Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

இன்று அன்றி(ல்)லை -1.,1.2  

Page 4 / 4

Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 165
Topic starter  

சுகீ


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 165
Topic starter  

கண்கள் ரஞ்சனை தேடினாலும், உள்ளே இருக்கும் படபடப்பு அவன் வராமல் இருந்தால் பரவாயில்லை என்றும் அடித்துக்கொண்டது.இருவேறு சிந்தனைகள் ஆக்ரமிக்க இதென்ன புது விதமாக மனது தவிக்கிறது? என்று குழம்பியவளுக்கு, ரஞ்சன் அங்கிருக்கும் மக்கள் நெருக்கடியில்   கடைசியாக நின்று கொண்டு இவளை கண் மூடாமல்  பார்த்து கொண்டிருப்பது தெரியவில்லை. ஆனால், ஏதோ புரியாத விந்தையாய் அவள் மனதில் ஒரு சிறு அசைவு.

 

கோவிலில்  அலங்காரத்திற்காக திரை சாற்ற பட்டிருக்க தன்னை மறந்து மோன நிலையில் கடவுளிடம் பேச்சு வார்த்தையில் இறங்கிவிட்டாள் வாணி. கண்கள் மூடியிருக்க, கன்னத்தில் சூடாக  நீர் இறங்கியது.

 

அம்மா கொடுத்து அனுப்பியிருக்கும் புகைப்படங்களை கையில் தொடவே அவளுக்கு பிடிக்கவில்லை. ஏதோ தவறு செய்யும் உணர்வு வேறு அவளை

 

அலைக்கழித்தது.

 

தெரிந்தோ,தெரியாமலோ மனோ ரஞ்சன் அவள் மனதில் நுழைந்து விட்டான். அவனை இவளுக்கு நிரம்ப பிடித்துள்ளது. நேசம் என்பது சொல்லிக்கொண்டு வருவது இல்லை.

 

ஆனால்,அவனிடம் இதற்கான பிரதிபலிப்பு,உணர்வின் வெளிப்பாடு ஏதும் இல்லை. எவ்வளவு நாள் இவ்வாறே கடத்தமுடியும்?

 

ரஞ்சன் ஒரு வேளை   தெரிந்த வீட்டு பெண் எனும் நினைப்பில்  பழகி இருக்கலாம். அவன் மனதில் வேறு எண்ணங்கள் இல்லை எனில், என் நிலை?

 

"கடவுளே, எனக்கு வழி காட்டு'இது போல் துன்பம் கூடாது என்று தானே விலகி சென்றேன். பின்னர் ஏன் இப்படி? அவள் மன போராட்டம்... அதை அவள் முகமும் புருவ முடிச்சும் தெளிவாக சொல்ல ரஞ்சன் அவள் நிலை புரியாது தவித்தான்.

 

இந்த சமாச்சாரங்கள் எதுவும் புரியாமல் பெரியவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைக்கு சீக்கிரம் வரன் அமைய பிரார்த்தனை செய்தார்கள்.  வாணி விஷயம் அவர்களுக்கு 'விளங்க முடியா கவிதை' தான்.

 

'அவள் ரஞ்சனை காண முயற்சி செய்யவில்லை,'எனில் அந்த பெண் இங்கு வந்தது ஏதேச்சையானது. அவளோ ரஞ்சன் பற்றி துருவி இவர்களிடம் கேட்கவில்லை. எந்த ஆர்வமும் அவள் முகத்தில், பேச்சில் தெரியவில்லை.

 

அவளுக்கு இவன் மீது விருப்பம் இல்லை என்று தானே பொருள்?

 

இந்த பிள்ளை அவள் வீட்டில் பேச சொல்கிறானே என்று தவித்தனர்.

 

நரஸிம்ஹரின் அலங்காரங்கள் முடிந்து  நடை திறக்க சற்று நேரம் ஆகும். நாம் அதற்குள் சென்னையில் ஒரு சிறு நிகழ்வு. போய் ஒரேட்டு பார்த்து வருவோம்.

 

அனு  கல்லூரி முடிந்து, வீட்டுக்கு தேவையான திரைசீலை, போன்ற பொருட்கள் வாங்க டி. நகர் செல்ல, அங்கே சம்பத் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்த குடும்பத்தின் பெண்மணியை பார்த்தாள்.

 

அந்த பெண் மற்றும் அவரது கணவர் சாதாரணமானவர்கள் இல்லை. அனுவை பொறுத்தவரை தெய்வம் மனித வடிவில் வரலாம் எனில் அது இவர்கள்தாம்.

 

சம்பத் சம்பளம் தராமல் இவளை படுத்தும் பொழுதும் கூட இவர்கள் வீடு இவளுக்கு உணவு அளித்திருக்கிறது. அவர்கள் வீட்டில் இருக்கும் இரண்டு வயது குழந்தையை இவள் மடிக்கு மாற்றி இவளை கவலை அண்டாமல் பார்த்து கொண்டார்கள். வாணி வயிற்றில் இருந்த பொழுது இவளுக்கு அவர்கள் வீடு புகலிடமாக, பின்னர் பிரசவம் முடிந்து வந்த பிறகு அடுத்த தாய்வீடு எனும் அளவுக்கு ஆறுதல் கொடுத்து... இன்னும் எத்தனையோ.

 

இவள் சம்பத்தை பிரிந்து வந்த பிறகு தன்னை ஸ்திர படுத்திக்கொள்ளும் தவத்தில் அவர்களுடனான தொடர்பு மெல்ல விட்டு போயிற்று. அவர்களும் வேறு இடத்தில் வீடு கட்டிக்கொண்டு சென்று விட்டார்கள்.

 

அந்த பெண்ணுக்கு ஒரு மகன், ஒரு மகள். ஓரு ஹோட்டல் சென்று  சிறிது பேசிக்கொண்டு இருந்த இருவரும் பரஸ்பரம் தங்கள் அலைபேசி மற்றும் முகவரியை பரிமாறிக்கொள்ள, அனு வியப்புற்றாள். அந்த பெண்மணியின் வீடு அனு வீட்டில் இருந்து பதினைந்து நிமிடம்...

 

அந்த பெண்மணியின் வீடு கடந்து சென்று தான் இவள் தன் இருப்பிடம் அடைய வேண்டும். ஆனாலும், இவ்வளவு வருஷங்களாய் கண்களில் படாமல் எவ்வாறு சென்றது?

 

அந்த பெண்மணியை வற்புறுத்தி தன்னுடைய மகிழுந்தில் கூட்டி சென்றாள் அனு. அவர்கள் வீடு அந்த பகுதியில் சற்றே உள்ளடங்கி இருந்தது.

 

அந்த பெண் வற்புறுத்தி அழைத்தும் வேறொரு சமயம் வருவதாக கூறி விடை பெற்று கிளம்பி விட்டாள் அனு... அவளுக்கு பழைய ஞாபகங்கள் சுழற்றி அடித்தது. வீடு போய் சேர்ந்தால் போதும், கணவனை கட்டிக்கொண்டு அவன் கதக்கதப்பில் சற்று நேரம் இருந்தால் இந்த நடுக்கம் மட்டுப்படும்... என அவள் வேகமாக தனது வண்டியை ஒட்டினாள்.

 

இத்துணை வருஷங்கள் ஆகியும், பல சந்தோஷங்கள் கிடைத்தும், மறுமணம் நடந்தும் பிரசாத் அவளை நெஞ்சில் தாங்கியும் கூட  'சம்பத், அவள் முன்னாள் கணவன் 'அவள் மனதில் கிழித்த நாட்களின் வீரியம்... ம்ஹும், சற்றும் குறையவில்லை, என்பதை அவள் அருவருப்புடன் உணர்ந்த நிமிடங்கள் இவை.

 

வீட்டுக்கு சென்று சோஃபாவில் வாங்கிய பொருட்களை வீசிவிட்டு, தங்கள் தனியறையில் கணவனை நோக்கி சென்றாள் அனு.

 

அவனிடம் நடந்தவற்றை சொல்லி முடிக்கும் முன்னரே, அவள் கண்கள் கண்ணீரை சிந்த அனுமதி கொடுக்காமல், தன் மனைவி அனுவை இழுத்து மடியில் அமர செய்து கொண்டான் பிரசாத். அவள் கைகள் தாமகவே கணவனை இறுக்கிக் கொள்ள அவன் தோள்களில் முகம் புதைத்து ஆறுதல் தேடினாள் அனு. அங்கு ஆறுதல் மட்டுமா கிடைத்தது... இவ்வளவு வருஷங்களை நிமிடங்களாக மாற்றும் காதல்... அவள் கானல் நீரென நினைத்த அன்பு...

 

சில அடிகள் வாழ்க்கை எவ்வளவு சீரானாலும் மரத்து போவதோ, மறந்து போவதோ இல்லை. இது ஒரு வேளை ரம்யாவுக்கும் பொருந்தலாம்.

 

அனுவுக்கு சம்பத் துயரம் எனில், ரம்யாவுக்கு குமார்... இந்த ஒப்பீடு எதற்கு என்று கேட்கிறீர்களா?

 

ஏனோ தோன்றியது...

 

சொன்னேன். உங்களை போல் நானும் இந்த கதையின் வாசகியாயிற்றே!

 

சரி... நாம் மீண்டும் பெங்களூருவில் காத்துகொண்டிருக்கும் நிகழ்வுக்கு செல்வோம்.

 

அலங்காரம் முடிந்து நரசிங்க பெருமான் தரிசனம் கொடுக்க தயாராக காத்து கொண்டிருக்கும் ஜனதிரள் சற்றே பரபரப்பு ஆனது.  தீபஆராதனை முடிந்து அர்ச்சகர் அர்ச்சனை செய்து முடித்து, பிரசாதங்கள் கொடுக்க, மக்கள் நெருக்கடி நகர நகர, பின்னால் நின்றிருந்த ரஞ்சன் முன்னால் நெருங்கி வர, அவன் நின்றிருந்ததோ சரியாக வாணியின் பின்புறம்...(நம்புங்கள், இது நிச்சயம்

 

எதேச்சைதான் )

 

ரஞ்சன் குங்குமம் பெற்றுக்கொள்ள வாணியை தாண்டி தனது வலது கையை நீட்ட, அவன் கைகளில் இருந்து குங்குமம் நேராக வாணியின் வகுட்டிலும்,அங்கிருந்து நெற்றியிலும் அப்பிக்கொள்ள சுற்றியிருந்தோர் இவளை வேடிக்கை பார்க்க இவள் பதட்டமாக கழுத்தை அண்ணாந்து பார்க்க நின்றிருந்தவன் ரஞ்சன்.

 

ரஞ்சன் பெற்றோருக்கும், வாணியுடன் வந்தவர்களுக்கும் திகைப்பு, வாணிக்கு பயம் அதனால் வந்த நடுக்கம்., ரஞ்சனுக்கு மகிழ்ச்சி.

 

ஆம், குழப்பம் மட்டும் விஞ்சியிருந்த இந்த காதல் அவர்களுக்கும் புரியாமல் திருமணம் எனும் மந்திரக்கயிற்றால் கட்டப்பட்டு விட்டது. தெய்வத்தின் சாட்சியாக... ஆனால், பெண்ணின் திருமண நிகழ்வு குறித்து ஆயிரம் கனவுகளுடன் வலம் வரும் பெண்ணின் குடும்பம்? வாணி இதை எப்படி குடும்பத்தாரிடம் சொல்ல முடியும்?

 

திட்டமிட்டு கோவிலில் திருமணம் முடிந்ததுபோல் இருக்கிறது. ஏனென்றால் திட்டமிட்டது தெய்வம்...

 

மீண்டும் அடுத்த பதிவில்

 

சுகீ

 

சுகீ


ReplyQuote
Subha Mathi
(@subhamathi)
Estimable Member Registered
Joined: 2 months ago
Posts: 107
 

Nice sis 😍😍...but why ivlo late post sis🙄🙄🙄 waiting for more episodes sis 👍👍


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 165
Topic starter  

நடந்தவை என்ன என்று சற்றும் புரியாது, திகைப்பில் உறைந்திருந்தாள் வாணி. அவளால் இந்த திருமணத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. முதலில் இது திருமணமா...
நெற்றியிலும், முன்னுச்சியிலும் குங்குமம் இடுவது திருமண சடங்கெனில், ஆம், இவளுக்கு திருமண நிகழ்வு முடிந்தது. ஆனால், இதை இதயம் ஏற்க மாட்டேன் என்கிறதே?

 

வீட்டில் நடந்தவற்றை சொன்னால் நம்ப மாட்டார்களே! அதுவும் ரஞ்சன் கையில் இருந்து குங்குமம் தவறி என்னில் விழுந்தது என்றால் என்னாலேயே நம்ப முடியாது. அவள் மனம் திரும்ப திரும்ப நடவற்றில் உழல கோவிலுக்கு வந்தவர்கள் உட்கார்ந்து இருந்தவளை காட்சி பொருள் போல் பார்த்துசென்றனர்.

 

வாணியின் கூட வந்தவர்கள் அவளை அணை போல் காத்து நிற்க, ரஞ்சனின் பெற்றோருக்கு தர்மசங்கட நிலை. அடுத்து நடக்க வேண்டியுள்ளது நிறைய இருக்கும் நிலையில், இந்த பெண்ணை தேற்றுவதே பெரும்பாடு என்பது அவர்களுக்கு நன்றாக புரிந்தது.ரஞ்சனுக்கு  மகிழ்ச்சி

 

ஒரு புறம் என்றாலும், வாணியின் நிலைக்கு சற்றும் குறைந்தது இல்லை அவன் நிலை. அவனும் மிகவும் பக்குவப் பட்டவன் என்று சொல்ல முடியாது. எதிர்பாராத இந்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்பது அவனுக்கும் புரிபடவில்லை.

 

வாணியின் குளிர்ந்த கைகளை தனது கைகளில் அடக்கி ஆறுதல் சொல்ல, நானிருக்கிறேன், கவலை படாதே என்று தைரியம் சொல்ல அவனுக்கு அவா. இந்த நிமிடம் அவனுக்கு உரிமை இருந்தும் உரிமையற்ற நிலை. நொந்துதான் போனான் ரஞ்சன். கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அமைதியாய் இருப்பது கொடுமை...

 

அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்ற கடவுளுக்கு மனமார இத்துடன் ஆயிரம் முறை நன்றி சொல்லிவிட்டான் ரஞ்சன். நிதர்சனமான அடுத்த கட்டம் இனிமேல் தானே?

 

ரஞ்சனின் பெற்றோர் அடுத்து நடக்கவேண்டிய  விஷயங்களை கவனிக்க முனைந்தார்கள். பெண்ணின் வீட்டில் பேசியாகவேண்டும். முறைப்படி திருமண நிகழ்வை பதிவு செய்தாக வேண்டும். ஏதேனும் பிரச்சனைகள் வந்தால்... பிள்ளைகள் தனியாக சமாளிக்க முடியாதே?

 

வாணியை தேற்றி, ஒரு வழியாக சிவாவிற்கு அழைத்து, அவனை உடனே வீடு வரச் சொல்லி, வாணியையும் அவளுடன் வந்தவர்களையும் ஒரு காரில் ஏற்றி அனுப்பிவிட்டு, பின்னால் ரஞ்சன் அவன் பெற்றோருடன் அவன் காரில் வாணியின் வீட்டை நோக்கி விரைந்தான்.

 

வழியில் ஒரு உணவகம் கண்ணில் பட பத்து பேருக்கான இரவு உணவும், கொஞ்சம் இனிப்பும் வாங்கிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தான் ரஞ்சன் .

 

அவன் நேரே வாணி வீடு நோக்கி செல்ல இவனுக்கு அந்த பெண்ணின் வீடு எவ்வாறு தெரியும் என்று அவன் பெற்றோருக்கும் சந்தேகம்.
வாயை திறந்து கேட்க அவர்கள் விரும்பவில்லை.

 

சீக்கிரம் வீடு வந்து சேர்ந்த வாணிக்கு, கண்ணீர் எட்டி பார்க்க பக்கத்து வீட்டு மாமியோ நடந்தது நடந்தாச்சு. "இதை ஒத்துக்கறதா, இல்லை ஒதுக்கிறதான்னு"நீதான் முடிவு பண்ணனும். ஒரு வேளை உனக்கு ஓகேன்னா வீட்டுல சொல்லி விசாரிக்க சொல்லு. பிறகு பாக்கலாம். வேணாம்னா அவங்க இங்க வந்த பிறகு பேசி அனுப்பிடலாம். சிவா வரட்டும் என்றார்.

 

எனக்கு அவரை ஏற்கனவே தெரியும் மாமி, என்ற வாணி பெண் பார்த்த வைபவத்தை சொல்லி முடிக்க பக்கத்து வீட்டு மாமிக்கும், கூட இருந்தவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை.

 

வீட்டுக்கு வந்த சிவாவிடம் அனைத்தும் சொல்லபட, ஹாலில் அமந்திருந்த ரஞ்சன் குடும்பத்தை ஆழ்ந்த மூச்சு எடுத்து கொண்டு, அம்மா -அப்பா, சித்தி -சித்தப்பாவை  ஸ்கைப்பில் அழைத்து மொத்தமாக விஷயத்தை போட்டு உடைக்க, அனு மயங்கி சரிந்தாள்.

 

ஆனந்த் தனது இன்னோவாவில் குடும்பத்தை அழைத்து கொண்டு உடனே கிளம்புவதாக ஏற்பாடு ஆக, இங்கு சிவா எல்லோரிடமும் விஷயத்தை சொல்ல, உணவு வாங்கப் பட்டிருப்பதை கண்டவன் 'முதல்ல எல்லோரும் சாப்பிடலாம், பிறகு பேசலாம் என்றவன் உணவு பொட்டலங்களை பிரிக்க, மாமி அண்ட் கோ, வீட்டுக்கு சென்று சாப்பிட்டு கொள்வதாக சொல்லி கிளம்பிவிட்டனர். அவர்களுக்கு உணவும் இனிப்பும் கொடுத்து வழி அனுப்பிவிட்டு, சிவா உள்ளே வந்தான். வாணியை பார்க்க பாவமாக இருந்தது. ரஞ்சன் வாயை திறக்கவில்லை.

 

ரஞ்சன் அப்பாவோ இன்று இரவு வீடு சென்றுவிட்டு, மறுநாள் வாணியின் பெற்றோர் வந்த பிறகு வருவதாக சொல்லி கிளம்பினார்கள்.

 

ரஞ்சனின் ஏக்கம் நிரம்பிய பார்வை, வாணியை  ஏதோ செய்ய சட்டென தன் பார்வையை தாழ்த்திக் கொண்டவளுக்கு அவன் பார்வை சொன்ன செய்தி தெளிவாய் புரிந்தது. முகம் குங்கும நிறைமாய்  சிவக்க அவன் பார்வை வதைத்தது.  முதன்முறையாய் பெயரிடப்படாத ஒரு உணர்வலையை மொத்தமாய் அனுபவித்தாள் பாவை. அவன் வீட்டிற்கு செல்லும் பொழுது அவனுடன்

 

உடனே சென்று விட வேண்டும் என்ற ஏக்கம் அவளைப் பாடாய்ப் படுத்தி தொலைத்தது...

 

வெட்கம் கெட்ட மனது என்று தன்னைத்தானே அவள் திட்டிக் கொண்டாலும்,வைதாலும், மாலையில் நடந்த விஷயங்கள் அவள் மனதில் பெரிய தாக்கத்தை பயிர் செய்திருப்பது நிஜம்தான்!

 

இத்தனை நேரம் தனக்கு நடந்த திருமணம் தானா என்ற பெரிய குழப்பத்தில் இருந்தவளுக்கு தன் கணவன் தன்னை விட்டு செல்கிறான் எனும் எண்ணம் ஏனோ அவளை துளைத்து எடுத்தது. உன்னுடன் வருகிறேன் என்ற அவளது பதில் சொ(கொ)ல்லும் ஏக்கப்பார்வை அவனுக்கான விடையைச் சொல்ல கர்வம்  மேலோங்க நாளை வருகிறேன்,  என்று அவளையே பார்த்துக்கொண்டு சொன்னவனுக்கு அங்கு சிவா தன்னை உற்று நோக்கி கொண்டிருப்பது சற்றும் புரியவில்லை. இருவரின் காந்த பார்வைகள்- காதல் பார்வைகள் அவை கொடுத்த இயக்க பரிமாறல்கள்,  இவை எதுவுமே சிவாவின் கண்ணில் இருந்து தப்பவில்லை.
தங்கையின் மன நிலையை நன்றாக புரிந்து கொண்டவன் நாளை வீட்டு மனிதர்களிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று மனதில் ஒத்திகை பார்க்க தொடங்கி விட்டான்.

 

காதலில் சிக்கி தவிக்கும் சிவாவிற்கு, தங்கையின் நிலையும் ரஞ்சனின் நிலையும் நன்றாகவே புரிந்தது.

 

மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றை தங்கையின் மனோநிலையை உத்தேசித்து நடத்த வேண்டும் என்று  முடிவு செய்து கொண்டான் சிவா.

 

அன்று இரவு சிவாவிற்கு மட்டுமல்ல, ரஞ்சனுக்கும்  வாணிக்கும் கூட உறக்கம் என்பது கனவாயிற்று.

 

ஏற்கனவே காதல் கொண்டிருந்த ரஞ்சன் வாணியின் மனம், இன்று நடந்தவற்றை மீண்டும் மீண்டும் மனதில் அசை போட்டு சந்தோஷமும் துக்கமும் பாதி பாதி நிலை என மனதை அலைக்கழித்தது.

 

தெய்வ சந்நிதானத்தில் நடந்த திருமணம், இதை ஒப்புக் கொள்வதற்கு தயக்கம் என்ன என்பது ரஞ்சனின் வாதம்.. காதல் கை சேர்ந்த பின்னும் இப்படி பிரித்து வைப்பதில் லாபம் என்ன?

 

ஏன் இவ்வாறு நடக்கிறது என்று அவனுக்கு ஒரு பக்கம் எரிச்சல். மற்றொருபுறம் வாணியின் வீட்டில் ஒப்புக்கொள்ள வேண்டுமே எனும் தவிப்பு. வெகு நாட்களாகி தன்னுள் அவளை புதைத்து வைத்துக் கொண்டிருந்த மோகம் அவனை வெகுவாக வாட்டியது. அவளை அணைத்துக்கொண்டு,

 

அவளின் நிலவு முகம் பார்த்துக் கொண்டு, அவளின் கூட மூக்கை உரசிக் கொண்டு, அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க, மொத்தமாய் தன்னை அவளுள் தொலைக்க, அவன் மனம் ஏக்கப்பட்டது.

 

வாணியின் நிலை இங்கு சற்றும் ரஞ்சனுக்கு குறைந்ததாக இல்லை. அவனுடனேயே சென்றுவிடவேண்டும் எனும் உணர்வு அவளை பிரளயம் போல் சுருட்டியது.

 

ஏனோ இந்த க்ஷணம் வீட்டில் மறுக்கக் கூடும் என்ற கலக்கம் அவளுக்கு சிறிதும் ஏற்படவில்லை. மஞ்சள் கயிறு மேஜிக், என்று குறிப்பிடப்படும் திருமண உறவிற்கான அடிப்படை விதை விழுந்தது எந்த நொடி என்பது இந்த நொடி வரை அவளுக்கு புரியவில்லை. ஆனால் ரஞ்சன் தனது கணவன் என்பதில் அவளுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. திருமணம் என்பது ஒருவருடன்தான்.

 

அந்த நிகழ்வு அவள்  வாழ்க்கையில் நடந்துவிட்டது. வீட்டில் ஒப்புக் கொண்டாலும் சரி ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி,  நடந்தது நடந்ததுதான் அதை மாற்ற முடியாது. உள்ளூர பெரும் நெருப்பாய் பற்றி எரிந்துகொண்டிருந்த உணர்வு, மாலையில் ஏற்பட்டிருந்த அதிர்ச்சி, இரண்டும் இப்பொழுது அவளிடம் இல்லை. உறை பனியை  ஒத்து உறைந்திருந்த காதல் உணர்வுகள் இந்த இரவில் அணையை உடைத்துக் கொண்டு வெளிவரும் பிரவாகம் போல் அவளிடம்.

 

ஆனந்திற்கு விஷயம் தெரிவிக்கப்பட்டு சென்னையிலிருந்து ஆனந், தனது காரில் தன் பெற்றோரையும், சித்தி சித்தப்பாவை மறைத்துக்கொண்டு மறுநாள் விடி காலையிலேயே கிளம்பி விட்டார்கள். அவர்கள் பெங்களூர் வந்து சேர மதியம் இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது.

 

அனுவிற்கு நடந்தவற்றை சிவா சொல்ல சொல்ல அவளால் சற்றும் இதை நம்பமுடியவில்லை. வாணி  ரஞ்சனை  உனக்கு பிடித்து இருக்கிறது என்று சொல்லி இருந்தால் நாங்களே இந்த திருமணத்தை செய்து வைத்திருப்போமே, இவ்வாறு வீட்டிற்கு தெரியாமல் இதுபோல திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?என்று கதறி தீர்த்து விட்டாள்.  அவளை சமாளிப்பதே பிரசாத்திற்கு பெரிய சவாலாக இருந்தது.  அவராலும் நடந்தவற்றை ஜீரணிக்க முடியவில்லை.  வாணி எப்படிப்பட்ட பெண் என்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். நடந்தவற்றை அதிர்ச்சி அவர்களை மீள முடியாமல் கட்டி வைத்திருக்கிறது.

 

ஒருவாறு இராமனும் பிரசாதும்  சேர்ந்து அனைவருக்கும் மெதுமெதுவே ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றி முடிவாக ரஞ்சன் மற்றும் அவன் வீட்டினரை கூப்பிட்டு பேசுவது என்று முடிவெடுத்தார்கள்.

 

ரஞ்சன் வீட்டில் மாலை வருவதாக சொல்லிவிட அவர்களுக்கும் சேர்த்து உணவு தயாரிப்பில் இறங்கினார்கள் பாலாவும் அனுவும்.

 

வாணி பாலாவின் பின்னாடி இருந்து மெதுவே பெரியம்மாவின் காதுகளில் மட்டும் விழுமாறு'பெரியம்மா ஏதாவது ஸ்வீட் சேர்த்து பண்ண முடியுமா என்று கேட்க பாலாவுக்கு உள்ளூர வாணியின் மனம்  புரிந்து விட்டது.

 

வாணியின் மெல்லிய குரல் அனுவின் காதுகளை எட்டியது தான். ஆனால் பெற்ற அவளிடம் சொல்லக் கூட இந்த பெண்ணிற்கு எதற்கு தயக்கம், நடந்ததை எப்படியும் ஒப்புக்கொள்ள தயாராகிவிட்ட பிறகு எதற்காக இந்த பெண் தன்னிடம் புதிதாக ஒதுக்கத்தை  காண்பிக்கிறாள்?

 

தான் இடுப்பில் இடுக்கிக் கொண்டு சுற்றி திரிந்த தன் செல்ல மகள் அல்ல இந்த வாணி. இப்பொழுது அவள் ரஞ்சனின் மனைவி எனும் மனோநிலைக்கு சென்று விட்டாளோ? என்று  அனுவிற்கு மனது வலித்தது. வெளியே காட்டிக்கொள்ளாமல் புன்னகை முகம் பூசிக்கொண்டு, இதை என்கிட்ட கேட்கலாம் இல்ல... உங்க வீட்டு ஆளுங்களுக்கு ஸ்வீட் செய்ய மாட்டேன்னு  நான் சொல்லுவேன்? என்று பதில் கொடுக்க, அத்தனை நேரம் அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒரு தயக்க உணர்வு சட்டென அறுந்து விழ தன் அம்மாவின் தோளில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள் வாணி. இரண்டு நாட்களாக அவள் அனுபவித்து கொண்டிருந்த கலவையான உணர்வுகள், அதை தாங்கிக்கொள்ள அம்மாவின் துணை கொடுக்கும் தோள் வளைவு...  அங்கு பார்த்துக்கொண்டிருந்த பாலா, ராமன், பிரசாத், ஆனந்த், சிவா அனைவரின் கண்களுமே, உணர்ச்சிகளை வெளியேற்ற கண்ணீர் பெருகியது.

 

இந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராய்...

பெண்ணின் திருமண நிகழ்வு ஆசாத்தியமானது.

மீண்டும் சந்திப்போம்.

 

உங்கள் தோழி

 

சுகி.

சுகீ


ReplyQuoteMithra Eswar
(@mithrabhuvan)
New Member Registered
Joined: 2 weeks ago
Posts: 0
 

Story narration super sago


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 165
Topic starter  

நன்றி 

சுகீ


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 2 years ago
Posts: 165
Topic starter  

 அன்றில் 26 😍 

 

அன்று மாலை ரஞ்சனின் பெற்றோர் வர, கலகலப்பாய் தொடங்கவேண்டிய திருமண பேச்சு தயக்கத்துடன், வெளிவந்தது. சாட்சியாய் அங்கு பக்கத்து வீட்டு மாமியும் அழைக்க பட்டிருந்தார். காலையிலேயே அனுவிடம் நடந்தவற்றை அவர் சொல்லியிருக்கிறார். ஆனாலும், அங்கு ஏனோ மூன்றாவது நபர் தேவை பட்டது போலும்.

கனத்த அமைதிக்கு பிறகு மெதுவே தயக்கங்களை ஓரம் கட்டிவிட்டு ரஞ்சனின் அம்மா ஆரம்பித்தார்.  நடந்து முடிந்தவைகளுக்கு அவர்கள் சாட்சியாயிற்றே... பிள்ளையை பெற்றவர்கள் தாமே முன்பு வந்து பெண் கேட்பது அந்த மணப்பெண்ணுக்கான கௌரவம் அல்லோ?

'உங்க பொண்ணுக்கு இந்த  சம்பவம் கல்யாணத்துல முடிஞ்சா சம்மதமான்னு கேட்டுக்கோங்க... நேத்து அவ உறைஞ்சு போய் இருந்தா. நாங்க ரொம்ப பயந்துட்டோம்.

இஷ்டம் இல்லன்னா பரவாயில்லை. போர்ஸ் பண்ண முடியாதே...

ரஞ்சன் தரப்பு இவ்வாறு பேசவும்  பிரசாதுக்கு, திரும்ப யோசனை, ஒருவேளை ரஞ்சன் நிர்பந்திக்க படுகிறானோ என்று. அதை கேட்டும் விட்டார். ரஞ்சன் ஜாதகப்படி இன்னும் ஓரிரு மாதங்களில் திருமணம் நடந்தாக வேணும் என்பது பிரசாதுக்கு தெரியுமே.

ரஞ்சனுக்கு உள்ளுக்குள் பதற ஆரம்பித்தது. இவர்கள் அனைவரும் திருமணம் நடக்க பேசுகிறார்களா இல்லை... தடுக்கவா எனும் எண்ணம் அவனுள்.

'எனக்கு பரிபூர்ண சம்மதம்... பட் பெரியவங்க மத்ததை பேசும் முன்னாடி எனக்கு வாணிகிட்ட நேரா, தனியா பேசணும்... என்றவன் குரல் தனித்து ஒலித்தது அந்த கூடத்தில் . வீட்டில் எல்லோரும் அவன் முகத்தை ஒருசேர பார்க்க, அதில் அழுத்தமும் பிடிவாதமும் தெரிந்தது. அறைக்குள் பதட்டத்துடன் உட்கார்ந்திருந்த வாணிக்கும் அவன் குரல் கேட்க அவளுக்கு இந்த சூழ்நிலையை எவ்வாறு கைகொள்வது என நடுக்கம்.அதே சமயம் மனதினுள் இனிப்பாய் இதம் பரவுவதை மறுப்பதர்கில்லை.

வெளியே ஆழ்ந்த அமைதியை ராமன் குரல் கிழித்தது.'சரி, போய் பேசி பாரு ரஞ்சன் '. ஆனால், நிதானமா பேசு 'என்றார்.

ரஞ்சன் மென் புன்னகையை தவழ விட்டு வாணி இருக்கும் அறைக்குள் சென்றான். தன் மனையாளை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கும்  கணவனின் தவிப்பு அவனுள்... நீ மட்டும் 'வேண்டும் வேண்டும்' என அவன் மனம் ஜபித்தது. வார்த்தைகளை கோர்த்துக்

கொண்டிருந்தான். தன்னுள் இருக்கும் தவிப்பு அவளுக்குள்ளும் உண்டா என்று தெரிந்து கொள்ளும் தாகம் அவனை பாடாய் படுத்தியது. விடை சொல்ல வேண்டியவள் தலை குனிந்து நின்றிருந்தாள்.நாணம் தடுத்ததோ? அவள் நயனங்கள் அவனை நேரே பார்க்க கூச்சமுற்று இமைகள் எனும் விசிறி கொண்டு தம்மை மறைத்துக்கொள்ள முயற்சி செய்து பார்க்கையில்,

முதன்முறை பார்க்கும் பொழுது இல்லாத தவிப்பு, அச்சம், நாணம் பயிர்ப்பு? அவன் பேச விரும்பும் சொற்கள் அவளின் உயிர்ப்பு...

செந்தீயை ஒத்த அவள் வதனம் அவனை தள்ளிச்செல்ல விடாமல் என்னை அணைத்துக்கொள் எனும் போது

ஆடவனுக்குண்டான உணர்வு வேகம், அது அவளுக்கான, அவளால் மட்டுமே தூண்டபடக் கூடிய பிரவாகம்.  உணர்வுகளை வெளியே காண்பிக்கும் சூழ்நிலை இல்லை.அதனால், இதற்கு மேல் பிரிவு தகாது என அவனுக்கு தெளிவு. அதே தெளிவு வாணியிடம் உண்டா என்பது அவனுக்கு இப்பொழுது நிச்சயம் தெரிந்தாகவேணும். அவளது சூடான மூச்சுகாற்றை சற்று தள்ளி நின்றாலும் அவனால் உணர முடிந்தது. அவளின் வெப்பம் அவனுள் குளிரையும் வெளியே இதத்தையும் கொடுக்கும் விந்தை? இது என் வாழ்க்கை முழுவதும் வேணும் என அவன் இதயம் துடிக்கும் ஓசை வாணிக்கு தெளிவாய் கேட்க, சற்றே அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் பார்வை சொல்லும் ரகஸியங்களை படித்து திகைத்து நின்றாள். அவன் விழிகள் அவளிடம் 'நீ என் உரிமை ' இனி உன்னை விட்டு என் ஓரணுவும் விலகாது, என்று அப்பட்டமாய் சத்தியம் பேசின. அவளுக்குள் மின்சார அதிர்வு. வார்த்தைகள் பரிமாற்றம் இல்லை. இருவரும் விழிகளும் ஒரு நேர்கோட்டில் ஆயிரம் கவிதைகள் எழுத, உணர்வுகள் உந்த அவளிடம் ஒரு தலையசைப்புடன் அவள் அறையில் இருந்து வெளியே வந்தான். அவன் விழிகள் சிந்தும் காதல் மொழிகள் சிவா ஆனந்தாலும் படிக்க முடிந்தது. ரஞ்சன் முதலில் வர, ரஞ்சன் எனும் காந்தத்தால் ஈர்க்கப் பட்ட இரும்பு பெண் வாணி அவன் பின்னாலேயே வர,  அங்கிருக்கும் அத்துணை கண்களும் இருவரின் மீது தான்.

முன்பு புரியாத ஜோடி பொருத்தம், இன்று இருக்கும் மன பொருத்தத்தால் வெகு அழகாய்...

இருவரும் சேர்ந்து, ஒருவர் கை ரேகையில் மற்றொருவர் ரேகையை பின்னி சுகமான ஒரு வாழ்க்கை வாழ, ஒன்றாய் பயணம் செய்ய முடிவு செய்யும் நொடிகள் அற்புதம்...

வீட்டு பெரியோருக்கு இவர்கள் நிலை இயல்பாய் புரிப்பட, திருமண நிகழ்வை எப்படி நடத்த வேணும் என பேச ஆரம்பித்தனர்.

 

ரஞ்சனுக்கு பொறுமை குறைய ஆரம்பித்தது. ஆடம்பர திருமண சாக்கில் வாணியை பிரிந்து இருக்க அவன் விரும்பவில்லை. தன் அப்பாவை  தனியே அழைத்து வீட்டிலேயே திருமண நிகழ்வு நடக்க விரும்புவதாக  சொல்ல, பெற்றவருக்கு அவன் அவசரம் நன்கு புரிந்தது. திருமணத்தை தள்ளி நடத்துவதில் அவருக்கும் உடன்பாடு இல்லை. தயங்கியபடி பேச தொடங்கினார் ரஞ்சனின் அப்பா.

'ரொம்ப நெருங்கிய சொந்தங்கள் சூழ எங்க வீட்டுல இல்ல உங்க வீட்டிலேயே கல்யாணம் வச்சுக்கலாமே? பிறகு ரிசெப்ஷன் பிள்ளைகள் இஷ்டம் போல் வச்சுக்கலாம்'என்றவரை வினோதமாக பார்த்து வைத்தது மொத்த குடும்பமும்.மேலும் சில ஆலோசனைகளுக்கு பின்னர் அவர் சொன்னது போல் செய்து திருமணத்தை பதிவு செய்வது எனவும் இருவரும் தேன் நிலவு சென்று வந்த பிறகு ரிசெப்ஷன் வைக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட, அனு 'திருமண நிகழ்வு பெண் வீட்டில் செய்யணும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள்.'தன் மகளை தன் வீட்டிலிருந்து திருமணம் செய்து அனுப்ப வேண்டும் என்று பெற்றவள் ஆசை படுவதில் தவறு என்ன?

சென்னை சென்று ஜோசியரிடம் கேட்டு நாள் குறிப்பதாக பிரசாத் சொல்ல,  கிளம்பும் முன் வாணியை வெளியே அழைத்து செல்ல அனுமதி கேட்டு நின்றான் ரஞ்சன்.

அவனால் நடப்பது என்ன என்று நிஜமாய் நம்ப முடியவில்லை. வாணியை அழைத்துகொண்டு ஜெயநகர் சென்றவன் அங்குள்ள பிரபல நகை கடைக்குள் நுழைந்தவன், அவளுக்கு வைர மோதிரம் பரிசளித்தான். எந்த ஆடம்பரமும் இன்றி வானத்தையும் நிலத்தையும்

சாட்சிகளாக்கி அந்த மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தவனின் செயலில் பெண் தன்னிலை கெட்டு நின்றாள். மோதிரத்தில் முத்தம் வைத்து அவனை நிமிர்ந்து பார்க்கயில் அவன் கண்கள் ஏக்கமாய் அவளை சுற்றி வளைத்தது.  அவள் குறும்பு பார்வை அவனை சீண்ட, அடுத்து அவளை புடவைக்கடைக்கு அழைத்து சென்றவன் அவளுக்கான பட்டு புடவை ஒன்றை வாங்கி, அவளிடம் கொடுக்கும் சாக்கில் விரலில் அவள் உணர்வதற்க்கு முன் முத்தம் வைக்க குமுதமென சிவந்தாள் வாணி. பொதுவிடம், யாரும் பார்த்துவிட்டால்? எனும் தவிப்பு ஒரு புறம்... விரும்பிய எதையோ இழந்து மீண்டும் அது கையில் கிடைத்தால்? இது தான் வாணியின் மனோநிலை.

சென்னையில், ஜோசியரிடம் சென்று ராமனும் பிரசாதும் திருமண நாள் குறித்துக்கொண்டு வர, வீட்டில் கல்யாணக்களை கட்டியது.

அடுத்த பதினைந்து நாட்களில் திருமணம் என முகூர்த்தம் குறிக்கப்பட  வார இறுதியில் ரஞ்சனுடன் வாணியும் சிவாவும் வருவதாக முடிவெடுக்கப் பட்டது.  திருமண பட்டு எடுக்க, அதற்கு தோதாக டிசைனர் ப்ளவுஸ் தைக்க புது ஆடைகள், அணிகலண்கள் வாங்க, என்று வாணிக்கு வேலைகள் அதிகம் இருக்க அலுவலக வேலை விடுப்புக்கு முன் முடிக்க வேண்டியவை ஒரு பக்கம் அவளை சாறு பிழிந்தது. ரஞ்சனுக்கு நகை வாங்கும் வேலையோ மற்ற பெண்களுக்கான தனிப்பட்ட காரணங்கள் அவனுக்கு இல்லை. அலுவலக வேலை மட்டும் அதிகம்.

அனுவுக்கு ரஞ்சனுடன் வாணி வருவது கொஞ்சமும் இஷ்டம் இல்லை. ஏனோ வாணி அவளை விட்டு வெகு தொலைவு சென்று விட்டது போல் ஒரு மயக்கம். ஆனால், இவை நடப்பு தான் என்று மனதை தேற்றிக் கொண்டாள்.

நிஜத்தில் வாணிக்கும் ரஞ்சனை தவிர வேறொன்றும் புரியவில்லை. ஒருவேளை திருமண நாளை எதிர்நோக்கும் எல்லா பெண்களுக்கும் இந்த மயக்கம் இருக்குமா என்று புரியவில்லை. ஒன்று நிச்சயம்.... கல்யாண கனவுகள் பொதுவானவை. ஆண் பெண் பேதம் இல்லை. ரஞ்சன் ஏற்கனவே வாணி நினைவுகள் மட்டுமே பிரதானம் என்று மாறி வெகு மாதங்கள் ஆகிவிட்டது. மொத்தத்தில் இருவரும் தங்களுக்கான தனி கூட்டை உருவாக்க காதல் என்ற அயல் கிரஹத்தில் குடிபெயர்ந்து நாட்கள் ஆகிவிட்டது. இதை ஏற்கத்தான் வேண்டும்.

பெற்றவர்கள் உணர்வும் விந்தை தான். குழந்தைகளுக்கு காலகாலத்தில் திருமணம் முடித்து வைக்க ஆசை கொள்ளும் அதே சமயம், தங்களுக்கு உரிமையான ஒன்று கை விட்டு போகும் உணர்வு...இந்த உணர்வு பெண்ணை பெற்றவர்களுக்கு அதிகம் என நம்புகிறேன்.

இன்னொரு விந்தை,பெண் திருமணம் நிச்சயம் ஆன தருணம் மணமகன் குடும்பத்தை தானதாக சட்டென்று ஏற்கிறாள். தான் பிறந்த அகம் பெற்றோர் வீடாகிவிடுகிறது. வாணியோ, அனுவோ, பாலாவோ யாரும் விலக்கல்ல.

ரஞ்சனும் வாணியும் சிவாவும் வெள்ளியன்று காலையே சென்னை வந்து சேர்ந்துவிட, மதிய நேரம் டி. நகர் பிரபல நகை கடையில் திருமாங்கல்யம் மற்றும் முஹூர்த்த பட்டும், ரஞ்சனுக்கு பெண் வீட்டு சார்பாக மோதிரம், மணமகனுக்கான பட்டு வேட்டி எடுப்பதாக முடிவு செய்யபட, ரஞ்சனுக்காக வாணியும் வாணிக்காக ரஞ்சனும் தெரிவு செய்ய... இன்னும் ஒருவாரம்... வாணி திருமதி ரஞ்சனாக.

 

மீண்டும் சந்திப்போம்

 

தோழி சுகீ.

சுகீ


ReplyQuote
Page 4 / 4
Share: