Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

தா(தே)னாய் வந்த தேன...
 
Notifications

தா(தே)னாய் வந்த தேன்மொழியே!  

Page 5 / 10
  RSS

Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 8 months ago
Posts: 113
25/09/2019 3:47 pm  

தேன்மொழி 13

ரிஷி தேனு சந்திப்புடன்..அவர்களது வாழ்வின் அடுத்தக்கட்டதை நோக்கி பயணிப்போம் வாருங்கள்...

இருள் மெல்ல விடை பெற்று சூரியன் தனது பொன்னிற கிரணங்களை பூமி மீது படரச் செய்துக் கொண்டிருக்கும் அதிகாலை நேரம்..தேனுவின் அக்கா வாசல் தெளிக்க வெளியே வர ,அவளது கண்களோ தனது தங்கையை தேடியது.நாட்கள் ,மாதங்களாக,மாதங்கள்,வருடங்களை இழுத்துச் செல்ல,காலம் தேனுவை மட்டும் கூட்டி வரவே இல்லையே? ஏக்கப் பெருமூச்சு,சூரியக்கதிர்களைவிட உஷ்ணமாய் வெளி வர..வாசலில் கோலமிட,ஆயத்தங்கள் செய்யலானாள் ,

 

ஒவொருநாளும்,எதிர்பார்ப்புடன் தொடங்கும் நாள்,ஏமாற்றத்துடன் முடிய...வெளியூர் சென்ற தேனு,யாருடனோ சென்றுவிட்டதாக மெல்ல பேச்சுக்கள் பரவி இருந்தது...ஆனால்,தேனுவின் குடும்பம் இவற்றை பற்றிக் கவலைகொள்ளுவதாய் இல்லை...பெண்ணை பெற்று நல்ல முறையில் வளர்த்திருந்த அவர்களுக்கு,இப்படிபட்ட அவலம் நிகழ்ந்திருக்கிறது!  ஆனாலும்,தங்களது வளர்ப்பை அவர்கள் சந்தேகம்,கொள்ளவில்லை.வெகு காலங்கள் கடந்தபின்னர் தாய்மைபேறை அடைந்திருக்கும் தேனுவின் அக்கா மதிக்கு ,தன் சிறு தங்கையின் முகம்,அதிகமாய் நிழலாடியது!தேனுவை பற்றிய அவளது ஏக்கம்,தன் தங்கையை ஒத்த பெண்குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என ஏங்கியது.  காணாமல் போன தங்கையை,தன் பிறக்கப்போகும் குழந்தையை கொண்டு ஈடு செய்ய இயலுமா?  தேனு இங்கிருந்தால் என்னை தன் உள்ளங்கையில் தாங்கியிருப்பாளே? என்ன ஆயிற்று அவளுக்கு? ஜோசியர் சொன்ன மூன்றாண்டுகள் முடிந்த பின்னராவது கிடைப்பாளா?என எதேடோ எண்ணங்களின் போக்கில்,மதி வீட்டின் வாசலில் கோலம் இட்டாள்.தேனுவுடன் அவள் சேர்ந்து இட்ட கோலங்கள்தான் அழிந்து போயீனவே?

 

உத்தம்பூர் காவல் நிலையம்! பெண்புலி காவல் அதிகாரியாக வந்திருக்கிறதோ என்று அச்சப்படும் அளவிர்க்கு ,ஐ.பி.எஸ் முடித்து அதிகாரியான  சாரதா விஜயசந்திரன் ஐ.ஜி யாக பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகிறது! விஜய சந்திரனை ஐ.பி.எஸ் முடித்த அடுத்த வருடமே  திருமணம் செய்துக்கொண்ட சாரதாவிர்க்கு ஏனோ ஆண்கள் செய்யும் தவறுகளை எளிதில் மன்னிக்க முடிவதில்லை..அவர் பொறுப்பேற்ற பின்னர்,தன் மனையாளை அடிக்கவும் உத்தம்பூர் ஆண்கள் நடுங்கினர்.அவ்வளவு கண்டிப்புடன் செயல்பட்டது அங்கிருந்த காவல் நிலையம். சென்னையை அடுத்த செங்கல்பட்டை சொந்த ஊராகக் கொண்ட சாரதா ஐ.பி.எஸ் பயிற்சி சமயம் உடன் பயிற்சிக்கு வந்த விஜயனை சந்தித்தாள். விஜயன் கேரளத்தை சேர்ந்தவன்.இப்பொழுது அவன் இருப்பதோ ,அமைச்சரின் அந்தரங்க பாதுகாப்பு நிர்வாகத்தில்,சென்னையில்.இருவரும் சந்திக்கும் தருணங்கள் மிகக்குறைவு,எனினும் ,அவர்களுக்குள்ளான காதல் அதிகமே!

 

விஜயனின் தந்தையும்,வேதநாயகமும்,தொழில்முறை  பங்குதாரர்கள்குடும்ப நண்பர்களும்கூட.தொழிலில் அதிக ஆர்வமில்லாததால் விஜயன் இத்துறைக்கு வந்துவிட்டான்.அவனது அண்ணன்,தந்தையுடன் தொழிலில் இருக்கிறான்..ஆனால்,விஜயனுக்கு தோழன் அதுவும் மிக நெருங்கிய தோழன்..ரிஷி..அவனது,உதவியுடந்தான் சாரதாவை கைபிடித்தான் விஜயன்.தொழில் குடும்பத்தில்,சம்மந்தம் வைக்க விஜயனின் தந்தை சந்திரன் விரும்பினார்..ரிஷியினது ஒரு வார்த்தைக்கும் மரியாதை அதிகமே. தெரிந்த நபர்களுக்கு அவன் போல தன் பிள்ளை இல்லை எனும் எண்ணம் நிச்சயம் வரும்.  ரிஷியின் திருமணத் தோல்வி விஜயனிடம் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருந்தது.தன் மனத்தாங்கல்களை தன் மனையாளிடம் பகிர்ந்துகொள்ளவும் தவறவில்லை..சாராதவிர்க்கும் வருத்தம் கலந்த ஆச்சர்யமே! இப்பேற்பட்ட ஒருவன் தன் மனைவியிடம் ஏமாறுவானா என்றும்,குடும்ப வாழ்வில் நம்பிக்கையை அடித்தளமாக வைத்துதான் மற்ற அனைத்து நிகழ்வுகளும்,ரிஷியின் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது நிலாவின் தவறு எனவும் அவள் மனம் இரு வேறு திசைகளில் யோசித்தது..எப்படி ஆயினும் ஆண்கள் பற்றிய அவளது எண்ணத்தில் இப்படியும் ஆண்களில் இருப்பார்கள் எனும் எண்ணம் வந்திருந்தது.  வரும் காலத்தில் அவளது எண்ணத்தை மீண்டும் ரிஷி மாற்றி அமைக்காமல் இருந்தால் சரி.!

 

தன் முகத்தை அழுந்த துடைத்து ,முகபூச்சு சரி செய்து ,,தன்னை மரித்தவலாய்,தன்னை மறந்தவளாய்..உயர் ரக,மகிழுந்தில் முன்னாவுடன்,மனம் வெட்கியவளாக தனது பிரயாணத்தை தொடர்ந்தாள் தேனு.அவளது உடலில் இருந்து வெளிப்பட்ட சந்தன நறுமணம் தொலைவிலிருந்தே அவல்பால் ஈர்த்தது...குதறும் வெறியுடன் நடை பயிலும் ரிஷிக்கு இவையெல்லாம்ஏதேனும் உணர்வைத்துண்டுமா ,?புரியுமா என்பது கேள்வியே.! 

 

ஒருவாறு இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தேனு ரிஷியின் இருப்பிடத்தை அடைந்தாள்.  முன்னவை ஒரு அருவருத்த பார்வையுடன் கண்ட ரிஷி..பெரிய ரூபாய் நோட்டுக் கட்டை வீசி எரிய,தேனுவிடம் ஆண்மையைக்காட்டும் அந்த வீரன்,கூழைக்கும்பிடு போட்டவாறே விரைந்தான். தேனுவின் புருவமம் ஒருவித நெறிப்புடன்,மேல்நோக்கி உயர,அதுவும் ரிஷியின் கண்களில் இருந்து தப்பவில்லை. மீண்டும் ,தேனுவின் பிரயாணம் புனே நோக்கி தொடங்கியது..ஆம்..ரிஷி தானும்,நிலாவும் தங்கியிருந்த அதே புனேவிற்க்கு இன்று இவளை அழைத்துச்செல்கிறான்.இப்பொழுது,தனியாக அங்கும் ஒரு பிளாட் வாங்கி விட்டான்.யாருமே அவனை கேள்வி கேட்க்க முடியாது...அதே இரு நாட்கள்...

அவனது கோபாவேசம் இவளை காயப்படுத்துவது உறுதி..மாற்றுமருந்து?

 

மும்பையிலாவது ஷங்கர் இருக்கிறான்..புனேயில் ,இரண்டு நாட்களில் அவளை உயிருடன் மீட்க இயலுமா என்பதே புரியவில்லை.

ரிஷியின் மெர்சிடிஸ் எஸ்.320 அந்த இரவு வேளையிலும் ,வேகமாக புனே நோக்கி பறந்தது...ஒருவிதத்தில் ஆச்சர்யமாகவும்,மறுபுறம்,வயிற்றின் அடியில்,பயப்பந்து உருளுவதாகவும் உணர்ந்தாள் தேனு..இந்தப்பயணம்,அவள் வாழ்வில் மாபெரும் நிகழ்வுகளை ஏற்படுத்தப்போவது ரிஷி தேனு இருவருக்குமே தெரியாது.விடை காணா ஒரு மாபெரும் புரிதலை ரிஷி அனுபவிப்பான் என்று அவனுமே நம்பவில்லை...அவனது இரட்டை படுக்கையறைகள் கொண்ட,பிளாட்,உயர் நிலையில் சமூகத்தில் வாழும் மக்களுடையது.  ரிஷியின் வீட்டில் எது நடந்தாலும்,நாகரீகப் போர்வையில் ,ஒருவரும் எட்டிப்பார்க்கப் போவதில்லை..இதுதான்,இன்றையயா நாகரீகமோ?! 

 

உத்தம்பூர் எனது கற்பனையே..நிஜத்தில் அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று சரியாகத்தெரியவில்லை.. நான் தேடியவரை கிடைக்கவில்லையே!!

மீண்டும் இந்த வார இறுதியில் சந்திக்க முயற்ச்சிக்கிறேன்.

உங்கள் தோழி சுகீ.

சுகீ


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 8 months ago
Posts: 113
04/10/2019 7:16 pm  

அடுத்த அத்யாயம் பதிந்து விட்டேன்!  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அத்யாயம் 14.

 இரண்டு நாட்களாக விடாமல் பெய்துக்கொண்டிருந்த மழை ரிஷியின் ஆவேசத்தை ஒத்துக் காணப்பட்டது.  தேனுவுடன் அவன் வீட்டிர்க்குள்ளே நுழைந்த தருணம் ஆரம்பித்த இயற்க்கை பேரிடர் தனது ஆவேசத்தை சிறிதும் குறைத்துக்கொள்ளும் உத்தேசத்தில் இல்லை , ரிஷியும் தனது ஆழ்மன உலைச்சளிலிருந்து வெளியே வருவதாகவும் இல்லை. 

 உன்னோட நேம்?   ம்ஹூம் ..முன்னா ஏதோ சொன்னான் ..நல்ல தமிழ் பெயராச்சே? தன் முன்னுச்சியை கோதியவாறே பேசிய ரிஷியின் சிற்பத்தை ஒத்த உருவத்தில் ,ஒருகணம் தேனுவின் இதயம் ,நின்று ,பின்பு மெதுவாய் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது..தான் செய்ய வந்ததென்ன ,செய்து கொண்டிருப்பதென்ன என்று தன்னுள் வெட்கியவாறே ,ரிஷியின் கேள்விகளுக்கு விடை அளிக்கலானாள்.

என்னோட பெயர் தேனுகா ..ஓஹோ,  இந்த தொழிலுக்கு வந்து எத்தனை வருஷங்களாச்சு ? 

அவனது கேள்வியில் அதிகப்படியான ஏளனம் ..அதை சிறு வியப்புடனே கவனித்தவளாக,இரண்டரை வருஷங்கள் என  பதிலுரைத்தாள் தேனு.

எதுக்கு இந்த தொழிலுக்கு வந்த? பணம் பத்தலை அதனாலத்தானே? வேளைக்கு ஒரு அலங்காரம், ஆசைய தீத்துக்க ****...ஆக உங்களுக்கெல்லாம் எல்லா விதங்கள்ளையும் சுகம் கொடுக்கும் எந்திரங்களாடி ஆண் பிள்ளைகள்?

அவனது கேள்வியில் சிறிது திடுக்கிட்டாள் தேனு.  ஏதோ ஒன்று நிச்சயம் சரி இல்லை என்பது அவளுக்கு மெல்ல உறைக்கலாயிற்று .இல்ல சர் ,எதிர்பாராத விதமா இங்க வந்திட்டேன், என்று குரலில் பணிவுடன் பதிலுரைத்தாள் ..

உன்ன பாக்க அப்படி தெரியலயே?  ரிஷியின் கண்கள் தேனுவின் சிவப்பேறிய மெகந்தி டிசைனில் ..அந்த சிவந்த நிறம் ரிஷியின் கண்களிலும் ..

பார்க்கும்பொழுது ,தன்னையும் அறியாமல் இரண்டடி பின் சென்றாள் தேனு.  அவளது அடி வயிறு வரை பயமெனும் குளிர் பரவிற்று.  அவன் குடித்திருக்கிறானா என்ற யமும் இல்லை.  பல மணி நேரங்களாக இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் ..

சரி சரி ..போயி குளிச்சிட்டு வா ..இந்த கன்றாவி எல்லாம் எனக்கு பிடிக்காது என அவளது உதட்டுச் சாயத்தை சுட்டிக்காட்டினான் .

ஏதோ ஒரு நிலையில் அவனுக்கு பெண்களைக்கண்டால் வெறுப்பு என்பதுவரை தேனு புரிந்து கொண்டாள்.அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டாலே பிறருக்குப் புரிவது கடினம்...இங்கு என்னை அழைத்து வந்திருக்கும் மனிதனைக்கண்டால் மோசமானவனாக தெரியவில்லை..ஆனால்,அவனைக் காணும்பொழுது வேட்டையாட காத்திருக்கும் விலங்கினை ஞாபகம் வருதே ..என தன்னுள் சிந்தனைகளில் மூழ்கியவள், தண்ணீரில் நனைந்தாள்.

அறையில் ,ரிஷி, பால் தம்ளருடன் இவளை வரவேற்றான்..இல்ல சர் ,எனக்கு வேணாம்...அவள் குரல் வெளியே வரவில்லை..அம்மாவின் வளையல் அணிந்த கைகளில் இருந்த பால் தம்ளர் நினைவடுக்குகளில்..தேனு,இந்த நினைவுகளில் இருந்து வெளியேற இயலாமல் ,பால் குடிப்பதையே நிறுத்தி இருந்தாள்..  ரிஷி அவளை விடுவதாய் இல்லை..உன்னை இங்க கூட்டிக்கிட்டு வந்திருக்கர்து ,தி க்ரேட் ரிஷி..என்கிட்ட எதிர்த்து பேசாம இருந்தால் உனக்கு நல்லது.பாலை வைத்துவிட்டு,பால்கனிக்கு சென்றுவிட்டான்..மழையுடன் சேர்ந்த காற்று அவள் உடலை ஊடுருவி தேகம் முழுதும் பரவ பால் தம்ளரிடம் அவள் கைகள் செல்வதை ஒரு முறுவலுடன் கண்டான். சரியான சூடு..தொண்டைக்கு நல்லா இருக்கு..கொஞ்சம் டேஸ்ட் வேற மாதிரி இருக்கு என அவள் மனதில் நினைத்தது முகத்தில் தெரிய..ஆமா, கொஞ்சமா பிராந்தி கலந்தேன் என்றான் நம்புவதா வேண்டாமா எனும் குழப்ப ரேகைகள் மீண்டும் அவள் முகத்தில்.

சரி, நீ என்னோட ரூம்ல  இரு,வரேன்..என்றுவிட்டு,குளியறைக்குள் புகுந்தான் ரிஷி...சொன்னபடியே பத்தாவது நிமிடம்,அவன் தனது படுக்கையறையில்..

தேனுவுடன்,சாதாரணமாக ஆரம்பித்த விளையாட்டை,அவன் சிறிது சிறிதாக கூட்டினான்...அவன் நினைவுகள் முழுதும்,நிலாவுடனான திருமணத்தில் ஆரம்பித்து முன்னேறிக்கொண்டிருக்க,அவன் உடல் மொழி நிலாவை தாக்கத்தொடங்கியது..

ஆம்,அவனைப் பொறுத்தவரை,நிலாவின் மற்றுமொரு பதிவு அருகில் தன்னுடன் இழையும் பெண்..தேனுவின் ஒத்துழைப்பு,அவனிடம் ,முரட்டுத்தனதையும்,கோபாவேசத்தையும் தூண்டும் தூண்டுகோல் என்பதை பேதை அறிந்திருக்கவில்லை.

 

முத்தத்தில் ஆரம்பித்த யுத்தம்,கடிக்கும் நிலைக்கு சென்றது...அவனது வலிய கரங்கள் தேனுவின் முடியின் ஆழத்தை இழுத்துப்பிடிக்க,இதழில் ஆரம்பித்த, பற்களின் தண்டனை,அவளது பற்றுதலான சதையமைப்பைக்கொண்ட கன்னங்கள்,கழுத்து,திறண்ட ********,என ஒருஒரு பகுதிக்குமாய் கீழிறங்கி,தண்டனைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தது...

 

வலி தாங்காமல் தேனு கதற, ரிஷியின் மனமோ,நிலா கதறுவதாய் பாவித்து, கொடூரத்துடன்,தண்டனைகளை அதிகமாக கொடுக்க,சந்தோஷமாய் ஆணை இட்டது.. எதையும் உணரும் நிலையில் அவனில்லை..அந்தரங்க பகுதிகள் அனைத்துமே, கொடூர விலங்கினங்கள் மொத்தமாய்,மாமிசத்தை கையாளும் முறையில் ,கையாளப்பட்டிருந்தது.  உடலின் மென்பகுதிகள் ரத்தம் சிந்த ஆரம்பித்தன.  நா வரள ..இன்றுடன் தன் உயிர் பறவை பறந்துவிடும் என்று மனதினில் சந்தோஷப்பட்டாள் தேனு.

ஏறக்குறைய,ஒண்ணரை நாட்களின் முடிவில்,சோர்ந்து ,கட்டிலின் கண்மூடினான் ரிஷி...மொத்தமாய் அவளை சேதப்படுத்தியும், கூடலை அவன் ஆழ்மனம் விரும்பவில்லை..நிலாவுடன் கட்டில் இன்பம் சாத்தியமில்லை என அவன் மனம் அவனை அடக்கி வைத்திருந்தது.  கிழிந்த மென் காகிதமாய்..ரத்த வெள்ளத்தில்,கட்டிலின் மறுபுறம்,தேனு..அவளுக்கு,நினைவு தப்பீருந்தது..நிலையை உணரும் நிலையில் இருவரும் இல்லை..தனது..நிலையில் நிலாவை பழிவாங்கிவிட்டதாக ரிஷியின் மனம் நம்பியது..ஏற்க்கனவே ,அவன் தண்டனை கொடுத்திருந்த பெண்களைவிட,இம்முறை,தேனு,நூறு மடங்கு அதிகமாய் அனுபவித்துவிட்டாள் . வெளியில் மழை சிறிது குறைந்திருந்தது. இன்னும் இருவருக்கும் மயக்கம் தெளியவில்லை..

 

அடுத்தநாள் மதியம்,எழுந்த ரிஷிக்கு ஒன்றும் தெளிவாக ஞாபகம் இல்லை..ஆனால், பக்கத்தில்,ரத்த தோய்ந்த படுக்கையில்,தானும் அதையே உடலெங்கும் பூசி மங்கி இருக்கும்,அந்த பெண்.. அவனுக்கு ஒவ்வொன்றாய் நினைவில் வரத்தொடங்க..அவளுக்கு மூச்சு வருகிறதா என கைவைத்து பார்த்தான்.. அவள் முகத்தை பார்க்கையில் குற்ற உணர்ச்சி தாக்க, நீரை எடுத்து முகத்தில் தெளித்து, அவள் வாயிலும் புகட்ட ,சிறு முனகளுடன் கண்களைத் திறந்தாள் அவள்...இப்பொழுதும் நிலாவிர்க்கு பதில் யார் இந்த பெண் இதற்க்கு முன் கண்டதில்லையே என்ற குழப்பம் ரிஷிக்கு மாறவில்லை.

 தான் இன்னுமும் உயிரோடு இருக்கிறோம் என தேனுவால் உணரவும் இயலவில்லை.

 

மீண்டும் சந்திக்கிறேன்.

 

உங்கள் தோழி சுகீ.

 

சுகீ


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 8 months ago
Posts: 113
09/10/2019 6:32 pm  

அத்யாயம் 15

 

திருட்டும், பாலியல் தொழிலும் முன்காலத்தில் இருந்து கொண்டிருந்தது. பழங்காலத்தில் தாரம், குடும்ப வரை முறைகள் இல்லாதபோது, பாலியல் தொழில் வளர்ந்தது. அது நாகரிகம் வளர்ச்சி அடையாத காலம் என்று புறம்தள்ளி விடலாம். ஆனால் தற்போது நாகரிக வளர்ச்சி அடைந்த பின்பும் படுஜோராக நடைபெறுகிறது பாலியல் தொழில். ஆண்டுதோறும் இந்தியாவில் ரூ.50 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை பாலியல் தொழிலில் புழங்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கோடிகள் புரளும் இந்தத் தொழிலில் கொடுமைகள் ஏராளம். அதிர்ச்சிகளும் தாராளம்.

நூறு நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 49 சதவீத நாடுகள் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அனுமதிக்கின்றன. இந்தியா உள்ளிட்ட 12 சதவீத நாடுகளில் நிபந்தனைகளோடு பாலியல் தொழில் நடக்கிறது. 39 சதவீத நாடுகளில் அங்கீகாரம் இல்லாமல் பாலியல் தொழில் அரங்கேறுகிறது.

உலகில் 1½ கோடி பேர் விபசாரத்தில் ஈடுபடுவதாக சர்வே தெரிவிக்கிறது. 50 லட்சம் பேர் வரை ரகசியமாக விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கணிக்க முடிகிறது. இந்தியாவில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 30 லட்சம்.

 

தான் யார் ,எங்கிருக்கிறோம் என்பதை மறந்து மயக்க நிலையில் இருந்த தேனுவின் நினைவுகள் முழுவதுமாய் அவளது குடும்பநபர்கள் ஆக்ரமித்திருக்க ,அவர்களுடனான நாட்களை கொண்டு உளறத்தொடங்க ,அவளது தேகம் உடற்சூடு தாளாமல் தூக்கிப் போட ஆரம்பித்தது..இதைவிட ஒரு மோசமான கற்பழிப்பு சம்பவம் அரங்கேறியிருக்காது என மறுகியவனாய், தான் எப்படி பெண்களிடம் இப்படி நடந்துக்கொள்ள முற்பட்டோம்,என் அம்மா எனக்கு இதை நிச்சயம் கற்றுக்கொடுக்கவில்லை...நிலாவின் தாக்கம் என்னுள்ளே இவ்வளவா என மயங்கியவனாய்..தேனுவிர்க்கு எவ்வாறு முதலுதவி செய்வது? அவளோ முழு மயக்கத்திலும் ,ஜுரத்திலுமாய்.வெளியே செல்ல இந்த மழை அனுமதிக்காது..என்ன செய்வேன்..என தவித்தவாரே,ஷங்கரை அழைத்து நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற, அதிர்ந்தவனாக,இது அந்தப் பெண்ணை காப்பாற்றும் நேரம்..தாமதிக்கலாகாது புரிந்தவனாக,

சரிடா..நீ ஸ்கைப் ல வா.. அந்த பொண்ணை நா பாக்கணும் ..என்று ஸ்கைப்பில் வந்த ஷங்கருக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை. ரத்தத்தில் தொய்ந்திருந்த ஆடைகள் ,அவள் நிலையை தெளிவாகக் காட்ட, ஜுரம் 103 டிகிரி காட்டுகிறது என்றான் ரிஷி... 

மயக்கம் ஜுரத்தினாலயா ..இல்ல..உன்னோட திருவிளையாடலான்னு புரியல...ஆனா,இப்போ ஜுரத்துக்கு *** இந்த மருந்த குடு...ஈரத்துணி வச்சு ஒத்தடம் குடு..என்று அவளது உடற்க்காயங்களுக்கும் மருந்திட கூறியவன்  ஒருமணி நேரம் கழிச்சு கால் பண்ணுறேன்..  என்றுவிட்டு வைத்தான்...ஷங்கருக்கு நன்றாய் புரிந்தது இனியும் ரிஷியின் நிலையை தாமதிக்க முடியாது..மேலும் ,அந்தப்பெண்ணுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என கடவுளை வேண்ட ஆரம்பித்தான்.

 

என்னங்க,உங்க ஃப்ரெண்ட் ரிஷிய ,புனே போற ஹைவே ல பாத்தேங்க, முன்பக்கம் ஒரு பொண்ணு மிரண்டு உக்கார்ந்திருந்தா...இவர் கார் ஒட்டின வேகத்துல அவ முகம் வெளிறி இருந்தது..நிச்சயம் நிலாவா இருக்க முடியாது என்று தான் கண்டவற்றை விஜயிடம் தொலைபேசியில் விவரித்துக்கொண்டு இருந்தாள் சாரதா...வேறு ஒரு கேஸ் விஷயம்மாய் அந்தப் பகுதியில் சாரதா சுற்றிக்கொண்டிருக்க ,அப்பொழுது கண்டவை இவை  ..சரியா கவனிக்க முடியல..நீங்க அவர்கிட்ட பேசுங்க என்றுவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்தவளுக்குள்ளும் ரிஷி பற்றிய எண்ணங்கள் கூடாரமிட்டு அமர்ந்தது...

 

மழைகுறையும் நேரம்,தேனு கண்விழித்தாள்...அப்பாவியான அவள் முகம்,வெளிறி ,மோசமாய் காணப்பட்டது..முகம் வீங்கி,உதடுகள் சிறிது கிழிந்துள்ளதோ என ஐயம் கொள்ளுமாறு இருந்தது..ரிஷியின் பற்கள் பதிந்த இடங்கள் செம்மை பூசி ..அவளால் எழக்கூட முடியாமல்..முகம் கண்ணீரை தத்தெடுத்தது..அவளையே பார்த்துக்கொண்டிருந்த ரிஷியின் முகத்தில் என்னவென்று அறுதியிட முடியா உணர்வுகள் ஜாலம் காட்ட.என்னாலதான் உனக்கு இந்த நிலைமை ..நானே உனக்கு தேவையானதை செய்யறதுதான் நியாயம்..என்றவாறே ..அவளை தூக்கி கழிவறையில் விட்டான்.  தன்னுணர்வு பெற்றவளாக,தன்னை விடுவித்துக்கொள்ள முயல, கால்கள் நிற்கவும் பலமின்றி தள்ளாடின..தன்மீதே வெறுப்புற்றவனாக, அவளை பலவந்தமாக கழிவறையில் பிடித்தபடி நின்றான், அவன் முகத்தில் சிறிதும் அருவருப்பின் சாயல் இல்லை.

இவன் எப்படிப்பட்டவன் என குழம்பினாள் தேனு.  அவனுடன் தனித்திருக்க பயந்தவலானாள் பாவை.  அவள் முகத்தின் நுண் உணர்வுகளையும் புரிந்தவனாக,  அம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி....நா இதபண்ணியிருக்கேன்னு இன்னும் என்னால நம்ப இயலல.  யார்மெலயோ இருக்கும் கோவம்,வெறுப்பு....என்றுவிட்டு மௌனமானான்..

அடுத்த இரண்டு நாட்களில் மழை குறைய,தேனுவின் ஜுரமும் கட்டுக்குள் வந்தாலும் ,அவளது உடற்காயங்கள் இன்னும் முழூதாக சரியாகவில்லை...இந்நிலையில், அவளது மாதாந்திர மூன்று நாட்களும் சேர, உடல் உபாதை கூடியது..ரிஷிக்கு அவள் படும் அவஸ்த்தைகள் கூர் வேளாய் நெஞ்சில் இறங்கியது...குனிந்து உள்ளாடை மாற்றும் நிலையில்கூட அவள் உடல்நிலை இல்லை என்பதே உண்மை.  வயிற்றுவலி,பிரட்டல்,தலைசுற்றல் என பல வகையிலும் அவள் உடல் அவளைப்படுத்தியது.  காயங்கள் எரிய, உணவு உட்கொள்ள வாயை திறக்கவும் முடியவில்லை...

 

அந்தப் பெண் படும் அவஸ்த்தைகள் தான் அம்மா தனக்கு சொன்ன பாடங்களை ஞாபகப் படுத்தியது.  குற்ற உணர்வையும் தாண்டி, பழைய ரிஷி,வெளிவரலானான்.   அவளுக்குத் தேவைப்படும் அனைத்தையும்,சிறு முகச் சுளிப்பும் இன்றி அவன் செய்த பாங்கு ,அவனது முன்னர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்திர்க்கு நேரெதிர் என்பது தேனுவுக்குள் குழப்பத்தை அதிகரித்தது. தான் அப்பா செய்ய யோசிக்கும் பலவற்றை இந்த ஆண்மகன் எவ்வாறு சகிக்கிறான் என்பதே அவளுக்கு ஆச்சர்யம்! ஆனாலும், நுண் விஷயங்களை அவன் செய்தபொழுது,தேனு கூச்சத்தில் ,உடல் நடுங்க,இப்பொழுது ஆச்சர்யபடுவது ரிஷியின் முறையானது..அவள் அன்று ஜுரவேகத்தில் உலறியவை அவன் காதுகளில் ஒலிக்க..திகைப்படைந்தான் அவன்.  இந்த பெண்ணிர்க்கு மருத்துவ உதவி அவசியம் என எண்ணியவனாக, அவளையும் அழைத்துக்கொண்டு,மும்பை பிரயாண த்திர்க்கு ஆயத்தமானான்.  போகும் பொழுது பறந்த அவனது மகிழுந்து இப்பொழுது,அவளால் சிறு குலுங்களையும் தாங்கமுடியாது என உணர்ந்ததாய் ஊர்ந்தது.

திரும்பி வரும்பொழுதும், அவனை காண நேர்ந்த சாரதா ,தனது பொறுப்புக்களை உடன் பணிபுரிவோரிடம் கொடுத்துவிட்டு ,அவனது வாகனத்தை பின்தொடர, மருத்துவமனையை நெருங்கும்ஸமயம்,சாரதாவிர்க்கு அழைப்பு ,சாரதாவிர்க்கு.. அமைச்சரை உடனடியாக சந்திக்குமாறு...அவளது வாகனம், யு டர்ன் எடுத்து செல்வதை கண்ணாடி வழியே கண்ட ரிஷியின் முகத்தில் சிரிப்பு... விஜயனின் மனைவி தன்னை கண்காணிப்பதை ரிஷி கொஞ்சமும் விரும்பவில்லை என்பதே உண்மை..

 இந்த முறை தப்பித்துவிட்டான்.  ஆனால், அவன் மீது நன் மதிப்பு வைத்துள்ள சாரதாவால் ,அவனை சிறிதும் தவறாக எண்ணமுடியவில்லையே!

முன்னாவை  வரவழைக்க நினைத்த ரிஷி சட்டென தான் முடிவை மாற்றிக்கொண்டான். தானே அந்தப் பெண் குணமாகும்வரை அவளைப் பேணுவது என முடிவெடுத்தவனாக சங்கரை அணுகினான் ரிஷி.

ரிஷியின் மனக்குமுறல்கள் அடங்கும் எனும் நம்பிக்கையுடன்,

உங்களுடன் பயணம் செய்யும்,

தோழி சுகீ.

 

This post was modified 4 months ago by Nithya Karthigan

சுகீ


ReplyQuote

V. Buvaneswari Velauthem
(@buvaneswari)
New Member Registered
Joined: 7 months ago
Posts: 3
11/10/2019 12:07 pm  

Please upload lengthy  as soon as possible


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 8 months ago
Posts: 113
11/10/2019 4:58 pm  

@buvaneswari

sure ma

சுகீ


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 8 months ago
Posts: 113
12/10/2019 12:02 pm  

தோழமைகளே! இதோ அடுத்த அத்யாயத்துடன் வந்துவிட்டேன்...கொஞ்சம் நேரம் கிடைத்தது..படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் 😍 😍 

அத்யாயம் 16

 

“உலக அளவில் விபசார தொழிலில் இந்திய மதிப்பில் 12.45 லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. விபசாரத்தில் அதிக பணம் புழங்கும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. உலக விபசார வருவாயில் 40 சதவீதத்தை சீனா பெறுகிறது. அடுத்த இடத்தில் ஸ்பெயினும், ஜப்பானும் உள்ளன. இந்தியா இந்தப் பட்டியலில் 7–வது இடத்தில் இருக்கிறது. இங்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குவதாக கணிக்கப்படுகிறது. கணக்கில் வராமல் இன்னும் பல மடங்கு தொகை ரகசிய பரிமாற்றத்தில் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. வல்லரசான அமெரிக்கா இந்த பட்டியலில் 5–ம் இடத்தில் இருக் கிறது.

 பிரான்சில் சராசரியாக 207 டாலர்கள் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. மெக்சிகோவில் மணிக்கு 50 டாலர் என்ற வீதத்தில் வசூலிக்கிறார்கள். அமெரிக்காவில் தெருவோர விபசாரிகள் 50 டாலர் விலைக்கு கிடைக்கிறார்களாம். இந்தியாவில் 100 ரூபாய் முதல் பல லட்சம் மதிப்பில் விலை நிர்ணயிக்கிறார்கள்.”

 

சொல்லுடா...அந்தப் பொண்ணு இப்படி ஆனதுக்கு நீதானே காரணம்? ஜுரம் வந்ததே உன்னோட உச்சகட்ட வன்முறையாலத்தானே? 

மௌனமே தனது தாய்மொழியென அமர்ந்து தன் கைகளை தலைக்கு அண்டை கொடுத்து ,தலை குனிந்து ,ரிஷியை இவ்வாறு காண ஷங்கருக்குமே தொண்டை அடைத்தது.  அவன் ஆளுமையில் ,ஆண்மையும் கம்பீரமான தோற்றத்தில், நேர்மையில்,மனோதிடத்தில் ,தெளிவில் ,ஷங்கர் ரிஷியை தனது நண்பனாக கொண்டுள்ளோம் என கர்வம்கொண்டுள்ளான்...இன்று  ..,தான் செய்தது என்ன என்று சரியாகப் புரியாமல்,கலவரத்தில்  அதே ரிஷி.

சரி ரிஷி..உன்னோட டிவோர்ஸ் கேஸ் எப்ப முடியுது?

நிமிர்ந்து பார்த்த ரிஷியின் முகம், இறுக்கத்தை ஏற்றுக்கொண்டது.

இன்னும் பதினஞ்சு நாள்ல முடியுது.. அவன் வேற்றுப்பார்வை மனதில் பிசைய..

ஓஹோ...அப்ப அதோட பிரதிபலிப்புதான் இந்த பொண்ணா?

ஷங்கர்..பிளீஸ் ..புரிஞ்சுக்கோ..என்ன நடந்ததுன்னே என்னால அண்டர்ஸ்டாண்ட் பன்னிக்க முடியல..அந்த சமயம்... ப்ச்ச..எப்படிபுரிவைப்பேன் ..அவள் நிலான்னு நினைச்சேன்...இன்னொருபக்கம்..நா,மட்டும் எதுக்கு ராமனா இருக்கணும்னு தோணிச்சு..சத்தியமா ..எனக்கு புரியலடா..ரொம்ப குழப்பமா ,கலவையா இருக்கு.

இப்ப அந்த பொண்ணு கண்டிஷன் என்ன ஷங்கர்?

ம்ஹூம்..வந்து பாத்த லேடி டாக்டர் பயந்து போயிட்டாங்க. உயிருக்கு பயமில்லை..ஆனாலும்..யார் இப்படி பண்ணதுன்னு என்ன குடையிறாங்க ,,இது வரை நானே உன்னை போலீஸ்ல சொல்லிடலாம்னு நினைச்சிருக்கேன்...பட் ,வந்த பொண்ணுங்க ஒப்புக்கல.இதெல்லாம் எங்க லைஃப் ல சகஜம்ணுட்டு நடைய கட்டிட்டாங்க...இவ நிலை வெரி கிரிடிகல்..  அண்ட் உன்கிட்ட இன்னுமும் பேசணும்..அதுவும் பெர்சனல் விஷயங்கள்..ஐ ஹோப் யு வில் அண்டர்ஸ்டாண்ட் ... பட் நாட் ஹியர்..வி வில் மீட் டுடே ஈவினிங் இன் மை பிளேஸ்...இப்போ...நீ வீட்டுக்கு போறதுன்னா போயிட்டு வா..

அந்த பொண்ணு பேரு?....ஏதோ சொன்னீயே ? என்று ரிஷியை ஆழம் பார்த்தான் ஷங்கர்..அவன் ஊகித்தவாறே..நீண்ட யோசனைக்குப்பின் ..அவ பேரு தேனுன்னு சொன்னதா ஞாபகம்..நா வீட்டுக்குபோய்ட்டு ஒன் ஹவர் ல வரேன்.. எமெர்ஜென்சிண்ணா கால் பண்ணு..என்றவாறே..கிளம்பினான் ரிஷி.

ஷங்கர் நினைத்தவாறே ,தன்னையும் அறியாமல் பெண்களை படுக்கையறை வக்ரங்களில் துன்புறுத்தி சுகம் கண்டிருந்தான் ரிஷி. கண் விழித்தாலும்,மருந்துகளின் வீர்யத்தால் வலி தெரியாமல்,அரை மயக்க நிலையில் தேனு .. அவளால் ரிஷி பற்றி கணிக்க முடியவில்லை..இவன் யார்?தி க்ரேட் ரிஷி என்றான்..எனில் என்னவாக இருக்கிறான்? தான் இவனை முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம்? இவன் தன்னை இவ்வாறு கையாள காரணம்? யார் மீதோ கோவம் என்றானே...என அவள் ஆழ்மனம் முழுதும் ரிஷியின் சிந்தனைகள் ...புருவ சுளிப்புடன்,நெற்றியில் சுருக்கங்களைக் கண்ட ஷங்கர் இவற்றை மனதில் இருத்திக்கொண்டான்.

தனது அவசர வேலைகளை முடித்துக்கொண்டு,மடிக்கணினியுடன் தேனுவின் அறையின் ஒரு ஓரத்தில், அட்டெண்டர் இருக்கையில் அமர்ந்து வேலை செய்துக்கொண்டு தேனுவின் இருப்பையும் கவனித்தவாறே அமர்ந்திருந்த ரிஷியின் தோற்றம்,தேனுவின் மனதில்,பயமேனும் புயலையும், ஆச்சர்யமேனும் ஆழியையும் ஒருங்கே அவள் மனதில் தோன்றச்செய்தது.

அவளின் நிலையை அறிந்தவனாக..சாரி ,தேனு....உன்னோட வலி எனக்கு புரியுது..பட்,என்னோட நிலைதான் எனக்குப் புரியல..உனக்கு நா இங்க ஸ்டே பண்ணுறது கஷ்டமா இருந்தா..பிளீஸ் ..பொறுத்துக்கோ..இப்ப நீ இருக்குற நிலையுல,புதுசா யாரையும் உன்னை கவனிக்க அனுமதிக்க இயலாது..புரிஞ்சுகோ ...என்றுவிட்டு அழுத்தமாய் அமர்ந்துகொண்டவனைக் கண்டு தேனுதான் அயர்ந்துபோனாள்.

நான் ,தவறு செய்யவில்லை என அவன் வாதாடவில்லை...தான் செய்த தவறுகளின் விடைகளை சரிசெய்ய முயல்கிறான்...இந்த நிலையில் என்னை கைகழுவாமல் ...என்னோடு இங்கு அமர்ந்திருக்கிறான்.  ஹாஸ்பிடலின் உட்புறங்களை ஆராய்ந்த தேனுவிர்க்கு நிச்சயம் புரிந்தது...இது ஏழைகளோ,மத்திய வர்கத்தை சேர்ந்தவர்களோ வரக்கூடிய இடமன்று ..அப்படியெனில்,இவன் சமூகத்தின் உயர் அந்தஸ்த்தில் இருப்பவன்.  பின்னர்,இங்கு இவன் அமர்ந்திருப்பதின் அர்த்தமென்ன? எதுவும் கேட்பதில் பயனில்லை என்பது புரிந்ததால் மௌனியானாள்.

தன் இருப்பிடத்திற்க்கு திரும்ப செல்லாமல் இப்படியே இருக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.இந்தக்ஷணம் இவுலகிலிருந்து விடுதலை கிடைத்தால் ..நான் நிச்சயம் புண்ணியம் செய்தவளே என்று அவள் மனம் அழுதது.

ஓகே ,தேனு..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ..போயிட்டு..ஒரு டூ ஹவர்ஸ்ல வரேன்..உனக்கு ஏதாவது வேணுமா?  கண்ணீருக்கு இடையே வேண்டாமென தலையசைத்த தேனுவை குனிந்த தலையுடன் கண்டுவிட்டு சென்றான் ரிஷி.

ரிஷியிடமிருந்து எவ்வளவு கரக்கலாம் என்று தன் நண்பர்களுடன் மிழற்றிக்கொண்டிருந்தாள் நிலா...கண்டிப்பார் யாருமற்ற நிலையில்..அவளது பணத்தில் ,ராஜ போகங்களை ஒரு கூட்டமே அனுபவித்தது....தங்களுக்கும் அனுபவிக்க பணம் தாராளமாக கிடைக்கும் என்ற நிலையில்,அவளுக்கு புதுப்புது துர் உபதேசங்கள் இலவசமாகவே கிடைத்தது..இதை உணர்ந்துதானே,செல்வா சொத்துக்களின் கடிவாளத்தை ரிஷியிடம் கொடுத்தார்.ரிஷியிடமிருந்து அவன் சொந்த சொத்துக்களில் ஏதும் கிடைக்காது..அதை அவன் என்றும் அனுமதிக்க மாட்டான் என்று அந்த மடாக்குடி மடையர்களுக்கு தெரியவில்லை!  ரிஷி தனது சொத்துக்களை கையாள்வது நிலாவிர்க்குள் வெப்பத்தை ஏற்றி விட்டது..அவளுக்கு இன்னும் நிதர்சனம் புரியவில்லை...

ரிஷி கிளம்பியதை ஊர்ஜிதப் படுத்தியபின்னர்,ஷங்கர் தேனுவின் அறைக்குள் வந்தான்..மருத்துவனாக அவனுக்கு தேனுவின் மீது எல்லையற்ற கருணை இருந்தது..அவளருகே, அமர்ந்து, மெல்லிய குரலில் கேட்டான்...

தேனு,நீங்க...உங்க தொழில்....******?

ஆமாம் டாக்டர்....நா அந்த தொழிலில் இருக்குறவதான்,,,

இட்ஸ் ஓகே ...ரிஷி அன்னிக்கி உங்ககிட்ட எப்படி நடந்துகிட்டான்னு எனக்கு சொல்ல முடியுமா?  பிளீஸ்..என்ன தவறா நினைக்காதீங்க...!

ஒரு டோக்டரா இத தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு...

யெஸ் டாக்டர்..ஐ அக்ரீ...  அவர் ரொம்பவே முரட்டுத்தனமா இருந்தாரு...பெண்களை பிடிக்காதோன்னு நினைச்சேன்...பட் ..அவர் உணர்வுகள் காமத்தை வெளிப் படுத்தல...  அதேசமயம்,என் வாழ்நாள் முடிஞ்சுதோன்னு சந்தோஷமா இருந்தது...  அவள் வார்த்தைகளின் உள்ளிருந்த வலி ஷங்கரின் மனதை வெகுவாய் அதிரச் செய்தது..

தென்...ரிஷி மேல கம்ப்ளைண்ட் பண்ண விரும்புறியா தேனு... நா ஹெல்ப் பண்ணுறேன்...  வார்த்தைகளின் வலி அவன் கண்களில் தெரிந்ததோ?

நோ சர்...நா இருக்குற தொழிலுக்கு,போலீஸ் உதவாது...அப்படி நா போலீஸ் கிட்ட போனா..எனக்கு வேற சிக்கல்கள் வரலாமே தவிர நிச்சயம் விடிவு இல்ல..  அண்ட் ரிஷி மறுநாளேந்து எங்க்கிட்ட நடந்த முறை...நோ வே ..அவர் தப்பிச்சு ஓட நினைக்கல ..ஸோ .. அவருக்கு வேற எதுவும் பிரச்சனைகள் இருக்கலாம்....  அவளது மிகத் தெளிவான உரையாடல் அவள்மீது மதிப்பு வரச் செய்ய...நீ படிச்சிருக்கியா...குரல் வேறுபாட்டில் நிமிர்ந்து பார்த்த தேனு.. ஏன் சர்.. வேலை தரப் போறீங்களா?  என்று எள்ளினாலும்..அவனுக்கான பதிலை தரவே செய்தாள்.

யெஸ் டாக்டர்.. நா பி.காம் மெடலிஸ்ட் ..விதி என்ன இந்த சாக்கடியில தள்ளிடுச்சு..ஓகே சர். ஐ நீட் ரெஸ்ட்.. என்றுவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்..அவளது குமுறல்கள் கண்ணீராய் விழ நிலை புரிந்தவனாய் கிளம்பினான் ரிஷியை சந்திக்க.. காரில் செல்லும்பொழுது அவன் மனம் தேனுவிர்க்காக போராடியது..இவ்வளவு நடந்தாலும் இந்த பெண்கள் போலீசை அணுக முடியாதா?  அவர்கள் வாழ்க்கையில் விடிவே இல்லையா...இந்த கேள்விகள் விடை தெரியாமலே..பல மைல்கள் கடந்து வந்துவிட்டதே!  படித்த பெண் எதற்க்கு இந்த தொழிலுக்குள் வந்தாள்?  அவளுக்கு என்ன ஆனது..என்றெல்லாம் அவன் மனம் யோசனைகளில் பிரயானித்தது.

ரிஷி..ஷங்கரின் பங்களாவில் ,அவனுக்காய் காத்திருந்தான்...

மீண்டும் சந்திப்போம்!

உங்கள் தோழி,

சுகீ.

சுகீ


ReplyQuote



V. Buvaneswari Velauthem
(@buvaneswari)
New Member Registered
Joined: 7 months ago
Posts: 3
13/10/2019 11:38 am  

@subageetha

Thank you sister. Please upload soon. Story is going very slow. Need tragedy and twist


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 8 months ago
Posts: 113
19/10/2019 5:08 pm  

@buvaneswari

tragedy and twist? 😀 

சுகீ


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 8 months ago
Posts: 113
19/10/2019 5:16 pm  

இன்னும்    இந்த வாரத்திற்கான பதிவு எழுதவில்லை...இன்று அல்லது நாளைக்குள் எழுத முயல்கிறேன்..காத்திருப்புக்கு நன்றி

sugee

சுகீ


ReplyQuote

Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 8 months ago
Posts: 113
21/10/2019 6:26 pm  

அத்யாயம் 17

 

மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே - படித்தவர் உட்பட - பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது ('பராசக்தி' வசனம்!). மருத்துவப் படிப்பில் மனநோய் பயிற்ச்சி மிகக் குறைவே. தமிழ் இலக்கியங்களிலும் புனை கதைகளிலும் கூட மனக்கோளாறுகள் உள்ள கதை மாந்தர்களைக் காண முடியாது! படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். மனக்கோளாறுகள் என்றால் என்ன என்பது பற்றி அறிவியல் பூர்வமான சில அடிப்படைத் தகவல்களை அளிப்பதே இப்பகிர்வின்  நோக்கம்.

காரணங்கள்

  • உடற்கோளாறுகள் / உடல் நோய்கள் நேரடியாக கண்ணுக்குத் தெரிபவை; மனக்கோளாறுகள் உளம் சார்ந்தவை, பெரும்பாலும் நோய் முதிர்வடையும் வரை கண்ணுக்குத் தெரிவதில்லை. கால் உடைந்து கட்டுப் போட்டுக்கொண்டிருப்பவனுக்கு காட்டப்படும் அனுதாபமும் கரிசனையும் மனச்சோர்வினால் துயரத்தில் ஆழ்ந்திருப்பவனுக்கு கிடைப்பதில்லை.
  • பொதுவாக, மனக்கோளாறுகள் உண்மையானவை என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அவை மன பவீனத்தினாலும், ஆளுமை குறைபாட்டினாலும் உண்டாகின்றன என்பது பலரின் கருத்தாக இருக்கிறது; தானாக வலுவில் உருவாக்கிக் கொள்ளப்பட்டவை என்ற அபிப்பிராயமும் உண்டு. “என்ன செய்றது? சரிதான், வேலையைப் பாக்க வேண்டியதுதான்" என்று மனக்கோளாறை 'இயல்புபடுத்தும்' ஒரு மனப்பாங்கு காணப்படுகிறது.
  • மனக்கோளாறுகளைக் கொச்சைப் படுத்துவதும், எள்ளி நகையாடுவதும் எமக்கு ஒரு பொழுதுபோக்கு (தமிழ்ப் படங்களில் மனநோய்கள் சித்தரிக்கப்படுவதை காண்க). 'பைத்தியம்'. 'கிறுக்கு', 'லூசு', 'மென்டல்' என்று பல 'செந்தமிழ்' சொற்களால் வர்ணனை செய்யயும் பாரம்பரியம் நமக்குண்டு.
  • மனநோயாளர் காரணமில்லாமல் வன்முறையில் ஈடுபடுபவர்கள், கொலைகாரர்கள் என்ற அச்சம் பலரிடையே உண்டு. உண்மையில் மனக்கோளாறுகள் உள்ளவர்களில் மிக மிகச் சிலரே ஆக்ரோஷமாக நடந்துகொள்கிரார்கள்.

மனநோய் என்றால் என்ன

மனதில் ஏற்படும் பிறழ்வுகளை என்ன பெயரிட்டு அழைப்பது என்பதில் பல சங்கடங்கள் உள்ளன. எல்லா மனப் பிறழ்வுகளும் மனநோய்கள் அல்ல. நோய் என்ற சொல்லுக்கு அறிவியல் சார்ந்த மருத்துவ ரீதியிலான வரையறை ஒன்றுண்டு. நோய் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம்/ காரணங்களை அறிந்தாக வேண்டும். உடல் உறுப்பில் நோயின் பாதிப்பை உறுதியாக நிரூபிக்க வேண்டும்; வெவ்வேறு நோய்க்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்க வேண்டும். ஒரு நோய் ஏற்பட்ட பின் அது எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று அனுமானிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இந்த விதிகளுக்கு ஏற்றதாய் இருந்தால் மட்டுமே நோய் என்ற பதத்தை பாவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மன 'நோய்'களைப் பொறுத்தவரை, இதுவரை அதன் காரணங்கள் தெளிவுற கண்டுபிடிக்கப்படவிலை. ஒவ்வொரு நோயுக்கும் வெவ்வேறான காரணங்கள் உண்டு என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக, அதே மரபணுகள் வெவ்வேறு மனநோய்களை தோற்றுவிக்கின்றன

(மறதிநோயைத் தவிர்த்து) மூளையில் ஏற்பட்டும் பாதிப்புகள் ஐயத்துக்கிடமின்றி எடுத்துக்காட்டப்பட வில்லை! சில 'மனநோய்'களில் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மன"நோய்') மூளையில் மின் தூண்டல் கடத்திகள் (neuro-transmitters) போன்ற வேதிப்பொருள்கள் ஏற்படுத்தும் மாற்றங்களே காரணம் என்பதற்கு மறைமுக ஆதாரங்கள் மட்டுமே உள்ளன.

மனநோய் என்று அழைப்பதைவிட 'மனக்கோளாறுகள்', மனப்பிறழ்வுகள்', 'மனச் சீர்குலைவுகள்' என்ற பதங்கள் பொருத்தம்மானவை என்பது பொதுவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்து. இதனால்தான், உலகளவில் DSM 5 வட அமெரிக்காவிலும், ICD 10 [4] என ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்படும் நோய் வகைபாடு முறைமைகளில் mental disorders என்ற சொற் பிரயோகம் பாவனயில் உள்ளது.

மூளையின் உயர் செயல்பாடுகளான உணர்தல், சிந்தித்தல், நினைவுத்திறன் (memory), நடத்தை ஆகியவை குறிப்பிடும் படி சீர்குலைந்தும், அதனால் அன்றாட செயல்திறன் குறைவடையவும் போதும், அதை மனக்கோளாறு என்று அழைக்கிறோம்.

மனக்கோளாறுகளை இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக் கொள்வதும் மனக்கோறுகள் பற்றிய தெளிவின்மைக்கு ஒரு காரணம்.

  1. கடுமையான மனக்கோளாறுகள் (severe and enduring mental disorders; severe mental illnesses): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையில் தீவிர தாக்கத்தை உண்டாக்கும், நீண்டகாலம் நீடிக்கும் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மனக்கோளாறு). இந்த வகையான மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை அப்போதைக்கு சீர்குலைந்து, அகத்துக்கும் புறத்துக்கும் உள்ள வித்தியாசம் அற்றுப் போய், நடத்தை தாறுமாறாகவும் சமுதாய வழமைகளுக்கு மாறுபட்டதாகவும் காணப்படும். இவற்றை, பொது மொழியில், உளப் பிறழ்வுகள் (psychoses) என்று அழைக்கப் படுகின்றன.
  2. பொதுவான மனக்கோளாறுகள் (common mental disorders): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையை பெரும்பாலும் சீர்குலைப்பதில்லை (எ-டு, மனப் பதற்றம் (anxiety), மனச்சோர்வு (depression)), பீதி (panic disorder), அதிர்ச்சியைத் தொடரும் மனஅழுத்தப் பிறழ்வு (post traumatic stress disorder), உள வழி உடல் பாதிப்பு (somatoform disorders), நிலைமாற்றப் பிறழ்வு (conversion disorder/hysteria).

மேலே கூறப்பட்ட மனக்கோளாறுகளுக்கப்பால் வேறு பல மனக்கோளாறுகளும் உண்டு. இவைகளில் பின்வருவன முக்கியமானவை:

  • மறதினோய் (dementia). இதில் அல்செய்மர் நோய் (Alzheimer's disease) முக்கியமானது
  • தவறான மது பாவனை (alcohol abuse)
  • போதைப் பழக்கம் (drug abuse),
  • உளம் சார்ந்த பாலுறவுக் கோளாறுகள் (psycho sexual disorders).
  • மனவளர்ச்சிக் குறைபாடும் (intelluctual disability/mental retardation) ஆர்டிசம் (autism) ஆகிய இரண்டும் மனக்கோளாறுகள் அல்ல; அவை வளர்ச்சிக் கோளாறுகள் (developmental disorders).

  ரிஷியை பற்றி எழுதும்பொழுது ,ஓரளவிர்க்கு இது பற்றி தெரிந்திருத்தல் அவசியம் என நினைத்ததால் இது பற்றிய சில கட்டுரைகளை படிக்க நேர்ந்தது..அவற்றில் ஒரு சிறு பகுதியை பகிர்ந்துகொள்ளுதல் ரிஷியின் நிலையை உங்களுக்கு புரிய வைக்கும் என நம்புகிறேன்! இந்த கதையை முழுக்க முழுக்க சமூகம் சார்ந்த கதையாய் எழுத விரும்புகிறேன்.நம்மை சுற்றி நிகழும் அவலங்களை பற்றி நாம் நிறைய சிந்தித்து வந்திருபோம்..அது போன்ற சிந்தனையின் அடிப்படை இந்தக் கதை.உங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் என்னுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்...பிழைகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு .இந்தவார தளத்தில் பயணிப்போம்.

ரிஷியை கண்டவுடன் தன்னையும் அறியாமல் பூத்த மென்னகையுடன்..தன்னை வெகுவாக கட்டுப்படுத்தியபடி ,ரிஷி..கொஞ்சம் வைட் பண்ணு...வந்துடறேன் என்றவாறே..தன் அறைக்குள் நுழைந்துகொண்டான்...குளியலில் தன்மீது விழுந்த நீர்த்துளிகளை இன்று ஷங்கரால் ரசிக்க இயலவில்லை.  ரிஷி ,தான் கூறும் விஷயங்களை எவ்வாறு எடுத்துக்கொள்ளப் போகிறான் எனும் குழப்பம் அவனை ஆக்டோபஸை போல பற்றியிருந்தது. ஒருவழியாக வேறேதும் வழி இல்லை என ,புரிந்தவனாக,இரவு உடையில் ,கையில் எலுமிச்சை சாறுடன்,தன் நண்பனைக் காண விரைந்தான் .

ஷங்கர் உள்நுழைந்ததிலிருந்தே,அவனையே கவனித்து அமர்ந்திருந்த ரிஷிக்கு,அவன் கூறப் போவது,தேனு மற்றும் தன்னை சம்மந்த படுத்தியதாக இருக்கும் என்ற ஊகம் இருந்தது..எதற்க்கும் தயார் நிலையில் அவன் மனம் .  இத்துணை கவனிக்காவிட்டால் ,நான் எப்படி இவ்வளவு பெரிய நிலையில் இருப்பேன்? என்று மனதின் ஒரு பகுதியும்,  அப்படியா? பின்னர் நிலாவிடம் கோட்டை விட்டது ஏன் என்று மனதின் இன்னொரு பகுதியும் வாதிட்டது .இரண்டுக்குமே அவனால் பதில் கொடுக்க முடியவில்லை..அமைதியாக அமர்வதே நிம்மதி என புரிந்தவனாக அமைதி காத்தான்.

ஷங்கர் இவனுடன்,மொட்டை மாடிக்கு போலாம் ,வரியா ரிஷி? என்று அழைக்க ,இருவரும் அங்கே சென்று ஊஞ்சலில் அமர்ந்து ,ஜூஸை பருகியவாறே,சிந்தனையில் ஆழ்ந்தனர்..

ரிஷி,நா சொல்ல வரது ரொம்ப சென்ஸிட்டிவ் விஷயம்..ரொம்ப நாளா ,பேசாம விட்டது ரொம்ப தப்பு..

புரியுது ஷங்கர்.. பதிலில் சற்று நிதானித்த ஷங்கர்,  ரொம்ப நல்லது ரிஷி...இதுக்குமேல தாமதிக்க முடியாது..நீ உடனடியா,ஒரு சைக்காலஜிஸ்ட் ஹெல்ப் தேடணும்..உனக்கு விருப்பம்னா..நம்ம ஹோஸ்பீட்டல்ல பாக்கலாம்...இல்ல..வேற யாரையும் நா சஜெஸ்ட் பண்ணுறேன்...

ரிஷியிடம் ,எந்த பதிலும் இல்லை...ஷங்கர் முகத்திலும் வெறுமை படர்ந்தது..

தன் நிலை இவ்வளவு தாழ்ந்து விட்டதா? ஓர் பெண்ணால் என் வாழ்வு இப்படி சிதிலமைடைந்துவிட்டதா? நான் மனநோயாளியா? என்று கழிவிரக்கத்தில் சுழன்ற நண்பனின் நிலை ஷங்கருக்குப் புரியாமல் இல்லை...வேறு வழி இல்லையே..இதுவும் ரண சிகிச்சையே!

டேய்!  நீ இதுவரைக்கும்  விலைமாதர்களை  வரவழைச்சு செஞ்ச கொடுமை...அப்பவே நா யோசிச்சேன்..பட் ..எப்படி ஆரம்பிக்கணும்..எத கொண்டு சிகிச்சய தீர்மானிக்கணும்னு யோசிக்க டைம் தேவைபட்டது..இப்போ..இந்த பொண்ணுகிட்ட நீ நடந்துக்கிட்டது.. வக்ரத்தோட உச்சம்..இன்னும் சொல்லணும்னா..உனக்குத் தெரியாமையே நீ கொலை முயற்ச்சில இறங்கி இருக்க...அவ நிலா இல்லனு உனக்கு புரியல..சோ... அம் ரியலி அஃப்ரைட்... நிலா உன்கைல சிக்கி இருந்தா?  உன்னை கொலைக்காரனா பாக்க என்னால முடியாது...நீ மனசு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கற்து வெளியில யாருக்கும் தெரியக் கூடாது ..அது நிச்சயம் உன் பிசினேஸ்ஸ பாதிக்கும்...நிறைய சிக்கல்கள்....நீ சீக்கிரம் டிசைட் பண்ணுடா...பிளீஸ்!

அதுமட்டுமில்லாம..இன்னும் பத்து பதினஞ்சுநாள்ள நீ கோர்ட்டுக்கு போகணும்..அனேகமா..இந்தமுறை டிசைட் ஆகிடும்...ஸோ ..பிளீஸ்..அதுக்கும் முன்னால டாக்டரா பாக்கணும்னு நினைக்கிறேன்..டா...உனக்கு இப்போ கண்டிப்பா சப்போர்ட் தேவைங்கர்து என்னோட ஒபீனியன் ..இதுவரைக்கும் எந்த பொண்ணும் உன்மேல கம்ப்ளைண்ட் பண்ணல..ஆனா அதயே எப்பவும் எதிர்பாக்கவும் முடியாது!

இத்தனைக்கும் பிறகு ,ரிஷியிடமிருந்து வந்த ஒரே கேள்வி..தேனுவ எப்ப வீட்டுக்கு கூட்டி போகலாம்?என்பதே..

நோ ரிஷி,அவள உன்னோட நீ இருக்குற நிலைல அனுப்ப நா ஒத்துக்க முடியாது!  ஒண்ணு அவ கொஞ்சநாள் இப்படியே இருக்கட்டும்...ரெகவர் ஆனபிறகு ,அவளோட இடத்துக்கு அனுப்புறேன்..இல்லன்னாலும்..முன்னா நம்பர் வாங்கி அவங்கிட்ட அனுப்புறேன்...எனக்கு உன்னோட அனுப்ப பயமா இருக்கு ரிஷி!

இல்லடா,அவ உன் ஆஸ்பிடல இருக்கட்டும்...நா டெய்லி வந்து பாக்குறேன்.இந்த நிலைல அவள முன்னாகிட்ட அனுப்புறது சேஃப் இல்ல! 

உன்னோடு அனுப்புவது மட்டும் என்று கேட்ட ஷங்கரின் கண்கள்!

தலை குனிந்தவாறே ஓகே டா..நா கிளம்புறேன்.அவ வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பா..யென கிளம்பிய ரிஷியை விசித்திரமாக கண்டான் ஷங்கர்.

நிலா ,கொழுத்த பணத்தை ஜீவனாம்ஸமாக கரக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்... அதே சமயம் ,ரிஷி அவளது நடத்தை தொடர்பான ஆதரங்களை சேகரித்துவிட்டிருந்தான்!  அவளுக்கு மனைவி எனும் அங்கீகாரத்தை ஜீவனாம்சம் மூலம் வழங்கவும் அவனுக்கு உடன்பாடில்லை .

தேனுவின் அக்காவிற்க்கு இது நான்காம் மாதம்...வீடு முழுமையும் அவளைத்தாங்க..மசக்கையுடன்,தங்கையை நினைத்தும் சோர்வுற்று காணப்படும் மதிக்கு ஒரு வாரமாய் மனது வேகமாய் கலவரத்தில்...தேனுவிர்க்கு நிகழ்ந்த கொடுமைகள்..எப்பொழுதும் அவளையே நினைக்கும் மதிக்கு அடி மனதில் கிலியை ஏற்படுத்தியதில் ஆச்சர்யம் இல்லை...குழந்தைக்கும் தங்கைக்குமாக சேர்ந்து சோர்ந்து துடித்தது அவளது தாய்மை உணர்வு.

தேனு எழவே ஒருவாரத்திர்க்கும் மேலாகும்..என்றுவிட்டான் ஷங்கர்.  அதுவரை அவளைப் பற்றி விசாரிக்காமல் இருக்க முன்னாவிர்க்கு கொழுத்த பணத்தையும்,அவளை பற்றி துருவினால் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும் என்றும் ரிஷியின் தரப்பிலிருந்து மறைமுகமாக மிரட்டல் விடுக்கப் பட..முன்னா மட்டுமே அறிந்த ரகசியம் தேனு ரிஷியுடன் என்பது...  ரிஷி இப்பொழுதெல்லாம் மனசாட்சி சொல்வதை கேட்பதில்லையே!!

வேத நாயகம் மற்றும் செல்வபதி இரு குடும்பமும் ரிஷி நிலா வழக்கை நினைத்து துடிக்கிறது...  சிக்கல்கள் சீராகும்வரை நாமும் பொறுத்திருப்போம்.!!

உங்கள் தோழி

சுகீ.

சுகீ


Page 5 / 10

Share: