Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

அச்சுப்பதுமையே!! ஆரணங்கே!!  

Page 1 / 4
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 3 years ago
Posts: 613
27/10/2020 12:51 am  

அச்சுப்பதுமையே!! ஆரணங்கே!!

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Quote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 1 year ago
Posts: 409
27/10/2020 2:23 am  

நாவலின் தலைப்பு: அச்சுப்பதுமையே!! ஆரணங்கே!!

 

 

ஹாய் மச்சீஸ்…

 

நான் உங்கள் ஷிவானி செல்வம். எல்லாரும் எப்படியிருக்கீங்க?.

 

இன்று நான் எனது ஐந்தாவது கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

 

பாரதியாருக்கு கட்டியமுதே!! கண்ணம்மா!!

பாரதிதாசனுக்கு அச்சுப்பதுமையே!! ஆரணங்கே!!

 

பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகளில் ஒன்றை எனது இந்நாவலுக்கு தலைப்பாக வைப்பதில் பேருவகை கொள்கிறேன் நான்.

 

எனது மற்றைய நாவல்களுக்கு கொடுத்த ஆதரவை இந்நாவலுக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி❣️

This post was modified 4 weeks ago by Shivani Selvam

ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 1 year ago
Posts: 409
27/10/2020 2:30 am  

அத்தியாயம் 1

மெல்லக் காற்றில் கசிந்து வந்தது கானம்.

 

"பன்னீரைத் தூவும் மழை சில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் எந்நேரமே…

 

என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னோரமே.."

 

இளையராஜாவின் மெட்டில் காற்றில் வெவ்வேறு அலை வரிசையில் சுகம் பரப்பிக் கொண்டிருந்தார் கே.ஜே.யேசுதாஸ்.

 

அந்த யாமப் பொழுதிற்கு மேலும் ஏகாந்தம் சேர்க்க, சற்று முன்பு தான் மழையும் 'சோ'வென்று பெய்து முடித்திருந்தது. அதில் உண்டான குளிரைத் தாக்குப்பிடிக்க வெண்துவாலையை தன் தோளைச்சுற்றி போர்த்தியிருந்தார் ஆதிகேசவன். தற்போது அவருக்கு நேர் எதிரில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது இந்தியாவின் நுழைவு வாயில்.

 

அந்த ஏழு மாடிக் கட்டிடத்தின் ஐந்தாம் தளத்தில் நின்று பார்க்கும் போது மும்பை கொத்துக் கொத்தாக மின்சாரப் பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருப்பது நன்றாகவேத் தெரிந்தது அவருக்கு.

 

அப்போது தான் அவரின் இதழ்களும் முணுமுணுத்துக் கொண்டன. "குக்கூ, மழை பெய்திருக்கு இன்னைக்கு.. போன தடவை பெய்த மழைக்கு முத்தம் நான் தந்தேன்.. இப்போது உன்னோட முறை.."

 

பாவம் ஆதிகேசவனின் அந்த முணுமுணுப்பைக் கேட்கத்தான் ஆளில்லை அங்கு.

 

மழை முகூர்த்த நேரம் சொல்லி புகுந்தவீடு

வருவதில்லை. மெல்லிய உணர்வலை அறுந்து விடைபெறும் போதும் சொல்லிச் செல்வதில்லை. அதுபோல் தான் ஆதிகேசவனின் குக்கூ பற்றிய நினைவும்.

 

பல ஆண்டுகள் கழித்தும் இன்னும் தன் நினைவுகளின் வழியே பரிணமித்துக் கொண்டிருக்கும் குக்கூவில் மூழ்கிக்கிடந்த ஆதிகேசவனுக்கு, "கிணுக்.. கிணுக்.." என மெலிதாய் வளையல் சிணுங்கும் ஒலி கேட்டது. கூடவே "கேசவ்ஜி.." எனும் பிரத்யேக அழைப்பும்.

 

வானொலி பெட்டியின் காதை நூற்றியெண்பது டிகிரி கோணத்திற்குத் திருகிவிட்டு நிமிர்ந்தவரின் எதிரில் கார்குழல் விரித்து, நாற்பது கிராம் வாரண வர்ணப் புடவையில் எழிலோவியமாய் காட்சி தந்தார் ஜானகி.

 

அவரைக் கண்டவுடன் தன் குக்கூ பற்றிய நினைவை பல மைல் தூரத்திற்கப்பால் கொண்டு போய் நிறுத்திய ஆதிகேசவன், இயல்பாய், "என்ன ஜானு? நீ இன்னும் தூங்கலையா?.." என்று கேட்டபடியே அவரின் அருகில் வர, ஓரத்தில் தொங்க விடப்பட்ட பூத்தொட்டியிலிருந்து விடைபெற்ற ஒற்றை மழைத்துளியானது டொப்பென்று ஜானகியின் தோள் மீது வந்து குதித்தது. அதில் கொஞ்சம் கவனம் சிதறினார் ஜானகி.

 

அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு மெதுவாய் ஜானகியை அணுகிய ஆதிகேசவன், அவரின் இரு தோள்களிலும் கைப்போட்டுக் கொண்டு அருகில் இழுத்துக்கொள்ள, முன்பு மழைத்துளி தொட்ட இடத்தை இப்போது அவரின் இதழ்கள் தொட்டன. அதில் கொஞ்சம் வெட்கமாய் நெளிந்துக்கொண்டார் ஜானகி.

 

"ஜானு?.."

 

"ம்ம்..?"

 

"என்னன்னு கேட்டேன்..?"

 

மெதுவாய் நிமிர்ந்து கைகளை ஆதிகேசவனின் கழுத்தில் கோர்த்துக் கொண்ட ஜானகி, "ஆது பத்தி பேசனும்" என்றார்.

 

"ஆதுவா? அவனுக்கென்ன இப்போ?" யோசனையாய் நெற்றி சுருங்கியது அவரிடம்.

 

"அவனுக்கு ஒன்னுமில்ல.. வயசு தான் ஏறிக்கிட்டேப்போகுது.."

 

"சரி, அதுக்கு நான் என்ன பண்ணனும்..?"

 

ஆதிகேசவனின் அலைப்பாய்ந்த கைகளை தடுத்துப் பிடித்த ஜானகி, "என்னதிது? வயசு ஆக ஆக ஐயாவுக்கு இளமை திரும்புதுன்னு நினைப்போ?.. அதான் பையனுக்கு கல்யாணம் பண்ணனும்கிற நினைப்பு கொஞ்சம் கூட இல்ல" என்று கடிந்தபடியே தான் சொல்ல வந்த விஷயத்தையும் போட்டுடைத்தார்.

 

"ஆமாங்க மேடம், மும்பையோட டாப் ஒன் பத்திரிக்கையோட எடிட்டர் மிஸ்டர் ஆதிகேசவனுக்கு சுத்தமா பொறுப்பே கிடையாது.. நீங்க தான் கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக் கொடுக்கணும்.. சரி சொல்லு! பொண்ணு எந்த ஊரு?.. ஃபேமிலி எப்படி?.." தகவல் கேட்டபடியே வானொலிப் பெட்டியின் வலப்புறமிருந்த சிகரெட் பெட்டியையும் சிகார் லைட்டரையும் கையிலெடுத்துக் கொண்டார் ஆதிகேசவன்.

 

"அட கல்யாணம் பண்ணனும்னு தானேங்க சொன்னேன்!.. அதுக்குள்ள எப்படி பொண்ணு வரைக்கும் கண்டுபிடிச்சீங்க?!" வியப்புடன் கேட்டார் ஜானகி.

 

"ஒரு வாரமா நீயும் அம்மாவும் கூடிக் கூடி பேசும்போதே தெரிஞ்சு போச்சு ஏதோ பெரிய சதியாலோசனைன்னு.. ஆனாப்பாவம் அந்த சதில என் புள்ள மாட்டிக்கிட்டான்.." என்றபடியே காற்றில் வெள்ளையடித்தார் ஆதிகேசவன்.

 

"ம்க்கும் இவரு மட்டும் அம்பத்திமூணு வயசுலயும் டையடிச்சுக்கிட்டு புதுசா கல்யாணம் முடிச்சவர் கணக்கா பொண்டாட்டியோட குதூகலமா இருப்பாராம், இருபத்தியேழு வயசாகுற என் புள்ள மட்டும் தனியா கிடந்து அல்லல் படணுமாம்.. நல்லா இருக்கே நியாயம்.."

 

"சரி சரி ஓவரா சஸ்பென்ஸ் வைக்காம பொண்ணு யாருன்னு சொல்லு ஜானு.."

 

"வேற யாரு, உங்க பத்திரிக்கையோட பப்ளிஷேர் மிஸ்டர் ஆனந்த் சோப்ரா உடைய பொண்ணு தன்யா சோப்ரா தாங்க.. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் ஜமுனாவை காளிமாதேவி கோவில்ல பார்த்தேன்.. அந்த தேவியோட கருணை நம்ம ஆதுவோட ஜாதகத்தை நான் கையில வச்சிருக்குறதைப் பார்த்ததுமே ஜமுனா என்ன விஷயம்ன்னு கேட்டாங்க.. நானும் இந்த மாதிரின்னு விவரத்தை சொன்னேன்.. உடனேப்பாருங்க, ஏன் எங்க கூடலாம் நீங்க சம்பந்தம் வச்சுக்க மாட்டீங்களாக்கும்ன்னு ஓப்பனா கேட்டு என்னை அதிர வச்சிட்டாங்க. எனக்கு அதுல கையும் ஓடல.. காலும் ஓடல.. மறுநாளே அத்தையும் நானுமாப்போய் தன்யாவைப் பார்த்து பேசிட்டு ஜாதக பொருத்தம் எல்லாம் பார்த்துட்டோம்.. பத்து பொருத்தமும் இருந்தது.. ஜோசியர் குறிச்சிக் கொடுத்த நாள்படி அத்தை அடுத்த வார புதன்கிழமையே ஆதுவோட நாங்க பொண்ணுப் பார்க்க வர்றோம்னு அவங்ககிட்ட சொல்லிட்டாங்க.." என்று ஜானகி உற்சாகமாய் கூறவும், அவரைப் பார்த்தவாறே கையிலிருந்த சிகரெட்டின் சாம்பலை கண்ணாடிக் கிண்ணத்திற்குள் தட்டிய ஆதிகேசவன் நிர்சலனமான முகத்துடன்,

 

"ஸோ, எல்லாம் பேசி முடிச்சாச்சு.. ஏதோ போனாப் போகுதுன்னு என்கிட்ட வந்து சொல்லிக்கிட்டிருக்க இல்ல ஜானு?" என்று கேட்கவும்,

 

அவரின் இந்த விசனத்தில் பதறிப்போய், "என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. ஆனந்த் அண்ணாவை சின்ன வயசிலிருந்தே உங்களுக்குத் தெரியும்.. ரெண்டுபேருமே ஒரே துறைல இருக்கீங்க வேற.. வெளிய தெரியாத இடத்துல பொண்ணெடுத்து மாட்டிக்கிறதுக்கு பதிலா அவரோடப் பொண்ணையே பேசுறது பெட்டர் இல்லையா?.. நீங்களேவும் முன்னாடி ஒரு தடவை தன்யாவைப் பார்த்துட்டு என் ஓவியத்துல வர்ற அழகி ஒருத்தி உயிர்பெற்று வந்த மாதிரி இருக்கிறா, நம்ம ஆதுக்கு இன்டெரஸ்ட்னா பேசிப் பார்க்கலாம்னு சொல்லலையா?.. அந்த தைரியத்துல தாங்க நானும் அத்தையுமாப் போய் தெம்பா சம்பந்தம் பேசி முடிச்சோம். அதுமட்டுமில்லாம தன்யா அவங்க வீட்டுக்கு ஒரே வாரிசு வேற.." என்று அவசரத்தில் அடுக்கிக் கொண்டே போனார் ஜானகி.

 

ஆதிகேசவன், "ஜானு, இப்போ நான் இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொன்னேனா?.. ம்ம்?.. அப்புறம் ஏன் இப்படி?" என்றதும் தான் மூச்சே வந்தது போல் பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவரிடம்.

 

"அப்போ உங்களுக்கு இந்த சம்பந்தம் ஓகே தானேங்க?.."

 

இப்போது ஆதிகேசவனின் முகத்தில் சிந்தனைக்கான அறிகுறி.  "ஜானு நீ மொதல்ல தன்யாவைப் பத்தி ஆதுக்கிட்ட சொன்னியா?.. அவனுக்கு இதுல சம்மதமா?" என்று அதுதான் முக்கியம் என்பது போல் அழுத்திக்கேட்டார் அவர்.

 

அக்கேள்விக்கு பெருமை பொங்கி வழிந்த குரலில் மறுமொழி சொன்னார் ஜானகி. "ஆது என் பிள்ளைங்க.. நான் ஒரு கோடு போட்டாக் கூட அம்மா போட்டக் கோடுன்னு பிள்ளை தாண்டமாட்டான். அவனைப்பத்தி கவலையில்ல.. இப்போ இந்த கல்யாணத்தோட முடிவு எல்லாம் உங்க கையில தான் கேஷவ்ஜி.." என்று நிறுத்தவும்,

 

தீவிரமாய் யோசித்தபடியே சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் அழுத்தி அணைத்த ஆதிகேசவன், "ஜானு நான் முன்னாடி ஆதுவை தன்யாவோட சேர்த்துப் பேசிட்டு அப்புறம் அது பத்தியே பேச்செடுக்காததற்கு காரணம் ஒன்னு நம்ம ஆராதனா, இன்னொன்னு ஆனந்த் சோப்ரா உடைய ஸ்டேட்டஸ். என்ன தான் ஆதுவும் ஆராதனாவும் நாங்க வெறும் நண்பர்கள் தான்னு சொல்லி நாம அவங்களுக்கு ஏற்பாடு பண்ணின எங்கேஜ்மெண்டை கேன்சல் பண்ணிட்டாலும் ஆராதனாவுக்கு கல்யாணம் ஆகாம நாம ஆதுவுக்கு கல்யாண ஏற்பாடு பண்றது சரியா சொல்லு?.. ஆராதனா நம்ம கஸ்டடில இருக்கிறப் பொண்ணு.. அவளுக்கும் நல்லது கெட்டது எல்லாம் நாம தானே பார்க்கணும். உன் அண்ணனும் அண்ணியும் கார் விபத்துல உயிர்போகிற சமயத்துல சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கில்ல உனக்கு.. நீ ஃபர்ஸ்ட் ஆராதனாவுக்கு ஒரு மாப்பிள்ளை பாரு ஜானு.. ஆதுவுக்கும் ஆராதனாவுக்கும் ஒரே மேடைல  கல்யாணம் வச்சாக்கூட எனக்கு ஓகே தான்.." என்றவர் கூறவும்,

 

"ஏங்க என்னைப் பார்த்தால் என்ன உங்களுக்கு ராட்சஷி மாதிரி தெரியுதா?.. ஆதுவுக்கும் ஆராதனாவுக்கும் கல்யாணம் பண்ண போறோம்னு தான் நான் இருபத்திநாலு வயசாகியும் ஆராதனாவுக்கு வெளி இடத்துல மாப்பிள்ளை பார்க்காமல் இருந்தேன்.. எப்போ ரெண்டு பேரும் இப்படி சொன்னாங்களோ அப்போவே ரெண்டு பேருக்கும் சேர்த்து தாங்க நான் அந்நியத்துல சம்பந்தம் தேட ஆரம்பிச்சேன். தெய்வாதீனமா ஃபர்ஸ்ட் ஆதுவுக்கு அமைஞ்சிருக்கு.. அதுவுமில்லாம ஆராதனா கிட்ட நான் தன்யா பத்தி சொன்னப்போ அவ்ளோ சந்தோஷப்பட்டா என் பொண்ணு.. இப்போ நீங்க தான் வேஸ்ட்டா எதையெதையோ யோசிச்சு குழம்பிக்கிறீங்க.. ஆமா அதென்ன ரெண்டாவது காரணம் ஸ்டேட்டஸ்?.." விலகி நின்று இடுப்பில் கைவைத்தவாறே மிரட்டினார் ஜானகி.

 

"ஆனந்தோட ஸ்டேட்டஸ் எங்க! நம்மளோட ஸ்டேட்டஸ் எங்க ஜானு! ஆனா அவங்களே இப்போ நம்ம ஆதுவை மாப்பிள்ளை கேட்டு  முன் வந்திருக்கிறதை பார்க்கிறப்போ, இவங்க எல்லாம் போட்டிப்போட்டு வர்ற அளவுக்கு நாம நம்ம ஆதுவை வளர்த்திருக்கோம்ன்னு நினைச்சி ரொம்பப் பெருமையாயிருக்கு ஜானு.." என்று ஆதிகேசவன் முகத்தில் மத்தாப்பு பளிச்சிடக் கூறவும்,

 

தனது மார்பில் மெடல் ஒன்று குத்துவது போல் மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஜானகி, "எனக்கும் சில நேரம் நம்ம ஆதுவை நினைச்சா கர்வமா தாங்க இருக்கும்.. சிபி-சிஐடி உடைய சீஃப் மிஸ்டர் ஜக்தீஸ் மிஸ்ரா நியூஸ் சேனலுக்கு பேட்டிக் கொடுத்தப்போ கைலாசாவுக்கு ஓடிப்போன கொலையாளி கிருஷிகானந்தா பத்தின மொத்த டீட்டைல்ஸையும் எங்க ஏஜென்ட் ஏஃபைவ் தான் ஹேக் பண்ணி கண்டுபிடிச்சாருன்னு சொன்னப்போ அக்கம் பக்கத்துல அது என் பிள்ளை தான்னு சொல்லி துள்ளிக் குதிக்கணும் போல இருந்ததுங்க. ஆனா அப்படியெல்லாம் சொன்னா அவன் வேலைக்கும் உயிருக்கும் ஆபத்தாகிடுமேன்னு தான் சொல்லல.."

 

ஆதிகேசவன் மீண்டும் ஜானகியின் இடையில் கரம் கோர்த்துக் கொண்டு, "நேத்து தான் அவனை பொம்மைகளை கழட்டிப்போட்டு ஆராய்ச்சி பண்ற குட்டிப்பையனா பார்த்த மாதிரி இருக்கு ஜானு.. இன்னைக்கு எவ்வளவு பெரிய போஸ்டிங்ல இருக்கான்!.. எவ்வளவு பயிற்சி! எவ்வளவு அர்ப்பணிப்பு! போனவாரம் சந்திரசேகர் நம்ம வீட்டுக்கு வந்தப்போக் கூட, நம்ம ஆது யுபிஎஸ்சி எக்ஸாம் க்ளியர் பண்ணிருக்கான்னு தெரிஞ்சதும் அப்படியே ஆடிப் போயிட்டான்..  அப்போ நான் உணர்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்ல ஜானு.." எனவும்,

 

"அவன் இவ்வளவு திறமையுடனும் அழகுடனும் இருக்கப்போய் தானேங்க தன்யாவுக்கும் அவனை பார்த்தவுடனேயே பிடிச்சிப் போயிடுச்சு.. சரிங்க கடைசியா ஒரு தடவை உங்கக்கிட்ட கேக்குறேன், உங்களுக்கு தன்யா ஓகே தானே?.." என்று ஜானகி சரியாய் தன் யுவர்ஸ் பைத்ஃபுல்லியில் வந்து நிற்கவும்,

 

"ம்ம் எனக்கு ஓகே தான்.. நெக்ஸ்ட் நீ என்ன பண்ணனுமோ பண்ணு ஜானு.. ஆனா நான் முன்னாடியே சொன்ன மாதிரி இது நானோ நீயோ முடிவெடுக்கிற விஷயம் இல்ல.. யாருக்கு யார் இணைங்கிறது சம்பந்தப்பட்டவங்களோட மனசு முடிவெடுக்கிறது.. நாளைக்கே உன் பிள்ளை ஒருத்தியை கூட்டிட்டு வந்து இவதாம்மா உன் மருமகள்னு உன் காலில் வந்து விழுந்தா நீ என்ன செய்ய முடியும் சொல்லு?.. வீ ஹேவ் நோ ரைட் டூ போர்ஸ் தெம்" என்றவர் கூறவும்,

 

"நல்ல கற்பனை தான் போங்க.. என் பிள்ளை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. அவன் என்னை மீறி போகமாட்டான்.. சரி சொல்லுங்க! நான் வர்றதுக்கு முன்னாடி நீங்க என்ன யோசிச்சிக்கிட்டு இருந்தீங்க?"

 

ஜானகியிடம் இக்கேள்வியை எதிர்பார்த்திராத ஆதிகேசவனின் முகம், ஒரு கணம் திடுக்கிட்டு வெளிறி போனாலும் மறுகணம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

 

"நான் காதலிக்கிற பொண்ணை.." என்று ஒவ்வொரு வார்த்தையாகக் கோர்த்தார் அவர்.

 

இப்போது முகம் வெளிறிப்போவது ஜானகியின் முறையானது.

 

தான் சொன்ன பதிலில் முகத்தை ஒரு முழத்திற்கு இழுத்து வைத்திருந்த ஜானகியின் இடக்கன்னத்தில் ஆட்காட்டி விரலால் கோடு கிழித்தவர், "என்ன ஜானு, என் காதலியைப் பத்தின்னு சொன்னா, அதான் டெலிபதில நானே உங்களைத்தேடி வந்துட்டேனோன்னு சொல்லி என் கன்னத்தை எச்சில் பண்ணுவேனு பார்த்தால் முகத்தை இப்படி தூக்கி வச்சிட்டிருக்கியே?" என்றவர் கேட்கவும்,

 

"உண்மைய சொல்லுங்க! என்னைப்பத்தி தான் யோசிச்சிக்கிட்டிருந்தீங்களா? இல்ல இருபத்தியெட்டு வருஷத்துக்கு முன்னாடில இருந்தே குக்கூன்னு ஒருத்தி உங்க கனவுல வந்து டிஸ்டர்ப் பண்ணுவாளே அவளைப்பத்தி யோசிச்சிக்கிட்டிருந்தீங்களா?.. பத்தாததுக்கு இன்னைக்கு மழை வேற பெஞ்சிருக்கு.. ம்ம்?.." என்றவர் தன் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு உறுமவும்,

 

திருடி கையும் களவுமாய் பிடிபட்ட நிலையிலிருந்த ஆதிகேசவன், "ச்சே! ச்சே! என்ன சொல்ற ஜானு!.. கடந்த ரெண்டு வருசமா அவளைப் பத்தின நினைப்பே எனக்கு வர்றதில்லை.. நீதான் இப்போ அவளைப்பத்தி ஞாபகப்படுத்திக் கிட்டிருக்கிற.. இதோப்பார் டீபாய் மேல தான் மாத்திரை கூட இருக்கு.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போட்டேன்.." என்று பரபரப்பாய் கூறவும்,

 

"சரி சரி விடுங்க.. குளிர்க்காத்துல ரொம்ப நேரம்  நிற்க வேணாம்.. உடம்புக்கு முடியாம வந்திடப்போகுது.. வாங்க.." என்று அவரின் கைப்பிடித்து இழுத்துச்சென்ற ஜானகி சத்தியமாய் அவர் கூறியதை நம்பவில்லை.

 

பின்னே! சுமார் இருபத்தியெட்டு வருடங்களாய் அவருடன் வாழ்பவர் ஆயிற்றே! தாய் அறியா சூல் ஏது? என்பது போல் மனைவி அறியா மர்மம் ஏது?

 

அவர்களிருவரும் உள்ளே சென்றப்பின் தான் மட்டும் பால்கனியில் தனித்து விடப்பட்ட விதி, ஆதிகேசவன் கனவில் மட்டுமே இதுவரை கண்டு வந்த குக்கூவை எப்படி அவரின் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது.

வருவாள்...

மணவினைகள் யாருடனோ..

மாயவனின் விதிவகைகள்..

விதிவகையை முடிவு செய்யும்..

வசந்தகால நீரலைகள்.

 

- கண்ணதாசன்

This post was modified 3 weeks ago by Shivani Selvam
This post was modified 2 weeks ago by Shivani Selvam

ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 1 year ago
Posts: 409
28/10/2020 1:48 pm  

அத்தியாயம் 2

இரண்டு மாதங்களுக்குப் பிறகு…

மும்பை

வரவேற்பறை இருக்கையில் அமர்ந்து வெண்டைக்காயை நறுக்கிக் கொண்டிருந்த ஜானகி தனக்கெதிரே இருந்த சுவரில் வரிசையாக தொங்கிக் கொண்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து, அருகில் டீவி ரிமோட்டுடன் அமர்ந்திருந்த தன் மாமியார் கங்காதேவியிடம், "தன்யா கழுத்துல கிடக்கிற டைமண்ட் நெக்லஸ் ரொம்ப அழகா இருக்கில்ல அத்தை!.. ஜமுனா அண்ணிக்கிட்ட கேட்டப்போ மூணு லட்சம்னு சொன்னாங்க!.. நம்ம ஆராதனாவுக்கும் ஒன்னு வாங்கணும் அத்தை.." என்றவர் ஆசையாக கூறவும், அவரின் பார்வையைப் பின்பற்றி தானும் அவ்விடம் நோக்கிய கங்காதேவி,

 

"ஏன் இப்போ நம்ம ஆராதனாவுக்கு என்ன குறையாம்.. மாப்பிள்ளை வினய் கையை கோர்த்துக்கிட்டு நிற்கிறவ கழுத்துல கிடக்கிறதும் பதினஞ்சு பவுனு! ஏழரை லட்சம்! ஞாபகமிருக்கில்ல.." என்று தங்கள் சம்பந்தக்காரர்களுக்கு தாங்களும் குறைந்தவர்கள் அல்லர் என ஜானகிக்கு ஞாபகப்படுத்தினார் அவர்.

 

"இருந்தாலும் இந்த டிசைன்லயும் ஒன்னு வாங்கி வச்சுக்கனும் அத்தை.." என்று சொல்லிவிட்டு தன் ஓரக்கண்ணில் பார்த்த மருமகளிடம்,

 

"அதான் இன்னும் ரெண்டு மாசத்துல ஆதுவுக்கும் ஆராதனாவுக்கும் ஒரே மேடைல கல்யாணம் நடக்கப் போகுதே.. அப்போ பார்த்துக்கலாம்.." என்றவர், கொஞ்ச நேரம் தொலைக்காட்சிப் பக்கம் பார்வையை செலுத்திவிட்டு, பின் மீண்டும் ஜானகி புறம் திரும்பி, "பாரேன்! இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணத்தை வச்சிக்கிட்டு இந்த ஆது அவளை தன் வேலைக்காகன்னு கூடவே கூட்டிக்கிட்டு போயிட்டான்.." என்று கடந்த ஒரு வாரமாக தான் திட்டித் தீர்த்தும் தீராததுமாக மறுபடியும் கங்காதேவி பொரும,

 

ஜானகி, "ஆமா அத்தை.. நானும் இந்த ரெண்டு மாசத்துல ஆராதனாவுக்கு சமையல், வீட்டு வேலைகள்ன்னு எல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்னு பார்த்தால் இப்படிப் பண்ணிட்டான் இந்த ஆது.." என்று தன் பங்குக்கு கொஞ்சம் சடைத்துக்கொண்டார்.

 

"எப்படியோ அந்த காளிமாதேவி அருளால சீக்கிரம் வேலை முடிஞ்சு அவளை அவன் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தால் சரி.. ஒரு வெண்டைக்காய் கீழே விழுந்து கிடக்குது பாரு ஜானு.." எனவும்,

 

"ஆங் இதோ எடுக்கிறேன் அத்தை.." என்று குனிந்து வெண்டைக்காயை எடுத்த ஜானகி,

"குக்கூ.. குக்கூ..." என்ற கடிகார ஒலியில் அதை நிமிர்ந்துப் பார்த்து, "அத்தை! மணி பனிரெண்டாகிடுச்சு.. மனம் போல் மாங்கல்யம் போட்டிருப்பான்.. சீக்கிரம் அஞ்சாம் நம்பர் வைங்க.. வாசு அவன் முதல் பொண்டாட்டிக்கு தாலிக் கட்டிட்டானா இல்லையான்னு பார்க்கணும்.." என்றார்.

 

கங்காதேவியும் அவர் சொல்லிய எண்ணை அழுத்த, அதன்பின் அவ்விருவரின் விழிகளையும் மொழிகளையும் கடன் வாங்கிவிட்டது தொலைக்காட்சி.

 

அந்நேரம் தீவிரமாய் தொலைக்காட்சிப் பெட்டியில் விழிப் புதைத்திருந்த இருவருமே அறிந்திருக்கவில்லை, இன்னும் கொஞ்சநாளில் இதே தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிபரப்பாகப் போகும் ஒரு காட்சியைக் கண்டு தங்கள் வீடே ஆட்டம் காணப்போவதை.

@@@@@@@@@@@@@@@@@@

துபாய்

'கிர்ர்ர்...கிர்ர்ர்..' என்று சப்தமில்லாமல் அதிர்ந்த தன் ஆப்பிள் ஐபோனை, உயிரோட்டமுள்ள பஞ்சுப் பொதியிலிருந்து முகத்தை பிரித்தெடுக்க விருப்பமில்லாதவனாய் எடுத்து, குருட்டாம் போக்கில் ஸ்வைப் செய்து தன் கடுக்கன் காதில் வைத்தான் அநேகன் மல்ஹோத்ரா.

 

எதிர்புறம் என்ன சொல்லப்பட்டதோ, "ஓஹ் காட்! உண்மையாகவா?!" என்று அதிர்ந்து கத்தியவன், தன்னருகில் இருந்த நிபுணா, "வாட் ஹேப்பண்ட் சீஃப்?" என்கவும், கையுயர்த்தி அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்.

 

தொடர்ந்து சொல்லப்பட்ட தகவலில் தன் சிவந்த கண்களை தேய்த்துக்கொண்டே கட்டிலை விட்டு இறங்கியவன் ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்துவிட்டு போனை கட்டிலின் மீது வீசி எறிந்தான். பின் வேகவேகமாக செராமிக் விளம்பரம் எடுக்க தகுதி வாய்ந்த அந்த பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

 

வயிற்றில் சில சதைப் படிக்கட்டுகளைக் கொண்டு எப்போதும் முகத்தில் ஒரு அதிகாரக் கலை தெரிய வலம்வரும் மல்ஹோத்ரா குடும்பத்தின் இளம்வாரிசான அநேகன் மல்ஹோத்ரா, தற்போது தங்கியிருப்பது துபாயின் டெயிராவில்!

 

நாற்பது நவீன அறைகள், இரண்டு தள ஷாப்பிங் ஷோவ்ரூம்கள், மஜாஜ் கிளப், டென்னிஸ் கோர்ட், ஹெல்த் கிளப், பொக்கே ஷாப், காஃபி ஷாப், ஏசி தியேட்டர், டால்பின் வடிவ மிதவைகளும் ரப்பர் பந்துகளும் இருபத்திநாலு மணிநேரமும் நீச்சல் பழகவென ஸ்விம்மிங் பூல், நான்கு லிஃப்ட்கள், பத்து எக்ஸ்கலேட்டர்கள் மற்றும் வரிசை மாறாமல் பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களை நிறுத்தவென கார்பார்க்கிங் என்று உலக தரத்தில் இருந்த அந்த ஹேப்பி கிராண்ட் கட்டிடத்தின் உரிமையாளனும் சாட்ஷாத் அவனே.

 

வெந்நீரின் தழுவலில் பதினைந்து நிமிடத்தில் புத்துணர்ச்சியுடன் முழங்கால் வரை நீண்டிருந்த அந்த பாத்ரோப் உடையை இடுப்பில் முடிந்தபடியே வெளியில் வந்தவன், நேராக கண்ணாடி முன் நின்று தலையை ஹேர் ட்ரையருக்கு காட்டியவனாய் அருகிலிருந்த அலமாரியில் அதிக சிரமம் எடுக்காமல் தன் டிரேட்மார்க் கருப்பு நிற கோர்ட்டை கையிலெடுத்தான்.

 

இப்போது கட்டிலில் முதுகிற்கு குஷனை கொடுத்து சாய்ந்திருந்த நிபுணா, முகத்தில் விழுந்த தன் பாப் கட் முடிகளை நாசுக்காக ஒதுக்கியபடி, உடை மாற்றுபவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

மேசை விளக்கின் அருகில் இருந்த தன் ரோலக்ஸ் வாட்சை கட்டிய அநேகன், "நீ இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஆபீஸ்ல இருக்கணும் நிபுணா.. நான் டூ மன்த்ஸ்க்கு இங்க இருக்க மாட்டேன்.. ஃப்ளைட்ல போகும் போது நான் ஆலன்கிட்ட என்னென்ன செய்யணும்னு சொல்லிடுறேன்.. நாளைக்கு ஜப்பான்ல இருந்து வர்ற நம்ம பார்ட்னர்ஸை நீயே டீல் பண்ணிடு.." என்றபடியே நிபுணாவை நெருங்கி முத்தமிட்டுவிட்டு அந்த கட்டிடத்தின் மேல்தளத்திற்குச் சென்றான்.

 

மின்தூக்கியில் செல்லும் போதே தனது உதவியாளன் மேத்யூவிடம் தனது உலங்கூர்தியை தயாராக வைத்திருக்கும் படி கூறியிருந்தவன், அந்த விடுதியின் அந்தரத்தில் இருந்த ஹெலிபேடை அடைந்ததும் மேத்யூவைப் பார்த்து கையசைத்து ஏறிக்கொண்டான். வேகமாய் புயல்வீசிப் பறந்தது அந்த உலங்கூர்தி.

 

அநேகன், அபுதாபி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டை அடைந்து அந்த சாட்டர்ட் பிளேனில் ஏறி அமர்ந்த போது அந்த விமானத்தில் பயணியாய் இருந்தது அவன் மட்டுமே. மூன்று மணிநேரத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் விமான நிலையத்தை அடைந்தவன் அங்கிருந்து ராய்கட் செல்ல தனது ஜாக்குவாரில் ஏறினான். அவன் பூமியிலிருந்து ஓரடி உயர்ந்து காற்றில் நடப்பவர்கள் மட்டுமே வாங்கத் தகுதியுள்ள அந்த ஹமாராபூர் மல்ஹோத்ரா எல்லைக்குள் நுழைந்த போது மணி பதினொன்றாகி யிருந்தது.

 

அந்தப் பகுதிக்குள் நுழையும் யாரும் இந்தியா ஏழைநாடு என்றோ வளர்ந்து வரும் நாடு என்றோ கூறினால் நம்புவது கடினமே.

 

சாலையில் வழுக்கிக்கொண்டு சென்ற அநேகனின் கார், இரண்டு ஆள் உயரமுள்ள அந்த பித்தளை கேட்டின் முன்பு வந்து நின்ற சமயம், டிரைவரின் 'கீங்.. கீங்'கென்ற ஹாரன் அழைப்பில் இரண்டு கேட்டுகளையும் கருநிற சீருடை அணிந்த கூர்காக்கள் இருவர் வந்து திறந்தனர். உள்ளே வேகம் குறைத்து நுழைந்த ஜாக்குவாரில் இருந்தவனை சீராக வெட்டப்பட்ட மரம், செடி, கொடிகள் எல்லாம் தலையசைத்து வரவேற்க, பூவாய் விரிந்த நீரூற்று தபேலா வாசித்து வரவேற்றது.

 

டிரைவர் காரை தரைத்தளத்தில் கொண்டுபோய் நிறுத்தியதும் அதிலிருந்து இறங்கியவனை, "குட் மார்னிங் சீஃப்.." என்று அநேகனின் வயிற்றுப் பகுதிவரை குனிந்து வரவேற்றான் அவனின் இந்திய காரியத்தரிசியான ஆகாஷ். அவனிடம் கையை காரை நோக்கி காட்டிவிட்டு அநேகன் மின்தூக்கி இருக்கும் பக்கம் செல்ல, காரிற்குள் கையைவிட்டு அந்த வெண்ணிற ரோஜாக்களால் பின்னப்பட்ட விலையுயர்ந்த மலர் வளையத்தை எடுத்துக்கொண்டு அவனின் பின்னேயே ஓடி வந்தான் ஆகாஷ்.

 

காளையாய் வீறு கொண்டு மின்தூக்கியை நோக்கி நடந்தவனுடன் ஆகாஷும் இணைந்து கொள்ள, இருவரும் உள்ளே நுழைந்தவுடன் மின்தூக்கி நேரே மூன்றாம் தளத்திற்குச் சென்றது. அங்கு பலர் வெள்ளைநிற புறாக்களாய்... ஆனால் சோகத்தில் காட்சியளித்தனர்.

 

அநேகனின் நீர் பொங்கிய கண்கள் அங்கிருந்த யார் முகத்தையும் தெளிவாகக் காட்டவில்லை. கண்களில் பொங்கிய நீரை துடைத்தப்படியே கண்ணாடிப் பெட்டியை நெருங்கியவனை அவனின் மாமன் மகள் ராஷ்மி ஓடிவந்து, "அத்தான் பார்த்தீங்களா நம்ம கிஷோரை!.. நேத்து நைட் கூடப் பார்த்தேன் நல்லாதான் இருந்தான்.. எப்படி இப்படியாச்சுன்னே தெரியல.." என்று தன் மஸ்காராவும் ரூஜும் கலையாத வண்ணம் கட்டிக்கொண்டு அழுதாள்.

 

அந்த ஆரணங்கின் நடிப்பை நன்றாகவே அறிந்து வைத்திருந்த அநேகன், அவளை அணைத்தப்படியே நடத்திச்சென்று அவளது அன்னையிடம் ஒப்படைத்தான். பின் மீண்டும் கண்ணாடிப்பெட்டியின் அருகில் வந்து நின்றான். அந்த அரண்மனைக்குள் ஓடியாடி திரிந்த உருவம் இப்போது அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது.

 

தன் கைக்குட்டையின் உதவியுடன் பொய்க்கண்ணீரை உறிஞ்சியவன், "ஆகாஷ்.." என்று கையை நீட்டினான். மலர்வளையம் வைக்கப்பட்டது. அதைக் கொண்டுபோய் கண்ணாடிப் பெட்டியின் கால்மாட்டில் வைத்தவன் அதன் தலைமாட்டில் சாய்வு நாற்காலியில் உலகம் மறந்து கிடந்த தனது பாட்டியை நெருங்கினான்.

 

மற்ற நேரமானால் உற்சாகப்பெருக்கில் யங்கேஸ்வரியை கட்டித்தழுவி நலம் விசாரிப்பவன், இன்று அவர் மீளாத்துயரில் கிடந்ததாலோ என்னவோ தயங்கியபடியே நெருங்கினான். தன்னை நிமிர்ந்து பார்த்தவரின் கைகளை மென்மையாய் பற்றியவன் அவரது காலடியிலேயே முட்டிப்போட்டு அமர்ந்து கொள்ள, அவனது தலைமுடியை மெதுவாக கோதிவிட்ட யங்கேஸ்வரி, "நேகன்.." என்று ஆதூரமாக அழைத்தார்.

 

அதன் எதிர்வினையாக, "கிஷோருக்கு இப்படியாகும்னு நான் நினைக்கவே இல்லப்பாட்டி.. அந்தக் கடவுள் இப்படியொரு கல்நெஞ்சக்காரனான்னு நினைக்கத் தோணுது.." என்று கோபமாக சீறினான் அநேகன்.

 

"எல்லாரும் ஒருநாள் அவன்கிட்ட போய்த்தான் ஆகனும் நேகன்.. அதுல நீயும் நானும் கூட விதிவிலக்கு கிடையாது.. போய் சுவாமிஜி கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ.." என்றவர் கூறவும், திரும்பி ஓரத்தில் கண்களை மூடி, கையில் ருத்ராட்ச மாலையின் உருண்டைகளை நகர்த்தியபடியே மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்த பிரேமானந்தாவைப் பார்த்து வெறுப்பில் தன் உதட்டைச் சுழித்தவன், மீண்டும் தன் பாட்டியின் புறமே திரும்பி, "அதுக்கு அவசியமில்ல பாட்டி.." என்றான்.

 

அவனின் குணமறிந்த யங்கேஸ்வரியும் அதன்பின் அவனை கட்டாயப் படுத்தவில்லை.

 

தன் பாட்டிக்கு ஆறுதலாக சிறிது நேரம் அவரின் காலருகிலேயே கிடந்தவன், பின் எழுந்து நின்று தன் பாட்டியின் மேனேஜரை தள்ளி நடத்திச்சென்றான்.

 

பயந்து வந்தவரிடம், "இந்த நியூஸை மீடியாவுக்கு சொல்லியாச்சா?" என்று இவ்வளவு நேரமும் பச்சைக்குழந்தை போல் தன் பாட்டியின் காலருகில் அமர்ந்து சோக கீதம் வாசித்தவன் இவன் தானா? என்று குழம்பும் அளவிற்கு குரலில் சுருதியை ஏற்றி அவன் கேட்க, "காலையிலேயே சொல்லியாச்சு சின்னய்யா" என்றார் அந்த ஐம்பதுகளில் நெற்றியில் பட்டை போட்டிருந்தவர்.

 

"சரி இன்னும் ஒரு வாரத்துக்கு பாட்டியால எந்த வேலையும் செய்ய முடியாது. எல்லாம் நான் தான்.. ஆமா பாட்டி எப்போ அந்த பரம்பரை பரம்பரையா பாதுகாத்துக்கிட்டு வர்ற பேழையை காளிமாதேவி கோவிலுக்கு கொடுக்கப் போறாங்களாம்?.." என்றவன் எல்லாம் தெரிந்து கொண்டே எதுவும் தெரியாதவன் போலக் கேட்க,

 

"அதுக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்கு சின்னய்யா.. போன வாரமே பெரியம்மா அந்த நகைப்பேழையை புதுப்பிக்கச் சொல்லி ரத்னா ஜீவல்லர்ஸ் கிட்ட கொடுத்திட்டாங்கய்யா.." என்றார் அந்த பணிவு மிகுந்த மேனேஜர்.

 

"ஓகோ..!" என்ற அநேகன், "யாரோ ஒருத்தனை பாட்டி புதுசா நியமித்திருக்காங்களாமே?.. அவன் தான் செக்யூரிட்டீஸ்ல இருந்து சேலரி கொடுக்கிற வரை பார்த்துக்கிறானாமே? யார் அவன்? யாருன்னே தெரியாத ஒருத்தனை உள்ளே விட பாட்டி எப்படி சம்மதிச்சாங்க?.." என்று ஆத்திரமாகக் கேட்டான்.

 

"நம்ம ஏற்காட்டு அரண்மனைல உங்க தாத்தா காலத்துலயிருந்தே அவங்க அப்பா தான் நிர்வாகப் பொறுப்பை பார்த்துக்கிட்டு இருக்காங்களாம் சின்னய்யா.. ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் பெரியம்மாவை பார்த்துட்டு போனாங்க ரெண்டுபேரும்.. பெரியம்மாவுக்கு பார்த்தவுடனேயே அவனை பிடிச்சுப்போச்சு.. உடனே வேலைக்கு சேர்த்துக்கிட்டாங்க சின்னய்யா.." என்றவர் கொஞ்சம் பொறாமை கலந்தும் கூற,

 

"சரி, அவன் இப்போ எங்க இருக்கான்?.." என்றான் அநேகன்.

 

"அதோ ஃப்ளவர்வாஷ் கிட்ட பேசிக்கிட்டு இருக்காரே அவரு தான் சின்னய்யா.. பேரு தட்சிணா மூர்த்தி.." என்றவர் கைக்காட்டவும் திரும்பிப் பார்த்தான் அநேகன் மல்ஹோத்ரா.

 

வசீகரம் ததும்பும் முகத்தில் தாடியும் மீசையும் அடர்ந்திருக்க, கழுத்தில் நீளமான ருத்ராட்ச மாலையும் நெற்றியில் திருநீற்று பட்டையும் என ஒரு மினி சாமியார் லுக்கில் நின்றிருந்தான் தட்சிணா மூர்த்தி. தன்னருகில் அச்சுப்பதுமையாய் நின்றிருந்த பெண்ணின் காதில் வேறு ஏதோ தீவிரமாய் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

"பக்கத்துல நிற்கி-ற-து..?" வார்த்தைகளை இழுத்தான் அநேகன்.

 

"பக்கத்துல நிற்கிறது அவரோட மாமாப்பொண்ணு ஆராதனாவாம் சின்னய்யா.. இப்போ இருபத்திநாலு மணி நேரமும் பாட்டிக்கூடவே இருக்கிறது அந்தப் பொண்ணு தான் சின்னய்யா.." என்றவர் கூறவும், அவள் சிரிக்கும் போதும் சிரிக்காத போதும் மின்னிய லிப் கிளாசிலேயே அகப்பட்டு நின்றவன், மீண்டுமொரு முறை தட்சிணா மூர்த்தியை பார்த்துவிட்டு, "வேலை கொடுத்ததுக்கான காரணம் நெத்தியிலயும் கழுத்துலயும் அப்பட்டமா தெரியுது.." என்று ஏளனமாய் இதழை வளைத்துவிட்டு, மலர்வளையம் பக்கம் திரும்பினான்.

 

அவனது உதவியாளன் ஆகாஷ் இன்னும் மலர்வளையம் வைக்கப்பட்ட பெட்டியிடமிருந்து தள்ளி வரவில்லை. ஆகாஷின் கண்கள் கண்ணாடிப் பெட்டியினுள் உயிரற்று கிடந்த அந்த ஜெர்மன் ஷெபர்ட் நாய் கிஷோரின் மீதே நிலைப்பெற்றிருந்தது.

 

'நம்மளை விட இவன் ஓவரா பெர்பார்மன்ஸ் பண்ணுறானே' என்று நினைத்துக்கொண்ட அநேகன், அவனை நெருங்கி, "என்ன ஆகாஷ்?" என்று காதருகில் குனிந்து கேட்க, திடுக்கிட்டு திரும்பிய ஆகாஷ், "ஒன்னுமில்ல சீஃப்.." என்றுவிட்டு, கூட்டத்தோடு சென்று தள்ளி நின்றுகொண்டான்.

 

காலை பதினொன்றரை மணியளவில், கண்ணாடிப்பெட்டி தூக்கப்பட்டதும் தானும் பெட்டியின் ஒரு ஓரத்தை தன் தோளில் சுமந்து நடந்த அநேகனைப் பார்த்து ஆகாஷ் மனதிற்குள், "உலக மகா நடிகன் சீஃப் நீங்க.." என்று மரியாதையாய் நினைத்துக் கொள்ள, அது தன் கடுக்கன் காதில் விழுந்தது போல் அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தான் அநேகன் மல்ஹோத்ரா.

 

கிஷோரின் உடலை தகனம் செய்துவிட்டு அனைவரும் வீடு திரும்பிய நேரம் மீடியாக்கள் அனைத்தும் ஒருவரிச் செய்தியாக, "மல்ஹோத்ரா குடும்பத்தின் செல்லப்பிராணி கிஷோர் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக தன் இன்னுயிரை நீத்தது' என்று போட்டிப் போட்டுக்கொண்டு ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.

 

வீட்டிற்கு வந்ததும் தன்னறைக்குச் சென்று குளித்து உடைமாற்றிக் கொண்ட அநேகன் கைப்பேசியில் ஆகாஷை அழைத்தான்.

 

உத்தரவிற்கு பணிந்து வேகமாய் தன்னறைக்கு வந்தவனிடம், "என்ன ஆகாஷ்! போன தடவை வந்தப்போ இவனே நாயை சமயம் கிடைச்சா கொன்னுடுன்னு சொல்லிட்டு இன்னைக்கு இவனே இப்படி ஓவரா அழுது பெர்பார்மன்ஸ் பண்ணிக்கிட்டிருக்கானே, உலக மகா நடிகன் தான்டா இவன்னு தான்னே நான் கிளம்பும் போது நீ நினைச்ச?" என்று கேட்டதும்..

 

"சீஃப்.." என்று தடுமாறினான் ஆகாஷ்.

 

"இல்ல ஆகாஷ் நீ அப்படி நினைச்சாலும் தப்பில்ல.. கண்ணதாசனே 'இல்லாத மேடையிலே, எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம், நாம் எல்லோரும் பார்க்கின்றோம்'ன்னு பாடியிருக்காரு.. என்கிட்ட நீ வேலைக்குச் சேர்ந்து சிக்ஸ் மன்த்ஸ் தானே ஆகுது? போகப்போக என்னை புரிஞ்சிக்குவ.. ஆமா போன தடவை நான் ஏன் அந்த நாயை கொல்லச் சொன்னேன்னு தெரியுமா?.. அட! என்னைப் பார்த்தால் மட்டும் நான் தான் வில்லன்னு தெரிஞ்சிக்கிட்டு கரெக்ட்டா குரைக்குதுப்பா.. பொதுவா என்னை எதிர்க்கிற யாரையும் எனக்கு விட்டுவச்சு பழக்கமில்ல.. ஆனா இந்த சமயம் என் கையை கரைபடவிடக் கூடாதுன்னு இயற்கையே அதோட உயிரை எடுத்துருச்சி.."

 

"ஆங் இப்போ உன்னை எதுக்கு கூப்பிட்டேன் தெரியுமா?  இந்த மாளிகை, மல்ஹோத்ரா கன்ஸ்ட்ரக்ஷன், மல்ஹோத்ரா ட்ரஸ்ட், மல்ஹோத்ரா டிரேடர்ஸ்ன்னு எல்லா சொத்துக்கும் ஒரே வாரிசு நானாயிருந்தாலும் இன்னும் எதுவுமே என் பேருக்கு மாறலை ஆகாஷ். எல்லாமே என் பாட்டியோட பேருல தான் இருக்கு. உனக்கேத் தெரியும் என் பாட்டிக்கு எந்த அளவுக்கு கடவுள் பக்தி முத்திப்போய் இருக்குதுன்னு.. முன்னாடி கொஞ்சம் கொஞ்சமா கோவிலுக்கு கொடுத்துக்கிட்டு இருந்தவங்க இப்போ மொத்தமா பல கோடி மதிப்புள்ள நகைப்பேழையை தானமா தூக்கிக் கொடுக்க முடிவு பண்ணிருக்காங்க.. இந்த சொத்துக்களோட வருங்கால வாரிசா என்னால இதையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா சொல்லு!.. அதான் அதைத் தடுக்க நான் ஒரு திட்டம் போட்டிருக்கேன்..." என்று அநேகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அபசுருதியாய் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

 

"ப்ச் யாரது இந்த நேரத்துல?.." என்று சோபாவில் கிடந்த ரிமோட்டை அழுத்தி கதவைத் திறந்த அநேகன், சட்டென்று மனநிலை மாறியவனாய் சொன்னான். "ஆகாஷ் ஒரு பத்து நிமிஷம் நீ வெளியப் போய் நில்லு!…"

 

ஆகாஷ் வெளியேறும் போது அவனைக் கடந்து உள்ளே வந்தது ஜானகியின் அண்ணன் மகள் ஆராதனா.

வருவாள்….

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ..

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ..

கண்ணல்ல கண்ணல்ல அல்லிப் பூ..

சிரிப்பு மல்லிகைப் பூ..

 

-வாலி

This post was modified 3 weeks ago 2 times by Shivani Selvam
This post was modified 2 weeks ago by Shivani Selvam

ReplyQuoteVani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 153
28/10/2020 6:15 pm  

Hi Shivani welcome back.. Arambamey attagasama eruku. 😍 . Keep rocking 🤗 🤗 🤗 


ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 1 year ago
Posts: 409
31/10/2020 2:34 am  

அத்தியாயம் 3

கம்மென்று மணம் பரப்பும் ஒற்றை பெரிய பூக்களை சமமான அளவில் காம்புவெட்டி, சுவரின் ஒவ்வொரு மூலையிலும் இருந்த ஸ்டாண்டில் வைக்க வந்திருந்தவளைக் கண்டு ஆகாஷ் வெளியேற, அநேகன் உள்ளே வந்தவளை சுங்கத்துறை அதிகாரி போல் தான் அங்கத்துறை அதிகாரியாய் மாறி அங்கம் அங்கமாய் ஆராய்ந்தான்.

 

அந்த நீண்ட வரவேற்பறையின் மத்திக்கு வந்தவள், "என் பேரு ஆராதனா சார். நான் இங்க வேலைக்கு வந்து ஒரு வாரம் தான் சார் ஆகுது.. என் மூர்த்தி மாமா தான் சார் என்னை இங்க வேலைக்கு சேர்த்து விட்டாங்க.." என்று கடமை போல் ஒப்பித்து விட்டு அவனை கடந்து சென்று குதிங்கால்களை எக்கியபடியே ஸ்டாண்டில் பூக்களை செருகிக் கொண்டிருந்தாள்.

 

"மூர்த்தி மாமாவா?.."

 

அவள் யாரை சொல்லுகிறாள் எனத் தெரிந்தும் எதுவும் தெரியாதவன் போலவேக் கேட்டான் அநேகன்.

 

"ம்ம் ஆமா சார்.. தட்சிணா மூர்த்தி மாமாவை நான் மூர்த்தி மாமான்னு தான் கூப்பிடுவேன்" என்றவள் எக்கும் போது பளீரிட்ட அவளின் இடையைப் பார்த்து, உள்நோக்கத்துடன், "செம ஃப்ரெஷ்..".. என்று கூறி விகல்பமாக அநேகன் புன்னகைக்க,

 

அதையறியாமல், "ஆமா சார், எல்லாமே இங்க தோட்டத்துல பறிச்சது தான்.." என்று வெகுளியாகக் கூறினாள் ஆராதனா.

 

செல்லும்போது அவளை கை நீட்டி தடுத்தவன், "என்னதிது கையில தாயத்து?' என்றான் பேச்சை நீட்டும் பொருட்டு.

 

"காளிமாதேவி கோவிலோட தாயத்து சார். நேத்து காலைல தான் பிரேமானந்த சுவாமிகள் எல்லாருக்கும் கையில ஒவ்வொரு தாயத்து கட்டிவிட்டார்.. இனி ஒரு வாரத்துக்கு காலைலயும் சாயங்காலமும்  சுவாமிகளோட தியான கூட்டம் தான் சார்.." என்றவள் பக்தி மயக்கத்தோடு கூறவும், இதழ் வளைவில் மயங்கி அவள் இடை வளைவில் கிறங்கிக் கிடந்தவன் உடனே தடுத்து நீட்டிய கையை விலக்கிக் கொண்டான்.

 

'ச்சே உன் அழகைப் பார்த்து ஏமாந்துட்டேன்' என்று மனதுக்குள் புலம்பியபடி, "போ.." என்றும் ஒற்றைச் சொல்லில் விரட்டினான். சற்றுமுன் பின்னப்பட்ட மோகவலையானது முற்றிலுமாய் அறுந்து போனது அவனிடம்.

 

அவள் வெளியேறியதுமே, "ஆகாஷ்.." என்று கத்தியவன் அவன் உள்ளே வந்தவுடன் ரிமோட்டின் உதவியுடன் கதவை சாத்திவிட்டு, "ஆகாஷ், இந்த வீட்டுல நீ ஆறுமாசமா இருக்கல்ல.. ஸோ யார் யார் எப்படின்னு கெஸ் பண்ணிருப்ப ரைட்?.. எங்க கொஞ்சம் அவுத்துவிடு பார்ப்போம்!" என்று கவுச்சில் சென்று அமர்ந்து கொண்டதும ரைம்ஸ் வாசிப்பது போல் ஒப்பிக்க ஆரம்பித்து விட்டான் ஆகாஷ்.

 

"இந்த வீட்டோட ஆணிவேர் உங்களுடைய பாட்டி யங்கேஸ்வரி மேடம் சீஃப். அறுபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஏற்காட்டு இளவரசியான இவங்களுக்கும் ராய்கட்டைச் சேர்ந்த இளவரசர் அரவிந்த் மல்ஹோத்ராவுக்கும் இந்தியாவே திரும்பிப்பார்க்கிற அளவுக்கு ரொம்ப கிராண்டா காதல் திருமணம் நடந்தது சீஃப்.. அத்தம்பதிகளுக்கு மித்ரா தேவி, சேயோன் மல்ஹோத்ரான்னு ரெண்டு பசங்க சீஃப். மூத்தப்பொண்ணான மித்ரா தேவி தன் அம்மா யங்கேஸ்வரியின் விருப்பத்துல மும்பையின் பிரசித்திப்பெற்ற காளிமாதேவி கோவிலோட தர்மகர்த்தா சுவாமி பிரேமானந்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க சீஃப். இவங்களோட மூத்தப் பையன் யோகானந்த் ஒரு கார் ரேசர், இப்போ பாலிவுட் ஹீரோயின் நிதீஷா பாஜ்வாவுக்கும் இவருக்கும் தான் அடிக்கடி பத்திரிக்கையில கிசுகிசு வெளியாகிட்டிருக்கு சீஃப்.."

 

"மித்ரா தேவி மேடமோட ரெண்டாவது பொண்ணு பேரு ராஜலெட்சுமி சீஃப். தன் தாய் தந்தைக்கு அப்படியே ஆப்போசிட் அவங்க.. கடவுள் பக்தி துளியும் கிடையாது.. ராஜலெட்சுமிங்கிற தன் பெயரைக் கூட நியூமராலஜிப்படி ராஷ்மின்னு மாத்தி வச்சிக்கிட்டாங்க.. ரொம்ப வருஷம் கழிச்சிப் பிறந்த பொண்ணுங்கிறதால இந்த வீட்டுலயும் ரொம்ப செல்லம் அவங்களுக்கு.. வீட்ல இருக்கிற எல்லாருக்கும் அவங்களை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை.. ஆனா ரெண்டு வருசமா நீங்க மறுத்துக்கிட்டு வர்றதால இப்போ வெளி இடத்துல அவங்களுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க சீஃப். மித்ராதேவி மேடமோட மொத்தக் குடும்பமும் கடந்த இருபத்தஞ்சு வருசமா இந்த மல்ஹோத்ரா மாளிகைல தான் தங்கியிருக்காங்க.. காரணம் யங்கேஸ்வரி மேடமோட தீவிர கடவுள் பக்தியும் பிரேமானந்த சுவாமிகளோட நிர்வாகத்திறமையும் தான் சீஃப்.."

 

"யங்கேஸ்வரி மேடமுடைய ரெண்டாவது பையன் உங்களோட அப்பா சேயோன் மல்ஹோத்ரா சீஃப்.. இவரு நைன்டீன் நைன்டீஸ்ல இந்தியா சார்புல ஒலிம்பிக்ல கலந்துக்கிட்டு ஸ்விம்மிங் கேட்டகிரில கோல்டு மெடல் வின் பண்ணிருக்காரு சீஃப். மெடல் வின் பண்ணின அதே ஆண்டுல மும்பையின் அழகியா இருந்த ரேஷ்மா சௌகானையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. அவங்களுக்கு ஒரேயொரு பையன்.. பேரு அநேகன் மல்ஹோத்ரா.. அது நீங்க தான் சீஃப்.." என்று இதுவரை தங்குத்தடையின்றி சொல்லிக் கொண்டிருந்தவன் திடீரென தயக்கத்துடன் நிறுத்தவும்,

 

"ம்ம் மேல சொல்லு ஆகாஷ்!.. உன் ஃப்லோவ் எனக்கு பிடிச்சிருக்கு.." என்று அநேகன் அனுமதி தரவும் மீண்டும் தொடர்ந்தான் ஆகாஷ்.

 

"அநேகன் மல்ஹோத்ரா.. வயசு இருபத்தியெட்டு.. கேம்பிரிட்ஜ்ல எம்பிஏ முடிச்சிருக்கீங்க.. உங்க அப்பாவை மாதிரியே நீங்களும் எக்ஸலெண்ட் ஸ்விம்மர் சீஃப்.. அண்ட் உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது எல்லாமே உங்களுடைய பாட்டி தான் சீஃப்.. பாட்டியிடம் ரொம்ப பிடிச்சது பெட் டைம் ஸ்டோரீஸ். பிடிக்காதது அவருடைய மூட நம்பிக்கைகள். உங்களுக்கு பனிரெண்டு வயசாயிருக்கும் போது நடந்த ஒரு ஸ்விம்மிங் காம்பிடீசன்ல உங்களுடைய அப்பா தண்ணியிலயே மூழ்கி இறந்துட்டாங்க சீஃப். அதற்கடுத்த வருஷம் உங்களுடைய கண்ணு முன்னாடியே வீட்டுப் பால்கனில இருந்து குதிச்சு உங்களோட அம்மாவும் சூசைட் பண்ணி.."

 

அதற்கு மேல் வார்த்தைகள் உற்பத்தியாகவில்லை ஆகாஷிடம். சத்தியமாக அது துக்கம் தொண்டையை அடைத்ததால் அல்ல. தன்போக்கில் சொல்லிக்கொண்டே போன ஆகாஷ் அநேகனின் ரௌத்திர பார்வையின் புண்ணியத்தினாலேயே கடைசி வார்த்தையை விழுங்கி விட்டான். தனது கையிலிருந்த ரிமோட்டை அநேகன் தன் ஒரே அழுத்தத்தில் சுக்குநூறாக நொறுக்கியதைப் பார்த்து பயந்துப்போனவன் கொஞ்சம் யோசித்து வார்த்தைகளை விட்டிருக்கலாமோ என்றும் காலம் கடந்து யோசித்தான்.

 

அப்போது அவனை மேலும் யோசிக்கவிடாமல், "நோ.. நோ.. மேல சொல்லு.." என்றான் அநேகன். ஆனால் ஆகாஷிற்கு தான் பேசவே வரவில்லை. பேச முயற்சி செய்தால் தேவர் மகன் ரேவதியைப் போல் வெறும் காற்று தான் வந்தது.

 

அதைப் புரியாத அநேகன், "ம்ம்ம்.." என்று ராகமிழுத்தான்.

 

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தான் ஆகாஷ். "கடந்த அஞ்சு வருசமா தான் சீஃப் நீங்க மல்ஹோத்ரா நிறுவனத்தை நிர்வகிக்கிறீங்க. அதுக்கு முன்னாடி வரை நிர்வகிச்சிக்கிட்டு இருந்தது, உங்க மாமா பிரேமானந்த சுவாமிகள் தான் சீஃப்.. உங்களைத் தவிர உங்க மொத்த குடும்பமும் கடவுளின் மறு அவதாரமா நம்புறது பிரேமானந்த சுவாமிகளை தான் சீஃப்.." என்றவன் திக்கித் திணறி முடிக்கவும் எழுந்து அவனின் புஜ எலும்புகளை நொறுக்கினான் அநேகன்.

 

"வெல்! உன்னை என் அசிஸ்டண்டா சூஸ் பண்ணினதுல எந்த தப்பும் இல்லன்னு புரிய வச்சிட்ட ஆகாஷ்.. நகைப்பேழையை அடிக்கிற பிளான் பத்தி சொல்றதுக்கு முன்னாடி உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டியிருக்கு.. இங்க எல்லாரும் கடவுளோட மறுஅவதாரம்னு தலைல தூக்கி வச்சு கொண்டாடிட்டு இருக்காங்கப் பாரு பிரேமானந்தா, ஒருத்தரை தன் பேச்சிலேயே வசியம் பண்ணி மயக்குறதுல அவன் ஜெகஜாலக் கில்லாடி.. யெஸ்! அவன் மட்டும் இப்போ என் பாட்டிக்கிட்ட எல்லா சொத்தையும் நீங்க கோவில் சந்நிதானங்களுக்கு எழுதி வச்சா அந்த கண்ணனே உங்க பேரனுக்கு மகனா வந்து பொறப்பான் அத்தம்மான்னு மட்டும் சொல்லட்டும், என் பாட்டி உடனே கண்ணை மூடிட்டு எழுதிக் கொடுத்திருவாங்க.. அந்த அளவுக்கு நம்பிக்கை அவன் வார்த்தைகள் மேல.. அவன் ஒரு பிராடுன்னு நிரூபிக்க எனக்கு சிக்ஸ்டி செகண்ட்ஸ் போதும்.." விரலை இவ்விடத்தில் சொடுக்கிக் கொண்டான் அநேகன்.

 

"ஆனா இந்த மல்ஹோத்ரா சாம்ராஜ்யத்துக்குன்னு வெளிய ஒரு இமேஜ் இருக்கு ஆகாஷ்.. அதுக்கு ஒரு சின்ன கலங்கம் ஏற்பட்டாலும் என்னால அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது.. அதான் அவனை இன்னும் டச் பண்ணாம விட்டு வச்சிருக்கேன்.."

 

"ஓகே லிசன்! இன்னைக்கு ஈவினிங் ஃபைவ்வோ கிளாக் ரத்னா ஜூவல்லர்ஸ் கிட்டயிருந்து புதுப்பிக்கப்பட்ட பேழையை வீட்டுக்கு கொண்டு வந்ததும் அதை செவன்த் ஃப்ளோர்ல இருக்க லாக்கர்ல தான் வைப்பாங்க. அதுக்கு முன்னாடி வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் அதை தொட்டுக் கும்பிட ஒரு சான்ஸ் கிடைக்கும்.. அப்போ நீ என்கூட வந்து சுத்தி எல்லாத்தையும் ஒரு தடவை பார்த்துக்கிற ஆகாஷ்.."

 

"சீ திஸ் ரோபாட்டிக் ஃப்ளை! நீ நுழையப் போகிற அந்த லாக்கர் ரூமுக்கு வெளில ரெண்டு செக்யூரிட்டீஸ் எப்பவுமே காவலுக்கு நிப்பாங்க.  இதோ இந்த ஈயோட முதுகுல இருக்குது பாரு டேங்க்! அது ஃபுல்லா குளோரோபார்ம் நிரம்பியிருக்குது. இதோட கண்ணுலயும் கேமிரா பிக்ஸ் ஆகி இருக்கு.. நீ தள்ளி நின்னே ரிமோட் வச்சு இந்த ரோபாட்டிக் ஃப்ளைய ஆபரேட் பண்ணலாம்.. ஃபர்ஸ்ட் ஈயை செக்யூரிட்டீஸ் காதுக்கிட்ட கொண்டு போய் இந்த எல்லோவ் கலர் பட்டனை அழுத்தி க்ளோரோபார்மை ஸ்பிரே பண்ணிடுற.. கண்டிப்பா அவனுங்க காதுல ஈரம் பட்ட உடனேயே என்னன்னு கையில தொட்டுப்பார்த்து மூக்குக்கிட்ட கொண்டு போவானுங்க.. குளோரோபார்மோட  கான்செண்ட்ரேசன்ல ஸ்மெல் பண்ணின உடனேயே மயக்கம் தான்.."

 

கவனமாய் கேட்டுக் கொண்டிருந்த ஆகாஷின் முகத்தில் ஒரு பீதி தெரிந்தது.

 

"ரெண்டு பேரும் மயக்கம் போட்டப் பின்னாடி நீ உள்ளப் போய் நான் சொல்ற சீக்ரெட் நம்பர்ஸை அழுத்தி பேழையை வெளிய எடுத்திரனும் ஆகாஷ்.. எடுத்துட்டு லாக்கரை அதே மாதிரி க்ளோஸ் பண்ணி வச்சிட்டு, நேரா பேழையை என் ரூமுக்கு தூக்கிட்டு வந்திரனும்.. எதுக்கும் சேஃப்டிக்கு முகமூடி, கிளவுஸ் எல்லாம் யூஸ் பண்ணிக்கோ.. காட் இட் ஆகாஷ்!.." என்றதும் ஏசியை மீறி வியர்த்திருந்த ஆகாஷ் தன் முகத்தை துடைத்துக் கொண்டே, "எல்லாம் ஓகே சீஃப்.. ஆனா.." என்று இழுத்தான்.

 

"புரியுது ஆகாஷ்.. எல்லாம் ஓகே பட் எல்லா ஃப்ளோர்லயும் ஒரு இடம் விடாம கண்காணிப்பு கேமிரா இருக்குமே அதை என்ன பண்றதுன்னு தானே கேட்க வர்ற?.. இந்த மாளிகைல இருக்குற எல்லாரைப் பத்தியும் தெரிஞ்சு வச்சிருக்கிற நீ, இன்னும் இந்த மாளிகையைப் பத்தி தெரிஞ்சுக்கலைப் பாரு.. நீ பயப்படுற மாதிரி மல்ஹோத்ரா மாளிகைக்குள்ள எந்த கேமிராவும் கிடையாது ஆகாஷ்.. காலம் காலமா இந்த மாளிகைக்குள்ள கடைபிடிச்சிட்டு வர்ற ரூல்ஸ்ல இதுவும் ஒன்னு.. அதே மாதிரி சுத்தி ரெண்டு கிலோமீட்டருக்கு எங்களுக்குத் தெரியாம யாரும் உள்ளேயும் வர முடியாது.. வெளியேயும் போக முடியாது.."

 

பள்ளிக் குழந்தைக்கு பாடமெடுப்பது போல் அநேகன் தனக்கு சொல்லிய எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொண்ட ஆகாஷ் இறுதியில் வேறுவழியின்றி, "டன் சீஃப்.." என்று அவன் தந்த பொருட்களையெல்லாம் வாங்கிக்கொண்டு வெளியேறிவிட்டான்.

 

செல்லும் வழியில், 'திருடிய பொருளை இவருடைய அறைக்கே கொண்டு சென்றால் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கும் போது பேழை வெளியே எங்கேயும் போயிருக்க வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சிக்கிட்டு, போலீஸ் இருபது பேரைக்கொண்டு ஒரு ஒருமணி நேரம் இந்த வீட்டை சோதனைப் போட்டாலே போதுமே..' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட ஆகாஷ், அதை அநேகனிடம் சொல்லத் துணிவில்லாமல் தனது வேலைக்கான ஆயத்தங்களில் இறங்கிவிட்டான்.

 

ஆனால், ஆகாஷ் தன்னறையை விட்டு வெளியேறியதுமே, "இப்போ நீ என்ன நினைச்சிக்கிட்டு இருப்பேன்னு எனக்குத் தெரியும் ஆகாஷ்.. அந்தப் பேழையை நான் என்னுடைய அறையில் தான் மறைத்து வைக்கப் போகிறேன் என்று நீ நினைத்தால் உன்னை விட பெரிய முட்டாள் யாருமில்லை ஆகாஷ்.. திஸ் இஸ் மை கேம் ஆகாஷ்.. மை கேம்.." என்று அவனை யூகித்து சத்தம் போட்டுச் சிரித்தான் அநேகன் மல்ஹோத்ரா.

வருவாள்…

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்

குருட்டு உலகமடா - இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்

திருட்டு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்

திருந்த மருந்து சொல்லடா!

 

- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

 

நாவலை வாசித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை பதிவிட்டுச் செல்லுங்கள் ப்ரெண்ட்ஸ். ஏனெனில் அதுவே என் எழுத்துகளை திருத்தவும் தீட்டவும் உதவும். நன்றி❣️

This post was modified 3 weeks ago by Shivani Selvam
This post was modified 2 weeks ago by Shivani Selvam

ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 1 year ago
Posts: 409
04/11/2020 4:06 am  

அத்தியாயம் 4

அன்றைய நாளின் இரவு உணவின் போது அனைவரும் டைனிங் டேபிளில் குழுமி இருந்த சமயம், மெதுவாக பேச்சைத் துவங்கினார் யங்கேஸ்வரி.

 

"நேகன் தயவு செஞ்சு உன் பிடிவாதத்தை விடு.. ராஷ்மிக்கு என்ன குறை? ஏன் அவளை வேண்டாம்னு சொல்ற?.. சின்ன வயசுலயிருந்தே நீதான் அவளோட புருஷன்னு கனவுகளோட வளர்ந்தவடா அவ.. நீ இப்படி வீம்பா இருக்கியேன்னு நாங்களும் கடந்த ஒரு வருசமா அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு வர்றோம்.. உன்னை மனசுல வச்சுக்கிட்டு யாரையுமே பிடிக்கலைன்னு சொல்றாடா அவ.." என்றதும், எதிர்புறத்தில் தன் பாட்டி தன் தங்கைக்காக கெஞ்சிக் கொண்டிருப்பதை வேண்டா வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் யோகானந்த்.

 

"பாட்டி ப்ளீஸ்.. ஏன் இந்தியாவுக்கு அடிக்கடி வரமாட்டேங்குறேன்னு சாப்பிட உட்காருறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி கேட்டீங்களே அதுக்கு இதோ உங்களோட இந்தப் பேத்தியும் ஒரு காரணம்.. பிடிக்கலைன்னு சொன்னா விடுங்களேன்.."

 

"எப்படிடா விட முடியும்.. உன் லைஃப்போட சேர்த்து நீ இப்போ இவ லைஃப்பையும் நாசம் பண்ணிக்கிட்டு இருக்கிற.. புரியுதா?.."

 

"ஸோ, நான் இப்போ என்ன செய்யணும் பாட்டி?" தட்டில் கையை கழுவியபடியே கேட்டான் அநேகன்.

 

"ம்ம் ராஷ்மியை புடிக்கலைனா நாங்க காட்டுற போட்டோவுல உனக்கு எந்தப் பொண்ணை புடிச்சிருக்கோ அவளைப் பார்த்து கல்யாணம் செஞ்சிக்கனும்.."

 

அவனுக்கு கிடுக்குப்பிடி போடுவதாய் நினைத்துக் கொண்டு இவ்வாறு சொன்னார் யங்கேஸ்வரி.

 

ஆனால் அநேகன், "சரி.. அப்புறமா போட்டோவை என் ரூமுக்கு அனுப்பி வைங்க.." என்றதோடு சென்றுவிட, அவனது பதிலில் மற்றவர்களோடு சேர்த்து தானும் அதிர்ந்துப்போய் அமர்ந்திருந்த பிரேமானந்த சுவாமிகளிடம்,

 

"சுவாமிஜி பார்த்தீங்களா! நேத்துதான் உங்கக்கிட்ட நேகனை கல்யாணத்துக்கு ஒத்துகிற மாதிரி செய்யச்சொல்லி தேவிக்கிட்ட பிரார்த்தனை பண்ணச் சொன்னேன்.. இப்போ பார்த்தீங்களா உங்க பிரார்த்தனையோட பலனை!.." என்று யங்கேஸ்வரி குதூகளிக்கவும், தனியே தன் மனைவியுடன் மெத்தையிலமர்ந்து பாலும் பழமும் உண்டு கொண்டிருந்த பிரேமானந்த சுவாமிகள், "எல்லாம் தேவியின் மகிமை!.." என்று தனது வலது கையை உயர்த்தினார்.

 

தன்னறைக்கு வந்த ஒருமணி நேரத்திற்குப் பின்பு போனில் ஆகாஷிடம் லாக்கரின் ரகசிய இலக்கங்களை சொல்லிக் கொண்டிருந்த அநேகனை பின்னால், "சார்.." என்றொரு குரல் அழைக்க, திரும்பிப் பார்த்தான் அவன். அவனது பாட்டியின் உத்தரவில் புகைப்படங்கள் நிரம்பிய கவருடன் நின்றிருந்தாள் ஆராதனா.

 

விளக்கி வைத்த குத்து விளக்கு போல் பளபளவென்றிருந்தவளை நிமிர்ந்துப் பார்த்து கவரை பிரிக்குமாறு கூறிவிட்டு சோபாவில் மடிக்கணினியின் முன் சென்று அமர்ந்து கொண்ட அநேகன், அருகில் நின்று அவள் ஒவ்வொரு புகைப்படமாகக் காட்ட காட்ட நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். இறுதியில் அவளிடமே, "எந்தப் பொண்ணு அழகா இருக்கா..?" என்றும் ஆலோசனைக் கேட்டான்.

 

"என்கிட்ட கேட்டால் எப்படி சார்?.. உங்களுக்குத்தானே பெண்ணைப் பிடிக்கணும்?.." என்றவள் தயக்கமாய் கூற,

 

அநேகன், 'போனுக்கு சார்ஜ் போட்டியா?' என்பது போல் விளையாட்டிற்கு, "நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா..?" என்று கேட்டான்.

 

அதில் ஹைவோல்டேஜ் மின்னல் கீற்றொன்று தன்னைத் தாக்கியது போல் முகபாவனை காட்டிய ஆராதனா, "சாரி சார், என்னைப் பார்த்தவுடனேயே நீங்க மனசுல காதல வளர்த்துக்குவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல.. சின்ன வயசுலயே எனக்கு தட்சிணா மூர்த்தி மாமா, தட்சிணா மூர்த்தி மாமாவுக்கு நான்னு பெரியவங்க முடிவு பண்ணி வச்சிட்டாங்க சார்.. என்ன மறந்திடுங்க.. ப்ளீஸ்.." என்று ஓவர் ஆக்டிங் செய்யவும்,

 

"ஓஹ் ஆல்ரெடி எங்கேஜ்டா?.. இட்ஸ் ஓகே.. நீ நினைக்கிற மாதிரி எனக்கு உன்மேல லவ்வெல்லாம் இல்ல.. ஜஸ்ட் லஸ்ட் தான்.. உன் அழகு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. ஒன் டே மட்டும் உன்னால என்கூட ஸ்டே பண்ண முடியுமா..?" என்று கேட்டு அலுங்காமல் குலுங்காமல் அவள் தலையில் ஹைட்ரஜன் குண்டொன்றைத் தூக்கிப்போட்டான் அநேகன்.

 

"அய்யோ என்ன சார் இது! இப்படி அசிங்க அசிங்கமா பேசுறீங்க.. என் மாமாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.." என்று காதுகளை பொத்திக் கொண்டவளைப் பார்த்து,

 

"நோ! நோ! அவனுக்கு நம்ம சொல்ல வேணாம் ஆராதனா.." என்றான் அநேகன்.

"அய்யோ சார்! அதெல்லாம் தப்பு!..  நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. என்னை அப்படியொரு கண்ணோட்டத்துல பார்க்காதீங்க! ப்ளீஸ்!.."

 

"இதுல அசிங்கம்லாம் எதுவுமில்ல ஆராதனா.. ரெண்டு பேருக்குமே விருப்பம் இருக்கும் போது அதுல தப்பு ஒன்னுமில்ல.. உனக்கு இன்டெரஸ்ட் இல்லைங்கும் போது வேணாம் ஓகே?.." என்று அவளது வெகுளி போன்ற நடிப்பில் தொடர்ந்து அவளிடம் அவன் விளையாடிக் கொண்டிருக்க, டீபாயில் இருந்த கண்ணாடிப் பூச்சாடியைக் கொண்டு அவன் தலையில் ஒரே போடாக போட்டு விடலாமா? என யோசித்தவள், பின் தான் வந்த காரியமே கெட்டுவிடும் எனப் பயந்து புகைப்படங்களை டீபாயிலேயே போட்டு விட்டு வெளியேறி விட்டாள்.

 

சிறிது நேரத்தில் கையில் புகைப்படங்கள் அடங்கிய கவருடன் யங்கேஸ்வரியைப் பார்க்க வந்த அநேகன் ஒரு புகைப்படத்தைக் காண்பித்து, "இந்தப்பொண்ணு ஓகே பாட்டி.." என்று கூற,

 

அதைப் பார்த்துவிட்டு, "ஏன் நேகன் இப்படி பண்ற?.. ராஷ்மி உனக்காக.." என்று மறுபடியும் ஆரம்பித்தவரை,

 

"பாட்டி நீங்க சொன்ன மாதிரியே ஒருத்தியை செலக்ட் பண்ணிட்டேன்.. இன்னும் ஏன் இப்படி ராஷ்மியையே என்கூட ஜோடி சேர்க்கப் பார்க்குறீங்க?.. நான் இந்த வீட்டுக்கு வர்ற ஒரே ரீசன் நீங்க மட்டும் தான்.. எப்பவும் நான் உங்கக்கிட்ட சொல்றதும் ஒன்னு தான்.. இங்க யாருமே நிஜம் இல்லை பாட்டி!.." என்று குரலை உயர்த்தி இருந்தவன், அப்போது பார்த்து கையில் வெந்நீர் நிரம்பிய டப்புடன் உள்ளே வந்த ஆராதனாவைக் கண்டு விலகி நின்றான்.

 

யங்கேஸ்வரி மென்மை தடவிய குரலில், "உன்னை கெட்ட சக்தி ஒன்னு ஆட்சி செய்யுது நேகன்.. அதான் நீ இப்படியெல்லாம் பேசுற.. ஒரு ரெண்டு நாள் எங்கக்கூட தியான கூட்டத்துல வந்து கலந்துக்கோ.. எல்லாம் சரியாகிடும்.." என்று கூறியது தான் தாமதம்,

 

"ஜஸ்ட் ஸ்டாப் இட் பாட்டி!.. நீங்களும் நானும் பண்ணின பாவத்துக்கு.." என்று ஆவேசமாகக் கத்தி ஏதோ சொல்ல வந்தவன், மலங்க மலங்க விழித்த ஆராதனாவைப் பார்த்து சற்று நிதானித்தான். பின், அங்கிருந்த அலங்காரப் பாசித்திரையை எட்டுத்திக்கும் சிதற விட்டு வெளியேறிவிட்டான்.

 

அவன் வெளியேறியதும் தனது காலிற்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த ஆராதனாவின் முகத்தையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்த யங்கேஸ்வரி, "ஆராதனா, அந்த பீரோல ஆல்பம் ரெண்டு இருக்கும் எடுத்துட்டு வாம்மா" என்றார். அவளும் அதை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தாள்.

 

அதை திறந்துப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார். "இதோ! இவர் தான் நேகனோட தாத்தா ஆராதனா.. அவர் கழுத்துல இருக்குறது யார் தெரியுமா?.. இப்போ கய்யோ முய்யோன்னு குதிச்சிட்டு போனானே என் பேரன் நேகன், அவன் தான்.. சின்ன வயசுல நேகன் அவங்க தாத்தாவை தவிர்த்து வேற யாருக்கிட்டயுமே போக மாட்டான்.. அதான் குணத்துலயும் கோபத்துலயும் அப்படியே அவங்க தாத்தா மாதிரியே இருக்கான்.."

 

"இதோ இவங்க தான் நேகனோட அப்பா, அம்மா.. நேகனுக்கு பனிரெண்டு வயசிருக்கும் போது தான் ஆராதனா அந்த விபத்து நடந்தது. நேஷனல் லெவல்ல நடந்த ஒரு ஸ்விம்மிங் காம்பிடீசன்ல ப்ரீத்-ஹோல்ட் பிளாக் அவுட்டாகி தண்ணியிலயே மூழ்கி இறந்து போயிட்டான் என் பையன்.. அந்த இழப்புலயிருந்து மீளமுடியாம என் பையன் இறந்த ஆறுமாசத்துலயே நேகனோட தாத்தாவும் மாரடைப்புல காலமாகிட்டார்.. எங்க கஷ்டகாலம் அதோட முடிஞ்சிருக்கக் கூடாதா! முடியலையே ஆராதனா.. அதுநாள் மட்டும் தன் பையன் தான் தன்னோட வாழ்க்கைன்னு வாழ்ந்துக்கிட்டு இருந்த ரேஷ்மா திடீருன்னு பைத்தியம் புடிச்ச மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சா.. அவளை நாங்க டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாம்னு முடிவு பண்ணினப்போ தான் பாவி எங்க எல்லாரையும் ஏமாத்தி சூசைட் பண்ணிக்கிட்டா.. யாருக்கும் இப்படியொரு இழப்பு வரக்கூடாது ஆராதனா.." என்ற யங்கேஸ்வரி, ஆராதனா தன்னிடம் டிஸ்யூவை நீட்டிய போதே தான் அழுவதை உணர்ந்தார்.

 

"இந்த போட்டோக்களையெல்லாம் பார்த்தியா ஆராதனா! என் நேகன் எப்படி சிரிச்சிக்கிட்டு இருக்கான்னு.. எவ்வளவு வசீகரம் இல்ல அவன் முகத்துல!.. இந்த சிரிப்பை மீட்டெடுக்குறதுக்குத் தான் அந்த காளிமா தேவிக்கு ஒவ்வொரு சேவகமா நான் செஞ்சிக்கிட்டு வரேன். காளிமாதேவிக்கு காணிக்கை செலுத்துற ஒவ்வொரு சமயமும் நம்ம சுவாமிஜிக்கு அருள் வரும் ஆராதனா.. போனப் பௌர்ணமிக்கு அருள் வந்தப்போ இன்னும் மூணு மாசத்துக்குள்ள நேகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா அவனுக்கு வரப்போகிற மிகப்பெரிய கண்டத்துல இருந்து அவனைக் காப்பாத்துறது கஷ்டம்ன்னு சொன்னாரு.."

 

"அதைக்கேட்டதும் துபாய்ல இருக்கிற நேகனை எப்படி இங்க இந்தியாவுக்கு வர வைக்கிறதுன்னே எனக்குத் தெரியல.. அப்புறம் சுவாமிஜி தான் தன் தியானத்துல காளிமாதேவியக் கேட்டு கிஷோரை பலி கொடுக்கலாம்னு சொன்னாரு.. அப்போ எனக்கு வேற வழியும் தெரியல.. எப்படி கிஷோரை கொன்னா நேகன் வருவான்னு பார்க்குறியா?.. கிஷோர்ன்னா அவனுக்கு கொள்ளப்பிரியம் ஆராதனா.. அவன் எம்பிஏ பண்ண கேம்பிரிட்ஜ் போகிற முன்னாடி எனக்கு பாதுகாப்புன்னு சொல்லி வாங்கிக் கொடுத்துட்டு போனவன் தான் கிஷோர்.."

 

"ஆமாம் ஆராதனா, நேகன் ஒரு ஸ்டேஜ்ல மனுசங்களை விட மிருகங்களை அதிகமா நம்ப ஆரம்பிச்சிட்டான்.. அவன் காலேஜ் போனதுக்கப்புறம் வந்த என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எனக்கு ஒவ்வொரு செல்லப்பிராணியை வாங்கி ப்ரெசண்ட் பண்றதையே வழக்கமாகவும் வச்சுக்கிட்டான்.. இதோ இந்த லோரா, பூனை, முயல்குட்டி, மீன்தொட்டி, எல்லாமே அவன் ப்ரெசண்ட் பண்ணினது தான்.."

 

"கிஷோர் இங்க வந்ததிலிருந்தே அவன் மேல ரொம்பப் பாசமா இருந்தான் நேகன். ஆனா, ஆறு மாசத்துக்கு முன்னாடி நேகனையே பார்த்துக் குறைக்க ஆரம்பிச்சுட்டான் கிஷோர். நாய் நன்றியுள்ள பிராணி.. அதெப்படி தன்னை சீராட்டிப் பாராட்டி வளர்த்தவனையே மறந்து போகும்ன்னு எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம்.. அப்போ தான் சுவாமிஜி, 'ஒரு அசுர சக்தி நேகனை ஆரோகணிக்க ஆரம்பிச்சதோட அறிகுறி தான் கிஷோர் கிட்ட தெரிஞ்ச மாற்றம்'ன்னு சொன்னாரு.. இப்போ மொத்தமா அந்த கெட்டசக்தி அவனை பீடிக்க இருக்கிறதாகவும், அதைத்தடுக்க சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னும் சொன்னாரு.. அதான் நாங்களே பிள்ளை மாதிரி வளர்த்த கிஷோரை..." மேற்கொண்டு பேச முடியவில்லை யங்கேஸ்வரியால்.

 

பாவம்! பிரேமானந்தா நாயை மாற்றியக் கதையை அநேகன் அறிந்த அளவு யங்கேஸ்வரி அறிந்திருக்கவில்லை. இல்லையென்றால் காப்பகத்தில் பத்திரமாக இருக்கும் கிஷோரை நினைத்து இப்படி அழுவாரா?

 

"மணி பனிரெண்டரையாகப் போகுதும்மா.. ரொம்ப நேரம் முழிச்சிருக்குறது உங்க உடம்புக்கு நல்லதில்ல.." என்ற ஆராதனாவைப் பார்த்து இல்லையென்று மறுத்து தலையாட்டிய யங்கேஸ்வரி, "ஆனா அந்தப்பலிக்கு பலனா கண்டிப்பா என் நேகனுக்கு நல்ல காலம் பிறக்கும் ஆராதனா... அவன் அந்த கண்டத்துலயிருந்து நிச்சயம் தப்பிச்சிடுவான்.." என்று தன் கண்ணீரின் பலனாய் கண்கள் மின்ன சொல்லிக் கொண்டிருந்தவரைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருந்தது ஆராதனாவுக்கு. அவரிடம் இதுபோல் கண்டம், பலி, பரிகாரம் எனக்கூறி மூளையை மழுங்கடித்திருக்கும் பிரேமானந்தாவை நினைக்க நினைக்க ஆத்திரமாகவும் வந்தது.

 

யங்கேஸ்வரி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றப் பின் அவ்வறையோடு ஒட்டிய தனது படுக்கையறைக்குச் செல்லாமல் வெளியே மாடிப்படியை நோக்கிச் சென்ற ஆராதனா, தான் செல்லவிருக்கும் இடத்தில் தனக்கு முன்னமே ஒரு அபாயம் காத்திருப்பதை அறியாமல் போனாள்.

வருவாள்…

 

கலைமகள் கைப் பொருளே - உன்னை

கவனிக்க ஆள் இல்லையோ..

விலை இல்லா மாளிகையில் - உன்னை

மீட்டவும் விரல் இல்லையோ..

 

- கண்ணதாசன்

This post was modified 2 weeks ago by Shivani Selvam

ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 153
04/11/2020 6:11 pm  

Agamotham ellamey unmai illa intha vetla  . Super sama interesting a poguthu


ReplyQuoteShivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 1 year ago
Posts: 409
05/11/2020 2:30 pm  

 

அத்தியாயம் 5

நள்ளிரவில் தான் சொன்னபடியே ஆகாஷ் பேழையைக் கொண்டு வந்துத் தர, அதனை இரண்டாம் தளத்தில் பிரேமானந்தாவின் தியான மண்டபம் நோக்கி கொண்டுச் சென்ற அநேகன், அதை அங்கிருந்த காளிமாதேவி சிலைக்குப் பின்னால் ஒளித்து வைத்து விட்டு திரும்பிய சமயம், யாரோ தியான மண்டபத்திற்குள் நுழைவது போல் தெரிந்தது.

 

கேட்ட சத்தத்தில் அநேகன் அங்கிருந்த திரைச்சீலைக்கு பின்னால் சென்று மறைந்து கொள்ள, கையில் தனது போனில் இருந்த டார்ச்சின் மூலம் நேர்க்கோடு போட்டுக்கொண்டே வந்த ஆராதனா நேரே காளிமாதேவி சிலைக்கு அருகில் வந்து எதையோத் தேடி ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

 

முதலில் சிலைக்குப் பின்னால் கிடந்த வயர்களின் ஆதியையும் அந்தத்தையும் ஆராய்ந்தவள் பின் அனைத்தையும் தன் கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டாள்.  

 

அப்போது அநேகன் திருடிக்கொண்டு வந்தப் பெட்டியும் அங்கிருப்பதைக் கண்டவள், அதிர்ச்சியுடன் அப்பேழையை திறந்து அதனுள் சிறைப்பட்டு கிடந்த ஆபரணங்களுக்கு சாபவிமோசனம் தந்தாள். டார்ச்சின் உபயத்தில் நடந்த முழு அகஎதிரொளிப்பில் அனைத்து வைரங்களும் கார்காலத்து மின்னலின் ஜொலிப்பாய் கண்ணைப் பறிக்கும் வண்ணம் ஜுவாலித்தன.

 

அவள் செய்வதனைத்தையும் திரைச்சீலையை விலக்கிப் பார்த்துக் கொண்டிருந்த அநேகன், அவள் அப்பாவியாய் தன்னிடம் வேஷம் போட்டதை நினைத்து தாடை இறுகினான்.

 

இப்போது அவள் நகைகளை தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஏளனமாய் தன் இதழையும் வளைத்தவன், அவள் அதிலிருந்து ஒரு சிறு மூக்குத்தியைக் கூட எடுக்காமல் அப்படியே மூடி வைப்பதைக் கண்டு வியப்பும் கொண்டான்.

 

அவள் உள்ளே நுழைந்தது முதல் வெளியேறும் வரை அவளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனித்து வந்தவன், அவள் வெறும் வேலைக்காரியாய் மட்டும் தனது வீட்டிற்குள் நுழையவில்லை, உளவுக்காரியாகவும் நுழைந்துள்ளாள் என்பதை எந்தப் பிரயத்தனமும் செய்யாமல் கண்டு கொண்டான்.

 

பிரேமானந்த சுவாமிகளை கழி திங்கச்செய்ய வல்ல ஆதாரங்களையெல்லாம் தனது போனில் புகைப்படமெடுத்து விட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறிய ஆராதனா தனதறையின் பால்கனி பக்கம் வந்து நின்று அவுட் ஹவுஸை பார்த்தவாறே தட்சிணாமூர்த்திக்கு தனது போனிலிருந்து அழைப்பு விடுத்தாள். அப்போது அவளின் தோளின் மீது கனமான கரமொன்று விழ, அதிர்ந்து திரும்பினாள்.

 

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது கணக்காக அவள் யாரை தற்போது சந்திக்க நினைத்தாளோ அவனே அவளின் கண்முன்பு ஆஜராகியிருந்தான்.

 

அவனைக் கண்டவள் "ஆது.." என்று உற்சாகமாய் கூவ, அவள் வாயை தன் கரம் கொண்டு மூடி, "மெதுவா பேசு ஆரா!.." என்று எச்சரித்தான் ஜானகியின் தவப்புதல்வன் ஆத்ரேயன்.

 

"என்னாச்சு ஆரா?.. நான் சொன்ன மாதிரியே சிஸ்டம் ப்ரொஜெக்டர் மாதிரி ஏதாவது இருந்ததா அங்க?"

 

"நம்பவே முடியல ஆது!.. இங்கப்பாரு நீ சொன்ன மாதிரியே தான் எல்லாம் இருக்கு.." என்று தான் எடுத்த புகைப்படங்களை எல்லாம் காண்பித்தாள் ஆராதனா.

 

"நான் தான் ஏற்கனவே இதெல்லாம் ஹோலோகிராம் டெக்னிக்காத்தான் இருக்கும்னு சொன்னேன் இல்ல.. நீதான் சுஜாதாவோட கொலையுதிர்காலம் கதையை வாசிச்சிட்டு வாந்தியெடுக்காதன்னு கிண்டல் பண்ணின.. என்னோட ஹெட் மிஸ்டர் ஜக்தீஷ் மிஸ்ராவும் உன்னை மாதிரியே தான், 'பிரேமானந்தா அவனை மாதிரியே டூப் ஒருத்தனை செட் பண்ணி தான், ஒரே நேரத்துல தன் உருவம் ரெண்டு இடத்துலயும் இருக்கிற மாதிரி கேம் பிளே பண்ணி நம்மளை கன்பியூஸ் பண்றான்'னு சொன்னாரு.. இப்போ நான் கெஸ் பண்ணினது சரியாகிடுச்சிப் பாரு.."

 

"ஆது, இன்னைக்கு அந்த பாட்டியம்மா இல்ல! அநேகனோட சைல்ட்குட் பத்தி சொன்னாங்க.. கேட்க ரொம்ப பாவமாயிருந்தது.. சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டிருப்பான் போல இந்த அநேகன்.. இவ்ளோ பெரிய பணக்காரனுக்கு பின்னாடியும் ஒரு சோகக்கதை இருக்கு பாரேன்.. நாம தான் கொஞ்சம் காசுப் புரள்கிறவனைப் பார்த்தாலே வயித்தெரிச்சல்ல அவனுக்கென்னப்பாங்கிறது.. ஆனா கூடயிருந்து பார்த்தால் தான் அவன் படுற கஷ்டம் என்னன்னு நமக்குத் தெரியுது...." என்றவள் கழிவிரக்கத்தில் கூறவும்,

 

"அவனும் மனுஷன் தானே ஆரா.." என்ற ஆத்ரேயன், அதன்பின் தன் கடமைக்கடலில் குதித்தான்.

 

"ஸோ, இந்த பிரேமானந்தா ஹோலோகிராம் யூஸ் பண்றது ப்ரூவ் ஆகிடுச்சி.. இவன் தான் ஒவ்வொரு பௌர்ணமி அப்பவும் இங்க தன் ஹோலோகிராம் இமேஜை செட் பண்ணி வச்சிட்டு சுரங்கப் பாதை வழியா வெளிய தப்பிச்சு போயிடுறான்.. ஹேய்! இன்னும் பௌர்ணமிக்கு ஒருவாரம் தான் இருக்கு இல்ல.. நீ இந்த ஒரு வாரமும் பிரேமானந்தாவோட தியான கூட்டத்துல கலந்துக்கோ ஆரா.."

 

"ஹேய்! என்ன விளையாடுறியா ஆது!.. தியான மண்டபத்துக்குள்ள நுழையனும்ன்னா ஃபிங்கர் பிரிண்ட் தேவைன்னு தான் ஏற்கனவே பிரார்த்தனை கூட்டம்கிற பேர்ல அந்த பிரேமானந்தா போடுற மொக்கையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கேன்.. இப்போ தியான கூட்டத்துல வேற கலந்துக்கணுமா?.."

 

"ஆமா ஆரா, அப்போ தான் பௌர்ணமி தியான கூட்டத்துல கலந்துக்கும் போது யாருக்கும் உன் மேல சந்தேகம் வராது.. கரெக்ட்டா பௌர்ணமி அன்னைக்கு மட்டும் இடுப்புல நான் தர்ற டம்மி ரிவால்வரை சொருகிட்டு போ ஆரா.. எல்லாரும் தியானத்துல கண்ணை மூடி உட்கார்ந்திருக்கும் போது, எப்போ பிரேமானந்தா தன் ஹோலோகிராம் இமேஜை யூஸ் பண்றானோ அப்போ நீ எந்திருச்சி துப்பாக்கியைக் காட்டி எல்லாரையும் மிரட்டு.."

 

"மிரட்டவா?.." ஆராதனாவின் விழிகள் விரிந்தது.

 

"ஆமா! அப்போ நீ பண்றதையெல்லாம் ரெண்டாவது வரிசைல உட்கார்ந்திருக்கிற நம்ம ஹெல்பர் விமலா மேடம் பட்டன் கேமராவுல ரெகார்ட் பண்ணுவாங்க.. நீ ரிவால்வரை காட்டி மிரட்டிக்கிட்டே அங்கயிருக்கிற வயர் கனெக்சன்ஸை எல்லாம் ரிமூவ் பண்ணி உண்மை என்னன்னு எல்லாருக்கும் சொல்லு.. அதேநேரம் அங்க நடந்திருக்க குழறுபடி தெரியாம மெதுவா சாவகாசமா தியான கூட்டம் முடியுற சமயத்துல சுரங்கப்பாதை வழியா பிரேமானந்தாவும் மேல வருவான்.. அதுக்குள்ள நான் இதெல்லாம் பதிவான வீடியோவை போலீசுக்கு அனுப்பி அவனை கைது பண்றதுக்கான ஏற்பாடோட அங்க வந்துருவேன்.. எப்படி என் ஐடியா!.."

 

"ஆமா? இதை வச்சு நீ பிரேமானந்தாவோட அலிபியை ஒண்ணுமில்லாம பண்ணிட்டாலும் அவன் தான் அஞ்சு கொலைகளைப் பண்ணினான்னும் அதுக்கான மோட்டிவையும் எப்படி கண்டுபிடிப்ப ஆது?.."

 

"நான் ஏற்கனவே இந்த மாளிகையோட மூலை முடுக்கெல்லாம் தேடிட்டேன் ஆரா, ஒரு ஆதாரமும் சிக்கல.. பிரேமானந்தாவே வாயைத் திறந்தா தான் உண்டு.. சுரங்கப்பாதைக்குள்ள போறதுக்கான கைடன்ஸும் அது முடியுற இடம் எதுன்னும் தெரிஞ்சாலே போதும், மோட்டிவ் எல்லாம் ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்.."

 

"ஆமா ஆது? நீ இப்போ எங்கேயிருந்து வர்ற?.. மேல ராஷ்மியோட ரூம்லயிருந்து தானே?.. இதெல்லாம் சரியில்ல ஆது.. ஆல்ரெடி ஒருத்திக்கூட நிச்சயதார்த்தம் முடிச்சிட்டு இங்க ஒருத்தி கூட.. ப்ச்.. எல்லாம் பொய்யின்னு தெரியுறப்போ அவ மனசு என்ன பாடுபடும்ன்னு யோசிச்சிப் பார்த்தியா?. "

 

"ஏன் ஆரா நீ வேற!.. நான் மட்டும் ஆசைப்பட்டா அவக்கூட பேசிக்கிட்டு இருக்கேன்.. என் சிட்ஷுவேசன் என்னன்னு உனக்குத் தான் தெரியுமே.."

 

"இருந்தாலும் அந்தப் பொண்ணுக்கு இது மனசளவுல எவ்வளவு பெரிய அடியா இருக்கும் ஆது!.."

 

"என் ஜாப்ல எனக்கு எந்தவித சென்டிமெண்ட்ஸும் கிடையாது ஆரா.. இந்த வீட்டுக்குள்ள நான் எந்த பிரச்சனையும் இல்லாம நுழையுறதுக்கு எனக்கு இருந்த ஒரே கீ அவ தான்.. நீ பெருசா எதையும் நினைச்சு குழப்பிக்காத.. டேக் கேர்.. குட் நைட்.." என்று கன்னத்தில் தட்டிவிட்டு அவன் பைப்பில் கீழே இறங்கி விட, தன்னறைக்குச் செல்லும் முன்பு வழியில் இசை போன்ற சீழ்க்கையொலி எழுப்பும் இரண்டு லோரா பறவைகளின் ஆலோலம் கேட்டு அவைகளை திரும்பிப் பார்த்தாள் ஆராதனா.

 

பின் அவைகளை நெருங்கி, "ஓய்! என்ன ரெண்டு பேருக்கும் லவ்ஸ்ஸா..?" என்று குரல் கொடுத்துச் சென்றவள், தனக்கான அறைக்குள் நுழையும் வரை அந்த சீழ்க்கையொலியை கேட்டு ரசித்துக் கொண்டேப் போனாள். அவ்வொலியின் தாக்கத்தில் தன் அறைக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே கனவுலகிற்குள்ளும் காலடி எடுத்து வைத்தாள் ஆராதனா.

………………………………………...

ஆராதனா தியான மண்டபத்தை விட்டு அகன்ற ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தானும் பேழையுடன் அவ்விடத்தை விட்டு வெளியேறி தனதறைக்கு வந்த அநேகன், துரிதமாகச் செயல்பட்டு மீண்டும் ஆகாஷை முகமூடி, கையுறை சகிதமாய் தனதறைக்கு வரச்செய்தான். பின் பேழையை எடுத்த இடத்திலேயே மீண்டும் கொண்டுப்போய் வைக்குமாறு அவனுக்கு உத்தரவிட்டான்.

 

ஆகாஷிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. "இதற்கு அரிசிமூட்டை குடவுனிலேயே இருந்திருக்கலாமே திமிங்கலம்.." என்று கலகலப்பு படக்காமெடியை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், பணிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டு கொட்டாவியோடு தனதறைக்குச் சென்றுவிட்டான்.

 

ஆனால் அன்றைய இரவில் அநேகனின் விழிவானத்தில் மட்டும் தூக்கமெனும் நிலவு பிரகாசிக்கவில்லை. அதன் விளைவாய் தனது காரியத்தரிசி சிலருக்கு போனிலிருந்தே சில கட்டளைகளைப் பிறப்பித்தவன், விடியலுக்காய் காத்திருந்தான்.

 

மறுநாள் காலை ஐந்தரை மணியளவில் வானம் தனது டிஸ்பிளேயை சேன்ஞ் செய்த போதே மயக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட லாக்கர் ரூம் செக்யூரிட்டிகள், உடனே நிலைமையின் தீவிரத்தை தங்கள் தலைமைக்கு கார்டுலெசில் தெரிவித்தனர். சற்று நேரத்திலேயே காட்டைக் கலைத்தது போல் இத்தகவல் வீட்டிலிருந்த அனைவருக்கும் பரவியது.  

 

காலை தியான கூட்டத்துக்கு தயாராகி நின்ற யங்கேஸ்வரி அம்மாவும், பிரேமானந்த சுவாமிகளும் இத்தகவல் தெரிவிக்கப்பட்ட அடுத்த கணமே ஓடிவந்து லாக்கரைத் திறந்து பார்த்தனர். பேழை அப்படியே இருந்தது.

 

அங்கிருந்தவர்கள் அனைவரும் என்ன நடந்திருக்கும் என்று தெரியாமல் குழம்பி நிற்க, பிரேமானந்தாவை அணுகிய யங்கேஸ்வரி, "சுவாமிஜி, என்ன நடந்திருக்கும்னு உங்க தியானத்துல பார்த்து சொல்லுங்களேன்.." என்று வேண்டினார்.

 

பிரேமானந்தா அதற்கே காத்திருந்தவர் போல், "முன்னாடியே எனக்கு பொறி தட்டுச்சு அத்தம்மா.. நம்ம வீட்டுல இருக்குற யாரோ ஒருத்தர் செஞ்ச சதி தான் இது.. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் செஞ்ச அசம்பாவிதம் தான் இது.." என்று தன் கண்களை மூடிக்கொண்டு கூறினார்.

 

"சுவாமிஜி, என்ன இது?!.. நேகனா இப்படி செஞ்சான்னு சொல்றீங்க?.. இல்ல சுவாமிஜி, அவன் அப்படி செஞ்சிருக்க முடியாது.. "

 

"இல்ல அத்தம்மா.. காளிமாதேவி அப்படித்தான் நேத்து என் கனவுல வந்து சொன்னா.. அவள் சொல் என்னைக்கும் பொய்க்காது.. லாக்கர் நம்பர் தெரிஞ்ச மூணாவது ஆளும் அவர் தானே.."

 

"என்னால நம்பவே முடியல சுவாமிஜி.. ஆனா எதுவும் எடுக்காமல் மறுபடியும் எதுக்கு வச்சிட்டு போயிட்டான்னு தெரியலையே.."

 

"உங்க சேவகங்களின் பலனா அவர் மேல காளிமாதேவி அருள் புரிய ஆரம்பிச்சிட்டா அத்தம்மா.. நேத்து கல்யாணத்துக்குக் கூட சம்மதம் சொன்னாரே.. எல்லாமே தாயோட கருணை தான்.. அவ தான் அவரோட மனசை மாத்திட்டு வர்றா.."

 

"எனக்கு நம்பிக்கை வந்திருச்சி சுவாமிஜி, நேகனுக்கு நல்லகாலம் பொறந்திருச்சின்னு.. தாயோட கருணையே கருணை!.." என்று சந்தோசக் கண்ணீரோடு பிரேமானந்தாவின் காலில் விழுந்து வணங்கிவிட்டு, காலை தியானத்திற்குத் தயாராக சென்றுவிட்டார் யங்கேஸ்வரி.

 

தனது பத்து விரல்களையும் கோர்த்தும் பிரித்தும் பார்த்தபடியே எதையெதையோ கணக்கிட்டுக்கொண்டு தனதறைக்குச் சென்று கொண்டிருந்த பிரேமானந்தாவை வழிமறித்த அநேகன், "உங்கக்கூட கொஞ்சம் பேசனும்.." என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.

 

உதடு நிறைந்த புன்னகையுடன் தனிமையான இடம்தேடி அவனை தனது பால்கனிக்கே அழைத்து வந்த பிரேமானந்தா, "என்ன மாப்பிள்ளை! நேத்து நைட்டு ஏதோ புதுப்பொண்டாட்டிய தொடுற மாதிரி பேழையைத் தொட்டுப் பார்த்தீங்க போல!.. அத்தம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க.. அப்புறம் நீங்க பேழையைத் திருப்பி வச்சிட்டதைப் பார்த்து உங்களுக்கு நல்ல காலம் பொறந்திருச்சின்னும் சந்தோசப்பட்டாங்க.." என்று கிண்டலாகச் சொல்லவும்,

 

அநேகன், "என் நல்ல காலத்தை விடுங்க மாமா.. இப்போ உங்களுக்குத் தான் கெட்டகாலம் தொடங்கியிருக்கு.. தேவியோட தீக்ஷையும் அருளும் உங்களுக்குத் தான் இப்ப அதிகமாத் தேவைப்படுது.." என்றவாறே உரக்கச் சிரித்தான்.

 

அதில் தன் கம்பளிப்பூச்சி புருவங்களை இணைத்த பிரேமானந்த சுவாமிகள், "என்ன சொல்றீங்க மாப்பிள்ளை..?" என்று புரியாமல் கேட்டார்.

வருவாள்...

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே..

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே..

 

-கண்ணதாசன்

 

This post was modified 2 weeks ago by Shivani Selvam

ReplyQuote
Shivani Selvam
(@sai-shivani)
Reputable Member Writer
Joined: 1 year ago
Posts: 409
05/11/2020 2:39 pm  
Posted by: @vaniprabakaran

Agamotham ellamey unmai illa intha vetla  . Super sama interesting a poguthu

 

 

சென்ற பதிவிற்கு கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றி. உங்களது விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன. ஏனெனில் அதுவே என் எழுத்துகளை திருத்தவும் தீட்டவும் உதவும். நன்றி❣️


ReplyQuote
Page 1 / 4
Share: