Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

நின் உச்சிதனை முகர்ந்தால் - Tamil novel  

Page 3 / 5
  RSS

Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
01/06/2020 5:18 pm  

அத்தியாயம் 24

 

தேடி வந்த தேவதை

தான் கோபத்தில் அமர்ந்திருக்க, விமானப்பெண் தந்த உணவை ரசித்து ரசித்து உண்டு கொண்டிருந்த நிவியை கண்டு, "நீ இப்போ எதுக்கு உன் பிஹெச்டி ப்ராஜெக்ட்டை அப்படியே போட்டுட்டு என் கூட வர்ற நிவி?" என்று எரிச்சலுடன் கேட்டான் ராஜாராம்.

 

"ஹான் நீங்க வேற பிரிவு, சூசைட், அது இதுன்னு பேசிட்டீங்க.. எனக்கு வேற பயமாகிடுச்சு.. அதான் ஒரே ஊர்ல இல்லைனாலும் ஒரே நாட்டுலயாவது இருக்கலாம்னு தான் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உங்க கூட வந்துட்டேன்" என்றதும் அவளை உறுத்து விழித்தவன்,

 

"நீ என் பேச்சை கேட்கவே மாட்டியா நிவி?" என்று கேட்க,

 

சாப்பிட்டுக் கொண்டே "கேட்க மாட்டேன்.." என்று தலையாட்டியவள்,

 

"நான் உங்க பேச்சை கேட்கணும்னா சீக்கிரம் என் கழுத்துல மஞ்சக் கயிறை கட்டி மூணு முடிச்சிடுங்க" என்று சொல்லவும், தானும் அந்த ஏகாந்த தருணத்தையே எதிர்பார்ப்பவன் போல் கனவில் மிதந்தான் ராம்.

 

விமானம், டெல்லி விமான ஓடு தளத்தினை நலம் விசாரித்து வந்து நிற்கவும், நிவி டெல்லியிலிருக்கும் தன் சித்தப்பா வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வருவதாகக் கூறிவிட, அவன் மட்டும் சென்னை வந்தான்.

 

வந்தவன் தன் ப்ராஜெக்டை பற்றி பல இடங்களில் எடுத்துச்சொல்ல, யாரும் அவன் ப்ராஜெக்ட்டை கண்டு கொள்வதாய் இல்லை. ராம் உறுதியாய் நம்பியிருந்த அந்த ஜாண்டீஸ் டைஸ் என்ற மருந்து அவனின் நம்பிக்கையை ஆட்டம் காண வைத்தது.

 

அரசியல்வாதிகளில் இருந்து அறிவியலாளர்கள் வரை அவன் கண்டுபிடிப்பின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்திருந்தாலும், அதை சந்தையில் அறிமுகப்படுத்தினால் கண்டிப்பாக ராம் எதிர்பாராத வளர்ச்சியை அடைவான் என்று கருதி அவனை அடியிலேயே தட்டிவைக்க முயன்றனர்.

 

'தூரத்தில் இருப்போரின் திறமை வியக்க வைக்கும், அருகில் இருப்போரின் திறமை பொறாமை படவைக்கும்' என்னும் வரிகளுக்கு சான்றுகளாய்  விளங்கினார்கள் அந்த அற்ப புழுக்கள்.

 

ராம் கண்டுபிடித்திருக்கும் ஜாண்டீஸ் டைஸ் ஆனது மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் ஒரு அரியவகை மருந்து. அவன் கண்டுபிடிப்பானது மருத்துவத்துறைக்கு மிகப்பெரியதொரு வரப்பிரசாதம்.

 

நம் நாட்டில் இதுவரையிலும் மஞ்சள் காமாலைக்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் அதை குணப்படுத்தும் சிறந்த மூலிகையாக கீழாநெல்லி கூறப்படுகிறது. அறிவியலில் உள்ள நானோ தொழிற்நுட்பத்தின் மூலம் நாம் ஒரு மூலிகையின் எந்த ஒரு பகுதி, நோயை குணப்படுத்த வல்லது என தெரிந்து கொண்டு, அதை மட்டும் தகுந்த கரைப்பானின் மூலம் கரைத்து, அதன் கட்டமைப்பை தெரிந்து கொண்டு, செயற்கையாகவும் அந்த மருந்து மாத்திரையை உருவாக்கலாம்.

 

கீழாநெல்லியில் முந்நூறுக்கும் மேற்பட்ட கூறுகள் இருப்பதால், கீழாநெல்லியின் எந்தப்பகுதி மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறதென்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் கீழாநெல்லியை மொத்தமாய் உபயோகித்தால் மட்டுமே நோய் குணமாகிறது என்கிற முடிவிற்கும் வந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.

 

ஆனால் யாராலும் கண்டுபிடிக்க முடியாத கீழாநெல்லியின் அந்த சக்திவாய்ந்த பகுதியைத்தான் ராம் கண்டுபிடித்திருந்தான். அந்த முந்நூறு கூறுகளில் எந்த இரண்டு கூறுகளை மட்டும் சேர்த்தால் மஞ்சள் காமாலையை குணப்படுத்தலாம் என்பதையும் நானோ சயின்ஸ் தொழிற்நுட்பத்தின் மூலம் அறிந்திருந்தான் அவன். தனது அந்த கண்டுபிடிப்பின் மூலம் தான், தான் பெரிய நிலைக்கு வந்துவிடப் போவதாகவும் நிவியிடம் உறுதியாய் தெரிவித்திருந்தான். அதை நம்பி பெரும்கோட்டை கட்டி வைத்திருந்தவனுக்கு இப்போது பெரும் ஏமாற்றமாய் அமைந்தது நம் நாட்டிலுள்ள மெத்தனப்போக்காளர்களின் செய்கை.

 

டெல்லியிலிருந்து மதுரைக்கு வந்த நிவியை தங்கள் கல்லூரியிலேயே எம்பில் படிக்கச் சொல்லி, அவளின் தந்தை ராமச்சந்திரன் வற்புறுத்த, அவர் மீதிருந்த கோபத்தில் எதுவும் செய்யாமல், ராம் தன்னை தேடி வரும் நாளுக்காய் காத்திருந்தாள் நிவேதா.

 

இதற்கிடையில் அவளுக்கு திருமண வரன்களையும் பார்க்க ஆரம்பித்திருந்தார் ராமச்சந்திரன்.

 

அனைத்து இடங்களிலும் முட்டி மோதி தனது சம்பளமான இரண்டு லட்ச ரூபாயுடன் தன் வீட்டிற்கு வந்தான் ராம். அவனைப் பார்த்தவுடன், அவனை அடிக்கப்பாய்ந்தார் அவனின் தந்தை கதிரேசன். அவரை குறுக்கே புகுந்து தடுத்துப் பிடித்தான் ரகுராம்.

 

அப்போது ராஜாராமினைக் கண்ட மேகலாவிற்கு வியப்பாய் இருந்தது. அச்சு அசல் ஒரே போல் இருக்கும் தன் கணவனையும் அவனின் அண்ணனையும் கண்டு பிரமித்து நின்றாள் அவள்.

 

கோபத்திலிருந்த ரகுராமும், "ஏன்டா நீ ஒரு போன் கூட பண்ணல?" என்று கேட்க,

 

தன் நிலையை விளக்கி கூறினான் ராஜாராம். அதன் பின் தான் அனைவருக்கும் உண்மை விளங்கியது.

 

அவ்வேளையில் சுற்றி இருந்தவர்கள் அனைவரையும் பார்வையால் நலம் விசாரித்து வந்தவன், தன் தங்கை விஜிதாவை காணாமல் "விஜி எங்கே?" என்று கேட்க,

 

"அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையைத் தேடி போய்ட்டா?" என்றான் ரகுராம்.

 

"பிடிச்ச வாழ்க்கையா?" என்று குழப்பத்துடன் ராஜாராம் கேட்க,

 

"ஆமாம் தனஞ்செழியன் தான் இப்போது அவளது வாழ்க்கை" என்று மந்த குரலில் சொன்னான் ரகு.

 

கோபத்தில் உதட்டில் இழுபட்ட சிகரெட்டின் நுனிக்கங்குகளாய் மாறிய கண்களுடன்,

"நீ இதையெல்லாம் சும்மா கைகைட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றாயாக்கும்?" என்று வெடித்தான் ராஜாராம்.

 

"நானும் அரிவாளுடன் அவளைத்தேடி போனேன்டா.. அவ கல்யாணத்துல ஆணுக்கொரு நியாயம், பெண்ணுக்கொரு  நியாயமானு கேட்டா.. அவள் கேள்வியின் நியாயம் புரிஞ்சுச்சு, அதான் வெட்ட தூக்கிய அரிவாளை எட்ட வீசிவிட்டு, வீட்டிற்கு நடையை கட்டிவிட்டேன்" என்று கூறவும்,

 

"அவர்களிருவருக்கும் எப்படி பழக்கம்?" என்று கேள்வி ரேகைகள் முகத்தில் ஓடக் கேட்டான் ராஜாராம்.

 

"எல்லாம் இதன் புண்ணியம் தான்" என்று மேசையில் நித்திரையில் ஆழ்ந்திருந்த தொலைபேசியைக் காட்டியவன்,

 

"நம்ம பிஎஸ்சி பட்டமளிப்பு விழாவுல தான் நம்ம கண்ணுல மண்ணை தூவிட்டு, ரெண்டு பேரும் பார்த்து பேசி பழகிருக்காங்க" என்று சொல்லவும்,

 

"என்ன சமாதானம் சொன்னாலும் இதை என்னால ஏத்துக்கிறவே முடியலடா" என்ற ராஜாராமின் மனம் மட்டும் அவளின் திருமணத்திற்கு ஒப்பவே இல்லை.

 

ரகு திடீரென ஞாபகம் வரப்பெற்றவனாய், மேகலாவை தன் மனைவி என்று சொல்லி அறிமுகப்படுத்த, அவளைப் பார்த்து திகைத்துப் போன ராஜாராம், அவ்விரவில் தங்கள் வீட்டின் மொட்டைமாடிக்கு ரகுராமை அழைத்துச்சென்று, "இந்தப்பொண்ணு நிவேதாவோட ஃப்ரெண்ட் தானே?" என்று நினைவு கூர்ந்து கேட்க, ஆமாம் என்றான் ரகுராம்.

 

"இவளை நீ எப்படி?" என்று ராஜாராம் தடுமாற,

 

"டேய் உனக்கு நல்லது செய்யப்போய் நாங்க கல்யாணம் பண்ற மாதிரி ஆகிடுச்சிடா" என ரகு சொல்லவும்,

 

"புரியவில்லை" என புருவம் சுருக்கினான் ராஜாராம்.

 

"நீ அன்னைக்கு ஆடிட்டோரியத்துல நின்னு நிவேதாவை பார்த்தப்போ அவக்கூட சேர்ந்து இவளும் உன்னைத் தான்டா பார்த்தா. நீ லைப்ரரியன் மூலமா நிவேதாவை நெருங்க ட்ரை பண்றதா சொன்னப்போ, அவக்கூட சேர்ந்து இவளும் உன்னை லவ் பண்ணிட்டா என்னாகுறதுன்னு தான்டா எனக்கு மொதல தோணிச்சு. அதையே நான் உன்கிட்டயும் சொன்னேன். நீயும் ஆமாடா அதுக்கும் சான்ஸ் இருக்குன்னு இவளைப் பார்க்கும் போதெல்லாம் கண்டுக்காத மாதிரியே போன.. இவளும் சோகமா திரும்பி போனாளா, அதை பார்த்ததும் எனக்கு இவமேல ஒரு பரிதாபமாகிருச்சிடா.. அந்தப் பரிதாபமே நாளடைவில் காதலாவும் மாறிடுச்சு.. அதான் அவளுக்கு  உன் மேல இருந்த ஈர்ப்ப நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்" என்றதும்,

 

"அடப்பாவி! அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா என்னாகும்டா?" என்று தன் வாயில் கைவைத்தான் ராஜாராம்.

 

"தெரிஞ்சா தானே?.. நீயும் சொல்லாத, நானும் சொல்ல மாட்டேன்.. அவ்வளவு தான்.. எனக்கு அவ வேணும்னு தோணுச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளும் இப்போ உண்மையா என்னை லவ் பண்றாடா" என்று ரகுராம் பெருமையாக சொல்லவும்,

 

"அதெல்லாம் இருக்கட்டும், மொத உன் கல்யாணக் கதையைப் பத்தி சொல்லுடா" என்றான் ராஜாராம்.

 

"மொத நான் இவளை லவ் பண்ணினது ரவிச்சந்திரனுக்கு மட்டும் தான்டா தெரியும்.. நான் யாருக்கிட்டயும் சொல்லல.. ஏன் உன்கிட்ட கூட சொல்லல.. லைப்ரரிய விட்டு நாங்க ரெண்டு பேரும் ஒன்னா வெளியே வந்ததை பார்த்து தான் அவன் கூட எங்க காதலை தெரிஞ்சுகிட்டான்.. நான் செமஸ்டர் முடிஞ்சு நம்ம அப்பா அம்மாக்கூட போய் இவளை பொண்ணு கேட்கலாம்னு நெனச்சப்போ தான்டா இவளுக்கு மேரேஜ் ஆகப்போறதே எனக்கு தெரிஞ்சுச்சி."

 

"மருதுபாண்டியன்னு ஒருத்தன்.. ரொம்ப பயங்கரமா இருந்தான். என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ தான், கல்யாணத்தை நிறுத்த, ரெண்டு நாளைக்கு முன்னாடி, அவ ஊருக்கு பக்கத்து ஊரு தானே நம்ம தனாவோட ஊருன்னு அங்க போனேன்.. ஆனா, அங்க போனா தனாவோட அம்மா, நீ தான் நான்னு நெனச்சிக்கிட்டு ஏக போக வரவேற்பு.. இந்த தனாப்பய வேற அங்க இல்ல.. விஜியைப் பார்க்க இங்க வந்திருந்திருக்கான்னு இப்போ தான் எனக்குப் புரியுது.. அவங்க வீட்ல மேகாவோட ஒரு கல்யாணப் பத்திரிக்கை கிடைக்கவும், நானும் அதை கையில எடுத்து பாத்துட்டு அவங்கக்கிட்ட இந்த கல்யாணப் பொண்ணு தான் என் லவ்வர்னு சொன்னேன்.. அப்போ தான்டா அவங்க இது என் அண்ணா பையனோட கல்யாணப் பத்திரிக்கைன்னு சொன்னாங்க.. எனக்கு அப்போ தூக்கி வாரி போட்டுருச்சு"

 

"அப்புறம் அவங்களே எனக்கு உதவுறதாகவும் சொன்னாங்க.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. சினிமால வர்ற மாதிரி போராடி கல்யாணம் பண்றதெல்லாம் சாத்தியமா சொல்லு?.. பத்து பேரை புரட்டி எடுக்குறதெல்லாம் சினிமால தான் நடக்கும்.. ரியல்ல ரெண்டு பேரு சேர்ந்து வந்தாலே நம்மால தாக்கு பிடிக்க முடியாது.

மேகா அப்பா ஒருபக்கம், மருது பாண்டியன் ஒரு பக்கம்னு, நான் என்ன செய்வேன் சொல்லு?.. அப்புறம் தனஞ்செழியன் அம்மாவோட ஐடியாவால தான் நாங்க ரெண்டுபேரும் சேர்ந்தோம்" எனத் தன் முழுக்கதையையும் சொல்லி முடித்தான் ரகுராம்.

 

"ஓ அப்படியா!.." என கேட்டுக்கொண்ட ராஜாராமிடம், தாங்கள் பேங்கில் லோன் வாங்கி மேஜிக் ஷோ கட்டிடத்தை மீட்டதை பற்றி ரகுராம் சொல்ல, உடனே தன்னிடமிருந்த இரண்டு லட்ச ரூபாயையும் அவனிடம் தூக்கி கொடுத்தான் ராஜாராம்.

 

அதைப் பெற்றுக்கொண்ட ரகுராம் முக்கால்வாசியைக் கடனை அடைக்கவும், கால்வாசியை வீடுகட்டவும் பயன்படுத்தினான்.

 

நாள்போக்கில் எங்கு தேடியும் வேலை கிடைக்காமல், தன் சான்றிதழ்களைக் கொண்டு, ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியிலமர்ந்தான் ராஜாராம்.

 

அவன் வேலைக்குச் சேர்ந்து ஒருமாதம் கடந்த நிலையில், ஒரு நாள் இரவில், பத்துமணிக்கு அழைப்பு மணியின் சத்தம் கேட்டு, கதவு திறந்து பார்த்தான் ரகுராம்.

 

கதவு திறக்கப்பட்டதும் உடனே பாய்ந்து வந்து அவனை கட்டியணைத்து கொண்டாள் நிவேதா.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
02/06/2020 4:05 am  

அத்தியாயம் 25

 

காதலின் ஏழாம் நிலை

தன் கணவனை நிவேதா அணைத்திருப்பதை கண்டு பதறிப்போன மேகலா, "என்னங்க..!" என்று சத்தமிட்டு அழைத்தாள்.

 

அவளின் குரலில் உடனே நிவி அவளை எட்டிப்பார்க்க, அனைவரின் அறைக்கதவும் திறக்கப்பட்டது. ராஜாராமும் தன்னறையிலிருந்து வெளிவந்தான்.

 

ரகுராமையும் ராஜாராமையும் திரும்பி திரும்பி பார்த்த நிவேதா, ராஜாராம், "நிவி...!!" என்றழைத்ததும், ரகுராமை தள்ளிவிட்டு அவனருகில் ஓடிப்போய் நின்றாள்.

 

அனைவரும் திகைத்து நிற்கும் வேளையில் அவளிடம் என்னவென்று கேட்டான் ராஜாராம். தன் வீட்டில் தனக்கு திருமண நிச்சயம் செய்ய முயற்சித்ததாக சொன்னவள், இப்போதே என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றும் ஒற்றைக்காலில் நின்றாள்.

 

சுற்றி நின்ற அனைவரையும் ஒருமுறை பார்த்துக் கொண்ட ராஜாராம், "நிவி உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்.. உங்க அப்பா ரகுகிட்ட என்ன சொல்லி மிரட்டினாருன்னு.. என் குடும்பத்தையும் நான் பார்க்கணுமில்ல நிவி.. நாளைக்கே உங்கப்பா காசைக் கொடுத்து கூலிப்படையை எங்க மேல ஏவினாருன்னு என்னாகும் சொல்லு?" என்று கேட்க,

 

நிலைமையை புரிந்து கொண்ட ராஜாராமின் தந்தை கதிரேசன், நிவி பெரிய வீட்டுப்பெண் என்பதையும் அறிந்தவுடன், "டேய் ராஜா, அந்தப் பொண்ணு உன்னை நம்பி வந்திருக்காப்பா.. நீயும் வெளிய அனுப்புறாப்பலயே பேசினா எப்படி?.. நம்ம குடும்பத்த அவர் ஒன்னும் செய்ய முடியாது.. நாளைக்கு கோவில்ல கல்யாணத்தை முடிச்சுட்டு அப்படியே போலீஸ் ஸ்டேஷன்ல போய் அடைக்கலம் ஆகிடலாம்.. என்ன சொல்றீங்க?" எனக் கேட்கவும்,

 

ரகுராமிற்கும் தன் தந்தை சொல்வது தான் சரியென்று பட்டது.

 

"டேய் ராம் அப்படியே செய்யலாம்டா" என்றான்.

 

சில நிமிடங்கள் யோசித்த ராஜாராமும் சரியென்று கூறினான்.

 

தன் தோழி மேகலாவை அங்கு எதிர்பார்த்திராத நிவி, அன்றிரவு முழுவதும் அவளறையில் தங்கியிருந்து தானும் ராமும் ரஷ்யாவில் பழகியது முதல் காதலை பரிமாறிக்கொண்ட பின் இருவரும் ரஷ்யாவின் அழகை கண்டுகளித்தது வரை ஆர்வத்துடன் கூறி முடித்தாள். அவள் கல்லூரியில் நடந்தவை தவிர்த்து பழைய வரலாற்றையெல்லாம் புதுசு போலவே முலாம் பூசி கூறிக்கொண்டிருக்க, மேகலாவும் கடனே என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

சொன்னது போலவே மறுநாள் காலையில் கோவிலில் திருமணம் செய்து போலீஸ் ஸ்டேஷனில் சரண் புகுந்தவர்களை நோக்கி, ஆவேசமாய் தன் மனைவியுடன் உள்ளே நுழைந்தார் ராமச்சந்திரன்.

 

எல்லாம் நடந்து முடிந்த பிறகே அவர் அவ்விடம் வந்து சேர்ந்ததால், பின் எதுவும் செய்ய முடியாதவராய், கருத்துப்போன முகத்துடன் தன் மனைவியுடன் திரும்பி செல்ல எத்தனித்தார்.

 

பின் சற்று தூரத்தில் கழுத்தில் மஞ்சள் குளித்த தாலியும், முகத்தில் கண்ணீர் குளித்த கண்களுமாய் நின்றிருந்த தன் செல்லமகளைக் கண்டு ஆற்றாமையில், "நல்லாயிரு..!" என்று கைகளை உயர்த்தி கூறிவிட்டு வாயில் முந்தானையை பிடித்து அழும் தன் மனைவியுடன் திரும்பிச் சென்று விட்டார்.

 

அதைக்கண்டு கூடக்கொஞ்சம் கண்ணீர் ஓடவிட்டாள் நிவேதா.

 

இரவில் தங்கள் முதலிரவை கொண்டாட, நிவியை வெள்ளி நிலவின் கண்காணிப்பில், தென்றலும் பனியும் ஓடிப்பிடித்து விளையாடும்  தங்கள் மொட்டைமாடிக்கு அழைத்து வந்தான் ராஜாராம்.

 

தலைமாட்டில் டம்ளரின் துணையுடன் பால்நிரம்பிய சொம்பு வைக்கப்பட்டிருக்க, அதை மறுத்து நிலாப்பாலால் நிரம்பி, தேகம் மின்ன  அமர்ந்திருந்தவளை பார்வையால் பருகிய ராஜாராம், நிவியிடம் தன் பாதி தலையணையைக் காட்டி, 'படு நிவி...' என்றழைக்க, அவரின் தாராள உள்ளத்தில் மனம் சிணுங்கி ஊடல் கொள்ள நினைத்தவள், காது கேளாதவள் போல் அமர்ந்திருந்தாள்.

 

"ஹேய் நிவி..." என்று ஹஸ்கி வாய்ஸில் அழைத்து, அவள் திரும்பவில்லை எனவும், பின்னிருந்து அவளின் தோளில் முகம் புதைத்து, "நிவி..." என்றழைக்க, இப்போது அவளும், "ம்ம்ம்..." என்றாள் தனக்கே கேட்காத குரலில்.

 

ஆனால் அந்தக்குரல் ராஜாராமிற்கு கேட்டது போலும், அவளைத் தன் தலையணை நோக்கி சாய்த்தான். அவனின் ஜென்ம தேடலில் அவனிடம் சண்டை போட, மாலையில் தான் தேடி வைத்திருந்த காரணங்களையெல்லாம், வசமாய் மறந்து போய் அவன் வசமாகினாள் நிவேதா.  

 

வீடு திரும்பியும் நிவி தன்னை அவமானப்படுத்தி விட்டதையே யோசித்து கொண்டிருந்த ராமச்சந்திரன், தற்கொலை முயற்சியும் செய்ய, அவரின் மனைவி லக்ஷ்மி வந்து அதனை தடுத்தார். மகள் இல்லாமல் இருவரும் பித்து பிடித்தவர்கள் போலாகினர். என்ன என்னவென்று கேட்கும் தங்கள் உறவினர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர்.

 

……………………..

வருடம் 1995

இடம்: காஞ்சிபுரம்

திருமணமான இரண்டரை வருடங்கள் கழித்து புது வசந்தம் உண்டாக, கருத்தரித்தாள் நிவேதா. மனம் கேளாமல் அதனை அவள் தன் அன்னைக்கும் தொலைபேசியில் தெரிவித்தாள்.

 

தன் மனைவியின் நான்கு மாத வற்புறுத்தலால் நிவியின் ஏழாம் மாத வளைகாப்பில் கலந்து கொண்டார் ராமச்சந்திரன்.

 

வளைகாப்பு வெகு விமரிசையாக நடை பெற்றது. ராமின் தாயார் நிவியிடம், "உன் கையில இருக்க வளையல்ல ரெண்டை கழட்டி மேகலா கையில போடும்மா" எனவும், அவளும் அதுபோலவே செய்தாள்.

 

கடந்த நான்கு வருடமாக தான் செல்லும் ஒவ்வொரு வளைகாப்பிலும் தன் மாமியார் இது போலவே செய்வதால், மனதிலொரு சலிப்பு உண்டாக, வேண்டாவெறுப்பாக தன் கையை நிவியிடம் நீட்டி வளையலை வாங்கிக்கொண்டாள் மேகலா.

 

வளையலைப் போட்டுவிட்டு, "மேகா சீக்கிரம் நீயும் ஒன்னு ரிலீஸ் பண்ணனும் சரியா?" என வெள்ளந்தியாகச் சிரித்தாள் நிவி. அச்சிரிப்பில் தானும் வெக்கத்துடன் பங்கு கொண்டாள் மேகலா.

 

வளைகாப்பு விழாவை போட்டோ எடுத்த போட்டோ கிராஃபர், ராஜாராமிடம் நிவியின் சிசு தாங்கிய வயிற்றில் முத்தமிடுவது போல் ஒரு போஸ் கொடுக்கச் சொல்ல, ராஜாராமோ சற்று வெட்கப்பட்டுக் கொண்டே தன் வேட்டியை மடித்துக்கட்டி, அவளின் முன் முட்டிப் போட்டமர்ந்து அவளின் உந்திச்சுழியில் முத்தம் கொடுத்தார். அவ்வழகிய காட்சியைக் கண்டு அவர்களின் மேல் கண்வைத்தது கேமரா. உண்மையில் அந்நொடியில் அம்முத்தத்தில் நிவியின் உள்ளங்கால் வரை சிலிர்த்து அடங்கியது.

 

வளைகாப்பின் முடிவில், பிரசவம் வரை என் மகள் என் வீட்டில் தான் இருப்பாள் என ஆணை போல் தெரிவித்து விட்டு, அவளை தன்னுடன் மதுரைக்கு அழைத்துச்சென்றார் ராமச்சந்திரன்.

 

தன் மகள் ராணி போல் வாழ்ந்தவள் எனக்கூறி ஏழாம் மாதமே தன் மனைவியை தன்னை விட்டுப் பிரித்த தன் மாமனாரை மனதில் சபித்தபடியே வாரம் ஒருமுறை வந்து நிவியைப் பார்த்துச் சென்றான் ராஜாராம்.

 

அவ்வாறு அவன் வரும் போதெல்லாம் அவனை பார்க்கும் ராமச்சந்திரனின் பார்வை, அகோர பசியுடன் பாம்பை விழுங்கும் கழுகின் பார்வையாகவே இருக்கும்.

 

அதைக்கண்டு, 'ம்க்கும்..' என்று மனதிற்குள் நொடித்துக் கொள்ளும் ராஜாராம், "ஹேய் நிவி உங்கப்பாக்கிட்ட நான் அவரோட மருமகங்கிறதை கொஞ்சம் ஞாபகப்படுத்து.. என்னை என்னவோ பெரிய வில்லன் ரேஞ்சுக்கு பார்க்குறாரு" என்று அவள் மடியில் தலைவைத்த படியே குறைப்பட்டுக் கொள்வான். அப்போதெல்லாம் அவனை கொஞ்சி, சமாதானப்படுத்தி காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைப்பாள் நிவேதா.

 

இப்படியாக இனிமையாய் நகர்ந்து கொண்டிருந்த நாட்களில், ஒரு நாள் மதுரையின் புகழ் பெற்ற மருத்துவமனையிலிருந்து போன்கால் வந்தது ராஜாராமிற்கு. அதில் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலால் நிவி பெண் குழந்தையை ஈன்று விட்டு இறந்துவிட்டாள் என்ற செய்தி சொல்லப்பட, தன் காதிற்குள் ஆயிரம் தேள்கள் ஒரு சேர கொட்டியது போல் துடித்துடித்துப் போனவன், அந்நொடியில் வாழ்க்கையே வெறுமையாகிப் போன உணர்வில் மயக்கம் போட்டு விழுந்தான்.

 

நிவியின் இறுதிச்சடங்கில் இறுதியாய் அவள்முகம் காணும் தருணத்தில், "ஏன் என் கண்ல பட்ட?.. ஏன் என்ன காதலிச்ச?.. ஏன் என் வாழ்க்கையோட மொத்த சந்தோசத்தையும் இந்த ரெண்டரை வருஷத்துல எனக்கு காமிச்ச?.. இப்படி பாதியிலேயே என்னை விட்டு போகறதுக்குத்தானா?" என ஜீவனற்று கிடந்த தன் ஜீவியைப் பார்த்து மனதுள் கேட்டுக் கொண்டிருந்தான் ராஜாராம்.

 

கடவுளே! இந்த கெட்டக்கனவு சீக்கிரம் கலையக் கூடாதா? என்றிருந்தது அவனுக்கு.

 

நிவியின் மஞ்சள் பூத்த முகம் இன்று சாம்பல் பூத்துக் கொண்டிருக்க, உடன்கட்டை ஏற முயன்றான். உடனே தடுத்துப் பிடித்தார்கள் உடனிருந்தவர்கள்.

 

ராஜாராமின் ஆழ்ந்த தூக்கச் சிதைவுகளிலும் சிரித்து, இறந்து போன ஒருவார காலமும் அவனை பைத்தியமாகவே வைத்திருந்தாள் நிவி.

 

புது வீட்டிற்கு இடம் பெயர்ந்து வந்த செடியைப் போல், நிவி இல்லாத புது உலகில் மூச்சு விடவே கொஞ்சம் சிரமப் பட்டான் ராஜாராம்.

 

நிவேதா இறந்த இரண்டாம் வாரத்தில் அவளின் பெற்றோர்கள் எவ்வளவோ கேட்டும், என் குழந்தை தான் என் வாழ்க்கையின் பிடிப்பே  என்று கூறி அவளை தன்னுடனேயே தூக்கிவந்து விட்டான் ராஜாராம். அதன்பின் அவர்களும் டெல்லி சென்று விட்டனர்.

 

வாழ்க்கையே வெறுத்துப் போன உணர்வில் கிடந்தவனை, பின் அவன் வீட்டில் உள்ளவர்கள் தான் தேற்றி ஆறுதல் படுத்தினர். தன் குழந்தையைப் பார்த்தும் மெது மெதுவாய் மனம் தேறினான் அவன். அப்பெண் குழந்தைக்கு அனைவரும் சேர்ந்து சுஹாசினி என்றும் பெயரிட்டனர். மேகலாவே தாயாய் மாறி அவளை அரவணைத்துக் கொண்டாள்.

 

சுஹாசினிக்கு தாயில்லை என்ற குறையை போக்க மேகலா அவளை பார்த்துக் கொண்டாலும், நாளைக்கு அவளுக்கு அவளுடைய அம்மா இறந்துவிட்டாள் என்ற உண்மை தெரியக்கூடாது என்பதற்காக, வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து ரகுவையே அவளிடம் அப்பா எனவும் சொல்லி வளர்த்தனர்.

 

இதன் விளைவால் தன் மகள் தன்னை பெரியப்பா என்றழைப்பது, உள்ளே கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அவளின் நன்மைக்காக அதனை பொறுத்துக் கொண்டான் ராஜாராம்.

 

சில நேரங்களில் தங்களின் உருவ ஒற்றுமையை பயன்படுத்தி ரகுராம் போல் நடித்து, அவளை தன்னை அப்பா என அழைக்குமாறும் கூறுவான்.

 

அப்படி அவள் அவனை அப்பா என்று அழைக்கும் போதெல்லாம் அவனின் ஆன்மா குளிர்ந்து கண்ணில் மகிழ்ச்சியில் கண்ணீர் பொங்கும். அவள் கொஞ்சம் நிவேதாவின் சாயலையும் கொண்டிருந்ததால் அவனுக்கு அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலவும் தோன்றும். தள்ளியிருந்தே தன் மகளை தர்ம தரிசனம் செய்வான்.

 

இப்படியான நிலையில் கயிரறுந்த பட்டமாய் காலமும் கட்டற்று பறந்தது.

 

ஒவ்வொரு வயதிலும் தன் மகளின் வளர்ச்சியைக் கண்டு பூரித்து போனான் ராஜாராம்.

 

சுஹாசினிக்கு எட்டு வயதிருக்கும் போது தான் அனைவரின் வாழ்வையும் திருப்பி போடும் அச்சம்பவம் நிகழ்ந்தது.

 

துயரச் சம்பவங்களுக்கு பிள்ளையார் சுழி போடும் விதமாய் பிணியில் விழுந்தார் ராஜாராமின் அன்னை.

 

அவருக்கு பண்டுவம் பார்க்கவே தன் மொத்த ஊதியத்தையும் செலவிட்டான் ராஜாராம். இதில் மொத்த குடும்பமும் சாப்பாட்டிற்கு ரகுராமின் மேஜிக் ஷோவையே நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு வேறு தள்ளப்பட்டது.

 

மரணப்படுக்கையில் கிடந்த ராம்களின் தாய், தன் கணவன் தன் பெயரில் வாங்கிய அந்த மேஜிக் ஷோ கட்டிடத்தை சரிபாதியாக தன் மகன்கள் இருவரின் பெயரிற்கும் எழுதி வைத்துவிட்டார். தன் முடிவை முன்கூட்டியே அறிந்திருந்தார் போலும்.

 

தன் தாயின் நிலையை அறிந்ததும் தன் கணவனுடன் அவரைப் பார்க்க ஓடோடி வந்துவிட்டாள் விஜிதா. தன் அன்னையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை அறிந்தவள், திரும்பிச்செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கிவிட்டாள். இதில் மேலும் ஒரு சுமை ஏற்றப்பட்டது ரகுராமின் முதுகில்.

 

ஆகும் செலவை சமாளிக்க சில நேரங்களில் ரகுராமின் மேஜிக் ஷோவில் ஒரே சாயலை கொண்ட அண்ணன் தம்பி இருவரும் கூட சேர்ந்து வந்து சில வித்தைகளை காட்டினர்.

 

இவர்களின் கெட்ட நேரத்திற்கு மக்கள் அனைவரும் ஒரேடியாக சினிமாகொட்டகையை நோக்கி படையெடுக்க, இவர்களின் மேஜிக் ஷோவானது முற்றிலுமாய் முடங்கி போய் ஈ ஓட்டிக் கொண்டிருந்தது.

 

அப்போது தான் ஒருநாள் சுஹாசினி தனது பக்கத்து வீட்டிலுள்ள நண்பர்களுடன் சேர்ந்து வந்து, "மேஜிக் செய்யுங்க டேடி" என்றாள்.

 

ரகுராமும் தனக்கு தெரிந்த சிறிய சிறிய வித்தைகளை செய்துகாட்ட, குழந்தைகள் அனைவரும் கைகொட்டி சிரித்தனர். அந்த வித்தைகளின் முடிவில்  அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் சுஹாசினி.

 

அதில் தந்தையானவனுக்கு பொறாமை உண்டாக, "அப்படி உங்க டேடி என்ன செஞ்சிட்டானு நீ அவனுக்கு முத்தமாரி பொழியுற குட்டிம்மா?" என்று ராஜாராம் கேட்க,

 

"ம்ம்?.. உன்னால என்னை மாதிரியே எல்லாரையும் சிரிக்க வைக்க முடியுமாடா?.. நீயும் என்னை மாதிரியே எல்லாரையும் சிரிக்க வச்சா, குட்டிமா உனக்கும் முத்தம் குடுப்பா.. இல்லடா குட்டிம்மா?" என ரகுராம் கேட்கவும்,

 

அவளும் ஆமென தன் தெத்து பற்களை காட்டி தலையாட்டிச் சிரித்தாள்.

 

ரகுராம் விளையாட்டாய் சொல்லியதை சீரியசாய் எடுத்துக்கொண்ட ராஜாராம், மறுநாளே அதற்கான ஏற்பாடுகளுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

 

"நேத்து வந்த உன் ஃப்ரெண்ட்ஸை இன்னைக்கும் கூட்டிட்டு வா குட்டிம்மா" என்றவன் சொல்லவும், சுஹாசினியும் அனைவரையும் கூட்டிக்கொண்டு வந்தாள்.

 

அவளை அவர்களுடன் அமர வைத்துவிட்டு, "டேய் ரகு! நீ ஓரமா நில்லு!" என்றவன்,

 

இவன் அப்படி என்ன செய்யப்போகிறான் என ரகுராம் ஓரமாய் நின்று பார்த்திருக்கும் போது, முதலில் கார்ட்டூன் பொம்மைகளை குழந்தைகளிடம் காட்டினான் ராஜாராம். அவர்களும் அதையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அவர்களின் கைகளில் பொம்மையை கொடுத்து பார்க்கச்செய்தவன், தன் மூக்கை மட்டும் கர்ச்சீஃப்பால் கட்டிக்கொண்டு, தன் பையிலிருந்து கலர் கலர் திரவங்களை வெளியில் எடுத்து கலக்கினான். அவன் எதிர்பார்த்த படியே நிறமற்ற திரவம் ஒன்று கிடைக்கப்பெற்றதும், அதை அங்கிருந்த டேபிள் பேனின் பக்கம் காட்டி, அதிலிருந்து வரும் புகையை குழந்தைகள் புறம் திசை திருப்பினான். அதை சுவாசித்த சிறுவர் சிறுமிகள் அனைவரும் காரணமில்லாமல் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

 

அதில் உடனே அத்திரவத்தை ஒரு மூடி போட்டு மூடி, தான் கொண்டு வந்த பெட்டிக்குள் வைத்துவிட்டான் ராஜாராம்.

 

இரண்டு நிமிடங்கள் வாய்விட்டு சிரித்த குழந்தைகள், பின் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலையை அடைந்தனர். அதைக்கண்ட ரகுராமிற்கு ஆச்சரியமாய் இருந்தது.

 

நேற்று ராஜாராம் தன் ஒரு குழந்தையின் முத்தத்திற்காக ஏங்கிப்போயிருக்க, இன்று அனைத்துக் குழந்தைகளும் ஒடி வந்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து அகன்றனர்.

 

சுஹாவும், "தான்க்யூ பெரியப்பா" என அவன் கன்னத்தில் முத்தமிட, அதில் தான் நோபல் பரிசு பெற்றது போலவே உவகை கொண்டான் ராஜாராம்.

 

அக்கணம், "டேய் இது?.. இது?.." என ரகுராம் தான் எங்கோ படித்த ஒன்றை நினைவு கூற முயன்றான்.  

 

"ஆமாடா, இது நைட்ரஸ் ஆக்ஸைடு தான்.. சிரிப்பூட்டும் வாயு.. நேத்து எல்லாரையும் சிரிக்க வைக்க முடியுமான்னு கேட்டியே.. இன்னைக்கு எப்படி குலுங்கி குலுங்கி சிரிக்க வச்சேன் பாத்தியா?" என்று சிரிக்கும் சுஹாவை பார்த்து, அவன் தன் காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் வேளையில் தான், அந்த குரூர யோசனை உதயமானது ரகுராமின் மூளைக்குள்.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...

 


ReplyQuoteShivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
02/06/2020 4:08 am  

Comments please 😊


ReplyQuote
Madhu Mita
(@madhumita)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 12
02/06/2020 6:00 am  

@sai-shivani achooo... Enna plan potu irukkan Raguram,,😱😱😱😱


ReplyQuote
Madhu Mita
(@madhumita)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 12
02/06/2020 6:01 am  

@sai-shivani next update kku waiting


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
02/06/2020 9:36 am  

அத்தியாயம் 26

 

சில்லென்ற காற்றின் அலை

 

நைட்ரஸ் ஆக்ஸைடை பற்றித் தெரிந்த மறுநாள் முதலே தன் திட்டத்தை செயல் படுத்த தொடங்கினான் ரகுராம். அதில் அனைத்து மக்களும் கூட்டம் கூட்டமாக அவனின் மேஜிக் ஷோ நடைபெறும் இடத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

 

அதில் அவ்விடமே தினம் தினம் திருவிழாக்கோலம் பூண்டது. கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வர, ஊழியர்கள் அனைவரும் டிக்கெட் கொடுக்க முடியாமல் திணறினர்.

 

டிக்கெட் கொடுக்கும் இடத்தில் அமர்ந்திருந்த ராஜாராம், வந்த முகங்களே மீண்டும் மீண்டும் ஷோவிற்கு வர, அதில் சந்தேகம் கொண்டு, ஒருநாள் ஷோ நடைபெறும் போது இடையில் வந்து பால்கனியில் நின்று ஷோவை கவனித்தான்.

 

எப்போதும் போல் ஆரம்பித்த மேஜிக் ஷோவில் திடீரென ரகுராம் நின்றிருந்த மேடைக்கு மேலிருந்த உட்புற ஜன்னலிலிருந்து காற்றடிக்க ஆரம்பிக்க, அவ்வேதி காற்றை சுவாசித்த மக்கள் அனைவரும் காரணமின்றி சிரிக்கவாரம்பித்தனர்.

 

அதிலிருந்து தொடங்கி அடுத்தடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு ஒருநிமிடம் என்ற கணக்கில் மென்மையான நறுமணம் பரவ ஆரம்பிக்க, யோசிக்கும் திறனை இழந்த மக்கள் அனைவரும் களிப்பில் கிடந்தனர்.

 

எப்போதும் போல் ஷோ முடிவுபெற மக்கள் அனைவரும் இயல்பு நிலையை அடைய பத்து நிமிடம் எடுத்தது. ஷோவின் முடிவில் ராஜாராமிற்கும் உண்மை புரிந்து போனது.

 

கோபத்துடன் வேகமாய் ரகுராமின் உடை  மாற்றும் அறைக்குள் நுழைந்தவன், "டேய் எவ்வளவு பெரிய தப்பை பண்ணிக்கிட்டு இருக்கத் தெரியுமா?.. நைட்ரஸ் ஆக்ஸைடு எவ்ளோ பெரிய டேஞ்சரஸான கேஸ் தெரியுமா?" என்று அவனின் சட்டையைக் கொத்தாக பற்ற,

 

"என்னடா டேஞ்சரஸ்?, அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஒரு மாசமா இத வச்சு தான் நான் மக்களை இங்க வர வச்சிக்கிட்டு இருக்கேன்" என்று லாபமே நோக்கமாக பேசினான் ரகுராம்.

 

அவனின் பதிலில் கோபமுற்று, "ஹேய் முட்டாள், நீ வர வச்சிக்கிட்டு இல்லடா.. எல்லாரையும் அடிமையாக்கிட்டு இருக்க.." என்றபடி பல்லைக் கடித்தான் ராஜாராம்.

 

"அடிமையாவா?" என்று வியப்புடன் வினவியவனிடம்,

 

"ஆமாடா.. அடிமையாத்தான் ஆக்கிக்கிட்டு இருக்க.. இப்போ இங்க வர்றதெல்லாம் புதுசா மேஜிக் ஷோ பார்க்கணுங்கிற ஆசையில் வர்றவங்க இல்ல.. ஏற்கனவே வந்தவங்க தான் திருப்பி திருப்பி வர்றாங்க" எனவும்,

 

"ஆமா அதுக்கென்ன?" என்று சலித்து கொண்டான் ரகுராம்.

 

"அதுக்கென்னவா?.. நைட்ரஸ் ஆக்ஸைடு புத்துணர்வு தரக்கூடிய வாயு தான்.. அதுல எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்ல. ஆனா கொகெயின், ஆல்கஹால் மாதிரி இதுவும் மனுஷனை அதுக்கு அடிமையாக்குற ஒரு போதை மருந்துடா.. மூளைய மழுங்கடிச்சி யோசிக்கும் திறனை குறைக்கும்டா.. இதை தொடர்ந்து சுவாசிக்கிறதுனால நுரையீரல் பாதிக்கப்படுறது மட்டுமில்லாம வைட்டமின் பி12 குறைபாடும் வரும்டா.. இப்போ மெடிக்கல் பீல்டுல இத தான் மயக்க மறந்தாவும் யூஸ் பண்றாங்க" என்று ராஜாராம் அவனுக்கு புரியவைக்கும் நோக்கில் சொல்லி முடிக்கவும்,

 

"ப்ச் அதுனால என்னடா?.. மூளையை மழுங்கடிச்சி மொத்தமா எல்லாத்தையும் மறக்க செய்யுற மதுவையே நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடுன்னு ஸ்டிக்கர் ஒட்டி, அரசாங்கமே கடை வச்சு விக்கிது.. இதெல்லாம் தப்பில்லைங்கும் போது நான் பண்றது மட்டும் தப்பாடா?.. போடா" எனத்தன் கையிலிருந்த கிளவுஸை கழற்றுவதிலேயே குறியாயிருந்தான் ரகுராம்.

 

"மது கொஞ்சம் கொஞ்சமாத்தான் கொல்லும்.. ஆனா இது கொன்னா மொத்தமா கொல்லும்டா" எனவும்,

 

"மொத்தமா கொல்லுமா?.. எப்படி?" என பயந்து போய் கேட்டான் ரகு.

 

"எப்போ இந்த கேஸை உட்கார்ந்து சுவாசிக்கிற எல்லாரும் தொடர்ந்து ஒரு பதினைந்து நிமிஷம் எழுந்து நின்னு சிவியரா சுவாசிக்கிறாங்களோ, அப்போ அவங்க சுவாக்கிற ஆக்சிஜன் அவங்க மூளைக்கு போகாது.. ஸ்பாட்லயே எல்லாரும் இறந்து போயிருவாங்க.. ரொம்ப அபாயம்டா இது" என எச்சரிக்கவும்,

 

அப்போதும், "ஓஹோ! எல்லாரும் எழுந்து நின்னா தானே ஆபத்து?.. நீயே பாத்தல்ல? மொத்த ஷோவுலயும் எல்லாரும் உட்கார்ந்து தானே இருக்காங்க.. ஒன்னும் ஆகாதுடா.. இதை நீ யார் கிட்டயும் சொல்லாத அவ்வளவு தான்" என்றதோடு அடுத்த ஷோவிற்கு அவன் தயாராக.

 

"இப்போ அந்த நைட்ரஸ் ஆக்ஸைடு கேஸ் டேங்கை லீக் பண்ணி ஃபேனை ஆன் செய்யுறது  யாருடா?" என்று வேகமாய் வெளியே கிளம்பியவனை நிறுத்திக்கேட்டான் ராஜாராம்.

 

"நம்பிக்கையான ஒருத்தன் தான்..." என்றவனின் பதிலில்,

 

திருப்தி கொள்ளாமல், "யார்?" என்று சந்தேகமாய் கேட்டான் ராஜாராம்.

 

"வேற யாருமில்ல, நம்ம தனஞ்செழியன் தான்" என்றவன் சொல்லவும், அவனை கோபமாய் முறைத்துப்பார்த்தான் ராஜாராம்.

 

"டேய் அவன் மேல ஏன்டா கோபப்படுற?.. விஜிதாவும் தானே அவனை லவ் பண்ணிருக்கா?.. விஜிதா தான்டா அவனுக்கு வேலை இல்லைன்னு ஏதாவது வேலை வாங்கி கொடுக்க சொன்னா.. அதான் நானும் என்கூடயே அவனை சேர்த்துக்கிட்டேன்"  எனவும்,

 

"எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லாவே இரு..." என்றபடியே இருவரும் பேசிக்கொண்டே வெளியே செல்ல,

 

இவ்வளவு நேரமும் அவர்களிருவரும் பேசுவதை ஒளிந்திருந்து ஒற்று கேட்டுக் கொண்டிருந்த  தனஞ்செழியன், அர்த்தத்துடன் புன்னகைத்துக் கொண்டான்.

 

அவனுக்கு தாங்கள் தங்கள் ஊரிலிருக்கும் போது, தன் வீட்டிற்கு காதுகுத்து பத்திரிக்கை வைக்க வந்த மருதுபாண்டியன் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் ஞாபகம் வந்தது.

 

தன் வீட்டின் மாடத்தில் நின்றிருந்தவனின் தோளில் கை போட்ட மருது, "என்னடா மாப்புள, எப்படி இருக்க?.. ம்ம் என் கல்யாணத்தைதேன் அத்த வந்து நிறுத்திட்டாகன்னு பார்த்தா, உன் கல்யாணத்தையும் பொண்ணு சின்னப்புள்ளன்னு சொல்லி கலைக்க பாத்தாகளாமேடா?!, அதத்தான் என்னால தாங்கிக்கிற முடியல.. ஆமா? உன் மச்சான்மாருக என்ன சொல்றாய்ங்க?.. ஏதாவது வம்பு பண்ணினா சொல்லு மாப்புள, நம்ம ஊருக்காரய்ங்களோட வந்து முடிச்சு வுட்றலாம்" என்று கூறி அவனை ஆழம் பார்த்தான்.

 

அதற்கு தனஞ்செழியன் அமைதியாக இருக்கவும், தைரியம் பெற்று, "சரி அதவிடு.. நீ வேலை இல்லாம கிடக்கன்னு அத்த சொல்லுச்சி.. ம்ம் நல்ல குடும்பத்துலயிருந்து பொண்ணெடுத்திருந்தா அவிங்களே வரதட்சணையா எல்லாம் குடுத்து தொழிலும் அமச்சு குடுத்துருப்பாய்ங்க.. இப்போ பாரு ஒன்னுமில்லாம இருக்க.. ரெண்டு புள்ளைக பொறந்தாச்சு.. பொழைக்கப்பாரு மாப்புள" என்று அவனை தூண்டிவிட்டு போக, அவனும்  தன் மாமியார் உடம்பு சரியில்லாமல் கிடப்பதை சாக்காக வைத்துக்கொண்டு காஞ்சிபுரம் வந்து ஏதாவது வாங்கிச் செல்லலாம் என நினைத்து வந்தான்.

 

ஆனால் ரகுவோ வேலை பார்த்தால் தான் சோறு என்பது போல, அவனைக் காற்று வீச வைத்து விட்டான். அதில் கொதித்துப் போயிருந்தவன் இப்போது அவர்களிருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டு தனக்கான நேரம் வந்துவிட்டதென, தன் மீசையை நீவி விட்டுக்கொண்டான்.

 

ரகுராம் தனக்கு கொடுத்த வேலையை கௌரவக் குறைச்சலாக நினைத்த தனஞ்செழியன், ரகுவை பழிவாங்க, ஒருநாள் நைட்ரஸ் ஆக்ஸைடு இருக்கும் டேங்கை லீக் செய்து விட்டு, அனைத்து கதவுகளையும் இறுக்கி பூட்டியபடியே மொத்த விளக்கையும் அணைத்து விட்டான்.

 

அனைவரும் இருட்டில் எழுந்து நின்று, "என்னாச்சு?.. என்னாச்சு?" என்று கூச்சலிடத் தொடங்கினர்.

 

அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு வெளியேற முடியாத சூழலில், காற்றில் மிதந்து வந்த நைட்ரஸ் ஆக்ஸைடை அனைவரும் சுவாசித்தனர்.

 

என்ன நடந்ததென முதலில் குழம்பிப்போன ரகுராம், மேடையின் மூலையிலிருந்த திரையை விலக்கி சுரங்கப்பாதைக்குள் நுழைந்து, அனைத்து விளக்குகளையும் எரியச்செய்து, மின்விசிறியையும் அணைப்பதற்குள் அனைத்தும் நிகழ்ந்து முடிந்திருந்தது.

 

ஓடிப்போய் நைட்ரஸ் ஆக்ஸைடு டேங் லீக்கேஜை நிறுத்தியவன், கீழே வந்து மேடையின் திரையை விலக்கிப்பார்த்தான்.  

 

சிலர் மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல், அடைப்பு உண்டாகி சிரித்துக்கொண்டே மண்ணில் வீழ்ந்து உயிரை விட்டிருக்க, பலர் சிரித்துக்கொண்டே பெருமுயற்சி எடுத்து கதவு திறந்தனர்.

 

ராஜாராம் சொன்னது ஞாபகம் வர, இவனும் "கதவை திறந்து வெளியே போங்க!.. வெளியே போங்க!" என்று கத்தினான்.

 

அவன், "காத்தோட்டமான இடத்துக்கு போங்க!" என்றும் கத்த, அதில் ஒரு சில உயிர்கள் தப்பிப் பிழைத்தன.

 

இச்சம்பவம் நடந்து முடிந்த முப்பது நிமிடத்திற்குள்ளாகவே போலீஸ் ஆம்புலன்ஸ்களுடன் அவ்விடம் வந்து சேர, பிழைத்தவர்கள் அனைவரும் ரகுராமின் மீது மாஸ் கொலை முயற்சி என கம்ப்ளைன்ட் கொடுத்தனர்.

 

அங்கு வேலைப்பார்த்த அனைவரையும் கைது செய்து ஒரே சிறையில் அடைத்த போலீசார், மேஜிக் ஷோ உரிமையாளர்கள் என்ற பெயரில் ராஜாராமையும் சேர்த்து கைது செய்தனர்.

 

சிறையில் ராஜாராமை கண்டதும் அவனைக் கட்டிப்பிடித்து கதறினான் ரகுராம். அதற்கு எவ்வித எதிர்வினையுமின்றி அசையாமல் நின்றான் ராஜாராம்.

 

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஐந்நூறு  சடலங்களும் அவர்களின் மேஜிக் ஷோ கட்டிடத்திற்குள்ளாகவே புதைக்கப்பட்டது.

 

சிறையில் தங்களைக் காண வந்த மேகலாவிடம் ராஜாராம், தனது நண்பன் ரவிச்சந்திரன் சென்னையில் வழக்கறிஞனாக இருப்பதாகவும், போனில் நிலைமையை விளக்கிக்கூறி அவனை இங்கு வரச்செய்யுமாறும் கூற, அவளும் அவன் கூறிய எண்ணை நினைவு கொண்டு அதன்படியே செய்தாள்.

 

காஞ்சிபுரம் வந்த வக்கீல் ரவிச்சந்திரனால் ராஜாராமை மட்டுமே வெளியில் எடுக்க முடிந்தது.

 

ரகுவிற்கு எதிராய் இருந்த ஆதாரங்கள் அனைத்தும் வலுவாய் இருக்க, ரவிச்சந்திரனால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

 

இருப்பினும் தன் மனசாட்சிக்கு விரோதமாய் வாதாடி வந்தார். அதனை ராஜாராமிடமும் தெரிவித்தார்.

 

அவர் கூறியதையே யோசித்த ராஜாராமின் மனசாட்சியும், "இறந்தவர்கள் அனைவரும் ஒன்றுமறியாத அப்பாவிகள், இந்த தப்பிற்கு ரகுராமிற்கு கண்டிப்பாய் தண்டனை கிடைத்தே ஆக வேண்டும், அப்போது தான் இறந்தவர்களின் குடும்பத்தில் இருப்போருக்கு நியாயம் கிடைத்ததாகப்படும்" என்று அவனுக்கு எடுத்துரைத்தது.

 

ஆகையால் மறுநாள் கோர்ட்டில் வாதாடும் முன் ரவிச்சந்திரனை தனிமையில் சந்தித்த ராஜாராம், "வாதாடும் போது ரகுவுக்கு இந்த ஆக்சிடெண்ட்டை உண்டாக்குற மோட்டிவ் எதுவுமில்லைங்கிற மட்டும் விளக்கிச்சொல்லு, மத்தபடி அவனுக்கு என்ன தண்டனை கிடைக்குதோ கிடைக்கட்டும்.. ஏன் தூக்கு தண்டனை கிடைக்குமானாலும் கிடைக்கட்டும்.. நீ ரொம்ப போராடாதே" என்று கூறினான்.

 

ராஜாராம் கூறுவதின் அர்த்தம் புரிந்த வக்கீல் ரவிச்சந்திரனும் அவன் சொல்படியே செய்தார். அதன்படி முடிவில் அனைத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் ரகுராமிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

 

மேகலா அவ்விடத்திலேயே மயக்கம் போட்டு விழ, தன் தந்தையையும் தாயையும் பார்த்து தானும் வீறிட்டு அழுதாள் சுஹாசினி.

 

கடைசி ஆசையாய் தன் மனைவி மகளுடன் பேச வேண்டும் என ரகுராம் விருப்பம் தெரிவிக்க, அவனை தூக்கிலிடும் நாளிற்கு முன்பாகவே அதற்கென ஒருநாளும் முடிவு செய்யப்பட்டது.

 

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்ததும் ஒதுக்குப்புறமான இடத்திற்கு வக்கீல் ரவிச்சந்திரனை அழைத்து வந்த ராஜாராம், கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக கோர்ட்டில் தங்கள் சார்பாக வாதாடியதற்காக, அவர் வாங்க மறுத்தும் தான் தன் கல்லூரியில் வேலையை ரிசைன் செய்ததற்காக பெற்ற பிஎப் பணத்தை கொடுத்தான்.

 

தன் குடும்பத்தையும் பார்க்க வேண்டிய சூழலிலிருந்த ரவிச்சந்திரனும் அவன் வற்புறுத்தி கொடுக்கவும் வாங்கிக்கொண்டார்.

 

இதை கதிரேசனும் அவரின் கையிலிருந்த ஒன்பது வயதுக் குழந்தையான சுஹாசினியும் பார்த்து விட்டனர்.

 

அந்த வயதிலும் தானாகவே தன் பெரியப்பாவும், வக்கீலும் சேர்ந்து தான், தன் தந்தையை கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என தனக்கு தெரிந்த அளவு யூகித்துக் கொண்டாள் சுஹாசினி.

 

வீட்டிற்கு வந்ததும் கதிரேசன் ராஜாராமை மாடிக்கு அழைத்துச்சென்று, "ஏன்டா?, அவனை நீ காப்பாத்துவன்னு பார்த்தா, நீயே அவனுக்கு எமனா மாறி நிக்கிறியேடா?" என்று ஆத்திரமாய் கேட்க,

 

ராஜாராம், "அப்பா…!!" என்று சொல்லி அவர் அருகில் வந்தான்.

 

நில்லென்று தன் கையை உயர்த்தி காண்பித்தவர், "கோர்ட்டில் அந்த வக்கீல் இன்னைக்கு திறமையா வாதாடுனதையும் பாத்தேன், நீ அவன் திறமைக்கு சன்மானமா ஆயிரம் ரூபா கட்டுக்களை தூக்கிக் கொடுத்ததையும் பாத்தேன்" என்று ஏளனமாக கூறவும்,

 

ஒருநொடி விக்கித்து நின்ற ராஜாராம், "அவன் செஞ்சிருக்குறது மிகப்பெரிய தப்புப்பா.. காலேஜ் படிக்கும் போது இதே மாதிரி வடநாட்டில் நடந்த ஒன்னுக்கு மக்களுக்கு நியாயம் கிடைக்கலைன்னு மூச்சிரைக்க பேசினவன்பா நான்.. இப்போ நானே அந்த தப்புக்கு துணை போகலாமா?.. சொல்லப்போனால் இதில் என் மேலயும் தப்பிருக்கு.. நான் முன்னாடியே அவன்கிட்ட இதை செய்யாதேன்னு உறுதியா சொல்லி தடுத்திருக்கனும்.. செய்யாம விட்டுட்டேன்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென கீழே போக, அவன் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மௌனத்தில் தியானித்தார் கதிரேசன்.

 

அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்த மேகலாவின் அழுகைக்குரல் காலையில் ஹை வால்யூமில் வெளிவர, அனைவரும் என்னவென்று ஓடிவந்து பார்த்தனர்.

 

திருமணமாகி பதினைந்து வருடங்கள் கழித்து, தலைப் பிரசவத்தில் தான் பெற்றெடுத்த மகன்கள் இருவருமே தனக்கு கொள்ளியிட வேண்டும் என்று ஆசைப்பட்ட கதிரேசனின் மனைவி லக்ஷ்மி தான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தார்.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...

அத்தியாயம் 27

கண் நிறைந்த காதலன்

தன் அன்னையின் இறப்புச் செய்தியை அறிந்ததும் போலீஸ் பந்தோபஸ்துடன் தன் அன்னையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டான் ரகுராம்.

 

ராஜாராம் ரகுராம் ஆகிய இருவருக்கும் அனைவரின் முன்னிலையிலும் தலைமுடி மழிக்கப்பட்டது.

 

அந்நேரத்தில் "இன்னைக்கு நீ கொள்ளி வைக்கிற.. நாளைக்கு உனக்கு நாங்க கொள்ளி வைக்கனுமாடா" என்று கதறி அழுதார் ரகுவின் தந்தை.

 

இருவரும் சேர்ந்து தங்களின் அன்னையின் சிதைக்கு எரியூட்டியவுடன், மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டான் ரகுராம்.

 

ரகுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற மேகலாவையும் சுஹாசினியையும் அவன் சந்திக்க ஏற்பாடு செய்தனர் சிறையதிகாரிகள்.

 

அவனைக்காண அழுதழுது கருப்பு அப்பிய கன்னங்களும், சிவந்த விழிகளுமாய் ஒடிசலான உருவத்துடன் வந்தாள் மேகலா.

 

அவனைப் பார்த்ததும் சிறைக்கம்பியைப் பிடித்து கதறியவளின் கைமேல் தன் கையை வைத்தவன், "மேகா எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக்குடுப்பியா?" என்று

கேட்க,

 

தன்னை கைவிட்டுப் போகப்போகிறவனை நினைத்து அழுகையை கைவிட்டாளில்லை மேகலா.

 

துக்கத்தில் தொண்டை அடைபட்டவனும் இடம், பொருள், நேரம் கருதி "நான் இறந்ததுக்கப்புறமும் உன் கழுத்துல தாலி தொங்கனும்னு ஆசைப்படுறேன்.. நீ என் அண்ணன் ராஜாராமை கல்யாணம் செஞ்சுக்குவியா மேகா?" என்று கேட்க,

 

அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள், கண்களை மூடிக்கொண்டு, "சரி அவரை நான்  கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ஆனா போலீஸ் கிட்ட சொன்ன மாதிரியே என்கிட்டயும் பொய் சொல்லாம, இந்த விபத்துக்கு முழுக்காரணம் யாருன்னு சொல்லுங்க" என்று கேட்டாள்.

 

பெரு மூச்சொன்றை  வெளியிட்ட ரகுராம், அன்றைக்கு அந்த விபத்து நடந்ததற்கு காரணம் தனஞ்செழியன் தானென்று நடந்த அனைத்து உண்மையையும் கூற, அதைக்கேட்டு குருதிக் கொதித்துப் போனவள், "இப்போவே நான் போய் அந்த ராஸ்கல உள்ளத்தள்ளுறேனா இல்லையான்னு மட்டும் பாருங்க" என்று வீறு கொண்டு கிளம்பினாள்.

 

"நில்லு மேகலா..!" என்ற ரகுராமின் அதட்டலில் நின்று திரும்பி பார்த்தவள்,

 

"என் மேல சத்தியம்.. இனி நீ இந்த விஷயத்த பத்தி யாருக்கிட்டயும் பேசக்கூடாது.. சுஹாவிற்காக என் அண்ணனை நீ கல்யாணம் பண்ணிக்கனும், அவ்வளவு தான்.. ஆமா சுஹா எங்கே?" என்று கேட்க,

 

கண்ணீரில் பளபளத்த விழிகளுடனேயே வெளியே சென்றவள், ராஜாராமின் அருகில் உட்காரப் பிடிக்காமல் அவனுக்கு எதிரேயிருந்த சேரில் அமர்ந்திருந்த சுஹாசினியை தூக்கிக்கொண்டு உள்ளே வந்தாள்.

 

தன் தந்தையைப் பார்த்ததும் உற்சாகமான சுஹாசினி, "டேடி!.. டேடி!.. எப்போ வெளிய வருவீங்க நீங்க?.. அந்த பப்லு இல்ல? உங்களை இங்க உள்ள வச்சே கொன்னுருவாங்கன்னு சொல்றான்.. அப்படியெல்லாம் இல்லை தானே டேடி?.. நீங்க வந்துருவீங்க தானே?" என அந்த சிட்டு 'ஆமென்று சொல்லுங்கள்' என தான் பொம்மை கேட்டு அடம்பிடிப்பது போல் அடம்பிடிக்க,

 

இவ்வளவு நேரமும் எமனை எதிர்கொள்ள தயாராய் நின்றிருந்த ரகுராம், இப்போது என்ன சொல்வதெனத் தெரியாமல் நனைந்த கண்களுடன், "ஆமாடா குட்டிம்மா டேடி வந்துருவேன்.. எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன்" என்றுவிட்டு சிறைக்கம்பியை பிடித்திருந்தவளின் இருவிரல்களைப் பிடித்து முத்தமிட்டான்.

 

பின் மேகலாவிடம் திரும்பி, "குழந்தைய நல்லாப் பாத்துக்க.." என்று மட்டும் சொல்லி விட்டு, இருவரையும் கண்களில் நிரப்பியபடியே உள்ளே சென்றுவிட, அதன் பின் மேகலாவால் தான் தன் விம்மலை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

சொன்ன நாளில் சட்டம் தன் கடமையைச் செய்ய ரகுராமின் உடலும் வீடுவந்து சேர்ந்தது.

 

அதன்பின் அந்த மேஜிக் ஷோ கட்டிடத்திற்கு அருகிலேயே அவனின் உடலையும் அடக்கம் செய்தனர் அவனின் குடும்பத்தினர்.

 

ரகுராமின் இறப்பிற்கு பிறகு அவனின் ஆசையை நிறைவேற்ற, ராஜாராமும் மேகலாவும் ரிஜிஸ்டர் ஆஃபிஸில் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

 

கதிரேசனுக்கு அந்தத் திருமணத்தில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாததால் அதற்கான எதிர்ப்பை தெரிவிக்க நினைத்தவர், தன் பேத்தியை அதற்காக ட்யூன் செய்தார். ஆனால் மேகலாவோ தன் முடிவில் உறுதியாய் இருந்தாள்.

 

தன் தந்தையின் விருப்பத்தை பொருட்படுத்தாத ராஜாராமும், பெற்றோரின் சொத்தில் பெண் குழந்தைகளுக்கும் பங்குண்டு என்பதால், தங்களின் காஞ்சிபுர வீட்டை விஜிதாவிற்கு எழுதி கொடுத்துவிட்டு, எவ்வளவு கெஞ்சியும் தன்னுடன் வரமறுத்த தன் தந்தையை விஜிதாவிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, தன் மனைவி மகளுடன் சென்னை நோக்கி பயணமானான்.

 

சென்னை வந்தவனுக்கு வீடு பார்த்து கொடுத்து வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தந்தார் ரவிச்சந்திரன்.

 

அவர் தான் தன்னுடைய வருங்கால மாமனார் என்றறியாத சுஹாசினியோ அவரை ஏதோ பூதத்தை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள். அவளை பொறுத்தவரை தன் தந்தையின் இறப்பிற்கு நேர்மை தவறிய அவரும் ஒரு காரணம்.

 

ஆனால் அவளை பெண் பார்க்கும் படலத்தின் போது மட்டும் எங்கே தன் மனதில் உள்ளதை வெளியே முகத்தில் காட்டி விட்டால் அவரின் வீட்டிற்குள் நுழைய முடியாதோ? என்று சிந்தித்தவள் அவரைப்பார்த்து சிரித்து வைத்தாள்.

 

மறுமணம் ஆனதிலிருந்தே அடிக்கடி ரகுவை நினைத்து அழும் மேகலா, ராஜாராம் ஆறுதலாய் தொட்டால் கூட பதறி விலகினாள். அவரின் முகம் பார்த்து பேசக்கூட தயங்கி, ஒதுங்கி போனாள்.

 

ஒருநாள் ராஜாராமே அவளிடம், "எனக்கு அப்படியொரு எண்ணமில்லை மேகலா.. என் மனதில் நிவி இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள்" என்றவுடன் தான் அவளின் மனதிலிருந்த பெரும் பாறாங் கல்லொன்று ஆற்று மணலாய் கரைந்து போனது போலானது. அதன் பின் தான் அவருடன் இயல்பாய் பேசவும் ஆரம்பித்தாள்.

 

உறங்க, உண்டு, உடுக்க பிரச்சினை இல்லை எனினும் வாழ்க்கையில் ஒருபடி முன்னேறிப்போக நினைத்த ராஜாராம், வேலை நேரம் போக மற்ற நேரங்களில் தன் கண்டுபிடிப்பை எடுத்துக்கொண்டு மறுபடியும் வீதி வீதியாய் அலைய ஆரம்பித்தார்.

 

ஒரு நாள் ரவிச்சந்திரனிடம், "எனக்கு ஒரு பத்து லட்ச ரூபா இருந்தா போதும்டா.. சின்ன அளவுல நானே புது கெமிக்கல் ஃபேக்டரி ஒன்னு ஆரம்பிச்சிருவேன்.. அதுல டேப்லெட்சும் ப்ரொடியூஸ் பண்ணிருவேன்" என்று சொல்ல,

 

ரவிச்சந்திரனும், "உன் வீட்டை நீ உன் தங்கைக்கு கொடுக்காமல் இருந்திருந்தாலும் உனக்கு இப்போ அது கொஞ்சம் உதவியா இருந்திருக்கும்.. ம்ம் என்ன செய்ய?.. நானும் நாலு இடத்துல பணம் கேட்டு பார்க்குறேன்டா" என்றதும் தான், ராஜாராமிற்கு அந்த யோசனை உருவானது.

 

"டேய் விஜிதாவுக்கு எங்க அப்பா அம்மா சொத்துல பங்கிருக்குனா, மேகலாவிற்கும் அவளோட அப்பா சொத்தில் பங்கிருக்கும் தானே?.. நாளைக்கே நீ அவங்க வீட்டுக்கு நோட்டீஸ் ஒன்னு அனுப்புடா.." எனவும்,

 

ரவிச்சந்திரனோ கொஞ்சம் தயங்கி,  "எதுக்கும் நீ மேகலா கிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கோடா" என்றார்.

 

"தேவையில்லை.." என்றபடியே சமையலறையில் இருந்து வெளியே வந்த மேகலா,

 

"சுஹாவோட எதிர்காலத்தை நெனச்சு தான் அவரு ரொம்ப கவலைப்படுறாரு.. அந்தக்கவலை எனக்கும் இருக்கு.. அவர் சொல்றபடியே செய்யுங்கண்ணா" என்றாள்.

 

கோர்ட் உத்தரவின் மூலம் பெறப்பட்ட மேகலாவின் சொத்தை விற்ற ராஜாராம், தனது தயாரிப்பான ஜாண்டீஸ் டைஸ் மருந்தின் மூலம் ஐந்தே வருடங்களில் எதிர்பாராத உச்சத்தை அடைந்தார்.

 

தகுந்த எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய, மேலும் பல வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலையாகவும் அதனை மாற்றியமைத்தார்.

 

ஆனால் யாருக்காக அவர் இந்தளவு உழைக்கிறாரோ பாடுபடுகிறாரோ, அவளோ தன்னுடைய பதின்ம வயதின் தொடக்கத்தில், "என் டேடிய நீதானே கொன்ன?.. அவரோட சாவுக்கு நீ தானே காரணம்?.. நீ தான் அந்த  சிரிப்பு மருந்தை என் டேடிக்கு காட்டின.. உன்னால தான் அவர் செத்தாரு.. நீ அந்தாளுக்கு பணம் கொடுத்து அப்பாவை தூக்கில போட சொன்னது எனக்கு நல்லா ஞாபகமிருக்கு.. நீதான் எல்லாத்துக்கும் காரணம்.. மாம் இந்தாள நம்பாதீங்க.. வாங்க நம்ம தனியா போயிடலாம்.. நம்ம மேஜிக் ஷோ நடக்குற இடத்துக்கு போவோம் அங்க தான் நம்ம டேடி இருக்காரு.. வாங்க" என்று கதறி தீர்த்தாள்.

 

அவளின் கதறலை கருத்தில் எடுக்காத மேகலா, "அவர் அப்படிப்பட்டவர் இல்லை சுஹா.. அவர் உன்னோட அப்பா.. நீ நெனக்கிறதெல்லாம் தப்புடா" என்று அவளை ஆறுதல் படுத்த முயன்றார்.

 

அதில் கொஞ்சமும் ஆறுதல் கொள்ளாத சுஹாசினி தனது பதினாறாம் வயதில், அந்த மேஜிக் ஷோ இடத்திற்கு போகவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றாள்.

 

அதற்கு ஒத்துக்கொள்ளாத மேகலா, அந்த இடத்தை சுற்றிலும் தன் ஆட்களின் மூலம் பலத்த பாதுகாப்பு செய்திருந்தார். அதனால் அவளாலும் அங்கு தனித்து போக முடியாமல் போனது.

 

ராஜாராமுடன் இருக்கும் வீடு சூன்யமாய் தெரிய, வீட்டிலிருக்க பிடிக்காமல் வெகுநேரம் வெளியிலேயே சுற்றித் திரிந்த சுஹாசினி, கனவில் வரும் தன் தந்தையின் பிம்பத்தை அழிக்க முடியாமல் குடிப்பழக்கத்திற்கும் ஆளானாள்.

 

இது தெரிந்து ராஜாராம் அவளை தனியே சந்தித்து கண்டிக்க, "நீங்க யாரு எனக்கு?.. நீங்க சொல்றதெல்லாம் என்னால கேட்க முடியாது.. நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன்.. யூ ஆர் நாட் மை பயோலஜிகல் ஃபாதர்" என்று மேலும் மேலும் அவரை கோபப்படுத்த எண்ணி, வேண்டுமென்றே அவருக்கும் தன் அன்னைக்கும் பிடிக்காததையெல்லாம் செய்ய ஆரம்பித்தாள்.

 

சுஹாவின் வாடிக்கையை தெரிந்து கொண்ட தனஞ்செழியன், மேகலாவின் பெயரில் உள்ள சொத்தைக் கணக்கிட்டு, சுஹாசினியை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தான்.

 

அதன் தொடக்கமாய் அவளிடம், ஆட்டை வெட்டும் முன் அதனிடம் பரிவு காட்டும் கசாப்புகாரனாய் பாசமாய் பேசி, ராஜாராமின் மீதுள்ள கோபத்தை இன்னும் கொஞ்சம்  தூண்டிவிட்டான்.

 

தனஞ்செழியன் சுஹாவை நெருங்க முயற்சிப்பதை தெரிந்து கொண்ட ராஜாராம், உடனே அதனை மேகலாவிடம் தெரிவித்து, அவளுக்கு அர்ஜுனுடன் திருமணம் பேசி முடித்து விட்டார்.

 

ஆனால் அர்ஜூனோ அவரையே தேசத் துரோகியென கைது செய்து சிறையில் அடைத்துவிட்டான்.

 

………………………..

 

வருடம் 2020

இடம் : சென்னை

அடை மழைக்கால மேகமாய் அவ்வப்போது தன் மனதில் தூறும் நினைவுகளால் நனைந்து கொண்டிருந்த மேகலா, இப்போது ராஜாராம் வரைந்திருந்த நிவேதாவின் ஓவியத்தையும் அவரின் கையெழுத்தையும் கண்டு டைரியை அப்படியே கட்டிலில் போட்டு விட்டார்.

 

தன் கணவன் ரகுராமினால், தான் ஏமாற்றப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டு அச்செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் தேம்பி தேம்பி அழுதார் மேகலா.

 

தன் வீட்டில் தனக்கு வேறு ஒருவனுடன் திருமண ஏற்பாடு நடக்கிறதென காஞ்சிபுரம் வந்த நிவியிடம், அன்றிரவே தான் பல கேள்விகளை கேட்டிருந்தால், பல உண்மைகளை அன்றே கண்டுபிடித்திருக்கலாமோ? என தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டவர்,

 

"குற்ற உணர்ச்சியினால் தான் கடைசியா அவரோடவே என்னை சேர்த்து வச்சிட்டீங்களா?" என ரகுராமின் போட்டோவை பார்த்து கதறி தீர்த்தார்.

 

மேகலாவின் வரலாற்றை எழுதச்சொன்னால் நாம் இரண்டே வார்த்தையில் எழுதி விடலாம் கண்ணீர்! கண்ணீர்! என்று.

 

சோகத்திலேயே ஏமாற்றத்திலேயே ஒரு வாழ்க்கை அவருக்கு.

 

வாழ்க்கை இப்படித்தான் பலரின் வலிமையை வளைத்துப் பார்ப்பதற்காகவே வஞ்சித்து விடுகிறது.

 

அதையும் தாண்டி முன்னேறுபவர்களின் கழுத்தை தான் வெற்றி என்னும் மாலை அலங்கரிக்கிறது.

 

மேகலா வாசிக்க விரும்பாத டைரியின் பக்கங்களை அவளறையில் இருந்த காற்று வாசிக்க விரும்பியது போலும், பக்கங்களை பட படவென புரட்டியது.

 

ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் இருந்த வரியை கண்டு தானும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய காற்று, "இந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை சாமி.." என ஜன்னல் வழியே தப்பியோடிவிட்டது.

 

அப்பக்கத்தில் இருந்த வரிகள், "மேகலா ஐ லவ் யூ".

 

………………….

இங்கு சுஹாசினியின் அறையில், இப்போதே அந்த டைரி வேண்டுமென்று கீழே இறங்கியவனின் கையைப் பிடித்து, மேலே இழுத்து வந்த சுஹாசினி, "இப்பப் போனா மாம் முழிச்சிருப்பாங்க அஜு.. நீ இப்ப வீட்டுக்கு போ.. நான் காலைல டைரிய எடுத்துட்டு, உனக்கு கால் பண்றேன்" என்றதும்,

 

அவளின் கண்ணில் தெரிந்த தனக்கான உருகலை உணரும் சக்தியை இழந்திருந்தவன், ஒருவாறு சம்மதித்து தான் வந்த வழியே வெளியேறினான்.

 

பத்தாம் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தை, தன்னை பள்ளியில் விட்டுச்செல்லும்  அன்னையை அவள் போகும் வரை பார்த்திருப்பது போல், சுஹாசினியும் அவனுருவம் தன் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றாள்.

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...

 


ReplyQuoteShivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
02/06/2020 10:15 am  

இன்னும் இரண்டு அத்தியாயங்களில் கதை நிறைவு பெற்று விடும் ப்ரெண்ட்ஸ்❣️

கதை பற்றிய உங்களது விமர்சனங்களை தளத்தில் பதிவிட்டு செல்லுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அதுவே என் எழுத்துகளை திருத்தவும் தீட்டவும் உதவும்.

 


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 8 months ago
Posts: 373
02/06/2020 3:44 pm  

அத்தியாயம் 28

 

கலைந்த கோலம்

 

சுஹாசினியின் வீட்டிலிருந்து கிளம்பி நேரே தன் வீட்டிற்கு வந்த அர்ஜுனை வழிமறைத்த அவனின் தந்தை ரவிச்சந்திரன், "நீ ஸ்பை ஸ்பெக்ஸ் கேமரா (கேமரா பொருத்தப்பட்ட மூக்கு கண்ணாடி) யூஸ் பண்ணும் போதே சந்தேகப்பட்டேன் அர்ஜுன்.. சோ எல்லாமே பொய் தானில்லையா?" என்று கேட்க,

 

"அப்பா, உங்க ஆசைக்காகத் தான் நான் யூபிஎஸ்சி எக்ஸாம் எழுதினதே.. பாஸாகி அங்கே போனா அவங்க கொடுத்த முதல் வேலையே ராஜாராமை கண்காணிக்கிறது தான். நீங்க தானே சொன்னீங்க, ஒரு மனுஷனுக்கு பார்க்கிற வேலைல கடமையும் கண்ணியமும் ரொம்ப முக்கியம்னு.. அதான் என் கடமையை நேர்மையா செஞ்சேன்" என்று அசால்ட்டாய் தன் தோள்களை குலுக்கினான் அர்ஜுன்.

 

அதில் அவனை நினைத்து பெருமைப்பட்ட ரவிச்சந்திரன், "நீ நினைக்குற அளவுக்கு ராஜாராம் அவ்வளவு ஒன்னும் கெட்டவன் கிடையாது அர்ஜூன்" என்றார்.

 

"அப்படி இருக்கணும்னு தான் நானும் ஆசைப்படுறேன்பா" என்ற அர்ஜுன்,

 

"அவர் டைமண்ட் பிசினஸ் மூலமா சம்பாரிச்ச பணத்தையெல்லாம், தன் தம்பியோட முட்டாள் தனத்தால் உயிர் போன குடும்பங்களுக்குத் தான்பா குடுத்துக்கிட்டு இருந்திருக்காரு.. அதுக்கான ஆதாரமும் எங்க கிட்ட பக்காவா இருக்கு.. ஆனா இப்போ ஃபார்முலா மட்டும் தான்பா மிஸ்ஸிங்.. அவர் செஞ்சது மத்தவங்களுக்கு வேணும்னா நல்லதா தெரியலாம்.. ஆனா சட்டத்துக்கு முன்னாடி ரொம்ப தப்பு.. அதுக்கான தண்டனை அவருக்கு கிடச்சே ஆகணும்பா" என்று சிறு தலையசைப்புடன் தன் அறை நோக்கி நகரவும்,

 

"ம்ம்ம்.." என்று தலையாட்டிக் கொண்டே தானும் தன் அறை நோக்கிச் சென்றார் ரவிச்சந்திரன்.

 

காலையில் விடிந்த உடனேயே மேகலா ஃபேக்டரிக்கு செல்வதாய் வெளியே சென்றதும், அவரறைக்குள் புகுந்து அந்த டைரியை எடுத்த சுஹாசினி, அர்ஜுனிற்கு போன் போட்டு வரச் செய்தாள்.

 

வாசல் வழியாக வந்து டைரியை வாங்கிக் கொண்டவனும், பின்பு என்ன நினைத்தானோ, அவளறையிலேயே அமர்ந்து முழு டைரியையும் வாசித்து முடித்தான்.

 

அதில் பாதி பக்கங்கள் வரை ராஜாராமின் கல்லூரியில் நடந்த நிகழ்வுகளும், அவர் ரஷ்யாவில் வசித்த போது நடந்த நிகழ்வுகளுமே இருக்க, மீதி பக்கங்கள் எல்லாம் "மேகலா ஐ லவ் யூ" எனும் வார்த்தைகளால் நிரம்பியிருந்தது.

 

மிகப்பெரும் ஆதாரம் தன்னிடம் சிக்கியுள்ளது என்பதை உணர்ந்து கொண்டவன், "ராஜாராம் உங்களுக்கு இருக்கு இன்னைக்கு.." என மனதில் நினைத்துக் கொண்டு,

 

தன்னருகில் ஆப்பிள் கட் செய்து சாப்பிட்டு கொண்டிருந்த சுஹாசினியிடம் திரும்பி, "ஏன் சுஹி? நீ இத ஏதோ ஆதாரம்னு சொன்னியே?.. அதெப்படி?" என்று வினவினான்.

 

அவன் கேள்வியில் உற்சாகமடைந்த சுஹாசினி, "அதுவா? நயன்த் பேஜ்ல அவரு என் டேடிய திட்டியிருப்பாரு பாரு அஜு.. என் டேடி தான் அவரை ரஷ்யா போகச்சொல்லி கட்டாயப் படுத்தியிருப்பாரு.. அதான் அந்தக் கோபத்த தன் மனசுலயே வஞ்சமா வச்சிக்கிட்டு என் டேடிய அந்த பெரிய விபத்துல மாட்டி விட்டுட்டாரு அஜு" என்று தன் கண்களை உருட்டி உருட்டி சோகமாய் சொன்னாள்.

 

"ஓஹோ, ஆமா உன் அப்பா அந்த நைட்ரஸ் ஆக்ஸைடு கேஸை டேஞ்சர்னு தெரிஞ்சும் மக்களை சிரிக்க வைக்க யூஸ் பண்ணினது தப்பில்லையா சுஹி?" என்றவன் கேட்க,

 

"தப்பு தான்.." என்று இழுத்தவள்,

 

அர்ஜுன் திடீரென தன் வயிற்றில் முத்தமிட்டு, "ஏன் சுஹி? நம்ம சிம்பா உன்னை மாதிரி யோசிக்குமா? இல்ல என்னை மாதிரி யோசிக்குமா?" என்று கேட்கவும், திருதிருவென விழித்தாள்.

 

பின் கொஞ்சம் யோசித்து விட்டு, "தெரியலையே அஜு..." என்று தன் உதட்டை பிதுக்கினாள்.

 

"தெரியலையா?.." என்று உண்மையாகவே வருத்தப்பட்ட அர்ஜுன்,

 

சுஹாசினி, "ஏன் அஜு?" என்று பாவமாய் கேட்கவும்,

 

"இல்ல, ஒரு வீட்டுல ஒன்னு அப்படின்னா சமாளிக்கலாம்.. ரெண்டுமே அப்படின்னா எப்படி சுஹி சமாளிக்கிறது? அதான் கேட்டேன்" என்று தீவிரமாய் சொன்னான்.

 

அதில் அவனை முறைத்து பார்த்த சுஹாசினி, "தப்பு செய்யுறவனை விட, தப்பு செய்ய தூண்டினவனுக்கு தான் அஜு தண்டனை அதிகம்" என்று கூறி, தனக்கும் சட்டம் பற்றி கொஞ்சம் தெரியும் என்று அவனை மிதப்பாய்  பார்த்தாள்.

 

பின், "நீ என்னை நம்பலைல?.. அதுல இன்னொரு ஆதாரம் கூட இருக்கு அஜு.. டைரியோட கடைசி பக்கத்தையெல்லாம் பாத்தியா?.. மேகலா ஐ லவ் யூன்னு எழுதியிருக்கு.. ரஷ்யாவுலயிருந்து வந்ததுக்கப்புறம் டைரியவே தொடாதவரு, என் டேடி தூக்கு தண்டனைக்காக ஜெயிலில் கிடந்த நேரமெல்லாம் டைரியே கதின்னு கிடந்தாருன்னு நேத்து மதியம் தான் என் தாத்தா போன்ல சொன்னாரு.. அப்போ இதுலயிருந்து என்ன தெரியுது.. அவருக்கு என் மாம் மேல இருந்த வெறிக்காக தான் என் டேடிய பிளான் பண்ணி அந்த விபத்துல மாட்டி விட்டுருக்காருன்னு புரியுதா?.." என்றவள்,

 

"அவரு அந்த நைட்ரஸ் ஆக்ஸைடை என் டேடிக்கு இண்ட்ரொடியூஸ் பண்ணினது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கு அஜு.. என் மம்மியோட சொத்தையெல்லாம் கேஸ் போட்டு வாங்கி தான் அவரையவர் பெரிய ஆராய்ச்சியாளராவே இந்த உலகத்துக்கு காமிச்சுக்கிட்டாரு.. கோர்ட்ல பணத்துக்காக தான் என் அப்பாவுக்கு சாதகமா வாதாடுற மாதிரி வாதாடி, இந்த ராஜாராமோட சேர்ந்துகிட்டு அவருக்கு தூக்குத்தண்டனை வாங்கித் தந்தாரு உன் அப்பா" என்று குற்றம் சாட்டவும் செய்தாள்.

 

"சட் அப் சுஹி.. என் அப்பாவைப் பத்தி எனக்குத் தெரியும்" என்று கத்திய அர்ஜுன்,

 

"எப்பவும் லூசு மாதிரி உனக்கு பிடிச்சவங்க கிட்ட இருக்குற ப்ளஸ் பாயிண்ட்ட மட்டும் யோசிச்சிக்கிட்டு கண்மூடித்தனமா அவங்களை மட்டுமே நம்பிக்கிட்டு இருக்காம மைனஸ் பாய்ண்ட்டையும் பாரு சுஹி" என்று அவளை திட்டிவிட்டு கோபமாக டைரியுடன் கீழிறங்கினான்.

 

அவன் வெளியேறும் வேளையில் தான் சரியாக அவன் பாதையை மறைத்து வந்து நின்றது மேகலாவின் ஆடி கார்.

 

காரிலிருந்து இறங்கிய மேகலா, தன்னை அந்நேரத்தில் எதிர்பார்த்திராததால் திக் பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தவனை நெருங்கி, "வாங்க மாப்பிள்ளை.." என்று தழுதழுத்த குரலில் அழைத்தார்.

 

அதை கேட்டவுடன் அர்ஜூனுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.

 

"நான் அவருகிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் பேசனும் மாப்பிள்ளை.. ஏற்பாடு பண்ண முடியுமா?" என்றவர் கேட்கவும்,

 

அக்குரலில் இழையோடிய சோகம் தன்னுள்ளும் ஊடுருவ சரியென்று அழைத்துச்சென்றான்.

 

வந்தவர் ராஜாராமை கண்டதும் பொங்கிய அழுகையை கட்டுப்படுத்தியவாறே, "காலேஜ்ல படிக்கும் போது நீங்க தானே லைப்ரரிலயிருந்த புக்ஸ்ல எல்லாம் அண்டர்லைன் பண்ணினது?" என்று தன் முதல் கேள்வியை கேட்டார்.

 

ராஜாராமும் தலை கவிழ்ந்தபடியே ஆமாம் என்றார்.

 

இது ஏற்கனவே தான் எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால், மேகலா அவ்வளவு ஒன்றும் அதிர்ச்சியாகிடவில்லை. தைரியமாய் தனது இரண்டாவது கேள்வியை கேட்டார்.

 

"அன்னைக்கு ஃபேர்வெல் அப்போ மேடையிலப் பேசினதும் நீங்க தானே?" எனக் கேட்க, அதற்கும் ராஜாராம் ஆமாமென்று தலையாட்டினார்.

 

அடுத்ததாக, "உங்க தம்பி உங்களை போலவே நடிச்சு என்னை ஏமாத்தினதும் உங்களுக்கு தெரியும் தானே?" என்று தன் மூன்றாவது கேள்வியை கேட்டார் மேகலா.

 

இக்கேள்வியில் கொஞ்சம் ஆடிப்போன ராஜாராம், பின் மேகலாவை சமாதானம் செய்யும் பொருட்டு, "அவன் உன்னை விரும்பியதன் காரணமாத்தான் அப்படி பொய் சொன்னான் மேகலா" என்றார்.

 

தன் அழுகையினூடே, "தெரியும்..." என்ற மேகலா, அர்ஜுனிடம் கூட எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டார்.

 

அவர் சென்றதும், இவ்வளவு நேரமும் உள்ளே நடந்ததையெல்லாம் அவ்வறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் வழியே பார்த்து கொண்டிருந்த அர்ஜுன், தன் ஜீப் டிரைவர் தன்னிடம் தந்து விட்டு போன டைரி மற்றும் பேப்பருடன் ராஜாராமை சந்திக்கச் சென்றான்.

 

தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த ராஜாராமிடம் எப்போதும் போல், "ம்ம்.. அந்த ஃபார்முலா என்னன்னு சொல்லுங்க?" என்று கேட்டான்.

 

மறுபடியும் அவர் தெரியாது என்று பழைய பல்லவியையே பாட,

"அதை உருவாக்கியது நீங்க தானே?" என்று குரல் உயர்த்தினான்.

 

அவர் அதற்கு, "இல்லை…" என்றார்.

 

"ம்ம் மொத தடவையா என் கேள்விக்கு கரெக்ட்டா பதில் சொல்லியிருக்கீங்க.. தான்க்ஸ்.. சரி சொல்லுங்க, அப்போ அதை யாரு உருவாக்கினா?" என்று அர்ஜுன் கேட்க, அவர் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்.

 

தன்னிடமிருந்த டைரியின் முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தையும் புரட்டி காட்டியவன், தன் கையிலிருந்த பேப்பரையும் அவர் புறம் நீட்டி, "இந்த டைரியோட கடைசி பக்கத்துல இருக்குறது தான் உங்க கையெழுத்து.. அப்போ மொதப் பக்கத்துல இருக்குறது யாரோட கையெழுத்து?.. நீங்க சொல்றீங்களா?.. இல்ல நான் சொல்லவா?" என்று கிடுக்குப்பிடியாய் கேட்டான்.

 

இத்தனை வருட உண்மை வெளிப்பட்டதில், அரண்டு போய் நின்றார் ராஜாராம்.

 

"நீங்க எவ்ளோ பெரிய போர்ஜரி வேலை பார்த்திருக்கீங்கன்னு தெரியுமா மிஸ்டர் ரகுராம்?" என்பதில், அவன் ரகுராம் என்ற பெயரினை மட்டும் ஒவ்வொரு எழுத்தாய் நிறுத்திச் சொல்ல, பதினைந்து வருடங்களுக்கு பிறகு தன் சொந்த பெயரினை சொல்லி, அர்ஜூன் அழைத்ததை கேட்டு, மெய் சிலிர்த்து போனார் அந்த மேகலாவின் கணவர்.

 

ஏற்கனவே தன் தந்தை கூறியதை கேட்டதிலிருந்தும், டைரியை முழுமையாய் வாசித்ததிலிருந்தும் ஓரளவு என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிந்தவன், அவர் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்க முயன்றான்.

 

"நீங்க இன்னும் மௌனம் சாதிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை மிஸ்டர் ரகுராம்.. உங்களுக்கும் சுஹாசினிக்கும் ஒரு சின்ன டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தாலே போதும். உண்மை என்னன்னு தெரிஞ்சுரும்.. என்னப் பார்க்குறீங்க?.. ராஜாராம் தான் சுஹாசினியோட உண்மையான பயோலஜிகல் ஃபாதேர்ங்கிறத எப்பவோ எங்கப்பா மூலம் தெரிஞ்சிக்கிட்டேன்.. உண்மைய சொல்லுங்க? உங்களுக்கு பதிலா ராஜாராம் எப்படி தூக்கிலிடப்பட்டாரு?.. உங்க வைஃப் மேகலாவை ஏன் ஏமாத்துனீங்க?.. இவ்ளோ நாள் அவங்களும் சுஹியும் நீங்க இறந்துட்டதா நெனச்சி எவ்வளவு ஃபீல் பண்ணினாங்கன்னு நீங்களே பாத்தீங்கள்ள?.. அதை பார்த்துக்கூட உங்களுக்கு மனசாட்சி உறுத்தலையா?.. அவங்களோட அந்த அன்புக்கெல்லாம் தகுதியானவரா நீங்க?.. இல்ல, நீங்க ஒரு கோழை.. ஆமா நீங்க ஒரு கோழை மிஸ்டர் ரகுராம்.." என்று, அவரின் முகத்தின் முன் குனிந்து, கோபத்தில் சாடினான் அர்ஜுன்.

 

அதில் மாலைச் சூரியனாய் கண்கள் சிவக்க நிமிர்ந்தவர், "ஆமா நான் கோழை தான்.. உயிர் பயத்துல எனக்கு பதிலா என் அண்ணனை தூக்கு மேடைக்கு அனுப்பின பாவிதான் நான்.. ஒவ்வொரு முறையும் என் மேகலா என்னையொரு அந்நியனாப் பார்க்குறாளே, பாவியே தான் நான்.. சுஹாசினி பெத்த அப்பனை காட்டிலும் என் மேல அளவு கடந்த பாசம் வச்சிருக்கா, ஆனா அதையெல்லாம் அனுபவிக்க முடியாத நெலமைல இருக்கேனே, எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி நான்.. உயிரோட வாழ்ந்தும் செத்துட்டேனே, நான் நடமாடும் பிணமே தான்" என்று அந்த அறையே அதிரும் வகையில் கத்தினார்.

 

ஆம், தற்போது அனைவராலும் ராஜாராம் என அழைக்கப்படும் ரகுராம் தான் கத்தினார்.

 

உள்ளங்கால் வரை சிலிர்க்கும்...

 


ReplyQuote
Madhu Mita
(@madhumita)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 12
02/06/2020 5:17 pm  

Super ah irukku... Indha twist unexpected...... Waiting for the Climax


ReplyQuote
Madhu Mita
(@madhumita)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 12
02/06/2020 5:18 pm  

Super ah irukku... Indha twist unexpected...... Waiting for the Climax


ReplyQuotePage 3 / 5
Share: