Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications

அத்யாயம் 29  

  RSS

Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 8 months ago
Posts: 113
21/01/2020 10:04 am  

அத்யாயம் 29

ரஞ்சித் நிலா இருவரிடமும் பரஸ்பரம் அறிமுக நிலை தாண்டி நட்பு எனும் நிலையை அடைந்திருந்தார்கள்...ரஞ்சித் அவன் மனைவி மீது கொண்டிருந்த காதல் நிலாவை வெகுவாக சுய பரிசீலனைக்கு தள்ளி இருந்தது. 

ரிஷி தன்மீது காட்டிய அந்த நேசம் கைவிட்டுப் போன பின்னர் ,வெகு மாதங்கள் கழித்து அவளுக்குப் புரிந்தது..நிச்சயம் இழப்புதான்..ஆனால் ,நான் செய்தவற்றை விமர்சனம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை..நான் வளர்ந்த விதம்..அதற்க்குத் தகுந்த  ஒருவனை எனக்கு மணமுடிதிருக்க வேணும்..அந்த அப்பாவி ரிஷியால் என்னை புரிந்துக் கொள்ள முடியாத நிலையில் என் தவறு என்ன? அவளது வளர்ப்பு முறை அவளுக்காக வக்காலத்து வாங்கியது..தன்னை பற்றி கூறும்பொழுது ,இதையே அவள் ரஞ்சித்திடம் சொன்னாள்...

எனக்கு எப்பவுமே தனிமைனு எழுதி வச்சிருக்கு ரஞ்சி ..மாத்தா முடியாது என்று முகம் வாட உரைத்த நிலாவின் கண்களில் ஒளி இல்லாததை ரஞ்சித் கண்டுகொண்டான்...

நீ ,ரிஷிய விரும்பறியா ?

ஓஹ் ..நோ ...கொம் ஆன் ரஞ்சித்...ரிஷி ரொம்ப மன உளைச்சளுக்கு உட்பட்டதா கேள்விபட்டேன்..அவர் லைஃப் என்னால இப்படி ஆகிட்டுத்தேன்னு ஃபீலிங்க்... உறவு,பணம் இதுல நடந்த கல்யாணம்....என் பக்கம் நிச்சயம் காதல் இல்ல..இனியும் வராது... அவள் மனதை ரஞ்சித்தால் புரிந்து கொள்ள முடியவில்லை..ஆனால் ,உறவுகளுக்காக தவிக்கிறாள் என்பது புரிந்தது..செல்வபதி ராஜேஸ்வரி மீது கோவம் வந்தது...சிறு வயது நிலாவை அழைத்து தைரியம் சொல்லவேண்டும்போல் அவனுக்குள் உணர்வு.

சாகரி எதிர்பார்த்தது இது தான்...இழப்புகளை சந்தித்த ரஞ்சித் நிலா இருவரிடமும் தோன்றும் நட்பு ,இருவரையும் மீட்குமென அவள் நம்பினாள்...

நிலா ரிஷி திருமணத்தில் தான் ரஞ்சித் தன் காதலை சந்தித்தான்...பெரியவர்கள் ஒப்பு கொள்ள திருமணம்...இன்றும் அவர்கள் காதல் சாட்சி மீரா....அவன் மனைவி வளர்ந்தது லண்டனில்....ரிஷியின் தூரத்து உறவு...அவள் தன்னை ரஞ்சித்திற்காக முழுதாக மாற்றிக்கொண்டாள்....அதனாலேயே,ரஞ்சித்தால் அவளிடமிருந்து தன்னை மீட்டுக்கொள்ள முடியவில்லை..அவளின் மறுபதிப்பு மீரா....அப்பாவிற்க்காக இந்த நான்கு வயதிலேயே, தன்னை மாற்றிக்கொள்ளும் பொற்சித்திரம்....

இன்று ,மனைவியை இழந்து மகளுடன் அவனும் இருக்கிறான்...கணவனை பிரிந்து நிலா....ஏதோ எக்குத்தப்பாக யோசிக்கிறேன் என்று புரிந்தவனாக ரஞ்சித் தன்னை மீட்டான்.

ரிஷி ரஞ்சித் இருவ்கருக்குமே புரியாத ஒன்று நிலாவின் மன நிலை..அவளுக்கு ,காதல் என்னும் உணர்வு இன்னும் பிடிபடவே இல்லை..அது வாராமல் திருமணம் எவ்வாறு வெற்றியாகும்?

பொங்கல் முடிந்து நிலா மும்பை நோக்கி செல்ல,ரஞ்சித் ,ராஜாலிங்கம் தம்பதியுடன் ஊட்டி நோக்கி பிரயாணப்பட்டான்.

கிளம்பும்முன்,ராஜலிங்கம் சாகரியிடம்,நிலாவை ஊட்டி பள்ளியில் பணிபுரிய கேட்க்கும்படி சொல்லிவிட்டு சென்றார்...நிலாவின் மாற்றமும்,ஒளி இல்லா முகமும் அவளின்பால் ,அவருக்கு பரிதாபத்தை சம்பாதித்துக் கொடுத்திருந்தது.  ஆனால்,நிலாவின் மாற்றங்களை முழுதாக கணக்கிடாமல் ,மேற்கொண்டு பேசுவதை சாகரி விரும்பவில்லை.

தஞ்சாவூரிலிருந்து, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றியுள்ள காவல் நிலையங்களுக்கு சாரதாவும் ,அவளுடன் இன்னும் இரண்டு அதிகாரிகளும் பதினைந்து நாட்களுக்கு செல்கிறார்கள்...விஜய்க்கு ,சாரதா இல்லாமல் ,தனியாக இருப்பது ரொம்பவும் படுத்தியது....திருமணமாகியும் வருடக்கணக்கில் பிரிந்து வாழ்ந்த பொழுது புரியாத ஏக்கம் ,இருவருக்குமே இவ்வுணர்வு புதிது!

சாரதா கண்முன் வைக்க பட்ட கோப்புகள் ஒவ்வொன்றும் பல கதைகள் பேசின.  சினிமா ஆசையில் ,சென்ற இளம்பெண்கள், காதல் எனும் மாயவலையில் சிக்கிய சிறு மான்கள், வீடு வேலைக்கு அனுப்பப் பட்டு நிலை தெரியா சிறுமிகள்... சாரதாவின் அடிமன ரணங்கள் திரும்பவும் கீறிவிடப் பட, விஜய்யின் மீதான காதலை மீறி, அவள் என்ன அலைகள் அவளின் பதினைந்து வயதை நோக்கி பிரயாணப் பட்டது...

செங்கல் பட்டில் அவள் குடும்பம்....குடும்ப உறவுகள் எல்லாரும் சேர்த்து முப்பது நபர்கள்... எல்லோரும் ஊட்டிக்கு ஐந்து நாட்கள் சென்றுவர தீர்மானித்திருந்தனர்.... சாரதா உற்ச்சாகம் குமிழிட ,கிளம்பினாள் ..அவள் வயதொத்த நண்பர் பட்டாளம்....கும்மாளம்..கொண்டாட்டம்...

திரும்ப வரும்பொழுது......சை..இப்பொழுது நினைத்தாலும், சாராதாவிர்க்கு ,இப்பொழுது வேர்த்தது.... நெஞ்சு பயத்தில் வேகமாக அடிக்க....அந்த நாட்க்களை நோக்கி தன்னையும் அறியாமல் பிரயாணப்பட்டாள் சாரதா....

வயதான பாட்டி ..நான் அப்பர் பர்த் ஏற முடியாது..என்ற விண்ணப்பத்துடன் வர..சாராதவின் சீட்டை அந்த பாட்டிக்கி கொடுத்து உதவினார் அவள் அப்பா..ஆனால் ,அந்த சீட்டு பக்கத்து கம்பார்ட்மெண்டில்...இவள் உறவுக்காரர்கள் யாருமில்லை....அவள் அப்பாவின் நண்பர் மட்டும் அங்கு..... சித்தப்பா என்றே அந்த நபரை அழைத்து பழக்கம்...நண்பன் அல்ல...அவன் பெயர் நாகராஜ்..அசல் கருநாகம்...

எல்லோரும் உறங்கும் நேரம்..ஏதோ ,தன் மார்பு அருகே வருவது போல் இருக்க...தூக்க கலக்கத்தில் கையால் ஓரிருமுறை கண்ணை திறக்காமலே தட்டிவிட்டவள்...அது தொடர...மர்ம பிரதேசங்களில் பயணப்பட..கண் திறந்தால்...அந்த கருநாகம் தன் வேலையை மிக மிக ரசித்து செய்ய..கண் திறந்து பார்த்தவளை...யாரிடமாவது வெளியே சொன்னால்...விளைவு மோசமாக இருக்குமென மிரட்டினான் அவன்...இத்தனைக்கும் அவன் மகள் சாராதவை விட ஒருவருடம் சின்னவள்....

பிறகு...சாலை விபத்தில் அவன் கைகள் முடமாகிவிட்டது...ஆனால்,சாரதாவினால் ஒன்றும் செய்ய முடியாத நிலை..வாய் விட்டு வெளியே சொன்னால்.... விளைவுகள் பற்றி அஞ்சி வாயில் வந்ததை முழுங்கிவிட்டாள்....அவள் ஆண்களை வெறுக்கும் இன்னொன்றும் நிகழ்ந்தது..அதை வேறொரு தருணத்தில் சொல்கிறேன்.

ஏனோ சிறுமிகளுக்கெதிரான பாலியல் கொடுமைகள் நடந்துகொண்டே இருக்கிறது..தண்டனைகள் கடுமையாக இல்லை.... கேள்வியே கேட்க்காமல் அவர்களின் கைகளை வெட்ட வேண்டும் என்று அவள் மனம் கத்தியது..இன்று அவள் ஆண்களை நடுங்க வைக்கும் நிலையில்....ஆனால் அன்று அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே?

இப்பொழுதும், கணக்கெடுத்து கோப்பு சமர்பிப்பது மட்டுமே வேலை..அதற்க்குப்பின்னார் அரசு என்ன செய்யும் என்பதை பற்றி அவள் பேச முடியாதே!

கோப்பிலுள்ள பெண்கள் நிச்சயம் சீரழிக்கப்பட்டிருப்பார்கள் ...அவர்களை மீட்பது கனவே என்று பெருமூச்சு விட்டவளாக நனவிர்க்கு வந்தாள் ....இன்னும் எத்தனையோ...

விஜயனிடம் பேச வேண்டும் என எழுந்த ஆவலை அடக்கி...மீண்டும் வேலையில் கவனத்தை செலுத்தினாள்.

சரியாக பதிவு செய்யப் படாத வழக்குகள்,அவற்றின் பின்னர் பல சமூக அந்தஸ்த்துள்ள மனிதர்கள் அல்லது அவர்களுடன் சேர்ந்திருப்போருடைய கைவண்ணம் என்பது அவளுக்கும் அவளுடன் வந்தவர்களுக்கும் தெளிவாக புரிந்தது...ஆனால், அவற்றை சரி செய்வது எவ்வாறு என்பதுதான் புரியவில்லை..அவற்றை சேர்க்காமல், அறிக்கை தயாரிக்க முடியாது.

இதுபோன்ற ஒரு கோப்பில்தான் தேனுவை பற்றிய விவரங்கள் முழுதாக பதிவு செய்யப்படாமல் இருக்கிறது...அந்த கோப்பை நோக்கி சாரதா வந்துகொண்டிருக்கிறாள்....ஆனால், அவளால் முழுதாக கண்டுபிடிக்க முடியுமா?

மீண்டும் அடுத்த பதிவுடன் ஓரிரு  நாட்களில் சந்திக்கிறேன்.

உங்கள் தோழி

சுகீ

 

என்னால் முடிந்தவரை உணர்வுகளை புரிந்துகொள்ளும் படிக்கு வார்த்தைகளை அமைத்துள்ளேன்.  பல பெண்கள் தங்கள் ஆழ் மனத்தில் பூட்டியுள்ள வெப்பம் கொதிக்கும் உணர்வுகள்....வெளியே சொல்ல முடிவதில்லை...மிகுந்த வருத்ததுடன் எழுதப்பட்ட பதிவு..

அமைதியாக படித்து செல்லும் வாசகர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் அடுத்த பதிவுடன் விரைவில்.

சுகீ


Share: