Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

உயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel  

Page 1 / 6
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 573
14/11/2019 5:09 pm  

உயிரே ஏன் பிரிந்தாய் Tamil novel by our new writer Suthi... 🙂

This topic was modified 8 months ago by Nithya Karthigan

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
19/11/2019 8:45 am  

அத்தியாயம்-1

சுவாதி

உலகில் உள்ள இருளை நீக்கி ஆதவன் தன்னுடைய பணியை ஆரம்பிக்க ஆயத்தமாகும் அதிகாலை வேலையில் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்க,நம் நாயகி சுவாதி அயர்வாக அமர்ந்திருந்தால். இரவு முழுவதும் பயணம் செய்த கலைப்புடனும் அழுது வீங்கிய முகத்துடனும் இருந்தவளின் அருகில் கண்டைக்டர் வந்தவுடன் திருச்சிக்கு டிக்கெட் எடுத்தவள் சீட்டின் பின் பக்கமாக சாய்ந்தாள்.இனி தன் வாழ்வில் தனிமைக்கு மட்டும்தான் இடம் இருக்க போகிறதா என்று எண்ணும்போதே நான் இருக்கிறேன், என்றது அவளின் வயிற்று சிசு.

தன்னுடைய வயிற்றை தடவியவள் குழந்தையை நினைத்து மனதை தேற்றிக்கொண்ட வேலையில் அவனின் நினைவும் அழையா விருந்தாளியாக வந்தது. அவனின் நினைவு வரும் பொழுது, தான் கோபமாக உணர்கிறோமா, இல்லை தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்துகிறோமா என்று அவளுக்கே தெரியவில்லை. தூங்க எண்ணி கண்ணை மூடியவள் பழைய நினைவுகளின் தாக்கத்தால் தூங்காமல் வேடிக்கை பார்க்க துவங்கினாள்.

திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கியவள். தன் தோழி கீதாவின் வீட்டுக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்தாள். கீதாவை பற்றி நினைக்கையில் எப்போதும் தோன்றும் புன்னகை இன்றும் அவள் இதழ்களில்,கீதாவும் சுவாதியும் நெருங்கிய தோழிகள். கீதாவின் அப்பா ராகவன் மத்திய அரசு ஊழியர் அம்மா வள்ளி வீட்டு நிர்வாகி வேலை காரணமாக நாகப்பட்டினம் வந்தார்கள். சுவாதி சொந்த ஊரே நாகபட்டினம்தான், இருவரும் பக்கத்து வீடு என்பதால் நெருங்கிய தோழி ஆனார்கள்.
சுவாதியின் தந்தை கோவிந்தன் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று குடிக்க ஆரம்பித்தார் இதனால் கோபமுற்ற கோவிந்தனின் தந்தை ராஜீ சொத்துக்கள் அனைத்தையும் கோவிந்தனின் இரட்டை மகள்களான மாலதி சுவாதி இருவருக்கும் சரிசமமாக பிரித்து எழுதியவர், அவர்களின் திருமணம் முடிந்து கணவனுடன் வந்து கையொப்பம் இட்டாள் மட்டுமே சொத்தை விற்க முடியும் என்றும் அதுவரை சொத்தில் வரும் வருமானத்தை அனுபவிக்கலாம் என்றும் எழுதி இறுதியாக சொத்துக்கள் அனைத்துக்கும் மருமகள் லட்சுமியை கார்டியனாகவும் நியமித்தார்.

ராஜீ இறந்து சொத்து விவரம் தெரிந்த பிறகு கோவிந்தனின் கோபம் முழுவதும் மனைவியின் மீதும் மகள்களின் மீதும் பாய்ந்தது. எப்போதும் மகள்களுக்கு சொத்தை பறிக்க வந்தவர்கள் என்ற திட்டு விழும் நான்கு வயதான குழந்தைகளுக்கு என்ன தெரியும், எதற்கு அப்பா திட்டுகிறார் என்று தெரியாமல் முழித்து அதற்காக அடியும் வாங்கிய பின்னர் இருவரையும் கோவிந்தனின் கண்ணில் படாமல் பார்த்துக்கொண்டார் லட்சுமி. இந்த சூழ்நிலையில் தான் கீதாவின் குடும்பம் அவர்களின் பக்கத்து வீட்டுக்கு வந்தனர்.கீதா சுவாதி, மாலதி அனைவரும் ஒரே வயதுடையவர்கள் ஆதலாலும் விரைவிலேயே நட்பாகினர்.

மாலதி எப்போதும் அமைதி லட்சுமியுடனே இருப்பாள். சுவாதியையும் கீதாவையும் அடக்க முடியாமல் பெற்றோர்கள் திண்டாடுவார்கள். இருவரும் என்ன குறும்பு செய்தாலும் படிப்பில் முதலாவதாக இருப்பதால் இவர்கள் செய்யும் குறும்பை கண்டு கொள்ளாமல் இருந்தனர். இப்படியே இவர்களின் நாட்கள் சுதி,கீதுவின் குறும்பு தனத்திலும் மாலதியின் நாட்கள் அம்மாவுடனும் சென்று இதோ தோழிகள் இருவரும் நல்ல மதிப்பெண் பெற்று ஒன்றாக கல்லூரியில் சேர முடிவு செய்யதனர்.
மாலதி படிப்பில் சுமார்தான் என்றாலும் அவளும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்று தேறினாள். அந்த நேரம் கீதுவின் தந்தை ராகவ்கு டெல்லியில் உயர் பதவியோடு டிரான்ஸ்பர் கிடைக்க மனம் இல்லாமல் தோழிகள் இருவரும் பிரிந்தனர்.

தில்லை நகர் ஐந்தாவது கிராஸ் இறங்குங்கள் என்ற கண்டைக்டரின் குரலில் தன்னிலை பெற்ற சுவாதி இறங்கியவள், இவ்வளவு நேரம் இல்லாத பயம் தன்னை சூழ்வதை உணர்ந்தாள். என்ன இது ஏன் எனக்கு இப்படி தோன்றுகிறது என்று யோசித்தவள் இல்லை சுவாதி இது போல் பயம் என்ற உணர்வே உனக்கு இருக்க கூடாது. உன் தாத்தா கூறிய தைரியம் என்ன ஆகிவிட்டது, உன்னை வேண்டாம் என்று யாரும் ஒதுக்கவில்லை நீதான் அவர்களை ஒதுக்கி வந்துள்ளாய் உன் தைரியம் எங்கே போனது, உனக்காக உன் குழந்தை இருக்கிறது என்று தனக்குள் கூறிக் கொண்டவள்.
கீதாவின் வீட்டை அடைந்தாள். கேட்டை திறந்து உள்ள போனவளை வரவேற்றது தோழியின் ஆர்ப்பாட்டமான வரவேற்பு குரல்தான்.

ஹாய் சுதி எப்படி இருக்கிறாய்? அம்மா எப்படி இருக்கிறார்கள்? மாலதி எப்படி இருக்கிறாள்? அப்பா டிரான்ஸ்பர் கிடைத்து டெல்லி சென்ற பிறகு தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

அப்பா ரிட்டையர் ஆகி திருச்சி வந்ததும் உன் பழைய போன் நம்பர்கு டிரை செய்தேன் நல்ல வேளை நீ உன் நம்பரை மாத்தவில்லை. உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் தெரியுமா என்று சுவாதி பேச இடம் தராமல் பேசியவள், என்னடி நான் பாட்டுக்கு பேசி கொண்டிருக்கிறேன் நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய் என்றவளை, முறைத்த சுவாதி எங்க டி நீ பேச விட்ட? என்றாள் கிண்டலாக.
அசடு வழிந்த கீதா கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில், சரி சரி கிண்டல் பண்ணாமல் கேட்டதற்கு பதில் சொல் என்றாள் கெத்தாக.

பேசும் சத்தம் கேட்டு மகள் இன்று யாருடன் வம்பை ஆரம்பித்து இருக்கிறாள் என்று பார்க்க வந்த ராகவ் வாசலில் நிற்கும் சுவாதியை பார்த்து மகிழ்ந்து போனார். ராகவ்கு எப்போதுமே சுவாதி என்றாள் பிடிக்கும் அதற்கு காரணம் அவள் எப்போதும் தைரியமாக இருப்பதுதான். தப்பு என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் முகத்திற்கு நேராக கேட்டு விடுவாள். அதுபோல் பல முறை அவளின் தந்தை திட்டும் போது எதிர்த்து பேசி அடி வாங்கிக்கொண்டு வருபவளை ராகவ்வே பல முறை சமாதானம் பண்ணி வைத்துள்ளார். அப்பாவின் பாசம் என்ன என்பதை ராகவ்தான் சுவாதிக்கு காட்டினார். அதனால் சுவாதி ராகவ்வை அப்பா என்றே கூப்பிடுவாள்.

சுதி செல்லம் என்று ராகவ்வின் குரலில் தோழிகள் இருவரும் திரும்பி பார்த்தனர்.

ராகவ் இருவருக்கும் அருகில் வந்தவர் என்றும் இல்லாத திருநாளாய் மகள் ஆறு மணிக்கு எழுந்து தன்னுடன் பேப்பர் படிக்கிறேன் என்று வம்பிழுத்து கொண்டிருக்கும் போதே நினைத்தேன் என்ன டா இது இன்றைக்கு சூரியன் மேற்கே உதிக்க போகிறாரா என்று, நல்ல வேளை அப்படி எல்லாம் இல்லை என்ற ரீதியில் நீ வந்திருக்கிறாய் நீ வருவதாக முதலிலேயே தெரிந்ததால்தான் சீக்கரம் எழுந்திருக்கிறாள் என்று மகளை கிண்டல் செய்தவர்
என்ன கீது இப்படி வாசலிலேயே பேசி அனுப்பிவிட முடிவு செய்திருக்கிறாயா என்றார். அவளே இவ்வளவு நேரம் பயணம் செய்த கலைப்பில் இருப்பாள் இருவரும் வெளியில் நிற்க வைத்து பேசி கொண்டிருகிறீர்கள் என்று கூறியவாறு வந்தார் வள்ளி.
வா மா சுவாதி என்று வீட்டினுள் மூவரும் நுழைந்தனர். வள்ளி அனைவருக்கும் காபி கொண்டு வந்தார். மூவரும் ஆளுக்கு ஒரு டம்ளர் எடுக்க கீதா பயங்கர யோசனையில் இருந்தாள். கீதாவின் தாய் காபி குடிக்கும் போது என்ன யோசனை என்றார். சுவாதி வருவதை நான் உங்களிடம் சொல்லவே இல்லை ஆனால் நீங்கள் அப்பாவை போல் ஆச்சரியபடவில்லையே என்று கேள்வியாக தாயை பார்க்க அவரோ சிரித்துக் கொண்டே சுவாதி வருவதை என்னிடம் சொல்லவில்லை அது போல் வீட்டு அட்ரஸை நீ சுவாதியிடம் சொல்லவில்லை நேற்று நீ கோவிலுக்கு போகும் போது உன்னுடைய போனை வீட்டிலேயே வைத்து விட்டு போய் விட்டாய் அப்போதுதான் சுவாதி அட்ரஸ் கேட்க போன் செய்தால் நீ இல்லாததால் நான் போன் எடுத்து பேசினேன். என்னிடம் அட்ரஸ் கேட்டு குறித்துக் கொண்டாள். அது மட்டும் இல்லை எத்தனை மணிக்கு என்றாலும் பஸ் ஏறும் போது போன் பண்ண சொன்னேன் போதுமா விளக்கம் என்றார் வள்ளி.

கீதாவோ தாயை பார்த்து வரவர வாய் அதிகமாயிடுச்சி வள்ளி உனக்கு ஒரு கேள்வி கேட்டாள், ஒரு பக்கமாகவா பதில் சொல்வாய் என்றாள். ராகவ்வோ சுவாதி வருவதாக என்னிடம் இருவருமே சொல்லவில்லை முதலிலேயே சொல்லியிருக்கலாம் இல்லயா, நாமே சென்று அழைத்துவந்திருக்கலாம்.
நான் சொன்னேங்க சுதிதான் எதுக்குமா அப்பாக்கு வீண் அலைச்சல் நான் மொழி தெரியாமல் முழிக்கவா போகிறேன் என்று கேட்டுவிட்டு திடீர் என்று வந்தாள் அப்பாக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாதிரி இருக்கும்னு சொல்லிட்டா என்றவர் கோபமாக கீதாவின் பக்கம் திரும்பினார்.

வீட்டிற்கு சுவாதியை வர சொல்லி விட்டு அட்ரஸ் கூட சொல்லவில்லை கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்லை என்று திட்ட ஆரம்பிக்க வெயிட் வள்ளி என்றவள் வேகமாக அவளது அறைக்கு ஓடினால்.
இவள் எங்கு ஓடுகிறாள் என்று புரியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கா, இருக்க இருக்க நீ சின்ன புள்ளைய பெரிய புள்ளைய என்ற வள்ளியின் குரல் கேட்டு வள்ளி என்ன இது என்பது போல் மகளை முறைக்க, கீதா குறும்பாக சிரித்துக் கொண்டே போன முறை என்னை திட்டும் போது என்ன சொன்னீங்க என்றாள் வள்ளியை பார்த்து.
வள்ளி என்ன சொன்னேன், என்பது போல் பார்க்க வயசாகிடுச்சுல அதனால மறந்திருப்பீங்க நானே சொல்றேன். என்னை திட்டி திட்டி ப்ரசர் வர போகுதுனு சொன்னீங்க இல்ல அதனால போன டைம் நீங்க திட்டும் போதே ரெக்கார்டு பண்ணிட்டேன் என்ற மகளை வள்ளி கொலை வெறியோடு பார்க்க ராகவ் மகளை மெச்சுதலாக பார்க்க இதை பார்த்த சுவாதி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கவில்லை என்றாலும் மெல்லிய புன்னகையை தவழ விட்டாள்.
வள்ளி சுவாதியை கவனித்து யோசனையில் ஆழ்ந்தார். சாதாரணமாய் கீதா வள்ளியை கிண்டல் செய்தாள் கீதாவை கிண்டலடித்து கீதா அம்மா தாயே தெரியாமல் சொல்லிவிட்டேன் ஆளைவிடு என்று கூறும் வரை விட மாட்டாள். ஆனால் இன்று ஏதோ யோசனையிலும் மெல்லிய புன்னகையோடும் அமர்ந்திருந்த சுவாதி புதிதாக தெரிந்தாள். ராகவ்வையும் கீதாவையும் பார்த்தார் அவர்களும் சுவாதியை ஆராச்சியாக பார்க்க இதை பற்றி பிறகு பேசலாம் என்று இருவருக்கும் விழியால் கூறினாள்.
கீதாவிடம் சுவாதியை அறைக்கு அழைத்து சென்று முகம் கழுவி வாருங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டே ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார். இவ்வளவு நேரமும் இவர்களிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் மூவரும் தன்னை ஆராய்ச்சியாக பார்த்ததை கவனிக்கவில்லை. கீதாவிடம் வள்ளி சொல்லியவுடன் எழுந்து வந்த கீதா அவளை தொட்டு உளுக்கும் வரை யோசனையிலேயே இருந்தாள்.என்னடி யோசனை எத்தனை முறை கூப்பிடுவது வா போய் ரெபிரஸ் ஆகி வரலாம் என்றவளுடன் அமைதியாக சென்றாள்.

ஒருவழியாக அனைவரும் சாப்பிட வந்து அமர்ந்தனர். ஆனால் அப்போதும் சுவாதி எதுவும் பேசாமல் தீவிர ஆலோசனையில் இருக்க பெரியவர்கள் இருவரும் இவளின் முகம் பார்த்தாள் பிரச்சனை பெரிது என்று தெரிகிறது. இவள் அக்கா அம்மா எங்கே எதற்கும் இதுவரை வாய் திறந்து பதில் சொல்லவில்லை என்ற எண்ணத்துடன் சாப்பட்டு முடித்தார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் வள்ளி அனைத்தையும் எடுத்து வைக்க சுவாதி அவருக்கு உதவினாள். வள்ளி அவளை பயணம் செய்த கலைப்பு நீங்க உறங்க சொல்ல அவளோ பிடிவாதமாக எல்லா வேளையும் செய்தாள், அனைவரும் ஓய்வாக ஹால் சோபாவில் அமர சொல்வதற்க்கான நேரம் வந்ததை உணர்ந்தவள். அனைவரிடமும் சொல்ல தயாரானாள்.

அச்சசோ என்ன சொல்ல போறா........................

 

 

 

 

 

 


ReplyQuoteSuthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
23/11/2019 6:13 am  

அத்தியாயம்-2

                                                      கீதா

       அம்மா அப்பா நீங்கள் வந்ததில் இருந்து ஒரு கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தீர்களே அதற்கான பதில் அம்மா அக்கா இருவருமே உயிருடன் இல்லை.சுவாதியின் குரல் மரத்து எந்த உணர்ச்சியும் காட்டாததாக இருந்தது. தன் வாழ்வில் நடந்த அனைத்து கஷ்டங்களையும் சொன்னவள், கைகளில் முகம் பதித்து அழ ஆரம்பித்தாள். சுவாதி கூறியதை கேட்ட அனைவரும் திகைப்பில் இருந்தனர். அவர்களின் முகத்தை நிமிர்ந்து பார்கும் திறன் அற்றவளாக,தான் கர்ப்பமாக இருப்பதை கூறினாள்,குரலில் சிறு தடுமாற்றத்துடன்.                                    

 

       மூவரும் அதிர்ந்து தன்னை பார்பதை உணர்ந்தவள். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் குழந்தையை பற்றிய விவரங்களை பேசவோ நினைக்கவோ எனக்கு பிடிக்கவில்லை என்று நிதானமாகவும் தெளிவாகவும் கூறினாள்.                                         

      

       கீதாவோ தன் தோழி எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள். இருந்தாலும் அனைத்தையும் தைரியமாக எதிர் கொண்டு சமாளிக்கும் திறமையும் தைரியமும் அவளுக்கு இருக்கிறது என்ற மெச்சிதலுடன் பார்த்தாலும் பத்து வருட நட்பின் மூலம் இன்னும் ஏதோ நடந்திருக்கிறது இவள் நம்மிடம் மறைக்கிறாள் அனேகமாக அது குழந்தையின தந்தை பற்றிய விசயமாக இருக்கும் என்பது வரை ஊகித்தாள்.                                                    

 

       பெரியவர்களுக்கு எப்படி இவள் வாழ்வை சரி செய்வது,இதில் குழந்தையை எப்படி தனியாக வளர்பாள் என்ற எண்ணம் இருந்தாலும் குழந்தையை பற்றிய பேச்சில் அவளின் குரல் மாறுபாட்டை அறிந்தவர்கள் என்பதால் அமைதியாக இருந்தனர்.                                             

      

       நான் பி.ஈ கம்பியூட்டர் முடித்திருக்கிறேன்.வேலைக்கு அப்ளை செய்து இண்டர்வியூவும் ஆன்லைனில் முடித்துவிட்டேன். சென்னையில் உள்ள பிரான்ஜின் திருச்சி கிளைக்கு கேட்டு இருந்தேன்,அதனால் கொஞ்சம் காத்திருக்க சொன்னார்கள். இப்போது நாளை மறுநாள் வேலையில் சேர சொல்லி ஈ மெயில் அனுப்பினார்கள்.இவள் சொல்வதை கேட்டு அனைவரும் யோசனையாக பார்த்தனர் அவர்களின் பார்வையே இது எல்லாம் எப்போது நடந்தது என்று கேட்பது போல் இருக்க அம்மா இறந்த உடனே அப்ளை செய்துவிட்டேன்.சென்னையில் உள்ள ஆபிஸ்க்கு வர சொன்னார்கள் நான் அங்கு வேண்டாம் என்று சொல்லி இருந்தேன் அதனால் இந்த ஒரு மாத தாமதம் என்றாள்.                                                                                         

 

       கீதாவோ வேலை கிடைத்தவுடன் அங்கிருந்து வராமல் இவ்வளவு நாளும் ஏன் அந்த நரகத்தில் இருந்தாய் என்றாள் கோபமாக.சென்னையில் வேளை செய்ய எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டாள்.ராகவை பார்த்த சுவாதி அப்பா எனக்கு ஒரு உதவி மட்டும் செய்ய முடியுமாப்பா என்றாள்.                                                                                                 

       ராகவோ என்னமா நீ இவ்வளவு நாள் அப்பா என்றதெல்லாம் வாய் வார்த்தைக்குதான என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்றவரை கூர்மையாக பார்த்தவாரே எனக்கு தனி வீடு ஒன்று பார்த்து தர வேண்டும் என்று அவள் சொல்லி முடிக்கும் முன் எதற்கு என்ற கீதா வள்ளியின் குரலில் அவர்களை பார்த்து உங்களுக்கு என்னால் எந்த சிரமமும் வேண்டாம் அம்மா என்று பிடிவாதமாக கூறவும் தாய் மகள் இருவரும் அமைதி ஆகினர்.                                                              

      

       ராகவன் சிறிது நேரம் யோசித்தவர்.சரிமா,உன் விருப்பத்திற்கு நான் சம்மதிக்கறேன்.ஆனால் நீ நான் சொல்வதற்கு சம்மதிக்க வேண்டும். என்றவரை பார்த்த சுவாதி சம்மதமாக தலையை அசைக்க கர்ப்பமாக இருக்கும் பெண்ணை தனியாக விடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை அதனால் மாடியில் இருக்கும் வீட்டில் நீ இருந்து கொள் முதலில் வாடகைக்கு இருந்தவர்கள் காலி செய்துவிட்டார்கள்,நீ அங்கு இருந்தாள் எங்களுக்கும் நீ கண் முன் இருக்கிறாய் என்று தைரியமாக இருக்கும்,நாளை குழந்தை பிறந்தாள் பார்த்து கொள்ள வசதியாக இருக்கும் என்று மறுக்க வழி இல்லாமல் கூறினார்.                              

      

       சுவாதி சற்று நேரம் யோசித்தவள் ராகவை பார்த்து நான் இங்கு தங்குகிறேன் என்றவளை மூவரும் மகிழ்ச்சியாக பார்க்க என்னிடம் வாடகை வாங்கி கொண்டாள் என்ற அவளின் அடுத்த வார்த்தையில் அந்த மகிழ்சி துடைக்கப்பட்டு அனைவரும் அமைதியாக பார்க்க,உங்கள் மனதை காயபடுத்துகிறேன் என்று புரிகிறது இருந்தாலும் நீங்கள் என் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி தலை குனிய சுவாதியின் சுயமதிப்பை அறிந்தவர்கள் என்பதால் ஒத்துக்கொண்டனர்.       கீதாவும் பி.ஈ கம்பியூட்டர் படித்ததால் வேறொரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள்.மறுநாள் சுவாதி,கீதா இருவரும் வேலைக்கு கிளம்பினர்.

 

       முதல் நாள் என்பதால் இருவரும் ஒன்றாக கீதாவின் ஸ்கூடியில் சென்றனர்.சுவாதியின் கம்பெனி தாண்டிதான் கீதாவின் கம்பெனி இருப்பதால் இருவரும் ஒன்றாக தான் செல்வர்.சுவாதிக்கு நாட்கள் மசக்கையிலும் வள்ளியின் கவனிப்பிலுமாக இதோ குழந்தையின் வளர்ச்சி ஏழு மாதம் ஆனது.   வள்ளி சுவாதிக்கு வளைகாப்பு நடத்தலாம் என்று கூற சுவாதி மறுத்தாள்,குழந்தைக்கு நல்லது என்று சொல்லவும் ஒத்துக்கொண்டாள்.வள்ளிக்கு தெரியும் குழந்தையை இழுத்தால் நிச்சயம் சுவாதி சம்மதிப்பாள் என்று,அதனாலேயே குழந்தைக்கு நல்லது என்று சொல்லவும் ஒத்துக்கொண்டாள்.                                                                                                                                             

       வள்ளி வீட்டிலேயே வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தார்.பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சுவாதியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறி சமாளித்தார்.நழுங்கு வைக்க வள்ளி சென்று சுவாதியை அழைத்து வந்தார்.  

 

       சுவாதியை பார்த்த கீதா வியந்துதான் போனாள். சாதரணமாகவே சுவாதி நல்ல அழகு இன்று தாய்மை தந்த பொழிவுடனும் மேடிட்ட வயிற்றுடனும் வந்தவளை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.அருகில் சுவாதி வந்தவுடன் அனைத்து ரொம்ப அழகா இருக்க டா என்றாள்.அதற்கு சுவாதி மென்மையாக சிரித்தாலே தவிர வேறு எதுவும் பேசவில்லை.                 

      

       கீதாவோ தன் தோழி வாழ்வை சரி செய்ய ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.ஆனால் என்ன செய்வது ஊருக்கு சென்றாள் சுவாதியின் நிலைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்,அதை பற்றி விசாரிப்போம் என்பதால் ஊருக்கு செல்ல கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டாள் என்று யோசித்துக்கொண்டிருந்தவள் என்ன ஆனாலும் சரி ஏதாவது செய்து சுவாதியின் நிலைக்கு காரணமானவரை கண்டுபிடிக்க வேண்டும்.அவரை பற்றி எதுவும் அவள் தப்பாக சொல்லவில்லை ஏதோ மிஸ்அண்டர் ஸ்டாண்டிங்காக இருக்கும் நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பின்னரே வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள்.பாவம் அவளுக்கு எங்கு தெரிய போகிறது தோழிக்கு உதவ சென்று தானே சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று.                                                


Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
28/11/2019 6:43 am  

அத்தியாயம்-3

                                 

வளைகாப்பு முடிந்து வள்ளி சுவாதியை சிறிது நேரம் ஓய்வு எடுக்க சொல்லி கீதாவின் அறைக்கு சென்றவள்,அங்கு இருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்தவளின் கண்கள் மேடிட்டு இருக்கும் வயிற்றில் நிலைத்தது.ஏதேதோ நினைவுகளில் கண்கள் கலங்கியது.நான் என்ன தவறு செய்தேன் எனக்கு ஏன் இந்த நிலைமை.                                                             

      

       எல்லா பெண்களை போல் என்னை எனக்காக மட்டுமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் கணவன் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.அது தவறா நான் உயிராக நேசித்தவனே,என் மனதை உடைத்துவிட்டானே என்னுடையவன் என்ற எண்ணம் என்னுள் இருந்து நீங்கி உரிமை இல்லாத ஒன்றை எடுத்து கொண்டது போல் தோன்றும் இந்த நினைவு எப்போது நீங்கும் என்று தனக்குள் பேசிக்கொண்டவளின் கண்களில் கண்ணீர்.                                                                

யாரோ வரும் அரவம் கேட்டு கண்ணீரை துடைத்து கொண்டு உதட்டில் போலியான புன்னகையை பூசிகொண்டு திரும்ப கீதாதான் வந்தாள் வந்தவள் உன்னை ரெஸ்ட் எடுக்க சொன்னால் என்ன செய்கிறாய் என்றவள் சுவாதியை உற்று பார்க்க அவளின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவள்.இவள் என்ன நடந்தது என்று சொல்லவும் மாட்டாள் நடந்ததை மறக்கவும் மாட்டாள் இப்படியே மனதில் போட்டு புதைத்து கொண்டு கஷ்டபடுவாள் என்று நினைத்து பெருமூச்சுவிட்டாள்.                                                                                            

      

       சுவாதியின் அருகில் வந்தவள் அவள் வயிற்றில் கை வைத்து டேய் குட்டி பையா இந்த சித்திய பாக்க சீக்கிரம் வா,நம்ம ரெண்டு பேரும் ஜாலியாக விளையாடலாம்,பார்க் போகலாம் சித்தி உன்னை எல்லா இடத்திற்கும் கூட்டி போகிறேன் என்றவளின் குரலுக்கு சரி என்று பதில் சொல்வது போல் உதைத்தான் சுவாதியின் செல்வ மகன்.                                                                   

      

       கையில் குழந்தையின் அசைவை உணர்ந்தவள் ஹேய்...... என்று கத்தி குட்டி சித்தி பேசரது கேட்கிறதா சுதி இங்கு பாரடி நான் சொன்னதற்கு பதில் சொல்வது போல் உதைக்கிறான் என்றாள் உற்சாகமாக.சுவாதியும் ஆமாம் என்று தலை ஆட்டி சிரித்தாள்.                                                     

      

       சுதியும்,கீதுவும் மகிழ்ந்துதான் போனார்கள் அவர்களின் மகனின் பதிலில்.ஹேய் பாரு குட்டி பையனும் நானும் சேர்ந்து இந்த ஊரே சித்தி வருவோம்.குட்டி பையன்க்கு என்ன வேணுமோ எல்லாமே இந்த கீதுமாதான் வாங்கி கொடுப்பா.குட்டி நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த திருச்சிய ஒரு கலக்கு கலக்கலாம் ஓ.கே என்று துள்ளி குதித்து கொண்டு பேசி கொண்டு இருந்தாள் கீதா.

 

       பாத்து டி அவ்வளவு பெரிய கரண்டிய தூக்க முடியாம கீழ விழுந்தற போறீங்க ரெண்டு பேரும் என்று செல்லி கொண்டே உள்ளே வந்தார் வள்ளி. 

 

       என்னமா சொல்ற என்று வள்ளியின் பேச்சை கவனிக்காமல் குழந்தையின் நினைவில் இருந்தவள் சொல்ல. 

 

       இல்ல ரெண்டு பேரும் திருச்சிய கலக்குறேன்னு சொன்னீங்கள்ல,அதுதான் கரண்டி இல்லாம கலக்க முடியாது பாரு அதுதான் கிண்டலாக சொன்னார்.அவரின் பதிலில் கீதாவின் முகம் போன போக்கை பார்த்து சுவாதிக்கும் சிரிப்பு வந்துவிட இருவரிம் ஹைபை கொடுத்து கொண்டு சிரித்தனர்.

 

       நீங்க ரெண்டு பேரும் இப்படி சிரிக்கற அளவுக்கு இது ஒண்ணும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல.மொக்க காமெடி சொல்லிட்டு இதுக்கு சிரிக்கறதே தப்பு இதுல ஹைபை வேற.ஹைபைக்கு உண்டான மரியாத போச்சு உங்களால. நான கோவமா போறேன் என்றவளின் உடையை பிடித்து யாரோ இழுக்க விடு சுதி என்ன நா கோவமா போறேன் என்று முறுக்கி கொண்டு நின்றாள்.

 

       வள்ளியோ அடியே உன்ன யாரும் இப்ப இழுத்து நிக்க வைக்கல அந்த ஷால் மாட்டிக்கிச்சு எடுத்துவிட்டு போ என்ற அன்னையை கொலை காண்டாக முறைத்தவள்.

 

       நீயெல்லாம் ஒரு அம்மாவா பெத்த ஒரு பொண்ணு கோவம போறேனு சொல்றாளேனு இப்ப நீ துடிச்சு போய் என்னபண்ணி இருக்கணும்.

      

       என்ன பண்ணியிருக்கணும்?                         வள்ளி.

 

       அச்சோ செல்லக்குட்டி அப்புடியெல்லாம் சொல்லாத டா.அம்மா உனக்கு புடிச்ச சமையல் செஞ்சு தர்றேனு சொல்லி சமாதானம்படுத்தி இருக்கணுமா இல்லையா.

 

       இல்லை.   வள்ளி.

 

       என்னது.         கீதா.

 

       இல்லைடி.மிஞ்சி மிஞ்சி போனா உன்னோட கோவம் எவ்வளவு நேரம் தெரியுமா உங்க அப்பா உனக்கு ஐஸ்கிரிம் பேமிலி பேக் வாங்கி குடுக்கற வரைக்கும்தான்.அதுக்கு நான் ஏன் உன்கிட்ட கெஞ்சணும்.போ எங்கையோ கோவமா போறேனு சொன்னியே போ.

 

       கீதா கோவமாக தாயை முறைத்து ச்ச........  இந்த வீட்ல எனக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்ல.இங்க இருந்துக்கிட்டு நான் எவ்வளவு வெக்கப்பட்டேன், வேதனைபட்டேன், துக்கப்பட்டேன், துயரப்பட்டேன் என்று வடிவேலு பாணியில் சொல்லி கொண்டே போக.

 

       இவ்வளவுப்பட்டும் திருந்தலையேடி நீ என்றார் வள்ளி.

 

       அவரை பார்த்து டைமிங் ம்.............. என்று நக்கலாக கேட்டவள். எல்லாம் என் நேரம் என்றாலும் அசடு வழிந்து கொண்டே ஐஸ்கிரீம் எப்ப வாங்க போலாம்மா என்று கேட்டவளை கேவலமாக பார்த்தார் அன்னை.

 

       சுவாதி அவளை பார்த்து இங்க ஒரு வீராப்பான மானஸ்த்தி இருந்த நீ அவளை பார்த்தாயா என்றாள் கிண்டலாக.

 

ச்ச...ச்ச....நா பாக்கலப்பா வள்ளியோட பொண்ணா இருந்துக்கிட்டு மானஸ்த்திக்கூடலாம் சகவாசம் வச்சிக்கிட்ட என் பொலப்பு எப்புடி ஓடும் என்று கேட்டாளே பார்க்கலாம் வள்ளி அவளை திட்ட ஆரம்பிக்கும் போதே வேகமாக அறையைவிட்டு வெளியில் ஓடி வந்து வந்தவளின் காதில் சுவாதி கல கலவென சிரிக்கும் சத்தம் கேட்டு அவள் மனதை நிறைத்தது.இந்த சிரிப்பிற்காகதானே இவ்வளவு நேர போராட்டம் தாயும் மகளும் செய்தது.

 

       சுவாதிக்குதான் மனம் நெகிழ்ந்து போனது.தனது தாய் இல்லா குறையை வள்ளி போக்கியதாக நினைத்தவள் அவர் மடியில் படுத்து அப்படியே தூங்கி போனாள்.

 

 

Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
29/11/2019 4:22 am  

அத்தியாயம்-5

      

 

அதே நேரம் சென்னையில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கு அந்த தெருவில் இரவு பதினொரு மணி போல் பெரிய பங்களாவின் முன் வந்து நின்ற காரில் இருந்து இறங்கினான் அர்ஜீன்.வீட்டின் உள் நுழையும் போது மிகவும் சோர்வாக உணர்ந்தான்.ஹாலில் உள்ள சோபாவில் தொப்பென்று அமர்ந்தவன் கண்களை மூடி சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.                      

 

ஒரு வலை கரம் தன் தலையை தடவுவதை உணர்ந்தவன் இதழ்களில் மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது.என்னப்பா ரொம்ப சோர்வா இருக்கா என்றார் அவனது தாய் சுந்தரி.                                                                          

 

என்னமா எத்தன டைம் சொல்லி இருக்கிறேன்.எனக்காக காத்திருக்க வேண்டாம் என்று நீங்கள் ஏன் நான் சொல்வதை காதில் கேட்கவே மாட்டிக்கிறீர்கள்.டேப்லட் போட்டீங்களா.                                                      அர்ஜீன்.

 

என்னபண்றதுப்பா என்னோட பையன் சாப்பிட்டானா இல்லையானு தெரியாம நான் எப்புடி தூங்கறது. அதுக்குத்தான் சீக்கிரம் ஒரு கல்யாணம் செய்து கொள்..

 

அம்மா ப்ளீஸ் போய்படுங்க அதபத்தி பேசாதிங்க.எனக்கு தூக்கம் வருது நான் போய் படுக்கிறேன் என்றவன் தன் அறை நோக்கி சென்றான்.       

 

அர்ஜீன் செல்வதையே பெரு மூச்சுடன் பார்த்து கொண்டு இருந்த வள்ளியின் தோளை தொட்டார் அவரது கணவர் வரதராஜன்.       

 

என்னங்க இவன் இப்புடி இருக்கான்.எப்ப பாரு வேலை வேலைனு ஓடிக்கிட்டு இருக்கான்.இவன பார்க்கணுனா நைட் பதினொரு மணி வரை முழிச்சிருக்க வேண்டி இருக்கு.காலைலயும் சீக்கிரம் கிளம்பி போயிடறான். எதுக்கு இப்புடி இருக்கான்னே தெரியமாட்டிக்கிது. எப்படி கலகலனு இருந்தவன் இப்புடி மாறிட்டான். யாருக்கூடவும் பேசறதும் இல்ல.சிரிப்பையே சுத்தமா மறந்தவனாட்டம் இருக்கான்.

  

விடுமா.அவன் மனசுல ஏதோ வருத்தம் அத போக்க அவன பிசிய வச்சிக்கறான்.தவறான வழில போகாம அவனோட வேலைல ஆர்வமா இருக்கானே அத நெனச்சு தந்தோஷபடுமா.எல்லாம் சரியா போய்டும் வா போய் படுக்கலாம்.                                                

 

என்னமோ போங்க சீக்கிரம் எல்லாம் சரியான பரவால்ல.இவன இப்புடி பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு.நம்ம வீட்ல கலகலனு இருக்கறதே இவனும் மதியும்தான். நகுலன் சின்ன வயசுல இருந்தே சரியான அழுத்தம் அதனால அவனோட அமைதி எனக்கு அவ்வளவா தெரியல,ஆன அர்ஜீன் எப்பவும் ஏட்டிக்கு போட்டி பேசிக்கிட்டு இருக்கவன் இப்படி இருக்கான் என்று புலம்பி கொண்டே தங்களது அறைக்கு சென்றனர்.

 

 மாடியில் அர்ஜீன் தன் அறையில் சுதியின் போட்டோவிடம் கேட்டு கொண்டு இருந்தான்.உயிரே ஏன் பிரிந்தாய்...............

 

திருச்சியில் அபி முதல் நாள் பள்ளி சென்ற கதையை கேட்டு இன்றும் அந்த வீட்டில் கீதாவை தவிர அனைவரும் சிரிப்பர்.ஏனென்றாள் அன்று பள்ளிக்கு போகும்போது அபியை விட அழுதது அபி அல்ல கீதா.அபிதான் அவள் கண்ணீரை துடைத்து பள்ளி முடிந்து வந்து ராகவ் தாத்தாவிடம் சொல்லி ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக சொல்லி சென்றான்.                                      

 

       அபி பள்ளிக்குள் சென்ற பிறகும் வீடு வராமல் அங்கேயே காத்திருந்து அபியை அழைத்து கொண்டுதான் வந்தாள் கீதா. இவள் அலப்பறை தாங்க முடியாமல் ராகவ்கூட அபியும் நானும் பார்ட் 2 எடுக்கலாமா என்று கிண்டல் செய்தார். 

                               

சுவாதிதான் ரொம்ப செல்லம் குடுக்காதடி என்று திட்டுவாள்.அவள் சொல்வதை எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவாள்.ஆனால் அபியுடன் ஊர் சுற்றுவதை மட்டும் நிறுத்தவில்லை.

 

       அன்று ஞாயிற்று கிழமை அனைவரும் தங்கள் பொழுதை சந்தோஷமாக கழித்தனர்.கீதாவும், அபியும் கிரிக்கெட் விளையாடுகிறோம் என்ற  பெயரில் வீட்டின் முன்புறம் இருந்த தோட்டத்தில் அந்த தெருவில் இருக்கும் அனைத்து குழந்தைகளையும் அழைத்து கத்தி கொண்டு இருந்தனர்.

 

வள்ளிதான் வயசுபிள்ளை இப்படி ஊரில் இருக்கும் குழந்தைகளை கூட்டி வைத்து அலப்பரை செய்து கொண்டு இருக்கிறாள் என்று திட்டி கொண்டு இருந்தார்.

 

சுவாதிதான் விடுங்க அம்மா இது போன்று மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைப்பது இல்லை.கீதுக்கு கிடைத்து இருப்பது வரமான வாழ்வு அவள் சின்ன பிள்ளை இல்லை.அவள் பொறுப்பு அவளுக்கு தெரியும்.திருமணம் முடிந்தாள் நிச்சயம் அவள் பொறுப்பாக மாறிவிடுவாள் என்று கூறியவளை ஆழமாக பார்த்தார் வள்ளி.

 

       வாழ்க்கை வரமாக அமையாது சுவாதி நாம்தான் அதை வரமாக மாற்றி கொள்ள வேண்டும்.மனிதன் கடவுளிடம் சென்று என்ன கடவுளே நன்மையை படைத்த நீங்கள் எதற்காக தீமையை  படைத்தீர்கள். தீமையால்தான் உலகில் சண்டை,சச்சரவு இது எல்லாம் ஏற்படுகிறது.தீமையை படைக்காமல் இருந்து இருந்தால் பூமி சுபிட்ஷமாகவே இருந்து இருக்குமே என்று கேட்டராம்.

 

மனிதனின் கேள்வியில் புன்னகைத்த கடவுள்.உலகில்  அனைவருமே நல்லவர்கள்தான் அவர்களுக்கு தப்பு செய்யும் சமயம் அமையாதவரை.வாய்ப்பு அமைந்து அதை ஒதுக்குபவர்கள் மட்டுமே தேவர்களாகவே மாறுவார்கள்.இரவு பகல் இருப்பது போல் நன்மை தீமை இரண்டுமே இருந்தால்தான் சுவாரஸ்யம் இருக்கும்.

 

நன்மையின் நிலையை அறியவே முதல் யுகத்தில் நன்மையை ஒரு இடத்திலும் தீமையை ஒரு இடத்திலுமாக இலங்கை,அயோத்தி என்று பிரித்து வைத்தேன் அப்போது தீமையுடன் போராடி நன்மை வென்றது.அதே போல் இரண்டாவது யுகத்தில் இரு குணமும் ஒரே குடும்பத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அஸ்தினாபுரத்தில் பிறக்க வைத்தேன் அப்போதும் நன்மையுடன் தீமை போராடி வென்றது. இனி கலியுகத்தில் மனிதனுள்ளே இருவரையும் வைத்தாள் அவர்களுள் இருக்கும் நன்மை தீமையுடன் போராடி நன்மையை வாழ வைப்பார்கள் என்றுதான் படைத்தேன்.அதற்காகதான் அவர்களுக்கு ஒரு செயலை ஆராய்ந்து நன்மை எது தீமை எது என்று அறிய ஆறாவது அறிவை படைத்திருக்கிறேன்.தீமையை அழிப்பது என் வேலை இல்லை அதை அவர்களே அழிக்க வேண்டும் என்பதற்குதான் இந்த தீமையின் படைப்பு என்றாராம்.

 

கடவுள் சொன்னது போல் ஈகோ,பிடிவாதம் போன்ற தீமையை மனதில் இருந்து நீக்கினாள்,அனைவருக்குமே வாழ்க்கை சிறப்பாக அமையும். வாழ்க்கை மாறும் என்று காத்திருக்காமல் நாம் முயற்சி செய்தாள் மட்டுமே வாழ்க்கை வரமாகவும் சாபமாகவும் மாறும். நம் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்றவர்.தனது வேலையை பார்க்க ஆரம்பித்தார். வள்ளியின் வார்த்தையில் இருந்த உண்மை சுட சுவாதி அமைதி ஆகினாள்.                                                                

 

வள்ளியும் என்னதான் செய்வார் பலமுறை அபியின் தந்தையைபற்றி விசாரித்தும் எதற்கும் பதில் அழிக்காமல்,எங்காவது போய்விடுவேன் என்று மிரட்டுவதும்,தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையை முகத்தில் சுமந்து கொண்டு வலைய வரும் சுவாதியை சமாளிக்க முடியாமல் இன்று பொங்கிவிட்டார்.சுவாதி தன் முகத்தை நார்மலாக வைத்து கொண்டு அனைவருடனும் பேசி சிரித்தாலும் அது அவளின் இயல்பு இல்லை என்பதை சிறு வயதில் இருந்து பார்த்த வள்ளிக்கு தெளிவாகவே தெரிந்தது. சுவாதியின் வாழ்க்கையை நினைத்து வள்ளி உண்மையில் பயந்து போய்தான் இருந்தார்.ஏதாவது அதிசயம் நடக்காத இந்த பெண்ணின் வாழ்க்கை சரியாகதா என்று அவர் கடவுளை வேண்டாத நாட்கள் இல்லை.ஆனால் அவர் உயிரை பணயம் வைத்தே இரு பெண்களின் வாழ்க்கையை சரி செய்ய போகிறார் என்று அப்போது அறிந்திருக்கவில்லை.

 

கீதாவோ இவர்களின் சம்பாசனை எதுவும் தெரியாமல் மதியம் வரை குழந்தைகளுடன்  விளையாண்டுவிட்டு கலைத்து போய் வந்தவளுக்கு விருந்தாக அமைந்தது, வள்ளி செய்து  வைத்த   நான்வெஜ்.பசி கலைப்பில் அதை  ஒரு பிடி பிடித்துவிட்டு மதிய உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப அனைவரும் தூங்க சென்றனர்.கீதா பாதி உறக்கத்தில் அபியின் அழு குரலில் அடித்து பிடித்து எழுந்தவள் கண்ணை திறக்க முடியாததால் அறை கண்ணை திறந்து கொண்டே மாடிக்கு ஏறியவள் அதிர்ந்தாள்.

 

 

                           


Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
02/12/2019 5:54 am  

அத்தியாயம்-6

 அபியின் அழு குரலில் தூக்க கலக்கத்துடனே மாடி ஏறியவள்  அங்கு சுதி அபியை அடிக்க கை ஓங்கியதை பார்த்தவள் சுவாதி என்று அழைத்து அவள் செயலை தடுத்தவள் வேகமாக சென்று அபியை கைகளில் தூக்கி கொண்டவள் சுவாதியை முறைத்தாள்.அவள் தூக்கமும் போன இடம் தெரியாமல் சென்றது.அடியே எதுக்கு டி குழந்தையை அடிக்க போற உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா என்று திட்ட ஆரம்பித்தாள்.                                                                         

 

       சுவாதியோ கோபம் கொஞ்சமும் குரையாமல் அவனை கீழே விடு கீது.சும்மா எதுக்கு எடுத்தாலும் பிடிவாதம் என்ன இது பழக்கம் முளைக்கும் போதே இவ்ளோ பிடிவாதம் ஆகாது.

      

       முதலில் என்ன நடந்தது என்று என்கிட்ட சொல்லு.     கீதா.

 

       என்ன சொல்ல சொல்ற எனக்கு பயங்கரமா தலை வலிக்கிது படுத்து தூங்கடானா அடம்பண்ணிக்கிட்டு இருக்கான்.அதான் ரெண்டு பேரும் நல்லா விளையாடுனிங்க இல்ல.இன்னும் தூங்காமல் அலுச்சாட்டியம் செய்தாள் என்ன அர்த்தம்.இவனிடம் கத்தி கத்தி எனக்கு தலைவலி அதிகமாகதான் ஆகிவிட்டது என்று தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்தாள்.

 

வள்ளி பேசியது வேறு அவளுக்கு மன உளைச்சலாக இருந்தது.அதன் காரணமாகவே தன் இயலாமையை கோபமாக அபியிடம் காட்டிவிட்டாள்.

 

       சுவாதியை பார்க்க கீதாவிற்க்கு  பாவமாக இருந்தது. சுவாதியின்  முகத்தை பார்த்த கீதாவிற்கு அவள் குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தாள்.சரி நீ தூங்கு நான் அபியை தூங்க வைக்கிறேன் என்று அபியை தூக்கி கொண்டு செண்றவளை சதி நிறுத்தி தேங்ஸ் என்றாள்.அவளை போலியாக முறைத்த கீதா போடி போய் ரெஸ்ட் எடு என்று அபியை தூக்கி கொண்டு கீழே சென்றாள்.

 

       கீதாவின் தோளில் சாய்ந்து இருந்த அபி தேம்பி கொண்டே கண்களை தேய்த்து கொண்டு இருந்தான்.சுதி கொஞ்சம் பொறுமையாக அபியை தட்டி கொடுத்திருந்தாள் தூங்கி இருப்பான் என்றே தோன்றியது.

 

அபியை பார்க்கவும் பாவமாக இருக்க அவனை மாற்றும் பொருட்டு கீதா அறை கதவை திறந்து வைத்துவிட்டு வாசலருகே அபியை இறக்கினாள். கேள்வியாக பார்த்த அபியை பார்த்து அபிபையா நம்ம மட்டைய போட்டு சொட்டைய முறிக்கிற கேம் விளையாடலாமா ரெடி  என்று சொல்லி முடிப்பதற்க்குள் அபியின் முகம் கீதா நினைத்தது போல் பிரகாசமாக மாறி தலையை ஆட்டினான்.

 

ஸ்டார்ட் என்று கீதா சொன்ன உடன் வேகமாக இருவரும் ஓடு பெட்டில் படுத்து போர்வையை தலைவரை இழுத்து போர்த்தி கொண்டனர்.

 

       அபிதான் முதலில் மட்டைய போட்டான் இப்ப சொட்டைய முறிக்க போறான் என்றவன் தூங்க கண்களை மூடினான்.கீதாவும் கண்களை மூடி கொண்டாள்.படுத்த கொஞ்ச நேரத்தில் அபி தூங்கிவிட கீதா புரண்டு புரண்டு படுத்து  அரை உறக்கத்திற்கு சென்றாள்.{இந்த கேம் தெரிஞ்சுக்க விரும்பறவங்க யூ டியூப்ல போய் மட்டைய போட்டு சொட்டைய முறிக்கற கேம் ஷின்சன்னு டைப்பண்ணி தெரிஞ்சுக்கோங்கோ....}

 

       கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டாலும் கண்களை திறக்க முடியாத தூக்கத்திற்கு சென்றிருந்தாள்.வந்தது சுவாதி என்று அவளின் தலையை வருடிவிட்டதில் கண்டு கொண்டவளின் முகத்தில் லேசான புன்னகையை வெளிபடுத்தியது. அபியை திட்டுவதும் திட்டிவிட்டு மனது கேட்காமல் அவனை பார்க்க வந்துவிட்டாள் என்று நினைத்தவள் தூக்கத்தை தொடர ஆரம்பித்தாள்.

 

       அபியை அடிக்க போனதை நினைத்து சுவாதிக்கும் மனது கஷ்டமாக இருந்தது.யாரோ மேல் இருக்கும் கோபத்தை மகன் மேல் காட்டிவிட்டதாக எண்ணி குற்ற உணர்வு கொண்டவள் அபியை சமாதானபடுத்த கீதாவின் அறைக்குள் நூழைந்தாள்.அங்கு கீதா, அபி இருவரும் தலை வரை போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு தூங்குவதை பார்த்தவளுக்கு சிரிப்புதான் வந்தது.

 

       கீதாவின் அருகில் சென்றவள் போர்வையை கழுத்து வரை இறக்கிவிட்டவள்.அவள் தலையை கோதி கொடுத்தவள் அவள் முகத்தில் தோன்றிய புன்னகையை பார்த்து தானும் புன்னகைத்தவள் அபியின் அருகில் சென்று அவன் தலையையும் கோதிவிட்டவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு திரும்பும் போதுதான் கவனித்தாள் இருவரும் பேன் கூட போடாமல் படுத்திருப்பதை  ஏ.சியை ஆன் செய்து மிதமான அளவு வைத்தவள்.பேன்னை ஆன் செய்து வைத்துவிட்டு கதவை அடைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

 

       மாலை எழுந்த கீதா அபியை பார்க்க அவன் இன்னும் தூங்கி கொண்டு இருந்தான்.அவனை பார்த்து சிரித்தவள் பாத்ரூமிற்கு சென்று முகம் கழுவி வந்தாள். அதற்குள் அபியும் எழுந்து கொள்ள கீதாவை பார்த்து சிரித்தான்.கீதா அவனை வம்பிழுக்கும் பொருட்டு ஹே........நான்தான் பர்ஸ்ட் சொட்டைய முறிச்சேன் என்று குதிக்க அபி கோபமாக இல்ல நான்தான் பர்ஸ்ட் என்று குதிக்க கீதாவும்,அபியும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லி கொண்டு இருந்தனர்.

 

       அபி நான்தான் நான்தான் என்று கத்தி கொண்டு இருந்தவன் ஒரு கட்டத்துக்கு மேல் பொருமை இல்லைமல் கீதாவின் தோளில் கைகளை வைத்து உளுக்கி கொண்டு நான்தான் நான்தான் என்று கத்த. கீதாவும் அபியின் தோள்களை பிடித்து லேசாக உளுக்கி கொண்டு நான்தான் நான்தான் என்று கத்தி கொண்டு இருந்தாள்.

 

       அபியை சமாதானபடுத்தலாம் என்று வந்த சுவாதி இருவரையும் பார்ததும் கோபம்தான் வந்தது.இருவரும் விட்டு கொடுக்காமல் நான்தான் என்று சொல்லி கொண்டு இருப்பதை கைகளை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருந்தவள் அவர்கள் இப்போதைக்கு தன்னை கவனிக்க போவதில்லை என்பதை உணர்ந்து.இங்க என்ன நடக்குதி என்று குரலில் வரவழைக்கப்பட்ட குரலில் கேட்க அவளை திரும்பி இருவரும் ஒரு பார்வை பார்த்தவர்கள் அவளுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் தங்கள் சண்டையிடும் வேலையை தொடர.கடுப்பான சுவாதி அம்மா..................................... என்று கத்தினாள்.

 

       சுவாதியின் அம்மா என்ற சத்தத்தில் இருவரும் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு.ஒரே நேரத்தில் சுதியை திரும்பி பார்த்து ஆப்பண்ணிட்டாயா................... என்று வடிவேலு பாணியில் எண்ணி கொண்டனர். இருவரும் ஒரே நேரத்தில் அணைத்து கொண்டு வீ ஆர் குட் பிரண்ட்ஸ் யூ நோ என்று ஒரே டோனில் சொல்லி சிரித்தனர்.இவர்களின் சொய்கையை பார்த்த சுதிக்குத்தான் இதில் யார் குமரி யார் குழந்தை என்று குழப்பம் வந்தது போல் இருந்தது. பிறகு இருவரையும் பார்த்து பய் முகம் கழுவி வாங்க காபி குடிக்கலாம் என்று சொல்லி சென்றாள்.

 

       சுதி அந்த பக்கம் சென்றவுடன் நான்தான் என்று மீன்டும் அபி ஆரம்பிக்க சரி சார் நீங்கதான் ஜெயிச்சீங்க நிப்பாட்டிக்குவோம் இதோட எல்லாத்தையும் நிப்பாட்டிக்குவோம் என்று வடிவேலு பாணியில் சொன்னவள் இல்லனா உன் அம்மா என் அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து நம்மை ரவுண்டு கட்ட ஆரம்பிச்சிருவாங்க என்று சொன்னவளை பார்த்த அபிக்கும் அது உண்மை என்று தெரிய, ஓ.கே நாளை தீம் பார்க் போகலாம் என்றான்.

 
Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
06/12/2019 11:07 am  

அத்தியாயம்-7

       என்ன............... என்று கத்திய கீதா.அபி செல்லம் நாளைக்கு ஸ்கூல்டா என் அம்மாவ கூட சமாளிச்சுருவேன்.உன் அம்மாவ சமாளிக்க முடியாது டா வேற எதாவது என்று சொல்ல போனவளை அபி கூர்மையாக பார்த்தான்.

 

       அப்பா..... யார் பார்வைடா இது இப்புடி பாக்கற என்று மனதுக்குள் நினைத்து கொண்டாலும் இவளும் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.

 

       கீதாவையே பார்த்த அபி அது எல்லாம் எனக்கு தெதியாது நான்தான் ஜெயிச்சேன்.சோ...... நான் சொல்ததான் நீ தேத்தணும்.நாளைக்கு நாம தீம் பார்க் போதோம் தாத். என்று சொன்னவன் வெளியில் சென்றுவிட்டான்.

 

       அபி போவதையே பார்த்து கொண்டு இருந்த கீதா அம்மாடி அம்மா......... புள்ளையா இது.என்ன அழுத்தமா பேசறான் என்ன அழுத்தமா பாக்கறான்.இவன் பேசற ததக்கா புதக்கா தமிழ் அழுத்தமா பேதும்போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதே பெருமானே........ ஹாஹாஹா....என்ரு சிரித்தவள்.இவன் அப்புடியே அவங்க அப்பாவோட ஜெராக்ஸ்ஸா இருப்பான் போல இருக்கே.

 

அர்ஜீனா நீ எங்க இருக்க சீக்கிரம் வந்து உன் பிள்ளைய பாரு பயங்கர வாலா இருக்கான்.அழுத்தமாவும் இருக்கான் இவன் என்ன டிசைன்னே எனக்கு தெரியலயே.ம்.......... என்று பெரு மூச்சு விட்டவாறே எழுந்தவள்.இப்ப இவன் அம்மாவ நாளைக்கு சமாளிக்கணுமே என்ற கவலையோடே காபி குடிக்க அவளும் வெளியில் வந்தாள்.

 

அதே நேரம் சென்னையில்.ஹலோ ராஜா எதாவது தகவல் தெரிஞ்சுதா.

..................

ஓ............இல்ல ராஜா நானே டெல்லி போய் அவர் ஆபீஸ்ல விசாரிச்சேன்.ரிடையர்மண்டமக்கு அப்புறம் சொந்த ஊரு போய்ட்டாங்கனு சொன்னாங்க ஆனா எங்கனு தெரில.

.......................

அவங்க அப்பா என்ன சொல்றாரு

...........................

சரி பாத்துக்கோங்க.இவரு முதல்லயே ஒழுங்க இருந்து இருந்த அனாவசியமா இரண்டு உயிர் போயிருக்காது. குடும்பத்தையே இழந்ததுக்கு அப்புறம்தான் புத்தி வந்துருக்கு.ம் சரி ராஜா நான் வைக்கிறேன்.நீங்க உங்க வேலைய பாருங்க அவள பத்துன ஏதாவது தகவல் தெரிஞ்ச என்ன கூப்புடுங்க என்றவன் போனை வைத்தான்.அவனுள் கடந்தகால நினைவுகள் எழுந்து மனதை அழுத்த அதை சரி செய்ய காத்திருக்கும் நோயாளிகளை வர சொல்லி தன் கவனத்தை திசை திருப்பினான்.

      

அடுத்த நாள் கீதா கம்பெனிக்கு விடுமுறை எடுத்து கொண்டு அபி சொன்னது போல் வீட்டில்  இருந்தாள். சுவாதி அவளை சந்தேகமாக பார்த்து இன்னைக்கு என்ன லீவ் என்று கேட்டாள்.

 

 கீதா என்ன சொல்வது என்று யோசித்து என் ஆபிஸ், என் லீவ் என் உரிமை என்று விளம்பர பாணியில் சுதிக்கு பதில் சொன்னாள்.

 

கீதாவின் முகத்தையே  பார்த்தவள் இவ ஒரு பார்ம்ல இருக்கா இவக்கிட்ட இப்ப பேசி ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்து சரி என்னமோ பண்ணு அபிய இன்னைக்கு நீயே ஸ்கூல்ல விட்டுடு அப்பாவ டிஸ்டர்ப் பண்ணாத என்று கூறியவள் கீதாவை கூர்மையாக பார்த்து இன்று அபி ஸ்கூல் போகணும் பார்த்து பத்திரம் என்று கூறியவளின் பார்வை கீதாவிற்கு ஜெர்க் கொடுத்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் நாங்க இருக்கோம் என்று மீண்டும் விளம்பர பாணியில் கூறியவளை பார்த்த சுவாதி இவ திருந்தமாட்டா என்று தலையில் அடித்து கொண்டு சென்றுவிட்டாள்.

 

       சுவாதி கிளம்பியவுடன் ஹையா என்று ஒரு குதி குதித்தவள் திரும்ப அங்கு அவளை முறைத்து கொண்டு நின்றார் வள்ளி.

 

அட கடவுளே அடுத்த ரவுண்டா இந்த பச்ச மண்ணு பாவம் இல்ல எவ்ளோதான் நான் சமாளிக்கறது என்று மனதில் புலம்பியவள்.என்னமா என்றாள் அப்பாவியாக கேட்டாள்.                     

 

இன்னைக்கு என்ன பிளான்.                  வள்ளி.

 

ஒண்ணும் இல்லமா என்று அவள் வேகமாக தலையாட்டியவிதமே அவருக்கு பொண்ணு இன்னைக்கு பெரிய பிளான் வச்சிருக்கா என்பதை சொல்லாமல் சொல்ல மீண்டும் முறைத்தார்.

 

வள்ளியின் முறைப்பை பார்த்தவள் தலையை குனிந்து கொண்டு நேற்று தான் அபியுடன் விளையாடியதையும் தான் தோற்றதால் அபியை தீம் பார்க் அழைத்து செல்வதாக சொல்லியதையும் கூறினாள்.

 

வள்ளிக்கு மகளைபற்றி தெரியாதா கீதாவை முறைத்தவர் அப்போ மேடம் நேற்றே தீம்பார்க் போகணும்னு பிளான்பண்ணிட்டீங்க.

 

வள்ளியின் கேள்வியில் அசடு வழிந்து கொண்டே எல்லாபக்கமும் தலையை ஆட்டிய கீதாவை வள்ளி முறைத்து விட்டு செல்லவும் அவர் பின்னாடியே சென்று அவரை கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாக பர்மிஷன் வாங்கி கொண்டு சிட்டாக பறந்தாள் அபியுடன்.

 

அன்று மாலை வரை தீம்பார்க்கில் ஆட்டம் போட்டவர்கள் சுவாதி வரும் நேரம் என்பதை உணர்ந்து பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு சென்று அமர்ந்துவிட்டனர். அபி விளையாடுவதை இவள் கவனிக்க இவளை இரு விழிகள் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தது.                                    

      

கீதா நேரமாவதை உணர்ந்தவள் அபி குட்டி வாடா கோவிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு போகலாம் பாட்டி தேடுவாங்க,உன்னோட அம்மா வேற வந்திருவா என்றவுடன் கீது இன்னும் கொஞ்ச நேரம் என்று தலைசாய்த்து கண்களை சுருக்கி கேட்ட அழகில் கீதா வழக்கம் போல் மயங்கிதான் போனாள்.அந்த அழகை ரசித்துவிட்டு மாட்டேன் என்றா சொல்வாள்.சரி என்று சலையாட்டியவள் பின் கண்டிபாக பார்த்து பைவ் மினிட்ஸ்தான் என்று சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கும் வேளையை ஆரம்பித்தாள்.        

 

அபி அங்கிருக்கும் குழந்தைகளுடன் பாலை தூக்கி போட்டு விளையாடி கொண்டு இருந்தான்.கீதாவுக்கு அபியை பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.இப்போதுதான் பிறந்து தான் கையில் வாங்கியவன் போல் இருந்தான் அதற்குள் வளர்ந்து என்னை அவன் பார்த்து கொள்வது போல் ஆகிவிட்டது. இவனை நம்பி இந்த வள்ளி என்னை அனுப்பி இருக்கிறார்கள் என்று மனதுக்குள் சிரித்து கொண்டு பார்வையை சுழல விட்டவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் அவன்.

 

யார் அவன்?அவன் எதற்கு குழந்தைகளையே பார்த்து கொண்டு இருக்கிறான்.பார்க்க கோட்டெல்லாம் போட்டு டீசெண்ட்டாக இருக்கிறான் ஆனால் அந்த பார்வை ஆச்சரியமான பார்வை மாதிரி இருக்கிறதே என்று யோசித்தவள்.சரி குழந்தைகள் விளையாடுவதை பார்த்து கொண்டு இருப்பானா இருக்கும் என்று நினைத்து கொண்டவள் தன் பார்வையை மறுபடியும் அபியிடம் செலுத்தினாள்.                          

      

ஐந்து நிமிடம் என்றது அரைமணி நேரம் ஆன பிறகும் அபி இன்னும் கொஞ்ச நேரம் கதைபாடுவதை நிறுத்தவில்லை என்பதை உணர்ந்தவள் தன் நாடகத்தை ஆரம்பித்தாள்.          

      

கோவிலுக்கு தனியாக போக பயமாக இருக்கிறது என்றுதான் பெரிய மனிதன் என்று உன்னை கூட்டி வந்தேன் நீ என்னவென்றாள் சின்ன பிள்ளைமாதிரி நடந்து கொள்கிறாய்.சரி இன்று கோவிலுக்கு போக வேண்டாம் நாளை அப்பாவுடன் போய் கொள்கிறேன் என்று போலியாக பெருமூச்சுவிட்டாள்.                                                                                                           

அபி பிளே ஸ்கூல் போவதால் எப்போதும் தன்னை பெரிய பையன் என்று கூறிகொள்வான் அதனால்தான் கீதாவும் அவ்வாறு கூறினாள்.அபி உடனே நோ கீது நா பிக் பாய்தான் இந்த சுஷ்மி என்னை விடவே மாத்திக்கிறாள் சின்ன பிள்ளை போல் என்னுடன் விளையாதுனு தொல்லிக்கித்தே இருக்கா உனக்கு தனியா போக பயமா இருந்தா என் கூத வா நான் கூத்தித்துபோதேன்.                 

 

       இந்த சின்ன பிள்ளைங்க பாவம்னு கொஞ்ச நேரம் விளையாண்தா பொழுதுக்கும் விளையாத சொல்றாங்க பேத் கேர்ஸ் என்றான் பெரிய மனித தோரணையில்.                                            

      

       சற்று முன் விளையாட அனுமதி கேட்டது என்ன இப்போது பேசும் அழகென்ன என்று ரசித்து சிரித்தவள் சரியான போக்கிரி என்று மனதில் நினைத்துக்கொண்டு இவன் சொல்லும் போதே கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று வேகவேகமாக சென்றவள் எதிரே வந்தவனின் மார்பில் மோதிக்கொண்டாள்.                                                                            

       முன்னாடி யார் வருகிறார்கள் என்று பார்க்காமல் வேகமாக வந்த தன்னுடைய முட்டாள் தனத்தை நொந்து கொண்டு சாரி சார் நான் குழந்தையை பார்த்துக்கொண்டு வந்ததால் உங்களை கவனிக்கவில்லை ஐயம் எக்ஸ்ட்ரிம்லி சாரி சார் என்று பட படவென்று கூறியவள்.என்ன ஒன்னும் பேசவில்லை என்று நிமிர்ந்து பார்த்தவள் ஆச்சரியபட்டு போனாள்.              

 

 

 

பிரிவாள்.......................


Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
07/12/2019 8:58 am  

அத்தியாயம்-8        

                                         

      ஆறடி உயரத்துடனும் கோதுமை நிறத்துடனும் கூர் நாசியுடன் சற்று முன் குழந்தைகள் விளையாடுவதை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன், இப்போது தன்னை இமைக்காமல் பார்ப்பவனின் பார்வை தன்னுள் அதிர்வை ஏற்படுத்துவதை உணர்ந்தாள். அதை பற்றி மேலும் யோசிக்காமல் ஒதுக்கியவள்.அந்த ரணகனத்திலும் பனை மரத்தில் பாதி இருப்பான் போல என்று கிண்டலாக நினைத்துக்கொண்டாள்.                                                                     

அபி கீதாவை பிடித்து உளுக்கவும் தன்னிலை அடைந்தவள் அந்த இடத்தை விட்டு எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சென்றுவிட்டாள். அவனோ கீதா கிளம்புவதை பார்த்து அவளிடம் பேசலாம் என்று வந்தவன்.அவள் கண்கள் காட்டும் ஜாடையை மயங்கி பேச வந்ததை மறந்து கீதுவின் கண்கள் காட்டும் பாஷையை ஒவ்வொன்றாக ரசித்தான்.முதலில் யாரோ மீது மோதிவிட்டோமே என்ற கலக்கம் பிறகு சரியாக கவனிக்காமல் வந்த தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி தன்னை தானே மனதில் மானசீகமாக திட்டி கொள்வது கடைசியில் அவனை மேலும் கீழும் பார்த்து கண்களால் சிரித்து அவனின் உயரத்தை கிண்டல் செய்வது போல் சென்றது என்று அனைத்தையும் பிரதி பலித்த அவள் கண்களையே பார்த்து கொண்டு இருந்தவனின் மூளையில் எப்படி ஒருவரால் கண்களாலேயே தன் உணர்வுகளை காட்டமுடிகிறது என்ற அதி முக்கிய சந்தேகம் எழுந்தது.

      

நகுலன் அப்படியே  அவளின் நினைவில் நின்றவன் தன்னிலை அடையும் போது வெகு நேரம் ஆகி இருந்தது.ச்ச்ச.......... பேச வந்த விஷயத்தைவிட்டு விட்டு அவள் கண்களை பார்த்து என்ன பேச வந்தோம் என்பதையே மறந்துவிட்டேனே,வெரி டேஞ்சரஸ் ஐஸ் என்று தலையை குழுக்கி கொண்டு இவளிடம் பேசும் போது இனி கண்ணை பார்க்கவே கூடாது என்று தன்னால் கடைபிடிக்க முடியாத ஒரு முடிவுக்கு வந்தான்.              

 

வீட்டிற்குவந்த இருவரை.ம் பார்த்த சுவாத் இடுப்பில் கை வைத்து கொண்டு முறைத்தாள்.

 

அய்யோ பாக்கறாளே இவள இப்ப சமாளிக்கனுமா என்று நினைத்தவள் அபியை பார்த்து விழித்தாள்.

 

சுவாதி இருவரையும் பார்த்து இப்ப எங்க போய்ட்டு வற்றீங்க.

 

கோவிதுக்குமா என்றான் அபி.

 

நம்பற மாதிரி இல்லையே.இவ்ளோ நேரம் என்ன வேலை கோவில்ல.                  சுதி.

 

ஈவ்னிங் கீது பார்க்கு கூத்தித்து போனாங்க அப்புறம் நான் கீதுவ கோவிலுக்கு கூத்தித்து போனேன்.கீது பாவம்மா கோவிலுக்கு போக பயமா இருக்காம் அதான் நன் கூத்தித்து போனேன்.இதுக்கு எல்லாம் தித்தாதிங்க கீது பாவம்.நான் இனிமே தெதியமா{தைரியத்ததான் புள்ள இப்புடி சொல்லுது} இருக்க சொல்றேன்.கீது வா உள்ள போலம் பசிக்கிது வள்ளி பாத்திக்கிட்ட உன்னவிட்டாதான் என் வேலை முடியும் என்றவனை கீது முறைக்க அவளை பார்த்து கண் அடித்தான் அந்த குட்டி கண்ணன்.

 

சுவாதியோ நெற்றியில் திருநீறு இருப்பதை பார்த்தவள் கோவிலுக்குதான் போய்ட்டு வந்திருக்குங்க போல என்று நினைத்து கொண்டு சென்றுவிட்டாள்                                                                         

 

கீதா வீட்டிற்குள் வந்தவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அவள் ரூமிற்குள் சென்றவிட,அவள் பின்னோடு சென்றான் அபி.

 

கீதுமா என்னாச்சு.                       அபி.

 

அபி கண்ணா பொய் சொல்றது தப்பு இல்லையா நீ அம்மாக்கிட்ட இப்புடி சொல்லலாமா.      கீதா.

 

நான் எங்க பொய் சொன்னேன்.         அபி.

 

தீம் பார்க் போனத,பார்க் போனோம் சொன்னியே......

 

ஆனா நான் தீம்பார்க் போகலனும் சொல்லலையே....

 

எனக்கு புரியல.                                                           

 

அம்மா என்ன கேட்டாங்க.அபியின் கேள்வியில் புரியாமல் கீதா பார்க்க.அம்மா இப்ப எங்க போய்ட்டு வற்றீங்கனுதானே கேட்டாங்க சோ நாம இப்ப பார்க்குக்கும், கோவிலுக்கும்தானே போய்ட்டு வந்தோம் இதுல நான் எங்க பொய் சொன்னேன்.வேணா இப்புடி சொல்லலாம்.

 

எப்புடி கீதா விழி விரித்து கேட்டாள்.

 

உண்மைய மறச்சுட்டேன். இல்ல காலைல போனத சொல்லல இல்ல.............. என்று குறும்பாக இழுத்து கீதாவின் ஆர்வமான பார்வையை பார்த்து சிரிப்புடன் எல்லாம் நானே சொல்லனுமை நீங்க கூட மானே தேனே இதெல்லாம் செர்த்து போடலாம் என்றானே பார்க்கலாம் .           

 

கீதாவோ டேய் அபி குருவை மிஞ்சின சிஷ்யன் ஆகிட்டடா என்று கொஞ்ச ஆரம்பித்தாள். இவர்கள் பேசியசை வெளியில் இருந்து கேட்ட சுவாதி உள்ளே வந்தாள்.                                                                                      

 

அபியும்,கீதாவும் அட்டென்ஷனில் நிற்க அவர்கள் அருகில் வந்தவள்.உங்க ரெண்டு பேருக்கும் பனிஷ்மண்ட் கண்டிப்பா உண்டு என்று சொல்லி என்ன பனிஷ்மண்ட் என்றும் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.                                            சுவாதியின் பனிஷ்மெண்ட்டை கேட்ட இருவரும் தகில் முகத்துடன் வெளியே வர இருவரையும் பார்த்து சிரித்தது.பெரிய டம்ளரில் இருந்த பால்.இருவரின் முகமும் அஷ்ட கோணலாக பாவமாக சுவாதி முகத்தை பார்த்தனர்.                                                                      

 

 என்ன பார்வை.சொன்னேன்ல இந்த ஒரு வாரம் புல்லா ரெண்டு பேருக்கும் நோ காபி,அணன்ட் நோ பூஸ்ட் ஒன்லி பால் அதுவும் பெரிய டம்ளர்ல.ம்........எடுத்து குடிச்சுட்டு போய் டிரெஸ் சேஞ்ச்பண்ணுங்க என்று அதட்ட.இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பாவமாக பார்த்து கொண்டே எடுத்து குடிக்க ஆரம்பித்தனர். இருவரின் மைண்ட்லயும் ஒரு பாட்டே ஓடியது அது என்னனா உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட என்ற பாடலில் விஜய் குதித்து குதித்து ஆடி கொண்டு இருந்தார்.

ஒருவாரம் கடந்த நிலையில் அன்று ஆபிஸ்க்கு சென்ற கீதாவிற்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

 

எப்போதும் போல் அன்று ஆபிஸ் போனவள் வேலையில் மூழ்கிபோனாள். பியூன் வந்து தன்னை அழைக்கும் வரை வேலையில் இருந்து அவள் கவனம் எங்கும் செல்லவில்லை.                                                                                                                         

மேடம் என்று சத்தமாக அழைத்த பிறகே பியூன் தன்னை அழைப்பதை உணர்ந்தவள்.நிமிர்ந்து என்ன அண்ணா எதற்கு இப்படி கத்துகிறீர்கள் எனக்கு நன்றாக காது கேட்கும் என்றாள் கிண்டலாக.அதற்கு அந்த வயது முதிர்ந்த பியூனோ அவளை பார்த்து மென்மையாக சிரித்து.உங்களை மூன்று முறை கூப்பிட்டேன் மேடம் நீங்கள் கவனிக்கவில்லை என்றவர் எம்.டி சார் உங்களை வர சொன்னார் என்று சொல்லிவிட்டு தன் பணி முடிந்தது என்னும் வகையில் அங்கிருந்து கிளம்பினார்.                                                                       

என்ன கீதா உனக்கு வந்த சோதனை இவர் எதுக்கு உன்னை கூப்பிடுகிறார் என்று நினைத்தவள்.சரி விடு எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா என்று தனக்குள் கூறியவாறு எம்.டி அறையை நோக்கி சென்றாள்.                                                                

      

கதவை தட்டி அனுமதி கிடைத்தவுடன் உள்ளே சென்றவள் அதிர்ந்து தான் போனாள்.ஏன் என்றால் எம்.டி சீட்டிற்கு எதிர் புறம் இருந்த சீட்டில் அமர்ந்திருந்தவன் போன வாரம் பார்க்கில் மோதியவன்.இவன் எதற்கு இங்கு வந்தான் என்று யோசிக்கும் போதே அதற்கான விடையை சொல்வது போல் அவளின் எம்.டி சந்திரன் பேச ஆரம்பித்தார்.                                         

      

வா மா கீதா உனக்கு என்கேஜ்மண்ட் முடிந்த விஷயத்தை என்னிடம் நீ சொல்லவே இல்லை சார் தான் சொன்னார்.சாரை எனக்கு நன்றாக தெரியும் போர்டு மீட்டிங்கில் நிறைய முறை சந்தித்து பேசி இருக்கிறோம் என்றார்.இவரிடம் தான் நம்முடைய பல டீலிங் முடிந்திருக்கிறது என்று பேசிக்கொண்டே போக கீதாவோ பேச்சின் ஆரம்பத்திலேயே அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்து சிலையானாள்.                                  

 

இவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தாள் இப்படி எல்லாம் சொல்லி இருப்பான் என்று மனதுக்குள் குமைந்து கொண்டு இருந்தவள் தன் எம்.டி இன்னும் பேசி கொண்டிருப்பதை உணர்ந்தவள்,சார் என்ற வார்த்தையை மட்டும் தான் சொன்னாள்.அதற்குள் அந்த பனை மரத்தில் பாதி வளர்ந்தவன் அவள் என்ன சொல்ல போகிறாள் என்பதை ஊகித்தவன் போன்று அவனே பேச ஆரம்பித்தான்.

 

சார் நேற்று இருவரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம் திடீரென முக்கியமான மீட்டிங் அரேஞ்பண்ணிவிட்டர்கள் என்னால் அவளை சந்திக்க போக முடியவில்லை,அதனால் மேடம் என்மேல் கோபத்தில் இருக்கிறார்கள்.அதை சரி செய்யதான் வெளியில் அழைத்து செல்ல உங்கள் அனுமதி கேட்கிறேன் என்று சரமாரியாக பொய்யை அவிழ்த்துவிட்டான்.                                                                                                       

அவன் பொய்யால் கோபத்தின் உச்சிக்கு சென்றதால் அவள் முகம் சிவக்க அதற்கு எம்.டியோ என்னமா நீ வேலையில் இருக்கும் உனக்கே தெரியும் திடிர் என்று சில சமயம் கிளையண்ட் மீட்டிங் அரேஞ்ஜ் பண்ணுவார்கள் என்று இதற்காக கோபப்படலாமா என்று சில பல அட்வைஸ்களை வழங்க கீதாவிற்க்கு பிபி எகிறி கொண்டிருந்தது.                                                                              

போ மா போய் அவருடன் சமாதானமாகு உனக்காகவும் வருங்காலத்தில் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்காகவும் தான் அவர் சம்பாதிக்கிறார். அது புரியாமல் இவருடன் சண்டை போடாலாமா சமாதானமாக பேசு மா என்று சொன்னார்.                                               

அவர் பேசுவதை கேட்ட இருவருமே அதிர்ந்துதான் போனர்.நகுலனோ இதற்குமேல் இவரை பேச விட்டால் இவளை சமாளிப்பது கஷ்டம் என்று உணர்ந்தவன் உடனே எழுந்து நன்றி சார்.இன்று அரை நாள் லீவ் இவளுக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறியவன் கை பிடித்து அவர் அறையில் இருந்து இழுத்து சென்றான்.

 

நகுலனின் இழுப்பிற்கு உடன் சென்றாலும் எம்.டி சொல்லிய செய்தியில் அதிர்ந்து இருந்தவள் அவன் இழுத்த இழுப்புக்கு சென்று கொண்டே மனதில் அவனுடன் மல்லுக்கட்டி கொண்டு இருந்தாள்.அவனோ அவளின் கை பிடித்து அனைவரின் முன்பும் இழுத்து சென்று கொண்ஞு இருந்தான்.

 

கீதா கைகளின் அழுத்தத்தில் தன்னிலை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் இன்னும் அதிர்ந்தாள்.மொத்த ஆபிஸிம் இவளையும் அவனையும் ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள் கடைசியில் அவர்களின் கோர்த்திருந்த கையில் ஆராய்ச்சியை முடித்தனர் அவர்களின் பார்வை கீதாவால் உணர முடியவில்லை காரணம் அவள் இன்னும் குழப்பத்திலேயே இருந்தாள். இவன் எதற்கு இப்படி ஒரு பொய்யை சொன்னான் என்ற கேள்வி பூதாகரமாக எழுந்தது அவளுள்.                                           

எம்.டி சார் சொல்வதை வைத்து பார்த்தால் இவன் பெரிய பணக்காரன் என்று தெரிகிறது.என்னிடம் பேச இவனுக்கு என்ன இருக்கிறது.போன வாரம் பார்த்ததுக்குள் என்று யோசித்தவளின் மனதில் பொறி தட்டியது.

 

Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
09/12/2019 4:38 am  

அத்தியாயம்-9

                   

கீதாவின் கேள்விக்கு பதிலாக அவனிடம் இருந்து பேசலாம் அதற்குதானே அழைத்து செல்கிறேன். அதற்குள் என்ன அவசரம்  என்றான் அலட்சியமான தோள் குலுக்கலுடன்.                                                                                     

                                                                                                                    

அவனின் ஒருமை அழைப்பு மனதை பாதிக்க ஹே நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்.நீ பாட்டுக்கு போனா என்னடா அர்த்தம்.முதன் முதலில் பார்க்கும் பெண்ணிடம் இப்படிதான் பேசுவியா மரியாதை கொடுத்து பேசு என்றாள்.

 

ஹோ அப்புடியா டார்லிங் நீ என்ன பல முறை பார்த்திருக்கிறாயா என்றான் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டும் கண்ணில் குறும்புடனும்,

 

டேய் நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்கிறாய். ஒழுங்காய் கேட்கும் கேள்விக்கு பதில் சொல் இல்லை என்னுடைய கராத்தே திறமையை காட்ட வேண்டி வரும் என்றாள் கையை முறுக்கி கொண்டு.

 

என்னடி போனா போகுதுனு பார்த்தா ஏவரா பேசற கொஞ்சம் நேரம் உன் வாய மூடறியா.

 

டேய்..... யார பாத்து டி போடற வாய ஒடச்சுருவேன் மரியாதையா பேசுடா.

 

நீ மரியாதையா பேசிருறியாடி.நீயும் என்னை இப்ப தானே பர்ஸ்ட் டைம் பாக்கற.நீ இப்படிதான் பரிஸ்ட் டைம் பாக்கறவங்ககிட்ட மரியாத இல்லாம பேசுவியா.

 

நான் மரியாதையா பேசறதும் பேசாததும் அவங்க அவங்க நடவடிக்கை பொறுத்தது.நீ ஒரு புலுகு மூட்ட சோ உனக்கு இந்த மரியாதை போதும்.

 

கீதா பேசுவதையே கடுப்புடன் கேட்டு கொண்டு இருந்தவன் திடீரென்று அவளுக்கு பின்னால் எட்டி பார்த்தான் அவன் கண்களில் தான் எதிர்பார்த்தது நடந்துவிட்டது என்ற  மகிழ்வு உண்டாக்க திரும்பி கீதாவை பார்த்து சிரித்துகொண்டே அப்படிங்களா மேடம் ஓகே மேடம் என்று பணிவு போல் கூறியவன் வாங்க மேடம் போகலாம் என்று காரினுள் அமர வைத்தான்.

 

கீதாவோ அது அந்த பயம் இருக்கட்டும் என்ற கெத்தான பார்வையோடு காரில் அமர்ந்து கொண்டாள்.

காரில் அமர்ந்த நகுலனோ மனதுக்குள் உபதேசம் எல்லாம் அடுத்தவர்களுக்குதான் போல பேச்ச பாரு இவள...... என்னபண்றது அழகா பொறந்து தொலச்சுட்டா அதனால அமைதியா இருக்க வேண்டி இருக்கு என்று புலம்பி கொண்டான்.ஆனாலும் மாமனாரே கொஞ்சம் நீங்க உங்க மகளுக்கு மரியாதை சொல்லி கொடுத்து இருக்கலாம் என்றான் மானசீகமாக.                        

 

கீதாவோ என்ன மனிதன் இவன் எந்த கேள்வி கேட்டாலும் பதில் இல்லை. இவன்பாட்டிற்கு வந்து இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டது என்கிறான்.கையை பிடித்து அனைவரின் முன்பும் இழுத்துவருகிறான்.போன வாரம்தான் பார்த்த ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது.  

 

நாம் நினைத்த விசயமாக இருக்கும் என்று அமைதியாக இருந்தாள்,இவன் பண வசதி தெரிந்ததால் இவனுடன் வருகிறேன் என்று நினைப்பான் போல என்ற கோபத்தில் மனதுக்குள் குமுறி கொண்டு இருந்தாள்.                                   

 

காரில் அமர்ந்தவன் எதிர் பார்த்த ஆள் இவர்களின் காரை நோக்கி வருவதை உணர்ந்து காரை வேகமாக கிளப்பினான்.நினைத்தது நடந்த சந்தோசத்தில் அவன் இருக்க கீதாவோ அவனை திட்டிக்கொண்டே வந்தாள். பொருத்து பொருத்து பார்த்தவன் கீதாவின் வாய் மூடாமல் பேசி கொண்டே இல்லை இல்லை அவனை திட்டி கொண்டே இருக்கவும்.இவளை எப்படிதான் இவர்கள் வீட்டில் சமாளிக்கிறார்களோ வாய் மூடாமல் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்று நினைத்து அவனை பற்றி கூற ஆரம்பித்தான்.                                                                        

ஹாய் என் பெயர் நகுலன்

 

 அதற்கு கீதாவோ இருந்துவிட்டு போ அதனால் எனக்கென்ன என்பது போல் பார்க்க அவள் பார்வையை அவன் தெளிவாக அறிந்து கொண்டான்.என்னதான் செய்கிறாள் என்று பார்ப்போம் என்று அவனின் வழக்கமான அழுத்தம் கை கொடுக்க அமைதியாக அவள் சொல்வதை கேட்டு கொண்டு இருந்தான்.

 

நகுலன் பெயரை சொன்னதும் மீண்டும் திட்ட ஆரம்பித்தாள் கீது ஓஹோ............ அப்படியா, இருவருக்கும் நிச்சயம் முடிந்த பிறகுதான் பெயரே தெரிகிறது இல்லை. என்றாள் குத்தலாக அவள் பார்வையில் புரிந்த விஷயமும் பேச்சில் இருந்த கடுப்பும் அவனுக்கும் கடுப்பை கிளப்பியது என்னமோ இவன் வேலை இல்லாமல் இவளிடம் பேசி கொண்டு இருப்பது போல் நினைப்பாள் போல, அழகா இருக்கா இல்ல அந்த திமிரு.லவ்பண்ணுனா இந்த இம்சைய எல்லாம் சமாளிக்கணுமோ என்று மிரண்டு போனான்.

 

டேய் நகுலு இந்த பெஞ்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என்று அலறியது அவன் மனசாட்சி. அதுவும்தான் என்ன பண்ணும் காரில் ஏறியதில் இருந்து ஒரு மனிதனை புல் ஸ்டாப் இல்லாமல் திட்டி கொண்டே இருந்ததில் நகுலி காதில் வாங்கினானோ இல்லையோ அவனுடன் இருக்கும் பாவத்துக்கு அதை முழுவதும் கேட்ட மனசாட்சிக்கு காதில் இரத்தம் வர ஆரம்பித்தது.அதில்தான் இந்த கேள்வி எழுந்தது.

 

நகுலனோ சிரித்து கொண்டே ஆமா என்றி பதில் அளித்தான் அதன் மனசாட்சிக்கு.மேலும் அவள் வாயை மூட வைக்க எனக்கு தெரியும் நீ சின்ன பையன் போ போய் தூங்கு எங்கள டிஸ்டர்ப்பண்ணாத என்றான்.

 

ஆமா அப்புடியே அவ உன்ன மானே தேனேனு கொஞ்சரா நான் இத டிஸ்டர்ப்பண்றேன் டேய் நீ ஒரு பெரிய பிஸ்னஸ் மேன் நினைப்பு இருக்கா உனக்கு கீழ இருபதாயிரம் பேர் வேலை செய்யறாங்க. மீட்டிங்னு வந்துட்டு இப்புடி வந்த இடத்துல தனி ரூட்விடறியே இது நீதியா,தர்மமா,அடுக்குமா.

 

டேய் நீ இப்ப போறியா இல்ல என்னோட டார்லிங்க உன்ன நோக்கி திருப்பவா.

 

ஆத்தி உன்னுடைய விதி இதுதானும் போது மாத்த முடியாது என்று அவனை பாவமாக பார்த்துவிட்டு திரும்ப கீதா பேசுவது மீண்டும் காதில் விழ ஆரம்பித்தது.இவ வாய மூடமாட்டாளா இவ கூட இவன் குடும்பம் நடத்துனா எனக்குதான் காதை அடைக்க பஞ்சு மூட்டை மூட்டையா தேவைபடும் போலயே என்று புலம்பி கொண்டே சென்றுவிட்டது.     

 

 மனசாட்சியை ஓரம்கட்டிய நகுலன் கீதாவிடம் நான் உங்களிடம் முக்கியமான விசயம் பேச வேண்டும் அதனால் தான் உங்கள் எம்.டியிடம் அப்படி சொன்னேன்.நீங்களும் புரிந்து கொண்டு சந்தேகம் வரவும்தானே என்னோடு வந்தீர்கள் இப்போது எதற்காக திட்டுகிறீர்கள் என்றான்.            

 

நகுலனின் பேச்சு கீதாவிற்கு  எல்லாம் தெரிந்துதானே என்னோடு வந்தாய் இப்போது எதற்கு இந்த அலப்பறை என்று அவன் கேட்பது போல் தோன்றியது.கீது யாரு அவன் கேள்விக்கா பதில் சொல்வாள்.அவன் கேள்வியை காற்றில்விட்டவள் அவன் மரியாதை கொடுத்து பேசியதை நினைத்து பெருமைபட்டு கொண்டு பரவால்ல கீது குட்டி பய மிரண்டுட்டான் இப்புடியே கீப்அப்பண்ணு, எப்புடி மரியாதை குடுக்கறான் பாரு என்று தனக்குதானே பேசி கொண்டாள்.ஆனாலும் நான் நினைத்தது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று முழித்தவள் தன்னை சமாளித்து கொண்டாள்.

 

ஹலோ அதுக்காக இப்படியா சொல்வீர்கள் உறவு என்றதோடு முடித்து இருக்கலாம்,இல்லையா அண்ணன் என்று சொல்லி இருக்கலாம் அதுவும் இல்லையா பிரண்டுனாவது சொல்லி இருக்கலாம் அதெல்லாம் விட்டுவிட்டு நிச்சயம் முடிந்தது என்று எதற்காக சொல்ல வேண்டும்.ஓவரா பேசறீங்க ஏதோ நானா இருக்கறதுனால இதோட விடறேன் இனிமே யாருக்கிட்டயாவது பேசனும்னா நான் தந்த ஐடியாவா பாலோபண்ணுங்க.

 

ஆமா............. இப்ப மட்டும் இவ்வளவு மரியாதையாக பேசும் நீங்கள் அங்கு ஏன் ஒருமையில் பேசினீர்கள். ஆபிஸில் அனைவரின் என் கையை பிடித்து இழுத்து வந்திருக்கிறீர்கள்.அதே போல் எல்லோரும் பார்க்க ரோட்டில் கையை பிடித்து காருக்கு இழுத்து வந்திருக்கீறீர்கள் என்ன உரிமையில் இதை எல்லாம் செய்தீர்கள் என்று இவ்வளவு நேரம் மனதில் உள்ளதை கொட்டினாள்.                                                                                                   

கீதா முதலில் பேசியது அனைத்தையும் ரசனையுடன் கேட்டு கொண்டு இருந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் வண்டி ஓட்டி கொண்டு இருந்தவன். கீதா அண்ணன் என்று சொல்ல சொன்னதை கேட்டு மனதில் ஜெர்க் ஆனான். அடிபாவி இவள அத்தான்னு சொல்ல வைக்க நான் பிளான் போட்டா இவ என்ன அண்ணானு சொல்றா,என்று நினைத்தவன்.லூசு இவள போய் நான் எதுக்கு தங்கையா நினைக்கனும் பார்த்தவுடனே கண்ண உருட்டி மயக்கிப்புட்டு தங்கச்சியாம் தொங்கச்சி........... என்று நினைத்தவன் அவளை பார்த்தான்.

 

கீதாவிடம் எனக்கு எந்த உரிமையும் இல்லைதான். ய.நான் உங்களுடன் பேச வேண்டும் அதனால் அப்படி நடந்து கொண்டேன் அதற்காக இப்போது சாரி கேட்டு கொள்கிறேன் போதுமா இனிமேலாவது அமைதியாக வருவீர்களா என்றான் குரலில் பவ்யமாகவும் கண்களில் குறும்புடனும்.

 

கீதாவோ அவன் பாவனையில் இவன்நம்மை கிண்டல் செய்கிறானா சமாதானபடுத்துகிறானா என்று புரியாமல் குழம்பி அமைதியாகிவிட கார் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் முன் நின்றது.கேள்வியாக பார்த்தவளிடம் முதலிலேயே சொன்னேனே என்ற பார்வையை நகுல் பார்க்க அமைதியாக இறங்கி நடந்தாள்.ஹோட்டலில் ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்தார்கள்.                                                             

      

என்னிடம் என்னடா பேசனும் சீக்கிரம் சொல்லி தொலையேன் நான் நினைத்த விசயமாக இருக்க வேண்டும். விநாயகா நான் உனக்கு விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு மோதகம் அதிகமாக வைக்கிறேன் என்ற வேண்டுதலை வைத்து கொண்டிருந்தாள் மனதிற்குள்.                            

      

பேரர் வரவும் என்ன சாப்பிடுகிறாய் என்பது போல் நகுல் பார்க்க எனக்கு எதுவும் வேண்டாம் என்பது போல் தலையாட்டவும் இருவருக்கும் காபி சொல்லி அனுப்பினான்.                               

      

சொல்லு நகுலன் உனக்கும் அபிக்கும் என்ன சம்பந்தம் என்றாள்.                                       

 

 

நகுலனின் பதில் என்னவாக இருக்கும் மக்களே............   

 

 


Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
11/12/2019 6:54 am  

அத்தியாயம்-10

கீதா அபிக்கும் நகுலனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கவும் அவளை ஆச்சரியமாக பார்த்தவன்.என் பெயர் நகுல் என்றவனை நக்கலாக பார்த்து அதுதான் சொல்லிட்டிங்களே என்றவளை கூர்மையாக பார்த்தவன்.என் அண்ணன் பெயர் அர்ஜூன் என்றான்.

ஓஹோ.பிரைம் மினிஸ்டர் தம்பியாடா நீ.

என்ன. நகுலன்.
அட என்னப்பா நீ.பிரைம் மினிஸ்டர் பேர்தானே அர்ஜீன் என்றாள் நக்கலாக.
அவளை கூர்மையாக பார்த்தவன் அபியின் அப்பா பேர் கூட அர்ஜீன்தான் என்றான் அழுத்தமாக.

என்ன இவன் இப்புடி பாக்கறான்.இது....ஆ............ அபி இப்புடிதானே பார்ப்பான் பிடிவாதம் பிடிக்கும்போது என்று நினைத்தவள் இவன் சித்தப்பானா அந்த பார்வை இவன்கிட்ட இருந்துதான் வந்திருக்குமாட்டுக்கு. இது குடும்ப பார்வையாட்டுக்கு என்று நினைத்தாள். தோழியின் வாழ்க்கை சரி செய்துவிடலாம் என்ற நினைவும் தோன்ற முகம் மலர்ந்து போனாள்.

கீதாவின் முகம் மலர்வதை கவனித்தவன்.இப்போது புரிகிறதா நான் யார் என்பது என்று கேட்டவன் நான் எதற்கு உங்களை பார்க்க வந்தேன் என்று புரிந்திருக்கும்.

கீதா வேகமாக தலையை ஆட்டி அர்ஜூன் எப்படி இருக்கிறார்.அவரும் வந்திருக்கிறாரா.அவருக்கும் சுவாதிக்கும் என்ன பிரச்சனை எதனால் அவள் இங்கு வந்து தனியாக கஷ்டபடுகிறாள் என்று படபடவென பொறிய நகுல் ஆச்சரியமாக கீதாவை பார்த்து உங்களுக்கு ஒன்றும் தெரியாதா அண்ணி ஒன்றும் சொல்லவில்லையா என்றான்.

அவள் அழுத்துக்கொண்டே அட போங்க சார்.அதை பற்றி பேசி என்னை கஷ்டபடுத்தாதீங்கனு சொல்லிட்டா.சரி நாமாவது நாகபட்டினம் போய் என்ன நடந்ததுனு விசாரிக்கலாம் என்று அவள் வளைகாப்பு முடிந்தவுடனே வீட்டில் அனைவரிடமும் சென்னையில் புராஜெக்ட் ஒர்க் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

என்னை தனியாக கூப்பிட்டு எந்த ஊர் என்று விசாரித்தாள் நான் சொன்னவுடன்,என் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து குழந்தை மீது சத்தியம் வேலை விசயமாக எங்கு வேண்டுமானாலும் போ என்னைபற்றியோ அவரைபற்றியோ விசாரிக்க கூடாது என்று சொல்லிவிட்டாள்.

அண்ணி அப்படி சொன்ன பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தன் தாடையை தடவியவாறு யோசனையுடன் கேட்டவன் அவளின் பதிலில் அவளை கேவலமாக பார்த்தான். {அப்புடி என்னப்பா சொன்னா}.

வேறு என்ன செய்வது சத்தியத்தை மீறினால் உம்மாச்சி கண்ண குத்திடும் அதனால் அம்மா சாப்பாடு இல்லாமல் புராஜெக்ட்னு பொய் சொன்னதால எங்கையாவது போகணுமேனு சென்னை போய் ஜாலியா சுத்திட்டு வந்தேன்.அதுல என்ன ஒரு கவலைனா ஹோட்டல் சாப்பாடுதான் பத்து நாள் காஞ்சுபோய் வந்தேன் என்றாள் சோகமாக.

அம்மா எத்தனையோ முறை அவரைபற்றி கேட்டாங்க வாய தொறக்கவே இல்ல.அபி அப்பாவோட பெயர்கூட எங்களுக்கு தெரியாது. அபியின் பிறந்த சான்றிதழ் பார்த்துதான் அவருடைய பெயரே எங்களுக்கு தெரிந்தது என்றாள் சோகமாக.
அபியின் இரண்டாவது பிறந்த நாள் அன்று அம்மா மீண்டும் அபியின் அப்பா என்று ஆரம்பித்தார்கள். அம்மாவை கை நீட்டி தடுத்தவள் அவரை பற்றி எதாவது விசாரித்தாள் உங்களிடம் கூட சொல்லாமல் எங்காவது சென்று விடுவேன் என்று சொல்லிவிட்டாள். அதன் பிறகு அந்த பேச்சை யாரும் எடுப்பதில்லை.

ஹோ.... இப்ப என்ன செய்வது என்று நகுலன் யோசிக்க ஆரம்பித்தான் ஆனால் அவன் அனுமதி இல்லாமலேயே கீதாவின் நடவடிக்கையைபற்றி ஆராய ஆரம்பித்தான்.
முதலில் எண்ணெயில் போட்ட கடுகாக பொறிந்தாள் அண்ணன் பெயர் சொன்னவுடன் அமைதியாகிவிட்டாள். அவர்கள் வாழ்வை இணைக்க இவள் கண்டிபாக உதவுவாள் என்று தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தவன் பேச ஆரம்பித்தான்.அவர்களுள் என்ன பிரச்சனை என்று எனக்கும் தெரியாது.ஆனால் எனக்கு ஓரளவு கெஸ் இருக்கிறது.

என்ன என்ன.. சீக்கிரம் சொல்லுங்க. கீதா

அண்ணன் முதன்முதலில் பார்த்து காதலித்தது சுவாதி அண்ணியின் அக்கா மாலதியைதான் என்று சொன்னவுடன்.வாட் என்று கத்திவிட்டாள் பிறகு சுற்றுபுறத்தை அறிந்து சுற்றி முற்றி பார்க்க அனைவரும் அவளையே பார்ப்பதை உணர்ந்து அனைவரிடமும் ஒரு மன்னிப்பை வேண்டி அமர்ந்தவள். ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துவிட்டாள்.

தோழியின் குணத்தைபற்றி அறிந்ததால்.இனி சுவாதியின் வாழ்வை சரிசெய்யவே இயலாதா என்று சோர்ந்து போனாள்.அவளின் அதிர்ச்சியையும் அடுத்து அவள் முகம் யோசனைக்கு சென்று சோர்ந்து போனதை பார்த்து கொண்டிருந்தவன்.

அட செல்ல குட்டி டக்கு டக்குனு ரியாக்க்ஷன் மாத்துரியே.நீ கண்ணுலயே அபிநயம் பிடிக்கிறத பார்த்தா மாமா கண்ட்ரோல் மிஸ் ஆகுது செல்லம் என்று மயங்கினான்.தீவிரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் காரணம் கேட்க.
கீதா சுவாதியின் குணத்தைபற்றி சொன்னாள். மற்றவர்கள் பொருளை தொடவே மாட்டாள் சார். மாலதி கூட இவள் டிரஸ் மாத்தி காலேஜ்கு போட்டு போவாள் ஆனால் பிறகு அவளையே அந்த டிரஸை வைத்துக்கொள்ள சொல்லிவிடுவாள். என்னுடையது எனக்கு மட்டும் தான் என்று எண்ணுபவள். ஆனால் அவள் மீது அதிக பாசம் வைத்திருந்தாள்.அவள் பயந்த சுபாவம் அதனால் எங்கு சென்றாலும் சுதி அவளுடன் காவலுக்கு செல்வாள்.

சுவாதி எப்போதும் மற்றவர்கள் பொருளுக்கு ஆசைபடக்கூடாது என்று நினைப்பவள்.உங்கள் அண்ணன் காதலித்தது மாலதியை என்றால் பிறகு அபி என்று சொல்லவந்தவள் எப்படி சொல்வது என்று நினைத்து நிறுத்திவிட்டாள்.

கீதா என்ன சொல்லவருகிறாள் என்பதை ஊகித்தவன்.எனக்கும் அதுதான் புரியவில்லை. ஆனால் நிச்சயம் என் அண்ணன் தவறான எண்ணத்தோடு எந்த விஷயமும் செய்திருக்கமாட்டார் என்றவன், தவறான நோக்கத்தோடு இருந்திருந்தாள் நிச்சயம் தன்னிலை மறக்கும் அளவு மாறி இருக்கமாட்டார் என்றும் கூறினான்.

கீதா புரியாமல் பார்ப்பதை உணர்ந்தவன். இப்போது இருக்கும் அர்ஜீன் எங்களிடம் இருந்து விலகியே இருக்கிறான்.எப்போதும் ஹாஸ்பிட்டல் நோயாளி என்றே இருக்கிறான்.அவன் சாப்பிடுகிறானா இல்லையா என்பதுகூட எங்களுக்கு தெரிவதில்லை. அவன் தான் பேசவில்லை நாமாக பேசுவோம் என்றால் என்ன கேட்டாலும் ஆமாம் இல்லை என்ற இரண்டு பதில் தான். முகத்தில் எப்போதும் சோகம் உயிரற்ற கண்களுடன் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அவனும் அண்ணியை சேடி கொண்டுதான் இருக்கிறான்.

ஊரில் விசாரித்ததில் உன்னைபற்றி தெரிந்து கொண்டு டெல்லிக்கும் உங்களை தேடி வந்தான்.அங்கு ஆபிஸில் கேட்டதற்கு உங்களைபற்றிய எந்த தகவலும் தர மறுத்துவிட்டனர்.அங்குதான் இருப்பீர்கள் என்று வெயில், மழை என்று பார்க்காமல் அலைந்து காய்ச்சலோடுதான் சென்னைக்கு வந்தான்.

காய்ச்சலில் விழுந்து எழுந்தவன்தான் அதன் பிறகு அவனை உயிர் இருந்தும் இல்லாமல் நடமாடும் மெஷினாகதான் பார்த்தோம்.இன்னும் சொல்ல போனால் நாங்கள் அவனை பார்ப்பதே அரிதாகி போனது அவனை முழுவதுமாக அவன் வேலையில் அழுத்தி கொண்டான்.இதற்க்கு முன் அவன் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும் இப்போது அந்த அர்ஜீனை தேடி கொண்டே இருக்கிறோம் என்றான் வருத்தமாக.

நகுலன் சொல்வதை கேட்ட கீதா இவர்கள் இருவரும் நிச்சயம் தவறாக புரிந்து கொண்டு பிரிந்திருப்பார்களோ இவர்களை சந்தித்து பேசவைத்தால்,எல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன் என்றாள்.அவளை கிண்டலாக பார்த்த நகுலன் அர்ஜீன் பெயர் கூறியதற்கே வீட்டை விட்டு சென்றுவிடுவேன் என்றவர் அவனை பார்த்தவுடன் வேறு எங்காவது சென்றுவிட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்றான்.

பிறகு என்னதான் சார் செய்வது என்றாள் சலிப்பாக. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றான்.

வ்வாட்..... என்று கத்தியவள் முதலில் போல் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்க பக்கத்தில் யாரும் இல்லை அதனால் தான் இப்போது சொன்னேன் என்றான்.
உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தாள் இப்படி கேட்பீர்கள் என்றவள் அவன் பதில் சொல்வதற்கு முன் என்ன சார் நிறைய கதை படிப்பீர்களா இப்படியெல்லாம் அதில்தான் நடக்கும் உண்மையில் நடக்க சாத்திய கூறுகள் குறைவு என்று நக்கலாக சொன்னவள் எழுந்து கொண்டாள்.

நான் செல்கிறேன்.நீங்கள் உளறுவதை எல்லாம் என்னால் கேட்க முடியாது என்று விறுவிறுவென அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தாள்.பேருந்து நிறுத்தத்துக்கு வந்தவள் அவனை வசைபாடி கொண்டே இருந்தாள்.
கீதா என்ன செய்வாள்.............
Page 1 / 6
Share: