Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

தா(தே)னாய் வந்த தேன...
 

தா(தே)னாய் வந்த தேன்மொழியே!  

Page 2 / 3
  RSS

(@subageetha)
Active Member Writer
Joined: 3 weeks ago
Posts: 11
09/07/2019 5:47 am  

(தேன்)மொழி .2

கனா காண்கையில் ,கண்ணோரம் எரிச்சல் ஏன் ?

நீ என் தேவதை எனநான் நினைதிருக்க, நாளும் எனை

வதைப்பதேனோ?  வாடிய மலராய் எனை மாற்ற வந்தாயே ,என் மனவாட்டியே !

 

        எவ்வளவோ காலம் முன்னேறி இருப்பினும் மங்கள நாண் பூட்டிய பின்னர்தான் தற்பொழுதுள்ள நாகரீகதின்படி ரிசப்ஷன் போன்றவை என ரிஷி தீர்மானமாக சொல்லிவிட்டதில் அவனது பெற்றோர் மகிழ்ச்சியின் எல்லைக்குச்செல்ல, ஒரு பட்டிக்காட்டான என் தலையுல கட்டறீங்க என்று தன் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள் நிலா...உள்ளூர தன் தமையன் மகன் பற்றிய மகிழ்ச்சியே அந்த அன்னையிடம்.  நிலாவின் தந்தை இந்த காலத்தில் இப்படியொரு பையனா என மெச்சிக்கொண்டிருந்தார்.வெளியில் சொல்லி நிலாவை தூண்டிவிட இருவருமே விரும்பவில்லை...

 

அமெரிக்காவுல வளந்த தன்னை இந்த பந்தத்தில் மாட்டிவிட இவர்கள் எண்ணுவதற்க்குக் காரணம், ரிஷி வீட்டினரின் சொத்துதான் என அவள் தீர்மானமாக நம்பினாள் ..திருமணத்திற்க்கு சம்மதிக்காவிட்டால் தன் பெற்றோரின் சொத்துக்கள் தனக்கு கிடைக்காதோ எனும் அச்சமும் நிலாவின் மௌனத்திர்க்கு ஒரு காரணம்..திருமணம் முடிந்த பின்னர் ரிஷி வரவில்லை என்றாலும் தான்மட்டும் அமெரிக்கா சென்று விடலாம் என்பது அவள் கணக்கீடு..

 

ஆனால் ,எங்கு தன் மகள் திருமண பந்தத்தின் சிறப்பறியாது லிவ் இன் கலாசாரத்தில் மூழ்கிவிடுவாளோ எனும் அச்சமே அவர்களது இந்த ஏற்பாட்டிர்க்குக் காரணம். அண்மை காலங்களில் இரவுநேர விடுதிகளில் இருந்து நிலா சுய நினைவுடன் திரும்புவதில்லை...தனக்குப்பின் தன் மகள் தொழிலை எடுத்து நடத்துவாள் என நினைத்திருந்தார் நிலாவின் தந்தை செல்வபதி..

 

ஆனால் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தவுடனேயே நிலாவின் போக்கு திசை திரும்பியது..கல்வியில் நாட்டம் குறைந்து, அத்துணை நாட்களாய் அருமையாக தன் பெற்றோரால் வளர்க்கப்பட்ட நிலா,கட்டுப்பாடுகளுடன் கூடிய இந்திய வளர்ப்புமுறையை வெறுக்கலானாள்.  சுதந்திர வானில் பறக்க விரும்பிய அவளுக்கு தோதான தோழமைகள் கிடைக்க...  இன்று நிலைமை திருமண ஏற்பாட்டில் வந்து நிற்கிறது.ஏனோ அந்நிய மண்ணில் அருமையாய் வளர்க்கப்பட்ட அற்புதமான நல்ல தோழமைகள் அவளுக்கு வாய்க்கவில்லை.

 

கையில் மருதாணி இடுதலில் தொடங்கி கூரை சேலை உடுத்துவது வரை அனைத்துமே தகராறுத்தான்...என்னதான் சொந்த அண்ணனாக இருந்தாலும் சம்மந்தி முறையில் இருக்கும் வேதநாயகத்தின் காதுகளுக்கு எட்டாமல் சமாளிப்பதற்குள்...அம்மா...நிலாவின் அம்மா ராஜேஷ்வரிக்கு இதய வலி வாராமல் இருந்தது அதிசயம்தான்!!  செல்வபதிக்கோ திருமணம் நல்லபடியாக முடிந்து நிலாவையும்,வேறு குழந்தைகள் இல்லா நிலையில் தன் தொழிலையும் ஏற்க வருவான் , தன் மருமகன் ரிஷி எப்பொழுது தன் மகளின் கழுத்தில் மங்கள நாண் பூட்டுவான் என்ற ஏக்கம்!  திருமணம் முடிந்தபின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து தாயகம் திரும்பிவிடவே அவர் மனம் துடித்தது.  நிலாவின் மணக்கணக்கீடுகளும் ஒரு காரணம்.. 

 

ஆரம்பமே பல்வேறு முரண்பாடுகளைக்கொண்ட இருவரின் வேறுபட்ட மனோ நிலைகளுடன்..விதியோ இருவரது கை ரேகைகளுக்குள் முடிச்சிட முனைகிறது..முதல் கோணல் முற்றும் கோணல் என்று நிலாவின் நடவெடிக்கைகள் அவர்கள் வாழ்க்கையை வேடிக்கை ஆக்கிவிடுமோ என உள்ளூர என் மனம் தவிக்கிறது. 

 

பெண்களை பற்றி உயர்வாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டு , வளர்ந்திருக்கும் ரிஷியால் கட்டுப்பாடுகளை கட்டுப்பாட்டித்தனம் என சாடும் ,மீறும் நிலாவை மாற்ற முடியுமா? எனக்கென்னவோ சந்தேகமாய் உள்ளது.

 

இதோ திருமணநாள் காலை..அக்னியின் முன் நிலாவின் கை பிடிக்க (தீ குளிக்க), குளிர்ச்சியை அறியாதவளான அத்தை மகள் அருகில் ரிஷி.காதலை கண்களில் தேக்கியபடி....வெளுப்பான தன் கைகளுக்கருகே கரும்காரங்கள் உடையவனான மாமன் மகனை வெறுப்பேனும் கரும்காண்ணாடி அணிந்தவளாக பார்த்து அமர்ந்திருந்தாள் நிலா,,,

 

ஏ! உக்கிரத்தில் காயும் பெண்ணே, நிலாவேன்று பெயர் வைத்தால் மாசற்ற நிலாவாகி விடுவாயோ ?மாசற்ற எம்மன்னவன் உனக்கு மாலையிட வருகையில் ,குளிரதென்றலாய் வீசாமல் ,சூராவளியாய் நீ அமர்ந்திருப்பதை காணும்பொழுது என் உள்ளுக்குள் குளிர்கிறதே.!!

 

ஒருவழியாக மந்திரங்கள் உச்சரித்து ,மங்கள வாத்தியமாம் நாகஸ்வரம் முழங்க திருமாங்கல்யத்தை உளப்பூர்வமாக நிலாவின் கழுத்தில் பூட்டினான் ரிஷி.அனைத்து ஸம்ப்ரதாயங்களும் முடிந்து மாளிகை உள்ளே நுழையும் பொழுது கூரை சேலை காலை தடுக்கிவிட ரிஷியின் கரங்களிலே தஞ்சம் புகுந்தது அந்த நிலவு...எத்துணை இடர் வந்தபோதும் உனக்காய் நான் உள்ளேன் சகியே !  என்று ரிஷியின் மனம் ஆரவார கொண்டாட்டம் இட்டது..

 

முதலிரவில் தனிமையில் மனையாளை சந்திக்க மனதில் ஆயிரம் ஒத்திகைகள் அவன் மனதில்....பூவை விட மென்மையான ரிஷியின் முகம் பாவையவள் வருகைக்காய் காத்திருக்க...நிலவு அவன் அறைக்குள்ளே அடியெடுத்து வைத்தது.   

 

ஒருவருக்கொருவர் புரிதலின் பின்னர் கூடலில் இணையலாமென மன்னன் நினைத்திருக்க அவன் மனையாட்டியோ...சில்லி ரிஷி...ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணுறது உடம்பால ஒருதருக்கொருத்தர் புரிஞ்சுக்கத்தான்...காலம் பூரா இருக்கு நாம மனச புரிஞ்சுக்க... என்று தன் தேவையை அவள் கூற...தவறில்லை என தலையாட்டினான் ரிஷி,,, நீண்ட காத்திருப்புக்குப்பின் பெண்ணின் தேகத்தில் இணைந்தும் ,அவனுள்ளே ஒரு அவஸ்த்தை...நிச்சயம் அது இன்பத்தால் வந்த அவஸ்த்தை அல்ல...

 

தேன் நிலவு காலத்திலும் உடல் சார்ந்த தேவைகளுக்கு மட்டுமே ரிஷியை நாடிய நிலா..தன்னை பற்றி பகிர்ந்து கொள்ளவும் இல்லை...அவனை பற்றி அறிய விழயவும் இல்லை...எதிலோ தோற்ற உணர்வுடன் ,வழக்கமான அலுவல்களில் தன்னை ரிஷி நுழைத்துக்கொள்ள,அதுவே நிம்மதி என்று அவளும் இருந்துவிட்டாள்.  அமெரிக்கா சென்றுவிட்ட தன் பெற்றோருடன் பேச நிலாவிர்க்கு விருப்பமில்லை..  அவர்களும் மகள் குடும்ப வாழ்வில் புக நாம் விலகியிருத்தல் அவசியம் எனக்கருதி விலகி இருக்க முடிவெடுத்தனர்.  ரிஷியின் பெற்றோருடன் வசிப்பது தன் சுதந்திரத்திர்க்கு தடை எனக்கருதி சென்னையிலிருந்து மும்பை அல்லது பெங்களூரு சென்றுவிட ரிஷியை துளைக்கலானாள். 

 

ரிஷியும் மும்பை சென்றால் தொழிலை இன்னும் விரிவு செய்ய வசதி என நினைத்து சரி என்றான்...

 

இனி ...விதியின் சதிகள் ஆரம்பம்.....

 

 

This post was modified 2 weeks ago by Nithya Karthigan

ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 256
09/07/2019 4:44 pm  

என்ன ஃபிரண்ட்ஸ், ஸ்டோரியை படிச்சு பார்த்தீங்களா? எப்படி இருக்கு? ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்களேன். புது ரைட்டர்... நல்லா எழுதறோமா இல்லையான்னு அவங்களுக்கும் ஒரு குழப்பம் இருக்கும்ல.

கீழதான் இருக்கு லைக் பட்டன். படிக்கிறவங்க ஒரு அழுத்து அழுத்தீட்டு போங்களேன். காசா பணமா... சும்மா ஒரு கிளிக் தானே...

அப்புறம் இன்னொரு ரிக்வஸ்ட். லாகின் பண்ணி படிங்க. அப்போதான் லைக் பண்ணவும் கமெண்ட் போடவும் ஈஸியா இருக்கும். லாகின் பண்ணலைன்னா ரெண்டுமே முடியாது. நேரம் செலவு பண்ணி எழுதற ரைட்டருக்கு உங்களால முடிஞ்ச ஒரு சின்ன உபகாரம்... செய்யலாம் தானே... செய்வீங்கன்னு நம்பறேன்...

நன்றி...  👍  👍  👍 

This post was modified 2 weeks ago by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 256
09/07/2019 5:11 pm  

Thank you Priyanka... 🙂

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Indira selvam
(@indra-selvam)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 51
10/07/2019 2:32 pm  

NaN vanthutene..... Geetha... Maggi innum varala.... avangala vealiya mutti poda sollidunga.....

Anbudan,
Indira Selvam


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 256
10/07/2019 2:34 pm  

அங்க போயி அடிச்சு துரத்துறேன்... இருங்க இந்திரா... பிரஷா வந்து மேகியை அங்க லாக் பண்ணிடுச்சு...

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Indira selvam
(@indra-selvam)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 51
10/07/2019 2:35 pm  

Ungaloda story 2 episode um innaiku morning padichitene... first line “Yanai in kambeeram” adhulayea nan vilunthutene....... Maggi adutha point neenga sollunga.....

This post was modified 2 weeks ago by Indira selvam

Anbudan,
Indira Selvam


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 256
10/07/2019 2:41 pm  

மேகலா அப்பாதுரை  மேடைக்கு அழைக்கப்படுகிறார்....  😎  😎  😎 

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Indira selvam
(@indra-selvam)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 51
10/07/2019 3:02 pm  

Megalaku adhiga batcha thandanai yaga.... eadhavathu koduka veandum my lord(nithya) nallatha yosichi sollunga

Anbudan,
Indira Selvam


ReplyQuote
Indira selvam
(@indra-selvam)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 51
10/07/2019 3:04 pm  

Next Geetha..... ungalathu ezhuthu Nadai super.... apporam ivlo nal NaN padicha kadhaila.... ponnu than parambaryam.... kattupadu.... yeallam peasu vanga.... but idhula... ultava padikumbothu.... ulagam maridichonu.... bayanthutene...... 

Anbudan,
Indira Selvam


ReplyQuote
Indira selvam
(@indra-selvam)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 51
10/07/2019 3:05 pm  

Maggi.....Divya.... pons akka.... prasha... all come 

Anbudan,
Indira Selvam


ReplyQuote
Page 2 / 3
Share:

error: Content is protected !!
Don`t copy text!
  
Working

Please Login or Register