Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications

உயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel  

Page 4 / 6
  RSS

Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 62
12/02/2020 1:30 pm  

ஹாய் பிரண்ட்ஸ் இப்ப நான் என்ன சொல்ல வந்துருக்கனா...... என்னோட முதல் முயற்சிக்கு சப்போர்ட்பண்ணிய அனைவருக்கும் ஒரு நன்றிய சொல்லிட்டு,அப்புடியே இந்த அர்ஜீனும்,சுவாதியும் புக்கா வந்துட்டாங்கங்கற நல்ல விஷயத்த உங்களோட ஷேர்பண்ண வந்தேன். flipkart,amazon ரெண்டுலயும் ஆர்டர்பண்ணி அபிய உங்க வீட்டுக்கு கூட்டி போய் வச்சுக்கோங்க. நன்றி பிரண்ட்ஸ்.

This post was modified 2 months ago 2 times by Suthi Suthi

Shalini M liked
ReplyQuote
Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 62
14/02/2020 2:29 pm  

அத்தியாயம்-31

 

வேகமாக ஓடி வந்த ராஜாவை பார்த்த அர்ஜீன்.என்ன ராஜா ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்று கேட்க.         

சார் அந்த லட்சுமி அம்மா இறந்துட்டாங்க சார்.சுவாதி பொண்ணு எப்பவும் போல் பார்க்க போய் இருக்கும் போல  இப்போதுதான் பார்த்திருக்குமாட்டுக்கு என்று சுவாதி அப்போதுதான் அங்கிருந்து சென்றாள் என்பதை அறியாமல் பேசி கொண்டே இருந்தான்.                                                                 

அர்ஜூன்தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டு இருந்தான்.இனி அந்த மனுசன் குடிக்க என்ன பண்ணுவான்னு பாக்கலாம். என்ன இருந்தாலும் இனி இந்த பொண்ணு தனியாகதான் இருக்க வேண்டும்.                                  

இரண்டு பொண்ண பெத்து ஒரு பொண்ணுக்கு கூட கல்யாணம் பண்ணி பார்க்கும் குடுப்பனை இல்லாமலேயே அந்த அம்மா போய் சேந்திருச்சு என்று அங்காலாய்ப்பாக கூறினான்.இருவரும் சுவாதி வீட்டுக்கு போன போது சுவாதி இனி எனக்கு யார் இருக்கா என்னையும் உங்களுடன் கூட்டி போயிருக்கலாமே அம்மா இப்படி என்னை அனாதை ஆக்கிவிட்டீர்களே என்று அழுது கொண்டு இருந்தாள்.                                                                             

சுதியை பார்த்த அர்ஜூனுக்கு கவலைபடாதே வதுமா உனக்கு நான் இருக்கிறேன்.யார் சொன்னா நீ அனாதை என்று உனக்காக என் குடும்பம் மொத்தமும் காத்திருக்கிறது. என்னைபற்றி நினைக்கவே மாட்டாயா வது நான் என்ன செய்வேன் என்று அவளின் துடிப்பை பார்த்து இவன் துடித்து கொண்டு இருந்தான்.                                                                            

 

ஆயிற்று இதோ சுவாதி அம்மா இறந்து ஒரு மாதம் முடிந்து அனைவரும் வந்து சாமி கும்பிட்டுவிட்டு சென்று விட்டனர்.வீடே வெறுச்சோடி கிடந்தது. கோவிந்தன் சுவாதிக்கு தட்டில் உணவை போட்டு எடுத்து வந்து சாப்பிடுமா என்று அன்பாக கூறினார்.                               

ஆம் மகளின் இறப்பு அவரை ஓரளவு மாற்றி இருந்தாலும் ராம் அவரை தனது கஸ்டடியில் வைத்து போதை தெளியாமல் பார்த்து கொண்டாலும் மகள் பாசம் அவரை அறிக்கத்தான் செய்தது.அப்போது எல்லாம் அவருக்கு அடியும் உதையும்தான் மிஞ்சும்,இப்போது மனைவியின் இறப்பு அவரை வெகுவாக மாற்றி இருந்தது.ஒரு பொருள் இருக்கும் போது அதன் மதிப்பு தெரிவதில்லை,இல்லாமல் போனால்தான் தெரியும் அது போல்தான் லட்சுமி விஷயத்திலும் நடந்திருந்தது.

 

லட்சுமி உடம்புக்கு முடியாமல் இருந்த போதும் இருக்கிறாள் என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு அவர் இல்லை என்ற பிறகுதான் தனிமை உரைத்தது. அந்த நேரம் உணர்ந்தார் பணத்துக்காக சேரகூடாதவர்களுடன் சேர்ந்து ஒரு மகளை இழந்தது மட்டும் இல்லாமல் இனோரு மகளுக்கு மன ரீதியான உளைச்சலை ஏற்படுத்திவிட்டோமே எவ்வளவு பெரிய பாதகம் செய்துவிட்டோம்.என்று அதை சரி செய்ய போகிறோம் என்ற வருந்தியவர் சுவாதியிடம் பாசம் காட்ட ஆரம்பித்தார்.ஆனால் உடனே எல்லாம் சரியாகாது என்பதையும் அறிந்தே இருந்தார்.

 

 அப்பாவின் பாசத்துக்கு ஏங்கிய சுவாதிக்கு இந்த பாசத்தை பெற தான் கொடுத்த விலை அதிகம் என்று நினைத்து அவரை ஏற்று கொள்ள முடியாமல் இருந்தால்.இனி இங்கு இவருடன் இருக்க முடியாது இவரது அன்பை என்னால் ஏற்க முடியாது.                                                                  

 

ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு சொத்து மேல்தான் விருப்பம் அதற்கு ஒரு வழி பண்ணிவிட்டு எங்காவது செல்ல வேண்டும் என்று பழைய சுவாதி வெளிவந்தாள். அம்மாவால் ஏற்பட்ட கோழைதனத்தை அம்மாவே அவளிடம் இருந்து எடுத்து சென்றுவிட்டதாக நினைத்தாள்.அந்த வார பேப்பர் எல்லாம் செக் செய்து வேலைக்கு அப்ளை செய்துவிட்டு இண்டர்வியூக்கு காத்திருந்தாள்.   

 

சுதி நினைத்தது போல் ஆன்லைனிலேயே இண்டர்வியூ அட்டண் செய்து செலெக்ட் ஆனாள்.வேலைக்கு வரும்படி வந்த ஆபிஸ் சென்னை என்பதை பார்த்து திருச்சிக்கு கேட்டாள்.அவர்களும் ஒரு மாதம் கழித்து வேகண்ட் வரும் அப்போது உங்களை அங்கு அப்பாயிண்ட் பண்ணுகிறோம் என்று சொல்லிவிட்டனர். அவளது திறமையை பார்த்து.             

இதோஅதோ என்று ஒரு மாதம் முடிந்து வேலையில் சேர சொல்லி கடிதம் வந்தது.                

 

தன் அம்மாவின் படத்தின் முன் அமர்ந்தவள் அடுத்து நான் என்ன செய்யட்டும் அம்மா.நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும் என்று புலம்பிவிட்டு வெகுநேரம் கழித்தே படுக்க சென்றாள்.                                                                                     

காலையில் அவளது மொபைல் விடாமல் அடிக்கவும் யார் இந்த நேரத்தில் என்று யோசித்து கொண்டே போனை எடுத்தவளை கீதாவின் படபட பேச்சே எதிர் கொண்டது.அவளிடம் பேசி அங்குதான் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் அடுத்த வாரம் வருவதாக சொல்லி வைத்தாள்.தன் அம்மாதான் தனக்கு இப்படி ஒரு வழியை வழங்கினார் என்று யோசித்து குளித்துவிட்டு கீழே வந்தவளை பார்த்த கோவிந்தன்.

 

என்னமா சீக்கிரம் எழுந்துவிட்டாயா என்று கேட்க தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றுவிட்டாள்.                                                   

தான் செய்த தவறுக்கு தன் மகள் தன்னை வெறுப்பதில் தவறில்லை என்று நினாத்தாலும் அவருக்கு அவளின் ஒட்டாத தன்மை கவலையை அதிகரித்தது.

 

அன்று வெளியே சென்று வருவதாக சென்ற சுவாதியை பின் தொடர்ந்து சென்ற ராமின் ஆட்களை மாட்டிவிட தருணம் பார்த்து கொண்டு இருந்தவள். பிக்பாக்கெட் கேசில் உள்ளே தள்ளிவிட்டு தனது குடும்ப வக்கீலை சந்தித்து சிலபல வேலைகளை செய்துவிட்டுவந்தாள்.

 

இதற்கிடையே அவளை சந்திக்க வந்த அர்ஜூனை சந்திக்க மறுத்தாள்.கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று அவன் சொல்லும் போது வீட்டு வேலைகார அம்மா அல்லது அவளது அப்பாவை உடன் வைத்து கொண்டு பேசினாள்.மற்றவர்கள் முன்பு என்ன பேசுவது.அவளை சமாதானம் செய்து திருமணத்துக்கு ஒத்து கொள்ள வைக்க வேண்டும் என்றுதான் வந்தான் ஆனால் உடன் அவர்கள் இருப்பதால் எதுவும் பேசாமல் சாதாரண ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு வருவான்.                                                      

 

பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஒரு நாள் இரவு அவர்கள் வீட்டு மாடி ஏறி குதித்து அவளது அறையை அடைந்தான்.அவள் நன்றாக தூங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன்.                   

 

என் தூக்கத்தை கெடுத்துவிட்டு நீ நன்றாக தூங்குகிறாயா என்றவனின் காதல் உள்ளம் விழித்து கொண்டு அவளை முழுவதுமாக ரசித்தது.அவள் திரும்பி படுக்கும் போதுதான் தன்னிலை உணர்ந்தவன் ஆள் மயக்கி இப்படி நீ மயக்கினாள் நானா பொறுப்பு இருந்தாலும் நீ இவ்வளவு அழகா இருக்க கூடாதுடி என்று கூறி அவளை எழுப்பினான்.                                           

யார் தன்னை எழுப்புவது என்று அரை கண் விழித்து பார்த்தவள்.அடித்து பிடித்து எழுந்தாள்.     

 

ஏய் நீ எப்படி உள்ளே வந்தாய்?எதற்கு வந்தாய்? நான்தான் உன்னை எண் கண் முன்னே வர கூடாது என்று சொன்னேனே?மீண்டும் எதற்கு வந்தாய்?என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க அவன் அவளை தொட கையை நீட்டினான்.ஏய் என்று கத்தி அவன் கையை தட்டிவிட்டவள் என்ன செய்ய போகிறாய் என்று பயத்துடன் கேட்டாள்.                                                     

 

அவளின் பயந்த பார்வை அவனை பாதித்தாலும் இப்போது அதை வெளிகாட்ட கூடாது.அவள் என்ன செய்தாலும் இதுதான் என்முடிவு என்பதை அவளுக்கு நிருபிக்கும் வரை நான் பழைய அர்ஜூனாக மாற வேண்டும் இவளுக்காக உருகும் அர்ஜூனை பார்த்தால் இவளுக்கு கொழுப்பு ஏறி விடுகிறது, இல்லையென்றால் எத்தனை முறை பேச வந்தேன் ஒரு முறையாவது என்னுடன் பேசினாளா என்ற முடிவோடு இருந்தான்.

 

அதனால் அர்ஜீன் அவளை பார்த்து சிரித்து கொண்டே அது ஒண்ணும் இல்ல செல்ல குட்டி நீ அடுக்கடுக்கா கேள்வி கேட்டு டயர்டாகி மூச்சு வாங்கினாய் அதான் நான் சரி செய்யலாம் என்று கண்ணடித்து கூற அவளுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது.                                                                              

 

முதலில் நீ இங்கிருந்து வெளியே போ.ஒரு பொண்ணோட அறைக்கு இரவு நேரத்தில் வந்திருக்கிறாய் என்று சொன்னவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்.                                 

என்ன வது டார்லிங் என்ன பேசற நீ பொண்டாட்டி ரூமுக்கு புருஷன் வர என்ன தடை என்று கேட்டான். அவன் சொல்வதை கேட்ட சுவாதி கடகடவென சிரித்து,என்னது பொண்டாட்டியா எனக்கு தெரியாமல் எப்போது திருமணம் ஆனது என்று கிண்டலாக கேட்டாள். அவள் இது போல்தான் ஏதாவது சொல்வாள் என்று தெரிந்ததால் அவளின் சிரிப்பை ரசித்து கொண்டே தாலி மட்டும்தான் கட்டவில்லை மற்றது எல்லாம் முடிந்துவிட்டதுதானே என்று அந்த எல்லாமில்...... அழுத்தம் கொடுத்து அவளின் இதழ்களை பார்த்து கொண்டே சொன்னான்.அவனுக்குதானே தெரியும் அது தந்த போதை.அவன் வார்த்தையில் அவனை நிமிர்ந்து பார்த்தவள்.அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தடுமாறி தன் தடுமாற்றத்தால் ஏற்பட்ட கோபத்தையும் அவனிடமே காட்டினாள்.                                                                                       

நடந்துவிட்டது என்று சொல்லாதே நடத்தி கொண்டாய் என்று சொல்.உன்னை பார்க்கவே எனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னது நினைவு இருந்திருந்தால் இப்படி என் முன் வந்து நிற்கமாட்டாய் என்று கூறியவளை இழுத்து அவள் இதழ்களை சிறை செய்தவன் வெகு நேரம் கழித்தே அவளை விடுத்தான்.                 

 

தேவையில்லாமல் கண்டதையும் பேசினால் இதுதான் உனக்கு தண்டனை.பேசாமல் இருந்தால் நான் வந்ததற்கான காரணத்தை சொல்லிவிட்டு சென்று விடுவேன் இல்லை என்றால் இது போல் தண்டனை கிடைக்கும் இதற்கு மேலும் தண்டனைகள் செல்லும் அது என் கையில் இல்லை.உன் கையில்தான் இருக்கிறது.                                       

நீ பேசாமல் மாமா சொல்வதை கேட்டால் நான் சீக்கிரம் சென்றுவிடுவேன் என்றவன்,அவளை கூர்மையாக பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டான் நிதானமாக.அவள் எதுவும் சொல்லாமல் இருப்பதை பார்த்து இன்று சனி கிழமை அடுத்த வாரம் திங்கட்கிழமை நமக்கு முருகன் கோவிலில் திருமணம்.கல்யாணம் முடிந்த பிறகு எங்கள் வீட்டிற்கு செல்லலாம்.                                                                                             

அம்மா ஒத்து கொள்ளமாட்டார்கள் என்பதால் இந்த பிளான் இல்லை.அவர்கள் கண்டிப்பாக ஒத்து கொள்வார்கள் உன்னை சமாளிக்க இந்த திருமண ஏற்பாடு செய்ய இந்த இரண்டு நாள் என்றவன் சரி நீ தூங்கு நான் போகிறேன் என்று திரும்பியவன் திருமணத்துக்கு பிறகு உன்னை புத்திசாலியாக மாற்றி என் காதலை நிருபிக்கிறேன் என்று சொல்லி சென்று விட்டான்.                   

 

அர்ஜீன் அறையை விட்டு வெளியேறியதும்,இழுத்து வைத்திருந்த மூச்சை நிதானமாக வெளியிட்ட சுவாதி இவன பாக்காம இருந்ததான் நமக்கு சேப் இல்லனா இவன் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட ஆரம்பிச்சுருவோம்.இவனவிட்டு விலகி இருக்கணும் என்ற முடிவுடன் இரவு உறங்க முற்பட அர்ஜீன் வந்து தூங்கவிடாமல் செய்தான்.

 

பாவி....பாவி...........படு பாவி இப்ப தூங்கவிடாம பண்ணிட்டானே இவனுக்கு எல்லாம் கும்பிபாகம்தான் நானே வேண்டிக்கிறேன் என்று அவனை வார்த்தையால் வருத்து எடுத்துவிட்டு லேட்டாக தூங்க ஆரம்பித்தாள்.அடுத்த நாள் சனி கிழமை என்பதால் குளித்து முடித்து நிதானமாக வந்தவளை பார்க்க காத்திருந்தார் ரம்யாவின் தாய்.                                                                                         

வாங்க மா எப்ப வந்தீங்க ரொம்ப நேரம் காக்க வைத்துவிட்டேனா ஒரு குரல் கொடுத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்று சமையலறையை பார்த்து,டீ கொண்டு வாங்க அக்கா என்று சமையல் வேலை செய்யும் சரசை ஏவினாள்.                                

 

சுவாதியை அமைதியாக இருக்கும்படி கூறிய ஆண்டாள் நான் டீ குடித்துவிட்டேன் வந்தவுடனே சரசு கொடுத்துவிட்டாள். நான் இப்போது வந்தது ஒரு நல்ல விஷயம் சொல்ல திருமணம் ஆகி ஒரு வருடம் ஆக போகிற நிலையில் ரம்யா நாள் தள்ளி போய் இருக்கிறாளாம்.                         

நாங்கள் அவளை பார்க்க நாளை செல்கிறோம் அதான் சொல்ல வந்தேன்.எல்லாம் எடுத்து வைக்க வேண்டும் நான் கிளம்புகிறேன் என்று சென்று விட்டார் ஆண்டாள்.                             

தனக்கு போலவே தன் மகளுக்கும் லேட்டாக குழந்தை பிறக்குமோ என்று பயந்து கொண்டு இருந்தவருக்கு இந்த நல்ல செய்தியை கேட்டவுடன் தலைகால் புரியவில்லை. அதனால் சுவாதியின் பேயறைந்தார் போன்ற முக பாவத்தையும்,இவள் பேசுவதை கவனிக்காமல் அவள் அதிர்ந்து அமர்ந்திருப்பதையும் அவர் கவனிக்கவில்லை. அவர் சென்றவுடன் வேகமாக தன் அறைக்கு சென்றவள் தான் கடைசியாக தலை குளித்த நாளை கணக்கிட்டாள். கிட்டதட்ட அறுபது நாட்கள் தள்ளி போய் இருந்தது.                                                                                   

நான் அம்மாவாக போகிறேனா?நான் அனாதை இல்லையா?என்று தன் வயிற்றை தடவி பார்த்தவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. தோழியாகவும் தாயாகவும் இருந்த மாலதியின் நினைவில் கண் கலங்கி அவளுடைய ஒரு சேலையை எடுத்தாள்.அந்த சேலைக்குள் இருந்து ஒரு டைரியும்,போட்டோவும் கீழே விழுந்தது.

 


ReplyQuote
Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 62
20/02/2020 1:59 pm  

அத்தியாயம்-31

 

சேலைக்குள் இருந்து விழுந்த டைரியையும், போட்டோவையும் பார்த்த சுவாதி, என்ன அது என்று எடுத்து பார்த்தவளின் காலடியில் பூமி நழுவியது.அது அர்ஜூனின் போட்டோ.டைரியை பிரித்து பார்த்தாள்.அவன் அட்ரஸ், குவாலிபிகேஸன் என அனைத்தும் இருந்தது.நம்ப முடியாமல் அந்த போட்டோவை பார்த்து கொண்டு இருந்தாள் சுவாதி.                                                                                     

குட்டிமா நீயும் அவரை காதலித்தாயா?ஏன் என்னிடம் சொல்லவில்லை.நீ எப்போது அவரை பார்த்தாய் என்று குழப்பி கொண்டவள்.இறுதியாக நீ நேசித்தவரை என்னால் மணக்க முடியாது.அவரும் கடமைக்காகதான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார் என்று எனக்கு தெரியும்.                                                                                                      

நான் இங்கு இருந்தால் தானே இந்த பிரச்சனை நாளையே நான் கிளம்புகிறேன் என்று சரியாக தவறான முடிவெடுத்தாள். அர்ஜூன் இங்கு திருமணத்துக்கு ராஜாவின் மூலம் ஏற்பாடு செய்தான்.திருமணம் முடிந்த பிறகு ஒரு ரிஷப்ஷன்மாறி வைத்து ஊருக்கு தெரியபடுத்தலாம். முதலில் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று அந்த வேலையில் பிஸியாக இருந்தவன்,சுவாதியை கவனிக்க தவறினான்.                                                         

ராஜாவுக்கு முன்பே அர்ஜூனின் காதல் தெரியும் என்றாலும் சுவாதிக்கு அண்ணனாக எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்தான்.                                                                  

ஞாயிற்று கிழமை நடு இரவில் நாகபட்டினத்துக்கு முழுக்கு போட்டு திருச்சி செல்ல ஆரம்பித்தாள் சுவாதி.கடந்த நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டிருந்த சுவாதி.குட்டிமா நான் எப்படி அவரை மணப்பேன் நீ காதலித்தவரை நான் எப்படி.இந்த திருமணத்துக்கு ஒத்து கொண்டிருக்கவே கூடாது

 

வள்ளி அம்மா,ராகவ் அப்பா முக்கியமாக கீதா இவர்களுக்காக சம்மதிக்கிறேன். என்வாழ்கை இனி எப்படி போக போகிறது என்று பயமாக இருக்கிறது குட்டிமா என்று வாய்விட்டு புலம்பியவள் தலையை ஆதரவாக தடவியது ஒரு கரம் யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்,கீதாதான் அமர்ந்து இருந்தாள்.கண்டதை போட்டு யோசிக்காமல் கொஞ்சநேரமாவது தூங்கு கண்ணெல்லாம் சிவந்து இருக்கு என்று சொல்ல, மந்திரத்துக்கு கட்டுபட்டவள் போல் தலையை ஆட்டியவள்,அவள் மடியிலேயே  உறங்க ஆரம்பித்தாள்.                                                                                                        

காலை வெகு நேரம் கழித்து எழுந்த சுவாதி இறவு நடந்ததை நினைத்து பெரு மூச்சை வெளியிட்டவள் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்றாள்.

 

கீதா புது புடவை சகிதம் கல்யாண பெண்ணாக ரெடியாகி ஏதோ யோசித்து கொண்டு இருந்தாள். அவளை நெருங்கிய சுதி என்ன மேடம் இப்பயே டூயட் பாட போய்டீங்களா?எங்க சுவீஸா?இல்ல காஷ்மீரா? என்று கிண்டல் செய்தவளை பார்த்து முறைத்தவள்.        

போடி போய் நீ கிளம்பி வா உனக்குதான் வெயிட்டிங். நேராக கோவிலுக்கு நம்மை வர சொல்லிவிட்டார்கள். அம்மா நார்மல் வார்டுக்கு வந்ததால்,கோவிலுக்கு செல்ல பர்மிஷன் வாங்கிவிட்டார்கள் என்று சொன்னாள்.                                           

கண்களை இறுக ஒரு முறை மூடி திறந்தவள். தலையை ஆட்டிவிட்டு தனக்காக சுந்தரி கொடுத்தனுப்பிய புடவையை எடுத்து கொண்டு சென்றாள்.பின்பு அனைத்து வேலைகளும் வேகமாக நடக்க மண்பத்தில் அமர்ந்த சுதிக்கும் சரி, கீதாவுக்கும் சரி இது சரி வருமா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.இதை கவனித்த இருவரின் கணவர்களும் அவர்களது கையை அழுத்தி அமைதிபடுத்தினர்.                                                      

 

மாங்கல்யதாரணம் முடிந்து பெரியவாக்கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க என்ற அய்யரின் குரலை ஏற்று வள்ளி,ராகவ் காலில் விழ போன சுதியை தடுத்த ராகவ்.                              

 

உன் அப்பாவை இப்போதாவது மன்னிக்க கூடாதா?சொந்த பொண்ணு கல்யாணத்துக்கு வேற்றாளு மாதிரி இருக்கிறார்.நான் வற்புறுத்தவில்லை உனக்கு விருப்பம் இல்லை என்றால் வேண்டாம் என்று முடித்துவிட்டார்.                                                                   

ராகவ் சொன்னதை கேட்டு நிமிர்ந்து பார்த்த சுவாதியின் கண்களில் முதல் வரிசையில் கண்ணீரோடு அமர்ந்திருந்த கோவிந்தன் பட்டார். முன்பைவிட அதிகம் இளைத்து,கண்கள் குழி விழுந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.                                                      

 

அர்ஜூன் சுதியை நெருங்கி சொத்து அனைத்துக்கும் பொறுப்பை நீ அவரிடம் ஒப்படைத்ததால்,மிகவும் நொந்து போனார்.இப்போது உன் அம்மா பெயரில் டிரஷ்ட் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறார்.தப்பை உணர்ந்தவர்களை தண்டிப்பதில் பயன் இல்லை.இது என் விருப்பம் என்று கூற ராகவ்வை பார்த்த சுவாதி கோவிந்தனை நோக்கி சென்று ஆசிர்வாதம் வாங்கினாள்.      

 

மகள் தன் கால்களில் விழுந்ததால் கண் கலங்கிய கோவிந்தன்.என்னை மன்னித்துவிட்டாயா சுதி என்று கண் கலங்கினார்.உங்களை மன்னிக்க முடியவில்லை ஏன் என்றால் உங்கள் இந்த மாற்றத்திற்கு நான் இரண்டு உயிரை இழக்க வேண்டியதாகி போனது.உங்களை புது உறவாக ஏற்க முயற்சிக்கிறேன் என்றவள் விறுவிறுவென ராகவை நோக்கி சென்றுவிட்டாள்.                                                                                  

ஒரு வழியாக அனைவரும் கீதாவின் வீட்டுக்கு சென்றனர். வள்ளிக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.இரு பெண்களும் கண் நிறைய கணவனுடன் அமர்ந்திருப்பதை பார்த்த அந்த தாய் மனம் பூரிப்படைந்தது.                                                                         

கீதாவின் நிலையோ பரிதாபமாக அய்யோ எப்படா இத கழட்டுவீங்க,திடீர் கல்யாணத்துக்கு யாரு இவ்வளவு பெரிய மாலையை ஆர்டர் செய்தது என்று நெளிந்து கொண்டு இருந்தவளை பார்த்த ராகவ் கீது நீ இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம்.   நீ உன் அறைக்கு சென்று ஓய்வெடு என்று சொல்ல,அவர் எப்போது சொல்வார் என்பது போல் இருந்தவள்.வேகமாக எழுந்து தன் அறைக்கு சென்றாள்.அறைக்கு வேகமாக சென்றவள் செய்த முதல் வேலை மாலையையும்,கட்டியிருந்த புடவையை கழட்டி கட்டிலில் போட்டதுதான்.ஏசியை ஆன் செய்து சிறிது நேரம் கண்களை மூடி அப்படியே அமர்ந்தாள்.கதவு திறக்கும் சத்ததில் சுவாதிதான் வந்திருப்பாள் என்று நினைத்து.                                                           

எப்படி டி இந்த புடவையை கட்டியிருக்க என்னால் சுத்தமாக முடியவில்லை.இதில் மாலை வேறு என்று கண்களை திறக்காமலே புலம்பினாள்.                                                     

தன் புலம்பலுக்கு எந்த பதிலும் வராமல் போகவே என்னடி நான் பாட்டுக்கு பே....... என்றவள் பேச்சை நிப்பாட்டிவிட்டு வேகமாக தான் கட்டிலில் போட்ட புடவையை எடுத்து மேலே போர்த்தி கொண்டு அவனை பார்த்து முறைத்தாள்.                                          

ஆம் வந்தது நகுலனேதான்.அவனும் கீதா இப்படி இருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை என்பது அவனது சங்கடமான பார்வையிலேயே தெரிந்து கொண்டாள்.உடனே நகுலன் எதிர் புறம் திரும்பி கொண்டு இருவரையும் உன் அறையிலேயே ஓய்வெடுக்க சொன்னார்கள்.அதனால்தான் வந்தேன் என்றவனது பதிலில் ஓரளவு சமாதானம் ஆனாள்.இந்த அப்பாவை என்ன செய்வது காதல் திருமணம் என்று எங்களுக்கு தனிமை தர்ராராம்.   இவரை என்னதான் செய்வதோ என்று நொந்து கொண்டாள்.

 

சரி ஒரு நிமிடம் அப்படியே நில்லுங்கள்.நான் சேஞ்ச் பண்ணிக்கிறேன்.தவறாக நினைக்காதிர்கள் என்று சொன்னவள்.தனது கப்போர்டில் இருந்து  வேறு ஆடைகளை எடுத்து மாற்ற துவங்கினாள்.                                                                              

நகுலன் அப்போதுதான் கவனித்தான் அங்கிருந்த கண்ணாடியை அச்சச்சோ இப்போது எப்படி சொல்வது என்று திணறிய சமயம் அவள் தனது மேலாடையில் கை வைத்திருந்தாள்.           

 

டேய் நகுலா இது தப்புடா.அந்த பொண்ணு வேற ஒருத்தரை விரும்புது என்று எவ்வளவோ கண்களுக்கு தடை இட்டும் கேட்காமல்.கண்ணாடி வழியாக அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். அவள் சுடிதாரை மாற்றிய பிறகு இப்போது திரும்புங்கள்.                              

 

ரொம்ப தேங்ஸ் நான் சொன்னதை தப்பாக எடுத்து கொள்ளாமல் இருந்ததுக்கு என்றவளை கூர்மையாக பார்தவன்.நான்தான் தேங்ஸ் சொல்லனும் என்றான் விஷமமாக.         

 

நீங்கள் எதுக்கு தேங்ஸ் என்று புரியாமல் பார்த்தவளை பார்த்து சமாளிக்கும் விதமாக வெளியே போக சொல்லியிருந்தால் வெளியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.அறைக்குள் போனவுடன் ஏன் வந்தாய் என்று கேள்வி கேட்டு என்னை குடைந்திருப்பார்கள்.அதிலிருந்து என்னை காப்பாற்றினீர்கள் இல்லையா அதற்கு என்று ஒருவழியாக சமாளித்தான்.                        

 

ஏசிதான் ஓடுகிறதே உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்கிறது. இந்தாங்க ரிமோட் அதிகமாக வைத்து கொள்ளுங்கள்.நான் சென்று உங்களுக்கு மாத்தி கொள்ள என்றவளை தடுத்தவன் பரவாயில்லை நான் இதிலேயே என்றவனை தடுத்து இப்படியே எவ்வளவு நேரம் இருப்பீர்கள்.இதனால்தான் உங்களுக்கு வேர்க்கிறதோ என்னவோ என்றுவிட்டு வெளியேறினாள்.     

 

அடியேய் எனக்கு இந்த டிரசால் வேர்க்கவில்லை. உன்னை டிரஸ் இல்லாமல் பார்த்ததால் வந்த வேர்வை என்று வெட்கமே இல்லாமல் நினைத்து கொண்டவன்.இடுப்புக்கு கீழ மச்சம் இருந்தா அதிகம் கோவம் வரும்னு சொல்லுவாங்களே அது உண்மைதானோ.முதல் நாள் என்னமா கோபபட்டா என்று யோசித்து கொண்டு இருந்தான்.                                                           

 

நகுலன் இந்தாங்க அப்பாகிட்ட புது வேஷ்டி வாங்கிட்டு வந்தேன் கட்டிக்கங்க.இந்த ஜூஸ் உங்களுக்குதான் பாவம் வேர்த்து விறுவிறுத்து போய்டீங்க என்று கொடுத்தவளை இமைக்காமல் பார்த்தான்.                                                                                              

என்ன நகுலன் அப்படி பாக்குறீங்க அன்னைக்கு அப்படி கோபபட்டவள் இன்று சாதாரணமாக பேசுகிறாள் என்றா,அன்னைக்கு சம்மந்தமே இல்லாமல் நீங்கள் கோபபடவும் நானும் கொஞ்சம் என்றவளை முறைத்தவன் சரி..சரி.....ரொம்ப அதிகமாகவே கோபபட்டுவிட்டேன்.இனி நாம் பிரண்ட்ஸ் இல்லயா,அதான்  உங்கள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்துவிட்டேன்.             

 

எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க இனி நீங்களும் என்றவள்.ஜூஸ் குடிச்சுட்டு நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க.நான் போய் சுவாதியுடன் இருக்கிறேன் என்றவளை,கொஞ்சம் நில்லு பேபி என்றான் நகுலன்.

 

என்னை பார்த்தால் உங்களுக்கு பேபி போல் இருக்கிறதா?நான் பேபி என்றால் என் பிரண்ட் நீங்களும் பேபியா என்னை அப்படி கூப்பிடாதீர்கள் என்று பொறிந்தாள்.             

 

பேசி முடிச்சுட்டியா எப்பவும் நீ இப்படிதானா?இல்ல இன்னைக்கு மட்டும் இப்படியா?என்று கேட்டவனை புரியாமல் பார்த்தாள்.இன்னைக்குதான் உன் பிரண்டுக்கும் மேரேஜ் ஆகியிருக்கு அவங்க சேரனும்னுதானே நாம இந்த கல்யாணம் செய்தது நீ அங்க போனா என்ன அர்த்தம் சில சமயம் நீ பண்றத பாத்தா மட்டும் தான் பெரிய பொண்ணா தெரியுது பல சமயம் நீ இன்னும் வளரவே இல்லையோனு எனக்கு தோனுது என்றான். அவனை பார்த்து அசடு வழிந்தவள் சரி நகுலன் நான் எங்கயும் போகல, வெளியே அபி இருப்பான் அவன் கூட விளையாட போறேன் என்றவள் சிட்டாக பறந்துவிட்டாள்.பின்னே நின்றால் அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி வெளியே விடமாட்டானோ என்று.                                                                                 

என்ன விளையாட போகிறாயா?.............      என்று அவன் கேட்ட கேள்வி அங்கிருந்த சுவர்களிடம்தான். அவள்தான் எப்போதோ சென்றிருந்தாலே.

 

அத்தியாயம்-32

 

கீதா விளையாட போகிறேன் என்று சொன்னதை எண்ணிய நகுலன்,இவள் ஒரு வளர்ந்த குழந்தை என்று நினைத்து ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை என்று கணவனாக சற்று முன் அவன் கண்ணாடியில் பார்த்ததை நினைத்து தனக்குள் சிரித்து கொண்டு உடை மாற்றி படுத்தவன் எழுந்திரிக்கும் போது மணி 5 என்றது அவனின் கடிகாரம்.                                         

 

ச்ச... இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமா என்று நினைத்து கொண்டே எங்க என்னோட குட்டி வால காணாம் என்று வெளியில் வந்தான்.                                                         

 

ஹாலில் அண்ணனும்,மாமாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.மற்ற சடங்குகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்றும் முதலில் வள்ளியின்</str




Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 62
20/02/2020 1:59 pm  

அத்தியாயம்-31

 

சேலைக்குள் இருந்து விழுந்த டைரியையும், போட்டோவையும் பார்த்த சுவாதி, என்ன அது என்று எடுத்து பார்த்தவளின் காலடியில் பூமி நழுவியது.அது அர்ஜூனின் போட்டோ.டைரியை பிரித்து பார்த்தாள்.அவன் அட்ரஸ், குவாலிபிகேஸன் என அனைத்தும் இருந்தது.நம்ப முடியாமல் அந்த போட்டோவை பார்த்து கொண்டு இருந்தாள் சுவாதி.                                                                                     

குட்டிமா நீயும் அவரை காதலித்தாயா?ஏன் என்னிடம் சொல்லவில்லை.நீ எப்போது அவரை பார்த்தாய் என்று குழப்பி கொண்டவள்.இறுதியாக நீ நேசித்தவரை என்னால் மணக்க முடியாது.அவரும் கடமைக்காகதான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார் என்று எனக்கு தெரியும்.                                                                                                      

நான் இங்கு இருந்தால் தானே இந்த பிரச்சனை நாளையே நான் கிளம்புகிறேன் என்று சரியாக தவறான முடிவெடுத்தாள். அர்ஜூன் இங்கு திருமணத்துக்கு ராஜாவின் மூலம் ஏற்பாடு செய்தான்.திருமணம் முடிந்த பிறகு ஒரு ரிஷப்ஷன்மாறி வைத்து ஊருக்கு தெரியபடுத்தலாம். முதலில் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று அந்த வேலையில் பிஸியாக இருந்தவன்,சுவாதியை கவனிக்க தவறினான்.                                                         

ராஜாவுக்கு முன்பே அர்ஜூனின் காதல் தெரியும் என்றாலும் சுவாதிக்கு அண்ணனாக எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்தான்.                                                                  

ஞாயிற்று கிழமை நடு இரவில் நாகபட்டினத்துக்கு முழுக்கு போட்டு திருச்சி செல்ல ஆரம்பித்தாள் சுவாதி.கடந்த நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டிருந்த சுவாதி.குட்டிமா நான் எப்படி அவரை மணப்பேன் நீ காதலித்தவரை நான் எப்படி.இந்த திருமணத்துக்கு ஒத்து கொண்டிருக்கவே கூடாது

 

வள்ளி அம்மா,ராகவ் அப்பா முக்கியமாக கீதா இவர்களுக்காக சம்மதிக்கிறேன். என்வாழ்கை இனி எப்படி போக போகிறது என்று பயமாக இருக்கிறது குட்டிமா என்று வாய்விட்டு புலம்பியவள் தலையை ஆதரவாக தடவியது ஒரு கரம் யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்,கீதாதான் அமர்ந்து இருந்தாள்.கண்டதை போட்டு யோசிக்காமல் கொஞ்சநேரமாவது தூங்கு கண்ணெல்லாம் சிவந்து இருக்கு என்று சொல்ல, மந்திரத்துக்கு கட்டுபட்டவள் போல் தலையை ஆட்டியவள்,அவள் மடியிலேயே  உறங்க ஆரம்பித்தாள்.                                                                                                        

காலை வெகு நேரம் கழித்து எழுந்த சுவாதி இறவு நடந்ததை நினைத்து பெரு மூச்சை வெளியிட்டவள் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்றாள்.

 

கீதா புது புடவை சகிதம் கல்யாண பெண்ணாக ரெடியாகி ஏதோ யோசித்து கொண்டு இருந்தாள். அவளை நெருங்கிய சுதி என்ன மேடம் இப்பயே டூயட் பாட போய்டீங்களா?எங்க சுவீஸா?இல்ல காஷ்மீரா? என்று கிண்டல் செய்தவளை பார்த்து முறைத்தவள்.        

போடி போய் நீ கிளம்பி வா உனக்குதான் வெயிட்டிங். நேராக கோவிலுக்கு நம்மை வர சொல்லிவிட்டார்கள். அம்மா நார்மல் வார்டுக்கு வந்ததால்,கோவிலுக்கு செல்ல பர்மிஷன் வாங்கிவிட்டார்கள் என்று சொன்னாள்.                                           

கண்களை இறுக ஒரு முறை மூடி திறந்தவள். தலையை ஆட்டிவிட்டு தனக்காக சுந்தரி கொடுத்தனுப்பிய புடவையை எடுத்து கொண்டு சென்றாள்.பின்பு அனைத்து வேலைகளும் வேகமாக நடக்க மண்பத்தில் அமர்ந்த சுதிக்கும் சரி, கீதாவுக்கும் சரி இது சரி வருமா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.இதை கவனித்த இருவரின் கணவர்களும் அவர்களது கையை அழுத்தி அமைதிபடுத்தினர்.                                                      

 

மாங்கல்யதாரணம் முடிந்து பெரியவாக்கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க என்ற அய்யரின் குரலை ஏற்று வள்ளி,ராகவ் காலில் விழ போன சுதியை தடுத்த ராகவ்.                              

 

உன் அப்பாவை இப்போதாவது மன்னிக்க கூடாதா?சொந்த பொண்ணு கல்யாணத்துக்கு வேற்றாளு மாதிரி இருக்கிறார்.நான் வற்புறுத்தவில்லை உனக்கு விருப்பம் இல்லை என்றால் வேண்டாம் என்று முடித்துவிட்டார்.                                                                   

ராகவ் சொன்னதை கேட்டு நிமிர்ந்து பார்த்த சுவாதியின் கண்களில் முதல் வரிசையில் கண்ணீரோடு அமர்ந்திருந்த கோவிந்தன் பட்டார். முன்பைவிட அதிகம் இளைத்து,கண்கள் குழி விழுந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.                                                      

 

அர்ஜூன் சுதியை நெருங்கி சொத்து அனைத்துக்கும் பொறுப்பை நீ அவரிடம் ஒப்படைத்ததால்,மிகவும் நொந்து போனார்.இப்போது உன் அம்மா பெயரில் டிரஷ்ட் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறார்.தப்பை உணர்ந்தவர்களை தண்டிப்பதில் பயன் இல்லை.இது என் விருப்பம் என்று கூற ராகவ்வை பார்த்த சுவாதி கோவிந்தனை நோக்கி சென்று ஆசிர்வாதம் வாங்கினாள்.      

 

மகள் தன் கால்களில் விழுந்ததால் கண் கலங்கிய கோவிந்தன்.என்னை மன்னித்துவிட்டாயா சுதி என்று கண் கலங்கினார்.உங்களை மன்னிக்க முடியவில்லை ஏன் என்றால் உங்கள் இந்த மாற்றத்திற்கு நான் இரண்டு உயிரை இழக்க வேண்டியதாகி போனது.உங்களை புது உறவாக ஏற்க முயற்சிக்கிறேன் என்றவள் விறுவிறுவென ராகவை நோக்கி சென்றுவிட்டாள்.                                                                                  

ஒரு வழியாக அனைவரும் கீதாவின் வீட்டுக்கு சென்றனர். வள்ளிக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.இரு பெண்களும் கண் நிறைய கணவனுடன் அமர்ந்திருப்பதை பார்த்த அந்த தாய் மனம் பூரிப்படைந்தது.                                                                         

கீதாவின் நிலையோ பரிதாபமாக அய்யோ எப்படா இத கழட்டுவீங்க,திடீர் கல்யாணத்துக்கு யாரு இவ்வளவு பெரிய மாலையை ஆர்டர் செய்தது என்று நெளிந்து கொண்டு இருந்தவளை பார்த்த ராகவ் கீது நீ இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம்.   நீ உன் அறைக்கு சென்று ஓய்வெடு என்று சொல்ல,அவர் எப்போது சொல்வார் என்பது போல் இருந்தவள்.வேகமாக எழுந்து தன் அறைக்கு சென்றாள்.அறைக்கு வேகமாக சென்றவள் செய்த முதல் வேலை மாலையையும்,கட்டியிருந்த புடவையை கழட்டி கட்டிலில் போட்டதுதான்.ஏசியை ஆன் செய்து சிறிது நேரம் கண்களை மூடி அப்படியே அமர்ந்தாள்.கதவு திறக்கும் சத்ததில் சுவாதிதான் வந்திருப்பாள் என்று நினைத்து.                                                           

எப்படி டி இந்த புடவையை கட்டியிருக்க என்னால் சுத்தமாக முடியவில்லை.இதில் மாலை வேறு என்று கண்களை திறக்காமலே புலம்பினாள்.                                                     

தன் புலம்பலுக்கு எந்த பதிலும் வராமல் போகவே என்னடி நான் பாட்டுக்கு பே....... என்றவள் பேச்சை நிப்பாட்டிவிட்டு வேகமாக தான் கட்டிலில் போட்ட புடவையை எடுத்து மேலே போர்த்தி கொண்டு அவனை பார்த்து முறைத்தாள்.                                          

ஆம் வந்தது நகுலனேதான்.அவனும் கீதா இப்படி இருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை என்பது அவனது சங்கடமான பார்வையிலேயே தெரிந்து கொண்டாள்.உடனே நகுலன் எதிர் புறம் திரும்பி கொண்டு இருவரையும் உன் அறையிலேயே ஓய்வெடுக்க சொன்னார்கள்.அதனால்தான் வந்தேன் என்றவனது பதிலில் ஓரளவு சமாதானம் ஆனாள்.இந்த அப்பாவை என்ன செய்வது காதல் திருமணம் என்று எங்களுக்கு தனிமை தர்ராராம்.   இவரை என்னதான் செய்வதோ என்று நொந்து கொண்டாள்.

 

சரி ஒரு நிமிடம் அப்படியே நில்லுங்கள்.நான் சேஞ்ச் பண்ணிக்கிறேன்.தவறாக நினைக்காதிர்கள் என்று சொன்னவள்.தனது கப்போர்டில் இருந்து  வேறு ஆடைகளை எடுத்து மாற்ற துவங்கினாள்.                                                                              

நகுலன் அப்போதுதான் கவனித்தான் அங்கிருந்த கண்ணாடியை அச்சச்சோ இப்போது எப்படி சொல்வது என்று திணறிய சமயம் அவள் தனது மேலாடையில் கை வைத்திருந்தாள்.           

 

டேய் நகுலா இது தப்புடா.அந்த பொண்ணு வேற ஒருத்தரை விரும்புது என்று எவ்வளவோ கண்களுக்கு தடை இட்டும் கேட்காமல்.கண்ணாடி வழியாக அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். அவள் சுடிதாரை மாற்றிய பிறகு இப்போது திரும்புங்கள்.                              

 

ரொம்ப தேங்ஸ் நான் சொன்னதை தப்பாக எடுத்து கொள்ளாமல் இருந்ததுக்கு என்றவளை கூர்மையாக பார்தவன்.நான்தான் தேங்ஸ் சொல்லனும் என்றான் விஷமமாக.         

 

நீங்கள் எதுக்கு தேங்ஸ் என்று புரியாமல் பார்த்தவளை பார்த்து சமாளிக்கும் விதமாக வெளியே போக சொல்லியிருந்தால் வெளியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.அறைக்குள் போனவுடன் ஏன் வந்தாய் என்று கேள்வி கேட்டு என்னை குடைந்திருப்பார்கள்.அதிலிருந்து என்னை காப்பாற்றினீர்கள் இல்லையா அதற்கு என்று ஒருவழியாக சமாளித்தான்.                        

 

ஏசிதான் ஓடுகிறதே உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்கிறது. இந்தாங்க ரிமோட் அதிகமாக வைத்து கொள்ளுங்கள்.நான் சென்று உங்களுக்கு மாத்தி கொள்ள என்றவளை தடுத்தவன் பரவாயில்லை நான் இதிலேயே என்றவனை தடுத்து இப்படியே எவ்வளவு நேரம் இருப்பீர்கள்.இதனால்தான் உங்களுக்கு வேர்க்கிறதோ என்னவோ என்றுவிட்டு வெளியேறினாள்.     

 

அடியேய் எனக்கு இந்த டிரசால் வேர்க்கவில்லை. உன்னை டிரஸ் இல்லாமல் பார்த்ததால் வந்த வேர்வை என்று வெட்கமே இல்லாமல் நினைத்து கொண்டவன்.இடுப்புக்கு கீழ மச்சம் இருந்தா அதிகம் கோவம் வரும்னு சொல்லுவாங்களே அது உண்மைதானோ.முதல் நாள் என்னமா கோபபட்டா என்று யோசித்து கொண்டு இருந்தான்.                                                           

 

நகுலன் இந்தாங்க அப்பாகிட்ட புது வேஷ்டி வாங்கிட்டு வந்தேன் கட்டிக்கங்க.இந்த ஜூஸ் உங்களுக்குதான் பாவம் வேர்த்து விறுவிறுத்து போய்டீங்க என்று கொடுத்தவளை இமைக்காமல் பார்த்தான்.                                                                                              

என்ன நகுலன் அப்படி பாக்குறீங்க அன்னைக்கு அப்படி கோபபட்டவள் இன்று சாதாரணமாக பேசுகிறாள் என்றா,அன்னைக்கு சம்மந்தமே இல்லாமல் நீங்கள் கோபபடவும் நானும் கொஞ்சம் என்றவளை முறைத்தவன் சரி..சரி.....ரொம்ப அதிகமாகவே கோபபட்டுவிட்டேன்.இனி நாம் பிரண்ட்ஸ் இல்லயா,அதான்  உங்கள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்துவிட்டேன்.             

 

எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க இனி நீங்களும் என்றவள்.ஜூஸ் குடிச்சுட்டு நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க.நான் போய் சுவாதியுடன் இருக்கிறேன் என்றவளை,கொஞ்சம் நில்லு பேபி என்றான் நகுலன்.

 

என்னை பார்த்தால் உங்களுக்கு பேபி போல் இருக்கிறதா?நான் பேபி என்றால் என் பிரண்ட் நீங்களும் பேபியா என்னை அப்படி கூப்பிடாதீர்கள் என்று பொறிந்தாள்.             

 

பேசி முடிச்சுட்டியா எப்பவும் நீ இப்படிதானா?இல்ல இன்னைக்கு மட்டும் இப்படியா?என்று கேட்டவனை புரியாமல் பார்த்தாள்.இன்னைக்குதான் உன் பிரண்டுக்கும் மேரேஜ் ஆகியிருக்கு அவங்க சேரனும்னுதானே நாம இந்த கல்யாணம் செய்தது நீ அங்க போனா என்ன அர்த்தம் சில சமயம் நீ பண்றத பாத்தா மட்டும் தான் பெரிய பொண்ணா தெரியுது பல சமயம் நீ இன்னும் வளரவே இல்லையோனு எனக்கு தோனுது என்றான். அவனை பார்த்து அசடு வழிந்தவள் சரி நகுலன் நான் எங்கயும் போகல, வெளியே அபி இருப்பான் அவன் கூட விளையாட போறேன் என்றவள் சிட்டாக பறந்துவிட்டாள்.பின்னே நின்றால் அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி வெளியே விடமாட்டானோ என்று.                                                                                 

என்ன விளையாட போகிறாயா?.............      என்று அவன் கேட்ட கேள்வி அங்கிருந்த சுவர்களிடம்தான். அவள்தான் எப்போதோ சென்றிருந்தாலே.

 

அத்தியாயம்-32

 

கீதா விளையாட போகிறேன் என்று சொன்னதை எண்ணிய நகுலன்,இவள் ஒரு வளர்ந்த குழந்தை என்று நினைத்து ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை என்று கணவனாக சற்று முன் அவன் கண்ணாடியில் பார்த்ததை நினைத்து தனக்குள் சிரித்து கொண்டு உடை மாற்றி படுத்தவன் எழுந்திரிக்கும் போது மணி 5 என்றது அவனின் கடிகாரம்.                                         

 

ச்ச... இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமா என்று நினைத்து கொண்டே எங்க என்னோட குட்டி வால காணாம் என்று வெளியில் வந்தான்.                                                         

 

ஹாலில் அண்ணனும்,மாமாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.மற்ற சடங்குகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்றும் முதலில் வள்ளியின் ஆப்ரேஷனை கவனிப்போம் என்று ஒன்றாக சகோதரர்கள் இருவரும் சொன்னதை கேட்டு வள்ளி முனகி கொண்டே சம்மதித்தாள்.                                              

 

இரயில் பயணம் போல் காலம் செல்ல.இதோ வள்ளியின் ஆப்ரேஷன் முடிந்து அனைவரும் இனி சென்னையில்தான் இருக்க வேண்டும் என்று சொன்னதால் சுதி அபியை பார்த்து கொள்ள என்று வேலையை ரிசைன் செய்தாள்.

 

கீதா அவர்கள் ஆபிஸின் சென்னை கிளைக்கு மாற்றல் வாங்கி கொண்டாள்.அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.                                            

 

வள்ளியும்,ராகவும் கூட சென்னை வந்துவிட்டனர். கோவிந்தன் தான் டிரஸ்டை கவனிக்க வேண்டும் என்றும் மாதம் இரு முறை வந்து செல்வதாக கூறி நாகபட்டினம் கிளம்பினார்.              

 

அன்று இரவே இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்தனர்.இனி எப்படி சமாளிக்க போகிறோம்? என்று இரு பெண்களும் அமைதியாக இருந்தனர். இதில் கீதாவின் நிலைதான் மோசமாக இருந்தது. காதலித்தவனையே மணந்திருக்கிறாய் என்று அனைவரும் அவளை கிண்டல் செய்தனர்.                                                                                          

அறைக்கு செல்வதற்கு முன் அபியுடன் விளையாட சீக்கிரம் குட்டி நகுலனையாவது இல்லை குட்டி கீதாவையாவது சீக்கிரம் ரெடி பண்ணுங்க என்று உறவுமுறையில் நாத்தனார் முறையில் இருக்கும் பெண் கூற இவள் என்ன சொல்கிறாள் என்பதை போல் பார்த்து சிரித்து மழுப்பினாள்.   இருவரும் அவரவர் அறைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

 

முதலிரவு ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத பல அனுபவங்களை தரும் இரவு.                                                                 

சுவாதிக்கு தான் என்ன நினைக்கிறோம் என்பது புரியவில்லை.ஒரு பக்கம் தன்னுடைய முதல் காதல்.தன்னுடைய வாழ்வில் அவனை மீண்டும் சந்திப்போமா?என்று ஏங்கியவளுக்கு விருந்தாக அவனுடனான திருமணம்.அவளின் காதல் மனம் துள்ளி குதித்தது என்றால் தங்கையாக மற்றொரு மனம் அக்காவின் காதலன் என்று அவனை தள்ளி வைத்தது.

 

அர்ஜீனின் மேல் கோபபட வேண்டும் காதல் கொள்ள கூடாது என்று அவள் ஆழ் மனதில் அர்ஜூன் மாலதியின் காதலன் என்று பதிய வைத்த எண்ணம் இவர்களின் வாழ்வில் சூறாவளி வீச தயாராகி கொண்டு இருந்தது.இவ்வாறு காதல் மனதுடனும் தங்கையாகவும் போராடி கொண்டு  இருந்தவள். இறுதியாக நான் முதலில் தேர்வு செய்ததுதான் இதற்கு சரியான வழி.என் காதலை நான் எப்போதும் உங்களுக்கு தெரியபடுத்தமாட்டேன்.என்னுடைய காதல் என்னிடம் இல்லை.                                       

 

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள்.நான் என் அக்காவிற்கு துரோகம் செய்யமாட்டேன் என்று தெளிவாக தவறான முடிவெடுத்தாள்.                                           

அதே மனநிலையில் தெளிவான முகத்துடன் அவனது அறைக்குள் சென்றாள். அர்ஜூன் அவளை பார்த்து சிநேகமாக சிரித்து.                                                       

 

வா வது........... என்னுடைய இந்த சந்நியாசி அறையை சம்சார அறையாக மாற்ற வந்திருக்கும் என் அழகான பொண்டாட்டியை அன்போடு வரவேற்கிறேன் என்று பொண்டாட்டி என்ற வார்த்தையை அழுத்தி கூறி வரவேற்றான்.                                                           

 

என்ன நினைத்ததை  முடித்துவிட்டோம் என்ற கர்வமா....                        சுதி.

 

இல்லை நிச்சயமாக அப்படி இல்லை வது நம் காதல் கைகூடிவிட்டது என்ற சந்தோஷம்....         அர்ஜூன்.                     

நக்கலாக சிரித்தவள் காதலா நமக்கு இடையிலா, நான் எப்போது உங்களை விரும்புவதாக சொன்னேன் எனக்கு நினைவில்லையே.                                                                    

உனக்கு பொய் சொல்ல வராது வது அதனால்தான் நீ என்னை பார்த்து கூட பேசமாட்டிக்கிறாய்.என்னை பார்த்து சொல்லு உனக்கு என்னை பிடிக்கவில்லை என்று,......        

 

என்ன தைரியம் சொல்லமாட்டேன் என்ற எண்ணமா? சரி உங்களை பார்த்தே சொல்கிறேன் என்று திரும்பியவள் அதிர்ந்து போனாள்.அவனது பார்வை கணவனாக அவள் உடலில் உரிமையாக மேய்ந்து கொண்டு இருந்தது.                                                       

 

அவனின் பார்வையில் தடுமாறி ...என்ன......என்ன செய்கிறாய்.                    

 

நான் என்ன செய்தேன்.நீ தான் ஏதோ என்னை பார்த்து சொல்லுவதாக சொன்னாய்.அதான் பார்த்து கொண்டு இருக்கிறேன்.சீக்கிரம் சொல் எனக்கு நிறைய வேலை இருக்கிறது.         

 

இந்த நேரத்தில் என்ன வேலை.என்னவோ செய்துவிட்டு போ.நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்.எனக்கு என்று சொல்ல வந்தவளை நெருங்கினான் அர்ஜூன்.                   

 

ஏய் எதற்கு பக்கத்தில் வருகிறாய்?........                                                            

அது ஒண்ணும் இல்ல வது குட்டி பொய் சொல்றவங்கள எப்படி கண்டுபுடிக்கறதுனு ஸ்ரீ புருஷானந்த சுவாமி சொல்லியிருக்கார். அதை செய்து நீ உண்மைதான் சொல்கிறாயா என்று செக் செய்ய வந்தேன்.                                                                                            

நான் உண்மையைதான் சொல்லுகிறேன் எனக்கு..... உன்னை.......உன்னை..........                       

 

என்ன ஆச்சு வதுமா என்னை எதற்கு இப்படி இழுக்கிறாய்?                                   

 

நீ முதலில் கையை எடு.....                                                                            

முடியாது செல்லம்.எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் வது.......... எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் என்று ஒரு படத்தில் சொல்வது போல் சொன்னவனை முறைத்து அதற்கு கையை என்று சொல்லவந்தவள் வாயை இறுக மூடி கொண்டாள்.                                                     

 

ஆம் வைத்திருந்த இடம் அப்படி.........                                                                 

ம்.......... சொல் வது கையை ஏன் இடையில் வைத்திருக்கிறீர்கள் என்றுதானே கேட்க வந்தாய் நானே சொல்கிறேன்.                                                                                         

மற்றவர்கள் பொய் சொன்னாள் அவர்கள் மூச்சு சீரற்று இருக்குமாம்.உடலில் அதிகமாக வியர்க்குமாம்.மூச்சை வைத்து கண்டுபிடிப்பேன் நீ கோப படுவாய்.அதான் இடையில் வைத்து செக் செய்கிறேன்.                                                                                           

நீங்கள் மூச்சை வைத்தே கண்டுபிடியுங்கள் என்று தன் இடையில் இருந்த கையை தட்டிவிட்டாள்.                                                                                                  

சரி உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்.நீ சொன்ன மாதிரியே செய்கிறேன் என்று அவள் மார்பை நோக்கி கைகளை கொண்டு செல்ல.                                                            

ஏய்......... என்று கத்திவிட்டிருந்தாள் சுவாதி.                                         

ஸ்...........எதுக்குடி இப்படி கத்துற.வெளில இருக்கறவங்க என்னபத்தி என்ன நினைப்பாங்க.

 

நீ என்ன செய்ய வந்த.நீ உன்னை என்று பேச முடியாமல் தடுமாறினாள்.                                            

 

நீ தானே மூச்சை வைத்து செக் செய்ய சொன்னாய்.நீ சொன்னதைதான் நான் செய்தேன்.அதற்கு ஏன் கத்துகிறாய்.       

 

இவன் இப்படியே பேச்சை வளர்க்க பார்க்கிறான் என்பதை உணர்ந்தவள்.சரி நான் இப்போது எதுவும் சொல்லவில்லை. அதனால் அது உண்மையா? பொய்யா?என்று கண்டுபிடிக்கும் கஷ்டம் உனக்கு இல்லை.எனக்கு தூக்கம் வருகிறது.நான் தூங்க போகிறேன்.எனக்கு தரையில்படுத்து பழக்கம் இல்லை.நீ வேண்டுமானால் கீழேபடுத்து கொள்.                                                                                      

என்ன நான் கீழேபடுக்க வேண்டுமா? முடியாது. எனக்கும் கீழேபடுத்து பழக்கம் இல்லை.          

 

என்னவோ செய்.எனக்கு தூக்கம் வருகிறது.நான் படுக்க போகிறேன்.வேகமாக சென்று கட்டிலில் படுத்து கொண்டாள்.அவளும்தான் என்ன செய்வாள்.காதல் கொண்ட மனம் அவனிடம் மயங்கி நிற்க இனி சிறிது நேரம் பேசினாலும் தன் காதல் மனதை அடக்குவது கஷ்டம் என்று முடிவுக்கு வந்தே படுக்க சென்றாள்.மனதினுள் அவனை திட்டி கொண்டுதான் இருந்தாள்.           

 

ராஸ்கல்.சரியான கேடிடா நீ.உன்னிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று வந்தவளை கொஞ்ச நேரத்தில் என்ன பாடு படுத்திவிட்டாய்.இன்று ஒரு நாளே கண்ணை கட்டுதே மிடியில்ல... என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் சொன்னவள். சுவாதி ஸ்டடி ஸ்டடி அவன் மாலதியின் காதலன்.                                                                                           

ப்ச்ச்ச்ச்....எத்தனை முறை மனதில் பதிய வைத்தாலும் எனக்கு ஏன் அவனை பார்க்கும் போது 

என்னவன் என்றே தோன்றுகிறது என்று எண்ணியவள் தன் மீதே கோபம் கொண்டாள்.அந்த கோபத்தை அர்ஜூன் மேல் காட்ட ஆரம்பித்தாள்.                                                         

 

சுவாதி சென்று படுத்துவிட்டதை பார்த்தவன் இவ்வளவு நேரம் இருந்து விளையாட்டுதனத்தை கைவிட்டு அவளுடன் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.அதனால் அவளிடம் பேச ஆரம்பித்தான்.

இங்கே பார் வது........உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ,நாம் இருவரும் கணவன் மனைவி. அதனால்...........

 

சுவாதி இடைபுகுந்து உங்களுடன் கொஞ்ச வேண்டுமா? என்று கடுகடுத்தாள்.      

 

கொஞ்சினாலும் தப்பில்லை.என்றவனை சுவாதி முறைக்க நல்ல நண்பர்களாக இருக்க முயற்சிக்கலாமே என்றுதான் சொல்ல வந்தேன்.நீ தான் தவறாக நினைத்து கொண்டாய். இந்த விஷயத்தில் மட்டும் இல்லை நிறைய விஷயங்களில், நீ தவறாகதான் நினைத்து கொண்டு இருக்கிறாய். நண்பர்களாக இருந்து இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாமே.        

 

உங்களை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.                               

 

ம்..........முதல் இரவில் காதல் கணவனிடம் உங்களை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாள்,அதற்கு முன்பே நன்கு புரிந்து வைத்திருப்பதாகதானே அர்த்தம்.        

 

ஆமாம் உங்களைபற்றி எனக்கு நன்றாக தெரியும்.சொல்லவா என்று நக்கலாக அர்ஜூனை பார்த்து கேட்டாள்.

 

அர்ஜீனோ சிறகு இல்லாமல் வானத்தில் பறந்தான். காதல் மனைவி தன்னை முழுவதுமாக புரிந்து வைத்துள்ளேன் என்று சொல்வது எந்த கணவனுக்கும் பெருமைதானே.ஆனால் ரொம்ப வானத்தில் பறக்காதே கீழே விழும்போது அடி பெரிதாக இருக்கும் என்று சொன்ன விதியின் சத்தம் அவனுக்கு கேட்கவில்லை பாவம்.அது சொன்னது போலவே அவனின் மனைவி அவனை தரையில் விழவைத்தாள் அவளது விஷம் தடவிய வார்த்தைகளால்.

 

உங்களைபற்றி சொல்கிறேன் நன்றாக காது குளிர கேட்டு கொள்ளுங்கள் கரெக்ட்டாக சொன்னேனா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்றவள் அவனை அனல் தெறிக்க பார்த்து,நீங்கள் ஒரு பச்சோந்தி நிமிடத்திற்கு நிமிடம் மனதை மாற்றி கொள்ளும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்.ஆபத்து என்று உதவி கேட்டு வந்த பெண்ணை பயன்படுத்தி கொண்ட மாமனிதர்.தனக்கு ஒன்று வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் மற்றவரின் உயிரை பணயமாக வைத்து கூட அந்த காரியத்தை சாதித்து கொள்ளும் பெரிய பிஸ்னஸ் மேன் என்று அவனை வார்த்தை அம்புகளால் துளைத்தாள்.அப்புறம் என்று சொல்லி கொண்டே போனவள்.                

 

அர்ஜூனின் அடிபட்ட பார்வையை கண்டு பேச்சை நிறுத்தினாள்.செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிப்பதில் பலன் இல்லை.நீ உண்மையை புரிந்து கொள்ளும் வரை நான் காத்திருப்பேன் என்று கூறியவன் கண்களை இறுக மூடி திறந்தான்.கட்டில் பெரியதுதானே இருவருமே படுத்து கொள்ளலாம். முறைக்காதே.என் சுண்டு விரல் கூட உன் மேல்படாது என்று அவனும் படுத்துவிட்டான்.                            

 

சற்று நேரம் உறங்குவது போல் படுத்திருந்தவள்.புது இடம் மனதுக்கு பிடித்தவனே என்றாலும் ஒரு ஆண் மகனுடன் ஒரே படுக்கையில் படுத்திருப்பது அவளுக்கு என்னவோ போல் இருந்தது.அதுமட்டும் இல்லாமல் கடைசியாக பார்த்தானே ஒரு பார்வை. என்ன பார்வை அது என்னை பார்த்து நீ என்னை புரிந்து கொண்டது அவ்வளவுதானா என்பது போல் அதே அதேதான்.அந்த பார்வை என்னிடம் அதே கேள்விதான் கேட்டது.கடைசியில் கண்ணை மூடி திறந்த போது சிவந்திருந்த மாதிரி தெரிந்ததே, அழுதிருப்பானோ.நன்றாக பார்க்கும் முன் போய் படுத்துவிட்டான்.                                           

 

தான் பேசிய வார்த்தை அவனை எந்த அளவுக்கு காயபடுத்தியிருக்கும் என்பதை அறிந்த அவளது காதல் மனது அவனுக்காக கண்ணீர் சிந்தியது.நான் என்ன செய்ய அஜூ நீ என் உயிர்.ஆனால் உன்னிடம் நெருங்கவிடாமல் என் சகோதர பாசம் தடுக்கிறது. நான் நன்றாக பேசினால் எங்கு தடுமாறிவிடுவேனோ என்ற பயம்தான் உன் மேல் கோபமாக திரும்புகிறது என்று கண்களை மூடி கொண்டு அழுதாள்.                                                                       

 

அவளின் கண்ணீரை மென்மையாக ஒரு கரம் துடைக்கவும் திடுக்கிட்டு விழித்து எழுந்தாள்.அவன் அவளையே பார்த்து கொண்டு இந்த கண்ணீர் எனக்கானது என்றால் தேவையில்லாமல் உன் கண்ணீரை வீணாக்குகிறாய் என்றுதான் அர்த்தம்.                            

 

என் செயல்கள் உன்னை எந்த அளவு பாதித்திருக்கும் என்றும் என் மேலான உன் காதலின் அளவும் இப்போது எனக்கு நன்றாக புரிகிறது.                                                                          

என்ன பார்க்கிறாய்?என்னை காயபடுத்த நீ கூறிய வார்த்தைகள் உன்னுடைய காதல் மனதையும் பாதித்திருக்கிறது. அதற்கான கண்ணீர்தான் இது.நீ எதற்காக என்னிடம் இப்படி பேசினாய் என்று என்னால் உணர முடிகிறது.                                                           

 

உன் விருப்பம் இல்லாமல் இங்கு எதுவும் நடக்காது. நான் முதலில் சொன்னது போல் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். நம் மகனுக்காக நீ இந்த முயற்சி செய்வாய் என்று நம்புகிறேன். இப்போது படுத்து தூங்கு என்றவன் எழுந்தான்.                                                          

 

நான் சோபாவில் படுக்கிறேன்.என் மீது பயமில்லாமல் தூங்கு என்று சிரிப்புடன் சொன்னாலும் அவனது கண்களை அந்த சிரிப்பு எட்டவில்லை என்பதை அறிந்து கொண்டவள் ஒன்றும் சொல்லாமல் படுத்து கொண்டாள்.                                                             

இவர்கள் நிலை இப்படி இருக்க மற்றொரு அறையில் கீதாவிடம் மாட்டி முழித்து கொண்டு இருந்தான் நகுலன்.   

 

அவனை அடுத்த எபில பார்க்கலாம்.          


ReplyQuote
Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 62
21/02/2020 5:14 pm  

அத்தியாயம்-33

 

நகுலனின் அறைக்குள் வேகமாக நுழைந்த கீதா அவனை கண்டு கொள்ளாமல் பெட்டில் அமர்ந்து வேக வேக மூச்சுக்களை எடுத்து தன்னை சமாளித்து கொண்டு இருந்தாள்.                       

 

என்ன பேபி என்ன ஆச்சு?            நகுலன்.                                                                    

யார் மேல் இவ்வளவு கோபம்?என்று அவள் அருகில் டிரஸிங் டேபிள் சேரை இழுத்து போட்டு உட்கார்ந்து கேட்டான்.                                                                              

 

உங்கள் மேல்தான் என் கோபம்.      கீதா                                                         

நீ கோபப்படும் அளவிற்கு நான் இப்போது என்ன செய்தேன். பார் இப்போது கூட உன்னைவிட்டு இரண்டு அடி தள்ளிதானே உட்கார்ந்து இருக்கிறேன்.                                       

உங்களை யார் நாம் காதலர்கள் என்று எல்லோரிடமும் சொல்ல சொன்னது.                   

 

ஏன்? உன் காதலன் எதுவும் சந்தேகபடுகிறாரா? போன் செய்து கொடு நான் பேசுகிறேன்.         

 

ஹம்ம்...........ரொம்ப கஷ்டம் இல்லாத காதலனை நான் எங்கு பேச சொல்வது இதில் என் மீது சந்தேகம் வேறுபடுகிறானா?இவனது கற்பனை திறனுக்கு அளவே இல்லையா ஆண்டவா? என்று வாய்விட்டே முணுமுணுப்பாக புலம்பியவள்.அப்போதுதான் தான் சத்தமாக புலம்பியதை எண்ணி தன் தலையில்தட்டி கொண்டு வேகமாக நகுலனை பார்த்தாள். அவள் சொல்வது அனைத்தையும் கேட்காதவன் போல் முகத்தை வைத்து கொண்டு ஏதாவது சொன்னாயா? என் காதில் சரியாக விழவில்லை கொஞ்சம் சத்தமாக சொல் என்றான் அப்பாவியாக.                                           

 

கீதாவின் புலம்பல் காதில் விழுந்த பிறகே நிம்மதியானான் நகுலன்.பின்னே தான் காதலித்தவள் வேறு ஒருவனை காதலிப்பதாக சொன்னாள் எந்த காதலன்தான் நிம்மதியாக இருப்பான்.                                                                 

 

மேலும் நான்தான் திருமணத்திற்கு முன்பே உன் காதலனுடன் பேசுகிறேன் என்றேன்.நீதான் அவருக்கு டைம் இல்லை என்றாய்

 

கிராதகி ஒருவனை காதலிக்கிறேன் என்று சொல்லி என்னையே ஏமாற்றிவிட்டாயே?நானும் அப்போது இருந்த குழப்பத்தில் நீ சொன்னதை எல்லாம் நம்பி.அதற்கு ஏற்றார் போல் டைவர்ஸ் பிளான் வேறு.உன்னை என்ன செய்கிறேன் பார்.நீ செய்த வேலையை உனக்கே திருப்புகிறேன் என்று மனதுக்குள் கருவி கொண்டு வெளியில் ஒன்றும் தெரியாதவன் போன்று அவளின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்.                                                                            

நகுலனின் தெளிவான முகத்தை பார்த்தவள். நிஜமாகவே நான் சொன்னது இவனுக்கு கேட்கவில்லையா?பொய் சொல்கிறானா? இவன் முகத்தை பார்த்தால் கேட்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.கீது உன் வாயே உனக்கு எதிரி அதை முதலில் அடக்கு என்று தனக்குள் பேசி கொண்டே குழப்பமாக நகுலனை பார்த்து கொண்டு இருந்தாள்.                              

அவள் முகத்திற்கு நேராக சொடக்கு போட்டவன், என்ன மேடம் எந்த உலகத்தில் இருக்கீங்க? வந்தவுடனே பொறிஞ்ஜீங்க?இப்ப சைலண்ட் ஆகிட்டீங்க?  நகுலன்.                       

 

ஸ்......... கீது என்று ஒரு கண் மூடி,தன் பற்களால் இதழை கடித்து தன்னையே தலையில் தட்டி கொண்டாள்.                                                                                           

நகுலன் அவள் செயலில் தடுமாறிதான் போனான். இவளுக்கு வேறு வேலை இல்லை.திருமணத்தன்று அப்படிதான் என்னை வேர்த்து விறு விறுக்க வைத்தாள்.இப்போது இப்படி கண்ணடிக்கிறாள். இவளது அசைவு என்னை கட்டி அவளிடம் இழுத்து போய்விடும் போல இருக்கிறதே,இல்லை இது சரிபட்டு வராது என்ற முடிவுக்கு வந்தவன்.                                 

நீ இப்படியே யோசித்து கொண்டு இரு நான் தூங்குகிறேன் என்று எழுந்து கட்டிலுக்கு அந்த பக்கம் சென்று படுத்து கொண்டான்.                                                                           

நகுலன் நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போய்படு என்று அவனை நெருங்கி கேட்டாள்.     

 

ஏய்....ஏண்டி இப்படி படுத்துற?   நகுலன்.                                                         

என்னது டி யா?நானும் டா போடுவேன் நகுலன்.   கீதா.                                               

நீ என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு. இப்போது எதற்கு என் தூக்கத்தை கெடுக்கிறாய்?                                                                                          

ஏண்டா வெளிய என்ன ரவுண்டு கட்டி அடிச்சு அனுப்பராங்க.நீ என்னன்னா.நான் கேட்கற கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டிக்கிற.                                                            

என்னது அடிச்சாங்களா?யாரு அடிச்சா?எதற்கு அடிச்சாங்க? என்று பதறி போய் கேட்டான்.      அவனை பார்த்து நக்கலாக சிரித்து என்னை அடிக்க எல்லாம் முடியாது கிண்டல்பண்ணாங்க அததான் அப்படி சொன்னேன்.     

 

கிண்டலா?எனக்கு புரியவில்லை.    நகுலன்.                                                                                       

காதலித்தவனையே மணந்துவிட்டாய்.முன்பை போல் இருக்காதே.சீக்கிரம் அபிக்கு விளையாட ஒரு ஆளை ரெடி பண்ணு பிளா......பிளா.....பிளா........இதை எல்லாம் கேட்கும் போது எனக்கு எவ்வளவு அன்னீசியா இருந்தது தெரியுமா?நீ பாட்டுக்கு கூலா உள்ள வந்து உட்காந்துகிட்ட வெளில நான்பட்ட பாடு எனக்குதானே தெரியும்.                                                       

கீதா சொல்வதை கேட்டவன் அதற்கு பெயர் அன்னீசி இல்லடி வெட்கம் இது கூட தெரில இவள வச்சி ரொம்ப கஷ்டம் என்று புலம்பியவன்.இவளை பலி வாங்க இதுதான் சமயம்.இவள் என்னிடம் பொய் சொன்னதற்கான தண்டனை கொடுக்க என்று மனதுக்குள் முடிவுக்கு வந்தவன்.இனி நீயே வந்து என்கிட்ட காதல சொல்ல வைக்கிறேன் நானா உன்கிட்ட வரமாட்டேன் போடி என்று மனதுக்குள் நினைத்தவன்,அவள் சொன்னதையே திருப்பி அவளிடம் படிக்க ஆரம்பித்தான்.தான் சொல்லும் பொய்யால் தான் பல கஷ்டங்களை பட போகிறோம் என்பதை அறியாமல்.அவள் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்.                                              

 

இங்க பார் பேபி..   நகுலன்.                                                                   

நான் ஒன்றும் பேபி இல்லை.எனக்கு இருபத்து இரண்டு வயது வர போகிறது.என் பெயரை சொல்லி கூப்பிடுங்கள்.                                                                       

 

முடியாது.இப்போது இதுவா முக்கியம்.நான் சொல்ல வந்த விஷயத்தை நன்றாக கேட்டு கொள். எல்லோரிடமும் நாம் காதலர்கள் என்று நான் சொல்லவில்லை.அம்மா சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இந்த அம்மா ஏன் தான் இப்படி செய்கிறார்களோ இந்த விஷயம் என் லட்டு காதுக்கு போனது நான் எப்படி சமாளிப்பேன் என்று ஓர கண்ணால் அவளை பார்த்து கொண்டே புலம்பினான்.                                                     

 

ஹே........நீ லவ் பண்றியா?கவல படாதே உன் லவ்வரை நான் சமாளிக்கிறேன்.   கீதா          

 

நகுலனின் நிலமை அட கடவுளே என்று ஆனது.ஏண்டி நான் ஒருத்திய காதலிக்கிறேன்னு சொல்றேன். உனக்கு உடனே கோபம் வர வேண்டாம் கொஞ்சம் ஏமாற்றத்தையாவது உன் முகத்தில் பார்த்திருந்தாள் நம்பிக்கை வந்திருக்கும். சரியான தத்தி போல,,,,டேய் நகுலா...எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தியோ இப்படி ஒரு தத்தி பொண்டாட்டியா கிடைக்க என்று மனதுக்குள் புலம்பினான்.

 

புலம்பியவனின் மனசாட்சி டேய் முதலில் இந்த அழகு எனக்கு இல்லையா? என்று பெரு மூச்சுவிட்டு அதற்கு எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னாய் என்ற மனசாட்சி தலையில் தட்டி அவள் என் பொண்டாட்டி நான் என்ன வேண்டுமானலும் பேசுவேன் தேவையில்லாமல் ஆஜர் ஆகாதே என்று  அமுக்கினான்.                                                                                              

கீதாவை பார்த்து கொண்டே என் லட்டு ரொம்ப பொசசிவ்.என்னிடம் பெண்கள் அட்ரஸ் கேட்டாளே அவர்களை ஓட ஓட விரட்டுவாள்.அதனால் நானே பார்த்து கொள்கிறேன்.நீ அவர்கள் பேசியதை மனதில் வைத்து கொள்ளாதே.                                                                

நாம் இருவருக்குமே இது ஒரு காண்ரேக்ட் போடாத பிஸ்னஸ்.எப்போது வேண்டுமானாலும் அர்ஜூன் அண்ணாவும்,சுவாதி அண்ணியும் சேரலாம்.அதன் பிறகு நாம் பிரிந்து தானே ஆக வேண்டும் என்று சத்தமில்லாமல் அவளுக்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு. நான் தூங்குகிறேன் மை லட்டு இஸ் வெயிட்டிங் பார் மை டிரீம் என்று படுத்து கொண்டான்.                        

 


Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 62
25/02/2020 4:19 am  

அத்தியாயம்-34

     

நகுலன் சொல்வதை கேட்ட கீதாவிற்கு ஏமாற்ற உணர்வு வந்தது போல் இருந்தது.எதற்காக என்று யோசித்து கொண்டே திரும்பி படுத்திருந்த நகுலனின் முதுகை வெரித்து கொண்டு இருந்தவள் அப்படியே வெகு நேரம் கழித்து தூங்கியும் போனாள்.

 

அடுத்த நாள் காலையில் கண் விழித்த அர்ஜூன் முதலில் பார்தது குளித்து முடித்து மங்களகரமாக வெளியே செல்ல தயாராகி கொண்டு இருந்த சுவாதியைதான்.அவளின் அழகில் சொக்கி போய் பார்த்து கொண்டு இருந்தவன் மகனின் கதவு தட்டும் சத்தத்தில் மீண்டான்.                                                                 

அப்பா...........அபி                                                                                

டேய் அபி கண்ணா அதுக்குள்ள எழுந்திட்டீங்களா? அர்ஜூன் 

 

போங்க அப்பா நீங்கதான் பேட் பாய்.நான் காலையில் எழுந்து குளித்துவிட்டு வந்துவிட்டேன். நீங்கள் இன்னும் தூங்குறீங்க என்று மூக்கை சுருக்கி மகன் மழலையில் பேசும் அழகை கண்டு வியந்தவன். அது ஒன்னும் இல்லடா கண்ணா நான் சீக்கிரம் எழுந்திருப்பேன் உன் அம்மாவால்தான் லேட் என்று சுவாதியை ஓர கண்ணால் பார்த்து கொண்டே சொன்னான்.                                                  

 

நான் உங்களை என்ன செய்தேன்.நீங்கள்தானே லேட்டாக எழுந்தீர்கள்.    சுவாதி.                 

 

உன்னால்தான் நான் லேட்டாக தூங்கினேன்.அதனால் லேட்டாக எழுந்திருத்தேன்.              

 

என்ன?... சுவாதி                                                                               

உங்களுடன் என்னால் பேச முடியாது.வா ராஜா நாம் போகலாம்.உன் அப்பாவுக்கு எப்போது கீழே போக வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது வரட்டும்.                                         

 

இருவரும் கீழே செல்வதை பார்த்த அர்ஜூன் மனம் வாடியது.விளையாட்டாக கூட என்னிடம் அதிகமாக ஒரு வார்த்தை பேச மாட்டாயா?நான் பேசினாலும் பட்டு கத்தரித்தார் போல் பேசி முடித்துவிடுகிறாய் என்று பெருமூச்சு விட்டு எழுந்து குளிக்க சென்றான்.                               

 

நகுலனின் அறையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்த நகுலனுக்கு தன் மார்பில் பஞ்சு பொதியாய் தலை வைத்து குழந்தையாய் தூங்கி கொண்டு இருந்த மனைவியின் முகம்தான் முதலில் தெரிந்தது.                                                                                     

காலை வேளையில் இவ்வளவு நெருக்கத்தில் தன்னவளை பார்த்தவன் கனவோ என்றுதான் முதலில் நினைத்தான்.பிறகு நடந்தவை நினைவில் வர சிரித்து கொண்டே அவள் முகத்தை பார்த்து கொண்டு இருந்தவன்.தன்னை கட்டுபடுத்த முடியாமல் அவள் இதழில் மென்மையாக இதழ் பதித்தான்.                                                                                       

லேசாக அவள் அசையவும் மீண்டும் கண்களை மூடி படுத்து கொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தான்.                                                                  

விடாமல் கதவு தட்டும் சத்தத்தில் கண் விழித்தவள்.ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் விழித்தவள்.தன் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யத்தை பார்த்து நடந்ததை உணர்ந்து,பக்கத்தில் பார்க்க நகுலன் தூங்கி கொண்டு இருந்தான்.                                        

 

தன் தலையில் தட்டி கொண்டவள்.ஏன்டி கீதா இப்படி பண்ற உன் அறையில் பொம்மையை கட்டி பிடித்து தூங்குவது போல் இவனை பிடித்து தூங்கி கொண்டு இருக்கிறாயே உனக்கு ஏதாவது இருக்கிறதா?நல்ல வேலை இவன் எழுவதற்குள் எழுந்து விட்டோம் இல்லை என்றால் உன்னைபற்றி என்ன நினைத்திருப்பான் என்று தன்னையே வாய்விட்டு மெதுவாக திட்டி கொண்டாள்.             

 

கதவு தட்டும் சத்தம் விடாமல் கேட்க இதோ வருகிறேன் என்று குரல் கொடுத்துவிட்டு கட்டிலில் இருந்து இறங்கினாள்.பழக்கம் இல்லாத புடவை காலை தட்டிவிட என்ன செய்யலாம் என்று யோசித்தவள்.நகுலனை பார்க்க அவன் தூங்குகிறான் என்று நினைத்து கொண்டு புடவையை கழட்டி போர்வை போல் போர்த்தி கொண்டு சென்று கதவை திறந்தாள்.                             

 

வெளியே சுவாதி டீ கப்புடன் நின்று கொண்டு இருந்தாள்.

 

நீ தானா நான் யாரோ என்று பயந்துவிட்டேன்.வா சுதி உள்ளே வா இந்த சாரி கட்டிவிடு எனக்குதான் சேரி கட்ட தெரியாதுனு உனக்கு தெரியும்ல,சீக்கிரம் கட்டிவிடு நான் அபி குட்டி என்ன செய்கிறான் என்று பார்க்க போக வேண்டும்.                                                                                               

நைட் தூங்க நேரமாகிடுச்சு அதான் இப்ப தூங்கிட்டேன். அபி எங்கே?என்னை கேட்டானா? அடுக்கடுக்கான அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் சுவதி அவளை கிண்டலாக பார்த்து சிரித்து கொண்டே இருக்கவும் கடுப்பானவள்.                                                           

 

என்னடி எதுக்கு இப்படி சிரிக்கற?   கீதா.                                                        

அவள் நின்ற கோலத்தை கண்ட சுவாதி. நிலமையை  வேறு விதமாக புரிந்து கொண்டு அறைக்கு வெளியிலேயே நின்று கொண்டு அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.                                 

 

என்ன மேடம் என்னை சேரி கட்ட சொல்றீங்க?இனி உங்களுக்கு புடவை கட்டிவிடதானே ஒருவரை அப்பாயிண்ட் செய்திருக்கிறது. அவரிடமே கட்டிகோ என்று தோழியாக கிண்டல் செய்துவிட்டு.   முதலில் சென்று தலைக்கு குளித்துவிட்டு வேறு சேரியை கட்டு அதன் பிறகு தான் கீழே வர வேண்டும்.அபி கீழே விளையாடி கொண்டு இருக்கிறான் என்று தாயாக கண்டித்துவிட்டு டீ கப்புகளை கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.இவள் ஏன் இப்படி சொல்கிறாள் என்று புரியாமல்.டீ ட்ரேயை வாங்கியவள்.உள்ளே இருக்கும் ஸ்டாண்டில் வைத்துவிட்டு திரும்பி நகுலனை பார்த்தாள்.அவன் இன்னும் தூங்குவதை பார்த்துவிட்டு இவன் எழுவதற்குள் வேறு ஆடைகளை எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொள்ள வேண்டும் என்று வேகமாக பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்

 

நடப்பது அனைத்தையும் கேட்டு கொண்டும் பார்த்து கொண்டும் இருந்த நகுலனுக்கு பயங்கர சிரிப்பு வர அவள் பத்ரூமிற்குள் சென்றது தெரிந்ததும்.வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.                                                                               

அய்யோ......லட்டு ......முடியலடி நீ இவ்ளோ அப்பாவினு எனக்கு தெரியாம போச்சே.எப்புடி.எப்புடி நைட் தூங்க நேரமாச்சா.நீ என்ன நினச்சு சொன்ன அவங்க என்ன புரிஞ்சுகிட்டாங்கனு புரியாம கைல டீ ட்ரேய வச்சுக்கிட்டு முழிச்ச பாரு ஹாஹாஹா.....முடியல போ..     

 

உங்கிட்ட இருக்க இந்த இன்னோசண்ட்குணம்தான் எனக்கு புடுச்சுது.இருந்தாலும் நீ இந்த மாமாகிட்ட பொய் சொல்லியிருக்க கூடாது.அதுக்கான தண்டனை கண்டிப்பா உனக்கு உண்டு.                                                                                                

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அப்போதுதான் எழுபவன் போல் பார்த்தான்.கீதா சுடிதாருடன் வேகவேகமாக வெளியே வந்து பொட்டு கூட வைக்கமல் வெளியே செல்ல போனவள்.நகுலனின் நில் என்ற வார்த்தையை கேட்டு நின்று திரும்பி பார்த்தாள்.                      

 

பொட்டு வைத்துவிட்டு போ.இல்லையென்றாள் அம்மா வருத்தபடுவார்கள்.              

 

ம்ம்ம்ம்ம்ம்.....தலையாட்டியவள் பொட்டு வைத்து கொண்டு திரும்பியவள்.அதிர்ந்து பின்னே நகர்ந்தாள்.அவளை நெருங்கினார் போல் நகுலன் வெற்று மார்பில் நின்றதே அதற்கு காரணம்.  

 

..என்ன...?  கீதா                                                                               

நெற்றியில் குங்குமம் நீ வைக்கவில்லை என்று மேலும் அவளை நெருங்கி சீண்டினான்.           

 

இதற்குதான் இப்படி வந்தீர்களா?நான் வைத்து கொள்கிறேன் நீங்கள் நகருங்கள்.              

 

நான் நகர்வது இருக்கட்டும் நீ ஏன் புடவை கட்டாமல் சுடிதார் போட்டு இருக்கிறாய் என்று அவளை உரசினார் போல் நின்று கொண்டே பேச்சு கொடுத்தான்.                                    

 

..அது எனக்கு புடவை கட்ட தெரியாது.                                                                

என்ன புடவை கட்ட தெரியாதா?என்னோட லட்டு சூப்பரா புடவை கட்டுவா தெரியுமா?நான் அவளை அடிகடி சேரி கட்ட சொல்வேன்.எனக்காக கட்டுவாள்.நீ புடவையே கட்ட தெரியாதுனு சொல்ற.ஹோ..ஹோ மேடம் கொஞ்ச நாள் டெல்லில இருந்ததால நம்ம கல்ச்சர் மறந்திருச்சோ? அவன் வார்த்தையில் கோபம் கொண்ட கீதா.கோபமாக அவன் மார்பில் கை வைத்து தள்ளி நிற்க வைத்துவிட்டு இங்க பாருங்க நீங்க என்னை மற்றவர்களோடு கம்ப்பேர் பண்ணுவதை நிறுத்துங்கள்.                                                                                               

உங்க லட்டுக்கு புடவை கட்ட தெரியுமானு நா இப்ப கேட்டனா?எதுக்கு என்கிட்ட அத சொல்றீங்க.நான் காலேஜ் படிக்கும் போதுதான் டெல்லி போனேன் அதுவரை இங்குதான் இருந்தேன் எனக்கு புடவை கட்ட பிடிக்காது.அதனால் கற்று கொள்ளவில்லை.உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்.                                                                                     

யாருடன் யாரை கம்பேர் பண்ணுவது?நானும் அவளும் ஒன்றா? பேரை பாரு லட்டாம் லட்டு என் கையில் கிடைத்தால் அவளை அப்படியே பூந்தி ஆக்கிவிடுவேன் என்று முணுமுணுத்து கொண்டே வெளியே சென்றாள்.                                                           

 

ஹே....செல்ல குட்டிக்கு என்னமா கோபம் வருது. பொறாமை..ம்ம்ம்ம்ம்ம்.....இதுவும் நல்லதுக்குதான். குழந்தையாகவே இருக்கும் உன்னை என் மனைவியாக மாற்றுகிறேன் என்று தனக்குள் பேசி, தனக்கு பிடித்த பாடலை விசில் அடித்து கொண்டு குளிக்க சென்றான்.     

 

அபியை பார்க்க வேகமாக வந்த கீதாவை பிடித்து கொண்ட சுவாதி எரும சேரி கட்ட சொன்னன்லசொன்ன ஆன எனக்கு சேரி கட்ட தெரியாதுனு தெரிஞ்சும் எதுக்கு சொன்ன.                                         

 

சரி சரி வா நான் கட்டி விடறேன் போய் புடவையை எடுத்துக்கிட்டு அர்ஜீனோட ரூம்க்கு வா.

 

இத முதல்லயே நீ செஞ்சிருக்கணும் என்றவள் அழகான ஒரு டிசைனர் சேலையை எடுத்து கொண்டு சுவாதியின் பின்னால் சென்றாள்.

 

கீதா சேரி கட்டி வெளியே வரவும் நகுலன் அவன் அறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருக்க சுவாதி முன்னே சென்றிருக்க கீதா சேரியின் மடிப்புகளை சரி செய்தவாறே வெளியில் வந்தாள்.

 

கீதாவை சேரியில் எதிர் பார்க்காத நகுலன் ஒரு நிமிடம் திகைத்து நின்றுவிட்டான்.பிங்க் நிற டிசைனர் செரியில் கழுத்தில் தான் கட்டிய புது தாலி மின்ன வகிட்டில் குங்குமம் வைத்து வந்தவளை பார்த்தவனுக்கு இப்போதே அவளை இறுக அனைத்து என்னென்னவோ செய்ய தோன்றிய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அவளை நோக்கி சென்றான்.

 

கீதுமா என்ற அபியின் குரலில் கீது நிமிர்ந்து பார்க்க அதே நேரம் நகுலனும் கீதாவின் அருகில் வந்திருந்தான். அபியின் குரலில் தன்னிலை வந்தவன் திருதிருவென விழிக்க ஆரம்பித்தான்.

 

அபி செல்லம் என்று வேகமாக அவளை தூக்கிய கீதா கீழே செல்ல திரும்ப அப்போதுதான் நகுலன் அங்கிருப்பதை பார்த்தவள் தன் புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டாள்.

 

என்ன சொல்வது என்று யோசித்த நகுலன்.அபியை தூக்கியதால் புடவை விலகி அவளின் இடையை முழுவதுமாக வெளிச்சம் போட்டு காட்ட அதை வேண்டும் என்றே பொறுமையாக அவள் இடையில் தன் கையை அழுந்த பதித்து சரி செய்தவன் தோள்களை குலுக்கிவிட்டு சென்றான்.

 

கீதா இப்போது நகுலனின் செயலில் விக்கித்து நின்றாள்.பின் அபியின் உலுக்கலில் சுய நினைவுக்கு வந்தவள் கீழே நகுலனை முறைத்து கொண்டே சென்றாள்.

 


ReplyQuote



Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 62
26/02/2020 5:50 am  

 

 

அத்தியாயம்-35

 

கீழே அனைவரும் சென்று சாப்பிட்டு,அவரவர் பணியை பார்க்க கிளம்பினர்.கீதா இரண்டு நாள் கழித்து பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று அவள் எப்போதும் செய்யும் வேலையை செய்ய ஆரம்பித்தாள்.அதுதாங்க அபிக்கூட விளையாடறது. நாட்கள் அதன் போக்கில் செல்ல இரு ஜோடிகளின் வாழ்க்கையும் தாமரை இலை தண்ணீராக இருந்தது.

 

என்ன இருந்தாலும் அர்ஜீன் சுவாதியை சீண்டுவதே முதல் வேலையாக வைத்து கொள்வான்.சான்ஸ் கிடைச்சா விட மாட்டானே என்று சுவாதி புலம்பும் அளவுக்கு இருந்தது அவன் அலும்பு.     

 

அர்ஜூன் ஒவ்வொரு முறை சுவாதியை நெருங்கும் போதும் குத்தலாக ஏதாவது பேசி அவனை விலக வைத்து அவனை காயபடுத்தி அவன் வருந்துவது பொறுக்காமல் இவளும் வருத்தபட்டு கொண்டு இருப்பாள்.                                                                                  

 

ஒரு முறை அப்படிதான் சுவாதி அர்ஜீனை சாப்பிட அழைக்க சென்றாள்.அர்ஜீன் அப்போதுதான் குளித்துவிட்டு இடுப்பில் துண்டுடன் வெளியில் வந்தான்.அவனை பார்த்த உடன் சுதி திரும்பி நின்று கொண்டு சாப்பிட கூப்பிட வந்தேன் என்று சொல்லிவிட்டு செல்ல ஒரு அடி எடுத்து வைக்க அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி சுதி அர்ஜீனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.

 

என்ன பண்றீங்க அர்ஜீன் என்ன விடுங்க.         

 

முடியாது.எனக்கு தலை துவட்டிவிடு.

 

முடியாது இவ்வளவு நாள் நான்தான் துவட்டிவிட்டேனா.அது போல் நீங்களே துவட்டி கொள்ளுங்கள்.

 

இவ்வளவு நாள் நான் பேட்ஜீலர்மா இப்ப பேமிலி மேன்.சோ எனக்கு துவட்டி விடுவது உன்னுடைய கடமை.

 

அர்ஜீனின் சேட்டையில் சுவாதி கண் முழி பிதுங்கியவள்,ப்ளீஸ் அஜீ அபி வந்துருவான் என்று சொன்னாள்.

 

ஆமா....ஆமா..அபி வந்துருவான் சீக்கிரம் துவட்டிவிடு ,அவன் வந்து என்ன இப்படியே பாத்தா எனக்கு வெக்கம்,வெக்கமா வரும்.யூ நோ ஆம் வெரி சை டைப் என்றான் கண்ணில் குறும்புடனும், முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டும்.

 

இவனோட முடியலையே முருகா.......வழக்கம் போல கோவமா பேசலாம்னா,இவன் இப்புடி கட்டிக்கிட்டு நிக்கறான்.இதில் நான் எங்க கோவபட இவன் இதெல்லாம் பிளான்பண்ணி செய்றானா இல்ல நானா வாலைண்டைரா வந்து மாட்டிக்கிறானா என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

 

சுவாதி யோசித்து கொண்டு இருக்கும் போதே அவளை தனது கட்டில் அருகே இழுத்து சென்றவன் தான் அதில் அமர்ந்து கொண்டு அவள் இடுப்பை கட்டி கொண்டு ஆரம்பி வதுக்குட்டி எவ்ளோ நேரம் மாமாவ பாத்துக்கிட்டே இருப்ப என்று சொல்ல அப்போது தான் சுவாதி சுய உணர்வு வந்தவள் கோவமாக ஏதோ பேச போக அர்ஜீனோ அவளுக்கு முன்பாக ஆமா நான் சந்தர்ப்பவாதி, சுயநலவாதி அதுதானே இப்ப சொல்ல வந்த நீ எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத நீ எனக்கு துவட்டி விடுவியாம் நீ திட்றத எல்லாம் இப்ப நான் சொல்லுவனாம் என்றவன் அவள் கோவமாக திட்டும் அனைத்து வார்த்தைகளையும் ஒன்றுவிடாமல் சொன்னான் ஆனால் சிரிப்புடன்.

 

அர்ஜீனை காயபடுத்த அவள் சொல்லும் வார்த்தைகள் அவன் சிரிப்புடன் சொல்வதை கேட்கும் போது சுவாதி நீ நிஜமாலுமே ரௌடியா இல்ல நானும் ரவுடிதானு சொல்லிக்கிட்டு அலையற கேசா என்ற சந்தேகம் சுவாதிக்கே வந்துவந்துவிட்டது.

 

இல்ல சுதி செல்லம் நீ பீல் பண்ணாத இவன் சொல்ற டோன்ல சொன்னா நம்பியார்க்கூட காமெடி பீசாதான் தெரிவாறு சோ தப்பு உன் மேல இல்ல, இந்தா இருக்கானே இவன இப்புடி ஒரு டிசைன்ல படைச்ச அவனோட தப்பு என்று புலம்பி அவனுக்கு துவட்டி விட்டே வெளியேறினாள்.

 

அர்ஜீன் கிளம்பி சாப்பிட அமர சுவாதி வந்து பரிமாறினாள்.அவள் பரிமாறியதையும், அவள் முகத்தையும் பார்த்தவன் மனதினுள் அரண்டு போனான்.

 

சுவாதி அவனை ஆர்வமாகபார்த்து இருந்தாள்.

புள்ள ஏதோ பிளான்பண்ணி இருக்குமோ என்று யோசித்து சுவாதி நீ சாப்டியா என்று கேட்டு அவள் பதில் சொல்லும் முன் அவள் வாயில் திணித்திருந்தான் அவள் உப்பு கொட்டி வைத்திருந்த குருமாவை தொட்டு காரம் அதிகமாக சேர்த்து வைத்திருந்த சடனியில் தொட்ட தோசையை.அனைவரும் இருக்கும் போது எசுவும் சொல்லவும் முடியாமல் விழுஙகவும் முடியாமல் அதை தண்ணீர் குடித்து உள்ளே அனுப்பினாள் சுவாதி.

 

சுவாதியின் உள் குத்து தெரியாமல் சுந்தரி என்னடா உனக்காக அவ ஆசையா சமைச்சா அத நீ சாப்பிடாம அவளுக்கு குடுக்கற,அதுக்கூட பரவால அவ செஞ்சத சாப்பிடம நான் செஞ்சத சாப்பிட்ற புள்ள முகம் வாடி போச்சு பாரு.

 

ம்......அவ முகம் அதிக உப்பு சாப்டதால வாடி இருக்கும் என்று நினைத்தவன்.மா என்ன மா உங்க சமையல யாரலையாவது அடிச்சுக்க முடியுமா என்னதான் சுவாதி எனக்காக சமைச்சாலும் நீங்கலும் எனக்காக சமைச்சிருப்பீங்கள அதனால நான் உங்க சமையலயே சாப்பிடறேன் நகுல் சாப்பிடுவான் சுவாதி சமையல என்று அவன் பக்கம் அனைத்தையும் அர்ஜீன் தள்ளி வைத்தான்.

 

சுவாதி பதறி போய் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் நமுட்டு சிரிப்புடன் அவளைதான் பார்த்து கொண்டு இருந்தான்.

 

ஹையோ பல வாங்கறானே.இத மட்டும் நகுலன் சாப்டாருனா அவ்ளோதான் என்று நினைத்தவள் வேகமாக குருமா,சட்னி இரண்டையும் தனது பிலேட்டில் கொட்டி கொண்டாள்.அவளையே பார்த்த அனைவரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவள்.பாவி படு பாவி இப்புடி என்னையவே எல்லாத்தையும் சாப்பிட வச்சுட்டானே என்று திட்டி கொண்டு இருந்தாள்.

 

அர்ஜீன் திறிது நேரம் அவள்படும் அவஸ்தையை பார்த்தவன் பிறகு அவள் பிளேட்டை தன்னிடம் எடுத்து கொண்டு எந்த உணர்வும் காட்டாமல் சாப்பிட்டு எழுந்து சென்றான்.

 

இருவரின் உள்குத்தும் அறியாத மற்றவர்கள் அவனை கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.

 

மதி அண்ணா அண்ணி தாப்ட்டதுதான் வேணும்னு சொல்ல வேண்டியதுதானே எதற்கு அம்மா வச்சு ஒரு பாச படம் ஓட்டுன.உனக்கே இதெல்லாம் ஓவர தெரில என்க அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

 

சுவாதியோ சலனமே இல்லாமல் அந்த காரத்தை சாப்பிட்டு கொண்டு இருக்கும் அர்ஜீனை பார்த்து திகைத்து போய் அமர்ந்து இருந்தாள்.அவளது காதல் மனம் அவளை வதைக்க அவளால் நிம்மதியாக சாப்பிட முடியாமல் போனது.அர்ஜீன் முகம்,உதடு எல்லாம் காரத்தால் சிவந்து போய் இருந்தது.இருந்தாலும் அனைத்தையும் சாப்பிட்டு முடித்த பிறகே எழுந்தான் அர்ஜீன்.

 

அர்ஜீனின் பிடிவாதம் தெரிந்தும் இப்படி செய்த தன்னை நொந்து கொண்ட சுவாதி அவன் அறைக்கு செல்வதை பார்த்துவிட்டு பிரிஜ்ஜில் இருந்த வெண்ணெயை யாருக்கும் தெரியாமல் எடுத்து கொண்டு ஓடினாள்.அறைக்குள் சென்ற அர்ஜீன் காரத்தின் வீர்யம் தாங்காமல் பாத்ரூமிற்குள் நுழைந்து இருந்தான்.

 

சுவாதி அவன்படும் கஷ்டத்தை பார்த்து மனம் வெதும்பி போனாள்.ஏன் அஜீ இப்புடிபண்ற.என்னால உன்ன நெருங்கவும் முடியல விலகவும் முடியல என்று கண்ணீருடன் அவனையே பார்த்திருந்தாள்.அவன் வெளியே வந்ததும் வெண்ணெயை அவன் முன் அவள் நீட்டினாள்.

 

வேண்டாம் வதுமா நான் இப்புடி கஷ்ட்டபடனும்ணுதானே இத செஞ்ச அந்த சந்தோஷத்த முழுசா அனுபவி.எதுக்கு இத தடவி அந்த சந்தோஷத்த குறைக்கணும் என்றவன் தனது மெடிக்கல் பேகை எடுத்து கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றுவிட்டான்.சுவாதியோ என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ந்து நின்றாள்.அதன் பிறகும் அர்ஜீன் அவள் நிம்மதிக்காக அவளிடம் அதிகம் பேசாமல் விலகியே இருந்தான்.சுவாதியும் அவன் பட்ட அவஸ்தையை பார்த்ததால் மேலும் காயப்படுத்தும் மாதிரி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

 

ஒரு நாள் அபி அப்பா அப்பா என்று சுற்றி வருவதை பார்த்த சுவாதிக்கு பொறாமையாக கூட இருந்தது.இவன் என்ன சொக்கு பொடி போடறான்னே தெரியல,எல்லாருக்கும் இவனை பிடித்துவிடுகிறது என்று பார்த்து கொண்டு இருக்கும் போது அர்ஜூனிடம் வந்த அபி                                                                                    

அப்பா நம்ம பைக்ல ஒரு ரவுண்டு போகலாம். என்னோட பிரண்டு டெய்லி அவங்க அப்பாகூட ஒரு ரவுண்டு போவளாம் என்கிட்ட சொல்லுவா,நீங்கதான் அப்ப பாரின்ல இருந்தீங்க கூட்டிட்டு போகல,இப்ப போகலாம்பா என்று கண்ணில் ஆர்வம் மின்ன சொன்ன மகனை அணைத்து கொண்ட அர்ஜூன் சுதியை ஒரு குற்றம் சுமத்தும் பார்வை பார்த்துவிட்டு                                    

வா ராஜா நாம போகலாம்.அப்பா உன்னை டெய்லி கூட்டிட்டு போறேன்.இனி உனக்கு என்ன விருப்பம்னாலும் என்கிட்ட சொல்லு அப்பா செய்கிறேன் என்று கூறி வெளியே அழைத்து சென்றவன் திரும்பி வர இரவு ஆனது.                                                             

இரவு வந்த அர்ஜூன் சுதியிடம் எதுவும் பேசாமல் போய் படுத்துவிட்டான்.ஆனால் அவன் மனதில் மகன் தனக்காக ஏங்கி இருக்கான் என்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.      

 

அர்ஜூனின் அமைதியை பார்த்த சுதி தானே அவனிடம் பேச முடிவெடுத்தாள்.                      

 

அஜூ எதுக்கு இப்ப முகத்த இப்புடி வச்சிருக்கீங்க.                                              

ஒண்ணும் இல்ல.              அஜூ.                                                       

உங்க முகத்த பாத்தாலே தெரியுது.என்னாச்சு சொல்லுங்க.                          

 

ஒண்ணும் இல்லை.நீ போய் தூங்கு என்றுவிட்டு கண்களை மூடி கொண்டான்.                     

 

சுதியின் வீம்பு கொண்ட மனது போடா ரொம்பதான் பண்ற என்று நினைத்தாலும் காதல் மனது கேட்காமல் போக இப்ப நீங்க சொல்ல போறீங்களா?இல்லையா?                                   

சுதியின் பிடிவாதத்தில் கோபம் கொண்ட அர்ஜூன் வேகமாக அவளை பார்த்து திரும்பி.என்னடி என்ன சொல்லனும் என் மகன் எனக்காக ஏங்கி இருக்கிறான். அப்பா பாசத்திற்காகவும்,அவரின் அரவணைப்புக்காகவும்,அவருடன் ஊர் சுற்ற வேண்டும் என்ற எண்ணத்துக்காகவும் ஏங்கி இருக்கிறான் இதற்கு யார் காரணம் நீ.நீ மட்டும் தான் நீயும் உன்னுடைய வரட்டு பிடிவாதமும்தான் காரணம்.                                                           

 

என் மகன் என் இரத்தத்தில் உருவானவன். அவனுடைய வளர்ச்சியையும் அவனின் முதல் மழலை பேச்சையும் கேட்க முடியாத பாவி ஆகிவிட்டேன்.நான் எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை.என் குழந்தையை அதன் வளர்ச்சியை அந்த கடவுள் நான் அறியாமலே செய்துவிட்டார் என்று ஆதங்கத்தில் ஆரம்பித்து அழுகையில் முடித்தான்.          

 

அர்ஜூனின் புலம்பலை கேட்டவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்றாள்.அவள் செல்வதையே பார்த்த அர்ஜூன் என்னிடம் ஏதாவது சொல்லு வது? என்று கேட்டான்.                              

 

சுதி அர்ஜூனை இன்னதென்று புரியாத ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்னுடைய கப்போர்டை திறந்து ஏதோ தேட ஆரம்பித்தாள்.                                                                          

ஹம்ம்...... இங்க ஒருத்தன் பீல்பண்ணிக்கிட்டு இருக்கானே ஏதாவது சொல்லுவோம்னு தோணுதா? நான் பாட்டுக்கு பேசாம படுத்திருந்தாகூட தூங்கி இருப்பேன்.சும்மா படுத்திருந்தவன்கிட்ட வந்து என்னாச்சு,என்னாச்சுனு கேட்டுட்டு பேசிகிட்டு இருக்கும் போதே எந்திருச்சு போயிட்டா.இவள என்னத்தான் பண்றதோ? என்று தனக்குள் புலம்பியவன் மீண்டும் படுத்து போர்வையை தலைவரை இழுத்து மூடி கொண்டு படுத்துவிட்டான்.                        

யாரோ போர்வையை இழுப்பதை உணர்ந்து யார் என்று எழுந்து பார்த்த அர்ஜூனிடம் சுதி ஒரு பென்டிரைவ்வை நீட்டினாள்.                                                                             

இத போட்டு பாருங்க.       சுதி.                                                                    

என்ன இது?   அர்ஜூன்.                                                                          

போட்டு பார்த்தாள் தெரிய போகிறது.   சுதி.                                                  

அவள் சொல்வதை கேட்டவன்.இப்போதைக்கு பார்க்கும் எண்ணம் இல்லை என்றாலும் மனைவிக்காக பார்க்க எண்ணி தன்னுடைய லேப்டாப்பை எடுத்து கொண்டு அமர்ந்தான்.சுதி கொடுத்த பென் டிரைவை சொருகி பார்க்க ஆரம்பித்தான்.                                   

 

அஜூவிடம் பென்டிரைவை கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்பது போல் படுத்து கொண்டாள் சுதி.வெகு நேரம் கடந்து நீர் அருந்த எழுந்த சுதி கண்டது கண்ணில் நீருடன் தன்னுடைய லேப்டாப்பை பார்த்து கொண்டு இருந்த அஜூவைதான்.                              

இவன் இன்னும் தூங்காமல் இதைதான் பார்த்து கொண்டு இருக்கிறானா?ஆனால் எதற்கு இந்த கண்ணீர் என்று ஆராய்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தவள்.மணியை பார்த்தாள் அது இரவு இரண்டு என்று காட்டவும் அதிர்ந்து போனவள் மீண்டும் அர்ஜூனை பார்த்தாள்.அர்ஜூன் லேப்பையே பார்த்து கொண்டு இருக்கவும் எழுந்து வந்து அவனது தோள்களை தொட்டாள்.       அஜூ

 

லேப்பில் கீது அபிக்கு அப்பா சொல்லு கண்ணா அப்பா...... என்று சொல்ல அபி .............. என்று இழுத்து பிறகு ப்பா...........ப்பா......... என்று சொன்னான்.அதையே திரும்ப திரும்ப போட்டு பார்த்து கொண்டு இருந்தான் அர்ஜீன்.

 

சுவாதி மெதுவாத அவனை உளுக்கி தூங்கலையா?மணி என்னனு பாருங்க.       சுதி.                

 

சுவாதியின் உளுக்கலில் தன்னினைவு வந்தவன் சுவாதியை பார்த்தவுடன் கண்ணில் நீருடன் அணைத்து கொண்டான்.

 

வதுமா தேங்ஸ்டா என்றான் நெகிழ்ச்சியோடு. அப்போதும் அவனது கண்கள் லேப்பைதான் பார்த்து கொண்டு இருந்தது.                                                                                                 

எனக்கு எதற்கு தேங்ஸ் இதை செய்தது கீதாதான். அபியின் ஒவ்வொரு அசைவும் நமக்கு நியாபகமாக இருக்க வேண்டும் என்று சொல்லி அவன் அசைவது முட்டி போட்டது,நடந்தது அனைத்தையும் வீடியோ எடுத்து பென்டிரைவில் ஏத்தி வைத்தாள். நீங்கள் நன்றி சொல்வதாக இருந்தாள் அவளுக்குதான் சொல்ல வேண்டும் என்று அமைதியாக கூறியவள். இப்போது வந்து படுங்கள் நேரமாகி விட்டது என்று கூறி படுத்துவிட்டாள்.                                           

 

சுதியின் பேச்சில் முகம் வாடி போனாலும்.தன் மேலுள்ள அக்கறையில்தான் சொல்கிறாள் என்று மனதை தேற்றி கொண்டவன் லேப்பில் இருந்த தன்னுடைய இரண்டு வயது மகனுக்கு முத்ததை கொடுத்துவிட்டே எழுந்தான்.                                                                       

சுதி சென்று படுத்தாலும் அர்ஜூனின் நடவடிக்கையை ஓரகண்ணால் பார்த்து கொண்டு இருந்தவள்.அவனின் செய்கையில் மனம் நெகிழ்ந்து போனதுடன் மகன் மீதான அவனது பாசத்தை கண்டு வாயடைத்து போனாள்.அர்ஜூன் தன் மன குமுரலை கூறும் போது அவனது கண்களில் தெரிந்த வலி மறைந்து இப்போது அவனது மகிழ்ச்சியை பிரதி பலித்தது. அப்போது தான் வேண்டாம் என்றாலும் பிடிவாதமாக அபியின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்து பென்டிரைவாக ரெடி செய்த தோழிக்கு மனதார நன்றி தெரிவித்தாள்.                                   

 

அர்ஜூனோ தன்னுடைய கவலை அவளை பாதித்ததால்தான் இந்த பென்டிரைவை இப்போது கொடுத்திருக்கிறாள்.என் கவலை உன்னை பாதிக்கிறது என்றால் என்னை எந்த அளவுக்கு நீ விரும்பி இருக்க வேண்டும்.பிறகு ஏன்டி என்னை விலக்கி வைக்கிறாய் என்று மனதோடு புலம்பி கொண்டு இருந்தவன் சீக்கிரம் நீ என்னை புரிந்து கொள்வாய் வது.என் காதல் உன்னை என்னிடம் விரைவில் சேர்க்கும் என்று எண்ணி கொண்டே படுத்தான்.                                               

 

இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருந்த போதும் அவர்களது மகிழ்ச்சியான வாழ்விற்கு ஏதோ ஒரு தடை. அதை சரி செய்ய வேண்டும் என்று இருவருக்கும் எண்ணம் இருந்தாலும் எப்படி என்று தெரியாமல் தவித்தனர்.

 

அத்தியாயம்-36

 

நகுலன் கீதாவை சீண்டி கொண்டே அவளுக்கு பல விஷயங்களில் தொல்லை செய்து கொண்டு இருந்தான். இவனை என்ன செய்வது என்று புரியாமல் கீதா திணறும் அழகை ரசிப்பான்.கீதாவும் வெளியே அவன் மேல் கோபம் போல் காட்டி கொண்டாலும் அவனின் சேட்டைகளை ரசிக்கவே செய்தாள்.                                                            

 

அப்படிதான் ஒரு நாள் அபியும் கீதுவும் ஹைட் அண்ட் சிக் விளையாண்டு கொண்டு இருந்தனர்.அப்போது அபி கண்ணை மூடி கொண்டு எண்ணி கொண்டு இருக்க தங்களுடைய அறைக்கு வந்த கீதா நேரக பாத்ரூமில் சென்று ஒழிந்து கொண்டாள்.அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு வந்த நகுல் தன் அறைக்கு வந்து வெளியில் அழைந்தது கசகசவென்று இருப்பதால் குளிக்க பாத்ரூமிற்குள் நுழைந்தான்.                                                                                 

அபி அவனது அறைக்குள் நுழைவதற்கும் இவன் பாத்ரூமில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.                                                                                                

பாத்ரூம் கதவு தாழ் போடும் சத்தத்தில் மறைவில் இருந்து வெளியில் வந்த கீதா தனது உடைகளை கலைந்து கொண்டு இருந்த நகுலை பார்த்து அதிர்ந்து போனாள்.அவள் பேச வாய் திறந்த நேரம் கீது எங்க இருக்க என்ற அபியின் சத்தத்தில் வாயை மூடி கொண்டவள் வேகமாக அவன் அருகில் வந்தாள்.                                                                              

தீடிரென்று தன் முன் நின்றவளை பார்த்தவன் பேச வாய் திறந்த நேரம் அவனது வாயில் கையை வைத்து மூடியவள் சைகையில் அபி வெளியில் இருப்பதை சுட்டி காட்டி அமைதியாக இருக்கும்படி கூறினாள்.                                                                                        

கீது நீ எங்க இருக்க நா உன்னை கண்டுபிடிக்க போறேன்.      

 

அபியின் பேச்சில் அவர்களது விளையாட்டை கண்டு கொண்ட நகுல் தன் விளையாட்டை கீதாவிடம் ஆரம்பித்தான்.                

 

அபி தன் அறையில் இருந்து வெளியில் சென்று விட்டான் என்பதை உறுதி செய்து கொண்ட நகுல்.இப்போது கீதாவை பார்த்தான் விளையாட்டு ஆர்வத்தில் தன்னை ஒட்டி நின்ற மனையாளை பார்த்தவன் அவளது கவனம் முழுதும் வெளியில் அபியிடம் இருப்பதை உணர்ந்து ஷவரை திறந்து விட்டான்.                                                                                                       

திடீரென தன் மேல் தண்ணீர் விழவும் திடுக்கிட்டு போனவள் அப்போதுதான் நகுலை கவனித்தாள். இடுப்பில் டவலுடன் நின்று தன்னையே பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்தவள்.தன்னுடைய செயலால் வெட்கம் கொண்டு சாரி என்று விலகினாள். தன்னுடைய ஆடை முழுவதும் நனைந்து இருப்பதை பார்த்து அவனை முறைத்தாள்.                                    

என்ன பேபி எதுக்கு முறைக்கிற?நீ பண்ணிய வேலைக்கு நான்தான் முறைக்கனும்.நானும் உன்கிட்ட சொல்லலாம்னு வாய திறந்தா என்னோட வாயையும் மூடிட்ட.நீயும் கையை எடுத்த பாடு இல்லை அதான் ஷவரை திறந்து விட்டேன்.நீ பாட்டுக்கு பொறுப்பு இல்லாம இப்புடி வந்து ஒட்டிகிட்டு நிக்கறது மட்டும் என்னோட லட்டுக்கு தெரிஞ்சுது என்னை உண்டு இல்லைனு ஆக்கிருவா.நீ முதல்ல வெளிய போ.                                                                     

ரொம்பதான் பண்ணாதீங்க.நான் ஒண்ணும் வேணும்னு உங்க வாய மூடல.அபி கண்டு பிடிச்சுறுவானேனுதான் அப்படி நின்னேன்.சாரி போதுமா.அதுக்காக நீங்க என்னோட டிரசை நனைக்கலாமா?                                                                                           

நான்தான் சொன்னனே நீ என்னை பேசவிடலை அதனால் அப்படி செய்தேன் என்று கண்ணில் விஷமத்துடன் கூறியவன் கண்கள் ரசனையாக மனைவியை பார்க்க ஆரம்பித்தது.                        

 

வீட்டில் தானே இருக்கிறோம் என்று சாதாரண காட்டன் சுடிதாரில் ஷால் போடாமல் விளையாண்டு கொண்டு இருந்திருப்பாள் போல நீரில் நனைந்ததில் காட்டன் சுடிதார் அவள் உடலோடு ஒட்டி அவளது அப்பட்டமான அழகை அவனுக்கு விருந்தாக்கியது. அது அவனுக்கு நினைவு திருமண நாள் அன்று தான் பார்த்த காட்சியை நினைவு படுத்தியது.அவளையே மோன நிலையில் பார்த்து கொண்டு இருந்தான்.                                                                    

அபி போய்ட்டானு நினைக்கிறேன் என்று கூறியவாறு திரும்பிய கீதா அவன் பார்வையில் வாயடைத்து போனாள்.என்ன பார்வை இது என்று.அவளது பேச்சில் தன் நினைவு திரும்பியவன் முதலில் வெளியில் போ என்று கரகரத்த குரலில் கூறி தன்னுடைய தடுமாற்றத்தை மறைத்தான்.    

 

முதலில் நகுலின் பார்வையில் தடுமாறி நின்றவள். அடுத்து அவன் சொன்ன வார்த்தையில் முகம் சிறுத்து போக வெளியில் வந்தாள்.நான் என்ன பண்ணுனேன் இப்படி சொல்றாரு. ரொம்பதான் லட்டு லட்டுனு உருகறாரு அந்த லட்டு என் கையில் ஒரு நாள் மாட்டட்டும் பூந்தி ஆக்காம விடமாட்டேன் என்று நினைத்தவள். ஏனோ அந்த லட்டு மேல் காரணம் இல்லாமல் கோபம் வருவது எதனால் என்று யோசிக்க மறந்தாள்.                                               

 

வெளியில் வந்தவள் வேறு உடை மாற்றி கொண்டு அபியை தேடி சென்றாள்.அபி கண்ணத்தில் கை வைத்து கொண்டு தன் தாத்தாவுடன் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்து வேகமாக அவனிடம் சென்றாள்.                                                                             

 

அபி என்னாச்சு?ஏன் கண்ணத்தில் கை வைத்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறாய்?                

 

நீயே கேளுமா நாங்க எல்லாரும் கேட்டு பாத்தாச்சு வாயே திறக்க மாட்டிக்கிறான் என்று அங்கு வந்தார் சுந்தரி.                                                                                         

 

நீ பால் குடித்துவிட்டு கவலை படு என்று கையில் கொண்டு வந்த பாலை கொடுத்தாள் சுதி

 

அப்போதுதான் உள்ளே நுழைந்த அர்ஜூனும் தன் மகனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே வந்து என்னாச்சு ராஜா என்று கேட்டான்.யாருக்கும் பதில் அழிக்காமல் உட்கார்ந்து இருந்தான் அபி.                                                                                             

நகுலும் அவனை பார்த்து கொண்டே படிகளில் இறங்கி கீதாவின் பக்கத்தில் அமர்ந்தான்.        

கீதா மீண்டும் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.வாயை திறந்து சொன்னாள்தானே கண்ணா தெரியும் இப்புடி உம்முன்னு இருந்தா எப்படி தெரியும் என்று கேட்டு தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டாள்.ஆம் அபி அவளிடம் கேட்ட கேள்வியில் இவள்தான் திரு திருவென முழிக்க வேண்டியதாக போய்விட்டது.                                                                         

கீதாவை திரும்பி பார்த்த அபி நீ முதலில் வேறு சுடிதார்தானே போட்டு இருந்த இப்ப வேற சுடிதார் போட்டு இருக்க.என்னோட விளையாடம என்ன ஏமாத்திட்டு குளிச்சியா?நான் ஜெயிச்சா என்ன இந்த வாரம் வெளிய பிக்னிக் கூட்டிட்டு போறேன்னு சொன்னல.அதனாலதான் உன்ன தேடி காண்டு பிடிக்க முடியலனு கவலையா உட்கார்ந்து இருக்கேன்.

 

நீ என்னடானா ஜாலியா குளிச்சு வேற டிரஸ் போட்டுகிட்டு வந்து கேட்கற உன்ன.... என்று பெரிய மனிதன் போல் சலித்து கொண்டவன் ஆனா எப்ப குளிச்ச நான் எல்லா இடத்திலும் உன்னை தேடி காணாமல் உன்னோட ரூமுக்கும் வந்தேன் அப்ப சித்தப்பாதான் பாத்ரூமிற்கு போனார்.நீ எங்க இருந்த எங்க குளிச்ச என்று படபடவென பொரிந்தான் சின்னவன்.                                                          

 

சின்னவனின் பேச்சில் பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரித்தனர்.சுதி கீதாவை பார்த்தும் அர்ஜூன் நகுலனை பார்த்தும் கிண்டலாக சிரித்தனர்.நகுல் அவர்களை பார்த்து அசடு வழிந்தவன் எனக்கு ஒரு இம்பார்டன்ட் போன் பண்ணனும் பேசிட்டு வர்றேன் என்று எழுந்து தனது அறைக்கு புகுந்து கொண்டவன் அட பாவி அபி இப்புடியா எங்க மானத்த வாங்குவ என்று மகனை செல்லமாக திட்டி கொண்டான்.                                    

 

கீதாவோ இப்ப என்ன செய்வது இந்த வாண்டு எல்லாத்து முன்னாடியும் இப்புடி மானத்த வாங்குதே என்று கைகளை பிசைந்து கொண்டு இருந்தவள். ஆபில் விஷயமாக ஒரு மெயில் செக் பண்ணனும் நான் பாத்துட்டு வர்றேன் என்று வேகமாக ஒடிவிட்டாள்.                                         

 

ஹே கீது நா கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ என்று அபியும் அவள் பின்னாடியே ஓடினான்.அவன் கவலை அவனுக்கு இல்லை என்றால் பிக்னிக் போக முடியாதே.                       

 

கீதாவோ எல்லார் முன்னாடியும் அசிங்கமா போச்சே என்று நொந்து கொண்டு இருக்க அவள் எதிரே வந்து நின்ற அபி கண்களை சுருக்கி கொண்டு கொஞ்சும் குரலில் பிக்னிக் என்று சொல்ல போலாம் என்ற அவளின் சம்மதத்தை வாங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.      

 

கீதாவோ பாவி இவன்பாட்டுக்கு எந்திருச்சு போய்ட்டான் ஏதாவது சொல்லி சமாளிச்சு இருக்க மாட்டான்.இந்த சுதி சும்மாவே கிண்டல் பண்ணுவா இனிமே சொல்லவே வேண்டாம் என்ன வச்சி செய்ய போறா.கடவுளே இவக்கிட்ட இருந்து என்ன காப்பாத்து என்று வேண்டி கொண்டாள்.இருந்தாலும் அவளுள் ஏதோ உறுத்தி கொண்டே இருந்தது.என்ன அது என்று யோசித்து கொண்டு இருந்தவளுக்கு அப்போதுதான் உறைத்தது.நகுல் எழுந்து செல்லும் போது அவளை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டே சென்றது.                                               

 

அட பாவி ஒண்ணும் தெரியாதவன் மாதிரி இருந்துகிட்டு நா முழிக்கறத பாத்து சிரிச்சுட்டா போற உனக்கு இருக்கு என்று மனதினுள் கருவி கொண்டாலும் அவளையும் அறியாமல் அவனது செய்கையை அவள் மனம் ரசிக்கதான் செய்தது. அவனை பழி வாங்க என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்தவள் உனக்கு இருக்குடா என்று தனக்குள் கூறி கொண்டாள்.                 

 

கீதாவின் பிளான்படி எல்லாம் செய்தவள் அன்று விரைவாக கிளம்பி ஆபிஸ்கு சென்று விட்டாள். பின்னே அவள் பண்ணிய வேலைக்கு இங்கு இருந்தாள் நகுல் அவளை என்ன செய்வானோ யாருக்கு தெரியும்.                                                           

 

காலையில் எழுந்து மனைவியை தேடிய நகுல் அவளை காணாமல் கீழே சென்றான்.செல்லும் முன் ஒரு முறை கண்ணாடியை பார்த்துவிட்டு சென்று இருக்கலாம் விதி யாரை விட்டது.அம்மா காபி என்று அமர்ந்தவன் அப்பா தன்னை விசித்திரமாக பார்ப்பதை பார்த்து என்னப்பா அப்படி பார்க்கிறீர்கள் உங்கள் மகன் அவ்வளவு அழகாக இருக்கிறேனா என்று கண்ணடித்து சிரித்தான்.அவர் ஒன்றும் சொல்லாமல் கிண்டலாக சிரிப்பதை பார்த்து எதுக்கு பா சிரிக்கிறீங்க என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே நகுலுக்கு காபி எடுத்து கொண்டு வந்த சுந்தரி மகனை பார்த்து திகைத்து இது என்னடா கோலம் என்று கேட்டு சிரிக்க ஆரம்பித்தார்.                       

 

இவர்கள் என்ன சொல்கிறார்கள் புரியாமல் முழித்து கொண்டு இருந்தவனை பார்த்த அர்ஜூனுக்கும் சுதிக்கும்கூட அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.                                     

டேய் முதலில் போய் கண்ணாடியை பார்அஜூ.                                           

எதுக்கு?என்று கேள்வி கேட்டாலும் வேகமாக கண்ணாடியை சென்று பார்த்தவன் அதிர்ந்து போனான்.அடி பாவி நேத்து உன்ன பாத்து சிரிச்சதுக்கு இப்புடி மொத்த குடும்பமும் என்னை பார்த்து சிரிக்க வச்சிடியே என்று மனதில் நொந்து கொண்டவன் அங்கு இருந்தவர்களை பார்த்து அசடு வழிந்து விட்டு விறு விறுவென தன் அறைக்கு சென்று தன் முகத்தில் கீதா உதட்டின் அச்சு போல் லிப்ஸ்டிக்கில் ஒட்டி வைத்ததை சுத்தம் செய்தான்.

 

தன் முகத்தில் அங்கு அங்கு ஒட்டி இருந்த மையையும் துடைத்து எடுத்தான்.                                                                  

பாவி இத எல்லாம் எங்க இருந்துதான் யோசிச்சு செய்யறாலோ தெரியல.இப்புடி அப்பி வச்சிருக்கா. உண்மையாலுமே முத்தம் கொடுத்த மாதிரி வரைஞ்சிருக்கா மை எல்லாம் கூட அப்புடிதான் இருக்கு இவ வரையறது கூட தெரியாம தூங்கிய தன்னை நினைத்து வெட்க்கியவன் உனக்கு இருக்குடி என்று நினைத்து கொண்டே குளிக்க சென்றான்.                                      

அவ பண்ண வேலைக்கு ஏதாவது சொல்லுவேன்னுதான் மகாராணி இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டா போல என்று அவனும் ஆபிஸ் கிளம்பினான்.                                                     

 

மாலையும் ஆபிஸில் இருந்து லேட்டாக வந்தவள். அபியுடன் விளையாண்டுவிட்டு அவனுடனே படுத்து தூங்கிவிட்டாள்.அவளது அறையில் படுக்க சொல்லி எழுப்ப போன சுதி அவள் அசந்து தூங்குவதை பார்த்து அதிக வேலை போல என்று நினைத்து கொண்டு அவளை எழுப்பாமல் சென்றுவிட்டாள். இப்படியே மூன்று நாட்கள் நகுலின் கண்ணில் படாமல் ஒழிந்து விளையாடியவளின் விளையாட்டை முடிக்கும் நேரமும் வந்தது.அவளது அம்மா ரூபத்தில்

 

ஆபிஸில் கீதா வேலை செய்து கொண்டு இருக்கும் போது போன் செய்த சுவாதி சீக்கிரம் வீட்டிற்கு வா என்று கூறி போனை வைத்தாள்.யாருக்கு என்னாச்சு திடிர்னு போன் பண்ணி இப்படி வர சொல்கிறாளே என்று பயந்தவள் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு உடனே வீட்டிற்கு கிளம்பினாள்.

 

வீட்டிற்கு வந்த கீதா வள்ளி வந்திருப்பதை உணர்ந்து அம்மா என்று துள்ளி சென்று அவளை அணைத்து கொண்டாள். அவளை அணைத்து கொண்ட வள்ளியை கொஞ்ச நேரம் கொஞ்சியவள் அப்போதுதான் நினைவு வந்தவளாக சுதியை பார்த்து முறைத்தாள்.                                        

 

என்னை எதுக்கு டி இப்ப முறைக்கற?         சுதி.                                                    

அம்மா வந்திருக்காங்கனு சொல்ல வேண்டியது தானேடி.நீ உடனே போன கட் பண்ணவும்,நான் யாருக்கு என்னாச்சோனு பயந்து போய் ஓடி வந்தேன்.         கீதா.                    

அப்புடி கட் பண்ணுனதால தான் மேடம் இன்னைக்கு சீக்கிரம் வந்தீங்க.இல்லனா எப்ப பாரு வேல வேலனு இப்பலாம் நீ லேட்டா வந்து டயர்டுல சாப்படாம கூட தூங்கிற்ற அதனாலதான் அப்படி செஞ்சேன்.                சுதி.                                                                      

ஹய்யோ நளன்கிட்ட இன்னைக்கு வசமா சிக்கிருவேன் போலவே என்று மனதுக்குள் புலம்பியவள்.சரி விடு கீது எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா என்று தன்னை தானே சமாளித்து கொண்டு வள்ளியுடன் பேச ஆரம்பித்தாள்.                                         

 

நகுலனும் அன்று சீக்கிரம் வந்தவன்.கீதாவை நக்கலாக பார்த்து வைத்தான்.அவன் பார்வையே கீதாவிற்கு உணர்த்தியது இன்னைக்கு நீ வசமா மாட்டுனடி என்று.அவனின் மன ஓட்டத்தை உணர்ந்தவள் எப்படி தப்பிப்பது என்று திட்டமிட ஆரம்பித்தாள்.இரவு உணவை அனைவரும் முடித்து படுக்க செல்லும் போது அபியை தாஜா செய்ய ஆரம்பித்தாள்.                      

 

அபி கண்ணா இன்னைக்கு நீ கீதாமா கூட படுத்துக்கிறீயா. நம்ம ரெண்டு பேரும் ஜாலியா வள்ளி பாட்டிக்கூட கதை கேட்டுக்கிட்டு தூங்கலாம்.         கீதா.                                               

ஹோ மேடம் எஸ்கேப் ஆக அபியை கதைனு சொல்லி மயக்க பாக்கறாளா.சரியான ஆளுடி நீ யாருக்கு எது வீக் பாயிண்டுனு தெரிஞ்சு அத பாத்து அடிக்கற என்று மனதுக்குள் தன் மனைவியை மெச்சினாலும் அவள் அன்று செய்த வேலைக்கு அவளிடம் கொஞ்சமாவது விளையாட வேண்டுமே என்று யோசித்தவன் பாவமாக முகத்தை வைத்து கொண்டு தன் அண்ணனை பார்த்தான்.ஏதாவது உதவுடா அண்ணா என்று சைகையில் கேட்க பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதற்கு இணங்க அவனின் சைகையை சரியாக புரிந்து கொண்டான் அர்ஜூன்.                                           

இல்ல, கீது அபி இன்று எங்களுடனே படுக்கட்டும் நான் அவனுக்கு புது கதை சொல்வதாக சொல்லி இருந்தேன்.பாவம் அத்தை மாத்திரை போட்டதால் தூக்கம் வரும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.நீ உன் அறையில் போய் படு காலையில் பேசி கொள்ளலாம் என்றவன் மகனை தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.                                                      

ஹய்யோ இந்த ஆப்சனும் போச்சா.இவனை எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டே மெதுவாக படிகளில் ஏறினாள்.எவ்வளவு மெதுவாக ஏறினாலும் செல்ல வேண்டிய இடம் வந்துதானே ஆகும் அவர்களது அறையும் வந்தது.

 


ReplyQuote
Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 62
05/03/2020 5:25 am  

 

அத்தியாயம்-37

 

கீதா மெதுவாக அறையை திறந்து உள்ளே நுழைந்தவளை கதவின் பின் இருந்து அணைத்தான் அவளது கணவன்.                            

 

என்ன பண்றீங்க.கையை எடுங்க என்று கத்தியவளை கண்டு கொள்ளாமல் அவளை அப்படியே தூக்கியவன் கட்டிலில் சென்று உட்கார வைத்தான்.                                           

என்ன மேடம் ரெண்டு,மூணு நாளா கண்ணுலயே படாம இருந்தீங்க இப்ப மாட்டிக்கிட்டமேனு தோணுதா.        நகுல்.                                                                               

அவனது பேச்சிலும் செயலிலும் பயந்து போய் இருந்தாலும் அதை வெளி காட்டாமல்.நான் என்ன தப்பு செஞ்சேன் உங்களிடம் இருந்து தப்பிக்க.         கீதா.                                             

 

ஹோ......மேடம் எந்த தப்பும் செய்யல?    நகுலன்.                                     

இல்லை.எனக்கு ஆபிஸில் வேலை அதிகம் அதனால் சீக்கிரம் வர முடியவில்லை.நீங்கள் என்னவென்றால் உங்களுக்கு பயந்து கொண்டுதான் நான் வரவில்லை என்று சொல்லுகிறீர்கள். நான் எதற்கு உங்களை பார்த்து பயப்படனும்.        கீதா.                                                

நீ என் மேல் படம் வரைந்து வைத்தது தப்பு இல்லை அப்படிதானே.         நகுல்.                      

 

படமா என்ன படம் எனக்கு ஒண்று தெரியாது என்று அப்பாவியாக முகத்தை மாற்றி கொண்டவளை பார்த்தவன். இது உலகமகா நடிப்புடா சாமி என்று நினைத்தான்.

 

என்ன படம்னு உனக்கு தெரியாது நான் வேணா ரியலா அது என்ன படம்னு உன் மேல வரைஞ்சு காட்டவா என்று ஆவலாக பக்கத்தில் வந்தவனை பிடித்து தள்ளியவள் அவனை பார்த்து முறைத்தாள்.

 

ஆமாம்.உங்களால்தான் அன்னைக்கு எல்லாரும் என்னை பார்த்து சிரித்தார்கள்.அது போல் நான் உங்களை பார்த்து சிரிக்க வைக்க நினைத்தேன். இதில் என்ன தப்பு.        கீதா.                             

 

அது தப்பு இல்லை பேபி.ஆனால் அது வரைந்தது என்று உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்.மற்றவர்களுக்கு அது எப்படி என் முகத்துக்கும் கழுத்துக்கும் வந்தது என்று கற்பனையில் நினைத்து பார்த்து இருப்பார்களே அது பரவாஇல்லையா.        நகுல்.                                         

 

அட கடவுளே...........அவனை அசிங்கபடுத்த வேண்டும் என்று தான் செய்த ஒரு செயல் தன்னையும் அசிங்க பட வைத்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொண்டவள்.

 

ச்ச..... எப்புடி இதை யோசிக்காமல் போனேன் என்று தன் மூளையை கசக்கி கொண்டு இருக்க தனது கழுத்தில் சூடான மூச்சு காற்று படவும் தன்னிலை திரும்பினாள்.இப்போது நகுலை பயத்தோடு பார்த்தாள்.    

 

அவர்கள் எப்படி கற்பனை செய்திருப்பார்கள் என்று நான் செய்து காட்டவா என்று அவளை மேலும் நெருங்கி வர கீதாவின் இதயம் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது.பயத்தில் கண்களை இறுக மூடி கொண்டாள்.                                                                               

கீதாவின் கண்களில் இருக்கும் அலைப்புறுதலை உணர்ந்தவன் அவளை சகஜமாக்கும் பொருட்டு ஒண்ணும் செய்யாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.வெகு நேரம் ஆகியும் எதுவும் நடக்காமல் இருக்கவும் கண்களை திறந்தாள் கீதா.

 

கீதாவையே குறு குறுவென்று பார்த்தவன் என் லட்டு கோவிச்சுக்குவா.அதனால இந்த முறை உன்னை விடுகிறேன்.இன்னொரு முறை இப்படி லூசுதனமாக செய்யாதே என்று கூறி வேகமாக அவனது அறையில் இருக்கும் மற்றொரு அறைக்குள் புகுந்து கொண்டான்.           

 

கீதாவை அவ்வளவு பக்கத்தில் பார்த்துவிட்டு தன்னுடைய உணர்வுகளை அடக்க முடியாமல் அவன் அந்த அறைக்கு சென்றான்.                   

 

கீதாவிற்குதான் மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது.அவனது செயல் அவளுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் ஆனால் ஏதோ ஒரு ஏமாற்றம் தன்னை சூழ்வதை அவளால் தடுக்க முடியவில்லை.அதே சமயம் அந்த உணர்வு ஏன் என்றும் அவளால் அப்போது யோசிக்க முடியவில்லை.      இது போல் சின்ன சின்ன விளையாட்டுகளின் மூலம் கீதா நகுலனின் மேல் இருக்கும் தனக்கான உரிமையை காட்டி கொண்டு இருந்தாள் அவளையும் அறியாமல்.            

 

இப்போது எல்லாம் கீதா நகுலனை கவனிக்க ஆரம்பித்தாள்.ஆறடி உயரத்தில் கோதுமை நிறத்தில் இருந்தவன் ஆணழகனாக இப்போதெல்லாம் அவள் கண்களுக்கு தெரிந்தான்.தன் தாய்,தந்தையிடம் நடந்து கொள்ளும் முறை. அவளிடம் காட்டும் அக்கறை.அவளிடம் அவன் செய்யும் சீண்டல்கள் என்று சின்ன சின்ன விஷயங்களிலும் கணவனாக கீதாவை ஈர்த்தான்.ஆனால் இது காதல்தான் என்பதை அவள் அறிந்து கொள்ள வேண்டிய சமயம் விரைவில் வந்தது.                                                                                                           

தன் தோழியின் திருமணத்திற்கு போக வேண்டும் என்று கீதா சொல்லி கொண்டு இருந்தாள்.அங்குதான் அவளின் காதலை அறிய போவதை அறியாமல்.                               

நகுலன்,நகுலன்......கீதா.                                                                   

ஸ்.....ப்ப்பா...எதுக்கு பேபி இப்படி கத்துற. நகுலன்.                                               

நான் உங்களை எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.பேபினு சொல்லாதீங்கனு ஆபிஸ்லயும் எல்லாரும் என்னை சின்ன புள்ள போய் லாலிபாப் வாங்கி சாப்புடு.உன்னை கட்டிக்கிட்ட அந்த மனுசன்தான் பாவம்னு சொல்றாங்க.நீங்களும் பேபினு சொல்றீங்க.எனக்கு இருபத்தி இரண்டு வயசு ஆகுது இனிமே அப்படி கூப்பிடாதீங்க.                                    

நீ பேபியா இல்லையானு நான் கன்பார்ம் பண்ணி பாத்துட்டுதான் ஒத்துக்குவேன்.நீ சொல்வது எல்லாம் ஒத்து கொள்ள முடியாது.                                                                 

அதுக்காக என்னோட பர்த் சர்ட்டிபிகேட் கொண்டு வந்து காட்டவா?                               

 

ம்ம்ம்.....கஷ்டம்.வாய்க்குள் முணுமுணுத்து கொண்டவன். அது எனக்கு தோணும் போது கன்பார்ம் பண்ணிக்கிறேன்.இப்ப எதுக்கு என் பேர ஏலம் விட்டுகிட்டு இருந்தனு சொல்லு.            

என்னோட ஆபிஸ்ல ஒர்க் பண்ற பொண்ணுக்கு மேரேஜ்.எல்லாரும் அவங்க பேமியோட வரணும்னு சொல்லியிருக்கா.உங்களையும் கண்டிப்பா கூட்டி வர சொன்னா.சரி நம்ம ரெண்டு பேரும் போலாம்னு பாத்தேன். நீங்க வெளியே எங்கயோ கிளம்புறீங்க போல இருக்கு என்று மென்று முழுங்கினாள்.                                                                                            

அய்யோ லட்டு உன் புருஷன்கிட்ட பேச ஏன்டி இப்புடி மென்னு முழுங்கற.எப்பத்தான் என்கிட்ட உரிமையா பேச போறியோ தெரியல என்று மனதுக்குள் பேசி கொண்டவன் அவளிடம் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குமா நாளைக்கு வந்துடுவேன் என்றான்.                                    

நாம ரெண்டு பேரும் போகலாம்னு நெனச்சேன்.சரி பரவால்ல விடுங்க நான் அவள சமாளிச்சுக்கிறேன் என்று ஏமாற்ற குரலில் கூறினாள் கீதா.                                               

ம்..... என்று யோசித்தவன் சரி எப்ப மேரேஜ்நகுலன்.                                    

நாளைக்கு பத்து டூ பன்னிரண்டுகீதா.                                                                      

சரி நாளைக்கு சீக்கிரம் மீட்டிங் முடிச்சு நேரா நான் மேரேஜ் ஹால் வந்துவிடுகிறேன்.நீ இங்கிருந்து கிளம்பி அங்கு வந்துவிடு.ஓகேவா.                                                             

அவன் சொல்வதை கேட்ட கீதாவின் முகம் பூவாய் மலர்ந்து தலையாட்டினாள்.சரி நீங்கள் சொல்வது போல் செய்யலாம் என்று சென்று விட்டாள்.                                                    

மற்றவர்களுக்காக நான் வர வேண்டும் என்று நினைக்கிறாயா?இல்லை உனக்கே நான் வர வேண்டும் என்று தோன்றுகிறதா?லட்டு என்று தனக்குள் கேட்டு கொண்டான்.                    

 

அடுத்த நாள் பிறந்த நாளுக்கு ஆபிஸ் தோழி வாங்கி தந்த லெஹன்காவை போட்டு கொண்டு கிளம்பிவிட்டாள்.மண்டப வாசலில் நகுலனுக்காக காத்திருந்தாள்.அவள் காத்திருப்பை பொய்யாக்காமல் சரியாக பத்து மணிக்கு மண்டபத்துக்குள் நுழைந்தான்.                         

 

வாசலில் தனக்காக காத்திருக்கும் மனைவியை கண்டவனின் உள்ளம் துள்ளியது.அவளின் ஆடையை கவனித்தவன் ஏய் லட்டு யாருடி உன்ன இந்த மாதிரி டிரெஸ் எல்லாம் போட சொன்னா. உன்னை பாத்த எவனாவது கல்யாணம் ஆன பொண்ணுனு சொன்ன ஒத்துக்குவானா படுத்துறடி என்று தனக்குள் பேசி கொண்டு அவளை நெருங்கி போகலாமா என்று கேட்டான்.                  

 

வேகமாக அவள் தலையாட்டவும் இருவரும் ஜோடியாக உள்ளே நுழைந்தனர்.இருவரையும் பார்த்த அனைவரும் இவர்களின் ஜோடி பொறுத்தம் பார்த்து அசந்து நின்றனர்.                      

 

நகுலன் நீங்க இங்க உட்காருங்க.நான் போய் என் தோழியை பார்த்துவிட்டு வருகிறேன்.   கீதா.                                                                                                  

சரி.நான் இங்கு இருக்கிறேன் நீ போய் வா...நகுலன்.                                            

கீதா சென்றவுடன் வந்திருப்பவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த நகுலன் ஒரு குழந்தை தத்தி நடந்து வருவதை பார்த்து கொண்டும் அவனுக்கு நேர் பின்னாடி அமர்ந்திருந்த இளவட்டங்கள் சொல்லும் கிண்டல்களை ரசித்து கொண்டு இருந்தான்.                                

 

திடீர் என்று அந்த இளவட்டத்தில் ஒருவன் டேய் மச்சான்.......என்று கத்தவும் நகுலனே எதற்கு இவன் இப்படி கத்துகிறான் என்று ஒரு நிமிடம் அதிர்ந்து என்ன சொல்கிறான் என்பதை கவனிக்க ஆரம்பித்தான்.                                                                            

                 

டேய் மச்சான் அங்க பாருங்கடா....கல்யாண பொண்ணு பக்கத்துல நிக்கற பிகர செம்மயா இருக்கால்ல,அவளுக்குனே செஞ்ச மாதிரி இருக்கு இந்த டிரெஸ்.அவளோட ஸ்ட்ரெச்சர பாருங்கடா ம்ம்ம்.....எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ என்று பெரு மூச்சு விட்டான்.அவனை தொடர்ந்து அவன் நண்பர்களும் அவன் சொல்வதை ஆமோதிப்பது போல் பெருமூச்சு விடவும்.இவர்கள் யாரை சொல்கிறார்கள் என்று திரும்பி பார்த்த நகுலன் அதிர்ந்தான்.ஏனெனில் அவர்கள் சொன்னது கீதாவை.                                                                                           

நகுலனுக்கு கோபம் திகு திகுவென ஏற அவர்களை பார்த்து திரும்பி அமர்ந்து.அவர்களை பார்த்து சிரித்து கொண்டே, ஹாய் பிரண்ட்ஸ்.......தேங்ஸ் பார் யுவர் காம்ப்லிமண்ட் என்றான்.வாய்தான் சிரித்ததே தவிர கண்கள் அவர்களை முறைத்து கொண்டு இருந்தது.              

 

யார் சார் நீங்க?எதுக்கு எங்களுக்கு தேங்ஸ் சொல்றீங்க?                                           

 

அது வேற எதுக்கும் இல்ல இப்ப நீங்க வர்ணிச்சீங்களே பொண்ணு அது என்னோட மனைவி.நீங்க கொடுத்து வச்சவன்னு சொன்னது என்னைதான் அதனால இந்த தேங்ஸ்... நகுலன்.     

 

சார் சாரி சார் ஏதோ தெரியாம சொல்லிட்டோம்.நீங்க சிஸ்டர்கிட்ட போங்க சார் என்று அங்கிருந்து அனைவரும் ஜகா வாங்கினர்.                                                              

லூசு பசங்க சைட் அடிக்கவே கல்யாணத்துக்கு வருவாங்க போல இருக்கு.இவங்கள சொல்லி என்ன பிரயோஜனம் அவள சொல்லனும் ஒரு சேரி கட்டிட்டு வந்திருந்த இப்படி பேசுவானுங்களா?நா பாத்து ரசிக்க வேண்டியத எவன் எவனோ பாக்கறான். இவள,லட்டு.......எங்க இவ என்று சுற்றும் முற்றும் பார்க்க மாடியில் இருக்கும் அறை நோக்கி அவள் போவதை பார்த்தவன் தானும் அவள் பின்னாடியே சென்றான்.                                                    

 

தேங்காய் பழ பையை எடுக்க வந்தவள் கதவை யாரோ தாழ் போடும் சத்தம் கேட்டு யார் என்று வேகமாக திரும்பினாள்.                                                                        

நான்தான்....நீ ஏன் இன்று புடவை கட்டவில்லை என்று கோபம் போல் கேட்டான்.                 

 

அய்யோ .....இவனுக்கு இதே வேளை எப்ப பாரு புடவை கட்டு புடவை கட்டுனு.இப்ப இவன்கிட்ட மாட்டுனோம் அட்வைஸ் பண்ணியே கொன்னுடுவான் பேசாமல் இங்கிருந்து ஓடி விடுவதுதான் கீது உனக்கு நல்லது என்று தனக்குள் பேசி கொண்டவள் வேகமாக கதவு இருக்கும் பக்கம் போக அவளின் எண்ண ஓட்டத்தை திருதிருவென அவள் விழித்து கொண்டு இருக்கும் போதே கண்டு கொண்ட நகுலன்.அவளின் வெற்றிடையில் கை வைத்து இழுத்து அருகில் நிறுத்தி கொண்டான்

 

 

நான் கேட்டு கொண்டு இருக்கிறேன்.நீ எங்கே ஓட பார்க்கிறாய்.                              

 

இல்லை நளன் ..அத்தையும் சுதியும் கோ..கோவிலுக்கு போய் இருந்தார்கள்.நா...நான் கிளம்பும் போது யா...யாரும் இல்லை புடவை கட்டிவிட ....அதுதான் நான் இந்த டி...டிரெஸ் நன்றாக இருக்கிறதே என்று ..இதை போட்டு வந்தேன் என்று திக்கி திணறினாள்.                   

 

அவளது வெற்றிடையில் அவனது கைகள் அழுந்த பற்றியிருக்க.கீதாவின் உடலில் ஒருவித அனல் பரவ துவங்கியது அவன் உள்ளங்கையின் சூட்டை அவளால் உணர முடிந்தது.இயற்கையாக அவளது பெண்மை விழித்து கொள்ள அவனிடம் இருந்து விலக முயற்சித்தாள்.அவள் விலக முயற்சிப்பதை உணர்ந்த நகுலன் அவன் பிடியை மேலும் இறுக்கினான்.                                   

அவளின் தடுமாற்றத்தை உணர்ந்தவன்.அவள் தன்னையும் அறியாமல் அவனை நளன் என்று அழைத்ததை நினைத்து மனதுக்குள் நகைத்து கொண்டு.இந்த டிரெஸ் போட்டது பரவா இல்லை அந்த ஷாலையாவது தாவணி போல் போடு.   நகுலன்.                                           

 

அய்யோ நகுலன் இது லெஹன்ஹா...இப்படிதான் போட வேண்டும்.தாவணி போல் போட இது ஒண்ணும் தாவணி இல்லை.                                                                       

 

அப்படிங்களா மேடம் என்று அவளை தன்னை நோக்கி திருப்பியவன்.அவள் கண்களை பார்த்து கொண்டே.உன் அழகை அதன் சொந்தகாரன் மட்டும் பார்க்க வேண்டியதை மற்றவர்களுக்கு காட்சி பொருள் ஆக்குகிறாய்.இப்போது கணவனாக நான் உன்னை பார்த்து சொல்கிறேன் நன்றாக இருக்குமா?இருக்காதா என்று? அது வரை நீ அசையாமல் இருக்க வேண்டும் என்ன புரிந்ததா என்றவன்.அவளின் இடையில் ஒரு கையைமட்டும் வைத்து கொண்டு மற்றொரு கையால் அவளது ஷாலை எடுத்து தாவணி போல் நன்றாக போட்டு அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துவிட்டு இது நன்றாக தான் இருக்கிறது.என்ன இந்த அழகுதான் இப்போது மறைந்திருக்கிறது என்று அவளது இடையின் இரு பக்கமும் கைகளை வைத்து சொன்னவன் இதை மாற்ற கூடாது.இங்கிருந்து போகும் வரை நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்லி வெளியே சென்று விட்டான்.                                                            

கீதாவின் நிலைதான் பரிதாபமாக இருந்தது. அவனின் ஒவ்வொரு தொடுகையிலும் தன்னுடைய பெண்மையை உணர்ந்தாள்.அவனது கூர்மையான பார்வையில் வெட்கத்தை உணர்ந்தாள்.யாரிடமும் கண்ணை பார்த்து பேசும் தன் குணம் அவனிடம் மட்டும் பழிக்காமல்,அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியாமல் ஒருவித வெட்கம் சூழ்கிறதே எதனால் என்று யோசித்து கொண்டு இருந்தவளின் காதில் விழுந்தது அந்த பாடல்.                                

 

வாலாட்டும் வேலை எல்லாம் மூட்ட கட்டிக்கோ                                             

பூவுனா வண்டு வரும் புரிஞ்சு நடந்துக்கோ                                               

பொண்ணுனா வெட்கம் வேணும் தெரிஞ்சு நடந்துக்கோ..                               .    

 

அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்.                                                             

அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்                                            

நான் குழந்தையென்று நேற்று நினைத்திருந்தேன்                                               

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்.                                                          

அவன் பார்த்த்துமே நான் பூத்துவிட்டேன்                                                        

அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்.

 

என்ற பாடலை கேட்டவளின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.     

ஹப்பாடா கீதாவுக்கு பல்ப் எரிஞ்சுருச்சு.


Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 62
08/03/2020 3:27 pm  

அத்தியாயம்-38

 

...நளன் நான் உன்னை விரும்புகிறானா.நான் உன்னை காதலிக்கிறானா.இந்த தடுமாற்றத்திற்கு பெயர்தான் காதலா....என்று மகிழ்ந்து போனவள் கீது உனக்கும் காதல் வந்துவிட்டதே.ஜமாய்....என்று தனக்குள் பேசி கொண்டு அந்த அறையைவிட்டு வெளியே வந்தாள்.அதன் பிறகு மறந்தும் அவன் இருந்த பக்கம் திரும்பவில்லை அவள் புதிதாக முலைத்த காதல் தந்த வெட்கத்தால்.          

 

வெளியே வந்த கீதா தன்னை பார்ப்பாள் என்று பார்த்து கொண்டே இருந்த நகுலனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அந்த ஏமாற்றம் ஒரு கட்டத்தில் கோபமாக மாறி அவளை திட்ட காத்திருந்தான்.                                                                                             

இருவரும் திருமணத்தை முடித்து கொண்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.கீதா அவனிடம் எதுவும் பேசாமல் தனது முதல் காதலை நினைத்து இனிய கற்பனையில் ஆழ்ந்திருந்தாள்.                                                                                          

அவளாக ஏதாவது பேசுவாள் என்று காத்திருந்த நகுலன்.பொறுத்து பொறுத்து பார்த்து முடியாமல் கோபமாக பேச ஆரம்பித்தான்.                                                                                          

என்ன மேடம் ரொம்ப குஷியா இருக்கீங்க போல இருக்கு. நமக்கு டைவர்ஸ் ஆன உடனே உனக்கும் நளனுக்கும் எப்படி திருமணம் நடக்கும் என்று இப்போதே கனவு காண ஆரம்பித்துவிட்டீர்களா?

 

எனக்கு பிரச்சனை இல்லை என் லட்டுக்கு எனக்கு எது விருப்பமோ அதுதான் பிடிக்கும்.நான் சிம்பிளாக மேரேஜ் வைத்து கொள்ளலாம் என்று சொன்னால் கூட ஓகே சொல்லிவிடுவாள்.     நகுலன்.                                                                       

அவனின் வார்த்தையில் அடிபட்ட பார்வை பார்த்த கீதா எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டி ஆமாம் என்று சொல்லிவிட்டு கண்களை இருக மூடி கொண்டாள்.                               

 

ஏதாவது வாய தொறந்து பதில் சொல்றாளா பாரு அங்க ரூம்ல மட்டும் நளன்னு கூப்பிட்டாளே இப்ப வாயா திறந்து அது நீ தாண்டானு சொல்றாளா பாரு நீயா சொல்ற வரைக்கும் நான் இப்படிதான் பேசி உன்னை வெறுப்பேத்துவன்டி என்று தனக்குள் பேசி கொண்டான்.                                                                                     

வீட்டில் அவளை இறக்கிவிட்ட நகுலன் நான் போய் என் லட்டுவை பாத்துட்டு வருகிறேன் என்று சென்றுவிட்டான்.                  

 

சோர்ந்த நடையில் உள்ளே வந்த தோழியை பார்த்த சுவாதி என்னடி என்னாச்சு?ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்?கல்யாணம் நல்லபடியாக முடிந்ததா? என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க. தோழி தன்னை எளிதாக கண்டு கொள்வாள் இவளை எப்படியாவது சமாளிக்க வேண்டும் இல்லையென்றால் அவ்வளவுதான் என்று நினைத்து கொண்டவள் அவளை பார்த்து மென்மையாக சிரித்து கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது எனக்கு தலைவலியாக இருக்கு அதான் இந்த டல்.அபி எங்கே என்று ஓரளவு தன்னை சமாளித்து கொண்டு கேட்டாள்.                           

 

கோவிலில் இன்று சரியான ஆட்டம்.அதான் வந்தவுடனே தூங்கிவிட்டான் நீயும் போய் கொஞ்ச நேரம் படு.நான் உனக்கு இஞ்சி டீ கொண்டு வருகிறேன் குடித்துவிட்டு தூங்கு சரியாக போய்விடும்.       சுவாதி.                                                                                  

தூங்கினாள் சரியாக போய்விடும் வழியா இது என்று தனக்குள் பேசி கொண்டவள்.சரி என்று தோழியிடம் தலையாட்டிவிட்டு சென்று விட்டாள்.தனது அறைக்கு சென்று பிரஸ் அப் ஆகிவிட்டு முகம் கழுவி வந்தவளுக்கு சுடசுட இஞ்சி டீ யுடனும் தைலத்துடனும் நின்றிருந்த தோழியை பார்த்தவுடன் எவ்வளவு முயன்றும் முடியாமல் கண்ணீர் அணையை உடைத்து வெளியே வர ஆரம்பித்தது.                                                                         

தோழியின் மடியில் முகம் புதைத்து தனது காதல் திருமணத்திற்கு பிறகு வந்தும் அதை காப்பாற்றி கொள்ள முடியாதவளாக இருக்கிறேனே.என் காதல் முளைக்கும் முன்னே மொட்டிலேயே கருகிவிட்டதே என்று நினைத்து நினைத்து அழுதாள்.                                                                                                       

அவளின் அழுகையை பார்த்து சுவாதி பயந்து போனாள். என்னடி என்னாச்சு?எதற்கு அழுகிறாய்? போன இடத்தில் ஏதாவது பிரச்சனையா?இல்லை உனக்கும் நகுலனுக்கும் ஏதாவது பிரச்சனையா? சொன்னால்தானே எனக்கு தெரியும்.நீ அழுவதை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது என்று தோழி அழுவதை தாங்க மாட்டதவளாக சுவாதியும் புலம்ப.அவளது கடைசி கேள்வியில் விழுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்த கீதா.                       

 

ஒண்ணும் இல்லடி அம்மா நியாபகமாக இருக்கிறது.இங்கு வந்து இருங்கள் என்றதுக்கு பெண் கொடுத்த வீட்டில் தங்க கூடாது என்று தனியாக வீடெடுத்து தங்கி கொண்டார்கள். பக்கத்தில்தானே இருக்கிறார்கள் வந்து பார்க்கிறார்களா பார் எனக்கு அம்மாவிடம் போகனும் போல் இருக்கிறது.நான் போய் வரவா என்று பேச்சை மாற்றினாள்.                                                     

 

இதற்கா இந்த அழுகை இரு நானும் அம்மாவை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.நீ சொன்னது போல் அவர்கள் இங்கு வருவது இல்லைதான்.அபி எழுந்தவுடன் மூவரும் போவோம்.நீ அதற்குள் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்துரு.தலைவலியோடு இப்படியே உன்னை அழுத முகத்தோடு பார்த்தாள் அம்மா பயந்து விடுவார்கள.இந்தா இந்த டீயை குடித்துவிட்டு படு என்று அவள் டீ குடித்த பிறகு போர்வையை போர்த்தி ஏசியை கம்மியாக வைத்துவிட்டு ஸ்கீரீனை நன்றாக இழுத்துவிட்டு போனாள்.                       

 

சுவாதி செய்வதை எல்லாம் படுத்து பார்த்து கொண்டு இருந்த கீதாவிற்கு இப்படி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.                         

 

உனக்காக உனக்காகதான் சுதி இந்த திருமணம். ஆனால் இடையில் எனக்குள்ளும் காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை.உனக்கு தெரியுமா சுதி என்...என் நளன் ஒரு பெண்ணை விரும்புகிறானாம். என்னிடம் எப்போதுமே அவளது பேச்சுதான் அதிகம் பேசுவார்.அவள் அப்படி அவள் இப்படி என்று. அப்போது எல்லாம் எனக்கு பயங்கரமாக கோபம் வரும்.                         

 

 

எதற்கு நமக்கு இப்படி கோபம் வருகிறது என்று கூட ஒரு முறை நான் யோசித்தேன்.இன்னோரு பெண்ணோடு என்னை கம்பேர்பண்ணுகிறார் என்ற கோபம் என்று எனக்கு நானே கூறி கொண்டேன். ஆனால் இப்போது புரிகிறது.என் கணவன் என் முன்னால் இன்னோரு பெண்ணை புகழ்ந்து பேசுவதால் வந்த பொறாமை என்று.இப்போது புரிந்து என்ன பயன்.அவர் மனதில் இன்னோரு பெண் இருக்கும் போது கண்டிப்பாக நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன்.அவர் விரும்பிய பெண்ணோடு அவர் சந்தோஷமாக இருக்கட்டும் நான் அவரிடம் கூறியது போல் பிரிந்து சென்று விடுகிறேன் என்று கண்டதையும் யோசித்து கொண்டு அப்படியே தூங்கி போனாள்.                                                

 

அபி வந்து வள்ளி பாட்டியை பார்க்க போகலாம் என்று எழுப்பும் வரை தூங்கி கொண்டு இருந்தாள். அபியின் சத்ததில் எழுந்தவள் அவனை அணைத்து கொண்டு நீயும் என் மகன்தான் . என் வாழ்விற்கு நீ போதும் என்று தணக்குள் பேசி கொண்டவள் வேகவேகமாக அம்மா வீட்டிற்கு கிளம்பினாள்.                                    

ஒரு சிறிய பேப்பரில் அம்மா வீட்டிற்கு செல்வதாக எழுதி வைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.                                                                   

 

நகுலனிடம் சொல்லிவிட்டாயா என்ற தோழியிடம் பொய்யாக தலையை ஆட்டிவிட்டு கிளம்பிவிட்டாள்.                               

வீட்டில் அவளை இறக்கிவிட்ட நகுலனுக்கு ஆபிஸில் வேலையே ஓடவில்லை.கீதாவின் நினைப்பே அதிகமாக இருந்தது.திருமண மண்டபத்தில் அவனின் கைகள் அறிந்த அவளின் மென்மையும், அவன் பேசும் போது அவள் கண்களில் ஏற்பட்ட மயக்கமும்,காரில் வரும் போது ஏதோ ஒரு கோபத்தில் சொன்ன வார்த்தைக்காக அவனை அடிபட்ட பார்வை பார்த்தது என்று அவளது முகமே மாறி மாறி அவனை இம்சித்தது.முடியும் மட்டும் பார்த்தவன் இது வேலைக்கு ஆகாது என்று மேனேஜரை அழைத்து வேலைகளை கூறிவிட்டு முக்கியமான விஷயம் தவிர வேறு எதற்கும் அழைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு காரை எடுத்து கொண்டு பீச்சிற்கு சென்றான்.                                                

 

இரவு வெகு நேரம் அங்கு அமர்ந்து அலைகளை ரசித்து கொண்டு இருந்தவன் மனம் கீதாவிடம் பல கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தது.ஏன் லட்டு இப்படி பண்ற நான் காரில் சொன்ன வார்த்தை கேட்டு அடிபட்ட பார்வை பார்த்தாயே அது என்னை ரொம்ப வதைக்கிறது.                                                                  

நீதான் அந்த நளன் என்று வாயை திறந்து சொல்லமாட்டாயா?எப்போது நீ சொல்வாய்?நீ என்று உன் காதலை சொல்கிறாயோ அப்போதுதான் நானும் வாயை திறப்பேன்.அதுவரை உன்னை சொல்ல வைக்க என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று தனக்குள் கூறி கொண்டான் நளன்.                                                                                    

அவள் கடைசி வரை வாயை திறக்க போவதில்லை. இவன்தான் அவள் பின்னால் ஓட போகிறான் என்று தெரியாமல் அவனுக்குள்ளே சவால் விட்டு கொண்டான்.                                                 

 

அம்மா வீட்டிற்கு சென்ற கீதா அம்மா,அப்பாவிடம் செல்லம் கொஞ்சி கொண்டும் அபியுடன் வம்பிழுத்து கொண்டும் பொழுதை கழித்தாள்.அதற்கு காரணம் இனி நகுலன் வாழ்வில் தான் இல்லை.லட்டுவிற்கு மட்டுமே இடம் என்று தனக்கு தானே கூறி சுவாதியின் வாழ்வை சரி செய்வதற்கான வழியை யோசித்தாள்.                                                                                                

வீட்டிற்கு சென்ற நகுலன்.கீதாவை பார்க்க வேகமாக தனது அறைக்கு சென்றான்.அங்கோ யாரும் அற்ற அமைதியே வரவேற்றது.இந்த நேரத்தில் இவள் எங்கு போனாள்.அபி அறைக்கு சென்றிருப்பாளோ என்று அங்கு சென்று பார்க்க அபியும் அறையில் இல்லை என்பதை அறிந்தவன்.இந்த நேரத்தில் இவர்கள் எங்கு போனார்கள் என்று யோசித்து கொண்டே படியேறியவன் அர்ஜூன் மீது மோதி நின்றான்.                                       

என்னடா இப்போது தான் வந்தாயா வந்த உடனே அபியை பார்க்க சென்று விட்டாய்.அவன்தான் வள்ளி அத்தையை பார்க்க போயிருக்கிறானே.கீதா சொல்லவில்லை என்று ஆராய்ச்சியாக நகுலனை பார்த்து கேட்டான்.                                                                      

 

அர்ஜூன் சொன்னதை கேட்ட நகுலண் என்ன அத்தை வீட்டுக்கு போய்விட்டாளா என்ன திடீரென்று என்று யோசித்து கொண்டு இருக்க அர்ஜூன் கேள்வியில் தன்னை மீட்டு கொண்டவன் அபியும் போவதாக என்னிடம் சொல்லவில்லை.அவள் மட்டும் போவாள் என்று நினாத்தேன் என்று சமாளித்தான்.                                                                                       

உங்கள் இருவருக்கும் அபி என்றால் அதிக விருப்பம் போல,நீங்களும் சீக்கிரம் பெற்று கொள்ளுங்கள் என்று நகுலனை பார்த்து கண்ணடித்து சிரித்துவிட்டு சென்றான் அர்ஜூன்.                       

 

தன் அறைக்கு வந்த நகுலனுக்கு கீதா இல்லாத அறை வெறுமையாக இருப்பது போல் இருந்தது.                                                 

அங்கு மற்றொரு அறையில் படுத்திருந்த அர்ஜூனுக்கும் மனைவியும் மகனும் இல்லாமல் அறையே வெறுமையாக இருந்தது.இத்தனை வருங்கள் இவர்கள் இல்லாமல் எப்படி இருந்தேன் என்று தனக்கு தானே நூறாவது முறையாக கேட்டு கொண்டு படுத்திருந்தான்.                                                                                                       

வதுமா எப்படா என்னையும்,என் காதலையும் புரிஞ்சுக்க போற? உன்னுடைய காதல் எனக்கு நீ பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு வேலையிலும் தெரிகிறது.உன்னையும் மீறி சில சமயம் உன் கண்களில் நீ மறைக்க நினைக்கும் உன்னுடைய காதல் வெளிபட்டுவிடும்.

 

நீ என்னை விரும்புகிறாய். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அதை என்னிடம் மறைக்க நினைக்கிறாய்.அது என்ன காரணம் என்றுதான் எனக்கு புரியவில்லை.காரணம் எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும் நான் உனக்காக காத்திருப்பேன்.

 

ஒரு முறை உன்னை பிரிந்து நான்பட்ட அவஸ்தையே எனக்கு போதும் மீண்டும் ஒரு முறை என்னால் அந்த பைத்தியம் பிடித்த வாழவிற்கு செல்ல முடியாது.என் அருகிலேயே நீ இருப்பதே எனக்கு சந்தோஷம்அர்ஜூன்.                                          

 

இப்படி இரண்டு ஆண்களும் காதலில் உருகி கொண்டு இருக்க.இவர்களின் காதல் ரோஜாக்கள் என்ன செய்கிறது என்று வள்ளி வீட்டில் சென்று பார்ப்போம்.                                                           

 

அஜூ இப்ப நீ என்ன செஞ்சுகிட்டு இருப்ப.நீதான் எப்பவும் அபிக்கு கதை சொல்லி தூங்க வைப்ப.இன்னைக்கு அவன் இல்லாம உனக்கு கஷ்டமா இருக்கும் இல்ல,என்ன நெனப்பியா அஜூ.நீ எங்க என்ன நினைக்க போற,நான்தான் லூசுமாதிரி உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என்று சுவாதியும்.          

 

நளன் நீ இந்நேரம் உன்னோட லட்ட பாத்துட்டு வந்திருப்ப இல்ல,ம்ம்...பாத்துட்டு வந்து தூங்க ஆரம்பிச்சு கனவுலையும் அவக்கூட நீ டூயட் பாட ஆரம்பிச்சிருப்படா.லூசு.நீ தான் லவ் பண்றல அப்புறம் எதுக்கு என்கிட்ட வம்பிழுத்து என் மனசுல ஆசைய வளர விட்ட? ஏய் கீது பொய் சொல்ல கூடாது அவன் கரெக்ட்டா இருக்கான்.நீயா ஆசைய வளத்துக்கிட்டா அவனா பொறுப்பு போ...போ.. போய் சுதிய அர்ஜூன் அத்தானோட சேத்து வைக்க ஐடியா பண்ணு.      கீதா.                                                                 

 

சுவாதியும்,அர்ஜீனும் நாகபட்டினம் போனால் அவர்களின் பழகிய நாட்கள் நியாபகம் வரும் ஓரளவு கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.இவளை எப்படி நாகபட்டினம் கூட்டி போவது.

 

சுவாதியின் அப்பா கோவிந்தன் எத்தனையோ முறை அழைத்தும் நாகப்பட்டினம் செல்ல மறுத்துவிட்டாள். ஏதாவது காரணம் கிடைத்தாள் இவளை இழுத்து சென்று விடலாம் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே தூங்கி போனாள்.

 

அடுத்த நாள் வழக்கம் போல் எழுந்து வேலைக்கு போகாமல் அன்றும் தாயுடன் செல்லம் கொஞ்சி கொண்டு இருந்தவளை தேடி வந்துவிட்டான் நகுலன்.




Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 62
09/03/2020 8:50 am  

அத்தியாயம்-39

 

நகுலனை அங்கு எதிர்பார்க்காத கீதா ஆச்சரியப்பட்டு போனாள்.என்னை தேடிதான் வந்திருக்கானோ,ஒரு வேலை அத்தை அனுப்பி இருப்பாங்களோ,அப்படி அத்தை அனுப்பி இருந்தாங்கனா, இவன் என் லட்டு என்ன சொல்லுவானு இதுக்கு வேற புலம்புவானே இவன யாரு இப்ப வர சொன்னது என்று திட்டி கொண்டு இருந்தாள்.

 

வள்ளி அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்து சாப்பிட்டு செல்ல சொன்னார்.பிறகே அவன் வந்ததற்கான காரணத்தை கூறி மூவரையும் அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினான்.

 

அதுதானே பார்த்தேன் இவன் என்னை தேடி வந்துட்டாலும் என்று அதற்க்கும் அவனை திட்டி தீர்த்தாள் கீதா.

 

நகுலோ நேற்று ஒண்ணும் சொல்லாம வந்துட்டமே அப்புடினு ஏதாவது கவலை இருக்கா அவ முகத்துல அவள பாக்காம நான்தான் பைத்தியம் மாதிரி தேடி வந்து இருக்கேன்.இவ கண்டுக்கறாளா பாரு என்று இவன் கீதாவை திட்டி கொண்டு இருந்தான்.

 

ஒருவழியாக மூவரும் கிளம்பி நகுலனின் வீட்டை அடைந்தனர்.அங்கு அவர்களுக்காகவே காத்திருந்தார் சுவாதியின் தந்தை கோவிந்தன்.

மாலதியின் ஆறாம் ஆண்டு நினைவு நாளுக்கு சாமி கும்பிட அழைக்க.

 

சுவாதியோ உயிருடன் இருக்கும் போது நிம்மதியாக வாழ விடாமல் இப்போது இதெல்லாம் எதற்க்கு என்று கோபமாக கேட்டுவிட்டு தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள்.அவள் கேள்வியில் உடைந்து போனது என்னவோ கோவிந்தன்தான்.இருந்தாலும் இது தனக்கு தேவைதான் என்று மௌன கண்ணீருடன் மகள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தார்.

 

கோவிந்தன் அருகில் வந்த கீதா அவளை கண்டிப்பாக அழைத்து வருவதாக கூறி அவரை அனுப்பினாள்.ஊருக்கு போக வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்து கொண்டு இருந்தவளுக்கு வாய்ப்பு கிடைத்தால் விடுவாளா என்ன உடனே அவள் சென்று நின்றது சுந்தரியிடம்தான்.அனைவரும் செல்லலாம் என்று கீதா சுந்தரியைவிட்டு  சொன்ன போது தலையை மட்டும் ஆட்டிவிட்டு வந்து விட்டாள் சுவாதி.                                                                                          நாகபட்டினம் சென்றால்,அர்ஜூனுடன் பழகிய இடங்களை சுவாதி பார்க்கும் போது ஏதாவது மாற்றம் ஏற்படாதா, என்றுதான் கீதா யோசித்து இந்த முடிவு எடுத்தால்.இந்த முடிவு எந்த அளவுக்கு உதவ போகிறது என்று நாமும் பார்ப்போம்.                     

 

சுவாதி தனது அறையில் அமைதியாக யோசித்து கொண்டு இருந்தாள்.அவளை பார்த்த அர்ஜூன் ஏன் இவள் நாக பட்டினம் வர மறுக்கிறாள்.அங்கு போவதற்கு எதற்கு இவ்வளவு யோசனை என்று அவளையே பார்த்து கொண்டு இருந்தான். மகனின் அம்மா என்ற சத்ததில் மகனை கவனிக்க ஆரம்பித்தான் அர்ஜீன்.                                

 

தன் தாயிடம் வந்த அபி சுவாதியின் முகம் வாடி இருப்பதை பார்த்து.என்ன மா?என்ன ஆச்சு?ஏன் தல்லா இருக்கீங்க கீதாம்மா எனக்கு ஊதில் நீங்க படிச்ச ஸ்தூல் எல்லாம் காத்ததேனு சொல்லியிதுக்காங்க.இன்னைக்கு கதை சொல்ததா சொன்னாங்க நா அவங்க கூட போய் படுக்க போறேன் பாய்......என்று ஒடி விட்டான்.            

 

என்ன...... அபி கீதாக்கூட போய்விட்டால் நான் அஜூவோடு தனியாக படுக்க வேண்டுமே.அவன் இருக்கும் போதே ஏதாவது சில்மிஷம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல் படுத்து கொள்வான். இதில் ஒரு மாதிரி பாடல்கள் வேறு இவனுக்குனு எங்க இருந்து தான் பாட்டு கிடைக்குமோ....ச்ச.....என்று நொந்து கொண்டவள் அபியை தடுக்கும் வண்ணம் அவன் பின்னாடியே சென்றாள்.                                                                                                    

டேய் ராஜா வேணான்டா நீ அம்மா கூடவே படுத்துக்கோ நா உனக்கு கதை சொல்றேன் என்று பின்னாடியே போனாள்.அங்கு வாசலில் கீதா இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு இருப்பதை பார்த்து பேச்சை நிறுத்தினாள்.                                                                                

 

என்னடி ஏன் அபி குட்டி என் கூட படுக்க விட மாட்டிக்கிற?அபி என் கூட படுத்து கொள்வது ஒண்ணும் புதுசு இல்லையே?உன்ன விட நான் நல்ல பாத்துபேன் கவலைபடம போய் தூங்கு.                                                                                                    

அபி என் கூட விளையாட ஆரம்பிக்கும் போதே அவன் ஜெயிச்சுட்டா கதை சொல்லனும்னு சொல்லிதான் விளையாட ஆரம்பிச்சான்.நீ ஏன் தடுக்கற நீ வா ராஜா நாம போகலாம்.                   

 

சரி கூட்டி போ எனக்கு என்ன?நான் உங்க இரண்டு பேருக்கும் இடையில் வரவில்லை போதுமா நீ ஆச்சு,அவனாச்சு ஆளை விடுமா என்று தன் அறைக்கு சென்று படுத்துவிட்டாள்.           

 

நகுலன் அறையில் இருவருக்கும் இடையில் அபியை படுக்க வைத்த கீதா இரு நான் போய் டிரெஸ் மாத்தி கொண்டு வருகிறேன் என்றவளை தடுத்தான் அபி.                                                    

கீது மா நம்ம இரண்டு பேரும் ஒரே மாதிரி நைட் டிரெஸ் எடுத்தோமே அதை போடு நானும் அது தான் போட்டு இருக்கிறேன்.       அபி.                                                                                     

ராஜா அது வேணாண்டா.இன்னோரு நாளைக்கு அதை போட்டுக்கலாம்.இப்ப அம்மா வேற நைட்டி போட்டுக்கறேன்.அபி  குட்டி சமத்துள்ள கீது சொன்ன கேப்பான்ல....பிளீஸ்டா குட்டி என்று கெஞ்சி கொண்டு இருந்தாள்.                                                           

 

அறையின் மற்றொரு மூலையில் பைல் பார்ப்பதாக பேர் பண்ணி கொண்டு இவர்களை நோட்டம்விட்டு கொண்டிருந்த நகுலனுக்கு கீதாவின் கெஞ்சல் ஆர்வத்தை ஏற்படுத்தியது.அன்று திருமணத்திற்கு சென்று வந்த பிறகு இருவருக்கும் இடையிலான பேச்சு குறைந்திருந்தது.எப்போதும் சலசலவென ஏதாவது பேசி கொண்டு இருக்கும் கீதா அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்துவிட்டு சென்று விடுவாள்.                                                

 

நகுலன் தூங்கும் வரை அபியுடன் விளையாடுகிறேன் என்று பேர்பண்ணி கொண்டு அவனுடன் சுத்தி கொண்டு இருப்பாள்.நகுலனுக்குதான் இவளின் விலகள் அதிகமாக தாக்கியது.இப்படி இருக்க அன்று மனைவி விரைவாக அறைக்கு வந்து அபியிடம் கெஞ்சி கொண்டு இருப்பதை பார்த்தவுடன் அப்படி என்ன டிரெஸ் ரெண்டு பேரும் எடுத்தாங்க என்ற ஆர்வ குறுகுறுப்பில் அவர்கள் பார்க்காத போது அவர்களை கவனித்து கொண்டு இருந்தான்.                                                                                  

கீதாவின் நிலைமைதான் பரிதாபமாக ஆம் கையில்லாத நைட் டிரெஸ் அவளின் முழங்கால் வரைதான் இருக்கும்.மேல் சட்டை முழுதாக இடையை மறைக்காமல் அரை அங்குலம் இடுப்பை காட்டும்.இதை வாங்கி வந்த அன்று வள்ளி கீதாவை பிலு பிலுவென்று பிடித்துவிட்டார்.அதனால் அறைக்குள்ளேயே போட்டு கழட்டி வைத்துவிடுவாள் கீதா.இன்று நகுலனின் முன்பு எப்படி போடுவது என்று திணறி போனாள்.அவள் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் கடைசியில் அபியின் பிடிவாதம் தான் ஜெயித்தது.அவள் சரி என்று ஒப்பு கொண்டு ஆடை மாற்ற சென்றாள்.இவள் எந்த டிரெஸ்க்கு இப்படி பில்டப் கொடுக்கிறாள் என்ற ஆர்வத்தில் அமர்ந்திருந்த நகுலன் அவள் வெளிவருவதை பார்க்க மூச்சு விடவும் மறந்தவனாக அப்படியே அமர்ந்திருந்தான்.          

 

ஹேய்..லட்டு இப்படியெல்லாம் நீ டிரெஸ் பண்ணுவியா? செம்மயா இருக்கடி.உன்ன நார்மலா நைட் டிரெஸ்ல பாத்தாலே எனக்கு கொடுமையா இருக்கும்.நீ இப்படி இருக்கறத பார்த்த இன்னைய நைட்ட எப்படி ஓட்ட போறேன் தெரியலையே.                   

என்னடா நகுலா உன் கற்புக்கு வந்த சோதனை என்று தனக்குள் புலம்பி கொண்டவன் அபியின் சினுங்கலில் நினைவுலகத்துக்கு வந்தான்.                                                                      

எதுக்குடா சிணுங்குற அது தான் நீ சொன்ன மாதிரி அம்மா உனக்கு மேட்சா டிரெஸ் போட்டுட்டு வந்துட்டன்ல.   கீதா.                         

 

நான் அந்த பக்கம் படுக்கனும் நீங்க நடுவுல படுங்க..  அபி           

 

இவர்களின் பேச்சை காதில் வாங்கிய நகுலனுக்கு கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?என்ற கேள்வியே மனதில் ஓடி கொண்டு இருந்தது.                                                                                      

நோ......நான் பிக் பாய் கீழே விழமாட்டேன்.நான் இந்த ஓரத்தில்தான் படுப்பேன்...அபி.                                                                  

அவனின் பேச்சிலேயே கீதா இந்த பக்கம் படுக்க வேண்டாம் என்றும் அதற்கு அவள் சொன்ன காரணத்தையும் ஊகித்தவன். இன்னைக்கு உனக்கு இருக்குடி.முதல் நாளே என்ன படுத்தின,இன்னைக்கு எனக்கு தூக்கம் வரல,நீ சட்னிதான் இன்னைக்கு நடக்கும் எதற்கும் நான் பொறுப்பல்ல,என்ற முடிவுக்கு வந்தவன் படுக்க சென்றான்.                                                    

அவன் நல்ல பிள்ளை போல் படுத்து கொண்டு படு கீதா என்ன பயம்.அதான் அவன் கீழ விழ மாட்டேனு சொல்றானுள்ள என்று அபிக்கு சப்போர்ட் செய்வது போல் பேச அபியும் அவனுடன் சேர்ந்து தலையை ஆட்டினான்.வேறு வழி இல்லாமல் நடுவில் படுத்தவள் கதை சொல்ல ஆரம்பித்தாள்.                                                   

அபி கதையில் மூழ்கி போக நகுலன் அவள் அழகில் மூழ்கி கொண்டு இருந்தான்.ஒரு வழியாக கதை முடிந்து அபி தூங்க தொடங்கியதும் இவளும்படுத்து கொண்டாள்.                                     

 

பாதி இரவில் இடையில் ஏதோ ஊர்வது போல் இருக்க விறுக்கென எழ முயற்சிக்க முடியாமல் படுத்திருந்தாள்.நகுலன் தான் அவளின் செயல் அறிந்தவன் போல் அவளை இறுக்கி பிடித்திருந்தானே.                                                                                         

.....நகுலன் ....என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?முதலில் என்னை விடுங்கள் ......உங்கள் கையை எடுங்கள் என்றாள் குளறலாக.அவளும்தான் என்ன செய்வாள்.நகுலன் தன்னுடைய சீண்டலால் அவளை பெண்ணாக மாற்றியது மட்டும் இல்லாமல் அவளை காதலிக்கவும் வைத்துவிட்டானே. அவனின் மனைவி ஆக முடியாதா என்ற ஏக்கத்தில் இருந்தவள். இவன் இப்படி நடந்து கொள்ளவும் தடுக்கவும் முடியாமல் அனுமதிக்கவும் முடியாமல் திணறினாள்.           

 

ம்ம்ம்ம்...... என்று அவள் சொல்வதற்கு எல்லாம் ம்..... கொட்டியவன்.அவன் மூச்சு காற்று அவள் முதுகில்படுமாறு மேலும் நெருங்கி படுத்து அவளை இறுக்கினான்.                                         

 

ஹே பேபி பேசாமல் கொஞ்ச நேரம் இருடி என்று ஈன சுரத்தில் குளறினான்.அவளின் பெண்மையின் மென்மையில் மயங்கி கொண்டே.                                                                                      

பேபி என்ற அவனின் சொல் அவளை உசிப்பி விட முதலில் கையை எடுங்கள்.நான் ஒண்ணும் பேபி இல்ல என்று கோபமாக சொல்ல முயன்று தோற்றாள்.                                                                      

ம்.....ம்.....கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேன் என்றவன். இன்னைக்கு கன்பார்ம் பண்ணிட்டனா, இனிமே சொல்ல மாட்டேன். இடையில் இருந்த அவன் கை அவள் பேபி இல்லை என்பதை உறுதி செய்ய மேல் நோக்கி நகர்ந்தன.                                       

 

.....ஏய்.... என்ன செய்கிறாய் என்று கத்தியவளின் இதழை தன் இதழ் கொண்டு அடைத்து ஒரு கையால் அவளின் இரு கைகளையும் பிடித்து கொண்டு தன் ஆராய்ச்சியை முழுமையாக முடித்த பிறகே இவளின் கையை விட்டான்.அவள் கண்களில் இருந்து கண்ணீர் அவனின் கண்ணங்களை நனைத்த பிறகே தன்னிலை உணர்ந்தவன் அவளிடம் இருந்து தன் இதழ்களை பிரித்து கொண்டு எழுந்து அமர்ந்தான்.                                                     

 

ஒரு பெண்ணாக காதல் கணவணின் அத்து மீறிய முதல் தொடுகையால் உடல் முழுவதும் நடுங்கி கொண்டு இருந்தது.அவன் இன்னோருவளின் காதலன் என்று தெரிந்தும் அவனை தடுக்க முடியாத தன் இயலாமையை எண்ணி கண்ணீர் வந்து கொண்டு இருந்தது.                                                                                     

அவளின் நிலையை பார்த்த நகுலன் தலையிலேயே அடித்து கொண்டு சாரி..சாரி...கீது.என்று சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லி கொண்டு இருந்தான்.அவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல்.                                                   

 

கீதாவோ நடந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாக அழுது கொண்டே இருக்க.நகுலன் எழுந்து மற்றொரு அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டு தன்னையே திட்டி கொண்டான்.                                                                                               

என்ன காரியம் பண்ணிட்டடா.வெண்ணெய் திறண்டு வரும் போது தாழி உடைந்த கதையாய்.இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தாள் அவளே மாறி இருப்பாள்.இப்போதே அவளிடம் மாற்றம் வந்து கொண்டுதானே இருந்தது.                                

 

புடவையே கட்ட தெரியாது என்றவள் நான் சொன்னதற்காக வாரம் இரண்டு நாட்கள் அவளாகவே புடவை கட்டி கொண்டு போகிறாள்.மீன் எனக்கு பிடிக்கும் என்று ஞாயிறு அவளே மீன் விதவிதமாக சமைக்கிறாள்.கண்ணை பார்த்து பேச மறுக்கிறாள். நண்பன் என்றவள் மற்ற நண்பர்களை போல் ஏன் என்னிடம் பழக முடியவில்லை.இப்படி அவள் யோசிக்க விடாமல் செய்துவிட்டாயடா மடயா என்று தன்னையே நொந்து கொண்டவன் வெகு நேரம் நடந்து கொண்டு நடந்து கால் ஓய்ந்த பிறகே உறங்க ஆரம்பித்தான்.                                                                     

 

அறையில் அழுது கொண்டிருந்த கீதாவிற்கோ,அவன் வெளியே சென்றதும் ஒரு வித குற்ற உணர்ச்சி வந்திருந்தது. நீங்கள் சரியாகதான் இருந்தீர்கள் நான்தான் இது போல் உடையணிந்து உங்களை சோதித்து விட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள். இனி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுதியையும் அத்தானையும் இணைத்துவிட்டு நான் இங்கிருந்து சென்றுவிடுகிறேன்.

இல்லையென்றால் உங்கள் லட்டுக்கு துரோகம் செய்துவிடுவேன் என்று விடிய விடிய அழுதாள்.                                                                                                         

ஏன் என்றால் உண்மையில் நகுலனின் தொடுகையில் இவளும் தன்னை மறந்து கொண்டுதான் இருந்தாள்.தன் காதலன்.தன்னுள் முதல் காதலை விதைத்தவன் தன்னை தேடி வரும் போது அவளும் நெகிழதான் செய்தாள்.ஆனால் அவனின் லட்டு?அந்த கேள்வியே அவளது கண்ணீருக்கு காரணம் ஆனது.

 

 


Page 4 / 6




Share: