Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications

அத்யாயம் 33  

  RSS

Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 9 months ago
Posts: 121
21/02/2020 11:05 am  

அத்யாயம் 33

என்னிடம் உள்ளது அனைத்தையும் எடுத்துக்கொள்,

என்னை மட்டும் திருப்பிக்கொடுத்துவிடு!

என்பதாக இருந்தது இருவரின் நிலையும்,. தன்னை மறுத்த ரிஷியிடம் ,மனம் மண்டியிட்டு அவன்,அழைத்தால்,அவனிடம் சரணாகதி அடையவும் தயார் எனும் நிலையில் தேனு....செய்யும் வேலையை கச்சிதமாக முடிக்கும் ரிஷி, செய்வது என்ன என்றே தெரியாமல் ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்துகொண்டு,தன்னை அந்த சிறு பெண்ணிடமிருந்து பிரிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தான்.

திங்களன்று வேலை செல்ல துவங்கும் முன் வெற்றியுடன் பேசியவள், பிறகு புது வேலையில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள்!

ஏழு மாதங்களாக, அலுவலக சம்மந்தமான கணக்கு வழக்குகள் பார்த்ததினால், அவளுக்கு , இந்த வேலை கடினமாக இல்லை!

இரவு நேரங்களில், ரிஷியின் கையணைப்பில் உறங்க ஏங்கும் வெட்கம் கெட்ட மனதைத்தான் எப்படி அடக்குவது எனத்தெரியவில்லை!

கோவை ஒருவழியாக,அவளுக்கு பழக ஆரம்பித்தது....பீளமேடு ,ஒப்பனக்கார வீதி,ஈஷா யோக மையம்,சிறுவாணி ஆறு, அமராவதி டாம்,வால்பாறை என, வார இறுதி நாட்களில்,சுற்றுவதை வழக்கமாய் கொண்டாள். விடுதியில், மற்ற பெண்களுடன் இவளால் அவ்வளவு இயல்பாய் பழக முடியவில்லை. ஏதோ ஒன்று அவளை மற்றவர்களிடமிருந்து தூர நிறுத்தி வைத்தது!

என்னவென்றுதான் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை!

அலுவலகத்திலும், வேலை தவிர அதிகம் யாருடனும் பேசுவதில்லை..தனிமை அவளுக்கு பிடித்தது....நடுவில் வெற்றி வேல் குடும்பத்துடனும்,தனியாகவும் பார்த்துவிட்டு சென்றார். ரிஷி தன் மகளுக்கு செய்திருக்கும் நன்மைக்கு அவன் காலில் விழவும் அவரும் , அவர் மனைவியும் தயாராய் இருந்தனர். 

தேனுவிற்குள்ளும், அதே எண்ணம்தான்.  எங்கோ,குப்பையில், அழுக இருந்த என்னை, இப்படி மறு வாழ்வு அளித்திருக்கும் அவருக்கு, எந்த வகையில்,நான் பொருத்தம்?

அவர் என்னை ஏற்க வேண்டும் என்ற நினைப்பே பிழை எனும் மன நிலைக்கு அவள் என்றோ வந்துவிட்டாள்.

இரண்டு மாதங்கள் கழித்து, மும்பை வந்த ரிஷிக்கு, வீட்டில், எங்கு சென்றாலும், அவள் நினைவே.....என்னை உயிரோடு கொல்கிறாயே தேனு...என முன்னுச்சியை அழுந்த பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் ரிஷி....

தல வலிக்கிதா சாஹிப், காபி வேணுமா? என அவள் குரல் காதில் ஒலிக்க, இதற்க்குமேலும், தாங்க முடியாதவனாக, தன் நண்பன் ஷங்கரை காண விழைந்தான்.

ஜூஹூ கடற்கரையில்,சந்திப்பதாக ஏற்பாடு ...மாலை நேர கவிய, சூரியன் தனது வெண்மை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திர்க்கு மாறுவதை கண்டவன், தேனு, அதே வண்ணத்தில் புடவை அணிந்திருந்த நாளை எண்ணிக்கொண்டிருந்தான்....

நாற்பது வயதை கடந்த ரிஷிக்கு, இவ்வயதில் தான் ஒரு பெண்ணை நினைத்து உருகுவது பெரும் வியப்பாய் இருந்தது. 

நிலாவை, மனைவி எனும் நிலையில் மட்டுமே உணர்ந்தானே தவிர, அவளுக்காக இவ்வளவு உருகியதில்லை. அவள் செய்கைகள் யாவும் இவனது சமூக நிலையை பாதிக்க செய்யும் சமயம்,அவளை பிரியவும் அவன் தயங்கவில்லை..அவள் பிரிவு அவனை பாதிக்கவில்லை.

மாறாக,நிம்மதியை உணர்ந்தான்...தான் ஏமாற்றப் பட்டோம் எனும் உணர்வு அவனை தாக்கி...சுழற்றி அடித்தது...

தேனு ...ஹூம்... அவள் வரும்பொழுதே, விபச்சரி எனும் முத்திரையுடன்தான் வந்தாள்.  ஏன், அவளை அழைத்து வந்ததே ரிஷிதானே?

அவளின் சமூக நிலை காட்டி, உடலால் பிரித்து வைக்க முடிந்தவனால், உள்ளம் அவளிடம் உருகுவதை தடுக்க முடியவில்லையே....

காணும் யாவிலும் நீயே,

கருத்தை கொள்ளை கொண்ட காரிகையே!

என்பதாய் இருந்தது ரிஷியின் நிலை.

ஒருவழியாக, தூரத்தில் நின்று ,ரிஷியை ஒருமணி நேரத்திர்க்கு மேலாக அவதானித்த ஷங்கர்,ரிஷியின் நிலையை உணர்ந்துகொண்டான்.  நேரம் போவதே ரிஷிக்கு தெரியவில்லை..அல்லது தேனுவின் நினைவுகள் அவனை நேரத்தை பற்றி கவலை கொள்ள செய்யவில்லை..ஷங்கர் வரவில்லை ,என்ன ஆயிற்று என விசாரிக்க வேண்டும் என்பதாய், ஷங்கருக்கு அலைபேசி அழைப்புக்கூட விடுக்கவில்லை.

தன்னுள்ளே.,தேனுவை ரசித்து,அவளுடன், அவளை பற்றிய எண்ணங்களுடன்,கடலை வெறித்துக்கொண்டிருந்தான் ரிஷி.  ரிஷியின் நடத்தை,ஷங்கருக்குள் வியப்பையும், மீண்டும் ரிஷி மன நிலை பாதிக்கப் படுவானோ எனும் அச்சத்தையும் விதைத்தது!

ரிஷி தேனுவை கண்டுவருவது அவனுக்கு நல்லதோ என எண்ணினான்.

நண்பர்கள் இருவரும், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்..ஷங்கரிடம் ,எவ்வித தயக்கமும் இன்றி உண்மையை ஒப்புக்கொண்டான் ரிஷி.  அவனுக்கு உணர்வுகளை பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும் என்பதாய் தவிப்பு!

அவ இல்லாம, வீட்டுக்கு போகவே பிடிக்கலடா...எங்க திரும்பினாலும், என்ன வேலை செஞ்சாலும்,அவளோட நினைப்பு என்னை சுழட்டி அடிக்குது...

அவள கல்யாணமும் செஞ்சுக்க முடியாம...வீட்டுலயும், வச்சுக்க முடியாம.....மனசுலேந்து தூக்கி எறியவும் வழியில்லாம.... ரொம்ப சலிப்பாகுது ஷங்கர்.....பைத்தியம் புடிச்சிடுமோன்னு பயமா இருக்கு....

நினைப்பதை பெரும்பாலும் வாய்விட்டு சொல்ல முடியாத நிலையில் இருக்கும் ரிஷி, இன்று தான் மனதை கூறுபோட்டுக் கொண்டிருக்கும் உண்மையை நண்பனிடம் கொட்டிக் கொண்டிருந்தான்!

ஷங்கருக்கு ,ரிஷியின் நிலை தெளிவாக தெரியும், ஆனால்,ஏதாவது சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டான்.....

ரிஷி., நீ வேணும்னா..உங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லி இன்னொரு பொண்ண பாத்து கல்யாணம் செஞ்சுக்க..உன்னோட வருங்காலத்திற்கு அதுதான் சரி... தேனு,இனி வர போறது இல்ல...முடிஞ்ச பகுதி .இனிமேலாவது உன்னோட லைஃப் சரியாக வழியப்பாரு....நல்ல பொண்ணு  வொய்ஃப்பா அமஞ்சா எல்லாமே சரியாகிடும்!  தேனுவோட நினைவுகள் உன்னை விட்டு மறையும்....இப்படி இருந்தது ஷங்கரின் வார்த்தைகள்.

நிஜத்தில்,நீ தேனுவை போயி பாரு, மனசு சமாதானமாகும்.பிறகு யோசிக்கலாம் என்றுதான் சொல்ல ஷங்கருக்கு விருப்பம்.... ஆனால்,ரிஷி ஒத்துக்கொள்ள மாட்டான். நிச்சயம், அவனுக்கு தெளிவு தேவை.  அது அவனாக முடிவு செய்து, அவளை தேடி செல்ல வேண்டும்!

அவன் தேனுவை மிக ஆழமாக நேசிக்கும் பட்சத்தில், அவனால் இன்னொரு பெண்ணை நாட முடியாது ...அதை அவனேதான் புரிந்துகொள்ள வேண்டும்...இந்த குழப்பம் அவனை தெளிவு பெற தூண்டும்..என்று மனதினுள் முடிவெடுத்துக்கொண்டான்.

இரவு உணவை முடித்துக்கொண்டு இருவரும், தத்தம் வீடுகளுக்கு சென்றனர்.

இரவின் தனிமையில், மனம்,உடல் இரண்டுமே ,தேனுவை தேட, ஷங்கர் சொன்னதை மீண்டும் அசை போடலானான் ரிஷி...எப்படியாவது அவள் நினைவுகளை ஒதுக்கியாகவேண்டும் என்று அவளை மட்டுமே நினைத்திருந்தான்!

மறுநாள், ஷாதி.கோம்.(shaadi.com )போன்ற கல்யாண வெப்சைட்களில், பெண்களை முதலில் பார்க்கலாம்..இந்த முறை பெற்றோரிடம் செல்ல கூடாது..என நினைத்துக்கொண்டான்.

ரிஷிக்கு பெண் கிடைக்குமா?  இல்லை ஷங்கர் நினைப்பது நடக்குமா?  தேனுவிர்க்கும் வேறு மாப்பிள்ளை தேடுவோமா?

பிரபாகர், தனது சகாக்களுடன் அந்த இரவு வேளையில், பேருந்தில் திருப்பூர் நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்தான்.  அவன் பற்றிய விபரங்கள் காவல் துறையால் தோண்ட படுகிறது! எச்கரிக்கை தேவை என அவன் நண்பன் ,எம்‌எல்‌ஏ மகன் ராஜேந்திரன் எச்சரித்திருந்தான்!

சாரதாவை பற்றி தோண்டி துருவி தெரிந்து கொண்டிருந்த பிரபாகரனுக்கு, அவளிடம் மிரட்சி ,பயம் போன்ற உணர்வுகளுக்கு பதிலாக....வேறு யோசனைகள்.  அவன் முகம் புன்னகையை ,ஏளனத்தை தத்தெடுத்தது!

சாரதா எனும் பெயரே,அவனுள் சாரலாய்......

ரிஷி –தேனு  இருவருக்குள்ளுமான காதல் தவிப்பு, அவர்கள் நிலை உங்களுக்கு புரிகிறதா? அவர்கள் எடுக்கும் முடிவுகள் அவர்கள் வாழ்க்கையின் திசையை மாற்றிவிடுமே? அவர்கள் வேறொருவரை இணையாய் அடைந்தால் சந்தோஷம் மலருமா? சாரதா பற்றி பிரபாகரனுக்கு ......

 

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

தனிப்பட்ட வேலைகள் காரணமாக ...இந்தவாரம்...எழுத இயலாதென நினைத்தேன்....சிலசமயங்களில்,எழுத்து, நம்மை அமைதிபடுத்துகிறது....

 

சுகீ.

சுகீ


Vani Prabakaran
(@vaniprabakaran)
Trusted Member Registered
Joined: 8 months ago
Posts: 60
23/02/2020 3:22 am  

Rishi and Thenu kulla evvalavu love eruku... Avanga serntha romba happy a erukum.. Pls serthudunga Suki


ReplyQuote




Share: