Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

தா(தே)னாய் வந்த தேன...
 

தா(தே)னாய் வந்த தேன்மொழியே!  

Page 4 / 5
  RSS

Subageetha Sundararajan
(@subageetha)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 35
13/08/2019 10:30 am  

முயற்சி செய்கிறேன்.... உங்கள் ஆதரவுக்கு நன்றி 


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 35
13/08/2019 10:55 am  

மீண்டும் உங்களை சந்திக்கப் பதிவுடன் வந்துவிட்டேன் ...உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள விழைகிறேன்.  கதையின் கரு என்னவென்று நிச்சயம் ஊகித்திருப்பீர்கள்..சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி எழுதும்பொழுது நிச்சயம் நிதானித்துக்கொள்ள வேண்டியுள்ளது.பெண்களை பற்றியும் ,அவர்களை சார்ந்த விஷயங்களைப்பற்றியும் எழுதும்பொழுது ,யோசிக்கும்பொழுது ..மனகொந்தளிப்புகளை அடக்கி எழுத வேண்டியுள்ளது.  இந்தக் கதை எனது சிறுவயதிலிருந்து பெண்களுக்கெதிரான விஷயங்களைப்பற்றி படிக்கும் பொழுது ஏற்பட்ட மனக்குமுறல்களின் தாக்கமே.  ஆண்களை பெண்கள் கைய்யாலும் முறையும் சில சமயங்களில் வேறுபடுகிறது.....பெண்களுக்கு கொடுமைகள் மனதால்,உடலால் நிகழ்கிறது..ஆண்களுக்கு மனம் காயப்பட்டு,அவர்களது இயல்பையே மாற்றி விடுகிறது..நடுநிலையில் இருந்து இந்தக்கதையை ஸ்வாரஸ்யம் குறையாமல் எழுத முயர்ச்கிக்கிறேன் ....உங்கள் கருத்துக்கள் என் எழுத்தை மேம்படுத்தும்.  கதை மாந்தர்களுடன் பயணிப்போம் வருக....

சுகீ.

(தேன்)மொழி 6:

எப்பொழுதும்போல தனது கைகளை தேய்த்துக் கொண்டு கண்களில் ஒற்றியவாறே எழுந்து தனது காலை வேளையின் வேலைகளை ஆரம்பித்தாள் தேனு.... அவளுக்கொன்றும் இன்று மனதில் பாரமில்லை..மாறாக தனது பரீட்சை முடிவுகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டுமே. தனது தவத்திர்க்கான பலன்.  இனி அரசு வேலைகளுக்காக விண்ணப்பிக்க ஆரம்பிக்கவேண்டும்.  மத்திய அரசு வேலை,வங்கிப்பணி எல்லாவற்றிர்க்கும் விண்ணப்பிக்க ஆரம்பிக்கணும்.  மூன்றாண்டுகளில் அவள் எண்ணப் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாறுதல் இது. நண்பகல் பதினோருமணியளவில் முடிவுகள் வெளியாகும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது....எப்படியும் இரண்டு தங்க மெடல் இவளுக்கு காத்திருப்பதாக ஏற்கனவே துறை தலைவர் சொல்லி விட்டார். ஆனாலும் ஒரு பரபரப்பு.  முடிவுகள் வெளியானதில் மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி (இரண்டாம் இடம்) இவளுக்கு கிடைத்திருந்தது.  தந்தைக்கு அழைத்தாள்.

அப்பாவிடம் அனைத்தையும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டாள். தேனு நா ஆபீஸ் வேலையா அம்பாசமுத்திரம் வந்திருக்கேன்மா ..நீயே அம்மாக்கு,அத்தான்-அக்கா எல்லோருக்கும் சொல்லிரு ..நா திரும்ப ரெண்டு மூணு நாள் ஆயிரும்.  நீ எப்ப வீட்டுக்கு திரும்புற ..என்றார்.

நாளாக்கி சாயங்கால வண்டிக்கு பதிவு பண்ணிட்டேன்பா.  எப்போ உங்கள பாக்கபோறேன்னு தோணுது..என்றுவிட்டு..தான் வீட்டுக்கு பேசினாள்.

 மறுநாள் ஓரளவிர்க்கு தனது மூட்டைகளை கட்டியவளுக்கு ஒன்று புரிந்தது..எல்லாவற்றையும் ஒரே நாளில் அள்ளிச்செல்ல முடியாது என்று..முடிந்தவற்றை அள்ளிக்கொண்டு வீட்டிர்க்கு பறந்தது அந்தப்பறவை. 

மும்பை மருத்துவமனை.. பெண்மருத்துவருடைய அறை  வாயிலில் மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு ,வெளியே மருத்துவருடைய அழைப்பிர்க்காய் வெளியே தனித்திருந்தான் ரிஷி.அவனுள்ளே தனது மருத்துவர் குறிப்பிட்ட விஷயங்கள் மூளையில் மின்னிக்கொண்டிருந்தது.

 

 

ஒருவித பரபரப்புடன் ரிஷி....  உள்ளே நிலா மருத்துவரிடம் என்னோட கருகலைப்புகள் பத்தி அவருக்கு ஒண்ணும் சொல்ல வேணாம் டாக்டர்..இன்ஃபாக்ட் அவருக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல....முதல் குழந்தை மட்டும்தான் அவரோடது.  ஸோ ..பிளீஸ் அவருக்கு சம்மந்தம்மில்லாத விஷயங்கள அவர்கிட்ட டிஸ்கஸ் பண்ணவேணாமே !என்ற நிலவை ஒருவித அருவருப்புடன் பார்க்க ஆரம்பித்தார் அந்த பெண் மருத்துவர்..நீங்க உங்க கணவர உள்ளே வரசொல்லுங்க..நீங்க வைட் பண்ணுங்க ..உங்க ஹெல்த் கண்டிஷன் கண்டிப்பா அவருக்குத் தெரியணும்..என்ற அவரது குரலே நிலாவிர்க்கு மருத்துவரது நிலையை கூறியது..ஒரு தோல் குலுக்களுடன் வெளியே சென்ற நிலாவை நினைத்து மருத்துவருக்கு இன்றைய இளம்பெண்கள் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் என்ற குழப்பமும் ரிஷியிடம் பரிதாபத்துடன் கூடிய கோவமும் வந்தது..பொண்டாட்டி இப்பிடி இருக்காளே ,,அவன்கிட்ட என்னவோ என்று அவர் மனம் வேறுவிதமாய் யோசனை செய்தது..  ஆனால்...முதல் குழந்தை இவனது என்று நிலா சொன்னதில் மருத்துவரது சந்தேகம் தெளிந்தது..கோவம்?...

வாங்க ரிஷி..உங்க மனைவியின் நிலை தெரியுமா?  அவங்களுக்கு நிறைய கருக்கலைப்புகள் நடந்திருக்கு..சிகரெட்,டிரிங்கிங்க்...இதத்தவிர கரு உண்டான நேரத்துல வன்மையா உடலுறவுன்னு  நிறைய காரணங்கள்...நீங்க இத ஏன் கவனிக்கல ..இப்போ அவங்க கர்ப்பப்பை ரொம்ப வீக் ஆகிடுச்சு..இனி அவங்க இன்னொருமுறை குழந்தைக்கு முயற்சி பண்ணா உயிருக்கு பிரச்சனை ஆகிடும்..இப்போ மெடிசென்ஸ் தரேன்...ட்ரீட்மெண்ட் கன்டினியூ பண்ணனும்..மெடிசென்ஸ் எடுக்கும்பொழுது கண்டிப்பா மத்த விஷயங்கள் கூடாது, அவங்கள வரச்சொல்லுங்க ..என்று ஓரளவிர்க்கு அவளது நிலையை தெளிவாகவே ரிஷியிடம் கூறிவிட்டார்..இனி அவன்தான் கவனிக்கவேண்டும் என்றும் முடிவு செய்துக்கொண்டார் ..ஆனால் ..கோடி ஊசிகளை வைத்துக்குத்தினாலும் வாராத அளவிர்க்கான வலியை அனுபவித்தான் ரிஷி..அவளிடம் எதையும் காண்பிக்காமல் அமைதி காத்தான் ..இதற்குமேல் கொட்டிக்கவிழ்க்க ஏதுமில்லை என அவன் உள்மனம் கொதிக்க ஆரம்பித்திருந்தது.உள்ளே நிலாவை மருத்துவரிடம் அனுப்பிவிட்டு தன்னை சமன் செய்துக்கொள்ள முயற்சிகளை செய்யலானான்.  விஷயம் நிச்சயம் பெரும் விபரீதமே..தொழில் பிரச்சனைகளை வேறு விதமாக தீர்வு காணலாம்.வாழ்க்கை பிரச்சனைகள்? சென்னையிலேயே இருந்திருக்க வேண்டும் இங்கு வந்ததே பெரும் பிரச்சனை..உள்மனம் வாதங்களை அடுக்கத்தொடங்கியது

அவனுக்கு தெளிவாகப் புரிந்தது...அவள் வயிற்றின் குழந்தைகளுக்குத் தான் காரணமில்லை என்று..ஆனால் ..தன்னை அதிகம் வீட்டில் அல்ல..நாட்டில் கூட தாங்கவிடாமல் விரட்டிக்கொண்டிருந்தது அவன் மனைவிதானே! என்னால் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாமல் இல்லையே...கூடலின் தருணங்கள்,புனே பயணம் அனைத்தும் அவன் கண்முன் படமாய் விரிந்தது.  தான் செய்த தவறு அவளை முழுமையாக காதலித்ததும்,நம்பிக்கை கொண்டதும்தான்...நான் காதலை விரும்பினேன்...அவளுக்கு தேவைபட்டது..என் பணமும்,தேவைப்படும்பொழுது உடற்பசி தீர்க்கும் உடலும்..ஆகக்கூடி ..பணம் தரும் இயந்திரமாய்,ஆண் விபச்சாரியாய் என்னை பாவித்திருக்கிறாள்...  என்று அவன் மனம் வாதங்களை முன் வைத்தது.இனி அவளைத் தொடுவதில்லை என முடிவு செய்துக்கொண்டான் .  நிலாவிர்க்கு இதனால் பாதிப்பு ஏதுமில்லையே.! அவளுக்குத் தேவையான பணம் மட்டும் கொடுப்போம் ,,நடந்த விஷயங்களை இருபக்கப் பெற்றோரிடமும் கூறிவிடலாம்..தவறுகள் பெரிதாக மாற வாய்ப்புள்ளது..ஒருவேளை உயிர் ஆபத்துக்கள் நேர்ந்தால் நினைக்கும் பொழுதே உடல் குலுங்கியது ரிஷிக்கு...இத்துணை நடந்தும் மறந்தும் வாயை விடாத மனைவிமேல் சந்தேகம் வந்தது..அவள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிப்பேசக்கூடும்.. இரண்டு நாட்களில் சென்னை செல்ல ஏற்கனவே முடிவாகி இருந்தது.  ரிஷி தனக்கு எதுவும் தெரிந்ததாக நிலாவிடம் காட்டிக்கொள்ளவில்லை.  வீடு வந்து சேர்ந்ததும் தனது அறைக்குள் பாந்தமாய் முடங்கினார்கள் இருவரும்.  மருத்துவர் கூறியது என்னவென்று மறந்தும் வினவவில்லை நிலா..எப்படியும் தனக்குப் பாதகமானவை எனில் தானே வரட்டும் என்று காத்திருந்தாள்.

இரட்டை சடை பின்னி இருபக்கமும் தொங்குமாறு பூச்சூடி ,கால் கொலுசு இசைக்க,குடை சிமிக்கி அசைந்தாட ,அத்தான் ,என்று கொஞ்சிக்கொண்டு ,பின்னாலேயே சுற்றும் ,பூனைக்குட்டி ...பதினொரு வயது நிலா..எங்கு சென்று மறைந்தாள்?  பலவருடங்களுக்குப் பிறகு ,வளர்ந்த மங்கை நிலாவை ,சுற்றியிருப்போர் சொல் கேட்டு மாலை இட்டது பெரும் பிழையானதே ! என்று ரிஷியின் மனம் வாய் விட்டு கதறியது. நானும் ,அவளை பார்த்து ,பேசி பழகாமல் ,அத்தை மகள் ரத்தினமென ..யோசியாமல் முடிவெடுத்தது தவறுதான். வெளியில் பெண் பார்த்தால் இப்படித்தான் சம்மதம் தெரிவித்திருப்பேனா..என வீட்டு பெரியர்வகளுக்காய் வாதாடியது மனதின் இன்னொரு பகுதி...இரு வேறு வாதாடல்களுக்கு பதில் கூற இயலாமல் தவித்தான் ரிஷி...அயர்ச்சி மிக கண்கள் தாமே மூடிக்கொண்டன...  கண்ணீர் தாமே கீழிறங்கி வழியலானது ...ஆண்மகன் அழலாமா(?!)

கண்ணீர் ஆண் பெண் பேதமெல்லாம் பார்பதில்லையே !அவன் காதல் அவனைத் தோற்கடித்ததோ?

தேனு .மூன்று வருடங்களில் பிரிந்திருந்த நாட்களுக்கும் சேர்த்து வீட்டில் குதியாட்டம்தான்..கொண்டாட்டம்தான்.!!  ஏடி, கொஞ்சம் அடக்கி வாசி.தாங்கல என்று அக்கா அங்கலாய்க்க ,தன் மகளின் உள் ஏக்கம் புரிந்த பெற்றவர்கள் மனமோ அவளுக்காய் இரக்கப் பட்டது.

அம்மா ..பாதி சாமந்த்தான் எடுக்க முடிஞ்சது ..இந்த மாசம் முடியும் முன்னே மத்தத எடுக்கலான்னா அடுத்தமாச வாடகை கட்டணும் ..நா சென்னை போயிட்டு ரெண்டொரு நாள்ல திரும்பிறேன்.. அத்தான் கிட்ட டிக்கெட் போட சொல்லுறேன் என்றாள்..வேறு வழி இன்றி பெற்றோரும் அவள் சென்னை சென்று வர ஏற்பாடு செய்தனர்.

தேனு தங்கியிருந்த விடுதித் தோழியிடம் தன் காதலியை தூது விட்டு தேனு சென்னை வரும் விபரங்களைத் தெரிந்துக்கொண்ட கருநாகம் ..அவளுக்காய் திட்டம் வகுத்தது.  அதன் கண்களில் காம அக்னி..உதிர்க்கும் வார்த்தைகளிலோ கடும் விஷம்...

தவறே செய்யாவிட்டாலும் பெண்களை வேட்டையாட முயலும் ஆண்கள் ..தப்பிக்க இயலாமல் சீரழியும் பெண்கள் ஒருபுறம்...

..

பெண்களை மரியாதைக்குரியவர்களாய் போற்றும் ஆண்கள் ..அவர்களின் உணர்வுகளுடன் விளையாடும் பெண்கள்....மற்றொருபுறம் ...

(தேன்)மொழி 6:

எப்பொழுதும்போல தனது கைகளை தேய்த்துக் கொண்டு கண்களில் ஒற்றியவாறே எழுந்து தனது காலை வேளையின் வேலைகளை ஆரம்பித்தாள் தேனு.... அவளுக்கொன்றும் இன்று மனதில் பாரமில்லை..மாறாக தனது பரீட்சை முடிவுகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டுமே. தனது தவத்திர்க்கான பலன்.  இனி அரசு வேலைகளுக்காக விண்ணப்பிக்க ஆரம்பிக்கவேண்டும்.  மத்திய அரசு வேலை,வங்கிப்பணி எல்லாவற்றிர்க்கும் விண்ணப்பிக்க ஆரம்பிக்கணும்.  மூன்றாண்டுகளில் அவள் எண்ணப் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாறுதல் இது. நண்பகல் பதினோருமணியளவில் முடிவுகள் வெளியாகும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது....எப்படியும் இரண்டு தங்க மெடல் இவளுக்கு காத்திருப்பதாக ஏற்கனவே துறை தலைவர் சொல்லி விட்டார். ஆனாலும் ஒரு பரபரப்பு.  முடிவுகள் வெளியானதில் மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி (இரண்டாம் இடம்) இவளுக்கு கிடைத்திருந்தது.  தந்தைக்கு அழைத்தாள்.

அப்பாவிடம் அனைத்தையும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டாள். தேனு நா ஆபீஸ் வேலையா அம்பாசமுத்திரம் வந்திருக்கேன்மா ..நீயே அம்மாக்கு,அத்தான்-அக்கா எல்லோருக்கும் சொல்லிரு ..நா திரும்ப ரெண்டு மூணு நாள் ஆயிரும்.  நீ எப்ப வீட்டுக்கு திரும்புற ..என்றார்.

நாளாக்கி சாயங்கால வண்டிக்கு பதிவு பண்ணிட்டேன்பா.  எப்போ உங்கள பாக்கபோறேன்னு தோணுது..என்றுவிட்டு..தான் வீட்டுக்கு பேசினாள்.

 மறுநாள் ஓரளவிர்க்கு தனது மூட்டைகளை கட்டியவளுக்கு ஒன்று புரிந்தது..எல்லாவற்றையும் ஒரே நாளில் அள்ளிச்செல்ல முடியாது என்று..முடிந்தவற்றை அள்ளிக்கொண்டு வீட்டிர்க்கு பறந்தது அந்தப்பறவை. 

மும்பை மருத்துவமனை.. பெண்மருத்துவருடைய அரை வாயிலில் மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு ,வெளியே மருத்துவருடைய அழைப்பிர்க்காய் வெளியே தனித்திருந்தான் ரிஷி.அவனுள்ளே தனது மருத்துவர் குறிப்பிட்ட விஷயங்கள் மூளையில் மின்னிக்கொண்டிருந்தது.

 

 

ஒருவித பரபரப்புடன் ரிஷி....  உள்ளே நிலா மருத்துவரிடம் என்னோட கருகலைப்புகள் பத்தி அவருக்கு ஒண்ணும் சொல்ல வேணாம் டாக்டர்..இன்ஃபாக்ட் அவருக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல....முதல் குழந்தை மட்டும்தான் அவரோடத்து.  ஸோ ..பிளீஸ் அவருக்கு சம்மந்தம்மில்லாத விஷயங்கள அவர்கிட்ட டிஸ்கஸ் பண்ணவேணாமே என்ற நிலவை ஒருவித அருவருப்புடன் பார்க்க ஆரம்பித்தார் அந்த பெண் மருத்துவர்..நீங்க உங்க கணவர உள்ளே வரசொல்லுங்க..நீங்க வைட் பண்ணுங்க ..உங்க ஹெல்த் கண்டிஷன் கண்டிப்பா அவருக்குத் தெரியணும்..என்ற அவரது குரலே நிலாவிர்க்கு மருத்துவரது நிலையை கூறியது..ஒரு தோல் குலுக்களுடன் வெளியே சென்ற நிலாவை நினைத்து மருத்துவருக்கு இன்றைய இளம்பெண்கள் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் என்ற குழப்பமும் ரிஷியிடம் பரிதாபத்துடன் கூடிய கோவமும் வந்தது..பொண்டாட்டி இப்பிடி இருக்காளே ,,அவன்கிட்ட என்னவோ என்று அவர் மனம் வேறுவிதமாய் யோசனை செய்தது..  ஆனால்...முதல் குழந்தை இவனது என்று நிலா சொன்னதில் மருத்துவரது சந்தேகம் தெளிந்தது..கோவம்?...

வாங்க ரிஷி..உங்க மனைவியின் நிலை தெரியுமா?  அவங்களுக்கு நிறைய கருக்கலைப்புகள் நடந்திருக்கு..சிகரெட்,டிரிங்கிங்க்...இதத்தவிர கரு உண்டான நேரத்துல வன்மையா உடலுறவுன்னு  நிறைய காரணங்கள்...நீங்க இத ஏன் கவனிக்கல ..இப்போ அவங்க கர்ப்பப்பை ரொம்ப வீக் ஆகிடுச்சு..இனி அவங்க இன்னொருமுறை குழந்தைக்கு முயற்சி பண்ணா உயிருக்கு பிரச்சனை ஆகிடும்..இப்போ மெடிசென்ஸ் தரேன்...ட்ரீட்மெண்ட் கன்டினியூ பண்ணனும்..மெடிசென்ஸ் எடுக்கும்பொழுது கண்டிப்பா மத்த விஷயங்கள் கூடாது, அவங்கள வரச்சொல்லுங்க ..என்று ஓரளவிர்க்கு அவளது நிலையை தெளிவாகவே ரிஷியிடம் கூறிவிட்டார்..இனி அவன்தான் கவனிக்கவேண்டும் என்றும் முடிவு செய்துக்கொண்டார் ..ஆனால் ..கோடி ஊசிகளை வைத்துக்குத்தினாலும் வாராத அளவிர்க்கான வலியை அனுபவித்தான் ரிஷி..அவளிடம் எதையும் காண்பிக்காமல் அமைதி காத்தான் ரிஷி..இதற்க்குமேல் கொட்டிக்கவிழ்க்க ஏதுமில்லை என அவன் உள்மனம் கொதிக்க ஆரம்பித்திருந்தது.உள்ளே நிலாவை மருத்துவரிடம் அனுப்பிவிட்டு தன்னை சமன் செய்துக்கொள்ள முயற்சிகளை செய்யலானான்.  விஷயம் நிச்சயம் பெரும் விபரீதமே..தொழில் பிரச்சனைகளை வேறு விதமாக தீர்வு காணலாம்.வாழ்க்கை பிரச்சனைகள்? சென்னையிலேயே இருந்திருக்க வேண்டும் இங்கு வந்ததே பெரும் பிரச்சனை..உள்மனம் வாதங்களை அடுக்கத்தொடங்கியது

அவனுக்கு தெளிவாகப் புரிந்தது...அவள் வயிற்றின் குழந்தைகளுக்குத் தான் காரணமில்லை என்று..ஆனால் ..தன்னை அதிகம் வீட்டில் அல்ல..நாட்டில் கூட தாங்கவிடாமல் விரட்டிக்கொண்டிருந்தது அவன் மனைவிதானே! என்னால் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாமல் இல்லையே...கூடலின் தருணங்கள்,புனே பயணம் அனைத்தும் அவன் கண்முன் படமாய் விரிந்தது.  தான் செய்த தவறு அவளை முழுமையாக காதலித்ததும்,நம்பிக்கை கொண்டதும்தான்...நான் காதலை விரும்பினேன்...அவளுக்கு தேவைபட்டது..என் பணமும்,தேவைப்படும்பொழுது உடற்பசி தீர்க்கும் உடலும்..ஆகக்கூடி ..பணம் தரும் இயந்திரமாய்,ஆண் விபச்சாரியாய் என்னை பாவித்திருக்கிறாள்...  என்று அவன் மனம் வாதங்களை முன் வைத்தது.இனி அவளைத் தொடுவதில்லை என முடிவு செய்துக்கொண்டான் .  நிலாவிர்க்கு இதனால் பாதிப்பு ஏதுமில்லையே.! அவளுக்குத் தேவையான பணம் மட்டும் கொடுப்போம் ,,நடந்த விஷயங்களை இருபக்கப் பெற்றோரிடமும் கூறிவிடலாம்..தவறுகள் பெரிதாக மாற வாய்ப்புள்ளது..ஒருவேளை உயிர் ஆபத்துக்கள் நேர்ந்தால் நினைக்கும் பொழுதே உடல் குலுங்கியது ரிஷிக்கு...இத்துணை நடந்தும் மறந்தும் வாயை விடாத மனைவிமேல் சந்தேகம் வந்தது..அவள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிப்பேசக்கூடும்.. இரண்டு நாட்களில் சென்னை செல்ல ஏற்கனவே முடிவாகி இருந்தது.  ரிஷி தனக்கு எதுவும் தெரிந்ததாக நிலாவிடம் காட்டிக்கொள்ளவில்லை.  வீடு வந்து சேர்ந்ததும் தனது அறைக்குள் பாந்தமாய் முடங்கினார்கள் இருவரும்.  மருத்துவர் கூறியது என்னவென்று மறந்தும் வினவவில்லை நிலா..எப்படியும் தனக்குப் பாதகமானவை எனில் தானே வரட்டும் என்று காத்திருந்தாள்.

இரட்டை சடை பின்னி இருபக்கமும் தொங்குமாறு பூச்சூடி ,கால் கொலுசு இசைக்க,குடை சிமிக்கி அசைந்தாட ,அத்தான் ,என்று கொஞ்சிக்கொண்டு ,பின்னாலேயே சுற்றும் ,பூனைக்குட்டி ...பதினொரு வயது நிலா..எங்கு சென்று மறைந்தாள்?  பலவருடங்களுக்குப் பிறகு ,வளர்ந்த மங்கை நிலாவை ,சுற்றியிருப்போர் சொல் கேட்டு மாலை இட்டது பெரும் பிழையானதே ! என்று ரிஷியின் மனம் வாய் விட்டு கதறியது. நானும் ,அவளை பார்த்து ,பேசி பழகாமல் ,அத்தை மகள் ரத்தினமென ..யோசியாமல் முடிவெடுத்தது தவறுதான். வெளியில் பெண் பார்த்தால் இப்படித்தான் சம்மதம் தெரிவித்திருப்பேனா..என வீட்டு பெரியர்வகளுக்காய் வாதாடியது மனதின் இன்னொரு பகுதி...இரு வேறு வாதாடல்களுக்கு பதில் கூற இயலாமல் தவித்தான் ரிஷி...அயர்ச்சி மிக கண்கள் தாமே மூடிக்கொண்டன...  கண்ணீர் தாமே கீழிறங்கி வழியலானது ...ஆண்மகன் அழலாமா(?!)

கண்ணீர் ஆண் பெண் பேதமெல்லாம் பார்பதில்லையே !அவன் காதல் அவனைத் தோற்கடித்ததோ?

தேனு .மூன்று வருடங்களில் பிரிந்திருந்த நாட்களுக்கும் சேர்த்து வீட்டில் குதியாட்டம்தான்..கொண்டாட்டம்தான்.!!  ஏடி, கொஞ்சம் அடக்கி வாசி.தாங்கல என்று அக்கா அங்கலாய்க்க ,தன் மகளின் உள் ஏக்கம் புரிந்த பெற்றவர்கள் மனமோ அவளுக்காய் இரக்கப் பட்டது.

அம்மா ..பாதி சாமந்த்தான் எடுக்க முடிஞ்சது ..இந்த மாசம் முடியும் முன்னே மத்தத எடுக்கலான்னா அடுத்தமாச வாடகை கட்டணும் ..நா சென்னை போயிட்டு ரெண்டொரு நாள்ல திரும்பிறேன்.. அத்தான் கிட்ட டிக்கெட் போட சொல்லுறேன் என்றாள்..வேறு வழி இன்றி பெற்றோரும் அவள் சென்னை சென்று வர ஏற்பாடு செய்தனர்.

தேனு தங்கியிருந்த விடுதித் தோழியிடம் தன் காதலியை தூது விட்டு தேனு சென்னை வரும் விபரங்களைத் தெரிந்துக்கொண்ட கருநாகம் ..அவளுக்காய் திட்டம் வகுத்தது.  அதன் கண்களில் காம அக்னி..உதிர்க்கும் வார்த்தைகளிலோ கடும் விஷம்...

தவறே செய்யாவிட்டாலும் பெண்களை வேட்டையாட முயலும் ஆண்கள் ..தப்பிக்க இயலாமல் சீரழியும் பெண்கள் ஒருபுறம்...

பெண்களை மரியாதைக்குரியவர்களாய் போற்றும் ஆண்கள் ..அவர்களின் உணர்வுகளுடன் விளையாடும் பெண்கள்....மற்றொருபுறம் ...

ரிஷி ..அடிபட்டு கண்ணீர் வடிக்கிறான்.

தேனு கடிபடாமல் தப்பிக்க இறைவனை வேண்டுகிறேன்! மீண்டும் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன். 

கனத்த மனதுடன்,....சுகீ.

.


Subageetha Sundararajan
(@subageetha)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 35
17/08/2019 8:28 am  

(தேன்)மொழி 7:

அதிக மதிப்பெண்களுடன் தனது பட்டப்படிப்பை முடித்த மகளை நினைத்து எந்த பெற்றோருக்குத்தான் பெருமை இருக்காது? இதுவரை அதிகம் ஆசைப்படாமல் மனதை ஒர்முகப்படுத்தி தனக்குத்தேவையானதை சரியானபடிக்கு செய்துக்கொள்ளும் தேனுவை நினைத்து ,தான் கண்ணே பட்டுவிடும் என அவர்கள் நினைக்கும் அளவிர்க்கான அருமை மகளவாள் தேனு.மேலே படிக்கும்படிக்கு வெற்றிவேல் சொன்ன பொழுது,இல்லப்பா..எப்படியும் இந்தத்துறைல வேலைக்குப்போனா ,நிறைய சாதிக்கலாம்.  குடும்பம்னு வந்தாச்சுன்னா வேற பிரச்சனைகள் வரும். வேலைய விட மனசு வராது..மேல படிச்சு என்ன செய்ய..அதுக்கு பதிலா ஏதாச்சும் கவர்ன்மெண்ட் வேலைன்னா வேற எந்த பிரச்சனையாலும் வேலைய விட வேண்டி இருக்காதுன்னு தோணுதுப்பா..நானு மேல படிக்கல..  நீங்க குடுத்த படிப்புக்கு ,காலம் முழுசும் வேலைக்கிப்போய் வர முடிஞ்சாலே சந்தோஷப்படுவேன் என தெளிவாகவே முடித்துவிட்டாள்..அதுவும் சரிதான்..அவளுக்கேற்ற வரன்..அவர்கள் இனத்தில் கிடைத்தாலே போதும்..என தேற்றிக்கொண்டார் வெற்றி..இது தான் தேனுவின் குணம்...அதிகத்திற்க்கு அவள் ஆசைப்படுவதில்லை..கிடைப்பதை வைத்து முன்னுக்கு வரவே விருப்பம்.ஆனாலும் சென்னை வந்து படிக்கும் அவளாசையால் நிறையத்தான் இழுத்துவைத்துக்கொண்டுள்ளாள் ..அவள் சென்னை புறப்படும் நாளும் வந்தது. வருடக்கணக்கில் மகளை பிரிந்திருந்த வேலுத்தம்பதிக்கு இருநாட்க்களுக்கான அவளது பயணம் கண்ணீரை வரவழைத்தது....தன் அம்மாவின் முகத்தையே பார்த்துப்பேசிக்கொண்டு வந்த தேனுவிர்க்கு கால் தடுக்கி விழப்போக, நீ சென்னை போகவேனம் புள்ள..அடுத்தவாரம் அப்பாவையோ,மாமாவையோ கூட கூட்டிக்கிட்டு போகலாம்,இப்போ வீடு போகலாம் வா..என்று அழைக்கும் தாயிடம் ..சிறு குழந்தையின் தவிப்பைக்கண்ட தேனுவிர்க்கு சிரிப்பாய் இருந்தது..இல்லம்மா ..இங்கன பிள்ளையார் கோவில் போயிட்டு,தண்ணி குடிசிச்சிட்டு,சித்த ஓக்காந்துட்டு கெளம்பறேன் ,,ஒகேயா...என்று செல்லம் கொஞ்சியவாறே கோவிலுக்கு சென்றாள்..போகாதே என வாயி திறந்து சொல்ல இயலாமல்..பிள்ளையாரும் சோகத்தில்.... அவரும்தான் என்ன செய்வார்...தேனுவின் அம்மா வாயிலிருந்து போகவேண்டாம் என சொல்லி ஆயிற்று... காலை தடுக்கிவிட்டு ,தடுத்தாயிற்று...இனி செய்வதற்க்கு ஒன்றுமில்லை என தோன்றியவர்ராய்..சென்று வா மகளே..விதி உன்னை வைத்து விளையாடும் விளையாட்டில் வெற்றி பெறு என மௌனம் சாதித்தார்.  நடப்பதை பார்த்து விதியும் தேனுவைப்போலவே சிரித்துக்கொண்டுத்தான் இருக்கிறது. 

மகாகாளியின் முழு அருள் பெற்ற ,சாகுந்த்தலம் இயற்றிய,மகா கவி காளிதாசர்...அவர் வாழ்வு முடியும் தருவாயில்,காளி தேவி மானுட உருவில் தோன்றி தெற்க்குப்பக்கமாய் போக வேண்டாமென தடுத்தாளாம்...ஆனால்,அதைப் பொருட் படுத்தாமல் காளிதாசர் சென்று ,கொல்லப்பட்டாராம்..படித்த ஞாபகம்..இப்பொழுது ,தேனுவைப் பார்க்கும்பொழுது எனக்கு அந்தக்கதை தோன்றுகிறது..லோக மாதா சொல்லியே எடுபடாத ஒருவிஷயம்...தேனுவின் தாய் சொல்லியா எடுபடும்...போ...கா...தே.......!  விதி நிச்சயம் கொடிய..வலிய..கரங்கள் கொண்டதுதான்...நம்புகிறேன்!

தேனு ரயிலில் ஏறினாள்....வண்டி நகரும்பொழுது அவளையும் அறியாமல் கண்கள் தாமாக தன் வேலையை செய்தது.கிளம்பியது தவறோ என ஒரு மயக்கம். இரு நாட்கள் தானே..என ,மனதின் ஆறுதல் மொழி..உள்ளுணர்வு வெகு தாமதமாய் வேலை செய்ய ஆரம்பித்தது...பிரபாகர் எனும் இரண்டுகால் ஜந்து அதே பெட்டியில் தன் நண்பர்களுடன் இவளுக்காக அமர்ந்திருப்பது தெரிந்திருந்தால்?நிச்சயம் ஒழுங்காய் செல்ல வேண்டிய வாழ்க்கைப்பாதை மாறி இருக்காது.  விழுப்புரம் வரை ஒன்றும் பிரச்சனைகள் இல்லை...  விழுப்புரத்தில் தேனுவின் தண்ணீர் போட்டில் நீர் தீர்ந்து விட்டது...  விழுப்புரம் ஜங்க்ஷனில் பிரபாகரனின் லீலையில்,மயக்க மருந்து கலந்த தண்ணீரை,விற்பனையாளன் உருவில் வந்த அவனது நண்பனிடம் தேனு வாங்கிவிட்டாள்...செங்கல்பட்டில்...தேனு பிரபாகர் கும்பலால் அவர்களுடன் இறக்கி அழைத்துசெல்லப்பட்டாள்...

ஒரு பெண்ணைக் கடத்துவது ..இவ்வளவு எளிதாகிப்போனது... மாலை ஏழு மணிக்குமேல் ஆனதால்.யாரும் அதிகம் கண்டுகொள்ளவில்லை...பெட்டியில் அமர்ந்திருந்த ரயில்வே போலீசின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு வயதுப் பெண்ணை கடத்துவதென்றால் ..அவர்களது திறமை.....அருவருப்பை ஏற்படுத்துகிறது.

நாளை ரிஷி சென்னை வருகிறான்....அவன் மனம் முழுதும் நிலா...எங்கே தவறு ...ஆடை..அணிகலன்கள்...நிறம்....உணவு வகை  அனைத்துமே வெகுப் பொருத்தம்தான்..மறுப்பதர்க்கில்லை...அத்தைபெண்..மாமன் மகன் எனும்பொழுது விருப்பங்கள் ஒன்றாய் இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை..

ஆனால்..இங்கு அடிப்படை கொள்கைகளே வேறுபட்டிருக்கிறது.  நீ பெரிய தவறு  செய்துவிட்டாய் என நிலாவை குற்றம் சாடுகிறது ரிஷியின் மனம்...நான் செய்தது தவறே இல்லை..வயிருக்கு உணவு என்பது போல் உடலுக்கான தேவை..இதில் தவறென்ன என்றது நிலாவின் மனம்....

.அத்துடன் அவளுக்கு கருப்பு..வெள்ளை நிறம்..  இன்னும் எத்துணையோ ..காரணங்கள் சப்பைக்கட்டு கட்டினாலும்...திருமண பந்தத்தில் அவளுக்கு உடன்பாடு இல்லை என்பது நிதர்சனம்.....

வெளிநாட்டில் இருக்கும் அனைத்து சிறுவயதினரும் இவளைப்போல் சிந்திப்பது இல்லை.....ஏன் நாம் இந்தியாவிலும் இப்பொழுது நிலாவைபோல் யோசிக்கும் இளைய சமுதாயம் பெருகிவருகிறது...கட்டுப்பாடுகள் பிடிக்காத மனோ நிலை காரணமாக இருக்கலாம்....இல்லை..பொறுப்புகள் சுமக்க பயமாய் இருக்கலாம்...எதுவாயினும்.

.கலாசாரம் என்பதும்  நல்லொழுக்கம் என்பதும் வேறல்ல..என்பதை நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்...நல்லொழுக்கம் மட்டுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.

திருமண பந்தம் இளமைக்கால உணர்வு வடிகால் மட்டுமல்ல..முதிய வயதின் ஊன்று கோல் என நிலா போன்ற கொள்கை (பிடிப்பு ?)உள்ளவர்களுக்கு புரிவதில்லை.நம்மால் புரிய வைக்கவும் இயலாது.  ரிஷி போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதனுக்கு நிலாவின் போக்கு நிச்சயம் தவறானதே ...மனைவியைத்தவிர வேறொரு மங்கையை காணாத அவனுக்கு இவ்வுலகம் சாமியார் என பட்டப் பெயர் வைக்கப்போவது உறுதி.....

சென்னையில் அவன் பெற்றோருக்கு எவ்வாறு சொல்லி..எப்படி புரிய வைப்பது?  இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவே ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் நிலாவிர்க்கு அவசரமாக இந்தியாவில் திருமணம் செய்துக்கொடுத்தனர் ..ஆனால்.

.வேத நாயகம் குடும்பத்தினருக்கு இதுவரை நிலாவின் போக்கு தெரியாது..புதியதாய் ந்திருக்கும் பூகம்பத்தை ரிஷி ஜீரணம் செய்ய இயலாமல் தவிக்கிறான்..என்னவானாலும்..திருமண பந்தத்தை உடைக்க இரு பக்க பெற்றோரும் உடன்பட போவதில்லை..அப்படியானால்..இவ்வளவுக்குப் பிறகும் நிலாவோடுதான் ரிஷி வாழ வேண்டுமா?  அவனது நல்ல செயல்காளாலும்,காதலினாலும்..ஏன்...கூடலினாலும்கூட ..சரி செய்ய இயலாத இந்த சீரழிவை பொறுத்துக்கொள்ளவேண்டுமா? 

இங்கே ,அவனது ஆண்மை அடிவாங்கியுள்ளது..யாருக்காவது புரியுமா....பலவாறு தன்னிலை மறந்து யோசித்துக்கொண்டிருந்தான் ரிஷி..பொழுது விடிந்தால் சென்னை கிளம்பவேண்டும்..ஆனால்...அவன் வாழ்வில் இனி பொழுது புலருமா..?

 

விடை காண முடியா பல கேள்விகளுக்கு விடை தேடி ,ரிஷி..தேனு...  புலரும் சூரியன்...சூழ்ந்திருக்கும் கவலை மேகங்கள்...நீங்கள்...உங்களுடன்...நான்..உங்கள் தோழி சுகி.

This post was modified 2 months ago by Subageetha SundararajanSubageetha Sundararajan
(@subageetha)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 35
20/08/2019 3:19 pm  

தாமதத்திர்க்கு மன்னிக்கவும்..  மிக கனமான பதிவு..வார்த்தைகளை கோர்த்துக்கொண்டிருக்கிறேன்....வரப்போகும் அத்யாயம் ....காத்திருங்கள்...இன்னுமொன்று...இவ்வுலகில் எப்பேற்பட்ட விஷயங்கள் நம்மை சுழட்டி அடித்தாலும் மீட்சி உண்டு...விடியும் வரை பொறுமை அவசியம்...இருபது வயதில் நடக்கும் சம்பவங்கள் அறுபது வயதில் நம்மை தாக்கப்போவதில்லை என்று உளபூர்வமாக நம்புதல் ....வாழ்வதர்க்காண ஆதாரம்....தேனு ரிஷிக்கு மட்டுமல்ல..நமக்கும் சேர்த்து..

வாழ்க்கையே போர் களம் ,

வாழ்ந்துதான் பார்க்கணும்....

போர்க்களம் மாறலாம்....

போர்கள்தாம் மாறுமா.....?

.மீண்டும் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்..

உங்கள்.

சுகீ.


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 35
22/08/2019 4:07 pm  

😭 

தேன்)மொழி 8

விதியை வெல்ல எவராலும் இயலாது.. தான் பெற்றோர் சொல்லப்போகும் பதில் தெரிந்திருந்தும் அவர்களிடம் நடந்தவைகளை கூற ரிஷி விழைந்தான்....வீட்டின் பெரியவர்களுடன் பெண்ணை பெற்றவர்களும் இருந்தனர், தன் மகள் வாழ்வைப்பற்றி யோசித்த செல்வம் தம்பதியினர் மருமகனை நினைக்கவில்லை.. ரிஷியும் அவர்களை உறவு சொல்லி அழைப்பதை கவனமாகவே தவிர்த்தான்...  ரிஷி சொன்னவைகளை வேதநாயகம் தம்பதியினரால் நிச்சயம் ஜீரணம் செய்ய இயலவில்லை....நிலா குடிப்பதுடன் அந்நிய ஆண்களின் பழக்கம் கொண்டிருக்கிறாள் என்பது பெரியவர்கள் நால்வருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது...

வேத நாயகம்தான் முதலில் வெளிவந்தார்.பாரு ரிஷி..நீ சொல்றதை நம்பவே முடியல...ஆனா கல்யாண பந்தத்தை அவ்வளவு சீக்கிரம் முறிக்க முடியாது.. உன் மனைவியா இல்ல...உன்னோட அத்தப்போண்ணா நீலாவ நினைச்சு வாழப்பாரு.  முடிஞ்ச வரைக்கும் கல்யாணத்தை தக்கவக்குறது எல்லாருக்கும் நல்லது.  நாங்க பத்து நாள் அங்க வந்து இருக்கோம்...பார்ப்போம் என தீர்வு சொன்னார்...பெரியவர் எத்துணை சொன்னாலும் ரிஷியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இவ்வளவு ஒழுக்கமா இருக்குற எனக்கு எதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை...காலத்திர்க்கு ஏற்றவாறு வாழாமல் தவறுகளில் இருந்து ஒதுங்கியது தவறா என அவன் மனம் அழுதது..

ரிஷியால் நிலாவை மன்னிக்க முடியவில்லை.உடம்பால் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தால் அவளுக்கு மனதின் மருந்தாய் இருந்திருப்பேன்...ஆனால் மனதால் தூய்மை அற்றவளை எவ்வாறு மன்னிப்பேன்...அப்பா..அம்மா...எல்லோருமே மூன்றாம் நபராய் சொல்கிறார்கள்...என்னுடைய மனம்.!

..ஆறுதல் தேறுதலுக்கு வழியின்றி ..அடுத்தநாளே மும்பை கிளம்பிவிட்டான்...இனி தேவைக்குமேல் பெற்றோரிடம் வரமாட்டேன்...என முடிவெடுத்தான்.

மது போன்ற விஷயங்களை முயற்ச்சி செய்து தோற்றான். அவன் வளர்ப்புமுறை அவனை தவறு செய்ய அனுமதி அளிக்கவில்லை...மனதில் வலி ஏற ஏற மீள முடியாமல் ..உயர் மன அழுத்ததிர்க்கு ஆளானான் ரிஷி. 

இவ்வளவு நடந்தும் ,அவன் கட்டிய மனையாளுக்கு ஒன்றும் தெரியாது.  அவள் தான் சந்தோஷத்திர்க்கு எந்தத் தடையும் இல்லாமல் சுற்றினாள்..மருத்துவரின் அறிவுரைகள் அவள் மீண்டும் கருத்தரிக்காமல் நடக்க வைத்தது...வேறொரு மாற்றமும் இல்லை.ரிஷி பெற்றோர் வரும் சமயம் அவள் தான் உண்மை முகத்தை மறைக்க விரும்பவில்லை..விளைவு  மன உளைச்சலுடன் அவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.   அவர்களுக்கும் என்ன செய்வது என புரியவில்லை. ராஜேஷ்வரியோ,தன் மகளை வாழச்செய்யுமாறு அண்ணனிடம் அழுதார்...காலம் இன்னும் கனிய வேண்டும்.

 ரிஷியை மருத்துவரிடம் அழைத்து சென்றாகவேண்டும்..ஆனால் கர்ஜிக்கும் அந்த சிங்கம் இப்படியொரு பிரச்சனையில் இருப்பது யாருக்குமே தெரியாதே!  தொழிலில் வழக்கம்போல் அவன் இருக்கும் இடம் உச்சியே!

ஆனால்..அவன் தனக்கு வடிகாலாக செய்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்.......அவன் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை கொடுக்கப்போவதை அவன் நிச்சயம் அறிந்திருக்கவில்லை. 

  தேனு கடத்தப்பட்டிருக்கிறாள்.  மயக்க மருந்தின் வீரியம் குறையா நிலையில் தனக்கு நடப்பது என்னவென்றே தெரியா நிலையில், அவளை கிரகணம் சூழ்ந்துள்ளது..  மூளை மசமசப்புக்கிடையில் ஏதேதோ நினைவலைகள்..கனவா..நினைவா ஒன்றும் புரியவில்லை.

தேனு கடர்க்கரை சாலையில், தனது வகுப்பு முடிந்து பேருந்தில் செல்கிறாள்.  கூட்ட நெரிசலில்,சிக்கிக் கொண்டே பயணம் தொடர்கிறது.  அடுத்த நிறுத்ததில் ஒரு பெண் தேனுவின் வயது இருக்கும்...அழுது கொண்டே இறங்குகிறாள்..ஆவலுடன் ஒரு சில பெண்களும் இறங்குகிறார்கள்...அந்த பெண்ணின் சுரிதார் பின்புறம் முழுதும் வெள்ளை வெள்ளையாய்...  பிசுபிசுப்பாய்..ஏதோ! தேனுவிர்க்கு ஒன்றும் புரியவில்லை ..ஆனாலும் அவள் மனமும் உடலும் பதறுகிறது..அரை மயக்க நிலையில் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது...  ஒன்று...இரண்டு...மூன்று..எத்தனை முறை... எத்தனை பேர்...அவளது உடலிலும் அதே பிசுபிசுப்பு.....  

தனக்கு நடப்பதை அவளால் அறிந்துக்கொள்ள முடியவில்லை...பெண்ணுடல் கிடைத்தவெறியிலும் அந்த மிருகங்கள் அவளை காயம் ஏற்ப்பட கையாளவில்லை... ஆனால் ..இல(வசமாக)கிடைத்த சொர்கத்தை எத்துணை முறை அனுபவித்தாலும் அவர்களது வெறி அடங்குவதாய் இல்லை.  கூட்டத்தலைவன் பிரபாகரனுக்கோ  ..கேட்கவே வேண்டாம்..அவளை சுய நினைவுடன்..கதற வைக்க அவன் ஆழ்மனம் விரும்பியது...  டேய்..இருக்குற சக்திய எல்லாம் முடிச்சிராதீங்கடா ...அவ முழிக்கட்டும்..அப்போ...மஜாவே தனிதான் என்றவனது கண்கள் கற்பனையில் மயங்கியது...மயக்கம் தெளிய மயக்கத்துடன் கயவர்கள்...

 

இரண்டு நாட்களுக்குப் பிறகும் மகளிடமிருந்து தகவல்கள் இல்லை...தேனு குடும்பம் பதறியது...காவல் துறையை அணுகவும் பயம்...வயதுப்பெண்ணாயிற்றே !  மேலும் ஒருநாள் பொறுத்து தங்களால் முடிந்தவற்றை முயற்ச்சித்துவிட்டு...வேறு வழி இல்லாமல் காவல் துறையை அணுகினார்கள் தேனுவின் வீட்டினர் ...விசாரணையில் பிரபாகரனின் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டாலும்..பல பெரிய தலைகளின் பிள்ளைகள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரியவர..காவல் துறையினர் மறைமுகமாக விஷயத்தை சொல்லிவிட்டார்கள். 

மகளது நினைவில் ஒரு மலையாள மாந்த்ரீகரை அழைத்துவர, வெற்றிலையில் மை போட்டு பார்த்தவரது உடலே நடுங்கியது... 

யாரும் சிக்கக்கூடாத விஷயத்தில உங்க மக சிக்கி இருக்கா..உயிருக்கு பயமில்லை...அவ திரும்ப ஏறக்குறைய மூணு வருஷங்கள் பிடிக்கும்...ஆனா உங்க மகளா திரும்ப மாட்டா..அவ மேல தப்பில்லை...இந்த கண்டத்துல தப்பிச்சா....அவ வாழ்க்கை நிலையே மாறிடும்...உங்க பொண்ணுக்காக தினமும் பகவதிக்கு விளக்குப்போடுங்க..என்றுவிட்டு ,தக்ஷிணை வாங்காமல் சென்ற அவரைப்பார்த்து குடும்பமே ஸ்தம்பித்தது.......இதர்க்கும் மேலும் அவலங்கள் தொடர்ந்தால் ,அந்த சிறுபெண் எப்படி தாங்குவாள்?

மயக்கம் தெளிந்த பின்னர், அவள் நினைவுடன் நடந்தவை அவள் உயிரை உரசியது...தெய்வமே..!  எனக்கு இவ்வளவு நடக்கும்பொழுது என்னோட உயிர் ஏன் போகலை என கதறினாள்...  தன்னைக்காத்துக்கொள்ள போராடினாள்..  ஏய்!  சும்மா இருடி.... பல முறை முடிஞ்சது..உன்னை நினைவோட அனுபவிக்க காத்திருக்கோம்...உங்க வீடு ஆம்பளைங்கள வச்சு அடிச்சீல்ல ..அதான்...என்னோட ஆம்பளத்தனதோட ,இன்னும் சிலபேர கூட்டிவந்திருக்கேன் ..

பல மணி நேர மயக்கம்...அவர்கள் ஆண்டதால் வந்த சோர்வு..அதிர்ச்சி..என பல தாக்குதல்களால் போராட முடியாமல்...கதறும் அந்த சிறு மானைக் கண்டு அதிகமாய் வெறி பிடித்து குதறின..வேட்டையாடும் மிருகங்கள்!   என்னைபொறுத்தவரை கற்ப்பழிப்பை ரசித்து செய்பவர்கள் மன நோயாளிகள்...இல்லாவிடில்,கதறுவதைக்கண்டு எவ்வாறு ரசித்து முன்னேற இயலும்?

இன்னும் உனக்காக நிறைய  காத்திருக்கிறது என்று சிரித்தது அவளது விதி.

ஏனோ ..ஒழுங்காய் வளர்க்கப்பட்ட ரிஷி-தேனு இருவருமே இவ்வாறு துன்பத்தின் வலையில்.  ஒழுக்கமாய் இருப்பதே பெரிய தவறோ? எனும் ஐயம் என்னுள்....

நினைக்கவே என்னுள் நான் நடுங்கிய பதிவு ..தேனுவிர்க்கானது...இதை எழுதும்பொழுது நிச்சயம் நான் நானாய் இல்லை...சமூகத்தில் நிகழும் பெண்களுக்கெதிரான நிகழ்வுகளை பதிவு செய்ய முற்படும்பொழுது சிலவற்றை தவிர்க்க முடிவதில்லை!

நிச்சயம் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..

கனமான மனதுடன்

சுகீ.


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 35
29/08/2019 10:49 am  

தேன்)மொழி 9

ஒவ்வொரு முறையும் இது போல கதறல்கள் உலகமெங்கும் கேட்டுக்கொண்டுத்தான் இருக்கிறது...திரை மறைவில் அரங்கேறிக்கொண்டிருந்த அவலங்கள் இன்று பட்டவர்த்தனமாய்....இவர்களுக்கான தண்டனை அளவும் குறைவுதான்...அந்தப்பெண்ணின் கதறளுக்கு ஈடாகுமா .வழங்கப்படும் தண்டனைகள்..இதோ..தேனுவை கடத்தி விட்டதும் தெரியும், கடத்திய நபர்களையும் தெரியும்...இருந்துமென்ன.....ஏதேதோ காரணங்கள்...சாக்குபோக்குகள்.  எப்படியும் அவளை கண்டுபிடிக்கப் போவதில்லை..அவளாக வந்தால்தான்.. உயிருடன் இருந்தால் அல்லது உயிருடன் இருக்க விட்டால்..மலரை கசக்கி முகர்வதில் என்ன இன்பம்?    முடியா பகலே ..விடியா இரவே என அவளுடைய துக்கங்கள் ஆரம்பம்...எத்துணை நாட்கள் என்பது நிச்சயம் தேனுவிர்க்குத்தெரிய வாய்ப்பில்லை..மூன்று தொடர் நாட்கள்...எதுவுமே ஓயவில்லை...அவள்...அவள் மட்டும் ஓய்ந்தாள்.  மயக்கமுற்றாள்.  காமுகர்களுக்கும் ஒரு வழியாக போதுமென தோன்றியது...அவர்கள் வந்த இன்னொவா கொல்கட்டா நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது...

ஆம்...அங்கிருக்கும் விலை மாதர்களுக்கான பகுதியில் அவள் பேரம் பேசப்பட்டிருக்கிறாள்....குடும்ப வாழ்வு பற்றிய அவள் எண்ணங்கள்...வேலை... எல்லாமே இனி  சூனியம் தான் என்பதில் சந்தேகமே இல்லை. 

அவள் யாரையும் ஈர்ப்பதார்க்காக எதுவும் செய்ததில்லை..போலி முகபூச்சு,கண்ணை பறிக்கும் ஆடைகள்...ம்ஹூம்..எதுவும் இல்லை...இன்று வரை அவள் உடல்பாகம் வெளியே தெரிய ஆடைகள் புனையவில்லை...ஆனால் ..இனி அவள் வாழப்போகும் உலகம்..இவை அனைத்துமே கொண்டது.  அங்கு வாழும் பெண்களுக்காக என்னுடைய இதயம் இரத்தம் சிந்துகிறது...

இதயத்தில் இரத்தம் சிந்தும்பொழுது...உதடு சிரிப்பது எவ்வாறு?   இது போன்ற பெண்கள் வலியுடன் சிரிக்கிறார்களே...இனி..தேனுவும் சிரிக்கப்பழக வேண்டும்....இன்னும் அவள் புத்தி பேதலிக்கவில்லை...நிச்சயம் இவற்றையெல்லாம் அவள் செய்துதான் ஆகவேணும்....

நிலாவை  அவள் பெற்றோரிடம் அனுப்ப முடியாமல் தவிக்கும் ரிஷியும் தேனு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தாக வேண்டும்..முகம் நிறைய சிரிக்க வேண்டும்(?!)  அல்லது சிரிப்பதுபோல நடிக்க வேண்டும். நன்றாய் உடுக்க வேண்டும்...ஒன்றுமே நடக்காதது போல நடிக்க வேண்டும்.  தேனு முகப்பூச்சு பூசினால்..ரிஷி முகமூடி அணிந்தாக வேண்டும்.  ஏதோ ஒருவிதத்தில் இருவரது விதியும் ஒன்றாக உள்ளது.

ரிஷி தனது தொழில் முறை விருந்தில் கலந்து கொள்ள வந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பாரிலிருந்து தனது நண்பர் படை சூழ நிலா வெளியே வரவும் ,ரிஷி தனது தொழில் முறை நண்பர்களுடன் உள்ளே வரவும்...சே...ரிஷியை அசிங்கப்படுத்தவேண்டுமெனே சுற்றும் அக்குழுவில் ஒருவர்..ஹே ..ரிஷி அங்க உங்க மிஸ்ஸெஸ் தானே ? என்று ஒற்றை புருவத்தை தூக்கி கேட்க்கும் விதத்திலேயே தெரிந்தது ஏளனம்...இவ்வளவுதானா உன்னிலை என்று மற்றையோரும் கேள்வியாக,கேலியாக பார்க்க ,ரிஷி உள்ளூர தான் நிலையை நினைத்து வெறுத்தான்.

நிலா அணிந்து வந்த ஆடைகளாகட்டும்,இல்லை அவள் பாரிலிருந்து வெளியே வந்ததாகட்டும்..குல மகளிருக்கானது அல்ல..நிச்சயம் ரிஷியின் குடும்பத்தில் இது சாத்தியம் இல்லை.  அத்தை மகள் நிலா...அத்தை வளர்ப்பில் சறுக்க வாய்ப்பில்லையே...எங்கே தவறு என்று யோசித்தவனாக..மற்றவர்களுக்கு பதில் கூறாமல் அமைதி காத்தான் ரிஷி..அவன் நடவடிக்கை சொன்னது தான் யார் என..மீண்டும் அதை பற்றி பேச பயமுற்றவர்களாக ,உணவருந்த விரைந்தனர்....

வெளியே ,உள்மன காயங்களை காட்டினால் நிச்சயம் மற்றையோர் அவனது நிலையை இன்னும் மோசமாக்குவர் என உணர்ந்தவனாக...உணர்வுகளுக்கு பெரிய கதவு போட்டு பூட்டினான்.. எரியும் மனதில் மற்றுமோர் தீக்கங்கு.  இனியும் பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை என அவன் மனம் இன்று முடிவெடுத்துள்ளது..இதில் அவன் அல்லது நிலா இருவரது பெற்றோராலும் தலையிட இயலாது.....இருந்தாலும் சொந்தம் என்பதால் அவர்களும் அவ்வளவு எளிதாக இவன் சொல்லுவதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை..நிலா தன் அழகான வாழ்க்கையை உப்பு பெறாத காரணங்களால் தொலைத்துவிட்டாள். அவளது மிகப்பெரிய தவறையும் மீறி ரிஷி இவ்வளவு காலமாய் அவளை பொறுத்துக்கொண்டிருந்தான்...அவனது இளமை ...கனவுகள்...இவற்றை மீறி..அவனுக்கே தெரியாமல் ஆழ் மன அழுத்தம்...கடவுளே!  இதுவரை அவன் தன் உடற் தேவையை பற்றி முக்கியத்துவம் கொடுக்கவில்லை..அவன் உணர்வுகள் இன்று கேலிக்குறியா விஷயமாக...இனி அவன் எப்படி வெளியே வரப்போகிறான் என்று புரியவில்லை...

நிலா ,அவள் செய்வன தவறே இல்லை என நினைக்கிறாள்..சரி...இளமையும்,உடல் வலிவும் உள்ளவரை..அனைத்தும் சாத்தியம்..பிறகு?

நிலா போன்ற பெண்களுக்கு தங்களுக்குத் தேவையான அடிப்படை விஷயங்களை கவனித்துக்கொள்ளக் கூட மற்றையோர் துணை தேவை.  அப்படி இருக்கையில் பணத்தை ஈட்டுதல் பற்றிய விஷயங்கள்..ம்ஹூம் ..நிச்சயம் தெரியாது...இருப்பதை வைத்து எப்போதும் பண்டிகையாய் கழிக்கும் குணமுள்ளோர்...  ரிஷி..நிலாவிடம் ஒரு மாபெரும் வெற்றியாளனாய் ,கர்வத்துடன்,இளமையுடன் தான் ஆண் எனும் எண்ணத்துடன் அணுக முற்ப்படவில்லை . காதலனாய்..கண்ணியமான கணவனாய்..அவளின் பாதியாய் வாழ நினைத்தான்..இதுபோன்ற கணவன்..யாருக்கு வாய்க்குமோ?  நிலா தன் மாமன் மகனை..மணாளணை தவறா விட்டுவிட்டாள் .

தனது அடுக்ககத்திற்க்கு வந்த ரிஷி ..நிலாவின் அறைக்குள் நுழைந்தான் முதன்முதலாக ...ஒரு திருமணமாகாத ஆணின் அறை கூட நிச்சயம் இந்த அளவிர்க்கு  மோசமாய் இருப்பதர்க்கில்லை..உடைகள்,செருப்புகள் எல்லாம் கீழே தாறுமாறாக..கட்டிலில் நிலாவும் அதே நிலையில்..இன்னும் அவளுக்குத் தெளிந்திருக்கவில்லை.

நான்கு வருடங்களாய் அவள் மீது நம்பிக்கை வைத்தது,காதல்.. அவளுக்கான தனிமை கொடுத்தது பெரும் பிழை என உணர்ந்தான். 

மனைவியை விட்டு வருடக் கணக்கில் வெளி தேசங்களில் வாழும் ஆண்களின் மனைவிகள் ,அவர்களுக்கு த்ரோகம் செய்வதில்லையே....கணவன் மனைவி ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை அல்லவா தாம்பத்தியம்? இதில் என் தவறுகள் என்ன ?மனைவியை சந்தேகப்படுதல் ஆண்மைக்கு இழுக்கு என்றல்லவா என் பெற்றோர் சொல்லிக் கொடுத்துள்ளனர்?

தன் மகளின் நடவெடிக்கைகள் தெரிந்தும் தன் தலையில் கட்டிவிட்டதாக அத்தை மாமா மீது அளவு கடந்த கோவம் எழுந்தது..ஆகட்டும்.  பல தேசங்களில் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் இந்த ரிஷியையா ஏய்த்தீர்கள் ..என்னை இனி எவராலும் தடுக்கவியலாது...என்று மனதில் கறுவியவாறே அவர்களதுநிறுவன சட்டத்துறை வல்லுனருக்கு அழைப்பு விடுத்தான்..

குடும்பத்தாரிடம் அகங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று பார்த்தால் என்னையே ஏமாளி ஆக்கி விட்டீர்கள் இல்லயா..இனி என் முழு ஸ்வரூபத்தை காண்பீர்கள் என்று அவ்வறையில் இருந்து வெளியேறினான்...அருவருப்பாய்...அவனுக்கு உள்ளுக்குள் பிரட்டியது..மதுவின் வாடை.  குளியலறைக்குள் புகுந்தவனுக்கு அந்த நீரின் குளுமையும் பத்தவில்லை.  நிலாவின் குடும்பத்தையே ஒரு வழி செய்து விடுவது என முடிவெடுத்தவனுக்கு ..மனதின் வெப்பத்துடன் ,உடலும் குளுமையை அனுபவிக்கத்தொடங்கியது....திட்டங்களை மனதினுள் கணக்கிட்டவனாக ...ஈரத்தை துடைக்க விரும்பாதவனாக ..கட்டிலின் மீது விழுந்தான்....அவன் கண்கள் ருத்ரனின் கண்களாய் ..தீ கங்குகளாய் ஜொலித்தது...

தேனு ..மயக்கம் தெளிந்த நிலையில் ஒன்றும் புரிந்துகொள்ள இயலாதவளாய் ,அவளது மூளை மசமசப்புடன் கூடியதாய் இருந்தது.இமையை திறக்கும் சக்த்தியும் அவளிடம் இல்லை...நாட்கணக்கில் உணவு அருந்தாதது எல்லாமாக படுக்கையில் கிடந்தாள்...

ஏனோ அவளைக்காணுகையில் அவளுடன் இருந்த மற்றைய பெண்களுக்கும் கண்களில் நீர் கோர்த்தது.  ஏதோ ஒரு காலக் கட்டத்தில் தங்களுக்கு நிகழ்ந்தவை..இன்று இந்த சிறு பெண்ணிர்க்கும்...அவர்களாய் ஒன்றும் செய்ய இயலாது!  அவர்களே கைதிகள்...ஆறுதல் சொன்னால் தேறுமா மனம்...

அங்கு சற்று மூத்தவளான நிஷா கஞ்சியை கொணர்ந்து சிறு குழந்தைக்கு புகட்டுவது போல தேனுவிர்க்கு புகட்டினாள்.  நிஷா ஆந்த்ராவை சேர்ந்தவள்..காதலனால் ஏமாற்றப்பட்டு இங்கு விற்க்கப் பட்டவள்.  இது போல் எத்துணையோ ...அங்கிருந்த பெண்கள் நிராய பேருக்கு வேறு மொழிகளும் தெரிந்து இருந்தது...பாஷை தடை இன்றி ...அங்கு சம மொழிக் கொள்கை அனுசரிக்கப் பட்டது..  இதில் மட்டுமா?

மீண்டும் மிக கனமான பதிவு..நிச்சயம் வாழ்வு மலரும் எனும் நம்பிக்கையுடன்..

உங்கள் தோழி

சுகீ.


ReplyQuoteSubageetha Sundararajan
(@subageetha)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 35
06/09/2019 6:55 pm  

இதோ, அடுத்த அத்யாயம்,உங்கள் பார்வைக்காக...

தேன்)மொழி 10:

விலைக்கு சந்தையில் கிடைக்கும் மலரா ,,மாதர் ?  ஆனால் ,விரும்பாவிட்டாலும் கசக்கி முகரப்படும் மலராக , மங்கையர் ,விலைமாதர் எனும் பெயரில்..அவர்களுக்கென்று மனம்,குணம்,இரண்டையும் தொலைத்து ,சமுதாயத்தின்,சாக்கடையில் ,தேனுவும் இனி அங்கு அப்படித்தான்.  ஒருமுறை சிக்கிவிட்டால்,சீரழிவு..பேரழிவுதான்..சுகம் கொடுக்கும் மனித எந்திரமாய்.

முடியாது..நா உயிரே போனாலும் இந்த மட்டமான செயல செய்யமாட்டேன் எனப்போராடி..பட்டினி கிடந்து..அடிகள் பல வாங்கி ,உடல் மரத்த பின்னும், உணர்வுகள் போராட..கண்ணீரை தவிர ,நிச்சயம் அவளுக்கு வேறு துணையில்லை.  அவளால் முடியும்வரை போராடியாகி விட்டது..பலன்..?

அங்குள்ள எந்த பெண்ணும் இவ்விஷயத்தை ஈடுபாட்டுடன் செய்ய இயலாது...வீட்டில் இருக்கும் குழந்தையின் பசி தீர..காமப்பசியை தணிக்கும் மாதரும் உண்டு..எல்லாவற்றிர்க்கும் ஒரு விலை உண்டு எனில் ..இங்கு விலை மாதரின் சதை..தேனுவால் இந்த நரகத்தை பொறுக்க இயலவில்லை..தற்கொலை செய்துக்கொள்ள அவளேடுத்த முயற்சிகள் அனைத்தும் கடும் தோல்வியில் முடிய அதற்க்குமான தண்டனைகள் அதிகமாயின..

சாவார்தா இருந்தா கொஞ்ச வருஷம் சம்பாரிச்சு கொடுத்துட்டு சாகு..உன்னால கொஞ்சமாவது காசு பாக்கணும்..என்று தீயை சுமந்து வெளிவந்த வார்த்தைகள் அவள் கையறு நிலையை தெளிவாக புரிய வைத்தது...  சிறு வயது..இளமை.. அவை இரண்டும் அவளுக்கு பெரிய எதிரிகள் ஆயின...நிறைய ஆண்கள் இவளுக்காகவே வந்தனர்..காசு நிறைய கிடைக்க கிடைக்க ,இவளை சக்கை பிழிய ஆரம்பித்தனர்..கருக்கலைப்புகள் அவளை மேலும் சீரழித்தது...ஏனோ..அவளது மெருகு..இன்னும் குறையவில்லை..அவள் விதி அவளை ஒரே வருடத்தில் மும்பைக்கு அழைத்து சென்றது....பெரிய பணக்காரர்களுக்கு..அதிக பணத்திர்க்காய் அவள் அனுப்பப் பட்டாள்..

பெரிய மாற்றம்...இத்தனை நாட்கள் ,மூச்சு காற்றுக்கு கூட சரியான வழியின்றி, வியர்வை வழிய, ஒரு நாளைக்கு பலரை நிறைவு செய்த தேனு, இப்பொழுது ,நல்ல வசதியான விடுதிகளில், குறைவான நபர்களுடன் கழிக்கிறாள்...நிறைய பணமும் அவளை வைத்து சம்பாதிப்பதால் ,அவளுக்கு ஆரோக்ய குறைவு வாராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.அவளை வைத்து தொழில் செய்வோர்.

 ஆனால்,தேனுவின் இம்முன்னேற்றம்,மும்பையில் அவளுக்கு நிறைய எதிரிகளை சம்பாதித்துக்கொடுத்தது.அவளை மட்டுமே கேட்கும் பணக்கார வாலிபர்கள் ..சக பெண்களிடத்தில் அவளுக்கு வெறுப்பை தேடிக் கொடுத்தது.  இதிலுமா என்று கேட்காதீர்கள். அவரவர் வலிகள் அவரவர்க்கு.  தேனு மட்டும் தப்பிக்கும் வழியை தேடிக்கொண்டிருக்கிறாள்..இதுவரை ..ம்ஹூம்...ஒன்றும் தெளியவில்லை...ஹிந்தியும் மராட்டியும் கூட கற்றுக்கொண்டு விட்டாள்...எங்காவது ..ஒளி  தெரியாதா எனும் ஏக்கம் ...சூழலில்,சுழலில் சிக்கியுள்ள மெல்லிய மலர்...விசும்பல்களுக்கு இடையே...தன் தாய் மடியை, அப்பாவின் அரவணைப்பை,அக்காவின் தோழமையுடன் கூடிய கதகதப்பை,அத்தானின் அக்கறையை...தேடிக்கொண்டு...தவிக்கிறது.

 

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூல பொருட்கள் குறிப்பிட்ட தரத்தில் இல்லை ஆதலால் திருப்பி அனுப்பிவிடுங்கள்..வேறு நிறுவனகளைப் பற்றிய தகவல் தொகுப்பு தயார் செய்யுங்கள் என்று தனது செயலாளரிடமும்,விற்பனைப்பிரிவு மேலாளரிடமும் உத்தரவுகள் பிறப்பித்துக்கொண்டிருந்தான் ரிஷி...  மூல பொருட்கள் இதுவரை செல்வபதியின் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டு வந்தது..ராஜேஸ்வரி திருமணம் நிச்சயம் ஆனத்திலிருந்து அப்படித்தான்.ஆனால் நிலா-ரிஷி திருமணம் திருமண பந்தத்தை மட்டுமின்றி தொழில் பந்தத்தையும் அறுத்தது.

செல்வபதி  மனதளவில் தளர்ந்து போனார்.ரிஷியிடம் தனது நிறுவனப் பொறுப்புகளை கொடுத்துவிட்டு நிம்மதியாக இனி இந்தியாவில்,உறவினர்களுடன் இருந்து விடலாம் என்ற அவரது ஆழ்மன ஆசை நொறுங்கிவிட்டதை அவரால் உணர முடிந்தது..நிலாவை திருமணம் செய்து கொடுத்து அற்புதமான உறவை பகைத்துக்கொண்டோமே ,நல்ல மனிதனின் வாழ்வை சீர் குலைத்துவிட்டோம் எனும் கழிவிரக்கத்தில் ,வேறு எதிர்வினைகள் ஆற்றாமல் அமைதி காத்தார்.  ஆனால்,ரிஷியின் தொழில் நடவடிக்கைகள் அவரது,மற்ற வாடிக்கையாளர்களையும் சந்தேகம் கொள்ள வைத்தது. 

தொழில் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என ரிஷிக்கு புரியவைக்க வேதநாயகம் பெரு முயற்சிகள் செய்தார்..பழி நெருப்பில் எரிந்துகொண்டிருந்த ரிஷிக்கு அவரது வார்த்தைகள் தூபமிட்டது..செல்வபதி தந்தையின் மூலமாக தன்னை அடக்க நினைப்பதாகவே எண்ணினான்..அவரது நிலை,மனம் இரண்டுமே அவனுக்குப்புரியவில்லை.  அவனது நடவெடிக்கைகள் இன்னும் தீவிரமாயின.  ஆனால் ,தொழில் நசிவைப்பற்றிய கவலைகள் எதுவும் செல்வபதியை பாதிக்கவில்லை...தனக்குப் பிறகு தொழில் நடத்த ஆள் இல்லாத பொழுது தொழில் வளர்த்து என்ன செய்வது என எண்ணலானார்...நிலா தன் குடும்ப வாழ்க்கையை நட்டத்தில் இழந்ததின் பலன் ,இவரது தொழில் நட்டம் என்பது அவருக்கு பெருத்த துயரைக்கொடுத்தது.  இவை எவற்றை பற்றிய தகவல்களும் தெரியாமல்,  தோழர்களுடன் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தாள் நிலா.

தொலைந்த சொர்கத்தை பற்றிய எண்ணங்கள் அவளுக்கு இல்லை.. தான் அனுபவிக்கும் நிலையே இன்பம் என்று கானல் நீரை கையால் எடுத்துக்கொண்டிருந்தாள் அந்த முட்டாள். இரவினில் ஆட்டம்,பகலினில் தூக்கம் என்று சென்றுக்கொண்டிருந்தது அவள் நாட்கள்.

வேதநாயகம் செல்வபதியிடம் ரிஷி நடந்துகொள்வது பிடிக்காமல்..அவனிடம் கோவத்தை வளர்த்துக்கொண்டார் வேத நாயகம்...அவன் செய்கைகளில் குற்றம் பார்க்க முற்பட்டார்...தன் தங்கை ,அவளது கணவர் இருவரும் நல்லவர்களே என்பதில் அவருக்கு வேறு கருத்தில்லை...ரிஷிக்காக ரத்தம் வடிக்கும் அதே மனம்,தங்கைக்காகவும் அழுதது.

தன்னைப்பற்றி அக்கறை கொள்ளாத அப்பாவிடம் இனி எதற்க்கும் போவதில்லை என்று உறுதி பூண்டான் ரிஷி..பல வருடங்கள் தவமியற்றி பெற்ற மகனின் திருமண தோல்வி ரிஷியின் அம்மாவுக்கு உடல் நலத்தை குறைத்தது. ரிஷியின் கோவம் அவனது நற்குணகளை மறைத்தது..சென்னை வருவதை தவிர்க்கலானான் ரிஷி...அரவணைக்க யாருமற்ற நிலையில், மன அழுத்தம் ரிஷிக்கு அதிகரித்து வருகிறது..

தீர்வு?

மீண்டும் மற்றுமொரு பதிவில் இணைகிறேன்.

சுகீ.


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 35
10/09/2019 2:47 pm  

ஓரிரு நாட்களில் பதிவுடன் சந்திக்கிறேன்..

உங்கள் தோழி 

sugee


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 35
16/09/2019 3:10 pm  

தேன்)மொழி 11:

இனி வரும் ஒரு சில பதிவுகளில் நான் படித்து தெரிந்துக்கொண்ட ,ஒரு சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.  நான் ஏற்கனவே கூறி இருந்தேன்..இது சமூகத்தில் நடக்கும் அவலத்தின் ஒரு சில அவலங்களைப்பற்றியது...அப்படி பார்க்கும்பொழுது ஒரு சில விஷயங்களை நாம் அறிந்துகொள்வது அவசியமாகிறது.

ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சாற்றுரை இவ்வாறு கூறுகிறது:

"காலங்காலமாய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமனில்லா செல்வாக்கின் வெளிப்பாடே பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்";

"ஆண்களை விடத் தாழ்ந்தநிலைக்குப் பெண்களைத் தள்ளும் இக்கட்டானச் சமுதாயச் செயற்பாடுகளுள் ஒன்று பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்."[4]

ஐக்கிய நாடுகள் பெண்களுக்கான வளர்ச்சி நிதியின் வலைத்தளத்தில் 2006க்கான அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான கோபி அன்னான் அறிவித்துள்ளதாவது:

பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை உலகெங்கும் பரவும் அளவிலான பிரச்சினையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ, பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர்; இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளார்.[5]

பெண்களுக்கு எதிரான வன்முறை பல விரிந்த வகைப்பாடுகளில் அடங்கும்.

பெண்களுக்கெதிரான வன்முறையை ஆய்ந்த உலக சுகாதார அமைப்பு (WHO), இவ் வன்முறை பெண்களின் வாழ்நாளின் ஐந்து நிலைகளில் நடைபெறுவதாக வகைப்படுத்தி உள்ளது: “1) பிறப்பிற்கு முன்னர், 2) மழலைப் பருவம், 3) சிறுமியர், 4) வளர்சிதை மாற்றம் மற்றும் வயது வந்தோர் 5) முதியோர்”[7]

அண்மை ஆண்டுகளில், பன்னாட்டளவில் நெறிமுறைகள், சாற்றுரைகள் போன்றவற்றின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் பாலினத் துன்புறுத்தலுக்கான வழிகாட்டுதலையும்[8] மாந்தக் கடத்துகைக்கு எதிரான வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.[9]

 

--------------------------------------------------------------------------------------------------------------------------

சிறு வயதிலிருந்தே உடனிருப்போர் யாராக இருப்பினும் அவர்களது நலம் பேணுதலை தான் முக்கிய வேளையில் ஒன்றாக நினைத்திருந்தான் ரிஷி.  செல்வபதி இந்தியா வந்திருப்பது தெரிந்து நிலா தான் வாசிப்பிடத்தை மாற்றிக்கொண்டாள்..வங்கியில் பணம் இருக்கையில் எதுவுமே சாத்தியம்தான்.ரிஷிக்கோ தான் மனையாள் எங்கிருக்கிறாள் என்பதுவும் தெரியா நிலை.  தேடுவதற்க்கு அவனுக்கு விருப்பமும் இல்லை.  ஆனால் ,அவளால் அவனுக்கு ஒரே ஒரு விஷயம் ஆக வேண்டிய உள்ளதுதான்....அது விவாகரத்து.  அவளிடமிருந்து எப்படியாவது ,எதை செய்தாவது ,பெற்றுவிட வேண்டும்..

பெண்களுக்கெதிரான வன்முறைகள் தலை தூக்கும்பொழுது ,தட்டிக்கேட்கசட்டங்கள் உள்ளது போல் ஆண்களுக்கும் பாதுகாப்புக்காக சட்டங்கள் இருக்கிறதா என்றுத் தெரியவில்லை.நிலா ,இவனிடம் நடந்துக்கொள்ளும் முறை நிச்சயம் தண்டிக்கப்படவேண்டிய ஒன்றுதான்

 

இம்முறை அவன் தொழிலுடன் உடன்படிக்கையாக நிலாவுடனான விவாகரத்தை முடிச்சிட்டு ,செல்வாவிடம் பேச,  அவரோ..தொழிலுக்காக இல்ல,மாப்பிள்ளை,உங்க வாழ்க்கைய சரி செய்ய ,என்னோட பிரயிசித்தமா இத செய்யுறேன்...ஆனா..அவள எந்த நிலையுலயும் விட்டுராதீங்க...மனைவியா இல்ல ...உங்க அத்தை மகளா அவள விடாம பாத்துக்கொங்க என்றுவிட்டு சென்றுவிட்டார்...அவனுக்கும் நிலாவின் மீது வேறு கோவமில்லை..சரியாக ஆராயாமல் தானே சிக்கி கொண்டோம்..புத்தி கொள்முதல் என தேற்றிக்கொண்டான்...முடிவை மாற்றிக்கொள்ள அவன் நிச்சயம் தயாராக இல்லை. ஆனால், அவனது வளர்ப்புமுறை அவனை ஒருபாதையில் சிந்திக்க வைக்க,அவனுக்குப் பட்டிருக்கும் உட்காயமோ அவனை சிறிதும் அவதானித்துக்கொள்ள அனுமதிக்கப் போவதில்லை.

 

செல்வபதி யார் சொல்லியும் கேட்க்காமல் தனது மீதமுள்ள சொத்துக்களை நிலாவின் பெயரில் எழுதியவர்,காப்பாளராக,ரிஷியின் பெயரை பதித்திருந்தார்.ரிஷிமீது அவர் கொண்ட நம்பிக்கை வேதநாயகத்தையே பிரமிக்க வைத்தது.மணவாழ்வு தான் மகளூக்கு முடிந்தது என்பதை தெளிவாக உணர்ந்து ,நிலா சொத்துக்களை தான் வாழ்நாளின் இறுதிவரை அனுபவிக்க,அதே சமயம் அத்துமீறாமல் இருக்க ஏற்றவாறு,ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் ,ரிஷியின் கையில் சாவியை கொடுத்து,நிலாவை பொம்மையாக்கி ஒரு உயில்.மீதமுள்ள வாழ்க்கையை ஷிம்லாவில் கழிக்க விருப்பமாய் ,நிலாவின் பெற்றோர் சிம்லாவில் உள்ள அவர்களது பங்களாவிர்க்கு சென்றுவிட்டனர்...தொழிலை வேதநாயகம் ,ஒரு பங்குதாரராக இருந்து கவனித்துக்கொண்டதால்,ரிஷி, தான் குடும்பத்தோழிலை வளர்ப்பதில் கவனத்தை செலுத்தினான்.

ரிஷி சார்பில் விவாகரத்து சம்மந்தப்பட்ட வேலைகளை அவனது வழக்கறிஞர் ஆரம்பிக்க, ரிஷியின் அம்மாவிர்க்கு தன் ஒரே மகனின் வாழ்வை எண்ணி எண்ணி,ரத்த அழுத்தம் ஏறியது.

 

தேனு, தன் இரு கைகளிலும் மெகந்தி வரைந்திருந்தாள். அவள் மனமோ அவர்கள் வீட்டின் கொல்லை புறத்தில் வளர்ந்திருந்த ,மருதாணி மரத்தின்மீது...பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை, அவளது அம்மா,தன் இரு பெண்களுக்கும் மருதாணி இழைத்து வைத்துவிடுவார்..நீண்ட கூந்தலுக்கு ,மருதாணி தைலமும்,காய்ச்சுவார்.. சூடு குறையனும்னா மருதாணில புளி,பாக்கெல்லாம் சேக்கக்கூடாது என்று வெறும் இலைகளை அவர் இழைக்க... ஏ,தேனு...மருதாணி சிவப்ப வச்சு உன்னோட வருங்கால புருஷன் உம்மெல எம்புட்டு அன்பு வைக்குரான்னு தெரிஞ்சுப்போம்டி...எங்கிருந்தோ ஒலித்தது அக்காவின் குரல்..அக்குரல் கேட்டவேளையில்,தன் நிலையையும் மறந்து,நாணத்தில் சிவப்பை பூசிக்கொண்டது தேனுவின் முகம்....மருதாணி வரைந்துக்கொண்டிருந்த சக பெண் ,தேனுவை வித்யாசமாக பார்த்தாள்.எதையும் உணரும் நிலையில் தேனு இல்லை.

 

இப்பொழுதெல்லாம் ,தேனுவிர்க்கு நிறைய ஓய்வு கிடைத்தது..பணக்கார வாலிபர்களுக்கு,ஒருநாள் முதல் ஒருமாதம் வரை கம்பனி கொடுப்பதும் பின்னர் ,சிறிது காலம் ஓய்வு என்பதும் அவளுக்கு இப்பொழுது வழங்கப்பட்டிருக்கும் நிலை...ஆனால், ஒரு செல் ஃபோன் தொடர்பு கூட நிச்சயம் வழியில்லை.  வெளியுலகத்தொடர்பு பூஜியம் தான். அவளது மனம் தப்பிக்கும் வழியை அங்குலம் அங்குலமாக தேடிக்கொண்டுள்ளது... அங்கு அசையும் ஒருஒரு பொருளும்கூட கண்காணிக்கப்பட்டது..கண்காணிப்பவர் யார் என்பது மட்டும் யாருக்கும் தெரியாது.  நிழல் உலகத்தின் நிழல் நீண்டு பரவியிருக்கும்தொழில்களில் பாலியல் தொழிலும் ஒன்று.  இங்குள்ள பெண்களை யாரும் பெண்களாக மதிப்பதில்லை..சதையை விற்று பிழைக்கும் இந்த பெண்களின்,மீதி வாழ்க்கை,மிகப்பெரிய கேள்விக்குறியே.மது,மாது,போதை தரும் வஸ்துக்கள் அனைத்தும் மிக தாராளமாக புழங்கும் தொழிலும் இதுவே.தேனு ,இங்கு அழைத்துவரப்பட்ட பொழுது அவளுக்கு சுயம் இழக்கும் மருந்துகள் தரப்பட்டுக்கொண்டிருந்தன.இப்பொழுது ,தப்பிக்க வழி இல்லை என்று அவள் உணர்ந்ததும் மருந்துகளும் நிறுத்தப்பட்டன.

பலவிதமான தொற்று நோய்களுக்கு ஆளாகும் இந்தப்பெண்களுக்கு,மருத்துவமனைகளில் கிடக்கும் அவமரியாதகளும் சொல்லில் அடங்காது. நக்கல்,மனம் புண்படும் விதமான கேள்விகள்,அவமரியாதையான நடவெடிக்கைகள்..இத்தனையையும் இவர்கள் மௌனமாக ஏற்றுக்கொள்ளும்பொழுது...ஒரு சக உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா? இந்தப்பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துக்கொள்ளும் ஆண்களுக்கு..இந்த சமூகம் எந்த கெட்டப்பெயரையும் சுமத்துவதில்லை..நீ கற்பு நெறி பிழன்றுள்ளாய் யென முத்திரை குத்துவதில்லை..ஏன் ?  உடல் உபாதைகளுடன் ,மன வன்முறைகளுக்கு ஆட்படும் இப்பெண்களுக்கு ,நான் தலைவணங்குறேன்.  இப்பேற்பட்ட நிலையில் தேனுவை காணும்பொழுது என்னுடைய இதயத்தில் நிச்சயம் முணுக்முணுக் என்றவலியை உணர்கிறேன்.  இங்குள்ள பெண்களுக்கு ..யாரேனும் வாழ்க்கையின் பாதையை மாற்றிக்கொடுங்களேன்...  தேனுவின் வாழ்க்கை வெளிச்சத்தை நோக்கிப்ரயாணபடுமா ?இல்லை காரிருள் அவளை காவு வாங்குமா? அவளது கல்வித்திறன் அவளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கும்..ஆனால்...?அவள் நிலை இன்று?

 

போனவாரம் சொந்த வேலைகளின் காரணமாக தளத்திர்க்கான பதிவை தட்டச்சு செய்ய இயலவில்லை..அத்துடன் மனம்  கணக்கும் பதிவு..எனக்கு எனது மனதை சரி செய்துக்கொள்ள நேரமும் தேவைப்பட்டது. தேனுவின் வாழ்க்கைப்பாதை சரியாகும் எனும் நம்பிக்கையுடன் நானும் காத்திருக்கிறேன்.மீண்டும் சந்திப்போம்.

உங்கள் தோழி.,

சுகி


ReplyQuoteSubageetha Sundararajan
(@subageetha)
Eminent Member Writer
Joined: 4 months ago
Posts: 35
20/09/2019 4:22 pm  

தேன்)மொழி 12:

 

2012இல், டெல்லியில் பேருந்தில் பயணித்த ஜோதி சிங் என்ற மாணவி, கும்பலால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொதுவெளியில் பரவலாக பேசப்பட்டது. அது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி, பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க ஒரு முக்கிய காரணமானது.

அந்த சட்டத்தின்படி, பாலியல் துன்புறுத்தல் செய்யும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்துதல் தொடர்பாக 1997ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 2013இல் அது சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், நிறுவனங்கள் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.

பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்கான ஒரு பெண்ணின் தலைமையில் குழு ஒன்றை நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்று இந்த சட்டம் அறிவுறுத்துகிறது. குழுவின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கவேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை தொடர்பாக பணியாற்றும் அரசு சாரா அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவரும் அந்தக் குழுவில் இடம்பெறவேண்டும்

 

மீண்டும் உங்களை சந்திக்க உங்களது தோழி, சுகீ. இந்தத் தொடரை படித்த எனது நெருங்கிய தோழி என்னிடம் கேட்டது தேனு ரிஷி சந்திப்பார்களா? அவர்கள் வாழ்வில் சந்தோஷம் மலருமா?  அவர்களுக்கு மட்டுமல்ல..இந்தத் தொடரை படிக்கும் எனது சக தோழிகள் அனைவருக்குமான பதில்..இருள் என்றிருந்தாலும் மறையத்தான் வேண்டும்...வெளிச்சம் பரவத்தான் வேண்டும்!  சரி ,பதிவுக்குள் செல்வோம்...

ரிஷி ,நடப்பை பழகிக்கொண்டான்.ஆனால், அவனால் ஏற்பட்ட காயங்களுடன் வரும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் ரிஷியின் நெருங்கிய நண்பனும்,மருத்துவனுமான, ஷங்கருக்கு புரிந்தது,ரிஷியின் மன நிலை....எப்பேற்பட்ட உத்தமமான குணங்களை கொண்ட ரிஷி,மன வாழ்வின் அவலங்கள்,தோல்விகள்,அவனது மென்மையான மனத்தை,கிழித்துள்ளது..அதன் வெளிப்பாடுகள்,இந்த மன அழுத்தம்..அவன் தீவிரமாக நிச்சயம் மன நல மருத்துவரை அணுக வேண்டும்..இல்லையெனில்,வருங்காலம்,தோல்விகளையும்,அவமானங்களையும்,நிச்சய பரிசாக வழங்கும்.

ரிஷியின் தனிப்பட்ட வாழ்க்கை,அவனது விவாகரத்து மனுவைத் தொடர்ந்து ,தெளிவாக ஊடகங்களால் அலசப்பட்டது..  நிலா ,குடித்துவிட்டு,பாரிலிருந்து வெளிவருதல்,அவளதுநண்பர்கள் வட்டம், அவளது நடத்தை,ரிஷியுடனான அவளது உறவு நிலை,இருவரது பின்னணி,அனைத்துமே,சினிமா துறையை காட்டிலும் அதிகமாகவே அலசப்பட்டது...அனைத்தையும் தூசியை போல தட்டிச்சென்றால் நிலா.ஆனால்,தொழில் துறையில்,முன்னணியில் இஎஉந்த ரிஷியால்,இவற்றை தாங்க இயலவில்லை...சட்டத்தின் வாயிலை நாட ரிஷி விரும்பினான்.  சும்மா விடுங்க ரிஷி,எந்த ரியாக்ஷனும் வேணாம்..தானே அடங்கிடும் .இல்லாட்டி,இன்னும் பரபரப்பு கூட்டிடுவாங்க..என்று அறிவுரை கூறினார்..அவர்களது கம்பனி வழக்கறிஞர் ..தான் என்னதான் யோசித்தாலும் தனது தந்தை வயதில் இருக்கும் அவரது வார்த்தைகளை மறுக்க மனமில்லாதவனாக அன்றைய நாளிதழில் அவனையும் நிலாவையும் பற்றிய சமாச்சாரங்களில் அவன் பார்வை நிலைத்தது..

அவனது தேகம் முழுதும் தீ பற்றிய வேதனை...நிலா தன் முன்னிருந்தால் ,அவளுக்கு இந்தக்கணம் மரணம் நிச்சயம்...இப்பொழுதெல்லாம்,ரிஷி,விலை மாதர்களுக்கு அதிக பணம் கொடுத்து,அவர்களை,துன்புறுத்துவதில் நிலாவை பழி வாங்கிய திருப்தியை உணரத்தொடங்கிவிட்டான்.அவனது உயர் மன அழுத்தத்திர்க்கு இது வடிகாலாகிவிட்டது துர்பாக்கியமே.படுக்கையில் அவன் மனைவியிடம் கூட வன்முறையை கையாலாதவன்,இதற்க்காகவே அதிகமாக பணம் செலவழிக்கலானான்.காயங்கள் மீறும் சமயம்,அப்பெண்களுக்கு மருத்துவம் பார்க்க ஷங்கரிடம் அனுப்பி வைப்பான்.அவர்களும் மருத்துவ உதவிக்குப்பின் தங்கள் இருப்பிடம் சென்றடைவர்..ஆனால்,ரிஷி மீதான அப்பெண்களின் பயம் உயிர் மீதான பயமாக மாறி இருந்தது.பணத்திற்க்காக சதயை விற்பவர்களாயினும்,அவர்களால்,ரிஷியிடம் காணப்படும் வேட்டையாடும் விலங்கின் கொடூரத்தாக்குதல்களை சமாளிக்க முடியவில்லை.எந்தப்பெண்ணுடனும் கூடலில் ஈடுபட அவன் மனம் ஒப்பவில்லை...ஆனால் ,அவனது படுக்கையறை வக்ரங்கள்..அப்பாப்பா...

தேனு ..இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ,ரிஷியிடம் வரப்போகிறாள்...ஆம், ஏற்கனவே,அவள்மீதான ,காழ்புணர்வை வளர்த்துக்கொண்டிருந்த சில பெண்கள்,ரிஷியின் ,இன்றைய வடிகாலாக,தேனுவை,அனுப்ப,திட்டம் தீட்டிவிட்டார்கள்.  இந்த மாதிரி,பெண்களை சப்ளை செய்யும் கும்பலுக்கு,அப்பெண்களை விட அவர்கள் சம்பாதிக்கும் பணமே முக்கியம் எனும் பொழுது,தேனுவோ,வேறு ஒரு பெண்ணோ,எல்லாம் ஒன்றுதானே!? ஒரு உயிரே போனாலும்,அவர்களுக்கு ..ம்ஹூம்..கவலை ஏதுமில்லை.  இன்று நாளிதழை கண்டத்திலிருந்து.. வெறியை அடக்கி வைத்துள்ளான் ரிஷி..இன்று இரவு வரப்போகும் பெண் நிலாவுக்கு ஒப்பானவள்..நிலாவிடம் காட்ட இயலாத பல விஷயங்களை இன்று வரப்போகும் பெண் சந்தித்தாக வேண்டும். இரவிர்க்காக ரிஷி காத்திருக்கிறான்.

தேனுவிர்க்கோ..சுற்றியுள்ள சில பெண்கள் தீட்டி உள்ள திட்டம் தெரியாது..தெரிந்தாலும் வேறு வழியும் இல்லை.  அவளுக்கு,ரிஷி வேத நாயகம் யார் என்றே தெரியாது..சிறிய ஊரிலிருந்து,பல கனவுகளுடன்,படித்து,வேலைக்கு முயற்சி செயவிருந்த தருணம் ,எல்லாமே மாறிப்போனது..தன் குடும்ப உறுப்பினர்களை பற்றிமட்டுமே அறிந்திருந்த அந்த கிரமத்து தேவதை..இன்று இரவு,மாபெரும் தொழிலதிபனின் வெறிக்கு இரையாகப்போகிறாள்....நான் நடுங்குகிறேன்...இவர்களது சந்திப்பு....விடையறியா வினாக்களுடன்..அவர்கள் சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்..

ரிஷி தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான்...அவனது பாதங்கள்,வழக்கத்திர்க்கு மாறாக ,செருப்பு அணிய மறந்திருந்தது.அவன் தனது அவமானங்களால்,தன் நிலை மறந்திருந்தான்.மது,சிகரெட் புகை இரண்டும் அவனுக்கு பிடிக்காது...சை,நான் ஏன் இவற்றை பழக முடியவில்லை? என்னை முழுவதுமாக மறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எனக்கு அதற்க்கும் குடுப்பினை இல்லை போலும்..அவன் ஆழ் மனத்திலிருந்து பெருமூச்சு வெளியேறியது..இரவு மணி பத்தை காட்டியது...

முன்னா..ரிஷிக்கு பெண்களை அனுப்பும்,தரகன்..தேனுவை சாயங்காலமே,அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். தேனுவிடம் அவனுக்கு என்றுமே மயக்கம்தான். தன் இருப்பிடம் அழைத்து சென்று, அவளை முற்றும் முழுதுமாய்..ரசித்துவிட்டு, அவளை மீண்டும் தயார் செய்து ரிஷியிடம் கூட்டிக்கொண்டு வந்தான்..இவ்வளவு வருடங்களுக்குப்பின்னரும், தேனுவிர்க்கு அருவருப்பு தாங்க இயலாமல் கண்ணீர் வெளி வந்தது..மனத்தாலும்,உடலாலும்,சோர்ந்து கிடந்த அவளை தேற்றுவார் இல்லை..இவளைப்போல போதை தரும் மதுவும் இல்லை,மாதுவும் இல்லை என முன்னா மனம் அவளை இன்னொருமுறை அனுபவிக்க துடித்தது..ஆனால் முடியாது..இன்று இரவு இவள் ரிஷியின் படயல்..நாளைஇவளை எந்த கோலத்தில் காண்போமோ என உள்ளூர எண்ணியவனாக தனது மகிழ்வுந்தை செலுத்தினான். தான் வரும் இடம் எதுவென்பதைக்கூட அறியாதவளாக,அரை மயக்க நிலையில்,கண்ணீர் கோடுகளுடன்,அவளை காண்போருக்கு நிச்சயம் பரிதாபம் வரும்..முன்னாவோ...இங்கப்பாரு,தேனு...கஸ்ட்டமர் முன்னால இந்த நாடகம் வேணாம்..முகத்த சரி பண்ணு...எனக்கு பைசா முக்கியம்..என்று மிரட்டினான்.  சொன்னதை செய்யாவிட்டால் பின்னர் என்னவெல்லாம் நடக்கும் என உணர்ந்திருந்த தேனு அவசரமாக முகத்தை ஒப்பனைகள் மூலம் சரி செய்துக்கொண்டாள் ..நாளை...

மீண்டும் உங்களை சந்திக்கிறேன்....

உங்கள் தோழி

சுகீ.

 


ReplyQuote
Page 4 / 5
Share:

error: Content is protected !!

Please Login or Register