட்டு தன் வேலைகளை செய்ய ரிஸ்வானா இரு இப்போது என்ன செய்கிறேன் என்று பார் என்று மனதில் நினைத்து கொண்டு மும்தாஜ் பார்ப்பதற்கு சென்றாள்.

  முமானி இந்த சுரையா டீ போட்டு தர சொன்னால் முடியாது நீயே போய் போட்டு கொள் இல்லை வேறு யாரிடமாவது கேள் என்கிறாள். நீங்களாது என்ன என்று கேளுங்கள் என்று அவர் மனதில் நெருப்பை கக்கினாள்.

  மும்தாஜ் கோபம் கொண்டு ஏய் சுரையா என அழைக்க அவள் செய்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அவர் அருகே சென்று சொல்லுங்க அம்மி என்றாள். ரிஸ்வானா டீ கேட்டதுக்கு போட்டு கொடுக்க மாட்டேன் என்று எதுக்கு சொன்னாய்?

   அவளை பேசவே விடவில்லை. தண்டச்சோறு சாப்பிடுபவளுக்கு என்ன கோபம் என்று கூறவும் "அல்லாஹீ அக்பர்..." என்று பாங்கு கூறவும் சரியாக இருந்தது. இவளுக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு அல்லாஹ் கூப்பிடுறான் அவனுக்கு பதில் சொல்லிட்டு வந்து உங்களுக்கு பதில் சொல்கிறேன் என்றவளை  என்ன திமிராக பேசுற? என்றார்.

   நான் திமிராக பேசவில்லை எனக்கு தொழுகைக்கு நேரமாகுது நான் தொழுகனும் அதை தான் சொன்னேன் என்றாள். எதிர்த்து பேசுற அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா உனக்கு? என்றவுடன். எதிர்த்து பேசவில்லை நீங்கள் கேட்டதுக்கு பதில் தான் சொன்னேன் மேலும் நான் தொழுகனும் நேரம் தவறி தொவது எனக்கு பிடிக்காது என்றவுடன்.

    இப்படி தான் என் மகனை உன் பக்கம் இழுத்திக்கிட்டியா? இதுக்கு தான் நீ தொழுகிறியா என்றவுடன் ஏய் என்று ஒரு விரல் நீட்டி சுரையா வீடே அதிரும் படி கத்த அனைவரும் அங்கே வந்தனர். இன்னும் ஒரு முறை என் ஈமானை சந்தேகம் பட்டிங்க நான் மனிஷியாகவே இருக்க மாட்டேன். இப்படி ஒரு கேவலமான செயலை என்றும் நான் செய்ய மாட்டேன் ச்சி என்றவளை அறைந்தார் கதீஜா. என் அண்ணியை எதிர்த்து பேச நீயாரு? என்றவுடன் அவள் ஏதுவும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

    தன் அறைக்கு சென்று வுழு செய்துவிட்டு தொழுதாள். அல்லாஹ் விடம் அழுது அழுது தன் மனவேதனை கொட்டினாள். அல்லாஹ் விடம் அழுது துஆ கேட்டாள்.

    சாகித்திற்கு இங்கு வேலை ஏதும் ஒடவில்லை. அவன் நினைவு பூராவும் சுரையா மேல் மட்டுமே இருந்தது. அவளுக்கு ஏதோ பிரச்சினை என்று மனம் சொல்லி கொண்டே இருந்தது. இவன் செயலை வெளியில் இருந்து பார்த்து கொண்டு இருந்த வினோத் டேய் ரமேஷ்  தொழுகைக்கு சென்று வந்ததில் இருந்து அவன் சரியே இல்லை என்றவுடன் சரிவா மச்சி போய் என்னன்னு கேட்டு வருவோம் என்ற ராமை பார்த்து சரி வா போகலாம் என்றனர் வினோத் ரமேஷ் மூவரும் சாகித் அறைக்கு சென்றனர்.

   டேய் சாகித் என்னடா ஆயிற்று? ஏதோ போல் இருக்க? என்று வினோத் கேட்க அவன், தொழுகை முடித்து வந்ததில் இருந்து சுரையா நினைப்பாவே இருக்கு. அவளுக்கு ஏதோ பிரச்சினை என்று மனம் சொல்லுது என்றான் கவலையோடு. டேய் மணி 3.00 ஆகுது நீ கிளம்பு மற்ற வேலைகளை நாளைக்கு பார்த்து கொள்ளலாம் என்றவுடன் இல்லடா இதை நாளைக்கு கொடுக்கனும் அதான் இருக்கேன் இல்லையென்றால் நான் கிளம்பி இருப்பேன் சரி போன் செய்து பாரு என்றவுடன் அவள் இப்போது தூங்கிக்கொண்டு இருப்பாள்.

  அதனால் தான் வேறு ஏதும் இல்லை. சரி பார்த்து கொள்வோம் என்று கூறி விட்டு அவரவர் வேலையில் ஈடுபட்டனர். அவன் வேலைகளை விரைவாக முடித்து விட்டு அஸர் தொழுதுவிட்டு வீட்டிற்கு விரைந்தான்.

   சுரையா காலையில் நடந்ததை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். சாகித் வந்ததை கூட அவளுக்கு தெரியவில்லை. சாகித்,என்னாயிற்று இவளுக்கு எப்போது நான் வந்தாலும் என்னை சிரித்த முகத்துடன் வரவேற்பாள். வந்தவுடன் என்னிடம் செல்லம் கொஞ்சுபவள் இப்படி இருக்கிறாளே என்று நினைத்தவாறு அவளை பார்த்த போது அழுது கொண்டு இருப்பதை கவனித்து சுரையா என்று அழைத்தான்.

   பிறகு அவள் தன்னை சமன்படுத்தி கொண்டு சாகித் எப்போது வந்தாய்? என்று கேட்டே கொண்டு அவனிடம் பையை வாங்கி லண்ச் பாக்ஸ் கொண்டு வைத்துவிட்டு அவனுக்கு டீ போட்டு கொண்டு சென்றாள். அவனும் பிரேஷ் ஆகி விட்டு வந்தான்.

   அவனுக்கு டீ கொடுத்து விட்டு அவன் அருகில் அமர்ந்தாள். அவன் குடித்தவுடன் சாகித் நாம் தனியாக சென்று விடுவோமா? என்று கேட்டவளை ஆச்சிரியமாக பார்த்தான். ஆனாலும் ஏதோ பிரச்சினை நடந்து இருக்கு இல்லை என்றால் இவள் இப்படி கூறுபவள் இல்லை என்று அவளிடமே நேராக கேட்டான் ஏன் என்றவுடன் இங்கே இருப்பதற்கு எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினாள்.

  இல்லை நீ ஏதோ மறைக்கிறாய் என்னிடம் என்றவுடன் அவள் இல்லை இதுதான் உண்மை என்றவுடன் அவன் கோபத்தோடு பொய் சொல்கிறாய் என்றான். அவள் இல்லை இல்லை என்று கூற அறைந்தான் சாகித்.

   அடித்ததில் உண்மையை கூறிவிட்டு அவன் நெஞ்சில் புதைத்து அழுதாள் சுரையா. இவனுக்கு கோபம் அதிகமானது. அவர்கள் ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்க இருவரும் விலகி கதவை திறந்தனர்.

   ரிஸ்வானாவின் அம்மாவும் அப்பாவும் ரிஸ்வானாவை தாறுமாறாக அடித்து வெளுத்தினர். இதை பார்த்த சுரையா பதறிப்போய் எதுக்கு இப்போது இவளை அடிக்கிறிங்க? ம்மா என்றவுடன் என்னை மன்னித்து விடு சுரையா இந்த நாயால உன்னை தவறாக நினைத்துவிட்டோம் நாங்கள்.

   இவள் தான் நகையை எடுத்து உன் பையில் போட்டு விட்டு உன் மேல் குற்றம் சுமத்தி விட்டாள் பாவி.  அவள் தோழியிடம் கூறிக்கொண்டு இருந்தாள். அப்போது தான் எங்கள் இருவரின் காதுகளிலும் விழுந்தது. இதனால் நாங்கள் எல்லோரும் உன்னை தவறாக புரிந்து கொண்டோம் என்னை மன்னித்து விடுமா என்றவுடன் நடந்தது நடந்து விட்டது அதற்கு இப்படியா அடிப்பிங்க? ஏதோ மிருகத்தை அடிப்பது போல் அடித்து இருக்கிங்க? என்றவளை குற்றத்தோடு பார்த்தனர்.

   அப்போது தான் ருக்கையா அங்கு வந்து எல்லாரிடமும் ஒரு உண்மையை சொல்கிறேன் என்று அனைத்தையும் கூறினாள். அவளை வெறுப்பாக பார்த்தனர் அனைவரும். ஏய் எதுக்கு இப்படி செய்த என்று தந்தை ஜாபர் கேட்டவுடன் எனக்கு சாகித்தை பிடிச்சு இருக்கு அதான் அப்படி நடந்துகிட்டேன். எனக்கு அவரை தவிரே வேறு யாரும் எனக்கு பிடிக்கவில்லை என்றவுடன் கன்னத்தில் அறைந்தார் மும்தாஜ். அசிங்கமாக இல்லை உனக்கு என்றவுடன்.

   இல்லை நான் ஏன் அசிங்கமாக நினைக்க வேண்டும். நான் இவங்க ரெண்டு பேரையும் பிரிப்பேன் என்றவுடன் ஏய் ச்சி வாயமூடு என்றாள் சுரையா.

   நான் அன்னிக்கி சொன்னது தான் இன்னிக்கு சொல்றேன் என்னை மீறி அவரை ஒன்றும் செய்ய முடியாது அவ்வளவு தான் என்றாள்.

  சுரையா அமைதியாக இரு நான் பேசனும் என்றான் சாகித். சாகித் தன் அம்மாவின் அருகில் சென்று எப்படி மா உங்களுக்கு இப்படி பேசனும் மனம் வந்தது. அதுவும் தொழுகையில் அவள் ஒரு நகையை எடுத்தாள் என்று இவ்வளவு பேசினீங்களே? இப்போது? என்றவுடன் அமைதியாக நின்றார் இந்த கேள்வி எல்லாருக்கும் தான் என்றார்.

   இப்போது நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். இனி நானும் சுரையாவும் இந்த வீட்டில் இருக்க போவதில்லை தனியாக வீடு பார்த்து கொண்டு போக போறோம் என்றவுடன் மும்தாஜ் வேண்டாம் இங்கேயே இருங்கள் இனி நான் சுரையாவை ஏதும் சொல்ல மாட்டேன் நான் மட்டும் இல்லை யாரும் எதுவும் சொல்ல மாட்டோம் என்றவுடன் போதும் அம்மா விடுங்கள் என்றான்.

    டேய் அப்பா சொல்றேன் கேள் என்றவுடன் போதும் நிறுத்துங்கள் என்றான். பிறகு மும்தாஜ் சுரையாவிடம் சென்று என்னை மன்னித்து விடுமா என்றவுடன் அம்மி நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியது என்னிடம் இல்லை அல்லாஹ் விடம் பிறகு ஒரு மூச்சு விட்டு, எனக்கு இங்கே இருக்க விருப்பமில்லை இங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் சொன்னது மட்டுமே என் காதுகளில் ஒளித்து கொண்டு இருக்கிறது இருக்கும்.

    என்னால் இதை எப்போதும் மறக்க முடியாது. உங்களை என் அம்மாவை விடவும் மேலாக நினைத்ததால் தான் நீங்கள் செய்த அத்தனை பொறுத்து கொண்டு இருந்தேன். எப்போது என் ஈமானில் சந்தேகம் உங்களுக்கு வந்ததோ அப்போதே முடிவு பண்ணிடேன் என்று கூறி விட்டு சாகித் கிளம்பலாம் என்று வெளியே வரவும் அங்கு ரஸியாவின் வகுப்பு ஆசிரியர் வந்திருந்தார்.

    அவரை பார்த்தவுடன் good evening sir உட்காருங்கள் என்று சோபாவை காண்பித்தாள். அவர் good evening மா ரஸியா தான் வீட்டின் முகவரி தந்தாள். நான் விஷயத்தை கூறிவிடுகிறேன்.

    நான் ஒரு ஸ்கூல் நடத்திக்கொண்டு இருக்கிறேன். அதற்கு எனக்கு மேக்ஸ் டீச்சர் தேவை பட்டார்கள். அன்று ரஸியா உன்னை பற்றி கூறினாள். இந்த வேலை உனக்கு சரியாக இருக்கும் so this is your joining order from this acdemic you can come and join in oru school என்று அவளிடம் நீட்ட சாகித் வாங்கி கொண்டு கண்டிப்பாக அவள் வருவாள் நீங்கள் நம்பலாம் என்றவுடன் then நான் கிளம்பிறேன் என்று விட்டு அவர் சென்று விட்டார்.

   ஆனால் சுரையா சிலை போல் நின்றிருந்தாள். எப்படி இருக்காதா பின்ன அவளின் கனவு அல்லவா? இன்று நிஜம் ஆகிவிட்ட சந்தோஷத்தில் சிலை போல் ஆனாள் சுரையா.  சாகித் அதனை புரிந்து சுரையா என்று அழைத்தான் அவள் தன்னிலை வந்து அவனிடம் ஏதும் பேசாமல் அறையினுள் சென்று இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு வந்தாள்.

    சாகித் போகலாமா என்றவுடன் அவள் ம்ம்ம் போலாம் என்று இருவரும் வெளியேறினர். சுரையா தாதா தன் பெயரில் எழுதி வைத்த வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இரவு சாப்பாட்டை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.

     மிகப்பெரிய விடு இல்லை அது குட்டி அரண்மனை என்றே கூறலாம். வீட்டின் ஒரு பகுதியில் அழகாக செடிகள் மரங்கள்.  இன்னும் ஒரு பகுதியில் ஒரு சின்ன பூங்கா இருந்தது. பின் பகுதியில் மரங்கள் இருந்தனர். அழகான நடைபாதை இருந்தது. அங்கு சிறிய நீர்வீழ்ச்சி போல் அமைத்து இருந்தது. இதை பார்த்த சாகித் சற்று பிரம்மித்து போய் இருந்தான். பிறகு இருவரும் சேர்ந்து உள்ளே சென்று சாப்பிட்டு விட்டு தூங்கினர். அமைதியாக எதுவும் பேசவில்லை இருவரும்.

 


ReplyQuote
ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 88
08/09/2019 2:59 am  

❣️ கோபம் 24 ❣️

இருவரும் ஏதும் பேசாமல் இருக்க அதை கலைக்கும் விதமாக சுரையா சாகித் என்றழைத்தாள். என்ன வேண்டும் என்று கோபத்தோடு கேட்க, கோபத்தை புரிந்து கொண்டு அமைதியானாள்.

   ஒருவழியாக இருவரும் உறங்கினர். இருவருமே தொழுவதற்கு கண்விழித்தனர். அவன் இவளிடம் போய்ட்டு வரேன் என்று கூறி விட்டு பள்ளிவாசல் சென்றான்.

    இவனின் செயலில் அவனுக்கு கோபம் இருக்கு என்று அவள் உணர்ந்து விட்டாள். இவளும் தொழுது விட்டு காலை உணவு மதிய உணவு இரண்டையும் தயார் செய்து விட்டு ஸோபாவில் அமர்ந்தாள் சுரையா. சிறிது நேரத்தில் சாகித் வந்து சேர்ந்தான். அவன் எதுவும் பேசவில்லை.

    அவன் ரெடியாகி விட்டு டிபன் எடுத்து வை என்று டைனிங் டேபிளில் அமர்ந்தான். அவனுக்கு பரிமாறினாள். சாப்பிட்டு விட்டு அவன் கிளம்பினான். அவன் அவளிடம் பத்திரமாக இரு கதவை தாழ்ப்பாள் போட்டு கொள் என்று மட்டுமே கூறிவிட்டு அதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்தது அவளுக்கு வலித்தது.

   அதை மறைத்து விட்டு பிற வேலைகளை கவனிக்க தொடங்கினாள். ஆனால் அவள் மனது சாகித்தை தான் சுற்றி கொண்டு வந்தது.

   சாகித் தன் வேலைகளில் மூழ்கி இருந்தாலும் அவன் கவலையோடு இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டனர். லண்ச் சாப்பிட வந்தமர்ந்தான் சாகித். அவன் சாப்பிட்டு முடித்தவுடன் அவனே நேற்று நடந்ததை தன் நண்பர்களிடம் கூறினான். அவர்கள் அவனுக்கு ஆறுதல் கூறி விட்டு சென்றனர். அவனும் தன் வேலைகளில் கவனம் செலுத்தினான்.

    சுரையா இல்லாமல் வீடே வெறிச்சோடி இருந்தது. பிர்தவுஸ் மக்மூதா இருவருக்கும் பிடிக்கவில்லை. சுரையா இருந்தால் அவளிடம் பேசி விளையாடி கொண்டு இருப்பதில் நேரம் செல்வது தெரியாது இவர்களுக்கு. அவர்கள் இருவரும் தன் வீட்டில் உள்ளவர்கள் மேல் கோபமும் வருத்தமும் இருந்தது.

   வேலை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான் சாகித். அவனை வரவேற்று டீ கொடுத்து விட்டு அவனருகில் அமர்ந்து சாகித் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறீங்க? என்றவுடன் அவன் உன்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. இனி எனக்கு உன்னிடம் பேசவும் விருப்பமில்லை என்றவுடன் அதிர்ந்து விட்டாள். ஏன் என்று கேட்க.

    உனக்கு தான் நான் தேவையில்லாதவனா போய்ட்டேன் அதனால் தான் என்னிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து விட்ட. உனக்கு நியாபகம் இருக்கா நாம நிக்காஹ் ஆன புதிசில் இனி உன்னிடம் எதுவும் மறைக்க மாட்டேன் சொன்னியே? ஆனால் எனக்கு நியாபகம் இருக்கு. உன்னை நம்புன. ஏன் நீ என் மனைவி என்று தானே அதற்கு தான் நீ இப்படி செய்த என்றவுடன் அவள் அப்படி அல்ல என்றாள். போதும் சுரையா என்று அவன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டு இனி எனக்கு உன்னிடம் பேச விருப்பமில்லை என்றுவிட்டு அவன் சென்று உறங்கினான்.

    அவன் அழுவதை பார்த்த சுரையா தன்னையே நொந்து கொண்டாள். என் மேல் சாகித் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்காரு அவரை நான் ஏமாற்றி விட்டேன் என்று தன் இரு கன்னங்களில் தன்னை தானே அடித்து கொண்டாள். பிறகு அமைதியாக சென்று உறங்கினாள்.

  ரஸியாவிற்கு செமஸ்டர் தொடங்கி விட்டதால் படிப்பில் கவனம் செலுத்தினாள். இன்னும் இரண்டு மாதங்களில் வேலைக்கு சென்று விடுவாள்.  செமஸ்டர் மூன்று பேப்பர் முடிந்துவிட்டது இன்னும் ஒரு பேப்பர் அண்ட் ப்ராக்டிக்கல் மட்டும் தான் இருந்தது அவளுக்கு.

   இரண்டு வாரங்கள் சென்றது. சுரையாவும் சாகித்தும் பேசிக்கொள்ள வில்லை. சுரையா பேசினாலும் அமைதியாக இருந்து விடுவான். இருவரும் சரியாக சாப்பிடுவதில்லை தூங்குவதும் இல்லை. இவள் தன் வேலையை ரிசைன் செய்து விட்டாள்.

   இன்றும் அவன் வழக்கம் போல சென்று விட ஜரினாவிடமிருந்து போன் வந்தது அதை அட்டன் செய்தாள் சொல்லு ஜரினா என்று இருவரும் நீண்ட நேரம் கழித்து பேசிமுடித்தனர். சரி பூனை நான் போன் வைக்கிறேன் என்று வைத்தாள் ஜரினா.

   இந்த வார்த்தை கேட்டவுடன் சுரையா அதிர்ந்தாள். இந்த வார்த்தை நம் அத்தை மகள் ஜரினா மட்டுமே கூறுவாள். அப்போது இவள் என் ஜரினா தான். என் பிரியமான ஜரினா தான் என்று உறுதி செய்தாள். அப்போது ஜாவித் ஃபரினா இருவரும் என் சித்தப்பா பிள்ளைகள் தான். அவளை அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் அது ஆனந்த கண்ணீர் தான்.

    ஆனால் அவளுக்கு குழப்பம் நிறைய இருந்தது. அதை மறந்து அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. இதை சாகித்திடம் சொல்லியே ஆகவேண்டும் என்று மனம் அடித்தது. போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. மூன்றாவது முறையாக செய்த போது எடுத்தான். ஏய் அறிவில்லை உனக்கு அதான் நான் எடுக்க மாட்டேன் தெரியுது அப்புறம் எதுக்கு போன் செய்து டார்ச்சர் பண்ணுற. வேலை நேரத்தில் என்று எரிந்து விழுந்து கட் செய்து தன் வேலைகளை செய்ய துவங்கினான்.

  அவன் திட்டியதில் வருத்தம் இருந்தாலும் அவள் மனதில் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது. எனவே அவள் மறுபடியும் ஒரு குளியலை போட்டு அங்கிருந்த பூங்காவில் சென்று ஊஞ்சல் ஆடினாள். அந்த குட்டி பூங்காவில் தன்னையே மறந்து விளையாடிக்கொண்டு இருந்தாள்.

  சிறிது நேரம் கழித்து அங்கிருந்த நீர்வீழ்ச்சி நனைந்தாள். அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இன்று. இதில் அவள் மதியம் சாப்பிட மறந்து போனாள்.

  மாலை சாகித் வீடு திரும்பினான்.  எப்போதும் தன்னை வரவேற்பவள் இன்று இல்லையே என்று எங்கே என்று தேடினான். சிறிது நேரத்திற்கு பிறகு ஊஞ்சலில் விளையாடி கொண்டிருப்பதை கண்டு என்னவாக இருக்கும் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் என்று அவளை ரசித்து கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து தன்னிலை வந்தவன். அவளை எந்த வித தொல்லையும் கொடுக்காமல் உள்ளே சென்றான்.

    அங்கு சமையலறைக்கு சென்று பார்த்த போது தான் தெரிந்தது அவள் மதியம் எதுவும் சாப்பிடவில்லை என்று அங்கு அவள் எனக்கு பசிக்குது நான் போய் சாப்பிட்டு விட்டு வந்து விளையாடுகிறேன் என்று செல்ல சாகித் வந்திருப்பதை பார்த்து அப்போது தான் மணியை பார்த்தாள் மணி 5. மணி அஞ்சா🤤🤤 அச்சோ அஸர் தொழுக வில்லை என்று நியாபகம் வர விரைவாக சென்று தொழுகை முடித்து விட்டு வந்து சாப்பிட்டாள்.

   பிறகு அவனிடம் பேசாமல் இரவு உணவு தயார் செய்து விட்டு வந்தமர்ந்தாள். அவன் தொழுக சென்று விட்டான். இவளும் தொழுது விட்டு பிற வேலைகளை செய்து கொண்டு இருந்தாள். அவன் வந்தவுடன் அவனுக்கு பரிமாறி சாப்பிட்ட பிறகு தானும் சாப்பிட்டு முடித்தாள்.

    அவன் தூங்கி விட்டான். அவளும் தூங்க சென்றாள். அப்போது சாகித்தை பார்த்தாள். அவனின் தலையை வருடிய படி அவன் நெற்றியில் முத்தமிட்டாள். இன்னிக்கி நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறேன் தெரியுமா ஜரினா தான் என் அத்தை மகள் என்று எனக்கு இன்னிக்கி தான் தெரிஞ்சிகிட்ட. அதை சொல்றதுக்கு தான் உங்களுக்கு போன் பண்ண நீங்கள் கோபமா பேசிட்டிங்க. பரவாயில்லை என்று அவளுக்கு உறக்கம் வர அவன் மேலேயே உறங்கி போனாள்.

   ஏதோ உணர்வு வர இருவரும் கண்விழித்தனர். சுரையா கண்விழித்ததை பார்த்த சாகித் கண்ணை மூடி கொண்டான். அச்சோ இவர் மேலேயா உறங்கி இருக்கோம். இப்போது எப்படி விலகுவது என்று யோசித்தவாறே விலக முயற்ச்சிக்க அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டான். இவள் தோற்று போனாள். பிறகு அப்படியே உறங்கி போனாள்.

    அவள் தூங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டான் சாகித். எனக்கு நீ வேணும் டா. உன் மேல் எனக்கு கோபம் இல்லை வருத்தம் மட்டும் தான். நீ என்கிட்டே இருந்து மறைச்சிட்ட வருத்தம் தான் மற்றபடி வேறு ஏதும் இல்லை. உன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு நான் ஆபீஸில் நான் படுற பாடு எனக்கு தான் தெரியும். நீ சாப்பிடுறியா இல்லையா பத்திரமாக இருக்கியா என்ன பண்ற தெரியாம எவ்வளவு டென்ஷனா இருக்கும் தெரியுமா. இன்னிக்கி உங்கிட்ட பேசலாம்னு வந்தா மேடம் ரொம்ப குஷியில் ஏதும் பேசாமல் இருந்திடிங்க.

உன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் எனக்கும் என் அம்மா இடையில் சண்டை மூட்டி விட்டிருப்பார்கள் ஆனால் நீயோ அப்படி எதுவும் செய்யவில்லை! அதில் எனக்கு கொஞ்சம் இல்லை இல்லை நிறையவே பெருமை. உனக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மனசு என்று அவளை பார்த்தான். பாரு எப்படி தூங்குகிறாள் ஒன்றும் தெரியாத குழந்தை போல் என்று அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

இந்த அணைப்பு நெருக்கம் இல்லாமல் நான் எவ்வளவு தவித்தேன் தெரியுமாடி ராட்சஷி. நீயும் எப்படி கஷ்டப்பட்டு இருப்பேன் தெரியும் டி. காலையில் அப்படி பேசுனதுக்கு என்னை மன்னிச்சுடு மா. கொஞ்சம் வேலை டென்ஷன் சாரி மா இனி உன்னை இந்த மாதிரி திட்ட மாட்டேன் டா இன்னும் ஒரு வாரத்துக்கு நான் வர லேட் ஆகும் அதுவரை இது நடக்கும் ராட்சஷி என்று அவளை அணைத்து கொண்டு உறங்கினாள்.

ஒரு வாரத்திற்கு நான் வர லேட் ஆகும் எனக்காக காத்திருக்க வேண்டாம் நீ சாப்பிட்டு கொள் என்று விட்டு அலுவலகத்திக்கு சென்றான்.

ரஸியா டிவியில் பாட்டு கேட்டு கொண்டு இருந்தாள்.

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை
இவள் போலே

துன்பம் என்னை
தீண்டாமல் தாயாய்
காப்பாள் மண் மேலே

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை
இவள் போலே

துன்பம் என்னை
தீண்டாமல் தாயாய்
காப்பாள் மண் மேலே

சில நேரம் புன்னகையாலே
பூக்கள் தந்திடுவாள்

சில நேரம் சண்டைகளாலே
என்னை வென்றிடுவாள்

பேசாமல் மௌனத்தினாலே
மனதை சொல்லிடுவாள்

இவள் சொந்தம்
போதும் என்னும்
எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை
இவள் போலே

துன்பம் என்னை
தீண்டாமல் தாயாய்
காப்பாள் மண் மேலே

உலகம் எந்தன்
உலகம் எங்கும்
இவளே வந்திடுவாள்

உயரம் கொஞ்சம்
வளர்ந்த போதும்
குழந்தை என்றிடுவாள்

உள்ளங்கையில் பாசம் வைத்து உணவை தந்திடுவாள்

உறங்கும் போதும்
உறங்காமல் என்
அருகில் நின்றிடுவாள்

இவள் போலே
இவளை போலே
வாழ்வில்
நண்பர்கள் இல்லை

மறுஜென்மம் வந்தால்
கூட நான் தான்
இவளின் பிள்ளை

என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை
இவள் போலே

துன்பம் என்னை
தீண்டாமல் தாயாய்
காப்பாள் மண் மேலே

கண்ணீர் துளிகள்
வேண்டும் என்று
கண்ணை கேட்கின்றேன்

கண்ணீர் துடைக்க
இவளும் வந்தால்
தினமும் அழுகின்றேன்

என்னை நானே
காண்பது போலே
இவளை பார்க்கின்றேன்

என்றும் எங்கும்
வழித்துணையாக
இவளை கேட்கின்றேன்

உறவேன்னும் வார்த்தைக்கு
தான் அர்த்தம்
இங்கே கண்டேன்

இவள் அன்பின் வெளிச்சம்
என்மேல் இரவும் பகல்
தான் என்பேன்

என்றும் என்றென்றும்
இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை
இவள் போலே

துன்பம் என்னை
தீண்டாமல் தாயாய்
காப்பாள் மண் மேலே

சில நேரம் புன்னகையாலே
பூக்கள் தந்திடுவாள்

சில நேரம் சண்டைகளாலே
என்னை வென்றிடுவாள்

பேசாமல் மௌனத்தினாலே
மனதை சொல்லிடுவாள்

இவள் சொந்தம்
போதும் என்னும்
எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை
இவள் போலே

துன்பம் என்னை
தீண்டாமல் தாயாய்
காப்பாள் மண் மேலே

அவளுக்கு சுரையாவின் நினைவை தந்தது. அந்நேரம் சுரையா அவளுக்கு போன் செய்தாள். இருவரும் பேசி முடித்தனர். பிறகு ரஸியா டிவியை பார்க்க தொடங்கினாள்.

 


ReplyQuote
ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 88
10/09/2019 4:45 am  

❣️ கோபம் 25 ❣️

சாகித்தின் அருகாமைக்கு ஏங்கியது சுரையாவின் மனம். இஷா தொழுது விட்டு அவள் துணிகளை மடித்து கொண்டு இருந்தாள். அதில் சாகித் சட்டை எடுத்து அவள் அணிந்து கொண்டாள். ஏனோ சாகித் அவளருகில் இருப்பதை போல் உணர்ந்தாள்.

    பிற வேலைகளை முடித்துவிட்டு கட்டிலில் படுத்த படி அவன் போட்டோவை பார்த்த படி சாரி சாகித் எனக்கு மறைக்கனும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை தேவையில்லாத சண்டைகள் வேண்டாம் என்று தான் உன்னிடம் சொல்லவில்லை. உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் சொல்ல முடியவில்லை சாகித். நீதான் டா என் உலகம்.

   உன்னை எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா. எந்த கவலையாக இருந்தாலும் உன் மடியில படுத்தால் எங்கே போகும் தெரியாது. எல்லாமே மறந்து நல்லா தூங்குவேன். அது மாதிரி தான் நீயும் சண்டே மதியானம் என் மடியில படுத்துட்டு கதை பேசுவ அப்போ உன்னை எவ்வளவு ரசிப்பேன் தெரியுமா. ஐ மிஸ் யூ சாகித் ஐ மிஸ் யூ சோ மச் என்று அதன் மேலையே உறங்கிவிட்டாள்.

    
   சாகித் வீட்டிற்கு வந்தான். கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ந்தான். பிறகு சுரையா எங்கே என்று தேடினான். அவள் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து கோபம் வந்தது. சுரையா என்று அழைத்த போது தான் கவனித்தான் சுரையா அவன் சட்டையை அணிந்து இருப்பதை.

   அவள் தலையை வருடிய படி அவள் நெற்றியில் முத்தமிட்டான். பிறகு அங்கு இருந்த போட்டோவை பார்த்தான். அதை எடுக்கும் போது தான் உணர்ந்தான் அவள் அழுதாள் என்று. அதை மேசை மேல் வைத்துவிட்டு திரும்பும் போது அங்கிருந்த பேக் ஒன்று கீழே விழுந்தது. அதில் ஒரு டைரி வெளியில் வந்தது. அதை அவன் எடுக்கும் போது ஓ மேடம்க்கு டைரி எழுதும் பழக்கம் எல்லாம் இருக்கா என்று எண்ணினான். அதை படிக்க வேண்டும் என்று அவன் மனம் துடித்தது.  அதை திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி ஆச்சிரியத்துடன் படிக்க தொடங்கினான். அந்த டைரியில்... தேதியுடன் எல்லாம் இருந்தது அதில் அவர்கள் இருவருக்கும் மக்னா போட்ட தேதியில் இருந்து....

"என் கனவு கணவன் சாகித் உனக்காக :

    இதுவரை நான் டைரி எழுதினது கிடையாது பட் உனக்காக தான் எழுதுகிறேன். நீ என்னை ரெஜிஸ்டர் ஆபீஸில் தான் பர்ஸ்ட் டைம் பார்த்து இருப்பே என்னை. ஆனால் நான் உன்னை என் கனவுல தான் உன்னை பார்த்த முதன்முதலா. அதுவும் இன்னிக்கி நீ போட்டு வந்தியே light checked shirt with black pant அதே டிரஸை போட்டு தான் உன்னை நான் பார்த்த. பட் அந்த கனவுல என்ன நடத்திச்சின்னு தெரியல மறந்துட்ட.

   உன்னை ரெஜிஸ்டர் ஆபீஸ்ல நேரில் பார்க்கும் போது ஒரு நிமிஷம் என்னையே நான் தொலைச்சிட்ட தெரியுமா. அப்புறம் தான் என்னிலைக்கே வந்து உன்னை பார்த்தா நீ என்னமோ என்ன அப்படி பார்த்த. நீ என் பக்கத்தில் இருந்த அப்ப நான் பட்ட சந்தோஷத்திக்கு அளவே இல்லை டா.

   அப்புறம் உன்னை நான் பார்க்கவில்லை. ஒரு ஏழு மாதம் கழித்து இன்னிக்கி என்னோட மணவாளனா வந்திருக்க நீ. நீ தான் என்னோட கணவன் தெரிஞ்சிகிட்ட அப்ப நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்னிக்கு உன்னை திருட்டு தனமாக உன்னை எவ்வளவு ரசிச்சேன் தெரியுமா. நீ உன் friends கிட்ட பேசும் போது அவ்வளவு அழகாக இருந்தே. நீ சிரிக்கும் போது அவ்வளவு அழகாக இருக்க டா. உன்னை பார்த்துட்டே இருக்கலாம் தோனுது.

   நான் கவலையோடு இருக்கும் போது தூங்கும் என் கனவுல வந்து உனக்கு நான் இருக்கேன் ராட்சஷி சொல்லுவ தெரியுமா. எனக்கே தெரியாமல் என் மனசுல நீ வந்துட்டே டா. ஆமாம் உனக்கு ஒரு செல்ல பேர் வைக்கனுமே என்ன வைக்கிறது🤔🤔🤔🤔 எதுவும் தோன்ன மாட்டேன்னுது. நான் என்ன பண்ணுவேன்😢😢😢. உன்னை எப்படி கூப்பிடுவது🤔🤔🤔. நீ என்கிட்ட செல்லமா சண்ட போடும் போது பக்கி லூசு  தான் கூப்பிடுவேன்😏😏 ஆஹான் கண்டுபிடிச்சிட்டேன் உன்னை சாஹீ😊😊 தான் கூப்பிடுவேன்(இதை படிக்கும் சாகித் சுரையாவை பார்த்து சிறிது புன்னகை சிந்தி விட்டு எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு ராட்சஷி என்று நினைத்து கொண்டு படிக்க தொடங்கினான்)

    இன்னிக்கி நம்ம நிக்காஹ்க்கு டிரஸ் நகை எல்லாம் வாங்க போனோமே. உனக்காக நான் என்ன வாங்கி இருக்கேன் சொல்லு பார்ப்போம். நீ வாங்குனது எனக்கு எப்படி டி தெரியும் சொல்ற i can catch your mind voice.சரிசரி கோச்சிக்காத பக்கி சொல்ற உனக்காக நான் வெள்ளியில் ஒரு மோதிரம் வாங்கியிருக்கேன். அது உன் கையில் போடுறதுக்கு தான் நான் காத்திட்டு இருக்கேன் சாஹீ.

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை

நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ.....

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது

நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா

சில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிகட்டி போல மாறும் ஏ....ஏ....

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

இந்த சாங் உனக்கு தான்டா. இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும். இது உனக்கு நான் dedicate பண்ற.

    நீ எப்போதும் என் கூடவே இருக்கனும் சாஹீ. என் மனசுல கொஞ்சம் கொஞ்சமாக வாழ்ந்திட்டு இருக்கிங்க. உன் இன்பம் துன்பம் என எல்லாவற்றிலும் நானும் பங்கெடுத்துக்கனும் சாஹீ. நீங்க எனக்கு ரொம்ப முக்கியம் சாஹீ. எந்தவொரு சூழ்நிலையிலும் எதுக்காகவும் உன்னை நான் விட்டு கொடுக்க மாட்டேன் சாஹீ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ சோ மச்💖💖💖💖💖💖💖💖"

     டைரி முடிந்தது. இதை படித்த சாகித் கண்களில் தன்னை அறியாமல் அவன் கண்கள் கலங்கின. அந்த டைரியை வைத்து விட்டு அவளருகில் அமர்ந்து, அவள் தலையை வருடிய படி என்னை இந்தளவுக்கு லவ் பண்ணுவன்னு நினைச்சு கூட பாகாகல டி. எப்படி டி? மிஸ் யூ சோ மச் டி. இனி எதுக்கும் உன்னை நான் கண்கலங்க விட மாட்டேன் மா என்று அவன் கண்கலங்கினான். பிறகு கண்களை துடைத்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவளை அணைத்த படி உறங்கினான்.  இருவருமே சாப்பிடவில்லை என்பதை அவர்கள் அறியவே இல்லை.

   மும்தாஜ் தான் செய்த தவறை நினைத்து மனமுருகி அல்லாஹ் விடம் தவ்பா(பாவ மன்னிப்பு) கேட்டு கொண்டு இருந்தார். சுரையா வீட்டை விட்டு வெளியே போய் இரண்டு வாரங்கள் ஆகிறது. அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் நண்பர்களிடமும் அவன் கூறவில்லை. சாப்பிடும் போது சுரையாவின் சமையல் தான் நினைவிற்கு வந்தது அனைவருக்கும்.

   அவளின் அருமையை இப்போது உணர்ந்தார்கள் அனைவரும். மக்மூதா பிர்தவுஸ் இருவரும் அவளை ரொம்ப மிஸ் பண்றாங்க. மக்மூதா சாகித்தின் செல்ல தங்கை. அவள் எப்போதும் அவனுடனே இருப்பாள். அப்போது சாகித் நண்பன் வினோத் அங்கு வந்தான். அம்மா என்று அழைத்தான். வாப்பா வினோத் வாப்பா ராம் எப்படி இருக்கிறிங்க என்று நலம் விசாரித்தார் நிஜாம். நான் நல்லா இருக்கேன். நீங்கள் கேட்டிங்கள் அல்லவா சாகித் அட்ரஸ் இதோ என்று அவர்களிடம் அட்ரஸை நீட்டி விட்டு நான் போய்ட்டு வரேன் என்று கிளம்பினான்.

   டேய் ஏன்டா வெறும் அட்ரஸை மட்டும் தந்த வீடு பெரிய பங்களான்னே சொல்லவில்லை என்று பைக்கில் ஏறியடி கேட்க அதை பார்த்தாவது சுரையாவை புரிந்து கொள்ளட்டும் என்றான் வினோத்.

   சாகித் போன் அடித்தது அவன் மேனேஜர் தான். ஹலோ சொல்லுங்கள் சார். நான் இந்த ப்ராஜெக்ட் முடிச்சிட்ட சாகித். நேத்து நைட் நீங்கள் சொன்ன ஐடியா ஜஸ்ட் வொர்க் பண்ணி பார்த்தேன். சக்சஸ் ஆயிடுச்சி. சோ நீங்கள் தான் இந்த ப்ராஜெக்ட் ரொம்ப உழைத்தவர். சோ ஒரு ஒன் வீக் லீவு எடுத்துகோங்க என்று அவரே எல்லாமும் பேசி முடித்து விட்டார். சரிங்க சார். ரொம்ப தேங்க்ஸ். இட்ஸ் ஒகே dude என்று போனை வைத்தான்.

   பிறகு சுரையா என்று அழைத்தான். அவள் நம்பலையா கூப்பிடுறார் என்று கிள்ளி பார்த்துவிட்டு உண்மை என்று ஆங் சொ...சொல்லுங்க சா....சாஹ..சாகித் என்று தடுமாறினாள். அவன் அதை கண்டுக்காமல் இருப்பது போல் எனக்கு ஒன் வீக் லீவு என்றவுடன் சரி வாங்க சாகித் சாப்பிடலாம் என்று நகர்ந்தவளை கைபிடித்து இழுத்து அவளை அணைத்து கொண்டான்.

   அவள் செய்வதறியாமல் சிலைபோல் நின்றாள். அவன் கண்ணீர் அவள்மேல் விழுந்த பிறகு தான் தன்னிலைக்கு வந்து சாகித் அழுகிறான் என்பதை உணர்ந்து சாகித் ஏன் அழுகிறிங்க? என்னாச்சு? என்று பதற்றத்தோடு கேட்டாள்.
  
   என்னை மன்னிச்சுடு சுரையா 😢😢. இனி உன்னை நான் கண்கலங்கமா பாத்துக்குவேன். நீ என்கிட்ட மறைச்சிட்ட வருத்தம் மட்டும் தான் மா. கோபம் ஏதும் இல்லை மா. உன்னை எவ்வளவு மிஸ் பண்ண தெரியுமா டி என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

   அவள் சாரி சாகித் என்று அவன் கன்னத்தில் மாறிமாறி முத்தமிட்டாள். அவள் நெஞ்சில் புதைந்து அழுதாள். அவள் கன்னத்தை தன் இருகைகளாலும் ஏந்தி அவள் கண்ணில் முத்தமிட்டு தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான். இருவரும் தன்னிலை மறந்து 

      Aala Aala
Vaanil Yera Vaa
Vennilaavai
Moottai Katti
Mannil kunu Vaa Vaa

(Very sorry lyrics tamil la kidaikala)

தங்கள் காதல் வானில் பறந்து கொண்டு இருந்தனர்.

 


ReplyQuote
ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 88
10/09/2019 4:49 am  

❣️ கோபம் 26 ❣️

சுரையாவிற்கு சாகித்தை விட்டு விலக மனமே இல்லை. சுரையா என்று சாகித் அழைக்க.

"ம்ம்ம் சொல்லுங்கள்..."

"இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கிறது?..." என்றான் அவளை பார்த்து.

"ப்ளீஸ் சாஹீ இந்த அணைப்பு நெருக்கம் இல்லாமல் நான் ரொம்ப தவிச்சி இருக்கேன் ப்ளீஸ்...." என்று அவனை இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டாள். அவனும் எதுவும் சொல்லாமல் அணைத்து கொண்டு அவள் உச்சி முகர்ந்தான்.

சுரையா பசிக்குது எனக்கு என்றவுடன் சரிவா சாப்பிடலாம் என்று இருவரும் நடக்க சுரையா மயங்கி விழுந்தாள். சாகித் அவளை விழாதவாறு தாங்கி பிடித்து கொண்டு பதற்றத்தோடு அம்மு என்னாச்சு கண்ணை திற டா என்னை பாரு டா என்று அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து அவள் முகத்தில் தண்ணீரை தெளித்தான்.

    பிறகு நினைவிற்கு வந்தாள். சாகித் என்ன ஏதாவது உடம்பு சரியில்லையா ஹாஸ்பிடல் போலாமா என்றவுடன் அதெல்லாம் வேண்டாம் சாகித் என்றாள். அப்புறம் என்ன மா என்று அக்கறையுடன் கேட்க ஒழுங்கா சாப்பிடாமல் இருந்ததால் தான் என்றவுடன் ஏன் அக்கறை உடன் கேட்டான். சாப்பிட பிடிக்கலை சாஹீ. சாப்பிட பிடிக்கலையா? ம்ம்ம் ஆமாம். ஏன்? தெரியவில்லை சாகித். சாகித் இன்னிக்கு எங்கேயும் போகாமல் என் கூடவே இருக்கிறீர்களா? ப்ளீஸ் என்று குழந்தை போல் கேட்க அவன் ம்ம்ம் சரி மா என்று அவளை அணைத்து கொண்டான்.

  அவனால் புரிந்து கொள்ள முடிந்தது தன்னவள் தன் அருகாமைக்காக எவ்வளவு ஏங்கியிருக்காள் என்று. அவன் கண்கள் கலங்கின. நான் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டேன் இனி இதுபோல் நான் செய்ய மாட்டேன் என் ராட்சஷிக்கு.

   உன்னை நான் எப்போதும் சந்தோஷமா பார்த்துக்குவேன் அம்மு. நீ தான் எனக்கு எல்லாமே டா என்று மனதில் நினைத்து கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான். சிறிது நேரத்திற்கு பிறகு அவனே அவளுக்கு ஊட்டியும் விட்டான்.

   போதும் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டேன். இதற்கு மேல் வேண்டாம் என்று குழந்தை போல் சிணுங்க அவன் அதட்டி மேலும் இரண்டு இட்லியை ஊட்டிவிட்டான். பிறகு தானும் சாப்பிட்டு முடித்தான்.

   இருவரும் அந்த சின்ன பூங்காவில் அமர்ந்தனர். அவள் நான் ஊஞ்சல் ஆடிட்டு வரேன் என்று எழுந்தவளை, இழுத்து தன் மடியில் உட்கார வைத்து எப்ப பார்த்தாலும் ஊஞ்சல் சர்க்கஸ் சின்ன புள்ள மாதிரி என்று நக்கலாக கேட்டான். சும்மா தான் என்று சாஹீ என்று அவன் சட்டை பட்டனில் கோலம் போட்டவாறு அழைத்தாள்.

   சொல்லு என்றான். அவன் கன்னங்களை தன் கையில் ஏந்தியவாறு என் தாதாவோட மனசு தாதியோட அன்பு சாச்சாவோட கண்டிப்பு சாச்சியோட அக்கறை புப்பூ புப்பா கிட்ட எனக்கு கிடைக்கும் செல்லம் இது பூராவும் உன்கிட்ட நான் உணர்ந்த என்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள். மேலும் என் அப்பாகிட்ட உணராத பாதுகாப்பு அம்மாகிட்ட கிடைக்காத அன்பு அரவணைப்பு பாசம் அக்கறை எல்லாம் உன்கிட்ட உணர்ந்த சாஹீ என்று கண்களை துடைத்து கொண்டாள்.

ஏனோ சாகித்தால் பேச முடியவில்லை. அவளின் பேச்சில் அவனால் உணர முடிந்தது தன்னை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை.

மேலும், எனக்கு ரஸியா மட்டும் செட்டில் ஆகிட்டா போதும் என் அம்மா அப்பா இரண்டு பேரையும் ஒரு வழி பண்ணிவிடுவேன். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பெற்றவர்களை கொன்ற என் அம்மா அப்பா சும்மா விடமாட்டேன். என் தாதா தாதி ரொம்ப நல்லவங்க என்று கோபத்தோடு கூறினாள்.

சாகித் அவளை சமாதானம் செய்து கொண்டு இருந்தான். பிறகு இருவரும் தங்கள் காதலை வளர்த்து கொண்டு இருந்தனர். அவளின் குறும்புகளை ரசித்து கொண்டு இருந்தான் சாகித். பட்டாம்பூச்சி பிடிக்க பின்புறமா நடந்த சுரையா கால் தவறி விழ போக அவளை தாங்கி பிடித்தான் சாகித். இருவரின் கண்களும் காதல் மொழிந்து கொண்டது...

-
உந்தன் கண் சாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தறிகெட்டுத் தலும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினல் மாது
-

சாகித்தின் பார்வையை தாங்க முடியாதவளாய் அவனிடமிருந்து விலகி உள்ளே ஓடினாள். அவளை ஒரு முறை பார்த்து மெலிதாய் ஒரு புன்னகை சிந்திய படி உள்ளே சென்றான்.
.
.
.
.
.

அம்மா நான் பிர்தவுஸ் இரண்டு பேரும் வெளியே போய்ட்டு வரோம் என்றாள் மக்மூதா என்றவுடன் ஏன்டி எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் அவளை பாபி கூப்பிட்டு என்று அதட்டினார் மும்தாஜ். போமா சின்ன வயசுலருந்து கூப்பிட்டு பழகி போச்சு. நான் அப்படி தான் கூப்பிடுவேன் என்றாள் மக்மூதா. விடுங்க புப்பூ என்றாள் பிர்தவுஸ். நாங்கள் இருவரும் தொழுதுவிட்டு வெளியே போய்ட்டு வரோம் என்றவுடன் சரிம்மா பார்த்து போய்ட்டு வாங்க ரெண்டு பேரும். பிறகு இருவரும் தொழுதுவிட்டு கிளம்பினார்கள். அம்மி அஸ்ஸலாமு அலைக்கும் என்றவுடன் வ அலைக்குமுஸ்ஸலாம் என்றார் மும்தாஜ். இருவரும் விடைபெற்று சென்றனர்.

அப்போது நிஜாம் அங்கு வந்து சோபாவில் அமர்ந்தார். மும்தாஜ் வருத்தத்துடன் இருப்பதை பார்த்து மும்தாஜ் என்ன ஆயிற்று ஏன் சோகமாக இருக்கிறாய்? என்றவுடன் எனக்கு நம்ம மகனையும் மருமகளையும் பார்க்க வேண்டும் என்று அழுதார். நிஜாம் என்ன சொல்வது என்பது தெரியாமல் இருந்தார். பிறகு நம் மேல் தான் தவறு நாம் சரியாக விசாரிக்காமல்  தவறு செய்து விட்டோம். ஆமாம் நான் உண்மையின் பக்கம் தான் இருக்க வேண்டும் நம்ம பிள்ளைகளிடம் அடிக்கடி சொல்லுவேன். ஆனால் நானே தவறு செய்து விட்டேன். என் மகன் சரியாக தான் இருக்கிறான். நான் தான் தவறு செய்து விட்டேன்.

நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா! சுரையாவின் ஈமானை நான் சந்தேகம் பட்டதுக்கு அன்னிக்கே அவள் ஒரு நிரபராதி நல்லவள் என்பதை அல்லாஹ் நிருபித்து விட்டான். சுரையோட ஈமான் எவ்வளவு தூய்மையானதா இருந்திருக்கு பாருங்க (சுபஹானல்லாஹ்) . அல்லாஹ் அவளுக்கு நீண்ட ஹயாத் (ஆயுள்) அவளுக்கு தரனும் என்று அல்லாஹ் விடம் இருகைகளை ஏந்தி துஆ செய்தார். அதற்கு நிஜாம் ஆமீன் என்று கூறினார்.

இப்படி ஒரு நல்ல பெண்ணை நாம் சந்தேகம் பட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை அல்லாஹ் நமக்கு உணர்த்திவிட்டான். நாம் அவளுக்கு செய்த கொடுமைகளை அவள் ஸபர் (பொறுமை) யால் வென்று விட்டாள். கொஞ்சம் ஸபர் செய் அல்லாஹ் நமக்கு ஒரு வழி செய்வான் நம்மால் துஆ மட்டும் தான் செய்ய முடியும். நாம் அல்லாஹ்விடம் துஆ கேட்போம் என்று அவர் தலையில் ஆதரவாக தட்டிவிட்டார் நிஜாம். அவரும் சரி என்றவாறு இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

 


ReplyQuoteஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 88
10/09/2019 4:54 am  

❣️ கோபம் 27 ❣️

பிர்தவுஸ்வும் மக்மூதாவும் சுரையாவையும் சாகித்தையும் பார்க்க அவர்கள் வீட்டிற்கு வந்தனர். இருவரும் அந்த குட்டி அரண்மனை பார்த்து வாய் பிளந்தனர். பிர்தவுஸ் இவ்வளவு பெரிய வீடா?🤤🤤 இந்த இடத்தில் நாம ரெண்டு வீடு கட்டலாம் என்றாள். ஆமா மக்மூதா என்று வியந்த படி இருவரும் கேட்டை திறந்து உள்ளே சென்றனர்.

கேட்டை திறந்து உள்ளே சென்றவுடன் இருவரும் வாயை ஆஆஆ என்று பிளந்தனர் 😲😲😲 அந்த வீட்டின் அழகில் மயங்கி விட்டனர் இருவரும். மக்மூதா பிர்தவுஸ் யிடம் சுரையா
பெரிய பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும் எவ்வளவு எளிமையாக இருக்காங்க அல்ல இந்த எளிமை நமக்கு வராது என்றவுடன். ஆமாம் மக்மூதா. அவள் இதுவரைக்கும் பணக்கார திமிர் தான் என்ற அகம்பாவம் பொறாமை ஆசை இதையெல்லாம் இருந்ததில்லை என்று கூறினாள்.

இருவரும் வீட்டின் வாசலை அடைந்தனர். அங்கு சுரையா சாகித் இருவரும் பேசி கொண்டு இருப்பதை கேட்டனர் இருவரும்.

சுரையா டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தாள். சாகித் அவளுக்கு உணவை ஊட்டி விட்டான். சாகித் வயிறு ஃபுல் போதும் என்றாள். கொஞ்சம் தானே சாப்பிட்ட இன்னும் கொஞ்சம் தான் இருக்கு சாப்பிடு என்றான். அவள் முறைத்து கொண்டு அவன் கையில் இருந்த தட்டை பிடிங்கி அவனுக்கு ஊட்டி விட்டாள்.

அவனும் புன்சிரிப்பு விட்ட படி சாப்பிட்டு கொண்டு இருந்தான். சாஹீ இந்த மாதிரி நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு இல்ல என்றவுடன் அவன் ம்ம்ம் ஆமாம் என்றான் சாகித்.

சுரிமா என்றவுடன் அவள் மனம் வானத்தில் பறந்து கொண்டு இருந்தது. அவன் அழைப்பது கூட அவள் காதில் விழவில்லை. அவன் பொய் கடுப்புடன் ஏய் ராட்சஷி என்ன என்னை சைட் அடிக்கிறியா? என்று அவள் காதில் சொன்னவுடன் ஆங் என்ன சொன்னிங்க? என்று கேட்டவளை லூசு என்றவனை பார்த்து ஈஈஈஈஈ😁😁😁😁 என்று இளித்தாள். சரி நான் ஒன்னு கேட்பேன் தப்பா எடுத்துக்க கூ...டாது என்று இழுத்தான். ம்ம்ம் கேளுங்க சாகித்.

இல்ல ரிஸ்வானா வந்து உன்கிட்ட வந்து என்னை பற்றி சொன்ன போது உனக்கு கோபம் வரவில்லையா என்றவுடன் அவனை பார்த்து ஒரு சிரிப்பு விட்டு சாகித் உங்களை நான் ரெஜிஸ்டர் ஆபீஸில் பார்க்கவில்லை அதற்கு முன் என் கனவுல தான் உங்களை பார்த்தேன். அதை நான் ரஸியா கிட்ட சொன்ன அப்ப அவள் சொன்னா கண்டிப்பா நீ அவன பார்ப்ப என்றாள். ஆனால் அப்ப நான் நம்பல. ஆனா அன்னிக்கி ரெஜிஸ்டர் ஆபீஸில் உன்ன பார்த்ததுமே நான் என்னையே மறந்துட்டேன். அப்பறம் என்னை சுதாரித்து கொண்டு உங்களை பார்த்தா நீங்கள் என்னையே பார்த்துட்டு இருந்திங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.

அன்னிக்கி நீங்க என் பக்கத்தில் இருக்கும் போது நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? அதுக்கப்புறம் உங்களை நான் பார்க்கலை. ஒரு ஏழு மாசம் கழிச்சு என் முன்னாடி நான் உனக்கானவன் வந்து நிக்கும் போது நான் எவ்வளவு சந்தோஷபட்டேன் தெரியுமா? இன்னி வரைக்கும் அந்த கனவுல என்ன நடந்ததுச்சுன்னு நியாபகம் இல்லை.

உங்களை எப்படி சாகித் நான் சந்தேகம் படுவேன். நீங்க என் கணவன். என்னால் உங்களை என்னிக்குமே சந்தேக பட முடியாது சாஹீ. அவள் என்கிட்ட உங்களை பற்றி சொன்னதும் கோபம் மட்டும் தான் வந்தது. அதான் ஒன்னுவிட்ட என்றாள். சாகித் அவளை அணைத்து கொண்டு நீதான் மா இனி எல்லாமே எனக்கு ஐ லவ் யூ லவ் யூ சோ மச் டி என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

இருவரின் கண்களும் கலங்கின. பிறகு சுரையா, சாஹீ கோபப்படாமல் நான் சொல்றத கேட்கனும் என்றவுடன் அவன் புருவங்களை சுருக்கி ம்ம்ம் சொல்லு என்றவுடன். உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள் அம்மி அப்பா உங்கள் அண்ணா பாபி மக்மூதா எல்லாரையும் மிஸ் பண்ணல அவங்களை பார்க்கனும் தோன்றவில்லை என்றவுடன் அவன் இதுவரை அடக்கி வைத்த அழுகை வெளியே வந்தது. அவள் மடியில் படுத்து அழுதான்.

  அவளும் அவனுக்கு ஆதரவாக தலையை வருடி விட்டபடி சமாதானம் செய்து கொண்டு இருந்தாள். அவன் அழுகை நின்றவுடன் எழுந்து எனக்கு  எப்போதும் நேர்மையா இருக்கனும் உண்மையா இருக்கனும். சொல்லி கொடுத்ததே என் அம்மா தான். அவங்க அப்படி பண்ணது பிடிக்கவில்லை. அதைவிட உன் ஈமானில் சந்தேகம் பட்டது எனக்கு சுத்தமாக பிடிக்கலை. அவங்க மேல எனக்கு இன்னும் கோபம் இருக்கு. அது எப்போதும் தீராது. ஸோ இனி அதை பற்றி பேசாதே என்றான் கடுப்புடன்.

அமைதியாக அப்போது மக்மூதா என்ன செய்தாள்? அட்லீஸ்ட் அவளிடமாவது பேசலாம் அல்லவா?

   அவள் உன் செல்ல தங்கை தானே. அவள் நமக்கு தானே சப்போர்ட் பண்ணா என்றவுடன் சுரையா இதை தவிர்த்து வேறு ஏதாவது பேசு என்றான் எரிச்சலோடு அதற்கு மேல் அவள் பேச பிடிக்காமல் எழுந்து தட்டை கழுவ கிச்சனிற்கு சென்றாள்.

   இதையெல்லாம் வீடியோவாக எடுத்தாள் மக்மூதா. சாகித் கோபமாக இருப்பதை புரிந்து கொண்டு இருவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

   அவளை பின்னால் அணைத்தவாறு ஸாரி சுரிமா 😔 என்றவுடன் அவள் விடுங்க சாகித் என்று விலக அவளை தன் விலகாதவாறு பிடித்திருந்தான் சாகித்.

  அவள் காதருகே சென்று லவ் யூ மை ராட்சஷி என்றவுடன் அவள் மனதில் பல பட்டாம்பூச்சிகள் பறந்தது..

பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே

.
.
.
.
.
.

     போன வேகத்தில் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். மக்மூதா மிகவும் நொந்து போய் இருந்தாள். தன் அண்ணன் எதற்கு என மேல் கோபமாக இருக்கிறான்? சுரையா கேட்டதுக்கு அவளையும் திட்டுறா? எருமை. எப்போதும் நான் என்ன கேட்டாலும் மறுக்காமல் வாங்கி தருவான். ரியாஸ் கூட என்னை ஒரு சில நேரத்தில் திட்டுவான். பட் சாகித் நான் தான் உயிர் என்று அழுதாள். அழுதுகொண்டே தூங்கியும் போனாள்.

   பிர்தவுஸ் எல்லாவற்றையும் மும்தாஜ் யிடம் கூறினாள். இதை கேட்டவுடன் தன்னையே நொந்து கொண்டார். நிஜாம் ஒரு சின்ன தப்பு நம்மை எந்தளவுக்கு  கொண்டு வந்து இருக்கு பாரு? விடு அல்லாஹ் நமக்கு வழி காட்டுவான். நம்ம சுரையா அவனை சமாதானம் செய்து நமகிட்ட பேச வைப்பா நீ பாரு என்று விட்டு அமர்ந்தான்.
.
.
.
.
.
.

  ரஸியாவிற்கு செமஸ்டர் முடிந்தது. தன் தோழிகளுடன் அரட்டை அடித்து கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தாள் பூங்காவில். அவள் விளையாடுவதை ரசித்துக்கொண்டு இருந்தது இரண்டு கண்கள்.

  ஏய் இன்னும் இரண்டு வாரத்தில் நீ வேலைக்கு போய்டுவ. அப்புறம் ஜாலி தான் என்றாள் அவள் தோழி. ம்ம்ம் ஆமாம் டி சரி டைம் ஆயிடுச்சு கிளம்பலாம் என்று எழுந்து அனைவரும் கலைந்தனர்.

  இவனும் அவளை ரசித்தவாறு தன் காரில் ஏறி சென்றான். அவன், இன்னும் டூ வீக்ஸ்ல நீ என் கம்பெனியில் தான்டி வொர்க் பண்ண போற. அங்க நான் தான்டி எச்ஆர். அப்புறம் உன்னை என் பக்கத்தில் இருந்தே நான் ரசிப்பேன் என் செல்லத்தே! என்று மனதில் நினைத்து கொண்டு இருந்த போது அவன் செல் அடித்தது. டேய் நவாஸ் உன் போன் அடிக்கிறது எடுத்து பேசு என்றான் அவன் நண்பன் மஸ்தான். பிறகு தன்னிலை வந்து போனை அட்டன் செய்தான்.

   அவன் பேசி முடித்ததும் மஸ்தான் அவனிடம் டேய் என்னடா உன் ஆளோட டிரிமா என்று நக்கலாக கேட்க அவன் ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தான். சரி போனில் யார்? என்று மஸ்தான் கேட்க அவன் நாநா தான் டா. நாளைக்கு எல்லாரும் இந்தியா வராங்கலாம் என்றவுடன் சரி மச்சி அப்ப இன்னிக்கு நைட் சென்னைக்கு கிளம்பிறியா? இல்ல டா அவங்களே வந்து விடுறாங்க சொல்லிட்டாங்க. சரி டா.
.
.
.
.
.

மலேசியா.....

   நாளைக்கு நாமே இந்தியா போறோம் ஸோ சீக்கிரம் கிளம்புக என்று குழந்தை போல் குதித்து கொண்டு இருந்தார் இப்ராஹீம். 13 வருஷத்துக்கு அப்புறம் நம்ம சொந்த ஊர் போறோம் என்று தன் மனைவி முஸ்திரி யிடம் மகிழ்ச்சியுடன் கூறினார்.

    டேய் அமீர் சீக்கிரம் எல்லாத்தையும் பேக் பண்ணு அம்மா அஸ்மா நாளைக்கு எடுத்துட்டு போறதுக்கு எல்லாமே ரெடி பண்ணிட்டியா என்று தன் மகன் மருமகளை அதட்டி கொண்டு இருந்தார்.

    அல்லாஹீ அக்பர் அப்பா நாளைக்கு போறதுக்கு ஏன்பா இன்னிக்கு உயிர எடுக்கிறிங்க என்று செல்லமாக கண்டித்தார் மகள் ஃபரிதா. விடு ஃபரிதா அப்பா சந்தோஷத்தில் இருக்கிறார் என்றார் அஸ்மா. நீங்க என்னிக்கு என் அம்மா அப்பாவை விட்டு கொடுத்து இருக்கிங்க அண்ணி என்று செல்லமாக திட்டினார் ஃபரிதா

   ஏய் என் மருமகளை எதுக்கு திட்டுற? என்று முஸ்திரி தன் மகளிடம் சண்டை போட அம்மா விடுங்க ஃபரிதா என்கிட்ட தானே விளையாடுறா. பாபி நம்ம பசங்க எப்படி இருக்காங்கலோ? இந்நேரம் நல்லா வளர்ந்து இருப்பாங்கள் அல்லவா. நிக்காஹ் முடிஞ்சிருக்கும் இந்நேரம். அப்படிதானே என்று ஃபரிதா கண்கலங்க கேட்டவுடன் அழுதுவிட்டார் அஸ்மா. இருவரையும் அணைத்து கொண்டு ஆறுதல் சொன்னார் முஸ்திரி. இதை பார்த்த கொண்டு இருந்த இப்ராஹீம், அமீர், பஷீர் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

 


ReplyQuote
ஷமீம் பானு
(@shameem-banu)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 88
10/09/2019 5:01 am  

❣️கோபம் 28 ❣️

சரிசரி வாங்க சாப்பிடுவோம் என்று பேச்சை மாற்றினார் பஷீர். பிறகு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். இவர்களின் சந்தோஷத்தை பார்த்த வாசு அவர்கள் வீட்டில் வேலை செய்பவர் மிக்க சந்தோஷம் அடைந்தார். அவர்கள் இதேபோல் என்றும் இருக்க கடவுளை வணங்கினார்.

ஏன்பா சுரையா நம்ம வீட்டு செல்ல பிள்ளை அவளை என்ன என்ன கொடுமை செய்தானோ உங்க புள்ள என்று ஃபரிதா ரஹீமை திட்டினார். இந்த மாதிரி நேரத்தில் நம்ம பேரன் பேத்தி நம்ம கூட இல்லாமல் கஷ்டமா இருக்கு என்று வருந்தினார் முஸ்திரி. உண்மை தான் அம்மி இன்ஷாஅல்லாஹ் நாம எல்லாரும் ஒன்னு சேருவோம் பாருங்க என்று அஸ்மா ஆறுதல் படுத்தினார்.

எனக்கு ஜாவித் ஃபரினா பற்றி கவலை இல்லை. ஏன்னா அவங்க பாதுகாப்பான இடத்தில் இருக்காங்க ஆனால் சுரையாவும் ரஸியாவும் தான் தப்பான இடத்தில் இருக்காங்க. அவங்களை எந்த அளவுக்கு கொடுமை படுத்தினானோ தெரியலை ரஹீம் என்று வருந்தினார் அமீர். விடு அமீர் அல்லாஹ் இருக்கான் அவன் எல்லாமே பார்த்துக்குவான் விடு என்று தோல் தட்டி விட்டார் பஷீர். சரி என்று வாசு நீயும் உன் குடும்பத்தேடு கிளம்பு நாளைக்கு நம்ம ஊர்க்கு போறோம் என்ற இப்ராஹீம் பார்த்து ஐயா நான் அங்கே வரவில்லை நான் இங்கே இருக்கிறேன். நீங்கள் மட்டும் போய்ட்டு வாருங்கள் என்றவுடன்

ஏன் பயப்படுகிறாயா? இல்...லை என்று தயக்கத்தோடு எனக்கு அங்கே யாரும் இல்லை நான் வந்து என்ன செய்ய போறேன். இங்கே இருந்தாலாது நம்ம வீட்டை பார்த்துட்டு இருப்பேன் என்றார். சரி விடுங்க அவனுக்கு நாம செலவு பண்றோம் என்ற கவலை என்று முஸ்திரி கூற வாசு திருதிரு என முழித்ததை பார்த்த பஷீர் ஏன் மாமா நாம எல்லாரும் ஒரே குடும்பமா தானே இருக்கோம்  அப்புறம் என்ன நீங்கள் அன்னிக்கி எங்களுக்கு அவ்வளவு பெரிய உதவி செய்ததால் தான் நாங்கள் இன்னிக்கி உயிரோடு இருக்கிறோம். இல்லையென்றால் நாங்கள் இறந்து இருப்போம் என்றார் இறுக மனதோடு

   இல்லை நான் அன்னிக்கி சின்ன உதவி தான் செய்தேன். ஆனால் ஐயா எனக்கு நிறையா செய்து இருக்கார். நான் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உதவி செய்தவர். அவருக்கு செய்யாமல் வேறு யாருக்கு நான் செய்வேன். இன்னிவரைக்கும் என் ரெண்டு பிள்ளைகளையும் ஐயா தான் படிக்க வைக்கிறார் என்று கூறினார் வாசு.

  சரிசரி பேசினது போதும் தொழுக போங்க என்ற முஸ்திரியின் குரலை கேட்டு அனைவரும் தொழ கிளம்பினர். இவர்கள் மூவரும் தொழுகை முடித்துவிட்டு அவர்கள் வேலையில் ஈடுபட்டனர்.
.
.
.
.
.

  சுரிமா நான் தொழுகைக்கு போய்ட்டு வரேன் கதவை முடிக்கோ என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு மசூதிக்கு கிளம்பினான். இவளும் தொழுகை செய்ய ஆய்தமானாள். தொழுது விட்டு தன் வேலைகளை செய்து கொண்டு இருந்தான்.

  சாகித் வெளியில் வேலைகளை முடித்துவிட்டு வருவதற்கு இரவு ஆகிவிட்டது. பிறகு இருவரும் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்து அமர்ந்தனர்.

  சாஹீ உங்ககிட்ட நான் ஒரு விஷயம் சொல்லனும் என்று அவனை பார்க்க அவனும் அவளை உற்று பார்த்து விட்டு ம்ம்ம் சொல்லுடி. அது நான் அடிக்கடி சொல்லுவேன் அல்லவா ஜரினா வை பார்த்தால் என் புப்பூ மகள் மாதிரி இருப்பானு. அவன் ம்ம்ம் ஆமாம் என்றவுடன். அவள் தான் என் புப்பூ மகள். அவள் மவுத் ஆகவில்லை. அதே மாதிரி என் சாச்சா பசங்களும் உயிரோட தான் இருக்காங்க. ஜாவித் ஃபரினா இருவரும் தான் என் தம்பி தங்கச்சி என்றவுடன் சாகித் அதிர்ந்தான்.

   என்னமா சொல்ற எப்படி உனக்கு தெரியும். என் புப்பூ பொண்ண தவிர வேறு யாரும் என்ன பூனை கூப்பிட மாட்டாங்க என்றவுடன் என்னது பூனையா 😲😲 என்று அவளை பார்க்க அவள் கண்ணை உருட்டி உருட்டி அது எனக்கு பூனைங்க என்றால் ரொம்ப பிடிக்கும் விய மாட்டேன் பூனையை பார்த்தால். அதனால் தான் அவள் என்னை பூனை சொல்லுவா. நாங்க ரெண்டு பேரும் ஒரே தட்டில் தான் சாப்பிடுவோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற அட்டூழியம் கொஞ்சம் நெஞ்சம் கிடையாது அவ்வளவு சேட்டை செய்வோம்.

   எங்கள் கூட சேர்ந்து ஜாவித் ஃபரினா நவாஸ் எல்லாரும் ஒன்னு சேர்ந்து வீட்டை ஒரு வழி பண்ணிடுவோம் என்று குழந்தையாகவே மாறிய தன்னவள் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான். ஆனால் அவன் அவள் கண்கலங்குவதை பார்த்தவுடன் ஏய் அம்மு விடு ஜரினா எங்கே போக போறா இங்க தானே இருக்க போறாள் என்று அவளுக்கு ஆதரவாக பேசி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

  சாகித் சுரையாவின் கையை தன் கையில் அடக்கி சுரிமா நான் ரொம்ப லக்கி. நீ எனக்கு அல்லாஹ் கொடுத்த பொக்கிஷம். உன்னை என் மனைவியாக கிடைத்ததுக்கு நான் அல்லாஹ் கிட்ட நன்றி சொல்லாத நாளே இல்லை என்று அவன் பேசிக்கொண்டு இருக்க சுரையா அவன் கண்ணத்தில் முத்தமிட்டு அவன் மடியில் படுத்து கொண்டாள்.

   அவள் செய்ததில் உறைந்தான் சாகித். பிறகு தெளிந்து கொண்டு அழகாய் ஒரு புன்னகை சிந்திவிட்டு சுரையாவை பார்த்தான். அவள் நன்றாக உறங்கியவளை தலையை வருடி விட்டான். பிறகு அவளின் தூக்கத்தை கெடுக்காமல் மெல்ல தூக்கி கொண்டு அறையில் அவளை சரியாக படுக்க வைத்துவிட்டு வீட்டின் கதவுகளை முடிவிட்டு தன்னவளை அணைத்து கொண்டு உறங்கினான். இருவரும் நன்றாக உறங்கினர்.
.
.
.
.
.

(குறிப்பு : இந்தியாவை விட இரண்டு மணி நேரம் முன் மலேசியா...)

    ஏய் சீக்கிரம் கிளம்புங்க பிளைட் டைம் ஆயிடுச்சு. மணி இப்பவே 4 .6 மணிக்கு பிளைட் சீக்கிரம் என்று எல்லாரையும் அதட்டி கொண்டு இருந்த இப்ராஹீம் பார்த்து இவ்வளவு சொல்றிங்களே நீங்கள் முதல்ல கிளம்பினிங்களா? என்று கேட்ட தன் மனைவியை பார்த்து ஈஈஈஈஈ இதோ கிளம்பி விடுகிறேன் என்று சிரித்த படி சென்றார் இப்ராஹீம். பிறகு அனைவரும் கிளம்பி ஏர்போர்ட் சென்றனர்.  சென்னை செல்வதற்கான பிளைட் ஏறினர்.

   இந்தியாவின் நேரம்படி அதிகாலை 7.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தனர். பிறகு அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து கொண்டு சொந்த ஊர் வந்து சேர்ந்தனர். பேருந்து நிலையத்தில் நவாஸ் காத்து கொண்டு இருந்தான்.

    இவர்கள் வருவதை பார்த்தவுடன் அஸ்ஸலாமு அலைக்கும் என்று அவர்களை வரவேற்று கொண்டு திரும்பிய போது ஜாபர் மேல் மோதினான் நவாஸ். அவன் ஸாரி ஸாரி வேரி ஸாரி என்று அவரிடம் மன்னிப்பு கேட்டான். அவனும் சரி பரவாயில்லை விடுங்க என்று எதர்ச்சையாக அனைவரையும் பார்த்தார். அமீர் அவரை அடையாளம் கண்டு கொண்டார். அதேபோல் ஜாபர் அடையாளம் கண்டு கொண்டார். இருவரும் கண்ணீரோடு டேய் அமீர் என ஜாபரும் ஜாபர் என அமீரும் கட்டி தழுவினர்.

   அனைவரின் கண்களும் கலங்கின.  பிறகு அப்பா எப்படி இருக்கிங்க? அம்மா நீங்க எப்படி இருக்கிங்க? ஃபரிதா நீ எப்படி மா இருக்க ? நீங்கள் எல்லோரும் உயிரோட தான் இருக்கிங்களா? வாங்க நாம வீட்டுக்கு போவோம் என்று அழைக்க அவர்கள் நாங்கள் வரவில்லை என்று மறுக்க அவர்களை கட்டாயப்படுத்தி தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
.
.
.
.
.

   சாகித் சுரையாவிடம் நான் தான் இன்னிக்கு சமைப்பேன் என்று சமையலறை சென்று சப்பாத்தி செய்வதற்கு தயார் செய்து கொண்டு இருந்தான். சுரையாவும் சமையல் மேசையில் அவன் செய்வதை ரசித்து கொண்டு இருந்தாள்.

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே
நான் உனை பார்கிறேன் அன்பே.....
சாரலாய் ஓர் முறை நீ எனை தீண்டினாய்
உனக்கது தெரிந்ததா அன்பே....
என் மனம் கானலின் நீர் என ஆகுமா
கைகளில் சேருமா அன்பே
பேசிக்கும் காலம்தான் வீணென போகுமா  
நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே

  அவன் மாவை பிசைந்து விட்டு. சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்தான். சிறிது நேரத்தில் சமையல் முடித்துவிட்டு இருவரும் சாப்பிட அமர்ந்தனர். அவன் செய்தது அவ்வளவு ருசியாக இருந்தது. அவள் மாஷா அல்லாஹ் சூப்பரா இருக்கு சாஹீ என்று கூறிக்கொண்டு சாப்பிட தொடங்கியவளை ரசித்து கொண்டே சாப்பிட்டான் சாகித்.
.
.
.
.
.
ஜாபர் அவர்களை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். பிறகு இன்னும் ஒரு விஷயத்தையும் சொன்னவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நம் சுரையாவோட தாத்தா பாட்டி சித்தி சித்தப்பா அத்தை மாமா என்று சொன்னவுடன் உண்மையாகவே அதிர்ந்துதான் போனார்கள்.

   இவர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி. எங்கே என் பேத்தி என இப்ராஹீம் கண்ணீரோடு கேட்க அவர்கள் அனைவரும் அமைதியாக தலை குனிந்து நின்றனர்.

   அப்போது சுரையா சுரையா என்று ரஸியா அழைத்து கொண்டு உள்ளே நுழைய வாம்மா என்ன விஷயம் என்று கேட்க சுரையா எங்கே என்றவுடன் மக்மூதா நடந்ததை கூற ரஸியா கடுங்கோபம் கொண்டு உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா ச்சி என்று விட்டு அவள் சுரையாக்கு போன் செய்தாள். லவுட் ஸ்பீக்கர் ஆன் செய்தாள்.

   சுரையா போனை எடுத்து சொல்லு ரஸியா என்றவுடன் சுரையா காலையில் போலீஸ் வந்து நம்ம அம்மா அப்பா அரஸ்ட் பண்ணிட்டாங்க நம்ம குடும்பத்தை கொன்றவங்க இவங்க தான் கண்டு பிடித்து விட்டார்கள் என்றவுடன் நான் தான் ரஸியா சொன்ன அது பெரிய கதை என்றவுடன் நீதான் அரஸ்ட் பண்ண சொன்னியா? என்று அதிர்ச்சி உடன் கேட்க ஆமாம் என்ன கொஞ்சம் லேட்டா பண்ண சொன்ன பரவாயில்லை என்று சொல்ல ரஸியா ஆமாம் இப்போது நீ எங்கே இருக்க? என்று கேட்க அவள் என் வீட்டில் தான் இருக்கேன் என்றாள்.

   பொய் சொல்லாத சுரையா. உண்மை நம்பு. நான் உன் மாமியார் வீட்டில் தான் இருக்கேன். எனக்கு எல்லாம் தெரியும் மக்மூதா தீதி(அக்கா) சொல்லிடாங்க என்றவுடன் சரி ஒரு நிமிஷம் அப்படியே ஜாபர் சாச்சா கிட்ட லவுட் speaker  போட்டு கொடு என்றவுடன் ஏன் என்று கேட்டவளை கொடு என்று அதட்ட அவள் அவரிடம் கொடுத்தாள்.

   அவர் வாங்கி கொண்டு சொல்லு சுரையா என்றவுடன் சாச்சா எனக்கு என் நிக்காஹ் அன்னிக்கே தெரியும் நீங்க என் சாச்சா அமீரோட பேஸ்ட் பிரண்டு. உங்ககிட்ட இதைப்பற்றி பேசலாம் நினைப்ப பட் நீங்க என்னை கண்டுக்காம போய்டுவிங்க. நானும் விட்டுயுவேன். நான் உங்கள் கூடவும் என் சாச்சா கூட தான் அதிகமா இருப்பேன் நான் எப்படி உங்களை மறப்பேன் உங்க நண்பனை கொன்றவங்க இப்போது ஜெயிலில் இருக்காங்க அங்க போய் அவங்களை உண்டு இல்லை பண்ணுங்க இப்போது போனை ரஸியா கிட்ட கொடுக்கும் என்றவுடன் ரஸியாவிடம் கொடுத்தார் ஜாபர்.

   அவள் வாங்கி கொண்டு சொல்லு சுரையா இப்போது நீ நேராக கிளம்பி ஜரினா ஜாவித் ஃபரினா மூன்று பேர்கிட்டயும் இந்த விஷயத்தை சொல் என்றவுடன் இப்போது எதுக்கு அவங்க என்று கேட்டவளை ஜரினா தான் டி நம்ம புப்பூ பொண்ணு. ஜாவித் ஃபரினா இரண்டு பேரும் நம்ம சாச்சா பசங்க டி என்றவுடன் சுரையா உண்மையாகவா சொல்ற என்றவளை ஆமாம். சரி சுரையா இப்பவே போறேன் என்று போனை கட் செய்தாள்.

   ஆமாம் ரஸியா உனக்கு கோபம் இல்லையா உன் அக்கா மேல் என்று ஜாபர் கேட்க அவள் சுரையா செய்தது 100% கரேக்ட் என்று கூறிவிட்டு சென்றாள்.

   அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றனர்.

 


ReplyQuote
Page 3 / 4
Share: